முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
மிருக விதி.. அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 19
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
புதன்கிழமை, 19 செப்டம்பர் 2012 10:04

3-1

எலிக்கு, எறும்புக்கு,

பாம்பு, தேரைக்கு,

காட்டு மரத்துக்கு,

தேள், பூரானுக்கும்.

வாழ்வியல் தத்துவம் பற்றி

வாதாடுவதற்கு

சட்டப்படி அமைப்புக்கள் உண்டு.

 

எலி வளைக்குள் நீர் புகுந்துவிட்டால்,

பெருச்சாளி புகை இடுக்கில் சிக்கிக்கொண்டால்,

தவளை பாம்பை கௌவிக்கொண்டால்,

அவைகளை காப்பாற்ற

போர்க்கால அடிப்படையில்

தெருவில் இறங்கி போராட்டம் நடத்த

அரச அனுசரணையுடன்

அமைப்பு ரீதியாக

மனிதனுக்கு உரிமையுண்டு!

 

ஆனால்

பாவப்பட்ட மனித குலத்துக்கு மட்டும்

எதிர்மறையான புளக்கமே

வாழ்வியலில் சாத்தியம்

என்கிறது ஆளும் வர்க்கம்.

 

மானுடம் தவிர்த்தவற்றின்

வாழ்வின் சூட்சுமத்தை

அறிந்து கொள்ள மட்டும்.

ஐநா வும் அதிகார வர்க்கங்களும்

அனுதினமும்

பலகோடி பணம் செலவு செய்கிறது!

 

அவைகளுக்காக

மனிதாபிமானத்துடன்

பெருத்த வரையறை

விஞ்ஞான, அறிவியல் மேதாவிகளால்

உலக அரங்கத்தில் வகுக்கப்பட்டிருக்கிறது.

 

அடப்பாவி ஏழை மனிதா!

அவை

உனக்கு சற்றும் பொருந்தாது,

உணர்ந்துகொள் என்று

கூடங்குளம் படுகொலை சொல்லுகிறது.

 

தெரியாவிட்டால்,

காவல்த்துறையை,

கட்சி மேலாளர்களை

கேட்டு தெரிந்துகொள் என்று

புரிய வைக்கின்றனர்

ஆட்சியாளர்கள், கட்சி முதலாளிகள்.

 

நீ தேசியத்தை சொந்தமாக எண்ணும்வரை,

நீ ஏழை மனிதனாக இருக்கும்வரை,

உரிமையுள்ள

சுதந்திரவானாக சிந்திப்பது,

தண்டனைக்குரிய குற்றம்

என்பது பல இடங்களில்

மெத்த சரியாக உணர்த்தப்பட்டிருக்கிறது!

 

இருந்தும் நீ போராடுகிறாய்!!.

 

உரிமை எதுவும் உனக்கு சாத்தியமில்லை!

கனவில் வேண்டுமானால்

சுதந்திர மனிதனாக

ஆனந்தமாக வாழ்ந்து களித்துக்கொள்!

இப்படி

காவல்த்துறை இடித்துரைக்கிறது!

 

உனது மனைவி குழந்தைகளுக்கு

அணுவால் ஆபத்து என்றறிந்தால்

ஊரை விட்டோடிவிடு,

அல்லது

நகரத்து அரசியல் கட்சி ஒன்றில்

ஐக்கியமாகி தொண்டனாக கலந்துவிடு.

இல்லையென்றால்

பட்டணத்தில்

ரசிகர் மன்றம் ஒன்றை துறந்துகொள்.

இதுதான் மூத்த அரசியல்வாதிகளின்

முதலீடு என்கிறது தமிழகத்து

திராவிட அரசியல் வரலாறு.

 

சட்டத்தின் தாற்பரீகம் அறியாமல்,

உரிமை உள்ளதென்று நினைத்து

தெரியாத்தனமாக

தெருவுக்கு வந்தால்

பெருங்குற்றமாகிவிடும்

ஏமாந்து போகாதே!

என்பதை

பரமக்குடி போதித்து போனது.

 

மிருகவதை கொலைக்குற்றம்!

பிராணியை துன்புறுத்தினால்

சிறைத்தண்டனை!

மரம் வெட்டினால் தண்டனை!

உரிமைக்கு நீ போராடினால்

உயிருக்கு உத்தரவாதம் இல்லை

இதைத்தான்

முள்ளிவாய்க்கால் மெய்ப்படுத்தியது.

 

மிருகங்களுக்கான விதி உனக்கு பொருந்தாது!

நீ பொருமினால் அழிக்கப்படுவாய்

இதுதான்

சனநாயக சட்டமாக பகிரப்பட்டிருக்கிறது.

 

அதைத்தானே

இலங்கை, இந்திய சனநாயகமும்

மத்தியும், மானிலமும் எப்போதும்

மெத்த தெளிவாக சொல்லி வருகின்றன,

சாக்காட்டு சட்டங்களும் அதைத்தானே

வரையுறுத்தி நிற்கிறது.

அவற்றை பின்பற்றி வழிமொழிய

தேசத்திலும் ஆயிரம் அமைப்புக்கள்

போட்டி போட்டு நிற்கின்றன.

 

மானுடத்துக்கு

அது ஒரு காலமும் பொருந்தாது!

இருந்தும்

நீ போராடுகிறாய்!

 

அணு உலை வெடித்து ஆறாக ஓடினாலும்,

ஆற்றுநீர் கடலில் பாய்ந்து வீணாகி போனாலும்,

அப்பன், அண்ணன் கடலில் செத்தொழிந்தாலும்.

ஆற்றாமையில்

பிறப்பு உரிமையின் பேரால்

ஆர்பாட்டம் செய்யாதே!

உருக்குலைந்து போவாய்

என்றே வரையப்பட்டிருக்கிறது.

 

அடிப்படை உரிமை உனக்கு

கிடைக்கவில்லை என்றாலும்,

விலையேற்றத்தின் பளு

உன் கழுத்தை நெரித்தாலும்,

குழந்தைகள் பட்டினியால் செத்தாலும்,

வினைப்பயன் என்று எடுத்துக்கொள்.

 

ஆட்சியாளர்களின்

முறைகேடுகள் பற்றி

நீ ஆள் சேர்த்து பேசக்கூடாது.

 

ஊழல் முறைகேட்டை தட்டிக்கேட்டால்

உனக்குத்தான் வாழ்வு பழுதாகிவிடும்.

நாட்டு நலனென்று

நீ குரல் கொடுத்தால்

தனிமைப்படுத்தப்பட்டு

சோற்றுக்கு வழியில்லாமல்

செத்து போய்விடுவாய்.

காவல்த்துறையிடம் அகப்பட்டால்

கதை கந்தலாகிவிடும்.

 

உன் சமூகத்தை வழிநடத்தவும்

சீர்திருத்தம் பற்றி பேசவும்

யார் உனக்கு அனுமதி தந்தது?

என்ன  நடந்தாலும்

கேள்வி கேட்க

உனக்கு எந்த உரிமையுமில்லை!

ஏனென்றால்

நீ ஆட்சியாளர்களின் விருப்பத்திற்குரிய

விளையாட்டு பொருள்.

அத்துடன், நீ ஆறறிவு

மனிதன் என்பதை மறந்துவிடாதே!

 

உன்னை சுட்டு தள்ளினாலும்,

தூக்கில் மாட்டினாலும்,

கட்டிப்போட்டு அடித்தாலும்,

ஏன் என்று எவரும் கேட்கமாட்டார்கள்.

கேட்க சனநாயக சக்கரமும்

சட்டத்தின்  ஓட்டமும் ஒத்துவராது!

தட்டி கேட்டாலும்

தரித்திரமும்

தண்டனையும்  உன்னைத்தான் துரத்தும்!.

 

போபாலை திரும்பி பார்!

கும்பகோணத்தை சிந்தித்து பார்!

பரமக்குடியை கிரகித்து பார்!

சிவகாசியை அசைபோட்டு பார்!

முள்ளிவாய்க்காலை தள்ளி நின்று பார்!

மீனவர்களின் வாழ்க்கையை முழுதாக பார்!

பார்த்துக்கொண்டேயிரு!

 

மாற்றி

எங்காவது ஏழைக்கு நியாயம் கிடைத்ததாக,

அடக்குமுறைக்கு எதிராக,

அதிகார வர்க்கம் தண்டிக்கப்பட்டதாக,

ஊழல்வாதிகள் கழுவில் ஏற்றப்பட்டதாக

தகவலுண்டா தேடிப்பார்.

 

ஆனால்

"கொல்லப்பட்டபோதும்

நீ போராடிக்கொண்டிருக்கிறாய்.

அது ஒன்றுதான் உறுத்துகிறது",

 

மீறி

ஒருவேளை!

ஒரு நபர் விசாரணை கமிஷன் வந்தாலும்,

நவீன  சனநாயகத்தை புறந்தள்ளி

புதிதாக ஒன்றையும்

அனுமானித்து விடப்போவதில்லை.

சர்வ வல்லமையும்+ சனநாயகமும்

இதைத்தான் விதந்துரைக்கிறது!

 

போபர்ஸ் பீரங்கி ஊழல்

அதர்ஷ குடியிருப்பு ஊழல்

கொமன் வெல்த் விளையாட்டு ஊழல்

முத்திரை தாள் மெத்தப்பெரிய ஊழல்

ஸ்பெக்ரம் விண்வெளி ஊழல்

நிலக்கரியின் மிகப்பெரிய ஊழல்

கிலிசகேடான கழிப்பறை ஊழல்

இவைகள் நடந்ததால்

அரசாங்கம் இல்லையென்று போய்விடுமா?

 

உனக்காக என்றும் இலவசங்கள்

தோன்றிக்கொண்டேயிருக்கின்றன,

அதை ஊழல் அரித்து தின்றாலும்,

கிடைப்பதை

இருகரம் கூப்பி வாங்கி,

புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துவிட்டு

சிவனே என்று

அமைதியாக கிடப்பதே உன் பணி!

 

அதிக பட்சமாக,

அறிவிக்கப்பட்ட தேர்தல் காலத்தில்

ஆட்சியை தெரிவுசெய்ய,

உனக்கு உரிமையுண்டு!

அமைச்சரை வரவேற்க,

மேயரை துதிபாட,

பஞ்சாயத்து தலைவருக்கு

பாதுகை கட்ட,

இன்னும் உன்னை நம்பி

பொறுப்புக்கள்

நிறைய இருக்கின்றன.

 

அதிகாரம் செலுத்தவேண்டுமென்றால்

கட்சியின் இளைஞர் அணியில் சேர்ந்துவிடு

கட்ட பஞ்சாயத்து தேடி வரும்

உரிய காலத்தில் சொத்து சேரும்.

 

எதுவும் சாத்தியப்படவில்லையா

பல்லு தெரிய சிரித்துக்கொண்டே

படுத்து தூங்கு.

பேசும் உரிமையெல்லாம் உனக்கில்லை

அதுபற்றி

உனக்கு தெரியவும் வேண்டாம்!

 

அதையும் மீறி

உரிமையை அடைய நீ முற்பட்டால்

நீ துரோகிதானே!

தெருவுக்கு வந்து நீ போராடினால்

நீ தீவிரவாதிதானே!

 

இதுதான் இந்தியாவின்

நவீன சனநாயக சட்டம்!

இதைத்தான்

அறுபது ஆண்டுகளுக்கு மேலாக

கட்டி காப்பாற்ற

வயோதிப கட்சிகள் பாடுபடுகின்றன.

 

கூடங்குளம் பிரதேசத்தை

வேடந்தாங்கலாக

மாற்ற முயற்சிக்காதே!

விளைவு விபரீதமாகிப்போகும்.

 

இத்தனை ஊழல்களை கட்டிக்காத்த

ஆட்சியாளர்களுக்கு

மண்ணும் மரங்களும்

நீயும் உன் சந்ததியும்

எப்படி வாழவேண்டும் என்பது

மெத்த சரியாகவே தெரியும்.

 

அணுவை விதைப்பது ஏன்,

ஆட்சி நடத்துவது எப்படி

என்பதை அறிந்து நீ

என்ன செய்துவிடப்போகிறாய்.

 

 

 

அது

ஆட்சியாளர்களின் கவலை!

அதற்குத்தானே அவர்களை

ஐந்து, ஐந்து வருடங்களுக்கு

நீயாக

விரும்பி தெரிவு செய்திருக்கிறாய்.

அதுதானே  மக்களாட்சி!

அதுதானே சனநாயகம்!

அதுதானே அரசியல் சாசனம்!

 

உனது தொடர் போராட்டங்கள்

எங்களை எரிச்சலடைய வைக்கிறது.

ஏதாவது திரும்பி விடுமோ

என்ற பயம் இருந்தாலும்,

அது அவ்வளவு இலகுவானதல்ல

என்ற நம்பிக்கையை காவல்த்துறையும்,

உள்த்துறையும் தந்துகொண்டுதான் இருக்கின்றன.

 

சனாதிபதிக்கும்,

பிரதமருக்கும்,

வெளியுறவு மந்திரிக்கும்,

கொள்கை வகுப்பாளர்களுக்கும்,

கட்சி தலைவர்களுக்கும்,

விஞ்ஞானம் படித்தவர்களுக்கும்

தெரியாத அற்புதம்,

சாதாரணாமாக தேர்தலில் வாக்களிக்கும்

பாவப்பட்ட உனக்கு என்ன தெரிந்துவிட்டது?

 

ஆனாலும் மனிதா!

ஆட்சியாளர்களை  தெரிவு செய்யும் அதிகாரம்

என்றைக்கும்

உனது கைகளில்த்தான் இருக்கிறது

அடுத்த தேர்தலில் கண்களை திற,

பள பளக்கும் அட்டை கத்திகளை தூர வீசிவிட்டு

மெத்த சரியான கத்தியை தெரிவு செய்

அத்தனையும் சாத்தியமாகும்.

 

ஊர்க்குருவி.

 

 

Comments  

 
0 #10 கும்பிட்றேன் சாமி 2012-09-23 20:40
Having invested more than $160 billion in its nuclear program over the last 20 years, France has become a world leader in nuclear energy. Its production has steadily increased since 1973, going from about 20 TWh (billion kilowatt hours) to 425 TWh in 2003. Today, 59 nuclear plants produce 78 percent of the entire country’s electricity, and France is the largest exporter of nuclear electricity in the European Union (with total exports of 115.2 TWh in 2003). France is second in the world (behind the United States) in terms of total nuclear power generation, contributing 15.9 percent of the world’s nuclear electricity.
Quote
 
 
+1 #9 ரமேஷ் 2012-09-21 17:37
அருமையான கவிதை... நமக்கென்ன என்று இருபவர்களை எப்படி மாற்றுவது..?
Quote
 
 
-10 #8 kumar47 2012-09-21 16:55
அடப்பாவிகளா! இப்படி பட்ட எழுத்துக்களால் தான் குழம்பிய குட்டைக்குள் உதயகுமார் மீன் பிடித்து கொண்டு உள்ளார் என்றால் சவுக்குமா?
Quote
 
 
-4 #7 M RAMASWAMY 2012-09-21 14:50
ஊர் குருவி சில நேரம் பருந்தென்று நினைப்பதுண்டு.
Quote
 
 
+4 #6 http://koothadivedda 2012-09-21 08:46
நாட்டுக்கு மின்சாரம் தேவை இவற்றை மறுப்பதற்கு எவரிடமும் எந்த முகாந்திரமும் இல்லை. அதற்காக இந்தியா அணு ஆற்றலை பயன்படுத்தக்கூட ிய ஆற்றல் உள்ள நாடுமல்ல இவர்கள் அணுவை கையாள்வது ஏற்றுக்கொள்ள கூடியதுமல்ல. ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, உக்கிரைன், போன்ற வல்லமையுள்ள நாடுகளே அணுவை கையாளமுடியாது என்ற முடிவுக்கு வந்திருக்கும்போ து காட்டுமிராண்டிக ளையும் கிருமினல்களையும ் படிப்பறிவற்றவர் களையும் உறுப்பினர்களாக கொண்ட ஊழல் இந்தியா அணுவை கையாள் எந்த அருகதையோ முகாந்திரமோ கிடையாது. மக்கள் நலனையும் சட்டத்தையும் மதிக்கும் நாடுகள் வேண்டுமானால் கடுமையான தொழில்நுட்பங்கள ை கையாள அருகதையுடையனவாக இருக்கலாம் இந்தியாவுக்கு அவை சற்றும் பொருத்தமில்லாதத ு. http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=India&artid=664478&SectionID=130&MainSectionID=130&SEO=&Title=
Quote
 
 
+3 #5 Tamil Magan 2012-09-21 04:35
எனக்கு ஒரே ஒரு விசயம் தான் தெரிகிரது. நக்சலிசம் தான் சரியான வழி என இந்திய அரசு சொல்கிரது. இந்த அரசியல் வியாதிபிடித்தவர ்களுக்கு நல்ல விதமாக சொன்னால் நல்ல விதமாக கேட்கமாட்டார்கள ். மக்களை அடிமைகலாக நினைப்பவர்களிடம ் அமைதியாக போராடி என்ன ஆகப்போகிரது? நம்மை யெல்லாம் நம் பெட்ரோர்கள் ஆண்மை உடயவர்களாகத்தன் னே பெட்ரார்கள்? நம் தாய் நம்மை ஒரு ஆனுக்கு தானெ பெட்ரார்கள்? யேன் புழு பூச்ஷி மாதிரி வாழவென்டும்? எரும்பு கூட சாகும் வரை போராடும். இந்த அரசமைப்பு ஆஙிலாய அரசை விட மோசமானது.
Quote
 
 
+3 #4 MGR 2012-09-20 21:53
குப்பையில் உள்ள கரப்பான்பூச்சி வீட்டுக்குள் வந்தால் அதை அடித்து தூக்கி வெளியே போடுகிறோம்..........ஆனால் நாட்டை கொஞ்சம் கொஞ்சமாக அரித்து தின்றுகொண்டிருக ்கும் கரப்பான்பூச்சிக ளை யார் அடிப்பது......கவிதை எழுதிய கலியுக பாரதிக்கு வாழ்த்துகள்.......
Quote
 
 
+9 #3 Saravanaa 2012-09-20 16:42
கஷ்டமாக இருக்கிரது சவுக்கு... மக்கள் தனது வீட்டில் ஃபேன் ஏசி ஓடினால் போதும் என் நினைக்கிரார்கள் ... அதற்கு அணு உலை மட்டுமே தீர்வு என் மக்களை நம்பவைக்க முயல்கிரார்கள்... மின்சாரம் முக்கியம் தான்... ஆனால் அதற்கு அணு மின்சாரம் என்பது தங்க ஊசியால் கண்ணை குத்திக் கொள்வது போலாகும்... கண் முன்னே ஜப்பானில் அணு உலை விபத்து நடந்தும் ஆபத்தை மக்கள் உணராத மாதிரி நடித்து த்ங்களை தாங்களே ஏன் ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்... ஆபத்தை உணராதவர்களுக்கு சொல்லி புரிய வைக்கலாம்... ஆனால் புரிந்தும் தங்களை தாங்களே ஏமாற்றிக்கொள்பவ ர்களை என்ன செய்வது?
Quote
 
 
+4 #2 Naveenbalaji 2012-09-20 10:29
அருமையான கவிதை
Quote
 
 
+7 #1 ஷாலி 2012-09-20 01:02
இது ஊர்க்குருவியின் கவிதையன்று, உயரப்பறக்கும் கிருஷ்ண பருந்தின் கூரிய பார்வையில் சிக்கிய சமூக அவலங்களின் சங்கமம்.

அதிகார வர்க்கத்தின் அடக்குமுறையை எதிர்த்து நிற்கும் ஏழைகளின் குயில்பாட்டு.ஒலிக்கட்டும் எட்டுத்திக்கும் .
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 56 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday1264
mod_vvisit_counterYesterday10087
mod_vvisit_counterThis week11351
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month214083
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12736202