முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
கயமையின் நிறம் சிகப்பு அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 71
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
புதன்கிழமை, 09 ஜனவரி 2013 08:43

BangaruAdigalar1மேல்மருவத்தூர்.  கடந்த முப்பது முப்பத்தைந்து ஆண்டுகளாக இந்த இடம் ஒரு ஆன்மீகத் தலமாக உருவாகியிருக்கிறது. தமிழகத்தில் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு போட்டியாக ஒரு அம்மா இருக்கிறார் என்றால் அது பங்காரு அடிகளார் என்கிற அம்மாதான்.   ஆணாக இருந்தாலும், இவரை அனைவரும் அம்மா என்றுதான் அழைப்பார்கள்.  ஏனென்றால் இவர் ஆதிபராசக்தி அம்மனின் வடிவமாம்.

ஒருவேளை பாலின மாற்று அறுவை சிகிச்சை ஏதாவது செய்திருக்கிறாரா என்பது தெரியவில்லை.  ஆனால் அப்படியே பாலியல் அறுவை சிகிச்சை செய்திருந்தாலும், நான்கு குழந்தைகள் பிறந்த பிறகே செய்திருக்க வேண்டும். ஏனென்றால் இவருக்கு இரண்டு மகன் மற்றும் இரண்டு மகள்கள்.  இதில் கொடுமை என்னவென்றால், அவர்களின் மகன்களையும் அம்மா என்று அழைக்க வேண்டுமாம்.  பெரிய மகனை சின்னம்மா என்று அழைக்க வேண்டுமாம்.  சின்ன மகனை, மருவூர் முருகன் என்று அழைக்க வேண்டுமாம்.

பங்காரு அடிகளார் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்.   கோபால நாயக்கர் மற்றும் மீனாட்சி என்ற தம்பதியினருக்கு 1941ம் ஆண்டு பிறந்தவர்தான் பங்காரு.   இந்த பங்காரு சோத்துப்பாக்கத்தில் உள்ள பள்ளியில் படித்து விட்டு, பின்னர் செங்கல்பட்டு அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் படிக்கிறார்.  பின்னர், ஆசிரியர் வேலை பார்த்துக் கொண்டிருக்கையில், அப்போது இந்த பங்காரு குடியிருந்த வீட்டின் பின்புறத்தில், மேல்மருவத்தூரில், ஒரு வேப்பமரத்தடியில் ஒரு சிறிய அம்மன் கோயிலை உருவாக்குகிறார். 

   வேப்பமரத்தில் கோயில் எப்படி உருவாகும் என்பதை உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை.  வேப்ப மரத்தின் அடியில் ஒரு ரூபாய்க்கு மஞ்சளை வாங்க தண்ணீரில் கரைத்து, அந்த மரத்தின் அடிப்பகுதியில் முழுமையாகத் தடவி விட்டு, நடுவே குங்குமம் வைத்து, ஒரே ஒரு திரிசூலத்தை நட்டு விட்டால் அம்மன் கோயில் தயார்.  ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில், அம்மனுக்கு கூழ் ஊற்றப் போகிறோம் என்று வசூலில் ஈடுபட்டு, கொஞ்சம் கூழ் ஊற்றி விட்டு, இசைக் கச்சேரி நடத்துகிறேன் என்று அதற்கும் சேர்த்து வசூல் செய்து, இசைக் கச்சேரியும் நடத்தினால், உங்கள் அம்மன் கோயில் புகழடைந்து வருகிறது என்று பொருள்.  அப்படித்தான் பங்காரு, வேப்பமரத்தடியில் அமர்ந்து கொண்டு வருகை தரும் பக்தர்களுக்கு குறி சொல்வதில் தன் தொழிலை தொடங்குகிறார். நாளடைவில், இவர் குறி சொல்வது குறித்த புகழ் பரவத் தொடங்குகிறது.   இப்படியாக படிப்படியாக வளர்ச்சியடைந்த பங்காரு, தனது மடத்தை விரிவாக்குகிறார்.

அந்த காலத்தில் ஸ்விஸ் வங்கியில் பணத்தைப் பதுக்கும் வழக்கம் பரவலாக இல்லாத காரணத்தால், பல அரசியல் புள்ளிகள் தங்களின் கருப்புப் பணத்தை பங்காருவிடம் கொடுத்து வைத்ததாக கூறப்படுகிறது.  இந்த அடிப்படையில், இந்திரா பிரதமராக இருந்தபோது, 1980ம் ஆண்டு, ஒரு முறை இவர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்துள்ளது.

தற்போது இந்த வழக்கம் மறைந்துள்ளது. ஒரு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால், சென்னை நகரின் நடைபாதைகளில் கருப்பு வெள்ளைப் புகைப்படங்களை அடுக்கி வைத்து ஜோசியம் பார்ப்பவர்கள் இருப்பார்கள்.  அந்த கருப்பு வெள்ளைப் புகைப்படங்களில் அந்த ஜோசியம் பார்ப்பவர், கமல் ரஜினி, ஜெய்சங்கர் என்று பிரபல நடிகர்களில் தொடங்கி பலரோடு கை ரேகை பார்ப்பது போல எடுக்கப்பட்ட புகைப்படங்களை வைத்திருப்பார். அதைப் பார்க்கும் அப்பாவிகள், ரஜினி கமலுக்கே ஜோசியம் பார்ப்பவர் என்று நினைத்து அவரிடம் கைரேகை பார்த்து விட்டு செல்லுவார்கள்.  தற்போது இந்த கைரேகை வியாபாரிகள் ஒழிந்து விட்டார்கள்.

இதைப் போலவே, மேல்மருவத்தூரிலும், பிரபலமானவர்கள், பங்காருவோடு எடுத்த புகைப்படங்களை மாட்டி வைத்திருப்பார்களாம்.  அதைப் பார்க்கும் பாமர மக்கள் பங்காரு இவ்வளவு பெரிய ஆளா என்று மலைத்துப் போவார்கள்.  பல பிரபலங்களின் கருப்புப் பணத்தை வைத்திருந்த பங்காரு, மேல்மருவத்தூர் மற்றும் அதையொட்டியுள்ள நிலங்களை வளைத்துப் போட்டார்.  கருப்புப் பணத்தை பதுக்கி வைத்ததன் காரணமாக பல முக்கியப் பிரமுகர்களின் நெருக்கம் தொடர்ந்து கிடைத்து வந்தது.

மற்ற சாமியார்களை விட, இந்த பங்காருவின் மீது கடுமையான கோபம் வருவதற்கு காரணம், கம்யூனிஸ்டுகளின் சிகப்பு நிறத்தை தனது ஆன்மீக வியாபாரத்திற்கு அபகரித்த அயோக்கியன் இந்த பங்காரு.

முக்கியப் புள்ளிகளோடு தொடர்பு, கணக்கிலடங்கா கருப்புப் பணம் இவை இரண்டும் இருப்பவர்கள் என்ன செய்வார்கள் ?   கல்வித் தந்தை ஆவார்கள். அதைத்தான் செய்தார் பங்காரு. வரிசையாக கல்வி நிறுவனங்களைத் தொடங்குகிறார்.

ஆதிபராசக்தி மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளி

ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி

ஆதிபராசக்தி பாலிடெக்னிக்

ஆதிபராசக்தி செவிலியல் கல்லூரி

ஆதிபராசக்தி பிசியோதெரபி கல்லூரி

ஆதிபராசக்தி மருந்தியல் கல்லூரி

ஆதிபராசக்தி பல் மருத்துவக் கல்லூரி

இவை மேல்மருவத்தூரில் மட்டும்

கலவையில் ஆதிபராசக்தி கலை அறிவியல் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி இயங்குகிறது.

இந்த பங்காருவுக்கு அன்பழகன் மற்றும் செந்தில் குமார் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.   இந்த இரண்டு மகன்களும், கணக்கிலங்கா சொத்துக்களையும், கருப்புப் பணத்தையும், தங்களைச் சுற்றியுள்ள தொண்டர் அடிப்பொடிகளோடு இனிமையாக நிர்வகித்து வந்தனர்.  சொத்துக்களை சமமாக பிரித்துக் கொள்ளலாம் என்று நிம்மதியாக இருந்து வந்தனர். இப்படி இவர்கள் நிம்மதியாக இருந்து வந்த வேளையில்தான், பிரச்சினை திருமண வடிவில் வந்தது.  பங்காருவின் பெரிய மகன் அன்பழகனின் மைத்துனரை, பங்காருவின் மகளுக்கு திருமணம் செய்கின்றனர்.  இதனால் இளைய மகன் செந்தில் கடும் கோபமடைகிறார். எப்படியென்றால், மகன் மகள் ஆகியோருக்கு சொத்துக்கள் சமமாக பிரிக்கப்பட்டால், மைத்துனரை திருமணம் செய்த வகையில் அன்பழகனுக்கு கூடுதலாக சொத்து போய் விடும் என்று, செந்தில் கடும் கோபமடைகிறார்.

 

waterDSC_4249

அன்பழகன் பெரியம்மா

24109_110932225599400_8011039_n

செந்தில் சின்னம்மா..

263864_242943209064967_884651_n

சின்னம்மாவின் டெர்ரர் லுக்

32451_128508473841775_2815163_n

அதுவரையில் பெரிய மகன் அன்பழகன் மக்கள் தொண்டு இயக்கம் என்று ஒரு அமைப்பைத் தொடங்கி, அம்மா அவர்களின் (பங்காரு) தொடங்கி பெயரில் நற்பணிகள் செய்வது என்று நாடகம் ஆடிக்கொண்டிருந்தார்.  பிரச்சினைகள் இல்லாத வரை சிறப்பாக நடந்து கொண்டிருந்த இந்த தொண்டு இயக்கம், மனைவிகளால் பிரச்சினை வந்ததும் தம்பி செந்தில் கண்ணை உறுத்த ஆரம்பித்தது.  இதனால் செந்தில் ஆதிபராசக்தி, ஆன்மீக இளைஞர் அணி என்று ஒரு தனி அமைப்பை தொடங்குகிறார்.  இவர்கள் இருவருக்குள்ளே நடைபெற்று வரும் மோதல், அழகிரி ஸ்டாலின் மோதலுக்கு சற்றும் குறைந்ததல்ல.  இந்த மோதலின் வெளிப்பாடாகவே, மூத்த மகன் அன்பழகன் தன் தம்பியின் மனைவி வழக்கில் சிக்கட்டும் என்று சிபிஐ அதிகாரிகளிடம் போட்டுக் கொடுத்தள்ளதாகவும் ஒரு தகவல் உலவுகிறது.

இவரது கல்விப்பணிகள் மிகச் சிறப்பாக நடைபெற்றதால் கடநத் 2010ல், இவர் கல்லுரி வளாகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.  சோதனையின்போது, 100 கிலோவுக்கும் மேற்பட்ட தங்கம், மற்றும் 12 கோடி ரூபாய் ரொக்கப்பணம் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது இந்தச் செய்தியை பதிவு செய்யச் சென்ற பத்திரிக்கையாளர்கள் மீது பங்காருவின் ரவுடிகள் தாக்குதல் நடத்தினர்.

K

கருணாநிதி மற்றும் ஸ்டாலினோடு பெரியம்மா

பங்காரு சந்தித்த முதல் சோதனை சிபிஐ வடிவில் வந்தது.  மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரிக்கு ஒரு குறிப்பிட்ட ஆண்டுக்கான அனுமதி பெறுகையில் அகில இந்திய மருத்துவக் கழக (Medical Council of InidaIndia) அதிகாரிகள் ஆய்வு நடத்துகையில் பிற மருத்துவமனைகளில் பணியாற்றிக் கொண்டிருந்த மருத்துவர்களை, ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியது போல நடித்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது.  இதன் அடிப்படையில், பேராசிரியர்களாக நடித்த 32 மருத்துவர்களும், இவர்களுக்கு பேராசிரியராக போலி நியமன ஆணைகளை வழங்கிய ஆதி பராசக்தி மருத்துவக் கல்லூரியின் 3 மருத்துவர்களின் அங்கீகாரத்தை ரத்து செய்து இந்திய மருத்தவக் கழகம் உத்தரவு பிறப்பித்தது.  இது குறித்து மரணித்த கடவுள்கள் என்ற கட்டுரையில் சவுக்கு விரிவாக எழுதியிருக்கிறது.   இது தொடர்பாக சிபிஐ தொடர்ந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அது எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.  தற்போது இந்த வழக்கிலிருந்து தப்பிப்பதற்காக, சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள ஒரு நீதிபதியை, மேல்மருவத்தூர் திருடர்கள் அணுகியிருப்பதாக தகவல் வந்துள்ளது.

இந்நிலையில், நேற்று இரவு, எட்டு மணிக்கு, மேல்மருவத்தூர் பல் மருத்துவக் கல்லூரியில், முதுகலைப் படிப்பு தொடங்குவதற்காக, அகில இந்திய பல்மருத்துவக் கவுன்சில் உறுப்பினர் டாக்டர் முருகேசன் என்பவரைச் சந்தித்து, 25 லட்ச ரூபாய் லஞ்சம் கொடுத்தபோது, சிபிஐ போலீசார் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.   பல்மருத்துவக் கவுன்சிலின் உறுப்பினர் டாக்டர் முருகேசன், அக்கல்லூரி நிர்வாகத்தின் செயலர் கருணாநிதி, நிர்வாக அலுவலர் ராமபத்ரன் மற்றும் பங்காருவுக்கு நெருக்கமானவரும், ஆற்காடு தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏவுமான பழனி ஆகியோரை சிபிஐ கைது செய்துள்ளது.

DSC_0263

நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்படும் கருணாநிதி

பல் மருத்துவத்தில் முதுகலை பட்டப் படிப்பு தொடங்குவதற்காக அகில இந்திய பல் மருத்துவக் கவுன்சிலை, இக்கல்லூரி நிர்வாகம் அணுகியிருக்கிறது.  முதுகலை படிப்பு நடத்தவதற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் உங்கள் கல்லூரியில் இல்லாததால், உங்கள் கல்லூரிக்கு முதுகலை படிப்புக்கான அனுமதி வழங்கப்படாது என்றே முதலில் மறுக்கப்பட்டுள்ளது.  ஆனால் இக்கல்லூரியின் மேலாண் இயக்குநர் ஸ்ரீலேகா, உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தாமல், ஒப்புதல் பெற என்ன வழி என்று கேட்கிறார்.  ஸ்ரீலேகா உட்கட்டமைப்பை மேம்படுத்தாமல் ஒப்புதல் பெற  என்ன வழி என்று கேட்பதற்கு காரணம், ஒரு முறை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினால் பின்னர் அதுவே பழக்கமாகி விடும்.   எப்போது பார்த்தாலும் விதிகளை பின்பற்றத் தொடங்கி விடுவார்கள் என்பதால், யாரைப் பிடித்தால் உட்டகட்டமைப்பு வசதி என்ன…. எந்த வசதியுமே இல்லாமல் அனுமதி பெறலாம் என்று அவர் திட்டமிடுகையில் அவர் திட்டத்துக்கு ஏற்ற வகையில் சிக்கிய ஆடுதான் டாக்டர் முருகேசன்.

DSC_0267

டாக்டர் முருகேசனின் பல் மருத்துவமனை

ஆதிபராசக்தி பல் மருத்துவக் கல்லூரியின் மேலாண்மை இயக்குநராக இருக்கும் ஸ்ரீலேகா இப்படி குறுக்கு வழியில் லஞ்சம் கொடுத்து காரியம் சாதிக்கும் எண்ணத்தோடு இருப்பது ஒன்றும் வியப்பை அளிக்கும் விஷயம் அல்ல.  அவர் வளர்ந்த விதம் அப்படி..

ஸ்ரீலேகாவின் தந்தை இளங்கோவன், தமிழக காவல்துறையில் ஐஜியாக ஓய்வு பெற்றவர்.  அவர் ஒரு ஐபிஎஸ் அதிகாரி.  1999ம் ஆண்டு உதவி ஆய்வாளர் தேர்வு நடக்கையில் அவர் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலராக இருந்தார்.  அந்த வருடம் உதவி ஆய்வாளர்கள் தேர்ச்சியின் போது, 3 லட்ச ரூபாய் கொடுத்தால் உதவி ஆய்வாளர் பணி என்று வெளிப்படையாக ஏலம் விடப்பட்டது.   அவரோடு சேர்ந்து லஞ்சம் வாங்கிக் கொழுத்தவர்கள் அப்போது ஐ.ஜிக்களாக இருந்த சுப்பையா மற்றும் ஜெகந்நாதன்.  லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, ஜெகந்நாதன், சுப்பையா,  இளங்கோவன் மற்றும் ஒரு நேர்முக உதவியாளர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.  அந்த வழக்கின் விசாரணை தொடங்கும்போதே, ஐபிஎஸ் அதிகாரிகளான சுப்பையா, ஜெகந்நாதன் மற்றும் இளங்கோவனுக்கு இந்த ஊழலில் எந்த தொடர்பும் இல்லை என்று அவர்கள் மூவரையும் விடுவித்தார் ஒரு நீதிபதி.  ஆனால் இவர்கள் மூவருக்கும் கீழே க்ளெர்க்காக பணியாற்றியவர் மட்டும் இந்த ஊழலை நடத்தினார் என்று அவரை விடுவிக்க மறுத்தார் அந்த நீதிபதி.  அவர் மீதான வழக்கு இன்னும் நடைபெற்று வருகிறது.

waterElangovan_DIG_1

ஐ.ஜி இளங்கோவன்

1999 உதவி ஆய்வாளர் தேர்வு நடக்கையில் இளங்கோவன், பணத்தை வசூல் செய்தது, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அருணா இன் ஹோட்டலில் வைத்தே.  அதன் முதலாளி, இளங்கோவனுக்கு வசூல் செய்து தரும் ப்ரோக்கராக செயல்பட்டார். இந்த இளங்கோவனின் மகள்தான் ஸ்ரீலேகா.  புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்ன ?

1srilekha

தலைமறைவாக உள்ள ஸ்ரீலேகா

சென்னை ராயப்பேட்டையில் பல் மருத்துவமனை நடத்தி வரும் முருகேசன், அகில இந்திய பல் மருத்துவ கவுன்சிலின் உறுப்பினர்.  இவருக்கு பல் மருத்துவராக தொழில் செய்வதை விட விருப்பமான தொழில், அங்கீகாரம் வேண்டும் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கு லஞ்சம் வாங்கிக் கொண்டு, அங்கீகாரம் வழங்குவது.  ஒரு கல்லூரியில் உட்கட்டமைப்பு வசதிகள் இருந்தால் என்ன.. இல்லா விட்டால் என்ன ?

அங்கீகாரம் வழங்க இவர் நிர்ணயித்திருக்கும் கட்டணம், அங்கீகாரம் வேண்டும் கல்லூரியில் உள்ள மொத்த மாணவர் சீட்டுக்கு ஒரு சீட்டுக்கு 10 லட்ச ரூபாய் விகிதத்தில் லஞ்சம் தர வேண்டும்.   ஆதிபராசக்தி பல் மருத்துவக் கல்லூரியில் முதுகலை பல் மருத்துவப் படிப்புக்கு அங்கீகாரம் வேண்டி, கல்லூரி நிர்வாகம் இவரை அணுகிய போது இவர் நிர்ணயித்த தொகை 2 கோடி ரூபாய்.  இந்த லஞ்சத் தொகையை ஸ்ரீலேகா பேரம் பேசி ஒரு கோடி ரூபாயாக குறைத்துள்ளார்.

இவ்வாறு இவர் லஞ்சம் வாங்கிக் கொண்டு அங்கீகாரம் வழங்கி வந்ததை சிபிஐ அதிகாரிகள் நீண்ட நாட்களாகவே கண்காணித்து வந்தனர்.  அந்த கண்காணிப்பின் விளைவு,  முருகேசன் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக சிக்கியது.

திங்களன்று இரவு, முருகேசனிடம் லஞ்சத் தொகையின் முதல் தவணையாக 25 லட்சத்தை ஆதிபராசக்தி பல்மருத்துவக் கல்லூரியின் நிர்வாகிகன் கொடுக்கும் போது, சிபிஐ அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர். கல்லூரி சார்பில் இந்த  பணத்தைத் தருவதற்கு, பங்காருவுக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்படும் முன்னாள் எம்.எல்.ஏ சக்தி பழனி, அக்கல்லூரியின் செயலாளர் சக்தி கருணாநிதி, மற்றும் அக்கல்லூரியின் நிர்வாக அலுவலர் சக்தி ராமபத்ரன்.

என்னடா எல்லார் பெயர்கள் முன்பும் சக்தி என்று ஒரு வார்த்தை சேர்த்துக் கொள்ளப்படுகிறதே என்று வியப்பாக இருக்கிறதா…. பெரிய திருடன் பங்காருவுக்கு விசுவாசமாக இருப்பவர்களுக்கு, பிரிட்டிஷார் வழங்கும் சர் பட்டத்தை விட மதிப்பு அதிகமான சக்தி பட்டம் வழங்கப்படும். அப்படிப் பட்டம் பெற்றவர்கள்தான் இவர்கள்.

Untitled-2

கைது செய்யப்பட்ட நால்வரும், சென்னையில் உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பப் பட்டனர். இவர்களை நீதிமன்றத்துக்கு எடுத்து வருகையில் டாக்டர் முருகேசனை மட்டும் வழக்கறிஞர்கள் படமெடுக்க விடவில்லை. வழக்கறிஞர்கள் அணியும் கருப்பு அங்கியை முருகேசன் தலையில் போட்டு படமெடுக்கவிடாமல் தடுத்தனர். ஒரு கருப்பு ஆடை கருப்பு அங்கியை வைத்து மறைத்தது பொருத்தம்தானே… ?

டாக்டர் முருகேசனின் சகோதரர் யஸ்வந்த் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருக்கிறாராம்.  மற்ற குற்றவாளிகளை புகைப்படம் எடுக்கலாம்… வழக்கறிஞரின் சகோதரரை புகைப்படம் எடுக்கலாமா…  ?

Murukesan

வழக்கறிஞர்கள் படமெடுக்க விடாமல் தடுத்த முருகேசன் இவர்தான்

DSC_0269

இதுதான் முருகேசனின் பிஎம்டபிள்யூ கார்

இந்த வழக்கு குறித்து சிபிஐ விரிவான புலன் விசாரணை நடத்தி வருகிறது.  டாக்டர் இளங்கோவன் பல் மருத்துவ கவுன்சிலின் உறுப்பினரான நாள் முதல், அங்கீகாரம் வழங்கப்பட்ட பல் மருத்துவ கல்லூரிகளின் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து விரிவான விசாரணை நடைபெற உள்ளதாகவும் தெரிகிறது.  ஸ்டார்ட் ம்யூசிக்.

ஒவ்வொரு நாளும் லஞ்சம் வாங்கியதாக இவர் மாட்டினார், அவர் மாட்டினார் என்ற ஆயிரம் செய்திகளைப் படித்தாலும், பல் மருத்துவ மேல் படிப்பு நடத்துவதற்காக அங்கீகாரம் பெற்றதில் நடைபெற்ற ஊழலை அம்பலப்படுத்தியுள்ள சிபிஐ அதிகாரிகள் மிகவும் பாராட்டுக்குறியவர்கள்.  ஒரு சான்றிதழ் வழங்க 500 ரூபாய் லஞ்சம் வாங்கும் விஏஓ, போக்குவரத்து விதிகளை மீறியவரிடம் 200 ரூபாய் லஞ்சம் வாங்கும் கான்ஸ்டபிள் இந்த சமுதாயத்திற்கு ஏற்படுத்தும் தீமையை விட, இந்த கல்வித்தந்தைகள் சமுதாயத்திற்கு ஏற்படுத்தும் தீமைகள் அளவிட முடியாதது.

ஊழலில் திளைக்கும் இந்தக் கல்லூரிகளில் படித்து வெளி வரும் மருத்துவர்களும், பல் மருத்துவர்களும் இந்த சமுதாயத்தில் ஏற்படுத்தும் தீய விளைவுகள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாததது.  ஜெகதரட்சகனின் லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி, சத்ய சாய் மருத்துவக் கல்லூரி, ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி, ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி, பாலாஜி மருத்துவக் கல்லூரி, ஆதிபராசக்தி பல் மருத்துவக் கல்லூரி என்று  வரிசையாக கல்வித் தந்தைகளின் முகத்திரையைக் கிழிக்கும் சிபிஐ அதிகாரிகளுக்கு இந்தச் சமுதாயம் மிகவும் கடமைப்பட்டுள்ளது.  அந்த அதிகாரிகள் வாழ்த்துக்குரியவர்கள்.

எப்போது பார்த்தாலும், விஏஓக்களையே கைது செய்து வரும் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள், தமிழகத்தில் விஏஓக்கள் மட்டுமே லஞ்சம் வாங்குகிறார்களா என்பதை விளக்க வேண்டும்.

இந்தக் கல்வித்தந்தைகளின் முகத்திரையை சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து கிழிக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த சமுதாயத்தின் எதிர்ப்பார்ப்பு.  அனைவரும் சேர்ந்து சிபிஐ அதிகாரிகளை வாழ்த்துவோம்.

 

Comments  

 
0 #59 Vinoth Kumar 2013-03-26 19:01
i feel ashmed of the unknowness of our people still belive these ass holes ..
Quote
 
 
0 #58 sakthiarunai 2013-03-13 00:43
I already posted a comment but you didn't publish I dont know why you do so.. if I put something that supports your article means you will publish otherwise wont.. I dont know why.. but if you go on play without knowing real things about AMMA then you will have to suffer,.. you dont know anything about AMMA then why you create rumors.. It will affect you soon.. just wait and see.. because of work-less people's comments you create unwanted articles and doing unwanted things.. you are playing... limit yourself.. you bloody..
Quote
 
 
0 #57 iraiadiyan 2013-01-21 12:51
I appreciate a honest and dignified post on those culprits who call themselves God Man or Holy Man, Shame on those who exploit the innocent and rob their money.. Goverment should take over all institution of these so call Holy Man and send them to do only Poojas and eat the Prasadham,, God Save World from these Criminals
Quote
 
 
-1 #56 Jegan Nathan 2013-01-19 06:47
இவரை எப்பொழுதும் நான் ரவுடி ராக்கப்பன் என்ரு சொல்வதுதான் வழக்கம். மார்கன்டேய கட்சு சொல்லியது பொல் 80% முட்டால் இந்தியர்கலை ஏய்ப்பது 20% சதவிகித ஆட்கலுக்கு சிரமம் இல்லை.
Quote
 
 
+1 #55 Raji 2013-01-17 23:17
இவ்வளவு மோசமன சமுதயதுல வழ்ந்துகிடிருகர ்துல வெட்கம இருக்கு....
Quote
 
 
+13 #54 kumaravelu 2013-01-16 19:17
வெக்கத்தை விட்டு சொல்லட்டுமா உம்ம தைரியம் எனக்கு இல்ல ஆனா உம்மொட சேந்து குரல் கொடுப்போம் காலம் வரட்டும்
Quote
 
 
+7 #53 Robinhood 2013-01-16 09:53
அவர் பங்காரு அடிகளார் அல்ல.கேடிகளார். இருந்தாலும், இவ்வளவு பாமர மக்கள் எப்படி நம்புறாங்க என்பது ஆச்சர்யம். எத்தனை பெரியார் வந்தாலும் நம் மக்களை மாற்றவே முடியாதா? இந்த மாதிரி போலி, திருட்டு சாமியார்களை பெரும்பாலான பாமர மக்கள் இன்னும் நம்புறாங்க என்பது,மிகவும் வருத்தமாக வுள்ளது. இவனுங்கள அந்த வேப்ப மரத்துலே கட்டி வுதைக்கணும். மொத்த சொத்த கைப்பற்றி அரசு கஜானாவில் சேர்க்கணும். கோவிலை இந்து அறநிலையத்துறை எடுக்கணும். பங்காரு தன்னை வுண்மையான அம்மா என்று நிரூபித்தால் விட்டு விடலாம்!!!!
Quote
 
 
+7 #52 nellaisuresh 2013-01-13 22:43
சவுக்கு, திச் இச் கோட். ஆனா எனக்கு ஒரு சந்தேகம். இந்த ஆள இவ்வளவு வருஷமா எந்த தி.க காரனும் எதுத்து பொதுக்கூட்டத்து ல பேசுனதாவோ ஆர்ப்பாட்டம் போராட்டம்னு நடத்துனதாவோ தெரியலையே? பாப்பான் ஒரு ஓரமா கோவிலல மணி அடிச்சு தட்டுல விழுற அஞ்சு பத்து சில்லற காசுல குடும்பம் நடத்துனா அவன் குடுமிய வெட்டி பூணுல அறுத்து ஸீன் போட வேண்டியது.

those who are saying god not exisits they should talk about all religions.

TK (dravida kalzhagam) will talk about only rama and krishna same like karunanidhi.
Quote
 
 
+1 #51 NAVI 2013-01-13 13:20
pangaru and his family peoples are culprits. Government will take action is must. but Tamilnadu election policy: All political party and leaders they wont action because of they loss party vote.
Quote
 
 
+5 #50 iniyan 2013-01-13 00:17
மக்களின் அறியாமை என்றுதான் நீங்கப்போகிறதோ என்பதை நினைத்தால் வேதனையாக உள்ளது.
Quote
 
 
+7 #49 jegan usa 2013-01-12 19:25
வளர்க சவுக்கு ....மேன்மேலும் வளர வாழ்த்துகள் ...சமுக அவலங்களை தோலுரித்து காட்ட ...
Quote
 
 
0 #48 ShitNotSaint 2013-01-12 16:59
This is nothing new. Ofcourse Hinduism being the older religion it mastered this act of dillusion. It also has countless so called "saints" who commit heinous crimes but hide under the religious umberlaw.
These Hindu want to be "Deciples of God" are nothing compare to (let the drum roll please) TERESA of CULCUTTA. We just have to stand in awe when you talk about her. Atleast she finally admitted that she didn't think there is a God. If you don't beleive me just search the internet. Just to leave you with a quote:
"...SHE IS A FANATIC, FUNDAMENTALIST AND A FRAUD..." - Christopher Hitchens
Quote
 
 
+20 #47 bambino 2013-01-12 13:50
பெருச்சாளி மாதிரி இருந்துகிட்டு சின்னம்மா - பெரியம்மா என்று உதார் விடும் பொறுக்கிகள்.
தெய்வம் இவர்களை சும்மா விடாது.
Quote
 
 
-5 #46 Rakesh 2013-01-12 11:40
Dear sir,
please written india pakistan border issue we are waiting...
Quote
 
 
+7 #45 Ravi 2013-01-12 03:49
ஆமாம்.... இந்த கட்டுரைக்கு இந்த வரி தேவையா? "பங்காரு அடிகளார் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்".

உங்களின் எல்லா கட்டுரைகளையும் படிப்பவன் நான். யாருடைய முன்னுரையிலும் அவர்கள் சார்ந்த சமூகத்தை நீங்கள் பொதுவாக சேர்க்க மாட்டீர்கள். இந்த கட்டுரைக்கு மட்டும் எதற்கு விதிவிலக்கு? உ.ம். பத்மனன்.

சவுக்கு பலமுறை குற்ற சாட்டப்பட்டவரை எந்த ஜாதி, இனம் என்று கூறியுள்ளது. இதற்காக பெரிய வாக்குவாதங்கள் பல நடந்துள்ளது. அப்படி இருக்க..இவர் என்ன புதுசா சொல்றாரு? இப்படி ஐஸ் வைச்சு வன்னியர் சாமியார் என்பதை மாற்ற முயல்கிறாரா? அது எப்படி?
Quote
 
 
-13 #44 karuthukandaswamy 2013-01-11 19:15
i can see your angry against kounders in this article nothing other than this. can you say one private school/college which is started without corrpution or with correct instrastructure in tamilnadu. you need to search in google map. people who gets caught become theif and other theifs call the person got caughted as theif. everyone in someway is trying to cheat our society. people in upper class do's it a lot without humanity. Please stop writing against only one particular caste. do not show your angry here. Your site is intiative for every individuals looking for better india, but sometimes article written for showing your anger against some community will lead your motive away.
Quote
 
 
+6 #43 shah 2013-01-11 09:04
சவுக்கு அன்னன்... ungalidam irunthu yarum thappa mudiyadu na....
Quote
 
 
-1 #42 Tamilselvam 2013-01-11 06:48
Quoting Narayan Viswam:
I've heard about Ilangovan IPS a lot. First of all he is not a direct IPS recruit but just a conferred IPS. He, like his co-brothers, got through TNPSC group I by hefty bribe and political influence of his father-in-law. He joined as DSP, and later by promotion he got conferred the IPS tag. He and his relatives in the TN state govt are corrupt to the core. No wonder his daughter today demonstrates her skill in the family art of looting and accumulating dirty money.


Narayan Viswam! Don't you come to know on a raid of the house of an young direct IPS officer house, on an allegation of getting money for transfers of his SIs and Constables. Pleas don't have general opinions but gather knowledge on individuals and write.
Quote
 
 
+10 #41 நெல்லை பாலாஜி 2013-01-10 22:31
ஒரு காலத்தில்,சவுக் கு இணைய தளத்தினை கண்டு கொள்ளாத அல்லது அதை பற்றி அதிகம் கண்டுகொள்ளாத வினவு தோழர்கள், தற்போது சவுக்கின் கட்டுரையை மேற்கோள் அல்லது சவுக்கு கட்டுரையின் தொடர்பை தங்கள் கட்டுரையில் சுட்டுவது, சவுக்கு பெற்று வரும் முக்கியத்துவத்த ை கட்டுகிறது ...

நன்றாக நினைவு இருக்கிறது .ஒரு வருடங்களுக்கு முன் .ஒருமுறை ஒரு பின்னுட்டம், சவுக்கை பற்றி வினவில் வந்தது.அதற்கு வினவு,தனிநபர் இணைய தளங்களை தாங்கள் பெரிது படுத்துவது இல்லை என்பது போல பதில் அளித்து இருந்தனர்..

வளர்க சவுக்கு ....மேன்மேலும் வளர வாழ்த்துகள் ...சமுக அவலங்களை தோலுரித்து காட்ட ...

http://www.vinavu.com/2013/01/10/bangaru-dental-college-scandal/
Quote
 
 
+5 #40 S Arumugam 2013-01-10 17:51
சவுக்கு,

அடுத்த முறை முதல்வர் அலுவலகத்த்தில் உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் முகத்திரையை கிழிக்கவும். இவர்கள் நடந்து கொள்ளும் விதம் அமைச்சர்களே பரவாயில்லை என்று உள்ளது....குறிப்பாக வெங்கட்ரமணன் ஐ.ஏ.எஸ், ஆர். ராஜ கோபால் ஐ.ஏ.எஸ் பற்றி ஆராயவும்.
Quote
 
 
+5 #39 kumaran senthamil 2013-01-10 16:20
நம்ம அய்யா ராமதாசு கூட அண்ணாமலை பல்கலைக்கு பூட்டு போடுற போராட்டம் எல்லாம் நடத்துனாரு நியாபகம் இருக்கா?? இப்ப அய்யாவே கல்லூரி நடத்துறாப்ல.... அதனால சவுக்கு! நீயும் ஒரு கல்லூரி ஆரம்பிச்சி பேசாம செட்டில் அவுற வழிய பாரு.. சொல்லிபுட்டேன்! அப்புறம் அன்னைக்கு அய்யா பூட்டு போட்டுடு இப்ப காலேசி நடத்துறாறு.. டாஸ்மாக்குகு இப்ப பூட்டு போட்டுடு அப்பறம் சரக்கு கடயும் நடத்துவாரான்னு கேக்ககூடாது... அப்படி நடத்துனா... நீ பக்கத்துல சால்னா கட போட்டுகா...
Quote
 
 
+4 #38 kumaran senthamil 2013-01-10 16:16
ஆனா எனக்கு ஒரு சந்தேகம். இந்த ஆள இவ்வளவு வருஷமா எந்த தி.க காரனும் எதுத்து பொதுக்கூட்டத்து ல பேசுனதாவோ ஆர்ப்பாட்டம் போராட்டம்னு நடத்துனதாவோ தெரியலையே?

அதுக்கு காரணம் இன்னான்னா.... நாங்களும் வல்லத்துல பல பல கலைகளை கற்றுத்தரும் பல்கலைகழகம் நடத்துறோம்ல.... அது தவிரவும் எங்களுக்கு பினாமியா பல "பொறியல்" கல்லூரி சாமிகள் பேருலயே இருக்குல்ல???? இப்ப இன்னா செய்வீங்கோ??
Quote
 
 
+6 #37 நாஞ்சில் காமராசு 2013-01-10 16:11
கல்லூரி நடத்த பணம் குடுக்கனும்... அது எம்மாம்பெரிய அப்பாடக்கர் கல்லூரியா இருந்தாலும் அப்படிதான்... உள் கட்டமைப்பு, வெளி கட்டமைப்பு, அப்புறம் சைடு கட்டமைப்பு எது இருந்தாலும் டப்பு இல்லன்னா பப்பு வேகாது பாபு .. நாம இருக்கறது இந்தியாவுல...
என்னமோ இந்த பக்கிகள் மாட்ட தெரியாம மாட்டிகிச்சி....
Quote
 
 
+4 #36 Anbarasu 2013-01-10 16:05
பாராட்டுகள் சவுக்கு.
Quote
 
 
+4 #35 Bala_thebroadcaster 2013-01-10 15:51
எல்லாச் சாலைகளும் ரோமை நோக்கி என்பதைப் போல, எல்லா ஊழல் வாதிகளும்,திருட ்டுச் சாமியார்களும்,இ ன்ன பிற அயோக்கியர்களும் வாழ்நாளில் ஒரு முறையாவது, கருணாநிதியுடன் வாய் இளித்தவாறு புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர்.. அது ஒரு அடிப்படைத் தகுதி போலும்...
Quote
 
 
+2 #34 ஷாலி 2013-01-10 15:47
பலநூறு ஆண்டுகளாக சூத்திரர்களின் பொருளை பார்ப்பனர்களே சுரண்டித் தின்றனர்.இவர்களுக்குப் போட்டியாக சூத்திரப் பங்காரு சுரண்டலில் பங்கு போட்டார்.இவரது ஓம்சக்தி ஆன்மீக வியாபாரத்தை ஓரங்கட்ட சங்கர மடங்கள் செய்த முயற்சிகள் ஒன்றும் பலிக்கவில்லை.
கொள்ளைப் பொருள் பங்கு பிரச்சனையில் அவர்களே இன்று அகப்பட்டுக்கொண் டனர்.ஆன்மீக சுரண்டலிலும் கூட சூத்திரர்களுக்க ு திறமை போதாது என்பதை அவர்களே நிரூபித்துவிட்ட னர்.
Quote
 
 
+11 #33 arunyog 2013-01-10 15:29
இயேசு விடுவிக்கிறார் என்று சொல்லி
கல்லா கட்டும் திருட்டுகரன்,நா சரேத் லாசர்
பற்றி வாயே திறப்பது இல்லியே ஏன்???
Quote
 
 
+3 #32 SARUBALA 2013-01-10 15:15
சவுக்கின் சாட்டை நாளாபுறமும்..... சூப்பர் சார்.
Quote
 
 
+2 #31 பறையன் 2013-01-10 10:44
நான் சிபிஐ அதிகாரிகளை வாழ்த்துகிறேன்
Quote
 
 
+9 #30 ஊர்க்குருவி. 2013-01-10 10:24
மக்களின் அறியாமையையும் வறுமையையும் பயன்படுத்தி இப்படியான சமூக ஒட்டுண்ணிகள் ஊரைக்கெடுத்தாலு ம் அவர்களை வளர்ப்பதென்னவோ அரசியல்வியாதிகள ும் ஊடகங்களும்தான் கடைசியாக தோலுரிக்கப்பட்ட பாலியல் சேட்டைச்சாமி நித்தியானந்தாவை தூக்கி நிறுத்திய பெருமை "குமுதம்" பத்திரிகையை சாரும் செத்துப்போன குறளிவித்தை "லிங்கம்" புகழ் சத்தியசாயிபாபாவ ை தமிழகத்தில் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தி ய பெருமை "ஆனந்தவிகடன் பத்திரிகையை சாரும்' இப்படியே மேல்மருவத்தூர். கங்காரு அம்மாவை விட பெங்களூரிலும் இன்னுமொரு அம்மா சாமி (குடும்பஸ்தர்) இரூக்கிறது. பிரேமானந்தா சாமி, சந்திராசாமி, ஸ்ரீ ஸ்ரீ சங்கர் சாமி, ஜெகத்குரு சாமி, இப்படி இந்தியா முழுவதும் அரசியற்கட்சிகள் போல சுவாமிகள் இல்லாத இடமில்லை அனைத்துக்கும் ஏதோ ஒரு பத்திரிகை தொடர் எழுதி சமூகத்தை நாசம்பண்ணிக்கொண ்டிருக்கிறது.
Quote
 
 
+3 #29 saravan 2013-01-10 09:48
Cheers .... Savukku sir :lol: :lol: :-)
Quote
 
 
+65 #28 Sukhoi30MKI 2013-01-10 06:42
சவுக்கு, this is good. ஆனா எனக்கு ஒரு சந்தேகம். இந்த ஆள இவ்வளவு வருஷமா எந்த தி.க காரனும் எதுத்து பொதுக்கூட்டத்து ல பேசுனதாவோ ஆர்ப்பாட்டம் போராட்டம்னு நடத்துனதாவோ தெரியலையே? பாப்பான் ஒரு ஓரமா கோவிலல மணி அடிச்சு தட்டுல விழுற அஞ்சு பத்து சில்லற காசுல குடும்பம் நடத்துனா அவன் குடுமிய வெட்டி பூணுல அறுத்து ஸீன் போட வேண்டியது.
ஓஹோ சரி சரி, மொள்ளமாரித்தனமு ம் பாப்பானத் தவிர வேற எவன் பண்ணாலும் அது "திராவிட இனமான மொள்ளமாரித் தன"த்துல சேத்தி. இல்ல??
But this is good stuff. இந்தாள ஒழிக்கணும்.
Quote
 
 
+32 #27 I AM PARAAAASAKTHI 2013-01-10 05:59
அப்படியே "மாஆஆண்புமிகு" நீதி அரசரு தணிகாச்சலம் பத்தியும் ( பங்காரு சம்பந்தி ) எழுதுங்க பாஸூ.....
Quote
 
 
+58 #26 Ravi 2013-01-10 02:21
இதுவரையிலும் சவுக்கு தோலுரித்து காட்டியவர்கள் ஓரளவுக்காகவாவது கொஞ்சம் யோசிக்கத் தெரிந்தவர்கள் ஆகவே முரட்டுத்தனத்தி ல் பெரிய அளவுக்கு நம்பாதவர்கள். ஆனால் இப்போது சவுக்கு தொட்டிருக்கும் இடம் வெறும் முரட்டுத்தனத்தை நம்பியே வளர்ந்த இடம். இந்த அம்மா பக்த கோடிகள் சும்மாவே சாமியாடுவார்கள் . இப்போது நீங்கள் அம்மாவையே பகைத்துக் கொள்கீறீர்கள். கேட்கவே வேண்டாம். ஜாக்கிரதை சவுக்கு. தமிழகம் இன்னும் முழுமையாக கருத்து சுதந்திரத்தை புரிந்து கொள்ளாத இடம்தான். கவனம். கவனம். கவனம்.
Quote
 
 
+24 #25 Padmanan 2013-01-10 01:15
தவறு எங்கு நடந்தாலும் அதை அனுமதிக்க கூடாது. கடவுள் பெயரால் இவர்கள் இது போன்ற தவறுகளை செய்வது அவர்களுக்குத்தா ன் கேடாக முடியும். ஊழல்களை பார்த்து பார்த்து மக்களுக்கு சகிப்புத்தன்மை வந்துவிட்டது. ராசா, கனிமொழி, 2ஜி எல்லாத்தையும் மக்கள் மறந்துவிட்டார்க ள். மக்களிடம் இருக்கு இந்த சகிப்புத்தன்மைத ான் இதுபோன்ற திருடர்களுக்கு அசட்டு தைரியத்தை தருகிறது. மேலும் ஊழல்வாதிகளால் நடத்தப்படும் ஆட்சியில் லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் நடப்பதில்லை. இவர்கள் கல்லூரியில் தேவையான வசதிகளை செய்தாலும் இதுதான் நிலை. வாழ்த்துக்கள் சவுக்கு.

ஆமாம்.... இந்த கட்டுரைக்கு இந்த வரி தேவையா? "பங்காரு அடிகளார் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்".

உங்களின் எல்லா கட்டுரைகளையும் படிப்பவன் நான். யாருடைய முன்னுரையிலும் அவர்கள் சார்ந்த சமூகத்தை நீங்கள் பொதுவாக சேர்க்க மாட்டீர்கள். இந்த கட்டுரைக்கு மட்டும் எதற்கு விதிவிலக்கு?
Quote
 
 
+31 #24 mohanarangam 2013-01-10 00:07
வீரத்தின் மறுபெயர் சவுக்கா ?
Quote
 
 
+40 #23 Suriyan 2013-01-09 23:54
யோவ் சவுக்கு , நீ கில்லாடி தான். இந்த மாதிரி தான் ஒரு பதிரிக்கை இருக்கனும்.ஒரு பதிரிக்கை ஆரம்பிட்சா நாடு உருப்படும். நன்றி.
Quote
 
 
+43 #22 பரங்கியன் 2013-01-09 21:38
சவுக்கு நீ என்னதான் பங்கார பத்தி எழுதுனாலும் கொஞ்ச நாள்ல இதெலாம் மக்கள் மறந்துடுவாங்க

ஜல்சா பன்னி போலீஸ்கிட்ட மாட்டுன நித்தியானந்தவைய ே மக்கள் இன்னும் நம்புது...
இந்த பங்கார-ய்யா நம்பாம இருக்க போகுது..
அதுவும் இவன் பேரு அம்மா வேற..
அம்மா சென்டிமென்டு நம்ம நாட்டுல எப்பவுமே
ஒர்க் அவுட் ஆகும்
Quote
 
 
+63 #21 freebalu 2013-01-09 21:27
சவுக்கு! எல்லாத்தையும் விட நீ எங்களுக்கா வேண்டி தேடிப் பிடிச்சு போடுற படங்கள், டாகுமென்ட்ஸ் தான்யா பட்டய கிளப்புது. ரொம்ப கஷ்டமான வேலை அது.
Quote
 
 
+25 #20 Ray Jaguar 2013-01-09 20:34
எல்லாம் சரி... கடைசி வரிதான் ஏன் என புரியவில்லை??... சி.பி.ஐ. ஒரு பாரபட்ச அமைப்பு... பாராட்டுக்கு தகுதி கிடையாது....
Quote
 
 
+28 #19 babu2 2013-01-09 19:58
பாராட்டுகள் சவுக்கு, இதெ மாதிரி மற்ற அலுவலகத்தையும் அலசி ஆராயமாறு கேட்டு கொள்கிறேன். கொல்மால் நடப்பது தெரியும், இவ்வள்வு அதிகமாக ஆராய்ந்த சவுக்குக்கு நன்றி.
Quote
 
 
-23 #18 mannar 2013-01-09 19:42
:லொல்: :லொல்: :லொல்: :லொல்: :லொல்: :லொல்: :லொல்: :லொல்: :லொல்: :லொல்: :லொல்: :லொல்: :லொல்:
மிக நல்ல பதிவு நன்பரெ
Quote
 
 
+37 #17 இராமசாமி இளங்கோவன் 2013-01-09 17:25
நேர்மையானவர்கள் ஒரு சிலர் இன்னும் மத்திய மாநில காவல்துறைப்பொறு ப்புகளில் உளர். தன்னலமின்றி கடமையாற்றும் அவர்கள், ஊழல்பேர்வழிகளை நீதியின் முன் நிறுத்துகின்றனர ். ஆயினும், அந்தோ! இக்பால்களையும் ஜோதிமணிகளையும் தாண்டி வரணுமே...
Quote
 
 
+57 #16 சோழன் 2013-01-09 16:41
சவுக்கு கடைசியா அம்மா மேலயே கை வச்சிட்டியா?

எதுக்கும் கொஞ்சம் உன் பாதுகாப்பில் அதிகம் கவனம் செலுத்தவும்! இது மோசமான உலகம்! வர வர நீ எழுதுற உண்மை எல்லாம் சம்மந்த்த பட்டவங்களை அதிகம் சுடும் நு நெனைக்குறேன்! ஜாக்கிரதை!
Quote
 
 
+34 #15 mks 2013-01-09 16:37
சவுக்கு நெஜமா சொல்ரேன் நீங்க பெரிய கில்லாடி super
Quote
 
 
+33 #14 RaBaSha 2013-01-09 15:39
வேலூர் நாராயீணி அம்மாவின் முகத்திரையை எப்போது கிழிக்கப்போகிறீ ர்கள் என்று ஆவலோடு உள்ளேன். He is another amma in the making. It is time he too is exposed.
Quote
 
 
+33 #13 Cyril Thomas 2013-01-09 15:25
நிஜத்தை விட போலிக்கு தான் மவுசு அதிகம்..
நான் தான் கடவுள் என்று சொல்லிக்கொண்டு திரியும் இந்த "போலி"களை அழித்தால் தான் நல்லது.. இவங்களால அதிகபட்சம் மக்களுக்கு கிடைக்கும் நன்மை "வெள்ளி கிழமைகளில்" தரும் சுண்டல் மட்டுமே...
Quote
 
 
+24 #12 Seithi porukki, Madu 2013-01-09 14:59
அவர் பஙகாரு அடிகல் அலல, கஙகாரு அடிகலார். - செய்தி பொருக்கி.
Quote
 
 
+45 #11 karthikPrabhakaran 2013-01-09 14:40
சவுக்கு....ரொம்ப பேசாத!!!.ரெண்டு நாளா அம்மாவோட ஞானக் கண்ணுல தூசி விழுந்து எதையும் சரியாப் பாக்க முடியல. அந்த சமயம் பாத்து ஏபிசி யோ சிபிஐ யோ , அந்த பொடியனுக வந்துட்டானுக.இதை கண்டிச்சு நம்ம சின்னம்மா தலைமைல 1000 பால் குடமும் பெரியம்மா தலைமைல 1000 காவடியும் எடுத்துகிட்டு தமிழ்நாடு பூரா இருக்கற நம்ம அல்லக்கைகளை கூட்டிக்கிட்டு வர வெள்ளிகிழமை ஊர் ஊரா போய் அந்த தொலைச்ச பணத்த வசூல் பண்ணலாமுன்னு இருக்கோம்.
Quote
 
 
+38 #10 Kishore 2013-01-09 13:14
//என்னடா எல்லார் பெயர்கள் முன்பும் சக்தி என்று ஒரு வார்த்தை சேர்த்துக் கொள்ளப்படுகிறதே என்று வியப்பாக இருக்கிறதா…. பெரிய திருடன் பங்காருவுக்கு விசுவாசமாக இருப்பவர்களுக்க ு, பிரிட்டிஷார் வழங்கும் சர் பட்டத்தை விட மதிப்பு அதிகமான சக்தி பட்டம் வழங்கப்படும். அப்படிப் பட்டம் பெற்றவர்கள்தான் இவர்கள்.//...காமெடிக்கு ஒரு அளவே இல்லையா?
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 93 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday3227
mod_vvisit_counterYesterday12350
mod_vvisit_counterThis week62392
mod_vvisit_counterLast week78861
mod_vvisit_counterThis month275211
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12797330