முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது... - கருணாநிதி அறிக்கை அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 16
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
வியாழக்கிழமை, 31 ஜனவரி 2013 00:22

2451624532_fd97d04530_o

வெளியே வந்து விட்டது பூனைக்குட்டி!

( கலைஞர் கடிதம் 30-1-2013 )

உடன்பிறப்பே,

கலைஞானி தம்பி கமல்ஹாசன் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள "விஸ்வரூபம்" திரைப்படத்திற்கு தமிழக அரசு விதித்துள்ள தடைதான் தமிழகத்திலே அனைவரது கவனத்தையும் ஈர்த்திட்ட பிரச்சினையாகும். 29-1-2013 அன்று மட்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதியரசர் திரு.கே.வெங்கட்ராமன் முன்னிலையில் ஆறு மணி நேரம் இதுபற்றிய வழக்கு விசாரணை நடைபெற்றுள்ளது. "விஸ்வரூபம்" திரைப்படம் தமிழகத்தில் ஜனவரி 25ஆம் தேதியன்று வெளியிடப்படுவதாக இருந்தது. இந்தத் திரைப்படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக ஒரு புகார் எழுந்தது. இதையடுத்து ஒரு இஸ்லாமிய அமைப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில், தமிழக அரசு "விஸ்வ ரூபம்" திரைப்படத்தை தமிழகத்திலே வெளியிட தடை பிறப்பித்தது. தடை உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் படத்தைத் தயாரித்த ராஜ்கமல் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு விசாரணைதான் ஆறு மணி நேரம் நடைபெற்றுள்ளது.

இஸ்லாமிய சமுதாயத்தின்பால் நானோ, தம்பி கமல் அவர்களோ, நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களோ எந்த அளவிற்கு பாசமும் பற்றும் மதிப்பும் மரியாதையும் உடையவர்கள் என்பதை இந்தப் பிரச்சினை எழுந்தவுடன் 26-1-2013 நான் விடுத்த அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தேன். அந்த அறிக்கையில் மேலும் உலகில் எந்தவொரு பகுதியிலும் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடைபெறும் விமர்சனங்களையோ, கிளர்ச்சிகளையோ, நானும் என் தலைமையில் உள்ள திராவிட முன்னேற்றக் கழகமும் என்றைக்கும் ஆதரித்தது இல்லை என்பதைக் குறிப்பிட்டதோடு,  "விஸ்வரூபம்" திரைப்படத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள சர்ச்சையை மேலும் நீட்டிக்காமல், ஜனநாயக ரீதியான பேச்சுவார்த்தை, கலந்தாலோசனை மூலமாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென்றும், சட்டம், ஒழுங்கு, அமைதியைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பிலே உள்ள தமிழக அரசும் அதற்கு ஒத்துழைத்திட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டிருந்தேன்.

சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் விடுத்த அறிக்கையிலும், இஸ்லாமியர்களுக்கு வேண்டு கோள் விடுத்து, இந்தத் திரைப்படத்தை வெளி யிட உறுதுணையாக இருக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். மேலும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ஜ.க. தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் இயக்கத் தலைவர் தொல்.திருமாவளவன், திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, பார்த்திபன், அமீர் போன்றவர்கள் விஸ்வரூபம் திரைப்படத்திற்கு அரசு விதித்துள்ள தடையை நீக்க வேண்டுமென்று அறிக்கைகள் வாயிலாகக் கேட்டுக் கொண்டனர். மேலும் அவர்கள் அறிக்கையில் கமல் எப்படிப் பட்டவர் என்பதையும், யாருடைய மனதையும் புண்படுத்தும்படியாக நடந்து கொள்ளாதவர் என்பதையும் எடுத்து எழுதினார்கள். நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் சுமூகமான தீர்வு ஏற்படுத்த முதலமைச்சர் கமலஹாசனை அழைத்துப் பேசவேண்டுமென்று அறிக்கை விட்டிருந்தார். இவ்வளவிற்கும் மேலாக, கலைஞானி கமல் அவர்களே விடுத்த அறிக்கையில் தான் இஸ்லாமியர்களுக்கு எதிரானவன் அல்ல என்றும், இந்தப்படமும் முஸ்லீம்களுக்கு எதிரானது அல்ல என்றும், முஸ்லீம்கள் தனக்கு சகோதரர்கள் என்றும் தெரிவித்திருந்தார். ஆனாலும் தமிழக அரசு தான் விதித்த தடையைத் திரும்பப் பெற முன்வரவில்லை.

தமிழக அரசு இந்த அளவிற்குக் கடுமையாக இந்தத் திரைப்படத்திற்கு தடை விதிப்பதற்கு என்ன காரணமோ தெரியவில்லை. ஆனால் ஒரு சாரார், இந்தத் திரைப்படத்தை அ.தி.மு.க.விற்கு மிகவும் வேண்டிய ஒரு தொலைக்காட்சி நிறுவனம் அடிமாட்டு விலைக்கு வாங்க முயன்றதாகவும், ஆனால் படத்தைத் தயாரித்தவர்கள் தாங்கள் 100 கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்து இந்தத் திரைப்படத்தைத் தயாரித்துள்ள நிலையில் குறைந்த விலைக்கு விற்க மறுத்து விட்டு, அதிகவிலைக்கு வேறொரு தொலைக்காட்சி நிறுவனத்திற்கு விற்று விட்டதுதான் காரணம் என்றும் சொல்கிறார்கள். அதைப் போலவே, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களைப் பற்றிய நூல் வெளியீட்டு விழாவில் கலைஞானி கமல் பேசும்போது, "வேட்டிக் கட்டிய ஒரு தமிழன், பிரதமராக வரவேண்டும்" என்று ப.சிதம்பரம் அவர்களைக் குறிப்பிட்டுப் பேசியதும் கோபத்திற்கு ஒரு காரணம் என்று கூறுகிறார்கள். ஆனால் இந்தக் கருத்துக்கள் எல்லாம் எந்த அளவிற்கு உண்மை என்று நமக்குத் தெரியவில்லை.

இந்த வழக்கினை விசாரிக்கும் உயர்நீதி மன்ற நீதிபதி அவர்களே, இந்தப் படத்தினை சிறப்புக் காட்சியின் மூலமாக நேரிலே பார்த்தார். அதன் பிறகு 28ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, உயர்நீதி மன்ற நீதிபதி அவர்களே, இரு தரப்பினரும் கலந்து பேசி ஒரு நல்ல முடிவினைக்காணலாம் என்று தெரிவித்தார். ஆனால் தமிழக அரசு அதற்கான முயற்சியிலும் ஈடுபடவில்லை.

29-1-2013 தேதிய  "இந்து" நாளிதழ் இந்தப் பிரச்சினை பற்றி ஒரு நீண்ட தலையங்கமே "Quash the Ban, Screen the Film"  அதாவது “தடையை நீக்கு, திரைப்படத்தை வெளியிடு” என்ற தலையங்கமே எழுதியுள்ளது. அதில் " The delay in overturning the unjustifiable ban on Kamal Haasan’s Vishwaroopam is beginning to appear every bit as unjustifiable. It was only two years ago that the Supreme Court set aside the two-month ban on the Hindi film Aarakshan on the ground that States cannot proscribe films that have been cleared by the Central Board of Film Certification on the mere apprehension that screening them may cause a law and order problem. As we pointed out recently, the landmark case that set the tone for such judgments was S.Rangarajan v/s P. Jagajivan Ram, where the Supreme Court held that “freedom of expression cannot be suppressed on account of threat of demonstrations and processions and threat of violence”. The ban on Vishwaroopam must be quashed and the police directed to provide adequate protection to threatres and moviegoers.”

(கமலஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்திற்கு விதிக்கப்பட்டிருக்கும் நியாயமில்லாத தடையை விலக்கிக் கொள்வதில் ஏற்பட்டு வரும் தாமதம் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாததாகும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் இந்திய உச்சநீதி மன்றம் "ஆரக்ஷன்" என்ற  இந்தித்திரைப்படத்திற்கு விதிக்கப்பட்டிருந்த இரண்டு மாதத் தடை உத்தரவை ரத்து செய்தது. அப்படி ரத்து செய்யும்போது மத்திய தணிக்கைக்குழு ஒரு திரைப்படத்திற்கு அனுமதி அளித்த பிறகு, அந்தப் படம் திரையிடப்படுவது சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் என்று நினைக்கக் கூடாது.

இந்திய உச்சநீதிமன்றம் மேலும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினையும் வழங்கியுள்ளது. எஸ்.ரெங்கராஜன் என்பவருக்கும் பி.ஜெகஜீவன் ராம் என்பவருக்கும் இடையே நடைபெற்ற ஒரு வழக்கில், உச்சநீதி மன்றம் "வன்முறைக்கு வழி வகுக்கும் ஆர்ப்பாட்டம், ஊர்வலம் என்பதற்காக பேச்சுரிமையை நசுக்கக் கூடாது" என்று தீர்ப்பு அளித்துள்ளது. விஸ்வரூபம் திரைப்படத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடை உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும். வெளியிடப்படும் திரையரங்குகளுக்கும், திரைப்பட ரசிகர்களுக்கும் தேவையான பாதுகாப்பைத் தர வேண்டும்) என்று "இந்து" ஏட்டில் தலையங்கத்திலே குறிப்பிட்டிருக்கிறார்கள்.

"இந்து" நாளிதழ் இவ்வாறு எழுதியதற்குப் பிறகும் தமிழக அரசு முன்வந்து தான் விதித்த தடையைத் திரும்பப் பெற்றிட முன் வந்ததா? முன் வந்திருந்தால்தான் மனித நேயமிக்க அரசாக அமைந்து விடுமே?

தமிழக அரசு முன் வராத காரணத்தால்தான் நேற்றையதினம் உயர் நீதி மன்றத்தில் ஆறு மணி நேரம் வழக்கு விசாரணை நடைபெற்றுள்ளது. அந்த வழக்கில் கமலுக்காக வாதாடியவர் யார் தெரியுமா? கழக ஆட்சியில் அட்வகேட் ஜெனரலாக திறம்படப் பணியாற்றிய மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தான்! அவர் நீதிமன்றத்தில், விஸ்வரூபம் திரைப்படம் இந்திய முஸ்லீம்கள் யாரையும் அவமானப் படுத்தவில்லை என்றும், தமிழகம் முழுவதும் 31 மாவட்ட கலெக்டர்களும் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துவிடும் என்று ஊகித்து ஒரே நேரத்தில் தடை உத்தரவு பிறப்பிக்க முடியுமா என்றும், இந்தத் திரைப்படத்திற்கு அனுமதி சான்றிதழ் வழங்கும் போது, தணிக்கைக் குழு உறுப்பினர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படவில்லை என்றும், தணிக்கைக் குழு அனுமதி வழங்கிய பிறகு, மாநில அரசு தடை விதிக்க முடியாது என்றும், இந்தப் படத்தில் தன் ஒட்டுமொத்த வாழ்க்கை சம்பாத்தியத்தையும் கமல்ஹாசன் முதலீடு செய்திருக்கிறார் என்றும் அடுக்கடுக்காக தன் வாதங்களை எடுத்து வைத்திருக்கிறார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதியரசர் வெங்கட்ராமன் அவர்கள் தனது தீர்ப்பினை இரவு 10.15 மணிக்குத் தான் அளித்துள்ளார். அதில் இந்தத் திரைப்படத்திற்கு அரசு விதித்திருந்த 144 தடையை நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்திருக்கிறார். ஆனால் இதற்குப் பிறகும் அ.தி.மு.க. அரசு மனம் இரங்கியதா? இல்லை, இரவோடு இரவாக நள்ளிரவில் 11.30 மணிக்கு தலைமை நீதிபதி பொறுப்பிலே உள்ள நீதியரசர் எலிப்பி தர்மாராவ் அவர்களின் வீட்டிற்கே சென்று, தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய மனு கொடுத்திருக்கிறார்கள். தலைமை நீதிபதி அதை ஏற்றுக் கொண்டு இன்று (30-1-2013) காலை 10.30 மணிக்கு அப்பீல் செய்ய அனுமதி வழங்கியிருக்கிறார். எந்த அளவிற்கு ஜனநாயகமும், மனிதாபிமானமும் இந்த அரசினரிடம் இருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேட வேண்டுமா என்ன?

ஏன் இப்படியெல்லாம் செய்கிறார்கள் என்று இன்றைய "டைம்ஸ் ஆப் இண்டியா" ஆங்கில நாளேடு செய்திக் கட்டுரை ஒன்றை "முஸ்லீம் வாக்கு வங்கியை ஈர்த்திடும் முயற்சியில் அ.தி.மு.க. ஈடுபட்டுள்ளதா?" என்று தலைப்பிட்டு வெளியிட்டிருக்கிறது. அதில், "முஸ்லீம்களையும் விஸ்வரூபம் திரைப்படத்திற்கு அவர்களுடைய ஆட்சேபணைகளையும் அ.தி.மு.க. அரசு ஆதரிப்பது; முஸ்லீம் வாக்கு வங்கியை ஈர்த்துக் கொள்வதற்காகவே என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். ஆனால் அதே நேரத்தில் "துப்பாக்கி" திரைப்படத்திற்கு ஆட்சேபணைகள் தெரிவிக்கப்பட்டபோது, முதலமைச்சர் ஜெயலலிதா உள்துறை செயலாளரிடம் இரு தரப்பினரையும் அழைத்து இந்தப் பிரச்சினையைத் தீர்த்துவைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதாகவும் முஸ்லீம் தலைவர் ஒருவர் தெரிவித்தார்" என்று எழுதப்பட்டுள்ளது.

"டைம்ஸ் ஆப் இந்தியா" எழுதியவாறு ஜெயலலிதா எப்படியாவது இஸ்லாமியர்களின் வாக்கு வங்கியைப் பெற முயற்சித்தாலும், அவருக்கு இஸ்லாமியர்கள்பால் எந்த அளவிற்கு உண்மையான பற்று உண்டு என்பதற்கு கரசேவை நடைபெற்றபோது அவர் எவ்வாறு முஸ்லீம்களுக்கு எதிராக இருந்தார் என்பதும், சிறுபான்மையினர், பெரும்பான்மையினரை அனுசரித்து நடந்துகொள்ள வேண்டுமென்று அறிக்கை விட்டவர் என்பதும், அயோத்தியில் ராமர் கோவில் கட்டாமல் வேறு எங்கே கட்டுவது என்று கேள்வி எழுப்பியவர் என்பதும், கரசேவைக்கு அ.தி.மு.க. சார்பில் ஆட்களை அனுப்பியவர் என்பதும் இன்னும் மறந்திருக்க முடியாத நிதர்சன உண்மைகளாகும்.

ஆனால் கமல் படத்திற்கு ஜெயலலிதா இந்த அளவிற்கு எதிர்ப்பினைக் காட்டுவதற்கு என்ன தான் காரணம்? இந்தப் பகை என்பது இப்போது ஏற்பட்ட தல்ல; அன்பு நண்பர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் உயிரோடு இருந்தபோதே ஏற்பட்ட பகையாகும். கமல் அவர்கள் நடித்த "விக்ரம்" திரைப்படத்தின் சிறப்புக் காட்சி ஒன்றில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்ட போது, அம்மையார் ஜெயலலிதா தன் கைப்பட எம்.ஜி.ஆருக்கு எழுதிய கடிதத்தில், "கமலஹாசனின் "விக்ரம்" படத்தின் நிதி சேர்க்கும் சிறப்புக் காட்சியில் நீங்கள் கலந்து கொள்ள சம்மதித்தும், உங்களை அவமானப் படுத்தும் விதத்தில் விளம்பரமே செய்யாமல் விட்டானே - அதை வேறு யாராவது உங்கள் கவனத்திற்குக் கொண்டுவந்தார்களா? "நமக் கென்ன" என்று மற்ற எல்லோரும் இருந்து விட்டார்கள். ஆனால் என்னால் அப்படியிருக்க முடியவில்லை. அடுத்த நாளே - கமலஹாசன் படம் ரிலீஸ் ஆன நாளன்று - ஒவ்வொரு நாளேட்டிலும் முழு பக்க விளம்பரங்கள் கொடுத்தானே? நீங்கள் பார்த்தீர்களோ இல்லையோ - நான் கவனித்தேன்.

தனக்காக விளம்பரம், முழு பக்க விளம்பரம் கொடுக்க மட்டும் கமலஹாசனுக்குத் தெரிகிறது -ஆனால் உங்களை, இவ்வளவு மக்கள் செல்வாக்குடைய முதலமைச்சரை அழைத்து விட்டு விளம்பரமே செய்யவில்லை என்றால் - அவன் உங்களைக் கிள்ளுக்கீரை என்றா நினைத்தான்?"" என்றெல்லாம் கைப்பட எழுதியதை நினைவுகூர்ந்தால்;

"விஸ்வரூபம்" திரைப்படத்திற்கு விதிக்கப் பட்டுள்ள தடைக்கான உண்மைக் காரணம் தெரிகிறதா அல்லவா? "பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது" என்று தந்தை பெரியார் அடிக்கடி கூறுவாரே; எதற்காக இந்தத் தடை என்பது இப்போது புரிகிறதா இல்லையா?

அன்புள்ள,

மு.க.

 

Comments  

 
+1 #12 sangatamizhan 2013-02-14 08:18
அய்யா கரு தயவு பன்னி சும்மா இருயா...ஓன் உட்ல இருக்கும் நாத்தத்தை சரி பன்னுயயா....
தி மு க ...பேர சொல்லி சுரன்டுனது போதும்டா சாமி ....டவுசரு அவுந்தாலும் ...அடஙகமாட்டீங்க... நீங்க....
Quote
 
 
+5 #11 jayapal 2013-02-07 11:21
இந்த ஆள் கொஞ்சம் வாயை மூடிக்கொண்டு இருந்தாலே போதும். வீட்லே அண்ணன் தம்பி சண்டையை மூட்டிவிட்டு வேடிக்கை பார்த்தது போதாதா.
Quote
 
 
+8 #10 பூனைக்குட்டி 2013-02-04 00:49
புனைகுட்டியோ பண்ணிகுட்டியோ ஐயா,
உங்கள் பிள்ளைகுட்டிகளு ம் பேரகுட்டிகளும் இந்த இமயம் போல் இருந்த தாய் தமிழ் நாட்டை சுரண்டி, கிரண்ட் கேன்யன் ஆக்கியது இன்னும் நினைவில் இருக்கிறது.
பெரியார் அண்ணா மற்றும் உங்களால் திராவிடத்தை உணர்த்த நங்கள் மாறவில்லை அனல் நீங்கள் மாறி விடீர்கள்.
இன்று பெரியாரும் அண்ணாவும் உயிரோடு இருந்தால் முதலில் கழகத்தை விட்டு நீக்கப்படுவது நீங்களும் உங்கள் குடும்பம்பமாக தான் இருக்கும். மன்னிக்கவும்
Quote
 
 
0 #9 kumaravelu 2013-02-03 13:03
ரொம்ப கொழப்புராஙக ஜனஙகல தாஙக முடியல சாமி படத்தை பொடுஙக்கப்பா
Quote
 
 
+5 #8 rajeesh 2013-02-02 14:01
ஒரு சிலர் எதோ பேச வேண்டும் என்று சொல்கிறீர்கள் விஜய் டிவி கு மிஞ்சி மிஞ்சி போனால் எவ்வளவு ஒரு இரண்டு கோடிக்கு விற்று இருப்பாரா,அப்பட ி வாங்கி அதில் அவர்கள் எவ்வளவு லாபாம் பார்ப்பார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம் ஒரு கோடி லாபம் என்று வைத்தால் கூட மொத்தம் 3 கோடி ,இந்த பணம் கூட இல்லமல்ல ஜெயா தொலைக்காட்சி நடக்கிறது என்னங்க பேசுறீங்க ,கனிமொழி அவர்கள் எனக்கும் கலைஞர் தொலைக்காட்சிக்க ும் எந்த தொடர்ம்பும் இல்லை வெறும் 20 சதவீத பங்கு மட்டும் தான் உள்ளது என்று சொன்னால் நம்புவீர்கள் அதே எந்த பங்கும் இல்லாமல் திரு ஜெயலலிதா அவர்கள் சொன்னால் நம்ப மடீர்களா என்ன கொடும இது
Quote
 
 
-6 #7 mutt 2013-02-01 22:21
After Mr. MK's statement Jaya came out and end the problem, so MK always great. I think Kamal may be asked MK's help. (vairamuthu always with Kamal during that day, which I saw in TV news...there may be some connections). MK is the one who can solve the problem amicably.
Quote
 
 
+8 #6 arunkumar.muthiah 2013-01-31 20:18
karunanidhi would have been waiting poonai eppa velila varum atha eppa 65 podalamnu
Quote
 
 
+5 #5 JOHN SELVARAJ, CHENN 2013-01-31 17:29
ஜெயா டிவியின் இணையதளத்திலேயே ஃபொஉன்டெட் ப்ய் : சிஎஃப் மினிச்டெர் ஜ் ஜெயலலித என்றும் ளௌன்ச் டடெ : ஆஉகுச்ட் 1999 ஸுன்டய் என்றும் உள்ளது. ஆனால் ஜெயா டிவிக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை என்று தமிழக முதல்வர் மறுக்கவேண்டிய அவசியம் என்னவோ?
Quote
 
 
+8 #4 JOHN SELVARAJ, CHENN 2013-01-31 15:00
தனிப்பட்ட பகையை திரைப்படத்தை வெளியிடும் விவகாரத்தில் காட்டுவது திரைத்துறையையே பாதித்துவிடும். மத்திய அரசின் திரைப்பட தணிக்கை துறை விஸ்வரூபம் படத்தை பார்த்து சான்றிதழ் கொடுத்துள்ளது. மற்ற மாநிலங்கள், வெளிநாட்டில் திரையிடப்பட்டுள ்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டும் தடை செய்யப்பட்டுள்ள து.தமிழக வரலாற்றில் கலெக்டர் அனைவரும் திரைப்படத்தை பார்க்காமலே, இப்படம் வெளியானால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என கூறி அனைத்து திரையரங்குகளுக் கும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளன ர். அப்படியானால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பதை முதல்வர் ஒத்துக் கொள்கிறாரா?
Quote
 
 
+23 #3 Agniputhiran 2013-01-31 11:10
இது அப்பட்டமாக ஜெயா டிவிக்காக முதல்வர் ஜெயாவால் அரங்கேற்றப்பட்ட திருவிளையாடல் என்பதில் சற்றும் ஐயமில்லை. அப்பாவி முஸ்லீம் மக்களைப் பகடைக்காயகப் பயன்படுத்தி உருட்டி விளையாடுகிறார்க ள். அரசு நினைத்திருந்தால ் எவ்விதமான தடங்கல்களும் இல்லாமல் படத்தைத் திரையிட்டு இருக்க முடியும். துப்பாக்கி திரைப்படத்திற்க ுப் பிரச்சினை வந்தபோது எவ்வளவு விரைவாகப் பிரச்சனை சுமூகமாக முடிக்கப்பட்டது . ஏன் அந்தச் சுறுசுறுப்பும் விறுவிறுப்பும் விஸ்வரூபத்தில் இல்லை. காரணம் துப்பாக்கி திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமை ஜெயா டிவி வசம்!
இந்து மற்றும் இஸ்லாம் போன்ற மதங்களின் நம்பிக்கை சடங்குகளைக் கேலி செய்யும் எண்ணற்ற படங்கள் வெளிவந்துவிட்டன . அப்போது எல்லாம் இல்லாத அளவு இப்போது இந்தப் படத்திற்கு மட்டும் ஏன் இவ்வளவு பெரிய சலசலப்பு? என்ன காரணம்? சிந்திக்க வேண்டிய விஷயம்.
இந்து முஸ்லீம் சகோரர்களின் ஒற்றுமையை ஒரு திரைப்படமா பிரித்துவிடும்? அவ்வளவு பலவீனமாகவா உள்ளது இந்து முஸ்லீம் ஒற்றுமை? இல்லவே இல்லை. வலுவான நல்ல ஒற்றுமை இருப்பதால்தான் மொழி, இனம், மதம் என்று பல வேறுபாடுகள் இருப்பினும் ‘இந்தியன்’ என்று நாம் பெருமைப்பட்டுக் கொள்கிறோம். அண்டை மாநிலங்களில் இதே திரைப்படம் ஓடும்போது தமிழ்நாட்டில் மட்டும் ஏன் திரையிட்டிருக்க முடியாது? சட்டம் ஒழுங்கு அவ்வளவு மோசமாகவா உள்ளது தமிழகத்தில்? கமலின் விஸ்வரூபம் திரைப்படத்திற்க ு மட்டும் ஏன் தடைக்கு மேல் தடை?
ஜெயா டிவிக்குக் கிடைக்காத சினிமாவை ஒருசில முஸ்லீம் அமைப்புகள் எதிர்க்க...சறுக்கியவனுக்கு இதுவே சாக்கு என்பது போல தமிழக முதல்வர் ஜெயா இதைக் கையில் எடுத்துக்கொண்டு சொந்த விருப்பு வெறுப்புகளை கருத்தில் கொண்டு பழிவாங்கி, பிரச்சனையைப் பெரிதுபடுத்திப் பெரிய அளவில் பேச வைத்துவிட்டார் என்றே படுகிறது. அதிகாரம் கையில் உள்ளது என்பதற்காக முதல்வர் ஜெயாவின் இந்த விஸ்வரூபத்தால், ஒரு நல்ல கலைஞரை அநியாயமாகக் கண்கலங்க வைத்த நிகழ்வு தமிழகத்தில் அரங்கேறியுள்ளது . அனைவருக்கும் மனவருத்தத்தை ஏற்படுத்திய இந்நிகழ்வு தனி ஒரு கலைஞனுக்கு மட்டும் ஏற்பட்ட அவமரியாதை இல்லை. ஒட்டுமொத்த தமிழகத்திற்கே ஏற்பட்ட அவமரியாதையாகும் .
Quote
 
 
+5 #2 santhosh2 2013-01-31 10:18
well done savukku!
Quote
 
 
+13 #1 Ravi 2013-01-31 03:08
இந்த ஆள் கொஞ்சம் வாயை மூடிக்கொண்டு இருந்தாலே போதும். வீட்லே அண்ணன் தம்பி சண்டையை மூட்டிவிட்டு வேடிக்கை பார்த்தது போதாதா.? இவர் அந்த அடஙகா பிடாரி ஜெவுக்கு கொஞ்சமும் சளைத்தவரில்லை. வந்துட்டாரு வயகியானம் சொல்ல...
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 51 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday3592
mod_vvisit_counterYesterday9391
mod_vvisit_counterThis week72148
mod_vvisit_counterLast week78861
mod_vvisit_counterThis month284967
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12807086