முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
சதி வலை.. … … அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 26
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
செவ்வாய்க்கிழமை, 25 செப்டம்பர் 2012 00:44

It is best to be both feared and loved, however, if one cannot be both it is better to be feared than loved.”

By suggesting this, he is saying that this is because a ruler that is well-loved is not always well-respected and is at risk of losing control, especially because of the devices of others. By instilling fear while at the same time avoiding unnecessary cruelty, the ruler is able to maintain power and perhaps at the same time still have the respect of his constituents.

அரசனுக்கான தகுதிகளாக மாக்கியவல்லி தி ப்ரின்ஸ் நூலில் சொல்வது இது.   ஒரு அரசன், அன்பால் ஆள்வதை விட பயத்தால் ஆள்வதே சாலச் சிறந்தது என்று சொல்கிறார்.

இன்னொசென்ஸ் ஆஃப் முஸ்லீம்ஸ் என்று ஒரு திரைப்படம் உலகெங்கும் ஏற்படுத்தி வரும் சர்ச்சைகளை நாம் கடந்த சில நாட்களாக கவனித்து வருகிறோம்.  லிபியாவில் உள்ள பெங்காஸியில் நடந்த தாக்குதலில், லிபியாவுக்கான அமெரிக்க தூதர் உள்ளிட்ட நான்கு அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர்.

00-title-card-13-09-12-innocence-of-muslims

சென்னையில் தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், அமெரிக்கத் துணைத் தூதரகம் தாக்கப்பட்டது.  வரலாறு காணாத அளவுக்கு பாதுகாப்போடு இருக்கும் அமெரிக்கத் தூதரகம் தாக்கப்பட்டது, சென்னை மாநகர ஆணையாளர் திரிபாதி தன் பதவியை இழக்கும் சூழலுக்கு இட்டுச் சென்றது.

அந்தப் படத்தில் என்னதான் உள்ளது ?   இசுலாமியர்கள் என்று இல்லாமல், பொதுவாகவே, உலகத்தில் படைப்பாளிகள் மத அடிப்படைவாதிகளால் எப்போதுமே அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளனர்.  சல்மான் ருஷ்டி, தஸ்லீமா நஸ் ரீன் போன்றோர்கள் இதற்கு உதாரணம்.   எம்.எஃப் ஹுசைன் சரஸ்வதி தேவியின் படத்தை நிர்வாணமாக வரைந்ததற்காக, இந்து மதத் தீவிரவாதிகளால் தாக்கப்படும்போது அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் இஸ்லாமியர்கள், தஸ்லீமா நஸ்ரினுக்கு எதிராக இஸ்லாமியர்கள் வன்முறையில் இருந்தபோது அதைக் கண்டிக்கத் தவறும் இரட்டை நிலைபாடும் உள்ளது.

ஒரு படைப்பாளியின் சுதந்திரத்தை எந்த மத அடிப்படைவாதம் தடுத்தாலும் அல்லது முடக்கினாலும், அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டியது, கருத்துச் சுதந்திரத்தை ஆதரிக்கும் ஜனாயகவாதிகளின் கடமை.

அதே நேரத்தில் அந்தப் படைப்பில் மத உணர்வுகளை புண்படுத்தவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் ஒரு படைப்பை உருவாக்கினால்….  ?

இன்னசென்ஸ் ஆஃப் முஸ்லீம்ஸ் என்ற திரைப்படம் இந்த இரண்டாவது வகையைச் சேர்ந்தது.

அந்தத் திரைப்படத்தை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது.   அந்தத் திரைப்படத்தை ஒரே வார்த்தையில் வர்ணிக்க வேண்டும் என்றால் “குப்பை.”  குப்பை என்றால் ஒதுக்கித் தள்ளி விடலாம்.  ஆனால் இது விஷம் கலந்த குப்பை.  அதுதான் சிக்கலை ஏற்படுத்துகிறது.  ஆனாலும் இதை ஒதுக்கித் தள்ளத்தான் வேண்டும்.

ஒரே ஒரு அறையில் எடுக்கப்பட்ட படம் இது.  எடிட்டிங் என்றால் என்னவென்றே தெரியாத ஒருவரை எடிட்டிங் செய்யச் சொன்னால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது இந்தப் படத்தின் எடிட்டிங். அந்தக் காலத்துப் படங்களில் வெளியூர்களுக்குச் சென்று ஷுட்டிங் எடுக்காமல், செட்டுக்குள்ளேயே பின்னால் வரைந்த திரைச்சீலைகளை வைத்துப் படம் எடுப்பது போல அனைத்துக் காட்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன.

பாலைவனத்தில் கதை நடப்பதாக அறிவித்து விட்டு, பாலைவனத்தையே திரையில் வரைந்து படம் எடுத்துள்ளார்கள்.  இந்தக் குறைகளை, Unprofessional என்று எடுத்துக் கொள்ளலாம்.  ஆனால், வசனங்கள் அனைத்தும் விஷத்தைக் கக்கம் வகையில் விஷமத்தனமாக உள்ளன.

எடுத்தவுடன், எகிப்திய இஸ்லாமியர்கள் எகிப்திய கிறித்துவர்களை தக்குவது போல அமைந்துள்ளது.  இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகும் ஒரு டாக்டர் தாக்குதலிலிருந்து தப்பித்து தன் வீட்டுக்குச் செல்கிறார்.

Untitled-1

அங்கே ஒரு பலகையில், ஒரு பார்முலாவை எழுதுகிறார்.  Man + X = BT என்று படிக்கிறார்.  படிக்கும்போது BT என்ற இடத்தில் BTக்கு பதிலாக “இஸ்லாமிக் டெர்ரரிஸம்“ என்று படிக்கிறார்.  இவர் இவ்வாறு படிப்பது, ஒரிஜினல் இல்லை.  படத்தில் வரும் கேரக்டர் வேறு ஏதோ சொல்லுவார்.  வாய்ஸ் ஓவரில் இஸ்லாமிக் டெர்ரரிஸம் என்று வருகிறது.   அடுத்த காட்சியில் ஒரு கேரக்டரை இவர்தான் முகம்மது நபி என்று இதே போல வாய்ஸ் ஓவரில் சொல்லுகிறார்கள்.   ஒரு கழுதையைக் காண்பித்து, இதுதான் முதல் முஸ்லீம் கழுதை என்று சொல்லுகிறார்கள்.

 

lkUntitled-1

 

மற்றொரு காட்சியில் வயதான ஒரு பெண், எனது 110 வருட வாழ்க்கையில், முகம்மது போல ஒரு கொலைகாரனைப் பார்த்ததில்லை என்று சொல்லுகிறார்.  இதற்குப் பிறகு வரும் பெரும்பாலான காட்சிகள் விவரிக்க முடியாத வகையில் உள்ளது.   ஆனால், சர்ச்சையான வசனங்கள் அனைத்தும் வாய்ஸ் ஓவரில் டப்பிங்கில் சேர்க்கப்பட்டுள்ளன என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.

இந்தப் படத்தில் பணியாற்றிய 80க்கும் மேற்பட்ட அனைத்து தொழிலாளர்களும், இந்தப் படம் ஷுட்டிங் நடக்கையில் இது போன்ற வசனங்கள் இல்லை என்று உறுதிபடக் கூறுகிறார்கள்.    இதில் நடித்துள்ள சின்டி லீ கார்சியா என்ற பெண்மணி, தன்னை இந்தப் படத்திற்காக நடிக்க அழைக்கையில், “டெசர்ட் வாரியர்”  என்ற பெயரில் உள்ள படத்துக்காக நடிக்க அழைத்ததாகவும், முகம்மதுவாக நடிப்பவரின் கேரக்டர் ஷுட்டிங் எடுத்தபோது மாஸ்டர் ஜார்ஜ் என்று அழைக்கப்பட்டதாகவும் கூறுகிறார்.

சின்டி லீ கார்சியா இத்திரைப்படம் பற்றிக் கூறுகையில், இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் சாம் பசில் என்பவர், தன்னை இஸ்ரேலைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டதாகவும், இஸ்ரெலில் இருந்து அமெரிக்கா வந்து கலிபோர்னியாவில் தங்கியிருப்பதாகவும், கூறியுள்ளார்.   ஆனால், கலிபோர்னியாவில் அது போல ரியல் எஸ்டேட் தொழிலதிபர் யாருமே இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

யார் இந்த சாம் பசில் என்பது சில நாட்களிலேயே தெரிய வந்தது.  நகுல்லா பஸ்ஸேலி நகுல்லா என்பது இவர் பெயர்.  எகிப்திலிருந்து அகதியாக வந்து லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே தங்கியுள்ளார்.   1990ல் மெத்தாபீட்டாமைன் என்ற போதை மருந்தைக் கடத்தியதற்காக சிறையில் இருந்துள்ளார்.  2010ல் வங்கி மோசடியில் ஈடுபட்டதற்காக அவருக்கு 21 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.   காவல்துறை நகுல்லாவை விசாரித்தபோது, இந்தத் திரைப்படத்திற்கான ஸ்க்ரிப்டை அவர் சிறையில் இருந்தபோது தயாரித்ததாகவும்,  கூறியுள்ளார்.

தனது திரைப்படத்தை தயாரிப்பதற்கு இஸ்ரேலில் உள்ள யூதர்கள் நிதியுதவி செய்ததாக தெரிவித்துள்ளார்.  இந்தச் செய்தி அசோசியேட்டட் ப்ரெஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி மூலமாக வெளி வந்தது.  ஆனால், இஸ்ரேலைச் சேர்ந்த யூத மத குர ரப்பாய் ஆப்ரஹாம் கூப்பர், நகுல்லா திரைப்படம் எடுக்க யூதர்கள் உதவி செய்தார்கள் என்ற கூற்றை முற்றிலும் மறுத்துள்ளார்.

இத்திரைப்படம் முதன் முதலாக 23 ஜுன் 2012 அன்று கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள வைன் என்ற தியேட்டரில் திரையிடப்பட்டுள்ளது.   அத்திரைப்படத்துக்கான போஸ்டர்கள் அனைத்தும் உருது மொழியிழ் அச்சிடப்பட்டுள்ளன.   அன்று அத்திரைப்படத்தைப் பார்த்தவர்கள் மொத்தம் 10 பேர்.   அன்று அந்த  போஸ்டரில் அந்தத் திரைப்படத்தின்  பெயர் இன்னொசென்ஸ் ஆப் பின் லேடன் என்று அச்சிடப்பட்டிருந்தது.

800px-Hollywood_Vine_Theatre

வைன் தியேட்டர்

மீண்டும் இரண்டாவது முறை இத்திரைப்படம் 30 ஜுன் 2012 அன்று அதே தியேட்டரில் திரையிடப்படுவதாக வெளியிடப்பட்டிருந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ஜான் வால்ஷ் என்ற ப்ளாக் எழுத்தாளர், லாஸ் ஏஞ்சல்ஸ் மாநகராட்சிக் கூட்டத்தில் இத்திரைப்படம் திரையிடப்படுவதற்கு எதிராகப் பேசினார்.   பின்லேடன் போன்ற ஒரு நபரை பெருமைப்படுத்துவது போல, இத்திரைப்படத்தின் தலைப்பு உள்ளது.  அதனால், இத்திரைப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று பேசியதை அடுத்து, இரண்டாவது முறை திரையிடப்படுவது தடுக்கப்பட்டது.

Innocence_of_bn_Laden_movie_poster

1 ஜுலை 2012 அன்று The Real Life of Muhammed முகம்மதின் உண்மை வாழ்க்கை என்ற பெயரில் இத்திரைப்படத்தின் இரண்டு காட்சிகள் மட்டும் யு ட்யூபில் பதிவேற்றப்படுகின்றன.  ஆனால், ஜுலை மாதம் முழுக்க இத்திரைப்படத்தின் காட்சிகள் யு ட்யூபில் இருந்தும், யாருமே இதைக் கண்டுகொள்ளவில்லை. மாரிஸ் சதக் என்ற எகிப்து நாட்டிலிருந்து அமெரிக்காவில் தஞ்சம் புகுந்த ஒருவர், அந்தக் காட்சிகளை அரபி மொழியில் மொழிபெயர்த்து, யு ட்யூபில் ஏற்றுகிறார்.   ஆனால், எகிப்தின் அல் நாஸ் என்ற தொலைக்காட்சி இத்திரைப்படத்தின் அரேபிய மொழியிலான இரண்டு நிமிடக் காட்சிகளை ஒளிபரப்பிய பிறகுதான், பெரிய அளவில் உலகெங்கும் கிளர்ச்சிகள் தொடங்குகின்றன.

எகிப்திய தொலைக்காட்சிகளில் இத்திரைப்படத்தின் இரண்டு நிமிடக் காட்சி ஒளிபரப்பானவுடன், அத்தொலைக்காட்சியின் அறிவிப்பாளர் அத்திரைப்படத்தை விமர்சித்துப் பேசுகிறார்.  எகிப்து அதிபர் அமெரிக்க அதிபர், இத்திரைப்படத்தை எடுத்தவர்கள் “பைத்தியக்காரர்கள்” என்று வர்ணிக்கிறார்.  விசித்திரமாக, எகிப்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம்,  இத்திரைப்படத்தை கண்டித்தது.

ஆனால், இத்திரைப்படத்தைப் தொடர்பான போராட்டங்கள் பற்றிக் கொண்டன.  இஸ்லாமிய நாடுகள் முழுக்க போராட்டங்கள் வலுத்தன.  லிபியாவில் உள்ள பெங்காசியில் நடந்த தாக்குதலில் அமெரிக்க தூதர் உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர்.  இத்தாக்குதலுக்கு அல் கொய்தா பொறுப்பேற்றது.   லிபியாவுக்கான அமெரிக்கத் தூதர் இறந்தது குறித்து கருத்து தெரிவித்த குப்பையின் இயக்குநர் பசில், தூதரகப் பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியில்லை என்று கருத்து தெரிவித்தார்.

யு ட்யூப் தற்காலிகமாக எகிப்து மற்றும் லிபியாவில் இத்திரைப்படம் தெரிவதை தடை செய்தது.   இந்தியாவின் வேண்டுகோளுக்கிணங்க, இந்தியாவிலும் இத்திரைப்படம் யு ட்யூபில் தடை செய்யப்பட்டது.

18 செப்டம்பர் அன்று வெடிகுண்டு உடையணிந்த பெண் ஒருவர், ஒரு பிரிட்டிஷ் பெண்மணியும், எட்டு தென் ஆப்ரிக்கர்களும் பயணித்த ஒரு வாகனத்தை காரில் சென்று மோதி அனைவரையும் கொன்றார்.

சென்னையில் முஸ்லீம் அமைப்புகள் தனித்தனியாக போராட்டம் நடத்தின.  தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் நடத்திய போராட்டத்தில், சென்னையில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகம் தாக்கப்பட்டது.  தொடர்ந்து இதற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

PIX-05

பாகிஸ்தானில் நடைபெற்ற வன்முறையில் மட்டும் 23 பேர் இறந்துள்ளார்கள்.

இத்திரைப்படம் வெளியான சூழல், பரபரப்பை ஏற்படுத்திய விதம் ஆகியவற்றை நாம் ஆராய வேண்டும்.  இத்திரைப்படத்தை எடுத்ததாக கூறப்படும் நகுல்லா என்ற நபர், போதை மருந்து கடத்தியதற்காக தண்டிக்கப்பட்டவர்.   வங்கி மோசடி குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டு சிறைந்த சென்றவர்.

இத்திரைப்படத்தை எடுத்ததில் துளியும் நேர்மை இல்லை.  வங்கியில் நடந்த மோசடியைப் போலவே, திரைப்படத்திலும் மோசடி நடந்துள்ளது.    இத்திரைப்படத்தில் நடித்தவர்கள் பேசிய வசனங்கள் எதுவுமே ஒரிஜினல் ஸ்க்ரிப்டில் இல்லை.    மோசடியாக டப்பிங்கின் போது, இஸ்லாம் மதத்துக்கு எதிரான வசனங்கள் வேண்டுமென்றே சேர்க்கப்பட்டுள்ளன.   இத்திரைப்படம் வெளியாகி, பெரிய லாபம் சம்பாதித்து பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஆகாது என்பது, இந்தப் படத்தை எடுத்த மோசடிப் பேர்வழிக்கு நன்றாகத் தெரியும்.   பிறகு ஏன் இந்தப் படம் எடுத்து வெளியிடப்பட்டுள்ளது ? இந்த நேரத்தில் ஏன் வெளியிடப்பட்டுள்ளது ?

2001 செப்டம்பர் 11ல் அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதல் நடந்தவுடன் அமெரிக்காவில் பேட்ரியாட் என்று ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது.   PATRIOT என்றால், Providing Appropriate Tools Required (to) Intercept (and) Obstruct Terrorism Act of 2001 என்று பொருள்.  இந்தச் சட்டத்தின் மூலமாக, யாருடைய போனையும் ஒட்டுக் கேட்கலாம்.   எங்கே வேண்டுமானாலும் புகுந்து சோதனையிடலாம்.  யாரை வேண்டுமானாலும் கைது செய்து விசாரிக்கலாம்.

patriot-act-2006

அமெரிக்க நாட்டைப் பொறுத்தவரை, அங்கே எது மதிக்கப்படுகிறதோ இல்லையோ.. தனி மனித சுதந்திரத்திற்கு அங்கே மிகப்பெரிய அளவில் மரியாதை உண்டு.   காவல்துறை அதிகாரிகள் யாருடைய போனையும் நீதிபதியின் அனுமதியின்றி ஒட்டுக் கேட்க முடியாது.   எந்த ஒரு இடத்திலும், வாரண்ட் இன்றி சோதனையிட முடியாது.  வாரண்ட் இன்றி சோதனையிட்டு, முக்கிய ஆதாரங்கள் சிக்கினாலும், அவற்றை குற்றவாளிக்கு எதிராக நீதிமன்றத்தில் பயன்படுத்த முடியாது.

இப்படிப்பட்ட சூழலில்தான் இந்த அடிப்படை உரிமைகளையெல்லாம் பறிக்கும் பேட்ரியாட் சட்டம் ஜார்ஜ் புஷ்ஷால் கொண்டு வரப்படுகிறது. அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டால் கடுமையாக போராடும் அமெரிக்க மக்கள் இந்தச் சட்டத்தை வாய் மூடி மவுனமாக ஏற்றுக் கொண்டதற்கு காரணம், அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதல்.   இத்தாக்குதல் காரணமாக அமெரிக்க மக்களுக்கு ஏற்பட்ட அச்சம் சொல்லில் விவரிக்க முடியாதது.  இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு, கொஞ்ச காலத்திற்கு ஆந்த்ராக்ஸ் என்ற வைரஸ் தாக்குதல் என்று அமெரிக்க மக்களிடம் நிலவிய வதந்தியையும் நாம் மறந்து விடக் கூடாது.

ஜார்ஜ் புஷ் இரண்டாவது முறை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு காரணமே இந்த பயம்தான்.   அமெரிக்க குடிமக்களை தாக்குவதற்காக உலகெங்கும் அல் கொய்தா தீவிரவாதிகள் மாறுவேடத்தில் சுற்றுகிறார்கள் என்று உறுதியாக நம்பினார்கள்.  ஈராக்கில் ரசாயன ஆயுதங்கள் இருக்கின்றன என்று ஜார்ஜ் புஷ் சொன்னால், விசாரணையின்றி நம்பினார்கள்.  அந்த ரசாயன ஆயுதங்கள் அமெரிக்காவின் மீது தாக்குதல் நடத்துவதற்காகவே என்று பயந்தார்கள்.   அல் கொய்தா தீவிரவாதிகளிடம் அணு ஆயுதங்கள் இருக்கின்றன என்று புஷ் கிளப்பி விட்ட வதந்தியையும் நம்பினார்கள்.

இரண்டு முறைக்கு மேல் அதிபராக இருக்க முடியாது என்ற விதியின் காரணமாக, ஜார்ஜ் புஷ், ஓய்வு பெற்றார்.  அந்த விதி மட்டும் இல்லையன்றால், ஜார்ஜ் புஷ், அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளரைப் போல, நிரந்தர அமெரிக்க அதிபராக இருந்திருப்பார்.

மாற்றம் என்ற ஒற்றை மந்திரத்தை வைத்துக் கொண்டு ஆட்சியைப் பிடித்தார் ஓபாமா.   ஓபாமா அதிபரானவுடன் அவர் மீது உலகெங்கும் பெருத்த எதிர்ப்பார்ப்பு உருவானது.   ஜார்ஜ் புஷ் போல இவர் கொடுங்கோலனாக இருக்க மாட்டார்.   க்வென்டனாமோ பே போன்ற கொடுஞ்சிறைகளை மூடுவார்.  மனித உரிமைகளை மதிப்பார் என்றெல்லாம் நம்பினார்கள்.  ஆனால் எல்லா அமெரிக்க அதிபர்களையும் போல, ஏகாதிபத்திய மமதையோடே ஓபாமாவும் ஆட்சி நடத்தினார்.

தீவிரவாதத்திற்கெதிரான போர் (War on Terror) வெளிநாட்டில் நடக்கும் ஆபரேஷன் (Overseas Contingency Operation) என்று பெயர் மாற்றம்  தொடர்ந்தார்.    க்வென்டனாமோ பே சிறையில் இனி சித்திரவதைகள் நடக்காது என்று ஓபாமா உத்தரவிட்டார்.  ஆனால், ஓபாமா பதவியேற்ற பிறகு விடுதலையான பின்யாம் முகம்மது என்ற க்வென்டனாமோ பே சிறைவாசி, ஓபாமா பதவியேற்ற பிறகு சிறையில் நிலைமை மோசமானதாக குறிப்பிடுகிறார். சிறை மூடப்படுவதை தெரிந்து சிறைக் கைதிகளை கடைசியாக சித்திரவதை செய்தார்கள் ராணுவத்தினர் என்று கூறுகிறார்.

Binyam_Mohammed

பின்யாம் முகம்மது

ஸ்டக்ஸ்நெட் என்ற வைரஸை உருவாக்கி எதிரி நாடுகளுக்கு அனுப்பி அவற்றின் கம்ப்யூட்டர்களை சிதைக்கும் திட்டத்தை ஜார்ஜ் புஷ் உருவாக்கினார்.  ஓபாமா அத்திட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார்.   பொருளாதாரம் மோசமான சூழலில் இருக்கிறது.  ஓபாமா பதவியேற்ற பிறகு ஏற்பட்ட தேக்கநிலை இன்னும் நீங்கவில்லை.

2009ல் ஓபாமா பதவியேற்ற பிறகு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு முடிவுகள் 89 சதவிகிதத்தினரின் ஒப்புதலைப் பெற்றது. இந்த ஒப்புதல், 2010ல் 58 சதவிகிதமாக குறைந்தது.

இந்த நிலையில் வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிறது.   அத்தேர்தலில் போட்டியிடுவதாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே ஓபாமா அறிவித்து விட்டார்.   அமெரிக்கர்களை பயமுறுத்துவதற்காக இருந்த ஒரே எதிரி ஓசாமா பின் லேடன் கொல்லப்பட்டு விட்டார்.   ஓசாமா கொல்லப்பட்ட பின்னர், அமெரிக்க மக்களை பயமுறுத்துவதற்கு எந்த எதிரியும் இல்லை.  அல் கொய்தாவின் தளபதிகள் என்று அறியப்பட்டவர்களும், அமெரிக்கா அனுப்பிய ஆளிள்ளா (Drones) விமானங்களால் கொல்லப்பட்டு விட்டனர்.

President_Official_Portrait_HiRes

இப்படி இருக்கையில், எதைச் சொல்லி ஓபாமா அதிபர் தேர்தலில் வெற்றி பெற முடியும் ?  ஓபாமா தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு முந்தைய தேர்தலில், நூலிழையில்தான் ஜார்ஜ் புஷ் வெற்றி பெற்றார் என்பதை மறந்து விடக் கூடாது.

இந்த அத்தனை விஷயங்களையும் கருத்தில் கொண்டு பார்க்கையில், ஓபாமா மீண்டும் அதிபராவதற்காகவே உருவாக்கப்பட்டதுதான் இந்த இன்னசென்ஸ் ஆப் முஸ்லீம்ஸ் என்ற திரைப்படம் என்று எண்ணத் தோன்றுகிறது.

இக்கட்டுரையின் முதல் பத்தியில் உள்ள மாக்கியவல்லியின் கருத்தை ஒரு முறை படித்துப் பாருங்கள்.

இத்திரைப்படத்தை எடுத்த நபரின் பின்னணியையும் மறந்து விடக் கூடாது.  அமெரிக்காவின் எஃப்.பி.ஐ, மற்றும் சிஐஏ உளவு நிறுவனங்கள், இந்த பசில் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை என்று தெரிவித்துள்ளது, இந்த சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. அமெரிக்கா நினைத்திருந்தால், இந்த நபரை ஒரே நாளில் கைது செய்து சிறையில் அடைத்திருக்க முடியும். கருத்துச் சுதந்திரத்துக்காக இவரைக் கைது செய்யாவிட்டாலும், திரைப்படத்தின் ஸ்க்ரிப்டாக ஒன்றை எடுத்து, அதன் அடிப்படையில் ஷுட்டிங் செய்து விட்டு, வசனங்களை வேறு மாதிரி டப்பிங் செய்ததற்காக மோசடி குற்றத்திலாவது இந்நபரை எளிதில் கைது செய்ய முடியும்.  இஸ்லாமியப் பெயரோடு ஒருவன் அமெரிக்காவில் இருந்தாலே அவனை சந்தேகத்தோடு பார்த்து 24 மணி நேரமும் அவனைக் கைது செய்யும் அமெரிக்கா, ஷா ரூக் கான் மற்றும் கமல் ஹாசன் என்ற பெயர் வைத்திருக்கிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காக, அவர்கள் டவுசரை அவிழ்த்து சோதனை செய்யும் அமெரிக்கா, இந்த மோசடிப் பேர்விழியைக் கைது செய்யாமல் அமைதிக் காப்பது உள்நோக்கத்தோடே என்று எண்ண வேண்டியிருக்கிறது.

இத்திரைப்படம் பற்றிய செய்திகள் வெளியானால், நிச்சயம் அரபு நாடுகளில் கலவரம் வெடிக்கும், அதனால் அமெரிக்கர்கள் அச்சமடைவார்கள்,  அதனால் எளிதாக தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்று ஓபாமா திட்டமிட்டு உருவாக்கிய சதி வலையாகவே இது தோன்றுகிறது.   வழக்கமாக அமெரிக்க தூதரக அதிகாரிகளோ, தூதரகமோ தாக்கப்பட்டால், குய்யோ முறையோ என்று கூப்பாடு போடும் அமெரிக்கா, சென்னையில் உள்ள அதன் அலுவலகம் தாக்கப்பட்ட பிறகும், பம்மிக் கொண்டு இருப்பதை நாம் மறந்து விடக்கூடாது.

பாகிஸ்தானில் டானியல் பேர்ள் என்ற ஒரு பத்திரிக்கையாளரை தீவிரவாதிகள் கடத்திக் கொலை செய்ததற்கு, அலறிய அமெரிக்கா, லிபிய நாட்டுத் தாக்குதலில் தூதர் கொல்லப்பட்டதற்கு ஒப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து விட்டு, அமைதியானதையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

இஸ்லாமிய சகோதரர்களுக்கு சவுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறது.   நீங்கள் நடத்தும் போராட்டம் நியாயமாக இருக்க வேண்டும்.  திரையுலகத்தால் மதிக்கப்படும் ஒரு ஜாம்பவான் இப்படிப்பட்ட ஒரு திரைப்படத்தை எடுத்திருந்தால் நீங்கள் போராட்டம் நடத்தலாம். குப்பைக்கு எதிராக போராட்டம் நடத்தாதீர்கள்.  அந்தக் குப்பைக்கு எதிராக போராட்டம் நடத்தி, நாம் அமெரிக்கா விரித்துள்ள சதி வலையில்  விழுந்து விடக் கூடாது.

நீங்கள் உண்மையில் போராடியிருக்க வேண்டியது கமலஹாசன் எடுத்த உன்னைப் போல் ஒருவன் என்ற திரைப்படத்திற்கு எதிராகத்தான்.  இஸ்லாமியர்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்று கலைநயத்தோடு சொல்லியிருந்தார் கலைஞானி.   டைம் பாமில் வயரை அறுக்கும் நேரத்தில், பச்சையை அறுத்து விடு, என்று இஸ்லாத்தை குறி வைத்து, படம் நெடுக வன்மத்தை புகுத்தியிருந்தார் கமலஹாசன்.  அது போன்ற விஷமத்துக்கு எதிராக நீங்கள் போராட்டம் நடத்தியிருந்தால் புரிந்து கொள்ளலாம்.  ஆனால், இது குப்பை.  குப்பையை ஒதுக்கித் தள்ள வேண்டும்.  கோபுரத்தில் வைக்கக் கூடாது.

 

Comments  

 
0 #86 Nellai George 2012-10-05 00:04
good article.but its not fair for the muslim brothers to be emotional and destroy our property.
very fairly done savukku.never mind the criticisms.
Quote
 
 
0 #85 Solomon 2012-10-03 23:26
The comments given by M.S.Chagla is excellent and very true.. please chagla keep up ur good work,thanks
Quote
 
 
+2 #84 Doesnt matter 2012-10-03 23:21
Savukku, It's time you opened your eyes, man. Ever heard about Ali sina. if not, read www.alisina.org and www.faithfreedom.org. I am sure you will be enlightened. If you choose not to read, I am afraid, you will be an appeaser just like congress and other left parties until the land under your feet is gone.
Quote
 
 
+3 #83 RAJESHRAMU 2012-10-03 15:56
எதற்கு மறியல் எதற்கு போராட்டம் என்று சம்பந்தமே இல்லாமல் பொதுமக்களை வாட்டுவது தான் இன்று பல பேரின் வேலையாக இருக்கிறது ,இலங்கையில் குண்டு போட்டால் இங்கு ரயில் மறியல்,சாலை மறியல் ,அமெரிக்காவில் அசிங்கபடுதினால் இங்கு ரயில் மறியல் சாலை மறியல் ,இப்படி மறியல் செய்து நம் தமிழக மக்களுக்கு தொல்லை கொடுப்பதை விட அமெரிக்கா செய்தால் அதற்க்கு பதிலடியாக அமெரிக்க நிறுவனத்தின் பொருட்களை வாங்காமல் இருங்கள் ,அதை விட்டு விட்டு மறியல் செய்து விட்டு ,அமெரிக்க நிறுவனங்களின் சொச சொல ,பெப்சி பருகிவிட்டு செல்ல வேண்டியது.

திரு கமல் அவர்களை பற்றி சொன்னது ,கமல் அவர்கள் மட்டும் அல்ல மொத சினிமாவே தீவிரவாதிகள் என்றால் அது முஸ்லிம் தான் என்று முதிர குத்து போல் செய்து விட்டார்கள் ,அதை தான் மாற்ற வேண்டும் ,அதற்க்கு தான் தடை கேட்க்க வேண்டும்
Quote
 
 
-2 #82 Tamilian 2012-10-02 19:09
this is a brahmin hate site,simply put.That
is all.
Quote
 
 
0 #81 M.S.Chagla 2012-09-30 13:02
This is a well balanced article. Please do not be carried away by negative comments arising out of such publication. Though muslims have the right to protest yet they sh'ld've'nt indulged in vandalism & causing disturbances to public at large. At the same time, the governments have lost the moral right and their hypocrisy of secularism is well exposed when at the sight of a ban on Gita, the Foreign minister lodges protest. Similarly when a sikh is imprisoned in a Pakistani jails, the indian government responds to it.But everytime the same govt. does not come to the rescue of a muslim cause. When a north Indian student is beaten up in Australia, U.S., U.K the government makes a big hue and cry but remains a silent spectator when genocide against tamils is done by the racist Mahinde Rajapakse. And same is the fate of our tamil fisherman. Why is this marked, ever growing indifference to Tamils, muslims in India? Even while awarding punishments by the courts too, the death is discriminatory. A majority of the so-called godhra train massacres were handed death sentence and found gulity, but no death sentence to naroda patiya and other communal violence though there were enough evidences against them. Either they were handed life imprisonment or light punishments and some of them were left free due to lack of evidence. Is everyone aware of such discrimination being practised by the government and its agencies? Almost no muslim is recruited by RAW, IB, Army, Navy, CBI, although there are exceptions.This is an unwritten rule of any governments in India. Nobody cares for this & speaks for except a few noble souls whose voice is left in the lurch. All the muslim leaders are busy trying to save their positions- be it the Imam Bukhari of JamaMasjid or wakf boards in Tamilnadu. So, it is the fate of the muslim community to suffer both at the hands of their self proclaimed leaders and the governments. Like the SC/ST's the destiny of the muslim community is condemned for ever.
Quote
 
 
0 #80 Angry Bird 2012-09-29 14:32
"நிறை குடம் தளும்பாது; குறை குடம் கூத்தாடும்" புரிந்து இருக்கும் என்று நினைக்கிறான்....
Quote
 
 
+4 #79 sivan 2012-09-28 17:08
யாருக்கும் தெரியாத இந்த படத்தை விளம்பரப்படுடத் தி விட்டார்கள். இது வரை பார்க்காதவர்களை யும் பார்க்க வைத்து விடுவார்கள் இந்த முட்டாள் தனமான போராட்டங்களால். சவுக்கு, இந்து மதத்தில் வர்ண ஜாதி பேதம் போனற குறைகள் இருந்தாலும் "அகம் ப்ரம்மம், தத் த்வம் அசி" நீ இறைவன் போன்ற மகத்தான கருத்து உள்ளது. "கஃபிர்" என்று இலட்சக்கணக்கான மனிதர்கள் கொல்லப்பட வில்லை. சவுதியில் சென்று "அகம் ப்ரம்மம், நான் கடவுள்" என்று சொன்னால், என்ன ஆகும்?? We are tired of this "secularism" Savukku.
Quote
 
 
-10 #78 ikram 2012-09-28 15:36
Before writing the article you want to know about islam islam not not appect any picture equal then prophet muhmmed(pbuh)fi rst remove the face more then our life we want to love our prophet then only we muslims that y we came to road that stupid movie hurt millions muslims
Quote
 
 
+12 #77 Rakeshm 2012-09-28 06:39
Did savukku believe in Allah and prophet? Readers want to know. Who gave the license for atheists to support Islam and hurt Hindus. If you think that's atheism you are the worst idiot on earth.
Quote
 
 
+3 #76 Uthayam 2012-09-28 01:51
போகிற போக்கில் நீங்கள் ஒன்றை கொளுத்திப் போடாதீர்கள். எம்.எப்.உசேனுக்காக (சரஸ்வதியை நிர்வாணமாக வரைந்ததற்கு) எந்த முஸ்லிமும் வக்காலத்து வாங்கவில்லை. மாறாக, அந்த செயலை கண்டித்தவர்களே அதிகம். இன்னும் சொல்லப்போனால் அந்த ஓவியர் இஸ்லாமியப்படி வாழ்ந்த மனிதனே அல்ல.

யார் வேண்டுமானாலும் வீதியில் இறங்கி போக்குவரத்து இடையூறு செய்து போராடலாம். அது சர்ச்சையாகாது. ஆனால் அது முஸ்லிம்களாக மட்டும் இருந்து விடக்கூடாது. எங்கேயோ ரஷ்யாவில் பகவத் கீதைக்கு தடை செய்யப்போவதாக செய்தி வந்தால் நாடாளுமன்றமே கொந்தளிக்கிறது. இந்திய வெளியுறவு அமைச்சர் ரஷ்ய அரசிடம் பேசுகிறார். ஆனால் இந்தப் பிரச்சினைக்கு முஸ்லிம்கள் போராடினால், அவர்கள் பக்கமே திரும்பி நாம் குற்றம் சொல்வது எவ்வகை நியாயம்? கருத்து சுதந்திரம் என்ற பெயரில் சுதந்திரத்தையே துஷ்பிரயோகம் செய்வதை தடுக்கத்தான் வேண்டும்.
Quote
 
 
-2 #75 iniavan 2012-09-27 16:35
அருமை அருமை தோழர்.நடுநிலையான கருத்துக்களை எழுதி உள்ளீர்கள்.ஹுசைன் வரைந்த ஓவியங்களை முஸ்லிம்களா ஆதரித்ததாக எழுதி உள்ளீர்கள்.ஹுசைனுக்கு எப்போதும் முஸ்லிம்களின் ஆதரவு இருந்தது கிடையாது.என் எனில் உருவப்படங்களை வரைவதை நம்பிக்கை அடிப்படையில் எதிர்ப்பவர்கள் முஸ்லிம்கள்.எனினும் இந்த திரைப்படம் அமெரிக்காவின் தேர்தலில் ஒபாமா வெற்றி பெறுவதற்க்கான சதியாக கூட இருக்கலாம்.
Quote
 
 
-3 #74 CommonHuman 2012-09-27 15:33
பின்னூட்டங்களில ் வரும் கருத்துக்கள் பெரும்பாலவை சவுக்கை விமர்சனம் செய்து எழுதியுள்ளனர். கருணாநிதி, ஜஃபர் சைட் பத்தி எழுதினால் "நடுநிலையாளர்". அதே சமயம் தான் சார்ந்த ஒரு மனிதன் பத்தி எழுதினால் "-------" என்று வசவு. அன்பார்ந்த சொம்புகளுக்கு இந்த கட்டுரையும் சர்வதேச அரசியல் என்ற போர்வையில் பார்க்கயும்.
Quote
 
 
+4 #73 Ganesh viswanathan 2012-09-27 14:52
Dai savukku,

could you reply to my question in this comment page ?

1) Are hindus are terrorist ?

2) why you always blaming iyer? why not other communites(deva r,vaniyer) who dominating the sc/st. ? if you do like that they (devar,vaniyer) will kick in your ass hole.

3) you writing the article based on your own imagination. are you a drunker ?ther is no true in the article.

4) their no different between nakeeran gopal,kamaraj,a nd savukku sanker?.you all in same sakadai.

5) you started this savukku for taking revenge on jaffer suit and dmk, nakeeran familys? so you are not good guy try to taking revenge on others.

according to me you are selfish guy ?
Quote
 
 
+4 #72 ஆர்.தியாகு 2012-09-27 14:12
நான்:: சவுக்கு!! நீ அதுக்கு சரிபட்டு வரமாட்ட !!!!

வாசகர்கள் :: ஆமா ஆமா சவுக்கு அதுக்கு சரிப்பட்டு வராது
Quote
 
 
+4 #71 ஆர்.தியாகு 2012-09-27 14:09
இன்றைய சீர்திருத்தவாதி களை வரவேற்கிறோம்! அவர்கள் சமமான நோக்குடன் எல்லா மதங்களிடத்திலும ுள்ள குறைகளையும் ஆராய்ந்து கூறுவதாக இல்லை. !
இஸ்லாம் மதத்தை குறை கூறினால் அம்மதத்தை சேர்ந்தவர்கள் கண்ட இடங்களில் கூட்டமாக கூடி இவர்களை தாக்க வருவார்கள். !

கிறிஸ்தவ அரசாங்கம் ஆட்சி பீடத்திலிருக்கு ம் போது அதைப் பற்றி குறை கூறினால் சிறைக்குள்ளே தள்ளி விடுவார்கள். இதனால் தான் அவைகளை விட்டுவிட்டு இந்து மதத்தை ஏகப் பொதுச் சொத்தாக எடுத்து கையாண்டு வருகின்றனர். சீர்திருத்தவாதி கள் இவ்வாரில்லாது சம நோக்கோடு தங்களுடைய காரியங்களை செய்ய வேண்டும்
-திரு.தேவர்
(1949 ஜூன் 12 ம் நாள் -காலை -மதுரை வெள்ளியம்பல மண்டபத்தில் நடைபெற்ற "தமிழ்நாடு சன்மார்க்க தொண்டர்" மாநாட்டில் உரை)
Quote
 
 
+3 #70 ஆர்.தியாகு 2012-09-27 14:05
""நசிருத்தீன் ஷா என்றால் மன்னிக்கலாம் கமலஹாசன் என்றால் தண்டிக்கலாமோ? ""

ரவி!! அருமை !! சவுக்கு தம்பி சொல்லுதுல நல்ல படிச்சிட்டு வந்து கட்டுரை எழுதியா..? வாயில புகை கையில கிளாசு அப்புறம் எப்படி உனக்கு நல்லது கெட்டது தெரியும்.
Quote
 
 
+6 #69 ஆர்.தியாகு 2012-09-27 14:03
"""தமிழில் கமலஹாசன் முஸ்லீம் சகோதரர்களை சமாதானம் படுத்த ஒரிஜினலில் இல்லாத சரக்கான ஒரு ஹிந்து தீவரிவாதியையும் சேர்த்தாரே அதற்காக வா? ஒரு குப்பையை ஒதுக்கச் சொன்னதுவரை தெளிவாக சொன்ன நீங்கள் கடைசியில் குழப்பிவிட்டீர் கள்""""

ரவி !! அருமை!! சவுக்கின் மீது இத்தனை சாட்டையடி..!!

சவுக்கு:: நல்லா கேட்டுக்குங்க!! நானும் சமுகத்துமேல அக்கற உள்ளவன் !அக்கற உள்ளவன் !! அக்கற உள்ளவன் !!
Quote
 
 
+3 #68 ஆர்.தியாகு 2012-09-27 14:00
"""நகுல்லா என்பது இவர் பெயர். எகிப்திலிருந்து அகதியாக வந்து லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே தங்கியுள்ளார். 1990ல் மெத்தாபீட்டாமைன ் என்ற போதை மருந்தைக் கடத்தியதற்காக சிறையில் இருந்துள்ளார். 2010ல் வங்கி மோசடியில் ஈடுபட்டதற்காக அவருக்கு 21 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது .""""
ஹ்
சாவுக்கு தோழா!! இப்படி தண்ணியடித்து வ்ட்டு கட்டிரை எழுடாதே என சொன்னால் கேக்கமாட்டாயா..?

நீயும் ஜெயிலுக்கு போனாய்..உன் மீதும் குற்றசாட்டு உண்டு.. அப்போ நீயும் உன் கட்டுரையை போலவே அயொக்கியானா..?
Quote
 
 
+10 #67 ஆர்.தியாகு 2012-09-27 13:55
""அரேபிய மொழியிலான இரண்டு நிமிடக் காட்சிகளை ஒளிபரப்பிய பிறகுதான், பெரிய அளவில் உலகெங்கும் கிளர்ச்சிகள் தொடங்குகின்றன"" யாருக்கும் தெரியாத விசயத்தை அரபிய மொழியில் மாற்றம் செய்து திரிபாதி வேலைக்கு வேட்டு வைத்த புன்னியவான் வாழ்க..!!!
Quote
 
 
+4 #66 Guruprasad V 2012-09-27 13:27
Hereafter I'm not going to read Savukku. Thanks for making your agenda clear.
Quote
 
 
-8 #65 nellai green tamilan 2012-09-27 12:21
Quoting Arun B:
Also, Savukku-ji...instead of arguing Muslims to oppose Kamal (an anti-Indian, anti-Hindu 'intelligent psycho'), you should have argued the 'peace-loving' Muslims the following:

1. Dont apply for US Visas.
2. Dont settle in US and/or leave US(to Islamists, who are already present in US, especially who're having Green Card!)
3. Dont use Computer, Internet and other modern technologies (Microsoft, Apple, Google, Facebook, Twitter and their products made by US companies; modern medical treatments for diseases like cancer, et al.)
4. Taking insurance is against Islam. Are not muslims in the US availing insurance, a mandatory in US for its citizens? Ask them to not take it!!
5. Music, dance and other such entertainments are against Islam, i.e., they're NOT allowed in Islam. Please ask Muslims to oppose ARR, Bollywood Khans, Katrina Kaif :lol: , et al?

Brother you don’t know anything but educated?
1. first you ask to US send back Muslim from US they can’t because you thing Indian Muslim working there but lot US engineer work Gulf country and US send to US Muslim citizen from Indian muslim very less percentage compare with bramin
2. US can stop selling computers Gulf country stop service facebook…
They are supplier you to them stop the selling to muslim why tell us don’t make joke
3.any one muslim told khan ,kaif is muslim so we proved, it (islam) is not property of us any one can come but you follow not follow islam rules that we want( you know silksumitha ,anuratha we feel same category who has act flim)

*savukku good work but thasilima also wrote against islam so ….
Quote
 
 
0 #64 gsrikanth 2012-09-27 01:05
சவுக்கு சுட ஒரு கூப்ப தான்
Quote
 
 
-8 #63 kavi payangaravathi 2012-09-26 23:07
சவுக்கு விவரிக்கும் உன்னை போல் ஒருவன் பற்றி வினவில், கமலின் முஸ்லிம் துவேசத்தைஉம், பிராமனியம் மற்றும் காவிபயங்கரவாதத் தையும் கான,
http://www.vinavu.com/2009/10/01/unnai-pol-oruvan/
Quote
 
 
+10 #62 ganesh ranga 2012-09-26 21:12
even kamal himself does not claim that he ia a brahmin. you want to brand him?
ganesh
Quote
 
 
+5 #61 thamizhan 2012-09-26 19:47
இன்னொசன்ஸ் ஓஃப் முஸ்லிம்ஸ் - படத்தை விட உங்கள் கட்டுரை குப்பை.
உன் பிள்ளைகள் விஷயத்திலும் இப்படித் தான் சிந்திப்பாயா, நன்பர் சவுக்கு ?
நக்கீரனுக்கும் உனக்கும் வித்தியாசம் ஏதுமில்லை - இந்த கட்டுரை அதற்கு எடுத்துக்காட்டு .
Quote
 
 
-8 #60 நிஜாமுதீன் 2012-09-26 17:39
மிகவும் அருமையான கருத்துக்கள் .நடுனிலையொடும் நெர்மையொடும் தையிரியமாகவும் கூறியுள்ளீர்கள் . வாழ்த்துக்கள்
Quote
 
 
+7 #59 gopalasamy 2012-09-26 15:35
"IT IS BETTER TO BE FEARED THAN LOVED".
THIS HOLDS GOOD FOR THE PEOPLE WHO DID VANDALISM IN AZAD MAIDAN AND ANNA SALAI.
Quote
 
 
+9 #58 arunyo 2012-09-26 15:13
யாருடா காட்டுமிராண்டிக ள்? நீ(யா)ங்களா இல்லை நாங்களா?////

பாமியான் புத்தர் சிலைகளை உடைக்கப்பட்ட

பொழுது வாய் மூடிக்கொண்டிருந ்த செக்குலர்

வியாபாரிகள்தான் காட்டுமிராண்டிக ்கள்
Quote
 
 
+9 #57 M RAMASWAMY 2012-09-26 15:09
கற்பனை அற்புதம். படம் எடுக்கும் எண்ணம் எதுவும் இருக்கிறதா
Quote
 
 
0 #56 arunkumar.k 2012-09-26 14:56
you are number one criminal now
Quote
 
 
+24 #55 Ravi 2012-09-26 13:28
பதில்- 3


சென்னையில் போராடினால் அமெரிக்க பணிந்துவிடுமா? சென்னையில் போராடினால் அதுவும் தமிழகம் முழுவதும் போராடினாலும் இங்கிருக்கும் டெல்லியே கண்டுகொள்ள மாட்டேன் என்கிறார்கள். பக்கத்திலிருக்க ும் கர்நாடகாவோ கேரளாவோ கவலைப்படுவதில்ல ை. அப்படியிருக்க யாரை திருப்திபடுத்த இந்த தொடர் போராட்டம்? இந்த போராட்டத்தின் உண்மையான காரணம் இஸ்லாமியிரிடையே யார் அதிகமாக செல்வாக்கு செலுத்துவது அல்லது செல்வாக்கை நிரூப்பிப்பது என்பதுதான். அது மனித உரிமை கட்சியா அல்லது ஜாமாயத் இஸ்லாமியா, உருது முஸ்லீம் கட்சியா, அல்லது தமிழ் முஸ்லீம் கட்சியா என்பதுதான். மிதவாதிகளா அல்லது தீவிரவாதிகளா என்பதுதான். இந்த ஒரு விஷ்யத்தில் அதிக பெயரெடுத்து செல்லும் கட்சி அல்லது இயக்கம் அதன் காரணமாக தமிழகத்தில் இருக்கும் அனைத்து மஸ்ஜித் மற்றும் தர்காகக் களில் இருக்கும் அரசியலில் (தயவு செய்து அரசியல் இல்லை என்று வாதிடாதீர்கள்!) அதிக்கம் செலுத்த முயல்வதுதான் உண்மை. இதில் பெருமளவு பணம் ஒரு காரணமாகிறது.

இப்போது சொல்லுங்கள்!! சென்னையில் தொடர் போராட்டம் அவசியமா? இஸ்லாமிய சகோதரர்கள் தங்களுக்குள் இருக்கும் உள்குத்தை புரிந்து கொள்ளூங்கள். தாங்கள் எப்படி தம் மக்களாலேயே உபயோகப்படுத்த படுகிறார்கள் என்று புரிந்து கொள்ளூங்கள்.

சவுக்கு இதெல்லாம் யோசிக்காமல் இந்த விஷயத்தில் தூண்டி விடுவதை விடவும்.
( பெரிய பதிவாக இருந்ததால் மூன்று பாகங்களாக வெளியிட்டுள்ளேன ். நன்றி!)
Quote
 
 
+18 #54 Ravi 2012-09-26 13:27
பதில்- 2

ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் என்ன நடக்கிறது? இந்த இரட்டை வேடம் முழுவதுமாக ஏற்றுக் கொள்ள்ப் படுகிறது. நசுருத்தின் ஷா செய்தால் தவறில்லை. எப்.எம். ஹூசேன் சரஸ்வதியை நிர்வாணமாக வரைந்தால் அது கலை. முகமதுவை தொப்பியுடன் வரைந்தால் அது மரணதண்டனைக்குரி ய குற்றம். மின்சார வயரில் இருக்கும் பச்சை கலர் கூட இஸ்லாத்தைதான் குறிக்கிறது!!!
எத்தனை அபத்தங்கள்!!!
(பச்சை என்று துபாயில் பாக்கிஸ்தானியர் களை குறிப்பாக சொல்வார்களாம்.! அது அவர்களின் கொடி நிறத்தின் காரணமாக இருக்கலாம் அல்லவா?
அப்படியென்றால் பச்சை கிளி என்ன இஸ்லாமிய பறவையா? அப்ப மதுரை மீனாட்சியின் கையில் கிளி இருப்பதால் அந்த அம்மா முஸ்லீமா? அபத்தத்தை எந்த அளவுக்கு இழுத்துச் செல்வீர்கள்.?
Quote
 
 
+18 #53 Ravi 2012-09-26 13:26
பதில் - 1
அமெரிக்காவில் இஸ்லாத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட இந்த குப்பைக்காக உலகம் முழுவதும் போராட்டம். சரி. உணர்ச்சிவசப்பட் டவர்களை உபயோகப்படுத்தப் படுகின்றனர் என்று புரிகிறது. காரணம் இதற்காக அமெரிக்காவில் எத்தனை போராட்டங்கள் நடந்தது? சுமார் 25 கோடி மக்கள் தொகை கொண்ட அமெரிக்காவில் சுமார் 1 கோடி (எண்ணிக்கை வாதத்திற்குரியத ு!!) இஸ்லாமியர்கள் ஏன் இதுவரை சென்னையில் நடப்பதை போன்று பொது மக்களை துன்பப்படுத்தி பொது சொத்தை சேதப்படுத்தி ஏன் போராடவில்லை? அப்ப்டியென்றால் அவர்கள் இஸ்லாமியர்கள் இல்லையா? எடுத்ததெற்கெல்ல ாம் லண்டன் வீதிகளில் வந்து போராடும் இங்கிலாந்து முஸ்லீம்கள் இந்த திரைப்படத்திற்க ாக லண்டனையே கலகலக்க செய்திருக்க வேண்டுமே? ஏன் செய்யவில்லை? அவர்களும் இஸ்லாமியர்கள் இல்லையா? உண்மையென்னவென்ற ால் மேற்கத்திய நாடுகளில் வாழும் இஸ்லாமியர்கள் ஒரளவு புத்தியை உபயோகிப்பவர்கள் . அவர்களுக்கு அரசு எதற்கு பொறுப்பு எதற்கு பொறுப்பு இல்லை என்று தெரியும். இவர்கள் தங்கள் மதத்தின் தனித் தன்மையை காப்பற்ற அல்லது தங்கள் மத நம்பிக்கையை காப்பற்ற போராடும் போதெல்லாம் மேற்கத்திய நாடுகள் போற்றும் அடிப்படை அம்சமான "தனிமனித சுதந்திரம்" என்னும் அடிப்படையில்தான ் நீதி மன்றங்களிலும் வீதி மன்றங்களிலும் போராடி வெல்கிறார்கள். அப்படியிருக்க திடிரென்று அந்த தனிமனித சுதந்திரத்தை திடிரென்று ஒரு குப்பைக்காக இவர்கள் எதிர்க்க முடியாது. அப்படி எதிர்த்தால் அது அவர்களது இரட்டை நிலையை காட்டுவதாக அமையும். அதனால்தான் மேற்கத்திய இஸ்லாமியர்கள் இந்த குப்பையை புறந்தள்ளி செல்கிறார்கள்.
Quote
 
 
+6 #52 R Chandrasekaran 2012-09-26 12:05
உங்கள் கட்டுரையை முதன முதலாக மறுக்கிறேன்.. முழுவதுமாக... போராட்டம் நடத்தினால் அவர்கள் நியாயவான்களா...? இந்து வெறியர்களும் போராட்டம் நடத்தினார்கள் பாபர் மசூதியை இடிக்க.. அத்னால் அவர்களும் நியாயவான்களா... தவறு சவுக்கு.. உங்கள் பார்வை கோணம் எல்லாமே தவறு.....ஒரு வேளை எலக்ஷனில் நிற்கப் போகிறீரோ என்னவோ...?
Quote
 
 
+11 #51 SUTHIRAN 2012-09-26 11:58
இஸ்லாமிய சஹோதரர்களுக்கு முக்கியத் தேவை மத விமர்சனங்களைப் பெரிதுபடுத்தாமல ் பொறுத்து கொள்வதும் மற்ற மதங்களையும் ஏற்றுக்கொள்ளும் சகிப்புத்தன்மைய ும் தான் ! யாரோ ஒரு முன் பின் தெரியாத நாதாரி ஒருவன் எடுத்த குப்பைப் படத்தை , பத்து பேர் கூட மூன்று மாதங்களான பிறகும் பார்க்காத ஒரு தோல்விப் படத்தை , ஓரிரு நாட்களில் தேவையற்ற வன்முறை கலந்த கலவரங்களின் மூலம் , உலகம் முழுவதும் பிராபல்யம் அடையச் செய்துவிட்டனர் இந்த இஸ்லாமியர்கள் ! எதற்கெடுத்தாலும ் ஜிஹாத் என்ற போர்வையில் ரத்தக் களறி கலந்த வன்முறையை அப்பாவி மக்கள் மேல் அவிழ்த்துவிட்டு , இசுலாம் என்றாலே வன்முறையாளர்களி ன் மதம் என்ற அவச் சொல்லை மற்ற மதத்தினர் எல்லோரும் கூறிப் பழிக்கும் வண்ணம் அறிவற்ற செயல்களையே தொடர்ந்து செய்து வந்தால் அது நிச்சயமாக இசுலாமியர்களின் குற்றமே !

சவுக்குவிற்கு இப்படிச் சொல்லி எழுதுவதற்கு ஏன் தயக்கம் ? பயமா? சரி ! நியாயமான அறிவுரைகளைத்தான ் நீங்கள் எழுதுவதற்குத் தயங்குகிறீர்கள் ! ஆனால் பிராமணத் துவேஷம் மேலோங்க , கமல ஹாசன் ஒரு பிராமணர் என்பதாலேயே அவர் மீது வன்மமாக , வன்முறையைத் தூண்டி விடுவது போல் அதுவும் கொதி நிலையில் என்ன செய்கிறோம் என்ற அறிவே இல்லாமல் ஜிஹாத் என்ற போர்வையில் வன்முறையில் இறங்கத் தயாராக உள்ள ஒரு கூட்டத்தைத் தூண்டும் விதமாக நீங்கள் எழுதிய கட்டுரையைப் படித்து மிக மிக வேதனை அடைந்தேன் ! உங்கள் மீதுள்ள மிச்சமுள்ள நல்லபிப்ராயத்தி னால் மட்டுமே நீங்கள் எழுதும் எல்லாக் கட்டுரைகளையும் தொடர்ந்து படிக்கிறேன் ! தயவு செய்து உங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளை எழுதி கட்டுரையின் தரத்தைக் குறைத்து விடாதீர்கள் ! முக்கியமாக உங்கள் மீதுள்ள வாசகர்களின் நல்லபிப்ராயத்தி ற்குப் பங்கம் வரும் விதத்தில் எழுதுவதை நிறுத்துங்கள் ! முடியவில்லை என்றால் குறைத்துக் கொள்ளுங்கள் குறைந்த பட்சமாவது !
Quote
 
 
+11 #50 gopalasamy 2012-09-26 10:11
ONE MORE THING ABOUT KAMALAHASSAN.
ONE OF THE TERRORIST NAME IS MOHANDAS KARAM CHAND IN THAT PICTURE. SAVUKKU AND MOHAMMED ASHIQ SHOULD SALUTE KAMALHASSAN FOR THIS NAME.
BECAUSE ONLY MOHANDAS KARAMCHAND IS TERRORIST. SAKO KAZAB, SAKO AFZAL GURU, SAKO MADANI ARE PEACE LOVING PEOPLE.
Quote
 
 
+12 #49 freebalu 2012-09-26 07:52
சவுக்கு! "Intolerance is the worst form of violence". நீங்க என்னமோ பெரிய மதசார்பற்ற ஆள் மாதிரி காமிக்க வேண்டி, ஹிந்து எதிர்ப்பு & மற்ற மத ஆதரவு ஆயுதத்தை எடுக்குறீங்க! இதெல்லாம் நம்ம பழைய திராவிட ஆளுங்க எடுத்து use பண்ணி ஓரமா வச்சுட்டாங்க! இப்போ உங்கள மாதிரி ஆளுங்க எடுத்து சாணை தீட்டி பாக்குறீங்க! ஆனா வர வர உங்க ப்ளாக் வெறும் குப்பையா இருக்கு. Nowadays, you are missing the sting & hence losing lot of readers..
Quote
 
 
+5 #48 Bharath Arunachalam 2012-09-26 07:03
You don't seem to have any basic understanding of American politics. Let me give you an example. You claim that Bush would have won third term if there was no term limit. Here is Bush's approval rating.
http://www.gallup.com/poll/116500/presidential-approval-ratings-george-bush.aspx
Quote
 
 
+9 #47 Rjan 2012-09-26 05:21
First of all, I condemn this false equivalency. Hindu terrorism is not equal to Islam terrorism. Fatwa on Taslima Nasreen, Rushdie is not equal to vandalism against MF Hussein. Please stop this nonsense and lets standup and say Islamic terrorism is a great danger to this country and world. The reason I say is, many of the muslims of the world still live in 14th and 15th century and there are no moderates in the muslim world to tone down the voices of fundamentalists .

No one gives anyone right under any circumstances to damage and cause fear to the public. Lets condemn this attack on embassy without conditions. At the same time, the govt should provide enough venues for people to gather and do peaceful protests for any cause. Lets not use this an example to take away the rigths of people to gather and voice their concerns for any reason.


With that said, it is absurd to say that Obama created this video. There is only headaches for this with the violence in middle east as it is seen as a foreign policy failure.
Quote
 
 
-2 #46 ஐந்தாம் அறிவு 2012-09-26 01:01
பாஸ்.. நான் நீண்ட நாட்களாக உங்களோட கட்டுரைகளை படிக்கிறேன். எல்லாமே ரொம்ப அறிவுபூர்வமாகவு ம் சிந்திக்க வைப்பதாகவும் இருக்கு. இந்த கட்டுரையும் ரொம்பவே சிந்திக்க வைப்பதோடு, யதார்த்தத்தை பிரதிபலிப்ப்தாக இருக்குது. எங்கோ நடக்கும் விசயங்களின் பின்னணியையும் உண்மை நிலையையும் சரியாக கணித்து எழுதும் நீங்கள் கூடங்குளம் விவகாரத்தில் சன் டிவி யும்
'தி ஹிண்டு" வும் செய்யும் பொய் பிரசாரத்தையும் அதன் நிருபர்கள் அறிவரசு மற்றும் சுதாகர் ஆகியோர் அணு உலை நிர்வாகத்திடம் கையூட்டு பெற்று போராடும் மக்களை கொச்சை படுத்துவதோடு போலீஸுக்கு ஆதரவாக போராட்டத்தை ஒடுக்க தீவிரமாக முயற்சி செய்வதை தெரிந்து இருந்தும் இதுவரை ஒரு வார்த்தை கூட எழுதாமல் இருப்பதன் மர்மம் என்னவோ? ஆணவம் மற்றும் பாசிச போக்கையும் சிட்டிக்காட்ட என்ன தயக்கம்? உங்களின் இந்த செய்லை பார்க்கையில் நீஙகள் போராடும் மக்களின் ஆதரவாளன் என்று சொல்லிக் கொண்டு வெகுஜன் ஊடகங்களின் நண்பனாக இருக்க நினைக்கும் நபரோ என்கிற சந்தேகம் எங்களை போன்ற இளைஞர்களுக்கு ஏற்படுகிறது. நல்ல மிடுவை எடுங்கள்... நியாயத்தின் பக்கம் நில்லுங்கள். அரசின் கைத்தடியாக செயல்படும் அறிவரசு, சுதாகர் போன்ற சுயநலவாதிகளின் முகமூடியை கிளியுங்கள். அணு உலை நிர்வாகத்திடம் இருந்து இருவரும் நெற்ற சலுகைகள், பணம் போன்ற விவரங்களை சேகரித்து எழுதி இந்த சமுகத்துக்கு அம்பலப்படுத்துங ்கள். உங்களால்தான் இது முடியும். எங்களை போன்ற ஏழைகளின் குரலை வெளிப்படுத்த உங்களை விட்டால் யார் இருக்கிறார்கள்? நன்றியுடன் ஸ்டீபன் இடிந்தகரை.
Quote
 
 
+1 #45 Arasu 2012-09-26 00:48
முஸ்லிம்கள் இல்லாத உலகம் நிமதியான உலகம். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு மும்பு வாழ்ந்த நபிகளை உயிரினும் மேலாக மதிப்பவர்கள் இப்போ உயிருடம் வாழும் தாய் தந்தையரை அதுபோல் போற்றட்டும்
Quote
 
 
+8 #44 vinavu1 2012-09-26 00:46
"எம்.எஃப் ஹுசைன் சரஸ்வதி தேவியின் படத்தை நிர்வாணமாக வரைந்ததற்காக, இந்து மதத் தீவிரவாதிகளால் தாக்கப்படும்போத ு அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் இஸ்லாமியர்கள், தஸ்லீமா நஸ்ரினுக்கு எதிராக இஸ்லாமியர்கள் வன்முறையில் இருந்தபோது"

இந்துன்னா தீவிரவாதி, முஸ்லிம்ன்னா இசுலாமியர்கள் - தனக்குன்னா இரத்தம், அடுத்தவனுக்குன் னா தக்காளி சட்னியா
Quote
 
 
+4 #43 KamalFan 2012-09-26 00:33
உன்னைப்போல் ஒருவன் படம் வந்தபோது, அந்தப்படம் இஸ்லாமிய சமூகத்தை மிகவும் தாக்குகிறது என கோபம் கொன்ட ஒரு சில பதிவர்கள், இயக்குனர் அமீர் வாயிலாக கமலை நேரில் சந்தித்து பேசினார்கள்.

http://adiraipost.blogspot.in/2009/10/2_20.html

http://adiraipost.blogspot.in/2009/10/blog-post_15.html

http://adiraipost.blogspot.in/2009/10/blog-post_18.html

http://dondu.blogspot.in/2009/10/blog-post_19.html

http://dondu.blogspot.in/2009/10/2.html

Innocence of Muslims போல் படம் எடுத்துவிட்டு ஓடி ஒளியவில்லை கமல். சவுக்கு தேவைப்பட்டால் கமலை நேரில் சந்தித்து கமல் எதை தவறாக சித்தரித்தார் என கேள்வி கேட்கலாம். சவுக்குக்கு தைரியம் உள்ளதா, தயாரா?!?
Quote
 
 
+1 #42 மனிதன் 2012-09-26 00:01
இங்கு சவுக்கை திட்டும் நண்பர்களே,
நமக்கு ஆதரவாக கட்டுரை வரும்பொழுது பாரட்டுவதும் பிடிக்காத கட்டுரை வரும்பொழுது திட்டுவதும் என்ன நேர்மை. இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் நாம் மத வேற்றுமைகளை கடந்து அமைதியுடன் வாழ்ந்து வருகிறோம். மத வெறி பிடித்த மடையர்கள் எல்லா மததிலும் உள்ளணர்.ஒரு சில நாய்களின் செயலுக்காக எல்லாரையும் குற்றம் சொல்வது தவறு. சாதி மதம் கடந்து அன்புடன் அமைதியாக வாழ்வோம்.
Quote
 
 
+3 #41 ஷாலி 2012-09-25 23:54
மத சம்பத்தப்பட்ட ஒரு சென்சிட்டியான பிரச்சினையை கையில் எடுத்து கட்டுரை எழுதிய சவுக்குக்கு பாராட்டுக்கள்.உலக மாந்தர்கள் அனைவரும் அமைதியாக வாழ்வது சாத்தானுக்கு பிடிக்காது.அதற்காக அவர்களிடையே குழப்பம் செய்வது அமெரிக்க ஐக்கிய சாத்தானுக்கு ( United Satan of America ) விருப்பமான வேலை.
யூதர்களின் சதி வலையில் அமெரிக்க கிருஸ்துவர்கள் சிக்கிக்கொண்டனர ்.படத்தில் நடித்தவர்களையே ஏமாற்றிய யூதன் சதிகாரனே! இப்படத்திற்கு எதிராக கண்டன குரல் எழுப்ப இஸ்லாமியர்களுக் கு உரிமை உண்டு. ஆனால்.......இஸ்லாம் கற்றுத்தந்த ஒழுக்க மாண்புகளை புதைத்துவிட்டு போராடுவதும்

எந்த சம்பந்தமும் இல்லாத பொதுமக்களுக்கு துன்பம் தரும் போராட்ட வழிமுறைகளை நடு ரோட்டில் நடத்தி போக்குவரத்தை சீர்குழைப்பது இஸ்லாம் தடைசெய்யும் செயல் என்பதை அவர்கள் மறந்துவிட்டார்க ள்.
செல்லும் வழியில் மக்களுக்கு துன்பம் தரும் கல்லோ,முள்ளோ கிடந்தால் அதை எடுத்து அப்புறப்படுத்து ங்கள்.என்று சொல்லும் இஸ்லாத்தில் நகரத்தையே ஸ்தம்பிக்கசெய்ய ும் கூட்டங்களுக்கு அனுமதி இல்லை.

குப்பைகளை கோபுரத்தில் ஏற்றும் புரபஷனல் குழப்பவாதிகள் கோடம்பாக்கத்தில ும், மணியான ரத்தினங்கள் பம்பாயிலும் உண்டு
Quote
 
 
+27 #40 Indianforlife 2012-09-25 22:31
//இஸ்லாமிய சகோதரர்களுக்கு சவுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறது. நீங்கள் நடத்தும் போராட்டம் நியாயமாக இருக்க வேண்டும். திரையுலகத்தால் மதிக்கப்படும் ஒரு ஜாம்பவான் இப்படிப்பட்ட ஒரு திரைப்படத்தை எடுத்திருந்தால் நீங்கள் போராட்டம் நடத்தலாம். குப்பைக்கு எதிராக போராட்டம் நடத்தாதீர்கள். அந்தக் குப்பைக்கு எதிராக போராட்டம் நடத்தி, நாம் அமெரிக்கா விரித்துள்ள சதி வலையில் விழுந்து விடக் கூடாது.//

Savukku, what an utter crap. You mean to say that these barbarians can destroy public properties and attack people if a reputed director has made such a film? Are you insane? Better stop journalism or else you may be arrested one day. Just want to know if any of these organizations are funding your website?
Quote
 
 
+35 #39 Ranga 2012-09-25 22:30
/*நீங்கள் உண்மையில் போராடியிருக்க வேண்டியது கமலஹாசன் எடுத்த உன்னைப் போல் ஒருவன் என்ற திரைப்படத்திற்க ு எதிராகத்தான். இஸ்லாமியர்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்று கலைநயத்தோடு சொல்லியிருந்தார ் கலைஞானி. டைம் பாமில் வயரை அறுக்கும் நேரத்தில், பச்சையை அறுத்து விடு, என்று இஸ்லாத்தை குறி வைத்து, படம் நெடுக வன்மத்தை புகுத்தியிருந்த ார் கமலஹாசன்.*/

என்ன தலைவா நீங்களுமா ??சவுக்கு மேல் இருந்த நல்ல அபிப்ராயம் குறைந்து போய்விட்டது.இது தனிமனித வெறுப்பை தான் காட்டுகிறது.
Quote
 
 
+43 #38 உண்மை கசக்கும் 2012-09-25 22:30
நடுநிலை இல்லாமல் எழுதுவதற்கு இது ஒரு உதாரணம். சவுக்கு எழுதிய சில கருத்துக்கள் ஏற்புடையதாக இல்லாவிட்டாலும் , அதை படித்து இப்படியும் ஒரு விஷயத்தை யோசித்து பார்க்கலாம்போல என்று நினைக்கத் தோன்றும். ஆனால் இந்த கட்டுரை மிக மிக ஒருதலை பட்சமாகவும் மற்றும் ஆதாரமே இல்லாமலும் உள்ளது. சரஸ்வதியை நிர்வாணமாக வரைந்ததையும் , ஹிந்து மதத்தை பல தலைவர்கள் கேவலமாக பேசியபோதும் ஒரு சில வேலையில்லா ''ஹிந்து அமைப்புகள்'' செய்த வெற்று கூச்சல் தவிர எந்த சாதாரண ஹிந்துவும் ரத்த வெறி பிடித்து அலையவில்லை.

பெரும் கூட்டமாக கூடி பலருக்கும் கஷ்டம் ஏற்படுத்திய மற்றும் பல உயிர்களை (முஸ்லிம் உயிர்களும் தான்) கொலை செய்த வெறி குணம் கொண்ட கூட்டத்தை ''சகோதரர்கள்'' என்று கூறுவது முட்டாள்தனம் அல்லது முதுகெலும்பில்ல ை என்று கூறலாம்.

ஒரு சமூகத்தை காரணமில்லாமல் காரி உமிழ்வது தான் ஜாதிவெறி. தலித்களை கேவலபடுத்தும் மேல்ஜாதி ஆதிக்க வர்கத்துக்கும் சவுக்குகும் என்ன வித்தியாசம்? கமல் 'அன்பே சிவம்' திரைப்படத்தில் கிறிஸ்துவர்களை கருணை உள்ளம் கொண்டவர்கள் ஆகவும் காட்டுவார், ஒரு ஹிந்து வில்லனாக வருவார், அப்போது அவர் பார்ப்பனர் இல்லையா???

என்ன உங்கள் நியாயம் சவுக்கு????
Quote
 
 
+28 #37 Ramkumar84 2012-09-25 22:27
Savukku Shankar, even if your website is flooded with 1000 comments against your worst article, I am sure you are not going to apologize or change your mindset. If you are really a non egoistic person and if there is some humanity in you for others faith, you will definitely put an apology in your site for hurting thousands of hindu readers and for your communally biased views. If not,the readers can assume that Savukku never respects or cares for his readers sentiments unless they are muslims. Please dare to ask why the so called muslim associations never came out to protest for Srilankan tamil cause. Do you have guts?
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 305 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday10803
mod_vvisit_counterYesterday11112
mod_vvisit_counterThis week32002
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month234734
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12756853