முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்தொடர்புக்கு
+++
அதிமுகவில் ஒரு வீரபாண்டி ஆறுமுகம். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 20
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
புதன்கிழமை, 12 டிசம்பர் 2012 22:27

சேலம் அங்கம்மாள் காலனியில் குடியிருந்த மக்களின் சொத்துக்களை திமுகவின் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் அவர் உறவினர்கள் பறிக்க முயற்சி செய்து, அங்கே குடியிருந்த மக்களை அடித்து விரட்டி, அதன் காரணமாக வீரபாண்டி ஆறுமுகம் பல நாட்கள் சிறையில் இருந்ததோடு, குண்டர் என்று தீர்மானிக்கப்பட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதும் அனைவருக்கும் தெரியும்.  அப்படி தனக்குச் சொந்தமில்லாத நிலத்தை அபகரிக்க முயன்ற வீரபாண்டி ஆறுமுகம், இன்று ஆறு அடி நிலத்தில் மீளா உறக்கத்தில் ஆழ்ந்திருக்கிறார்.   வீரபாண்டி ஆறுமுகம் போன்றவர்களின் வாழ்வும் மரணமும், அதிகார போதையில் இருக்கும் அத்தனை பேருக்கும் பாடமாக இருக்க வேண்டும்.  ஆனால், வரலாறு தரும் இந்த படிப்பினைகளை யாரும் கவனத்தில் கொள்வதாகத் தெரியவில்லை.

வீரபாண்டி ஆறுமுகத்தைப் போலவே அதிகார போதையில் அடுத்தவர் நிலத்தை அபகரிப்பதற்காக அலையும் அதிமுக பிரமுகர்தான் தமிழக அரசின் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி.

Senthil-Balaji


செந்தில் பாலாஜி, அதிமுக ஆட்சி தொடங்கியதிலிருந்தே, தனது வசூல் வேட்டைகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தை தொடங்கி விட்டார்.   திமுக குண்டர்களின் கொடுங்கோல் ஆட்சியிலிருந்து தமிழகத்தை விடுவிப்பேன் என்ற முழக்கத்தோடு பதவியேற்ற ஜெயலலிதா, செந்தில் பாலாஜி போன்ற ரவுடிகளை இன்னமும் அமைச்சர்களாக வைத்து அழகு பார்ப்பது, கருணாநிதிக்கு ஜெயலலிதா சற்றும் சளைத்தவரில்லை என்பதையே காட்டுகிறது.

செந்தில் பாலாஜியின் நெருங்கிய உறவினர் காமாட்சி பெரியசாமி என்கிற கோகுல்.  இந்த கோகுல், நாமக்கல் மாவட்டம் பிறந்தபோது காமாட்சியம்மன் கோவிலில் இவர் பெற்றோரால் அனாதையாக விடப்பட்டார்.  இப்படி விடப்பட்டு குழந்தையாக இருந்த கோகுலை, தெய்வானை மற்றும் பி.சி.ராமலிங்கம் என்ற தம்பதியினர், எடுத்து வளர்க்கின்றனர்.  இந்த கோகுல், கோவையில் உள்ள இந்துஸ்தான் கல்லூரியில் படித்து முடித்து வேலைக்கும் போகிறார்.  இவருக்கு காதல் திருமணம் நடைபெறுகிறது.  மனைவியோடு மகிழ்ச்சியாக வாழ்ந்த கோகுலுக்கு அவரது வளர்ப்புப் பெற்றோருக்குச் சொந்தமான பல ஏக்கர் நிலங்கள் சொந்தமாக இருப்பது தெரிய வந்ததும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அஷோக் இந்த சொத்துக்களை அபகரிக்க திட்டமிடுகிறார்.

இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த ஆண்டு 2011 ஜுன் 3ம் தேதி,   இந்த கோகுலை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான கோழி பாலு, நடராஜன், மோகன்ராஜ், செல்வராஜ் மற்றும் பெரியசாமி அடங்கிய கும்பல் பொலிரோ வாகனத்தில் கடத்துகிறது.    ஒரு மணி நேரம் கழித்து வேறு வாகனத்துக்கு கோகுல் மாற்றப்படுகிறார்.  கோகுலின் கையும் காலும் கட்டப்பட்டு, ஒரு கட்டிலில் படுக்க வைக்கப்பட்டு, கட்டிலோடு சேர்த்துக் கட்டப்படுகிறார்.

Gokul_2

கோகுல்

அப்போது அமைச்சரின் தம்பி அஷோக்கால் அவரிடம் செல்போன் கொடுக்கப்பட்டு, அமைச்சர் செந்தில் பாலாஜியே அந்த போனில் பேசியதாக தெரிவிக்கிறார் கோகுல்.    இரண்டு வாரங்களாக மேல் அந்த அறையிலேயே கோகுல் அடைத்து வைக்கப்படுகிறார்.

கோகுலின் தாயார் தெய்வானை இரண்டு நாட்களாக தொடர்ந்து கோகுல் போன் பேசாமல் இருப்பதால் கலக்கமடைந்து,   கோகுலைத் தேடுகிறார்.   ஆனால் கோகுல் இருப்பிடம் தெரியவில்லை.  தெரிந்தவர்கள், உறவினர்கள் என்று அத்தனை இடங்களிலும் கோகுலைத் தேடுகிறார்.  ஆனால் எங்கேயும் பதிலில்லை. வெங்கமேடு காவல்நிலையத்தில் கோகுலைக் காணவில்லை என்று கொடுத்த புகார் பதிவு செய்யப்படவில்லை.   அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அஷோக் இந்தக் கடத்தல் விவகாரத்தின் பின்னணியில் இருப்பது தெரிந்து, அந்த அம்மாவை விரட்டியடிக்கிறார்கள்.   வேறு வழியில்லாத தெய்வானை, கரூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்துப் புகார் அளிக்கிறார்.  அவர் உடனடியான புகாரின் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு உத்தரவிடுவதாக வாக்களிக்கிறார்.  ஆனால், சம்பந்தப்பட்ட காவல்துறையினர், இதற்காக முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யாமல் விரட்டியடிக்கிறார்கள்.   மீண்டும் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து தெய்வானை புகார் கொடுக்கச் சென்றபோது, சும்மா சும்மா வந்து தொந்தரவு செய்யாதே என்று விரட்டப்படுகிறார் தெய்வானை.

காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் , தன் உறவினர்களோடு தானே கோகுலைத் தேடுகிறார்.  அப்படித் தேடுகையில் மோகன்ராஜ் என்பவர் வீட்டில் கோகுல் அடைத்து வைக்கப்பட்டிருப்பது தெரிந்து உறவினர்களோடு சென்று கோகுலை மீட்கிறார்.  மீட்கப்பட்ட கோகுல் மிகுந்த பலவீனமான நிலையில் இருக்கிறார்.  கோகுலை அவர் உறவினர் ராஜா என்பவரின் வீட்டில் தங்க வைக்கிறார்கள்.

இரண்டு நாட்கள் கழித்து, மோகன்ராஜ் என்பவர், வேலாயுதம் பாளையம் காவல்நிலையத்திலிருந்து இரண்டு போலீசாருடன் வந்து காவல்நிலையத்திற்கு கோகுலை அழைத்துச் செல்கின்றனர். அவர்களோடு செல்வராஜ் என்பவரும் சேர்ந்து கொள்கிறார்.  செல்லும் வழியிலேயே, செல்வராஜோடு, அமைச்சர் செந்தில் பாலாஜி போனில் பேசுகிறார்.   அவர் பேசியபிறகு, காவல்நிலையத்தில், தன்னை யாரும் அடைத்து வைக்கவில்லை, கடத்தவில்லை, தன்னை மிரட்டி நிலத்தை அபகரிக்க முயற்சி செய்யவில்லை என்று எழுதி வாங்கப்படுகிறது.

பின்னர் வெளியே வந்த கோகுல், அவர் தாயார் வீட்டுக்கு வந்து சேர்கிறார்.  வழக்கறிஞர்களைக் கலந்து ஆலோசித்த பின்னர், கோகுல் கரூர் மாவட்டக் குற்றப்பிரிவில்  புகார் ஒன்றை அளிக்கிறார். அந்தப் புகாரின் அடிப்படையில், கோழி பாலு உள்ளிட்ட சிலரின் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்கிறது காவல்துறை.  ஆனால், அமைச்சர் செந்தில் பாலாஜி, அவர் தம்பி அஷோக் ஆகியோரின் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லியிருந்தும், அவர்கள் பெயர் எப்ஐஆரில் சேர்க்காமல் வேண்டுமென்றே விடப்படுகிறது.   கோழி பாலு உள்ளிட்டோர் கைது செய்ய்பபடுகிறார்கள்.  அமைச்சர் மற்றும் அமைச்சரின் தம்பி பெயரைச் சேர்க்காமலேயே வழக்கின் புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இத்தனை அயோக்கியத்தனங்களும் அரங்கேற ஒரே காரணம் என்ன தெரியுமா ?    அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொந்த வீட்டுக்கு அருகே, கோகுல் மற்றும் அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான மூன்று ஏக்கர் நிலம் உள்ளது.   ஊரில் எங்கே சொத்து வாங்கியிருந்தாலும், வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள நிலத்தைச் சொந்தமாக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் செந்தில் பாலாஜிக்கு.  இந்த ஆதங்கத்தை தன்னுடைய தொண்டர் அடிப்பொடிகளான நடராஜன், கோழி பாலு, மற்றும் தனது தம்பியிடம் செந்தில் பாலாஜி தெரிவித்ததன் விளைவே ஆட்கடத்தல், கொலை மிரட்டல் ஆகியன.

 

sc0025

sc0026

sc0027

மிரட்டல் காரணமாக கோகுல் எழுதிக் கொடுத்த நிலப்பத்திரம்

இதே போன்ற மிரட்டல்களில் தொடர்ந்து ஈடுபட்டவர்தான் திமுகவின் காலஞ்சென்ற ரவுடி வீரபாண்டி ஆறுமுகம்.  தன் தம்பி, உறவினர்கள் என அனைவரையும் ரவுடித்தனம் செய்ய வைத்து, ஊரெங்கும் சொத்துக்களை வாங்கிக் குவித்தவர்தான் வீரபாண்டி ஆறுமுகம்.  வீரபாண்டி ஆறுமுகத்தின் மீது பல்வேறு புகார்கள் குவிந்தாலும், திமுக தலைமையின் ஆதரவு ஆறுமுகத்துக்கு இருந்தது.  திமுக ஆட்சி முடியும் வரை, அங்கம்மாள் காலனி மக்கள் மற்றும் ஆறுமுகத்தால் பாதிக்கப்பட்ட ஒருவராலும், வீரபாண்டி ஆறுமுகத்தை எதிர்த்து எதுவுமே செய்ய முடியவில்லை.  குறைந்தபட்சம், ஆறுமுகத்தை பதவியை விட்டுக் கூடத் தூக்க முடியவில்லை.

ஆனால், அதிமுக அப்படிப்பட்ட கட்சி அல்ல. எவ்வளவு பெரிய அப்பாடக்கராக இருந்தாலும், புரட்சித் தலைவி அம்மாவின் நல்லெண்ணத்தில் இருக்கும் வரைதான் கட்சிப் பதவியும்.. மந்திரிப் பதவியும்….. ஜெயலலிதாவுக்கு பிடிக்காமல் போய் விட்டால், ஆடிக்காற்றில் அம்மியே பறப்பது போல பறந்து விடுவார்கள்.   ஜெயலலிதாவுக்கு பிடிக்காமல் போனவர்களை சசிகலா நினைத்தால் கூட காப்பாற்ற முடியாது.

ஆனால், இத்தனை நாட்களாகியும், ஆட்கடத்தல் உள்ளிட்ட புகார்கள் மலை போல குவிந்தும், ஜெயலலிதா செந்தில் பாலாஜியை இன்னும் ஏன் அமைச்சராக வைத்துள்ளார் என்பது பலருக்கு புரியாத புதிராக இருக்கிறது.

தனி நபர் கொடுத்த புகார்களைத் தவிர்த்து, கரூர் முதலாம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அஷோக் ஆகியோரை விசாரிக்க வேண்டும், குற்றவாளிகளாகச் சேர்க்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவில், காவல்துறையை விசாரித்து அறிக்கை அளிக்குமாறு, உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை அடுத்து, காவல்துறையினர் என்னதான் முயற்சி எடுத்தாலும், குறைந்தபட்சம், செந்தில் பாலாஜியை விசாரித்து வாக்குமூலமாவது வாங்க வேண்டிய ஒரு நெருக்கடி.  இப்படி ஆட்கடத்தல் புகாருக்கு ஆளான செந்தில் பாலாஜியை போக்குவரத்து அமைச்சராக பஸ் ஓட்ட வைத்துக் கொண்டு ஏன் ஜெயலலிதா வேடிக்கைப் பார்க்கிறார் ?

செந்தில் பாலாஜி மீது இந்த ஆட்கடத்தல் புகாரைத் தவிர, சட்ட விரோதமாக க்ரானைட் வெட்டியெடுத்த புகாரும் உள்ளது.   கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தோகைமலை, நாகனூர் போன்ற இடங்களில், அரசுக்கு சொந்தமான இடங்களை கிரானைட் கொள்ளையன் பிஆர்பி குடும்பம் வளைத்துப் போட்டுள்ளது.   கரூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை கிரானைட் கொள்ளையை கவனித்துக் கொள்வது, பிஆர்.பழனிச்சாமியின் மருமகன், காந்திராஜன்.   இந்த காந்திராஜனுக்கு, செந்தில் பாலாஜி மிக நெருக்கம் என்று கூறப்படுகிறது. திமுக ஆட்சிக் காலத்தில் பிஆர்பி யாராலும் அசைக்க முடியாத சாம்ராஜ்யத்தை நடத்திக் கொண்டிருந்தார்.  அதிமுக ஆட்சிக்கு வந்ததும், இந்த சாம்ராஜ்யத்தை தொடர்ந்து நடத்துவதற்காக, இந்த கிரானைட் கொள்ளை நடைபெறும் இடத்தில் ஒரு விழா எடுக்கப்பட்டு விருந்து வைக்கப்பட்டுள்ளது.

அந்த விருந்தின் சிறப்பு விருந்தினர், அமைச்சர் செந்தில் பாலாஜி.   மதுரையில் பிஆர்பி நிறுவனத்தின் கிரானைட் கொள்ளையில் அரசு வெகு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வந்தாலும், கரூர் மாவட்டத்தில் நில ஆக்ரமிப்பு, சட்டவிரோத கிரானைட் கடத்தல் போன்றவற்றில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதற்கு, அமைச்சர் செந்தில் பாலாஜியின் தலையீடே காரணம்.

வீரபாண்டி ஆறுமுகம் போன்றவர்களின் ரவுடித்தனம், மணற்கடத்தல், கிரானைட் கொள்ளை போன்றவற்றை ஒழிப்பேன் என்று சூளுரைத்து ஆட்சியைப் பிடித்த ஜெயலலிதா, ஆட்களைக் கடத்தி நிலத்தை அபகரிக்கும் செந்தில் பாலாஜி போன்ற ரவுடிகளை இன்னும் அமைச்சராக உட்கார வைத்து அழகு பார்த்துக் கொண்டிருக்கிறார்.

திமுக ஆட்சியானாலும், அதிமுக ஆட்சியானாலும், மக்களை வதைத்து சொத்துக்களை ரவுடிகள் அபகரிப்பது தொடர்ந்து நடந்து கொண்டுதான் உள்ளது.

கோகுலின் தாயார், தெய்வானையோடு பேசியபோது, தன் மகனின் உயிருக்கு இன்றும் ஆபத்து நீங்கவில்லை என்றே கூறுகிறார். செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்கும் வரை, அரசியல்வாதிகளுக்கு அடிமைகளாகவே இருந்து பழக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகள் நியாயமான விசாரணை நடத்துவார்கள் என்ற நம்பிக்கை இல்லை.

செந்தில் பாலாஜியை உடனடியாக அமைச்சர் பதவியை விட்டு நீக்கி, இந்த வழக்கின் புலன் விசாரணையை சிபி.சிஐடி பிரிவுக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என்று கோருகிறார், கோகுலின் தாயார் தெய்வானை.   மேலும், கோகுல் சார்பாக, இந்த வழக்கின் விசாரணையை கரூர் நீதிமன்ற நடுவர் நீதிமன்றத்திலிருந்து, ஈரோடு நீதிமன்ற நடுவர் நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தன்னுடைய அமைச்சரே இப்படிப்பட்ட அடாவடித்தனத்தில் ஈடுபட்ட தகவல் அறிந்ததும், கடுமையான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டிய ஜெயலலிதா, இதையெல்லாம் விட, யார் மீது அவதூறு வழக்கு தொடுக்கலாம் என்பதிலேயே கவனமாக இருக்கிறார்.

கருணாநிதிகளும், ஜெயலலிதாக்களும், தமிழகத்தை ஆட்சி செய்யும் வரை, வீரபாண்டி ஆறுமுகம்களும், செந்தில் பாலாஜிக்களும் தோன்றிக்கொண்டுதான் இருப்பார்கள். அது வரை, தெய்வானைகளின் அழுகுரல் கேட்டுக் கொண்டேதான் இருக்கும்.

5694POct-22-a-big_2

இந்த பச்ச மண்ணு மேல போயி புகார் சொல்றாங்களே... படுபாவிங்க...

 

Comments  

 
+3 #17 pappan 2012-12-15 15:59
Tamilar,
go comibatore and try to join any company.their application asked about community.every industry like that.
Quote
 
 
-8 #16 venduvan 2012-12-14 18:25
கை கூலிகலின் கட்டு கதை.
Quote
 
 
-2 #15 M P MOORTY 2012-12-14 18:09
உங்கள் கட்டுறை மிகவும் தவறு பதிவிடும் முன் உன்மை அறிய வேண்டும் தகவல்
கிடைத்ததும் பதிவிட்டு சவுக்கின் நன்பகதன்மையை இலக்க வேண்டாம்
முர்த்தி கருர்
Quote
 
 
+13 #14 T Saravanan 2012-12-14 16:51
சவுக்கு,

இந்த ஆள் முகத்திரையை கிழித்ததற்கு கரூர் மக்கள் சார்பில் நன்றி. இனியும் அம்மா நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தோற்கும்
Quote
 
 
+8 #13 S Kannan 2012-12-14 16:10
செந்தில் பாலாஜி சசிகலா உறவினர் அனுராதா வழியில் வந்தவர். அமைச்சர் விஜய் டாக்டர் எச். வெங்கடேஷ் வழியாக வந்தவர். கேவி ராமலிங்கம் ராவணன் வழியாக வந்தவர். அமைச்சர் காமராஜ் திவாகரன் வழியாக வந்தவர். பி. தங்கமணி கலிய மூர்த்தி வழியாக வந்தவர். இவர்கள் மீது நடவடிக்கை இருக்காது...
Quote
 
 
-4 #12 குளத்துப்பாளையம் 2012-12-14 12:23
>>>செந்தில் பாலாஜியின் நெருங்கிய உறவினர் காமாட்சி பெரியசாமி என்கிற கோகுல்> இந்த கோகுல், கோவையில் உள்ள இந்துஸ்தான் கல்லூரியில் படித்து முடித்து வேலைக்கும் போகிறார்.>அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அஷோக் இந்த சொத்துக்களை அபகரிக்க திட்டமிடுகிறார் .>அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான கோழி பாலு, நடராஜன், மோகன்ராஜ், செல்வராஜ் மற்றும் பெரியசாமி அடங்கிய கும்பல்>கோகுலின் தாயார் தெய்வானை இரண்டு நாட்களாக தொடர்ந்து கோகுல் போன் பேசாமல் இருப்பதால் கலக்கமடைந்து>அப்படித் தேடுகையில் மோகன்ராஜ் என்பவர் வீட்டில் கோகுல் அடைத்து வைக்கப்பட்டிருப ்பது தெரிந்து>ஊரில் எங்கே சொத்து வாங்கியிருந்தால ும், வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள நிலத்தைச் சொந்தமாக்க முடியவில்லையே
Quote
 
 
-10 #11 venduvan 2012-12-14 10:44
செங்கோட்டையன் அவர்களையே தப்பு என்று தெரிந்ததுடன் பதவியை விட்டு தூக்கியவர் அம்மா. நீங்கள் கைக்குளிகளிடம் காசுவங்கிகொண்டு எழுதுவதை எல்லாம் நம்புவதற்கு அவர்கள் ஒன்றும் தெரியாதவர் அல்ல, கரூரில் உள்ள சில சுயநல கருமிகள் எப்படியாவது ஒரு நல்ல தொண்டனை பதவிலிருந்து நீக்கி இவர்கள் நீக்கி சுயலாபம் அடைய நினைக்கிறார்கள் . அதற்க்கு உங்களைபோன்ற மீடியாக்களும் கைக்கூலியாக செயல்படுகிறீர்க ள்.
Quote
 
 
0 #10 rajapandi 2012-12-14 10:19
100 % unnmai , poruki paya oru ponugalavidamat tan , palakudumbagal evanal nasammaki ullathu. evan oru kamaveri puthica nai . athai patrium eluthuga.
Quote
 
 
+9 #9 karur ganesan 2012-12-14 10:02
கரூர்ல எங்க கல்யாணம், கருமாதி நடந்தாலும், போயி இந்தாளு அலுவலகத்துல சொல்லிட்டா தவறாம வந்துடுவாரு (மக்கள் மேல ரொம்ப அக்கறையாம் ) ஆனா பண்றது எல்லாம் மணல் திருட்டு, கிரானைட் திருட்டு நில அபகரிப்பு. காவிரி ஆறை ரொம்ப வேகமா மொட்ட போட்டுக்கிட்டு இருக்காங்க அதுல தலைவருக்கும் பெரிய பங்கு இருக்கு.
பேருதான் போக்குவரத்து துறை அமைச்சரு. அனா கரூர் பஸ் ஸ்டான்ட வந்து பாத்தீங்கன்ன வாந்தி பன்னேடுவீங்க.சிறுநீர் மணம் ஊரையே தூக்கும். போக்குவரத்து நெரிசல் மிகுந்த தற்போதைய பஸ் ஸ்டான்ட தெக்கயும் போகவிடாம,வடக்கை யும் போகவிடாம தடுத்து வசிருக்கரதுளையு ம் தலைவருக்கு பெரும் பங்கு இருக்கு.
100 %
Quote
 
 
+8 #8 tamilar 2012-12-13 19:02
சவுக்கு சில வாரங்களுக்கு முன்பு டிவிஎஸ் கம்பென்யில் நேர் முக தேர்வுக்கு செல்ல வேண்டி இருந்தது.

அங்கு ஒரு விண்ணப்பம் பூர்த்தி செய்யுமாறு குறி ஒரு படிவத்தை தந்தார்கள் அதில் நான் கண்ட ஒன்று என்னை அதிர்ச்சில் ஆழ்த்தியது நம் நாட்டில் இன்றும் இரட்டை குவளை முறை ஒலிகபடவில்லையோ என்ற எண்ணம் தோன்றியது. இன்றுவரை டிவிஎஸ் கம்பெனி அதன் ஊழியர்களை வேலைக்கு எடுக்கும் போது என்ன ஜாதி என்று கேட்கிறது இன்று வரை பாப்பான் ஜாதி வெறி பிடித்து இருக்கிறார்கள்.

இது ஒன்று போதும் இன்று வரை பாப்பான் நுக்கு மத்தவர்கள் அடிமையாக இருக்க வேண்டும் என்ற கேவலமான எண்ணம் இன்று வரை பாப்பான் மனதில் உள்ளது.

சவுக்க்குகு உண்மையில் துணிவு இருக்கும் எனில் பாப்பான் ந *****ல் தான் இன்று வரி ஜாதி வெறி பிடித்து அலைகிறது என்பதை எழுத வேண்டும்.
ராமதாஸ் அல்லது திருமா அவர்கள் ஜாதி வெறியர்கள் என்று சவுக்கு கூறுகிறது ஆனால் உண்மையில் சதி வெறி பிடித்து அலைவது பாப்பான் மட்டுமே அவர்கள் பாப்னுக்கே உரிய சானகிய தனமாக இன்று வரை ஜாதியை வளர்த்துகொண்டு இருக்கிறார்கள அமைதியானமுறையில ்.
ஆனால் சவுக்குகு ராமதாஸ் அல்லது திருமா பற்றி எழுத துணிவு இறுகும் அளவிற்கு இதை புனுள் பற்றி எழுத துணிவு இருக்குமா என்பது சந்தேகமே.
சவுக்கு நடுநிலையர் என்று எபோதும் பிட்ரிகொல்வர் பார்போம் .

குறிப்பு : எந்த ஒரு தனியார் நிறுவனத்திலும் ஜாதி கேட்பதில்லை.
Quote
 
 
+15 #7 S Palanisamy 2012-12-13 18:31
கரூர் கலெக்டராக இருந்த ஷோபனா ஐ.ஏ.எஸ் வழியாக முதல்வர் அலுவலகத்துக்கு எந்த புகார் போனாலும் அது செந்தில் பாலாஜிக்கு தெரிந்து விடும். இப்படித்தான் செந்தில் பாலாஜி தப்பித்து வந்தார். இப்ப சோபனா ஐ.ஏ.எஸ் மாற்றப்பட்டு விட்டார். செந்தில் பாலாஜி மீது புகார் மழை பொழிய ஆரம்பித்து விட்டது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் ராகுலுக்கு நெருக்கமான (உள் அர்த்தம் கற்பிக்க வேண்டாம், நல்ல முறை நட்பு) ஜோதி மணி நாடாளூ மன்ற தேர்தலில் நிற்கிறார் என்று பேச்சு உண்டு. சட்டசபை தேர்தலில் செந்தில் பாலாஜிக்கு எதிராக நின்றவர். ஜோதி மணி கல்யாணம் செய்து கொள்ளாம பொது வாழ்க்கைக்கு தன்னை அர்ப்பணித்து கொண்ட ஒருவர். நல்ல பேச்சாளர். நல்ல பெயர் உள்ளது.நிறைய பொதுச்சேவைகள் செய்து வருகிறார். தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி லாரி உரிமையாளர்கள் பிரச்சினையை டில்லி வரை எடுத்து சென்று தீர்த்து வைத்தார். ஜோதிமணியின் பொதுச்சேவையும், நல்ல பெயரும், செந்தில் பாலாஜி அட்டகாசம் நிச்சயம் ஜோதிமணியை கரை சேர்த்து விடும்.

எஸ். பழனிசாமி
கரூர்
Quote
 
 
+12 #6 PENIGABI 2012-12-13 17:01
இந்த பச்ச மண்ணு மேல போயி புகார் சொல்றாங்களே... படுபாவிங்க!!!

FINISHING SUPERO SUPER.... :lol: :lol: :lol:
Quote
 
 
-2 #5 nellai advocate 2012-12-13 14:59
there will exist some veerapandi in our politics.....
Quote
 
 
+9 #4 Ray Jaguar 2012-12-13 07:43
ivana puduchi jaila podunga sir :lol: :lol:
Quote
 
 
+14 #3 தமிழ்ப்பிரியன் 2012-12-13 00:13
இந்த பச்ச மண்ணு மேல போயி புகார் சொல்றாங்களே... படுபாவிங்க!!!

குசும்பு, ஆனால் உண்மை.

தமிழ்ப்பிரியன், பாரிஸ்.
Quote
 
 
+24 #2 Raja N 2012-12-12 23:42
கரூர்ல எங்க கல்யாணம், கருமாதி நடந்தாலும், போயி இந்தாளு அலுவலகத்துல சொல்லிட்டா தவறாம வந்துடுவாரு (மக்கள் மேல ரொம்ப அக்கறையாம் ) ஆனா பண்றது எல்லாம் மணல் திருட்டு, கிரானைட் திருட்டு நில அபகரிப்பு. காவிரி ஆறை ரொம்ப வேகமா மொட்ட போட்டுக்கிட்டு இருக்காங்க அதுல தலைவருக்கும் பெரிய பங்கு இருக்கு.
பேருதான் போக்குவரத்து துறை அமைச்சரு. அனா கரூர் பஸ் ஸ்டான்ட வந்து பாத்தீங்கன்ன வாந்தி பன்னேடுவீங்க.சிறுநீர் மணம் ஊரையே தூக்கும். போக்குவரத்து நெரிசல் மிகுந்த தற்போதைய பஸ் ஸ்டான்ட தெக்கயும் போகவிடாம,வடக்கை யும் போகவிடாம தடுத்து வசிருக்கரதுளையு ம் தலைவருக்கு பெரும் பங்கு இருக்கு.
Quote
 
 
+21 #1 Kalavani Balaji 2012-12-12 22:59
சினிமா அரசியல்ல செந்தில் பாலாஜி.... கவுண்டமணி (இராஜெந்திர) பாலாஜி எல்லம் சகஜம்ப்பா... இதுக்குபோயி... Lets Start Music....
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 343 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday3011
mod_vvisit_counterYesterday18770
mod_vvisit_counterThis week35224
mod_vvisit_counterLast week95998
mod_vvisit_counterThis month269271
mod_vvisit_counterLast month382199
mod_vvisit_counterAll days13185638