முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
ராஜபக்சவின் ஆணவப்போக்குக்கு விழுந்த முதல் அடி அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 11
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சனிக்கிழமை, 04 டிசம்பர் 2010 08:34
ma_01

புகழ்பெற்ற ஒக்ஸ்போட் மாணவர் கழகத்தில் உரையாற்ற அழைக்கப்பட்ட மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக பிரி. தமிழர்கள் காட்டிய வலுவான எதிர்ப்புக் காரணமாக அவரது பேச்சு கைவிடப்பட்டது. இது அவர் ஆட்சிக்கு வந்த பின்னர் சந்தித்த பாரிய தலைக்குனிவும் மூக்குடைப்பும் ஆகும்.

அவரது ஆணவப் போக்குக்குக் கிடைத்த முதல் அடி இதுவாகும்.

போன மச்சான் திரும்பி வந்தான் வெறுங்கையோடு என்பது போல ராஜபக்ச தனது பரிவாரங்களோடு சிறீலங்காவுக்கு வெறுங்கையோடு திரும்பியுள்ளார். அவரது ஆணவப் போக்குக்குக் கிடைத்த முதல் அடி இதுவாகும். தலைக்கனத்துக்கும் இனிப் போகப் போக மேலும் அடிகள் விழும்.

சிறீலங்கா ஒரு தீவாக இருக்கலாம். ஆனால் அரசியல், இராஜதந்திர மட்டத்தில் அது ஒரு தீவு அல்ல. அதன் இறைமை பன்னாட்டு சட்டங்கள் மற்றும் மரபுகளுக்குக் கட்டுப்பட்டது.

மஹிந்த ராஜபக்ச மீதும் அவரது இராணுவம் மீதும் மனிதவுரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை போன்ற குற்றச்சாட்டுக்கள் தமிழர்களால் மட்டுமல்ல மனிதவுரிமை அமைப்புகளாலும் சுமத்தப்பட்டு வருகின்றன.

தமிழ்ப் போராளிகள் கைகள் கட்டப்பட்ட நிலையில் சிங்கள இராணுவத்தினரால் முதுகுப்புறம் சுட்டுக் கொல்லப்படும் காணொளிக் காட்சிகள் பெருமளவில் வெளிவரத் தொடங்கியுள்ளன.

கற்பழிக்கப்பட்ட பின்னர் சுட்டுக் கொல்லப்பட்ட பெண் போராளிகளது காணொளிப்படங்கள் வெளிவந்துள்ளன. இலண்டன் தொலைக்காட்சி 4 போராளிகள் சிறைபிடிக்கப்பட்ட பின்னர் கண், கை கட்டப்பட்ட நிலையில் பின்புறமாக சிறீலங்கா இராணுவத்தினரால் சுடப்படும் காணொளியை சனல்4 ஒளிபரப்பியுள்ளது. பின்னணியில் வெடிச் சத்தங்கள் கேட்கின்றன.

இராணுவத்திடம் சரணடைந்த மட்டக்களப்பு மாவட்ட தளபதி ரமேஸ் சிங்கள இராணுவத்தால் விசாரணை செய்யப்படும் காணொளி தமிழ்நெட் இல் வெளிவந்துள்ளது.

அதே சமயம் சிறிலங்கா இராணுவம் ரமேஸை தாங்கள் கைது செய்யவோ சுட்டுக்கொல்லவோ இல்லை என்று முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் புதைக்கப் பார்க்கிறது. அவரை விசாரணை செய்யும் காணொளி வெளிவந்துள்ள நிலையில் இராணுவத்தின் தலைமைத் தளபதி மஹிந்த ராஜபக்சவும் இராணுவமும் கையும் மெய்யுமாகப் பிடிபட்டுள்ளது.

சிறீலங்காவின் அப்பட்டமான மனிதவுரிமைகள் பற்றி மௌனம் சாதித்த இந்திய ஆங்கில ஊடகங்கள் அது பற்றி எழுத தொடங்கியுள்ளன. விதிவிலக்கு இந்து. இந்துக்கு எதிராக தமிழ் உணர்வாளர்கள் போர் தொடுக்கக் கிளம்பியுள்ளனர்.

சிறிலங்கா அரசின் இந்த மோசமான மனிதவுரிமை மீறல்களை இந்தியா வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. காரணம் சிறிலங்கா அரசுக்கு ஆயுதங்கள், ராடர்கள், புலனாய்வு, பயிற்சி எல்லாம் கொடுத்தது இந்தியாதான். இந்தியாவின் போரைத்தான் சிறிலங்கா செய்து முடித்தது என்று இராசபக்சே பலமுறை இந்தியாவுக்குப் புகழ்மாலை சூட்டியுள்ளார். இதன் பொருள் சோனியா காந்தி, மன்மோகன் சிங், ப.சிதம்பரம், முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஆகியோரின் கைகளிலும் தமிழர்களின் பச்சை இரத்தம் படிந்துள்ளது என்பதாகும்.

வரும் தேர்தலில் தமிழக மக்கள் காங்கிரஸ் - திமுக ஊழல் கூட்டணியைத் தோற்கடிக்க வேண்டும். அப்போதுதான் போரில் கொல்லப்பட்ட பொதுமக்கள், தளபதிகள், போராளிகள் ஆகியோரது ஆத்மா சாந்தியடையும்.

திருமகள்

 

Comments  

 
+2 #10 JP 2010-12-17 11:33
SONIA AND KARUNANITHI WILL GET REWARD FOR WHAT THEY HAVE DONE TO TAMILIANS.
Quote
 
 
+3 #9 suman 2010-12-15 23:57
Quoting saravanan.s:
DMK AND CONGRESS SHOULD BE PUNISHED IN COMMING ELECTIONS.

I agree with you!! Dear Tamil people also will punish them in elections.. All criminals must be punished after the electins.
Quote
 
 
+2 #8 BAHAVATH 2010-12-13 18:11
PUNISH CONGERES ANGINEST OF TAMIL PEOPLE
Quote
 
 
0 #7 p.udhaya kumar 2010-12-10 15:53
:sad:
Quote
 
 
0 #6 D 2010-12-09 23:08
DSF
Quote
 
 
+2 #5 தளவாய் தமிழர் களம் 2010-12-05 16:17
நான்தமிழன்.திராவிடன்அல்ல.
தமிழா,
பள்ளனாய், பறையனாய்,
நாடானாய், தேவனாய்,
வன்னியனாய், பரவனாய்,
பிள்ளையாய், கவுண்டனாய்,
மள்ளனாய், குயவனாய்......
வாழ்ந்தது போதும்.
வா - தமிழா
தமிழனாய் வாழ்வோம்.
வந்தேறி தெலுங்கன், கன்னடன், மலையாளி, மார்வாடி, ஆரிய பிராமணர், இவர்களிடம் இருந்து நம் தமிழ் நாட்டை காப்போம்.
"பக்கத்தில் உள்ளவன் சாதியை கேள், அவன் இனம் தெரியும்.
தமிழன் என்றால் தோள் கொடு, வந்தேறி என்றால், விரட்டி அடி "
''தமிழர்கள் சிறுபான்மையாக உள்ள இடங்களில் தாய்மொழி பற்றோடு இருக்கிறார்கள். பெரும்பான்மையாக உள்ள தமிழகத்தில் சீரழி்ந்த தமிழர்களாக இருக்கிறார்கள்!
Quote
 
 
+4 #4 சிவமயம் 2010-12-05 11:05
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பிரித்தானியா சென்றிருந்த சந்தர்ப்பத்தில் போர் குற்றச்சாட்டுகள ின் அடிப்படையில் அவரை கைதுசெய்வதற்காக பிரித்தானிய ஆரம்ப நீதிமன்றம் ஒன்று உத்தரவு பிறப்பித்திருந் தது. புலம்பெயர் தமிழர்களின் கோரிக்கையின் அடிப்படையில் நீதிமன்றம் இந்த உத்தரவை கடந்த 2 ஆம் திகதி பிறப்பித்தது. மக்கள் வழங்கிய வாக்குகளால் அதிகாரத்திற்கு வந்துள்ள அரச தலைவர் ஒருவரை, வெளிநாட்டொன்றில ் கைதுசெய்வதற்காக வெளிநாட்டு நீதிமன்றம் ஒன்று உத்தரவு பிறப்பித்தது உலக வரலாற்றில் இது முதல் முறையாகும்.

பிரித்தானிய சட்டத்தின்படி 72 மணித்தியாலங்களு க்கு செயற்படுத்தப்பட ும் வகையில் புலம்பெயர் தமிழர்கள் இந்த நீதிமன்ற உத்தரவை பெற்றுக்கொண்டுள ்ளனர் எனவும் அவர்கள் கூறியுள்ளனர். பிரித்தானியாவில ் இயங்கும் நோர்வே சட்ட நிறுவனத்தின் ஆலோசனைக்கு அமைய புலம்பெயர் தமிழர்கள் மிகவும் திட்டமிட்ட வகையில் இந்த நீதிமன்ற உத்தரவை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது
Quote
 
 
+7 #3 saravanan.s 2010-12-04 14:48
DMK AND CONGRESS SHOULD BE PUNISHED IN COMMING ELECTIONS.
Quote
 
 
+11 #2 RAJ 2010-12-04 12:17
DMK AND CONGRESS SHOULD BE PUNISHED IN COMMING ELECTIONS.
Quote
 
 
+16 #1 மணியன் 2010-12-04 09:53
படுகொலைக்குற்றவ ாளி ராஜபக்க்ஷவுக்கு புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் பிரித்தானியாவில ் காட்டிய எதிர்ப்பு குற்றவாளி ராஜபக்க்ஷவை உலக அரங்கில் கொலையாளி என அப்பட்டமாக இனங்காட்டியுள்ள து, இனி ஈழ படுகொலை சூத்திரதாரிகள் சோனியா, கருணாநிதி, மன்மோஹன், சிதம்பரம்,ஆகியோ ரின் குற்றங்களை அம்பலப்படுத்த அடுத்த பொதுத்தேர்தலை பயன்படுத்தி இனங்காட்டுவோம்.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 33 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday3513
mod_vvisit_counterYesterday11112
mod_vvisit_counterThis week14625
mod_vvisit_counterLast week78861
mod_vvisit_counterThis month227444
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12749563