|
கடந்த இரண்டு வார காலமாக, தமிழகத்தில் நீடித்து வந்த சர்ச்சை ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பாக, இஸ்லாமியர்கள் தரப்புக்கும், கமல்ஹாசன் தரப்புக்கும் தமிழக அரசு நடத்திய கட்டப்பஞ்சாயத்தின் மூலம் ஏற்பட்ட உடன்பாட்டின் காரணமாக, போராட்டங்களை விலக்கிக் கொள்வதாக இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்துள்ளன. கமல் தரப்பு 7 காட்சிகளில் ஒலியை நீக்குவது, குறைப்பது உள்ளிட்ட சமரசங்களுக்கு ஒப்புக் கொண்டதால், இன்று (03.02.2013) மதியம், அனைத்து மாவட்டங்களிலும் பிறப்பிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டது.
 காட்சியை நீக்குவதாக கமல் ஒப்புக் கொண்டதோடு நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும் என்ற ஒப்பந்தம், கமலின் கையை முறுக்கி கையெழுத்திட வைத்திருப்பதாகவே தோன்றுகிறது. மராட்டிய மாநிலம் தொடர்பாகவோ, மராட்டியர்கள் தொடர்பாகவோ, திரைப்படத்தில் கிண்டலாகவோ, கேலியாகவோ ஏதாவது காட்சிகள் வந்தால், அப்படம் வெளியாகும் தியேட்டர்களை சிவசேனை குண்டர்கள் அடித்து நொறுக்குவதும் பின்பு சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள், பால் தாக்கரேவின் காலில் விழுந்து, தங்கள் திரைப்படத்தை காப்பாற்றிக் கொள்வது போன்றதொரு காட்சி தமிழகத்திலும் அரங்கேறியிருக்கிறது.
இத்திரைப்படம் இஸ்லாத்தையும், இஸ்லாமியர்களையும் இழிவு படுத்துகிறது என்று தமிழக இஸ்லாமிய அமைப்புகள் கொதித்தெழுந்தன. இங்கு இஸ்லாமிய அமைப்புகள் என்று குறிப்பிடுவது, அந்த அமைப்புகளின் தலைவர்கள் மட்டுமே. தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள், இறை நம்பிக்கையோடு, உழைத்து தங்கள் வாழ்வை நடத்தி வருகிறார்கள். ஆனால், இஸ்லாமிய அமைப்புகள் என்று இஸ்லாமிய மக்களின் பெயரால் பிழைப்பு நடத்தி வரும் அமைப்புகள் மட்டுமே, ஒரு திரைப்படத்தில் ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான் தீவிரவாதிகளை தீவிரவாதிகளாகக் காட்டியதால் இஸ்லாத்தே இழிவுபடுத்தப்பட்டு விட்டது என்று கூக்குரலிட்டு, இத்தனை களேபரங்களுக்கும் காரணமாக இருந்திருக்கிறார்கள்.

ஆயிரக்கணக்கான ஆண்டு பழமை வாய்ந்த ஒரு மதம், பல கோடி மனிதர்களால் பின்பற்றப்பட்டு, வளர்க்கப்பட்டு வரும் ஒரு மதம், ஒரே ஒரு திரைப்படத்தால் இழிவு படுத்தப்படும் என்று பிரச்சினை செய்யும் இந்த மதவாதிகள், உண்மையிலேயே, இஸ்லாமை அறிந்திருக்கிறார்களா என்ற சந்தேகமே ஏற்படுகிறது. எத்தனையோ நெருக்கடிகளையும், போர்களையும் தாண்டியும் இன்று இஸ்லாத் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. ஒரு திரைப்படமா இஸ்லாத்தை இழிவுபடுத்தி விடும் ?
இஸ்லாமியர்கள், இந்தியா முழுக்க பரவலாக இருக்கிறார்கள். விஸ்வரூபம் திரைப்படம், தமிழகத்தைத் தவிர, ஆந்திரா, கர்நாடகா, மற்றும் கேரளாவில் வெளியிடப்பட்டு கடந்த ஒரு வாரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஐதராபாத்திலும், கேரளாவிலும் கணிசமான அளவுக்கு இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள். எந்த இடத்திலும், இஸ்லாமியர்கள் இத்திரைப்படத்துக்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராட்டம் நடத்தியதாக தகவல் இல்லை. பெரும்பாலான இடங்களில் இத்திரைப்படம் அரங்கு நிறைந்த காட்சிகளாகவே ஓடி வருகிறது. ஆனால், தமிழகத்தில் உள்ள மதவாதிகள், தமிழகத்தின் அனைத்து இஸ்லாமியப் பிரதிநிதிகள் போல, நாங்கள் சொல்வதைக் கேட்காவிட்டால், வெட்டுவோம், கொளுத்துவோம் என்று மிரட்டி அந்த மிரட்டலில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
ஜெயலலிதாவின் தனிப்பட்ட பிடிவாதத்தின் காரணமாக, இந்த மதவாதிகளின் கோரிக்கைக்கு, தமிழக அரசின் ஆதரவு கிடைத்தது. விஸ்வரூபம் திரைப்படத்தை வைத்து, ஜெயலலிதா தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டுள்ளார். மதவாதிகள், நாங்கள் நினைத்ததை நிறைவேற்றியே தீருவோம்… எங்களைப் பகைத்துக் கொண்டால், எதுவும் நடக்காது என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளதாக இறுமாந்து இருக்கிறார்கள். இந்தப் பிரச்சினையின் வீச்சு என்ன, இதன் எதிர்கால விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை ஜெயலலிதா உணர்ந்தாரா இல்லையா என்பது தெரியவில்லை… ஆனால் மதவாதிகள் உணர்ந்ததாகத் தெரியவில்லை.
உள்துறைச் செயலாளரிடம் புகார் கொடுத்துவிட்டு, செய்தியாளர்களைச் சந்தித்த, இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள், இத்திரைப்படம் முழுக்க முழுக்க, இஸ்லாத்தை இழிவுபடுத்துவதற்காகவே எடுக்கப்பட்டுள்ளது.. அதனால், இப்படம் வெளியிடுவதை ஒரு நாளும் அனுமதிக்க மாட்டோம் என்றார்கள். இஸ்லாமிய அமைப்புகளின் சார்பாக வாதிட்ட, வழக்கறிஞர் சங்கர சுப்புவும், ஒரே ஒரு பாடல் காட்சியைத் தவிர, மொத்த திரைப்படமும் முஸ்லீம்களை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்று கூறினார்.
ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தில், படத்தில் சில காட்சிகளை 7 நிமிடங்கள் குறைத்துக் கொள்ள கமல் தரப்பு ஒப்புக் கொண்டதால், திரைப்படத்துக்கு எதிராக போராட்டங்கள் வாபஸ் பெறப்போவதாக அறிவித்துள்ளனர். முழுக்க முழுக்க இஸ்லாத்தை இழிவுபடுத்துவதாக எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம், வெறும் ஏழு நிமிடங்கள் குறைப்பதால், எப்படி ஏற்றுக் கொள்ளக் கூடிய திரைப்படமாக மாறியது என்பது இந்த மதவாதத் தலைவர்களுக்கே வெளிச்சம்.
2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் 5.5 சதவிகிதத்தினர் இஸ்லாமியர்கள். 2001 கணக்கெடுப்பின்படி, இந்த 5.5 சதவிகிதம் 34,70,647. தற்போது இந்தத் தொகை 50 லட்சம் என்று வைத்துக் கொள்வோம். இந்த 50 லட்சத்தில் 50 பேர் மட்டுமே இத்திரைப்படத்தை நிறுத்த வேண்டும், கொளுத்த வேண்டும் என்று முழக்கமிட்டவர்கள். இந்த 50 பேரின் பின்னால் இருப்பவர்கள் எப்படிப் பார்த்தாலும் 5 லட்சத்தைக் கூடத் தாண்டாது. இந்த 5 லட்சத்தைக் கழித்து விட்டால், மீதம் உள்ள 45 லட்சம் இஸ்லாமியர்கள் அமைதியை விரும்புபவர்கள். சகோதரத்துவத்தோடு, தங்கள் வாழ்வை உழைத்து வாழ வேண்டும் என்று நாள்தோறும் உழைத்துக் கொண்டிருப்பவர்கள். இவர்களுக்கு, கடவுள் மனதில் இருக்கிறார். இவர்கள் இறைவனை மனதில் நினைத்து வாழ்வை நடத்துபவர்கள்.

குரானில் சொன்னது போல,
“கடுமையாகச் சண்டையிடுபவன், மனதில் பகைமையை வைத்திருப்பவன் அல்லாஹ்விடம் மிகவும் வெறுப்புக்குரியவன் ஆவான் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்”
“(நபியே!) கூறுவீராக: ""தங்கள் ஆன்மாக்களுக்கு கொடுமை இழைத்துக் கொண்ட என் அடிமைகளே! இறைவனின் கருணை பற்றி நம்பிக்கை இழந்துவிடாதீர்கள். திண்ணமாக இறைவன் எல்லாப் பாவங்களையும் மன்னித்து விடுகின்றான். அவன் பெரிதும் மன்னிப்பவனும், கருணையாளனும் ஆவான். திரும்பிவிடுங்கள் உங்கள் இறைவனின் பக்கம்'.
இறைநம்பிக்கையாளன் நேசத்தின் சிகரமாவான். மக்களை நேசிக்காதவனிடமும், மக்களால் நேசிக்கப்படாதவனிடமும் எந்த நன்மையும் இல்லை.
உங்களுக்கு விரும்புவதையே பிறருக்கும் விரும்பாத வரையில் நீங்கள் உண்மையுள்ள இறை நம்பிக்கையாளர் ஆக முடியாது.”
என்பது போன்ற பொன்மொழிகளைப் பின்பற்றி தங்கள் வாழ்க்கையை நடத்துபவர்கள். அவர்களுக்கு நன்றாகத் தெரிந்தது, எவனோ ஒருவன் சினிமாவில் மோசமாகச் சித்தரிப்பதாலும், எவனோ ஒருவன் இறையை தவறாகப் பேசுவதாலும், இறைவனை இழிவுபடுத்தி விட முடியாது… ஏனெனில் இறைவன் மிகப்பெரியவன், அவன் கருணையே வடிவானவன் என்பதை உணர்ந்தவர்கள்.
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 7 கோடியே 20 லட்சம். இதில் இஸ்லாமியர்கள் ஏற்கனவே சொன்னது போல 50 லட்சம் இருப்பார்கள். இதில் இந்த மதத் தலைவர்களின் பின்னால் உள்ளவர்கள், சுமாராக 5 லட்சம். இந்த 5 லட்சத்திலும், தியேட்டர்களில் கல்லெறிபவர்கள், மதவாதிகளின் கட்டப்பஞ்சாயத்துகளுக்கு துணை சென்று, இதையே பிழைப்பாக வைத்திருக்கும் இவர்கள் அதிகபட்சம் 10 ஆயிரம் இருப்பார்கள். இந்த 10 ஆயிரம் பேருக்கு வேறு பிழைப்பு இல்லை. எங்கே எப்போது பிரச்சினையை உண்டு பண்ணலாம். எந்த இடத்தில் குட்டையைக் குழப்பி மீன் பிடிக்கலாம் என்று காத்துக்கொண்டே இருப்பார்கள்.
“ஆசைகளையும் தம் தேவைகளையும் குறைத்துக் கொண்டவர்களே சுதந்திரமானவர்கள்.” என்கிறார் நபிகள். ஆனால் இந்த மதவாதிகளின் ஆசைகளுக்கும், தேவைகளுக்கும் எல்லையே இல்லை. பணம், பதவி, பகட்டு, சொகுசு என்ற இவர்களின் தேவைகளுக்கு அளவே கிடையாது.
உன் சகோதரனுக்கு உதவி செய் என்கிறது இஸ்லாம். இஸ்லாத்தின் மீதும், இஸ்லாமியர்கள் மீதும் உண்மையான நம்பிக்கை கொண்டவர்கள் என்ன செய்ய வேண்டும் ? இதே தேசத்தில் கல்வியறிவு இல்லாமலும், வறுமையிலும் வாழும் இஸ்லாமியர்களின் நிலையை மேம்படுத்த வேண்டுமா இல்லையா ? ஆறு ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட நீதிபதி சச்சார் தலைமையிலான குழு, முஸ்லிம்களின் கல்வியறிவு, முஸ்லிம் பட்டதாரிகளின் சதவிகிதம், பள்ளிப் படிப்பை கூட நுகராத முஸ்லிம்களின் நிலை, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிலையில் வாழும் முஸ்லிம்களின் சதவிகிதம், வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் முஸ்லிம்கள் உணவு, உடை, இருப்பிடம் இல்லாத வாழத் தகுதியற்ற நிலையில் இருக்கும் நிலை, குடிநீர், கழிப்பிட வசதியின்றி வாழும் முஸ்லிம்கள், 88 லட்சம் மத்திய அரசு ஊழியர்களில் முஸ்லிம்களின் எண்ணிக்கை எத்தனை என்பது உள்ளிட்ட முஸ்லிம்களின் சமூக வாழ்வை வெளிச்சம் போட்டுக் காட்டினார்.
மதக் கலவரங்கள் ஏற்படும்போது முஸ்லிம் சமுதாயம் அதிகளவில், பொருளாதார சூறைக்கும், உயிர் பலிக்கும் ஆளாவதையும் கருத்தில் கொண்டு பாதுகாப்பு பணிகளில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை அதிகப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் பரிந்துரை செய்திருந்தார் நீதிபதி சச்சார். பாதுகாப்பு தொடர்பான பணிகளில் முஸ்லிம் பிரதிநிதித்தவம் வெறும் 3 சதவீதம்தான் என்கிறது சச்சார் அறிக்கை. இதன்படி, பாதுகாப்பு பணிகளில் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும் என்ற சச்சார் கமிட்டி பரிந்துரையை ஏற்று, இஸ்லாமியர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் இருக்கின்ற காவல் நிலையங்களில் குறைந்தபட்சம் ஒரு முஸ்லிம் ஆய்வாளர் அல்லது உதவி ஆய்வாளரை நியமிக்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டது மத்திய அரசு. இந்த பரிந்துரைகளில் ஒன்றாவது அமல்படுத்தப்பட்டிருக்கிறதா ? சென்னை நகரையே எடுத்துக் கொண்டால், சென்னையில் எத்தனை இஸ்லாமியர்கள் ஆய்வாளர்களாக இருக்கிறார்கள் ? விரல் விட்டு எண்ணி விடலாம்.
இதையெல்லாம் அமல்படுத்த வேண்டும் என்று இந்த இஸ்லாமிய அமைப்புகள் போராடியிருக்குமேயானால், இவர்களோடு, தோளோடு தோள் நின்று, போராட மனித உரிமையாளர்களும், நடுநிலையாளர்களும் களத்தில் குதித்திருப்பார்கள். ஆனால், அற்பத்தனமான, ஒரு திரைப்படத்திற்காக, கச்சைக் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கும் இந்த மதவாதத் தலைவர்களின் உண்மை முகங்களைப் புரிந்து கொள்ளுங்கள்.
திரைப்படம் எடுத்தவனை அடாவடி செய்து, மிரட்டுவது….. முகநூலில் முண்டா தட்டுவது…. எங்களை ஏன் இப்படி இழிவுபடுத்துகிறீர்கள் என்று வரிந்து கட்டிக் கொண்டு முகநூலில் மணிக்கணக்காக எழுதுவது … இப்படி முகநூலில் சண்டை போட்டுக் கொண்டிருப்பதால், ஒரே ஒரு இஸ்லாமியனுக்காவது இது பயனளிக்குமா ? இதையா நபிகள் சொன்னார் ?
விஸ்வரூபம் திரைப்பட சர்ச்சை பல உண்மைகளை உணர வைத்தது. பல காலமாக நெருக்கமாகப் பழகிய இஸ்லாமிய நண்பர்கள் ஒரே நாளில் விரோதிகளானார்கள். பேசுவதை நிறுத்தினார்கள். நீ ஒரு ஆர்எஸ்எஸ் கைக்கூலி என்றார்கள். வலதுசாரிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு எழுதுகிறாய் என்றார்கள். அடையாளம் தெரியாமல், பின்னூட்டம் போட்டு மிரட்ட நினைக்கும் இவர்கள், இதே சவுக்கு தளம், அஜ்மல் கசாப்புக்கு உரிய உரிமைகளை வழங்காமல் இரவோடு இரவாக தூக்கிலிட்டதைக் கண்டித்து எழுதிய ஒரே ஊடகம் சவுக்கு மட்டுமே என்பதை வசதியாக மறந்து விடுகிறார்கள். வெளிப்படையாக சவுக்கு தளம் அதைக் கண்டித்து எழுதியபோது, இவர்கள் அஜ்மல் கசாப்புக்காக ரகசியமாக தொழுகை நடத்தினார்கள்.
நான்கு ஆண்டுகளாக நெருக்கமாகப் பழகிய ஒரு தோழர், தாலிபான்கள் விடுதலைப் போராளிகள்… அவர்களை கமல்ஹாசன் விமர்சிப்பதே தவறு என்றபோது, அதிர்ச்சி மட்டுமே மேலிட்டது. அத்தோடு நிற்காமல், அவர், தாலிபான்களையும் விடுதலைப் புலிகளையும் ஒப்பிட்டுப் பேசினார். புலிகள் இயக்கம், பெண் புலிகளை உருவாக்கி போர்க்களத்திற்கு அனுப்பியது. தாலிபான்கள், பெண்களை முக்காடிட்டு, இருட்டில் அடைக்கிறார்கள். யாரை யாரோடு ஒப்பிடுவது ? இத்தனை ஆண்டுகளாக, தாலிபான்களை விடுதலைப் போராளிகளாக நினைத்த ஒருவருடனா பழகியிருக்கிறோம் என்ற அதிர்ச்சி மட்டுமே எஞ்சி நிற்கிறது. தாலிபான்களை விடுதலைப் போராளிகள் என்று கூறும் ஒரு நபரிடம் என்ன விவாதிப்பீர்கள் ? அதற்கு மேல் அவரிடம் பேசுவதற்கு என்ன இருக்கிறது ?
முகநூலில் நடைபெறும் பெரும்பாலான விவாதங்களில் கூறப்படும் ஒரு விஷயம், இந்து தீவிரவாதம். இந்து தீவிரவாதத்தில் ஈடுபட்ட கர்னல் புரோகித் மற்றும் பெண் சாமியாரிணி சாத்தி பிரக்ஞா சிங் ஆகியோர் தண்டிக்கப்பட வேண்டாம் என்று யாருமே கூறவில்லை. அவர்கள் செய்ததையும் யாரும் நியாயப்படுத்தவில்லை. ஆனால், தீவிரவாதச் செயல்களில் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த யாருமே ஈடுபட்டதில்லையா ? மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்…!!!
இந்தியாவில் நடந்த முக்கியமான தீவிரவாதத் தாக்குதல்களின் பட்டியல் இதோ…
1993 மும்பை குண்டு வெடிப்பு மரணம் 257, 1993 சென்னை ஆர்எஸ்எஸ் அலுவலக குண்டு வெடிப்பு மரணம் 11, 1996 பிரம்மபுத்ரா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டு வெடிப்பு மரணம் 33, 1997 பாண்டியன் எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு, மரணம் 3, செங்கோட்டை துப்பாக்கிச் சூடு மரணம் 3, காஷ்மீர் சட்டசபை தாக்குதல் மரணம் 38, பாராளுமன்றத் தாக்குதல் மரணம் 7, 2002 ஜான்பூர் ரயில் குண்டு வெடிப்பு மரணம் 12, 2002 மும்பை பஸ் வெடி குண்டு மரணம் 2, 2002 கர்னூல் ரயில் தகர்ப்பு மரணம் 20, 2002 அக்ஷர்தாம் கோயில் தாக்குதல் மரணம் 31, 2003 மும்பை குண்டு வெடிப்பு மரணம் 1, 2003 மும்பை ரயில் குண்டு வெடிப்பு மரணம் 11, 2003 மும்பை பஸ் வெடிகுண்டு மரணம் 4, 2003 மும்பை கார் குண்டு வெடிப்பு 52, 2005 ஜான்பூர் ரயில் குண்டு வெடிப்பு மரணம் 13, 2005 புதுதில்லி தீபாவளி குண்டு வெடிப்பு 70, 2006 வாரணாசி குண்டு வெடிப்பு மரணம் 21, 2006 மும்பை ரயில் குண்டு வெடிப்பு மரணம் 209, ஐதராபாத் லும்பினி பார்க் குண்டு வெடிப்பு மரணம் 42, 2007 லூதியானா தியேட்டர் குண்டு வெடிப்பு மரணம் 6, 2007 வாரணாசி, லக்கோ மற்றும் பைசாபாத் குண்டு வெடிப்பு மரணம் 16, 2008 ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பு மரணம் 63, 2008 பெங்களுரு சின்னசாமி விளையாட்டரங்க குண்டு வெடிப்பு மரணம் 2, 2008 அகமெதாபாத் தொடர் குண்டு வெடிப்பு மரணம் 29, 2008 டெல்லி மார்க்கெட் குண்டு வெடிப்பு மரணம் 21, 2008 இம்ப்பால் குண்டு வெடிப்பு மரணம் 17, 2008 தாஜ் ஓட்டல் தாக்குதல் மரணம் 171, 2010 பூனா பேக்கரி குண்டு வெடிப்பு மரணம் 17, 2011 மும்பை குண்டு வெடிப்பு மரணம் 18, 2011 டெல்லி நீதிமன்ற குண்டு வெடிப்பு மரணம் 10. இந்த அத்தனை குண்டு வெடிப்புகளிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் / தண்டிக்கப்பட்டவர்கள் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு, சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு, மாலேகான் குண்டு வெடிப்பு மற்றும் மெக்கா மசூதி குண்டு வெடிப்பு ஆகிய இரண்டில் மட்டும்தான் இந்து தீவிரவாதிகள் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் யாருக்காவது மாற்றுக் கருத்து இருக்க முடியுமா ? இந்து தீவிரவாதம் இருக்கிறது என்பதை யாராவது மறுக்க முடியுமா ? யாரும் மறுக்கவுமில்லை… மறைக்கவுமில்லை. ஆனால், மீதம் உள்ள அத்தனை குண்டு வெடிப்புகளையும் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் யார் ? அத்தனை வழக்குகளும் பொய் வழக்குகளா ? பம்பாய் படத்தை இயக்கியதற்காக, இயக்குநர் மணிரத்னத்தின் வீட்டில் குண்டு வீசியது யார் ?
இந்த குண்டு வெடிப்பு மற்றும் தீவிரவாத வழக்குகளில் கைது செய்யப்பட்ட இஸ்லாமியர்கள் அனைவரும் நாத்தீகர்களா ? மார்க்சியம் பேசுபவர்களா ? அவர்களும் ஐந்து வேளை தொழுகிறார்களா இல்லையா ? குரான் படிக்கிறார்களா இல்லையா ?
ஆப்கானிஸ்தானில் குண்டு வைக்கப்படுவதாகவும், அதில் சம்பந்தப்பட்டவன், கோவையிலும் மதுரையிலும் தங்கியிருந்ததாகவும் ஒரு திரைப்படம் எடுத்தால் அரசாங்கத்தோடு கூட்டு சேர்ந்து, இத்தனை அராஜகமா ? கமல்ஹாசன் இஸ்லாமியர்கள் அனைவரும் தீவிரவாதிகள் போலச் சித்தரிக்கிறார் என்று கூறும் மதவாதிகளே…. நீங்கள் செய்யும் காரியத்தால்தான் அப்படி ஒரு கருத்து உருவாக்கப்படுகிறது. தாலிபான்களை தீவிரவாதிகளாகக் காண்பித்தால் தமிழக முஸ்லீம்கள் ஏன் கோபப்படுகிறார்கள் என்ற கேள்வி இயல்பாக எழுகிறதா இல்லையா ? நீங்கள் இந்தியாவுக்கு விசுவாசமாக இருக்கிறீர்களா.. இல்லை தாலிபான்களுக்கு விசுவாசமாக இருக்கிறீர்களா என்ற கேள்வி எழுமா எழாதா ?
இந்த மதவாதிகள் விஸ்வரூபம் படத்தில் ஏற்படுத்திய பிரச்சினைகளால் ஏற்பட்டிருக்கும் சேதம் குறைவானதல்ல. சாதாரணமாக, எவ்வித அரசியல் பிரக்ஞையுமின்றி, இயல்பாக தன் வாழ்வை நடத்தும் ஒரு நடுத்தர வர்க்க இந்து, இஸ்லாமியர்களை எடுத்த எடுப்பில் திட்டுகிறான்…. ஏன் இப்படிச் செய்கிறார்கள்…. இந்தப் படம் வந்தால் என்ன குடி முழுகப் போகிறது.. என்று கேட்கிறார்கள்…. ஏன் இவர்களைப் பற்றிப் படம் எடுக்கக் கூடாதா ? இது ஜனநாயக நாடுதானே என்று கேட்கிறார்கள்.
நாளை ஒரு வேளை தப்பித் தவறி, ஒரு மதக்கலவரம் உருவானால், அதனால் பாதிக்கப்படப் போவது யார் தெரியுமா ? பீடி சுற்றி பிழைக்கும், கறிக்கடை வைத்திருக்கும் ஏழை இஸ்லாமியன்தான் பாதிக்கப்படுவான். இன்று அரசோடு பேச்சுவார்த்தை நடத்தும், இந்த இஸ்லாமியத் தலைவர்கள் ஒருவரைக் கூடப் பார்க்க முடியாது. அனைத்தும் நடந்து முடிந்தபிறகு, ஆறுதல் சொல்ல வருவார்கள்.
விஸ்வரூபம் திரைப்படத்துக்காக இவர்கள் பேச்சுவார்த்தை நடத்தும் உள்துறைச் செயலாளர் ராஜகோபாலன் யார் தெரியுமா ? மரணப்படுக்கையில் இருக்கும் ஒரு இஸ்லாமியச் சிறைவாசியை பரோலில் அனுமதிக்க மறுத்து பிடிவாதம் பிடித்துக் கொண்டிருப்பவர். கோவை குண்டு வெடிப்பு வழக்கில் மூன்று ஆண்டு சிறை தண்டனை பெற்று, ஒரு சிறை அதிகாரியை கொலை செய்ததற்காக வாழ்நாள் சிறைத் தண்டனை பெற்று கோவையில் இருந்து வருபவர்தான் அபுதாஹிர். இந்த அபுதாஹிரின் இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்து விட்டன. இதயமும் பலவீனமாக உள்ளது. இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்து விட்டதால், வாரத்துக்கு இரண்டு முறை டயாலிசிஸ் செய்ய வேண்டும். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய, இவருக்கு சிறுநீரக தானம் செய்ய யாரும் முன்வராததால், இவர் தினந்தோறும் மரணத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறார். இவரை சிறை விதிகளின் படி, 90 நாட்களுக்கு பரோலில் அனுப்ப வேண்டும் என்று இவரது சகோதரர் உள்துறைச் செயலாளரிடம் கோரிக்கை வைக்கிறார். இந்த ராஜகோபால், அவரது மனுவை நிராகரிக்கிறார். 90 நாட்கள் பரோலில் அனுப்ப உள்துறைச் செயலாளருக்கு உத்தரவிடுமாறு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படுகிறது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பால் வசந்தகுமார், 24.08.2012 அன்று கீழ்கண்டவாறு உத்தரவிடுகிறார்.

உள்துறைச் செயலாளர் ராஜகோபாலன்
“Considering the medical report dated 10.08.2012, the Writ Petition is disposed of with a direction to the first respondent (Home Secretary) to grant leave to the petitioner’s brother, the life convict No. 1487 for 90 days from 30.08.2012 on condition that the petitioner’s brother shall report before the Ukkadam police station once in 15 days between 10 am to 12 noon”
10.08.2012 நாளிட்ட மருத்துவ அறிக்கையை பரிசீலித்ததன் அடிப்படையில், மனுதாரரின் சகோதரரான வாழ்நாள் சிறைவாசி (தண்டனைச் சிறைவாசி எண் 1487)க்கு 90 நாட்கள் விடுப்பு (பரோல்) வழங்குமாறும், அந்தச் சிறைவாசியின் சகோதரரான மனுதாரர், ஒவ்வொரு 15 நாட்களுக்கும் ஒரு முறை உக்கடம் காவல் நிலையத்தில் காலை 10 மணி முதல் 12 மணிக்குள் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையும் விதித்து பரோல் வழங்குமாறு உள்துறைச் செயலாளருக்கு உத்தரவிடப்படுகிறது.
நான் முடியாது என்று உத்தரவிட்ட பிறகு, அதற்கு மேல் உத்தரவிட நீதிமன்றத்துக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்ற இறுமாப்போடு நீதிபதி பால் வசந்தகுமார் முன்னிலையிலேயே சீராய்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்கிறார் ராஜகோபாலன். இந்த சீராய்வு மனுவை நீதிபதி பால் வசந்தகுமார் 14.09.2012 அன்று தள்ளுபடி செய்கிறார்.
தீர்ப்பு வழங்கி ஒரு மாதத்துக்கு மேல் ஆகியும், அத்தீர்ப்பை அமல்ப்படுத்தவில்லை ராஜகோபாலன். 29.09.2012 அன்று ராஜகோபாலனுக்கு, உங்கள் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கக் கூடாது என்று வழக்கறிஞர் அறிவிக்கை அனுப்பப் படுகிறது. இந்த வழக்கறிஞர் அறிவிக்கைக்குப் பிறகு, நீதிபதி பால் வசந்தகுமாரின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு தாக்கல் செய்கிறார் ராஜகோபாலன். அந்த மேல்முறையீட்டு மனுவை, அப்போது தலைமை நீதிபதியாக இருந்த இக்பால், வேறு டிவிஷன் பென்ச்சுக்கு மாற்றி உத்தரவிடுகிறார். தற்போது இந்த வழக்கு நீதிபதிகள் கே.என்.பாஷா மற்றும் தேவதாஸ் முன்னிலையில் நிலுவையில் உள்ளது.
இதற்கிடையே, மேலும் ஒரு நீதிமன்றத் தீர்ப்பின் மூலம், அரசு மருத்துவமனையில் சரியன சிகிச்சை வழங்கப்படாததால், தனியார் மருத்துவமனையில் சொந்த செலவில், டயாலிசிஸ் செய்ய அனுமதி வழங்கப்பட்டு, கோவை குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் அபுதாஹிர். கடந்த 18.01.2013 அன்று அவரை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்தனர் மருத்துவர்கள். அன்று சிறைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அபுதாஹிரின் உடல்நிலையைப் பார்வையிட்ட சிறை அதிகாரிகள், அவரை சிறையில் அனுமதிக்க முடியாது…. மருத்துவமனையில் அனுமதியுங்கள் என்று கூறியதன் அடிப்படையில் 19.01.2013 முதல் கோவை அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வருகிறார். இன்று (04.02.2013) மாலை நிலவரப்படி, அவரின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாகத் தெரிகிறது.
உள்துறைச் செயலாளரான ராஜகோபாலன் ஐஏஎஸ் அபுதாஹிருக்கு பரோல் வழங்காமல் இருப்பதற்கு தனிப்பட்ட காரணங்கள் எதுவுமில்லை. எனக்கு உத்தரவு போட நீதிபதி யார்…. ? புரட்சித் தலைவி அம்மாவின் அருளாசி பெற்ற ஒரே ஐஏஎஸ் அதிகாரி நான்தானே…. எனக்கு இல்லாத அதிகாரமா ? அப்படியே நீதிமன்றம் உத்தரவு போட்டாலும், நான் பணிந்து விடுவேனா என்ற இறுமாப்பும் திமிரும் மட்டுமே இதற்கான காரணம்.
அந்த உள்துறைச் செயலாளரிடம்தான், இந்த இஸ்லாமிய அமைப்புகள் விஸ்வரூபம் திரைப்படத்துக்காக மணிக்கணக்கில் பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளன. மரணத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு இஸ்லாமியனை, தன் இறுதி நாட்களில் குடும்பத்தோடு இருந்து மரணத்தைத் தழுவுவதற்கு இந்த இஸ்லாமிய அமைப்புகள் உதவியிருக்க வேண்டுமா இல்லையா ? அபுதாஹிருக்கு பரோல் வழங்க உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்து என்று இந்த 24 இஸ்லாமிய அமைப்புகளும் போராட்டம் நடத்தியிருக்க வேண்டுமா இல்லையா ? இந்த இஸ்லாமியனுக்காக போரட்டம் நடத்துவதை விட, விஸ்வரூபம் திரைப்படம் முக்கியமா ?
துப்பாக்கித் திரைப்படத்துக்காகவும், விஸ்வரூபம் திரைப்படத்துக்காகவும், ஒன்று கூடிய 24 இஸ்லாமிய அமைப்புகள், சச்சார் கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்தவோ, அபுதாஹிர் விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்ப்படுத்தவோ, இவ்வாறு ஒன்று கூடவில்லை என்பதிலிருந்தே இவர்கள் இஸ்லாமியர்களின் பெயரைக் கூறி பிழைப்பு நடத்தும் வியாபாரிகள் என்பது புரிகிறதா இல்லையா ? இஸ்லாமியர்களின் மீது இவர்களுக்கு இருக்கும் அக்கறையை விட, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கடைக்கண் பார்வையில் இருக்க வேண்டும் என்பதில்தான் அதிக அக்கறை இருக்கிறது.
இன்று இஸ்லாமிய அமைப்புகளின் பெரும் தலைவர்களாக இருக்கும் சிலர், தமிழகத்தில் நடந்த பல குண்டு வெடிப்புச் சம்பவங்களில் நேரடியாக தொடர்பு கொண்டவர்கள். அவர்கள் உத்தரவின்படி குண்டு வைத்தவர்கள் சிறையில் இருக்கிறார்கள்…. உத்தரவிட்டவர்கள் பிரசங்கம் செய்து கொண்டிருக்கிறார்கள். கோவை குண்டு வெடிப்பில் தண்டிக்கப்பட்ட கைதிகளின் குடும்பங்கள் இன்று என்ன நிலையில் இருக்கிறது என்று என்றைக்காவது இத்தலைவர்கள் அக்கறை பட்டதுண்டா ?
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனையாகி, சிறையில் இருக்கும் அஸ்ரப் அலி என்பவரின் சகோதரி ஆமினா என்பவர், வறுமை காரணமாக பாலியல் தொழிலில் ஈடுபட்டார். அவரின் வறுமையைப் போக்கவோ, அவர் வாழ்வை செழிக்க வைக்கவோ எந்த உதவியும் செய்யாத, அல் உம்மா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், குரானுக்கு எதிராக பாலியல் தொழில் செய்தார் என்ற காரணத்தால் அவரைக் கொலை செய்து, அவர் உடல் பாகங்களை சிதைத்து வீசியெறிந்தனர். இதுதான் இவர்களின் இரட்டை வேடம்.
கோவை குண்டு வெடிப்பில் தண்டிக்கப்பட்டவர்களின் குடும்பங்களோடு, சாதாரண முஸ்லீம்கள் பழகுவதைத் தவிர்க்கிறார்கள். இவர்களோடு பழகினால், போலீஸ் தொந்தரவு வரும் என்று விலகியே இருக்கிறார்கள். கடுமையான வறுமையில் இருக்கும் இவர்களின் குடும்பங்கள், ஆட்டோ ஓட்டியும், பஜாரில் திருட்டு விசிடி விற்றும், பிழைத்துக் கொண்டிருக்கின்றன.
1997ம் ஆண்டு பாண்டியன் விரைவு வண்டி குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்று கூறி, 19 வயது இளைஞர் கைது செய்யப்படுகிறார். 12 ஆண்டுகள் கழித்து, அவரை நிரபராதி என்று 2010ம் ஆண்டு விடுதலை செய்தது நீதிமன்றம். தன் இளமைக் காலம் முழுவதையும் சிறையில் கழித்த அந்த இளைஞர், இன்று பிழைக்க வழியில்லாமல் அல்லாடிக் கொண்டிருக்கிறார். அந்த இளைஞருக்கு என்ன செய்தன இந்த இஸ்லாமிய அமைப்புகள்…. குறைந்தபட்சம் அந்த இஸ்லாமிய இளைஞர் எங்கிருக்கிறார் என்பதாவது இந்த அமைப்புகளுக்குத் தெரியுமா ?
எங்காவது ஒரு குண்டு வெடிப்பு நடந்தால் சமூகத்தைத் திருப்தி செய்வதற்காக, கையில் கிடைத்த முஸ்லீம்களையெல்லாம் கைது செய்து சிறையில் அடைக்கும் அரசு. யார் குற்றம் செய்தவன்… யார் செய்யாதவன் என்ற பாரபட்சமெல்லாம் பார்க்காமல், இக்குற்றத்தை கண்டு பிடித்து விட்டோம் என்று சமூகத்தை சமாதானப்படுத்துவதற்காக அப்பாவிகளைக் கூட காவல்துறை கைது செய்யத் தயங்காது.
அது போன்ற அப்பாவி இஸ்லாமியர்கள் பாதிக்கப்படக் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகத்தான் மனித உரிமையாளர்களும், ஜனநாயகவாதிகளும், மதத்தின்பால் அல்லாமல் மனிதத்தின்பால் போராடிக்கொண்டிருக்கிறோம். ஆனால், அந்த ஜனநாயகவாதிகளையும், மனித உரிமையாளர்களையும் முகம் சுளித்து ஒதுங்க வைக்கும் வேலைகளைத்தான் இந்த மதவாதிகள் செய்து கொண்டிருக்கின்றனர்.
விஸ்வரூபம் திரைப்படத்தில் ஏற்படுத்திய பிரச்சினையால், இஸ்லாமிய சமுதாயத்துக்கு இழப்பே அதிகம். ஒரு சிலர், அரசைப் பணிய வைத்து, அரசோடு பேச்சுவார்த்தை நடத்தி, தங்களின் சக்தியை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக, சமுதாயத்தில் ஒரு மாறாத வடுவை ஏற்படுத்தி விட்டார்கள். இஸ்லாமியர்களை ஒரு தீவாக மாற்றி விட்டார்கள்.
இனி எந்த திரைப்பட இயக்குநரும், திரைப்படங்களில் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்களை ஒரு பாத்திரமாக வைக்கக் கூட தயங்குவார்கள். இஸ்லாமியர்களின் கேரக்டரே இல்லாத வகையில் கதையமைப்பார்கள். இஸ்லாமிய சமூகத்தின் வாழ்க்கை முறை, சூழல், பண்பாட்டுக் கூறுகள் ஆகியவை தமிழ்த்திரைப்படங்களில் இடம்பெறாமலேயே போய் விடும் அபாயம் விஸ்வரூப சர்ச்சையால் ஏற்பட்டிருக்கிறது.
மலையாளத்தில் 2011ம் ஆண்டு ஆதாமிண்டே மகன் அபு என்று ஒரு திரைப்படம் உருவானது. ஒவ்வொரு இஸ்லாமியனுக்கும் ஹஜ் பயணம் எவ்வளவு முக்கியமானது…. அந்தப் பயணத்தின் போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் என்ன…. எப்படிப்பட்ட மனிதனாக அவன் இருக்க வேண்டும் என்று அற்புதமாக எடுத்துரைத்த ஒரு படம். சிறந்த வெளிநாட்டுத் திரைப்படமாக 2011ம் ஆண்டு இந்தியாவிலிருந்து ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படம் அது.

ஆயுஷும்மா மற்றும் அபு ஆகிய இருவரும் மலபார் பகுதியில் வசிக்கும் மாப்ளா முஸ்லீம்கள். எழுபது வயதாகும் அபு ஒரு அத்தர் வியாபாரி. அவர்களின் ஒரே மகன், அரபு நாடுகளுக்கு வேலைக்குச் சென்று அவர்களை மறந்து விடுகிறான். எப்படியாவது அந்த ஆண்டு ஹஜ் பயணம் செல்ல வேண்டுமென முடிவெடுக்கும்அபு, அது வரை அவர் சேர்த்து வைத்திருந்த அத்தனை சேமிப்புகளையும் கணக்கிட்டால் மிகவும் குறைவாக இருக்கிறது. ஆயுஷும்மா அவள் ஆசையாக வளர்த்து வந்த கோழிகளையும், மாடுகளையும் விற்கிறார். அப்போதும் பணம் குறைவாக இருக்கிறது. ஒரு பள்ளி ஆசிரியராக இருக்கும் ஒரு பிராமணர், அபுவின் நண்பர். அவர் அபுவுக்காக பணத்தை கடனாக அளிக்கிறார். கடன் பெற்று ஹஜ் செல்வது இஸ்லாத்துக்கு எதிரானது என்பதால் அவர் அந்த உதவியை அன்போடு மறுக்கிறார்.
இறுதியாக வாசலில் இருக்கும் பலா மரத்தை வெட்டி விற்றால் பணம் முழுமையாக வரும் என்று உணர்ந்து பல ஆண்டுகளாக வீட்டு வாசலில் இருக்கும் பலா மரத்தை மர வியாபாரிக்கு விற்கிறார். மரத்தை விற்பனை செய்து விட்டு, ஹஜ் பயணத்துக்கான தயாரிப்பு வேலைகளில் ஈடுபடுகிறார்.
பல ஆண்டுகளுக்கு முன்னால் அபுவுக்கு பக்கத்து வீட்டுக்காரராக இருந்தவரோடு சிறு சண்டை ஏற்பட்டது. பக்கத்து வீட்டுக்காரர் அபுவை அப்போது அடித்து விடுகிறார். பல ஆண்டுகளுக்குப் பின்னால், அவரைத் தேடி அவர் குடியிருக்கும் இடத்தைக் கண்டு பிடித்து, பல மைல்கள் பயணம் செய்து அவரைக் கண்டுபிடிக்கிறார். அந்த பக்கத்து வீட்டுக்காரர், பக்கவாதத்தால் படுத்த படுக்கையாக இருக்கிறார்.
அபு அவரிடம் சென்று, நான் ஹஜ் பயணம் செல்கிறேன். எந்தக் கடனையும் நிலுவையில் வைத்திருக்கக் கூடாது. பல ஆண்டுகளுக்கு முன்னால் நான் உன்னோடு சண்டையிட்டேன்… என்னை மன்னித்து விடு… என்று கேட்பார். அபுவை ஏற்கனவே அடித்திருந்த அந்த பக்கத்து வீட்டுக்காரர், கண்கணில் கண்ணீரோடு, நான் உன்னை அடித்ததற்குத்தான் ஆண்டவன் என்னை பக்கவாதத்தில் படுக்க வைத்துள்ளான் என்று அழுவார். இந்தக் காட்சி அபு என்ற மனிதனின் அற்புதமான குணத்தையும், ஹஜ் பயணம் ஒரு மனிதனை எப்படி பக்குவப்படுத்துகிறது என்பதையும் சிறப்பாக எடுத்துரைத்தது.

பயண ஏற்பாடுகள் அனைத்தும் தடபுடலாக நடக்க, ஹஜ் பயணத்துக்கான பொருட்கள், உடைகள் அனைத்தையும் நகரத்துக்கு சென்று வாங்கி விட்டு, விசா பெற்றுக் கொண்டு கிராமத்துக்கு திரும்புவார். திரும்புகையில் மரக்கடைக்காரர், அவர் வெட்டிய பலாமரம் உளுத்துப் போயிருந்தது… எதற்கும் பயன்படாதது என்பதைக் கூறுவார். அபு இடிந்து போவார். ஆனால் அந்த மரக்கடைக்காரர், மரம் போனால் போகிறது….. உங்களது ஹஜ் பயணத்துக்கு எனது அன்பளிப்பாக அந்தப் பணத்தை வைத்துக் கொள்ளுங்கள் என்று பணத்தைக் கொடுப்பார். அந்த பணத்தை வாங்க மறுத்து, சோகமாக வீடு தீரும்புவார் அபு.
வீட்டுக்கு வந்ததும் தன் மனைவியிடம்…. அந்தப் பலா மரமும் ஒரு உயிர்தானே… அதைக் கொன்று நான் பாவமிழைத்து விட்டேன் அல்லவா ? அதனால்தானோ என்னவோ இறைவன் என்னை ஹஜ் பயணத்துக்கு வர விடாமல் தடுத்து விட்டான் என்று கூறி விட்டு, ஒரு பலா மரக்கன்றை நடுவார்.
ஹஜ் பயணம் சென்றிருக்க வேண்டிய மறுநாள், தொழுகைக்குச் செல்லும் காட்சியோடு அத்திரைப்படம் நிறைவடையும்.
எத்தனை அற்புதமான திரைப்படம் பார்த்தீர்களா….. இப்படி ஒரு திரைப்படத்தை தமிழில் எடுக்கவில்லையென்றாலும், அபு போன்ற பாத்திரங்களைப் படைக்கும் சிறப்பான இயக்குநர்கள் தமிழில் இருக்கிறார்கள். அப்படி ஒரு சூழலை மறுத்து, முடக்கும் வேலையைத்தான் இந்த இஸ்லாமிய மதவாதிகள் செய்திருக்கிறார்கள்.
திரைப்படத்தை காரணமாக வைத்து, மதவெறியைத் தூண்டும் மதவாதிகளே…. !!! உங்களை இறைவன் ஒருபோதும் மன்னிக்க மாட்டான். ஒரு திரைப்படத்துக்காக சமுதாய நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் மதவாதிகளே… குரானின் இந்த வாசத்தைப் படித்திருக்கிறீர்களா ?
“இறைக்கட்டளைகளை எடுத்துரைக்க மட்டுமே உரிமை உண்டு. ஏற்றுக் கொள்ள வேண்டுமெனக் கட்டாயப் படுத்துவது, மனிதனின் சுதந்திரத்தைப் பறிப்பதாகும். சுதந்திரம் வழங்கப்பட்ட மனிதனையே இறைவன் மறுமையில் அவனது செயல்களுக்கு பொறுப்பாளி ஆக்கி விசாரணைக்குட்படுத்தி தீர்ப்பு வழங்க முடியும்.”
மனிதனின் சுதந்திரத் பறிக்கும் உங்களைப் பற்றி குரான் என்ன கூறுகிறது தெரியுமா ?
“(இந்நயவஞ்சகர்கள்) இறைவனையும், நம்பிக்கை கொண்டோரையும் ஏமாற்றுகின்றனர். ஆனால் (உண்மையில்) அவர்கள் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கின்றனரே அன்றி வேறில்லை; எனினும் (இதனை) அவர்கள் உணர்வதில்லை. அவர்களுடைய நெஞ்சங்களில் நோயிருக்கிறது.
(நபியே) இந்நயவஞ்சகர்கள் பேச ஆரம்பித்தால் நீர் இவர்களுடைய பேச்சைக் கேட்டுக் கொண்டே இருந்து விடுவீர். ஆனால், உண்மையில் இவர்கள், சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் மரக்கட்டைகளைப் போன்றவர்கள் (எதற்கும் உதவாதவர்கள்). இவர்கள் ஒவ்வோர் உரத்த சப்தத்தையும் தங்களுக்கு எதிரானதாய் கருதுகின்றனர். இவர்கள் தாம் கடும் பகைவர்களாவர்.”
சமூகத்தில் பிளவை ஏற்படுத்துவதற்காகவே திட்டமிட்டுச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்த மதவாதிகள் உண்மையில் சமூகத்திற்கு கேடு விளைவிப்பவர்கள். அமைதியான சமூகத்தை சீர்குலைக்கும் பாவிகள். அவர்கள் அவர்களின் பாவங்களை தொடர்ந்து செய்து கொண்டிருக்கட்டும். நமக்கு ஆதாமின் மகன் அபு போன்ற இஸ்லாமியர்களோடு மரியாதையும், நட்பும், அன்பும், தோழமையும் எப்போதும் உண்டு. அந்த உழைப்பாளி இஸ்லாமியர்கள் நமது சகோதரர்கள்.

மதவெறியைத் தூண்டும் இந்தப் பாவிகளை, அளவிளாக் கருணையும், இணையிலாக் கிருபையும் உடைய அல்லாவின் திருப்பெயரால் மன்னிப்போம்.
|
Comments
Consider this:
1. They speak Tamil (not Urdu)
2. They belong to the working class (not middle class, certainly not upper class)
3. They were deliberately framed in bombing cases. But not a single case was proven even after 15 years. All under-trials were never convicted. And they remain under-trials for last 15 years in no man's land.
What we are seeing is the voice of the Tamil Muslim working class - its fears, its insecurity, its perception of geopolitics,...
Tamil Muslims are multi-ethnic (unlike Tamil Hindus who are mostly Dravidian). So, there are Dravidian, Aryan, Malay, Middle Eastern and Vietnamese blood in their veins.
இந்த நாட்டின் சட்டதிட்டங்கள் அனைவருக்கும் பொதுவாக உள்ளது. முஸ்லீம்கள் அதை பயன்படுத்தி காரியம் நடத்த வேண்டும். இடஒதுக்கீடு ” தீண்டாமை நோயால்” பலநூறு வருடங்கள் பாதிக்கப்பட்ட பிரிவினருக்கு அரசு அளிக்கும் ஒரு நிவாரணம் ஆகும். முஜ்லீம்கள் இந்தியாவை அடக்கி ஆண்டவர்கள்.அட்டுழியமட செய்து காட்டாசிச நடத்தியவர்கள். தமழ்நாடடில் முஸ்லீம்கள் 1தோட்டி சலவைத் தொழில் வேலை செய்வதில்லை. இவரகள் பகுதியில் மேற்படி வேலைகளைச் செய்பவர்கள் இந்துக்களே. முஸ்லீம்கள் உயா்சாதிமக்களைப ்போல் (பெண்கள் வேலைக்கு போவதில்லை ) வாழ்ந்து வருகின்றனர் அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தீண்டாமை சாதியினருக்கு கிடைக்கும் நிவாரணத்தைப் பாதிக்கும்.
1
Avoid blind belief in anything.Apply your mind with scientific approach even in religious matters.ANALYSE FIRST AND ACCEPT FACTS in all matters you see.
THERE IS NO COMPARISON IN HISTORY FOR THIS PERSECUTION
STILL WHAT THEY WANT? ANY TIME THESE BROTHERS REPENT FOR WHAT HAPPENED IN INDIA DURING THAT PERIOD?
I NEVER SAW ANY OF THESE BROTHERS SAYING INDIA IS THE BEST PLACE FOR THEM TO LIVE.
யாரப்பா அங்க?? அந்த பச்ச வயர கொஞ்சம் புடுங்கி எறி....ஐய்யயோ..சத்தமா பேசிட்டேனே....மாட்டுக்கறில வெசம் வெச்சுருவாய்ங்க ளே...என்ன ஒண்ணும் பண்ணிடாதீங்க..நா வெறும் பச்சா!
இந்த தளத்தில் வரும் சமீபத்திய பதிவுகள் நடுநிலையாக இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து. பெரும்பான்மையான வாசர்கள் விரும்புகிறார்க ள் என்பற்காக இஸ்லாமியர்களை தனிமைபடுத்தும் கட்டுரைகள் உணர்ச்சி வயமாக இல்லது.
இந்த தளம் ஆரம்பிக்கபட்டது முதல் வாசித்து வருகின்றேன். பல நண்பர்களுக்கு அறிமுக படுத்தியிருக்கி றேன். ஆனால் அன்மையில் வந்த கட்டுரைகள் மனதளவில் காயபடுத்தியதாக உணர்கிறேன், ஆகையால் இந்த தளத்திற்கு இனிமேல் வரக்கூடாது என்ற கொள்கை முடிவுடன் வெளியருகிறேன். இதுநாள் வரை பயன் படுத்தியதற்காக தங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள ்கிறேன்.[/ஃஉஒடெ]
Dear Brother , Neutrality doesn't mean not to tell the truth.You might be offended with some of the harsh words used against islam and muslims by some based on their experience and lessons learnt. You can either clarify or take stand based on truth. IF you outrightly reject these sound criticism then I can say nothing except that you have used your right - not to visit this again.This is the reason for the fringe group of fanatics are able to take upper hand over moderates
என் சந்தை என்றான்,
பல சட்டங்கள் பேசி,
நின்று ஜெயிப்பேன் என்றான்.
மனை உள்ளிருந்து பார்ப்பவன்,
பல லட்சம் உண்டென்று கூவி விற்றான்,
வாங்கியவன் சொன்னான்,
சில ஆயிரம் கூட தேறவில்லை என்று,
சட்டம் பேசியவன்
சண்டைகாரனிடம் சரணடைந்தான் ,
சாஷ்டாங்கமாய் விழுந்து சொன்னான் ,
அம்பில்லை இவர்கள் , வெறும் அன்புதானென்று.
தேர்ந்த வியாபாரி இவன்,
விளம்பரம் கூவ ஆள் தேடினான்,
கூட்டி காட்டினான் குழுவிற்கு,
கூடியவர் கூடினர் கோவினிடத்திலே ,
தடை என்றனர்,
திரை கடைக்கு தடை என்றனர்,
மருண்டான், இவன் மிரண்டான்,
கூவல் கோ வரை கேட்கும் என்று,
இவன் அறியிலான் .
இந்நாடு மாசுடைத்து என்றான் ,
வீடு துறப்பேனோ ,
அரண்மனை பிறந்த நான் நாடு துறப்பேன்
என்றான் இவன்.
சட்டம் பேசினான்,
சற்று முன் அடைந்த சரணாகதி மறந்தான்.
கோ இல்லை என்றால்
நீதி தேவனின் கோயில் உண்டென்றான் .
திக்கற்று நின்றான்,
நீதி தேவன் தள்ளி வைக்கையிலே ,
கண்ணீர் விட்டான் ,
அதை செந்நீர் என்று விட்டான் ,
செந்நீர் கண்டும் கலங்காத எம்மக்கள்,
கண்ணீர் கண்டு கலங்கி நின்றனர்
கோ மனம் இறங்கி ,
குழு கத்தரித்து ,
பொருள் திரை கடை வந்தது .
மெய்பொருள் கண்டது போல் மக்கள்.
வாழ்க பாரதம் !
“உலகம் எங்கிலும் உன்னை வென்றிட யாரு,
உன்னைப் பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு,
உலக நாஅஅ யகனே!”
என்று பாடல் பெற்றவர் தமிழ் திரைத்துறையை உலக அளவுக்கு எடுத்துச் செல்ல அவதரித்த மகான் என்று விதந்தோதப்படும் கமல்ஹாசன். முதலாளிகளின் கூட்டமைப்பான பிக்கியின் ‘ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்குத் துறை’ பற்றிய இரண்டு நாள் மாநாட்டை தலைமை ஏற்று நடத்தியிருக்கிற ார் கமல்ஹாசன்.
மாநாட்டை ஒட்டிய செய்தியாளர் கூட்டத்தில் “தமிழ்நாட்டில் ஒரு சினிமா தயாரிப்பது கோலா பானம் தயாரிப்பதை விட அதிக செலவு பிடிப்பதாக இருந்தாலும் தமிழ்நாட்டு திரையரங்குகளில் டிக்கெட் விலை, வளர்ந்த நாடுகளில் விற்கப்படும் கோலாவின் விலையை விட குறைவாக இருக்கிறது. எனவே திரை அரங்குகளில் டிக்கெட் விலையை ஏற்ற வேண்டும்” என்று தனது பொருளாதார தத்துவத்தை உலகறியத் தந்துள்ளார்.
கவலைப் படாதீர்கள் உலகநாயகனே! வால் மார்ட் தயாரிப்பில் தா பாண்டியன் நல்லாசியுடன், கூடங்குளம் கரண்ட்டை பயன்படுத்தி அன்பே சிவம் பாகம் இரண்டு எடுங்கள். தமிழை வைத்து உலக அளவில் போய் விடலாம்.
ரொட்டி கிடைக்காமல் மக்கள் பசியில் வாடும் போது கேக் சாப்பிடச் சொன்ன பிரெஞ்சு அரசியும், ரோம் நகரம் தீப்பிடித்த போது பிடில் வாசித்த நீரோ மன்னனும் இன்று இல்லையே என்ற ஏக்கத்தை கலைஞானி கமல்ஹாசன் போக்குகிறார். “வாழ்க வளமுடன்!”
http://www.vinavu.com/2012/10/22/kamal-hassan-ficci-conference/
“விசுவரூபம் திரைப்படம் முஸ்லிம்களுக்கு எதிரானதா இல்லையா?” என்ற கோணத்தில் மட்டுமே இப்பிரச்சினை குறித்த விவாதம் நடந்திருக்கிறது . அந்தப் படம் யாருக்கு ஆதரவானது என்பது குறித்த விவாதம் நடைபெறவில்லை. “இது அமெரிக்க ஆதரவுத் திரைப்படம்; ஆஸ்கர் விருதுக்காக அமெரிக்க கைக்கூலித்தனம் செய்திருக்கிறார ் கமலஹாசன்” என்று சிலர் கூறியிருக்கிறார ்கள். இந்தப் பதில் சராசரி முஸ்லிம் வாசகர்களை மேலோட்டமாக திருப்திப் படுத்தலாம்.
சவூதி இளவரசரும், பின்லாடனும், முல்லா ஒமரும், பாக் அதிபர்களும், கமலஹாசனுக்கு வெகு காலம் முன்னதாகவே அமெரிக்காவுக்கு கைக்கூலி வேலை செய்திருக்கிறார ்கள், செய்து வருகிறார்கள். அவர்கள் எந்த ஆஸ்கார் விருதுக்கு ஆசைப்பட்டு இதனைச் செய்தார்கள் என்ற கேள்விக்கு விடைகாண இக்கட்டுரை உதவும்.
http://www.vinavu.com/2013/02/07/afghan-central-asia-oil-islamic-terrorism/
[ஃஉஒடெ நமெ="முட்ட்"]//அது ஒரு சர்சைக்குரிய விஷயம். பம்பாய் படத்தை இயக்கியதற்கு பிறகு இயக்குநர் மணிரத்னம் இயக்கவிருந்த படம் "யாழ்பாணம்" பின்னாளில் அதுவே கன்னத்தில் முத்தமிட்டால் என உருமாறு வெளியானது. ஒருவேளை ரோஜா படத்தில் காஷ்மீரிகளை சித்தரித்ததுபோல ் தங்களை காட்டி விடுவார்களோ என எண்ணி விடுதலை புலிகள் பின்னணில் இருக்கலாமோ.//
பொம்பய் மொவிஎ ரெலெஅசெட் யெஅர்: 1995.
கன்னதில் முதமிட்டல் மொவிஎ ரெலெஅசெட் யெஅர்: 2002.
ணொ சொம்மொன் சென்செ இன் யொஉர் அர்குமென்ட்...ஃபிர்ச்ட் தின்க் தென் ச்பெஅக் அபொஉட் அன்ய்திங்... :லொல்: :லொல்: :ப்[/ஃஉஒடெ][/ஃஉஒடெ]
he want to tell you, bomb incident happen in maniratnam house was on 1995, but "kanathil muthmital" was released on 2002.so you people want to tell that LTTE came to know in 1995, maniratnam is going to make movie about them on 2002. So we put bomb in maniratnam house. "mara manda mara mand"....
The so called Moderate Muslim voices are silenced by the fundamentalists who threaten action against anyone committing sin against Islam anywhere in the world. The people in the Netherlands, Germany, UK, US, Australia are slowly realizing it. The Indian seculars will also realize.
In any democracty, First, they call themselves minorities and ask for special rights. Then once their strength is increased enough to form a vote bank, they vote together to one party so that politicians cannot ignore them. Then they threaten the majority with violence for anything offending them.
This is what the frustrated Australian PM said to them:
"We will accept your beliefs, and will not question why All we ask is that you accept ours, and live in harmony and peaceful enjoyment with us.
This is OUR COUNTRY, OUR LAND, and OUR LIFESTYLE, and we will allow you every opportunity to enjoy all this. But once you are done complaining, whining, and griping about Our Flag, Our Pledge, Our Christian beliefs, or Our Way of Life, I highly encourage you take advantage of one other great Australian freedom, THE RIGHT TO LEAVE.
If you aren’t happy here then LEAVE. We didn’t force you to come here. You asked to be here. So accept the country YOU accepted.”
Moderate Indian Muslims are silent and the Fundamentalists are having their say in almost anything remotely offending them. Shah Bano, Salman Rushdie, Taslima, Vishwaroopam etc. are all state backed fundamentalism. We cannot let this happen any more, otherwise the majority will start taking action themselves like in Ayodhya movement or in Gujarat.
இந்த தளத்தில் வரும் சமீபத்திய பதிவுகள் நடுநிலையாக இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து. பெரும்பான்மையான வாசர்கள் விரும்புகிறார்க ள் என்பற்காக இஸ்லாமியர்களை தனிமைபடுத்தும் கட்டுரைகள் உணர்ச்சி வயமாக இல்லது.
இந்த தளம் ஆரம்பிக்கபட்டது முதல் வாசித்து வருகின்றேன். பல நண்பர்களுக்கு அறிமுக படுத்தியிருக்கி றேன். ஆனால் அன்மையில் வந்த கட்டுரைகள் மனதளவில் காயபடுத்தியதாக உணர்கிறேன், ஆகையால் இந்த தளத்திற்கு இனிமேல் வரக்கூடாது என்ற கொள்கை முடிவுடன் வெளியருகிறேன். இதுநாள் வரை பயன் படுத்தியதற்காக தங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள ்கிறேன்.
தஙலை நடுனிலை என்ட்ரு நினைதொம் ஆனல் தஙல் அப்படி அல்ல முச்லிம் தேவிரவத நிகல்ஷியை பட்டியலிட தஙல் இந்து திவிரவத அமைப்பின் பட்டியலை சுருக்கியது யென் . ஒரு மததை பட்ட்ரி எடுக்க உஙலுக்கு உரிமை இல்லை
Quoting Mutt:
Bombay movie released year: 1995.
Kannathil Muthamittal movie released year: 2002.
No common sense in your argument...First think then speak about anything...
அரசியல் சாயம் பூசப்பட்டு இஸ்லாமியரை அசிங்கபடுத்த வேண்டும் என்று எடுத்த படத்தினை அவாள் எல்லாம் கூட்டு சேர்ந்து
எடுக்கப்பட்டு அவாக்களே திட்டமிட்டே பிரச்சினையினை கிளப்பிவிட்டு தற்போது ஒரு சமுதாயம் மட்டும் பழி ஏற்படவேண்டும் என்று திட்டமிட்டே செயல்படுத்தப்பட ்டு மிக அழகாக படம் வெளியிட வைக்கப்பட்டுள்ள து. இதன் பின்னணியில் யார் இருந்தாலும், நிச்சயம் ஒரு தூய மார்க்கம் இது போன்ற மூன்றாம் தர இழிவான செயல்பட்டினால் ஒன்றும் செய்ய முடியாது. அது தெரிந்து இருந்தாலும், ஒரு சிறு எறும்பே தன்னை தாக்கவரும் எதிரியினைப்பார் த்து முன்காலை தூக்கி காட்டும் அது போன்றுதான் இதுவும் அந்த எதிர்ப்பும் என்று சவுக்கு உணர்ந்து கொள்ளட்டும்
இதை விட நாகரிகமாக உங்களுக்கு பதில் கொடுக்க இலக்கணம் எனக்கு தெரியவில்லை கருத்துக்களும் கட்டுரைகளை பதியும் போது வரலாற்றின் பதிவுகளில் பதிந்துள்ளதில் உண்மை தன்மையினை ஆராய்ந்து பல ஆதரங்களை ஆய்வு செய்து வெளியிவது சமூகத்திற்க்கு நல்லது.
ஜமால் முகம்மது
இந்த வாக்கியங்கள் எவ்வளவு தூரம் இந்த இஸ்லாமிய அமைப்புத் தலைவர்களுக்க ு பொருந்துமோ அதே அளவு கமலுக்கும் பொருந்தும்.
சமுகத்தில் பிளவை ஏற்படுத்தும் படம். உள்நோக்கம் கொண்ட படைப்பு. அமெரிக்காவிற்கு ஆதரவான படம். ஒரே ஒரு நல்ல முஸ்லிம் மற்றவரெல்லாம ் தீவிரவாதிகள். அந்த ஒரு நல்ல முஸ்லிமும் இந்திய தேசிய பற்றாளர். நல்ல முஸ்லிமாக இருப்பதற்கு ஒருவர் இந்தியாவை நேசிக்க வேண்டும்!!
படத்தோட இரண்டாவது பாகம் வராது...
இரண்டாம் பாகம் நோக்கியே படம் முடிகிறது..
கடவுளே முருகா ...இந்த முஸ்லீம்களுக்கு இந்திய உணர்வை கொடு!
Nice article...muslims should understand the situation...Please follow mohammad prophet....Don't follow 24 groups.
Thanks for this article, But you should have analyze the problems before You published.
When Visvaroopam problem in peek you have published "BURKA". This is how help to understand normal Muslims to others.
When Thppakki problem, You asked muslim leaders to condmn Kamal Hasan for Unnapol oruvan.
We are labbled already so please people like you should considrate the feelings of hurted people
அதில் சில.
“இந்த உலகில் அனைவரும் அசைவம் தான். ஏன் எனில், நாம் குடிக்கும் தண்ணீரில் கோடி கணக்கான பக்டீரியா இருக்கிறது.
அகவே அசைவம்.
அந்த நீரை கொதிக்க வைத்து குடித்தால், அது பக்டீரியா சூப் ஆகிறது.
அதுவும் அசைவம் தான்.”
ஆக ஒரு மாட்டினை கொல்வதும், தண்ணீர் குடிப்பதும் ஒன்றே என்பது இவர் கண்டுபிடிப்பு.
இதை அறியாமை என விட்டு தள்ளலாம்.
ஆனால் இதே இஸ்லாமிய மத தலைவர், மாற்று கருத்து உள்ளவர்களை பற்றி இவ்வாறு பேசுகிறார்.
“… என்பருக்கு எயிட்ஸ் உள்ளது. இவர் தாய் ஒழுக்கம் இல்லாதவர். அகவே இவர் தாய் வழியே இவருக்கு எயிட்ஸ் வந்துள்ளது”
“… என்பவருடைய மனைவி, மகள் என அனைவரும் ‘தவறான தொழில்’ செய்கின்றனர்”
“… என்பவர் தன் மகளுடன் தவறாக பழகுகின்றார்”
இந்த இஸ்லாமிய மத தலைவர் மேலே உள்ள கருத்தை வீதியில் நின்று பேசுகிறார். இதை கேட்பவர்கள் ஆண்களும், பெண்களும்.
இந்த நபர் இஸ்லாமில் இருந்து எந்த நன்மையையும் பெறவில்லை, பெறபோவதும் இல்லை.
இத்தகைய நபர்கள் இஸ்லாத்துக்கு ஆபத்தானவர்கள்.
ஈட் இச் அ ருலெ இன் ஃபொரெஇக்ன் சொஉன்ட்ரிஎச் சுச் அச் மலய்சிஅ. ஈஃப் யொஉ அச்க் பெர்மிச்சிஒன் ஃபொர் ஷோடிங் ஃபில்ம் இன் தொசெ சொஉன்ட்ரிஎச், ஃபிர்ச்ட் யொஉ முச்ட் சுப்மிட் யொஉர் ஃபில்ம் ச்ச்ரிப்ட், தென் ஒன்ல்ய் தெய் நில்ல் கிவெ பெர்மிச்சிஒன். ஃபிர்ச்ட் ரெஅட் மொரெ போக்ச் ஒதெர் தன் ரெலிகிஒஉச் மடெரிஅல்.[/ஃஉஒடெ]
[ஃஉஒடெ நமெ="முட்ட்"]//நீங்கள் கமல் அவர்களுக்கு தான் சொல்ல வேண்டும் ....அவர் ஒரு பேட்டியில் சொல்லும் போது இந்த கதை எழுதி முடித்த பிறகு அமெரிக்கன் எம்பச்ச்ய் அனுப்பி ஒப்புதல் வாங்கியதாக சொன்னார் ..அதற்கு கரணம் என்ன ??///
ஈட் இச் அ ருலெ இன் ஃபொரெஇக்ன் சொஉன்ட்ரிஎச் சுச் அச் மலய்சிஅ. ஈஃப் யொஉ அச்க் பெர்மிச்சிஒன் ஃபொர் ஷோடிங் ஃபில்ம் இன் தொசெ சொஉன்ட்ரிஎச், ஃபிர்ச்ட் யொஉ முச்ட் சுப்மிட் யொஉர் ஃபில்ம் ச்ச்ரிப்ட், தென் ஒன்ல்ய் தெய் நில்ல் கிவெ பெர்மிச்சிஒன். ஃபிர்ச்ட் ரெஅட் மொரெ போக்ச் ஒதெர் தன் ரெலிகிஒஉச் மடெரிஅல்.[/ஃஉஒடெ]
its ok brother ..if script is against them please tell they will agree to take film so u have to change the script according to them isit ???please reply to this
[/ஃஉஒடெ]
சபாஷ் ....100% சரி ...இங்க உட்கார்ந்து முகமுடி போட்டுக்கிட்டு என்ன வேண்டும் என்றாலும் பேசலாம் என்று நினைகிறார்கள் ...
One thing that came to my mind is that Viduthalai Puligal did not carry out destructive actions outside of things related to their convictions and connections, whereas killing innocent people only (like Kasab & Co's opening fire at Mumbai) cannot be justified under any yardstick. So that cannot be compared at all. We still believe that the majority of Muslims in India like you are only our people and hope you also will feel like us. The sad part is that the miniscule antipeople group gets into limelight whereas the majority of the peace loving muslims are not voicing their opinions.
தீவிரவாதம் எந்த உருவத்தில் இருந்தாலும் அது வேரறுக்கப்பட வேண்டியதே. உலகம் முழுக்க இம்மாதிரியான சம்பவங்களை நடத்தியவர்களை ‘தவறாக வழிநடத்தப்பட்டவ ர்கள்’ என்றே வரலாறு பதிகின்றது. அவர்கள் சார்ந்த கொள்கையை, மதத்தை காரணமாக காட்டியதில்லை. ஆனால் இஸ்லாம் என்று வரும்போது மட்டும், இஸ்லாம் சொல்லாத ஒன்றை சிலர் செய்யும் போது, அதற்கு மதச்சாயம் பூசி பார்க்கப்படுகின ்றது. எல்லாருக்கும் உலகம் எடுத்த அளவுக்கோலை முஸ்லிம்கள் என்று சொல்லப்படுவர்கள ் விசயத்திலும் இவ்வுலகம் கடைபிடித்திருக் குமானால் இப்பதிவிற்கு அவசியம் இருந்திருக்காது .
1. அறிவியலை துணையாகக்கொண்டு லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்தான் ஹிட்லர்,
2. FBI தகவல்படி, அமெரிக்காவில் 94% தீவிரவாத தாக்குதலை நடத்தியது முஸ்லிம் பெயர் தாங்கிகள் அல்லாதவர்களே.
3. நார்வே நாட்டில் சமீபத்தில் நடந்த தாக்குதலில், இனவெறியின் உச்சத்தில் பல மக்களை கொன்றுக்குவித்த Anders Behring Breivik…etc etc..
இப்படி சொல்லிகொண்டே போகலாம். ஆனால் இவற்றிற்கு அவர்கள் சார்ந்த கொள்கையை நோக்கி யாரும் கை நீட்டுவதில்லை.
தீவிரவாதம் என்பது ஒரு குறிப்பிட்ட மக்களை சார்ந்தது அல்ல என்று உண்மை இருக்க, சில ஊடகங்களோ,
எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகள் அல்ல…
ஆனால்
எல்லா தீவிரவாதிகளும் முஸ்லிம்களே..!
- என்று கூறுகின்றன.
இன்று ஏகாத்திய நாடுகளின் ஊடங்களில் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக காட்டும் இந்த நிலை 19ம் நூற்றாண்டின் இறுதியிலேயே ஏற்படுத்தப்பட்ட மாயை. ஏனெனில் 19ம் நூற்றாண்டுகளின் ஆவணச்சான்றுகளை ஆராய்ந்தால் எந்த ஒரு பயங்கவாத செயலும் முஸ்லிம்களால் நடத்தப்படவே இல்லை. அல்லது முஸ்லிம்கள் நடத்திய அப்படிப்பட்ட பயங்கரவாத செயல்கள் காண்பது அரிது.,
இதோ உங்கள் முன் கடந்த நூற்றாண்டின் காட்சிகளின் சாட்சிகள் நீங்களே தீர்மானித்துக்க ொள்ளுங்கள் இங்கு யார் தீவிரவாதிகள் என்று..!
Read more about அல்லாவின் திருப்பெயரால்… : சவுக்கு [8738] | அக்கம்-பக்கம் | பிற பகுதிகள் at www.inneram.com
The preacher confessed to raping and killing his daughter but was let off with only a fine.
Yahoo! India News – Mon 4 Feb, 2013
Share
LATEST NEWS »
RIYADH: In a shocking incident in Saudi Arabia, a preacher who confessed to raping and beating his 5-year-old daughter to death was let off without any jail term and was only fined 200,000 riyals for his heinous crime.
The fine is the 'blood money' that is to be paid to compensate the victim's relatives. Islamic law specifies that the 'blood money' can be paid in lieu of the death penalty.
Since the victim was a girl, the fine for the preacher, one Fayhan al-Ghamdi, was reduced to half the usual amount.
There is no clarity on this yet, but reports suggest that the money may have been offered to the girl's mother or some other relatives.
Ghamdi confessed to the crime and said he used a cane and cables to beat his daughter up. The justification the man gave for this was that he doubted that his 5-year-old daughter, Lama Ghamdi, was a virgin. He also forced her into undergoing a medical inspection.- what a crues
ஆனால் இங்கே உள்ள முல்லாக்கள் தாலிபன்களை சுதந்திர போரட்ட வீரர்கள் என்றும் அவர்களை இழிவு படுத்த கூடாது என்று கொடி பிடிகிறார்கள் ..
சரி அப்படி என்றால் அவர்கள் முதலில் தாலிபன்கள் வழியில் அவர்கள் வீட்டு பெண்களை பள்ளிக்கு அனுப்பாமல் நிறுத்துவார்களா ??..
தாலிபான்கள் போல தண்டனை வழங்கினால் இங்கே உள்ள முஸ்லிம்கள் சில பல உறுப்புக்களை இழந்து தான் திரிய வேண்டும் ...
அது ஒரு சர்சைக்குரிய விஷயம். பம்பாய் படத்தை இயக்கியதற்கு பிறகு இயக்குநர் மணிரத்னம் இயக்கவிருந்த படம் "யாழ்பாணம்" பின்னாளில் அதுவே கன்னத்தில் முத்தமிட்டால் என உருமாறு வெளியானது. ஒருவேளை ரோஜா படத்தில் காஷ்மீரிகளை சித்தரித்ததுபோல ் தங்களை காட்டி விடுவார்களோ என எண்ணி விடுதலை புலிகள் பின்னணில் இருக்கலாமோ....
அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு, சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு, மாலேகான் குண்டு வெடிப்பு மற்றும் மெக்கா மசூதி குண்டு வெடிப்பு ஆகிய இரண்டில் மட்டும்தான் இந்து தீவிரவாதிகள் குற்றம் சாட்டப்பட்டுள்ள னர்
உங்காளால் பட்டியலிடப்பட குண்டு வெடிப்பிற்கு முஸ்லிம்கள் காரணம் என எந்த அளவிற்கு ஊர்ஜித படுத்த முடியும். உங்கள் கருத்து அத்தனை குண்டு வெடிப்புகளிலும் குற்றம் சாட்டப்பட்டவர்க ள் / தண்டிக்கப்பட்டவ ர்கள் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பாதலா?
உங்கள் தோழர் அவர் கருத்தை சொல்லி இருக்கின்றார். ஆனால் என் கருத்து என்னவென்றால், தமிழ் நாட்டில் ஒரு நடிகனின் 3 படங்கள் வெற்றிகரமாக ஓடிவிட்டால் அவரது ரசிகர்கள் நாளைய முதல்வரே என் போஸ்டர் ஒட்டுவார்கள், இதற்க்கு எடுத்துகாட்டு தமிழக ஆரசியல் வரலாறு. காரணம் திரைப்படம் ஒரு சக்திவாய்ந்த போதை வஸ்துவாக தமிழக மக்களிடம் கலந்திருக்கின்ற து. இல்லையென்றால் இது சாதாரண திரைபடம்தானே இதை பார்த்துவிட்டு போக வேண்டியதுதானே என சொல்லும் கருத்து கந்தசாமிகள், இது சாதாரண திரைபடம்தானே இதை பார்க்கவிட்டால் என்ன குடி முழுகப் போகிறது.. என தங்களை பக்குவபடுத்தி இருப்பார்கள்
RSS feed for comments to this post