|
கடந்த வாரம் என்கவுன்டர் என்ற பெயரில் மேலும் இரண்டு கொலைகளை அரங்கேற்றியிருக்கிறது தமிழ்நாடு காவல்துறை. பிரபு மற்றும் பாரதி என்ற இருவரை வழக்கம் போல தப்பிச் சென்ற பிறகு பிடித்த காவல்துறையினரை அவர்கள் தாக்கியதால், “தற்காப்புக்காக” காவல்துறையினர் சுட்டதில் அவர்கள் இருவரும் பலியாகியுள்ளார்கள்.
சற்று பின்னோக்கிச் செல்வோம். நவம்பர் முதல் வாரத்தில் நடந்த ஆல்வின் சுதன் என்ற உதவி ஆய்வாளரின் கொலையே இந்த என்கவுன்டர் கொலைகளுக்கு காரணமாக அமைந்துள்ளது.
கடந்த வருடம் இமானுவேல் சேகரன் நினைவு நாளன்று காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதலில் ஆறு பேர் இறந்ததால், இந்த முறை நடந்த இமானுவேல் சேகரனின் நினைவு நாளிலும் சரி.. அதற்குப் பிறகு நடந்த மருதுபாண்டியர் மற்றும் தேவர் குரு பூஜையிலும் சரி… ஏராளமான பாதுகாப்பு ஏற்பாடுகள். ஆனால் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு வந்த காவல்துறையினருக்கு ஒரு முக்கிய கட்டளை… துப்பாக்கி எடுத்து வரக் கூடாது என்பதே.
ஆயிரக்கணக்கில், ஒரு சாதி விழாவுக்காக கூடும் இடத்தில் துப்பாக்கியை எடுத்து வராதே என்று அறிவுரை வழங்கும் முட்டாள்களை எங்காவது பார்த்திருக்கிறீர்களா… ? தமிழக காவல்துறையில்தான் அப்படிப்பட்ட முட்டாள் அதிகாரிகள் இருக்கிறார்கள்.
தேவர் குருபூஜைக்கு பாதுகாப்பு பணிக்காகச் சென்ற ஒரு காவல்துறை அதிகாரி சொன்னது… நிகழ்ச்சி நடப்பதற்கு முன்பாகவே, தேவர் குரு பூஜை ஏற்பாட்டாளர்கள் மற்றும் பங்கேற்பவர்களிடம் காவல்துறையினர் கூறியது, மூடிய வாகனத்தில்தான் வர வேண்டும், ஆயுதங்களோடு வரக்கூடாது, வாகனத்தில் அதிகப்படியான நபர்களை ஏற்றி வரக்கூடாது என்று உத்தரவிட்டிருக்கின்றனர். ஆனால் அன்று விழாவுக்கு வந்த அத்தனை வாகனங்களிலும் குறைந்தது 15 முதல் 25 பேர் பயணம் செய்து வந்திருக்கின்றனர். எந்த காவல்துறையினரிடமும் ஆயுதங்கள் இல்லாததால் காவல்துறை செக்போஸ்ட் அருகே வந்தால், ஆபாசமாக கோஷமிடுவது அல்லது லுங்கியைத் தூக்கிக் காட்டுவது என்று நடந்து கொண்டிருக்கின்றனர். செங்கோட்டை என்ற இடத்துக்கு அருகே, செந்தில் குமார் என்ற துணை ஆணையர் பாதுகாப்புப் பணிக்காக நின்று கொண்டிருந்தபோது, வாண்டையார் கோஷ்டியைச் சேர்ந்த வாகனம் அவ்வழியாக வந்தது. அந்த வாகனத்தை அதே இடத்தில் நிறுத்தி விட்டு, நடந்து செல்லும்படி கூறியிருக்கிறார். ஆனால், டாடா சுமோவில் வந்த அவர்கள், அந்த துணை ஆணையரை இடிப்பது போலச் சென்றிருக்கின்றனர். தப்பித் தவறி துப்பாக்கி எடுத்து வந்தவர்களிடமும், துப்பாக்கிகளை சேகரித்து, ராமநாதபுரம் ஆயுதக் கிடங்கில் வைத்துள்ளனர்.
டிஎஸ்பி வரையிலான அதிகாரிகள் எவ்வித பாதுகாப்புமின்றி கையில் லத்திகளோடு மட்டுமே நின்றிருக்கின்றனர். டிஎஸ்பி வரையிலான அதிகாரிகளை லத்தியோடு சாலையில் நிறுத்திய தென் மண்டல ஐஜி ராஜேஷ் தாஸ் மற்றும் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் மட்டும், தங்கள் வாகனத்தின் முன்னும் பின்னும் ஆயுதம் தாங்கிய காவலர்களை பாதுகாப்புக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இப்படிப்பட்ட புத்திசாலி அதிகாரிகளின் அறிவுரையின்படிதான், மருதுபாண்டியர் விழாவின் போது காவல்துறை அதிகாரிகள் ஆயுதம் இல்லாமல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்படிப்பட்ட ஒரு அதிகாரியாகத்தான் ஆல்வின் சுதன் என்ற இளம் உதவி ஆய்வாளர் ரவுடிகளால் கொல்லப்பட்டுள்ளார்.
காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்புக்காக துப்பாக்கியை பயன்படுத்துவதை எந்த முட்டாளும் எதிர்க்க முடியாது. தன்னை ஒரு ரவுடி தாக்க வருகையில், தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காக அந்த ரவுடியைச் சுடுவது காவல்துறை அதிகாரிகளின் உரிமை. இப்படி நெருக்கடியான நேரங்களில் துப்பாக்கி வைத்துக் கொள்ளாதே என்று உத்தரவிட்டு ஒரு உதவி ஆய்வாளரின் உயிர் பலியானதும், அதில் குற்றம் சாட்டப்பட்டவனை பிடித்து வைத்து, கொல்வதையும் ஏற்றுக் கொள்ள முடியாது.

ஆல்வின் சுதன் கொலையில் சம்பந்தப்பட்டவர்களில் கொலை செய்யப்பட்டுள்ள பிரபு மற்றும் பாரதி என்ற இருவரை என்கவுன்டரில் கொலை செய்துள்ளது காவல்துறை.
மதுரைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரபு மற்றும் பாரதி ஆகிய இருவரும் நேற்று வேனில் கொண்டு செல்லப்பட்டதாகவும், அப்போது நெஞ்சு வலிப்பதாக பிரபு கூறியதால், காவல்துறையினர் வேனை நிறுத்தியதாக கூறப்படுகிறது.
வேன் நிறுத்தப்பட்டபோது, அந்த இருவரும் காவலர்களை தாக்கிவிட்டு தப்பிவிட்டதாகவும், இதில் சித்திரைவேல் என்கிற காவலர் உள்பட இரண்டு காவலர்கள் படுகாயமடைந்தனர். மதுரை நகர் மற்றும் புறநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்து தப்பியோடிய 2 பேரையும் கைது செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு துணை கமிஷனர் திருநாவுக்கரசு நகரில் உள்ள நான்கு உதவி கமிஷனர்களை மைக் மூலம் அழைத்து உத்தரவிட்டார். இந்த தகவல் பக்கத்து மாவட்டங்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட போலீசாரும் உஷார் படுத்தப்பட்டனர். ஆங்காங்கே வாகனச் சோதனையும் நடத்தப்பட்டன. தப்பி ஓடிய 2 பேரும் நேற்று இரவு 8.45 மணிக்கு ஒரு பைக்கில், மேலமேல் குடி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தனர். அவர்களை எஸ்.ஐ.பூமிநாதன் மற்றும் 2 போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாரைப் பார்த்ததும் 2 பேரும் ஆயுதங்களால் தாக்கினர். இந்த தாக்குதலில் 3 போலீஸாரும் காயமடைந்தனர். இந்த தகவலும் போலீஸ் மைக் மூலம் தெரிவிக்கப்பட்டது. அப்போது ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த டி.எஸ்.பி. வெள்ளத்துரை தலைமையிலான போலீஸார் இவர்களை பிடிக்க சென்றனர். 3 போலீஸாரை காயப்படுத்திவிட்டு தப்பிச்சென்ற இருவரும், தீர்த்தான்பேட்டை என்ற கிராமத்தின் அருகே சென்று கொண்டிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, மானாமதுரை டி.எஸ்.பி வெள்ளைத்துரை தலைமையில் காவலர்கள் அங்கு விரைந்து சென்றனர்.

அவர்களைப் பார்த்ததும், தப்பி ஓடிய 2 பேரும் வெடிகுண்டுகளை வீசினர். இதனால் போலீசார் அவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். சூடு பட்டு விழுந்த இருவரையும் மதுரை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து கருத்து தெரிவித்த வெள்ளைத்துரை “போலீசாரிடம் இருந்து தப்பிய இருவரையும் பிடிக்க போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். இருவரும் தங்கள் சொந்த ஊருக்கு வரலாம் என்பதால், அப்பகுதியில் சோதனை நடத்தினோம். அப்போது பைக்கில் வந்த இருவரும் போலீசாரை நோக்கி, பெட்ரோல் குண்டு வீசினர். அரிவாள் வைத்திருந்தனர். போலீசாரை பாதுகாக்க இருவரையும் சுட்டேன்” என்றார் அவர்.
நெஞ்சு வலி என்று காரணம் கூறி தப்பி ஓடிய பிரபு, இந்த கொலை வழக்கில் போலீஸ் தன்னைத் தேடுவது அறிந்து, திருப்பூர் ஜூடிசியல் ஜே.எம்., எண்-2 கோர்ட்டில் நீதிபதி மலர்மன்னன் முன்பு, சரண் அடைந்தவர். சரணடையும்போதே, தங்கள் உயிருக்கு ஆபத்து, தங்களை என்கவுன்டரில் கொல்லப்போகிறார்கள் என்று நீதிபதிக்கு மனு எழுதிக் கொடுத்துள்ளனர். இதையும் மீறி இந்தக் கொலை நடந்துள்ளது.
என்கவுன்டர் என்ற பெயரில் நடந்த இந்தப் படுகொலைகளுக்கு யார் காரணம் என்றால் நிச்சயமாக காவல்துறையினர் காரணம் இல்லை.
இந்தப் படுகொலைகளுக்கு முழுமையான காரணம், நீதிமன்றங்கள் மட்டுமே. இந்த என்கவுன்டர் மட்டுமல்ல… இது போல இன்னும் பல என்கவுன்டர்கள் தொடர்ந்து தமிழகத்தில் நடக்கும். ரவுடிகள் என்ற பெயரில் மேலும் பல்வேறு படுகொலைகளை தமிழக காவல்துறை நடத்துவதற்கு கொஞ்சமும் அஞ்சப்போவதில்லை. இதற்கு காரணம், உயர்நீதிமன்றத்தின் மீதும் நீதிபதிகள் மீதும் காவல்துறை அதிகாரிகளுக்கு துளியும் பயம் கிடையாது என்பதே… உயர்நீதிமன்றத்தின் உள்ளே புகுந்து, வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், பொதுமக்கள், நீதிபதிகள் என்று விரட்டி விரட்டி காவல்துறை அடித்தபோது மவுனமாக வேடிக்கை பார்த்ததுதான் இந்த நீதித்துரை. உயர்நீதிமன்றத்தின் மாண்பை கெடுத்த காவல்துறை அதிகாரிகளை மறுநாளே பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டிருக்க வேண்டாமா ? ஆனால் எந்த நீதிபதியும் செய்யவில்லை.
2006ம் ஆண்டு முதல் 2012 வரையிலான காலகட்டத்தில் மட்டும், தமிழகத்தில் 40க்கும் மேற்பட்டவர்கள் என்கவுன்டர்களில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 2006 முதல் 2010 வரை நடந்த என்கவுன்டர்களை சிபிஐ விசாரிக்க உத்தரவிடும்படி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. திண்டுக்கல் பாண்டி, கொற சிவா, ராஜன் என்கிற சண்முகசுந்தரம் ஆகிய என்கவுன்டர் கொலைகளை விசாரிக்க வேண்டும் என்று தமிழக மக்கள் உரிமைக்கழகத்தின் சார்பில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அந்த வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இந்த என்கவுன்டர் வழக்குகளையெல்லாம் விசாரிக்குமாறு ஒரு சிறப்பு அமர்வை தலைமை நீதிபதி கடந்த ஆண்டு தொடக்கத்தில் நியமித்தார். நீதிபதி கே.என்.பாஷா மற்றும் நீதிபதி சத்யநாராயணா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பென்ச் இந்த வழக்குகளை விசாரிப்பதற்கென நியமிக்கப்பட்டு, இது வரை ஒரே ஒரு முறைதான் விசாரணை நடத்தியுள்ளது. அதன் பிறகு, நீதிபதி கே.என்.பாஷா சென்னையில் இருந்தால், சத்யநாராயணா மதுரையில் இருப்பார். சத்யநாராயணா சென்னையில் இருந்தால், பாஷா மதுரையில் இருப்பார். இப்படி இந்த இரண்டு நீதிபதிகளும் கண்ணாமூச்சி ஆடி இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டன. நீதிபதி கே.என்.பாஷா பற்றிய விபரங்களுக்கு என்ன ஒரு கரிசனம் என்ற சவுக்கு கட்டுரையைப் படியுங்கள். இவர்கள் இருவரும் எப்போது சென்னையில் ஒன்றாக இருப்பார்கள் என்பதை, வானிலை ஆராய்ச்சி மையத்தில்தான் கேட்க வேண்டும்.
கடந்த பிப்ரவரி மாதம் வேளச்சேரியில் நடந்த என்கவுன்டரையே எடுத்துக் கொள்ளுங்கள். என்கவுன்டர் நடந்த மறுநாளே சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை வேண்டி பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இது வரை 24 தடவைக்கு மேல் அந்த வழக்கு விசாரணைக்காக வந்துள்ளது. ஒவ்வொரு முறையும், அரசு வழக்கறிஞர் இல்லை… மேஜிஸ்ட்ரேட் விசாரணை முடியவில்லை, சிபி.சிஐடி விசாரணை முடியவில்லை என்று அரசுத் தரப்பு காலம் தாழ்த்தி வந்தது. இறுதியாக கடந்த 24.10.2012 அன்று, மேஜிஸ்ட்ரேட் விசாரணை அறிக்கை, சிபி.சிஐடி விசாரணை அறிக்கை இரண்டையும், நீதிமன்ற ஆவணமாக சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்கள் நீதிபதிகள் எலிப்பி தர்மாராவ் மற்றும் வேணுகோபால்.

கடந்த வாரம் இரண்டு அறிக்கைகளையும் நீதிமன்றத்தில் சீலிடப்பட்ட உறையில் சமர்ப்பித்தார் அரசு வழக்கறிஞர் வண்டுமுருகன். ஏற்கனவே நீதிமன்ற ஆவணமாக சமர்ப்பிக்கப் பட்டதை சுட்டிக் காட்டினார் மனுதாரரின் வழக்கறிஞர். நீதிமன்ற ஆவணமாக சமர்ப்பிக்க வேண்டுமென்றால், சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் நகல் வழங்க வேண்டும். ஆனால் வண்டு முருகனோ, இதன் நகலை யாருக்கும் வழங்க இயலாது, இந்த வழக்கையே விசாரணைக்கு ஏற்க இயலாது என்றார். நீதிபதியும் அவர் சொல்வதை கேட்டுக் கொண்டு, இது தொடர்பாக முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று வழக்கை தள்ளி வைத்தார். இந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது.
என்கவுன்டர் என்ற பெயரில் செய்தாலும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பார்வையில் அது கொலையே. காவல்துறையினர் தங்கள் பணியின் போது கொலை செய்தால் வழக்கு பதிவு செய்ய வேண்டியதில்லை என்று இந்திய தண்டனைச் சட்டம் சொல்லவில்லை. யார் செய்தாலும் கொலைதான். அது தற்காப்புக்காக செய்யப்பட்ட கொலையா என்பதை, விசாரணை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். காவல்துறையினரே அதை முடிவு செய்ய எந்த அதிகாரத்தையும் இந்திய தண்டனைச் சட்டம் வழங்கவில்லை. இப்படி இருக்கையில் இது போன்ற என்கவுன்டர் தொடர்பான வழக்குகளில் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்குவதில் என்ன சிக்கல் இருக்க முடியும் ? பிப்ரவரி மாதம் தொடரப்பட்ட வழக்கு இது… எதிர்த்தரப்பு பதில் மனு தாக்கல் செய்ய ஒரு மாதம் அவகாசம் வழங்கலாம்.. இரண்டு மாதம் அவகாசம் வழங்கலாம்.. பத்து மாதங்கள் எதற்கு…. ? என்கவுன்டர்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தூக்கில் போட வேண்டும் என்று யாரும் கோரவில்லையே… அது உண்மையிலேயே என்கவுன்டரா… இல்லையா என்பதை சிபிஐ விசாரிக்கட்டும் என்றுதானே கேட்கிறார்கள்… ? சிபிஐ விசாரித்து உண்மையான என்கவுன்டராக இருந்தால், அப்படித்தானே அறிக்கை தரப்போகிறார்கள்… ? இந்த விசாரணைக்கு உத்தரவிடுவதில் நீதிமன்றத்துக்கு என்ன தயக்கம் இருக்க முடியும் ? இதற்கு பத்து மாதங்கள் எதற்கு ? சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியும்.. அல்லது முடியாது… இப்படி ஒரு முடிவெடுக்க நீதிமன்றங்கள் ஏன் தயங்குகின்றன ?
இப்படி நாட்களைக் கடத்தி, இது போன்ற வழக்குகளில் தீர்ப்பு வழங்காமல் காலம் தாழ்த்துவதன் ஒரே காரணம், சம்பந்தப் பட்ட கொலைகார அதிகாரிகளை காப்பாற்றுவதன்றி வேறு என்ன இருக்க முடியும் ?
வழக்கை விரைவாக விசாரித்து தீர்ப்பெழுத வேண்டிய நீதிபதிகள், அப்போல்லோ மருத்துவமனையில் ஓசியில் மருந்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் வேதனையான விஷயம். அப்போல்லோ மருத்துவமனையின் ஊழியர்கள், சில நீதிபதிகளின் வீட்டுக்கு காலையில் செல்வார்கள். அன்றைய மருந்துகளின் தேவை என்ன, நீதிமான்களுக்கு ஏதாவது பரிசோதனை செய்ய வேண்டுமா என்பது போன்ற விபரங்களை கேட்டறிந்து கொள்வார்கள். பரிசோதனை தேவை என்றால் ரத்த மாதிரிகள் எடுத்துச் செல்லப்படும். அன்று மாலையே, கேட்கப்பட்ட மருந்துகள், பரிசோதனையின் விபரங்கள் நீதிமான்களின் இல்லத்தில் வழங்கப்படும். நீதிபதிகளுக்கு வீட்டிலேயே பரிசோதனை செய்து, மருந்து வழங்கினால் அது ஒரு குற்றமா என்று நியாய உணர்வுள்ளவர்கள் கேட்பீர்கள். அதற்கு தேவையான கட்டணத்தைச் செலுத்த வேண்டாமா ? கட்டணத்தைச் செலுத்தினால் யார் கேட்கப்போகிறார்கள். யார் இந்த நீதிபதிகள் என்று கேட்பீர்கள்.. அவர்கள் பெயரெல்லாம் தெரியாது அய்யா….

சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் 150வது ஆண்டு விழா நடந்தது. அந்த விழா முடிந்ததும், நன்றியுரை ஆற்றியவர் நீதிபதி எலிப்பி தர்மாராவ். அப்போது விழாவிற்கு வருகை தந்திருந்த முதலமைச்சர், உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்த நீதிபதி எலிப்பி தர்மாராவ், இந்த விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்த, அப்போல்லோ மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி அவர்களுக்கு நன்றி என்று தெரிவித்தார். 2ஜி ஊழலில் விசாரிக்கப்பட உள்ள அப்போல்லோ மருத்துவமனையின் முதலாளி பிரதாப் சி.ரெட்டிக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தின் 150வது ஆண்டு விழாவுக்கும் என்ன சம்பந்தம் என்று அதிகப்பிரசங்கித் தனமாக கேட்காதீர்கள். ரெட்டிகாரு, ராவ்காரு, மன்ச்சி ஃப்ரென்ட்ஷிப்பூ
இது போன்ற நீதிமன்றங்களின் அலட்சியமான, அசட்டையான போக்கினாலுமே, காக்கிச் சட்டை அணிந்த கொலைகாரர்கள் சர்வ சாதாரணமாக கொலைகளை அரங்கேற்றி வருகின்றனர். ஒரு என்கவுன்டர் நடந்திருக்கிறது.. அதில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று கேட்டு மனுத்தாக்கல் செய்யப்படுகிறது. அரசுத் தரப்பு என்ன கூறுகிறது என்று கேட்டு, இரண்டு மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்கினால் இது போன்ற என்கவுன்டர்கள் தொடருமா… வெள்ளைத்துரைகள் திமிரோடு திரிவார்களா ? திரிபாதிகள் திமிரோடு பவனி வருவார்களா ?

மானாமதுரையில் வெள்ளைத்துரை நடத்திய கொலைகளுக்கு வெள்ளைத்துரை மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் செயலர் புகழேந்தி பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த பொதுநல வழக்கு வரும் புதன் அன்று விசாரணைக்கு வருகிறது.
நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்காமல் காலதாமதம் செய்தாலும் நாங்கள் விடமாட்டோம். போலி என்கவுன்டர்களுக்கு எதிராக வழக்கு போடுவதை நிறுத்தமாட்டோம். நீதிமன்றங்கள் தீர்ப்பு எழுதும் வரை நெருக்கடி கொடுப்போம். உச்சநீதிமன்றம் வரை சென்று போராடுவோம். மானாமதுரையில் நடந்த என்கவுன்டர்களை கண்டித்து சுவரொட்டி ஒட்டிய, தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் நிர்வாகிகள் காளை லிங்கம் மற்றும் தேவதாஸ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளது காவல்துறை. ஷகீலா படத்துக்கு போஸ்டர் ஒட்ட அனுமதிக்கும் காவல்துறை, என்கவுன்டர்களை கண்டித்து போஸ்டர் ஒட்டியவர்களை கைது செய்திருப்பது எதிர்ப்புக் குரல்களைக் கண்டு அவர்கள் எப்படி அச்சப்படுகிறார்கள் என்பதையே காட்டுகிறது.
நீதிமன்றங்கள் இப்படி மீளா உறக்கத்தில் இருப்பதனால்தான், சற்றும் அச்சமின்றி காவல்துறையினர் இப்படிப்பட்ட சட்டபூர்வமான கொலைகளை அரங்கேற்றி வருகின்றனர். இந்தக் கொலைகளை தடுக்க வேண்டிய நீதிமன்றங்களோ மீளா உறக்கதில் இருக்கிறது. காவல்துறையினர் நடத்தும் இப்படிப்பட்ட படுகொலைகளுக்கு மவுன சாட்சியாக இருக்கும் நீதிமன்றங்கள், கொலைகார நீதிமன்றங்களே…
இந்தக் நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்காமல் காலதாமதம் செய்தாலும் நாங்கள் விடமாட்டோம். போலி என்கவுன்டர்களுக்கு எதிராக வழக்கு போடுவதை நிறுத்தமாட்டோம். நீதிமன்றங்கள் தீர்ப்பு எழுதும் வரை நெருக்கடி கொடுப்போம். உச்சநீதிமன்றம் வரை சென்று போராடுவோம்.
|
Comments
வாழ தகுதியற்ற மிருகங்களைத்தான ் என்கவுண்டர் என்னும் மருந்து. இந்த மருந்து, சமுகத்தில் இந்த விஷங்கள் மேலும் பரவாமல் தடுக்கும்.....இந்த மனித உரிமை மங்குனிகள் தன் உடம்பில் ஏற்பட்ட கொடிய நோய்க்கு காரணமான பாக்டீரியாக்களு க்கும், வைரஸ்களுக்கும் மருந்து எடுக்காமல் இருப்பார்களா? வாழ தகுதியற்ற மிருகங்களை அழித்துதான் ஆகவேண்டும். அவைகளிடம் இரக்கம் காட்டினால் ச்முகம் சீழ் பிடித்த புண்ணாகி விடும்.
Super
இன்ட்ரு இந்த கொலைகலை ஆதரிப்போர்கலே.. நாலை இந்த இவ்விருவர்கள் இடத்தில் நீன்கலோ உன்கல் குடும்பத்தை சேர்ந்த்தவர்களோ இருக்கக்கூடும். உனர்ச்சி வசப்பட்டு இக்கொலைகலை ஆதரிப்பது தவரு...
சட்டம் நீதிமன்ரம்கள் மதிக்கப்படவேன்ட ும்.
என்கவுன்டர் ஒரு கொலையே !!!!...அது தற்காப்பு கொலையா இல்லையா என்பதை , சரியான நீதிமான்கள் சொல்லவேண்டும்[/ஃஉஒடெ]
தண்டனை கொடுக்க அதிகாரம் இல்லை. ஆனால் நாட்டில் அன்றாடம் நடக்கும் கொடுமைகளை கால தாமதமில்லாமல் தண்டிக்கவும் இந்த நாட்டில் நாதியே இல்லை. ஊழல், லஞ்சம், கொலை, கொள்ளை, என்கவுன்டர்களுக ்கு அடிப்படையே சட்டம் செயலிழந்த நிலையில் உள்ளதன் வெளிப்படே தான். இந்த நேரத்தில் நாம் கவனிக்க வேண்டிய செய்தி: புவனேஸ்வரியை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்ளும்படி அதிகாரி ஒருவர் ஆணையிட்டுள்ளாரா ம்!
[ஃஉஒடெ நமெ="க்க்குமர்"]என்கவுண்டர் செய்யப்பட்டவர்க ள் ஒன்றும் நாட்டு மக்கள் அல்ல. சமூக கிருமிகள். நோய் உண்டாக்கும் கிருமிகளிடம் என்ன கரிசனம்?[/ஃஉஒடெ]
என்கவுண்டர் செய்கிறவனும் உத்தமனும் இல்லை. அப்பாவி மக்களை கொடுமை படுத்துறது யாரு? காப்பாத்த யாரு இருக்கா?
என்கவுன்டர் ஒரு கொலையே !!!!...அது தற்காப்பு கொலையா இல்லையா என்பதை , சரியான நீதிமான்கள் சொல்லவேண்டும்
இப்படி மதிப்புமிக்க மனிதரார்களாக விளங்கும் இவ்விருவரும் இந்த கேசுக்கெல்லாம் உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டுமா? இது எல்லாம் சில மனிதஉரிமை என்ற பெயர் கொண்ட அமைப்புக்களின் பணி.. எப்படி தமிழக அரசியல் கட்சிகள் ஆர்பாட்டம் நடத்துகின்றனவோ.... எப்படி கம்யூனிஸ்ட் கட்சிகள் மாபெரும்!! போராட்டங்களை வருடம் முழுவதும் நடத்துகின்றனவோ... அப்படி தங்கள் இருப்பை பதிவு செய்ய சிலருக்கு, சில அமைப்புகளுக்கு இவை தேவை... நிச்சயம்... நிச்சயம் சத்தியமாக்வும் சொல்லுவேன் இது போன்ற விஷயங்களில் உங்கள் நேரத்தை வீணடிக்காமல் நல்ல காரியங்களுக்கு பயன்படுத்துங்கள ்... மனித சமுதாயம் உங்கள் சந்ததிகளை வாழ்த்தும்.. வயலில் களைகள் பயிர்களின்.உரத்தை உண்டு வளர்ந்து பயிரையே அழிக்கும்.. அது போலத்தான் மனித சமுதாயமும்... குற்றங்களைப் பெருமளவில் தடுக்க இயலாத சட்டங்கள் இருக்கும்வரை தண்டனைகள் கடுமையானதாக இருக்க வேண்டியது ஒரு குறைந்தபட்ச தேவை என்பதை உணராதது போலவே யாரும் நடிக்க வேண்டாம்.... இதனை நீங்கள் மேற்சொன்னது போன்ற தொண்டு நிறுவனங்கள் இல்லை என்ற எண்ணத்தில் எழுதுகிறேன் என்பதையும் சொல்லிவிடுகிறேன ்...
நெஞ்சு வலிப்பதாக கூறியதால் வேனை நிறுத்தியதாகவும ்,போலீசாரை தாக்கிவிட்டு தப்பியதாக கூறப்படுகிறது.
காவல் துறை அதிகாரியை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட கொலைக் குற்றவாளிகளை கை விலங்கு இல்லாமல் அழைத்து செல்லும் நடைமுறை உள்ளதா?
பழைய அதிகாரிகளை மாற்றிவிட்டு,என ்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்களை இறக்குமதி செய்து எல்லாம் திட்டமிட்டபடி கைதிகள் தப்பி ஓடி உயிரை விட்டுள்ளார்கள் .
இந்த சம்பவத்திலும்,ச ாதித் தமிழர்கள் சட்டபூர்வமான நியாய,அநியாயங்க ளை பார்க்க மாட்டார்கள்.தன் சாதி சார்ந்த கருத்துக்களையே இங்கு பிரதிபலிப்பார்க ள். சாதி வாழட்டும்! தமிழன் சாகட்டும்.![/ஃஉஒடெ]
you also expressed your view on your own caste basis on "Dharmapuri issue", so don't act like infant.
quoting : mutti
what you say is right...
hypocritic people at thier highest degree..of hypocritism
we can put it like this
தமிழ்நாட்டில் படையட்சியான் உண்டு ,முதலி உண்டு ,பறையர் உண்டு, கள்ளர் உண்டு ,மறவர் உண்டு ,பிரமலைகள்ளர் உண்டு,நாடார் உண்டு .. பள்ளர் உண்டு ,தமிழனை மட்டும் காணவில்லை ..யப்பா பங்காளிகளா..தருமபுரி பக்கம் தமிழனை பார்த்தா சொல்லுங்கப்பா...
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனொடு நேர்.
(கொடியவர்களை வேந்தன் தண்டித்தல், பயிர் வளர களை அகற்றுவதற்கு ஒப்பானது.)
அது எல்லாம் போனமாசம்....
அப்புறம் போராடும் என் ஜி ஓ இயக்குநருக்கு பாஜிரோ காரும் அதுக்கு டிரைவர் டீசல் எல்லாம் நீங்களா குடுப்பின்ங்க???
பெரிய எம் என் சி கணக்கா ஆபீஸ் போட்டு ... ஆள் போட்டு..ஏசி போட்டு, அப்புறம் பாழாப்போன கரண்டால ஜெனரேட்டர் போட்டு எல்லாத்துக்கும் சம்பளம் போட்டு… எல்லாத்துக்கும் யாருய்யா அழுவரது?? பத்திரிக்கைல பேட்டி குடுக்குற எந்த மனித உரிமை ஆர்வலருயா இப்ப சாதாரண மனுஷன பத்தி தெரிஞ்சி அவனப்போல வாழுரது??? எங்க லெவலே வேற..
அதுபோல கூலிப்படை என்பது தற்காலத்தில் மிக மிக எளிதாக எல்லா ஊரிலும் கிடைக்கிறதே!! கரணம் கேட்டால் இவர்கள் சொல்லும் ஒரஏ காரணம்.. அதுக்கும் காவல் துறைதான் ... சரி...காவல்துறை என்ன செய்ய வேண்டும் என்றால் பிடிச்சி அடிக்காமல் அந்த கூலிப்படிஅ விலங்குகளுக்கான எந்த அடிப்படை உரிமையையும் மீராமல்(இவங்க பாணியில் மனித உரிமை) மரியாதையா அய்யா முன்னாடி நிறுத்தி ரிமாண்டு பண்ணனும்,...அப்படி செஞால் சாட்சி எதும் இருக்காது அந்த கேசை நடத்த... ஏன்? அவன்கிட்ட பயம்.. அவன ஒன்னும் செய்ய முடியாது.. திரும்பவும் அவன் அடுத்த சம்பவத்த செய்வான்... திரும்பவும் முதல்ல இருந்து... இப்புடியே தான் இந்தியாவுல லட்சக் கணக்காண கோடிகணக்கான வழக்குகள் நடந்துகிட்டு இருக்கு... என்கவுண்டர் என்பது மிக மிக அரிதான நிகழ்வுதான்.. இந்த நிகழ்வும் எங்குமே நடக்கலன்னா இந்த சமுதாயம் கற்காலத்துக்கு போயிடும்.. எப்புடின்னா.... வலுத்தவன் எல்லாத்தயும் ஆளுவான்.. நிலம்... பொருள்.. மக்கள்..எல்லாத்தையும்... உடனே இப்ப மட்டும் என்ன நடக்குதுன்னு கவுன்டர் கொடுப்பாங.. நிச்சயம் அந்த நிலை இல்லை... கற்கால மனிதக் கூட்ட வாழ்க்கை முறை தான் இருக்க முடியும்... ஒரு கூட்டத்துக்கும் மற்ற கூட்டத்துக்கும் சண்டை போட்டு ஜெயிச்சால் தோத்த கூட்டத்தையும் சேர்த்து ஜெயிச்சவன் ஆளலாம்.. இந்த நிலை தான் ஏற்படும்.. அப்புறம் மனித உரிமை என் ஜி ஓ க்களுக்கு நிதி எதுவும் வராதுப்போய்!!! ஆக்கபூர்வமான வழி சட்டத்தை கடுமையாக்னும்... தப்பு செஞவன் நிச்சயம் தண்டனை பெற வழி செய்யனும் அப்புடின்னா தான் வாழும் மனிதர்களின் வாழும் உரிமை காக்கப்படும் அப்படின்னு போராடுங்க... கொலகாரனுக்கு பயத்தை போக்கி நாங்க இருக்கோம்... ஒன்னும் பிரச்சினை இல்லை அப்புடின்னு சொன்னா தான் ஒரு நாலு பஞ்சாயத்து வருது... பாஜிரோ ஓடுது... பொலப்பு ஓடுது... ஜெனிவாவுல இருந்து உதவை வருது... .. ஏடு சின்ன புள்ளதனமா இல்ல இருக்கு...??
Why did not you think about Alvin Sudhan? Did Alvin Sudhan lost his human right to live in this world?
நெஞ்சு வலிப்பதாக கூறியதால் வேனை நிறுத்தியதாகவும ்,போலீசாரை தாக்கிவிட்டு தப்பியதாக கூறப்படுகிறது.
காவல் துறை அதிகாரியை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட கொலைக் குற்றவாளிகளை கை விலங்கு இல்லாமல் அழைத்து செல்லும் நடைமுறை உள்ளதா?
பழைய அதிகாரிகளை மாற்றிவிட்டு,என ்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்களை இறக்குமதி செய்து எல்லாம் திட்டமிட்டபடி கைதிகள் தப்பி ஓடி உயிரை விட்டுள்ளார்கள் .
இந்த சம்பவத்திலும்,ச ாதித் தமிழர்கள் சட்டபூர்வமான நியாய,அநியாயங்க ளை பார்க்க மாட்டார்கள்.தன் சாதி சார்ந்த கருத்துக்களையே இங்கு பிரதிபலிப்பார்க ள். சாதி வாழட்டும்! தமிழன் சாகட்டும்.![/ஃஉஒடெ]
you also expressed your view on caste basis on "Dharmapuri issue", so don't act like infant.
நீதி மன்றத்தின் மூலம், சட்ட விதிகளின் படி , கொடிய குற்றவாளியான ஒருவனை சமுதாயத்தில் வாழ தகுதி இல்லாதவனாக நினைத்து அவனுக்கு மரண தண்டனை கொடுத்தாலும் தவறில்லை? அன்று பரமக்குடியில் ஆறுபேரை காவல் துறையினர் சுட்டுக்கொன்றதை யாராவது சரி என்று சொன்னால், காவல் துறையினரின் துப்பாக்கி சரி என்று சொல்பவரை நோக்கி ஒரு நாள் திரும்பத்தான் செய்யும்?மரணம் அடைந்த ஆல்வின் சுதன் என்ற துணை ஆய்வாளருக்கு கண்டிப்பாக நியாயம் கிடைக்கவேண்டும் ? அவர் நம்மில் ஒருவர்? ஒரு கொலை குற்றவாளியை அவரே உணரும் முன் கொல்வதை விட நீதி மன்றத்தின் மூலம் இந்த தண்டனை கொடுக்கும்போதுத ான் பொது மக்களாகிய நாம் இந்த நாட்டில் பாதுகாப்பாக வாழ்கிறோம் என்ற உணர்வு நமக்குள் வரும்? அதற்காக என்ன செய்ய வேண்டுமோ அதை ஆட்சியாளர்களும் , அதிகாரத்தில் இருப்பவர்களும் விரைந்து செய்யவேண்டும்? காவல் துறையினரின் உயிரும் முக்கியம்?. நமக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது அவர்களது கடமையாக இருந்தாலும், அவர்களுக்கு பாதுகாப்பும் , ஒத்துழைப்பும் கொடுக்க வேண்டியது பொது மக்களின் கடமையாகும்? இதற்கெல்லாம் உள்ள ஒரே வழி நீதி விசாரணையை விரைவு படுத்துவதுதான் . குறைந்த பட்சம் கொலை குற்றவளிகளுக்கா வது தனி நீதி மன்றங்கள் உருவாக்கப் பட்டு விசாரணையை குறுகிய காலத்தில் முடித்து குற்றவாளிகளுக்க ு தண்டனை கொடுத்தால் இது மாதிரி சம்பவங்களுக்கு ஒரு முற்று புள்ளி வைக்கலாம்?
அது என்ன சார் எப்போ பார்த்தாலும் வெள்ளத்துரை அவர்களிடம் மட்டுமே குற்றவாளிகள் தப்பித்து செல்கின்றனர்? இவருக்கு என்கௌன்டர் ஸ்பெசலிஸ்ட் என்று பெயர் வேறு? கையில் துப்பாக்கியை கொடுத்து சட்டபூர்வமான பாதுகாப்பையும் கொடுத்தால் யார் வேண்டுமானாலும் ஒரு பத்துபேரை சுடலாம் ? இது அவ்வளவு பெரிய விஷயமா?.
இன்று காவல் துறையினர் செய்யும் என்கௌன்டர்களால் சொல்லப்படும் செய்தி என்ன ? சில சம்பந்ததப்பட குற்றங்களில் மட்டும் அவர்களுக்கு நீதி மன்றத்தில் நம்பிக்கை இல்லை என்பதுதான் ? பொது மக்களை பொறுத்த மட்டில் எந்த குற்றத்திலும் விரைவான நீதியை எதிர்பார்க்கிறா ர்கள்? நீதி தாமதப்படுவதால் எல்லோருடைய மனதிலும் ஒருவித அவ நம்பிக்கை மறைமுகமாக உள்ளது என்பது மறுக்கமுடியாத ஒன்று? ஒருவன் உணரும் முன்னே அவனை கொல்வது என்பது அவன் செய்த குற்றத்திற்குரி ய தண்டனை கிடையாது?ஒருவனை சுடுவதால் அடுத்தவன் திருந்தவன் என்று நினைப்பது போகாத ஊருக்கு வழி கண்டு பிடிப்பதாகும்? அதற்கு பதில் விரைவான விசாரணை நீதி மன்றத்தின் மூலம் தண்டனை என்பதுதான் சரியானது ஆகும். அது மரண தண்டனையாக இருந்தாலும் சரி?
தண்டனை வழங்குதல் என்பது நீதி மன்றத்திற்குரிய து, இதை காவல்துறையினர் எடுத்துக்கொண்டா ல் அப்புறம் எதற்கு நீதி மன்றம்? நம்நாட்டில் ஒவ்வொரு காவல் துறையினர் என்கௌண்டேரும் பல்வேறு சூழ்நிலையில் தீர்மானிக்கப்பட ுகிறது? இந்த சம்பவத்தை பொருத்தமட்டில் பொது மக்களுக்கு காவல்துறையினரின ் மேல் இருக்கும் பயம் போய்விடக்கூடாது என்பதற்காக அவர்களின் சுயநலத்திற்காக நடந்தது? இது பொது மக்களின் நன்மைக்கவே அவனை கொன்றோம் என்றால் சுட்டுக் கொல்லப்பட்ட குற்றவாளி மீது பல கொலை வழக்குகள் உள்ளன, இவன் இவ்வளவு பெரிய குற்றவாளி ஆகும் வரை காவல் துறை என்ன செய்து கொண்டிருந்தது? கொலை குற்றவாளி ஒருவனை சுட்டுக் கொன்று விட்டு அவன் மீது இத்தனை கொலை வழக்குகள் உள்ளன, அத்தனை கொலை வழக்குகள் உள்ளன என்று காவல் துறையினர் அடுக்கிறார்களே, ஒருவன் அவ்வளவு குற்றங்கள் செய்யும் வரை காவல் துறையினர் என்ன செய்து கொண்டிருந்தார்க ள்? குற்றவாளி தங்களை தாக்க வந்ததாகவும் அதனால் தற்பாதுகாப்பிற் காக சுட்டதாகவும் வழக்கமாக ஒரு கதையை காவல் துறையினர் சொல்வார்கள்? தற்பாதுகாப்பிற் காக காவல் துறையினர் மட்டுமில்லாமல், தனி மனிதன் யார் வேண்டுமானாலும் தன்னை காத்துக்கொள்ள உரிமை உண்டு? அதனால் காவலர் ஒருவரை ஒரு ரவுடி தாக்கவரும்போது கையை கட்டி வேடிக்கை பார்க்கசொல்லவில ்லை? தாரளமாக சுட்டுத் தள்ளலாம்? காவல் துறையினர் உயிர் ஒன்றும் மட்டமானது இல்லை? ஆனால் இவர்கள் சொல்லும் காரணங்கள் எல்லாம் பொய்யாக இருக்கும் பட்சத்தில் என்ன சொல்வது? என்கௌன்ட்டர் நடந்தவுடன் காவல்துறையினர் சொல்வது குற்றவாளி காவலர்களை தாக்கிவிட்டு தப்பியதால் நாங்கள் சுட்டோம் ? அய்யா, ஒரு கொலை குற்றவாளி, இவன் தப்பித்தால் அது எவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூட தெரியாமலா இருக்கிறீர்கள்? அவன் தப்பித்து போகும் அளவிற்கு கையில் லத்தியை மட்டும் கொடுத்து ஏதோ போனால் போகட்டும் என்று இரண்டு, மூன்று காவலர்களை மட்டும் அனுப்பி இந்த மாதிரி சம்பவம் நடப்பதற்கு ஆரம்பத்தை ஏற்படுத்தியது காவல் துறையினர்தானே? இந்த கவனக் குறைவு மற்றும் பொறுப்பின்மை இவர்களுக்கு எப்படி வந்தது ? இதற்கு ஏன் இவர்களுக்கு இவ்வளவு பெரிய படை மற்றும் அதிகாரங்கள்? இந்த சம்பவத்தில் இப்படி அஜாக்கிரதையாக இருந்து குற்றவாளிகளை தப்பவிட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு என்ன தண்டனை கொடுக்கபட்டுள்ள து?
இந்த சம்பவத்தை பொருத்தமட்டில் குற்றவாளிகளை என்கௌன்டர் செய்த காவல் துறையினரின் நடவடிக்கை சரியா தவறா? சரி என்றால், நம் நாட்டில் தினம் தினம் எத்தனையோ பேர் கொலைசெய்யப்படுக ிறார்களே அது சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை எல்லாம் காவல் துறையினர் சுட்டுக்கொன்றுவ ிட்டர்களா? அப்போ யாரைத்தான் காவல் துறையினர் என்கௌன்ட்டர் செய்கிறார்கள்? இதுவரை என்கௌன்டர் செய்யப்பட ரவுடிகள் எல்லோரும் யார்? பொது மக்களுக்கு ஒரு குற்றவாளி சுட்டுக்கொல்லப் படுவது மட்டும்தான் தெரிகிறதே தவிர இவனை மாதிரி கொலைகுற்றவளிகள் எத்தனைபேர் வெளியில் சுதந்திரமாக உள்ளார்கள், சிறையில் உள்ளார்கள் அவர்களை ஏன் காவல் துறையினர் சுட்டுக்கொல்லவி ல்லை என்ற கேள்வியை கேட்க தெரியவில்லை? விபத்தாக ஒரு கொலை சம்பவம் நடப்பதை விடுங்கள், திட்டமிட்டு செய்பவர்கள் , கூலிக்கு கொலைசெய்பவர்கள் என்று எத்தனையோ சமுக விரோதிகள் நம் சமுதாயத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்ற னர், இது எப்படி? எனவே காவல் துறையினர் ஒரு கொலை குற்றவாளிகளை சுட்டுக்கொல்வதி ல் ஏதோ ஒரு பின்னணி இருக்கும் என்று நமக்கு தெரிகிறது? அது அரசியல் சம்பந்தப்பட்டதா கவோ, இல்லை பண பலமோ, இல்லை விதி விலக்காக மக்களுக்காகவோ இருக்கலாம்? இந்த சம்பவத்தில் இந்த கொலை குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? காவல் துறை என்றால் பொது மக்களுக்கு ஒரு பயம் இருக்கவேண்டும் , போலீஸ் அதிகாரியையே கொன்றிருக்கிறார ்கள் இவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுக்கவேண்டும் என்றால் அதிக நாள் ஆகும் அதனால் காவல் துறையினரே சுட்டுக்கொன்றார ்கள் என்பதுதான் பொதுவான உண்மை? இதற்காகத்தானே வெள்ளதுரை என்ற போலீஸ் அதிகாரி மானா மதுரைக்கு மாற்றப்பட்டார், இந்த அப்பட்டமான உண்மை, மறைமுகமாக சில நாளிதழ்களிலும் என்கௌண்டருக்கு முன்னரே செய்தியாக வெளிவந்தது அல்லவா? முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு? இந்த உண்மையை மறைத்து, காவல் துறையினர் தங்களை காப்பாற்றி கொள்வதற்காக சுட்டார்கள் என்று சொல்லி இதை விவாதிப்பது என்பது வீண் வேலை? நம் ஜனநாயகம் மக்கள் கொடுத்தது, நிர்வாகம் மக்கள் கொடுத்தது, காவல் துறையினர் மக்கள் கொடுத்தது இதில் உள்ளவர்கள் அவரவர் பொறுப்புகளை தானே செய்யவேண்டும்?
பெரிய பெரிய அறிவு ஜீவிகளைஎல்லாம் சில தொலைகாட்சிகள் கூப்பிட்டு அவர்களை விவாதிக்க வைத்து அவர்கள் எண்ணங்களை ஒளிபரப்புகிறார் கள்? என்னை போன்ற சாதாரன ஆட்களுக்கும் தங்கள் கருத்துக்களை சொல்ல ஒரு வாய்ப்பு கொடுத்ததற்கு சவுக்கிற்கு நன்றி. இவனுகளுக்கு வேற வேலையே இல்லை? மனித உரிமை ஆர்வலர்களை பற்றிய பொது மக்களின் கருத்து? நானும் மனித உரிமையை விரும்புகிற சாதாரன ஆள்தான்?ஆனால் மரண தண்டனை வேண்டாம் என்று சொல்கிறவன் அல்ல?கொலை குற்றம் செய்தவனுக்கு மரண தண்டனை கொடுக்கப்படவேண் டும் என்றால் கண்டிப்பாக அதை ஆமோதிப்பேன் ஆனால் அது காவல்துறையின் மூலம் அல்ல சட்டத்தின் மூலமாக?. கொலை செய்தவனை போலீஸ் சுட்டுக்கொன்றது நல்ல விஷயம் தானே இதில் என்ன தவறு இருக்கிறது, இதற்கு எதிராக கருத்து சொல்பவர்கள் எல்லோரும் பைத்தியக்காரர்க ள் , இதுதான் பெரும்பான்மையான மக்கள் கருத்து?. ஜனநாயகம் என்றால் என்ன, அதிகாரத்தை வைத்திருப்பவர்க ள் அந்த அதிகாரத்தை அவர்களாகவே கையில் எடுத்துக்கொண்டா ர்கள் என்றால் அது பொது மக்களுக்கு நன்மையா ? இன்று காவல் துறையினர் கொலையாளிகளை சுட்டுக்கொன்றார ்கள், நாளை அவர்களுக்கு தேவை என்றால் ஒருவனை சுட்டுவிட்டு இவன் கொலையாளி அதனால் சுட்டோம் என்று சொல்வார்கள் என்பதை நம் மக்களுக்கு சொல்லி புரியவைப்பது கடினம்? காவல் துறையினர் மட்டுமல்ல அதிகாரத்தை வைத்திருக்கும் எந்த துறையில் உள்ளவர்களையும் பொது மக்கள் எச்சரிக்கையாக கையாளவேண்டும்? நம் அரசியல் அமைப்பில் பொது மக்களாகிய நாம்தான் அதிக அதிகாரத்தை வைத்திருக்கவேண் டும். ஒவ்வொரு துறையில் உள்ள தனி மனிதர்களும் அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு செயல் பட்டால் அதன் பாதிப்பை மொத்தமாக பொது மக்கள் உணர முடியாது, அங்கொன்று, இங்கொன்றுமாக தனி மனிதந்தான் பாதிக்கப்படுவான ்?.கண் முன்னே கொடூர செயலை செய்யும் ஒருவரை கொல்வதில் என்ன தவறு உள்ளது என்பதுதான் பொது மக்களின் ஆதங்கம்? கண்டிப்பாக தவறு இல்லை, ஆனால் இது ஒரு கால கட்டத்தில் நமக்கே வினையாக வரும் என்பதுதான் என்னுடைய கருத்து?அரசியல்வாதிகள் சரியாக இல்லை, அதனால் வங்கியில் பணத்தை கொள்ளையடித்து பொது மக்களுக்கு கொடுத்தேன் என்று ஒருவர் சொன்னால் நம்மால் ஏற்றுக் கொள்ளமுடியுமா?
this is the fate of advocates......and judiciary.
வாழ்க புகழேந்தி பணிகள்...
Common man suffers a lot during such caste based rallies or whatsover based on caste.
if you talk about human rights, do you think that SI killing was correct.?
Savukku, The moral should be kept on high. that's why our ancient king ruling had severe punishments.
வாழ்த்துக்கள், தொடரட்டும் உங்கள் சமூக நற்பணி
அப்போ என்ன தான் செய்யனும்னு எதிர்பார்க்கிறீ ர்கள்?
இதே நேரத்தில், திரு. ஆல்வினிடம் துப்பாக்கி இருந்து அவர் சுட்டிருந்தால் போலி என்கவுன்டர் என்று பினாத்த ஆரம்பித்து விடுவீர்கள் மனித உரிமை ஆர்வலர்கள்...
உங்கள் நடு நிலைமை எங்களை சமீபகாலமாக மெய் சிலிர்க வைக்கிறது.. ஏன் இந்த துப்பாக்கி சமாச்சாரமெல்லாம ் நீங்கள் ஆல்வின் கொல்லப்பட்டௌடன் எழுதவில்லை? அந்த கொலைக்கு கூட போலீஸ் தான் காரணம் அப்படின்னு கண்டுபிடிச்ச உங்கள் அறிவாற்றல் அதனை அப்போதே தெரிவித்து அந்த கொலைக்காண கண்டனத்தையும், இறந்தவர் குடும்பத்துக்கு இறங்களையும் சொல்லி இருக்கலாமே! எப்படியும் இப்படி நடக்கும்.. அப்போது சேர்த்து எழுதலாம் அப்படின்னு இருந்துட்டீங்க.. நீங்களும் போலீஸ் துறையில் பல ஆண்டுகள் அனுபவம் உள்ளவர் தானே!! அமாம்... சமீபகாலமாக உங்கள் நடு நிலை எங்கேயோ பார்த்து கும்பிட்டு கும்பிட்டு குட்டிக் கரனம் அடிக்கிறதே!! ஏன்? ஒரு நல்ல நடு நிலை தவறாத கட்டுரையாளரை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறோம்... உங்கள் மெய் சிலிர்க்கும் நடு நிலையால் தருமபுரி கொண்டான் என்று பட்டம் பெற்றீர்.. இன்று முத நீர் நீதி வழுவா நெறிமுறையின் வேந்தனென்று அழைக்கப் படுவாய்... ஆமாம்... மனித உரிமை அப்படின்னா என்னபா??
போராடுங்க. நமக்கு கொலைக்காரனுங்க, தூக்கு தண்டனை கைதிங்க ஆகியோருக்கு வக்காலத்து வாங்கறது தானே வேலை.
போராடுங்க. நமக்கு கொலைக்காரனுங்க, தூக்கு தண்டனை கைதிங்க ஆகியோருக்கு வக்காலத்து வாங்கறது தானே வேலை.
எண்ணஓட்டம் எப்படியிருக்கும ் என்று எழுதபட்டது.
ஏன் போடக்கூடாது என்று தொன்றுகிரது.
நெஞ்சு வலிப்பதாக கூறியதால் வேனை நிறுத்தியதாகவும ்,போலீசாரை தாக்கிவிட்டு தப்பியதாக கூறப்படுகிறது.
காவல் துறை அதிகாரியை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட கொலைக் குற்றவாளிகளை கை விலங்கு இல்லாமல் அழைத்து செல்லும் நடைமுறை உள்ளதா?
பழைய அதிகாரிகளை மாற்றிவிட்டு,என ்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்களை இறக்குமதி செய்து எல்லாம் திட்டமிட்டபடி கைதிகள் தப்பி ஓடி உயிரை விட்டுள்ளார்கள் .
இந்த சம்பவத்திலும்,ச ாதித் தமிழர்கள் சட்டபூர்வமான நியாய,அநியாயங்க ளை பார்க்க மாட்டார்கள்.தன் சாதி சார்ந்த கருத்துக்களையே இங்கு பிரதிபலிப்பார்க ள். சாதி வாழட்டும்! தமிழன் சாகட்டும்.!
RSS feed for comments to this post