முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
கூடங்குளம் போராட்டத்தின் பின்னணியில் பாகிஸ்தான் ?. அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 14
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
செவ்வாய்க்கிழமை, 18 செப்டம்பர் 2012 15:33

IMG_5220_Custom

அதிர்ச்சியாக இருக்கிறதா… இப்படி ஒரு செய்தியை ஊடகங்களில் விரைவில் பார்த்தால் அதிர்ச்சியடையாதீர்கள். அதற்கான வேலையை உளவு நிறுவனங்கள் செய்து கொண்டிருப்பதாகத் தகவல்கள் வருகின்றன.

இன்றைய செய்தித்தாள்களில் பெரிய அளவில் வந்திருக்கக் கூடிய ஒரு செய்தி பாகிஸ்தானுக்கு ராணுவ ரகசியங்களை கடத்த முயன்ற தீவிரவாதி திருச்சியில் கைது என்பது.  அச்செய்தி என்னவென்றால் 35 வயதான தமீம் அன்சாரி என்பவர் தஞ்சாவூர் மாவட்டம் அதிராமபப்பட்டினத்தைச் சேர்ந்தவர்.  திருச்சி விமான நிலையம் வழியாக கொழும்பு செல்ல இருந்தபோது தமீம் அன்சாரியை திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே க்யூ பிரிவு போலீசாரும், மாநில உளவுப் பிரிவு காவல்துறையினரும் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

கைதான தமீம் அன்சாரி ஊட்டியில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி மையம், நாகப்பட்டினம் துறைமுகம், பாராச்சூட்டிலிருந்து குதித்து ராணுவத்தினர் பயிற்சி எடுப்பது ஆகியவற்றின் வீடியோக்களை வைத்திருந்தார்.

அவர் விசாகப்பட்டினத்தில் உள்ள இந்தியக் கடற்படைத் தளத்தையும் படமெடுக்கத் திட்டமிட்டிருந்தார்.  இது குறித்துப் பேசிய க்யூ பிரிவு எஸ்.பி சம்பத் குமார், இந்தியாவின் முக்கிய ராணுவத் தளங்கள் இருக்கும் இடத்தின் விபரங்களை தெரிந்து கொள்ள முயற்சித்துள்ளார்.  இது மிக மிக ஆபத்தானது.   கைதான தமீம் அன்சாரி, இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் மூலமாக இவர் ரகசியங்களை கடத்த முயற்சி செய்துள்ளார் என்று கூறியுள்ளார்.

மற்றொரு உயர் அதிகாரி பேசுகையில், இவரை டிவிடியோடு கையும் களவுமாக பிடித்துள்ளோம். இந்திய ராணுவ அதிகாரிகளின் பதவிகளின் சின்னங்களை இவர் வைத்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

இந்த மற்றொரு உயர் அதிகாரி வேறு யாருமல்ல.  ஆபாஷ் குமார் ஐபிஎஸ்.   அவர்தான் உள்நாட்டுப் பாதுகாப்பு உளவுப் பிரிவுக்கு ஐஜி.

இவர்கள் இந்த உளவாளியிடமிருந்து பிடித்ததாகக் கூறப்படும் வீடியோக்கள் மற்றும் ராணுவ அதிகாரிகளின் பதவிகளின் சின்னங்கள், கூகிளில் தேடினாலே கிடைக்கும்.  வெலிங்டன் ராணுவ பயிற்சி மையம் ஒன்றும் அப்படி ரகசியமான இடம் அல்ல.  பாராசூட்டிலிருந்து குதிக்கும் ராணுவ வீரர்களை ஊட்டிக்கு சுற்றுலா செல்லும் பயணி கூட படமெடுக்கலாம்.

ராணுவ உளவாளிகள் இந்தியாவில் கைது செய்யப்படுவது ஒன்றும் புதிதல்ல.   உளவாளிகள் எப்போதும் இந்த வேலைகளைத்தான் செய்வார்கள்.   அவர்கள் இந்திய கவுன்டர் இன்டெலிஜென்ஸ் யூனிட்களால் பிடிக்கப்படவும் செய்வார்கள்.  ஆனால் அவ்வாறு பிடிக்கப்படும்போது, அது குறித்த எந்தத் தகவலையும் வெளியிட மாட்டார்கள்.  செய்தித்தாளில் பணியாற்றுபவர்களும், தொலைக்காட்சி சேனல்களின் நிருபர்களும் இந்த அதிகாரிகளிடம் கெஞ்ச வேண்டும்..  போனில் பேசினால், நான் இப்போது பிசி, அப்புறம் பேசுங்கள் என்று கூறி விடுவார்கள்.

அடிக்கடி இது போல உளவு பார்ப்பவர்கள் பிடிபடுவது வழக்கமே என்றாலும், அந்த விஷயங்கள் நமது கவனத்திற்கு வராமலேயே மறைக்கப்படும்.  இரவோடு இரவாக விஷயத்தை முடித்து விடுவார்கள்.

ஆனால், இந்த விவகாரத்தில் விசித்திரமான அம்சம் என்னவென்றால், காவல்துறை அதிகாரிகள் கேட்காமலேயே விபரங்களைத் தருகிறார்கள்.   புகைப்படங்களை சம்பந்தப்பட்ட நிருபர்களின் ஈமெயில் முகவரிகளுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

ஒரு நாளும் போனை எடுத்த பத்திரிக்கையாளர்களிடம் பேசாத, ஆபாஷ் குமார், வள வளவென்று பேசுகிறார்.

விபரம் என்னவென்று தஞ்சை மாவட்டத்தில் விசாரித்தபோது, இந்த தமீம் அன்சாரியை ஒரு வாரத்திற்கு முன்பாகவே டெல்லி உளவுத்துறையினர் பிடித்து விசாரித்து வருகின்றனர்.  ஒரு வாரத்துக்கு முன்பே கைது செய்யப்பட்டாலும், அன்சாரியை நேற்று இரவு திருச்சி டோல்கேட்டில் வைத்து கைது செய்ததாக தகவல் வெளியிட்டுள்ளனர்.

புதுதில்லியில் உள்ள மத்திய உளவுப் பிரிவு (Intelligence Bureau) அதிகாரிகள், டெல்லியில் உள்ள தொலைக்காட்சிச் சேனல்களை அழைத்து, கைதான பாகிஸ்தான் உளவாளிக்கும், உதயக்குமாருக்கும் தொடர்பிருப்பதாக செய்திகளைப் பரப்பிக் கொண்டிருக்கின்றனர்.   இது டெல்லி வட்டாரத்தில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாட்டிலிருந்து உதயக்குமார் பணம் வாங்கினார், கூடங்குளம் போராட்டத்துக்கு தொடர்ந்து வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது என்று மத்திய உளவுப்பிரிவாலும், காவல்துறையாலும் கிளப்பி விடப்பட்ட பல்வேறு வதந்திகளை மக்கள் நம்பாத காரணத்தாலும், உதயக்குமாருக்கும், கூடங்குளம் அணு உலைக்கெதிரான போராட்டத்திற்கும்  ஆதரவு தொடர்ந்து பெருகி வரும் நிலையில், அந்தப் போராட்டத்திற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்துவதற்காகவே, மத்திய உளவுப் பிரிவு தமீம் அன்சாரியைக் கைது செய்து, அவரை கூடங்குளம் போராட்டத்தோடு தொடர்புப் படுத்த முயற்சி செய்து வருவதாகத் தெரிகிறது.

கூடங்குளம் அணு உலைக்கெதிரான போராட்டத்தை முறியடிக்க, ஆளும் வர்க்கம் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் இறங்கும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.

 

Comments  

 
0 #14 venku 2012-10-01 22:17
ஒரு கல் 2 மாங்காய்
Quote
 
 
0 #13 ஷாலி 2012-09-29 00:42
திரு.கோபால்சாமி கவனத்திற்கு, இந்த தமிம் அன்சாரியை தூக்கி நிறுத்தி காப்பத்தவேண்டும ் என்ற எண்ணமெல்லாம் எமக்கு கிடையாது.நாட்டை காட்டிக்கொடுக்க ும் துரோகிகள் எவராயினும் தண்டிக்கப்படவேண ்டும்.

ஆனால் திருச்சி கியூ பிரிவு கூறும் கதை பொருத்தமாகயில்ல ை என்று நீங்கள் மேற்கோள் காட்டும் www.viruvirupu.com தளம் கூறுவதை பாருங்கள்.
“ வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்பார்கள். திருச்சி கியூ பிரிவு போலிசாரின் இந்த கதையை கேட்டு நிஜ உளவு வட்டாரங்களில் உள்ள விஷயம் தெரிந்தவர்களுக் கு நோய் விட்டு போயிருக்கும்.அந்தளவு நகைச்சுவை உணர்ச்சி உடையவர்கள் திருச்சி கியூ பிரிவு போலீசார்.அன்சாரி எடுத்ததாக பத்திரம் செய்து வைத்திருக்கும் போட்டோக்களைவிட துல்லிய போட்டோக்களை நாம் தருகிறோம்.
இந்திய கடற்படையில் நடைபெறுவதைப்பற் றி எதுவும் தெரியாமல் தஞ்சையை சேர்ந்த வெங்காய வியாபாரம் செய்யும் தமிம் அன்சாரி என்பவர் செல்போனில் ராணுவ ரகசியங்களை படமெடுத்தார், என்று சொல்லும் திருச்சி கியூ போலிசை என்னவென்று சொல்வது,தந்தை பெரியார் உயிருடன் இருந்தால்
தமிம் அன்சாரி ஏற்றுமதி செய்யும் பொருளின் பெயரையே சொல்லியிருப்பார ். “ வெங்காயம் “

விறுவிறுப்பு தளத்தை தொடர்ந்து பார்த்தபின்பே சவுக்கில் எனது கருத்தை எழுதினேனே அல்லாமல் யாரையும் காப்பாத்த அல்ல.
Quote
 
 
-1 #12 gopalasamy 2012-09-24 11:23
EVERY COUNTRY IS DOING SPYING WORK.
AN INDIAN EMBASSY LADY OFFICER WAS ARRESTED BECAUSE SHE GAVE SECRET DOCUMENTS TO HER "PAKISTANI LOVER".
AN ARMY OFFICER WAS ARRESTED IN NEW DELHI BECAUSE OF HIS CONNECTION WITH A PAKISTANI LADY AND PASSING INFORMATION THROUGH HER. BECAUSE OF THAT OUR NAVY MOVEMENTS WERE MONITORED BY PAKISTAN.
WHY Mr. SHALI LEFT THIS INFORMATION CONVINIENTLY.
Mr. SHALI ONLY CAN SAY WHETHER USING LADIES FOR SPYNIG IS "HARAM" OR NOT.
BECAUSE WE DONT HAVE ANY IDEA ABOUT THAT. IN INDIA 20 CRORE MINORITIES ARE LIVING. WHEN A FEW ARRESTED WHY THIS FUSS?
IMMEDIATELY BLAMING IS OUR INTELLIGENCE SYSTEM SOMEWHAT SHORTSIGHTED AND INTENTIONAL.
Quote
 
 
0 #11 manasu 2012-09-20 04:41
நெஞ்சு பொறுக்குதில்லைய ே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால ் .....
Quote
 
 
+3 #10 syed ibu 2012-09-19 16:39
ஒருசில மீடியாக்களில் இவர்கள் என்ன சொல்ல சொல்கிறார்களோ அதே அப்படியே வெளியிடுகிறார்க ள். சரியா தவறா என்று யோசிக்க கூடா அவர்கள் தயார் இல்லை, அதுவும் அது ஒரு முஸ்லிம் என்றால் அவர்களுக்கு சொல்ல தேவையே இல்லை. முஸ்லிம் எல்லோரும் கெட்ட்வர்கள் இல்லை, மற்ற எல்லோரும் நல்லவர்கள் இல்லை.
Quote
 
 
+3 #9 Human_Being 2012-09-19 14:03
This incident is really shame to intelligence agencies.
Quote
 
 
+10 #8 krish gopal 2012-09-19 13:35
அப்படியா?? அப்படின்னா தினமல(ம்)ர் கு கொன்டாட்டம் தான். நாலைய தலைப்பு செய்தி ரெடி..
Quote
 
 
+2 #7 gopalasamy 2012-09-19 10:12
DEAR SAVUKKU.
YOUR INFORMATION IS INCOMPLETE. WHAT IS YOUR OPININ ABOUT TAMIM ANSARI? DO YOU THINK HE IS INNOCENT? DO YOU THINK AN INNOCENT PERSON CAPTURED BY OUR INTELLIGENCE? IN THIS CONNECTION THERE ARE SOME ARTICLES IN "VIRUVIRUPPU" ALSO.
PLEASE TRY TO GIVE UNBIASED NEWS.
BECAUSE SO MANY PEOPLE ARE READING YOUR BLOG IN EVERDAY MORNING.
Quote
 
 
+5 #6 Alex 2012-09-19 09:39
நெஞ்சம் பதை பதைக்கிறது சவுக்கு..எப்படி இதை முளையிலேயே கிள்ளுவது ?
Quote
 
 
+11 #5 ஷாலி 2012-09-19 00:46
பல வருடங்களாக பாகிஸ்தான் கடற்ப்படையின் தொலைத்தொடர்புகள ை இந்தியா உளவு பார்த்தசெய்தி சமீபத்தில் அம்பலமானது.
இதற்க்கு பதிலடியாக யாழ்ப்பாணத்திலி ருந்து
கொண்டு விசாகப்பட்டினம் கடற்ப்படை நீர்மூழ்கிக்கப் பலை பாகிஸ்தான் வேவு பார்ப்பதாக செய்தி வெளியானது.
இக்கருத்திற்கு பலம் சேர்க்க உளவாளி கைது நாடகம் அரங் கேற்றமாகிறது. இத்தோடு உதயகுமாரையும் சேர்த்துக்கொண்ட ு ஒரு கல்லில் இரு மாங்காய் அடிக்க அரசு திட்டமிடுகிறது.

இந்திய வெளியுறவுக்கொள் கையை மலையாளி ராஜ தந்திரிகள் முடிவு செய்ததிலிருந்து சீனா,பாகிஸ்தான் கைகளில் இலங்கை சென்றுவிட்டது. விடுதலைப்புலிகள ை ஒழிக்க உதவிய மலையாள நாராயண,மேனன்கள் தயவால்,இமயமலைக் கு அப்பால் இருந்த சீனர்கள் இன்று இந்திய கரைக்கே வந்துவிட்டார்கள ்.கையெறி தூரத்தில் அணுஉலை. போர் நடந்தால் அனைவர் உயிருக்கும் இதுவே உலை.
Quote
 
 
+2 #4 rasakannu 2012-09-18 19:48
this is ridiculous..govt is going in wrong direction as usual.. they are not considering the feelings of koodankulam people.. too bad.. people will win in this battle...
Quote
 
 
+3 #3 crap 2012-09-18 19:08
:sad:
Quote
 
 
+12 #2 மன்னாரு 2012-09-18 18:27
உதயகுமார் தாடி வைத்திருப்பதைப் பார்த்தாலே நமக்கே தெரியுது பாகிஸ்தான் தொடர்பு இருக்கும்னு. இந்த பாயிண்ட வச்சு தான் ஒளவு தொர முடிச்சு போட்டு கண்டுகிரிச்சு. (ஆமா, எல்லாருமே கைக்கூலியா போயிட்ட நாட்ட யாருதான் உண்மயிலெ காப்பாத்துறது? ஒரே கண்பூசனா இருக்கே? சோ? சோனி? சிங்கு?சாமி? முக? ஜெ? கிரானைட் பலனிச்சாமி? ராடியா? டாடா? அம்பானி? எல்ப் பிளீஸ்)
Quote
 
 
+8 #1 Kishore 2012-09-18 17:35
இப்படி ஒரு கேடுகெட்ட, கேவலப்பட்ட அரசாங்கம் நடத்த வேண்டுமா? தூ.....
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 46 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday663
mod_vvisit_counterYesterday9391
mod_vvisit_counterThis week663
mod_vvisit_counterLast week78643
mod_vvisit_counterThis month282038
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12804157