|
ஆ.ராசா தவறு செய்தாரா இல்லையா என்பதை விசாரிக்கும் முன்பே அவர் மீது குற்றம் சாட்டுகிறார்கள். இவ்வளவு பெரிய ஊழல் நடைபெறுவதற்கு வாய்ப்பே இல்லை. ராசா தலித் என்பதால் இவ்வாறு பார்ப்பன ஊடகங்களாலும், பார்ப்பனீய சக்திகளாலும் வஞ்சிக்கப் படுகிறார், இதெல்லாம் இணையத் தளங்களிலும், ஊடகங்களிலும், ராசாவின் ஆதரவாளர்களால் கூறப்படும் செய்திகள். ஒருவர், பார்ப்பனர்கள் இவ்வளவு நாள் ஊழல் செய்தார்கள், கொஞ்ச நாள் தலித் ஒருவர் அடிக்கட்டுமே, அதனால் என்ன தவறு ? என்று கருத்து கூறியிருக்கிறார்.

யப்பா சாமி... உன் திசைக்கே ஒரு கும்புடு. டெல்லி பக்கம் வந்துடாதேப்பா.. உன்னோட சேத்து என்னையும் குழில்ல தள்ளிடுவே....
ஊழலை நியாயப் படுத்தத் தொடங்கினால் ஒவ்வொருவரும் ஒரு நியாயத்தை சொல்லுவார்கள். அது நமது நேர்மையையே சந்தேகிக்கும் ஒரு சூழலுக்கு இட்டுச் செல்லும். நாம் அந்தத் தவறை செய்யக் கூடாது. ஊழல் யார் செய்தாலும் ஊழலே… அது பார்ப்பனரா, பனியாவா என்ற பாரபட்சம் கூடாது.
அலைக்கற்றை ஒதுக்கீட்டில் எழுந்த குற்றச் சாட்டுகள் என்ன ? ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
1) 2008ம் ஆண்டில் 2001ம் ஆண்டில் இருந்த விலைகளுக்கு பத்து மடங்கு விலை உயர்ந்து விட்டது என்பதை பொருட்படுத்தாமல், அலைக்கற்றை ஒதுக்கீடு செய்தது.
2) தொலைத் தொடர்பு பிசினசில் இல்லாத கட்டுமானக் கம்பெனிகளுக்கு லைசென்ஸ் வழங்கியது.
3) ஏலத்தில் லைசென்ஸ் வழங்காமல் முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்று முறையை கடைபிடித்தது.
4) விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளை திடீரென்று மாற்றி, பெரும்பாலான தொலைத் தொடர்பு நிறுவனங்கள் விண்ணப்பிப்பதை தவிர்த்தது
5) விண்ணப்பிக்க கடைசி நாளை திடீரென்று மாற்றியதன் மூலம் 575 விண்ணப்பங்களில் 122 பேருக்கு மட்டும் மொத்த அலைக்கற்றையையும் வழங்கியது.
6) ட்ராய் பரிந்துரைகளை மீறியது
7) தொலைத் தொடர்புத் துறையில் இருக்கும் நிறுவனங்களுக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யாமல், அத்துறையில் இல்லாத நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ததன் மூலம், தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு பெரும் தொகைக்கு அலைக்கற்றையை மறு விற்பனை செய்ய வழி கோலியது.
8) சட்டத்துறை அமைச்சகம் மற்றும் அமைச்சரவை அதிகாரக் குழுவின் பரிந்துரைகளை மீறியது.
9) ரோல் அவுட் ஆப்ளிகேஷன் எனப்படும், ஒதுக்கீடு பெற்ற குறிப்பிட்ட காலத்துக்குள் பணியை தொடங்க வேண்டும் என்ற விதிமுறையை லைசென்ஸ் பெற்ற நிறுவனங்கள் மீற அனுமதித்தது.
இதுதான் அலைக்கற்றை ஊழல் தொடர்பாக இருக்கக் கூடிய முக்கிய குற்றச் சாட்டுகள். ஒவ்வொன்றாக பார்ப்போம்.
மத்திய நிதி அமைச்சகத்தின் அறிவுரைகள் ஒவ்வொரு முறையும் மீறப் பட்டது என்பதை சிஏஜி அறிக்கையில் நிதி அமைச்சகமே சுட்டிக் காட்டியுள்ளது. தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லாத போது, அமைச்சரவையை கலந்து ஆலோசித்த பின்னரே முடிவெடுத்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.
1.10.2007 வரை தொலைபேசி அலைக்கற்றை லைசென்சு வேண்டுபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தொலைத் தொடர்புத் துறை அறிவிக்கிறது. அதன் படி, 537 நிறுவனங்கள் லைசென்சு வேண்டி விண்ணப்பிக்கின்றன.

திடீரென்று ஒரு பத்திரிக்கை செய்தியை வெளியிட்ட ஆ.ராசாவின் அமைச்சகம் 25.09.2007 வரை விண்ணப்பித்தவர்களுக்கு மட்டுமே, அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப் படும் என்று ஒரு குண்டை தூக்கிப் போடுகிறது.
இதில் வந்திருக்கும் விண்ணப்பங்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் உங்களுக்கு இந்த சதிச் செயல் விளங்கும். 25.09.2007 வரை விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 232. 25.09.2007 முதல் 30.09.2007 வரை விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 76. 01.10.2007 அன்று விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 267. இந்த கடைசி நாளன்று தான், விண்ணப்பங்கள் அதிகம்.
மொத்தத்தில் 122 நிறுவனங்களுக்கு மட்டுமே லைசென்சுகள் வழங்கப் பட்டிருக்கின்றன. இந்த 122 நிறுவனங்களுக்கும் இருந்த மொத்த ஸ்பெக்ட்ரமும் ஒதுக்கீடு செய்து முடித்தாகி விட்டது. இனி ஒதுக்கீடு செய்ய ஸ்பெக்ட்ரமே இல்லை என்பதால் தான், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு கிடைக்காத மற்ற நிறுவனங்கள், ஆர்டர் பெற்ற நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனனங்களுக்கு விற்ற விபரங்களை வெளியிடத் தொடங்குகின்றன.
ட்ராய் நிறுவனத்தின் மற்றொரு விதி, லைசென்ஸ் ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்கள், ஆர்டர் பெற்ற நாளிலிருந்து மெட்ரோ நகரங்களில் முதல் ஆண்டுக்குள்ளாகவும், மற்ற நகரங்களில் முதல் ஆண்டுக்குள் 50 சதவிகிதமும், மீதமுள்ள 50 சதவிகிதத்தை மூன்று ஆண்டுகளுக்குள்ளாகவும், செயல்படுத்த வேண்டும் என்று ட்ராய் ஆணையிட்டுள்ளது. இதை Roll Out Obligation என்று அழைக்கிறார்கள்.
ஆனால் ராசாவின் அமைச்சகம், 19.10.2007 நாளிட்ட பத்திரிக்கை செய்தியில் ஆர்டர் பெறும் நாளிலிருந்து என்ற வரையறையை ஸ்பெக்ட்ரம் வழங்கப் பட்ட நாளிலிருந்து என்று மாற்றுகிறது. இந்த மாற்றம், அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்துவதற்காகவே என்று சிஏஜி அறிக்கை தெரிவிக்கிறது.
ட்ராய் அமைப்பின் மற்றொரு முக்கியமான விதி லைசென்சு பெற்ற ஒரு நிறுவனம் அது தொடர்பான வேலைகள் அத்தனையும் (Roll out obligation) முடியும் வரை அதன் பங்குகளை விற்கவோ, வேறு நிறுவனத்தை வாங்கவோ கூடாது என்பது. எதற்காக இந்த விதி என்றால், ஒரு நிறுவனம் லைசென்சு பெற்றுக் கொண்ட பின், லைசென்சு கிடைக்காத வேறு ஒரு நிறுவனத்துக்கு அதை விற்று கொள்ளை லாபம் சம்பாதித்து விடக் கூடாது என்பதற்காகத் தான்.
ஆனால் ராசாவின் அமைச்சகம், தனது 19.10.2007 நாளிட்ட பத்திரிக்கை செய்தியில், “எல்லா வேலைகளும் முடிக்கும் வரை (Roll out obligation) ஒரு நிறுவனம் மற்றொரு நிறுவனத்தோடு இணையக் கூடாது. ஆனால் இதற்கான கோரிக்கை பரிசீலிக்கப் படலாம்“ எப்படி இருக்கிறது ? இந்த விதிவிலக்கை பயன்படுத்தித் தான் 1537.01 கோடிக்கு 16 வட்டங்களுக்கு லைசென்ஸ் பெற்ற ஸ்வான் நிறுவனம் தனது 45 சதவிகித பங்குகளை மட்டும் 9400 கோடிக்கு விற்க முடிந்தது. அதே போல 1658.57 கோடிக்கு 22 வட்டங்களுக்கு லைசென்ஸ் பெற்றிருந்த யூனிடெக் நிறுவனம், தனது 60 சதவிகித பங்குகளை 11,600 கோடிக்கு விற்க முடிந்தது. இவ்வாறு பங்குகளை விற்ற இந்த இரண்டு நிறுவனங்களும், ஒரு டவரை கூட நிறுவவில்லை என்பது குறிப்பிடத் தகுந்தது. அதாவது தொழில் தொடங்கும் முன்பாகவே லாபம்.
அடுத்த முறைகேடு ஸ்பெக்ட்ரம் இருப்பு தொடர்பானது. ராசா அமைச்சகத்தின் அக்டோபர் 2007 பத்திரிக்கை செய்திக்குப் பிறகு, மன்மோகன், ராசாவுக்கு ஒரு கடிதத்தை எழுதுகிறார். அனைவருக்கும் ஸ்பெக்ட்ரம் இருக்கிறதா என்றும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு இருப்பை பொறுத்து வழங்க வேண்டும் என்றும் கூறுகிறார்.

ராசா மன்மோகனுக்கு ஒரு பதில் கடிதத்தை எழுதுகிறார். அக்கடிதத்தில், இப்போது 122 பேருக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளதாகவும், மீதம் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதாகவும் அறிவிக்கிறார். ஆனால் அவ்வாறு பிரதமருக்கு மறுமொழி எழுதும்போதே, மீதம் உள்ளவர்களுக்கு ஒதுக்க ஸ்பெக்ட்ரம் இல்லை என்பது ராசாவுக்கு தெரியும்.
இந்த ஒதுக்கீட்டிலும், கடைசி தேதியை மாற்றுவதிலும் உள்ள தவறுகளை இரண்டு தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகள் சுட்டிக் காட்டி நோட் எழுதுகிறார்கள். ஒருவர் டி.எஸ்.மாத்தூர் இவர் தொலைத் தொடர்பு துறை செயலர். இவர் கடைசி தேதியை மாற்றக் கூடாது என்று எழுதிய கோப்பை ராசா ஓரமாக வைத்து விட்டு, வேறொரு கோப்பில் நடவடிக்கை எடுத்து ஸ்பெக்ட்ரம் ஒதுக்குகிறார். மற்றொருவர் தொலைத் தொடர்பு நிதி உறுப்பினர் மஞ்சு மாதவன். இவர் ஆ.ராசாவின் நெருக்கடி பொறுக்க முடியாமல் விருப்ப ஓய்வில் செல்லுகிறார்.
இதற்கு நடுவே, கடைசித் தேதியை 1.10.2007ல் இருந்து 25.09.2007க்கு மாற்ற சட்ட அமைச்சகத்தின் சம்மதத்தை பெற, ராசா சட்ட அமைச்சகத்துக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். சட்ட அமைச்சர், இதை அமைச்சரவை அதிகாரக் குழுவிற்கு அனுப்பிய பிறகு முடிவெடுக்கலாம் என்று கூறுகிறார். இதற்கு பதிலாக ராசா என்ன செய்கிறார் தெரியுமா ? 1.11.2007ல் பிரதமருக்கு, சட்ட அமைச்சர் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் கடிதம் எழுதுவதாக தெரிவிக்கிறார்.
தாமதமாக விழித்துக் கொண்ட ட்ராயும் தன் பங்குக்கு, ராசாவை தடுக்க முயற்சி செய்கிறது. ட்ராய் வழிகாட்டுதல்களில் சந்தேகம் இருந்தால், மீண்டும் ட்ராயை அணுக வேண்டும் என்ற சட்டப் பிரிவைச் சுட்டிக் காட்டி, 15.10.2007 அன்று, ட்ராய் ராசாவுக்கு ஒரு கடிதத்தை எழுதுகிறது. அந்தக் கடிதத்தில் சட்டத்தில் உள்ளவாறு மறு வழிகாட்டுதலுக்கு ஒரு கடிதம் எழுதும் படியும், அவ்வாறு எழுதவில்லையென்றாலோ, உதாசீனப்படுத்தினாலோ, கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று குறிப்பிட்டது. 19.10.2007 அன்று ஆ.ராசா வெளியிட்ட பத்திரிக்கை செய்தி வந்த பிறகு, உடனடியாக மறு ஆலோசனைக்கு கடிதம் எழுதுமாறு வற்புறுத்தியுள்ளது. அப்போதும் ராசா அசையவில்லை.

14.01.2008 அன்று மீண்டும் ஒரு கடிதம் எழுதுகிறது. இந்தக் கடிதத்தையும் ராசா நிராகரித்தார்.
இதன் நடுவே, இப்போது ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருக்கும் அப்போதைய நிதித் துறைச் செயலர் சுப்பாராவ், 22.11.2007 அன்று, வெறும் 1658 கோடி ரூபாய்க்கு, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்திருப்பதை கடுமையாக கண்டித்து ஒரு கடிதம் எழுதுகிறார். இந்தக் கடிதத்தையும் ராசா குப்பைக் கூடையில் தூக்கிப் போட்டார்.
“முதலில் வருபவருக்கே முன்னுரிமை“ என்ற கொள்கையை எனக்கு முன் இருந்த அமைச்சர்கள் கடைபிடித்தார்கள், அதனால் நானும் கடைபிடித்தேன் என்று ராசா சொல்லும் காரணத்திலும் வலு இல்லை. ஏனெனில் 2003ல் முதன் முறையாக முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்று அறிவிப்பு வெளியிட்ட போது 200 லைசென்சுகள் வழங்க அரசு வசம் அலைக்கற்றை இருந்தது. ஆனால் விண்ணப்பம் செய்ததோ வெறும் 51 நிறுவனங்கள் தான்.
2003ல் முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற முறை கடைபிடிக்கப் பட்ட போது இருந்த விதி, முதலில் விண்ணப்பம் செய்பவர் முதலில் வந்தவராக கருதுப்படுவார் என்பது. ஆனால் ராசா இந்த விதியையும் மாற்றுகிறார். என்னவென்றால், முதலில் லைசென்சு வழங்கியதற்கான தகுதிகளை பூர்த்தி செய்பவருக்கே ஸ்பெக்ட்ரம் என்று. அதாவது என்னவென்றால், லைசென்சு உங்களுக்கு வழங்கப் பட்டால், லைசென்சுக்கான மொத்த தொகையையும் வங்கி வரைவோலை மூலமாக செலுத்துபவருக்கே ஸ்பெக்ட்ரம் என்பது. இவ்வாறு விதியை மாற்றி 10.01.2008 அன்று பத்திரிக்கை செய்தி மூலமாக அறிவிப்பு வெளியிடுகிறார் ஆ.ராசா.
எளிதாக சொல்ல வேண்டுமென்றால்.2003ல் அமலில் இருந்த முறை.
விண்ணப்பம்
↓ லைசென்சுக்கான கடிதம்
↓
தொகை செலுத்துவதற்கு 15 நாட்கள்.
↓
லைசென்சுகள்
↓
அலைக்கற்றைக்கான வரிசையில் முதலிடம்.
10.01.2008 அன்று ராசா புகுத்திய புதிய திட்டம்.
122 விண்ணப்பங்கள் பரிசீலனை
↓
தொகை செலுத்த வேண்டும்.
↓
லைசென்சுகள்
↓
அலைக்கற்றைக்கான வரிசையில் முதலிடம்.
இது போல வழிமுறையை திடீரென்று மாற்றியதால் பல நிறுவனங்கள் தொகையை வரைவோலையாக செலுத்த முடியாமல் திணறின. தொகை என்றால் ஆயிரம் ஐநூறு கிடையாது நண்பர்களே. 1500 கோடி, 2000 கோடி என்ற அளவில். அரை நாளுக்குள் 2000 கோடிக்கு, நீங்கள் எவ்வளவு பெரிய நிறுவனமாக இருந்தாலும் சரி…. வரைவோலை எடுத்து விடுவீர்களா ?
ஆனால், ராசா ஒதுக்கிய ஸ்பெக்ட்ரம் திட்டத்தின் படி, 13 விண்ணப்பதாரர்கள் வரைவோலையோடு தயாராக அலுவலகத்திற்குள்ளேயே இருந்தார்கள். எப்படி இருக்கறது ?
ஆக முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற விதிமுறையையும் ராசா சரிவர பின்பற்றவில்லை.
மூன்றாம் தலைமுறை அலைக்கற்றை ஏலத்தில், அரசுக்கு ஏராளமான வருமானம் வந்து குவிந்தவுடன், ஆ.ராசா சொன்ன பதில் ஞாபகம் இருக்கிறதா ?
“3ஜி பாஸ்மதி அரிசி போல… அதனால் விலை அதிகம்.
2ஜி கருணாநிதி போடும் ஒரு ரூபாய் அரிசி போல. “
மேலும் ராசா சொன்ன மற்றொரு காரணம், போட்டியிடும் நிறுவனங்கள் விலையை அதிகம் கொடுத்தால், அது வாடிக்கையாளரின் தலையில்தான் விடியும். அதனால்தான் குறைந்த விலைக்கு கொடுத்தோம் என்பது. ராசாவின் கூற்றுப் படியே பார்த்தாலும், ஸ்வான் டெலிகாம் நிறுவனத்திடம் இருந்து 10 மடங்கு விலை கொடுத்து வாங்கிய வெளிநாட்டு நிறுவனம் எப்படி குறைந்த விலைக்கு கொடுக்க முடியும் ?

மேலும், டாடா நிறுவனம் 2ஜிக்கு கொடுத்த தொகை 12 கோடி. 3ஜிக்கு கொடுத்த தொகை 152 கோடி. ஆனால் 3ஜிக்கு டாடா நிறுவனம் நிர்ணயித்துள்ள தொகை என்ன தெரியுமா ? ஒரு வினாடிக்கு 66 காசுகள். இந்தத் தொகையும் போகப் போக குறையவே வாய்ப்பு உள்ளது.
1995ம் ஆண்டு, இதே போல ஏலம் விட்ட போது, இந்தியாவில் இந்த ஏலத்தில் கலந்து கொள்ள பலர் முன்வரவில்லை என்ற வாதமும் சொத்தையானது. ஏனெனில், இந்தியாவில் 1995ல் தான் செல்பேசி என்ற விஷயமே அறிமுகம் ஆகிறது. யாருக்கும் அனுபவம் இல்லை. இன்கமிங் 18 ரூபாய் அவுட்கோயிங் 30 ரூபாய் என்ற தொகை ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் 2007ல் பல ஆபரேட்டர்கள் உள்ளனர். அவுட் கோயிங் 10 காசு என்ற வரை ரேட் குறைந்து விட்டது. இப்போது 1995ல் உள்ள நிலையை ஒப்பீடு செய்யும் ராசாவின் தந்திரம் அயோக்கியத்தனமானது.
அடுத்து ராசா எடுத்து வைக்கும் மற்றொரு வாதம் இந்த டெலிகாம் நிறுவனங்கள் ஒரு குழுவைப் போல செயல்பட்டுக் கொண்டிருந்தன. அதை உடைக்கவே புதிய நிறுவனங்களை அனுமதித்தேன் என்பது. இவர் சொல்லும் அந்தக் குழுவில் கூட அரசு நிறுவனங்களான பிஎஸ்என்எல்லும், எம்.டி.என் எல்லும் இருந்தனவே ? இதே கூற்றை ஏற்றுக் கொண்டாலும் கூட, திறந்த முறை ஏலத்தில் மேலும் பல்வேறு நிறுவனங்கள் கலந்து கொள்ளத்தானே வாய்ப்பு அதிகம் ? கடைசி தேதியை மாற்றி வைப்பதால் குழுவாகச் செயல்பட்டவர்களை உடைத்தேன் என்று ராசா சொல்லுவது சோற்றுக்குள் பூசணிக்காயை மறைப்பதே தவிர வேறொன்றும் இல்லை.
ஏலத்தில் விடுவதன் மூலமாக மக்களுக்கு விரைவாக சேவை கிடைக்கவே வாய்ப்பு அதிகம். ஏனென்றால் பெரும் தொகை கொடுத்து ஏலம் எடுக்கும் நிறுவனங்கள், முதலில் வாடிக்கையாளரைக் கவருவதற்காக வேக வேகமாக வேலையை துவக்கி முதலில் வாடிக்கையாளரை யார் பிடிப்பது என்று முனைப்பாக இருக்கும். உதாரணத்திற்கு சொல்லப் போனால், டாடா நிறுவனம், 3ஜி ஏலத்தில் எடுத்த 4 மாதத்தில் தனது 3ஜி சேவையை துவக்கி விட்டது. இதையே 2ஜியோடு ஒப்பிட்டீர்கள் என்றால், ஏறக்குறைய 3 ஆண்டுகள் ஆகியும், இன்னும் 85 நிறுவனங்கள் வேலையை தொடங்காமல் இருக்கின்றன, அதனால் அவற்றின் லைசென்சுகளை ரத்து செய்யப் போகிறோம் என்பதுதான் ட்ராய் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு.
மேலும் 2ஜி லைசென்சுகளைப் பெறுவதற்கென, கடுமையான தகுதிகளை ட்ராயும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சகமும் விதித்திருக்கின்றன. வழங்கப் பட்டுள்ள 2ஜி லைசென்சுகளை பெற்ற 122 நிறுவனங்களில் 85 நிறுவனங்கள் தகுதியே இல்லாத நிறுவனங்கள் என சிஏஜி தனது அறிக்கையைல் தெரிவித்திருக்கிறது.
ராசாவின் கண்ணசைவு இன்றி இத்தனை தகுதியில்லாத நிறுவனங்கள் லைசென்சுகள் பெற்றிருக்க வாய்ப்பு உள்ளதா என்பது சந்தேகமே….

லைசென்சு பெற்ற நிறுவனங்களில் பெரும்பாலான நிறுவனங்கள் பெரிய நிறுவனங்களின் பினாமி நிறுவனங்களாகவே இருப்பது இன்னொரு பெரிய முரண்பாடு. உதாரணத்திற்கு அலையன்ஸ் இன்ப்ராடெக் நிறுவனம் என்ற நிறுவனம் 6.9.2007ல் மத்திய பிரதேசத்துக்கும் பீகாருக்கும் லைசென்சுகளைப் பெற்றது. இந்த நிறுவனத்தில் ஆஷிஷ் தியோரா என்பவர் 25 சதவிகித பங்குகளை வைத்திருக்கிறார். க்ளாரிட்ஜெஸ் இன்போடெக் என்ற நிறுவனம் 50 சதவிகித பங்குகளை வைத்திருக்கிறது. இந்த க்ளாரிட்ஜெஸ் நிறுவனத்தின் பங்குகளை யார் வைத்திருக்கிறார் என்று பார்த்தால் ஆஷிஷ் தியோரா 99.77 சதவிகித பங்குகளை வைத்திருக்கிறார். இப்போது அலையன்ஸ் இன்ப்ராடெக் நிறுவனத்தில் 75 சதவிகித பங்குகளை வைத்திருப்பது யார் என்பது புரிகிறதா ?
இந்த ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அனில் அம்பானிக்கு பெரிய பங்கு இருக்கும் செய்திகள் வெளிவந்ததும், ராசாவின் அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண வாக்குமூலத்தில் அதை மறுத்து, விண்ணப்பம் செய்யும் நேரத்தில் அதாவது 2 மார்ச் 2007 அன்று உள்ளபடி ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு வெறும் 10 சதவிகித பங்குகள் தான் உள்ளது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆனால் உண்மை நிலவரம் என்ன தெரியுமா ?
ஸ்வான் நிறுவனத்தில் ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனத்திற்கு 9.90 சதவிகித பங்குகள். டைகர் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு 90.09 சதவிகித பங்குகள்.
90.09 சதவிகித பங்குகளை வைத்திருக்கும் டைகர் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகளை வைத்திருப்பது யார் தெரியுமா ? தலா 25 சதவிகிதம் வீதம் 75 சதவிகித பங்குகளை வைத்திருப்பவர்கள் ஆஷிஷ் கரேகர், தினேஷ் மோடி மற்றும் பரேஷ் ராதோட். இவர்கள் மூன்று பேரும் அனில் அம்பானி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள். இப்போது ஸ்வான் நிறுவனம் யாருக்குச் சொந்தம் என்று புரிகிறதா ?
ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி நஷ்டம் என்று எப்படி சொல்ல முடியும் ? 3ஜி ஏலத்திலேயே 67 ஆயிரம் கோடிதானே வந்தது என்று சில அறிவாளிகளும் அறிவு ஜீவிகளும் கேள்வி எழுப்புகிறார்கள்.
2ஜி ஏலம் நடந்திருக்க வேண்டிய ஆண்டு ஜனவரி 2008. அப்போது செல்பேசி சந்தாதாரர்களின் மொத்த எண்ணிக்கை 250 மில்லியன். இந்தியாவின் மொத்த ஜனத்தொகையையும் கணக்கில் வைத்துப் பார்த்தால் இன்னும் 750 மில்லியன் இணைப்புகள் வர வாய்ப்பு உள்ளது என்று நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு ஏலத்தில் எடுக்கும். 3ஜி ஏலம் நடக்கையில் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 600 மில்லியனை தொட்டு விட்டது. எவ்வளவு தொகைக்கு எடுத்தாலும் இன்னும் 400 மில்லியன் இணைப்புகள் தான் வளர்ச்சியின் அளவு எனும் போது எப்படி அதிக தொகைக்கு ஏலம் எடுப்பார்கள். அதனால் தான் 3ஜி ஏலம் வெறும் 67 ஆயிரம் கோடிக்குப் போனது. சிஏஜி அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி என்பது மிகையல்ல.

இப்போது சொல்லுங்கள். ராசா நல்லவரா… கெட்டவரா…. |
Comments
. நன்றி. வணக்கம்.
உங்களுடைய பணி மிகவும் பாராட்டுக்குரிய து. உங்களின் அற்பணமும், துடிப்பும், மன உறுதியும் கண்டு உங்களை நான் தலை வணங்குகிறேன். ஒவ்வொரு செய்தியும் பசுமரத்தில் அடித்த ஆணி.
பணிவுடன்
மாரிமுத்து பத்மநாபன்
we innocent people trust our political leaders will do good to us and vote and select them as our leaders... but these responsible leaders they started looting this entire country and only bothered about their comfort, family and their business.. let them live long ...and not bothered about poor people who are living below poverty and suffering for one square meal... poor indians...
No doubt India is Rich & developed country ( rich and corrupted politicians) but Indians are poor...
Jai hind...
ஒரு ......தி நாராயணன்..
Your question doesn't make sense. does it?? First read about 2G scam fully in newspapers and come here.
Everyone in India including children knows about 2G scam now.. Raja is a hero(anti)..
/////////////////// அன்பான ஆதி நாராயணன் அவர்களே.. உங்களுக்கு பதில் எழுதுக் கூடாது என்பதோ, அதிமுகவைப் பற்றி எழுதக் கூடாது என்பதோ சவுக்கின் எண்ணம் அல்ல. நான் எழுதுவதே நியாயம், சரி என்ற அகம்பாவமும் நிச்சறம் இல்லை. இதைப் பற்றி ஒரு விரிவான பதிவு எழுத ஒரு 4 அல்லது 5 நாட்கள் அவகாசம் தாருங்களேன். வேளைப் பளு காரணமாக உடனடியாக செய்ய முடியவில்லை. ///////////////////
நிச்சயம் உங்களுக்கு தொடர்ந்த வேலைப்பளு இருக்கும் என்பதை நம்புகிறேன். ஆனாலும் அதிமுக பற்றிய உங்களின் நிலைப்பாடு தொடர்பான பதிவிற்காக இன்னமும் பல வாசகர்கள் காத்திருக்கின்ற ோம்.
தமிழா,
பள்ளனாய், பறையனாய்,
நாடானாய், தேவனாய்,
வன்னியனாய், பரவனாய்,
பிள்ளையாய், கவுண்டனாய்,
மள்ளனாய், குயவனாய்......
வாழ்ந்தது போதும்.
வா - தமிழா
தமிழனாய் வாழ்வோம்.
வந்தேறி தெலுங்கன், கன்னடன், மலையாளி, மார்வாடி, ஆரிய பிராமணர், இவர்களிடம் இருந்து நம் தமிழ் நாட்டை காப்போம்.
"பக்கத்தில் உள்ளவன் சாதியை கேள், அவன் இனம் தெரியும்.
தமிழன் என்றால் தோள் கொடு, வந்தேறி என்றால், விரட்டி அடி "
''தமிழர்கள் சிறுபான்மையாக உள்ள இடங்களில் தாய்மொழி பற்றோடு இருக்கிறார்கள். பெரும்பான்மையாக உள்ள தமிழகத்தில் சீரழி்ந்த தமிழர்களாக இருக்கிறார்கள்!
u want implement ur activity's for lowest people also want to get your news then only public will wake up after reading the news, (b-coz by net not reach maximum people), so pls do the needful.
ஆனால் சவுக்கு தளம், அதனைப்படித்து அவர்களின் ஹீரோயிசத்தை மெச்சி அவர்களை போற்றி புகழுவதற்காக அல்ல.
ஆட்சியாளர்களின் பித்தலாட்டத்தைய ும், உத்தமர்கள் என்று வேசம்போடுபவர்கள ின் உண்மை முகத்தை தெரிந்துகொள்ளவு ம்தான். அதற்கு முக்கியமாக சவுக்கின் நிலைப்பாடு வாசகர்களின் சந்தேகத்திற்கு இடமில்லாமல் இருக்கவேண்டும்.
சவுக்கு அதிமுக அனுதாபியோ, அதிமுக உறுப்பினரோ இல்லை என்றே நான் நம்புகின்றேன். ஆனால் அதனைக்கூட தெளிவுபடுத்திக் கொள்ளக்கூடாது என்பது தமிழர்களின் சாபமான செக்குமாட்டு புத்தியே. மேலும் சவுக்கு தான் ஒரு அதிமுக அனுதாபி என்று சொன்னாலும் கூட மகிழ்ச்சியே.
ஏனெனில் அதனுடைய வாசகர்களாகிய தமிழர்களுக்கு, இன்னொருமுறை எதிரியிடம் அடிவாங்குவதை விட, துரோகிகளிடம் ஏமாறுவதே அதிகம் வலிக்கும்.
அதிமுக ஆட்சியில் இல்லை அதனால் அதிமுகவைப்பற்றி எழுதவில்லை என்று "சவுக்கு" சொன்ன பதிவிற்கு தயவுசெய்து லிங்க் தாருங்கள்.
@ Sathesh Pandian:
ஆறுவருடங்களுக்க ு முன்னாள் ஊழல் செய்தவன் உத்தமன் ஆகிவிடவில்லை மேலும் அவர்கள் யோக்கியன் முகமூடி அணிந்து அடுத்த ஆட்சிக்கு வர முழு முயற்சியில் உள்ளனர். சந்தடி சாக்கில் தமிழர்கள் அதனை (எப்பொழுதும்போல ்) மறந்துவிடுவார்க ள். இலட்சம்கோடி அடித்தாலும், நூறுகோடி அடித்தாலும் திருடன் திருடன்தான் (அல்லது திருடி). மேலும் இவர்கள் அடுத்த ஆட்சிக்கு வந்தால் இப்போதைய திமுக ஆட்சியைவிட அதிகமாக ஊழல் செய்ய தயங்கமாட்டார்கள ். ஆகவே முன்னாள் திருடர்களின் இப்போதைய "யோக்கியன்" முகத்திரையையும் கிழியுங்கள் என்பதே எமது வாதம்.
I think you are new to Savukku thalam. The quoting as ADMK is not in rule and only DMK in rule is mentioned by savukku many times.
மன்மோகனாரும் குற்றச்சாட்டிலி ருந்து தப்ப முடியாது. அவர் காசு வாங்கினாரா என்பதல்ல பிரச்சனை. அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களின் இந்திய வேட்டைக்கு கதவு திறக்கும் அவரது சரணாகதிக் கொள்கைகளுக்கு இடைஞ்சல் வந்துவிடக்கூடாத ு என்று ஸ்பெக்ட்ரம் விவகாரங்களைக் கண்டுகொள்ளாமல் விட்ட குற்றவாளிதான் அவர்,
ஆனால், இந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த 2G Spectrum ஊழலை விலாவரியாக விளக்கியமைக்கு மிக்க நன்றி. இது ஒரு சிறந்த "Reference point" ஆக அமையும் என்பதில் ஐயம் இல்லை. இதில் நகைப்புக்குரிய (வேதனை கலந்த) விஷயம் என்னவென்றால் இந்த "Deal" இன் உண்மையான மதிப்பு தெரியாமல் ஏமாந்து விட்டோமே என்று ராஜா & குருப், வருந்திக்கொண்டு இருப்பார்கள்.
தங்களது இத்தளத்தின் அதீத வெற்றியின் பயத்தினால் மாற்று தளம் உதயமாகிவிட்டது.
இவர்களது "விஞ்ஞான முறையின்" ப்ரிதிபலிப்பு தான் http://savukku-net.blogspot.com/ இந்த அபத்தம் வாய்ந்த தளம். இதுவே அவர்களின் மிரட்சியை காட்டுகிறது.
முதல்முறையாக அதிமுக பற்றிய உங்களின் நிலைப்பாட்டை விளக்க ஒரு பதிவு எழுத முன்வதிருப்பதற் கு மிக்க மகிழ்ச்சி. அந்த பதிவுக்காக காத்திருக்கிறோம ்.
நன்றி: சக்திவேல், நியாயஸ்தன், ஆதி நாராயணன்.
அன்பான ஆதி நாராயணன் அவர்களே.. உங்களுக்கு பதில் எழுதுக் கூடாது என்பதோ, அதிமுகவைப் பற்றி எழுதக் கூடாது என்பதோ சவுக்கின் எண்ணம் அல்ல. நான் எழுதுவதே நியாயம், சரி என்ற அகம்பாவமும் நிச்சறம் இல்லை. இதைப் பற்றி ஒரு விரிவான பதிவு எழுத ஒரு 4 அல்லது 5 நாட்கள் அவகாசம் தாருங்களேன். வேளைப் பளு காரணமாக உடனடியாக செய்ய முடியவில்லை.
இப்பொழுது அதிமுக ஆட்சியில் இல்லை என்ற மொக்கை வாதத்தை பின்னூட்டம் எழுதும் மற்ற சாதாரண வாசகர்கள் வேண்டுமானால் எழுதலாம். ஆனால் அந்த கருத்தைக்கூட இன்னும் சவுக்கு சொல்லவில்லை என்பது, "நான் நினைப்பதே நியாயம், நான் எழுதுவதே சரி" என்ற அகம்பாவமே.
குசும்பனின் குசும்பு நல்லாத்தானே இருக்கு பொறவு ஏன் எல்லோரும் சிகப்பு குறி சுட்டு வச்சிருக்கிறீங் க, சிலேடையான சில மோசமில்லாத வார்த்தைகள் நாதாரிகளை குத்தட்டுமே ,இவனுகள் செய்யிற்த்துக்க ு இதி ஒண்ணும் தப்பு கிடையாது,
நீங்கள் எழுதியிருப்பதை பார்த்தால் பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டிவிடுவதுபோல ் தெரிகிறது, உசுப்பேத்துவது அல்லது சீண்டுதல் என்றும் ஒரு சொல் வழக்கிலுண்டு, உங்களால் ஏன் முடியாது?, சீமானுக்கு முடிகிறது, விஜயகாந்த்துக்க ு முடிகிறது, பிரபாகரனுக்கு முடிகிறது, சவுக்கால் முடிகிறது, உங்களால் ஏன் முடியாது அரசியல் கட்சி நடத்துவதும் பத்திரிகை அல்லது இணையம் நடத்துவதுதான் போராட்டமென்றில் லை,ஜனநாயக ரீதியில் பலவழிகளுண்டு ஏதாவது ஒருவழியில் போராடுங்கள் அல்லது சிறந்த அமைப்புடன் இணைந்து பலமாகுங்கள்,
திமுக அதிமுக என்ற இரண்டு கட்சிகளும் போதும் போதும் என்ற அளவுக்கு தமிழகத்தை சுரண்டியாகிவிட் டது. இதில் திமுக விஞ்ஞான ரீதியில் சுரண்டல்கள் செய்து சுரண்டல் நாயகர் விருதைப்பெற்றுள ்ளது. மேலும் தன்னுடைய சொந்த இனத்துக்கே துரோகம் செய்து, அழியாப்பழியையும ் அழியாத இடத்தையும் வரலாற்றில் பெற்றுவிட்டது. ஆகவே திமுக முதலில் ஒழிக்கப்படவேண்ட ிய சக்தி, அதனடுத்து அதிமுக உடனடியாக அகற்றப்படவேண்டி ய சக்தி. காரணம் அதிமுகவின் (திமுகவிற்கு சளைக்காத) ஊழல்கள் மற்றும் அதன் அடக்குமுறை ஆட்சி.
இப்பொழுது இதனை மாற்றுவது எப்படி என்று என்னிடமே கேட்காதீர்கள். ஏனெனில் உங்களைப்போலவே நானும் எப்படியாவது விடிவுகாலம் வராதா என்று ஏங்கும் சாதாரண வெகுஜன தமிழன்தான்.
இராசாவைப்பற்றிய இந்த பதிவு மிகச்சரி. இராசா, வெகு சீக்கிரமாக கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அப்பொழுது, "கருணாகநிதி" எந்த உருப்படியான உதவியும் செய்து இராசாவை காப்பாற்றாமல், முரசொலியில் இரங்கல் கட்டுரை எழுதுவதோடு கைகழுவிக்கொண்டு , தான் எப்படிப்பட்ட காரியவாதி என்பதை இராசாவுக்கே புரிய வைப்பார்.
இல்லையெனில், சவுக்கு காவல்துறையைப்பற ்றி அவதூறாக எழுத காரணம் (செய்திகள் உண்மையாக இருந்தாலும்), அதனை புலனாய்வுத்துறை யில் இருந்து வேலைநீக்கம் செய்யப்பட கோவமே என்றும் இப்பொழுது அரசியல் பற்றி எழுத காரணம் தன்னை நியாயவானாக, நடுநிலையாளனாக காட்டிக்கொள்ளவு மே என்பதே உண்மையாகும்.
இப்பொழுது அதிமுக ஆட்சியில் இல்லை என்ற மொக்கை வாதத்தை பின்னூட்டம் எழுதும் மற்ற சாதாரண வாசகர்கள் வேண்டுமானால் எழுதலாம். ஆனால் அந்த கருத்தைக்கூட இன்னும் சவுக்கு சொல்லவில்லை என்பது, "நான் நினைப்பதே நியாயம், நான் எழுதுவதே சரி" என்ற அகம்பாவமே.
ஊழல் செயல்களை செய்து தீவுகளை வாங்கும் அளவுக்கு இந்தியாவில் தமிழர்களை சாதனை தமிழன் பட்டியலில் சேர்த்துள்ள ராசவை நீங்க நல்லவரா கெட்டவரானு கேட்டா நாங்க என்னத்த சொல்ல
இவ்வளவு தெளிவாக உள்ளதை உள்ளபடி சவுக்கு எழுதி இருப்பதை மக்களிடம் கொண்டு சேர்பதற்கு வெகு ஜன ஊடகங்கள் நடத்தும் யாருக்கும் ஆண்மை (Mean - They Have No Balls ) இல்லை என்பதுவே உண்மை.
இவ்வளவு தெளிவாக உள்ளதை உள்ளபடி சவுக்கு எழுதி இருப்பதை மக்களிடம் கொண்டு சேர்பதற்கு வெகு ஜன ஊடகங்கள் நடத்தும் யாருக்கும் குண்டுகள் (Mean - They Have No Balls ) இல்லை என்பதுவே உண்மை.
We dont want entire people we want the youger generation to come forward to root out these elements
There is one duplicate in your name.
http://savukku-net.blogspot.com
Etharku???
Nangal (Engalin oruvathan) apdithan kollai adiopom,,,,...idhuthanda ungala madhiri aalukellam bathilu....
Goiyala, ulagathula irukura yokiyenlam pesuran...
Savukkum, apdiye pakkathula irunthu patha madhiri pointu, pointa solluvangalam...Ellorum haha ohooo beshhh beshhh...Cofee superu sollanumam...
Nakkeeran entha aalavu manjal pathirikaiyo,,..Athaividu Comedy piecesu...Intha sakku....Sorry Savuku....
Dear Sir,
I think, you are confused because of the DMK affliation, Writing on Corruption or Scam never be against either DMK or AIADMK. It is all about SCAM. Why would we blame millions of general public who is the part of this political system you call it as DMK,AIADMK, PMK, Etc., How they are accoutable to it.
It is about some crooks whose mind is acting against the interest of the nation and the interest of the general public.
If we start comparing parties to scale who has done bigger scam, at the end of day we will land up finding nobody to rule.
The only solution is guilty needs to be punished and the illegal money earned by anybody through scam needs to brough back to the govt treasury.
The convicted should be banned from Politics.
But our bad luck is we doesn't have ...at least good leader.
Savukku ... please don't stop your job at any occasion. You are doing marvelous job to the people.
-- My best wishes to you and your parents.
HEADLINES TODAY is in exclusive possession of documents that show that Swan Telecom had brought in an equity partner in the form of a company, which had a close associate of DMK supremo M. Karunanidhi and tainted former telecom minister A. Raja on board.The documents show that Swan Telecom had written to DoT in November 2008, bringing on board a company called Genex Exim Ventures. Swan said that it had entered into a share subscription agreement (SSA) with Genex Exim on September 23, 2008.
[quote name="hari"]....சபாஷ் சரியான கேள்வி
RSS feed for comments to this post