முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்தொடர்புக்கு
+++
இது வேற வாய்...... அது..... ? அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 26
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
திங்கட்கிழமை, 11 மார்ச் 2013 23:59

ffffffffffffff

 

டெசோ அமைப்பின் சார்பாக செவ்வாயன்று ஈழத் தமிழரின் உரிக்காகவும், இலங்கையை போர்க்குற்றத்துக்காக தண்டிப்பதற்காகவும், நடைபெறும் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்து கருணாநிதியின் கடிதம்..

டெசோ தலைவர் கருணாநிதி வேண்டுகோள்…  11.03.2013

ஈழத் தமிழர் இன்னல் தீரவும், ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைக்குழுவில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை வலிமையான திருத்தங்களுடன் இந்தியா ஆதரிக்க வேண்டுமென்று கோரியும், "டெசோ" அமைப்பின் சார்பில் 12-3-2013 அன்று பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளோம்.

நம் அழைப்பினை ஏற்றுத் தாமாகவே முன் வந்து வணிகர்கள், தொழிலாளர்கள், மாணவர்கள், பொது மக்கள் அனைவரும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க இசைவு தந்த வண்ணம் உள்ள செடீநுதி, நமக்கு ஊக்கம் தருவதாக உள்ளது.

நான் ஏற்கனவே என் வேண்டுகோள் அறிக்கையில் கேட்டுக் கொண்டிருந்தபடி, நம் போராட்டம் அன்பு வழியிலும், அறவழியிலும் நடைபெறுவதாக இருந்திட வேண்டும். ஒரு சிறு வன்முறைக்கும் உடன்பிறப்புகள் இடம் தந்து விடக் கூடாது. பொது மக்களுக்கோ, தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கோ எந்த இடையூறும் இன்றி நம் அறப்போர் நடந்திட வேண்டும்.

இன எதிரிகள், சமூக விரோதிகள் இடையில் புகுந்து கலவரம் விளைத்திட முனையக் கூடும். அது குறித்தும் மிகுந்த கவனத்தோடு இருந்திட வேண்டும்.

ஈழ மக்களுக்காகத் தமிழகமே தன் வேலைகளை நிறுத்தி, நாடு நிலைகுத்தி நின்று விட்டதென்னும் செய்தியை, உடன்பிறப்பே, நாளை நீ கொண்டு வர வேண்டும்.

அன்புடன்

மு.கருணாநிதி

 

பிப்ரவரி 2009ல் போர் உச்சகட்டத்தில் நடந்து கொண்டிருந்தபோது, பெண்களும், குழந்தைகளும், கொத்துக் குண்டுகளுக்கு இரையாகிக் கொண்டிருந்தபோது, அழைப்பு விடுக்கப்பட்ட முழு அடைப்பை சட்டவிரோதமாக அறிவித்து, கருணாநிதி அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு....

pr030209_77

செய்தி வெளியீடு எண் 77                     நாள் 03.02.2009

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் பெயரால் 4ம் தேதியன்று நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ள முழு அடைப்புக் குறித்து அந்த போராட்டத்தை தலைமையேற்று நடத்துகின்ற கட்சிகளுக்கு தலைமைச் செயலாளர் அன்று அனுப்பியுள்ள கடிதம் வருமாறு :-

04.02.2009 அன்று புதன்கிழமை அன்று இலங்கைத் தமிழர் பாதுகாப்புக்காக என்று தமிழ்நாட்டில் முழு அடைப்பு போராட்டம்  நடத்த தங்கள் கட்சியின் பெயரால் அழைப்பு விடுத்திருக்கிறீர்கள்.   எந்த நோக்கத்திற்காக முழு அடைப்பு அறிவிக்கப்பட்டாலும் அதனை நடத்தக் கூடா என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி; அது தொடர்பாக இப்போதும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீதே உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடைபெற்றுக் கொண்டிருப்பதை அறிவீர்கள்.  இந்த விபரங்களைச் சுட்டிக்காட்டி தமிழக அரசு அறிக்கை மூலம் தெரிவித்திருக்கிறது.   இப்போது நீங்கள் நடத்துவதாக அழைப்பு விடுத்திருக்கும் முழு அடைப்பு என்பதன் நோக்கம் நல்ல நோக்கத்தை முன்னிட்டு என்று இருந்தாலும் – உச்சநீதிமன்றம் முழு அடைப்பு நடத்துவதையே சட்டமீறல் என்ற பொருளில் தடுத்து நிறுத்தியிருப்பதாலும் அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் முடியாதிருக்கும் நிலையில் நீங்கள் அறிவித்துள்ள 4ம்தேதி முழு அடைப்பு சட்டவிரோதமானது என்று எச்சரிக்கப்படுகிறது.

வெளியீடு : இயக்குநர், செய்தி, மக்கள் தொடர்புத் துறை.

 

Comments  

 
+1 #20 NAVI 2013-03-17 14:18
கலைஞர் என்றும் எதிர் கட்சியாக விளங்க நாம் அனைவரும் வேண்டுவோம். அப்பொதுதான் அவருக்கு தமிழ்ர் நலன் கண்ணுக்குத் தெரியும்
ஃஉஒடெ
தமிழர் நலன் மட்டுமல்ல...... ஆளும் கட்சியின் சம்பாத்தியமும் தான்....
Quote
 
 
+2 #19 Suresh Raja 2013-03-16 18:36
அது வேற வாய், இது ஆசனவாய். :o
Quote
 
 
0 #18 UNMAI VILAMBI 2013-03-16 01:53
I HAVE ONE SUGGESTION, THAT WILL GIVE REAL BOOST TO CURRENT AGITATIONS FOR OUR SRILANKAN TAMILS, WHY DON'T TESO THALIVAR GOES FOR SAGUMVARAI UNNAVIRATHM ASKING FOR CHANGED RESOLUTION SUPPORTING INDEPENDENT INQUIRY & PUBLIC VOTE ON SEPARATE TAMIL EELAM,
Orey kallula rendu manga, Central has to support it else it will be in difficult situvation. if supports good , if didn't supports, atleast tamil nadu will be liberated from Teso thalivar at the end
TRUE MAN
Quote
 
 
+31 #17 mbjahangeer 2013-03-14 20:27
ச்சே ... ஒரு 20 வருசத்துக்கு முன்னாடி இருந்த தமிழ் மக்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தார்கள்... தலைவர் என்ன சொன்னாலும் வெள்ளந்தியாக நம்பினார்கள்.. ஆனால் இப்போது சவுக்கு போன்ற சிலர் எங்கே போனாலும் கேட்டை போடுகிறார்கள்... இப்படியே போனால் தலைவர் எப்படி தான் தொழில் செய்வது...?
Quote
 
 
0 #16 boopathi 2013-03-14 19:37
அசச்
Quote
 
 
+6 #15 பொன்,முத்துக்குமார் 2013-03-13 21:11
மொஹம்மது கனி, இவ்ளோ பச்ச புள்ளயா நீயி ? வாயில வெரல வச்சா கூட கடிக்க தெரியாத அப்பாவி போல இருக்கே நீயி ??
Quote
 
 
+15 #14 Vetti payyan 2013-03-13 19:57
எப்படி பேசினாலும் இப்படி எடக்கு மடக்கா கேள்வி கேட்டா ஒரு மனுஷன் எப்படிதான் அரசியல் பண்றது?
Quote
 
 
-40 #13 MUTHUKUMAR CHENNAI 2013-03-13 19:12
தி.மு.க நடத்திய இப்போராட்டத்திற ்கு ஆளும் கட்சியின் அடக்குமுறையையும ் மீறி மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது. வெறும் வாய்ச்சொல்லில் வீரர்களாக இலங்கைப் பிரச்சினையை தங்கள் அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்திக்கொ ண்டிருக்கும் தமிழக அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள் மத்தியில், களத்தில் இறங்கிப் போராட்டங்களை வெற்றிகரமாக நடத்தி வரும் தி.மு.க தலைவர் கருணாநிதியைப் பாராட்ட ச்வுக்குக்கு மனம் வராதே!
Quote
 
 
-40 #12 MC DAVID CHENNAI 2013-03-13 19:10
தி.மு.க தொடர்ந்து இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து வருகிறது. இலங்கைப் பிரச்சினையைப் பொருத்தவரை எல்லா அரசியல் கட்சி, தலைவர்களைவிட அதிகமான போராட்டங்கள், எம்.எல்.ஏ பதவியை இழந்தது முதல், இரண்டு முறை ஆட்சியை இழந்தது வரை பிரச்சினைகளை சந்தித்துள்ள, சந்தித்து வரும் கட்சி தி.மு.க.தான். கருத்துக்களை, டெசோ மாநாடு, பாராளுமன்றத்தில ் கனிமொழி மற்றும் திருச்சி சிவா ஆகியோர் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக ஓங்கிக் குரல் கொடுத்துள்ளனர்.
Quote
 
 
-33 #11 JOHN SELVARAJ 2013-03-13 19:09
டெசோ அமைப்பால் அறிவிக்கப்பட்ட இந்த பொது வேலை நிறுத்தம், அரசின் அடக்குமுறையையும ் மீறி வேற்றி பெற்றுள்ளது. பொதுமக்கள், பெரும்பாலான வணிகர்கள் தாங்களாகவே முன்வந்து கடைகளை மூடியுள்ளனர். வைகோ, சீமான், நெடுமாறன் போன்றோர் தமிழக அரசிற்கு பயந்து இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை . தமிழக அரசாவது அனைத்துக் கட்சிகளையும் அழைத்து இப்பிரச்சினைக்க ாக எல்லாக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து போராட்டத்தை நடத்தியிருக்கலா ம். இப்பிரச்சினையில ் தமிழக அரசியல் கட்சிகள் பிளவு பட்டிருப்பதற்கு காரனமே தமிழக ஆளும் கட்சியும், அதற்கு கூட்டணியாக இருந்து ஜாலரா போடும் சில கட்சிகளும்தான்.
Quote
 
 
+28 #10 R Chandrasekaran 2013-03-13 12:53
கலைஞர் என்றும் எதிர் கட்சியாக விளங்க நாம் அனைவரும் வேண்டுவோம். அப்பொதுதான் அவருக்கு தமிழ்ர் நலன் கண்ணுக்குத் தெரியும்
Quote
 
 
+8 #9 kingkong 2013-03-13 07:13
சவுக்கு ஜெ.அன்பழகனின் ட்விட்டரில் சரியான சவுக்கடி.. அதிலும் அந்தாளு வெக்கமே இல்லாம - நீங்க எல்லாரும் மினி கலைஞர்ன்னு சொன்னதை ரீ-ட்வீட் வேற பண்ணிருக்காரு..இப்படி வெளம்பரத்துக்கு அலையற கூட்டம் தான் இது..
Quote
 
 
+2 #8 sivapunniyam 2013-03-12 20:51
"இங்கே எதிர்த்து பதிவு செய்கிறவர்கள் எப்படியும் மு க வின் கொள்கைகளால் பலன் பெற்றவர்களே! மு க இன்றி தமிழ்னாடு அரசியல் இல்லை"" அதானபா நம்ம டமில் நாட்டோட சாபம்...ஒரு பயல அரசியல் பன்ன உடுலியே பெர்சு!! ங்ங்கொய்யால... நல்ல எண்ணத்தோட அரசியலுக்கு வந்தவனுக்கெல்லா ம் கொயிலு கட்டி கும்பாவிசேகம் பன்னிடுச்சிபா... இன்னா டேலண்டு...???? ஆமா..
கொள்கைன்னா இன்னாபா??? என்னமோ மூக்க கொலுக, நாக்கமூக்க கொலுக அப்புடி எல்லாம் எலுதுறாங்க... நமக்கு ஒன்யுமே பிரியமாடெந்துபா ... இங்க ஒரு பெர்ஸு சொல்து.. வட்டம்ன்னா சின்னத்துண்டு... மாவட்டம்னா பெரியத்துண்டு... எமெல்யேன்னா சால்வ.... மந்திரின்னா போர்வ... அப்புடி பதவிக்கேத்த அளவுக்கு கொள்ளையடிக்கறது தான் கொலுகைன்னு..... மெய்யாலுமா?
Quote
 
 
-34 #7 MOHAMEDGANI MADURAI 2013-03-12 17:51
பந்த் என்பதற்கும் வேலைநிறுத்தம் என்பதற்கும் வித்தியாசம் உள்ளது. பந்த் என்பது கூடாது என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பு வழஙகியுள்ளதால், அரசியல் கட்சிகள் பந்த் என்று தற்போது நடத்துவதில்லை. பந்த் என்பது கட்டாயப்படுத்தி அனைவரையும் போராட்டத்தில் ஈடுபடசெய்வது. வேலைநிறுத்தம் தாங்களாக வாகனங்களை இயக்காமல், கடைகளை அடைத்துக்கொள்வத ு. ஏதோ சவுக்கு புதிதாகக் கண்டுபிடித்ததுப ோல ஒரு செய்தியா? கருணாநிதியைத் திட்ட ஏதாவது ஒரு காரணம் வேண்டாமா?
Quote
 
 
-17 #6 samsudeen 2013-03-12 15:44
[ஃஉஒடெ நமெ="குமர்.ட்"]ச்சே ... ஒரு 20 வருசத்துக்கு முன்னாடி இருந்த தமிழ் மக்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தார்கள்...

சவுக்கையும், மு கவையும் எப்படி ஒரு சேர
பார்க்க முடியும்? இங்கே எதிர்த்து பதிவு செய்கிறவர்கள் எப்படியும் மு க வின் கொள்கைகளால் பலன் பெற்றவர்களே! மு க இன்றி தமிழ்னாடு அரசியல் இல்லை.ஒரு
இணைய பதிவு செய்தால் சவுக்கு மு க ஆகிவிடுமா? இங்கே ஜால்ரா அடிப்பவர்கள்
மாற்றம் கொண்டு வர முடியுமா? நான் மு க வின் அரசியலால் பயன் அடைந்தவன் இல்லை.மு கவின் அரசியலிலும் எனக்கு வெறுபாடு உண்டு.
Quote
 
 
-33 #5 mukil 2013-03-12 14:30
என்ன சொல்ல வருகிறாய் சவுக்கு உனக்கு திமுக மற்றும் அதன் தலைவர் பிடிக்காது என்பது வேறு விடயம் ஆனால் செய்தி வெளியிடும் போது நடுநிலைமையுடன் எழுத வேண்டும் வேலை நிறுத்தம் சட்டவிரோதம் என்று சுப்ரீம் கோர்ட் சொன்னதா இல்லையா அப்பொழுது அனுப்பியததில் என்ன குற்றம் கண்டீர்.வேணுமென்றால் அக்கட்சிகள் அச்சுற்றிக்கையை எதிர்த்தும் அன்றே பந்த் நடத்தவேண்டியது தானே இப்பொழுது மட்டும் சென்னை உயர்நீதிமன்றத்த ில் வழக்கு தொடர்ந்தது பந்திற்கு தடை விதிக்க முடியாது என கூறியுயளளது சவுக்கிற்கு தெரியாதா
Quote
 
 
+4 #4 gopalasamy 2013-03-12 13:24
KARUNA SAYS, THOSE WHO ARE AFRAID OF LION, SHOULD COME AND FALL ON ME.
Quote
 
 
+5 #3 guest_bala 2013-03-12 12:12
வார்த்தை 'மாற்றம்' மட்டுமே மாறாது...
Quote
 
 
+7 #2 Low Life 2013-03-12 00:37
what do you expect from a politician?
Quote
 
 
+83 #1 Kumar.T 2013-03-12 00:33
ச்சே ... ஒரு 20 வருசத்துக்கு முன்னாடி இருந்த தமிழ் மக்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தார்கள்... தலைவர் என்ன சொன்னாலும் வெள்ளந்தியாக நம்பினார்கள்.. ஆனால் இப்போது சவுக்கு போன்ற சிலர் எங்கே போனாலும் கேட்டை போடுகிறார்கள்... இப்படியே போனால் தலைவர் எப்படி தான் தொழில் செய்வது...?
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 51 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday1152
mod_vvisit_counterYesterday18770
mod_vvisit_counterThis week45152
mod_vvisit_counterLast week95167
mod_vvisit_counterThis month267412
mod_vvisit_counterLast month382199
mod_vvisit_counterAll days13183779