முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்தொடர்புக்கு
+++
அடிமைகள் மன்றம். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 31
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
செவ்வாய்க்கிழமை, 26 பிப்ரவரி 2013 01:33

DSC_0906

இந்தியாவிலேயே தலைச்சிறந்த அடிமைகள் எங்கிருக்கிறார்கள் என்று யாரிடம் கேட்டாலும் தமிழகத்தில் என்று தயங்காமல் சொல்லுவார்கள். அந்த அடிமைகள் எங்கே என்று கேட்டால் அதிமுகவில் என்று யாரைக்கேட்டாலும் சொல்லுவார்கள். வழக்கமாக யாரையாவது பார்த்து அடிமை என்று சொன்னால் யாரைப்பார்த்தடா அடிமை என்கிறாய் என்று கோபப்படுவார்கள்.  ஆனால் அதிமுகவில் உள்ளவர்களைப் பார்த்து அடிமை என்றால் “போங்க சார் ரொம்ப புகழாதீங்க” என்பார்கள்.  அந்த அளவுக்கு விசுவாசமான அடிமைகள் அதிமுகவில் உண்டு.

அந்த அடிமைகளின் தலைமையகம் எங்கே இருக்கிறது என்றால், சென்னை லாயிட்ஸ் சாலையில் உள்ளது. அங்கேதான் அதிமுக அலுவலகம் இருக்கிறது. வழக்கமாக எம்.ஜி.ஆர் பிறந்தநாள், அதிமுக உருவாகிய நாட்களில், அடிமைகள் அந்த இடங்களில் கூடி, தாங்கள் அடிமைகளாக உருவானதை இனிப்புகள் பரிமாறிப் பகிர்ந்து கொள்வது வழக்கம். 1991ல் ஜெயலலிதா முதல்வரானதில் இருந்து, அவர் பிறந்தநாளை அடிமைகள் வெகு உற்சாகமாக கொண்டாடுகிறார்கள்.

1991-1996 ஆட்சி காலத்தில் இந்த அடிமைகள் ஜெயலலிதாவின் பிறந்தநாளைக் கொண்டாடியதைக் காண கண் இரண்டும் போதாது.  ஒரு சில அடிமைகள் மண் சோறு சாப்பிடும். ஒரு சில அடிமைகள் பால் குடம் எடுக்கும்.  ஒரு சில அடிமைகள் தீ மிதிக்கும்.  ஒரு சில அடிமைகள் அங்கப்பிரதட்சனம் செய்யும்.  ஒரு சில அடிமைகள் ஜெயலலிதா படத்தையும், அவர் பெயரையும் பச்சை குத்திக் கொள்ளும். அனைத்து அடிமகளும் தவறாமல் செய்யும் செயல் கட்அவுட் வைப்பது.  தொண்ணூறுகளில் ப்ளெக்ஸ் போர்டு விஞ்ஞான வசதிகள் வளராத காலம்.  அதனால் ஓவியர்கள் வரையும் கட்அவுட்டுகளை மூலைக்கு மூலை வைப்பார்கள். திமுகவினர் ஜெயலலிதாவுக்கு அந்தக்காலத்தில் கட்அவுட் ராணி என்றே பெயர் வைத்தார்கள். அந்த அளவுக்கு அடிமைகள் வைக்கும் கட்அவுட்டுகள் பிரபலம்.

அந்த காலகட்டத்தில் அப்படி அவர் படத்தைப் பச்சைக் குத்திக் கொண்ட ஒரு முக்கியமான அடிமை, அப்போது சமூக நலத்துறை அமைச்சராக இருந்த இந்திராகுமாரி.  அவரை விட விசுவாசமான அடிமையாகத் திகழ்ந்தவர் சேடப்பட்டி முத்தையா.  ஆனால் இந்திரா குமாரி, சேடப்பட்டி முத்தையா ஆகியோர், பின்னாளில் திமுகவில் இணைந்தது காலத்தின் கோலம்.

நேற்றைய ஜெயலலிதாவின் பிறந்தநாளை, சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள அதிமுக அடிமைகள் இன்று விமர்சையாகக் கொண்டாடின. இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னை உயர்நீதிமன்றத்தையே அடிமைகள் மன்றமாக மாற்றி விட்டன.

இன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களிலும் அதிமுகவின் கருப்பு, சிவப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் பலூன்கள் கட்டப்பட்டிருந்தன.   சென்னை உயர்நீதிமன்றத்துக்கு இன்று வருகை தந்தவர்கள், சென்னை உயர்நீதிமன்றம் அடிமைகள் மன்றமாக மாற்றப்பட்டதோ என்று வியப்படைந்திருப்பார்கள்.

DSC_0918

DSC_0913

உயர்நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களிலும் ப்ளெக்ஸ் போர்டுகள்.  உயர்நீதிமன்றத்தின் முக்கிய நுழைவாயிலில் அமைந்திருந்த ப்ளெக்ஸ் போர்டு அரசுத் தலைமை வழக்கறிஞரான வண்டுமுருகன் இன்று புடவைகளை இழுப்பார்… மன்னிக்கவும் புடவைகளை வழங்குவார் என்று அறிவித்தது. புடவைகளோடு, வேட்டிகளை உருவுவார் மீண்டும் மன்னிக்கவும்.   வேட்டிகள் வழங்குவார் என்று அறிவித்தது.

அரசுத் தலைமை வழக்கறிஞர் அல்லது அட்வகேட் ஜெனரல் என்ற பதவி என்பது அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கியுள்ள பதவி.  அந்தப் பதவிக்கு உயர்நீதிமன்ற நீதிபதிக்கு இணையான தகுதி உண்டு.  அரசுத் தலைமை வழக்கறிஞரை வழக்கறிஞர்களின் தலைவர் (Leader of the Bar) என்று அழைக்கிறார்கள்.  அப்படிப்பட்ட பதவியில் இருக்கக் கூடிய வண்டு முருகன் இன்று புடவை வழங்கிக் கொண்டு இருக்கிறார்.

அதிமுகவில் உள்ள மற்ற வழக்கறிஞர் அடிமைகள் போட்டி போட்டுக் கொண்டு ப்ளெக்ஸ் போர்டுகளை வைத்து, தங்களது விசுவாசத்தைக் காட்டிக் கொண்டு உள்ளன.  இந்த அடிமைகள் இப்படி போட்டி போட்டுக் கொண்டு ப்ளெக்ஸ் போர்டுகள் வைப்பதன் நோக்கம் என்ன தெரியுமா ?  இப்படி விசுவாசமான அடிமையாக இருக்கிறானே… இவனை எப்படியாவது நீதிபதியாக ஆக்கி விடலாம் என்று ஜெயலலிதா முடிவு செய்வாராம்.  இதில் உள்ளவர்களில் சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாகும் வாய்ப்பு மிக மிக அதிகமாக உள்ளது.

இப்படிப்பட்ட அடிமைகள் நீதிபதியானால், எப்படிப்பட்ட நீதிபரிபாலனம் நடைபெறும் என்பதை சொல்ல வேண்டியதில்லை.

1962ம் ஆண்டு வழங்கிய ஒரு தீர்ப்பில் நீதிபதி பி.என்.பகவதி இவ்வாறு கூறுகிறார்.

He must remember that the Court is a temple of justice and the advocate at the bar as well, as the Judge upon the bench are equally ministers in that temple.

நீதிமன்றம் நீதியின் கோயில் என்பதையும், வழக்கறிஞர் மற்றும் நீதிபதிகள் அந்தக் கோயிலில் சம அந்தஸ்து உடைய அர்ச்சகர்கள் என்று கூறுகிறார்.

இப்படி நீதி வழங்கப் படவேண்டிய கோயிலை எப்படி அதிமுகவின் கூடாரமாக்கியிருக்கிறார்கள் பார்த்தீர்களா ?  சென்னை உயர்நீதிமன்றம் இன்று அடிமைகள் மன்றமாக மாறியதற்குக் காரணம், அதிமுக அடிமைகள் அல்ல….. நீதிபதிகளே…  இந்த நீதிபதிகள், அதிமுக அடிமைகளைப் பார்த்து பம்முவதுதான் இந்த அடிமைகளை இப்படி கொட்டமடிக்க வைக்கிறது.

காலையில் நீதிமன்றத்துக்கு வரும் 40க்கும் மேற்பட்ட நீதிபதிகள் அத்தனை பேரும், இந்த அலங்கார வளைவுகளையும் ஆடம்பரங்களையும் பார்த்துதான் வருகிறார்கள்.  ஒரே ஒரு நீதிபதிக்குக் கூட, வண்டு முருகனை அழைத்து இது நீதிமன்றமா இல்லை கட்சி அலுவலகமா ?  உடனடியாக அந்த ப்ளெக்ஸ் போர்டுகளை அகற்றாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்க நேரிடும் என்று கூறத் துணிச்சல் இல்லாமல் போனது வேதனையிலும் வேதனை.

adfDSC00037

ஏப்ரல் 2008ல் சென்னையில் உள்ள சட்டவிரோதமான ப்ளெக்ஸ் போர்டுகள் தொடர்பாக ட்ராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில்  சென்னை உயர்நீதிமன்றம், இவ்வாறு தெரிவித்தது.

10.2 Rules 6(3) and 6(4) of the Chennai City Municipal Corporation Licensing of Hoardings and Levy and Collection of Advertisement Tax Rules, 2003, being relevant, are extracted hereunder :-

"6(3) No hoarding shall be permitted on both sides of the roads with a footpath of less than ten feet width. In roads with no separate footpath, a minimum of ten feet width shall be available between the road margin and the hoarding for use of pedestrians.

If any digital banner is erected without permission, even temporarily, it is the duty of the concerned authorities to take appropriate action including removal of such unauthorised digital banner as well as launching of prosecution against the violators.

சென்னை மாநகராட்சி விதிகளில், முன் அனுமதி பெறாமல் பேனர்கள் வைக்கக் கூடாது என்று விதிகள் இருப்பதால், சட்டவிரோதமான பேனர்களை உடனடியாக அகற்றுவதோடு இவ்வாறு பேனர்கள் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

பேனர்கள் தொடர்பாக மாநகராட்சி விதிப்படி, பத்து அடிக்கும் குறைவான நடைபாதையில், தனியாக நடைபாதை இல்லாத இடங்களில், பேனர்களே வைக்கக் கூடாது என்று தெளிவாகக் கூறுகிறது.

பேனர்களே வைக்கக் கூடாது என்ற தெளிவாக விதி இருக்கையில், அந்த விதிகளை, சென்னை உயர்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும், உறுதி செய்துள்ள நிலையில், உயர்நீதிமன்ற வாசலிலேயே பேனர் வைக்கும் ஒரு அரசுத் தலைமை வழக்கறிஞரை என்னவென்று சொல்வீர்கள்…

பேனர் வைத்து, வேட்டி புடவைகளை வினியோகிக்கும் ஒரு அரசுத் தலைமை வழக்கறிஞர் … …..

சென்னை உயர்நீதிமன்றம் Sengkodi Vs State of Tamil Nadu இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

When Rule 36 mandates that the sign-board or nameplate or stationery of the Advocate should not indicate that he is or has been associated with any person or organisation or with any particular cause or matter etc., it is rather paining to note that some members of the noble profession are printing their photographs in the huge hoardings of the political leaders, virtually at the feet of such political leaders, thus indicating that they are associated with such political leaders, further more amounting to publicity, which is prohibited under Rule 36. This violation of the mandatory provisions of the Bar Council of India Rules should be viewed seriously and the State Bar Councils should not allow such practices to be carried and should come out with strict action against such advocates, so as to maintain the dignity and decorum of the noble profession. Therefore, the Chairman, Bar Council of Tamil Nadu, is directed to take all steps to implement the Bar Council of India Rules strictly, in their true letter and spirit, so as to uphold the dignity and decorum of the noble profession of advocacy. For all the above reasons, this Habeas Corpus petition is dismissed.

பார் கவுன்சில் விதி 36 வழக்கறிஞர்களின் பெயர்ப்பலகையோ, முகவரிப்பலகையோ, இதர பொருட்களோ, அவர் ஏதாவது ஒரு அமைப்புடனோ, ஒரு நபருடனோ சார்ந்துள்ளார் என்பது வெளிப்படையாகத் தெரிவது போல உருவாக்கக் கூடாது எனன்று தெளிவாகக் குறிப்பிட்டிருந்தும், வழக்கறிஞர் போன்ற புனிதமான தொழில்களில் உள்ளவர்கள் பெரிய விளம்பரப்பலகைகளில் அரசியல் தலைவர்களின் படங்களோடு, அரசியல்தலைவர்களின் கால்களுக்குக் கீழே தங்கள் புகைப்படங்களைப் போட்டு, தாங்கள் அந்த அரசியல் தலைவர்களோடு இணைந்திருப்பதாகக் காட்டிக் கொள்வது மேலும் விளம்பரப்படுத்திக் கொள்வது வேதனை அளிக்கிறது.  இது விதி 36ல் தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  மாநில வழக்கறிஞர் சங்கங்கள் (State Bar Councils) வழக்கறிஞர் தொழிலின் புனிதத்தையும், நாகரீகத்தையும் காக்கும் வகையில் இது போன்ற நடவடிக்கைகளை தடுப்பதோடு இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தமிழக பார் கவுன்சிலின் தலைவர் அகில இந்திய பார்கவுன்சிலின் விதிகளை உறுதியாக அமல்படுத்தி வழக்கறிஞர் தொழிலின் மேன்மையை பாதுகாக்க வேண்டும்.

இந்தத் தீர்ப்பை வண்டு முருகன் படித்திருப்பாரா என்று தெரியவில்லை...அவர் நமது எம்.ஜி.ஆரைத் தவிர வேறு எதையும் படிப்பதாகத் தகவல்கள் இல்லை.

சரி… வண்டு முருகனுக்குத்தான் அறிவில்லை.  உயர்நீதிமன்றத் தீர்ப்புகளையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் மதிக்காமல் இப்படி நீதிமன்ற வாசலிலேயே பேனர்கள் வைத்திருக்கிறார்களே என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒரே ஒரு நீதிபதிக்குக் கூடவா தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு (suo motu contempt) வழக்கு எடுக்கத் துணிவில்லை…. ?

வெட்கம்….. சென்னை உயர்நீதிமன்றத்தின் வாசலிலேயே நீதிமன்றத் தீர்ப்புகளை மதிக்காமல் காற்றில் பறக்கவிடுவ்தைக் கண்டு கொள்ளாத நீதிபதிளுக்கு, தங்களின் மற்ற தீர்ப்புகளை மதிக்காமல் அவமதிப்பு செய்யும் அதிகாரிகளை தண்டிக்க என்ன அருகதை  இருக்கிறது ?

இதை நீதிமன்றம் என்று அழைப்பதை விட, அடிமைகள் மன்றம் என்று அழைப்பதே பொருத்தம்.

DSC_0922

DSC_0914

 

Comments  

 
0 #24 Samookam 2013-03-15 12:59
அரசு தலைமை வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன் அம்மாவின் அடிமையாக இருந்ததால் கிடைதத பரிசு TNPSC தலைவர் post.
Quote
 
 
+3 #23 நான் இந்தியன் இல்லை 2013-03-07 22:11
நம்ம வண்டு முருகன்,தமிழ்நா டு தேர்வாணைய தலைவராவே ஆகிட்டருப்பா,எல ்லோரும் போய் புள்ள குட்டிய படிக்கவைங்கப்பா ,ஜெயலலிதா: அவரின் சிறந்த அடிமைக்கு சிறந்த பரிசு கொடுத்துவிட்டார ்.
Quote
 
 
+2 #22 மண்புழு 2013-03-07 17:36
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) தலைவராக மாநில அரசின் தலைமை வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன் நியமிக்கப்பட்டு ள்ளார்................ !!!!!!!!!!!!!
Quote
 
 
+1 #21 romba mukkiyam 2013-03-07 17:07
TNPSC தலைவராக தெர்ந்தெடுக்க பட்டதர்க்கு வாழ்த்து?
Quote
 
 
+1 #20 Vipa 2013-03-07 16:16
டி.என்.பி.எஸ்.சி. புதிய தலைவராக நவநீத கிருஷ்ணன் நியமனம்

http://www.maalaimalar.com/2013/03/07142816/TNPSC-new-chairman-navaneetha.html
Quote
 
 
+6 #19 gnanaveln 2013-03-05 02:06
இந்தியாவில் அணைத்து கட்சி தொண்டனும் அடிமைகள்தான் ... காங்கிரஸ் கட்சி தொண்டன் இத்தாலி வந்தேரிக்கு அடிமை... தி மு க தொண்டன் கட்சி தலைமை குடும்பத்துக்கு அடிமை... தேசியவாத காங்கிரஸ் கட்சி தொண்டன் சரத் பவர் மற்றும் சுப்ரிய சுலேகு அடிமை.... சமாஜ்வாடி கட்சி தொண்டன் முலாயம் சிங்க் மற்றும் அகிலேஷ் யாதவுக்கு அடிமை.... அ தி மு க தொண்டன் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கும் அடிமை.... இந்தியாவில் இந்த பட்டியல் மிக நீளமான ஒன்று....
Quote
 
 
+2 #18 super suppu 2013-03-04 12:16
இதெல்லாம் சாதாரன் விசயம் அம்மா ஆட்ச்ச்ச்ச்ச்ச் ச்ச்ச்ச்ச்ச்ச்ச ்ச்ச்ச்ச்ச்ச்ய் ல் :lol:
Quote
 
 
+2 #17 arun1984 2013-02-28 03:37
இதெல்லாம் செவுத்துல அடிச்ச சாணி மாதிரி.. எத்தனதடவ அடிச்சாலும் செவுரு விழாது சாணிதான் காஞ்சுபோய் விழும்.
நீங்க எழுதனது ஒரு பிடி சாணிக்கு சமம் அவ்வளவுதான்..
Quote
 
 
+7 #16 usilampattikaran 2013-02-28 02:50
வண்டு முருகனின் வாததிறமையை இன்னுமா அம்மா அவர்கள் நம்புகிறார்கள்.வண்டு முருகனுக்கு ஒரு கட்டுரை எழுதுங்களேன். ரெம்ப ஆசையாவும் ஆர்வமாவும் இருக்கு.(காமெடியாவும் இருக்கும்ல.)
Quote
 
 
0 #15 Kaipulla 2013-02-27 15:08
Quoting Anna Pandi:
by the name of tamil language, please do not kill english too. idiots.

Same to you Gentleman!
Quote
 
 
+5 #14 ச.தண்டபாணி 2013-02-27 10:44
நெஞ்சு பொறுக்குதில்லைய ே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால ் என்ற பாரதியின் வரிகள் இன்னும் நூறு ஆண்டுகளுக்கு பொருத்தமாக இருக்கும் போல.
Quote
 
 
+10 #13 R Chandrasekaran 2013-02-26 15:57
”என்றெமது இன்னல்கள் தீர்ந்து பொய்யாகும்...”
Quote
 
 
+25 #12 பன்னிக்குட்டிராமசாமி 2013-02-26 14:13
என்னதான் ப்ளெக்ஸ் போர்டு வச்சாலும் , போட்டோவில சிரிக்கிற வண்டு முருகனின் மோகன புன்னகைக்கு மற்றதெல்லாம் ஈடாகுமா :lol:
Quote
 
 
+15 #11 Karaikudian 2013-02-26 14:10
இவர்கள் அனைவரின் உணவும் சோறுதானா. சந்தெகம்.
Quote
 
 
+7 #10 Ray Jaguar 2013-02-26 13:26
MGR-Adimaipenn
JJ-Adimaigalukku penn :lol: :lol:
Quote
 
 
+8 #9 aninu 2013-02-26 12:40
SAVUKKU what happened " You are openly criticizing AMMA " Beware of defamation cases . I also would like to know how the govt is functioning which will help people like me who had supported AIADMK in the last elections . It would be meaningful .
Quote
 
 
+9 #8 Naanum Adimai 2013-02-26 12:25
சவுக்கு,
நீங்க எப்படி உங்க பத்திரிக்கை நண்பர்களுக்கு அடிமையோ அதே போல் தான் இது. இதுல இரண்டு பிரிவு இருக்கு.
1. இன்னைக்கு இவருக்கு இத செய்தா நாளைக்கு நமக்கு பலன் கிடைக்கும்.
2. ஒரு விடயத்தில நமக்கு இவரு ஒரு நாள் உதவுனாரே அதற்கு பதில் இவருக்கு நாம செய்தே ஆகனும்.
தமிழ் மக்கள்ள ஒரு பெரிய பாதி இத தெரிங்சு செய்ரவுங்க மீதி இது தெரியாம மாட்டிக்கிட்டு செய்ரவுங்க. ஒருத்தர் உதவி வேண்டான்ன கூட அவருக்கு வல்லுகட்டாயம உதவி செங்சு அவரயும் இந்த கலவாணி கூட்டத்தில சேக்கிரதே நிரய பெருக்கு பொழப்பா போச்சு. நீங்க இதுல மட்டிக்கிட்டு தான் இன்னும் அந்த பத்திரிக்கை (நண்பர்கள்) பெயர இன்னும் வெலிய உடல.
"Bribe need not to be in cash Mr. Ramanujam" அப்படின்னு ஒரு கட்டுரை எழுதினது நீங்க தான? So you also given/taken bribe from your journalist friends by giving them "warning shots" because you are de-facto their slave.
இப்ப சொல்லுங்க நீங்கலும் ஒரு அடிமை தான திரு சவுக்கு அவர்களே?
Quote
 
 
+3 #7 samsudeen 2013-02-26 12:16
இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா!!
Quote
 
 
-4 #6 Anna Pandi 2013-02-26 12:03
by the name of tamil language, please do not kill english too. idiots.
Quote
 
 
+44 #5 kingkong 2013-02-26 06:36
போன வாரம் ரஷியாவில மோதிய விண்கல் இந்தியாவில் விழாமல் இருந்ததற்கும் அம்மா தான் காரணம்.. இந்த ப்ளெக்ஸ் எல்லாம் அதுக்கு முன்னடியே அடிச்சதனால அதை போட முடியலை மை லார்டு.. மன்னிக்கவும்
Quote
 
 
+24 #4 பாலபத்திர ஓணான்டி 2013-02-26 06:06
அந்தக்காலத்தில் செயலலிதாவை பெரிய இங்கிலிபீசு புலவர்ன்னு பில்டப் தருவனுக... ஆனா அந்தம்மாவை கவர் பண்ண அட்டுவகேட்டு பாலசுப்பு போட்ட பிட்டில் இங்கிலீசை கொலையாக கொன்னிருக்கானுவ
Quote
 
 
+19 #3 anniyan 2013-02-26 05:39
1994ம் வருடம், ஒரு யானை காணாமல் போனதாக தினத்தந்தியில் ஒரு செய்தி வந்தது.

"அதெப்படி அவ்ளோ பெரிய யானை காணாம போவும்?" என்ற அதிமுக வார்டு மேம்பரிடம் "கட் அவுட் பின்னாடி ஒளிஞ்சுகினு இருக்கும்ண்ணா" என்று சொல்லி குட்டு வாங்கிய நியாபகம் வருகிறது.
Quote
 
 
+11 #2 usilampattikaran 2013-02-26 03:32
இதெல்லாம் வழமை தான் என்ற நினைப்பில் போஈ இருப்பஙப்பா..ஆமா சவுக்கு ...உனக்கு போன் பண்னி சொல்வாங்களோ????? எப்புடியா மேட்டர் புடிக்குற.....!!
Quote
 
 
+28 #1 நிலவுமொழி செந்தாமரை 2013-02-26 01:50
//அரசுத் தலைமை வழக்கறிஞரான வண்டுமுருகன் இன்று புடவைகளை இழுப்பார்… மன்னிக்கவும் புடவைகளை வழங்குவார் என்று அறிவித்தது. புடவைகளோடு, வேட்டிகளை உருவுவார் மீண்டும் மன்னிக்கவும். வேட்டிகள் வழங்குவார் என்று அறிவித்தது.// :lol:
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 104 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday2994
mod_vvisit_counterYesterday13577
mod_vvisit_counterThis week48784
mod_vvisit_counterLast week95998
mod_vvisit_counterThis month282831
mod_vvisit_counterLast month382199
mod_vvisit_counterAll days13199198