முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
ஆண்டிமுத்து அன்று இரவுக் காட்சிக்கு போயிருந்தால்…. அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 96
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
செவ்வாய்க்கிழமை, 16 நவம்பர் 2010 00:31

 

ஆண்டிமுத்து இரவுக் காட்சிக்குப் போயிருந்தால் என்ன ஆயிருக்கும் ? இந்தியாவுக்கு

 

 

17,60,00,00,00,000

 

ரூபாய் மிச்சமாயிருக்கும்.   புரிகிறதா.. ஆம் ஆண்டிமுத்து, ஆ.ராசாவின் தந்தை.   1962ம் ஆண்டு, அவர் இரவுக் காட்சிக்கு போயிருந்தால், இந்தியா இந்த வரலாறு காணாத ஊழலை சந்தித்திருக்காது.

 

இந்த ஊழல் குறித்து பேசுவதற்கு முன், ஊழலின் தொகை எப்படி இவ்வளவு பெரிதானது என்ற கேள்வி எழும். சிம்பிளாக பார்க்கலாம். இரண்டு வீடுகளை வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்..   பத்து ஆண்டுகள் கழித்து இரண்டு வீடுகளையும் விற்கிறீர்கள். முதல் வீட்டை ஒரு லட்ச ரூபாய்க்கு விற்கிறீர்கள். ஆனால் செய்தித் தாளில் விளம்பரம் ஏதும் கொடுக்காமல் முதலில் விலைக்குக் கேட்பவருக்கு கொடுக்கிறீர்கள்.   அடுத்த வீட்டை விற்பதற்கு செய்தித் தாளில் விளம்பரம் செய்கிறீர்கள். ஐம்பது லட்ச ரூபாய்க்கு போகிறது. இப்போது நீங்கள் முதல் வீட்டை விற்கையில் செய்தித் தாளில் விளம்பரம் தராமல், முதலில் கேட்பவருக்கு விற்றதால், நீங்கள் 49 லட்சம் நஷ்டம் அடைந்தீர்கள் என்றால் அது சரிதானே… raja_2

 

இதுதான் அலைக்கற்றை விவகாரத்தில் நடந்தது.

 

இந்த அலைக்கற்றை ஊழல் எப்படி நடந்தது, அதில் ராசாவின் பங்கு என்ன என்பதையெல்லாம் பல்வேறு ஊடகங்களிலும், இணையங்களிலும் படித்திருப்பீர்கள். இப்போது, ராசாவின் ராஜினாமாவின் பின்னணியில் உள்ளவற்றை பார்க்கலாம்.

 

ராசாவுக்கான செக் ஐக்கிய முற்போக்கு கூட்டணி இரண்டாவது முறை பதவி ஏற்றவுடனேயே வைக்கப் பட்டு விட்டது. ராசாவுக்கு தொலைத் தொடர்புத் துறை தருவதில்லை என்று காங்கிரஸ் கட்சி எடுத்த முடிவு, கருணாநிதியை கடும் கோபம் அடையச் செய்தது. அதனால்தான், பதவியேற்பு விழாவில் பங்கேற்காமல் கோபித்துக் கொண்டு திரும்பினார். பிறகு தனது பிடிவாதத்தால் ஆ.ராசாவுக்கே தொலைத் தொடர்புத் துறையை பெற்றார். இந்தப் பிடிவாதம் காங்கிரஸ் கட்சிக்கு சிறிதும் பிடிக்கவில்லை.

இரண்டாவது முறை பதவி ஏற்றவுடனேயே, ராசாவின் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும், தொலைத் தொடர்புத் துறை அலுவலகத்தை சிபிஐ சோதனையிட்டு ஏராளமான ஆவணங்களை அள்ளிச் சென்றது.   ஒரு அமைச்சரின் துறை அலுவலகத்தில், அதுவும் தலைமை அலுவலகத்தில் அவர் பதவி வகிக்கும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை சோதனையிட்டு ஆவணங்களை பறிமுதல் செய்கிறது என்றால், ராசாவுக்கு எந்த அளவுக்கு அதிகாரம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

 

ஆனால் தொலைத் தொடர்புத் துறைதான் வேண்டும் என்று கருணாநிதியும் ராசாவும் பிடிவாதம் பிடித்ததற்கு காரணம், மீண்டும் சம்பாதிக்க வேண்டும் என்பதல்ல.. ஆஸ்திரேலியாவுக்கு அருகில் சொந்தமாக தீவு வாங்கும் அளவுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டிலேயே சம்பாதித்து விட்டார்கள். இரண்டாவது முறை இந்தத் துறைதான் வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தது, மாட்டிக் கொள்ளாமல் இருக்க.   விசாரணை என்று தொடங்கினால், அது அங்கே போய், இங்கே போய், கடைசியில் கோபாலபுரத்திலும், சிஐடி காலனியிலும் வந்து நிற்கும் என்பது கருணாநிதி அறியாததல்ல.

 Raja_4

முதல் முறை ஐக்கிய முற்போக்கு கூட்டணி பதவி ஏற்ற போது, திமுக எம்பிக்களின் தயவை பெரிதும் நம்பி இருந்தது. அப்போது, இந்தத் துறைகள் தான் வேண்டும் என்று கருணாநிதி கொடுத்த நெருக்கடியையும், அந்த கோரிக்கைகளில் மாற்றம் வந்த போது, ஜனார்த்தன் ரெட்டி எழுத்து பூர்வமாக தந்த இலாக்கா குறித்த விபரங்களை பத்திரிக்கையாளர்களை அழைத்து காண்பித்ததையும், கப்பல் போக்குவரத்துத் துறை, தொலைத் தொடர்புத் துறை ஆகியவற்றில் பணத்தை அள்ளியதையும், சேது சமுத்திரத் திட்டத்தில் தொடக்கம் முதலே கொள்ளையை துவக்கியதையும் காங்கிரஸ் கட்சி அமைதியாக கவனித்தே வந்தது.

 

ராசா ராஜினாமா செய்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன் கருணாநிதி அளித்த பேட்டியை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.   ராசா ராஜினாமா செய்யத் தேவையில்லை.   அவர் எந்தத் தவறையும் செய்யவில்லை.   இதற்கு முன்பிருந்தவர்கள் கடைபிடித்த கொள்கையைத் தானே அவர் கடைபிடித்தார் என்றார்.   இவர் கோபாலபுரம் வீட்டை பல ஆண்டுகளுக்கு முன் பத்தாயிரம் ரூபாய்க்கு வாங்கியிருந்தார் என்றால் இன்று அதே விலைக்கு கொடுப்பாரா ?

 

இப்படி பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்த கருணாநிதியும் ராசாவும் மண்ணைக் கவ்வியது எப்படி…. ?

 

ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.   காங்கிரஸ் கட்சி, திமுகவை ஒரு வழி பண்ண வேண்டும் என்று எப்போதோ முடிவெடுத்து விட்டது.   அதன் முதல் நடவடிக்கை தான் ராசாவின் அமைச்சக அலுலவகத்தில் சிபிஐ சோதனையிட்டது.  இதைத் தொடர்ந்து மீனுக்கு தலையையும் பாம்புக்கு வாலையும் காட்டும் வேலையை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து செய்து வந்தது.   கருணாநிதியை ஒரு மூலைக்குத் தள்ளி நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி முடிவெடுத்த போதுதான், முதன் முறையாக, ஸ்பெக்ட்ரம் தொடர்பான ஆவணங்கள் பத்திரிக்கையாளர்களின் கைக்கு கிடைக்கின்றன. இந்த ஆவணங்கள் மிக மிக ரகசியமானவை. இப்படிப் பட்ட ரகசிய ஆவணஙகள், மத்திய அரசின் உளவுத் துறையின் உதவியில்லாமல் வெளி வருவதற்கான சாத்தியமே இல்லை. முதலில் இந்த ஆவணங்கள் வெளி வந்தன. அடுத்து, ராசாவுக்கும் நீரா ராடியா என்ற பவர் ப்ரோக்கருக்கும் இடையே நடைபெற்ற உரையாடல் ஊடகங்களில் வந்தன.   இதையெல்லாம் வெளியிட்டு, கருணாநிதிக்கு நெருக்கடியை அதிகரித்துக் கொண்டே வந்தது காங்கிரஸ்.

 

இந்த ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்ந்து செய்திகளில் இருக்குமாறு காங்கிரஸ் பார்த்துக் கொண்டே வந்தது.

 

சசி தரூர் ஊழல் புகார் காரணமாக ராஜினாமா செய்த போது, இந்த ஸ்பெக்ட்ரம் விவகாரம் மீண்டும் கிளம்புவது போல ஏற்பாடுகள் செய்யப் பட்டன. அப்போது தேசிய ஊடகங்களில், இந்த சிறிய ஊழலுக்கே ஒரு அமைச்சர் ராஜினாமா செய்யும் போது, இவ்வளவு பெரிய ஊழல் (அப்போது இந்தத் தொகை 60 ஆயிரம் முதல் 80 ஆயிரம் கோடி வரை) புரிந்த ஒரு நபர் இன்னும் ராஜினாமா செய்யவில்லையே என்று கேள்விகள் எழுப்பப் பட்டன.

 

இந்நிலையில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வலுவாக திமுகவுக்கு ஒரு நெருக்கடியை கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்து செயலிலும் இறங்குகிறது. முதல் வேலையாக ஈவிகேஎஸ் இளங்கோவனை களத்தில் இறக்கி, திமுக அரசை சகட்டு மேனிக்கு விமர்சனம் செய்யச் சொல்கிறது.   இளங்கோவனின் விமர்சனங்களை பொறுத்துக் கொள்ள முடியாத கருணாநிதி, அவரோடு நல்ல உறவு வைத்துள்ள தங்கபாலுவிடம் தனது மனக்குறையை வெளிப்படுத்துவார். தங்கபாலுவும், பெயருக்கு யாரும் கட்சியின் மேலிட அனுமதி இன்றி, பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுப்பார். ஆனால், கட்சியின் கண்ணசைவு இன்றி இளங்கோவன் இது போல பேசமாட்டார் என்பது பச்சைக் குழந்தைக்குக் கூட தெரியும்.

 

spectrum_1

சோனியாவின் திருச்சிக் கூட்டத்தில் இளங்கோவனை அருகில் அமர வைத்ததும் எல்லா விஷயங்களும் தெள்ளத் தெளிவாகின.   சோனியா சென்னை வந்த போது, மரியாதை நிமித்தமாகக் கூட கருணாநிதியை சந்திக்காமல், ஒப்புக்கு ஒரு ஐந்து நிமிடம் விமான நிலையத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போதே சோனியாவின் மன நிலையையும், திமுகவை நடத்தும் விதத்தையும் நன்றாக உணர்ந்தார் கருணாநிதி. ஆனால், காங்கிரஸ் கட்சியை பகைத்துக் கொள்ளும் எந்த வேலையையும் செய்ய முடியாது என்ற யதார்த்தத்தை உணர்ந்தார். ஆனாலும் ஆத்திரத்தை அடக்க முடியவில்லையே…. அதனால், திமுகவின் தலித் பிரிவு தலைவர் திருமாவளவனை விட்டு காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கச் சொன்னார். திருமாவளவனும் ஆப்பசைத்த குரங்கின் கதையாக காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து, ஈழத் தமிழர் அவல நிலைக்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்று பக்கம் பக்கமாக பேட்டி கொடுக்க ஆரம்பித்தார்.   காங்கிரஸ் கூட்டணியில் சிதம்பரம் தொகுதியில் நின்று ஜெயிக்கும் வரையிலும் இவருக்கு தெரியவில்லையாம்.

 

திருமாவளவனின் பேட்டிக்கு எதிர்வினையாக, கார்த்தி சிதம்பரம், இளங்கோவன், தங்கபாலு என்று ஒரு படையே இறங்கியது. இந்த மோதல் ராஜீவ் காந்தியின் சிலை உடைப்பு வரை போனது.   விஷயம் கை மீறி போவதை உணர்ந்த கருணாநிதி, சோனியா காலில் விழச் சொல்லி உத்தரவு போட்டார்.   காலில் விழுவதற்காக டெல்லி சென்ற திருமாவளவனை சோனியா சட்டை கூட செய்யவில்லை.

 

சந்திக்க நேரம் ஒதுக்காததால், திருமாவளவன் சோனியாவிற்கு கடிதம் எழுதுகிறார். கடிதத்தை படிக்கும் முன், “அடங்க மறு.. அத்து மீறு… திருப்பி அடி“ என்ற வாசகத்தை நினைவில் வைத்துக் கொண்டு படியுங்கள்.

 

 விடுதலை சிறுத்தைகள் கட்சி தாழ்த்தப்பட்டவர்களின் மேம்பாட்டுக்காக உழைத்து வரும் கட்சி ஆகும். நாங்கள் மதச்சார்பின்மையை கடைபிடிக்கிறோம். அதன் அடிப்படையில் எந்த ஒரு நிபந்தனையும் இன்றி காங்கிரஸ் கட்சியை நாங்கள் ஆதரிக்கிறோம். (எப்பூடி…..)

 

2009-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தோம். உங்கள் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் நாங்களும் ஒரு உறுப்பினர்.

 

இந்த சமயத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளின் கூட்டத்திற்கு எங்கள் கட்சிக்கும் அழைப்பு விடுத்ததற்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். காஷ்மீருக்கு சென்ற அனைத்து கட்சிகள் குழுவில் என்னையும் ஒரு உறுப்பினராக நியமனம் செய்ததற்கும், சமீபத்தில் தமிழ்நாட்டில் நடந்து வரும் விரும்பத்தகாத சம்பவம் பற்றி உங்களுக்கு சில விளக்கங்கள் அளித்து இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

 

சென்னை அசோக்நகரில் உள்ள ராஜீவ்காந்தியின் சிலையை அவமானம் செய்த சம்பவத்தை கண்டித்து, அந்த மனித தன்மையற்ற நடவடிக்கையை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க வேண்டும் என்று எங்கள் சார்பில் கேட்டிருக்கிறோம். ஆனால், சில காங்கிரசார் அங்கு கூடி நின்று நடத்திய போராட்டத்தில் எங்கள் கட்சியினரையும் உள்நோக்கத்தோடு அதில் சம்பந்தப்படுத்தி பேசியதோடு என்னை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

 

அந்த சம்பவத்தில் எங்களுக்கு துளியளவும் தொடர்பு இல்லை என்பதை

ஆணித்தரமாக தெரிவித்துக்கொள்கிறோம். நீங்கள் காங்கிரஸ் கட்சியை வழிநடத்தி செல்வதில் மட்டுமல்ல இந்த முழு இந்தியாவையும் வழிநடத்தி செல்லும் உங்களுக்கு எங்கள் முழு ஆதரவு எப்போதும் உண்டு. (முழு இந்தியாவையும் வழி நடத்தித் தான் ஈழத் தமிழர்களை கொன்று குவித்தார்)

 

தேசத்தின் நலனுக்காக உங்களது குடும்பம் அளித்துள்ள பங்களிப்பை நாங்கள் எப்போதும் மதிக்கிறோம். தமிழகத்தில் தலித் மக்களுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே நல்லுறவு நீண்டகாலமாக இருந்து வருகிறது.

 

 

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியால் தலித் மக்களின் நிலை பற்றி விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் எல்.இளையபெருமாள் மற்றும் தமிழகத்தின் முன்னாள் உள்துறை அமைச்சர் கக்கன் ஆகியோரை பெருமையுடனும், அன்புடனும் நினைவுகூறுகிறோம்.

 

மீண்டும் ஒருமுறை உங்கள் குடும்பத்திற்கு, குறிப்பாக ராஜீவ்காந்திக்கு

எனது மரியாதையையும், வணக்கங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். ராஜீவ்காந்தி சிலை அவமதிப்பு விவகாரத்தில் எங்களுக்கு சம்பந்தம் உண்டு என்று கூறப்படுவதை நாங்கள் வன்மையாக மறுக்கிறோம்.

 

எப்படி இருக்கிறது கடிதம்.   (இப்படி ஒரு பொழப்பு பொழைக்கறதுக்கு திருமாவளவன் நாண்டுகிட்டு சாகலாம்)

 

3-11-10_thiruma_cine_1

இத்தோடு இந்த விவகாரம் முடிவுக்கு வந்தது. தமிழகத்தில் தேர்தல் நெருங்க நெருங்க, காங்கிரஸ் கட்சி, குறைந்தது 100 சீட்டுகளும், துணை முதல்வர், உள்ளாட்சித் துறை, வணிக வரித் துறை, போக்குவரத்துத் துறை போன்ற முக்கியத் துறைகளை தேர்தலுக்கு முன்பே கூட்டணி பேச்சுவார்த்தையின் போதே முடிவு செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தது.   ஆனால், கருணாநிதிக்கு இது போன்ற எந்த சலுகையையும் காங்கிரஸ் கட்சிக்கு தருவதற்கு விருப்பமில்லை. மைனாரிட்டி அரசை நடத்திக் கொண்டு, ஐந்து ஆண்டுகளாக ஆட்சியில் பங்கு கொடுக்காமல் ஓட்டிய பனங்காட்டு நரியல்லவா ?

 

இந்த நேரத்தில் இது தொடர்பான பொது நல வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வருகிறது. ராசாவின் நல்ல நேரம், நீதிபதிகள், சராமாரியான கேள்விகளால், சிபிஐ நிறுவனத்தை வறுத்து எடுக்கிறார்கள். நேரடியாக ராசாவைப் பற்றியே நீதிபதிகள் கருத்து தெரிவித்ததால், ஆண்டி முத்துவின் மகனின் இறுதிக் காட்சி தொடங்குகிறது. இந்த விவகாரம் பாராளுமன்றத்தில் கட்டாயம் எதிரொலிக்கும் என்று காங்கிரஸ் கட்சி அனுமானிக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் அடுத்த கட்ட விசாரணை நவம்பர் 15க்கு ஒத்தி வைக்கப் படுகிறது.

 

இந்த சூழலில்தான் வருகிறது சிஏஜி அறிக்கை எனப்படும் மத்திய கணக்காயரின் அறிக்கை.   இந்த அறிக்கை முதன் முறையாக ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி என்ற தொகையை கூறுகிறது. சிஏஜி அறிக்கை என்பது, ஒரு ரகசிய ஆவணம். பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் முன்பு அதை வெளியிட்டால் தண்டனைக்குரிய குற்றம்.   மேலும் சிஏஜி அறிக்கை என்றால் ஏதோ நாலு பக்கம் ஐந்து பக்கம் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். பல நூற்றுக் கணக்கான பக்கங்களைக் கொண்ட புத்தகம்.

 spectrum_2

இந்த சிஏஜி அறிக்கை, யாருக்கும் தெரியாமல், ஏறக்குறைய அனைத்து ஊடகங்களின் அலுவலகத்துக்கும் சென்றடைகிறது.   திட்டமிட்டு இந்த அறிக்கையை வெளியிட்ட காங்கிரஸ் திமுகவுக்கு தரும் நெருக்கடியை அதிகப் படுத்தியது.   அனைத்து ஊடகங்களும், இந்த அறிக்கையை வைத்து ராசாவை உரித்து தொங்க விட்டன. தேசிய ஊடகங்களில் 24 மணி நேரமும் ராசாவைப் பற்றியே விவாதங்கள்.

ஊடகங்களின் இந்த விவாதங்களிலும், ராசாவுக்கு அளிக்கும் முக்கியத்துவத்திலும், கேடி சகோதரர்களின் பங்கு மிகப் பெரியது.

 

ராசாவின் கதையில் இறுதி அத்தியாயத்தை எழுதியது ஜெயலலிதா.   ஊடகங்களில் பெரிதாக ராசா விவகாரம் விவாதிக்கப் பட்டு வரும் நேரத்தில், காங்கிரஸ் கட்சி ராசாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும், அதனால் திமுக வாபஸ் வாங்குமானால், தனது கட்சி எம்பிக்களின் எண்ணிக்கையோடு சேர்த்து, 18 எம்பிக்களின் ஆதரவை பெற்றுத் தர நான் தயார் என்ற அணுகுண்டைத் தூக்கிப் போடுகிறார்.

 

கருணாநிதியும் திமுகவும் அதிர்ந்து போனது.   ஆனால், அடுத்த இரண்டு மணி நேரத்தில் குலாம் நபி ஆசாத், அதிமுகவுக்கு இடமில்லை என்று பேட்டியளித்ததும், கருணாநிதி மீண்டும் குஷியானார்.   அதற்குப் பிறகுதான், மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தொலைத் தொடர்புத் துறை சார்பாக சிபிஐ விசாரணை கோரும் பொது நல வழக்கில் பதில் மனு தாக்கல் செய்கிறது. அந்த மனுவில், ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் தவறே நடக்கவில்லை என்று மத்திய அரசு கூறுகிறது.

 

ராசாவும், கருணாநிதியும் குஷியாகிறார்கள். மத்திய அரசு தாக்கல் செய்த மனுவையே அடிப்படையாக கொண்டு, முரசொலியில் பக்கம் பக்கமாக எழுதுகிறார்கள்.

 

இந்த நீதிமன்ற வழக்கு தொடர்பாக இந்த இடத்தில் ஒன்றைக் குறிப்பிட வேண்டியுள்ளது.   சிபிஐ விசாரணை வேண்டும் என்ற பொது நல வழக்கில் ஆஜராவதற்காக சிபிஐ ஒரு வழக்கறிஞரை நியமித்திருந்தது. மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் பெயர் கோபால் சுப்ரமணியம். இந்த கோபால் சுப்ரமணியம் என்ன சிபிஐ இடம், நானே உங்களுக்கும் சேர்த்து வாதாடுகிறேன் என்று கூறுகிறார். இவரை வழக்கறிஞராக நியமித்தால், வழக்கு விபரங்களை ராசாவிடம் சொல்லி விடுவார் என்று உணர்ந்த சிபிஐ, முடியாது என்று கூறி விட்டது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, சிபிஐ ன் வழக்கறிஞரும் தொலைத் தொடர்புத் துறை சார்பாக கோபால் சுப்ரமணியமும் இருந்தார்கள். விசாரணை தொடங்கியவுடன், கோபால் சுப்ரமணியம், சிபிஐக்கும் சேர்த்து நான்தான் ஆஜராகிறேன் என்று கூறினார். இதையடுத்து வெளியேறிய சிபிஐ வழக்கறிஞர் சிபிஐ இயக்குநரிடம் இது பற்றி கூறவும், எழுத்துப் பூர்வமாக சிபிஐ கோபால் சுப்ரமணியத்திடம் நீங்கள் ஆஜராக வேண்டாம் என்று எழுதுவதில் போய் முடிந்தது.

 

 BCI-Gopal-Subramanium-1

 

கோபால் சுப்ரமணியம்

 

ராசாவும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் பேட்டி கொடுக்கிறார். முரசொலியின் ஆங்கிலப் பதிப்பான இந்து நாளேட்டில் ஞாயிறன்று ராசா பேட்டி கொடுக்கிறார்.   கோபாலபுரத்தின் நிலைய வித்வானான ஆர்.கே.ராதாகிருஷ்ணன் பேட்டியை அவரே தயாரித்து, கோபாலபுரத்தில் ஒப்புதல் பெற்றபின் வெளியிடுகிறார்.

 

இதற்கு நடுவே ராசாவை ஆதரித்து, பெரியார் மடத்தின் அறங்காவலர் அருட்திரு வீரமணி அவர்கள் அறிக்கை வெளியிடுகிறார். திருமாவளவன் அறிக்கை வெளியிடுகிறார். ஆனால், எதுவுமே ராசாவை காப்பாற்றவில்லை என்பதுதான் சோகம்.

 

ஞாயிறன்று காலை முதல், கருணாநிதி சோனியாவை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறார்.   அவரது அழைப்பை சோனியா ஏற்கவில்லை. This is pay back time.   கருணாநிதி சோனியா லைனில் வந்தால், அவரிடம் “உங்கள் தனிப்பட்ட பழி வாங்கும் உணர்ச்சிக்காக ஒரு வருடத்திற்கும் மேலாக ஈழத் தமிழர்கள் கொல்லப் படும் போது நான் எனது இனத்தையே காட்டிக் கொடுத்து உங்களுக்கு ஆதரவு தந்தேனே. அது போல இந்த ராசா விவகாரத்தில் எனக்கு ஆதரவு கொடுங்கள்“ என்று கேட்கப் போகிறேன் என்று புலம்பியிருக்கிறார்.   ஆனால் சோனியா தரப்பில், எதுவாக இருந்தாலும் பிரணாப் முகர்ஜியிடம் பேசிக் கொள்ளுங்கள் என்று கூறப் பட்டு விட்டது. பிரணாப் கருணாநிதியிடம் தயவு செய்து ராசாவை ராஜினாமா செய்யச் சொல்லுங்கள். வேறு வழியே இல்லை.   நாளை எதிர்க்கட்சிகள், பாராளுமன்றத்திற்குள் தர்ணா செய்யவும், ஜனாதிபதியை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார்கள் என்று கூறியுள்ளார். இதற்கு கருணாநிதி சரி ராசாவிடம் இருந்து அந்த இலாக்காவை பறித்தால், அதை பிரதமரையே வைத்துக் கொள்ளச் சொல்லுங்கள், வேறு யாரிடமும் தர வேண்டாம் என்பதை வேண்டுகோளாக வைத்துள்ளார். அப்படியே ஆகட்டும் என்றார் பிரணாப்.

 

கருணாநிதி ராசாவை அழைத்து, பாராளுமன்றம் மறுநாள் கூடியவுடன், இத்தனை நாள் தொலைத் தொடர்புத் துறையில் செய்த சாதனைகளையெல்லாம் விளக்கி ஒரு அறிக்கை படித்து விட்டு, நான் எந்தக் குற்றமும் செய்யாவிட்டாலும், பாராளுமன்றம் நடக்க வேண்டும் என்பதற்காக ராஜினாமா செய்கிறேன் என்று கூறி விட்டு ராஜினாமா செய்யலாம் என்று திட்டமிட்டுள்ளார்கள்.

 

ஆனால், காலையில் மனசு மாறினால் என்ன செய்வது என்று காங்கிரசார், ஞாயிறன்று இரவே, ராசாவிடம் இருந்து வலுக்கட்டாயமாக ராஜினாமா கடிதத்தை பெற்றனர்.

 raja_3

சரி. இலாக்காவையாவது பிரதமரே வைத்துக் கொள்வார் என்று பார்த்தால், அதையும் கபில் சிபலிடம் கொடுத்ததன் மூலம், யார் பெரியவர் என்பதை காங்கிரஸ் கட்சி கருணாநிதிக்கு தெளிவாக உணர்த்தியுள்ளது.

 

இந்த ராசாவின் ராஜினாமா, கருணாநிதியை மிக மிக பலவீனமாக நிலையில் தள்ளியுள்ளது. எவ்வளவோ இயன்றும், ராசாவை காப்பாற்ற முடியவில்லையே என்று மனம் வெதும்பித்தான் இன்று கருணாநிதி ராசாவை பாராட்டி தகத்தகாய கதிரவன் என்றும், தலித் இனத்தின் தங்கம் என்றும் பாராட்டியுள்ளார். இந்த ஏழை தகத்தகாய கதிரவன், ஊட்டியில் 300 ஏக்கருக்கு டீ எஸ்டேட் வாங்கியுள்ளார்.   இவர் தலித்தாம்……. இவர், நீதிபதி பி.டி.தினகரனெல்லாம் தலித் என்றால் அப்போ தலித் என்பவர்  யார் ?

 

1989 பாராளுமன்றத் தேர்தலை கவனித்தவர்கள் ஒரு விஷயத்தை மறந்திருக்க இயலாது. அந்தத் தேர்தலில் ஒரே பிரச்சினை போபர்ஸ் ஊழல் மட்டும் தான். அப்போதெல்லாம் இந்த ப்ளெக்ஸ் போர்டுகள் கிடையாது. தூரிகை கொண்டு வரைவதுதான். தெருவுக்குத் தெரு போபர்ஸ் ஊழல், போபர்ஸ் திருடன் ராஜீவ் காந்தி, பீரங்கித் திருடன் என்று பேனர்கள், கட் அவுட்டுகள். போபர்ஸ் என்ற ஒரே விஷயத்தில் தான் அந்தத் தேர்தலில் வி.பி.சிங் பிரதமராக முடிந்தது. அந்த போபர்ஸ் ஊழலின் மொத்தத் தொகை வெறும் 66 கோடி ரூபாய்கள். அப்போது இது பெரிய தொகையாக இருந்தாலும், இப்போது ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி பெரிய தொகை தானே. 66 கோடி ரூபாய் ஊழலைப் பற்றிப் பேசியே மருமகனை மத்திய மந்திரி ஆக்கிய கருணாநிதி வரலாறு காணாத இந்த ஊழலைப் பற்றி பேசுகிறாரா ?

 

dinamani_cartoon

 

இந்தத் தொகை குறித்து, மத்திய கணக்காயரின் அறிக்கை பத்திரிக்கைகளில் வெளி வந்த போது, ஆ.ராசாவும், கருணாநிதியும் அது பற்றிக் கூறியது, “இந்த அறிக்கை இறுதியானது அல்ல.   1999 முதல் அலைக்கற்றை ஒதுக்கீடு இப்படித் தான் நடந்தது. அப்போது சிஏஜி ஏன் வாயைத் திறக்கவில்லை. “ என்று பேசினர்.

 

இப்போது ராசா ராஜினாமாவிற்கு பிறகு, பாராளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. மேலும், ஜெயலலிதாவும் இந்தக் கோரிகிகையை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாகவும், இதற்கு முந்தைய பத்தியில் கருணாநிதி சொன்ன சிஏஜி அறிக்கை தொடர்பாகவும், கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையை பாருங்கள். அத்தோடு இந்தக் கட்டுரையை நிறைவு செய்யலாம்.

 

 

’பார்லிமென்ட் கூட்டுக்குழுவை விட பொது கணக்கு குழு அதிகாரமிக்கது. இந்த குழு எதிர்கட்சியை சேர்ந்தவர்  தலைமையில் இயங்குகிறது.


எதிர்கட்சிகளின் கோரிக்கை   பாஜகவின் முரளி மனோகர் ஜோஷி தலைமையில் இயங்கும் பொது கணக்கு குழு மீது நம்பிக்கை இல்லை என்பதை காட்டுகிறது.


பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைக்கப்பட்டால், அது ஆளும் கட்சியை சேர்ந்த உறுப்பினர் தலைமையில் அமைக்கப்படும்.


மேலும் இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் முன்பு உள்ளதால் முடிவு எடுக்கப்பட முடியாது.

ஆங்கில அச்சு ஊடகங்களில் ராசாவைப் பற்றி வந்த செய்திகள்.

Hindustan_Times

15_11_2010_001_011

 

311951

 

Comments  

 
+1 #178 gvass 2011-05-11 23:05
nalla pani thodarattum
Quote
 
 
-4 #177 madhavan 2011-03-04 02:25
be bold write the truth but dnt write volgur
Quote
 
 
+1 #176 M.V.SHANMUGARAJ 2010-12-26 10:53
savukkadi naalathisaiyilu m sulalattum
Quote
 
 
+6 #175 Nanbenda 2010-12-10 17:23
ஆண்டிமுத்து அன்று இரவுக் காட்சிக்குத் போயிருந்தார். ஆனால், பாவம் அவர் மனைவி (ஆ.ராசாவின் தாய்) தான் போகவில்லை.
Quote
 
 
0 #174 K. sridhar 2010-12-10 13:19
I like your every one article and forward this article to our friends. Netrikkan thiranthalum Kutram Kutramay endru thangal pani purivathu sirapudayathu. Ungal pani thodara vazhthukkal
Quote
 
 
+5 #173 பூமி நாதன் .என் . 2010-12-05 18:25
விக்கி லீக்ஸ் பற்றி தேடும் போது தான் சவுக்கு என்று ஒரு தளம் தமிழில் இருப்பது தெரிய வந்ததது . நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன் . தொடரட்டும் உங்கள் சவுக்கடி .

என் . பூமி நாதன்
Quote
 
 
0 #172 nesan 2010-12-03 19:59
rasaa...rasaa........manmatha rasaa....(fruit language)
very good
keep it up
Quote
 
 
-10 #171 Kumar.T 2010-11-23 23:52
Quoting Dhanam:
[quote name="பாலமுரளி"]இப்பதிவுகளின் மாற்றுக்கருத்து டையோர்க்கு:

இவன் ஜெயலலிதாவிடம் வாங்கிய பணத்துக்கு எழுதுறான். 250 ரூபாவுக்கு ஒரு வெப் சைட் create பண்ணி வச்சுக்கிட்டு தேவ....யா பையன் என்னவெல்லாம் எழுதுறான். உனக்கு படிக்க விருப்பம் இல்லை என்றால் ஏன் படிகிறேணு நீ வேண்னும்னா சொல்லலாம். அப்படினா பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத இந்த வெப் சைட் வச்சு நீ என்ன பொறம்போக்கு தனம் பண்ணினாலும் பாத்துகிட்டு இருக்க முடியாது. எப்படி என்றால் ஒரு பொது இடத்துல ஒருத்தன் தண்ணிய போட்டுக்கிட்டு பிரச்சன பண்ணினா நான் ஒதுங்கி போக மாட்டேன்.


நீ திருக்குவளைக்கி ட்ட எவ்வளவு வாங்கிக்கிட்டு இங்க வந்து கூவிக்கிட்டு இருக்க?... இது ஒண்ணும் பொது இடம் இல்ல சவுகோட தனி இடம், இங்க வந்து தேவை இல்லாம வாந்தி எடுக்காதே !
Quote
 
 
+1 #170 anonymous 2010-11-23 09:50
Dear Savukku,
I enjoyed your article. Its absolutely true that this person raja has taken away Rs.1.76 lakh crores. Hats off to you service to the society.
Quote
 
 
0 #169 C.TAMILSELVAN 2010-11-22 13:35
I condemn your wording of andimuthu, the innocent parents of Raja. Then your wordings, going as Congress is a watchdog which hands are clean, and then this lady kodanadu, is also clean , you shd write bofors, adharsh, common wealth gate congress, tansi kodanadu rani as well as. do not mortagage tamils to congress and aiadmk hands.maintain neutral
Quote
 
 
+4 #168 anand chelliah 2010-11-22 13:01
“1962ல் ஆண்டிமுத்து இரவுக்காட்சிக்க ுப் போயிருந்தால்?’’ ஏன் இப்படி ஆகிட்டீங்க? சவுக்கு முன்வைக்கும் உண்மைகள் தீப்பொறியாய் இருக்கட்டும். தீப்பொறி ஆறுமுகம் போல இருக்க வேண்டாம்.
Quote
 
 
0 #167 sankar 2010-11-21 00:12
There shoud be dignity in the site on using the word. These kind of words will one reduce teh image of the site. Its not good for the site. Be decent.
Quote
 
 
+4 #166 குப்புசாஇ 2010-11-20 18:23
ஆண்டிமுத்து அன்று இரவுக் காட்சிக்குப் போனதால்தான் இந்த ராசா வந்துள்ளார்.

அப்ப அப்பா..யாருடா?

வேற யாருடா மஞ்சத்துண்டு?
Quote
 
 
0 #165 raj 2010-11-20 10:39
NAAL ARTICLE SHANHAR.THALAIPPAI MAATTIVIDUNKAL-THAYA FROM TAMILEELAM :o

www.tamilradioo.com
Quote
 
 
-1 #164 Dhanam 2010-11-20 02:48
Quoting சவுக்கு:
Take it it in a lighter vein Mr.Raj. We have lost our tax money of 1.76 lakh crores, which is not recoverable. How else would you outlet your anguish, but to make fun of these people.

ரொம்ப சிம்பிள் விஷயம் " அன்று இரவு இந்த தலைப்பை எழுதியவனின் அம்மா பக்கத்துக்கு வீட்டு காரனோடு படுக்காமல் இருந்தால் இப்படி ஒரு தலைப்பு வந்திருக்காது"
Quote
 
 
-1 #163 Dhanam 2010-11-20 02:43
Quoting சிராஜ்:
உங்கள் இணையத்தை தொடர்ச்சியாக கவனித்தும் வாசித்தும் வருகிறேன். மிக சிறப்பான முறையில் இருக்கிரது. வாழ்த்துக்கள். ஆண்டிமுத்து இரவுக்காட்சிக்க ு போயிருந்தால் என்ற தலைப்பு உடமை சமூக மன நிலையை வெளிப்படுத்துவத ாக இறுக்கிறது. இது பொன்ற் தலைப்புகளை தாங்கள் அவசியம் தவிர்க்கவேண்டும ்.



ரொம்ப சிம்பிள் விஷயம் " அன்று இரவு இந்த தலைப்பை எழுதியவனின் அம்மா பக்கத்துக்கு வீட்டு காரனோடு படுக்காமல் இருந்தால் இப்படி ஒரு தலைப்பு வந்திருக்காது"
Quote
 
 
-7 #162 Dhanam 2010-11-20 02:42
. நாயே அப்படிதான் சாவுக்கும் செயல்படுகிறது... நீங்க ஆட்சி என்ற பெயரில் என்ன செய்தாலும் பாதுகொண்டிருகமு டியது

ரொம்ப சிம்பிள் விஷயம் " அன்று இரவு இந்த தலைப்பை எழுதியவனின் அம்மா பக்கத்துக்கு வீட்டு காரனோடு படுக்காமல் இருந்தால் இப்படி ஒரு தலைப்பு வந்திருக்காது"
Quote
 
 
+5 #161 சிராஜ் 2010-11-19 16:02
உங்கள் இணையத்தை தொடர்ச்சியாக கவனித்தும் வாசித்தும் வருகிறேன். மிக சிறப்பான முறையில் இருக்கிரது. வாழ்த்துக்கள். ஆண்டிமுத்து இரவுக்காட்சிக்க ு போயிருந்தால் என்ற தலைப்பு உடமை சமூக மன நிலையை வெளிப்படுத்துவத ாக இறுக்கிறது. இது பொன்ற் தலைப்புகளை தாங்கள் அவசியம் தவிர்க்கவேண்டும ்.
Quote
 
 
-1 #160 ஊசி 2010-11-19 15:57
Quoting Dhanam:
Quoting பாலமுரளி:
இப்பதிவுகளின் மாற்றுக்கருத்து டையோர்க்கு:

உங்களுக்கு ஜூனியர் விகடனோ அல்லது குமுதம் ரிப்போர்டரோ அல்லது நக்கீரனோ பிடிக்கவில்லையெ னில் நீங்கள் அதனை நிறுத்தவேண்டும் எனக்கூற முடியாது.

வேண்டுமானால் நீங்கள் வாங்குவதை நிறுத்தலாம்.

.

அதைவிடுத்து தேவையில்லததையெல ்லாம் எழுதவேண்டாம்.


இவன் ஜெயலலிதாவிடம் வாங்கிய பணத்துக்கு எழுதுறான். 250 ரூபாவுக்கு ஒரு வெப் சைட் create பண்ணி வச்சுக்கிட்டு தேவ....யா பையன் என்னவெல்லாம் எழுதுறான். உனக்கு படிக்க விருப்பம் இல்லை என்றால் ஏன் படிகிறேணு நீ வேண்னும்னா சொல்லலாம். அப்படினா பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத இந்த வெப் சைட் வச்சு நீ என்ன பொறம்போக்கு தனம் பண்ணினாலும் பாத்துகிட்டு இருக்க முடியாது. எப்படி என்றால் ஒரு பொது இடத்துல ஒருத்தன் தண்ணிய போட்டுக்கிட்டு பிரச்சன பண்ணினா நான் ஒதுங்கி போக மாட்டேன்.
நாயே அப்படிதான் சாவுக்கும் செயல்படுகிறது... நீங்க ஆட்சி என்ற பெயரில் என்ன செய்தாலும் பாதுகொண்டிருகமு டியது
Quote
 
 
+2 #159 praburaja 2010-11-19 12:58
-2 #157 Dhanam 2010-11-19 05:46
Quoting பாலமுரளி:

எப்படி என்றால் ஒரு பொது இடத்துல ஒருத்தன் தண்ணிய போட்டுக்கிட்டு பிரச்சன பண்ணினா நான் ஒதுங்கி போக மாட்டேன்.

--------------------------

பொது இடம் என்றால் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதோ இல்லையோ அங்கே நீங்கள் இருக்க வேண்டிய கட்டாயம் இருக்கும். உதாரணம். பேருந்து நிலையம். விமான நிலையம். இணையம் என்பது நீங்கள் உங்கள் கணினியை இயக்கி , சவுக்கு என அடித்து அதற்கு பிறகே வருவது. இது பொது இடமா?. விருப்பமானவர்கள ் மட்டுமே இங்கு வர முடியும்.
இன்னொரு சங்கதி. இணையம் என்பது அரசுக்கே கட்டுப்படாத ஒன்று. அதில் நீங்கள் வந்து நீ இதை எழுதலாம் , எழுதக் கூடாது என்று சொல்ல முடியாது. இது என்ன தினகரன் பத்திரிக்கையா? எரிப்பதற்கு?.
நீங்கள் மதுரைக்கு போய் அழகிரியிடம் என் பொது இடத்தில் நடக்க முடியாமல் இப்படி நாசப்படுத்தி வைத்து இருக்கிறீர்கள் என்று கேளுங்கள். அப்போ நீங்கள் தான் நீங்க பொம்பளை.
Quote
 
 
0 #158 tamizhan 2010-11-19 11:13
ஒருவன் தனது ஒரு கோடி மதிப்பிலான வீட்டை தனது உறவினர் ஒருவரிடம் கொடுத்து வாடகைக்கு விட சொன்னான். நியாயமான வாடகை மாதம் ஒரு நாற்பதாயிரம் என்று வைத்து கொள்வோம். அந்த உறவினர் தனது அம்மாவுக்கு அந்த வீட்டை நூறு ரூபாய்க்கு வாடகைக்கு கொடுக்கிறார். அந்த நூறு ரூபாயை வீட்டுக்கு சொந்தக்காரரிடம் கொடுக்கிறார். பிறகு அந்த அம்மா வீட்டை நாற்பதாயிரம் ரூபாய்க்கு உள்வாடகைக்கு விட்டு அந்த பணத்தை எடுத்து கொள்கிறார். இப்போ சொல்லுங்கள் மாதம் நூறு ருபாய் வருமானம் ஏற்படுத்தியதற்க ாக அந்த வீட்டுக்கு சொந்தக்காரர் சந்தோசப்பட வேண்டுமா?.
இதில் வீட்டு சொந்தக்காரர் - நமது நாடு. உறவினர் - ராசா. அம்மா - உநிடேக் நிறுவனம். இப்போ புரியுதா?.
வடிவேலு பாணியிலே - விட்டா கிறுக்கன் ஆக்கிருவீங்க போல இருக்கே.
Quote
 
 
-4 #157 Dhanam 2010-11-19 05:46
Quoting பாலமுரளி:
இப்பதிவுகளின் மாற்றுக்கருத்து டையோர்க்கு:

உங்களுக்கு ஜூனியர் விகடனோ அல்லது குமுதம் ரிப்போர்டரோ அல்லது நக்கீரனோ பிடிக்கவில்லையெ னில் நீங்கள் அதனை நிறுத்தவேண்டும் எனக்கூற முடியாது.

வேண்டுமானால் நீங்கள் வாங்குவதை நிறுத்தலாம்.

அதேபோல் இங்கே கூறப்பட்டுள்ளவை தங்களுக்குப் பிடிக்கவிலையெனி ல் தங்களது மாற்றுக்கருத்தை க் கூறலாம் அல்லது இப்பக்கம் வரவேண்டாம்.

அதைவிடுத்து தேவையில்லததையெல ்லாம் எழுதவேண்டாம்.


இவன் ஜெயலலிதாவிடம் வாங்கிய பணத்துக்கு எழுதுறான். 250 ரூபாவுக்கு ஒரு வெப் சைட் create பண்ணி வச்சுக்கிட்டு தேவ....யா பையன் என்னவெல்லாம் எழுதுறான். உனக்கு படிக்க விருப்பம் இல்லை என்றால் ஏன் படிகிறேணு நீ வேண்னும்னா சொல்லலாம். அப்படினா பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத இந்த வெப் சைட் வச்சு நீ என்ன பொறம்போக்கு தனம் பண்ணினாலும் பாத்துகிட்டு இருக்க முடியாது. எப்படி என்றால் ஒரு பொது இடத்துல ஒருத்தன் தண்ணிய போட்டுக்கிட்டு பிரச்சன பண்ணினா நான் ஒதுங்கி போக மாட்டேன்.
Quote
 
 
+3 #156 praburaja 2010-11-19 02:58
#155 உண்மை விளம்பி 2010-11-18 22:02
கசையால் தம்மைத் தாமே அடித்துக்கொள்ளு ம் வித்தைக்காரரின் பிழைப்பு உமது பிழைப்பு சவுக்காரே.
நீர் தூங்குகிறீரா, நடிக்கிறீரா என்று தெரியவில்லை
----------------------
உங்க மொழியிலயே நான் விளக்குகிறேன். ஒருவன் தனது ஒரு கோடி மதிப்பிலான வீட்டை தனது உறவினர் ஒருவரிடம் கொடுத்து வாடகைக்கு விட சொன்னான். நியாயமான வாடகை மாதம் ஒரு நாற்பதாயிரம் என்று வைத்து கொள்வோம். அந்த உறவினர் தனது அம்மாவுக்கு அந்த வீட்டை நூறு ரூபாய்க்கு வாடகைக்கு கொடுக்கிறார். அந்த நூறு ரூபாயை வீட்டுக்கு சொந்தக்காரரிடம் கொடுக்கிறார். பிறகு அந்த அம்மா வீட்டை நாற்பதாயிரம் ரூபாய்க்கு உள்வாடகைக்கு விட்டு அந்த பணத்தை எடுத்து கொள்கிறார். இப்போ சொல்லுங்கள் மாதம் நூறு ருபாய் வருமானம் ஏற்படுத்தியதற்க ாக அந்த வீட்டுக்கு சொந்தக்காரர் சந்தோசப்பட வேண்டுமா?.
இதில் வீட்டு சொந்தக்காரர் - நமது நாடு. உறவினர் - ராசா. அம்மா - உநிடேக் நிறுவனம். இப்போ புரியுதா?.
வடிவேலு பாணியிலே - விட்டா கிறுக்கன் ஆக்கிருவீங்க போல இருக்கே.
Quote
 
 
-1 #155 உண்மை விளம்பி 2010-11-18 22:02
கசையால் தம்மைத் தாமே அடித்துக்கொள்ளு ம் வித்தைக்காரரின் பிழைப்பு உமது பிழைப்பு சவுக்காரே.
நீர் தூங்குகிறீரா, நடிக்கிறீரா என்று தெரியவில்லை. இரண்டு வீட்டை விற்ற கதையல்ல இது. ஒரு வீட்டை ஒருவர் 10 ஆயிரம் அட்வான்ஸ், மற்றும் மாத வாடகை பேசி விடுகிறார். மற்றொரு வீட்டை 10 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடுகிறார் (விற்றுவிடுகிறா ர்). அதாவது 2ஜி என்பது வருவாய் பகிர்வு அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 3ஜி என்பது ஏலம் விடப்பட்டது. முன்னதில், ஒதுக்கீட்டுக் கட்டணம் தவிர, தொடர்ந்து அரசுக்கு வருவாய் பங்கீடு கிடைக்கும். ஆனால் பின்னதில் தொடர் வருவாய் இல்லை.

3ஜி-யில் ஏலத் தொகை (அதாவது கிரயம்) ரூ.70,000 கோடி. தற்போது சர்ச்சைக்குள்ளா கியுள்ள 2ஜி-யில் உரிமக் கட்டணம் (அதாவது அட்வான்ஸ் போல) சுமார் 2 ஆயிரம் கோடி. இரண்டையும் ஒப்பிட்டுப் பேசுவதே மூடத்தனம். நிற்க, ராஜா ஊழல் செய்துவிட்டதாகக ் குற்றம்சாட்டப்ப டும் 2ஜி-யில் வருவாய்ப் பகிர்வு அடிப்படையில் இன்றுவரை அரசுக்குக் கிடைத்துள்ள வருவாய் ரூ.76,000 கோடி. அதாவது 3ஜி ஏலத்தொகையைவிட அதிகம்.
Quote
 
 
+2 #154 praburaja 2010-11-18 20:29
-1 #150 shanthibabu 2010-11-18 19:00
அய்யா பெரியோர்களே , முடிந்தால் நீங்கள் எல்லாம் ஒரு வார்டு மெம்பர் ஆவது ஆகி மக்கள் சேவை செஞ்சு பாருங்க
-----
இந்த மாதிரி பதிழேழு லட்சம் கோடி கொள்ளை அடிக்கறதுக்கு பேர் சேவையா?. ராசாவுக்கு விருப்பம் இல்லாட்டி அடுத்த தேர்தலில அவர் போட்டி போடா வேணாம். பொது வாழ்வுக்கு வரும் எந்த ஒரு நபரும் விமர்சனத்துக்கு உட்பட்டே ஆக வேண்டும்.
Quote
 
 
+3 #153 வினோ 2010-11-18 20:26
அருமையான விவாதம் வெக்கமா இருக்கு மொத்த உழல் பணதிலையும் இந்த திமுக குடும்பம் நல்லா வாழுது அவங்கள சொல்லி தப்பு இல்ல பிச்சை எடுக்கும் ஓசில வாங்கி உக்கார்ந்து தின்னும் இந்த பரதேசி மக்களை சொல்லணும் - ஓசில வராத தூக்கி எரியனும் அப்போதான் இந்த தமிழ் நாடு திருந்தும்
Quote
 
 
+1 #152 praburaja 2010-11-18 20:21
Actually Raja did a additional revenue generation,

----
நல்ல இருக்கு உங்க கதை. அப்போ மந்திரிகள் எல்லோரும் அரசு சொத்து எதாவது பயன்படாம இருந்தா நல்ல விலைக்கு வித்துடலாம். அப்போ நிறைய பொறோம்போக்கு இடம் இருக்கு. அதக் கூட அடிமாட்டு விலைக்கு விக்கலாமே.
பணம் பறி போனது கூட பிரச்சினை இல்லை. ஆனா இப்படி சேர்த்த பணம் தானே ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்க பயன்படுத்தப்பட் டது?. இதே பணம் தானே ஜனநாயகத்தின் குரல்வளையை நெறித்தது?. தவறான வழியில் ஒருவன் பணம் சேர்த்தால் அந்த சமூகம் நேர்மையில் வைக்கும் நம்பிக்கை குறைகிறது. இது தான் இந்த ஊழலின் மிகப்பெரிய குற்றம். பணம் ஒன்றும் அல்ல.
Quote
 
 
-1 #151 shanthibabu 2010-11-18 19:29
What Raja did is like a clearance Sale, 2G was there since 98/99 and when Raja became Telecomm Min in 2007, found that some unutilized 2G spectrum bandwidth is available. He foreseen that 3G shall hit by 2008/2009, hence did a Stock Clarence Sale as per already existing and followed up process..



Actually Raja did a additional revenue generation, he could have just ignored the unutilized 2G Bandwidth and kept quiet. In that case this whole issue wouldn't pop-upped and few Old Big Telecom Providers shall be enjoying the tele com market with their own tariffs..
Quote
 
 
0 #150 shanthibabu 2010-11-18 19:00
அய்யா பெரியோர்களே , முடிந்தால் நீங்கள் எல்லாம் ஒரு வார்டு மெம்பர் ஆவது ஆகி மக்கள் சேவை செஞ்சு பாருங்க .... ப்ளாக்ல போஸ்டிங் போடறதும் கமெண்ட்ஸ் குடுக்கறதும் ரொம்ப ஈஸி தான்... இதில எத்தன பேர் நம்ம நாட்டுல இருக்கிங்க...?
Quote
 
 
+2 #149 praburaja 2010-11-18 17:30
இந்த ஊழலில் பல மாங்காய்களை காங்கிரஸ் அடித்து விட்டது. ஒன்று. இந்த காசை காட்டி கருணாநிதியின் வாயை மூடி ஈழ மக்களை அழித்தது. பின்பு இதே ஊழலை காரணம் காட்டி தி.மு.க வை அழித்து காங்கிரஸ் கட்சியை தமிழ்நாட்டில் வளர்ப்பது. அல்லது தி.மு.க. விற்கு காங்கிரஸ் அடிமை தயாநிதி மாறனை தலைவர் ஆக்குவது.
இன்னொரு தெரியாத உண்மை. இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட டெலினோர் ஒரு நோர்வே நிறுவனம். அது ஒரு பழைய அரசு நிறுவனம். அதன் மூலமாக நோர்வே அரசுக்கு அழுத்தம் கொடுத்து ஈழ மக்களை அழிப்பது.
பாருங்கள். ஒரு ஆளின் பேராசை எப்படி ஒட்டு மொத்த தமிழினத்தின் அழிவிக்கும் வழி வகுத்தது என்று. சவுக்கு இந்த ஊழலில் காங்கிரஸ் கட்சியின் பங்கை மக்களிடம் சொல்ல வேண்டும்.
Quote
 
 
+4 #148 பாலமுரளி 2010-11-18 16:59
இப்பதிவுகளின் மாற்றுக்கருத்து டையோர்க்கு:

உங்களுக்கு ஜூனியர் விகடனோ அல்லது குமுதம் ரிப்போர்டரோ அல்லது நக்கீரனோ பிடிக்கவில்லையெ னில் நீங்கள் அதனை நிறுத்தவேண்டும் எனக்கூற முடியாது.

வேண்டுமானால் நீங்கள் வாங்குவதை நிறுத்தலாம்.

அதேபோல் இங்கே கூறப்பட்டுள்ளவை தங்களுக்குப் பிடிக்கவிலையெனி ல் தங்களது மாற்றுக்கருத்தை க் கூறலாம் அல்லது இப்பக்கம் வரவேண்டாம்.

அதைவிடுத்து தேவையில்லததையெல ்லாம் எழுதவேண்டாம்.
Quote
 
 
+3 #147 Sarangan 2010-11-18 16:29
Quoting இரா. தமிழ்க்கனல்:
மற்றபடி சவுக்குக்கு தொடர்ந்து நான்காம்தர மேடைப் பேச்சாளன் ஆகவேண்டும் என்ற அரிப்பு இருந்தால் அதற்கான தளங்களைத் தேர்ந்தெடுக்கலா மே. ஏன் இந்த தளத்துக்கான மதிப்பைக் கெடுக்கவேண்டும் ?



if you are not interested in readin such sites no one is welcoming you.
Quote
 
 
+4 #146 புரவி 2010-11-18 16:15
YO.SINGAPPAA அவர்களுக்கு,
"ஆனால் அடுத்த தலைமுறைக்கு அன்பை கடத்த முடியும்" உங்களை போன்றவர்களின் தன்நம்பிகையால் அடுத்த தலைமுறை அல்ல இந்த தலைமுறையிலே சாதிக்க முடியும்.
Quote
 
 
+2 #145 Mallar 2010-11-18 16:15
Quoting Prof.PallanMuniyandy :
Let me add. All those who feel touchy about Raja being SC because of which they think he should not be harmed ponder the following: Has Raja looted the country for the welfare of his fellow Dalits? Or has he swindled the exchequer for the welfare of the ruling family of TN? Just think. Be reasonable. You may also note one most important thing. I AM A pallan (SC) from Tittai village of Tanjore. But I had the good fortune of being educated at Oxford. My education was sponsored by a Brahmin. You people may like to deride him as paappaan. Ask Veeramani/Raja/Karunanidhi as to how many SCs they have supported in their lives? Naya vanchakargal. Vaai sollil veeram mikundavargal.



Prof.PallanMuniyandy ,
your view and me are looking same.
can u contact me at chellappandisoc
Quote
 
 
+2 #144 Karunanidhi 2010-11-18 15:00
தலைப்பு உங்களின் தரத்தை சொல்கிறது.
சென்னையில் தன்னை இடித்து செல்லும் மனிதனை, சம்பந்தமில்லாமல ் அவனின் அம்மாவை இழுக்கும் மட்டமான வார்த்தை,
" தேவடியா பையா". உங்களின் தலைப்பும் அவ்வாறே. நீங்கள் அவரின் தந்தையை இழுத்துள்ளீர்கள ்.
கருணாநிதி, அரசியலுக்காக 'தலித்' எனும் சொல்லை இழுக்கிறார். அதே போல் நீங்களும் ஒரு முதாளித்துவ கூட்டணியில் உள்ள ஒருத்தரை தேவையில்லாமல் அடிக்கடி 'தலித்' எனும் சொல்லை பயன்படுதியுள்ளீ ர்கள்.
இங்கே இருக்கும் கருத்துக்களை பார்க்கும் போதே தெரிந்து கொள்ளலாம், நீங்கள் கட்டுரையின் பொருளிலிருந்து எவ்வளவு விலகி செல்கிறீர்கள் என்று.
தலைப்பையும், தலித் என்ற தவறான பயன்படுத்தளையும ் தவிர்த்திருந்தா ல் இது நல்ல கட்டுரையே.
Quote
 
 
+3 #143 rukku 2010-11-18 14:37
Quoting naseer:
சிறிய அளவில திருடி விட்டால் திருடன்,,,
பெரிய அளவில் செய்தால்,,,,

அரசியல் தலைவர், அல்லது (கருணாநிதி)
Quote
 
 
+1 #142 ஊர்க்குருவி 2010-11-18 14:29
சுதந்திரப்போராட ்ட தியாகிகள், ஊனமுற்றோர், மற்றும் விதவைத்தாய்மார் களுக்கான (உதவி) கொடுப்பனவுகள் 100 அல்லது 200,Rs இதை அவர்கள் பெற்றுக்கொள்வதற ்கு பலவருடங்கள் அலைகின்றனர் அப்படி அலைந்தாலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுக்காமல் அப்பணம் கிடைத்துவிடுவதி ல்லை, ராசா அரசியலுக்கு போயிருக்கவிட்டா ல் வீட்டிலுள்ள முதியோருக்கான உதவிக்கு அலைந்து யதார்த்தம் புரிந்திருப்பார ், கருணாவுடன் அரசியலுக்கு போனதால் போன போக்கிலேயே கனி'வுடன் வாரி அள்ளியிருக்கிறா ர்,லஞ்சம் பெருகுவதற்கு அரசியல்வாதிகள்த ான் வழிகாட்டிகள், ஸ்பெக்ரம் ஊழல் 1.1/2 வருடங்களுக்கு முன்பே மண்'மோகன் சிங்கம் அறிவார் என்று தோழர் ஒருவர் குறிப்பிட்டிருந ்தார். (நானும் அறிந்தேன்)கருணா ,மண், சூனியா படுகள்ளன் பசி, எல்லொரும் ஊழலை தெரிந்தும் அமுக்கி மறைக்கத்தானே திட்டமிட்டிருந் தனர், இவற்றை சரியாக தோலுரிக்கும் சவுக்குக்கு கோடி புண்ணியம், தயவுசெய்து துரோகிகளுக்கு துணை போகாதீர்கள் ராசா போன்றவர்களை அரசியலிலிருந்து வெளியேற்றுங்கள் , ராசா நிரபராதியாக இருந்திருந்தால் ராஜினாமா செய்திருக்கத்தே வையில்லை அவர் ஒப்புக்கொண்ட குற்றவாளி,
Quote
 
 
-3 #141 Ayyo.. Ayyo.. 2010-11-18 14:23
ஜெயலலிதாவால் தான் இது (ராசா ராஜினாமா ) நடந்தது என்பதை கூறிக்கொள்வதில் சவுக்கு மிகவும் பெருமை அடைகிறது..
(நீங்கள் செய்த "பாச தலைவனுக்கு பாராட்டு விழா" மறு ஒளிபரப்பு உங்களை பற்றி தெளிவாக்கி விட்டது..)
Quote
 
 
+12 #140 YO.SINGAPPAA 2010-11-18 13:52
அன்பு புரவி அவர்களே
அமெரிக்காவில் காணாமல் போன ஒரு ஒரு படகு சாகசக்காரரை அந்த அரசின் ராணுவம் போலிஸ் தீ அணைப்பு துறைகள் இணைந்து கோடிக்கணக்கில் செலவழித்து ஹெலிகாப்ட்டர் மோட்டார் படகுகள் துணையோடு தேடுவதை டிவியில் பார்த்தேன். ஒரு அரசு தன் குடிமக்களை எவ்வவளவு மதித்தால் அது சாத்தியம்? இங்கே தினம் ஒரு மீனவரை சுடுவான் இலங்கைக்காரன் அரசோ நாமோ என்ன செய்கிறோம் மந்திரியை சுட்டால் தான் அரசுக்கு சுடும்.அந்த மீனவர் சாவு நம் வீட்டு சாவை போல் நம்மை குலுக்க நமது DNAக்களில் PROGRAMME இல்லையே ஆனால் அடுத்த தலைமுறைக்கு அன்பை கடத்த முடியும்.
Quote
 
 
0 #139 KK 2010-11-18 13:31
Congress leader calls 2g as the biggest corruption in Independant India

YC president Mr Yuvaraja described the 2G Spectrum scam as the largest corruption case in the history of Independent India and said, “Whoever was involved, irrespective of political affiliation, should be punished.” When asked about the party young wing going hammer and tongs on the DMK, Mr Yuvaraja told DC that, “We have Rahulji’s mandate to speak what is good for the country
Quote
 
 
+4 #138 புரவி 2010-11-18 12:43
OOORKKAARAN அவர்களுக்கு,
நீங்கள் சொன்ன கருத்து சரியானது தான்.
இதை போன்ற அநீதிகள் தமிழகத்தில் நடக்கின்றன. கண்டுகொள்வார்தா ன் யாரும் இல்லை.
சிங்கள கடற்படையால் கொள்ளப்பட்ட மீனவர் செல்லப்பன் அவர்களின் குடும்பம் இன்று சின்னா பின்னமாக உள்ளது.
எப்போதும் சிங்கள கடற்படையால் தமிழக மீனவர்கள் கொல்லபட்டால் அமைதி காக்கும் கருணா(நிதி) இந்த தடவை மட்டும் பிரச்னை பெரிதாகாமல் இருக்க மூன்று லட்சம் கொடுத்து உள்ளார்.
அனால் அதன் பிறகு மட்டும் 2௦ தடவைக்கும் மேலாக சிங்கள கடற்படை நமது மீனவர்கள் மீது தாக்குதல் தொடுள்ளது. அதற்கு ஒரு நடவடிக்கையும் இல்லை.
Quote
 
 
0 #137 selvam 2010-11-18 12:30
Quoting naseer:
சிறிய அளவில திருடி விட்டால் திருடன்,,,
பெரிய அளவில் செய்தால்,,,,


RASA...
Quote
 
 
+3 #136 ஆம்ஸ்ட்ராங் 2010-11-18 12:13
Quoting குசும்பன்:
ஆண்டிமுத்து அன்னிக்கி இரவுக்காட்சிக்க ு போயிருந்தால் மக்கநாள் பகல் வீட்டிலை படுத்திருப்பாரு , விதியாகப்பட்டது படு ஸ்ரோங்கானது ,,


எப்படியோ இத்தனை கோடியும் இவங்க பாக்கட்டிற்கு போகவேண்டுமென்பத ு இந்தியனின் தலைவிதி.

இந்த கம்பெனி தற்போது தமிழ்நாட்டிலிரு ந்து தன் கிளைகளை இந்தியாவரை பரப்பியுள்ளது.
Quote
 
 
+1 #135 naseer 2010-11-18 11:12
சிறிய அளவில திருடி விட்டால் திருடன்,,,
பெரிய அளவில் செய்தால்,,,,
Quote
 
 
+5 #134 N.Saravanan 2010-11-18 10:29
அன்பர்களே!

"இந்தியாவின் வரலாற்றிலேயே இந்த மிக மிகச் சிறிய ஊழல் ஒன்றரை வருடங்களுக்கு முன்னரே பிரதமருக்கு தெரிந்திருந்ததா ம்" அப்படியானால் அது அடுத்த நிமிடமே சோனியா அம்மையாருக்கும் தெரிந்திருக்கும
ஆக: ஒன்றில் இந்த ஊழலில் பிரதமருக்கும், சோனியாவுக்கும் பங்கு இருந்திருக்க வேண்டும். அல்லது பிரதமர் ராசாவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு இடுப்பில் பெலனில்லாமல் இருந்திருக்க வேண்டும். (இதில் எது சரி என்று யாராவது சொல்லுங்களேன்) எந்த அடிப்படையில் இந்த பாழாய் போன ஜென்மங்களை எல்லாம் நம் தலைவர்கள் என்று நாம் தலையில் தூக்கி வைத்திருக்கின்ற ோம்? மக்களே இனியாவது நாம் எருமை மாடுகளாக இருக்காது சிந்திக்க தெரிந்த மனிதர்களாக மாற முயற்சி செய்வோம்.
Quote
 
 
+3 #133 புரவி 2010-11-18 10:28
அழைப்பிற்கு நன்றி.
நானும் தங்களை சந்திபதற்காக ஆவலுடன் இருக்கிறேன். சகோதரி ஜோதியை பற்றி என்னை விட அதிகம் தெரிந்தவர்களிடம ் அலைபேசி என்னை கொடுத்துருகிறேன ்.
விரைவில் அவர்கள் தொடர்பு கொள்வார்கள்.
திராவிடம், தலித் என்ற சொற்களை தயவு செய்து பயன் படுத்த வேண்டாம். திராவிடம் என்று சொல்லித்தான் இன்று வந்தேறிகள் எல்லாம் தமிழனை நாசமாகி விட்டார்கள்.
இங்கே தமிழர்கள் சாதி சண்டை போட்டு நாசமாய் போய் கொண்டிருக்க இன்று தெலுங்கநெல்லாம் முதலமைச்சர் ஆக முடிகிறது.
தமிழன் தன்னை தமிழன் என்று சொல்ல கூடாது என்பதலில் இந்தியமை விட திராவிடம் தான் அதிக வேலை செய்கிறது.
அதே போல் தலித் என்றால் பாதிக்கபடுவது நம் தொல்தமிழர்களே. இரண்டு சொல்லையும் நாம் வேரறுக்க வேண்டும்.
அந்த இரண்டு வார்த்தைகளும் தமிழும் அல்ல.
Quote
 
 
+4 #132 தமிழனின் மனசாட்சி 2010-11-18 10:15
தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர் அன்பு அண்ணன், அதை தவிர அவர் வேறு என்ன தவறு செய்து விட்டார்...? தேவை இல்லாமல் ஆங்கில ஊடகங்கள் 2G அலைக்கற்றை விஷயத்தை பெரிது படுத்துகின்றன. இது ஒரு பின் தங்கிய வகுப்பை சார்ந்தவர், அதுவும் ஒரு தமிழன் மத்திய அமைச்சராக மிகவும் சிறப்பான முறையில், தாழ்த்தப் பட்ட மக்களின் உயர்வும் நல்வாழ்வும் மட்டுமே குறிக்கோளாக கொண்டு இரவு பகல் பாராமல் உழைப்பதை பார்த்து பொறுக்கமாட்டாத சக்திகளின் சூழ்ச்சி.

அடுத்த முறை மத்தியில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைத்தால் அண்ணன் அவர்களுக்கு எப்படியாவது பிரதமர் பதிவியை பெற்று தந்து விடவேண்டும். இலங்கையில் மட்டுமல்ல இந்த உலகத்தின் எந்த மூலையில் இருக்கும் தமிழனையும் அழித்தாகிலும் பிரதமர் பதவியை பெற்று விடவேண்டும். அது தான் பெரியாரும், அண்ணாவும் வகுத்து தந்த சமுதாய சீர்திருத்த பாதையில் செல்லும் நமக்கெலாம் மிகப் பெரும் பெருமை.

வாழ்க டாஸ்மாக், வாழ்க இலவசங்கள், வாழ்க தமிழ் மக்கள்.
Quote
 
 
+1 #131 avataar 2010-11-18 09:32
explain the relation between neera radia and rathnam CA
Quote
 
 
+4 #130 BrokenHeart 2010-11-18 07:10
Savukku I'm your fan because of your honesty and unbiased thinking.
However this heading is something it makes me frown upon though I agree with the content. Please avoid such headings in future. What Raja has done is no bigger crime than killing thousands of innocent people in Sri Lanka.
Quote
 
 
+8 #129 குசும்பன் 2010-11-18 06:58
ஆண்டிமுத்து அன்னிக்கி இரவுக்காட்சிக்க ு போயிருந்தால் மக்கநாள் பகல் வீட்டிலை படுத்திருப்பாரு , விதியாகப்பட்டது படு ஸ்ரோங்கானது ,,
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 98 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday5692
mod_vvisit_counterYesterday11112
mod_vvisit_counterThis week26891
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month229623
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12751742