முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
வருவாய் பெருக்க பொய்யுரைத்ததா விகடன் ? அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 17
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
ஞாயிற்றுக்கிழமை, 04 நவம்பர் 2012 22:13

jollu

முன்னாள் போராளி இன்று ஒரு பாலியல் தொழிலாளி” என்ற தலைப்பில் பேட்டி ஒன்று விகடன் இதழில் வந்துள்ளது.  ஒரு முன்னாள் போராளியின் பேட்டி என்று கூறி விட்டு பெண் புலிகளின் உருவாக்கம் புலிகளின் தலைவர் திரு பிரபாகரனை துதி பாடும் வரிகள் இலங்கை இராணுவம் கூட்டாக பாலியல் கொடுமை செய்தது என்பதுடன்  மட்டுமல்லாது புதிதாக அமைச்சர் ஒருவரும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் மிக தெளிவாக பேட்டியளித்தள்ளார்.

இந்த பேட்டி வந்துள்ள இந்த நவம்பர் மாதம் கூட விடுதலைப் புலிகளால் மிகவும் உணர்வு பூர்வமாக கொண்டாடப்படும் ஒரு மாதம் என்பதையும் நாம் கவனத்தில் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும். இந்த பேட்டியை யாழ்ப்பாணத்தில் வைத்து  எடுத்தவர் அருள்இனியன் என்றும் விகடன் கூறுகிறது.

இனி விடயத்துக்கு வருவோம். முன்னாள் போராளிகள் பலர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் தான். ஆனால் இந்த பேட்டியில் சிறப்பிக்கப்பட்டுள்ள போராளி நிச்சயமாக இன்னும் விடுதலை செய்யப்படவேயில்லை! காரணம் சோதியா சிறப்பு படையணியில் முக்கிய பதவியில் இருந்த ஒருவர் தான் இந்த பேட்டி கொடுத்தவர் என்றால் அவர் உண்மையிலேயே தற்போதும் புனர்வாழ்வு முகாமில் தொழில் பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பார் அல்லது உளவியல் பயிற்சி நெறியில் பங்குபற்றிக்கொண்டிருப்பார் அல்லது பூசாவிலோ வெலிக்கடையிலோ தான் இன்னும் இருந்திருப்பார்.

10 வருடங்களிற்கு மேல் 1995 முதல் இயக்கத்தில் இருந்தவர். ஜெயசிக்குறு சண்டையில் ஈடுபட்டவர். அதுவும் இவர் சரணடையாது வவுனியா முகாமில் வைத்து கைது செய்யப்பட்டவர் என்று வேறு கூறுகிறார். கேட்கவே தேவையில்லை இவரும் தமிழினி ரேஞ்சில் தான் உள்ளவராக இருக்கவேண்டும். ஆரசியல் துறை தமிழினியே இன்னும் விடுதலை செய்யப்படாத நிலையில் இந்த போராளி மட்டும் விடுபட்டது பெரிய அதிசயம் தான்.

இந்த பேட்டியில் நவாலி ஆலயம் மீதான  விமானத் தாக்குதலில் தான் அகப்பட்டதாக சொன்ன இந்த போராளிக்கு நாவாலி தாக்குதலில் உண்மையில் எத்தனை பேர் செத்தார்கள் என்று கூடவா தெரியாது? ஒரு போராளியாக 10 வருடத்திற்கு மேல் இருந்தவர். நவாலி ஆலய விமான தாக்குதலில் பாதிக்கப்ட்டவர். தன் தாய் தம்பியை இழந்தவர். எப்படி விக்கிபீடீயாவில் வந்த  125 பேர் மட்டில் இறந்தது தொகையை  அப்படியே சொல்கிறார்.  இந்த தாக்குதலில் 147பேர் கொல்லப்பட்டார்கள் என்பது அன்று அந்த தாக்குதலில் அகப்பட்ட அனைவருக்கும் தெரியும். அது எப்படி  முன்னாள் போராளி ஒருவர் அதுவும் முக்கிய பதவி வகித்தவருக்கு தெரியமால் போனது. சரி அவர் மறந்து போயிருந்தாலும் சட்டென்று கேட்டால் ஒரு 150 பேரளவில் என்று தானே சொல்லியிருப்பார். இந்த 125 என்ற தொகை எப்படி வந்தது எங்கே விக்கிபீடீயாவில் பொறுக்கியதா?

முன்னாள் போராளிகள் பலரை குறிப்பாக அவர்களை புனர்வாழ்வு முகாமில் சந்தித்தவன் என்ற முறையில் இன்னுமொரு கேள்வி? மெனிக் பார்மில் கைது செய்யப்பட்ட போராளிகள் அனைவரும் உடன் கொண்டுசெல்லப்படும் முதல் இடங்கள் பம்பைமடு, வெலிகந்த, பூசா, அல்லது வெலிக்கடை. காயப்பட்ட போராளிகள் சிலரே அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். அனுராதபுரத்தில் இராணுவத்தை விட விமானப்படையின் முக்கிய முகாம்களே உள்ளது. வவுனியாவில் உள்ள முகாம்களில் தாம் விசாரிக்கப்பட்டதாக சில முன்னாள் போராளிகள் சொன்னார்கள். அனால் அனுராதபுரத்திற்கு கொண்டு சென்று விசாரித்ததாக யாரும் கூறவில்லை. அனுராதபுரத்தில் அரசியல் கைதிகள்  மட்டுமே சிறையில் வைக்கப்பட்டுள்ளார்கள். அதுவும் இராணுவத்தின் பொறுப்பில் இல்லை. அது ஒரு அரச சிறைச்சாலை. விசாரணை முடிக்கப்பட்டு தண்டனை பெற்ற அல்லது தீர்ப்புக்காக இருக்கும் கைதிகளே இங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.  ஒரு வேளை அனுராதபுரம் சிறை கலவரங்கள் பற்றி அண்மையில் வந்த செய்திகள் இந்த முன்னாள் போராளியின் கற்பனையில் வந்திருக்கலாம் அல்லது பேட்டி எடுத்தவர் பொறுக்கியிருக்கலாம்.

ஆனந்தபுரம் தாக்குதல் பற்றிய தகவலிலும் பல ஓட்டைகள் உள்ளது. இந்த முன்னாள் போராளி சோதியா படையணியின் முக்கிய போராளி என்று கூறும் விகடன் பேட்டியில் ஆனந்த புரத்தில் 700 பேர் கொல்லப்பட்டதாக எழுந்தமானமாக இந்த போராளி சொல்கிறார். சோதியா படையணியின் சிறப்பு தளபதியான விதுசா இந்த ஆனந்தபுரம் சமரிலேயே கொல்லப்பட்டார். சோதியா படையணியின் முக்கிய தளபதி விதுசா மற்றும் உதவித் தளபதி மோகனா உட்பட பல சோதியா படையணி போராளிகள் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டார்கள். இந்த சண்டையில் 700 போராளிகள் கொல்லப்படவில்லை மொத்தம் 525 போராளிகளே கொல்லப்பட்டார்கள். இதில் இன்னுமொரு விடயம் இரசாயனக் குண்டு அடித்து 700 பேர் கொல்லப்பட்டாக இந்த போராளி கூறுவதும் ஒரு பெரிய புரளி.

முன்னாள் போராளிகள் அனைவருக்கும் தெரிந்த ஒரு ரகசியம் புலிகளின் தலைமை இராணுவத்தால் மேற்கொண்ட பெட்டி வடிவ சுற்றிவழைப்பில் ஆனந்தபுரத்தில் மாட்டிக் கொண்டார்கள். பிரபாகரன் உட்பட ஆயிரக்கணக்கான புலிகள் இராணுவம் மீதான பாரிய தாக்குதலை நடாத்த திட்டமிட்டு தம் படையணிகளை தயார் படுத்துகையில் தான் இந்த சுற்றி வளைப்பு இடம் பெற்றது. புலிகளின் படையணிகளை பின் பக்கமாக பெட்டி வடிவில் சுற்றி வழைத்த இராணுத்தி;ன் பாரிய தாக்குதலில் புலிகளின் நடுத்தர தளபதிகளில் முகால்வாசிப்பேர்  கொல்லபட்படனர். புலிகளின் தலைவர் இந்த தாக்குதில் இருந்து தப்பவே தீபன் தலைமையில்  இந்த போராளிகள் தம் இன்னுயிரை அர்பணித்தது புலிகளின் தலைவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.  இந்த முன்னாள் பிராதன போராளிக்கு இந்த விடயங்கள் தெரியாது போனதன் மர்மம் என்ன?

இன்று வன்னயில் விடுவிக்கப்படும் முன்னாள் போராளிகள் சும்மா விடுவிக்கப்படுவதில்லை.  இவர்கள் விடயத்தில் இலங்கை மிகவும் உன்னிப்பாக கண்ணுக்குள் எண்ணை ஊத்தி கவனித்துக்கொண்டே இருக்கிறது. சமூகத்தில் இந்த போராளிகளை இணைக்க முன்பாக இவர்களிற்கு தொழில் மொழி மற்றும் பல்வேறு பயிற்சிகளுடன் முக்கியமாக உளவியல் ரீதியான பல பயிற்சிகள் பரீட்சைகள் வைக்கப்பட்டே இவர்களை விடுதலை செய்யப்படுகிறாரகள். அதுவும்  மிகவும் முக்கிய பொறுப்பில் இருந்தவர்கள் மீது கடுமையான ரிஸ்க் அஸஸ்மன்ற் செய்து அதன் பின்னரே விடுவிக்கிறார்கள். இந்த நடைமுறை வடக்கிற்கு மட்டுமே. . ஆனால் வன்னியில் போராடிய முக்கிய போராளிகள் மிகவும் கவனமெடுத்தே விடுதலை செய்யப்படுகிறார்கள். இவர்கள் தொடரந்த கண்காணிப்பிலேயே இன்றும் இருக்கிறார்கள். பணத்திற்கு விலை போவார்கள் என்றால் மீண்டும் இவர்களை தடுத்து வைக்க புலனாய்வுதுறை தயாராகவே இருக்கிறது.

சரி அதையெல்லாம் தான் விடுவோம். புலிகளின் முன்னாள் பெண் போராளிகள் எல்லோருமே ஒருவருக்கொருவர் மிகவும் நெருக்கமானவர்கள். அதுவும் வன்னயில் இருந்த போராளிகள் குறிப்பாக 10 வருடங்களிற்கு மேல் இருந்த இந்த போராளி நிச்சயம் ஒரு மன உறுதி கொண்ட தன் சக போராளிகளை மதிக்க தெரிந்த ஒருவராக தானே இருக்கவேண்டும். பல போராளிகளின் உயிரைக் காக்க ஒரு பெண் போராளி தன் உடலை குண்டின்மேலயே கவசமாக போட்டு வெடிக்க வைத்த சம்பவங்களை கண்ட  இந்த போராளி எப்படி தன் சக தோழிகளின் வாழ்க்கை பற்றி எந்த வித கவலையும் இன்றி இப்படி பேட்டி கொடுத்திருப்பார்? பல ஆண்டு காலங்கள் ஒன்றாக இருந்தவர்கள். தமிழ் சமூகத்தின் போக்கை நன்கே உணர்ந்தவர்கள்.  தாம் சொல்லும் விடயங்களால் தனது சக போராளிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதை உணர்ந்தவர்கள். இப்படி வெளிப்படையாக வந்து பேசுவார்களா?

இன்று இந்த முன்னாள் போராளி கூறிய கற்பழிப்பு கதைகள் திருமணமாகாதா ஆயிரக்கணக்காக முன்னாள் பெண் போராளிகளின் எதிர் காலத்தை எப்படியெல்லாம்  பாதிக்கும் என்று பேட்டி கொடுத்த இந்த போராளிக்கு தெரியாதா? இவர் உண்மையிலேயே ஒரு போராளியாக இருந்திருந்தால் நிச்சயம் தெரிந்திருக்கும். வெறும் சினிமா தனமாக இன்று எழுதப்பட்ட இந்த கற்பனை பேட்டி உண்மையில் எத்தனை ஆயிரம் முன்னாள் பெண் போராளிகளை பாதிக்கப் போகிறது என்பது பற்றி விகடனுக்கு கவலை இல்லை.

மாவீரர் மாத்தில் தனது வருவாயை ஐரோப்பா அமரிக்கா மற்றும் அனைத்து நாடுகளிலும் பெருக்க விகடனும் வழி கண்டுபிடித்திருக்கிறது.

இப்படி ஆதாரபூர்வமாக விகடனில் வெளிவந்த இந்தப் பேட்டி மறுக்கப்பட்டுள்ள நிலையில், இப்படி ஒரு பொய்யான பேட்டியை வெளியிட்டு, உலகத் தமிழர்கள் அனைவரது மனதிலும் தீராத ரணத்தை ஏற்படுத்திய விகடன், உலகத்தமிழர்களிடம் மன்னிப்புக் கேட்க கடமைப்பட்டுள்ளது.

வேதனையுடன்...

ஈழ ஊடகவியலாளர்.

 

Comments  

 
+1 #16 sanjay ramasamy-1 2012-11-14 21:47
மற்றபடி, விகடன் இதே நிலையில் சென்று கொண்டிருந்தால், சரிவையும் விரைவிலேயே சந்திக்கும். இறைவா, இந்த நிலையிலாவது விகடனையும் எங்களையும் காப்பாற்றக் கடவாய்.
டைம் பாஸ் பத்திரிகையை அரை நிர்வான பத்திரிகையாக விகடன் நிறுவனத்திலிருந ்தே நடத்துவார்களாம் . ஆனால், அது விகடனிலிருந்துத ான் வருகிறது என்கிற அடையாளத்தைத் தவிர்ப்பார்களாம ். என்னாங்கடா உங்க ஐடியா. இந்த தமிழ் சமூகத்தை எப்படி ஏமாத்துறானுங்க பாத்தீங்களா? இன்னுமா நீங்க திருந்தலை. உங்கள நினைச்சாத்தான் எங்களுக்கெல்லாம ் பாவமா இருக்கு. அடக் கண்றாவியே.
Quote
 
 
0 #15 sanjay ramasamy 2012-11-14 21:46
இதெல்லாம் தவறு. வியாபாரத்துக்கா க எதையும் செய்யக் கூடாது என்று சொன்ன இருவர் விகடனில் இருந்து வெளியேற்றப்பட்ட துதான் இத்தனைக்கும் காரணம். இன்றைக்கு வியாபாரத்துக்கா க நடிகைகளின் அரை நிர்வாணப் படத்தைப் போட்டு, டைம் பாஸ் என்கிற பத்திரிகையை விற்க ஆரம்பித்து விட்டார்கள். அதற்கு துணையாக இருப்பவர்கள்தான ் இன்றைக்கு மிச்ச சொச்சமாக அங்கே இருக்கிறார்கள். நியாயமாக செயல்பட்டவர்களை வஞ்சகத்தோடு வெளியேற்றியவர்க ள், தங்கள் பிழைப்புக்காக எதையும் செய்யத் துணிந்தவர்கள். அதனால்தான், என்னைக் கூட இன்றளவிலும் கறிவேப்பிலையாகப ் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார ்கள். நான் பேட்டி எடுக்கப் போன போது ஒரு பெண்ணோடு அன்னியோனியமாக இருந்தேன் என்பதால், என்னை பழிவாங்கத் துடித்து, டிப்பார்ட்மெண்ட ் மாற்றியிருக்கும ் சண்டாளர்கள், விகடன் நிர்வாக இயக்குநரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார ்கள். அவரும் ஒருவிதமான மயக்கத்திலேயே இவர்களிடம் மயங்கிக் கிடக்கிறார். அதிலிருந்தெல்லா ம் அவர் என்றைக்கு விடுபடுகிறாரோ, அன்றைக்குத்தான் விகடனுக்கு விமோசனம் கிடைக்கும். அதுவரையில், விகடன் இப்படிப்பட்ட கூச்ச நாச்சமற்ற காரியங்களை தொடர்ந்து தைரியமாக செய்யத்தான் செய்யும். இந்த கட்டுரையை பொய்யாக பிரசுரித்ததில் விகடனில் பணியாற்றிக் கொண்டிருக்கும் என்போன்ற ஈழ நலம் விரும்பிகளுக்கே க்கூட பிடிக்கவில்லைதா ன். இருந்தாலும் என்ன செய்வது? பிழைப்புக்காக அங்கே நடக்கும் அத்தனை அசிங்கங்கங்களைய ும் வெட்கமில்லாமல் சகித்துக் கொண்டு வருகிறோம். எனக்குத் தெரிந்த வரையில், விகடனில் நடக்கும் கூத்துக்கள், பாவங்களுக்கு காரணமாக இருக்கும் க மற்றும் அ நபர்களுக்கு இறைவன் என்று ஒருவன் இருந்தால் அவன் கட்டாயம் கூலியைக் கொடுத்தேதான் தீருவான். மற்றபடி, நிர்வாக இயக்குநருக்கு இந்த மாதிரியான விஷயங்களில் எந்தளவுக்கு அக்கறையும் ஆர்வமும் இருக்கிறது என்று தெரியவில்லை. அதனால், அவரை இதற்கு பொறுப்பாளி ஆக்க வேண்டாம். அவர் ஏதுமறியாத பிள்ளை பூச்சி. பாவம்.
Quote
 
 
-3 #14 RaBaSha 2012-11-08 14:45
இன்று விகடனில் இதற்கு பதில் சொல்லியிருக்கிற ார்கள். படித்தீர்களா?
Quote
 
 
+11 #13 Robinhood 2012-11-06 08:32
செய்தி வுன்மையாக இருந்தாலும் ஆனந்த விகடன் இவ்வாறு வெளியிடக்கூடாது . நியாயமாக போர்க்குற்ற நடவடிக்கை எடுக்கும் வகையில் ஆவணமாக வுபயோகிதிருக்க வேண்டும். இப்பொழுது பத்திரிகைகள் வியாபார நிருவனங்கலாகதான ் செயல்படுகின்றன. அவர்கள் விளம்பரங்களை பார்த்தாலே தெரியும். வுலகிலேயே அதிகமாக விர்ப்பனையாகும் வார இதழ், நாளிதழ் என்று . விதிவிலக்கு வுண்டேன்றால் கூறுங்கள்.
Quote
 
 
+6 #12 குசும்பன். 2012-11-06 08:30
விகடன் என்றால் விடுகதை புனைபவன் என்றும் அர்த்தப்படும்.
Quote
 
 
+10 #11 sundarwipro 2012-11-06 04:21
அருமையான கட்டுரை, நீண்ட நாட்களுக்கு பிறகு சவுக்கு பொறுமையாக புலனாய்வு செய்து எழுதிய கட்டுரை. வாழ்த்துக்கள். வருவாயை பெருக்கி கொள்ள பல வழிகள் உள்ளன, விகடன் ஈழ தமிழர்கள் விஷயத்தில் மனசாட்சியுடன் நடந்து கொள்வது நல்லது.
Quote
 
 
+24 #10 viijay 2012-11-05 16:15
ஜூவீக்கு பணம்தான் முக்கியம் என்றால்,
காசு கொடுத்து தங்கள் ஆரை நிர்வாண படத்தை வெளியிடும் நடிகைகள் 1000 கணக்கில் உள்ளனர் அவர்கள் வாழ்க்கையை புலனாய்வு செய்தால் இதை விட அதிகமாக பணம் பண்ணலாம். அதை விட்டு எடுக்காத ஒரு பேட்டியை போட்டு பெண் போராளிகளை கேவல படுத்தியிருக்க வேண்டாம்
Quote
 
 
+12 #9 n.rajan 2012-11-05 13:24
Not buying ananda vikatan for the last 20 years because of the quality.
Quote
 
 
+17 #8 saravanakumar.kc 2012-11-05 13:03
இந்த விகடன் கதை இங்கே கிழித்து தொங்கவிடப்பட்டு ள்ளது
Quote
 
 
-23 #7 இலுப்பை பூ 2012-11-05 13:03
வி. புலியாக இருந்த பெண்மணி இப்பொது வயிற்று பிழைப்புக்காக விபசாரியாகிவிட் டாள் என்றால் உண்மையில்லையா? இங்கே நம்
மானிலத்தில் விபசாரிகள் இல்லையா? இல்லை
இங்கே நூற்றுக்கு நூறு இருப்பவர்கள் எல்லாம்
ராம அவதாரங்களா? எதோ அனுமானங்களில்
ஒரு கட்டுரை! இந்த அனுமானங்கள் எப்படி
உண்மையென நம்புவது? இல்லையென்றால்
எவன் சவுக்கை படிப்பான்? பரபரப்புக்கு தீனி!
Quote
 
 
-1 #6 ஷாலி 2012-11-05 09:53
ஈழ ஊடகவியலாளரின் மறுப்பும் அழுத்தமான உண்மைகளை இங்கு எடுத்து வைக்கவில்லை.அனுமான மறுப்பாகத்தான்- போயிருக்கலாம்,இ ருந்திருக்கலாம் ,பொறுக்கியிருக் கலாம் என்ற ரீதியிலே உள்ளது.எப்படியாவது புலிப்பெண்கள் மேல் படிந்த இழுக்கை துடைக்கும் ஆர்வம அப்பட்டமாக தெரிகிறது.

குடும்பம் சீர்குலைந்து போய், அனுசரிக்க, அன்புகாட்ட ஆதரவு இல்லாத,சிங்கள ராணுவத்தால் நடுத்தெருவில் தூக்கி எறியப்படும் எல்லா அபலைப் பெண்களுக்கும் ஏற்ப்படும் கதியே போராளிப் பெண்ணுக்கும் ஏற்ப்படும்.

வீதியில் விழவைத்த விதி, போராளியா, தொழிலாளியா என்று பேதம் பார்ப்பதில்லை.ஆனால் “போராளி” பெயரை காப்பாற்றவே எல்லோரும் போராடுகிறார்கள் . அபலையைப் பற்றிய கவலை இங்கு எவருக்கும் இல்லை.

ஆனந்த விகடன் சொல்வதெல்லாம் அட்சர சுத்த உண்மை
இல்லை.ஆனால் நெருப்பு எங்கோ இருக்கிறது .புகை வெளியே தெரிகிறது.
Quote
 
 
+16 #5 Zafar Rahmani 2012-11-05 09:00
பேட்டி படித்த போது மனதுக்கு மிக வருத்த்மாகத்தான ் இருந்தது. இவ்ளோ பெரிய பூமிப்பந்தில் அபலைப்பெண்ணொருத ்தி அதுவும் போராளிக்குடச்டி ங்ச் முன் வரவில்லையா? தமிழ்மக்கள் மனம் பாறையாகிவிட்டதா என கேள்வி எழுந்தது.
உங்கள் கட்டுரை உண்மை நிலையை காட்டியுள்ளது.
வளர்க உம் பணி
Quote
 
 
+15 #4 ஈவேரா 2012-11-05 07:24
இந்த விகடன் கதை இங்கே கிழித்து தொங்கவிடப்பட்டு ள்ளது .ஹ்ட்ட்ப்://கலகக்குரல்.ப்லொக்ச்பொட்.இன்/
Quote
 
 
+22 #3 thamizhmagan 2012-11-05 03:34
விகடன் குழுமம் விஷமத்தனம் இது ஒன்ட்ரும் புதிதல்ல..இவ்ர்கள் யார்..இவர்கள் பின்புலம்..இவர்கள் எப்படிப்பட்டவர் கள்...என்பதை பார்த்தால் இது ஒன்ட்ரும் அதிசயம் அல்ல.. அவாள்கலுக்கு தமிழன் என்ட்ரால் விலக்கென்னை என்ட்ரு தான் அர்த்தம்... நமக்கு தான் புரியமாட்டேன் எஙிரது.
Quote
 
 
+8 #2 saravanah 2012-11-05 02:28
sariyaga soanneergal , vigadan mannippu kaetkka vendum.
Quote
 
 
+34 #1 selvi 2012-11-05 00:12
பெண், அதுவும் போராளியாய் இருந்த பெண் போர் வேண்டாம், எனக்கு பாலியல் தொழிலே போதும் என்கிறாராம். விகடன் நல்லாவே காது குத்துகிறது படிபவர்களுக்கு. மணிரத்தினம் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் கூட குழந்தைக்காக அந்த போராளி மனம் மாறியதாக காட்டவில்லை. படம் அதனாலே ஓடியது.

போர் நடக்கும்போதும் முடிந்து ஒரு வருடம் வரை உங்கள் விகடனை வாங்கினேன். எந்த பதிப்பில் ஈழமும், புலிகள் படத்தை போட்டு இருந்தாலும் வாங்கி அடுக்கி வைத்திருந்தேன். தலைவர் பிரபாகரன் படத்தை ஒரு அழுக்குகூட அண்டவிடாமல் பாதுகாத்து வைத்திருந்தேன். அவர் படத்தை வைத்து நல்லாவே வியாபாரம் நடத்தினாய். உங்கள் பத்திரிகையால் ஒரு புலனாய்வு செய்ய முடியாது என்று தெரிந்தவுடன் வாங்குவதை நிறுத்திவிட்டேன ். காசு குடுத்து வாங்குபவனை வயிறு எரிய விடாதிர்கள். தலைவர் படத்தை போட்டு ரொம்ப நல்லாவே வியாபாரம் பார்த்துவிட்டது .
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 350 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday8894
mod_vvisit_counterYesterday10087
mod_vvisit_counterThis week18981
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month221713
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12743832