முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்தொடர்புக்கு
+++
நமக்கு வாய்த்த அடிமைகள்.. … … அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 54
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வெள்ளிக்கிழமை, 14 டிசம்பர் 2012 00:58

தலைப்பைப் பார்த்ததும், ஜெயலலிதாவும், சசிகலாவும் பேசிக்கொள்கிறார்கள் என்று நினைத்து விடாதீர்கள். அவர்கள் அதிமுக அடிமைகளைப் பற்றி இப்படித்தான் பேசிக்கொள்வார்கள் என்றாலும், இந்தக் கட்டுரை அவர்களைப் பற்றியது அல்ல.

இந்தக் கட்டுரை, தமிழகத்தில் உள்ள உயர்நீதிமன்றம் தவிர்த்த கீழமை நீதிபதிகளைப் பற்றியது.  அந்த நீதிபதிகள், தங்கள் கீழே பணியாற்றும் ஊழியர்களைப் பற்றி இப்படித்தான் பேசிக்கொள்வார்கள்.

ஒரு அரசு ஊழியன், அரசுப் பணியில் சேரும்போது முதலில் செய்ய வேண்டிய காரியம், தனது முதுகெலும்பை கழற்றி வைப்பது. முதுகெலும்பை கழற்றி வைத்தால் மட்டும் சிறந்த அரசு ஊழியராகி விட முடியாது.   அரசுப் பணியில் சேர்ந்த நாள் முதல், உணவில் உப்பைக் குறைத்து கொண்டு, உயர் அதிகாரி காறி முகத்தில் துப்பினால் அமைதியாகப் போய் வெளியே யாரிடமும் சொல்லாமல் இருந்தால் நீங்கள் அரசு ஊழியர்.   அதிகாரி முகத்தில் துப்பியதும், வெளியே வந்து, “அய்யா என் மூஞ்சில துப்பிட்டார்.  அய்யா துப்பறதுக்கு நானும் என் மூஞ்சியும் எவ்வளவு கொடுத்து வச்சுருக்கணும்” என்று சொல்வீர்களேயானால், நீங்கள் சிறந்த அரசு ஊழியர்.   அந்த வருடத்தின் சிறந்த அரசு ஊழியராக நீங்கள் தேர்ந்தெடுக்கப்படுவதோடு, பணி ஓய்வு பெறும்வரை, எவ்வித தண்டனையுமின்றி, பிரிவு உபச்சார விழாவோடு ஓய்வு பெறத் தகுதியானவர் நீங்கள்.

பெரும்பாலான அரசு அலுவலகங்களில் இந்த நிலைதான்.  அரசுப் பணியில் சேர்ந்த உடனேயே அந்த ஊழியர்களுக்கு அந்த அரசு வேலை, ஆக்சிஜன் போல மாறி விடுகிறது.   ஆக்சிஜன் நின்று விட்டால் உயிர் வாழ முடியுமா ?   அப்படித்தான் அரசு ஊழியர்கள் மாறி விடுகிறார்கள். உயர் அதிகாரி, ஏதாவது ஒரு காரணத்துக்காக மெமோ கொடுத்தால், ஆக்சிஜன் குறையும்போது ஏற்படும் மூச்சுத் திணறல் அரசு ஊழியர்களுக்கு ஏற்படுகிறது.   அந்த மூச்சுத் திறனை சரி செய்வதற்காக, உடனே அதிகாரியின் காலில் விழுந்து ஆக்சிஜன் ஏற்றிக் கொள்வார்கள்.

பெரும்பாலான அரசு அலுவலகங்களில் இந்த நிலை என்றால், நீதிமன்றங்களை எடுத்துக் கொண்டால்,  அவர்கள் பென்ஹர் படத்தில் வரும் அடிமைகளைப் போலவே நடத்தப்படுவார்கள்.  அடிமைகள் பேச முடியுமா ?  அடிமைகளுக்கு உரிமை உண்டா ?  அடிமைகளுக்கு மான ரோஷம் உண்டா ?  அது போலத்தான் நடத்தப்படுவார்கள் நீதிமன்ற ஊழியர்கள்.

கீழமை நீதிமன்றங்களில் உள்ள முன்சீப், (Munsiff) துணை நீதிபதி (Sub-Judge), நீதிமன்ற நடுவர் (Judicial Magistrate), தலைமை நீதிமன்ற நடுவர் (Chief Judicial Magistrate), அமர்வு நீதிபதி (Sessions Judge) மாவட்ட நீதிபதி (District Judge) ஆகிய அனைவர் வீட்டிலும் பணியாற்றுவதற்கு, மசால்ச்சி (சமையலுக்கு உதவுபவர்), அலுவலக உதவியாளர் என்று ஆட்கள் நியமிக்கப்படுவார்கள்.  வீட்டில் சமையல் வேலையைச் செய்ய மசால்ச்சி பதவிக்கு நியமிக்கப்பட்டவர்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றாலும், பெரும்பாலான மாவட்டங்களில் அலுவலக உதவியாளர்களே பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள்.

இந்த நீதிபதிகளைப் பணியில் சேர்ந்தது முதலாகவே “கோர்ட்டார்” “சமூகம்” “மை லார்ட்”  “யுவர் ஆனர்”  “லார்ட்ஷிப்” என்றெல்லாம் அழைப்பதால், இவர்களுக்கு தங்கள் மனதில், நாம் உண்மையிலேயே கடவுள்கள் என்ற எண்ணம் வந்து விடுகிறது.  இதனால், நம்மை யாரும் எதுவுமே செய்ய முடியாது என்ற இறுமாப்பில் நடந்து கொள்கின்றனர்.  அதுவும், ஒருவனுக்கு மரண தண்டனை விதிக்கும் அதிகாரம் தங்களுக்கு வழங்கப்பட்டிருப்பதால், நாம் உண்மையிலேயே கடவுள்தான் என்றே நினைத்து செயல்படுகிறார்கள்.

ஒரு பதவியின் பெயரே “அலுவலக உதவியாளர்” என்று இருக்கையில், அவரை வீட்டு வேலைக்கு எப்படி பயன்படுத்த முடியும் ?  ஆனால், இந்த நீதி தேவன்கள் மனசாட்சியே இல்லாமல் இந்த அலுவலக உதவியாளர்களை வீட்டு வேலைக்குப் பயன்படுத்தி வருகிறார்கள்.

வீட்டு வேலை என்றதும் கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கி வருவது, இதர வேலைகள் என்று நினைத்து விடாதீர்கள்.  நீதிபதி வீட்டில் நாய் இருந்தால், அதை வாக்கிங் அழைத்துச் செல்வது, அந்த நாயை குளிப்பாட்டுவது, மாடு இருந்தால், சாணி அள்ளுவது, சட்டி கழுவுவது, சின்ன குழந்தைகள் ஆயி இருந்தால், அதற்கு கழுவி விடுவது, தோட்டத்தை பெருக்குவது, வீட்டை பெருக்குவது, துடைப்பது, துணி துவைப்பது, அயர்ன் செய்வது, சில நீதிபதிகளுக்கு இரவு நேரம் ஆனால், சரக்கு ஊற்றிக் கொடுப்பது, சரக்கடிக்கையில் சூடாக ஆம்லேட் ஆப் பாயில் உள்ளிட்டவற்றை தயார் செய்வது,  பெண் நீதிபதிகளாக இருந்தால், அவர்களின் கணவன்மார்களுக்கு பணி விடை செய்வது, ஆகிய பணிகள் அனைத்தும், “அலுவலக உதவியாளர்” பதவிக்கு உண்டான பணியில் அடங்கும்.

இதை செய்ய மறுக்கும் அடிமை ”அலுவலக உதவியாளர்” ஏதாவது பேசினால், உடனே சஸ்பெண்ட் உத்தரவுதான்.   சஸ்பெண்ட் உத்தரவை வாங்கியதும் அந்த அடிமை நீதிமானின் காலில் விழுந்தால் பிழைக்கலாம்.  காலில் விழா விட்டால் அதோ கதிதான்.  தமிழக அரசின் மற்ற துறைகளில் இது போல பணி இடை நீக்கம் செய்யப்பட்டால் நீதிமன்றத்தை அணுகலாம்.  நீதிபதிகள் பல நேரங்களில் அநியாயமாக செய்யப்படும் பணி நீக்கத்தை தடை செய்கிறார்கள்.  ஆனால் நீதித்துறையில் பணியாற்றும் அடிமைகளுக்கு இந்த உரிமையும் கிடைக்காது.   மாவட்ட நீதிபதி பணி இடை நீக்கம் செய்தால் உயர்நீதிமன்றத்தில்தானே வழக்கு தொடுக்க வேண்டும் ?  உயர்நீதிமன்ற நீதிபதிகள், இந்த அடிமை அலுவலக உதவியாளர்களுக்கு உதவி செய்வார்களா என்ன ?  அவர்கள் வீட்டிலும் அடிமைகளை மேய்த்துக் கொண்டிருப்பார்கள் அல்லவா ?   கீழமை நீதிபதிகளுக்கும் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா ?   கீழமை நீதிபதிகள், அரசு ஊழியர்களை அடிமைகளாக வைத்திருக்கிறார்கள்.  உயர்நீதிமன்ற நீதிபதிகள், அடிமைகளை அரசு ஊழியர்களாக மாற்றி, அடிமைகளுக்கு சிறப்புத் தகுதியை உருவாக்குகிறார்கள்.  அப்படி சமீபத்தில் 55 அடிமைகள் அரசு ஊழியர்களாக்கப்பட்டது தொடர்பான கட்டுரை  நிலை குலைந்த நீதி.

இப்படி ஒரு அடிமையைப் பற்றிய கட்டுரைதான் இது.   வள்ளியூர் நீதிமன்ற நடுவர் (Judicial Magistrate, Valliyoor) நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார் வேல்முருகன் என்பவர்.  வள்ளியூர் நீதிமன்ற நடுவராக இருப்பவர் கிறிஸ்டல் பபிதா என்ற குந்தாணி.  இவரை குந்தாணி என்று சொல்வது சரியா என்பதை கட்டுரையின் இறுதியில் முடிவு செய்யலாம்.

sam_0407

நீதித்துறை நடுவர் கிறிஸ்டல் பபிதா

19.11.2012 அன்று இவரது வீட்டில் வேலை செய்யும் மசால்ச்சி விடுமுறையில் சென்று விட்டார்.  அவர் விடுமுறையில் சென்றதும், வேல்முருகனை வீட்டில் சென்று சமையல் செய்யுமாறு உத்தரவிடுகிறார் இந்தக் குந்தாணி.  வேல்முருகன், அவர்கள் ஊரின் குலதெய்வத்திற்கு சாமியாடும் வழக்கம் உள்ளவர்.  சாமியாடுவதால் அசைவம் சாப்பிட மாட்டார்.

சமையல் செய்ய வேண்டும் என்றதும், வேல் முருகன் குந்தாணி வீட்டுக்குச் செல்கிறார்.  வீட்டில் இரண்டு கிலோ மீன் வாங்கி வைத்திருக்கிறார்கள். இரண்டு வகை மீன்.  அசைவமே சாப்பிடாத வேல்முருகன் எப்படி அசைவம் சமைக்க முடியும் ?  குந்தாணியிடம், “அம்மா எனக்குச் சமையல் தெரியாது.  நான் அசைவம் சாப்பிடும் வழக்கம் இல்லை” என்று கூறுகிறார்.  அந்தக் குந்தாணியோ, “உங்களுக்குத் தெரிந்ததை சமையுங்கள்…“ என்று சொல்லி விட்டு, நீதிமன்றத்தில் நீதி பரிபாலனம் செய்யச் சென்று விடுகிறார்.

மீனை எப்படிக் கழுவுவது என்று கூடத் தெரியாமல் வேல்முருகன் முழித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கையில், அந்த நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக இருக்கும் மற்றொரு அடிமை திருமலைவேலு உதவிக்கு வருகிறார்.  அவர் ஒரு வகை மீனை கழுவி சுத்தம் செய்து விட்டு, மற்றொரு வகை மீனை சுத்தம் செய்து கொண்டிருக்கிறார்.   இதற்குள் சுத்தம் செய்யப்பட்ட மீனை குழம்பு வைக்கும் வேலையில் ஈடுபடுகிறார் வேல்முருகன்.

நீதிமன்றப் பணிக்கு ஆட்கள் குறைவாக இருந்ததால், குந்தாணி மீனை சுத்தம் செய்து கொண்டிருந்த திருமலை வேலுவை நீதிமன்றத்துக்கு அழைக்கிறார்.  குந்தாணியின் வீடும், நீதிமன்றமும் 20 அடி தூரத்தில் இருக்கிறது.  திருமலைவேலு, பாதி கழுவி மீனை அப்படியே வைத்து விட்டு, நீதிமன்றம் சென்று விடுகிறார்.

மதியம் 2 மணிக்கு பசியோடு வருகிறார் குந்தாணி. வந்து என்ன சமையல் செய்துள்ளாய் என்று வேல்முருகனிடம் கேட்கிறார்.  அம்மா, ஒரு வகை மீனை குழம்பு வைத்து விட்டேன்.  இன்னொரு வகை மீனை பாதி கழுவிக் கொண்டிருந்த திருமலைவேலு, தாங்கள் அழைத்ததாக நீதிமன்றம் சென்று விட்டார். அதனால் என்ன செய்வது என்று தெரியவில்லை. அந்த மீன் அப்படியே இருக்கிறது என்கிறார்.

வந்ததே கோபம் குந்தாணிக்கு…. காலை 10 மணிக்கு வாங்கிய மீனை அப்படியே சமைக்காமல் வைத்திருக்கிறாயே என்ன மனுஷன் நீ…  கொஞ்சமாவது அறிவு இருக்கா… ஃப்ரிஜ்ல வைக்கணும்னு கூடவா தெரியாது… அறிவுகெட்ட முண்டம்… உன்னையெல்லாம் வெச்சு வேலை வாங்கணும்னு எனக்கு தலையெழுத்து…  என்று தாறுமாறாக கத்துகிறார். கத்தி விட்டு வெளியே போகச் சொல்கிறார். வேல்முருகனும் வந்து விடுகிறார்.

மறுநாள் காலை பத்து மணிக்கே, வேல்முருகனுக்கு மெமோ.  “இந்நீதிமன்ற மசால்ச்சி விடுப்பில் சென்றதால், மசால்ச்சி பணிப் பொறுப்பை செய்ய அலுவலக உதவியாளராகிய உம்மிடம் ஒப்படைக்கப்பட்டது. மசால்ச்சி பணியில் ஒரு பகுதியான நீதிபதி வீட்டில் சமையல் செய்ய ஒப்படைக்கப்பட்டது. பகல் 2.25 மணிக்கு காலையில் வாங்கி வைத்த மீனை ஏன் சமையல் செய்யவில்லை என நீதிபதி அவர்கள் கூறியபோது என் ஒருவரால் மட்டும் சமையல் செய்ய இயலாது என்று எதிர்த்து நீதிபதியிடம் கூறியுள்ளீர்கள். இது உம்முடைய கீழ்படியாமையை காட்டுகிறது.” என்று கூறி, மூன்று தினங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு மெமோ கொடுத்துள்ளார்.

IMG_0004

மறுநாள் மீண்டும் வீட்டில் சமையல் செய்யுமாறு அனுப்பப்படுகிறார் வேல்முருகன்.  காலையிலயே குந்தாணி என்ன சமைக்க வேண்டும் என்று மெனுவை சொல்லி விடுகிறார்.  ரசம், பீன்ஸ் பொறியல், முருங்கைக் கீரை மற்றும் ஒரு கிலோ மீன் வருவல் என்று மெனுவை சொல்லி விடுகிறார்.

ஏற்கனவே மீனை சரியாக கழுவாமல் வாங்கிக் கட்டிக் கொண்ட அனுபவம் உள்ள வேல்முருகன், இந்த முறை, நீதிமன்றத்தில் உள்ள இன்னொரு அடிமை கம் அலுவலக உதவியாளர் கிங்ஸ்டனை உதவிக்கு அழைக்கிறார்.  இந்த முறை மீன் வாங்கி வரும் இடத்திலேயே தலை எடுத்து சுத்தம் செய்யப்பட்டே வாங்கி வரப்பட்டிருக்கிறது.  இருவரும் சேர்ந்து மீனை நன்றாக சுத்தம் செய்கிறார்கள்.   மீனை சுத்தம் செய்து விட்டு, நன்றாக மசாலா தடவி ஊறவைத்து, குந்தாணிக்குப் பிடித்தது போல சுவையாக வறுத்து வைக்கிறார் வேல்முருகன்.   மொத்தம் 40 துண்டுகள் மீன் உள்ளன.   குந்தாணியின் தந்தை வீட்டில் இருக்கிறார்.  வேல்முருகனின் சுவையான மீன் வருவலின் வாசனை கண்டு, குந்தாணியின் தந்தை 10 துண்டுகள் மீனை எடுத்து சாப்பிடுகிறார்.

மதியம் 2 மணிக்கு குந்தாணி வருகிறார்.  என்ன சமையல் செய்தாய் காட்டு என்கிறார்.   வேல்முருகன் மீன் வருவலைக் காட்டியதும், இப்படியா சமைப்பது… அப்படியே செதிலோடு சமைத்திருக்கிறாயே… என்று கத்துகிறார்.  அப்போது அருகில் இருந்த கிங்ஸ்டன் என்ற அடிமை, “அம்மா… இது செதில் இல்லம்மா… இந்த மீன் சாளை மீனும்மா… அது தோல்மா.. செதிலே இதில இருக்காது” என்கிறார்…

உடனே ஆத்திரமடைந்த குந்தாணி… “நீ உன் ஸ்டாஃப்புக்குத்தானே சப்போர்ட் பண்ணுவ….“ என்று கத்தி விட்டு, அந்த மீன் சட்டியை அப்படியே எடுத்துக் கொண்டு நீதிமன்றத்தில் நீதிபதி அறைக்குச் செல்கிறார்…  நீதிமன்றத்தில் உள்ள அத்தனை ஊழியர்களையும் அழைக்கிறார். “பாருங்க இவன் எப்படி மீனை வருத்து வெச்சுருக்கான்னு… அப்படியே செதிலோட வருத்து வெச்சுருக்கான் பாருங்க“ என்று மீனை எடுத்துக் காட்டுகிறார்.   அந்த நீதிமன்றத்தின் ஹெட் க்ளர்க் வேல்முருகேசன்.  அவர் அந்த மீனைப் பார்த்து விட்டு, “அம்மா… இது சாளை மீன்… இதில் செதில் இருக்காது…“ என்கிறார்… “நீங்க எல்லாரும் உங்க ஸ்டாஃப்புக்குத்தானே சப்போர்ட் பண்ணுவீங்க…  இது செதில்தான்… எனக்குத் தெரியும்.. எனக்கு வெஷத்தை வெச்சு கொல்லப்பாக்குறான்…  எனக்கு செதிலோட சமைச்சு வெச்சதும் ஒண்ணுதான்… வெஷத்தை வெக்கறதும் ஒண்ணுதான்… அய்யோ… இவனை நம்பி என் புள்ளைங்களையெல்லாம் ஸ்கூலுக்கு அனுப்பறேனே…“ என்று ஆத்திரத்தில் கத்துகிறார் குந்தாணி.

sam_0410

வேல்முருகனைப் பார்த்து, “ஏய்.. நீ வெளியே போ… உள்ள வந்த உன்ன தொலைச்சுப் புடுவேன்“ என்கிறார். ஹெட் கிளர்க்கைப் பார்த்து, குந்தாணி, “இந்த நாயி என் கண்ணுலயே படக் கூடாது… கோர்ட் கேம்பஸ்குள்ளயே நொழையக் கூடாது.. அவனுக்கு உடனே சஸ்பென்ஷன் ஆர்டர் ரெடி பண்ணுங்க“ என்கிறார்.  வேல் முருகன் வெளியே சென்று வாசலிலேயே நிற்கிறார்.  ஒரு மணி நேரம் கழித்து ஹெட் க்ளர்கிடம் போன் செய்து கேட்கிறார்.  இல்லப்பா நீ போ என்று கூறுகிறார் ஹெட் கிளர்க். சார் நான் அட்டென்டன்சிஸ் கையெழுத்துப் போட்டிருக்கிறேன்…  நான் எப்படிப் போக முடியும் என்று கேட்கிறார்..  நான் என்னப்பா பண்றது… வெயிட் பண்ணு என்கிறார்.  இரவு ஒன்பது மணி வரை, நீதிமன்றம் எதிரில் இருக்கும் டீக்கடையிலேயே காத்திருக்கிறார் வேல்முருகன்.  ஆனால் எந்தத் தகவலும் வராததால், ஹெட் கிளர்க்கை போனில் தொடர்பு கொள்கிறார். அவர் எந்த உத்தரவும் வரவில்லை.  நாளை நீதிமன்றத்துக்கு வா… பார்க்கலாம் என்கிறார்.

ஏற்கனவே கொடுத்த மெமோவுக்கு விளக்கத்தோடு நீதிமன்றம் செல்கிறார் வேல்முருகன். தனது விளக்கத்தில் வேல்முருகன் “குறிப்பாணையில் கண்ட 19.11.2012 அன்று மசால்ச்சி பணிப்பொறுப்பு  என்னிடம் அலுவலக ரீதியாக ஒப்படைக்கப்படவில்லை. வாய்மொழியாக சொல்லப்பட்டது. உத்தரவின்படி மீன் குழம்பு சமையல் செய்தேன். சமையல் செய்யும் பழக்கம் இல்லாததால், ஒரு வகை மீன் குழம்பு வைத்து முடித்து விட்டு, இன்னொரு வகை மீனை கழுவி சுத்தம் செய்ய தாமதம் ஆகி விட்டது.  மேலும் தாங்கள் தற்காலிகமாக தங்கியிருந்த ADM குடியிருப்பில் இருந்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட குடியிருப்புக்கு அன்றுதான் மாற்றம் செய்து இருந்ததால், சமையல் செய்யும் சாமான் மற்றும் மளிகைப் பொருட்களைத் தேடிக் கண்டுபிடிக்க மிகவும் காலதாமதமாகி விட்டது. தாமதம் வேண்டுமென்றோ, விருப்பப்பட்டோ செய்யப்படவில்லை. தற்செயலாக நடந்த தாமதம்தான்.  தாமதத்திற்கு மன்னித்துக் கொள்ளவும். இது மாதிரியான தாமதங்கள் இனி வரும் காலங்களில் நடைபெறாது என்று உறுதி கூறுகிறேன்.” என்று வேல்முருகன் விளக்கம் எழுதிக் கொடுக்கிறார்.

IMG_0009

கடைசி வாக்கியத்தைப் பார்த்தீர்களா… இதுதான் அடிமைகளின் சிறப்பம்சம்.

விளக்கத்தோடு நீதிமன்றம் சென்றால், ஹெட் கிளர்க், அம்மா உங்களை நீதிமன்றத்துக்குள்ள விடக் கூடாதுன்னு சொல்லியிருக்காங்க. நீ வெளியில வெயிட் பண்ணு என்கிறார். சார் எனக்கு பணி இடை நீக்க உத்தரவு வழங்கப்படவில்லை.  எப்படி வேலைக்கு வராமல் இருக்க முடியும் என்று கேட்கிறார்.  எனக்குத் தெரியாது காத்திருங்கள் என்கிறார் ஹெட் கிளர்க்.

வேல்முருகன் தினமும் நீதிமன்றம் எதிரில் உள்ள டீக்கடையிலேயே அமர்ந்திருக்கிறார்.   ஆனால்  எந்த உத்தரவும் வழங்கப்படவில்லை.  இறுதியாக ஏழு நாட்கள் கழித்து பணி இடை நீக்கம் செய்யப்பட்ட உத்தரவு வேல்முருகனுக்கு வழங்கப்படுகிறது.

IMG_0014

பணி இடைநீக்க உத்தவு கிடைத்ததும், வேல் முருகன் என்ன செய்வதென்று புரியாமல், வள்ளியூர் வழக்கறிஞர் சங்கத் தலைவரை சந்திக்கிறார்.  தனக்கு உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறார்.  வழக்கறிஞர் சங்கத் தலைவர் உட்பட 25 பேர் குந்தாணியை சந்திக்கிறார்கள்.  அவர்களிடம் குந்தாணி, “இந்த ஸ்டாஃப் அத்தனை பேரும் திமிரு புடிச்சவனுங்க… இவனுங்ககிட்ட வேலை வாங்க முடியாது.  இது அட்மினிஸ்ட்ரேஷன் சம்பந்தப்பட்ட விஷயம் (எது மீன் கொழம்பு வைக்கறதா… ?) நீங்க இதுல தலையிடாதீங்க…  வேல்முருகன் என்ன உங்களுக்கு சொந்தக்காரரா… ?  நான் உங்க எல்லாருக்கும் ஆர்டர்ஸ்  (சாதகமான தீர்ப்புகள்) தந்துக்கிட்டுதானே இருக்கேன்.. ஏதாவது மேட்டரை டிஸ்மிஸ் பண்றேனா…..  உங்களுக்கு எதுனா பிரச்சினைனா சொல்லுங்க… இந்த விஷயத்துலையெல்லாம் தலையிடாதீங்க…”

வெளியே வந்த வழக்கறிஞர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா ?  நீதிமன்ற ஊழியரை அநியாயமாக இடைநீக்கம் செய்த நீதிபதிக்கு எதிராக நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம் செய்திருப்பார்கள் என்று நினைத்தீர்களென்றால், நீங்கள் முட்டாள்கள்.   வழக்கறிஞர்களுக்கு சாதகமாக தீர்ப்பு தரும் நீதிபதியை ஒரு முட்டாள் வக்கீல் கூட பகைத்துக் கொள்ளமாட்டான்.  அதுவும் ஒரு அடிமைக்காக நீதிபதியை யாராவது பகைத்துக் கொள்வார்களா… ? சாதகமாக தீர்ப்புக் கொடுக்கும் நீதிபதி இருந்தால், கிளையன்டுகளிடம், வசூலை பின்னி எடுக்கலாம் அல்லவா ? நீதிபதிகள் முன்னாள் வழக்கறிஞர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.  வழக்கறிஞர்கள் வெளியே வந்து, “அம்மாக்கு கொஞ்சம் கூட உன் மேல கோவம் கொறையலப்பா…. எங்களால எதுவும் செய்ய முடியாதுப்பா“ என்று கைவிரித்து விடுகிறார்கள்.

வேல்முருகன், உடனடியாக அடிமைகள் சங்கத்தில் (நீதித்துறை ஊழியர்கள் சங்கம்) சென்று முறையிடுகிறார்.  அடிமைகள் சங்கப் பிரதிநிதிகள், தலைமை நீதிமன்ற நடுவர் (Chief Judicial Magistrate) சாருஹாசினி என்பவரிடம் சென்று முறையிடுகிறார்கள்.  அவர் உடனே கவனிப்பதாக வாக்களித்து, குந்தாணியிடம் பேசுகிறார்.  “மேடம்… அவன் ரொம்ப திமிர் பிடிச்சவன் மேடம்… அவனையெல்லாம் சஸ்பெண்ட் பண்ணாத்தான் அடங்குவான்.. நீங்க இதில தலையிடாதீங்க மேடம்“ என்று கூறிவிடுகிறார் குந்தாணி. குந்தாணி இப்படிக் கூறியதும், நீதிபதி சாருஹாசினி, தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று அடிமைகள் சங்கப் பிரதிநிதிகளிடம் கூறி விடுகிறார்.

தங்கள் முயற்சியில் சற்றும் சளைக்காத அடிமைகள் சங்கப்பிரதிநிதிகள், திருநெல்வேலி மாவட்ட நீதிபதியிடம் சென்று முறையிடுகிறார்கள்.  அவர் உடனடியாக தலைமை நீதிமன்ற நடுவரிடம் பேசுகிறார். தலைமை நீதிமன்ற நடுவர் சாருஹாசினி, தான் ஏற்கனவே பேசி விட்டதாகவும், குந்தாணி முடியவே முடியாத என்று மறுத்ததையும் தெரிவிக்கிறார்.

அதற்கு அடுத்த வாரத்தில் திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில், நீதிமன்ற நடுவர்களின் கூட்டம் நடைபெறுகிறது.  அந்தக் கூட்டத்திற்குச் சென்ற குந்தாணியைப் பார்த்ததுமே, மாவட்ட நீதிபதி ராஜசேகர், குந்தாணியைப் பார்த்து, “ஏம்மா… மீன் கொழம்பு வைக்கலன்னா சஸ்பென்ட் பண்ணுவியாம்மா….” என்று கேட்கிறார்.  குந்தாணி “அய்யா… உடனே ரத்து பண்ணிட்றேன்யா…“ என்று கூறி விட்டு, கடந்த வியாழனன்று, வேல்முருகனின் பணி இடை நீக்கத்தை ரத்து செய்து உத்தரவிடுகிறார்.

இந்தக் குந்தாணி சென்ற இடமெல்லாம் ஏதாவது ஒரு ஏழரையை இழுத்து விடாமல் ஓய மாட்டார் என்கிறார்கள். இதற்கு முன் இந்த குந்தாணி செங்கோட்டை நீதிமன்றத்தில் வேலை பார்த்தார்.  அப்போது வழக்கறிஞர்களோடு தகராறு செய்ததால், வழக்கறிஞர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் மாற்றப்பட்டார்.

தற்போது பணியாற்றும் வள்ளியூர் நீதிமன்றத்துக்கு வந்ததும், வழக்கறிஞர்களைப் பகைத்தால் பின்னி விடுவார்கள் என்பதை உணர்ந்ததும், வழக்கறிஞர்களுக்கு சாதகமாக தீர்ப்பை வாரி வழங்கி, தனது சாடிச உணர்வை தனக்குக் கீழ் பணியாற்றும் ஊழியர்களிடம் காண்பித்து வருகிறார் இந்தக் குந்தாணி.

தற்போது பணி இடை நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் பணியில் சேர்நதிருக்கும் வேல் முருகன், வள்ளியூர் நீதிமன்றத்தில் குந்தாணியால் பணி இடை நீக்கம் செய்யப்படும் நான்காவது ஊழியர்.

ரங்கம்மாள் என்ற உதவியாளர் – பென்ச் க்ளர்க், பதிவேடுகளை சரியாக பராமரிக்கவில்லை என்று இரண்டு முறை பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.  இவரின் மருமகன், இந்தக் குந்தாணியைப் போலவே ஒரு நீதிமன்ற நடுவராக இருந்தும், ரங்கம்மாள் தற்பொழுதும் பணி இடைநீக்கத்தில் இருக்கிறார்.

நெல்சம் சாம்ராஜ் என்ற இளநிலை உதவியாளர்.   இவர் செய்த குற்றம், உடல் நிலை சரியில்லாததால் மருத்துவ விடுப்பில் சென்றது.

மூன்றாவதாக குந்தாணியின் கோபத்துக்கு பலியானவர், வள்ளியூர் நீதிமன்றத்தின் வாட்ச்மேன்.  இவர் செய்த குற்றம் மிகப் பெரிய குற்றம்.  ஒரு நாள் இரவு 11.30 மணிக்கு குந்தாணி தன் வீட்டை விட்டு வெளியே வந்திருக்கிறார்.  அப்போது அந்த வாட்ச்மேன் சட்டையில்லாமல் அமர்ந்திருக்கிறார்.   இரவு 11.30 மணிக்கு நீதிபதி வருகையில் சட்டை இல்லாமல் அமர்ந்திருந்ததற்காக அவரும்  பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

இந்த காரணங்களுக்காக, வள்ளியூர் மாவட்ட நீதிபதி கிறிஸ்டல் பபிதா குந்தாணி என்று அழைக்கப்படுகிறாரா என்றால் இல்லை. இவரால் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட யாரையுமே சஸ்பெண்ட் செய்ய நீதிமன்ற நடுவருக்கு அதிகாரம் இல்லை.   இவர் சஸ்பெண்ட் செய்து பிறப்பித்த உத்தரவுகள் எதுவுமே செல்லாது.   தமிழ்நாடு அடிப்படை பணியாளர்கள் விதிகளின் படி (Tamil Nadu Basic Service Rules), நீதித்துறையைப் பொறுத்தவரை, அலுவலக உதவியாளர், வாட்ச்மேன் உள்ளிட்ட அத்தனை பணியாளர்களையும் சஸ்பெண்ட் செய்யும் அதிகாரம் படைத்தவர், மாவட்ட நீதித்துறை நடுவர்.   அதாவது தலைமை நீதித்துறை நடுவர் (Chief Judicial Magistrate) ஒரு மாவட்டத்துக்கு ஒரு தலைமை நீதித்துறை நடுவர்தான் இருப்பார்கள்.  ஆனால், கிறிஸ்டல் பபிதாவைப் போல பல நீதித்துறை நடுவர்கள் இருப்பார்கள்.  திருநெல்வேலி மாவட்டத்தையே எடுத்துக் கொண்டால்,  திருநெல்வேலி, தென்காசி, வள்ளியூர், அம்பாசமுத்திரம், சங்கரன்கோவில், செங்கோட்டை, சேரன்மகாதேவி, நாங்குநேரி, சிவகிரி என்று ஒவ்வொரு வட்டத்திற்கும் ஒரு நீதிமன்ற நடுவர் இருக்கிறார்கள்.  இவர்களில் ஒருவர்தான் கிறிஸ்டல் பபிதா என்ற குந்தாணி.   இந்த அத்தனை வட்டங்களில் உள்ள நீதிமன்றத்தில் பணியாற்றும் அலுவல உதவியாளர் வரையிலான பதவியில் உள்ளவர்களை பணி இடைநீக்கம் செய்யும் அதிகாரம், தலைமை நீதித்துறை நடுவரிடம் மட்டுமே இருக்கிறது.  அலுவலக உதவியாளரையே தலைமை நீதித்துறை நடுவர்தான் சஸ்பென்ட் செய்ய முடியும் என்றால், இளநிலை உதவியாளர், உதவியாளர் போன்ற பணியிடங்களில் உள்ளவர்களை, மாவட்ட நீதிபதி (Principal District Judge) மட்டுமே சஸ்பெண்ட் செய்ய முடியும்.  தனக்கு ஒருவர் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரம் இருக்கிறதா, இல்லையா என்பது கூட தெரியாமல், புத்தகக் கண்காட்சியில் நோட்டீஸ் விநியோகிப்பவனைப் போல சஸ்பென்ஷன் உத்தரவுகளை வழங்கிக் கொண்டிருக்கும் இந்த வள்ளியூர் மாவட்ட நீதித்துறை நடுவர் கிறிஸ்டல் பபிதா, குந்தாணியா இல்லையா… நீங்களே கூறுங்கள்…  அடிப்படை சட்டமே தெரியாத இவரைப் போன்றவர்களிடம்தான் நமது நீதித்துறை சிக்கியிருக்கிறது.  கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் உதயக்குமாருக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்தது, இதே குந்தாணிதான்.

basic_service_rules_Page_01

basic_service_rules_Page_24

 

அன்பார்ந்த தோழர்களே… வேல்முருகனுக்கு நடந்தது இனி யாருக்கும் நடக்கக்கூடாது.   தமிழகத்தில் உள்ள அத்தனை நீதிமன்றங்களிலும், அலுவலக உதவியாளர்களாக உள்ளவர்கள் யாரையும், நீதித்துறை நடுவர்களோ, நீதிபதிகளோ, வீட்டு வேலைக்கு பயன்படுத்தக் கூடாது என்று அத்தனை நீதிபதிகளுக்கும் உத்தரவிடுமாறு, தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பில், சென்னனை உயர்நீதிமன்றப் பதிவாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.   இது குறித்து வெகு விரைவில், பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது என்பதையும், சவுக்கு மகிழ்ச்சியோடு உங்களிடம் பகிர்ந்து கொள்கிறது.

IMG_0001

IMG_0002

 

குறிப்பு :  சில தோழர்கள் குந்தாணி என்ற சொல் குறித்து சந்தேகங்கள் எழுப்பியுள்ளனர்.  

கிராமப்புரங்களில், அறிவில்லாத பெண் என்ற பொருளில் இந்தச் சொல் புழக்கத்தில் உள்ளது.

 அதே பொருளில்தான் இக்கட்டுரையிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

 

Comments  

 
0 #63 KUPPU 2013-04-28 08:21
வேல்மூரூகன் சம்பளம் ரூ.14000/- கீம்பளம் ரூ.6000/-
Quote
 
 
0 #62 Real Reason 2013-04-21 08:09
அதற்கு காரணம் , கொல்ல முயல்பவர் வேலைகாரனை முதலாலியென்று கொல்வர்கல் . அது பனிவு அல்ல தற்காப்பு.
Quote
 
 
0 #61 Family Man Rajesh 2013-04-18 18:26
This is a serious Human Rights Violation and misuse of power.
We from Mens Rights Organizations including SIFF and CRISP will support your Public Interest Litigation.
Please share the information of the case number.
Quote
 
 
0 #60 அபிப் ரகுமான் 2013-04-17 11:46
பார்த்தாலே தெரிகிறது மீன் நல்லா திம்பாங்கன்னு
Quote
 
 
0 #59 VIJAYAN POLUR 2013-04-16 22:27
இதல்லம் நமக்கு சகஜம்.
Quote
 
 
0 #58 Rajesh nellai 2013-04-08 21:31
Latest news about Kunthani. She assaulted her staff Rengammal two days back. The association brought the same to the knowledge of Highcourt.
Quote
 
 
0 #57 Govi.Ravikumar 2013-01-12 12:47
அரசு ஊழியர்களை  காலில் விழுகிறா ர்கள் என தரக்கு றைவாக பேசிய நீத ிபதிகள் அந்த பத விக்கு அறுகதை அ ற்றவற்கள் ஆவார் கள்.ஊழியர்களிடம் உட னடியாக மண்ணிப்ப ு கேட்டு தானே ப தவி விலகினால்தா ன் நீதிபதி என்ற  சொல்லுக்கு அர் தம் உண்டு.....
-TAMILNADU JUDICIAL ASSOCIATION
Quote
 
 
0 #56 Govi.Ravikumar 2013-01-12 12:09
அரசு ஊழியர்களை  காலில் விழுகிறா ர்கள் என தரக்கு றைவாக பேசிய  நீதிபதிகள் அந்த  பதவிக்கு அறுகத ை அற்றவற்கள் ஆவ ார்கள்.ஊழியர்களிடம் உட னடியாக மன்னிப்ப ு கேட்டு தானே ப தவி விலகினால்தா ன் நீதிபதி என்ற  சொல்லுக்கு அர் தம் உண்டு.....
Quote
 
 
+3 #55 jo.tamilselvan 2013-01-06 15:48
பதவி வந்தால் திமிர் வரும். அறிவு காணாமல் போகும். நீதிபதிக்கு வந்தால் நீதி என்னாவது?
Quote
 
 
0 #54 lawyer babu 2012-12-30 12:55
DEAR SAVKU U HAV BEAUTYFULL NEWS FROM TIRUPUR DISTRICT JUDGE PLS TRY
Quote
 
 
+12 #53 லார்டு லபக்குதாஸ் 2012-12-22 14:22
உயர் நீதிமன்றங்களைப் பற்றி இன்னொரு விஷயம் இருக்கிறது. உயர்நீதிமன்றங்க ளில் OA என்ற வெள்ளுடை அணிந்த பணியாளர்கள் நீதிபதி அமர்ந்திருக்கும ் மேடைக்கருகே உட்கார்ந்து இருப்பார்கள். இவர்கள்தான் நீதிபதிக்கு ஆல் இன் ஆல் எடுபிடி செய்வது முதல் தீர்ப்பான கேஸ் கட்டுகளை உரிய செக்ஷனுக்கு எடுத்து செல்வது போன்ற அலுவலக பணிகளை செய்வது, 'உஸ்' சப்தம் போடுவது என்று கடமை ஆற்றுவார்கள். நீதிபதி ஆங்கிலத்தில் தீர்ப்பு வாசிப்பது வழக்கறிங்கருக்க ு புரிகிறதோ இல்லையோ இவர்களுக்கு நன்றாக புரியும். ஒரு வழக்கறிஞருக்கு தீர்ப்பு சாதகமாக அமைந்துவிட்டால் ( முன்ஜாமீன் போன்ற வழக்குகளில்) உடனே கோர்ட் ஹாலுக்கு வெளியே அந்த வழக்கறிஞரை விரட்டிக்கொண்டு போய் தலையை சொரிவார்கள், பலசமயங்களில் உரிமையோடே காசு கேட்பார்கள். வக்கீல்களும் இவர்களின் தயவு தேவைப்படும் என்பதால் ரூ.10, 20, 50 என்று கொடுப்பார்கள். அதேபோல கிளையண்டுகளிடம் இவர்கள் மிரட்டலாகவே எப்படியும் ரூ.100 முதல் 300 வரை காசு பிடுங்கி விடுவார்கள். வழக்கறிங்கர்களு ம் தங்கள் கிளையண்டுகளிடம் இந்த OA க்களுக்கு சம்திங் கொடுக்குமாறு சிபாரிசு செய்வார்கள். இது என்ன ஊரில் நடக்காததா, இதை போய் பெருசா சொல்றியே என்று உங்களுக்கு தோணுகிறதா? ஒரு விஷயம் ..... ஒரு சாதாரண போலீஸ் கான்ஸ்டபிளோ அல்லது வேறு அரசு ஊழியரோ ஒரு 1000 ரூபாய் லஞ்சம் வாங்கி மாட்டிக்கொண்டால ் அந்த வழக்கு கடைசியில் உயர்நீதிமன்றம் வரை அப்பீலுக்கு வரும். மற்ற அரசு துறைகளின் ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் அதை விசாரிக்கும் உயர்நீதிமன்றம், தன் வளாகத்திலேயே அதுவும் நீதிபதி அமர்ந்திருக்கும ் ஆசனத்திலிருந்து 50 அடி தூரதிற்குள்ளாகவ ே லஞ்சம் புழங்குவது கண்டு சும்மா இருக்கலாமா? ஊருக்கெல்லாம் குறி சொல்லும் பல்லி கழனி பானைக்குள் விழுந்த கதைதான் நினைவுக்கு வருகிறது.
சவுக்கு இதைப்பற்றி எழுதுவதோடு ஆதாரத்தோடு உயர்நீதிமன்றத்த ுக்கு ஒரு புகாரும் அனுப்பவேண்டும். என்னது ..? ஆதாரம் வேண்டுமா? நாளைக்கே உயர்நீதிமன்ற கோர்ட் ஹாலுக்கு வெளியே (குறிப்பாக முன்ஜாமீன் வழக்குகள் நடைபெறும் கோர்ட்) செல்போன் காமிராவோடு நில்லுங்கள்..ஏகப்பட்ட ஆதாரங்கள் கிடைக்கும்.
Quote
 
 
-17 #52 AAAA 2012-12-20 22:14
தீர்ப்பை விமர்சிக்கலாம். தீர்ப்பை எழுதுபவர்களை விமர்சிக்க கூடாது. அது நீதிமன்ற அவமதிப்பாகும்.
Quote
 
 
-2 #51 Ndevkarthik 2012-12-20 20:03
:lol: :-* :P
Quote
 
 
+1 #50 thamizhmagan 2012-12-20 13:55
[ஃஉஒடெ நமெ="மனிமரன்1"]கும்கி நல்லா இருக்கு[/ஃஉஒடெ]
யோவ்.. சரியான குசும்புயா.
Quote
 
 
+9 #49 thamizhmagan 2012-12-20 13:54
அய்யோ அய்யோ... தலயில் தலயில் அடிச்சிக்கலாம் போல இருக்கு.. இந்தம்மா எல்லாம் எப்படி நீதிபதி ஆனான்க?? வெலன்கும் இந்தியா.
Quote
 
 
+6 #48 Warrant Balaw 2012-12-19 18:01
இந்தியாவில் உள்ள எந்த நீதிபதிக்கும், அடிப்படையான ஐந்து சட்டங்களை பற்றிய அறிவே கிடையாது என்கிற நிலையில் இதுபோன்ற சட்ட மீறல்கள் அதிகார துஷ்பிரயோகங்கள் சகஜம்தான். இது போன்றே நானும் கூட, மக்கு மங்களம் என்கிற பெண் நடுவரைப் பற்றி பிணை (ஜாமீன்) எடுப்பது எப்படி? என்கிற நூலில் பதிவு செய்துள்ளேன்.

நீதிமன்றத்தில் மற்றும் இல்லத்தில் நீதிபதிகளால் நடத்தப்படும் மனித உரிமை மீறல்கள்தாம் அதிகம். இது நீதிமன்ற ஊழியர்களுக்கு மட்டுமல்ல. நீதிமன்றத்தை நாடும் ஒவ்வொரு குடிமகனையும், அவர்களின் அடிமைகளாகத்தான் கருதுகிறார்கள். இதிலும் குறிப்பாக விசாரணையை எதிர் கொள்ளும் கைதிகள் என்றால் கேட்கவே வேண்டாம்.

எனது ஆராய்ச்சி புலனாய்வில், நீதிபதிகள் அது ஆணாக அல்லது பெண்ணாக இருந்தாலும் சரி, அவர்களது வயதுக்கு வந்த ஆணாக அல்லது பெண் குழந்தைகளானாலும ் சரி அவர்களின் ஜட்டி, பிரா, பனியன் போன்ற உள்ளாடைகளை கூட அடிமை ஊழியர்கள்தான் துவைக்கிறார்கள் .
Quote
 
 
+4 #47 johnral 2012-12-19 17:46
நெத்தி அடி தலைவா
Quote
 
 
+4 #46 ambaiadvocates 2012-12-18 20:41
இந்த மாதிரி கேவலமான ...... நபர்கள்.... எஙெஙும் உள்ளார்கள..... என்பது வேதனையான ஒன்ட்ரு....
Quote
 
 
+3 #45 Eswar 2012-12-18 18:06
i agree some of the Judicial officers is behaving like that. Nobody treat as inhumanity. But nobody dare to express the corruption,and bribary of the Judicial officers and judicial staff. All judicial officers except some who fear the soul licking the ass of the bribary. Their office assistants and bench clerks are acting as a pimp to sucj Judicial officers. Most of the staff i.e; O.A, M.C, Head Clerk, Typist, even Steno of the Court asking bribary to do their lawful regular work. Then how can they appeal with dare for their injustice. The corrupted staff are grown by the corrupted Judicial officers. Who strike the bell of these Cats.
Quote
 
 
+11 #44 G.K.Nadar, nellai 2012-12-17 20:52
வள்ளியூர் மகளிர் காவல்நிலையம் செல்லும் வழியில் உள்ள சரவணா ஹோட்டலில் மீன் சாப்பாடு நன்றாக இருக்கும், விலையும் குறைவு...
Quote
 
 
+19 #43 உமர் பின் கத்தாப் 2012-12-17 18:31
இஸ்லாமிய பேரரசை நிறுவிய உமர், நாட்டை வெற்றிகொண்டு கோட்டையில் செல்கையில் தனது உதவியாள் ஒட்டகத்தில் அமர்ந்திருக்க வாகன கையிற்றை பிடித்துக்கொண்ட ு சென்றாராம். மக்களெல்லோரும் ஒட்டகத்தில் இருப்பவர் தான் கலிபா என்று நினைத்தனராம். நீதிபதிகள் மட்டுமில்லை, பொதுவாக எல்லோருமே வேலையாட்களை கண்ணியமாக நடத்த முன் வர வேண்டும்.
Quote
 
 
+12 #42 vsankar 2012-12-16 11:07
தனி நபர் துதி என்பது சங்க கால முதல் வழக்கிலிருந்த ஒன்ட்ராகும்.இந்த அடிமை மனப்பான்மை குரித்து யாரும் வெட்கப்பட்டதாக தெரியவில்லை.
Quote
 
 
+3 #41 c r chandrasekaran 2012-12-16 05:22
she must be hauled up by the judicial admn in terms of judicial officers disciplinary rules and suitably punished. Such action should be widely circulated and international media should take note. but i must add that she is not alone. i am afraid if we know the attitude of family members of judicial officers.
Quote
 
 
+11 #40 Iniyan 2012-12-15 23:02
அதிர்ச்சி அளிக்கும் செய்தி. நாம் அனைவரும் வெட்கி தலை குனிய வேண்டும். இப்படிப்பட்ட சட்டம் இன்னுமா இந்தக் குடியரசு நாட்டில் இருக்கிறது?அரசு வேலைக்கு சென்றால் இனி சமையல் தெரிந்தால்தான் எடுப்பார்களோ என்னவோ?
Quote
 
 
-13 #39 Thappu thappu 2012-12-15 21:10
the Supreme Court has held in many cases that the office assistants and Masaljees can be used in the household duties. thus the present conditions of the O.A. in judiciary is in pathetic situation. it is not the fault of the Judge. it is the fault of the system. then it is false to state that J.M is not empowered to suspend the staff. the head of the unit has every power to suspend the staff. Savukku should verify the law before publishing the articles. Aravekkaadu article.
Quote
 
 
-18 #38 rajsamy 2012-12-15 17:08
நீதிபதிகளை பொறுத்தவரை நீதிமன்ற பணிகளை வீட்டிலும் செய்ய வேண்டிய நிலை உள்ளது. அதனால வீட்டு பணிகளை சரிவர செய்ய முடியாது. மேலும் பெண் நீதிபதியாக இருந்தால் வீட்டு வேலைகளை அவரே செய்வது என்பது மிகவும் கஷ்டம். இவர்கள் வீட்டிலும் நீதிமன்றத்திலும ் பனி செய்யவேண்டிய நிலை உள்ளது இதற்குத்தான் அலுவலக உதவியாளர்கள் நியமனம் செய்யபடுகிறார்க ள். 50% மேலான அலுவலக உதவியாளர்கள் சரிவர தங்களது பணியை செய்வதில்லை. பணி செய்யும்படி அறிவுருதபட்டாலு ம் அதை சரியாக செய்வதில்லை. பெண் நீதிபதிகளை மதிப்பதும் இல்லை. நீதிபதிகளை பற்றி தவறான பொய்யான புகார்களை உயர் நீதிமன்றதிருக்க ு அனுப்புகின்றனர் . பணி செய்ய விரும்பாதவர்களு ம், பணம் சம்பாதிப்பதே குறிக்கோளாக உள்ளவரும், விரும்பத்தகாத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். எனவே உயர்நீதிமன்றம் இதை முழுமையாக விசாரித்து அலுவலக உதவியாளர் என்ற பதவியை நீக்கி விட்டு பொது உதவியாளர் என்ற பதவியை ஏற்படுத்த வேண்டும் .
தற்பொழுது பணி செய்யாமல் இருபவர்களை நீக்கம் செய்ய வேண்டும். உதவியாளர்களை வசைபடுபவர் மீது நடவடிக்கை
எடுக்க வேண்டும். இது ஒன்றே தீர்வாக அமையும். மேலும் நீதிபதிகளுக்கு தேவையான பணியாளர்களை அவர்களே தேர்வு செய்து கொள்ள அனுமதித்து அதற்கான சம்பளத்தை நீதிபதிகள் மூலமாக கொடுக்கலாம் . இது அரசிற்கு செலவை குறைக்கும்.
இதனால் குறைகளும் புகார்களும் எழ வாய்ப்பில்லை.
Quote
 
 
-8 #37 rajsamy 2012-12-15 17:06
சவுக்கு பெரும்பாலான செய்திகளை உலககிற்கு வெளிச்சத்திற்கு கொண்டுவருகிறது இதன் மூலம் நன்மை உண்டாகட்டும் . சவுக்குகுற்றங்க ளை வெளிபடுத்துகிறத ு ஆனால் புகார் கொடுபவர்களை பற்றி கண்டுகொள்வதில்ல ை. மனிதனை மனிதன் அடிமைகளாக நடுத்துவது மிக மோசமான செயல். இது விசாரிக்கப்படவே ண்டும் அதே நேரத்தில் புகார் கொடுபவரையும் தெரிந்து கொள்ள வேண்டும். அரசாங்க பணிகள் அவரவர் தகுதிக்கு ஏற்ப நியமிக்கபடுகிரர கள். அவரவர் வேலையை அவர்தான் செய்ய வேண்டும்.நீதித்துறையை பொறுத்தவரை அலுவலக உதவியாளர்கள் நேர்முக தேர்வின்போது வீட்டு பணி உட்பட எல்லா பணிகளையும் செய்யவேண்டும் என்று வேண்டுகோளுக்கு பின்னரே அதை சம்மதித்து பணியில் சேருகின்றனர். பணியில் சேர்ந்த இதை செயயமாட்டேன் அதை செயய மாட்டேன் எனக்கு பிடித்தவேலையை மட்டுமே செய்வது என்ற நிலைப்பாடு சரியானதல்ல. மேலும் அலுவலக உதவியாளர்களரகளை அடிமைகளாக வசைபாடுவதும் நியாயம் அல்ல.
Quote
 
 
+3 #36 Thangamani 2012-12-15 16:05
ஜனயக நாடில் சக்கஜமப்ப
Quote
 
 
+4 #35 nellai suresh 2012-12-15 16:04
good job savukku.
Quote
 
 
+7 #34 anbuselvan 2012-12-15 15:48
ஒரு நீதிபதிக்கு இது அழகில்லை....
செய்தி உண்மையானால், அந்த நீதிபதியை பற்றி படிக்கவும், கேட்கவும் நன்றாகவே இல்லை....
Quote
 
 
-2 #33 ராமன் 2012-12-15 13:25
[ஃஉஒடெ நமெ="ஈ.திருவல்லுவன்"]முயற்சி வெல்க! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி!எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /[/ஃஉஒடெ]
நீங்கள் மட்டும் தான் அடிக்கடி தூங்கி முழிச்சதும், தமிழா விழி ந்னு கருத்து பதியறீங்க!! மத்த படி தமிழும், தமிழனும், நல்லா தான் இருக்கான்.
Quote
 
 
+6 #32 PENIGABI 2012-12-15 12:12
கிரிஸ்டல் பபிதாவிடம் கொலஸ்ட்ரால்..அதாங்க கொழுப்பு ஜாஸ்தியா இருக்கு

அருமை சவுக்கு
Quote
 
 
+2 #31 முகமூடி 2012-12-15 09:57
மனித உரிமை, மண்ணாத உரிமைன்னு கொலைக்காரன்களுக ்கு சப்போர்ட் பண்றதை விட்டுட்டு சவுக்கு உருப்படியா இப்படி சேவை செஞ்சா நல்லது.
Quote
 
 
+3 #30 kumaran mumu 2012-12-14 23:21
the prevailing situation in juduciary is explained clearly.
Quote
 
 
+11 #29 Sakthi1 2012-12-14 22:58
Hi really shocking!!! Still we have such laws in our democracy, how shame… we are…
Quote
 
 
+7 #28 Tamilank 2012-12-14 22:00
முயற்சி வெல்க!
Quote
 
 
+49 #27 ஷாலி 2012-12-14 19:40
படிக்கவே கேவலமாக இருக்கிறது.இந்தப் பெண்ணெல்லாம் ஒரு நீதிபதி.இவரின் தீர்ப்பில் எத்தனை நிரபராதிகள் கம்பி எண்ணுகிறார்கள் என்று தெரியவில்லை.பார்ப்பதற்கு பளபளப்பு மின்னுகிறது.

கழுத்தில் சிலுவை.இவரைப்பற்றியே இயேசு கூறினார். “ வெள்ளை அடிக்கப்பட்ட கல்லறை.” என்று,உள்ளே அழுக்கு,வெளியே சிலுக்கு.

கிரிஸ்டல் பபிதாவிடம் கொலஸ்ட்ரால்..அதாங்க கொழுப்பு ஜாஸ்தியா இருக்கு.

சுதந்திரமாகப் பிறக்கும் மனிதர்களை அடிமையாக்கும் குந்தானி நீதி ஒழியட்டும்.!
நீதிமன்ற கொத்தடிமைகளை விடுவித்த சவுக்கு நீடுழி வாழட்டும்!
Quote
 
 
+42 #26 Rasakannu 2012-12-14 19:01
மேடம் நான் நல்லா மீன் குழம்பு வைப்பேன் .. வரட்டுமா ?
Quote
 
 
+12 #25 HARIMANIAN 2012-12-14 18:56
VERY PATHETIC. WE ARE THINKING THAT GOVT STAFFS ARE ENJOYING ALL SORT OF FREEDOM, BUT FROM THIS INCIDENT WE HAVE TO WITHDRAW OUR THINKING . WHHT A SHAME TO THE POOR FELLOW ?OH GOD ARE YOU THERE ?
Quote
 
 
+5 #24 inigo anto xavier 2012-12-14 17:52
MUYARCHEE VETTIE PERA VAAZHTUKKEL
Quote
 
 
+27 #23 nellai advocate 2012-12-14 17:32
அன்பார்ந்த தோழர்களே… வேல்முருகனுக்கு நடந்தது இனி யாருக்கும் நடக்கக்கூடாது. தமிழகத்தில் உள்ள அத்தனை நீதிமன்றங்களிலு ம், அலுவலக உதவியாளர்களாக உள்ளவர்கள் யாரையும், நீதித்துறை நடுவர்களோ, நீதிபதிகளோ, வீட்டு வேலைக்கு பயன்படுத்தக் கூடாது என்று அத்தனை நீதிபதிகளுக்கும ் உத்தரவிடுமாறு, தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பில், சென்னனை உயர்நீதிமன்றப் பதிவாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள் ளது. இது குறித்து வெகு விரைவில், பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது என்பதையும், சவுக்கு மகிழ்ச்சியோடு உங்களிடம் பகிர்ந்து கொள்கிறது.....well done.we share our support with you savukku.
Quote
 
 
+38 #22 S Kannan 2012-12-14 16:07
சவுக்கு,

இந்த கட்டுரைக்கு மிக்க நன்றி.

இதுவரை தமிழ் நாட்டில் நீதித்துறையை எந்த ஒரு பத்திரிக்கையும் விமர்சனம் செய்தது இல்லை. சவுக்கு தைரியமாக உயர் நீதிமன்ற நீதிபதி கர்ண்னனை விமர்சனம் செய்தது (அவர் தலித் என்றாலும் கூட). தமிழகத்தில், ஏன் இந்தியாவில் மோசமான துறை நீதித்துறைதான். நாட்டில் இவ்வளவு குற்றம் நடக்க நீதித்துறையால்த ான். வழக்குகள் அவ்வளவு சீக்கிரம் முடிவதில்லை. சாதாரண வழக்குக்கள் கூட இரண்டு மூன்று வருடம் ஆகிறது. நீதி கிடைக்காத காரணத்தால் மக்கள் வெறுப்புல தவறு செய்யறான். நீதித்துறையில் உள்ள குறைகளை வெளிச்சம் போட்டு காட்டி மகத்தான பணியை ஆரம்பித்து வைத்துள்ளீர்கள் . உங்களுக்கு வழக்கறிஞர் புகழேந்திக்கும் பாராட்டுக்கள்....
Quote
 
 
+25 #21 Ba 2012-12-14 15:55
இவரைக் குந்தாணி என்று மிக மரியாதையோடு, மாண்பு மிகுந்து அழைத்து நீங்கள் அவளுக்கு மாபெரும் தகுதி அளித்து விட்டீர்கள்..... பிறகு ஏன் கெட்ட வார்த்தைகள் என்று தமிழில் வளைத்து,வளைத்து க் கண்டுபிடித்து வைத்திருக்கிறோம ்..
Quote
 
 
+9 #20 ஜெகன் கோவை 2012-12-14 14:41
சவுக்கு சவுக்காலயே! அடிங்க வாழ்த்துக்கள்!
Quote
 
 
+9 #19 manimaran1 2012-12-14 14:10
கும்கி நல்லா இருக்கு
Quote
 
 
+11 #18 Puthiyavanraj 2012-12-14 14:06
சவுக்கு புங்கள் துணிச்சலான பணி மற்றும் பாவப்பட்ட ஊழியர்களுக்கு நீதிகிடைக்க செய்த சாதனை மிகவும் பாராட்டுக்குரிய து. உங்கள் சமூகப்பணி தொடரட்டும். பூனைக்கு மணி கட்டிய உங்கள் தைரியத்தை மனதாரப்பாராட்டு கிறேன்.
Quote
 
 
+3 #17 ramamoorthy subha 2012-12-14 13:27
முயற்சி வெல்லட்டும்
Quote
 
 
+11 #16 karthik123 2012-12-14 13:07
சவுக்கு பின்ன்னுரிங்க! வாழ்க உஙல் பணி.
இந்த குந்தானி மேலயும் ஒரு கேஸ் போடுங்க பிளிஸ்!
Quote
 
 
0 #15 Raji 2012-12-14 12:56
:sad:
Quote
 
 
+4 #14 KRISHNAMOORTHY THIR 2012-12-14 12:40
நல்லது. நடக்கட்டும்.
Quote :lol: 8) :-* :oops: :sad: :cry: :-x :eek: :zzz :P :roll: :sigh:
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 76 விருந்தினர்கள் மற்றும் 1 உறுப்பினர்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday2357
mod_vvisit_counterYesterday18770
mod_vvisit_counterThis week34570
mod_vvisit_counterLast week95998
mod_vvisit_counterThis month268617
mod_vvisit_counterLast month382199
mod_vvisit_counterAll days13184984