முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
பாலச்சந்திரன். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 27
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
ஞாயிற்றுக்கிழமை, 24 பிப்ரவரி 2013 18:58

19SRI1_jpg_1368786g

பன்னிரண்டு வயது குழந்தை

ஈழக்குழந்தை என்பதால்

ஏன் எதற்கு கொல்லப்படுகிறேன்

என்று அறியாமல்

"கேட்பதற்கும் ஆளில்லாததால்"

சல்லடையாக்கப்பட்டு

படுகொலை செய்யப்பட்டான்!

செய்தி மட்டும்

ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்க தக்க

அமெரிக்க படத்துக்கிணையாக,

ஆவணப்படமாக

எட்டுத்திக்கும்,

இலவசமாக காட்டப்படுகிறது.

ஆங்காங்கே

அரசியல் இலாபத்திற்கென்றாலும்,

கண்டனங்களும்,  விமர்சனங்களும்

சூடு பறக்க விவாதிக்கப்படுகின்றன.

வில்லனாக,

எட்டுக்கோடி தமிழர்களை

தன்னகத்தே கொண்ட இந்தியா.

சத்தமில்லாமல்

தனது வேலையை செய்கிறது.

"ராஜபக்‌ஷ,

நிச்சியம் தண்டிக்கப்படலாம்",

தமிழர்களுக்கு

இந்தியா

வில்லனாக இல்லாவிட்டால்.

சோனியாவின் ஒற்றனாக

"தமிழகத்தில் எவரும் இல்லையென்றால்",

இந்தியா தமிழர்களின் வில்லனாக

நீண்டகாலம் தொடரமுடியாது.

ராஜபக்‌ஷ தண்டிக்கப்பட்டால்

பூனை வெளியே வந்துவிடும்.

அதனால்

இலங்கை அல்லது,

இந்திய அரசியலில்

படுபட்சி காலம் தவிர்ந்து

ராஜபக்‌ஷவை

சர்வதேசமும் தண்டிக்க முடியாது.

ஆவணப்படத்தின்

அலைவரிசைக்கேற்ப

படுகொலை சூத்திரதாரிகளும்

தந்தரம் புரிந்தவர்களும்

மக்கள் கிளர்ச்சியை மந்தமாக்க

மேடை அமைத்து

தேர்தல் திருவிழாவுக்காக

அப்பாவியாக

வேடங்கட்ட தலைப்பட்டுள்ளனர்.

பாலச்சந்திரனின்

கோரக் கொலைச் செய்தியை,

இன்னொன்று மறைக்கும்வரை

ஒப்புக்கு சப்பாணியாக,

உலகத்தை ஏமாற்ற

அலகு குத்தி

ஆயிரம் மைல்

அங்கப்பிரதிஸ்டை செய்யவும்

தமிழீன தலைவர் தயாராகி விட்டார்.

கருணாநிதி

அன்று மனிதனாக தன்னை

கொஞ்சமாவது நினைத்திருந்தால்,

பாலச்சந்திரன் சல்லடையாகியிருக்க மாட்டான்.

முத்துக்குமாரும் மூட்டிக்கொண்டிருக்கமாட்டான்.

கொலைக்களம் ஒன்று

ஆவணப்படமாக

ஹிட்லரின் ஜெர்மனி படங்களை

விஞ்சுமளவுக்கு வெளிவந்துமிருக்காது.

சனியன் பிடித்து

இந்த அழுக்கு மனிதன் செய்த சதி,

பல இலட்சம்

படுகொலையில் விடிந்திருக்கிறது.

இருந்தும் கிரகநிலை மாறி

சனியன் விடுபட்ட

அறிகுறி தென்படவில்லை.

கண்டம் தாண்டி

இங்கிலாந்தின் சனல் 4

தொலைக்காட்சி

இலங்கைக்கும்,  இந்தியாவுக்கும்

தொல்லைக்காட்சியாகி

கொள்ளி வைத்துவிடுமோ என்று மட்டும்

வஞ்சகர்கள் அஞ்சுகின்றனர்.

பாலச்சந்திரனை படுகொலை செய்தது

இலங்கை இராணுவம்.

கொலைக்களத்தை

வடிவமைத்தது இந்திய அரசு.

சோனியா அரசுக்கு பந்தல் போட்டு

புரியாத கிரந்தத்தில் சுலோகம் சொல்லி

உற்சவம் நடத்தி

திசை திருப்பியது கருணாநிதி.

வேலியே பயிரை மேய்ந்துவிட்டு

விடுப்புக்காட்ட

சாட்சிக்கூண்டில் ஏறி வாகடம் பேசுகிறது.

யார்

யாரை குற்றம் சொல்லுவது,

எவரை தண்டிப்பது?

"கொலைக்களம்"  ஆவணப்படம்

உணர்ச்சியை தூண்டும் ஒன்றாகவே

சிலநாட்கள் ஓடி மறைந்துவிடும்.

ராஜபக்‌ஷ சிங்களவன்.

அறுபது வருடங்களாக

தமிழனை எரிப்பதற்காக சிங்களவன்

தீ மூட்டி திட்டமிட்டு

காத்திருக்கிறான்.

இத்தாலிக்காரி மட்டும்

ராஜபக்‌ஷவுக்கு கம்பளம் விரித்திருக்காவிட்டால்

முள்ளிவாய்க்கால் முட்டுக்குள்

தமிழனை எவராலும் அழித்திருக்க முடியாது.

செல்ல மகளை காப்பதற்காக,

தமிழினத்தின் எழுச்சி அனைத்தையும்

திட்டமிட்டு செத்தவீடாக்கிய

கருங்காலி கருணாநிதி.

"பாலச்சந்திரன்

பிரபாகரனின் மகன் என்பதால்

அது மட்டும்தான்

படுகொலை அல்ல".

ஆவணப்படத்தில் காட்டப்பட்ட

அனைத்தும் நவீன நரபலிகள்.

அரசியல் இயலாமைக்காக

இந்தியா தேர்ந்தெடுத்த பஞ்சதந்திரம்.

வலிமையற்ற இனம் வலிமையுடன்

திரண்டுவிட்டதால்,

காவுகொள்ளப்பட்ட இனப்படுகொலை.

.

காட்டுமிராண்டிகளால் கழுத்தறுக்கப்பட்ட

கூட்டுச்சதி.

காணாமல் போனவர்கள்

இலட்சத்து முப்பத்து ஏழாயிரம்பேர்

அத்தனையும் இறந்த காலங்கள்.

காணாமல் போன ஆண்களின்

தொண்ணூறு ஆயிரம் மனைவிகள்

விதவைகள்.

அங்கு கருணாநிதியைப்போல்

கைம்பெண்களுக்கு வாழ்வு கொடுக்க

ஆண்களில்லை.

பாலச்சந்திரன் மட்டும்

படுகொலை செய்யப்படவில்லை.

ஒரு இனம் திட்டமிடப்பட்டு

கருவறுக்கப்பட்டிருக்கிறது.

இனப்படுகொலையாளி

ராஜபக்‌ஷ மட்டும்தான் என்பதை

மீடியாக்கள் நிறுத்திவிடவேண்டும்.

இந்தியாவும்,  கருணாநிதியும்

இணைந்த

இனப்படுகொலை என்பதை

துணிந்து  நிறுவவேண்டும்.

ஈழத்தமிழர்களை திட்டமிட்டு அழித்தது

இலங்கை,

மற்றும் இந்தியா.

சர்வதேசம் சோரம்போனது.

செய்தவன் ராஜபக்‌ஷ, என்றால்

சித்திர குப்தராக

எழுதுகோல் ஏந்தியவர்கள்

சோனியா, மன்மோஹன்,

எருமை வாகனமாக

அனைத்தையும் சுமந்தது கருணாநிதி.

வழக்கு,

அமெரிக்காவின்

அபிவிருத்திச்சபையாக செயற்படும்

ஐநாமன்ற வாசல்வரை போயிருக்கிறது

இதில்

யார் எவரை தண்டிக்கப்போகிறார்கள்?

ஆவணப்படத்தை பார்த்து

உணர்ச்சி வசப்படுபவர்கள்,

2009ம் ஆண்டு

தமிழகம் கொண்ட எழுச்சியை

திரும்பி பார்க்கவேண்டும்.

படுகொலை நடந்தபோது

தமிழர்களின் அரக்கனாக

சிம்மாசனத்தை வைத்துக்கொண்டு,

சோனியாவின் நிழலுக்குள்

பதுங்கி

நஞ்சு விதைத்த கருணாநிதி,

இன்று மேடையேறி

குரல் மாற்றி ஊளையிம்போது

2009 நிகழ்வுகள் அனைத்தும் மறந்துவிட்டதாகவே

மனம் பதைபதைக்கிறது.

கருணாவுக்கு தந்திரம் தெரிந்ததால்,

ஏமாற்றும் வித்தை புரிந்ததால்,

எல்லோரையும் முந்திக்கொண்டு

இடம் பொருள் ஏவல் அறிந்து

ஐநாவின் பிறவேலிவரை

நோஞ்சான் தளபதியை அனுப்பியிருக்கிறார்.

2009ல் ஈழம் சுடுகாடானபோது

தள்ளுவண்டியில் டில்லி சென்று

அவர் சோனியாவிடம் கோரியது

குடும்ப மந்திரி பதவியும்

செல்வச்செழிப்புக்கு வழிவகையும்

இன்று எதற்காக பறந்தடிக்கிறார்?

நடந்தவற்றை எல்லோரும் மறந்துவிட்டனர்.

எங்கே ஒளிந்தது உண்மை!

யாரிடம் இருக்கிறது மனிதாபிமானம்?

எங்கே இருக்கிறது மனுநீதி?

அனுமதி இல்லாமல்

தெரு நாயை சுட்டுவிட்டால்

தண்டனை.

நடு முற்றத்தில்

நீ வளர்த்த மரத்தை நீ தறித்தால்

அது சட்டவிரோதம்.

பெற்று வளர்த்த பிள்ளையை

தாய் அடித்துவிட்டால்

பெருங் குற்றம்,

பொது இடத்தில் சத்தம்போட்டு பேசினால்

விதிமீறல்,

இது

சர்வதேசத்தின் மனிதாபிமான

கட்டளைச் சட்டம்.

எறும்புக்கு ஆயுள் எவ்வளவு.

நரிக்கு எத்தனை பல்லு.

நத்தை

மணிக்கு எவ்வளவு தூரம் நகரும்,

நடுக்காட்டில் "துணைவி இல்லாமல்

பச்சோந்தி தனியாக வாழுகிறதா,

பன்றி புணர்ச்சி செய்யும்போது

பட்டாசு வெடிக்கக்கூடாது.

அது

அறிவியல் +  மனிதாபிமானம்??

அவைகளை கண்காணிக்க,

வரையறை செய்ய

ஐநா சபையில்

தனிப்பிரிவு செயற்படுகிறது.

உலகம் முழுவதும்

அமைப்புக்கள் அதற்காக

விழி மூடாமல் சுழியோடுகின்றன.

உன்னை வழிநடத்த உலகத்தில்

ஏதாவது சட்டம் உண்டா?

இருந்தாலும்,

அதை அண்மிக்க

எவராவது விட்டு விடுவார்களா?

மிஞ்சிப்போனால்

கருணா, ஜெயலலிதா விஜயகாந்து, திருமா. சம்பந்தன்

அவர்கள் உயிரோடு இருந்திருந்தால்

முள்ளிவாய்க்காலில்

தொடர்ச்சியாக மூன்று மாதம்

திறந்த வெளியில் கருமாதி நடந்திருக்குமா?

அன்று

கொள்ளைக்கார மகளுக்காக

டில்லியில்

கண்ணாடியை கழற்றி வைத்துவிட்டு

சோனியாவின் காலடியில் மண்டியிட்டு

கண்ணீர் விட்டு

கருணா

மகளை மீட்டு வரவில்லையா?

ஏன் ஈழத்தில் ஒரு குழந்தையை

கருணாவால் காப்பாற்ற முடியவில்லை?

அன்று அகதிகளுக்கு

நெடுமாறன் கப்பலில் மருந்து உணவு அனுப்ப

குறுக்கே நின்ற கோடரிக்காம்பு

கருணா.

இப்போ மட்டும்

ஐநாவில் அனுமதி வாங்கி

கப்பல் கொண்டுபோய்

தமிழர்களை காப்பாற்றி விடுவாரா.

மோட்டு தமிழா

ஈனத் தலைவரின்

பம்மாத்தை இன்னுமா நம்புகிறாய்!

பாலச்சந்திரன்

தமிழ்க் குழந்தை

சாகப்பிறந்தவன் என்று

விதிக்கப்பட்டிருக்கிறது.

செத்து தொலையட்டும்.

சாவுக்கான சாத்தான் யார் என தேடி

கழுவிலேற்றப்பார்.

உணர்ச்சிவசப்படாதே.

முன்னால் கிடக்கும்

இரத்தம் தோய்ந்த கடப்பாரையையும்

கண்ட கோடரியை

கண்திறந்து பார்.

துல்லியமாக

கொலைகாரனின் கை அடையாளம் தெரிகிறது.

பாலச்சந்திரனை,

சல்லடையாக்கி தூக்கிப்போட்டதை

கண்டங்கடந்து

இங்கிலாந்துக்காரன் பகிரங்கப்படுத்துகிறான்.

ஏழு கோடி தமிழர்கள் வாழும்

தலைப்பாகை கட்டிய

இந்தியா

இழுத்து மூடிக்கொண்டு படுத்திருக்கிறது.

ஏன் என்று சிந்தித்தாயா?

பாலச்சந்திரன் படுகொலை

சுரங்குறைந்து

திண்ணை பேச்சாகி

மண்ணோடு மண்ணாகிவிட வேண்டடும்.

அதுவரை போலி கண்டனங்களும்

காது குத்துக்களும் தொடரும்.

பல

பத்தாயிரம் ஈழ குழந்தைகளில்

பாலச்சந்திரனும் ஒன்று.

அதுதான் நிதர்சனம்.

நீ தமிழனென்றால்!

அதுவும்

ஈழத்தமிழனென்றால்!

உன்னை

சுட்டு படுகொலை செய்யாமல் விட்டால்

பெருங்குற்றம்.

பிஞ்சு குழந்தைகளையும்,

பேறுகால தாய் இனத்தையும்,

வஞ்சகமாக கொல்லாமல் விட்டால்

அது குற்றம்.

ஈழத்து பெண்களை கற்பழிக்காமல் விட்டால்

சோனியாவும் தாத்தாவும்

கோபித்துக்கொள்ளுவார்கள்.

அவர்களை துன்புறுத்தாமல் விட்டால்

தேசத்துரோகம்

தமிழகத்தில்

அரசியல் செய்ய ஆதாரமில்லை.

ஓட்டாண்டியாக்கி

ஓட ஓட விரட்டாமல் விட்டால்.

அது

எழுதப்படாத சர்வதேச அவமதிப்பு,

இப்படித்தானே புரியப்பட்டிருக்கிறது

ஈழத்தமிழினத்துக்கு.

உரிமைக்காக போராட தமிழனுக்கு

உரிமையில்லை.

கடலில் நீ கட்டுமரம் கட்டி

மீன் பிடிக்கக்கூடாது.

அணுவை பரிசோதிக்க

உன்னை பயன்படுத்தினால்

உன் சந்ததியை அழித்தாலும்

நீ வாய் திறக்கக்கூடாது.

நீ குப்புற குறுகி

படுத்து கிடக்கவேண்டும்.

கோபப்பட்டால்.

ஈழத்தின் கதி

உனக்கும் நடக்கலாம்  .

உனக்கென்று

ஆயிரம் அரசியல் வியாதிகள்

அதிகாரத்துடன் இருந்தாலும்

அவர்கள்  ஒருபோதும்

உண்மையாக

உனக்காக குரல் கொடுக்கப்போவதில்லை.

அவர்களுக்கு ஆயிரம் பிரச்சினைகள் உண்டு.

நீ தமிழன்

உன்னை காப்பாற்றுவதால்

அவர்களுக்கு என்ன இலாபம்?

மஹிந்த ராஜபக்‌ஷ அரசன்.

அவன் கொலை செய்தால்

அது கலாச்சார புரட்சி.

அவனை காப்பாற்ற

இந்தியா இருக்கிறது

தமிழ்நாடு சார்பாக

கருணாநிதி இருக்கிறார்.

பகை நாடுகளாக இருந்தாலும்

பாக்கிஸ்தான் சீனாவுடன்

ஒன்றிக்கலந்து சோனியா அரசு

தமிழனுக்கு மங்களம் பாடியிருக்கிறது.

உனக்கு நீ மட்டும்தான்.

மிஞ்சிப்போனால்

சீமான், வைகோ

அவர்களும் அத்துமீறினால்

சட்டம் தன் கடமையை செய்யும்.

தாத்தா அடிக்கடி சொல்லிய வார்த்தை.

செத்துப்போனால்

சில நாட்கள் சத்தம்போட

நாலுபேர் வரலாம்

தீக்குளித்து எதிர்த்தாலும்

மாற்றி எழுதும் வல்லமை தமிழனுக்கில்லை.

இரும்பு நெஞ்சுகள் ஒன்று சேர்ந்து

தடையத்தை மாற்றிவிட

நீலிக்கண்ணீர் வடித்து

பிரமாண்ட பாலம் கட்டுகின்றன.

காலமாற்றம் ஒன்று தவிர

கண்ணுக்கெட்டிய தூரம் வரை

எதுவும் தெரியவில்லை.

இளங்குருத்து

பாலச்சந்திரன்

அவனது பிஞ்சு நெஞ்சில்

ஆணியடித்ததுபோன்ற

ஐந்து குண்டுத் துளைகள்.

ஈட்டியாக நெஞ்சை துளைக்கின்றன.

அவனது கடைசி நேரம்

எப்படி காய்ந்திருக்கும்.

மிரட்டுவதற்கு

துப்பாக்கி

தூக்குகிறார்கள் என்று நினைத்திருப்பானோ?

முலை கொடுத்த தாயின்

அரவணைப்புக்காக ஏங்கியிருப்பானோ?

பக்கத்து நாடு

நிச்சியம் உதவும் என்ற வதந்தியை

நம்பியிருப்பானோ?

அனைத்தும் பூய்ச்சியமாகிவிட்டது.

அவன்

ஓடும்போது சுடப்பட்டிருந்தால்,

ஒளிவிடத்திலிருந்து கொல்லப்பட்டிருந்தால்,

ஆயுதத்துடன் பிடிபட்டிருந்தால்,

அது நியாயம்.

அல்லது

ராஜீவ் காந்தியைப்போல

குண்டு வெடிப்பில் செத்திருந்தால்

விசாரித்து விடையறிய நாளெடுக்கும்.

அவன் ஓடவில்லை ஒளியவில்லை.

"இன்னும் விளையாட வேண்டும் என்பதற்காக

சரணடைந்திருக்கிறான்".

பலி ஆட்டுக்கு

மஞ்சள் நீராட்டி

பழம் கொடுத்து கழுத்தறுத்ததபோல,

மிக சாதாரணமாக

பாலச்சந்திரனுக்கு

பிஸ்கற் கொடுத்து

சுட்டு கொன்று படம்பிடித்து போட்டிருக்கிறது

ஒரு அரக்கனின் அரசு.

ஈழத்தில் பிறந்தது

அந்த குழந்தையின் குற்றமென்பதா?

தமிழனாக பிறந்ததின் தண்டனையா?

பிரபாகரனுக்கு பிள்ளையாக பிறந்தது

அவனது குற்றமா?

கனிமொழியின் குழந்தை

ஆதித்யாவை

ராஜபக்‌ஷவின் படைகள் கொன்றிருந்தால்,

கருணாநிதி மத்திய அரசுக்கு

முண்டு கொடுத்துக்கொண்டு

தேனீர் ஆற்றிக்கொண்டிருப்பாரா?

இப்படித்தான் ஆவணப்படத்தை பார்த்து

பட்டிமன்றம் நடந்திருக்குமா?

எங்கே இருக்கிறது நீதி!

அவர்கள் ஆளப்பிறந்தவர்கள்

வானத்திலிருந்து

வந்ததற்கு சமமானவர்கள்.

பன்னிரண்டு வயது

பாலச்சந்திரன் என்ன

அரசியல்வாதியின் மகனா?

கூட்டணி தர்மம் காக்கும் குலக்கொழுந்தின்

வாரிசா?

அவனை யார் தமிழனாக பிறக்கச்சொன்னது?

அவனது தந்தை பிரபாகரனை

யார்

தமிழனுக்காக போராடச்சொன்னது?

ஆனாலும்.

காலமாற்றம் ஒன்றின்

சக்கரத்தடத்தில்

அராஜகம் மேலெழுந்து சதிராடுகிறது.

சக்கரம் இன்னும் சுழலும்

அது நியதி.

-ஊர்க்குருவி-

Comments  

-1 #47 anniyan 2013-03-02 21:44
Quoting Tamilan123:
அந்நியன் என்ற பெயரில் தமிழனுக்கும் இஸ்லாமியர்களுக் கும் சிண்டு முடிந்துவிட்டு குளிர் காய நினைக்கும் மனித பதரே !
.

நான் சிண்டு முடியவில்லை.. "தவ்ஹீத் ஜாமாத்" என்ற தனித்தமிழ் இயக்கத்தின் தலைவரே சொல்லி இருக்கிறார் :

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை ஆதரிக்க முடியாது: பி.ஜெய்னுலாப்தீன்

மனித நேயத்தைப் பற்றிப் பேசக் கூடிய இந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏன் இதுபோன்று அநியாயத்திற்கு எதிராக குரல் கொடுக்கவில்லை என்பதற்கு பல காரணங்கள் உள்ளன.

விடுதலைப் புலிகள் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதம் தாங்கி போராடியவர்கள். இவர்கள் போராடும் போது இலங்கை அரசு செயல்பட்டதைப் போன்றுதான் இவர்களின் செயல்பாடுகளும் இருந்தன.

விடுதலைப் புலிகள் போருக்கு வந்த சிங்கள ராணுவத்தினரை மட்டும் சுட்டுக் கொல்லவில்லை. அப்பாவி மக்களையும் தான் சுட்டுக் கொண்டார்கள்.

விடுதலைப் புலிகளும் சிங்கள அரசு செய்ததைப் போன்றே குற்றங்களைச் செய்தார்கள் என்பதை தமிழ் சமுதாய மக்களுக்கு இருட்டடிப்பு செய்துவிட்டனர். தமிழக அரசியல்வாதிகள்.

இருவரும் ஒரே குற்றச் செயலில் ஈடுபட்டிருக்கும ் போது கண்டிக்க வேண்டுமானால் ராஜபக்சவையும், விடுதலைப் புலிகளையும் கண்டிக்க வேண்டும். விடுதலைப் புலிகளை நல்லவர்களாகவும் , ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசை கண்டனத்திற்குறி யதாகவும் காட்டுவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

சில காலங்களுக்கு முன்னர் இலங்கையில் வடக்குமாகாணத்தி ல் உள்ள யாழ்ப்பானத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிகமான இஸ்லாமியர்கள் பெரிய தொழிலதிபர்களாக இருந்தார்கள். பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் ஒரு இஸ்லாமியர்கள் கூட இருக்கக் கூடாது என 24 மணி நேரம் அவகாசம் கொடுத்து, அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களையு ம் வீடு, வாசல், சொத்துக்களை விட்டு விரட்டியடித்தனர ். அவ்வாறு அந்த இடத்தை விட்டு வெளியேராதவர்களை பெண்கள், குழந்தைகள் என்றும் பார்க்காமல் சுட்டுக் கொன்றனர்....
Quote
 
+1 #46 anniyan 2013-03-02 21:40
Quoting Channel 5:
[ஃஉஒடெ நமெ="அன்னியன்"]நான் யாரையும் புண் பண்டுத்த கேட்கவில்லை. தாளவொண்ணா வருத்தத்தால் கேட்கிறேன் :

1) விஸ்வரூபம் படத்தை எதிர்த்து ஒரே நாளில் ஆயிரக்கணக்கில் கூடி போராட்டம் செய்யும் தமிழ்நாட்டின் தமிழ் முஸ்லீம்கள்,
//

முண்டமே செய்திதாள்களை படிப்பதில் அக்கறை கொள், உனது இந்து தீவிரவாதத்தை இங்கு காட்டாதே!

//

ஆமாம் .. நாங்க முண்டம்.. இவரு ஹார்வர்ட்ல பி ஹெச் டி
எந்த செய்தித்தாளை படிக்கணும்? நக்கீரனையா? முரசொளியையா? முஸ்லீம் முன்னேற்றக் கழக அறிக்கையையா?
Quote
 
0 #45 anniyan 2013-03-02 21:35
Hello கும்பிட்ரென் சாமி,
Srilanka was governed British India too, and they have same laws. The same Indian legal application, plea are present in Srilanka too. But When British left, They wanted to let problems between Tamils and Sinhalese, so they did not create any legal protections for Tamils.

Further more, என்னுடைய கமெண்டுக்கு + போட்டவர்கள் மனிதாபிமானத்தின ால் போட்டார்கள் ; தங்கள் குற்றவியல் சட்ட அறிவினால் அன்று.

சரி இது ஏன் உங்களுக்கு வயித்தெரிச்சலை உண்டுபண்ணுகிறது ?

Quoting கும்பிட்ரென் சாமி:
[ஃஉஒடெ நமெ="அன்னியன்"]சுப்பிரமணியன் சுவாமி, பிரபாகரனின் மகன் கொல்லப்பட்ட போட்டோ மாற்றி வடிவமைக்கப்பட்ட து, உண்மையான போட்டோ இல்லை என்று சொன்னாராம். அப்படியென்றால் பாலச்சந்திரனுக் கு ஹபியஸ் கார்பஸ் ( ஆள் கொணர்வு) மனு போட்டு உயிரோடு கொண்டுவருவாரா கோர்ட் செல்லுவதையே வழக்கமாகக் கொண்ட சு சுவாமி?[/ஃஉஒடெ]
இதுக்கு போய் வரவேற்ப்பு!!!. இந்த குழந்தை இந்திய குழந்தை அன்று. ஹேபியஷ் கார்ப்பஷ் போட முடியாது!!!. ஆனால் பதிவிட்ட புத்திசாலிக்கு வரவேற்ப்பு அமுக்கிய அதி மேதாவிகளுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்!!!
Quote
 
+1 #44 Karunaa 2013-03-01 02:22
என்ன சவுக்கே மனம் பேதலித்து விட்டதா? நிறைய கமென்ட்ஸ் காணலே.......
Quote
 
+2 #43 Channel 99 2013-02-28 13:43
சவுக்கே, விஸ்வரூபம் எடுத்து விட்டதோ?
Quote
 
+1 #42 Channel 5 2013-02-28 13:40
[ஃஉஒடெ நமெ="அன்னியன்"]நான் யாரையும் புண் பண்டுத்த கேட்கவில்லை. தாளவொண்ணா வருத்தத்தால் கேட்கிறேன் :

1) விஸ்வரூபம் படத்தை எதிர்த்து ஒரே நாளில் ஆயிரக்கணக்கில் கூடி போராட்டம் செய்யும் தமிழ்நாட்டின் தமிழ் முஸ்லீம்கள், ஏன் பாலச்சந்திறனைக் கொன்றதற்கோ அல்லது ஆயிரக்கணக்கில் தமிழர்களைக் கொன்றதற்கோ ஆயிரக்கணக்கில் கூடி போராடக் கூடாது? முஸ்லீமகள் அவர்களே தாங்கள் தமிழர்கள் இல்லை என்கிறார்களா?

2) இலங்கையைச் சேர்ந்த தமிழ் முஸ்லீம்கள் தமிழர்களை ஒடுக்க வேண்டும், ள்ட்டே யை வளர விடக் கூடாது என்கிறார்களே, அவர்களும் தமிழர்கள் இல்லை, தாங்கள் முஸ்லீம்கள் என்று ஏற்றுக் கொண்டதநாலா? (ப்ரோஃப் : ஹ்ட்ட்ப்://1.ப்ப்.ப்லொக்ச்பொட்.சொம்/-ஃஃப்8ழ்4க்வ்ண்க ்ட்க்/ஊப்64ஒ77ழ்ம்டீ/ஆஆஆஆஆஆஆஆண்9ச்/ற்5ஹ்ஸ்ப்5ஹ்5க் ௯ஈ/ச்1600/முச்லிம்ச்+இன்+ ஸ்ரிலன்க.ஜ்ப்க்)

3) இலங்கைக்கு மிக நெருக்கமாக உள்ள தமிழ்நாட்டுப் பகுதி இராமநாதபுரம். அந்ததத் தொகுதியின் ம்ளா முஸ்லீம் கட்சியை சேர்ந்த ஜாவாஹிருல்லா இலங்கைத் தமிழர்களுக்கு ஏதாவது செய்துள்ளாரா? ஏன் அவரும் தமிழர்களை எதிர்க்கிறார்?

4) பிறப்பால் தமிழர்கள் அல்லாத, ஹிந்துத்துவ ஆன்மீக தலைவர்களான 'வாழும் கலை (ஆர்ட் ஒஃப் ளிவிங்)' ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மாதா அமிரிதனந்தமாய் தேவி ஆகியோர் சுனாமியால் பாதிக்கப்பட்டவர ்களுக்கு, ஈழத்தமிழர்களுக் கு வீடு கட்டிக் கொடுத்தல், குடியமர்த்தல், வாழ்வுரிமைப் பேச்சு என்று எவ்வளவோ செய்துள்ளார்கள் . இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த அர்ஜுன் சம்பத் இலங்கைத் தமிழருக்காகப் போராடி கைது செய்யப் பட்டுள்ளார் (போட்டோ ஆதாரங்கள் உள்ளன. வேண்டும் என்றால் தருகிறேன்). இத்தனைக்கும் இவர்கள் மூவருக்கும் நன்றாகத் தெரியும் பல ஈழத்தமிழர்களும் , செம்படவர்களும் கிருத்துவர்கள் என்று. ஹிந்துக்களால் மொழி என்ற தடையைத் தாண்டி "வாடிய பயிரைக் காணும் போதெல்லாம் வாடினேன்" என்ற வள்ளலார் வாக்குப்படி அன்புக் கரம் நீட்ட முடிகிற பொது, ஏன் முஸ்லீம்கள், கிருத்துவர்கள், திராவிட கட்சிகளால், கம்யூனிஸ்டுகளால ் அவர்கள் கட்சியை மீறி அன்பு காட்ட, ஏன் கேவலம் வருத்தப்படக்ககூ ட முடிவதில்லை?

//

முண்டமே செய்திதாள்களை படிப்பதில் அக்கறை கொள், உனது இந்து தீவிரவாதத்தை இங்கு காட்டாதே!

//
Quote
 
-2 #41 கும்பிட்ரென் சாமி 2013-02-28 11:44
[ஃஉஒடெ நமெ="அன்னியன்"]சுப்பிரமணியன் சுவாமி, பிரபாகரனின் மகன் கொல்லப்பட்ட போட்டோ மாற்றி வடிவமைக்கப்பட்ட து, உண்மையான போட்டோ இல்லை என்று சொன்னாராம். அப்படியென்றால் பாலச்சந்திரனுக் கு ஹபியஸ் கார்பஸ் ( ஆள் கொணர்வு) மனு போட்டு உயிரோடு கொண்டுவருவாரா கோர்ட் செல்லுவதையே வழக்கமாகக் கொண்ட சு சுவாமி?[/ஃஉஒடெ]
இதுக்கு போய் வரவேற்ப்பு!!!. இந்த குழந்தை இந்திய குழந்தை அன்று. ஹேபியஷ் கார்ப்பஷ் போட முடியாது!!!. ஆனால் பதிவிட்ட புத்திசாலிக்கு வரவேற்ப்பு அமுக்கிய அதி மேதாவிகளுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்!!!
Quote
 
-1 #40 Ball Singam 2013-02-28 11:16
புலிகள் எத்தனை பேர்களை போட்டு தள்ளினார்கள் ஆகையால் இதெல்லாம் விட்டு விட்டு அவர் அவர் வேலைகளை பார்க்கவும்.
Quote
 
+1 #39 Savukk 2013-02-28 11:02
தீதும் நன்றும் பிறர் தர வாரா.
Quote
 
0 #38 Appavi 2013-02-27 11:53
ஒரு குழந்தையை கொல்லுவது பாவம் அதர்கு பாவ செயல் செய்தவர் பதில் சொல்லியெ ஆக வென்டும்
/**தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பத என்ன என்று உங்கள் தொண்டர் அடிப்பொடிகள் ஒருவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.**/
இது எல்லா கட்டுரைகும் பொருந்தும்
Quote
 
-6 #37 True face 2013-02-26 17:11
/**Exactly that is what I am asking. You Muslims show as supporting Tamils in Tamilnadu, but in Srilanka you are totally opposite. Which is your true face? **/

true face : we are not opposing all tamil people in srilanka ...we are opposing only LTTE (since they took weapons to fight for their rights..)are u really agree taking weapons in hands against goverment !!!..Tamil people here and srilanka 90% not agree for taking weapons thats y still tamilnadu as amaithi poonga
Quote
 
-3 #36 nermai 2013-02-26 13:58
Quoting tharik:
குழந்தையின் முகத்தை என்னால் பார்க்க முடியவில்லை,குழ ந்தையை நினைத்து என் மனம் பதறுகிறது ,கண்ணீர் மட்டுமே சிந்த முடிகிறது.எங்கு திரும்பினாலும் குழந்தையின் முகம் மட்டுமே மனதில் நிற்கிறது.
இவன் முகத்தை பார்த்த பிறகும் அதை எதிர்த்து பேசுபவர்கள் இருக்கிறார்கள் என்று உணரும் பொழுது நிச்சயம் நாம் நாகரீக உலகில் நாகரீக மிருகங்களோடு வாழ்கிறோம் எனபது மட்டும் உண்மை.கொன்றதுடன் கொடி பிடித்து கூக்குரல் இடுவது போதும் ,இனி யாரும் கொல்லப்பட கூடாது கூக்குரல் ஒழித்து கொண்டே இருக்கட்டும் ,ராஜபக்க்ஷே பெயரை தமிழ் அகராதியில் நரமாமிச உன்னி என்று மொழி பெயர்க்க வேண்டும்.
ராஜபக்க்ஷே தூக்கில் ஏற்றும் நாளை மற்றும் ஒரு தமிழர் தினமாக கொண்டாடுவோம்.

http://en.wikipedia.org/wiki/List_of_attacks_attributed_to_the_LTTE

It has been banned as a terrorist organization by 30 countries

dont forget LTTE Act 1996 to 2009 wht happend to common people
Quote
 
-1 #35 nermai 2013-02-26 13:55
[ஃஉஒடெ நமெ="அன்னியன்"][ஃஉஒடெ நமெ="ஸீறாஜ்"]அந்நியன் என்ற பெயரில் விஷத்தை கக்குபவரே, இலங்கையில் முஸ்லிம்களுக்கு ம் விடுதலைப்புலிகள ுக்கும் இருந்த பழைய கசப்புனர்வுகளை மறந்து தற்பொழுது ஒருவருக்கொருவர் பாதிக்கப்படும்ப ொழுது தமிழகத்தில் தமி ழர்கள் என்று ஓர் அணியில் நின்று ஒட்டுமொத்தமாக குரல் கொடுத்து போராட்டம் நடத்தக்கூடிய சூழலில் உம்முடைய நஞ்சை விதைத்து பகைமையை உருவாக்கவேண்டாம ். பாலச்சந்திரன் படுகொலையை கண்டித்து தமிழகத்தில் முதன் முதலில் இலங்கை தூதரகத்திற்கு முன் ஆர்பாட்டம் செய்து தன்  கோபத்தை காட்டியது மனிதநேய மக்கள் கட்சியும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகமும்தான்.[/ஃஉஒடெ]

ஏ௯அச்ட்ல்ய் தட் இச் ந்ஹட் ஈ அம் அச்கிங். யொஉ முச்லிம்ச் ஷொந் அச் சுப்பொர்டிங் டமில்ச் இன் டமில்னடு, புட் இன் ஸ்ரிலன்க யொஉ அரெ டொடல்ல்ய் ஒப்பொசிடெ. ந்ஹிச் இச் யொஉர் ட்ருஎ ஃபசெ?

யொஉ அரெ சயிங் ஈ அம் ச்பிட்டிங் வெனொம். ம்ர் ஸம்சுடேன் சய்ச் பலசன்ட்ரன் இச் ஜுவெனிலெ ஸ்னகெ அன்ட் ஹச் வெனொம் டோ.

ந்ஹ்ய் அரெ யொஉ நொர்ரிஎட் ப்ய் ஒஉர் வெனொம்? ந்ஹட் டமில்ச் அரெ கொஇங் டொ டொ அகைன்ச்ட் யொஉ முச்லிம்ச்? தெய் டொன்ட் டொ அன்ய்திங் அகைன்ச்ட் எவென் றஜபக்செ.[/ஃஉஒடெ]
http://en.wikipedia.org/wiki/List_of_attacks_attributed_to_the_LTTE

It has been banned as a terrorist organization by 30 countries
Quote
 
-7 #34 nermai 2013-02-26 13:49
எந்த ஒரு செயலுக்காகவும் ஆயுதத்தை கையில் எடுத்தது குற்றம் குற்றமே !!!வீட்டிற்கு ஒருவர் இயக்கத்தில் சேர கட்டயபடுதியதல் எதனை சகோதரர்கள் அங்கிருந்து நாட்டை விட்டு வெளி எறிருகீறர்கள் என்பது உங்களுக்கு தெரியாத !!! தாலிபான்களை தீவிரவாதி என்று சொல்லும் நீங்கள் அதே செயலை செய்தவர்களை வீரர் என்று சொல்கிறீர்கள் ....
சுபாஷ் சந்திரபாஷை புகழாமல் காந்தி யை தேச தந்தை என்று சொல்ல கரணம் அவர் கை ஆண்ட அகிம்சை முறை தான் !!!!
Quote
 
+10 #33 பாமக தொண்டன் 2013-02-26 08:44
அப்பாவி தமிழர்களை சோத்துக்கு அடிமையானவர்களா ? அன்று ஈழத்தில் போர் உக்கிரமடைந்து தினசரி நடந்த படுகொலை பற்றி எத்தனை ஊடகங்கள் செய்தி வெளியிட்டன ? ஒரு சிலரை தவிர. எம்மக்களுக்கு விழிப்புணர்ச்சி தேவை.
தனியொரு தமிழன் ஈழத்தமிழர்களுக் கு எப்படி தன் ஆதரவை தெரிவிக்க முடியும் ? எப்படி ஒருங்கிணைவது ? அவன் எந்த அரசியல் கட்சியை நம்புவது என்றே குழம்பி முடிவில் அரசியல் ஒரு சாக்கடை என்று தன் வேலையை தொடர்கிறான்.
இணையதளத்தின் மூலமாக தான் கொஞ்சம் பேர் அறிகிறோம். அதிலும் சுன்_. சாமி போன்றோர் கொஞ்சம் பேர் வாழ்கின்றன.
தலைவர் பிரபாகரன் மரணத்தினால் பல நாட்கள் துக்கம், நிம்மதியான தூக்கத்தை இழந்தேன். இந்த பிஞ்சைக்கூட விட்டுவைக்க தைரியம் இல்லாத கோழைகள் வெற்றிகொண்டுவிட ்டதாக கொக்கரிக்கின்றன . கண்டிப்பாக இயன்ற அளவில் ஈழம் மலர துணைநிற்போம்.
போரில் இலங்கைக்கு "ஏர்டெல்" உதவியதால் ,செல் நம்பர்களை நான் என் குடும்பத்தில் உள்ள அனைவரும் மாற்றிவிட்டோம். திமுக -விற்கும், காங்கிரஸ்-க்கும் என்றைக்கும் ஓட்டு போட்டதில்லை இனியும் போட போவதில்லை. நான், துரோகிகளை கண்டுகொண்டு என்னால் முடிந்ததை செய்கிறேன்.
Quote
 
-5 #32 anniyan 2013-02-26 02:57
Quoting SIRAJ:
அந்நியன் என்ற பெயரில் விஷத்தை கக்குபவரே, இலங்கையில் முஸ்லிம்களுக்கு ம் விடுதலைப்புலிகள ுக்கும் இருந்த பழைய கசப்புனர்வுகளை மறந்து தற்பொழுது ஒருவருக்கொருவர் பாதிக்கப்படும்ப ொழுது தமிழகத்தில் தமி ழர்கள் என்று ஓர் அணியில் நின்று ஒட்டுமொத்தமாக குரல் கொடுத்து போராட்டம் நடத்தக்கூடிய சூழலில் உம்முடைய நஞ்சை விதைத்து பகைமையை உருவாக்கவேண்டாம ். பாலச்சந்திரன் படுகொலையை கண்டித்து தமிழகத்தில் முதன் முதலில் இலங்கை தூதரகத்திற்கு முன் ஆர்பாட்டம் செய்து தன்  கோபத்தை காட்டியது மனிதநேய மக்கள் கட்சியும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகமும்தான்.

Exactly that is what I am asking. You Muslims show as supporting Tamils in Tamilnadu, but in Srilanka you are totally opposite. Which is your true face?

You are saying I am spitting Venom. Mr Samsudeen says Balachandran is juvenile Snake and has venom too.

Why are you worried by our venom? what Tamils are going to do against you Muslims? They dont do anything against even Rajapakse.
Quote
 
+5 #31 anniyan 2013-02-26 02:48
Quoting samsudeen:
இந்த பையனை கொன்றதை நியாய படுத்த முடியாது. ஆனால் இது நிகழ்ந்தது 2009ல். இப்பொது நிகழ்ந்தது போல பேசபடுகிறது.

இரண்டாவது , பாலசந்திரனை உயிருடன் இலங்கை அரசு விடும் என்று எதிர்பார்த்தால் எமாற்றமே! குட்டி பாம்பிர்க்கும் விடம் உண்டு
அல்லவா? புலிகள் ஒழியவேண்டும் என்றால்
எப்படி விடுவார்கள்? ஆகவே கொலை செய்துள்ளார்கள் .

சம்சுதீன் பாய்,
நீங்கள் 2002 ல் நடந்த கோத்ரா கலவரம் பற்றி இப்போதும் பதிவு செய்யும்போது ஏன் தமிழர்கள் 2009 ல் நடந்த படுகொலைகளை இப்போது கண்டிக்கக் கூடாது?
Quote
 
+5 #30 anniyan 2013-02-26 00:16
Quoting Tamilan123:
அந்நியன் என்ற பெயரில் தமிழனுக்கும் இஸ்லாமியர்களுக் கும் சிண்டு முடிந்துவிட்டு குளிர் காய நினைக்கும் மனித பதரே !

உன்போன்ற சமூக விரோத மைனோரிட்டி கும்பலால் இந்தியா முழுதும் அப்பாவி மக்கள் இறக்கிறார்கள். உங்கள் மத வாத கும்பலின் சூழ்ச்சிக்கு அப்பாவி மக்கள் பலியாகி இஸ்லாமிய சகோதர்களை எதிரிகளாக பார்க்கிறார்கள் , இப்படி நடக்கவேண்டும் என்று நீங்கள் செய்யும் சூழ்ச்சியே இந்தியா முழுதும் பல வடிவங்களில் நடத்தப்படுகிறது . உன் இனம் ஓர் வந்தேறி இனம் , குள்ள நரி தந்திரம் படைத்த உங்களால் இந்தியாவின் 97 சதவிகித மண்ணின் மனிதர்கள் பாதிக்கபடுகிறார ்கள் அதில் குளிர் காய்கிறது உங்கள் மைனாரிட்டி கூட்டம். உங்கள் சூழ்ச்சியை மக்கள் புரிந்து கொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை .

3% தானே ஒழிய வேண்டும்? அதற்கு எதற்கு ஹைதராபாத்தில் பாம் வைக்கிறீர்கள்?

ஆரியர்கள் ஒழிய வேண்டும் என்று சொல்லாமல் ஏன் தமிழர்கள் ஒழிய வேண்டும் என்று இலங்கையில் ஊர்வலம் போகிறீர்கள்?

சினிமாவை தடை செய்ய போராட பலம் உள்ள நீங்கள் என் கொலைகளை தடை செய்ய போராடவில்லை? :zzz
Quote
 
+11 #29 tharik 2013-02-25 23:43
குழந்தையின் முகத்தை என்னால் பார்க்க முடியவில்லை,குழ ந்தையை நினைத்து என் மனம் பதறுகிறது ,கண்ணீர் மட்டுமே சிந்த முடிகிறது.எங்கு திரும்பினாலும் குழந்தையின் முகம் மட்டுமே மனதில் நிற்கிறது.
இவன் முகத்தை பார்த்த பிறகும் அதை எதிர்த்து பேசுபவர்கள் இருக்கிறார்கள் என்று உணரும் பொழுது நிச்சயம் நாம் நாகரீக உலகில் நாகரீக மிருகங்களோடு வாழ்கிறோம் எனபது மட்டும் உண்மை.கொன்றதுடன் கொடி பிடித்து கூக்குரல் இடுவது போதும் ,இனி யாரும் கொல்லப்பட கூடாது கூக்குரல் ஒழித்து கொண்டே இருக்கட்டும் ,ராஜபக்க்ஷே பெயரை தமிழ் அகராதியில் நரமாமிச உன்னி என்று மொழி பெயர்க்க வேண்டும்.
ராஜபக்க்ஷே தூக்கில் ஏற்றும் நாளை மற்றும் ஒரு தமிழர் தினமாக கொண்டாடுவோம்.
Quote
 
0 #28 scorpio 2013-02-25 21:24
Quoting anniyan:
நான் யாரையும் புண் பண்டுத்த கேட்கவில்லை. தாளவொண்ணா வருத்தத்தால் கேட்கிறேன் :

1) விஸ்வரூபம் படத்தை எதிர்த்து ஒரே நாளில் ஆயிரக்கணக்கில் கூடி போராட்டம் செய்யும் தமிழ்நாட்டின் தமிழ் முஸ்லீம்கள், ஏன் பாலச்சந்திறனைக் கொன்றதற்கோ அல்லது ஆயிரக்கணக்கில் தமிழர்களைக் கொன்றதற்கோ ஆயிரக்கணக்கில் கூடி போராடக் கூடாது? முஸ்லீமகள் அவர்களே தாங்கள் தமிழர்கள் இல்லை என்கிறார்களா?

2) இலங்கையைச் சேர்ந்த தமிழ் முஸ்லீம்கள் தமிழர்களை ஒடுக்க வேண்டும், LTTE யை வளர விடக் கூடாது என்கிறார்களே, அவர்களும் தமிழர்கள் இல்லை, தாங்கள் முஸ்லீம்கள் என்று ஏற்றுக் கொண்டதநாலா? (proof : http://1.bp.blogspot.com/-qf8z4KvNKDg/UP64o77ZmTI/AAAAAAAAN9s/R5HSP5H5KXI/s1600/Muslims+in+Srilanka.jpg)

3) இலங்கைக்கு மிக நெருக்கமாக உள்ள தமிழ்நாட்டுப் பகுதி இராமநாதபுரம். அந்ததத் தொகுதியின் MLA முஸ்லீம் கட்சியை சேர்ந்த ஜாவாஹிருல்லா இலங்கைத் தமிழர்களுக்கு ஏதாவது செய்துள்ளாரா? ஏன் அவரும் தமிழர்களை எதிர்க்கிறார்?

4) பிறப்பால் தமிழர்கள் அல்லாத, ஹிந்துத்துவ ஆன்மீக தலைவர்களான 'வாழும் கலை (Art of Living)' ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மாதா அமிரிதனந்தமாய் தேவி ஆகியோர் சுனாமியால் பாதிக்கப்பட்டவர ்களுக்கு, ஈழத்தமிழர்களுக் கு வீடு கட்டிக் கொடுத்தல், குடியமர்த்தல், வாழ்வுரிமைப் பேச்சு என்று எவ்வளவோ செய்துள்ளார்கள் . இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த அர்ஜுன் சம்பத் இலங்கைத் தமிழருக்காகப் போராடி கைது செய்யப் பட்டுள்ளார் (போட்டோ ஆதாரங்கள் உள்ளன. வேண்டும் என்றால் தருகிறேன்). இத்தனைக்கும் இவர்கள் மூவருக்கும் நன்றாகத் தெரியும் பல ஈழத்தமிழர்களும் , செம்படவர்களும் கிருத்துவர்கள் என்று. ஹிந்துக்களால் மொழி என்ற தடையைத் தாண்டி "வாடிய பயிரைக் காணும் போதெல்லாம் வாடினேன்" என்ற வள்ளலார் வாக்குப்படி அன்புக் கரம் நீட்ட முடிகிற பொது, ஏன் முஸ்லீம்கள், கிருத்துவர்கள், திராவிட கட்சிகளால், கம்யூனிஸ்டுகளால ் அவர்கள் கட்சியை மீறி அன்பு காட்ட, ஏன் கேவலம் வருத்தப்படக்ககூ ட முடிவதில்லை?

Please think brothers and sisters. Understand who propagate love and peace.

GOOD questions. Any takers?
Quote
 
+3 #27 scorpio 2013-02-25 21:12
[ஃஉஒடெ நமெ="ணெர்மை"]நான் யாரையும் புண் பண்டுத்த கேட்கவில்லை. தாளவொண்ணா வருத்தத்தால் கேட்கிறேன்
/**முஸ்லீமகள் அவர்களே தாங்கள் தமிழர்கள் இல்லை என்கிறார்களா?**/முஸ்லிம்கள் ஒன்று கூடி போராடியது அவர்கள் மார்கத்திற்காக ...அது இருக்கட்டும் ..முஸ்லிம்களை விடுங்கள் நாம என்ன பண்ணிக்கிட்டு இருக்கோம் !!!!பதில் இருக்க ????
/**ள்ட்டே யை வளர விடக் கூடாது என்கிறார்களே,** /
அது இருக்கட்டும் .ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மாதா அமிரிதனந்தமாய் தேவி பாலச்சந்திறனைக் கொன்றதற்கோ அல்லது ஆயிரக்கணக்கில் தமிழர்களைக் கொன்றதற்கோ என்ன செய்தார்கள் பதில் இருக்க ???? அவர்கள் பாதிக்கபட்டவர்க ள் ...ஏன் அப்படி சொன்னார்கள் என்று காரணம் தெரியாதோ!!!! அதரம் இருக்கு தேவை பட்டால் சொல்லோவோம்
/** பிறப்பால் தமிழர்கள் அல்லாத, ஹிந்துத்துவ ஆன்மீக தலைவர்களான 'வாழும் கலை (ஆர்ட் ஒஃப் ளிவிங்)' ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மாதா அமிரிதனந்தமாய் தேவி அன்புக் கரம் நீட்ட முடிகிற பொது,**/இலங்கைக்கு போக வேண்டாம் அவர்களுக்கு அறிகளே உள்ள குஜராத் இல் நடந்த அட்டொழியதை கேட்க முடியவில்லையே....அவர்கள் முஸ்லிம்கள் என்பதாலோ!!!!
முக்கியமா ..நரேந்திர மோதிய விட்டுடீங்களே ...[/ஃஉஒடெ]

What happened in Gujarat Mr. Nermai?....I don't subscribe any KILLING as LIFE IS LIFE. But Muslims killed Hindus which they used to do for decades like a toy game and then Hindus retaliated for the first time. People still talk this as news because nobody expects that Hindus may have any self respect. Period.
Quote
 
+2 #26 scorpio 2013-02-25 21:11

0 #25 EZLAVAN 2013-02-25 20:50
என்ன சொல்வதென்று புரியவில்லை. காலம் தான் பதில் சொல்ல வேண்டூம்
Quote
 
-8 #24 Jaffer 2013-02-25 17:05
திரு அந்நியன் அவர்களுக்கு .ராமநாதபுரம் சட்ட மன்ற உறுப்பினர் மூத்த தலைவராக உள்ள மனித நேய மக்கள் கட்சி , தமிழ் நாட்டில் முதன் முதலில் சிறுவன் பாலச்சந்திரன் கொலையை கண்டித்து ஆர்பாட்டம் நடத்தி உள்ளது ...pls see the link below ...எந்த மீடியாவும் எங்களை காண்பிப்பது இல்லை ..ஆதலால் உங்களுக்கு தெரிய வில்லை நடு நிலை தவறிய சவுக்கு இந்த கமெண்டை போடுமா என்று ஐயம் உள்ளது...பாப்போம்

http://www.tmmk.in/index.php?option=com_content&view=article&id=3079:2013-02-22-18-24-10&catid=96:arasial&Itemid=367
Quote
 
-20 #23 samsudeen 2013-02-25 15:35
இந்த பையனை கொன்றதை நியாய படுத்த முடியாது. ஆனால் இது நிகழ்ந்தது 2009ல். இப்பொது நிகழ்ந்தது போல பேசபடுகிறது.

இரண்டாவது , பாலசந்திரனை உயிருடன் இலங்கை அரசு விடும் என்று எதிர்பார்த்தால் எமாற்றமே! குட்டி பாம்பிர்க்கும் விடம் உண்டு
அல்லவா? புலிகள் ஒழியவேண்டும் என்றால்
எப்படி விடுவார்கள்? ஆகவே கொலை செய்துள்ளார்கள் .
Quote
 
+6 #22 iamvaalu 2013-02-25 15:24
கண்ணை கட்டி முதுகில் சுடவேண்டாம்,முட ிந்தால் நெஞ்சில் சுடுவென நெஞ்சை நிமிர்த்தியிருப ்பான் அந்த வீரகுழந்தை #பாலச்சந்திரா Twitter ID @iamvaalu
Quote
 
+2 #21 naalaavan 2013-02-25 14:24
//ஆங்காங்கே

அரசியல் இலாபத்திற்கென்ற ாலும்,

கண்டனங்களும், விமர்சனங்களும்

சூடு பறக்க விவாதிக்கப்படுக ின்றன.

//
sir eppadi?? adhuthavan thaali arundadhai vaidhuthaana kavithai ennru ularikottukinre egal. thangal back side parkavaum first :lol:
Quote
 
-8 #20 SIRAJ 2013-02-25 13:44
அந்நியன் என்ற பெயரில் விஷத்தை கக்குபவரே, இலங்கையில் முஸ்லிம்களுக்கு ம் விடுதலைப்புலிகள ுக்கும் இருந்த பழைய கசப்புனர்வுகளை மறந்து தற்பொழுது ஒருவருக்கொருவர் பாதிக்கப்படும்ப ொழுது தமிழகத்தில் தமி ழர்கள் என்று ஓர் அணியில் நின்று ஒட்டுமொத்தமாக குரல் கொடுத்து போராட்டம் நடத்தக்கூடிய சூழலில் உம்முடைய நஞ்சை விதைத்து பகைமையை உருவாக்கவேண்டாம ். பாலச்சந்திரன் படுகொலையை கண்டித்து தமிழகத்தில் முதன் முதலில் இலங்கை தூதரகத்திற்கு முன் ஆர்பாட்டம் செய்து தன்  கோபத்தை காட்டியது மனிதநேய மக்கள் கட்சியும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகமும்தான்.
Quote
 
-1 #19 nallavan 2013-02-25 12:17
why he should do? u says he is wrong then you should do and bring the truth and prove it... dont bypass..Quoting anniyan:
சுப்பிரமணியன் சுவாமி, பிரபாகரனின் மகன் கொல்லப்பட்ட போட்டோ மாற்றி வடிவமைக்கப்பட்ட து, உண்மையான போட்டோ இல்லை என்று சொன்னாராம். அப்படியென்றால் பாலச்சந்திரனுக் கு ஹபியஸ் கார்பஸ் ( ஆள் கொணர்வு) மனு போட்டு உயிரோடு கொண்டுவருவாரா கோர்ட் செல்லுவதையே வழக்கமாகக் கொண்ட சு சுவாமி?
Quote
 
+11 #18 cheetah 2013-02-25 11:44
தம்பி பாலச்சந்திரன்,

நாங்கள் கையலாதவர்கள் , எங்களை மன்னித்து விடு.. இந்த தேசத்தில் உயிருடன் வாழ்வதற்கே வெட்கப்பட்டு தலை குனிந்து நிற்கிறோம்...
Quote
 
-11 #17 கும்பிட்ரென் சாமி 2013-02-25 11:19
ஒரு மாற்றுக் கருத்து உண்டு. தமிழில் இருக்கும் பழமொழி தான் அது. ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும். இது போல் எத்தனை அப்பன் ஆத்தாக்களின் கண்ணீரின் சாபமோ இந்த பிள்ளைக்கு நடந்த கொடுமை. உணர்சசி வசபடுவதில் அர்த்தம் இல்லை. பிரபாகரன் கையால் இறந்த எத்தனை தமிழ் குழந்தைகளின் தகப்பன்களும் தாய்களும் இட்ட சாபமோ இந்த பிள்ளை. என்னை கேவலமாக பதிவிடலாம். உண்மையின் மறு பக்கம் இதை விட கசப்பானது. இன்னும் இரண்டு வருடங்களில் மண்டை கொத்து படுமுன் மண்டியிட்ட தமிழ் மானம் வெளிவரும்...
Quote
 
+1 #16 anniyan 2013-02-25 09:57
http://www.usetamil.com/t31270-topic#49733 -- E V R ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்..!
Quote
 
0 #15 anniyan 2013-02-25 08:51
Quoting Uma Kumar:
மகாபாரதம் சம்பவித்த
குருச்சேத்திரம் இன்றும்
குருதிச்சேத்திர மாய்
ஈரம் காயாமல்.....

தன்பெண்ணை மயிர்பிடித்திழு த்து
துயிலுரித்தும் அவமதித்தும்
ஒன்றும் செய்யா பாண்டவர்கள்
இன்றும் கையாலாகாமல்.....

top notch!! admiring the poetry
Quote
 
+4 #14 anniyan 2013-02-25 08:49
Quoting Tamilan123:
அந்நியன் என்ற பெயரில் தமிழனுக்கும் இஸ்லாமியர்களுக் கும் சிண்டு முடிந்துவிட்டு குளிர் காய நினைக்கும் மனித பதரே !

உன்போன்ற சமூக விரோத மைனோரிட்டி கும்பலால் இந்தியா முழுதும் அப்பாவி மக்கள் இறக்கிறார்கள். உங்கள் மத வாத கும்பலின் சூழ்ச்சிக்கு அப்பாவி மக்கள் பலியாகி இஸ்லாமிய சகோதர்களை எதிரிகளாக பார்க்கிறார்கள் , இப்படி நடக்கவேண்டும் என்று நீங்கள் செய்யும் சூழ்ச்சியே இந்தியா முழுதும் பல வடிவங்களில் நடத்தப்படுகிறது . உன் இனம் ஓர் வந்தேறி இனம் , குள்ள நரி தந்திரம் படைத்த உங்களால் இந்தியாவின் 97 சதவிகித மண்ணின் மனிதர்கள் பாதிக்கபடுகிறார ்கள் அதில் குளிர் காய்கிறது உங்கள் மைனாரிட்டி கூட்டம். உங்கள் சூழ்ச்சியை மக்கள் புரிந்து கொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை .

என்னது நான் மைனாரிட்டியா? அப்போ மைனாரிட்டின்னு சலுகை ஏதாவது வாங்கித் தரப் போறீங்களா?

மைனாரிட்டி, மைனாரிட்டின்னு சொல்லி சலுகை வாங்கிய, நாட்டை துண்டாடி பாகிஸ்தான், கிழக்கு வங்காளம்னு, ஆக்கிரமிப்புக் காஷ்மீர் நு பிரிச்ச நீங்க என்னை மைனாரிட்டின்னு சொல்றீங்களா?

3% எங்களை விட்டுடுங்க, மீதி 97% பேர் நல்லா இருக்கணும்னு நினைக்கிற நீங்க ஏன் அந்த 97% மேலையும் கூட பாம் வைக்கறீங்க?

நேற்று பாகிஸ்தான்ல 37 பேரும் , சிரியா ல 57 பெரும் பாம் வெடிச்சு இறந்தான்களே அது முஸ்லீம்கள் வெடிச்ச பாம் இல்லையா? அதுக்கு 3% பேர்தான் காரணமா? விடுதலைப் புலிகள் என்னிக்காவது ஒருநாள் இது மாதிரி அநியாயமா பொது மக்கள் மேல பாம் வச்சிருக்காங்கள ா?
Quote
 
+30 #13 anniyan 2013-02-25 07:19
சுப்பிரமணியன் சுவாமி, பிரபாகரனின் மகன் கொல்லப்பட்ட போட்டோ மாற்றி வடிவமைக்கப்பட்ட து, உண்மையான போட்டோ இல்லை என்று சொன்னாராம். அப்படியென்றால் பாலச்சந்திரனுக் கு ஹபியஸ் கார்பஸ் ( ஆள் கொணர்வு) மனு போட்டு உயிரோடு கொண்டுவருவாரா கோர்ட் செல்லுவதையே வழக்கமாகக் கொண்ட சு சுவாமி?
Quote
 
+10 #12 Tamilan123 2013-02-25 05:23
அந்நியன் என்ற பெயரில் தமிழனுக்கும் இஸ்லாமியர்களுக் கும் சிண்டு முடிந்துவிட்டு குளிர் காய நினைக்கும் மனித பதரே !

உன்போன்ற சமூக விரோத மைனோரிட்டி கும்பலால் இந்தியா முழுதும் அப்பாவி மக்கள் இறக்கிறார்கள். உங்கள் மத வாத கும்பலின் சூழ்ச்சிக்கு அப்பாவி மக்கள் பலியாகி இஸ்லாமிய சகோதர்களை எதிரிகளாக பார்க்கிறார்கள் , இப்படி நடக்கவேண்டும் என்று நீங்கள் செய்யும் சூழ்ச்சியே இந்தியா முழுதும் பல வடிவங்களில் நடத்தப்படுகிறது . உன் இனம் ஓர் வந்தேறி இனம் , குள்ள நரி தந்திரம் படைத்த உங்களால் இந்தியாவின் 97 சதவிகித மண்ணின் மனிதர்கள் பாதிக்கபடுகிறார ்கள் அதில் குளிர் காய்கிறது உங்கள் மைனாரிட்டி கூட்டம். உங்கள் சூழ்ச்சியை மக்கள் புரிந்து கொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை .
Quote
 
-5 #11 Nermai 2013-02-25 02:47
[ஃஉஒடெ நமெ="அன்னியன்"]நான் யாரையும் புண் பண்டுத்த கேட்கவில்லை. தாளவொண்ணா வருத்தத்தால் கேட்கிறேன் :

1) விஸ்வரூபம் படத்தை எதிர்த்து ஒரே நாளில் ஆயிரக்கணக்கில் கூடி போராட்டம் செய்யும் தமிழ்நாட்டின் தமிழ் முஸ்லீம்கள், ஏன் பாலச்சந்திறனைக் கொன்றதற்கோ அல்லது ஆயிரக்கணக்கில் தமிழர்களைக் கொன்றதற்கோ ஆயிரக்கணக்கில் கூடி போராடக் கூடாது? முஸ்லீமகள் அவர்களே தாங்கள் தமிழர்கள் இல்லை என்கிறார்களா?

2) இலங்கையைச் சேர்ந்த தமிழ் முஸ்லீம்கள் தமிழர்களை ஒடுக்க வேண்டும், ள்ட்டே யை வளர விடக் கூடாது என்கிறார்களே, அவர்களும் தமிழர்கள் இல்லை, தாங்கள் முஸ்லீம்கள் என்று ஏற்றுக் கொண்டதநாலா? (ப்ரோஃப் : ஹ்ட்ட்ப்://1.ப்ப்.ப்லொக்ச்பொட்.சொம்/-ஃஃப்8ழ்4க்வ்ண்க ்ட்க்/ஊப்64ஒ77ழ்ம்டீ/ஆஆஆஆஆஆஆஆண்9ச்/ற்5ஹ்ஸ்ப்5ஹ்5க் ௯ஈ/ச்1600/முச்லிம்ச்+இன்+ ஸ்ரிலன்க.ஜ்ப்க்)

3) இலங்கைக்கு மிக நெருக்கமாக உள்ள தமிழ்நாட்டுப் பகுதி இராமநாதபுரம். அந்ததத் தொகுதியின் ம்ளா முஸ்லீம் கட்சியை சேர்ந்த ஜாவாஹிருல்லா இலங்கைத் தமிழர்களுக்கு ஏதாவது செய்துள்ளாரா? ஏன் அவரும் தமிழர்களை எதிர்க்கிறார்?

4) பிறப்பால் தமிழர்கள் அல்லாத, ஹிந்துத்துவ ஆன்மீக தலைவர்களான 'வாழும் கலை (ஆர்ட் ஒஃப் ளிவிங்)' ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மாதா அமிரிதனந்தமாய் தேவி ஆகியோர் சுனாமியால் பாதிக்கப்பட்டவர ்களுக்கு, ஈழத்தமிழர்களுக் கு வீடு கட்டிக் கொடுத்தல், குடியமர்த்தல், வாழ்வுரிமைப் பேச்சு என்று எவ்வளவோ செய்துள்ளார்கள் . இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த அர்ஜுன் சம்பத் இலங்கைத் தமிழருக்காகப் போராடி கைது செய்யப் பட்டுள்ளார் (போட்டோ ஆதாரங்கள் உள்ளன. வேண்டும் என்றால் தருகிறேன்). இத்தனைக்கும் இவர்கள் மூவருக்கும் நன்றாகத் தெரியும் பல ஈழத்தமிழர்களும் , செம்படவர்களும் கிருத்துவர்கள் என்று. ஹிந்துக்களால் மொழி என்ற தடையைத் தாண்டி "வாடிய பயிரைக் காணும் போதெல்லாம் வாடினேன்" என்ற வள்ளலார் வாக்குப்படி அன்புக் கரம் நீட்ட முடிகிற பொது, ஏன் முஸ்லீம்கள், கிருத்துவர்கள், திராவிட கட்சிகளால், கம்யூனிஸ்டுகளால ் அவர்கள் கட்சியை மீறி அன்பு காட்ட, ஏன் கேவலம் வருத்தப்படக்ககூ ட முடிவதில்லை?

ப்லெஅசெ தின்க் ப்ரொதெர்ச் அன்ட் சிச்டெர்ச். ஊன்டெர்ச்டன்ட் ந்ஹொ ப்ரொபகடெ லொவெ அன்ட் பெஅசெ.[/ஃஉஒடெ]
இந்த மாதிரி வேஷமதனம் உங்கள் மனதில் இருப்பதால் தான் !!!!
Quote
 
-16 #10 Nermai 2013-02-25 02:46
எல்லோரும் வருத்தம் அடையும் ஒரு செயல் ....ஒரு பாலச்சந்தர் தன உங்கள் கண்னுக்கு தெரிவது ஆச்சிரியமான செயல்...இன்னும் எத்தனையோ அப்பாவி பிள்ளைகள் பாலஸ்தீன , ஆப்கானிஸ்தானில் , குஜராத்தில் பாதிக்கப்படும் பொது என் அனுதாபம் ஏற்படுவது இல்லை!!
Quote
 
-14 #9 Nermai 2013-02-25 02:40
நான் யாரையும் புண் பண்டுத்த கேட்கவில்லை. தாளவொண்ணா வருத்தத்தால் கேட்கிறேன்
/**முஸ்லீமகள் அவர்களே தாங்கள் தமிழர்கள் இல்லை என்கிறார்களா?**/முஸ்லிம்கள் ஒன்று கூடி போராடியது அவர்கள் மார்கத்திற்காக ...அது இருக்கட்டும் ..முஸ்லிம்களை விடுங்கள் நாம என்ன பண்ணிக்கிட்டு இருக்கோம் !!!!பதில் இருக்க ????
/**ள்ட்டே யை வளர விடக் கூடாது என்கிறார்களே,** /
அது இருக்கட்டும் .ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மாதா அமிரிதனந்தமாய் தேவி பாலச்சந்திறனைக் கொன்றதற்கோ அல்லது ஆயிரக்கணக்கில் தமிழர்களைக் கொன்றதற்கோ என்ன செய்தார்கள் பதில் இருக்க ???? அவர்கள் பாதிக்கபட்டவர்க ள் ...ஏன் அப்படி சொன்னார்கள் என்று காரணம் தெரியாதோ!!!! அதரம் இருக்கு தேவை பட்டால் சொல்லோவோம்
/** பிறப்பால் தமிழர்கள் அல்லாத, ஹிந்துத்துவ ஆன்மீக தலைவர்களான 'வாழும் கலை (ஆர்ட் ஒஃப் ளிவிங்)' ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மாதா அமிரிதனந்தமாய் தேவி அன்புக் கரம் நீட்ட முடிகிற பொது,**/இலங்கைக்கு போக வேண்டாம் அவர்களுக்கு அறிகளே உள்ள குஜராத் இல் நடந்த அட்டொழியதை கேட்க முடியவில்லையே....அவர்கள் முஸ்லிம்கள் என்பதாலோ!!!!
முக்கியமா ..நரேந்திர மோதிய விட்டுடீங்களே ...
Quote
 
+26 #8 sundarwipro 2013-02-25 02:02
பாலச்சந்திரனை கொன்றவர்கள் இலங்கை ரானுவதினரக இருந்தாலும் துருப்பாக செயல் பட்ட ராஜபக்ஷே, சோனியா மற்றும் கருணாநிதியை ஒருபோதும் இந்த தமிழனம் மறக்காது. போர் உச்சகட்டத்தில் இருந்தபோது அதன் தாக்கம் தமிழர்களுக்கு தெரியகூடாது என்று திமுக, காங்கிரசின் ஊடகங்கள் திரைமறைவு வேலையில் செய்து நம்மையும் இந்த பழி சுமைக்கு ஆளாக்கி விட்டார்கள். விடமாட்டோம் காங்கிரஸ் மற்றும் திமுகவை, வரும் தேர்தலில் மண்ணை கவ்வ வைப்போம்.
Quote
 
+25 #7 Kumar.T 2013-02-25 01:22
இந்த கொடுமைக்கு காந்தி பிறந்த தேசமும் உடந்தை என்பது இன்னும் கொடுமை...

ஆங்கிலேயர்களிடம ் இருந்து சுதந்திரம் பெற்று இத்தாலியர்களிடம ் அடிமைப்பட்ட நம்மால் வருத்தபடதான் முடியும்....
:-x
Quote
 
+14 #6 nilamagan 2013-02-25 00:59
பித்தம் தலைக்கேறி ரத்தம் இளைப்பாறி
யுத்தம் முடிந்ததேன்றா புன்னகை பூக்கிறாய்
நித்தம் ஒரு கொலை உயிருக்கு ஒரு விலை
சிந்திய ரத்தம் எல்லாம் மூத்திரம் ஆனது
சிங்களன் சிரிப்பினில் என் ஈழம் அழிந்தது
அக்காவின் பிறப்புறுப்பு அக்கினிக்குள் சென்றது
அம்மாவின் முளை காம்பு அறுபட்டு போனது
அசிங்கம் எங்களின் அடையாளம் ஆனது
அவமானம் எங்களின் வெகுமானம் ஆனது
இனி தோட்டாக்கள் ஈழம் மீட்டாலும்
தொலைந்த எங்களின் சொந்தங்களை தருமா
பாதி உயிர், பட்டினி வயிர்,
கண்ணீரில் புன்னகை, குருதியில் குளியல்
தமிழனனின் மாமிசம் உண்டு களித்து
தின்று கொளுத்து வேண்டுமா ஒரு வாழ்க்கை
எங்கள் காலடியல்லாம் கல்லறை ஆனது
உங்கள் கருணை எல்லாம் கழிவறைக்கா போனது
நிர்வாணம் உடையானது
அவமானம் உறுப்பானது
வேசிகளுக்கு பிறந்தால் வேட்கபடிருக்கலா ம்
தாசிகளுக்கு பிறந்தால் தலை குனிந்திருக்கலா ம்
தமிழுகல்லவா பிறந்தோம்
தன்மானம் ஈழந்தேப்படி வாழ்வோம்
Quote
 
+20 #5 anniyan 2013-02-25 00:27
Quoting மனிதன்:
ஆற்றாமையில் என்ன பேசுவதென்றெ தெரியவில்லை.பெரும்பான்மை தமிழர்கள் சோத்துஅமுக்கிகள ாகவும், குடிகாரகூட்டமாக வும். சினிமாகூலிகளாகவ ும் மாறி தமிழ் மொழியில் உள்ள அடிப்படை வீரியத்தை கூட இழந்து டிவியின் முன் சவமாய் அமர்ந்திருக்கிற ார்கள்.

முழுதும் உண்மையான கருத்து..

ஒரு கூத்தாடி கமலஹாசனை எதிர்க்கும் அளவுக்குக் கூட கொலையாளி ராஜபக்சே வை எதிர்ப்பதில்லை... கிரிக்கெட் பார்க்கும் வழக்கமே இல்லாத நான் ராஜபக்சே கிரிக்கெட் பார்க்க இந்தியா வந்த அன்று மட்டும் டிவி முன்னாடி உட்கார்ந்து எந்தத்தமிழனாவது ஒரு ராக்கெட் லாஞ்சர் வைத்து கொல்கிறானா அல்லது குறைந்தது செருப்பாலாவது ராஜபக்சேவை அடிக்கிறானா என்று பார்த்தேன். இவர்கள் சோத்தமுக்கிகள்.. தோல் தடித்தவர்கள்.. டிவி அடிமைகள்.. இந்த படித்த கோமாளி சு.சுவாமி ராஜபக்சேவின் மூத்திரத்தைக் கூட குடிப்பான் போல இருக்கிறது.. பாரதியும் வாஞ்சிநாதனும் முத்துக்குமரனும ் பிறந்த மண்ணிலா நாமும் பிறந்தோம்? தெலுங்கர்களும் , வடநாட்டவர்களும் கையாலாகாத நம்மைக் காறித்துப்பும் காலம் வெகுதூரத்தில் இல்லை..
Quote
 
+10 #4 Uma Kumar 2013-02-24 23:10
மகாபாரதம் சம்பவித்த
குருச்சேத்திரம் இன்றும்
குருதிச்சேத்திர மாய்
ஈரம் காயாமல்.....

தன்பெண்ணை மயிர்பிடித்திழு த்து
துயிலுரித்தும் அவமதித்தும்
ஒன்றும் செய்யா பாண்டவர்கள்
இன்றும் கையாலாகாமல்.....

நியாயம் இதுவென தெரிந்தும்
நீதி எதுவென புரிந்தும்
கவுரவர்கள் பக்கம் பீஷ்மர்கள்
இன்னும் செத்து தொலையாமல்.....

தந்தையின் பொருட்டு போர்க்களம் புகுந்து
விழுப்புண் பட்டு மாண்டு போக
அவதரித்த அபிமன்யுவோ.....

பூரண சந்திரனாகும் முன்னமே
மண் மூடி போகத்தான்
பிரைச்சந்திர பெயர் தாங்கினையோ....

தாயின் மாராப்பு வாசம் மறவா
தளிர் மார்பு, மரண நெடியடிக்கும்
துப்பாக்கி தாங்கியதோ.....
தோட்டாக்கள் வாங்கியதோ....

ஆதித்த கரிகாலன் வீரசொர்க்கம் எய்த
தமிழ் சொர்க்கம் படைக்க பிறந்த
பொன்னியின் செல்வனே
செந்நீரில் குளித்து கண் மூடிப்போனதென்ன?

எதிரியின் குருதி தோய்த்து
இரங்கல்பா இயற்றி உன் வீரம் போற்ற
இன்று தமிழர் எவருக்கும் துணிவில்லை
இனி தமிழின் வாழ்வு தானென்ன?
Quote
 
+4 #3 நான் இந்தியன் இல்லை 2013-02-24 21:39
எதுவும் சொல்ல இயலவில்லை.உடனடியாக "எங்கே மனு நீதி " என்ற வரியை நீக்கவும்,பொருத ்தமாக இல்லை.
Quote
 
+3 #2 anniyan 2013-02-24 21:08
நான் யாரையும் புண் பண்டுத்த கேட்கவில்லை. தாளவொண்ணா வருத்தத்தால் கேட்கிறேன் :

1) விஸ்வரூபம் படத்தை எதிர்த்து ஒரே நாளில் ஆயிரக்கணக்கில் கூடி போராட்டம் செய்யும் தமிழ்நாட்டின் தமிழ் முஸ்லீம்கள், ஏன் பாலச்சந்திறனைக் கொன்றதற்கோ அல்லது ஆயிரக்கணக்கில் தமிழர்களைக் கொன்றதற்கோ ஆயிரக்கணக்கில் கூடி போராடக் கூடாது? முஸ்லீமகள் அவர்களே தாங்கள் தமிழர்கள் இல்லை என்கிறார்களா?

2) இலங்கையைச் சேர்ந்த தமிழ் முஸ்லீம்கள் தமிழர்களை ஒடுக்க வேண்டும், LTTE யை வளர விடக் கூடாது என்கிறார்களே, அவர்களும் தமிழர்கள் இல்லை, தாங்கள் முஸ்லீம்கள் என்று ஏற்றுக் கொண்டதநாலா? (proof : http://1.bp.blogspot.com/-qf8z4KvNKDg/UP64o77ZmTI/AAAAAAAAN9s/R5HSP5H5KXI/s1600/Muslims+in+Srilanka.jpg)

3) இலங்கைக்கு மிக நெருக்கமாக உள்ள தமிழ்நாட்டுப் பகுதி இராமநாதபுரம். அந்ததத் தொகுதியின் MLA முஸ்லீம் கட்சியை சேர்ந்த ஜாவாஹிருல்லா இலங்கைத் தமிழர்களுக்கு ஏதாவது செய்துள்ளாரா? ஏன் அவரும் தமிழர்களை எதிர்க்கிறார்?

4) பிறப்பால் தமிழர்கள் அல்லாத, ஹிந்துத்துவ ஆன்மீக தலைவர்களான 'வாழும் கலை (Art of Living)' ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மாதா அமிரிதனந்தமாய் தேவி ஆகியோர் சுனாமியால் பாதிக்கப்பட்டவர ்களுக்கு, ஈழத்தமிழர்களுக் கு வீடு கட்டிக் கொடுத்தல், குடியமர்த்தல், வாழ்வுரிமைப் பேச்சு என்று எவ்வளவோ செய்துள்ளார்கள் . இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த அர்ஜுன் சம்பத் இலங்கைத் தமிழருக்காகப் போராடி கைது செய்யப் பட்டுள்ளார் (போட்டோ ஆதாரங்கள் உள்ளன. வேண்டும் என்றால் தருகிறேன்). இத்தனைக்கும் இவர்கள் மூவருக்கும் நன்றாகத் தெரியும் பல ஈழத்தமிழர்களும் , செம்படவர்களும் கிருத்துவர்கள் என்று. ஹிந்துக்களால் மொழி என்ற தடையைத் தாண்டி "வாடிய பயிரைக் காணும் போதெல்லாம் வாடினேன்" என்ற வள்ளலார் வாக்குப்படி அன்புக் கரம் நீட்ட முடிகிற பொது, ஏன் முஸ்லீம்கள், கிருத்துவர்கள், திராவிட கட்சிகளால், கம்யூனிஸ்டுகளால ் அவர்கள் கட்சியை மீறி அன்பு காட்ட, ஏன் கேவலம் வருத்தப்படக்ககூ ட முடிவதில்லை?

Please think brothers and sisters. Understand who propagate love and peace.
Quote
 
+13 #1 மனிதன் 2013-02-24 20:17
ஆற்றாமையில் என்ன பேசுவதென்றெ தெரியவில்லை.பெரும்பான்மை தமிழர்கள் சோத்துஅமுக்கிகள ாகவும், குடிகாரகூட்டமாக வும். சினிமாகூலிகளாகவ ும் மாறி தமிழ் மொழியில் உள்ள அடிப்படை வீரியத்தை கூட இழந்து டிவியின் முன் சவமாய் அமர்ந்திருக்கிற ார்கள்.
Quote
 
Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English

தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 72 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday7225
mod_vvisit_counterYesterday9398
mod_vvisit_counterThis week76966
mod_vvisit_counterLast week78106
mod_vvisit_counterThis month199566
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12721685