முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
சிறப்பு முகாம்களை இழுத்து மூடிடக் கோரி 26ஆம் தேதி மறியல் போராட்டம்: நாம் தமிழர் கட்சி அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 5
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
புதன்கிழமை, 22 ஆகஸ்ட் 2012 22:53

seeman_copy

 

சிங்கள பெளத்த இனவாத அரசின் திட்டமிட்ட இனப் படுகொலையில் இருந்து உயிர் தப்பி தமிழகத்தில் ஏதிலிகளாக அடைக்கலம் புகுந்த நம் ஈழத் தமிழ் சொந்தங்களை சிறப்பு முகாம்களில் அடைத்து வதைத்து வரும் கொடுமைக்கு முடிவு கட்ட மீண்டும் போராட்டக்களத்தில் குதிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டிலும், பூந்தமல்லியிலும் சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் தமிழக காவல்துறையின் க்யூ பிரிவின் கண்காணிப்பில் இருந்துவரும் சித்தரவதை முகாம்களில் 40க்கும் மேற்பட்ட ஈழத் தமிழ் சொந்தங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தங்கள் மீதான வழக்குகளில் அவர்கள் பிணைய விடுதலை பெற்றுவிட்ட பின்னரும் இப்படி கால வரையற்று அடைத்து வைப்பது ஏன்? என்று நாம் எழுப்பிய கேள்விகள் அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்காக பயன்றறுப்போய்விட்டது. ஈழத் தமிழ் சொந்தங்களுக்கு அரசியல் சம உரிமைப் பெற இலங்கை அரசை இந்திய மத்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்று சுதந்திர தின உரையில் கூறிய தமிழக முதல்வர், நம் ஈழத்துச் சொந்தங்கள் அவரது ஆட்சியில் இங்கு தமிழ்நாட்டிலேயே வதைக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கோரிக்கை விடுத்தது. ஆனால் அதற்கு பலனெதுவும்  கிட்டவில்லை. ஈழத் தமிழ் மக்களை கொன்று குவித்தபோது மெளனம் காத்த தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி, சென்னையில் கூட்டிய டெசோ மாநாட்டில் இங்குள்ள சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளோரை விடுவிக்குமாறு ஒரு தீர்மானம் போடவில்லை. இப்படிப்பட்ட நிலையில் மீண்டும் போராட வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

கடந்த மாதம் 11ஆம் தேதி செங்கல்பட்டு முகாமை மறியல் செய்யச் சென்ற நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அதன் பிறகு விடுதலை செய்கிறோம் என்று உறுதியளித்துவிட்டு மீ்ண்டும் ஏமாற்றியுள்ளது தமிழக காவல்துறையின் க்யூ பிரிவு. தங்களை விடுவித்து தமிழ்நாட்டின் இதர முகாம்களில் வசிக்கும் சொந்தங்களுடன் வாழ விடுங்கள் என்பதுதான் சிறப்பு முகாம்களில் வாடும் நம் சொந்தங்களின் ஒரே கோரிக்கையாகும். ஆனால், அதற்கு மாவட்ட நிர்வாகங்களும், தமிழக காவல்துறையும் இதுவரை செவிசாய்க்கவில்லை. இலங்கையில் வன்னியில் இன்னமும் நம் சொந்தங்களை வதைக்கும் முள்வேலி முகாம்களை போல, இங்கே செங்கல்பட்டு, பூந்தமல்லி முகாம்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.

ஏமாற்றத்திற்குள்ளான ஏதலிகளில் ஒருவரான செந்தூரன், கடந்த 6ஆம் தேதி முதல் பட்டிணிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருடைய போராட்டத்தை க்யூ பிரிவு பரிகாசம் செய்துள்ளது. இதனால் நொந்துபோன செந்தூரன் இப்போது தண்ணீர் கூட குடிக்காமல் கடும் பட்டிணிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதற்கு மேலும் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது, மீண்டும் களமிறங்கிப் போராடித்தான் ஆக வேண்டும் என்று நிலை ஏற்பட்டுவிட்டது. எனவே வரும் 26ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு பூந்தமல்லி முகாம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம். நாம் தமிழர் கட்சியின் தம்பிமார்களும், தமிழின உணர்வாளர்களும் பெரும் திரளாகத் திரண்டு மறியலில் ஈடுபடுவோம்.

தமிழ்நாட்டு மண்ணிலேயே சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் இயங்கும் வதை முகாம்களை இழுத்து மூடும் வரை போராடத் தயாராவோம்.

 

நாம் தமிழர் கட்சிக்காக,

 

செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

 

Comments  

 
0 #3 K.Moses baby 2012-08-29 22:47
வெகு தூரத்தில் இருக்கும் ஈழ மக்களுக்காக மாநாடு நடத்தவார்கள், கொடி பிடிப்பார்கள், கோஷம் போடுவார்கள்... ஆனால், தப்படி தூரத்தில் பல ஆண்டுகளாக முகாம் என்ற பெயரில், கொடுஞ்சிறைக்குள ் அடைக்கப்பட்டிரு க்கும் ஈழத்தமிழர்களுக் காக துரும்பைக் கூட எடுத்துப்போட மாட்டார்கள். அப்படிப்பட்ட அரசியல்வாதிகளுக ்கு மத்தியில், பூந்தமல்லி மற்றும் செங்கல்பட்டு முகாமில் உள்ள அகதிகளை உடனடியாக விடுவிக்குமாறு கோரிக்கை வைத்து இன்று பூந்தமல்லி முகாமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி கைதாகி சற்று முன் விடுதலையாகியுள் ளார் தோழர் வைகோ. அவரோடு தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் செயலர் தோழர் புகழேந்தியும், மே17 இயக்கத்தோழர் திருமுருகனும் கைதாகி விடுதலையாகியுள் ளனர்
Quote
 
 
-1 #2 K.boobathy 2012-08-29 22:43
வைகோ இல்லாவிட்டால் தமிலரகலுக்கு நாதி இல்ல்லை ,,,,,,,,,,,,,,
Quote
 
 
+5 #1 louis 2012-08-23 15:54
தோழர் பன்டாரம், வைகோ காலம் காலமாக நம் ஈழ சொந்தங்களுக்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போராடி வருபவர். தயவு செய்து அந்த நல்ல மனிதரை கொச்சை படுத்தாதீர்கள்.
இப்போது தமிழ் நாட்டில் இருக்ககூடிய அரசியல் தலைவர்களில் நேர்மையான, ஊழல் இல்லாத, வாரிசு அரசியல் செய்யாத, உண்மையான தமிழ் இன பற்று கொண்ட ஒரே தலைவர் அவர் மட்டும் தான்.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 175 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday1541
mod_vvisit_counterYesterday14175
mod_vvisit_counterThis week58443
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month261175
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12783294