முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
மிஸ்டர் கழுகு: ''வயசாயிடுச்சு!'' ராகுல் சுரீர் அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 15
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
ஞாயிற்றுக்கிழமை, 05 டிசம்பர் 2010 17:20

ழையில் நனைந்து வந்த கழுகார், சிறகுகளைச் சிலுப்பியபடி கொஞ்ச நேரம் ஆசுவாசப்படுத்திக் கொண்டார். அவராகத் தொடங்கட்டும் என்று காத்திருந்தோம்.

 

''மழை, வெள்ளம் எனத் தமிழகத்தின் முக்கியமான பகுதிகள் அனைத்தும் தண்ணீரில் மிதக்கின்றன. கன மழை ஆரம்பிப்பதற்கு முன்னரே நான் உமக்குச் சொன்னேன், வெள்ள நிவாரண நிதி என்று எதையாவது கொடுத்து 'கவர்’ பண்ணப் போகிறார்கள் என்று. அதற்கான காலம் நெருங்கிவிட்டது. விரைவில் அறிவிப்புகள் வரலாம். வாக்காளர்களை வசப்படுத்த இதைவிட நல்ல வாய்ப்பு என்ன இருக்கிறது?'' - முதல் பிட்டைத் தூக்கிப் போட்ட கழுகார் தொடர்ந்தார்...

''முதல்வர் அதிகமான அப்செட்டில் இருக்கிறார்! பேராசிரியர் அன்பழகனிடம் தனிமையில் பேசிய கருணாநிதி, வருத்தமாய் சில வார்த்தைகளைச் சொல்லி அநியாயத்துக்கு உருகினாராம். 'நிதீஷ் குமாரைப் போல சாதனைகளை மட்டும் சொல்லி நிம்மதியா ஜெயிச்சிடலாம்னு நினைச்சேன். ஆனா, எல்லாத்துலயும் இப்படி மண்ணைப் போட்டுட்டாங்களே’ என்று வருத்தப்பட்ட கருணாநிதி, நான்கு பெயர்களை வரிசையாகச் சொல்லி, 'இவங்கதான் எனக்குத் தவறான தகவல்களைக் கொடுத்து டார்க் ரூம்ல வெச்சுட்டாங்க’ என்று சொன்னாராம். உறவில் ஒரு பெண்மணி, கட்சியில் ஒரு மன்னர், காக்கியில் ஒரு அதிகாரி மற்றும் இன்னொருவர் என்கிறார்கள்.  'இவ்வளவு விதிமீறல்கள் இருந்திருக்கும்னு தெரிஞ்சு இருந்தா, முன்னமே ராஜினாமா செய்யவைத்து விவகாரம் விஸ்வரூபம் எடுக்கிறதுக்கு முன்னாடியே அணைச்சிருக்கலாம்’ என்றும் கருணாநிதி வருத்தப்பட்டாராம்.''

''ஆ.ராசா?''

''சென்னைக்குள் அதிகம் வர வேண்டாம். வந்தாலும், தலைவருடன் வலம் வர வேண்டாம். எங்காவது வர நேர்ந்தாலும், புகைப்படத்தில் விழ வேண்டாம் என்ற மூன்று கட்டளைகள் அவருக்குப் போடப்பட்டுள்ளதாம். 'இது தலைவர் உத்தரவா... தளபதி உத்தரவா என்று தெரியவில்லை’ என்கிறார்கள் தி.மு.க-வில்.

அதனால்தான் ஊட்டிக்குப் போய் இறங்கினார் ஆ.ராசா. ஆனால், அங்கும் தடபுடலான கோவை விமான நிலைய வரவேற்பு ஆர்ப்பாட்டத்தை அவ்வளவாக தலைமை ரசிக்கவில்லை. கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது கணக்காக அவர் நடந்துகொள்ளும் சம்பவங்களை, கருணாநிதி அதிகம் ரசிக்கவில்லை என்றே சொல்கிறார்கள்.''

''ராஜாத்தி அம்மாள், நீரா ராடியா பேசிய விவகாரத்தின் ரியாக்ஷன் என்ன?''

''அது கருணாநிதியை இன்னும் ஆட்டம் காண வைத்துவிட்டதாம். 'எனக்கு கோபாலபுரம் வீட்டைத் தவிர எந்த சொத்தும் இல்லை’ என்று சொல்லி தனது சொத்துக்கணக்கை விலாவாரியாக விவரித்து கருணாநிதி வெளியிட்ட கணக்கு அறிக்கைக்குக் காரணமே அந்த டேப் ஆதாரம் தான் என்றும் சொல்கிறார்கள். ராஜாத்தி அம்மாள் இருக்கும் சி.ஐ.டி. நகர் வீட்டில் அநாயசமாக நடமாடும் சில நபர்கள் குறித்து, கருணாநிதியே சில மாதங்களுக்கு முன் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தினார். அதனால் ஏற்பட்ட வாக்குவாதங்களில் தான் ஆறேழு நாட்கள் அந்த வீட்டுப் பக்கமாகப் போகாமல் இருந்தார். அதற்குப் பிறகு கனிமொழி, கோபாலபுரம் வீட்டுக்கு வந்து கருணாநிதிக்கு சில விளக்கங்களை அளித்து அழைத்துப் போனார். அப்போதுகூட இந்த மாதிரியான சிலரைப்பற்றி கோபமான வார்த்தைகளை உதிர்த்தார். அப்போதும் ஒரு சி.டி. ஆதாரத்தை அவர் காட்டியதாகச் சொல்கிறார் கள்.''

''இங்குமா சி.டி.?''

''டெல்லியில் மட்டுமா டேப் பண்ணுவார்கள்? சென்னையில் பண்ண மாட்டார்களா? இதைத் தொடர்ந்து ஒரு அதிகாரிக்கும் ராஜாத்தி அம்மாளுக்குமே முட்டல் மோதல் எழுந்தது. அதனால் அந்த வீட்டுப் பக்கமே தலைகாட்டாமல் இருந்தாராம். இந்த நீரா ராடியா டேப் விவகாரம் வெளியான பிறகு, மெள்ள வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார். அப்போது சொல்ல முடியாத வார்த்தைகள் வந்து விழுந்திருக்கின்றன. சில நிமிடங்களில் இரண்டு தரப்பும் அமைதியாகி, சமீபத்திய சுழலில் இருந்து எப்படி விடுபடுவது என்று பேசினராம்.''

''அநாயசமாக   சிலர்  வலம்   வருவ தாகச் சொன்னீரே... யாராம் அவர்கள்?''

''திராவிடனுக்கு எதிர்ப்பதமான வார்த்தையைக் கொண்ட வட இந்திய இளைஞர் ஒருவர்தான் அங்கு ஆல் இன் ஆலாக இருக்கிறாராம். அவரது மனைவி பியூட்டி பார்லர் பெண்மணியாம். இன்னொருவர், முருகக் கடவுளின் பெயரைக் கொண்டவர். அடுத்தவர் கிறிஸ்துவ மதப் பிரமுகர் நாமம் தாங்கியவர். ஆழ்வார் பேட்டை பகுதியில் உள்ள இடத்தில் உட்கார்ந்துகொண்டு இவர்கள் செய்யும் லாபிக்களும் மீடியேட்டிங் வேலைகளும் மலைப்பைக் கிளப்புகின்றன. வட இந்தியவாலாக்கள் நிறைய பேர் எதற்கு வருகிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்ற அளவுக்கு இந்த நான்கு பேரின் டீலிங் இருப்பதாக சி.ஐ.டி. காலனிக்கு வந்து போகும் தி.மு.க-வினர் திகைக்கிறார்கள்.  நீரா ராடியா மாதிரியான புதுமாதிரியான விவகாரங்களைக் கிளப்பி, அம்மாவை மாட்டிவிடாமல் இருந்தால் போதும் என்பது அக்கறையுள்ள கட்சிக்காரர்களின் அர்ச்சனையாக இருக்கிறது.''

''டெல்லி ரியாக்ஷன்கள் என்னவாம்?''

''டெல்லி கடுகடுப்புகள்தான் சுப்ரீம் கோர்ட்டில் தெறிக்கிறதே! இதுவரைக்கும் ஆ.ராசாவை மையப்படுத்தி, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சிங்வியும் கங்குலியும்தான் கேள்விகளால் மட்டையடி அடித்தார்கள். கடந்த புதன்கிழமை முதல் முறையாக மத்திய அரசாங்கத்தின் வக்கீல் கோபால் சுப்பிரமணியம் சேம் சைடு கோல் போட்டார், பார்த்தீரா? 'ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் ஆட்சேபனை தெரிவித்தது, மிக மிக முக்கியமானது. அதை அமைச்சர் ஆ.ராசா அலட்சியப்படுத்தி இருக்கக் கூடாது. பிரதமரின் கருத்துக்கு முக்கியத்துவம் தந்திருக்க வேண்டும்’ என்று கோபால் சுப்பிரமணியம் சொல்லுவார் என்று தி.மு.க. தரப்பு கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. மத்திய அரசு வக்கீல் சொன்னதைப் பார்த்தால், பிரதமரும் ஆ.ராசாவும் முரண்படும் விஷயம் முதல் தடவையாக மத்திய அரசாங்கத்தால் சொல்லப்பட்டு இருக்கிறது.''

''இதை வைத்துப் பார்த்தால் தி.மு.க - காங்கிரஸ் உடைப்பு உறுதியானது மாதிரி தெரிகிறதே?''

''ஆ.ராசா விவகாரம் எப்படிப் போகிறது என்பதை வைத்து மட்டுமல்ல, நான் அடுத்துச் சொல்லப்போகும் விஷயத்தை கவனித்தாலும் நீர் அப்படித்தான் சொல்வீர்!

தமிழ்நாடு முழுவதும் இளைஞர் காங்கிரஸார் அதன் தலைவர் யுவராஜா தலைமையில் பாதயாத்திரை போனார்கள் அல்லவா? அவர்களை அழைத்து ராகுல் பேசப்போகிறார் என்றும் உமக்கு நான் சொல்லி இருந்தேன். கடந்த புதன்கிழமை யுவராஜா தலைமையிலான அனைத்து இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளையும் ராகுல் சந்தித்தார். அப்போது சந்தோஷத்தால் அவரது முகமே சிவந்துபோனதாம். '40 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் செய்ய முடியாததை நீங்கள் நான்கே மாதங்களில் செய்திருக்கிறீர்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வருமா வராதா என்ற அவநம்பிக்கை பொதுமக்களுக்கு இல்லை. நம்முடைய கட்சித் தலைவர்களுக்குத்தான் அப்படி அவநம்பிக்கை இருந்தது. அதனால்தான் அவர்கள் நம்முடைய கட்சியை வளர்க்கவில்லை. இப்போது, இளைஞர் காங்கிரஸைப் பார்த்து எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. அதைவிட நம்மைப் பார்த்து தி.மு.க., அ.தி.மு.க-வுக்குப் பயம் வந்திருக்கிறது. அந்தக் கட்சிகள் தமிழ்நாட்டில் ஆட்சியில் மாறி மாறி இருந்து பழசாகிவிட்டன. அதன் தலைவர்களுக்கும் வயதாகிவிட்டது. உங்களைப் பார்க்கும்போது, நீங்கள்தான் தமிழ்நாட்டில் ஆட்சிச் சக்கரத்தை செலுத்தப்போகிறீர்கள் என நம்புகிறேன். தமிழ்நாட்டில் காங்கிரஸை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தாமல் நான் ஓயப்போவதில்லை’ என்று சுமார் 45 நிமிஷம் கொந்தளித்தாராம் ராகுல்.''

''பீகார் முடிவுக்குப் பிறகு அவர் அமைதியாகிவிட்டதாக அல்லவா சொன்னார்கள்?''

''அப்படித் தெரியவில்லையே! 'மாநிலம் முழுவதும் பாதயாத்திரை வந்த நீங்கள் இனி 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் அதே யாத்திரையை நடத்தியாக வேண்டும். டிசம்பர் 28 தொடங்கி ஜனவரி 26 வரை இதை நடத்தி முடியுங்கள். மார்ச் வரைக்கும் நான் எட்டு முறை தமிழ்நாட்டுக்கு வருவேன்’ என்று சொன்னாராம். இதற்கு 'மிஷன் தமிழ்நாடு’ என்றும் ராகுலே பெயர் சூட்டினாராம்!''

''போகிற போக்கைப் பார்த்தால், தனி ஆவர்த்தனமாகத்தான் இருக்கும்போல!''

''சில வாரங்களுக்கு முன்னதாக தமிழ்நாடு முழுவதும் டெல்லியில் இருந்து வந்த கதராடை டீம் ஒன்று, கோஷ்டி சார்பில்லாத காங்கிரஸ் பிரமுகர்களை அழைத்து ஒரு சர்வே நடத்தி, அந்த ரிசல்ட்டையும் ராகுலிடம் கொடுத்தது. ஒவ்வொரு கேள்விக்கும் 10 மதிப்பெண்களாம். யார் அடுத்த பிரதமராக வரலாம், யாரை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகப் போடலாம், தமிழகத்தில் பிரபலமான அரசியல் தலைவர் யார் என்றெல்லாம் கேள்விகள். பிரதமர் பதவிக்கு ராகுல் பெயரை அதிகமானவர்கள் பரிந்துரை செய்திருந்தார்களாம். தலைவராக ப.சிதம்பரத்தைப் போடலாம் என்பது பெரும்பாலானவர்கள் கருத்தாம். தங்கபாலு பெயருக்கு நேராக பத்துக்கு பூஜ்யம் என்று பலரும் எழுதியிருந்தார்களாம். அதில் சிலர், 'காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் யாருடைய ஆலோசனையையும் கேட்டுவிடாதீர்கள்’ என்றும் எழுதிக்கொடுத்து இருந்தார்களாம். அது ஏன் என்று ஐ.பி. மூலமாக ராகுல் விசாரிக்கச் சொல்ல... அவர்கள் கொடுத்த பட்டியலைப் பார்த்துக் கோபப்பட்டாராம் ராகுல். 'இவங்க சரியா இருந்திருந்தால், நாம் எதுக்கு அடுத்த கட்சியை நம்ப வேண்டிய நிலைமை வருது’ என்று கமென்ட் அடித்தாராம்!'' என்ற கழுகார் வானத்தைப் பார்த்தார்.

''மழை மறுபடியும் வருவதற்குள் நான் புறப்படட்டுமா? அதற்கு முன்னதாக இரண்டு தகவல்கள்...  விஜய் அரசியலில் இறங்க ஆலோசனை நடத்தியதை சொன்னேன். அவரை அழைத்துப் பேச ஜெயலலிதா தரப்பு விரும்புகிறது. அநேகமாக 5-ம் தேதி கொடநாட்டில் இருந்து வருகிறார் ஜெ. அன்று அந்த சந்திப்பு இருக்கலாம்!''

''அடுத்த தகவல்?''

''வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் சென்னை நெற்குன்றத்தில் பெரிய புராஜெக்ட் ஒன்றைப் போட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வீடுகளைப் பிரித்துக்கொள்ளப் பார்க்கிறார்கள். அது முதல்வர் கவனத்துக்குப் போகவில்லை என்று சொன்னேன் அல்லவா? இந்த நியூஸைப் பார்த்ததும்... கேள்விகளால் குடைந்துவிட்டதாம் ஆட்சி மேலிடம். நிறையக் கேள்விகள் கேட்டு ஸ்கீமையே நிறுத்திவிடும் நிலைக்குப் போய்விட்டார்களாம்.''

''என்னது?''

விஷ்ஷ்ஷ்ஷ்க்

 

நன்றி ஜுனியர் விகடன்

 

Comments  

 
-1 #9 Sarav 2010-12-24 14:51
Quoting எங்கேயோ கேட்ட குரல்:
தமிழர்களே தமிழர்களே, நீங்கள் என்னை கடலிலே தூக்கி போட்டாலும் உப்பிலே ஏதாவது ஊழல் செய்ய முடியுமா என்று தான் நான் யோசிப்பேன்.


Iyo... ADMK people only genuineee in this world like you.. Vayil viral vaithalum kadikka theriyadha pappakkal
Quote
 
 
0 #8 julian asange 2010-12-09 00:02
savukku alavukku Junior vikatanukku thairiyam paththathu. etho vidukathai solra mathiri mannar, thiravidan ethirpatham nnu sollittu irukku. savukku neenga than junior vikatan oru dubakkoor nnnu sonnenga. ippa athaye inga pottu irukkengale yen?
Quote
 
 
0 #7 .... 2010-12-08 19:33
நீர் சொன்னது போலவே 500 கோடி வெள்ள நிவாரண நிதி ஒதுக்கீடு செய்துவிட்டார்க ள்...
Quote
 
 
-3 #6 குசும்பன் 2010-12-06 11:29
Quoting தளவாய் தமிழர் களம்:
நான்தமிழன்.திராவிடன்அல்ல.
தமிழா,
பள்ளனாய், பறையனாய்,
நாடானாய், தேவனாய்,
வன்னியனாய், பரவனாய்,
பிள்ளையாய், கவுண்டனாய்,
மள்ளனாய், குயவனாய்......
வாழ்ந்தது போதும்.
வா - தமிழா
தமிழனாய் வாழ்வோம்.
வந்தேறி தெலுங்கன், கன்னடன், மலையாளி, மார்வாடி, ஆரிய பிராமணர், இவர்களிடம் இருந்து நம் தமிழ் நாட்டை காப்போம்.
"பக்கத்தில் உள்ளவன் சாதியை கேள், அவன் இனம் தெரியும்.
தமிழன் என்றால் தோள் கொடு, வந்தேறி என்றால், விரட்டி அடி "
''தமிழர்கள் சிறுபான்மையாக உள்ள இடங்களில் தாய்மொழி பற்றோடு இருக்கிறார்கள். பெரும்பான்மையாக உள்ள தமிழகத்தில் சீரழி்ந்த தமிழர்களாக இருக்கிறார்கள்!

அன்புத் "தளவாய் தமிழர் களம்" அவர்களே உங்களை எவரும் ரசிக்கவில்லை என்பது தெரிகிறது,மாற்ற ி ஏதாவது கருத்துச்சொல்ல முயற்சியுங்கள் இப்படியே தொடர்ந்தீர்களான ால் உங்களுக்கே சலிப்புத்தட்டிவ ிடும்,
Quote
 
 
0 #5 AADHI NARAYANAN 2010-12-06 10:21
ஒரு அதிகாரிக்கும் ராஜாத்தி அம்மாளுக்குமே முட்டல் மோதல் எழுந்தது. அதனால் அந்த வீட்டுப் பக்கமே தலைகாட்டாமல் இருந்தாராம். இந்த நீரா ராடியா டேப் விவகாரம் வெளியான பிறகு, மெள்ள வீட்டுக்குள் நுழைந்திருக்கிற ார். அப்போது சொல்ல முடியாத வார்த்தைகள் வந்து விழுந்திருக்கின ்றன. சில நிமிடங்களில் இரண்டு தரப்பும் அமைதியாகி, சமீபத்திய சுழலில் இருந்து எப்படி விடுபடுவது என்று பேசினராம்.''
''அநாயசமாக சிலர் வலம் வருவ தாகச் சொன்னீரே... யாராம் அவர்கள்?''

''திராவிடனுக்கு எதிர்ப்பதமான வார்த்தையைக் கொண்ட வட இந்திய இளைஞர் ஒருவர்தான் அங்கு ஆல் இன் ஆலாக இருக்கிறாராம். அவரது மனைவி பியூட்டி பார்லர் பெண்மணியாம். இன்னொருவர், முருகக் கடவுளின் பெயரைக் கொண்டவர். அடுத்தவர் கிறிஸ்துவ மதப் பிரமுகர் நாமம் தாங்கியவர். ஆழ்வார் பேட்டை பகுதியில் உள்ள இடத்தில் உட்கார்ந்துகொண் டு இவர்கள் செய்யும் லாபிக்களும் மீடியேட்டிங் வேலைகளும் மலைப்பைக் கிளப்புகின்றன.
GUESS WHO IS THIS ?
Quote
 
 
-1 #4 SUNDARAM 2010-12-06 07:48
சிறீலங்காப்படைய ினர் போராளியை வெட்டி கொலை செய்யும் கோரம்!
http://amarkkalam.msnyou.com/-f6/---t194.htm
Quote
 
 
+4 #3 குசும்பன் 2010-12-06 07:23
தமிழர்களே நீங்கள் தீயில் எரிந்து நியாயம் கேட்டாலும் நான் அமைதியாக என்குடும்பத்துக ்கு அதனால் என்னா இலாபம் என்பதை துரைமுருகனுடனும ் வீராச்சாமி நாயுடுவுடனும் ராமகிருஷ்ணா A/C யில் ஆற அமரச்சிந்திப்பே ன், ஈழம் எரிந்தாலென்ன பெண்கள் கற்பழிக்கப்பட்ட ாலென்ன உங்களை சாந்தப்படுத்த அண்ணா சமாதியருகில் எனது மனைவி துணைவியுடன் A/C கூலருடன் தம்பி தயாநிதி பரிவாரங்களுடன் 1/2 நாளில் நீர்த்துப்போகச் செய்வேன்
Quote
 
 
+2 #2 Tamilan 2010-12-05 22:57
தமிழர்களே தமிழர்களே, நீங்கள் என்னை கடலிலே தூக்கி போட்டாலும் மீண்டும் வந்து தமிழ்நாட்டில் உள்ள பெட்டி கடை கூட விடாமல் என் குடும்பத்துக்கு பட்டா போட்டு கொடுத்து தமிழ் நாட்டையே என் குடும்ப சொத்து ஆக்கிய பிறகு தான் ஓய்வேன்...
Quote
 
 
+24 #1 எங்கேயோ கேட்ட குரல் 2010-12-05 19:25
தமிழர்களே தமிழர்களே, நீங்கள் என்னை கடலிலே தூக்கி போட்டாலும் உப்பிலே ஏதாவது ஊழல் செய்ய முடியுமா என்று தான் நான் யோசிப்பேன்.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 166 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday7456
mod_vvisit_counterYesterday14175
mod_vvisit_counterThis week64358
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month267090
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12789209