|

அரசியல் என்றாலே, பொய் புரட்டு, வஞ்சகம், சூது இவை எல்லாமும் அடக்கம். தமிழக அரசின் முன்னணித் தலைவர்களாக உள்ள கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இருவரும் இதற்கு சற்றும் விதிவிலக்கல்ல. ஆனால், கருணாநிதியைப் போல, சுவையாக, இலக்கிய ரசனையோடு, நயமாக பொய் சொல்ல ஜெயலலிதாவுக்குத் தெரியாது. அப்படிப்பட்ட ஒரு பொய்யுரைதான் ஜெயலலிதாவின் விஸ்வரூபம் குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு.
விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பாக, அதிசயமாக பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து ஒரு முழு விளக்கத்தை அளித்துள்ளார். ஆட்சிக்கு வந்த முதல் வாரத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், நான் வாராவாரம் பத்திரிக்கையாளர்களைச் சந்திப்பேன் என்றார். அதற்குப் பிறகு பல வாரங்கள் கடந்து விட்டன. ஜெயலலிதா எப்போதெல்லாம் டெல்லி அல்லது வேறு மாநிலங்களுக்கு விமானத்தில் செல்கிறாரோ, அல்லது முக்கிய பிரச்சினைகள் இருக்கின்றனவோ, அப்போதெல்லாம் பத்திரிக்கையாளர்களும், வடை சட்டியைப் போல இருக்கும் ஓ.பி.வேன்களும், போயஸ் தோட்டத்து வாசலில் காத்திருப்பது வழக்கம். ஆனால், அம்மாவின் வாகனம், ஒரு நிமிடம் கூட நிற்காமல் வேகமாக விரையும். எப்போதாவது. அம்மாவுக்கு மனம் இரங்கினால், காரின் கண்ணாடி இறக்கப்பட்டு, ஓரிரு நிமிடங்கள் பேசுவார். அந்த வகையில், விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பாக, தமிழக அரசின் நிலைப்பாட்டுக்கு விளக்கம் கொடுத்ததற்காக, தமிழக அரசுக்கு “கோட்டானு கோட்டி நன்றி ஆண்டவரே”
ஜெயலலிதாவின் விளக்கத்துக்கு வரிக்கு வரி பதிலை சவுக்கு அளிக்கிறது.
“கமல்ஹாசன் நடித்த ‘விஸ்வரூபம்’ திரைப்படம் தடை செய்யப்பட்டுள்ளதை சிலர் அரசியலாக்குகிறார்கள். தொலைக்காட்சி ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் பலவிதமான விமர்சனங்கள் எழுந்துள்ளன. படத்தில் உள்ள பிரச்னையை முழுமையாக புரிந்து கொள்ளாமல் சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர். இது தொடர்பாக விளக்கம் அளிப்பது அவசியம் என்று கருதுகிறேன். சட்டம் , ஒழுங்கை பராமரிப்பது அரசின் கடமையாகும்.”
கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் தடை செய்யப்பட்டுள்ளது அரசியலேயன்றி வேறு அல்ல. படத்தில் உள்ள பிரச்சினையை முழுமையாக புரிந்து கொள்ளாமல் யாரும் பிரச்சினை செய்யவில்லை. படத்தில் பிரச்சினையே இல்லை. திரைப்படங்களில் உள்ளவற்றையெல்லாம் ஒரு அரசு ஆராய்ந்து கொண்டிருந்தால், ஆட்சி நடத்த முடியாது. எது சட்டம் ஒழுங்கு பிரச்சினையை தூண்டுகிறதோ, எது மக்களுக்கு தீமை பயக்கிறதோ அதில் நீங்கள் உங்கள் கவனத்தை செலுத்தவேயில்லை. ராமதாஸ் என்ற ஒரு சமூக விரோதி, ஊர் ஊருக்குச் சென்று சாதிக்கலவரத்தை உருவாக்கும் வகையில் பேசி வருகிறார். அவருக்கு மதுரை மாவட்டத்தைத் தவிர வேறு எந்த இடத்திலும் நீங்கள் தடை விதிக்கவில்லை. ராமதாஸின் விஷம் கக்கும் பேச்சுக்களைத் தொடர்ந்து, சாதி மற்றும் காதல் அடிப்படையில் வட தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் ஐந்து கொலைகள் நடந்துள்ளன. ஆனால், நீங்கள் ராமதாஸை கட்டுப்படுத்தாமலும், தருமபுரி கலவரத்துக்கு காரணமானவர்களை இது வரை கைது செய்யாமலும் இருக்கிறீர்கள். ஆகையால் சட்டம் ஒழுங்கு என்று நீங்கள் பேசுவது, வெறும் நடிப்பும் நாடகமுமே.
தமிழகத்தில் 1 லட்சத்து 18 ஆயிரத்து 718 காவலர்கள் உள்ளனர். இவர்களில் பாதுகாப்பு பணி, உளவுப்பிரிவு பணி, முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு என பல்வேறு பணிகளில் ஈடுபடுபவர்கள் போக 87 ஆயிரத்து 226 பேர் மட்டுமே சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் மட்டும் 524 தியேட்டர்களில் விஸ்வரூபம் படம் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு தியேட்டருக்கு ஒரு ஷிப்டுக்கு 20 பேர் வீதம் மூன்று சிப்டுக்கு 60 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும். மேலும் 10 பேட்ரோல் வண்டிகளிலும் பாதுகாப்பு பணி மேற்கொள்ள வேண்டும். தியேட்டர்களுக்கு பாதுகாப்பு அளிக்க மட்டுமே 65,440 போலீசார் தேவை உள்ளது.
பாதுகாப்பு அளிக்க போதிய காவலர்கள் இல்லை என்று நீங்கள் சொல்வது நியாயமான காரணமே. பல்வேறு பணிகளில் காவல் துறையினர் ஈடுபடுத்தப்படுவதால், போதிய காவல்துறையினர் இல்லை என்கிறீர்கள். நியாயமான வாதமே. நீங்கள் போயஸ் தோட்டத்திலிருந்து தலைமைச் செயலகம் செல்லும் வழியெங்கும், கொளுத்தும் வெயிலில் எதற்காக காவலர்களை நிற்க வைக்கிறீர்கள். உண்மையிலேயே, காவல்துறையினரின் பற்றாக்குறையைப் பற்றிக் கவலைப்படும் நீங்கள், முதலில் சாலையில் நிற்க வைக்கப்படும் இந்தக் காவலர்களை அல்லவா வேறு பணிக்கு பயன்படுத்த வேண்டும் ?
ஒவ்வொரு தியேட்டருக்கும் 60 பேர், பேட்ரோல் வண்டிகள் ஆகியவற்றில் அனைத்து தியேட்டருக்கும் பாதுகாப்பு அளிக்க மட்டுமே 65,440 காவல்துறையினரின் தேவை இருக்கிறது என்கிறீர்கள். ஜெயலலிதா அவர்களே…. இஸ்லாமியர்கள் இத்திரைப்படத்துக்கு எதிராக வன்முறையில் எத்தனை தியேட்டர்களில் இறங்குவார்கள் ? அனைத்து தியேட்டர்களிலுமா ? அவர்களைக் கட்டுப்படுத்தவது என்ன அத்தனை கடினமா ? அனைத்து அமைப்புகளிலும், வன்முறைகளில் ஈடுபடுவது யார், யார் பிரச்சினை செய்வார்கள் என்ற விபரங்கள், உளவுத்துறை வசம் உள்ளது என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். வன்முறையில் ஈடுபடுபவர்களை கைது செய்து சிறையில் அடைத்தால், எத்தனை நாட்களுக்கு வன்முறையில் ஈடுபடுவார்கள் ? வன்முறையைத் தூண்டும் அமைப்புகளின் தலைவர்களை சிறையில் ஒரு வாரத்துக்கு அடைத்துப் பாருங்கள். யார் கலவரம் செய்கிறார்கள் என்று பார்ப்போம். இந்த எண்ணிக்கை கணக்கையெல்லாம், உங்களின் அமைச்சரவை அடிமைகள் கூட நம்பமாட்டார்கள்.
இப்படம் தொடர்பாக பல்வேறு முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்த 24 பிரிவினர் அரசிடம் மனு கொடுத்து அந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்றனர். இதற்காக ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தினர். படம் திரையிடப்பட்டால் வன்முறை ஏற்படும் என்று உளவுத்துறை மூலம் அறியப்பட்டது. இதன் காரணமாகவே கலவரம் ஏற்படாமல் தடுப்பதற்காக, முன்னெச்சரிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இப்பிரச்னையில் சில அரசியல் தலைவர்கள் தலையிட்டு தூண்டி விடுகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலமே வன்முறை போன்ற சம்பவங்களை தடுக்க முடியும் என்பதால் கலெக்டர்கள் மூலம் 144 பிரிவின் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நாட்டில் கலவரம் ஏற்படாமல் தடுப்பது என்பது அரசு எந்திரங்களின் கடமையாகும். அந்த கடமையைத்தான் அதிகாரிகள் மேற்கொண்டனர்.
இத்திரைப்படம் குறித்து மனு கொடுத்த பிறகு, ஆர்ப்பாட்டம் போராட்டம் நடந்தது என்று அம்புலிமாமா கதையெல்லாம் சொல்லாதீர்கள். இந்த மனு அளிக்கப்பட்ட பிறகு, கமல்ஹாசன் வீட்டுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது, இந்திய தேசிய லீக்கின் ஒரு பிரிவு. அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 18 பேர். அதில் 8 பேர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர். அன்று வந்திருந்த பத்திரிக்கையாளர்கள் மட்டும் 40 பேர். இந்த அமைப்பு மட்டும் தனியே ஆர்ப்பாட்டம் நடத்தியதற்கு காரணம், அந்த 24 கூட்டணியில் இந்த அமைப்பு இல்லை. இதைத்தவிர வேறு எந்த இடத்திலும் ஆர்ப்பாட்டம் நடைபெறவில்லை. இப்பிரச்சினையை சில அரசியல் தலைவர்கள் தூண்டி விடுகின்றனர் என்று சொல்வதே தவறு. தடை விதிக்கப்படும் வரை, இஸ்லாமிய அமைப்புக்களைத் தவிர வேறு எந்த அரசியல் தலைவரும் இது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலமே நாட்டில் கலவரங்களைத் தடுத்து நிறுத்தமுடியும் என்றால், தருமபுரி கலவரத்தை தடுக்கத் தவறிய காரணம் என்ன ? காதல் திருமணம் நடந்து ஒரு மாதத்துக்கு மேலாக, அந்தப் பகுதியில் பதற்றம் நிலவிய நிலையில், உங்கள் உளவுத்துறை என்ன செய்து கொண்டிருந்தது ? ஒரு திருமணமான இளம் காதல் ஜோடியை பிரிப்பதற்காக, அப்பகுதி வன்னியர்கள் கட்டப்பஞ்சாயத்து நடத்திக் கொண்டிருந்தபோது, உங்கள் காவல்துறை என்ன செய்து கொண்டிருந்தது. உங்கள் அதிகாரிகள் கடமையை சரிவர ஆற்றத் தவறியதால்தான், தருமபுரி கலவரமே நடந்தது. நீங்கள் முன்கூட்டியே கலவரங்களைத் தடுக்கும் லட்சணம் நன்றாகத் தெரியும். ஆகையால், உங்களின் இந்தப் பொய்கள் எடுபடாது.
தனியார் டி.வி.க்கு படத்தை விற்பதில் பிரச்னை என்றும் விமர்சனம் எழுந்தது. குறிப்பாக ஜெயா டி.வி.க்கு விற்பதில் பிரச்னை ஏற்பட்டதாக விமர்சிக்கப்பட்டது. ஜெயா டி.வி. என்பது அதிமுக ஆதரவு தொலைக்காட்சிதான். அந்த டி.வி.க்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதில் நான் பங்குதாரரும் இல்லை. ஜெயா தொலைக்காட்சி நிறுவனம் விஸ்வரூபம் படத்தை குறைந்த விலைக்கு கேட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும்.
நீங்கள் சொல்லியதிலேயே மிகப்பெரிய பொய் எது தெரியுமா ? உங்களுக்கும் ஜெயா டிவிக்கும் சம்பந்தம் இல்லை என்பதுதான். ஜெ.ஜெ.டிவி என்று தொடங்கப்பட்ட தொலைக்காட்சி சேனலில் முதல் அலுவலகம் எது என்று உங்களுக்குத் தெரியும். பலருக்குத் தெரியாது. ஜெ.ஜெ.டிவியின் முதல் அலுவலகம் இருந்த இடமே உங்கள் வீடுதான். தற்போது மினி தியேட்டராக மாற்றப்பட்டுள்ள இடத்தில்தான் ஜெயா டிவியின் அலுவலகம் இயங்கியது. 1996ல் அதிமுகவின் படுதோல்விக்குப் பின், ஜெஜெ டிவி நிறுத்தப்பட்டது. மீண்டும் சில காலம் கழித்து ஜெயா டிவி என்று தொடங்கப்பட்டது. 2006ம் ஆண்டு வரை, போயஸ் தோட்டத்தில்தான் ஜெயா டிவி இயங்கியது. தற்போது அது இயங்கி வரும் ஈக்காட்டுத்தாங்கல் கட்டிடமும் உங்கள் பெயரில்தான் உள்ளது.
1991-1996 ஆண்டு ஆட்சிக் காலத்தில், அப்போது சூப்பர் ஹிட்டான ஒரு மொக்கைத் திரைப்படம் நாட்டாமை. அந்த நாட்டாமை திரைப்படத்தை நீங்களும், உடன் பிறவா சகோதரியும் பார்க்க வேண்டும் என்பதற்காக, அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி அப்படத்தின் மாஸ்டர் கேசட்டை உங்களுக்கு கொடுத்தனுப்பினார். அந்தப் படம் ஒரு சில நாட்களில் எவ்வித வியாபார ஒப்பந்தமும் இல்லாமல் ஜெஜெ டிவியில் ஒளிபரப்பப்பட்டது. அப்படிப்பட்ட நேர்மையாளர் நீங்கள். விஸ்வரூபம் திரைப்படத்தை ஜெயா டிவிக்காக விலைபேசவில்லை என்று நீங்கள் சொல்வதை நம்புவதற்கில்லை. தனிப்பட்ட முறையில் திரைப்படம் பார்ப்பதற்காக வழங்கப்பட்ட ஒரு திரைப்படத்தின் மாஸ்டர் கேசட்டை ஜெயா டிவியில் ஒளிபரப்பிய நேர்மையாளர் நீங்கள். ஜெயா டிவிக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்வதற்கு நீங்கள் வெட்கப்பட வேண்டும்.
ஜெயா டிவியின் தொழில் ரீதியான பெயர், மேவிஸ் சேட்காம் ப்ரைவேட் லிமிட்டெட். இதன் பதிவு முகவரி, 79, போயஸ் தோட்டம், சென்னை 79. இதன் நிர்வாக இயக்குநராக இருப்பவர், பிரபா சிவக்குமார். இந்த பிரபா சிவக்குமார் என்பவர் யார் ? இவர் சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மகள். இவர்தான் மேவிஸ் சாட்காமின் பங்குகளை வைத்துள்ளார். டிசம்பர் 2011ல் சசிகலா போயஸ் தோட்டத்திலிருந்து தற்காலிகமாக வெளியேற்றப்படும் வரை, ஜெயா டிவியின் அனைத்து நிர்வாகங்களையும் கவனித்து வந்தது, அனுராதா. இவர் சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மற்றொரு மகள். இவர் இவரது அக்காள் மகன் டிடிவி.தினகரனை திருமணம் செய்துள்ளார். இந்த அனுராதாதான் டிசம்பர் 2011 வரை, ஜெயா டிவியின் மேலாண் இயக்குநராக இருந்தார். இவரன்றி, ஜெயா டிவியில் ஒரு அணுவும் அசையாது. தற்போது தற்காலிகமாக இவர் வெளியேறி இருக்கிறார். வெகு விரைவில், இவர் மீண்டும் ஜெயா டிவியின் அதிகார மையத்திற்கு வரவிருக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அனுராதா வெளியேறினாலும், பிரபா சிவக்குமார் பெயரில் உள்ள ஜெயா டிவியின் பங்குகள் இந்நாள் வரை வேறு யார் பெயருக்கும் மாற்றப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயா டிவியின் மேலாண் இயக்குநர் பிரபா சிவக்குமார் தொடர்ந்த வழக்கில், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு
சசிகலா உங்கள் உடன்பிறவா சகோதரி என்பதை நாடே அறியும். சவுக்கு சொல்ல வேண்டியதில்லை. அப்படி இருக்கையில் சசிகலாவின் அண்ணன் மகள் பெயரில் இருக்கும் ஜெயா டிவிக்கும் உங்களுக்கும் எப்படித் தொடர்பில்லை என்று சொல்கிறீர்கள்…. ? நீங்கள் சொல்வது உங்களுக்கே சிரிப்பை வரவழைக்கவில்லையா ? அடுத்து சசிகலாவுக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லப்போகிறீர்களா ?
ஜெயா டிவி என்பது, அதிமுக ஆதரவு தொலைக்காட்சி என்கிறீர்கள். சன் டிவி கூட சில ஆண்டுகள் முன்பு வரை, திமுக ஆதரவு தொலைக்காட்சியாகத்தான் இருந்தது. ஆனால் சன் டிவி ஒரு நாளும் கருணாநிதியின் அறிக்கையை அரைப்புள்ளி, காற்புள்ளி கூட விடாமல் படித்ததில்லை. ஆனால் ஜெயா டிவி மட்டும் ஏன் இப்படி உங்கள் அறிக்கைகளைப் படிக்க வேண்டும் ? ஒரு தனியார் நடத்தும் ஒரு சேனல், எதற்காக எவ்வித லாபநோக்கமுமின்றி, உங்களின் மொக்கை அறிக்கைகளை 24 மணி நேரமும் படிக்க வேண்டும் ? மேலும், சசிகலாவின் அண்ணன் மகள்கள் அனுராதாவோ, பிரபா சிவக்குமாரோ, பரம்பரைப் பணக்காரர்களோ, செல்வச் சீமாட்டிகளோ அல்ல. ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்கள்தான். எவ்வித முதலீடும் இல்லாமல், அவர்கள் எப்படி ஜெயா டிவியை தொடங்க முடியும் ? அப்படியே தொடங்கினார்கள் என்று வைத்துக் கொண்டாலும், எவ்வித லாபமும் இல்லாமலேயே ஜெயா ப்ளஸ், ஜெயா மேக்ஸ், என்று எப்படி வளர்ந்து கொண்டே போக முடியும் ?
1991-1996 ஆட்சிக் காலத்தில், டான்சி நிலத்தையும், பல சொத்துக்களையும், லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் வீச்சு தெரியாமல் நீங்களும் உங்கள் உடன் பிறவா சகோதரியும் வாங்கிக் குவித்தீர்கள். அதன் தாக்கம், உங்கள் மீது பதிவு செய்யப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில் தெரிய வந்ததால், உங்கள் பெயரில் எந்த முதலீட்டையும் நீங்கள் செய்வதில்லை. சசிகலாவும், இளவரசியும், உங்கள் பினாமிகளாக இருப்பதாலேயே, அவர்கள் இருவரும் சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டார்கள். டிடிவி தினகரன், உங்கள் வீட்டில் வசித்த காரணத்தாலேயே, அவர் லண்டனில் வாங்கிய ஹாப்ஸ்க்ராப்ட் ஹில் என்ற ஹோட்டலுக்காக, நீங்கள் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டீர்கள் என்பதை மறந்து விட்டீர்களா ?
இப்போதும் எனக்கும் ஜெயா டிவிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று சாதிக்கிறீர்களா ? இதற்கு பதில் சொல்லுங்கள். ஜெயா டிவியின் மேலாண் இயக்குநராகவும், பங்குதாரராகவும் இருக்கும், பிரபா சிவக்குமார், உங்களோடே உங்களின் இல்லமான, வேதா நிலையம், 36, போயஸ் தோட்டத்தில் வசிக்கிறாரே…. ஏன் ? வீட்டை வாடகைக்கு விட்டிருக்கிறீர்களா ? அந்த அளவுக்கா வறுமையில் இருக்கிறீர்கள் ?

உங்களின் அம்புலிமாமா கதையையெல்லாம், வேறு யாரிடமாவது சென்று கூறுங்கள்.
“மேலும் கமல்ஹாசனுக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தனிப்பட்ட பகையும் எங்கள் இருவருக்கும் இல்லை. கமல் பற்றி எம்.ஜி.ஆருக்கு நான் கடிதம் எழுதியதாக கூறியுள்ளனர். கடிதம் எழுதும் நிலை எனக்கு வரவில்லை. காரணம் அப்போது நான் அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் என்பதால், தி.நகரில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு அப்போது நாள்தோறும் செல்வேன். எம்.ஜி.ஆருடன் அமர்ந்து உணவு உண்ணுவேன். கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் கொடுக்கும் கடிதங்களை படிப்பேன். அவற்றின் மீது தேவையான நடவடிக்கைகள் எடுப்பேன். இப்படி நாள்தோறும் சந்தித்து பேசும் நிலையில் உள்ள நான், எம்.ஜி.ஆருக்கு கடிதம் எழுத வேண்டிய தேவையும் இல்லை. அப்படிப்பட்ட நிலையும் எனக்கு வரவில்லை. கருணாநிதி அறிக்கைக்கு எதிராக அவதூறு வழக்கு தொடருவேன். அதை பிரசுரித்த பத்திரிகைகள் மீதும் சட்டரீதியாக வழக்கு தொடருவேன்.”
எம்.ஜி.ஆர் உங்களை எப்படி நடத்தினார், எந்த நிலையில் வைத்திருந்தார் என்பதையெல்லாம் எழுத விரும்பவில்லை. அந்தச் செய்திகள் வெளிவந்து விடக் கூடாது என்ற காரணத்தாலேயே, வாசந்தி எழுதிய உங்களின் சரிதையை வெளியிட விடாமல் நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெற்றீர்கள். எம்ஜிஆருக்கு நான் கடிதம் எழுதவேயில்லை, வழக்கு தொடருவேன் என்று நீங்கள் கூறியதற்கு கருணாநிதி, வழக்கு தொடருங்கள், ஆதாரத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கிறேன் என்று கூறிவிட்டார். பொதுக்கூட்டத்தில் உங்கள் ஆட்சியை யாராவது குறை கூறினால், மைக் செட்டை கழற்றுவதற்குள் அவதூறு வழக்கு தொடரும் நீங்கள், இது வரை ஏன் மவுனம் காக்கிறீர்கள் ஜெயலலிதா ? ஆர்.எம்.வீரப்பனை அடக்குவதற்காகவே உங்களை கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆக்கினார் எம்ஜிஆர். உங்களின் அரசியல் அறிவால் அல்ல என்பதை மற்றவர்கள் அறியமாட்டார்கள். நீங்கள் அறிவீர்கள்தானே ? அப்படி இருக்கையில் எம்.ஜி.ஆரிடம் நீங்கள் அனைத்து விஷயங்களையும் விவாதித்தீர்கள் என்று சொல்வதும் நம்பவது போல இல்லை. ஒரு விஷயத்தை மறந்து விடுகிறீர்கள் ஜெயலலிதா. 1996ம் ஆண்டு உங்கள் வீடு லஞ்ச ஒழிப்புத் துறையால் சோதனையிடப்பட்டபோது, நீங்கள் நுழைந்தது முதல் எழுதிய அனைத்துக் கடிதங்களையும் பல கோப்புகளாக வைத்திருந்தீர்கள் தெரியுமா ? அதன் அத்தனை நகல்களும் உளவுத்துறை வசம் சென்றது. அந்த நகல்களை கருணாநிதி பத்திரமாக வைத்திருக்கிறார். அவரிடம் மோதுவதற்கு முன் கவனமாக மோதுங்கள்.
“24 முஸ்லிம் அமைப்புகள் சேர்ந்து ‘விஸ்வரூபம்’ படத்துக்கு தடை கேட்டு தலைமை செயலரிடம் மனு கொடுத்தனர். அந்த மனு உள்துறை செயலருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு பிறகு இரு தரப்பினரும் படத்தை பார்க்கும் வகையில் திரையிட வேண்டும் என்று கேட்கப்பட்டது. அதற்கு கமல்ஹாசன் ஒத்துழைக்கவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் சட்டம் , ஒழுங்கை பாதுகாத்து வன்முறையை தடுக்கும் வகையில் படத்துக்கு தடை விதிக்க முடிவு செய்தோம்.”
முஸ்லீம் அமைப்புகளின் பிரதிநிதிகள் விஸ்வரூபம் திரைப்படத்தை பார்த்த பிறகுதான் படத்துக்கு தடை கோரினார்கள். அதற்குப் பிறகுதான் உள்துறைச் செயலாளரை சந்தித்து மனு அளித்தார்கள். இரு தரப்பினரும் பார்க்கும் வகையில் படத்தை கமல்ஹாசன் திரையிடவேண்டும் என்றால், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு முஸ்லீமுக்கும் போட்டுக் காட்ட வேண்டும். அதற்கு முடிவே கிடையாது. படத்துக்கு தடை கேட்டு முஸ்லீம் அமைப்புகள் உங்களிடம் வந்தால், ஒரு முதலமைச்சராக நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும் ? அந்தத் திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கு தொடருங்கள் என்றல்லவா அறிவுரை வழங்கியிருக்க வேண்டும் ? உடனே திரைப்படத்தை தடை செய்து விடுவீர்களா ?
அனைத்து இஸ்லாமிய அமைப்புகளின் நீண்ட நாள் கோரிக்கை, மதுக்கடைகளையும், மதுக்கூடங்களையும் மூட வேண்டும் என்பது. இதே 24 முஸ்லீம் அமைப்புகள் ஒன்றாக வந்து, மதுக்கடைகளை மூட வேண்டும் என்று மனு அளித்தால் மூடி விடுவீர்களா ? சட்டம் ஒழுங்கு கெட்டு விடும், என்று அடிக்கடி கூறும் உங்களுக்கு, மதுக்கடைகளால்தான், சட்டம் ஒழுங்குக்கு சீர்கேடு ஏற்படுகிறது என்பது தெரியாதா ? மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதால் எத்தனை விபத்துக்கள் ஏற்படுகின்றன என்பது தெரியுமா தெரியாதா ? பாலியல் வன்முறைகள், சிறு தகராறுகள், பெரிய சண்டைகள், கொலைகள், போன்ற பல குற்றங்களுக்கு மது ஒரு காரணம் என்பது உங்களுக்குத் தெரியாதா ? இத்தனைக் குற்றங்களுக்கு காரணமான நீங்கள் மதுக்கடைகளை ஏன் மூட மறுக்கிறீர்கள் ? மதுக்கடைகளை மூடினால், விபத்துக்களும் குறையும், குற்றங்களும் குறையுமே… அது பற்றி ஏன் வாய்த்திறக்க மாட்டேன்கிறீர்கள் ஜெயலலிதா அவர்களே ?
“ஆனால், ஒரு விழாவில் கமல் பேசும்போது, ‘வேட்டி கட்டிய தமிழர் ஒருவர் பிரதமராக வர வேண்டும் என்று பேசியதாகவும், அதனால்தான் இந்த படத்துக்கு தடை விதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. அது சரியல்ல. கமல் பேசியது அவரது கருத்து. நான் 30 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். கமலுக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை. கமல்ஹாசனால் சொல்லப்படுபவர்கள் ஒன்றும் பிரதமராகிவிடப் போவதில்லை.”
கமலுக்கும் உங்களுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லாவிட்டால் எதற்காக கமலை இந்தப் பாடு படுத்துகிறீர்கள் ஜெயலலிதா ? விஸ்வரூபம் பிரச்சினையில், உங்கள் அரசு தலையிடாமல் இருந்திருந்தால், கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் ஓடுவது போன்றே படம் அமைதியாக ஓடியிருக்குமே… 30 ஆண்டுகள் அல்ல… 300 ஆண்டுகள் நீங்கள் அரசியலில் இருந்தாலும், அரசியலையும் கற்றுக் கொள்ள மாட்டீர்கள். கமல்ஹாசனால் சொல்லப்படுபவர்கள் பிரதமராவார்கள் என்று அவரும் சொல்லவில்லையே… வேட்டி கட்டிய தமிழன் பிரதமராக வேண்டும் என்று சொன்னார். அது அவரது விருப்பம். கமல்ஹாசன் சொல்லும் நபர்கள் பிரதமர் ஆவதில்லை என்பதே, அந்த கமலின் அந்த வார்த்தை உங்களை எவ்வளவு உறுத்தியிருக்கிறது என்பதை தெரிவிக்கிறது.
“விஸ்வரூபம் படத்தை தடை செய்வது குறித்த தனிப்பட்ட எண்ணம் எதுவும் அரசுக்கு கிடையாது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், வன்முறையை தடுக்கவுமே இப்படத்துக்கு தடை விதிக்க முடிவு செய்தோம். 1955 தமிழ்நாடு சினிமா ஒழுங்குமுறை சட்டம் பிரிவு 7,ன் படி ஒரு படத்தை தடை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், அதை கையாளவில்லை. 144 சட்ட பிரிவின்கீழ் மட்டுமே தடை விதிக்கப்பட்டது. இப்போது இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் கட்டத்துக்கு வந்துள்ளோம்.”
விஸ்வரூபம் படத்தை தடை செய்வது குறித்து தனிப்பட்ட எண்ணம் இல்லாவிட்டால், தடை செய்வதற்கு முன், ஏன் கமல்ஹாசனை அழைத்துப் பேசவில்லை. கமல்ஹாசனை அழைத்து, உங்கள் படத்தின் மீது இஸ்லாமிய அமைப்புகள் புகார் கூறியுள்ளன. இது குறித்து அரசு முடிவெடுக்க உள்ளது என்று உங்கள் உள்துறைச் செயலாளர் பேசுவதற்கு எவ்வளவு நேரம் ஆகியிருக்கும் ? 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்படும் முன்னரே, எப்படி முதல் நாள் இரவு ஊடகங்களுக்கு “இரண்டு வாரங்களுக்குத் தடை” என்ற செய்தி வெளியானது ? வன்முறையை தடுக்க நடவடிக்கை எடுத்த உங்கள் அரசு, புதனன்று, சென்னையில் 15 தியேட்டர்கள் மீது தாக்குதலும், ராமநாதபுரத்தில் இரண்டு தியேட்டர்கள் மீது பெட்ரோல் குண்டுகளும் வீசப்பட்டதை தடுக்கத் தவறியது ஏன் ?
படத்தை தடை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று சொல்வது உங்கள் அறியாமையைக் காட்டுகிறது. அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி, திரைப்படங்களை தணிக்கை செய்யவும், தடை செய்யவும், மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. நீங்கள் குறிப்பிடும் தமிழ்நாடு சினிமா ஒழுங்குமுறை சட்டம் பிரிவு 7, அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. இது வரை யாரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்காத காரணத்தாலேயே, அது உயிரோடு இருக்கிறது. அப்படியே நீங்கள் குறிப்பிடும்படி அதிகாரம் இருந்தால், எதற்காக, 144 தடைச்சட்டம் ? அதுவும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள், தாங்களாகவே ஆராய்ந்து, இப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று சட்டம் தெளிவாகக் கூறியும், தலைமைச் செயலகத்திலிருந்து வந்த உத்தரவை பின்பற்றச் சொல்லும் கொல்லைப்புற வழி ஏன் ?
“கமல் தனது எல்லா சொத்துகளையும் வைத்து ரூ.106 கோடி செலவிட்டு படத்தை தயாரித்ததாகவும், இப்படம் ஓடாவிட்டால், அவர் எல்லா சொத்தையும் இழந்து விடுவார் என்றும் கூறுகிறார்கள். அவர் தனது பொறுப்புடன் திட்டமிட்டு செயல்படவேண்டும். இவர் செய்யும் செயலுக்கெல்லாம் அரசு எப்படி பொறுப்பாகும். இப்போதெல்லாம் எனக்கு சினிமாவில் ஆர்வம் கிடையாது. படம் பார்க்கவும் எனக்கு நேரம் கிடையாது. அந்த படத்தில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதும் எனக்கு தெரியாது.”
அன்பார்ந்த ஜெயலலிதா அவர்களே… உங்கள் வாழ்க்கையில் பல சம்பவங்களை வசதியாக மறந்து விடுகிறீர்கள். நீங்கள் திரைப்படத்துறையில் இருந்தபோது, மிக நெருக்கடியான ஒரு காலகட்டத்தில், சென்னையிலிருந்து பெங்களுர் செல்ல, பணமில்லாமல் அவதிப்பட்டபோது, ஒரு தயாரிப்பாளர் தன் வீட்டை அடமானம் வைத்து உங்களுக்கு உதவினார். பின்னாளில் நீங்கள் முதல்வரான பிறகு, அவரை உங்கள் உடன்பிறவா சகோதரியின் பேச்சைக் கேட்டு விரட்டியடித்தீர்கள். நீங்களும் பண நெருக்கடியைச் சந்தித்திருக்கிறீர்கள் என்பதை மறந்து விடுகிறீர்கள். இன்று உங்களிடம் ஆட்சியும் அதிகாரமும் இருக்கிறது என்பதற்காக, ஒருவரின் வாழ்க்கையை அழிக்கலாம் என்று நினைப்பது, மனிதாபிமானமற்ற செயல். கமல்ஹாசனுக்கு 58 வயதாகிறது… அவர் ஏன் அப்படி ஒரு ரிஸ்க் எடுக்க வேண்டும் என்பது அவருடைய முடிவு. இப்படி ஒரு நெருக்கடி உருவாகியிருப்பதே, உங்களது அடாவடியான முடிவால் என்பதை ஒப்புக்கொள்ளாமல், ஏதோ இந்த முடிவுக்கும், உங்களுக்கும் சம்பந்தமே இல்லாதது போலப் பேசுகிறீர்கள். உங்களை யாரும் விஸ்வரூபம் பார்க்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தவில்லை.
“இந்த படம் தமிழகத்தில் மட்டும் தடை செய்யவில்லை, அரபு நாடான கத்தாரில், சிங்கப்பூரில், ஸ்ரீலங்காவில், மலேசியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. கர்நாடகம், ஆந்திரம், கேரளம்,புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலும் படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு கலவரங்கள் நடந்துள்ளது.”
அரபு நாடான கத்தாரிடல் இப்படம் தடை செய்யப்படலாம். ஒரு ஜனநாயக நாடான இந்தியாவில் ஏன் என்பதுதான் இப்போது விவாதப்பொருளே…. சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளிலெல்லாம் தடை என்பதே, தமிழக அரசு விதித்த அடாவடியான தடைக்குப் பிறகுதான். மலேசியா சிங்கப்பூரில் தடை விதிக்கப்பட்டதால், நீங்கள் செய்த அடாவடித்தனம் நியாயமாகிவிடாது.
 “நடிகர் கமல்ஹாசன் மற்றும் எதிர்ப்பு தெரிவித்த முஸ்லிம் அமைப்புகள் அவர்களுக்குள் பேசி சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்குவது குறித்தும், சமரச தீர்வு மேற்கொள்வதற்கும் இரு தரப்பினரும் ஒரு மனதாக ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு விஸ்வரூபம் படத்தை ரிலீஸ் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளுக்கு அரசு ஒத்துழைப்பு கொடுக்கும். கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரத்துக்கு நான் தடையாக இருந்ததில்லை.”
நடிகர் கமல்ஹாசன் மற்றும் எதிர்ப்புத் தெரிவித்த முஸ்லீம் அமைப்புகள் பேசி, சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்குவது குறித்துப் பேச வேண்டும் என்றால், இந்த ஆலோசனையை தடை செய்வதற்கு முன்பல்லவா நீங்கள் செய்திருக்க வேண்டும் ? இஸ்லாமிய அமைப்புகள் உங்களிடம் அளித்த மனுவைப் பாருங்கள். ஒட்டு மொத்த படத்தையும் அல்லவா தடை செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள்…. ? ஒட்டு மொத்த படத்தையும் தடை செய்ய வேண்டும் என்று சொல்பவர்களிடம் என்ன பேச முடியும் ?
உங்களுக்குள் இவ்வளவு நகைச்சுவை உணர்வு ஒளிந்திருக்கும் என்பதை யாருமே நம்ப முடியாது ஜெயலலிதா அவர்களே… “கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரத்துக்கு நான் தடையாக இருந்ததில்லை” வைகோவையும், நெடுமாறனையும் கேட்டால் கதை கதையாகச் சொல்வார்கள்… நீங்கள் ஒரு கருத்துச் சுதந்திரக் காவலர் என்பதை தஞ்சாவூர் கல்வெட்டில் பொறிப்பதற்கு, கழக அரசே ஏற்பாடு செய்யலாம்.
இத்தனை நாட்களாக இல்லாமல், இந்த விஸ்வரூபம் படம் தொடர்பாக, நீங்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தியது, தேசிய ஊடகங்களில் உங்கள் அரசை நாலாபுறமும் விமர்சிக்கிறார்கள் என்ற ஒரே காரணத்தினால்தான். வேறு வழியில்லாமலேயே, இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தினீர்கள். ஆனால், இந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பு, கமல்ஹாசனை மிரட்ட பயன்படுமே ஒழிய, உங்கள் மீது மக்கள் வைத்துள்ள கருத்தை மாற்ற உதவாது.
|
Comments
இதை படித்த போது " கலைஞர் செய்திகள் தொலைகாட்சி " பார்த்த உணர்வு.------------
திமுக ஆட்சில இருந்த அப்போ எல்லாம் சவுக்க படிச்சி இருந்தா ஜெயா டிவி பாக்குற உணர்வு ஏற்பட்டு இருக்கும் உங்களுக்கு! ஆனால் ஜெயா டிவி கருனானிதி டிவி அளவுக்கு கேவலமா இல்லை இங்கு செய்திகள் எல்லாம்.
கண்ணை திறந்து நன்றாக புரிந்து படிக்கவும்!!!
[ஃஉஒடெ நமெ="ஸதிஷ் க்"]எங்களயும் முட்டாள்கள் என்று நினைத்துவிட்டீர ்களா நீங்கள்????. ஈ ஃபுல்ல்ய் அக்ரே கொவெர்ன்மென்ட்'ச் ச்டன்ட் ஒன் திச் இச்சுஎ. ஈட் ஜுச்ட் அ ஃபீள்ம், யொஉ மெடிஅ பெஒப்லெ மடெ இட் இச் அச் அ பிக்கெச்ட் இச்சுஎ ஒஃப் திச் சொஉன்ட்ர்ய்.[/ஃஉஒடெ]
Sathish K--- Government suspended TASMAC employee for not achieving target. You keep on support the government. Water crisis Govt has not done a press meet you continue to support govt. Compared to development only cases have registered against common man but you continue your support to govt. SAVUKKU the best media.
He ditched so many Producers, Ladies & colleagues people now he pays for that
If u do not the history of Kamal it shows ur ignorance
நாட்டுல எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கு. அத விட்டு நம்ம எல்லாருமே இத ஒரு பிரச்சனையா பேசுறது ரொம்ப கேவலம். கருத்து சுதந்திரம் பாதிக்கப்பட்டது உண்மை தான். நம்ம கருத்து சுதந்திரம் இப்போ தான் முதல் முறையா பாதிக்கப்படுதா? அது காலமாகி 30-40 வருஷம் ஆச்சு.
இஸ்லாம் மதத்தை நான் ரொம்பவே மதிக்கிறேன். இங்க ஒரு நண்பர் சொன்ன மாதிரி, நம்ம இஸ்லாம் சகோதரர்களுக்கு தீவிரவாதிகள் மேல தான் கோவம் வரணும். இதுக சும்மா அரசியல் லாபம் பாக்குரானுக.
சுத்தி சுத்தி எந்த மாநிலமும் தண்ணி தர மாட்டிங்கிறான்.சுத்தி எல்லா நாடும் பகையா இருக்கு.விலைவாசி, பெட்ரோல் விலை ஏறிக்கிட்டே இருக்கு.கள்ள நோட்டு புழங்குது. கோடி, ஆயிரம் கோடி எல்லாம் போயி இப்போ லட்சம் கோடி அமுக்குறாங்க பிக்காளி பயலுக. அத எதித்து போராட்டம் பண்ண வேண்டியது தானே.
அடுத்து எப்பவாது பாகிஸ்தான் பன்னிக குண்டு வைக்கட்டும் அப்போ இந்த 24 அமைப்பும் எங்க போகுதுன்னு பாப்போம்.
எத்தன படத்துல கீதை மேல சத்தியம் பண்ணிட்டு பொய் சொல்ற மாதிரி காட்டுராணுக. அப்போ எந்த ஹிந்துவும் இப்படி ஒரு அசாதாரண சூழலை உண்டாக்கலையே.
எல்லாத்துக்கும் மேல இந்தம்மா... சுப்ரீம் கோர்ட் தண்ணி திறந்து விட சொல்ல முடியாது, நீங்க பிரதமர பாருங்கன்னு சொல்லி 10 நாள் ஆகுது. இன்னும் ஒரு மண்ணும் புடுங்கல, ராத்திரி 10 மணிக்கு தடை விலக்குன தீர்ப்ப எதித்து 11 மணிக்கு மனு தாக்கல் செய்யுது. தஞ்சாவூர்ல அம்புட்டு பேரு தற்கொலை பண்ணிகிறானே அதுக்கு ஒரு பிரஸ்மீட் வைக்கல. இந்த வீணாப்போன பிரச்னைக்கு தன்னிலை விளக்கம். வெளங்கிரும்.
இன்னொரு பக்கம் ஒரு கிழட்டு கபோதி எப்படா ஏதாவது நடக்கும் நம்ம பண்ணுன காவலிதனத்த மறைச்சு வோட்டு வாங்கலாமுனு அலையுது.
இஸ்லாம் அல்லாத மத்த மதமெல்லாம் எதோ ஒரு வகையான மத கலவரத்த பேச்சு/எழுத்து மூலமா நடத்துராணுக. டேய்.. திருந்துங்கடா. போய் புள்ள குட்டிகள படிக்க வைங்க. இந்த படம் ஊத்திக்கிட்டா நீ ஒன்னும் உன் சொத்த கமலுக்கு எழுதி குடுக்க போறதில்ல. பெரிய அளவுல ஹிட் ஆனா கமல் ஒன்னும் உனக்கு பங்கு குடுக்க போறதில்ல.
ஒடம்புல நாக்க தவற மரத்துப்போன தமிழா, இத இதோட விட்டுட்டு போய் பொழப்ப பாரு.
If someone choose to create a movie about the current situation in Syria, should all of the charectors be athiests?
Just so you know according to the reports 60000 muslims were murdered on the hands of other muslims during this conflict.
சவுக்கு அவர்களே, ஜெயலலிதா அவர்கள் தன்னைப் பின்னி உள்ள வஞ்சக வலையை உணராமல் இருக்கிறார். இஸ்லாமியர்களின் ஓட்டைப் பெற இது நல்ல வழி என்று நினைக்கிறார். கடைசியில் நாமம் தான் அவருக்குக் கிடைக்கப் போகிறது. முஸ்லீம்களுக்கு நாட்டுப் பற்று உண்டு. ஆனால் அந்த நாடு இந்தியா அல்ல. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் அரேபியா. உண்மையைச் சொன்னால் வேஷம் கலைந்து விடுவே என்பதற்காகத்தான ் அவர்கள் இப்படிப் பதறுகிறார்கள்......////
RSS matrum Hindutva sakthigalin thodar precharathinal indha sagodarar ippadi eludhi ullar...sangap parivaarangalin edenum oru amaipil ivar irukkalaam...Indha INdiyavil valum Endha Islamiyanum ivvaru ninaipadillai...Aanal pala hindu sagodarargal ivvaru ninaithukondiru kkiraargal...thayavu seidu indha ninaipai maatri kollungal..kamalin visvaroopam mattume Islamiyargalai theeviravaathig alai sitharippadilla i peyar solla kooda mudiyaadha, idhu pol comment eludhum pala sagodarargal thirundha veendum endru IRAIVANAI pirarthikkirein ...Jaffer
ஒ ! உங்களுக்கு ஜால்ரா அடிப்பது தான் கருத்து சுதந்திரமோ? உங்களுக்கே முரண்பாடு தோணவில்லை ? உங்களது சாயம் வெளுக்கும் நாள் தூரம் இல்லை .
பதினோரு (11) பதிவுகளை எடுத்துக்கொண்டு ஏறத்தாள இரண்டாயிரம் (2000) வார்த்தைகளை பயன் படுத்தி உங்கள் கருத்தை சவுக்கு இணையதளத்தில் பதிவு செய்ய அனுமதித்தவர் நடுநிலயானவர் அல்ல என்பதை உணர்த்தியதற்கு நன்றி.
Mr/Mrs/Ms Porali,
Thanks for prooving that the person who allowed you to take 11 comment sections containg almost 2000 words to publish your opinion in this site is not a centrist.
இங்க அரசியல் பண்ணியாக வேண்டிய கட்டாயத்தில் எல்லோரும் இருக்கிறார்கள்.. அவரவர் அரசியல் செய்யாமல் நீதிக்கும் நேர்மைக்கும் கட்டுப்பட்டால் அன்றய அண்ணா, காமராசர் போலவும் இன்றய சிலர் போலவும் காலம்பூராவும் அலய வேண்டியதுதான்...
சந்ததிகள் பாவமாகிவிடும்....
ஒரு குழுவுக்கும் ,இவருக்கும் இருந்த பிரச்னையை மிக புத்திசாலிதனமாக அரசியால் ஆகி விட்டார்,உண்மைய ில் திரு ரஜினிகாந்த் அவர்களை விட அரசியலுக்கு சிறந்தவர் திரு கமல் அவர்கள் தான்
1.முதலில் தடை விதித்தது உள்துறை செயலாளர் ,திரு கமல் அவர்கள் வெளிநாட்டில் இருந்து வந்தவுடன் நேரிடையாக அவரை சென்று விளக்கம் கொடுத்து இருக்கலாமே அப்பொழுதும் நியாயம் கிடைக்கவில்லை என்றால் நீதி மன்றம் சென்று இருக்கலாமே.
2.எந்த சமரசத்திற்கும் ஒத்து வரமாட்டேன் ,எந்த காட்சியையும் நீக்க மாட்டேன் என்று சொன்னவர் திடீர் என்று சில காட்சிகள் நீக்க ஒத்து கொண்ண்டது ஏன்,இதை முதலிலே செய்து இருந்தால் இவ்வளவு பிரச்சனை வந்து இருக்காதே
3. என் பொருள் என் அங்காடி நான் யாருக்கு வேண்டும் என்றாலும் விற்பேன் என்று சொன்னவர் இறுதியில் ரசிகர்களை தூண்டிவிட்டு அனுதாபம் தேட வேண்டிய காரணம் என்ன
4.ஒரு நடிகருக்கே இவ்வளவு ஈகோ இருக்கும் போது ஒரு மாநிலத்தை ஆளும் முதல்வர் ஈகோ பார்ப்பதில் தவறில்லை இவருக்கு பிரச்சனை தீர வேண்டும் என்றால் இவர் தான் போய் பார்த்து இருக்க வேண்டும் அவர் கூப்பிட்டு வாங்க பேசலாம் என்று முதல்வர் எப்படி சொல்வார்
5. இந்த படம் வெளிவரவில்லை என்றால் எனக்கு 95 கோடி நஷ்டம் ,வீடை எழுதி கொடுத்துள்ளேன் என்று சொன்னாரே ,தமிழ்நாட்டை தவிர மற்ற இடத்தில படம் வந்து ஓடி கொண்டு தானே இருக்கிறது ,படத்தின் மொத்த புட்கெட் 95 கோடி என்று கூறினார் ,அப்படி என்றால் வெளிநாட்டில் ,மற்ற மாநிலங்களில் எல்லாம் படத்தை இலவசமாக கொடுத்தாரா.
எனக்கு திரு கமல் அவர்கள் மீது கோபமோ இல்லை எனக்கு அவரி பிடிகாதோ என்று அர்த்தம் அல்ல ,ஒரு சிறந்த நடிகராக அவரை பிடிக்கும் ,அதே போல் அரசியலுக்கு வர மாட்டேன் என்று வெளிபடையாக சொன்னவர் ,அப்படி பட்டவர் தன சுயனதிர்க்காக தன சொந்த விஷயத்தை அரசியல் ஆக்கியது மிக மிக தவறு.
அப்படி ஒரு உணர்ச்சிவசப்பட் ட பேட்டி தேவை இல்லாதது ,அது ரசிகர்களை தூண்டவே அந்த பேட்டி,உண்மையில ் அந்த பேட்டிக்கு பிறகு திரு கமல் அவர்கள் மேல் இருந்த மதிப்பு குறைந்துவிட்டது
சில வாரங்களாக ஊடகங்கள், திண்ணைகள், சந்திக்கும் நண்பர்கள், ஸ்கைப்பில் பேசிக்கொள்ளும் நண்பர் உறவினர்கள் என்று அனைத்து இடங்களிலும் பேசு பொருளாகியிருப்ப து கமலஹாசனின் "விஸ்வரூபம்" படம் தடைக்குள்ளானது பற்றிய செய்தியே.
இங்கு படம் தடைசெய்யப்படுவத ற்கு அரசியல் காரணமாக இருக்கலாம், மதம் சம்பந்தமான மனவேதனை இருக்கலாம். வேறு தனிப்பட்ட காழ்ப்புணர்வுகள ும் இருக்கலாம்.
படம் முற்றுமுழுதாக ஓடமுடியாமல் தடுக்கப்பட்டால் அதுகம் பாதிப்புக்குள்ள ாகப்போவது கமலஹாசன் என்ற ஒரு நடிகரும் அவருடன் இணைந்து பங்காற்றி முதலீடு செய்த இன்னும் சிலரும். ஆனால் அப்படி எதுவும் நடைபெறப்போவதில் லை. எப்படியும் படம் திரைக்கு வரும்.
தயாரிப்பாளர், நடிகர், இயகியவர், பிரபலமானவராக இருப்பதால் படம் தடைசெய்யப்பட்டு விட்டதால் அந்தப்படம் அப்படியே அமுங்கி இல்லாமல்ப்போய்வ ிடும் என்று எந்த தரப்பினரும் நினைத்திருக்க முடியாது. எப்படியும் எதிர்த்து போராடி திரும்பவும் படத்தை திரையிடவே முயற்சிகள் நடக்கும், (திரையிடப்படும் ) என்பது தடுத்தவர்களுக்க ும் தெரியும் தடையை வாங்கியவர்களுக் கும் தெரியும்.
இறுதியில் இதில் பெரும் பலனடைந்தவராக எவரும் இருக்கமுடியாது. பலன் இல்லாமலும் எவரும் இருக்கமுடியாது. அனைவரும் தமது நிலையில் சாதித்து தமது குறிக்கோளில் ஓரளவு வெற்றிகண்டுவிட் டதாகவே உணருவர். ஈற்றில் அனைத்தும் மறக்கப்பட்டுவிட ும். நாளை இரு துருவங்களும் ஓரிடத்தில் சங்கமிக்கலாம்!
கமலஹாசன், தமிழ்நாடு அரசி*, முசுலிம் அமைப்புக்கள், கருணாநிதி, திரையுலக ஆதரவாளர்கள். ரசிகர்கள். என்று ஒரு சுற்றுவட்டம் களத்தில் நிற்கிறது.
விசுவரூபமாக உலகநாயகர் ஒருபுறமும் இன்னொருபுறம் விசுவரூபமாக தமிழ்நாடு அரசியும் நின்றுகொண்டிருக ்கின்றனர்.
இங்கு அதிக மகிழ்ச்சிக்குள் ளாகி இருப்பது வேட்டிகட்டியவர் தான். பொறியை தட்டிவிட்டுவிட் டு அடுத்த பொறிக்காக காத்திருக்கிறார ்.
உலகநாயகன் அதிக உயரமாக சென்டிமென்டாக விதை, மரம், அஞ்ஞானவாசம், ஓட்டாண்டி, மரணம். புரட்சி என்று எடுத்துவிட்டு விசுவரூபமாக காட்டமுனைந்து காற்றுப்போனவராக ஆகிவிட்டிருக்கி றார். பாவம் என்று எண்ணத்தோன்றுகிற து.
அம்மா சட்டம், ஒழுங்கு, நீதி, ஞாயம், கடமை என்று எடுத்துவிட்டும் காற்று போய்விட்டது.(சவுக்கின் பதில்கள் புரியாதவருக்கும ் புரிய வைத்து அப்படியா" என்று சிந்திக்க வைத்திருக்கிறது .
உலகநாயகன் சமூகத்துக்கு எவ்வளவு ""அதி முக்கியமானவர்""?? என்பது புரிபவர்களுக்கு புரியும். அரசியின் அவசரம் ஆத்திரம் எப்படிப்பட்டது என்பதும் நாடறியும். நசுக்கிடாமல் பொறி உருவாக காரணமாக களத்தை அமைத்தவர்பற்றி எவரும் சிந்திக்கவில்லை .
புத்தக வெளியீடு ஒன்று இல்லாமல் இருந்தால் படம் தமிழ்நாட்டில் வசூல் இல்லாவிட்டாலும் இன்றைக்கு ஓடிக்கொண்டேயிரு க்கும்.
நீ இங்க இருக்க வேண்டிய ஆளே இல்ல... அண்டார்டிகாவில் இருக்க வேண்டிய ஆள்...
revathimoorthy
உங்கள் பின்னூட்டத்தை தொடர்ந்து படிப்பவன் நான். அவசரபட்டு சவுக்கு நடுநிலை தவறிவிட்டது என நீங்கள் சொல்வதை ஒப்புக்கொள்ள முடியவில்லை. எதிர்க்கட்சிகள் எதுவும் சரியாக தன்னுடைய கடமையை செய்யவில்லை அல்லது அவர்களும் ஜெ போலவே இருக்கிறார்கள். அதே போன்று பத்திரிக்கைகளும ் வருமானத்திற்காக தொடர்ந்து அடக்கியே வாசிக்கின்றது.
இவர்கள் சட்டத்தை ஏமாற்றவே இந்த பினாமிகளை பயன்படுத்துகிறா ர்கள். ஜெ யின் பிரஸ் மீட்டை இன்னொரு முறை பாருங்கள். பிரதானமாக ஜெயா டிவி மைக் மட்டுமே அங்குள்ளது. இது ஒன்றும் அவரின் கட்சி சம்மந்தப்பட்ட நிகழ்ச்சி கிடையாது. தலைமை செயலகத்தில் ஒரு முதல்வராக கொடுக்கும் பேட்டி. இவருக்கு தொடர்பில்லாத டிவிக்கு எதற்கு இவர் மார்க்கெட்டிங் செய்கிறார்?. நியாயப்படி இந்த செயலே தவறானது. முட்டையை சோற்றில் மறைக்கலாம். முழு பூசணிக்காயை பூசணிக்காய் மறைப்பது உங்களுக்கு தெரியவில்லையா?
இழப்பதற்கு என்ன இருக்கிறது என்று ஒரு கட்டுரையில் சவுக்கு சொன்னது எனக்கு நினைவுக்கு வருகிறது. எவ்வளவோ கொடுமைகளையும் கஷ்டங்களையும் ஆளும் கட்சியாக இருந்த திமுக சவுக்கிற்கு செய்திருப்பதை முந்தைய சவுக்கு பதிவுகளிலிருந்த ு நீங்கள் தெரிந்துகொள்ளலா ம். அதனால் திமுகவை ஆதரித்து எழுத வேண்டிய தேவை கிடையாது.
ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டவே கருணாவை சவுக்கு பயன்படுத்திக்கொ ள்கிறது என நினைக்கிறேன். அதுமட்டுமின்றி சவுக்கு தளம் உயர் பதவியிலிருக்கும ் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் நீதிதுறையை சேர்ந்த அனைவரும் தவறாமல் படிக்கிறார்கள். சவுக்கில் ஒரு செய்திவந்தால் அது ஏற்படுத்தும் தாக்கம் எதுமாதிரி என தெரிந்த அரசு உயரதிகாரிகளிடம் கேளூங்கள்.
சவுக்கு தளத்தின் செய்திகள் நெருப்புபோல் இருப்பதால் வரும் பிரச்சனைதான் உங்களுடையது. பட்டும் படாமல் எழுத இது ஒன்றும் அரசு விளம்பரத்தை நம்பி நடத்தப்படும் தளம் கிடையாது என உன்களுக்கும் தெரியும்.
போராளியின் பெயரில் இருக்கும் நீங்கள் முடிந்த மட்டும் சவுக்கு என்ற போராளியை ஊக்கப்படுத்துங் கள். நன்றி.
http://www.techsatish.net/2013/02/blog-post_82.html
Why sankar wants to tune this matter JJ vs Kamal instead of muslim vs kamal, how much money transfered???????? intha polapukku.thoo...
That doesnt wash the sins committed by Jaya. And what does these poeple try to say. TAMIL NADU MUSLIMS are law unto themselves and the govt is incompetent to take them to task?
Hyderabad is full of muslims and arrogant muslims and who never bother to behead hindus in riots. There the film is running without any ban.
Kerala muslims too are very fanatic. In Malapuram it runs without trouble.
Im told in Singapore also it is not banned. JAYA only says so.
May beOne more lie.
When one is a die hard liar what harm in adding one more.
[She lied that the signature was not hers. She lied that she didnt promise that the power problem will be solved in 3 months. Now I have nothing to do with the tv.]
So except TAMIL NADU muslims all other state muslims seem to have no issue with this movie except making some murmurs.
How do they drive their strength to oppose any thing on the basis of religious freedom.
Is it not true that only an incompetent, clueless, moron governance can permit such nonsense to happen in its soil?
I voted for her not that she is going to bring the best govt.I wanted to keep that one eyed jackal out of power.Period.
Don't tell her this . She will tell my one vote has not brought her to power.
I never ever think or tell anyone that she is the best administrator like CHO who seems to be infatuated with her and rajini and always in praise of them without any proof to substantiate.
She is Pombilai Karunanidhi. Karunanidhi Ambilai Jaya with some mild variations in both. Period.
http://www.techsatish.net/2013/02/blog-post_1109.html
savukku sankar, nakkeeran and karuna wants to tune this matter against JJ and Kamal becuase they fear about muslims. this issue is muslim Vs Kamal. karuna we can very much understand, what is Sankar benefit????????????miilion dollar questions.
Savukku, Keep up the Great Work
This is utter nonsense... I am in Singapore and this movie is already a blockbuster here....
போதாதகுறைக்கு தில்லி ஊடகங்கள் அனைத்தும் கிழி கிழி என கிழித்து தொங்க விட்டுவிட்டார்க ள். இத்தனை கோடிகள் செலவு செய்துவிட்டு இப்படியா அறிவில்லாமல் நடந்துகொள்வார்க ள்.
ஒன்றுமட்டும் உண்மை. இனிமேல் ஆட்சியாளர்கள் தம்மிடம் பவர் இருக்கிறதென பவர்ஸ்டார் போன்ற நடிகர்களிடம் கூட வாலாட்டமுடியாது . வாலறுந்த பட்டமாகிவிடுவார ்கள். அதுதான் உண்மை.
ஜெ - வின் செயல்களை பார்த்தால் "முட்டாள் அரசு தொடர் கட்டுரைகள்" இனி சரவணன் மீனாட்சி தொடர்போல் தொடர்ந்து கொண்டேயிருக்கும ் போல் தெரிகிறது.
ஒரு சின்ன வருத்தம்... இந்த கனிமொழி, இராசா போன்ற கோமாளிகளோடு குஷ்பூ போன்ற திராவிட சின்னங்களையெல்ல ாம் நம் மக்கள் எம்.பியாக்க வேண்டியிருக்கும ். அதற்கும் இந்த ஜெ-தான் பொறுப்பு.
எல்லாவற்றையும் விட கொடுமை...சினிமா என்றாலே என்னவென்று தெரியாத இந்த முரட்டு மந்தைகளுக்கு சினிமா பற்றி கமல் பாடம் எடுத்துக்கொண்டி ருப்பதுதான்.
இஸ்லாமியரை பெருமைபடுத்தவே இந்த படம் எடுக்கப்பட்டுள் ளது.
இதில் தீவிரவாதிகள் இஸ்லாம் என்ற புனிதமான மதத்தையும் திருகுரான் என்ற ஈடு இணையில்லா புனிதநூலையும் எவ்வாறு தவறாக பயன்படுத்துகிறா ர்கள் என்பதை சித்தரிக்கும் காட்சிகளே உள்ளது...
நம் இஸ்லாம் நண்பர்களை புண்படுத்தும் காட்சிகள் அதில் இல்லை...
அந்த காட்சிகளை பார்க்கும் போது உண்மையான முஸ்லீகளுக்கு கட்டாயம் கோபம் வரும்... அது அந்த தீவிரவாதிகளின் மீது வரவேண்டும்... உங்களின் புனிதத்தை கெடுப்பது அவர்கள்... பாபர் மசூதி இடிக்கப்பட்ட சமயம் இந்தியா -வில் அப்போது இருந்த 10 கோடி முஸ்லீம்கள் வருத்தப்பட்டார் கள் என்றால் அதே நேரத்தில் 50 கோடி இந்துக்கள் அதைவிட அதிகம் வருத்தப்பட்டார் கள், எதிர்த்தார்கள்.
.படம் வரட்டும். அதில் தவறு இருந்தால் முஸ்லீமை விட மாற்று மத சகோதரர்கள் அதிதீவிரமாக எதிர்ப்பார்கள்.
பக்குவப்பட்ட ஒரு முஸ்லீம் நண்பரின் குரல்....
இந்த தளம் எனக்கு புதிது! கடந்த ஓரிரு நாட்களாய், பதிவுகளைப் படித்தும், இணையத் தேடல்களின் மூலமும் சவுக்கின் 'தள புராணத்தை' ஓரளவு புரிந்து கொள்ள முயன்று வருகிறேன்! உண்மையிலேயே இணையற்ற முயற்சி! வாழ்த்துக்களுடன ் நன்றியும் கூட :)
நாடு கடந்து வாழத் தொடங்கியிருந்தா லும், தமிழகத்தில் நடப்பவற்றை அறிந்தும் புரிந்தும் கொள்வதோடு, விவாதிக்கவும் முடிகிறது, சவுக்கின் பணியால்! அதுவும் அங்கங்கு தென்படும் எள்ளலும் நகைச்சுவையும் தொடர்ந்து படிக்க ஊக்குகின்றன.
வரலாற்றையும், அரசியலையும் புரிந்து கொள்ளமுடியாமல் போய்விட்டால், சமூக பொறுப்புள்ளவர்க ளாக நாம் வளரவும் முடியாது...பின்னர் நம் பிள்ளைகளை வளர்க்கவும் முடியாது! இன்றைய அரசியல் நிகழ்வுகளை தெரிந்து கொள்ள, இதைவிட நடுநிலையான வேறு தளம் எனக்கு தெரியவில்லை. தொடர்ந்து எழுதுங்கள்...
ஹா ஹா .. அட்ரா சக்க.. இதன் பொருள் என்ன?
அமைதியை போதிக்கும் இசுலாமியர்கள்
மிக பயங்கரமான கலகத்தைதமிழ்நாட்டில் ஏற்படுத்துவார்க ள் என்பதல்லவா?ஒரே கல்லில் ஒன்பது மாங்காய்கள் அடித்த கருணாநிதி பற்றி எழுதிய சவுக்கு, இந்த விவகாரத்தில் மொத்தம் எத்தனை மாங்காய்கள் குறிவைக்கப்பட்ட ுள்ளன என்று விரிவாக எழுதினால் நன்றாக இருக்கும்...
"கூடா நட்பு கேடாய் முடியும்" என்பதை இனிமேலும் கமல் மற்றும் ரஜினி புரிந்துகொண்டால ் சரி. கமல் மற்றும் ரஜினிக்கு கால்கட்டு அவசியம். இது நடுநிலை பத்திரிக்கைகளுக ்கும் பொருந்தும்.
ரஜினி, கமலை வைத்து அரசியல் செய்வதை ஜெயலலிதா விரும்ப வில்லை. அதனால்தான் இம்முறை ஆட்சிக்கு வந்த பின்னர் ஒரு முறை கூட சினிமா விழாக்களில் பங்கேற்பதை தவிர்த்தார். ரஜினி கமல் கூட தாங்களாகத்தான் ஜெயாவை சந்தித்துள்ளார் கள். ஆனால் முக திருந்தியதாக தெரியவில்லை. ரஜினியும் கமலும் கூட முக விசயத்தில் திருந்தியதாக தெரியவில்லை. அப்படியே போனாலும் என்ன பேசவேண்டுமோ அதை லாவகமாக பேசி விட்டு வரவேண்டும். இதனால்தான் அஜித் விஜய் இதுமாதிரி மேடைகளையும் விழாக்களையும் புறக்கணிக்கின்ற ன. ரஜினி கமலுக்கு மட்டும் என்ன வந்தது. ஒன்று நேரிடை அரசியலுக்கு வரணும், இல்லை என்றால் பொத்திகிட்டு இருக்கனும். சும்மா மேடை கிடைப்பதற்காக கண்டதை உளறி வைப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஜெயா உங்களின் ரசிகர் வாக்குகளை நம்பி இல்லை. உங்களை ஒரு நடிகராகத்தான் பார்க்கிறார். ஆனால் முக மோசமானவர். கூட இருந்தே உங்கள் கழுத்தை அறுத்து விடுவார். உங்களை கூட்டிகிட்டு திரிவதே உங்கள் ரசிகர்களின் வாக்குகளுக்காகத ான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
RSS feed for comments to this post