முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
பொய் வழக்கிலிருந்து விடுதலை… அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 3
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
வியாழக்கிழமை, 25 அக்டோபர் 2012 18:33

 

சவுக்கில் ஜாபர் சேட் வீட்டு வசதி வாரியத்தில் மோசடி செய்த பெற்ற வீட்டு மனை குறித்து சவுக்கு தளத்தில் ஒரு மகிழ்ச்சி ஒரு சோகம் என்ற கட்டுரை எழுதியதற்காக, ஜாபர் சேட் உத்தரவின் பேரில், மதுரவாயல் காவல்நிலையத்தில் ஒரு பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டது.  சாலையில் சென்று கொண்டிருந்த ஒருவரோடு தகராறு செய்து, அவரை டேய் …………. பையா… உன்னைக் கொல்லாமல் விட மாட்டேன் என்று அவரை அடித்து, செங்கலால் தாக்க முயன்றதாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்தக் கைது அனுபவங்கள் குறித்து, சிறையில் சவுக்கு என்ற கட்டுரையில் விரிவாக எழுதப்பட்டுள்ளது.   ஜுலை 2010ல் பதிவு செய்யப்பட்ட அந்த வழக்கில் இன்று சவுக்கை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார் நீதிபதி.

அந்த பொய் வழக்கே சவுக்கை பலதரப்பட்ட வாசர்களிடம் சென்று சேர்த்தது.  அந்தக் கைது குறித்து, குமுதம் ஓ பக்கங்களில் எழுதிய தோழர் ஞாநியின் கட்டுரைக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், தோழர் ஞாநி, குமுதத்தில் ஓ பக்கங்கள் எழுதுவதை நிறுத்தினார். சவுக்கு கைது குறித்து வினவு தோழர்களும் கட்டுரை எழுதி, இணைய தளத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.  ஜுனியர் விகடனில், இரா.சரவணன் கட்டுரை எழுதினார்.  அதுவும் அந்தப் பொய் வழக்கு குறித்த செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்த்தது.

இந்த வழக்கிலிருந்து விடுதலை பெறுவதற்கு பெரிதும் உறுதுணையாக இருந்த பூந்தமல்லி வழக்கறிஞர் ராஜன், இவ்வழக்கை நடத்திய வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், தோழர் ஞாநி, வினவுத் தோழர்கள், ஜுனியர் விகடன் நிருபர் இரா.சரவணன், திருமாவேலன், மற்றும் பேரன்பைப் பொழிந்த அன்பு வாசகர்கள் அனைவருக்கும், சவுக்கு தன் அன்பு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

 

Comments  

 
0 #10 Suppu 2012-11-01 08:41
வாழ்த்துக்கள் சவுக்கு அய்யா.
Quote
 
 
0 #9 suba 2012-10-27 17:16
'வாய்மையே (எப்பொழுதாவது) வெல்லும் ?
Quote
 
 
0 #8 iliyas 2012-10-26 18:08
வாழ்த்துக்கள் நண்பரே
Quote
 
 
0 #7 Ravi 2012-10-26 14:44
வாழ்த்துக்கள்.! அன்று நானி உங்களைப்பற்றி எழுதப்போய் அடைந்த எதிர்ப்புதான் என்னை மாதிரி ஆட்களுக்கு உங்களை அடையாளம் காட்டியது. இதுவரை நீங்கள் நானியை குறிப்பிட வில்லையே என்று எனக்கு வருத்தம் கூட உண்டு. அது இன்று தீர்ந்தது. அந்த ஒரு பொய் வழக்கு உங்களுக்கு பல ஆயிரம் வாசகர்களை தேடி கொடுத்த வகையில் நீங்கள் திரு.சேட்டுக்கும் ஒரு நன்றி போடுங்கள்...:) :lol:
Quote
 
 
0 #6 புதியவன் ராஜ் 2012-10-26 14:04
வாழ்த்துக்கள் சவுக்கு சங்கர் அவர்களே. உங்கள் வெற்றிப்பயணம் தொடரட்டும். ராகுல் காந்தி மீது பொய் வழக்கு போட்டதற்காக, உச நீதிமன்றம் வழக்கு போட்டவருக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதித்து அந்த பணத்தை ராகுல் காந்தியிடம் கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு சொல்லியுள்ளது. நல்ல தீர்ப்பு தான். ஆனால் அதனுடன் ஒப்பிடும்போது உங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையும், அதனால் நீங்கள் பட்ட மனதுயரும் பல மடங்கு. எனவே நியாயமாக உங்களுக்கு குறைந்த பட்சம் ரூ. 50 லட்சமாவது நஷ்ட ஈடு தரப்பட வேண்டும்.
Quote
 
 
0 #5 Vinayagamoorthi 2012-10-26 13:44
வாழ்த்துகள் சவுக்கு ...
Quote
 
 
0 #4 ஷாலி 2012-10-26 10:44
அதிகார வர்க்கத்தின் ஆணவ சங்கிலிகள் இனி ஒவ்வொன்றாய் உடைபடும்.பொய் வழக்கு போலீஸ்கள் இனியாவது திருந்தட்டும்.
சவுக்குக்கு வாழ்த்துக்கள்!
Quote
 
 
+8 #3 AKM vetriyur 2012-10-25 22:45
மிக்க மகிழ்ச்சி சகோதரா... தர்மம் என்ரும் வெல்லும்...
Quote
 
 
+9 #2 வெட்டி தமிழன் 2012-10-25 21:01
வாழ்த்துகள் சவுக்கு.
Quote
 
 
+20 #1 சரவணன் 2012-10-25 19:37
சுஜாதா நாவலுக்கு வைத்த தலைப்பு மாதிரி 'வாய்மையே (சில சமயம்) வெல்லும்' போலும்! எனிவே, கங்கிராட்ஸ் சவுக்கு! உங்களைப் போன்ற வீரரைத் தமிழ்நாட்டில் நான் கண்டதில்லை. உங்களுக்கென்ன, நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே என ஆண்மையுடன் சிறைக்குச் செல்கிறீர்கள். உங்கள் தாயாரை நினைத்தால் கண்கள் கசியத்தான் செய்கின்றன. அதிலும் இதற்கு முன்பு சிபிசிஐடி கைது செய்தபோது வீட்டுக்குள்ளேய ே அறைக்கதவை சாத்திவிட்டு உங்களை அடித்து நொறுக்கியபோது வெளியில் தனியாக உங்கள் தாயார்... அவருக்கு எப்படி இருந்திருக்கும் என்று நினைத்தால் நெஞ்சம் பதறுகிறது. பார்வதி அம்மாள், அற்புதம் அம்மாள் வரிசையில் உங்கள் தாயாரும்.. வேறு என்ன சொல்வது?

(அறியாமையில் ஏதோ உளறிய பெண்ணுக்கு ஆபாச ட்வீட் போட்டுவிட்டு, கைது என்றதும் குழந்தைக்காக விட்டுவிடுங்கள் என்று கெஞ்சும் தீரர்களே போராளிகளாக உள்ள இணைய உலகில்தான் நீங்களும் இருக்கிறீர்கள். வெட்டி ட்வீட்களில் நேரத்தை வீண்டிப்பவர்கள் சவுக்கைப் பார்த்தாவது எந்த விஷயத்துக்குப் போராடுவது, எப்படிப் போராடுவது என்று புரிந்துகொண்டால ் எல்லோருக்கும் நல்லது.)
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 68 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday302
mod_vvisit_counterYesterday9391
mod_vvisit_counterThis week302
mod_vvisit_counterLast week78643
mod_vvisit_counterThis month281677
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12803796