முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
பொங்கல் வாழ்த்துக்கள்.. அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 26
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
திங்கட்கிழமை, 14 ஜனவரி 2013 23:23

வழக்கமாக எல்லா பண்டிகைகளுக்கும், தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து சொல்வார்கள்.  ஒரு மாற்றத்திற்காக நாம் இந்த ஆண்டு தலைவர்களுக்கு வாழ்த்து சொல்லுவோம்.

Amma-Photo-1

ஜெயலலிதா.

இந்தத் தைத் திருநாளில், நாட்டு நடப்புக்களை குறைந்தபட்சம் செய்தித்தாள்களைப் பார்த்தாவதோ அல்லது, ஜெயா தொலைக்காட்சி தவிர்த்த மற்ற செய்திச் சேனல்களைப் பார்த்தோ தெரிந்து கொள்ள வேண்டும் என்று உறுதி மொழி எடுங்கள்.  கருணாநிதி கட்டிய எந்தக் கட்டிடங்களை இடிக்கலாம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு அதே சிந்தனையில் இருக்காமல், உங்களை நம்பி வாக்களித்த முட்டாள் மக்களுக்கு குறைந்தபட்ச நன்மையாவது செய்ய முயற்சி செய்யுங்கள்.  மத்திய அரசுக்கு எதிராக அறிக்கை விடுவது, மத்திய அரசை குறை சொல்லுவது, மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்துள்ளது என்பதை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்காமல் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ள விவகாரங்களிலாவது, மக்களுக்கு நன்மை பயக்கும் முடிவெடுக்க முயற்சி செய்யுங்கள்.  மக்களின் வயிற்றில்  அடிப்பது போல பேருந்து கட்டணம், மின் கட்டணம், பால் விலை ஆகியவற்றை ஒரே நாளில் உயர்த்தி விட்டு, மத்திய அரசு ரயில் கட்டணத்தை ஏற்றினால் குய்யோ முறையோ என்று கூக்குரலிடுவது போன்ற நாடகங்களை நடத்துவதை தவிர்த்து, ஆட்சி நிர்வாகத்தில் கவனம் செலுத்துங்கள்.  உங்கள் வசதிக்காக கொடநாட்டில் வேண்டுமானால் தலைமைச் செயலகத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.  அதற்கு பதிலாக ஆறு மாதத்திற்கு ஒரு முறை, நீங்கள் கொடநாட்டில் ஓய்வெடுப்பதும், தலைமைச் செயலக அதிகாரிகள், விமானத்தில் பறந்து பறந்து கோப்புகளில் கையெழுத்து பெற்று வருவதும், எங்கள் தலையில்தான் விடிகிறது.  இந்தத் தைத் திருநாளில் மக்களைப் பற்றி கொஞ்சமாவது சிந்திக்கலாம் என்று முடிவெடுங்கள்.

M_KARUNANIDHI_113005f

கருணாநிதி

எத்தனையோ பேர் எத்தனையோ முறை சொன்னாலும் உங்களுக்கு ஒரு நாளும் உறைக்காது.  நீங்கள் ஓய்வெடுக்கும் வயதைக் கடந்தே பல ஆண்டுகள் ஆகி விட்டது.  ஆனால், இன்றும் நீங்கள் உங்கள் மகன்களுக்கிடையே அரசியல் செய்து கொண்டிருக்கிறீர்கள்.  கட்சித் தலைமையை கைவிட்டால், உங்களுக்கு இப்போது இருக்கும் மதிப்பும் மரியாதையும் இருக்காது என்பது உண்மைதான்.  ஆனால், கட்சித் தலைவர் என்பதற்காகவும், உங்களுக்கு ஜால்ரா போட்டால் பதவி கிடைக்கும் என்பதற்காகவும், தொடர்ந்து உங்களைப் புகழ்ந்து பொய்யுரைக்கும் ஜால்ராக்களின் குரலில் இன்னும் எத்தனை நாட்களுக்கு இன்புற்று இருக்கப் போகிறீர்கள் ?  கிரிக்கெட் உலகில் ஈடு இணையில்லா வீரரான டெண்டுல்கர் கூட ஓய்வு பெறாமல் விளையாடிக்கொண்டே இருந்தால் மரியாதை இழப்பார் என்பதை கண்கூடாகப் பார்த்தீர்கள் அல்லவா ?

தலைவர் பதவியை விடாப்பிடியாக பிடித்துக் கொண்டிருப்பதால், நீங்கள் பெற்ற பிள்ளைகளே உங்களை வெறுக்கிறார்கள் என்பது உங்களுக்கு ஏன் இன்னும் புரியமாட்டேன்கிறது ? கட்சித் தலைமையை, பெரும்பாலான தொண்டர்களின் ஆதரவு பெற்ற ஸ்டாலினிடம் ஒப்படைத்து விட்டு, உங்களுக்கு மிகவும் பிடித்த இலக்கியப்பணிக்கு நீங்கள் ஏன் செல்லக் கூடாது ?  உங்களின் தூக்கு மேடை, பராசக்தி ஆகிய நாடகங்களை மீண்டும் அரங்கேற்றினால், நாடகம் என்பதையே மறந்து போயிருக்கும் இன்றைய தலைமுறைக்கு அவற்றை அறிமுகப்படுத்திய வகையில் நீங்கள் தமிழுக்கு செய்யும் அளப்பறியா சேவையாக இருக்குமல்லவா ?  இந்தத் தைத் திருநாளிலாவது அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதைப் பற்றி நாடகமாடாமல், ஊருக்காக சிந்திக்காமல், உங்கள் மனசாட்சிப்படி சிந்தித்து முடிவெடுங்கள்.

2803040216_2f76537c5d_b

 

வைகோ

அன்பார்ந்த வைகோ அவர்களே.  எம்.ஜி.ஆர் திமுகவை பிளவுபடுத்தி தனிக்கட்சி தொடங்கியபோது கூட இல்லாத ஆதரவு உங்களுக்கு இருந்தது.   இளைஞர்களின் ஆதர்சமாக உருவாகியிருந்தீர்கள்.  தமிழகத்தின் மிகப்பெரிய நம்பிக்கை நட்சத்திரமாக உருவாக வேண்டியவர் இன்று திராவிட அரசியலின் ஒரு துணுக்காக மாறியிருக்கிறீர்கள்.  இந்த நிலைக்கு வேறு யாரும் காரணம் அல்ல, நீங்கள் மட்டுமே என்பதை கற்றறிந்த அரசியல் தலைவரான உங்களுக்கு வேறு யாரும் சொல்ல வேண்டியதில்லை. திராவிட அரசியல் வரலாற்றில், அறிஞர் அண்ணா, ஈவேகி.சம்பத்துக்கு இணையான ஒரு பேச்சாளர் நீங்கள் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.  ஒரு அரசியல் தலைவருக்கு பேச்சாற்றல் மட்டும் போதாது, ஆளுமைப் பண்பும், தொண்டர்களைக் கட்டிக் காக்கும் ஆற்றலும் வேண்டும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.   மதிமுக என்ற கட்சி நீங்கள் மட்டுமே என்று நினைத்துக் கொண்டிருப்பதே உங்கள் பிரச்சினை.   உங்கள் கட்சியில் உங்களைத் தவிர்த்து பெயர் சொல்லும்படி ஒரு தலைவரைச் சொல்ல முடியுமா இன்று ?  இந்தச் சிக்கல்களைப் புரிந்து கொண்டு, நீங்கள் மீண்டெழுந்து வர வேண்டும், தமிழகத்தில் ஒரு வலுவான அரசியல் சக்தியாக மறுமலர்ச்சி திமுக உருவாக வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். இந்தத் தைத்திருநாளில் நீங்கள் அவ்வாறே உருவாக வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.

Captain_vijayakanth__61

விஜயகாந்த்

ஒரு நம்பிக்கை அளிக்கக் கூடிய மாற்று சக்தியாக உருவாகி வந்தீர்கள்.   தமிழகத்தின் இளைஞர்களின் ஆதரவு உங்களுக்கு இருந்தது.  சினிமா வசனங்களை நம்பி வாக்களிக்கும் இம்மக்கள், நீங்கள் பேசிய வசனங்களை நம்பி, உங்களை திராவிட இயக்கங்களுக்கு மாற்று சக்தியாக பார்த்தார்கள் என்பது உண்மைதான். ஆனால் தனது இருபது ஆண்டு பொதுவாழ்வுக்குப் பிறகு கருணாநிதி செய்ததை நீங்கள் முதல் ஆண்டிலேயே செய்தீர்கள்.  தேமுதிக என்றாலே உங்கள் மனைவியும், மைத்துனருமே என்ற நிலையை தொடக்க காலம் முதலே உருவாக்கி விட்டீர்கள்.  சினிமா ஷுட்டிங்கில் தொடர்ந்து நடித்த பிறகு, புதிய படங்களை ஒப்புக் கொள்ளாமல், ஓய்வெடுப்பது போல அரசியலில் ஓய்வெடுக்க முடியாது என்பதை நீங்கள் உணர மறுக்கிறீர்கள்.  மாதத்துக்கு ஒரு முறை, திடீரென்று உறக்கம் கலைந்து எழுந்து மக்கள் பிரச்சினைகளுக்காக அறிக்கை விடுகிறீர்கள்.  சட்டசபைக்கு போவதையே மக்களுக்காக செய்யும் மிகப்பெரிய சேவையாக கருதிக் கொள்கிறீர்கள்.  சட்டசபையில் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படாவிட்டாலும், தொடர்ந்து சட்டசபை சென்று, விடாமல் மக்கள் பிரச்சினைகளை பேச முயற்சித்து, அதிமுக அரசை அம்பலப்படுத்துவதே, ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் எதிராக உங்களை வளர்த்துக் கொள்ள உதவும்.  எப்படியும் ஏதாவது ஒரு திராவிடக் கட்சி கூட்டணிக்காக உங்களை நாடி வரத்தான் வேண்டும். அது போதும் என்று இருப்பீர்களேயானால், உங்கள் வளர்ச்சிக்கு அது நிச்சயம் உதவாது.  இந்தத் தைத் திருநாளிலாவது, ஒரு அரசியல் தலைவராக உருவாக முயற்சிப்பீர்கள் என்று வாழ்த்துகிறோம்.

3325733396_bdb800d4a9_b

மருத்துவர் ராமதாஸ்.

தமிழகத்தின் மிகப்பெரிய பிற்போக்கு சக்தியாக உருவெடுத்திருக்கிறீர்கள்.  தமிழகம் உங்களைக் கண்டு அஞ்சி, தமிழகத்தின் அமைதிக்காக பல்வேறு இயக்கங்கள் நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு தமிழக மக்களைத் தள்ளியிருக்கிறீர்கள்.  தந்தை பெரியாரும், திராவிட இயக்கங்களும் ஐம்பது ஆண்டுகளாக சாதித்ததை ஒரே நாளில் பின்னுக்கு தள்ளியிருக்கிறீர்கள்.  திராவிட இயக்கங்கள் உங்களை நம்பி இருக்க வேண்டிய அளவுக்கு பிரம்மாண்டமாக வளர்ந்த நீங்கள், தொடர்ந்து கட்சி மாறிக் கொண்டிருந்த காரணத்தால் அம்பலப்பட்டுப் போய் மக்கள் ஆதரவை இழந்து நிற்கிறீர்கள்.   ஆதரவை இழந்த காரணத்தால், மிக மிக ஆபத்தான சாதிய வெறியைத் தூண்டும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறீர்கள்.  நீங்கள் கையில் எடுத்துள்ள இந்த மோசமான ஆயுதம் உங்களையே அழித்து விடும் என்பதை உணர மறுக்கிறீர்கள்.  இந்த சாதி அரசியல் உங்களை வளர்ப்பதற்கு பதிலாக, குறுக்கி, ஒரு சாதிச் சங்கத் தலைவராக மாற்றியுள்ளது.   ஜெயலலிதா, கருணாநிதி போன்ற மூத்த தலைவர்களோடு அரசியல் செய்த நீங்கள் இன்று பி.டி.அரசக்குமார் போன்ற மனவளர்ச்சி குன்றிய சாதிக் கட்சித் தலைவரோடு அரசியல் செய்ய வேண்டிய அளவுக்கு வீழ்ந்திருக்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.  தந்தைப் பெரியாருக்குப் பிறகு ஒரு பெரிய அரசியல் தலைவராக உங்களை நீங்கள் கருதிக் கொண்டிருந்த காலம் உண்டு.  அப்படி ஒரு ஆசை உங்களுக்கு இருந்தால், உங்களின் பிற்போக்கு அரசியலை கைவிட்டு, மீண்டும் தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் பாடுபடுவேன் என்று இந்தத் தைத் திருநாளில் சூளுரை எடுங்கள்.

 

DSC_6627

தொல் திருமாவளவன்.

தலித்துகளை கருவேப்பிலை போன்று பயன்படுத்தி வந்த திராவிடக் கட்சிகளை நிமிர்ந்து பார்க்க வைத்த பெருமை உங்களுக்கு உண்டு.  இது நாள் வரை தமிழகத்தில் வளர்ந்த  தலித் இயக்கங்களும், அதன் தலைவர்களும், தங்களுக்கு ஒரு எம்.எல்.ஏ சீட் கிடைப்பதையே அதிகபட்ச இலக்காக வைத்துச் செயல்பட்டு வந்ததே தமிழக தலித் இயக்கங்களின் வரலாறு.  அந்த காரணத்தினாலேயே, தமிழகத்தில் தலித் இயக்கங்கள் ஒரு கட்டத்தைத் தாண்டி வளர்ந்ததில்லை.  ஆனால், நீங்கள், அது போன்ற சிறிய வட்டத்திற்குள் சிக்கிக் கொள்ளாமல், தொடர்ந்து உங்கள் இயக்கத்தை வளர்த்து வருகிறீர்கள்.  தலித்துகளின் மீது வெளிப்படையான தாக்குதல்கள் நடக்கும் இந்தச் சூழலில் உங்களின் பொறுப்புகள் அதிகமாகியிருக்கிறது.  ராமதாஸ் வெளிப்படையாக உங்களை தூண்டி விட முயற்சி செய்தபோதெல்லாம், மிகவும் பொறுப்புணர்ச்சியோடு, பொறுமை காத்து பக்குவமாக நடந்து கொண்டிருக்கிறீர்கள்.   உங்கள் கட்சியினர் மீது தொடர்ந்து சொல்லப்பட்டு வரும் குற்றச்சாட்டு, அவர்கள் கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபடுகிறார்கள், நிலத் தகராறுகளில் ஈடுபடுகிறார்கள், நிலங்களை அபகரிக்கிறார்கள் என்பதே.  இந்தக் குற்றச்சாட்டுகளில் உண்மை உள்ளது என்பது மற்ற எல்லோரையும் விட, உங்களுக்கு நன்றாகத் தெரியும்.  இந்தக் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் இடம் தராமல், ஒரு வலுவான தலித் இயக்கத்தைக் கட்டமைத்து, தலித்துகளுக்கு அரசியல் அதிகாரம் பெற்றுத் தர வேண்டும் என்பதே, பெரும்பாலானோரின் விருப்பம்.  இந்தத் தைத்திருநாளில், இந்த திசையில் பயணம் செய்யத் தொடங்க வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.

 

4893244826_4229ed8144_b

ஜி.ராமகிருஷ்ணன்.

தமிழகத்தை சாதி ரீதியாக பிளவுபடுத்த, ராமதாஸ் போன்றவர்கள் முயற்சி எடுத்தபோது, ஊசலாட்டம் இல்லாமல், தெளிவாக, சாதி இந்துக்களுக்கு எதிராகவும், தலித்துகளுக்கு ஆதரவாகவும் நிலைபாடு எடுத்த உங்களுக்கு வாழ்த்துக்கள். முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இடது சாரி இயக்கங்களின் பொறுப்பு, தற்போதைய மாறிய சூழலில் மிகவும் அதிகமாகியிருக்கிறது.  தாராளமய பொருளாதாரக் கொள்கைகளை, அது அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதலாக தீவிரமாக எதிர்த்து வந்த இடதுசாரி இயக்கங்கள், மேற்குவங்கத்தில் அதே தாராளமய பொருளாதாரக் கொள்கைகளை அமல்படுத்தி, ரத்தன் டாட்டா என்ற தரகு முதலாளிக்கு ஆதரவாக உழைப்பாளி மக்களை அடித்து நொறுக்கி, மக்கள் விரோத அரசாக மாறியது.  ஆனால், ஆட்சி மாற்றம் தற்போது மறந்து போன உங்கள் கொள்கைகளை நினைவுபடுத்திக் கொள்ள உதவும் என்று நம்புகிறேன்.

மக்களுக்கு எதிரான எந்த திட்டத்தையும் ஒரு கம்யூனிஸ்ட் எதிர்த்தே ஆக வேண்டும்.  அது ரஷ்யாவிலிருந்து வந்த திட்டமாக இருந்தாலும் கூட.  கடந்த காலத்தில் கூடங்குளம் அணு உலைக்கு ஆதரவு தெரிவித்து தவறு செய்த நீங்கள், அம்மக்களின் போராட்டத்தில் இருக்கும் உண்மையை உணர்ந்தும், அணு உலை என்பது, மனித இனத்திற்கே எதிரானது என்பதை உணர்ந்தும் செயல்பட வேண்டும் என்பதே உங்களுக்காக பொங்கல் வாழ்த்து.

7-12-2011-32-i-never-criticized-admk-govt-

தா.பாண்டியன்.

தமிழகத்தில் உள்ள தலைச்சிறந்த பேச்சாளர்களில் முதல் பத்து இடங்களில் உங்களுக்கு ஒரு இடம் நிச்சயமாக உண்டு.  அந்த அளவுக்கு ஒரு சிறந்த பேச்சாளர் நீங்கள்.  திராவிட இயக்க பேச்சாளர்களுக்கு கிடைக்கும் முக்கியத்துவம் உங்களுக்கு கிடைக்காமல் போனது வருத்தத்திற்குரிய விஷயமே.  ஆனால் உங்கள் பேச்சாற்றலை நீங்கள் எதற்கப் பயன்படுத்துகிறீர்கள் ?  ஜெயலலிதாவுக்கு லாவணி பாடுவதற்கா ?  ராமதாஸ் போன்ற நபர்கள் பரப்பும் விஷத்தை நேரடியாக எதிர்க்கும் நீங்கள், ஜெயலலிதாவின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்க்கையில் மட்டும் பம்முவது வருத்தத்திற்குரியது.   சாதீய இந்துக்களுக்கு ஆதரவாக நிலைபாடு எடுத்த உங்களுக்கு, அம்பேத்கர் விருது வழங்கி அம்பேத்கரை அவமானப்படுத்தியுள்ளார் ஜெயலலிதா.  கம்யூனிஸ்ட் என்று அழைத்துக் கொண்டாலும், உங்கள் மனதில் சாதி உணர்வு இன்னும் அற்றுப் போகவில்லை.   ஜெயலலிதாவின் தவறான ஆட்சியினால், தமிழக மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கையில், கடுமையாக ஜெயலலிதாவை எதிர்க்க வேண்டிய நீங்கள், உங்கள் கட்சி எம்.எல்.ஏ ராமச்சந்திரனை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்பதற்காகவும், உங்களுக்கு ராஜ்ய சபா எம்.பி சீட் வேண்டுமென்பதற்காகவும், ஜெயலலிதாவிடம் பம்முவதோடு அல்லாமல், அதிமுக அடிமைகளில் ஒருவராக மாறி விடும் நிலையில் இருக்கிறீர்கள்.

உங்களின் அற்புதமான பேச்சுத் திறனை, ஜெயலலிதாவின் மோசமான ஆட்சியை சாடவும், விமர்சிக்கவும், கம்யூனிசக் கொள்கைகளை தமிழகமெங்கும் பரப்பவும் பயன்படுத்த வேண்டும் என்பதே உங்களுக்கான பொங்கல் வாழ்த்து.

குறிப்பு :சில வாசகர்கள், காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு ஏன் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்று கேள்வி எழுப்பியிருந்தனர்.  அவர்கள் இதுக்கு சரிப்பட்டு வரமாட்டார்கள்.

 

Comments  

 
+7 #19 ஷாலி 2013-01-16 18:11
தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர்களுக்கு தமிழர்களைப்பற்ற ிய கவலையில்லை. மாநில வளர்ச்சி குறித்து எந்த அக்கறையும் இல்லை. இவர்கள் ஆளாளுக்கு சோனியாஜி குடும்பத்திற்கு குலையடித்து குற்றேவல் புரிவதே பிறவிப்பயன் என்று நினைப்பவர்கள்.
ஆக சவுக்கு சொன்னது சரிதான்.”இவுக அதுக்கெல்லாம் செரிப்பட்டு வரமாட்டாக.!”
Quote
 
 
+4 #18 shah 2013-01-16 14:41
புதுமையான, வாழ்த்து...சவுக்கின் பணி தொடரட்டும்
Quote
 
 
+2 #17 ராஜ்குமார் 2013-01-16 12:37
ரஜினிகாந்துக்கு வாழ்த்துக்கல் ஏன் சொல்லவில்லை சவுக்கு ? தமில் நாட்டு காஙிரசை விடுஙல் வடனாட்டு - காங்கிரஸ் ஏன் விட்டு விட்டீர்கள் (உங்கள் வலைத்தளத்தில் உள்ள தமிழ் விசை மாற்றியை மாற்றுங்கள்)
Quote
 
 
+13 #16 dhinakaran 2013-01-16 07:24
நாம் நமது அரசியல் தலைவர்களை திரையுலகத்திலிர ுந்தே எதிர்பார்க்கிறோ ம்.வைகோவுக்கு மட்டுமே இத்தகைய பின்னணீ இல்லை.தன்னிடமிருந்து விலகியவர்களைப்ப ற்றிக்கூட தரக்குறைவாக விமரிசிக்க மறுக்கும் இவர் எப்படி ஜயலலிதாவாலும் கருணாநிதியாலும் சீரழிகபட்டுள்ள தமிழக சூழலில் தாக்குப்பிடிக்க முடியும் எனத்தெரியவில்லை !
Quote
 
 
+9 #15 ஊர்க்குருவி. 2013-01-15 21:31
பாரத மாதாவாய்
பகலிரவு கனாக்கண்டு.
"வீணன் குலக்கொழுந்தை"-தினம்
விடுகதைகள் புலம்பவிட்டு.
நாளும் பொழுததுவும்
நாட்டாமை அவை நடத்தி,
வானம் இடையிருந்து
வந்ததென நினைப்பதுடன்,
நானென்றே நாளும்
நடந்துவந்த மெய்ப்பொருளே!

காலம் மாறுபடும்
கடல்கூட நிலமாகும்-உன்
கோபம் கிழவன்மேல்
குவிந்திருத்தல் ஞாயமது.
பாவம் உனை நம்பி
படு இருளில் நானிருக்க,
நீயோ நிதம் என்னை
நிலை குலய வைக்காதே.

நீரில்லை வயல் அறுக்க-மின்
நெறியில்லை விளக்கெரிய
பாலில்லை குழந்தைக்கு
படுமரமாய் ஆகிவிட்டேன்.
வாலில்லா பட்டமதாய்
வானத்தில் சுற்றுகிறேன்
நாளைக்கு என் முடிவு
இன்றைய உன் தெரிவு..
Quote
 
 
+10 #14 ஊர்க்குருவி. 2013-01-15 21:30
நறுக்கான கரை வேட்டி
நடை செல்லச் சிறுவண்டி
செருக்காக கையில்
செப்பனிட்ட (ரோமர்) கடிகாரம்,
அடுக்கடுக்காய் பொய்யுரைகள்
அடுத்த நாள் மறுப்பறிக்கை
சிரிப்பாக இருக்குதையா
சிவலிங்கா உன் செயலோ!

கருத்தில்லா அறிக்கைமழை
கனிமொழிக்கு விழாவெடுப்பு
அடுக்கடுக்காய் குடும்ப நலன்
ஆருயிராய் அன்பழகன்,
நடு றோட்டில் உடன்பிறப்பு
நாடகமே உன் பிழைப்பு.

தெருக்கூத்தோ நாடகமோ
திக்கெட்டும் ஒளிபரப்பி
வகிடெடுத்து தந்திரமாய்
வலம்வந்த நாயகனே-உன்
குலம் தளைக்க களம் அமைத்து
குளப்பிவிட்டாய் தமிழகத்தை

வடக்குக்கு கனிமொழியும்
வாரிசாய் இஸ்ராலினும்
தென் மதுரை சீரகமாய்
சிடு நெஞ்சன் அழகிரியும்
சிக்கி நிக்கும் உனது நிலை
தொடர்கதையோ சிறுகதையோ
சிந்திப்பாய் சீங்காரா
சீர்தூக்கு பாராயோ?
Quote
 
 
+15 #13 sindhubath 2013-01-15 19:01
காங்கிரசுக்கு வாழ்த்து சொல்ல மேட்டரா இல்லை?
வெளி நாட்டுக்கார கம்பெனிகள் நிலம் இல்லாமல் தவிக்கின்றன..விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேற வேண்டும்...
காங்கிரசு ஊழலுக்கு எதிராண கட்சி....
எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் ராகுல்...
அரைக்கால் சட்டை மேல் நாட்டு உடை... அப்ப கோவனத்தையும் பிகினி என்று சொல்லுவார்கள் போல...
வால்மார்ட் வந்தால் நிறைய பேருக்கு வேலை கிடைக்கும்... எடுபிடியாகவும், காவலாளி, சுமை தூக்கி ஆகவும்... அப்ப தான் பொருளாதார புரட்சி வரும்... இப்படிபட்ட கொள்கைகளையும், நிலக்கரி, ஸ்பெக்ட்ரம் போன்றவற்றில் 0 லாஸ் என்று சாதனை படைத்தமைக்கும் பொருளாதார மா மா மா மேதை 130 கோடி மக்களின் கண்கண்ட கடவுள் பிரதமருக்கும் அவரது அதிதேவதை இத்தாலியின் இளவரசி, இந்தியாவின் மகா ராணி அவர்களுக்கும் வாழ்த்து சொல்லி இருக்கலாம்....
Quote
 
 
+3 #12 bad boy 2013-01-15 15:47
juddges of high court , chief minister, other minister and leader of opposition residence, MLA quaters current consumption bills were paid by public work department. our other political leader there residence current consumption bills paid some other person (doing illegal business).every ex MLA, present MLA GETTING FREE BUS PAS SFOR TRAVE throughout tamilnadu. so our political leader does not care about increase in price of milk, current, transport
Quote
 
 
+5 #11 D. Ramchandran 2013-01-15 15:47
Quoting VADHANA.RGP:
Savkku didnt wish a congress men even for a courtesy :) Yes they don't deserve a simple wish also, Congress - FIT FOR NOTHING.

ஆமாமா அவர்கள் இதுக்கு சரிப்பட்டு வரமாட்டார்கள்
Quote
 
 
0 #10 raamarasu 2013-01-15 13:49
பொதுவாக தலைவர்கள்தான் வாழ்த்துச்சொல்ல ுவார்கள். தலைவர்களுக்கே வாழ்த்துச் சொன்ன சவுக்கு மற்றவர்களைவிட வித்தியாசமானவரே .

திருமாவளவனுக்கு ச் சொன்ன வாழ்த்தில், அவரது கட்சியினர், தலித் இனத்தைச் சேர்ந்தவர்கள் "கட்டப்பஞ்சாயத்த ுகளில் ஈடுபடுகிறார்கள் " என்பது பற்றி சில கருத்துக்களை பதிவு செய்வது நடைமுறையை புரிந்துகொள்ள வசதியாக இருக்கும்.

பொதுவாக, காலம் காலமாக கிராமங்களில் பஞ்சாயத்து செய்வது நடந்து கொண்டுதான் உள்ளது. அதற்க்கு ஊர் தலைவர், தர்மகர்த்தா என்ற பெயர்களில் உயர் சாதியினர் இருந்து வந்தார்கள். அனைவருக்கும் பொதுவாகவே இருந்தாலும், உயர் சாதி வகுப்பைச் சேர்ந்தவர்களே கோவில் நிலங்களை பயிர் செய்யும், குத்தகைக்கு விடும் உரிமையை வைத்து இருந்தார்கள். அதில் கிடைக்கும் வருவாய் கோவில் நிகழ்ச்சிகளுக்க ு என்று கொஞ்சமாக செலவு செய்துவிட்டு, அதிக அளவு வருவாயை வைத்து தனது குடும்பத்திற்கு சொத்து சேர்த்துக் கொண்டார்கள்.

சுதந்திரத்திற்க ுப் பின்னர் கிடைத்த உரிமையில், படித்து கொஞ்சம் யோசித்து, தங்களுக்கும் உரிமை உள்ளது என்று தெரியவந்தவுடன், கோவில் / பொதுச் சொத்துக்களைப் பற்றிய விபரங்களைக் கேட்கத் தொடங்கியபோது ஆரம்பித்தது "கட்டப்பஞ்சாயத்த ு" செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு. அதாவது உயர் சாதியைச் சார்ந்தவர் தலைமையில் ஒரு பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு கூடிப்பெசினால் அது "பஞ்சாயத்து"; அதே தலித்துகள் கூடிப் பேசி முடிவுக்கு வர முற்பட்டால் அதற்குப் பெயர் "கட்டப் பஞ்சாயத்து" என்ற பெயர் சூட்டு.

அடங்கி இருந்தவர்கள், அடக்கப்பட்டு இருந்தவர்கள் கேள்வி கேட்பதை, தங்களுக்கான உரிமையை கேட்கத் தொடங்கியதைச் சகித்துக்கொள்ள முடியாமல், உயர் சாதியாக தங்களை நினைத்துகொள்பவர ்கள், அவர்கள் மீது வைக்கப்படுகிற பொதுவான அவதூறு / குற்றச்சாட்டே "நில அபகரிப்பு, கட்டப் பஞ்சாயத்து".

என்றாலும், குற்றச்சாட்டில் உண்மை இருக்கும் பட்சத்தில், சவுக்கு குறிப்பிட்டது போல, "மிகவும் பொறுப்புணர்ச்சி யோடு, பொறுமை காத்து பக்குவமாக நடந்து கொண்டு இருக்கும்" திருமாவளவன் கண்டிப்பாக இதற்கான முயற்சி செய்தால், தலித்துகள் வாழ்வுச் சிந்தனை மேம்படும்.
Quote
 
 
+19 #9 kumar taiwan 2013-01-15 13:10
நாய் வாலை நிமித்த முடியுமா ? என் அறிவுக்கு எட்டிய வரையில் ,அரசியல் என்பதை மதிக்க கூடிய ஒரு மனிதராக வைகோவை மட்டுமே பார்கிறேன் . மீதி இருப்பவர்களில் தமிழ்நாட்டில் இருக்கும் எல்லோரயும் போல ஒரு சராசரி மனிதரை விட குறைவான பண்புகளை கொண்டவர்கள் , இவர்கள் மக்களை இவர்களின் பண்புகளுக்கு ஏற்றவாறு மாற்ற முயற்சி செய்கிறார்களே தவிர , மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை சிந்திக்க கூட தெரியாதவர்கள் ,(கருணாநிதி மட்டும் மக்கள் என்றல் தன் குழந்தைகள் என்று நினைப்பார் அகவே அவர் மற்றவர்களை விட மிக கீழ்தர மனிதர் ), இவர்களுக்கு அறிவுரை கூறுவதும் அரசமரத்தடியில் அரசியல் பேசுவதும் ஒன்றே .காங்கிரஸ் ஜடங்கள் எவ்வளவு .காங்கிரஸ் ஜடங்கள் எவ்வளவு ஆபத்தானது என்பதை சவுக்கு சிவப்பு வண்ணத்தை பயன்படுத்தி அவர்களை பற்றி எழுதுவதன் மூலம் புரிந்து கொள்ளலாம் , ஏனெனில் மற்றவர்கள் எல்லாம் உள்ளூர் திருடர்கள் அனால் இவர்கள் வெளிநாடு சென்று நம் நாட்டை கூறு போட்டு விற்பனை , மூடர்கள் , தமிழ்நாட்டில் பிச்சைகாரர்களை விட மிக கேவலமாக பார்க்கப்படும் கூட்டம் அது . எவ்க்ச் போன்ற முட்டாள்களை எல்லாம் மத்திய அமைச்சராக உருவாக்கிய முட்டாள்கள்
Quote
 
 
+19 #8 trichy babu 2013-01-15 12:31
தமிழகத்தில் ஒரு வலுவான அரசியல் சக்தியாக மறுமலர்ச்சி திமுக உருவாக வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அதுதான் பல நடுனிலையாலர்கலி ன் விருப்பமும்...
Quote
 
 
+3 #7 Rk.Guru 2013-01-15 11:44
தலைமை தாங்கும் தலைவருக்கும் சில குட்டுகள் குட்டவேண்டிய தருணம்தான் இது அதுவும் நாகரிகமான முறையில் பதிவின் முலம் கொட்டிய உங்கள் குட்டுக்கள் வரவேர்கபடவேண்டி யவை...

///மக்களுக்கு எதிரான எந்த திட்டத்தையும் ஒரு கம்யூனிஸ்ட் எதிர்த்தே ஆக வேண்டும். அது ரஷ்யாவிலிருந்து வந்த திட்டமாக இருந்தாலும் கூட.//

ஒரு உண்மை தோழன் (கம்யூனிஸ்ட்) தோழமையை (மக்களை) புரிந்தவனாகதான் இருப்பான். அவனுக்கே கம்யூனிசத்தை பேச தகுதி உள்ளது. சிந்தனைக்குள் கம்யூனிச சிந்தனை கொண்ட உங்களின் நடுநிலை தன்மை பாராட்டப்படகூடி யது ...
Quote
 
 
+2 #6 Savukku vaasakan 2013-01-15 10:53
குறிப்பு படித்த பிறகு சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
Quote
 
 
+9 #5 VADHANA.RGP 2013-01-15 10:07
Savkku didnt wish a congress men even for a courtesy :) Yes they don't deserve a simple wish also, Congress - FIT FOR NOTHING.
Quote
 
 
+7 #4 Iniyan 2013-01-15 09:06
நன்று. நன்று. சவுக்கின் பொது தொண்டு தொடர்ந்திட வாழ்த்துக்கள்.
Quote
 
 
+28 #3 silambu 2013-01-15 08:25
திரு வைகோ அவர்கள் சில பிடிவாத கொள்கைகளை கொண்டிருக்கிறார ்... எந்த சட்டமன்ற தேர்தலிலும் தி மு க வை ஆதரிப்பதில்லை என்பது ஒன்று.. மேலும் இன்றய அரசியல் என்பது 95% பணபலம் மற்றும் பதவி சார்ந்தது. மக்கள் அரசியலறிவு மிக அதிகம் பெற்றவர்கள் என்றும், பொது நலனுக்காக ஓட்டளிப்பவர்கள் என்றும் தவறான புரிதல் கொண்டுள்ளார்... உண்மையை உணர மறுக்கிறார்...இன்றய அரசியல் குறுகியகால இலக்குகளை உடையது.... அது முடிந்தவுடன் அடுத்த நேர்மறான இலக்கை நோக்கியும் வெட்கமற்று பயனிக்கும்போது மக்களும் அவர்களின் குறுகிய லாபத்துக்காக பின்னால் வருவர் என்பதை உணர்ந்த கலைஞர், இப்போதய முதல்வர், ராமதாசு, கம்யூனிஸ்டுகள், ஏன்? திருமா கூட இந்த உண்மையை உணர்ந்து இன்று காங்கிரசு அரசில் அமைச்சர் பதவி கேட்கும் அளவுக்கு இன்றய அரசயலில் முதிர்ச்சி பெற்றுவிட்டார்... ஆனால் நல்ல மனிதரான வைகோ அவர்களால் இந்த அளவுக்கு பல்டி அடிக்க முடியவில்லை... எப்படியோ! அந்த நல்லவருக்கும், நன்பர்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்!ஹ ்க
Quote
 
 
+4 #2 santhosh2 2013-01-15 08:07
பொங்கல் வாழ்த்துக்கள் சவுக்கு!
Quote
 
 
+38 #1 நெல்லை பாலாஜி 2013-01-15 01:20
தா.பாண்டித்தேவரை நீங்கள் இன்னும் நம்புவது, சற்றே இல்லை அதிகமாகவே இடிக்கிறது ...அவர் ஒரு நாளும் திருந்த மாட்டார்...அவர் மனதில் சாதி வெறி என்பது நிரந்தரம்...ஆனாலும் ஒரு கம்யூனிஸ்ட் தலைவர் என்ற முறையில் அடக்கி வாசிகின்றார் ...

இதைத்தவிர வேறு யாரையும் குறிப்பிட்டு சொல்ல ஒன்றும் இல்லை ஒருவரை தவிர..அவர்தான் வைகோ..

தமிழ் நாட்டில் இன்றைய தேதிக்கு, உருப்படியான அரசியல் தலைவர் என்றால் இவர் மட்டுமே..நம்பிக்கை நட்சத்திரமாய் ஒளிர வேண்டிய இவர் , தமிழகத்தின் அரசியல் சூதாட்டத்தில் சிக்கி அழிந்து போன நிலைமையில் உள்ள அவர், மீண்டும் எழுந்து வெற்றி வாகை சூடி வருவார் என ஆவலுடன் எதிபார்த்து வாழ்த்துகின்றோம
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 30 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday1151
mod_vvisit_counterYesterday10268
mod_vvisit_counterThis week43878
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month246610
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12768729