முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்தொடர்புக்கு
+++
முகமூடி.. … அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 27
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
ஞாயிற்றுக்கிழமை, 27 ஜனவரி 2013 08:22

1994ம் ஆண்டு வெளியான திரைப்படம் தி மாஸ்க்.  பிரபலமாக காமிக்ஸ் கதையாக வெளிவந்து கொண்டிருந்த தி மாஸ்க் என்ற கேரக்டரை, திரைப்படமாக எடுத்தார் சக் ரஸ்ஸல் என்ற இயக்குநர்.  ஹாலிவுட் நட்சத்திரம் ஜிம் கேர்ரி இந்தப் படத்தில் மாஸ்க் கேரக்டரை ஏற்று நடித்திருப்பார்.

la_mascara_1994_1

படத்தின் கதை என்னவென்றால், ஒரு வங்கியில் க்ளெர்க்காக இருக்கும் ஜிம் கேர்ரிக்கு, அவர் வங்கிக்கு வாடிக்கையாளராக வரும் கேமரூன் டயஸை காதலிக்க வேண்டும் என்று ஆசை.  அதற்கு பணம் வேண்டும்.  சாதாரண க்ளெர்க்காக இருக்கும் தன்னை கேமரூன் டயஸ் காதலிப்பாரா என்று ஏக்கத்தோடு ஜிம் கேர்ரி இருக்கும் வேளையில் அவருக்கு ஒரு முகமூடி கிடைக்கும்.  அந்த முகமூடியை முகத்தில் வைத்ததும், அவருக்கு நினைத்ததையெல்லாம் செய்யும் சக்தி கிடைக்கும்.  அந்த சக்தியை வைத்து, அவர் வில்லனை பந்தாடுவார், தன் காதலியைக் கைபிடிப்பார்.  வில்லனின் வங்கிக் கொள்ளையைத் தடுப்பார். அந்த முகமூடியை கைப்பற்ற வில்லன் எடுக்கும் அத்தனை முயற்சிகளையும் முறியடிப்பார்.  ஜிம் கேர்ரி மிகவும் அற்புதமாக நடித்திருந்த இந்தப்படம் 1994ம் ஆண்டு வெளியானது. கம்ப்யூட்டர் க்ராபிக்ஸ் அவ்வளவாக வளர்ச்சியடையாத அந்த நாளில், மிகச் சிறப்பாக கம்ப்யூட்டர் க்ராபிக்ஸ்களால் இப்படம் பெரும் வெற்றியைப் பெற்றது.

கடந்த புதன் அன்று (23.01.2013) லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் ஒன்று கொடுக்கப்பட்டது.  அந்தப் புகாரில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய போட்டித் தேர்வுகளில் ஏராளமான ஊழல் நடைபெற்றுள்ளதாக வந்தத் தகவலை அடுத்து, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

சைதை துரைசாமி என்பவர், மனிதநேயம் ஐஏஎஸ் அகாடமி என்ற ஒரு பயிற்சி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்தப் பயிற்சி நிறுவனத்தை நடத்தி வரும் முன்னாள் எம்.எல்.ஏவான சைதை துரைசாமி தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் மற்றும் அப்போது தலைவராக இருந்த காசி விஸ்வநாதன் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து, தனது மனிதநேயம் ஐஏஎஸ் அகாடமிக்காக முறைகேடுகளில் ஈடுபட்டார்.

16.12.2007 அன்று க்ரூப் 1 பதவிக்கான பூர்வாங்கத் தேர்வு நடைபெற்றது.  இந்தப் பூர்வாங்கத் தேர்வையடுத்து, 16 மற்றும் 17.08.2008 ஆகிய நாட்களில் மெயின் தேர்வு நடைபெற்றது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், மெயின் தேர்வின் கேள்வித்தாள் வடிவத்தை (pattern) பல ஆண்டுகளாக ஒரே மாதிரியாக வைத்திருந்தது.   அது என்ன வடிவம் என்றால், 12 முதல் 15 கேள்விகள் விரிவான பதில் எழுதும் வகையில் கேட்கப்படும்.  அந்தக் கேள்விகளுக்கு 5 முதல் 15 மதிப்பெண்கள் வரை வழங்கப்படும்.  இந்தக் கேள்வித்தாள் வடிவத்தை 2008 மெயின் தேர்வில், தேர்வாணையம், எவ்வித முன்னறிவிப்புமின்றி திடீரென்று மாற்றியது.

16 மற்றும் 17.08.2008 ஆகிய நாட்களில் தேர்வெழுதிய மாணவர்கள், முதல் கேள்வித்தாளில் 99 கேள்விகளும், இரண்டாவது கேள்வித்தாளில் 104 கேள்விகளும் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.  இந்தக் கேள்விக்கான மதிப்பெண்கள் 1 மதிப்பெண் முதல் 15 மதிப்பெண் வரை பிரிக்கப்பட்டிருந்தன.  திடீரென்று ஏற்பட்ட இந்தக் கேள்வித்தாள் மாற்றம் காரணமாக, அதிர்ச்சியடைந்த மாணவர்கள் பலர் தேர்ச்சியடையவில்லை.

ஆனால் சைதை துரைசாமி என்பவர் நடத்தும் மனிதநேயம் ஐஏஎஸ் அகாடமி நடத்தும் பயிற்சி மையத்தில் படித்த மாணவர்கள், இந்த வினாத்தாள் வடிவ மாற்றத்தால் எந்த அதிர்சியும் அடையாமல் சிறப்பாக தேர்வெழுதியுள்ளனர். இவர்கள் அதிர்ச்சியடையாமல் சிறப்பாக தேர்வெழுதியதற்கான காரணம், மாற்றப்பட்ட புதிய வினாத்தாள் வடிவமைப்பில், மனிதநேயம் பயிற்சி மையத்தில் மட்டும் 5 முறை மாதிரித் தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அந்த ஆண்டு நடந்த க்ரூப் 1 தேர்வில், மொத்தம் உள்ள 128 இடங்களில், மனிதநேய பயிற்சி மையத்தின் மாணவர்கள் 68 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.    இந்த பயிற்சி மையத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் தேர்ச்சியடைந்துள்ளது, ஒரு பெரிய ஊழலுக்கான தன்மையைக் கொண்டுள்ளது.

விசாரணையில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் முன்னளாள் தலைவர் காசி விஸ்வனாதன் சைதை துரைசாமி நடத்தும் பயிற்சி மையத்துக்கு மட்டும், கேள்வித்தாள் மாற்றப்பட்ட விபரத்தை முன்னதாகவே தெரிவித்ததால், அந்தப் பயிற்சி மையத்தின் மாணவர்களுக்கு மாதிரித் தேர்வு நடத்த முடிந்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

ஆகையால், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் நடந்துள்ள முறைகேடுகளை விசாரித்து வரும் லஞ்ச ஒழிப்புத் துறை, சைதை துரைசாமியின் பயிற்சி மையத்தின் முறைகேடுகளையும், காசி விஸ்வநாதனுக்கு அதில் உள்ள பங்கு குறித்தும் விசாரிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

Complaint_on_Saidai_Duraisamy_Page_1

Complaint_on_Saidai_Duraisamy_Page_2

இந்தப் புகார், லஞ்ச ஒழிப்புத் துறையின் காவல் கண்காணிப்பாளரிடம் நேரடியாக வழங்கப்பட்டது.  ஏற்கனவே தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்துள்ளதால், புதிதாக வழக்கு பதிவு செய்ய, அரசின் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை.  ஆகையால் லஞ்ச ஒழிப்புத் துறையில் உள்ள அதிகாரிகள், இந்தப் புகார் குறித்தும் விசாரணை நடத்துவார்கள் என்று நம்புவோம்.   இந்த வழக்கு தொடர்பாக, தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளின்போதே, மனிதநேயம் அறக்கட்டளையின் பங்கு குறித்து சில ஆதாரங்கள் கிடைத்துள்ளன.  ஆனால் அந்த ஆதாரங்களின் மீது நடவடிக்கை எடுப்பதா, வேண்டாமா என்று லஞ்ச ஒழிப்புத் துறை முடிவெடுக்காமல் இருந்தது என்று தகவல்கள் கூறுகின்றன. தற்போது இந்தப் புகாருக்குப் பிறகாவது நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புவோம்.  அப்படி எடுக்கவில்லையென்றால், இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்பது, லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளுக்கு தெரியும்.

இந்தப் புகார் குறித்து பத்திரிக்கைகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  ஆனால் அவர்கள் இது குறித்து எந்தச் செய்தியையும் வெளியிடமாட்டார்கள் என்ற விபரம் சவுக்கு வாசகர்கள் அறிந்ததே.

பத்திரிக்கைகளுக்கு இந்த விபரம் தெரியப்படுத்தப்பட்டதுமே, சைதை துரைசாமிக்கும் இந்த விபரம் தெரிந்தது.  தெரிந்ததும் அவருக்கு வந்ததே கோபம்….  கொலைவெறியாகி விட்டார்….. “இந்தப் பொறம்போக்குப் பய சும்மாவே இருக்கமாட்டான் போலருக்கே… இவனை ஒரு வழி பண்ணாத்தான் அடங்குவான்…. நான் யாருன்னு இவனுக்கு காட்றேன்….  ஒவ்வொரு வருஷமும் 60 கோடி ரூபாய்க்கு மேல என் சொந்தப்பணத்தை செலவு பண்ணி இவ்வளவு உதவிகள் பண்ணிக்கிட்டு இருக்கேன்…. எவ்வளவு திமிரு இருந்தா என் மேலயே கம்ப்ளெயின்ட் கொடுப்பான்” என்று ஏகவசனத்தில் 15 நிமிடங்களுக்கு திட்டியுள்ளார்.

திட்டியதோடு நிற்காமல், தப்பித்தவறி ஏதாவது ஒரு ஊடகம் செய்தி வெளியிட்டு விடப்போகிறார்கள் என்பதால் ஊடக முதலாளிகளிடம் பேசியிருக்கிறார்.

தி மாஸ்க் படத்தில் ஜிம் கேர்ரிக்கு கிடைத்த முகமூடி போன்றதுதான் சைதை துரைசாமியின் புரவலர் வேடம்.  ஜிம் கேர்ரிக்கு முகமூடி போட்டதும் கிடைக்கும் அசாத்திய சக்தியைப் போல, முகமூடி போட்டதும் சைதை துரைசாமி கல்வித்தந்தை, மாநகரத் தந்தை, அதிகாரிகளின் தந்தை, கொடை வள்ளல் கர்ணனின் தந்தை போன்ற பல்வேறு அவதாரங்களை எடுக்கிறார்.  முகமூடியைக் கழற்றினால் என்ன ஆகும் என்பதுதான், புகார் குறித்து தகவல் தெரிந்ததும் சைதை நடந்து கொண்ட முறை.   முகமூடியை கழற்றியதும் சைதை துரைசாமியின் அசல் முகம் வெளி வந்து விடுகிறது.  அசல் முகம் என்பது என்ன ?   அசல் முகம் என்பது, கரூரிலிருந்து சென்னைக்கு காகிதம் பொறுக்கியாக வந்திறங்கி, புறம்போக்கு நிலங்களை வளைத்து, ஆக்ரமித்து, முன்னாள் அதிமுக பிரமுகர் ஜேப்பியாரின் அடியாளாக இருந்ததுதான இவரது அசல் முகம்.  புறம்போக்கு நிலங்களை வளைத்த பழக்கத்தில்தான், புகார் கொடுத்தவரை புறம்போக்கு என்று திட்டியிருக்கிறார்.

அந்த வகையில், சைதை துரைசாமியின் முகமூடியை கழற்றிய பெருமை நம்மையே சாரும்.   சவுக்கு தளம், சைதை துரைசாமியை குறி வைத்து தொடங்கப்பட்டதல்ல.  சமூகத்தில் நடக்கும் அவலங்களையும் ஊழல்களையும் அம்பலப்படுத்துகையில், சைதை துரைசாமியைப் பற்றிய விபரங்களும் தெரிய வந்ததால், நீண்ட விசாரணைக்குப் பிறகு, துரைசாமி குறித்த ஊழல்கள் குறித்தும் எழுதப்பட்டது.

06THSAIDAI_S_DURAIS_522108a

அந்தக் கட்டுரை துரைசாமி தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே… அதை விடுத்து, நோட்டீஸ் அனுப்புவது, மிரட்டுவது, புறம்போக்கு என்று திட்டுவது என்று சைதை இறங்குவாரேயானால், அதைச் சந்திக்க இந்தத் தளம் தயாராகவே இருக்கிறது.   சிகப்பு விளக்கு வைத்த காரில், மாநகரத்தந்தையாக வலம் மனிதரின் முகமூடிக்குப் பின்னால் இப்படி ஒரு காகிதம் பொறுக்கி இருக்கிறார் என்பதை நாம்தான் அம்பலப்படுத்தியுள்ளோம் என்பதில் நாம் பெருமை கொள்ளலாம்.

சைதை துரைசாமியைப் பற்றி விசாரித்தால், அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியாக தகவல்கள் வந்துகொண்டே இருக்கின்றன.   பத்து தொடர் கட்டுரைகள் எழுதும் அளவுக்கு தகவல்கள் வந்துள்ளன.  அந்தத் தகவல்களை சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது.   விசாரித்து உண்மையறிந்தவுடன், துரைசாமி தனது முகமூடியை நிரந்தரமாக கழற்றும் அளவுக்கு கட்டுரைகள் வெளியிடப்படும்.  தயாராக இருங்கள் சைதை துரைசாமி.

 

Comments  

 
+3 #23 Vijaya123 2013-01-30 14:12
ஆடப்பாவி....இவனுமா?
Quote
 
 
+7 #22 pakutharivu 2013-01-29 21:53
//இப்படி ஒரு காகிதம் பொறுக்கி இருக்கிறார்// வயிற்றுப் பிழைப்பிற்காக காகிதம் பொறுக்குவதில் என்ன கேவலம் இருக்க முடியும். அதுவும் ஒரு தொழில்தான்.
Quote
 
 
+8 #21 mutt 2013-01-28 22:59
Quoting SUNNAMBU:
தவறுகளை மட்டும் சுட்டி காட்டி விமர்சனங்களை எழுதிவரும் சவுக்கு நாட்டில் எத்தனையோ நல்லவிசயங்கள் நடப்பதை பற்றி எழுத மறுப்பது ஏன் ?



தவறு செய்பவரை பிடிக்க காவல்துறை எதற்கு??? நல்லது செய்பவர்களை மட்டும் பாராட்டி உரை நிகழ்த்தலாமே... காவல்துறையை கலைத்து விடலாமா???!! :P ;-)
Quote
 
 
+9 #20 nellai suresh 2013-01-28 21:55
I really appreciate your efforts and boldness. be careful these rowdies. i am very proud of you sankar.
Quote
 
 
-12 #19 SUNNAMBU 2013-01-28 20:30
தவறுகளை மட்டும் சுட்டி காட்டி விமர்சனங்களை எழுதிவரும் சவுக்கு நாட்டில் எத்தனையோ நல்லவிசயங்கள் நடப்பதை பற்றி எழுத மறுப்பது ஏன் ?
Quote
 
 
+4 #18 Naresh LM 2013-01-28 20:00
So thrilled to read your content. My best wishes for your whistle blower role in this scam ridden society. This role is equivalent to that of wikileaks. Hats up.
Quote
 
 
+21 #17 சோழன் 2013-01-28 16:08
நல்ல பணி!!! சவுக்கு, நீண்ட நாட்களுக்கு தனி மனித போராட்டம் எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை!!! எந்த தைரியத்தில் இப்படி பட்ட சவால்கள் என்று விளங்கவில்லை!!!

கெட்டவனின் குறை கூறும் அதே நேரத்தில், அவனை வம்புக்கு இழுக்கும் வகையில் அமையும் கருத்துக்கள் அவசியமா? கெட்டவன் பலம் மிகுந்தவனும் கூட!

நம் நலமும் அவசியமல்லவா?
Quote
 
 
+16 #16 TNPSC_Aspirant 2013-01-28 15:52
அப்படி போடு சவுக்கு.. அவன் அவன் ராத்திரி பகலுமா உக்காந்து படிச்சி பரிச்சைக்கு போன, இவனுக ஒரு செட்டப் பண்ணி , இவனுகளுக்கு வேண்டிய ஆளுகளை எடுத்து காரியம் சாதிக்கிறான்...ஒரு சரியான அமைப்பு உருவாக வேண்டும்...சரியான நபர்கள் அரசு பணிக்கு செல்ல அது ஒன்றுதான் வழி .
Quote
 
 
+11 #15 mam 2013-01-28 13:01
எவன் என்ன சொன்னாலும் உன் பணி தொடரட்டும் நான் உங்களை சந்திக்க வேண்டும் எப்படி தொடர்பு கொள்வது
Quote
 
 
+8 #14 samson 2013-01-28 12:47
please bring his more activities, we are eager to see that, including his personal. my dad ask me to get coaching from his center after showing this article he never opens his mouth.. thank god
Quote
 
 
+10 #13 santhosh2 2013-01-28 07:07
we are ready for adventure! Lets Start Savukku!!
Quote
 
 
+24 #12 t.v.s 2013-01-27 22:04
பத்திரிகை டிவிக்களில் இந்த செய்தி வராதது வருந்தத்தக்கது. சவுக்கு சங்கருக்கு வாழ்த்துக்கள்.
Quote
 
 
+10 #11 Ray Jaguar 2013-01-27 19:37
dear savukku,
if you are in politics then my vote is only for you :-) :-) :-)
Quote
 
 
+58 #10 Ravi 2013-01-27 16:28
கடைந்தெடுத்த ஒரு அயோக்கியன் ஒரு காலத்தில் காகிதம் பொறுக்கும் வேலை செய்தான் என்பதற்காக அந்த வேலை செய்வோறை அவமதிக்கும் விதமாக எழுத வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். மாநகர தந்தையின் கடந்த கால தொழில் காகிதம் பொறுக்குவது என்பதால் இந்த கட்டுரை அல்ல. அவர அதற்கு பிறகு வழிமாறி திசைமாறி மொள்ள மாறியானதால்தான் இந்த கட்டுரை. எனவே காகிதம் பொறுக்கிகளை அவமானபடுத்த வேண்டாம்.
Quote
 
 
+9 #9 sivamayam 2013-01-27 16:00
சவுக்கு நிஙக தான் superman .!!!

YOU HAVE THE SUPER MASK TO DESTORY ALL SCAMMERS!

வாழ்த்துகள் !!!
Quote
 
 
+14 #8 M.S.Chagla 2013-01-27 14:27
Great and wonderful work done. go ahead and expose the true colour of this rascal and porukki turned MLA cum Madras Mayor.
Quote
 
 
+29 #7 Eleventh Sense 2013-01-27 13:05
சை சை என்று கத்தினாலும், தை தை என்று குதித்தாலும், சைதை பருப்பு சவுக்கிடம் வேகாது என்பதை அண்ணனுக்கு யாராவது சொல்லுஙகப்பா..........
சொந்த செலவிலே சூனியம் வைதுகொள்ள அண்ணனுக்கு ரொம்ப பிடிக்கும் போல....!
Quote
 
 
+24 #6 SUNNAMBU 2013-01-27 11:52
நாட்டுக்கு நல்லது பண்ணவேண்டும் என்ற எண்ணத்தில் நீவிர் செய்யும் செயல்களில் மற்றவர்கள் (சமுதாயத்தில் உள்ள பின்தங்கியவர்கள ்) புண்படகூடாது. நீவீர் விமர்சித்த அவரது செயல்கள் அனைத்தும் உண்மையானால் கண்டிக்கத்தக்கவ ையே. ஆனால் முன்செய்த தொழிலை கீழ்த்தரமாக சித்தரித்தது ( காகிதம் பொறுக்குதல்) சரியல்ல. இன்றைக்கும் இந்தியாவில் பலபேர் பசி போக்க காகிதம் பொறுக்குதல் வேலையையே கனகச்சிதமாக செய்து கண்ணியத்துடன் வாழ்கின்றனர் என்பதை விமர்சனம் செய்பவர் மறந்துவிடக்கூடா து.
Quote
 
 
+22 #5 ஷாலி 2013-01-27 10:23
ஒரு யோக்கியன் காகிதம் பொறுக்கியாக வாழ்வதால் எந்த கண்ணியமும் குறைந்து விடுவதில்லை.

ஒரு அயோக்கியன் கல்வித்தந்தையாக மாறிவிடுவதால் எல்லாக் கண்ணியமும் வந்து ஒட்டிக்கொள்வதில ்லை.

“அகம் தூய்மை வாய்மையால் காணப்படும்.”
Quote
 
 
+10 #4 ஊர்க்குருவி. 2013-01-27 09:41
For courage, Heartfelt Congratulations !
Quote
 
 
+19 #3 நெல்லை பாலாஜி 2013-01-27 09:36
அப்படி போடு சவுக்கு.. அவன் அவன் ராத்திரி பகலுமா உக்காந்து படிச்சி பரிச்சைக்கு போன, இவனுக ஒரு செட்டப் பண்ணி , இவனுகளுக்கு வேண்டிய ஆளுகளை எடுத்து காரியம் சாதிக்கிறான்...ஒரு சரியான அமைப்பு உருவாக வேண்டும்...சரியான நபர்கள் அரசு பணிக்கு செல்ல அது ஒன்றுதான் வழி ...
Quote
 
 
+20 #2 SUNNAMBU 2013-01-27 09:34
ஒருவர் செய்த தொழிலில் உள்ள உழைப்பை பார்க்க வேண்டுமே தவிர தொழிலின் தன்மையை பார்க்க கூடாது. தாங்கள் அவரது குப்பை அல்லது பேப்பர் பொறுக்கும் தொழில் குறித்து கிண்டலடிக்க கூடாது. தற்போது அவர் செய்யும் தவறுகளை சுட்டிகாட்டுவது என்பது மானுட சமுதாயதத்திற்கு செய்யும் நீவிர் செய்யும் மேம்பட்ட சமுதாய பணி என்ற முறையில் உம்மை பாராட்டாமல் முடியாது. தொழிலின் தன்மை குறித்து உமது எழுத்திற்காக கண்டிக்காமல் விடவும் முடியாது.
Quote
 
 
+17 #1 Padmanan 2013-01-27 09:12
அய்யோ பாவம்னு இந்த பேப்பர் கலைக்டர விடக்கூடாது சவுக்கு. இன்னும் இவர் ஜாபர் அங்கிள்கிட்ட பேசவில்லை என்பதையே இந்த கட்டுரை காட்டுகிறது.

ஆமாம்... இவர் பற்றிய கட்டுரை துரைசாமி தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே அப்படின்னு சொல்லியிருக்கிங ்க... திருந்தனும்னா எப்படி? புரியவில்லையே சவுக்கு...
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 158 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday10696
mod_vvisit_counterYesterday13577
mod_vvisit_counterThis week68273
mod_vvisit_counterLast week95167
mod_vvisit_counterThis month290533
mod_vvisit_counterLast month382199
mod_vvisit_counterAll days13206900