|

நீதி கேட்டு உண்ணாவிரதம் இருந்ததால், ஈழ அகதியான "செந்தூரன்" குற்றவாளி என்கிறது தமிழக அரசு!. உண்ணாவிரதம் தற்கொலைக்குற்றம் என்கிறது தமிழக பொலிஸ்!!?. மகாத்மா காந்தி'யும் தன்னை வருத்தி உண்ணாவிரதம் இருந்தார். உள்ளடக்கம் இல்லாமல், உரிமைக்காக உணர்வோடு உணவொறுத்தார். அதிகாரம் பணிந்தது, அகிம்சை தலை குனிந்தது. சத்தியத்தின் பிதாவாக உலகம் காந்தியை ஏற்றுக்கொண்டது. அது ஒரு இனிய கனாக்காலம். கண்டத்தையும் தாண்டி காந்தியின் அகிம்சையில் உலகம் மண்டியிட்டது. அகிம்சையின் வீரியத்தை அறிந்த வெள்ளைக்காரன், விக்கித்து வெளியேறினான். இந்தியா சுதந்திரம் அடைய உண்ணாவிரதம் வழி திறந்தது. அது ஒரு பொற்காலம். மார்ச் 09, 2009 ல் ஜெயலலிதா, "ஈழத்தமிழர்களுக்காக" உண்ண நோன்பிருந்தார். கடல் கடந்தும், காற்றின் வெளியூடேயும் படை அனுப்பி காத்தருள்வேன் என்றும் கர்ஜித்தார். தமிழகம் தலை வணங்கியது. அகிம்சை திகைத்தபோது, மக்கள் கோட்டை வாசலை திறந்து விட்டனர்., அம்மா முதலமைச்சரானார். இன்று அதே நம்பிக்கையுடன் ஈழ அகதி செந்தூரன் அம்மாவை நோக்கி உண்ணா விரதம் இருந்தபோது அது தற்கொலை குற்றமாகியிருக்கிறது.! அதுவும் ஒரு விசித்திர வினாக்காலம் கால கிறுக்கலில் கருணாநிதியின் கதவு காற்றுவாக்கில் மூடிவிட, இன்று தொடர் கதையாக வறுமையற்ற வாக்குறுதியுடன், கருணாவின் நித்த புலம்பல் நீலிக்கண்ணீருடன் நித்தமொரு தத்துவம் இதுவும் விதைத்த பயன் அறுவடையின் நிகழ்காலம். தமிழீன தலைவன் கருணாநிதி "ஈழத்தமிழர் உயிர் காக்க" ஏப்ரல் 27 2009 ல் உயிர் துறந்தேன் பார் என்று அதிகாலையில் உறக்கம் கலைந்து, அகிம்சையின் கோவணத்தை உருவி தோளில் போட்டுக்கொண்டு, அண்ணாவின் சமாதி அருகில் அருங்காட்சியகமாக அம்மணிகள் புடைசூழ 1/2 நாள் உண்ணாவிரதம் இருந்தார். அது ஒரு புதுக்கோலம்,.. அன்று, ஈழத்து படுகொலை செய்தியை விட தாத்தாவின் தாண்டவம் பெரும் புதினமானது. மீடியாக்கள் கண்சிமிட்டி படபடத்தன நெத்தியடியாக அழகிரிக்கு மந்திரி பதவியும், கனிமொழிக்கு எம்பி பதவியும் தந்து. மத்திய அரசு மண்டியிட்டதது. தமிழகம் அடங்கி அமைதியான போது அகிம்சை கோவணத்தை தேடி அலைந்தது. அதுவும் ஒரு வினோத காலம். அகிம்சையை அரவாணியாக்கி 'உண்ணா விரதம் இருந்து வென்றவர்' வாயால் வில் பூட்டி வானத்துக்கு எய்தவர் நா விலங்கு கருணாநிதி, நம்பி ஏமாந்த ஈழத்து ஏமாளிகள் ரத்த சகதியில் சிதறி செத்து தீயில் மாண்டனர். அகிம்சை அரசியலுடன் சங்கமமாகிவிட சுடுகாட்டு கரி மட்டும் மிஞ்சியது. அது மயான காவியத்தின் வினைக்காலம். "ஈழமக்களுக்காக" தெரு முனையில் சாவேனே தவிர வெட்டியாக வீடு திரும்பேன். சத்தியம் இதுவென்று விடுதலை சிறுத்தையின் வீரத்திருமகன். திருமாவளவன்,.. சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார். முற்றியது மூன்று நாள் பற்றியது ஒரு கரம் தி.முக தலைவர் பற்றினார் தம்பியை மெல்ல கலந்து காங்கிரஸுடன் திருமாவை மத்தியில் எம்பி ஆக்கினார். வென்றனர் விரும்பியதை அதுவும் ஒரு ரம்யமான வஞ்சகத்தின் வர்ண ஜாலம்! ஏன் எதற்கு அவர்கள் உண்ணாவிரதம் இருந்தனரோ அதற்காக இவர்களும் ஏமாளிகளாக உண்ணாவிரதம் இருந்தனர். நளினி, முருகன், சிறைக்குள் விரதம் பூண்டனர். பிணைப்பாக ஜனாதிபதிக்கு கருணை மனுவும்.... அனைத்தும் கனவாகி கால் நூற்றாண்டு காத்திருந்தனர். அகிம்சை எவரையும் தட்டி எழுப்பவில்லை. தண்டனை மட்டும் இறுகியது. இணைப்பாக செங்கொடி என்ற மனிதாபிமானம் ஏமாந்து தீயில் எரிந்து கருகியது. அது ஒரு ஏமாந்த காலம். இருந்தபோதும் மீண்டும் நம்பிக்கையுடன், செங்கல்ப்பட்டு பூந்தமல்லி தடை முகாமில் ஈழத்தமிழர்கள் உண்ணாமல் இருந்தனர். மத்திய, மானில ஆட்சிகள் ஆத்திரத்துடன். சூத்திரத்தை மறந்து சன்னதம் கொண்டன. செந்தூரன் உறுதியானபோது சிறுநீரகம் செயலிழந்து வயிறு புண்ணாகி மலவாசல் வழியாக இரத்தம் கசிந்தது,. மரண வாயிலில். அகிம்சை செந்தூரனை கொன்றுவிடும் என்று அறிந்தபோது அதிகாரம் அரக்கனாகியது. அது ஒரு வினைக்காலம். செந்தூரன் தற்கொலைக்கு முயற்சித்தான், ஆணவத்தால் அடங்க மறுத்தான், புதிய கண்டுபிடிப்புடன் காலங்கடந்து பொலீஸ் படை பாய்ந்து அகிம்சை போராளியை கைது செய்திருக்கிறது. இது ஒரு புதிர்காலம். கருணாநிதிக்கு,............. ஜெயலலிதாவுக்கு,............... திருமாவுக்கு,................... ஈழத்தமிழன் பெயரால் அரசியல் செய்யவும் பதவியை,....... வாழ்க்கையை........... வழங்கிய உண்ணா விரதம்!! ஈழத்தமிழனுக்கு தொண்டைக்குள் கடப்பாரையாக சொருவப்பட்டது, அகிம்சை மூச்சையர்த்து சேடமிழுத்து தூரத்தே ஈனசுரத்தில் அழும் குரல் மட்டும் கேட்கிறது! இது எந்தக்காலம்? ஊர்க்குருவி.
|
Comments
இவர்கள் போக்குக்கு தகுந்த மாதிரி சென்றதால்தான் "வவுனியா(இலங்கை) " 2009 ல் முள்ளியவாய்க்கா லில் படுகொலையானார்கள ். தற்பொழுது தமிழ்நாட்டையும் "சர்வதேச சமூகத்தை வைத்து" இரண்டாம் முள்ளியவாய்க்கா லை நோக்கி செலுத்துகிறார்க ள். இவர்கள் கூறுவதைப் பாருங்கள்!.
/எந்தவிதமான சந்தேகமுமின்றி கடந்த 45 வருடங்களாக தமிழ் நாட்டை மாறிமாறி ஆட்சி செய்து வரும் திராவிட முன்னேற்றக்கழகம ும், அனைத்திந்திய அண்ணா முன்னேற்றக்கழகம ுமே இதற்குப் பொறுப்பானவர்கள் . தமிழ் தேசியவெறியைக் கிளறிக்கிளறி தமிழகத்தை இருளுக்குள் இழுத்துச்சென்ற இந்த இரு கட்சிகளும், அது போதாதென்று இலங்கைத் தமிழர் பிரச்சினையை வைத்து அரசியல் இலாபம் பெறப்போய், அவர்களையும் படுகுழியில் தள்ளியவர்கள் இவர்களேயன்றி வேறுயாருமல்ல./-- http://thenee.com/html/070912-6.html
Wimal angry over attacks against Lankans:Ministe r Wimal Weerawansa sounded an alarm over the anti Sri Lankan attitude by the Tamil Nadu government and asked what the consequences would if Sri Lankans chose to treat thousands of Tamil Nadu citizens who regularly visited Sri Lanka in a similar manner.-- http://www.dailymirror.lk/news/21667-wimal-angry-over-attacks-against-lankans.html
ஏற்கனவே நாம் கூறியபடி, திராவிட "ஐயிடியா" , "ஹிந்தி எதிர்ப்பு" என்பது மேற்குலகத்தின் இந்திய நுழை வாயில் "மகாராஷ்ராவில்(ப ூலே)" துவங்கியது. தற்போதைய, MNS chief Raj Thackeray(Mahar ashtra), மற்றும் Bihar Chief Minister Nitish Kumar இடையேயான Raj Thackeray warns Hindi news channels போன்ற செய்திகளே சாட்சி. அதாவது, "Western Interventions in Dravidian and Dalit Faultlines"!
2009 மே சம்பவத்திற்கும் , இந்தியா, ப.சிதம்பரம், மு.கருணாநிதி குடும்பம்(கனிமொ ழி) ஆகியோருக்கு சம்பந்தம் இல்லை என்கிறார்கள். "சர்வதேசமே" இந்தப் படுகொலையை முடிவு செய்து நடத்தியது என்று இந்தியாவுக்குள் "சொத்து" வாங்கி, சலுகைகளை அனுபவிக்கும் "இலங்கைத் தமிழர்களால்" கூறப்படுகிறது.
விடுதலைப்புலிகள ் அழிக்கப்பட்டதோ, அதனுடன் அப்பாவி மக்கள் அழிக்கப்பட்டதோ இலங்கையர் பிரச்சனை. நமக்கு அக்கறை, இவர்கள் எங்கிருந்தோ குடிப்பெயர்ந்தவ ர்கள் அல்ல, இலங்கையின் பூர்விக குடிமக்கள்.
இதில் சர்வதேசம் ஒரு முடிவெடுக்கும் போது, "அதே சூழ்நிலை" பொருந்தி வந்தால், "இந்திய பூர்விக குடிகளையும்" அவதார் படம் போல அழிக்க சம்மதிப்பிர்களா ?.
இந்த "அழிவு" வேலையைத்தான் மு.கருணாநிதியும், க.அன்பழகனும் செய்கிறார்கள்!.
வே.பிரபாகரன் ஒரு "இலங்கையன்"!. அவன் அப்படித்தான் நடந்துக் கொண்டான். என்னவோ, பிரபாகரன் நமக்கு மாமன், மச்சான் மாதிரியும், அவனை ஆதரித்தவுடன் அதை எதிர்த்து, இந்தியாவின் மீது அதீத பற்று உடையவர்கள் மாதிரி "இலங்கைத் தமிழர் என்ற" இலங்கையர்கள் ஆர்ப்பரிக்கின்ற னர்.
தங்கள் பாட்டுக்கு சுயநலமாக அலையும் இலங்கைத் தமிழருக்கு, வெரும் வாயை மெல்ல அவல் தந்தது போலுள்ளது. இவர்கள் இலங்கையிலும் கணக்கிலெடுக்க இயலாத அளவுக்கு சிறுபாண்மையினரா க உள்ளனர். உலகத்தமிழர்களில ும், 1% விதத்தினராக உள்ளனர். இவர்களை கண்டுக் கொள்ளாமல் விடுவதே சாலச்சிறந்ததாகு ம் !.
மிஞ்சியிருக்கிற வெளிநாட்டு வாழ் இலங்கைத் தமிழ்ன்கள், "பிழைப்புக்காக" "இந்தியாவுக்கு" தட்டுகிறகிற பெரிய ஜால்ராவைத் தூக்கும் போது ஒரு விஷயம் கண்ணை மறைக்கிறது !, அதாவது, இந்தியாவை "அலி" ரேஞ்சுக்கு ஆண்மையற்ற முண்டமாக சித்தரிக்கின்றன ர்.
இது உண்மையான இந்தியர்களான எங்களை கேவலப்படுத்தி, காதில் பூ சுற்றுகிறது !.-- http://viruvirupu.com/2012/09/02/25557/
தமிழ்நாட்டுத் தமிழர்களே (சிலரைத் தவிர்த்து) உங்களுக்குத் தன்மானமே கிடையாதா?
தன்னலத்திற்காகவ ே இயங்கும் அரசியல்வாதிகளை ஒட்டு மொத்தமாகப் புறக்கணிக்க முடியாதா?
யாரின் காலிலாவது விழுந்து உங்கள் காரியத்தை சாதித்துக்கொள்க ின்றீர்கள்.
உங்கள் நாட்டில் உண்மையானவர்களே இல்லையா?
உங்களை ஆண்டவன் கூட காப்பாற்ற மாட்டான்.
ஈழத்தமிழர்களைப் பற்றிப் பேச உங்களுக்கு (ஒரு சிலரைத் தவிர்த்து) யாருக்கும் அருகதை கிடையாது...
RSS feed for comments to this post