முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
ஒரு கனவு ! ஒரு மரணம் ! அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 54
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
திங்கட்கிழமை, 28 ஜனவரி 2013 07:51

அவள் பெயர் கோமதி. அவளுக்கு படிக்கவேண்டும் என்று நிறைய ஆசை….   குடும்பத்தில் வறுமை தாண்டவமாடினாலும், அவளை ஆங்கில மீடியத்தில் படிக்க வைக்கிறார்கள்.  நன்றாகப் படித்து ஏதாவது ஒரு வேலைக்குப் போகலாம் என்ற கனவோடு அவள் ப்ளஸ் ஒன் படித்துக் கொண்டிருக்கிறாள்.  அருமையான வரன் வந்திருக்கிறது என்ற அவளுக்கு அவசர அவசரமாக திருமணம் ஏற்பாடு செய்கிறார்கள். ‘நான் படிக்கணும்…. ஸ்கூலுக்குப் போகணும்’ என்று அழுது அடம் பிடிக்கிறாள்.  ‘கல்யாணம் பண்ணிக்கிட்டு ஸ்கூலுக்கு போலாம்மா… உன்னை யாரு தடுத்தது’ என்று பெற்றோரும் உற்றாரும் சொல்லிய சமாதானத்தை அவள் நம்புகிறாள்.  ‘தாலி மட்டுத்தானே.. அதை ஒளிச்சு மறைச்சுட்டு ஸ்கூலுக்குப் போலாம்’ என்று அவளுக்கு அவளே சமாதானம் சொல்லிக் கொண்டு திருமணத்துக்கு சம்மதிக்கிறாள்.  திருமணத்துக்கு மறுநாள், அவள் சீருடை அணிந்து பள்ளிக்குக் கிளம்புவதைப் பார்த்து அவள் பெற்றோரும், உறவினர்களும் சிரித்தபடியே இனி பள்ளிக்குக் செல்ல முடியாது என்று கூறுகின்றனர். கருக்கப்பட்ட தனது கனவுகளை மனதில் சுமையாக ஏற்றிக் கொண்டு தன் புதிய வாழ்க்கையை பழகிக் கொள்வதற்குள் குழந்தைகள்.

நம்மால்தான் படிக்க முடியவில்லை… நமது பிள்ளைகளையாவது நன்றாக படிக்க வைப்போம்  என்ற ஆசையோடு இருந்தவளுக்கு பிறந்த பெண்தான் ரோகிணி.   துறுதுறுவென்று ஒடியாடித் திரிந்தவளை எப்படியாவது கான்வென்டில் படிக்க வைக்க வேண்டுமென்று விரும்புகிறாள். கணவனுக்கு மக்கள் நலப்பணியாளர் வேலை.  சிறுநீரகத்தில் பெரிய கோளாறு.  மருத்துவ செலவு செய்வதா…. மகளைப் படிக்க வைப்பதா என்ற குழப்பம்.  ஆனால், கோமதி தெளிவாக இருந்தாள்.  மகளைப் படிக்க வைத்தே ஆக வேண்டும்.   தன் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் செய்த பொருளுதவியால், எப்படியோ தட்டுத் தடுமாறி குடும்பத்தை ஓட்டுகிறாள்.  மகளை பொன்னேரியில் உள்ள ஸ்ரீ மாதாஜி பள்ளியில் சேர்க்கிறாள்.  மகள் ரோகிணியோ, பள்ளியே வியக்கும் வகையில் படிக்கிறாள்.  ஆறாம் வகுப்பு சேர்த்ததும் தடுமாறியவள், ஏழாம் வகுப்பு முதல், தொடர்ந்து முதல் ரேங்க்.  மற்ற மாணவ மாணவியருக்கு அவளே முன்னுதாரணமாகத் திகழ்ந்தாள்.

பத்தாம் வகுப்பு படிக்கையில், பொன்னேரியிலேயே இருந்த பாரத் மெட்ரிகுலேஷன் பள்ளியில், பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுக்கென்று சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.  அதில் கலந்து கொண்டு படிக்கிறாள் ரோகிணி.  அப்போது அந்தப் பள்ளியின் தாளாளராக இருந்தவர் மணிவண்ணன்.  ரோகிணி பத்தாம் வகுப்பு முடிந்தவுடன் ப்ளஸ் ஒன் வகுப்புக்கு தங்கள் பள்ளியிலேயே சேர வேண்டும் என்று மணிவண்ணன் வலியுறுத்துகிறார்.

இதற்கிடையே பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வருகின்றன.  ரோகிணி, ஸ்ரீ மாதாஜி பள்ளியில் முதல் மாணவியாக தேர்ச்சி பெறுகிறாள்.  அவளைப் பெற்ற கோமதிக்கோ பெருமை பிடிபடவில்லை.  ரோகிணியை கட்டிப்பிடித்து உச்சி முகர்கிறாள்.  ரோகிணியோ… இதெல்லாம் என்னம்மா…. நான் படிச்சி… கலெக்டராகிக் காட்றேன் பாரு… அப்போ உன்னை வண்டியிலேயே கூட்டிட்டுப் போவேன் என்கிறாள்.

IMG_0006

ரோகிணி

ப்ளஸ் ஒன் எந்த பள்ளியில் சேர்க்கலாம் என்று குழப்பம் ஏற்படுகிறது.  வெள்ளன் செட்டியார் பள்ளியா, வேலம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளியா, ஆர்எம்கே பள்ளியா என்று குழப்பம் மேலிடுகையில், ரோகிணியே நான் பாரத் மெட்ரிகுலேஷன் பள்ளியில் சேர்கிறேன் என்கிறாள்.  ஏற்கனவே என்னோடு ஸ்பெஷன்ல் கிளாஸில் படித்தவர்கள் அங்கே உள்ளார்கள், அதனால் நான் அங்கேயே படிக்கிறேன் என்கிறாள். அவள் விருப்பப்படியே, பாரத் மெட்ரிகுலேஷன் பள்ளியில் சேர்க்கிறாள்.  அவளுக்கு டொனேஷன் எதுவும் இல்லை.  பள்ளியிலேயே முதல் மாணவியாயிற்றே… அவளை சேர்த்துக் கொள்ள பள்ளிகள் போட்டி போடாதா ?

பாரத் மெட்ரிகுலேஷன் பள்ளி வள்ளுர், அத்திப்பட்டில் இருக்கிறது.  ரோகிணி வீட்டிலிருந்து 15 கிலோ மீட்டர் தூரம்.   தினமும் ரயிலில் பள்ளிக்குச் செல்வாள் ரோகிணி.   பத்தாம் வகுப்பில் முதல் மாணவியாக ரோகிணி தேர்ச்சி பெற்றதால், அவளின் புகைப்படத்தை பள்ளி ப்ளெக்ஸ் போர்டு போட்டு பெருமையாக பறைசாற்றுகிறது.  ஆனால், அதுவே அவளுக்கு பெரும் தலைவலியாக அமைகிறது.  ரயில் நிலையத்தில் விடலைப்பருவ வாலிபர்கள், தொடர்ந்து ரோகிணியை கிண்டல் செய்கிறார்கள்.  என்னைக் காதலிக்கிறாயா…. நீ அழகா இருக்க…. என்னைக் கல்யாணம் பண்ணிக்க… என்ற ரீதியில் இந்தக் கிண்டல் தொடர்கிறது.  16 வயதுப் பெண்ணான ரோகிணிக்கு அதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை. தன் பெற்றோரிடம் சொல்லி முறையிடுகிறாள்.  அவர்கள் அவள் பள்ளியிலேயே அவளோடு படிக்கும் பார்த்திபன் என்ற இளைஞனிடம் சொல்லி, ரோகிணியை நன்றாகப் பார்த்துக் கொள்ளுமாறு சொல்கின்றனர்.

IMG_0013

ரோகிணியின் பத்தாம் வகுப்பு சான்றிதழ்

 

ரோகிணியின் பெற்றோர் சொல்லியபடி, பார்த்திபன், ரோகிணியை தினமும் ரயில் நிலையத்திலிருந்து கூட்டிச் செல்வது, அனுப்பி வைப்பது என்று கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்கிறான்.  ரோகிணி, பார்த்திபனை அண்ணன் என்றே அழைக்கிறாள். கூடப் பிறந்த தங்கை இல்லாததால், ரோகிணியை பார்த்திபன் சொந்தத் தங்கையாகவே பார்த்துக் கொள்கிறான். ரோகிணியின் தாய் கோமதியும், பார்த்திபனை மகன் போலவே பார்த்துக் கொள்கிறாள்.  ரோகிணிக்கு உணவு கட்டுகையில், பார்த்திபனுக்கும் சேர்த்து உணவு கட்டுவது… ரோகிணி வரத் தாமதமானால் பார்த்திபனை போன் செய்து தொந்தரவு செய்வது என்று சிறப்பாகவே இவர்கள் வாழ்வு போய்க் கொண்டிருக்கிறது.

மக்கள் நலப்பணியாளர்களை ஒரே நாளில் வீட்டுக்கு அனுப்பியதன் மூலம் மக்கள் நலப்பணியாளராக பணியாற்றிக் கொண்டிருந்த ரோகிணியின் தந்தையின் வாழ்வில் விளக்கேற்றி வைத்தவர் புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்கள்.  இருந்த ஒரே வேலையும் போனதால், ஏற்கனவே உடல்நிலை சரியில்லாத ரோகிணியின் தந்தை ஞானரத்தினம் வேலை தேடிக்கொண்டே இருக்கிறார். பிப்ரவரி மாதம் 24 அன்று ஞானரத்தினத்துக்கு 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் செக்யூரிட்டி சூப்பர்வைசர் பணி கிடைக்கிறது.  அன்று இரவு குடும்பமே மகிழ்ச்சியாக இருக்கிறது.

DSC_0302

ரோகிணியின் தாய் கோமதி மற்றும் தந்தை ஞானரத்தினம்

“அம்மா…. அப்பாவுக்குத்தான் நல்ல வேலை கெடச்சுடுச்சேம்மா… இன்னும் ஏம்மா கவலையா இருக்க… ?   எங்க ஸ்கூல்ல டூர் கூட்டிட்டுப் போறேன்னு சொன்னாங்க… அதுக்கு 3500 ரூபாய் கட்டணும்.. கேக்கலாமா வேணாமான்னு நெனச்சுட்டு இருந்தேன்.. அப்பாக்குத்தான் வேலை கெடச்சுடுச்கே… என்னை அனுப்பி வைம்மா…”  என்று கெஞ்சுகிறாள்…  போலாம்மா.. கண்டிப்பா போலாம் என்று அவளை சமாதானம் செய்து விட்டு சாப்பிடச் சொல்கிறாள் கோமதி.  அம்மா இந்த வீட்ல ஒரே ரூம்தாம்மா இருக்கு… நம்ப வேற வீட்டுக்கு போலாம்மா என்கிறாள்.  எல்லாப் பசங்களும் சாப்பிட நெறய்ய எடுத்துட்டு வர்றாங்கம்மா….  நீ எனக்கு சாப்பாடு மட்டும்தான் கட்டிக் குடுக்கற… வேற எதுவும் குடுக்க மாட்ற.. அப்பாக்குதான் நல்ல வேல கெடச்சுடுச்சே… எனக்கு ஸ்கூலுக்கு சாப்பிட ஏதாவது வாங்கிக் குடும்மா என்று தொண தொணவென்று பேசிக்கொண்டே இருக்கிறாள்.  குடும்பம் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது..

மறுநாள் பள்ளிக்குச் சென்று விட்டு, வீடு திரும்புகையில் வழக்கம் போல தன் அண்ணன் பார்த்திபனோடு ரயில் நிலையத்தில் அமர்ந்து, அவள் அம்மா கட்டிக் கொடுத்த உணவை சாப்பிடுகிறாள் ரோகிணி.   அப்போது ரயிலில் சென்ற தமிழ் ஆசிரியர் செந்தில், ரோகிணியையும், பார்த்திபனையும் பார்க்கிறார்.  உடனே பள்ளியின் தாளாளர் மணிவண்ணனிடம் இந்த விபரத்தை தொலைபேசியில் தெரிவிக்கிறார்.

மணிவண்ணன் சற்று நேரத்தில் ரயில் நிலையத்திற்கு வருகிறார்.

“உங்களுக்கு லவ் பண்ண இதுதான் இடமா… ? வேற எடம் கெடைக்கலயா…  இந்த வயசுலயே உனக்கு ஆம்பளை தேடுதாடி…” என்று கத்துகிறார்… பார்த்திபனின் தலையில் கொட்டுகிறார்.  உடனே அந்த இடத்தில் கூட்டம் கூடுகிறது.  யாருய்யா நீ.. சின்னப்பசங்கள அடிக்கிற… என்று கேட்கிறார்கள்.  மணிவண்ணன், “நான் இவர்கள் படிக்கும் பள்ளியின் தாளாளர்… இவங்க ரெண்டு பேரும் லவ் பண்றேன்னு ஊர் ஊரா சுத்திக்கிட்டு இருக்காங்கன்னு கம்ப்ளெய்ன்ட் வந்துச்சு.. அதான் கையும் களவுமா பிடிக்கலாம்னு வந்தேன்.. இவங்க அப்பா அம்மா கஷ்டப்பட்டு படிக்க அனுப்பிச்சா… இதுங்க ஊரு மேயிது” என்கிறார்.   அவர் பள்ளியின் தாளாளர் என்று அறிந்ததும் கூட்டம், அப்படியே அவர் பக்கம் சாய்கிறது.. அங்கே இருந்தவர்கள்.. மொளச்சு மூணு எலை விடல… இவளுக்கு ……………. ……… என்று பேசுகிறார்கள்.  இதுங்கல்லாம் எங்க உருப்படப்போகுது…  அப்பா அம்மாவ ஏமாத்திட்டு இந்த வயசுலயே… இதுங்களுக்கு…………………. கேக்குது.   என்று பேசுகிறார்கள்….  இன்னொரு அம்மா “இப்படி ஒரு ஜென்மம்.. இதுங்கள்ளாம் உயிரோட இருக்கறதுக்கு ஓட்ற ட்ரெயின்ல குதிச்சு சாகலாம்“ என்கிறார்.

ரோகிணி கூனிக்குறுகிப் போகிறாள்.  உண்மையிலேயே காதலித்திருந்தால், அவளுக்கு பெரிய அவமானமாக இருந்திருக்காது… அண்ணன் தங்கையாகப் பழகியவர்களை இப்படிப் பேசுகிறார்களே.. என்று புழுங்குகிறாள்.  மாலை 4 மணிக்கு வீட்டுக்கு வந்தவள், நேராக படுத்து தூங்குகிறாள்.  இரவு சாப்பிடவில்லை.  காலையில் எழுந்ததும், அவள் தங்கை சுவாதியிடம் என்னோட ட்ரெஸ்ஸையெல்லாம் நீ போட்டுக்க என்கிறாள். எதுவும் புரியாத அவள் தங்கை, சரி என்கிறாள்.  நேராக அவள் அம்மாவிடம் சென்று, “அம்மா உன்னை எப்பவவாது திட்டியிருந்தா கோச்சுக்காதம்மா” என்கிறாள்.. எதுவுமே புரியாத கோமதி, பயாலஜி க்ளாஸ் இருக்குன்னு சொன்னியே கௌம்புடி” என்கிறாள்.

ரயில் நிலையத்தில் பார்த்திபன் காத்திருக்கிறான்.  இருவரும் பொன்னேரி ரயில்நிலையத்தின் அருகே உள்ள ரயில்பாதை பாலத்தில் நடந்து செல்கிறார்கள்.  எதிரே ரயில் வருகிறது.  ரோகிணி முன்னே செல்கிறாள். பார்த்திபன் பின்னே வருகிறான்.  ரயில் ட்ரைவர் சத்தமாக ஹார்ன் அடிக்கிறார்.  இரு கைகளையும் தலைக்கு மேலே உயர்த்தி கும்பிட்டபடி ரயிலை நோக்கி நடந்து செல்கிறாள் ரோகிணி.  ரயில் அவள் மீது மோதி அவளை சின்னாபின்னமாக்குகிறது.  அவள் பின்னே வந்த பார்த்திபன் பயந்துபோய் பாலத்தின் மேலிருந்து கீழே குதிக்கிறான்.  கீழே இருந்த பாறைகளில் சிக்கி அவன் கால் மற்றும் தொடை எலும்புகள் நொறுங்குகின்றன.

வீட்டுக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது.  பள்ளிச் சீருடையை வைத்து, பள்ளிக்குத் தகவல் அனுப்பப்படுகிறது.  தாளாளர் மணிவண்ணன் வருகிறார்.  காவல்துறையினர் அவரை விசாரித்ததும், இவர்கள் இருவரும் காதலர்கள்… நான் கூட முந்தாநாள்தான் கண்டித்தேன்.. வீட்டில் காதலுக்கு அனுமதி தராததால் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று கூறுகிறார்.  தினகரனும், சன் டிவியும், காதலர்கள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை என்று செய்தி வெளியிடுகிறது.

ரோகிணியின் குடும்பம் அலங்கோலமாகி அழுது புலம்புகிறது.  ரோகிணியின் பள்ளி நோட்டுக்களை எடுத்து மடியில் போட்டுக் கொண்டு அழுகிறாள் கோமதி. அப்போது அந்த நோட்டிலிருந்து ஒரு கடிதம் வந்து விழுகிறது.

“வாக்குமுலம் என்று தொடங்கும் அந்தக் கடிதம், எங்களுடைய சாவுக்கு எங்கள் பள்ளி Correspondent தான் முழுக்க முழுக்க காரணம். ஏனென்றால் எனக்கு ஒரு அண்ணன் இருந்தான். அவன் என் உடன் பிறக்காவிட்டாலும் உடன் பிறந்த பாசமான அண்ணன் போலத்தான் இருந்தான். …. என்று தொடங்கும் அந்தக் கடிதம், ரோகிணியின் மனவேதனையை வெளிப்படுத்துகிறது.

“எங்களுடைய சாவுக்கு Correspondent ஒருத்தர் மட்டுமே காரணம். எங்கள் சாவிற்குப் பிறகு அங்கே படிக்கும் மாணவர்களுக்கு ஒரு புதிய காலம் பிறக்க வேண்டும். Correspondentக்கு ஒரு நல்ல தண்டனை கிடைக்க வேண்டும். இனிமேல் அவர் யாரையும் இழிவுபடுத்திப் பேசக் கூடாது.  பின்பு, அண்ணன் தங்கை என்று கூறிவிட்டு யாராவது காதல் செய்வார்களா ? அதைவிட அவமானம் வேறு எதுவும் இல்லை.”  என்று எழுதியிருக்கிறாள் ரோகிணி….

IMG_0008

IMG_0009

IMG_0010

IMG_0011

இந்தக் கடிதம் காவல்துறையினரிடம் கொடுக்கப்பட்டதும், காவல்துறையினர் பள்ளியின் தாளாளர் மீது 306  (தற்கொலைக்குத் தூண்டுதல்) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்கின்றனர்.

ஒருவரின் செக்ஸ் உணர்வுகள் தனிப்பட்டவை.  அது அடுத்தவரை பாதிக்காத வரை யாருக்கும் அதை குற்றம் கூறவோ, விமர்சிக்கவோ உரிமை இல்லை.  ரோகிணியின் பள்ளித் தாளாளர் மணிவண்ணனின் பாலியல் உணர்வுகள் குறித்தும், நமக்கு எந்த விமர்சனமோ, பார்வையோ இல்லை.   ஆனால், அவரின் பாலியல் உணர்வுகள் காரணமாக மனப்பிறழ்ச்சியோடு நடந்து கொண்டாரேயானால் அதை சுட்டிக்காட்டவும், விமர்சனம் செய்யவும் நமக்கு உரிமை உண்டு.

மணிவண்ணன் திருமணம் ஆனவர்.  அவருக்கு இரண்டு பிள்ளைகள் உண்டு.  மணிவண்ணன் இருபாலினத்தவரிடமும் உறவு கொள்ளும் பழக்கம் உள்ளவர்.  Bi-Sexual.  யாஹுவில் அவர் மற்றொரு ஆணோடு நடத்திய செக்ஸ் சாட்டின் விபரம் இதோ… ….  இதில் “திக் காக்” என்ற ஐ.டி வைத்திருப்பவர்தான் மணிவண்ணன்.

IMG_0045

IMG_0046

”திக் காக்”  என்ற ஐடி யாருடையதாக வேண்டுமானாலும் இருக்கலாம் இல்லையா ?  இது மணிவண்ணனுடையதுதான் என்பதற்கு என்ன ஆதாரம் ?   இதோ மணிவண்ணன் வீடியோ சாட்டில் தனது முகத்தைக் காட்டி சேட் செய்யும் ஸ்க்ரீன் ஷாட்.

 IMG_0047

இருபாலினத்தவரோடும் உறவு கொள்ளும் மணிவண்ணனின் பாலியல் Preference தொடர்பாக நமக்கு எந்த பிரச்சினையும் இல்லை.  ஆனால், இப்படி ஒரு pervertஆக இருப்பதால்தான் ரயில் நிலையத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த ஒரு 16 வயது பையனும், பெண்ணும் காதலர்களாகத்தான் இருப்பார்கள் என்ற முடிவுக்கு வருகிறார்.  அவர்கள் காதலர்களாகவே இருந்துவிட்டுப் போகட்டும்.  ரயில் நிலையத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பது என்ன அப்படி ஒரு பெருங்குற்றமா ?  அவர்கள் நண்பர்களாக இருக்கக் கூடாதா ?  மணிவண்ணனுக்கு ஏன் அது தவறாகத் தெரிகிறது ?  இதற்குக் காரணம் அவரது Perversion. பாலியல் வக்கிர மனது படைத்ததால்தான் இவருக்கு அது ஒரு பெருங்குற்றமாகப் பட்டிருக்கிறது.   அப்படியே பெருங்குற்றமாக அது இருந்தாலும், ஒரு பள்ளியின் தாளாளராக இருப்பவர், அந்த மாணவர்களை பள்ளியில் கண்டித்திருக்கலாம், பெற்றோர்களிடம் பேசியிருக்கலாம்.. ஆனால் பொதுமக்கள் மத்தியில் அவமானப்படுத்துவதென்பது… ?  மணிவண்ணன் கூனிக் குறுகிப்போகும் அளவுக்கு அவரின் அந்தரங்கமான புகைப்படங்கள் நம்மிடம் உள்ளது….  ஆனால் அவற்றை பிரசுரிப்பதில்லை என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்த மணிவண்ணன் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுகிறார். அந்த முன்ஜாமீன் மனு, நீதிபதி சுந்தரேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது. மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு விசாரணைக்கு வரும்போதெல்லாம் நீதிபதி சுந்தரேஷ், நான் முன்ஜாமீன் தர மாட்டேன், மனுவை தள்ளுபடி செய்யப்போகிறேன், அந்த மணிவண்ணன் ஒரு நாளாவது சிறையில் இருக்க வேண்டும் என்கிறார். இதனால் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்ட இந்த முன்ஜாமீன் மனுவை வாய்தா வாங்கிக் கொண்டே தள்ளிக் கொண்டு போகிறார்கள்.   இறுதியாக ஏப்ரல் இறுதி வாரத்தில் இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கோடை விடுமுறைக்குப் பிறகு இந்த மனுவை ஒத்தி வையுங்கள் என்று நீதிபதியிடம் கேட்டு, மனு தள்ளி வைக்கப்படுகிறது. இந்த முன்ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் ஏ.என்.தம்பிதுரை.

நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை விடப்படுகிறது.  விடுமுறை நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.  2012 இறுதி கோடை நீதிமன்றமாக, ஜாமீன் வழங்கும் நீதிபதியாக அமர்கிறார் நீதிபதி அருணா ஜெகதீசன். அவரிடம் ஏற்கனவே நிலுவையில் உள்ள முன்ஜாமீன் மனுவை மறைத்து, புதிய முன்ஜாமீன் மனு ஒன்றை தாக்கல் செய்கிறார்கள்.  அவர் விசாரித்து விட்டு, பள்ளித் தாளாளர் மணிவண்ணனுக்கு முன்ஜாமீன் வழங்குகிறார்.  இந்த மனுவின் விசாரணையின்போதும் அரசுத் தரப்பில் வாதாடியவர், ஏ.என்.தம்பிதுரை.

IMG

IMG_0018

சரி… ஏற்கனவே நிலுவையில் உள்ள முன்ஜாமீன் மனு என்ன  ஆனது ? கோடை விடுமுறை முடிந்து, மீண்டும் பழைய முன்ஜாமீன் மனு நீதிபதி சுந்தரேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.  அப்போது, மனுவை வாபஸ் வாங்கிக் கொள்வதாகத் தெரிவித்து வாபஸ் வாங்கிக் கொள்கிறார்கள்.

IMG_0019

சென்னை உயர்நீதிமன்றத்தைப் பொறுத்தவரை, எந்த மனு தாக்கல் செய்தாலும், இதே பொருள் குறித்து, இந்த நீதிமன்றத்திலோ, வேறு எந்த நீதிமன்றத்திலோ மனுக்கள் எதுவும் நிலுவையில் இல்லை என்ற உறுதிமொழி அளிக்க வேண்டும். அப்படி ஒரு பொய்யான உறுதிமொழியை அளித்தபிறகே, மனுக்களுக்கு எண்ணே வழங்கப்படும்.  இதையும் மீறி, பொய்யாக முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தால், சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் உள்ளவர்களுக்கு இந்த விபரம் தெரியும்.  ஒரு வழக்கில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டவுடன், சம்பந்தப்பட்ட காவல்நிலையத்துக்கு அரசு வழக்கறிஞர் அலுவலகத்திலிருந்து தகவல் அனுப்பப்பட்டு, காவல்நிலையத்தில் உள்ளவர்கள் வந்து, அரசு வழக்கறிஞரிடம் வழக்கு குறித்த விபரங்களை எடுத்துக் கூற வேண்டும்.  அதன்படி அரசு வழக்கறிஞர் வாதாடுவார்.

இந்த வழக்கிலும் அதன்படி காவல்நிலையத்திலிருந்து சம்பந்தப்பட்டவர்கள் வந்து அறிவுறுத்தியிருப்பார்கள்.   அவர்கள் ஒரு வேளை அறிவுறுத்தாமல் விட்டிருந்தாலும், அரசு வழக்கறிஞர் தம்பித்துரைக்கு இந்த விபரங்கள் தெரிந்திருக்கும்.   இது ஒரு சாதாரண அடிதடி வழக்காக இருந்தால், நூற்றுக்கணக்கான வழக்குகளில் நினைவில்லை என்று கூறலாம்.  ஆனால், 16 வயது சிறுமி, ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட வழக்கு, வருடத்துக்கு ஒன்று வந்தாலே அரிது.  அந்த வழக்கில் முன்ஜாமீன் மனு நிலுவையில் இருக்கும் விபரத்தை ஒரே மாதத்தில் மறந்து விடக் கூடிய அளவுக்கு மங்குணி வழக்கறிஞர் அல்ல தம்பிதுரை.

சரி அய்யா… மறந்து விட்டார் என்றே வைத்துக் கொள்ளலாம்.  கடந்த ஆண்டு ஜுலை 17 அன்று அரசு வழக்கறிஞர் தம்பிதுரைக்கு முன்ஜாமீன் வழங்கியதில் நடந்த இந்த மோசடி குறித்து பதிவுத் தபாலில், புகார் அனுப்பப்பட்டுள்ளது. அந்த மனுவோடு, இரண்டு முன்ஜாமீன் மனுவின் தீர்ப்பு நகல்கள் இணைத்து அனுப்பப்பட்டுள்ளன.

IMG_0021

IMG_0022

அப்போதாவது இவர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமா இல்லையா ?  ஆறு மாதங்கள் கடந்தும் தம்பிதுரை ஏன் மவுனம் சாதிக்கிறார்…  நீதிமன்ற வட்டாரங்களில் விசாரித்தால் இந்த மோசடியான முன்ஜாமீன் மனுவை கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக, தம்பிதுரைக்கு 25 லட்ச ரூபாய் கொடுக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள்.  இது குறித்து மேலதிக விபரங்களை விசாரிக்க இயலவில்லை.  ஆனால், இது குறித்து தன்னிடம் நேரடியாக புகார் வந்தும், இந்த முன்ஜாமீனை ரத்து செய்ய தம்பிதுரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற மர்மத்துக்கு அவர்தான் விடை சொல்ல வேண்டும்.

தம்பிதுரை நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் என்ன ?  நாம் விட்டுவிடுவோமா என்ன ?  மணிவண்ணனின் முன்ஜாமீன் மனுவை ரத்து செய்யக் கோரி, திங்கட்கிழமை அன்று மனு தாக்கல் செய்யப்பட உள்ளது என்பதை சவுக்கு மகிழ்ச்சியோடு அறிவிக்கிறது.

சவுக்கு தளம் நடத்துவதில் வாசகர்களின் பேராதரவு இருந்தாலும், பல நேரங்களில் மனத்தளர்ச்சி ஏற்படும்.  என்ன எழுதி என்ன  பயன் ? யாருக்காக எழுதுகிறோம்…  எதற்காக இப்படிக் கஷ்டப்படவேண்டும் என்ற அயர்ச்சி ஏற்படத்தான் செய்கிறது.  ஆனால், ரோகிணியின் தாயார் கோமதி போன்ற நபர்களைச் சந்திக்கையில், என்ன சிரமம் ஏற்பட்டாலும், இத்தளத்தை தொடர்ந்து நடத்த வேண்டும் என்ற உத்வேகம் ஏற்படுகிறது.

கோமதியின் கழுத்தில் மஞ்சள் கயிறைத் தவிர வேறு எதுவுமேயில்லை.  வறுமையென்றால் அப்படி ஒரு வறுமை.  இந்தச் சூழலில், பள்ளித் தாளாளர் மணிவண்ணனின் சார்பாக கோமதியை தொடர்ந்து சந்திக்கும் அரசியல் ப்ரோக்கர்களும், வழக்கறிஞர்களும் கோமதிக்கு லஞ்சம் கொடுத்து, இவ்வழக்கை முடித்து வைக்க தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள்.  அதிகபட்சமாக இது வரை 10 லட்ச ரூபாய் வரை தருவதாக வாக்களிக்கப்பட்டிருக்கிறது.  ஆனால், அந்த கோமதியோ, பெண் புலியைப் போல சீறுகிறாள்…. வாழ்க்கை வறுமையில் சிக்கி சிரமத்தை ஏற்படுத்தினாலும், ஒரு நாளும் பணம் வாங்க மாட்டேன்.. என் மகளின் உயிரைப் பறித்தவனை விடமாட்டேன் என்று உறுதியாக இருக்கிறாள்.  அவளின் உறுதி பிரமிக்க வைக்கிறது.   தன் கணவனின் உறவினர்கள், பணத்தை வாங்கிக் கொள் என்று எவ்வளவோ நெருக்கடி கொடுத்தும், முடியவே முடியாது எனக்கு வேண்டியது நியாயம் என்று தீர்மானமாக இருக்கிறாள்.

இந்த கோமதிகளுக்காகத்தான் இந்தத் தளம் நடத்தப்படுகிறது.  இந்த கோமதிகள்தான் இந்தத் தளத்தின் உத்வேகம்.  தொடர்ந்து எழுதவேண்டும் என்ற ஊக்கத்தை அளிப்பவர்கள் இந்த கோமதிகளே...… கோமதிகளைப் பார்த்து ஊக்கம் பெற்று, தொடர்ந்து போராடுவோம் தோழர்களே….!!

ப்ளஸ் ஒன் வகுப்பில், வைக்கப்பட்ட தேர்வுகளில், கோமதியின் விடைத்தாள்களைப் பாருங்கள்…. இந்தச் சிறுமிக்கு நேர்ந்த இந்த அநியாயத்திற்கு நியாயம் வேண்டாமா ?  கலெக்டராக வேண்டும் என்ற இந்த சிறுமியின் கனவு சிதைக்கப்பட்டதற்கு காரணமான கயவர்களை எப்படி மன்னிப்பது ?

IMG_0023

IMG_0024

IMG_0025

IMG_0026

IMG_0027

இந்தத் தாயின் கண்ணீருக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் தம்பிதுரை ?

DSC_0294

 

Comments  

 
0 #74 bila 2013-03-19 12:29
விரைவில் அவன் தன்டிக்க படுவான்
Quote
 
 
0 #73 bila 2013-03-19 12:28
வருத்த படவில்லை வெட்க படுகிரென் நமது நீதிமன்ரன்கல் இருக்கும் நிலையை கன்டு
கன்டிபக தன்டனை கிடிகும் கிடைக வென்டுமன
Quote
 
 
0 #72 bila 2013-03-19 12:23
அவனை கன்டிப்பாக நீதி மன்றம் தண்டிக்கும் அம்மா கவலை பட வேண்டம்
Quote
 
 
0 #71 கிராதகி 2013-03-17 16:04
பெரும்பாலான பள்ளிகளில் இப்படித்தான் நடக்கிறது.. கல்லூரிகளிலும் கூட ஆண் பெண் பேசும் பொழுது அது காதலாகத் இருக்கும் என தீர்மானிக்கப்பட ுகிறது. அப்படி இருந்தால், என்ன என்பது அடுத்த கேள்வியாக அமைகிறது நமக்கு..
திருவள்ளூர் அருகினில், திருமுருகன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (2௦1௦ல்) இப்படித்தான், ஒரு ஆசிரியையை வெளியில் ஒரு கல்லூரிப் பெண் ஒருவரை, அதே கல்லூரியை சேர்ந்த ஒரு ஆணுடன் பார்த்துள்ளார். அந்தப் பெண் கல்லூரிக்கு அன்று வந்திருக்கிறாரா என கவனித்துள்ளார்.. அவர் வராத காரணத்தினால், அந்த பெண்ணின் பெயரையும், வகுப்பையும் குறிப்பிட்டு அனைத்து வகுப்புகளுக்கு சர்குலர் அனுப்பி, அறிவிப்பு பலகையில் ஒட்டியதின் விளைவாக அந்தப் பெண் ஆசிரியை பெயரினை எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால், இன்றும் அந்த ஆசிரியை அதே கல்லூரியில், எவ்வித மன உறுத்தலுமின்றி வேலை செய்து வருகின்றார். தனிப்பட்ட முறையினில் அந்த ஆசிரியை பலருடன் பழக்கம் உள்ளவர் என மாணவர்கள் கொதித்தெழுந்து, முதல் முறையாக அக்கல்லூரியில் வகுப்பு புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டம் செய்தனர்..
சமூகத்தில் இப்படியும் சில ஜடங்கள் உலவிக் கொண்டு வருகின்றது... :ஓப்ச்:
Quote
 
 
0 #70 Pugazh 2013-02-12 10:12
கவலைப்படாதீர்கள ் அம்மா, உங்கள் கவலை விரைவில் தீரும், எதிரியின் கணக்கு முடிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.
Quote
 
 
0 #69 ranjithkumar from u. 2013-02-10 07:18
thavarana kannodda thudan parkum manapanmai maravendum
Quote
 
 
0 #68 SATHISH MANJU 2013-02-06 23:56
என் கண்களீல் நீர் வழீகிறது வர்ர்த்தை வரவீல்லை :zzz
Quote
 
 
0 #67 laugh 2013-02-06 17:22
Very sad to read this news. Correspondent has provoked for suicide and he has to face legal action. My deep condolence to the family. SAVUKU thanks for your effort. God will bless you.
Quote
 
 
0 #66 avanithan 2013-02-06 17:10
[ஃஉஒடெ நமெ="பரச்க"]அது யென்ன பரிட்ஷை பேப்பர்ல ரொஹினி ந்னு பொட்ருக்கு நீங்க யென்னடான்னா கொமதி பத்தி யெழுதிருக்கீங்க ?[/ஃஉஒடெ]

ரோகினி என்பவர் கோமதியின் மகள் முதலில் செய்தியை சரியாக படிக்க வேண்டும்.
Quote
 
 
0 #65 chithra Germany 2013-02-04 14:11
என்ன எழுதுவதென்று தெரியவில்லை. கண்களில் ஈரம்தான் உண்டு.
Quote
 
 
+5 #64 narayanan.A 2013-02-01 22:38
அறிஞர் அமர்த்யா சென் 'ஐடியா ஆப் ஜஸ்டிஸ்; எனும் புத்தகத்தில் சொல்கிறார்- உலகில் முழுமையான நீதி, நியாயம் என்று எதுவும் இல்லை. நாம் முயன்று, அ நீதியைக் குறைக்கலாம், அ நியாயத்தைக் குறைக்கலாம் என்பார்.உங்களது பணிக்கு எனது முழு ஆதரவு உண்டு என்பதைத் தெரிவித்துக்கொள ்கிறேன். ரோகினியின் தாய் கோமதியை சந்திக்க விரும்புகிறேன். உதவ முடியுமா? வாழ்த்துக்கள். - அ.நாராயணன், சமூக ஆர்வலர், ஆசிரியர் பாடம் மாத இதழ்.
Quote
 
 
0 #63 E.SOUNDAR 2013-02-01 21:12
வினை விதைத்தவன் வினையை அறுப்பான் விதை விதைத்தவன் விதையை அறுப்பான் ! ! கவலைபடாதீர்கள் தாயே !! அரசன் அன்று கொல்லுவான் தெய்வம் நின்று கொள்ளும் !!!! அவன் அனுபவித்தே தீருவான் !!!!!!!!!
Quote
 
 
0 #62 scorpio 2013-02-01 16:14
தம்பி

என்ன சொல்ல.

நீதி செத்த பூமியிலே கோமதிக்கோ அல்லது தன்னை மாய்த்துக் கொண்ட ரோஹிணிக்கோ நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கில்லை.

தலையே அந்த கையெழுத்து என்னோடது இல்லே, அந்த டிவி என்னோடது இல்லென்னு சொன்னா வாலுகள் இன்னும் எத்தனை கள்ளத்தனம் பண்ணாது.
Quote
 
 
0 #61 Elayaraja 2013-02-01 11:24
# இந்த கோமதிகளுக்காகத் தான் இந்தத் தளம் நடத்தப்படுகிறது . இந்த கோமதிகள்தான் இந்தத் தளத்தின் உத்வேகம். தொடர்ந்து எழுதவேண்டும் என்ற ஊக்கத்தை அளிப்பவர்கள் இந்த கோமதிகளே...… கோமதிகளைப் பார்த்து ஊக்கம் பெற்று, தொடர்ந்து போராடுவோம் தோழர்களே….!! #

தயவு செய்து அயர்ச்சி கண்டு ஒடுங்கி விடாதீர்கள்.. நியாயம் செத்து விட கூடாது ஒரு போதும்.. ஆதரவு என்றும் உண்டு இந்த சவுக்கு தளத்துக்கு...
Quote
 
 
+5 #60 n.manoharan 2013-01-31 23:51
ஐயா என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை என் மனது வலிகிரது இதற்கு என்ணால் எந்த அள்வு அந்த குடும்பதிற்கு உதவ முடியுமொ அதை நான் உதவுகிரென்
Quote
 
 
+3 #59 sangeetha 2013-01-31 20:02
சவுக்கு இனைய தலத்திர்க்கு யென் வாழ்த்துக்கல். எப்பொழுதும், எதரைக்கவும் வங்கலுடைய கடமையில் இருந்து தவர வேன்டாம்.
Quote
 
 
0 #58 Thirumoorthi C 2013-01-31 15:55
We are here..You write and we see the rest..You are creating a major awareness in Tamilnadu,Mr.Savukku..
Savukku portal has been my regular page on everyday browsing and i have suggested the same for my friends. You ahead and we will stand with you
Quote
 
 
-9 #57 paraska 2013-01-31 09:37
அது யென்ன பரிட்ஷை பேப்பர்ல ரொஹினி ந்னு பொட்ருக்கு நீங்க யென்னடான்னா கொமதி பத்தி யெழுதிருக்கீங்க ?
Quote
 
 
+4 #56 IAmABadJudge 2013-01-30 07:21
அது எப்படி நீதிபதி சுந்தரேஷ்க்கு தெரிந்தது நீதிபதி அருணா ஜெகதீசன்க்கு தெரியவில்லை?
Quote
 
 
+5 #55 Eleventh Sense 2013-01-30 01:59
#அந்த கோமதியோ, பெண் புலியைப் போல சீறுகிறாள்…. வாழ்க்கை வறுமையில் சிக்கி சிரமத்தை ஏற்படுத்தினாலும ், ஒரு நாளும் பணம் வாங்க மாட்டேன்.. என் மகளின் உயிரைப் பறித்தவனை விடமாட்டேன் என்று உறுதியாக இருக்கிறாள். அவளின் உறுதி பிரமிக்க வைக்கிறது. தன் கணவனின் உறவினர்கள், பணத்தை வாங்கிக் கொள் என்று எவ்வளவோ நெருக்கடி கொடுத்தும், முடியவே முடியாது எனக்கு வேண்டியது நியாயம் என்று தீர்மானமாக இருக்கிறாள்.

இந்த கோமதிகளுக்காகத் தான் இந்தத் தளம் நடத்தப்படுகிறது . இந்த கோமதிகள்தான் இந்தத் தளத்தின் உத்வேகம். தொடர்ந்து எழுதவேண்டும் என்ற ஊக்கத்தை அளிப்பவர்கள் இந்த கோமதிகளே...… கோமதிகளைப் பார்த்து ஊக்கம் பெற்று, தொடர்ந்து போராடுவோம் தோழர்களே….!!# நாமும் துணை நிற்போம் சவுக்கு......................
Quote
 
 
+12 #54 ganesh111 2013-01-29 21:27
தம்பிதுரை போன்ற பிணம் தின்னி கழுகு கலை கண்டிப்பாக தண்டிக்கவேண்டும ். 50% வக்கில்கள் இதுபோலதான் இருக்கிறார்கள். சவுக்கு தொடருந்து இது போல சேவை செய்வதற்கு மனமார வாழ்த்துக்கள்
Quote
 
 
+7 #53 Suresh Raj 2013-01-29 20:21
காவாளிப்பயலின் thick c**k நறுக்கப்பட வேண்டும்.
Quote
 
 
+4 #52 P.R.Rajendran 2013-01-29 18:51
My dear savukku,It is quiet sympathetic.Please make an arrangement to support that innocent mother Gomathi economically by some network.The handwriting of that child make me melt out.No words.How long our society and these poor,innocent to bear these perverts.
Quote
 
 
+7 #51 Puthiyavan Raj 2013-01-29 16:42
வாழ்த்துக்கள் சவுக்கு. உங்கள் துணிவும் சேவை மனப்பான்மையும் மெய் சிலிர்க்க வைக்கிறது. உங்கள் நற்பணிக்கு மனதார பாராட்டுக்கள். தொடரட்டும் உங்கள் பணி.
Quote
 
 
+5 #50 Saravanan.A 2013-01-29 15:28
என்ன எழுதுவது என்று தெரியவில்லை. சவுக்கில் ஒரு கட்டுரை படித்து முதல் முறையாக கண்களில் கண்ணீர். இந்த வழக்கு நிச்சயம் வெற்றி பெற வேண்டும். ரோகிணியின் மரணத்திற்கு நியாயம் கிடைக்க வேண்ட்டும்.
Quote
 
 
+5 #49 anjan 2013-01-29 14:40
சவுக்கு ஆற்றி வரும் சமுதாயப் பணி, சாலச் சிறந்தது. மனித உரிமைகளுக்காக நீங்கள் செய்துவரும் முயற்சிகள் போற்றப் பட வேண்டியவை.

ஆனால் அரசு ஊழல் பெருச்சாளிகளுக் கு, கள்ளச் சந்தை வியாபாரிகளுக்கு , கறுப்புப் பண முதலைகளுக்குப் பட்டம் வழங்கிக் கவுரவிக்கும். உங்களைப் போன்றவர்களை ஒழித்துக் கட்ட இந்த ஊழல் பெருச்சாளிகளும் சமூக விரோதிகளும் முயல்வார்கள். ஆனால் உண்மை, நியாயம் தர்மம் இவை பேரில் மதிப்பு வைத்திருக்கும் சாதாரணக் குடிமகன்கள் ஏராளம் அவர்கள் உங்களை மதிப்பார்கள்.
Quote
 
 
+9 #48 gopalasamy 2013-01-29 12:36
HATS OFF TO SAVUKKU.
A DISASTOUS END FOR A POOR, INTELLIGENT STUDENT.
THAT CORRESPONDENT SHOULD BE PUNISHED.
Quote
 
 
+8 #47 ganesh11 2013-01-29 11:04
நடுநிலை பத்திரிகை சவுக்கு. keep it up
Quote
 
 
+2 #46 mrafi 2013-01-29 08:49
நல்ல பதிவு......
Quote
 
 
+7 #45 Rasakannu 2013-01-29 07:26
Hi Savukku,

Congratulations for the good job !!

Never give up the great works!

***
Quote
 
 
+15 #44 PROBLEM SOLVER 2013-01-28 22:36
நெஞ்சு பொறுக்குதில்லைய ே இந்த மதி கெட்ட மானிடரை நினைத்து விட்டால்.......
Quote
 
 
+17 #43 kingkong 2013-01-28 22:34
[ஃஉஒடெ நமெ="சீ.கோ.இராமதேவர்"]அந்த தாய்க்கு ஏதெனும் பண உதவி செய்யலாம் என நினைக்கிறேன்...

சவுக்கு அதற்கான ஏற்ப்பாட்டை இந்த தளத்தின் மூலம் செய்தால் எங்கள் சகோதரியாய் நினைத்து நாங்கள் உதவ தாயாராய் உள்ளோம்.

[/ஃஉஒடெ]

உங்கள் எண்ணம் சீறியதாய் இருப்பினும் இது தவறு.. இன்று ஒரு குடும்பத்துக்கு உதவி செய்வோம் ஆனால் இது போல ஒராயிரம் கோமதிக்கள் இருக்கிறார்களே அவர்களுக்கு ஒரு சமூகமாய் நாம் என்ன செய்ய போகிறோம்? மணிவண்ணன் மற்றும் தம்பித்துரை போன்றவர்களிடம் தான் நம் குழந்தைகளின் எதிர்காலத்தை ஒப்படைக்கபோகிறோ மா? பிரச்சனையின் ஆணிவேர் அங்கு தானே இருக்கிறது.. அதை சரி செய்யாவிடில் இது நெஞ்சு வலிக்கு தைலம் தடவுவது போலத்தான்..
Quote
 
 
+24 #42 Sakthivel_tup 2013-01-28 22:26
என்ன எழுதுவது என்று தெரியவில்லை. சவுக்கில் ஒரு கட்டுரை படித்து முதல் முறையாக கண்களில் கண்ணீர். இந்த வழக்கு நிச்சயம் வெற்றி பெற வேண்டும். ரோகிணியின் மரணத்திற்கு நியாயம் கிடைக்க வேண்ட்டும். இந்த வழக்கிற்கு தேவையான பொருளாதார உதவிகளை நான் செய்ய விரும்புகின்றேன ்.
Quote
 
 
+11 #41 nellai suresh 2013-01-28 21:54
I really appreciate your efforts. keep it up
Quote
 
 
+26 #40 ஷாலி 2013-01-28 21:30
மணிவண்ணனின் செக்ஸ் வக்கிரம் தெரிந்து விட்டது.தெரியாத விஷயம்.இவன் தாளாளர் பதவியை வைத்து எத்தனை மாணவிகளை மிரட்டி பணியவைத்திருப்ப ான் என்பதை நன்கு விசாரிக்க வேண்டும்.அப்பள்ளியில் உள்ள ஆசிரியைகளையும் அவன் கவனித்திருக்க வாய்ப்புள்ளது.

இவனது மிரட்டல் நடைமுறை மூலம் பல மாணவர்களையும் ஓரின சேர்க்கையில் கவிழ்த்தியிருக் க வாய்ப்புள்ளது.
பிஞ்சு உள்ளங்களில் நஞ்சைப் பாய்ச்சும் நாசகாரனை தமிழக அரசு கடுமையாக தண்டிக்க வேண்டும்.

சவுக்கு மனச்சோர்வு அடைய வேண்டாம். படி அரிசி அள்ளிப்போடும்போ து பத்து அரிசி சிந்தத்தான் செய்யும்.சிந்திய அரிசியை வைத்தே மக்கள் விமர்சிப்பார்கள ்.அள்ளிப்போட்ட அரிசியை கண்டுகொள்ள மாட்டார்கள்.உண்மையைச் சொல்! நன்மையை செய்! நல்லது நடந்தே தீரும்.
Quote
 
 
+12 #39 K Kumar 2013-01-28 21:27
Hi Mr Shankar,
I have heard about your service in dept. Through this Webpage u have reached heights and millions of Tamil people & NRI's supporting this page continuously.
Hope you will never give up..
I m sure you have all the blessings from Good people. ( Hope u understood..)
Hats off to u once again... Personally i have stopped reading some magazines ( Esp. political & social weekly magazine) Nobody is having doubt about your information which you are showing to the Public..All the best.. Thank you for serving the soceity.
K Kumar
Quote
 
 
+11 #38 vilambi 2013-01-28 20:56
படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் ஐயோ என்று போவான் என்றான் பாரதி.இந்த லட்சணத்தில் தம்பிக்கு நீதிபதியாக ஆசை..ஜாதித் துணையோடும் அம்மா ஆசி வேண்டி அலைவதையும் விசாரித்து எழுதுங்கள் சவுக்கு....வாழ்த்துக்கள்...
Quote
 
 
+8 #37 நெல்லை பாலாஜி 2013-01-28 20:29
part 2 : ஒரு ஆணும் பெண்ணும் தனியே பேசினால் அது காமத்திற்காக என என்னும், சீழ் பிடித்த சிந்தனை..இது எவ்வாறு வருகின்றது என யோசித்து பார்த்தல், ஒன்று நம்முடைய சொந்த சிந்தனை , நம்முடைய அனுபவம் ..இரண்டு சமுக விழுமியங்கள்..இரண்டுமே ஒன்றை ஒன்று சார்ந்தது..அடுத்தவர்களை பற்றி பேசும் பொது நம்முடைய எண்ணங்களை அடுத்தவர் மேல் எற்றி பேசுவதே இப்போது நடைமுறை ஆகிவிட்டது..அது சரியா, இல்லையா என்று யாருமே பார்பதில்லை..தான் அவ்வாறு தவறு செய்வதால் அடுத்தவனும் அதே தவறு செய்வான் என்று தீர்பிடுவது...அடுத்து பெண் என்றாலே அவள் இப்படிதான் இருக்க வேண்டும் என்ற ஆணாதிக்க புத்தி..இது நிறைய பெண்களுக்கே உள்ளது...இது மாற வேண்டும்..

அடுத்து ..பள்ளிகளின் கடமை..தனியர்மயபடுதபட் ட கல்வி..இது மாணவர்களின் வாழ்கை முறையில் மிக பெரும் மாற்றத்தை கொண்டுவந்துள்ளத ு என்பது மிக பெரும் உண்மை..தனியர்மயப்பட்ட கல்வி ஒரு சமுக அக்கறை இல்ல கல்வி முறை ..பொறுப்புணர்ச்சி இல்லாத கல்வி முறை ..

இந்த இரண்டு விஷயங்களின் அடிப்படையில் இந்த வழக்கு அணுகப்படவேண்டும ்..அதுதான் இந்த மாதிரி பிரச்சனைகளுக்கு தீர்வு.
Quote
 
 
+15 #36 நெல்லை பாலாஜி 2013-01-28 20:28
Part 1 : விஸ்வருபம் வருமா வரதா? ஜெயாவின் அடுத்த நடவடிக்கை, சாரி பாஸ், அடுத்த அறிக்கை என்ன?விஜகாந்த் கூட்டனி அமைப்பாரா இல்லையா?? இப்படி மிக மிக முக்கியமான் பிரச்சனைகளுக்கு நடுவே, என்ன பாஸ் கட்டுரை இது...அதான் தினமும் பத்து சாகிறான் இல்ல...பத்தோடு பதினொன்று....

சத்தியமா இது என் வாய்ஸ் இல்ல..பெரும்பாலும் உள்ள கேடி அதிகாரிகள், முள்ளமாரி பொது ஜனம் வாய்ஸ்..

சத்தியமா சவுக்கு..இதுதான் உன்னோட ஏரியா...இவங்களுக்குதான் உங்கள மாதிரி சமுக அக்கறை உள்ளவர்களின் ஆதரவு தேவை..ஜபார் செட், ஜார்க் மன்னர் எல்லாம் நாம என்னதான் கத்தினாலும், பிடிக்க வேண்டியவர்களை பிடித்து காரியம் சாதிப்பார்கள்..இந்த சாதரண மக்கள் எங்கே போவர்கள்..என்ன நடைமுறை தெரியும்..வக்கீல் சொல்லவதெல்லாம் உண்மை என்று நம்புவர்கள்..நமது அமைப்பு அப்படி...

இந்த கோமதி அம்மாவின் பிடிப்பை நாம் கண்டிப்பாக நாம் பாராட்டியே ஆக வேண்டும்..அவர்களுக்கு எவ்வளவு பேர், அழுத்தம் கொடுத்திருப்பார ்கள் என்று நம்மால் ஓரளவு கணிக்க முடியும்.அதையும் தாண்டி இந்த வறுமையான சூழ்நிலையில்,நி லைத்து நிற்பது மிக பெரும் விஷயம்..எங்களின் வருத்தம் அவர் மகளின் சார்பாக..வாழ்த்துகள் அவர்களின் எண்ண துணிவிற்கு...

இந்த விஷயம் ஒரு பெண்ணின் தற்கொலை என்பது போக, இரண்டு விஷயங்களை நம்மை ஆழமாக சிந்திக்க வைக்கிறது..ஒன்று பெண்களை பற்றிய சமுக பார்வை..இரண்டு, பள்ளிகளின் பங்களிப்பு, தங்கள் மாணவர்களின் மீது ..
Quote
 
 
+7 #35 Kishore 2013-01-28 19:14
மனிதகுலம் இன்னல்களுக்கு உள்ளாகும் போது கடவுள் பல அவதாரங்கள் எடுத்து மனித குலத்தை காத்தார் என்று புராணங்களிலும், இதிகாசங்களிலும் படித்திருக்கிறோ ம். ஆனால், மனிதன் மூலம் சாமன்யர்களுக்கு சில செயல்களை செய்வார் என்பதை இன்று உங்கள் சேவையின் மூலம் நம்புகிறோம். சிரம் தாழ்ந்த வணக்கமும், வாழ்த்துக்களும் .
Quote
 
 
+6 #34 shareef 2013-01-28 19:14
super man savukku welldon
Quote
 
 
+11 #33 சரவணன் 2013-01-28 17:52
ஒரு பையனும் பெண்ணும் ரயில் நிலையத்தில் ஒன்றாக அமர்ந்து ரயிலுக்குக் காத்திருப்பதே குற்றம் என்று நினைப்பவர்கள்தா ன் ஆசிரியர்களாகவும ், தாளாளர்களாகவும் இருக்கிறார்கள் என்றால் இது எப்படிப்பட்ட சமூகம்? அந்தச் சிறுமிக்கும், மாணவருக்கும் சரியான கவுன்சலிங் வசதி அளிக்கப்பட்டிரு ந்தால் இந்தப் பரிதாப முடிவை எடுப்பதிலிருந்த ு காப்பாற்றியிருக ்கலாம். ஸ்னேகா போன்ற தற்கொலைத் தடுப்பு நிறுவனங்களின் உதவி எண்களைப் பள்ளிகளில் எழுதி வைக்க வேண்டும். மனநல ஆலோசகர்கள் மாணவர்களிட்டையே பேசவைத்து, தற்கொலை எந்தப் பிரச்சினைக்கும் சரியான தீர்வு அல்ல என்று உணர வைக்க வேண்டும். பள்ளிகளில் ஆலோசகர்கள் அமர்த்தப்படுவது கட்டாயமாக்கப்பட வேண்டும்.

சரவணன்
Quote
 
 
+16 #32 சீ.கோ.இராமதேவர் 2013-01-28 17:50
அந்த தாய்க்கு ஏதெனும் பண உதவி செய்யலாம் என நினைக்கிறேன்...

சவுக்கு அதற்கான ஏற்ப்பாட்டை இந்த தளத்தின் மூலம் செய்தால் எங்கள் சகோதரியாய் நினைத்து நாங்கள் உதவ தாயாராய் உள்ளோம்.

எதிரிக்கு தண்டனையை இந்த சட்டம் என்ன தந்துவிடும்...

பாவம் அந்த தாய்.. நாங்கள் உதவ தாயாராய் உள்ளோம்...சவுக்கு உத்விக்கான ஏற்ப்பாட்டை செய்யுங்கள்....
Quote
 
 
+14 #31 KarthikPrabakaran 2013-01-28 16:26
இப்படி கேவலமான ஐடி வைத்துக் கொண்டு சாட் செய்யும் ஈனப்புத்திகாரன் ஸ்கூல் நடத்தினால் இப்படித்தான் இருக்கும்.

அவன் சாட் செய்யும் படத்தைப் பார்த்தால் பள்ளி அலுவலகம் போலத் தெரிகிறது.
தனது மனம் போலத்தான் எண்ணமும் பேச்சும் செயலும் இருக்கும்.

இவனுடைய வக்கிரத்தின் வடிகாலுக்கும் முட்டாள் தனத்திற்கும் ஒரு இளம் பிஞ்சு கருகியதுதான் கொடுமை.
Quote
 
 
+10 #30 nallooraan 2013-01-28 16:21
நாஙகள் எல்லோரும் உன் பின்னால் இருக்கிரோம் சவுக்கு.. never never give it up.
Quote
 
 
+10 #29 Anbarasu 2013-01-28 16:14
We all are with you. Never give up.
Quote
 
 
+11 #28 saint 2013-01-28 16:12
Oh dear, what a wonderful and brilliant young girls life was curtailed by this criminal. Please do not leave this criminal walk on the street, there will be more such young lives he will trouble. Get him life term in jail or better get him death sentence for taking an innocent young girls life. If anybody associated with this court case want to write on my blog upliftthem and expose this nation wide, do write to me. I am saddened by this events, I could not grasp the fact that this is happening in our Tamil Nadu, where is this country going?, where is this TN going?, so many terrible things and the innocent people becomes victims. Thanks for posting this, Savukku must do everything to help this family get justice.
Quote
 
 
+8 #27 athu sari 2013-01-28 16:03
Dear savvuku,
I cried like hell. You are doing a great work. hats off. these people need to be punished at any cost. poor girl, what bad she did, except having high dreams. god is so mean..
Quote
 
 
+8 #26 சோழன் 2013-01-28 15:58
எது எப்படியோ!!!

சவுக்கு, நாமளும் ஒரு அளவுக்கு தான் போராட முடியும்! நம் வாழ்க்கை, நம் கடமைகள் என்றும் பாதி இருக்க வேண்டும்! மீதி தான் மக்கள் சேவை!!!

மனித இனத்தின் வரலாறு நெடுக போராட்டங்களும், துரோகங்களும், சுரண்டல்களும் தொடர்ந்த்து இருந்துகொண்டே தான் வந்துள்ளது!!!
நீங்க மக்களுக்காக என்னதான் போராடினாளும், அதே மக்கள் உங்களை நாளை குறை கூறியும், காட்டி கொடுத்தும், தூற்றுவார்கள்!! !

இது எல்லம் தாங்கள் அறிந்த்ததே!!! இருந்தும், சுய நலமும் வேண்டும் என்பது எங்களை போன்ற நலம் விரும்பிகளின் அவா!!!
Quote
 
 
+5 #25 சோழன் 2013-01-28 15:43
நல்லா போராடு சவுக்கு! நல்லா போராடு! நீ நாசமா போர வரைக்கும் போராடு!!!

எங்க சாதிய பத்தியோ இல்ல எங்க சாதில இருக்குற அயோக்கியனுங்கள பத்த்யோ மட்டும் பேசாதே! அப்போ உன்ன வந்து அசிங்க அசிங்கமா திட்டுவோம்!


போங்கடா வெண்ணைங்களா! மொதல்ல, படிச்சிட்டு பீல் பன்னி கமென்ட் போடுரத விட்டு, இங்க கூட சாதி சண்டை போடுறத நிறுத்துங்கடா!! ! மொதல்ல நாம திருந்த்தனும்!! ! அப்புறம் தான் மத்தவன பத்தி பேசனும்!!!
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 136 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday10603
mod_vvisit_counterYesterday14175
mod_vvisit_counterThis week67505
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month270237
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12792356