முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
ஜாபர் சேட் டவுசரை கழற்றிய டைம்ஸ் நவ் தொலைக்காட்சி. அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 56
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
திங்கட்கிழமை, 06 டிசம்பர் 2010 22:52

 

தமிழக உளவுத்துறை ஐஜி ஜாபர் சேட்டின் டவுசரை இன்று டைம்ஸ் நவ் தொலைக்காட்சி கழற்றியது.

 

சவுக்கில்தான் முதன் முறையாக ஜாபர் சேட்டுக்கு வழங்கப் பட்ட இரண்டு க்ரவுண்டு வீட்டு மனையைப் பற்றியும், அதை அவர் முதலில் தன் மகள் பெயருக்கும், பின்னர் தன் மனைவி பெயருக்கும் மாற்றியது தொடர்பாக பதிவிடப் பட்டது.

 Jaffar_Sait_2

அந்தப் பதிவு வெளிவந்தவுடன் தான், சவுக்கு மீது மதுரவாயல் காவல்நிலையத்தினரால் ஒரு பொய் வழக்கு போடப்பட்டு, சவுக்கு சிறை செல்ல நேரிட்டது.

 

அதே வீட்டுமனையை ஜாபர் சேட் சட்டவிரோதமாக பெற்றார் என்பதை இன்று டைம்ஸ் நவ் தொலைக்காட்சி இரவு பத்து மணிக்கு ஒளிபரப்பியது.

 

இந்த நிகழ்சியில் டைம்ஸ் ஆப் இந்தியாவின் செய்தியாளர் ஜெயராஜ் சிவன், இந்தியாவின் முன்னாள் உளவுத் துறை இயக்குநர், ஒரு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

அந்த விவாதத்தில் கலந்து கொண்ட அத்தனை பேரும், ஜாபர் சேட் வீட்டு மனை ஒதுக்கீடு பெற்றது தவறு என்றும், வீட்டு மனையை திருப்பித் தருவதோடு முடியக் கூடாது என்றும் அவர் மீது வழக்கு தொடர வேண்டும் என்றும் கூறினார்கள்.

 

உளவுத் துறை இயக்குநர் ஒரு படி மேலே சென்று, ஒரு கோடி ரூபாய் மனையை இவருக்கு ஆட்சியாளர்கள் ஒதுக்குகிறார்கள் என்றால், ஆட்சியாளர்களுக்கு இவர் எப்படிப் பட்ட வேலையை செய்து கொடுத்திருப்பார் என்ற சந்தேகத்தையும் எழுப்பினார்.

 

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளர் அர்நாப் கோஸ்வாமி, By getting this allotment under the category under "unblemished government servant" his entire life has become blemished என்று சொன்னார்.

இது பற்றி கருத்து கேட்ட டைம்ஸ் நவ் செய்தியாளருக்கு பேட்டியளிக்க மறுத்த ஜாபர் சேட், தனது பதிலை கொரியரில் அனுப்பியிருக்கிறாராம். (ஏன் தொரை நேரா பேச மாட்டாரோ ?)

 

 அனைத்து ஊடகங்களிலும் பரவலாக வந்து கொண்டிருக்கும் இந்தச் செய்தியை சவுக்கு தனது வாசகர்களோடு மகிழ்சியாக பகிர்ந்து கொள்கிறது.

 

சவுக்கை ஜுலை 18ம் தேதியன்று மதுரவாயல் காவல்நிலைய ஆய்வாளர் தமிழ்வாணன் மற்றும் உதவி ஆய்வாளர் சி.ஜே.ஸ்டாலினை வைத்து பொய் வழக்கு போட்டு கைது செய்தது போல, அர்நப் கோஸ்வாமியை கைது செய்வதற்கும், இந்த மங்குணிப் பாண்டியர்களை அனுப்புமாறு சவுக்கு ஜாபர் சேட்டுக்கு ஆலோசனை சொல்கிறது.

 

 TIMES GLOBAL BROADCASTING COMPANY LIMITED 
Trade House,1st Floor,Senapati Bapat Marg 
Lower Parel,Mumbai 400 013,India.

 

ஜுலை 17ம் தேதி, சவுக்கு முதன் முதலாக பதிவிட்ட ஜாபர் சேட் வீட்டு மனை பற்றிய பதிவை சவுக்கு தனது வாசகர்களுக்காக மறுபதிவு செய்கிறது.   இந்த வெற்றியெல்லாம் சவுக்கு வாசகர்களையே சேரும்.  நன்றி வாசகர்களே..... 

ஒரு மகிழ்ச்சி…. ஒரு சோகம்…..


ஒரே நேரத்தில் இப்படி இரண்டு விதமான உணர்வுகள் வந்தால் அதை எப்படி அனுபவிப்பது ? அனுபவித்துத் தானே ஆக வேண்டும்.

முதலில் சோகத்தை பகிர்ந்து கொள்வோம். இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக செயல்பட்டு வந்த, காவல்துறை ஐஜிக்கள் ஜாபர் சேட் மற்றும் சங்கர் ஜிவால் பிரியப் போகிறார்கள் என்ற செய்தியை சவுக்கு வருத்தத்தோடு பகிர்ந்து கொள்கிறது.

        

இரட்டையர்களாக இருந்து, தங்களின் இரண்டு ஜோடி காதுகளை, தமிழகத்தில் செல்போனில் பேசும் அத்தனை பேர் வாயிலும் வைத்து, ஒட்டு கேட்டு, மனித சமுதாயத்திற்கு, அரும்பெரும் பணியை ஆற்றி வந்த, இந்த இரட்டையர்கள் பிரியப் போகிறார்கள் என்பது எவ்வளவு பெரிய வருத்தமான செய்தி ? ஆம் நண்பர்களே.

சங்கர் ஜிவால், ஆய்வு மற்றும் பகுப்பாய்வு நிறுவனமான Research and Analysis Wing பிரிவுக்கு மாறுதலில் செல்ல இருக்கிறார். இன்னும் ஒரு வாரத்தில் இதற்கான உத்தரவு வரப் போகிறது.



ஆய்வு மற்றும் பகுப்பாய்வு நிறுவனமானது, இந்தியாவின் வெளிநாட்டு, உளவு நிறுவனம். அமெரிக்காவின் சிஐஏ போல. இவர்கள் வேலை. அதாவது, வெளிநாட்டில் போய் ஒட்டுக் கேட்பது. அதுலதான் நம்ப ஆள் கில்லாடியாச்சே. இவரு, இவங்க அம்மா வயித்துல இருந்தப்பவே, மகாபாரத அர்ஜுனன் மகன் மாதிரி, ஒட்டுக் கேட்டவர் போலருக்கு.


சரி, இந்த சங்கர் ஜிவால் நெஜமாவே நல்லவரா ? கெட்டவரா ? இவரோட பின் புலத்தை சொல்லி விடுகிறேன். சவுக்கு வாசகர்களே முடிவு செய்யட்டும்.


(இவரு தலையில இருக்கற ஒவ்வொரு முடியும், ஒட்டுக் கேக்க பயன்படும் ஆன்டெனா சார்... )


சங்கர் ஜிவால் 1990ம் ஆண்டு, யுபிஎஸ்சி தேர்வு எழுதி, தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப் பட்ட ஐபிஎஸ் அதிகாரி. இவர் பிஇ மெக்கானிக்கல் படித்த பொறியாளர். உத்தராகாண்டில் உள்ள அல்மோரா மாகாணத்தைச் சேர்ந்தவர். இவர் மனைவி பெயர் மம்தா சர்மா.

இவரது மனைவி மம்தா ஷர்மா பெயரில், “டி3டி டெக்னாலஜிஸ்“ என்ற ஒரு தொலைபேசி ஒட்டுக் கேட்கும் நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனத்தின் ஆவணங்களின் படி, மம்தா சர்மா தொடங்கிய சில காலத்திலேயே, அவர் அந்நிறுவனத்திலிருந்து விலகி விட்டதாக கூறப் படுகிறது.

யாராவது, ஒரு நிறுவனம் தொடங்கும் போது இயக்குநராக சேர்ந்து விட்டு, தேவையான முதலீட்டை செய்து விட்டு, விலகுவதை கேள்விப் பட்டிருக்கிறீர்களா ?




காவல்துறை வட்டாரங்களில் விசாரித்ததில், இந்த நிறுவனமே, சங்கர் ஜிவாலின் நிறுவனம் தான் என்று தகவல்கள் கூறுகின்றன. இந்த நிறுவனம் எதற்கு தொடங்கப் பட்டது தெரியுமா ?
சங்கர் ஜிவால், ஐந்து ஆண்டுகள், தெற்கு மண்டல, போதைப் பொருள் தடுப்பு நிறுவனத்தின் மண்டல இயக்குநராக பணி புரிந்தார். Narcotics Control Bureau என்று அழைக்கப் படும் இந்த நிறுவனத்தின் வேலையே, போதைப் பொருள் கடத்துபவர்களின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டு, அவர்களை பிடிப்பதுதான்.

சட்ட பூர்வமாக ஒட்டுக் கேட்பது என்பது, மத்திய உள்துறைச் செயலாளரின் அனுமதியோடுதான் செய்யப் பட வேண்டும் என்பதற்காக NCB ல் உள்ள ரகசிய நிதியை பயன்படுத்தி, சட்ட விரோத ஒட்டுக் கேட்பு தொடங்கப் பட்டது. 

சரி சட்ட விரோதமாக ஒட்டுக் கேட்கலாம். 

அதை யார் செய்வது ? அப்போது, வெளிநாட்டிலிருந்து, இவ்வாறு சட்டவிரோதமாக ஒட்டுக் கேட்கும் கருவிகள் வாங்கலாம் என்று திட்மிட்டார் சங்கர் ஜிவால். 

கருவிகளை ரகசிய நிதியிலிருந்து வாங்கி NCB அலுவலகத்தில் வைத்துக் கொள்ள முடியோதே ? அப்படி வைத்தால், சங்கர் ஜிவால், தோழர் தியாகுவைப் போல, “கம்பிக்குள் வெளிச்சங்கள்“ புத்தகத்தை இந்தியில் அல்லவா எழுத வேண்டியிருக்கும் ?

அதனால், ஒரு புதிய திட்டத்தை தீட்டினார் சங்கர் ஜிவால். அதுதான், இவரே பினாமி பெயரில் ஒரு நிறுவனத்தை தொடங்குவது. இவ்வாறு நிறுவனத்தை தொடங்கும் பொறுப்பை வேறு யாரிடமாவது ஒப்படைத்து அந்த நபர் போட்டுக் கொடுத்து விட்டால்… … ? 

அதனால் யாரையும் நம்பாமல், தன் மனைவியையே அந்நிறுவனத்தின் இயக்குநராக்குகிறார். ராப்ரி தேவி முதலமைச்சரானது ஞாபகம் இருக்கிறதா ? அதே ஸ்டைல் தான்.

சரி. சொந்த நிறுவனம் தொடங்குவதென்று முடிவாகி விட்டது. இதற்கு முதலீடு. அந்த சட்டவிரோதமாக ஒட்டுக் கேட்கும் கருவி, 3 கோடிக்கும் மேல். இது 2005ல். இப்போது அதை விட லேட்டஸ்ட் வெர்ஷன் 8 கோடி ரூபாய்க்கு இஸ்ரேல் தயாரிப்பில் கிடைக்கிறது.




சரி நிறுவனம் மனைவி பெயரில் தொடங்கப் பட்டாகி விட்டது. இதற்கு முதலீடு எப்படி வந்தது ?. நிச்சயமாக, இவர் வாங்கும் சம்பளத்தில் வாங்கியிருக்க வாய்ப்பில்லை. இது பற்றித் தோண்டினால், இதை விட பெரிய பூதம் வருகிறது.

சங்கர் ஜிவால், NCB யின் மண்டல இயக்குநராக ஐந்து ஆண்டுகள் இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். 

இவர் தென் மண்டல இயக்குநராக இருந்த போதுதான் மிக மிக அதிகமான போதைப் பொருட்கள் கைப்பற்றப் பட்டன. பல போடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் கைப்பற்றப் பட்டு பல்வேறு வழக்குகள் பதியப் பட்டன. 

ஹெராயின் எனப்படும் போதைப் பொருளுக்கு சர்வதேச சந்தையில் கிராக்கி அதிகம். இந்த ஹெராயின் மூன்று வகையாக பிரிக்கப் படுகிறது. தரம் 1, தரம் 2 மற்றும் தரம் 3 
தரம் 1, சர்வதேச சந்தையில் ஒரு கோடி. தரம் 2, சர்வதேச சந்தையில் 60 முதல் 70 லட்சம். தரம் 3, சர்வதேச சந்தையில் 40 முதல் 50 லட்சம் விலை போகும்.

போதைப் பொருள் சோதனையின் போது, கைப்பற்றப் படும் போதைப் பொருட்கள், வழக்கு பரிசோதனைக்காக, 10 முதல் 20 கிராம்கள் எடுக்கப் பட்டு சோதனைச் சாலைக்கு அனுப்பப் படும். அதற்குப் பிறகு கைப்பற்றப் பட்ட பொருட்கள், NCBன் கோடவுன்களின் வைக்கப் பட்டிருக்கும். 

கோடவுன்களில் வைக்கப் பட்டிருக்கும் இது போன்ற பொருட்கள், வழக்கு முடியும் வரை அழிக்கப் பட மாட்டாது. வழக்கு முடிந்ததும், தீயிட்டு அழிக்கப் படும்.

இவ்வாறு கோடவுன்களில் இருந்த தரம் 1, ஹெராயினை, மூன்றாந்தர ஹெராயினை வைத்து மாற்றி விட்டு, முதல் தர ஹெராயினை, சர்வதேச மார்க்கெட்டில் சங்கர் ஜிவால் விற்று விட்டார் என்று ரகசியத் தகவல்கள் கூறுகின்றன. 

இவ்வாறு மாற்றப் பட்டால், அந்த சரக்குகள் ஒரிஜினலா ட்யூப்ளிகேட்டா என்று சரிபார்க்க வாய்ப்பே இல்லை. ஏனெனில், இந்த வழக்குகள் முடியும் வரை கோடவுனில் இருக்கும். வழக்கு முடிந்தவுடன் தீயிட்டுக் கொளுத்தப் படும். இதை சரி பார்க்க வழியே இல்லை.
மத்திய அரசுப் பணி முடிந்து, சங்கர் ஜிவால் மாநில பணிக்கு திரும்ப வேண்டிய நேரம் வந்ததும், சங்கர் ஜிவாலுக்கு, லேசாக கிலி பிடிக்கிறது. 

ஒரு வேளை யாராவது கண்டு பிடித்து விட்டால் என்ன செய்வது என்று. ஆனால், வழக்கு முடியும் முன், வழக்கு ஆவணங்களை அழிக்க நீதிமன்ற உத்தரவு வேண்டும். நீதிமன்ற உத்தரவுக்கு, வழக்கில் சம்பந்தப் பட்ட குற்றவாளி சம்மதம் தெரிவிக்க வேண்டும். சங்கர் ஜிவால், 2006-2007 வாக்கில், புழல் சிறையில் போதைப் பொருள் வழக்கில் அடைக்கப் பட்டிருந்த, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மகேந்திர சிங், சாம்சன், மற்றும் இவர்கள் வழக்கில் சம்பந்தப் பட்ட மேலும் இருவரிடம், இவர்கள் வழக்கின் சொத்துக்களை அழிக்க, சம்மதம் என்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய ஒரு அபிடவிட்டில் கையெழுத்துப் பெற முயற்சி செய்கிறார். 

இதில் ஒருவர் கையெழுத்துப் போட்டு விடுகிறார். மற்ற மூவரும், இந்த சொத்தை அழிக்க சம்மதம் தெரிவித்தால், ஏறக்குறைய குற்றத்தை ஒப்புக் கொள்வதற்கு சமமாகும் என்பதால், மறுத்து விடுகின்றனர்.

இவ்வாறு, திருடனிடமே திருடி சங்கர் ஜிவால், டி3டி டெக்னாலஜிஸ் நிறுவனத்திற்கான முதலீட்டை செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்தப் பதிவை படிக்கும் சிபிஐ அதிகாரிகள், தேவையான நடவடிக்கையை எடுப்பார்களா ?
இந்த டி3டி டெக்னாலஜிஸ் தனது வெப்சைட்டில், தாங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்பில் நிபுணர்கள் என்று போட்டிருந்தார்கள். 

மேலும், தமிழக உளவுத்துறை தங்கள் க்ளையன்ட்டுகள் என்றும் போட்டிருந்தனர். இது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கெல்லாம் தொடுக்கப் பட்டிருந்தது. 
 
இப்போது,க்ளையன்ட்டுகள் என்ற லிங்க்கில், This page is under construction என்று வருகிறது. இந்த மாதிரியெல்லாம் நீங்க பண்ணுவீங்கன்னுதானே, நாங்க 20 இடத்துல அந்த பழைய வெப் பேஜ்ஜை சேவ் பண்ணி வைத்திருக்கிறோம். இப்போ என்ன பண்ணுவீங்க ? வெவ்வெவ்வே….


இதுதான் சங்கர் ஜிவாலின் பின்னணி. இப்போ இவரு நல்லவரா கெட்டவரான்னு நீங்கதான் முடிவு பண்ணணும்.

அடுத்ததா, அந்த மகிழ்ச்சியான செய்தி. அது என்ன தெரியுமா ?

எதிரியாக இருந்தாலும் ஒருவன் வீடு கட்டி, தொழில் விருத்தியடைந்து பொண்டாட்டி பிள்ளைகளோடு சந்தோஷமாக இருந்தால் சவுக்குக்கு மகிழ்ச்சியே. பகைவனுக்கு அருளும் நன்னெஞ்சு சவுக்குக்கு உண்டு.



உளவுத் துறை ஐஜி ஜாபர் சேட், அரசின் விருப்புரிமை கோட்டாவில் வழங்கப் பட்ட வீட்டு மனையில், முதல்வரின் செயலாளராக இருக்கும் ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கரோடும், ஆளுநர் மாளிகையில் ப்ரோக்கராக இருக்கும் நஜிமுத்தீனோடும் நம்ப கர்ம வீரரோடும் இணைந்து, LandMark Constructions என்ற நிறுவனத்தோடு இணைந்து Flat கட்டி விற்கப் போகிறார் என்ற தகவலை சவுக்கு மகிழ்ச்சியோடு அறிவிக்கிறது.

இதற்கான தொடக்க விழா அழைப்பிதழை இன்று சென்னையின் மிக மிக முக்கிய புள்ளிகளுக்கு வழங்கிய நஜிமுத்தீன், இவ்வாறு அழைப்பிதழ் வழங்கிய ஒரு நபர் “என்ன சார் இவ்வளவு நாளா இல்லாம திடீர்னு, கன்ஸ்ட்ரக்ஷன் பிசினஸ்சுல இறங்கிட்டீங்க“ என்று கேட்டதற்கு, “எனக்காக இல்ல சார். ஜாபர் சேட்டுக்காகத்தான். 

ரெண்டு பேரும் சேந்துதான் பண்றோம். போற போக்கப் பாத்தா, அடுத்த வாட்டி டிஎம்கே வருமான்னு சந்தேகமா இருக்கு, சீக்கிரமா செட்டில் ஆயிடனும்னு சொன்னான். அவனுக்காகத்தான் இப்பவே ஆரம்பிக்கறோம். 

உங்களுக்கு Flat வேணும்னா சொல்லுங்க சார். “ என்று விட்டு, கவர்ண்மென்ட் மாறி விட்டால் மத்திய அரசுப் பணிக்கு போவதற்கு ஜாபர் சேட், இப்போதே தயாராகி விட்டதாகவும், இப்போது விருப்பம் தெரிவித்து கடிதம் கொடுத்தால், ஒரு ஆண்டு வரை ஜாயினிங் டைம் இருக்கும் Narcotics Intelligence Bureau வின் Regional Director General என்ற பதவிக்கு விருப்பம் தெரிவிக்கும் தகவலையும் கூடுதலாக சொல்லியிருக்கிறார் நஜிமுத்தீன்.

ஆமாம் Flat constructionல் இறங்குவதற்கு அவருக்கு ஏது பணம் ? எப்படி முடியும் என்று கேட்பீர்கள். சவுக்குக்கும் அதுதான் ஆச்சர்யம். 

ஆனால் ஆதாரம் இருக்கிறதய்யா … இருக்கிறது.

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் 06.06.2008 நாளிட்ட அரசாணை 2டி எண் 439ன் படி, “சமூக சேவகர்“ என்ற பிரிவின் கீழ் ஜாபர் சேட்டின் மகள் ஜெ.ஜெனிபர் என்பவருக்கு, திருவான்மியூர் புறநகர் திட்டத்தின் கீழ், காமராஜர் நகர் (இங்கேயும் காமராஜா ?) என்ற இடத்தில் 4756 சதுர அடி மனை ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.



ஜெனிபர் அக்கா, நீங்க அப்படி என்னக்கா சமூக சேவை பண்ணீங்க ? சொன்னா, நாங்களும் அதே மாதிரி சமூக சேவை பண்ணி இவ்ளோ பெருசா இல்லைன்னாலும், ஒரு 1000 சதுர அடியில ஒரு ப்ளார் வாங்கிக்கிறோம். கொஞ்சம் சொல்லிக் குடுங்கக்கா ….

வீட்டு வசதி வாரியம், இந்த வீட்டு மனையின் விலை ஒரு கோடியே பதினைந்து லட்சத்து ஒன்பதாயிரத்து ஐநூற்று இருபது ரூபாய் என்று நிர்ணயித்துள்ளது. இதற்கான மொத்த தொகையையும் ஜாபர் சேட்டின் மகள் ஜெனிபர் கட்டி விட்டதாக வீட்டு வசதி வாரிய ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இவ்ளோ பணம் ஏது சார் உங்களுக்கு ?



உங்க எதிரி ஏ.கே.விஸ்வநாதன், வருமானத்திற்கு அதிகமா சொத்து சேத்துட்டதா அவர அரெஸ்ட் பண்றதுக்கெல்லாம் ப்ளான் போட்டீங்க… இதுக்கு உங்களுக்கு ஏது சார் வருமானம் ? எனக்கு தெரிஞ்சு, கவர்மெண்டுல நேர்மையா உழைச்சா இவ்வளவு சம்பளமெல்லாம் கொடுக்கறதில்ல. 

ஒட்டு கேட்கறதுக்கு இவ்ளோ பணமா கொடுக்கறாங்க. நான் கூட எங்க பக்கத்து வீட்ல ஒட்டு கேட்டுப் பாத்தேன். எவனும் பத்து பைசா தர மாட்டேங்குறான்.
இதோடு இந்தக் கதை முடியவில்லை. இவ்வாறு தன் செல்ல மகளுக்கு அரசின் விருப்புரிமை கோட்டாவில் ஒதுக்கீடு பெற்ற ஜாபர் சேட், மகளின் பெயரில் உள்ள இந்த மனையை தன் மனைவி பர்வீன் பெயரில் மாற்றுகிறார்.

சின்ன பொண்ணுன்னு பிசினஸ் பண்ணும் போது தன் பெண்ணை ஏமாற்றி விடுவாங்கன்னு நெனச்சிருப்பாரோ ? 

இன்னொரு தமாஷ் சொல்றேன் கேளுங்க. இவரு பொண்ணுக்கு வீடு கொடுத்த அரசாணையில் இவர் கொடுத்திருக்கும் முகவரி, எண் 23, ராஜா தெரு, கல்யாணி நகர் (மங்களகரமான பெயர்), திருவான்மியூர், சென்னை. (சார் உங்களுக்கு திருவான்மியூருலயே இன்னும் எத்தனை வீடு வேணும் ? வேற ஏரியா வாங்கியிருக்கக் கூடாது ?) 



ஆமா ஜாபர் சார். எல்லாரும் பேமிலியோட போட்டோ எடுத்துருக்காங்க. உங்க வீட்ல மட்டும் ஏன் தனியா நிக்கிறாங்க ? பேமிலில ஒண்ணும் ப்ராப்ளம் இல்லையே ? இருந்தா ஒண்ணும் ஒர்ரி பண்ணாதீங்க. இப்போல்லாம் பேமிலி கோர்ட் சனி ஞாயிறு கூட வொர்க் பண்ணுதாம்



இவர் மனைவி, பர்வீன் கொடுத்திருக்கும் முகவரி, பழைய எண் 61, புதிய எண் 6, ஆர் ப்ளாக், 14வது தெரு, அண்ணா நகர், சென்னை 40. (சார் எப்படியாவது ட்ரை பண்ணி, புதிய தலைமைச் செயலகம் மாறியவுடன், அந்த பழைய ஜார்ஜ் கோட்டைய அரசு விருப்புரிமை கோட்டாவில் வாங்கிடுங்க. சூப்பர் பில்டிங். உங்க இமேஜுக்கு நீங்க இந்த வெள்ளை மாளிகையில இருந்தாத்தான் ஜம்முனு இருக்கும்)

இவுரு ஒருத்தரு ஆச்சா ? அடுத்தது கருணாநிதியோட செக்ரட்டரியா இருக்க ராஜமாணிக்கம். இந்த ஆள் ரிட்டையர் ஆகி எத்தனையோ வருஷம் ஆச்சு. காட்டுக்கு போற வயசுல, இந்த ஆள், செக்ரட்டேரியட்டுல உக்காந்துக்கிட்டு என்னா கூத்து பண்ணிக்கிட்டு இருக்காரு தெரியுமா ? 

இவரு பையன் பேரு துர்கா சங்கர். இவரும் சமூக சேவகராம். இவருக்கு நம்ம பிரபல சமூக சேவகரும், ஜாபர் சேட்டின் மகளும் ஆன ஜெனிபருக்கு வழங்கப் பட்ட வீட்டு மனைக்கு அடுத்த மனைக்கு அடுத்த மனை. இந்த மனை எண் என்ன தெரியுமா ? 538. இதன் மொத்த சதுர அடி 44668 சதுர அடி. 



சரி இது ரெண்டுக்கும் நடுவுல 539 இருக்கே அது யாருதுன்னு நீங்க கேக்கறது தெரியுது. கொஞ்சம் இருங்க வர்றேன். இவரின் மனைக்கு அரசு நிர்ணயித்துள்ள விலை ஒரு கோடியே பன்னிரண்டு லட்சத்து தொண்ணுறாயிரத்து ஐநூற்று அறுபது ரூபாய். இவரும் மொத்த தொகையையும் செலுத்தி விட்டதாக தகவல்கள் தெரிவக்கின்றன. 




இந்தத் தொகையை ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கர் செலுத்தினாரா, ராஜமாணிக்கமே செலுத்தினாரா என்பதை கடிதநிதி ச்சீ கருணாநிதிதான் சொல்ல வேண்டும்.
இப்போ அந்த 539 ப்ளாட் நம்பருக்கு வருவோம். 

இது யார் தெரியுமா ? நம்ப டர்ட்டீ பாய்ஸ் டீமுல இருக்கற கர்ம வீரர் தான். வேற யாரு. சும்மா சொல்லக் கூடாது சார். பேமிலியோட போட்டோவுல சூப்பரா இருக்கறாரு. நல்லா சிரிச்சுகிட்டு வேற இருக்கறாரு. நல்லா சிரிக்கட்டும். இப்போ கோபால் சிறை அனுபவங்களையும், நீதிமன்ற அனுபவங்களையும் எழுதுவது போல, இவரும் எழுதத்தானே போகிறார்.



இவருக்கு தன்னுடைய மனைவி ஜெயசுதா பெயரில் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. ஜெயசுதா யார் ? வேற யாரு. அவரும் சமூக சேவகர் தான். (இவ்ளோ சமூக சேவகர்கள் இருக்கும் ஒரு சமூகத்தில் ஏன் இவ்வளவு அவலம் ? என்ன கொடுமை சார் ?) இவருடைய 539வது ப்ளாட் மொத்தம் 4764 சதுர அடி. 

இவுரு படா கில்லாடி சார். இவரு பேர்ல இருக்கற காமராஜ் நகர்லே வாங்கிட்டாரு பாருங்களேன் ? இவரது மனைக்கு அரசு நிர்ணயித்துள்ள விலை ஒரு கோடியே பதினைந்து லட்சத்து, இருபத்தி எட்டாயிரத்து எண்ணுற்று எண்பது ரூபாய். இவரும் மொத்த தொகையையும், வீட்டு வசதி வாரியத்திற்கு செலுத்தி விட்டதாக ஆவணங்கள் கூறுகின்றன.

(கோபால் சார். நக்கீரன்ல இவ்வளவு சம்பளமா கொடுக்குறீங்க ? அப்புறம் ஏன் உங்க நிருபர்கள், போற எடத்துலயெல்லாம் கவர் வாங்குறாங்க ? என்னமோ போங்க சார்.)
இவர்கள் அனைவரும் சேர்ந்து Land Mark construction என்ற கட்டுமான நிறுவனத்தின் பங்குதாரராக இணைந்து கட்டுமானப் பணியை துவங்க இருக்கிறார்கள். 

Flat வேண்டுபவர்கள், ஜானி ஜான் கான் ரோட்டில் உள்ள பங்குதாரரையோ, உளவுத்துறையில் உள்ள பங்குதாரரையோ, தலைமைச் செயலகத்தில் உள்ள பங்குதாரரையோ, ப்ரோக்கர் நஜிமுத்தீனையோ அணுகவும். முதலில் வருபவருக்கே முன்னுரிமை. 

இப்போ புரியுதா சவுக்கின் மகிழ்ச்சிக்கு காரணம் என்னவென்று. எதிரியை வாழ்த்தும் பக்குவம் வேண்டுமையா, வேண்டும்.
 

Comments  

 
0 #47 Faizal Ahamed 2011-05-14 15:48
hai savukku,
Congrats for your hardwork..Please give the link for articles of Sylendera babu which was published in Savukku.net...Please
Quote
 
 
+2 #46 public 2011-01-17 23:08
A wikileaks in tamil.
keep it up.
-public
Quote
 
 
+4 #45 கெடி 2011-01-07 14:59
தமிழ் விக்கி லீக் சவுக்கு வாழ்க்
Quote
 
 
+2 #44 JP 2010-12-17 17:54
good work. hats off.
Quote
 
 
+3 #43 tamil mani 2010-12-12 15:40
தளவாய் தமிழர் களம் , savukku.net நன்றாக போபுலர் ஆவது பிடிக்காத விஷமியா நீங்கள் ? வசூல் ராஜா, கனிமொழி, கருணாநிதி, கலாநிதி, ஜாபர் சேட் ஆளா நீங்க ?
Quote
 
 
+2 #42 mahendran.m 2010-12-11 23:24
India's Julian Assange. Savukku
Quote
 
 
+3 #41 kanian 2010-12-09 23:03
ரத்தன் டாட்டா - எனக்கு ஒன்று புரியவில்லை. 30 வயதுக்கு மேல் நிறைய இளைஜர்கள் லஞ்ச, ஊழலுக்கு எதிராக போராடுகிறார்கள் . குண்டர்களுக்கு தெரிந்தால் வெட்டபடுவார்கள் அல்லது கொல்லபடுவார்கள் . ஆனால் ரத்தன் டாட்டா வுக்கு குடும்பமும் இல்லை பிள்ளையும் இல்லை. இத்தனை வருடங்கள் டாட்டா என்ன செய்து கொண்டு இருந்தார் ? விமான லஞ்சம் பற்றி சொல்லவே 15 ஆண்டுகள் ஆகிற்று. வாட் தி ஹெல் ஹி இஸ் doing ?
Quote
 
 
+2 #40 amarasurya 2010-12-09 16:12
kudos continue your job welldone
Quote
 
 
+11 #39 குப்புசாமி 2010-12-09 00:24
சவுக்குக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்... இங்கே பலரின் முகத்திரை கிழிக்கப்பட்டு இருக்கிறது....
சவுக்குக்கு ஒரு பணிவான வேண்டுகோள்... இந்த நக்கு ஈரன் காமராஜை குறிப்பிடும் போது கர்மவீரர் என்று சொல்லுகிறீர்கள் ... தயவு செய்து அதை மாற்றவும்.. இவன் கர்மவீரருடைய மலத்தை கூட திங்க அருகதை அற்றவன்.... இவன் பொண்டாட்டி வேறு ஊருக்காக உழைக்கும் பத்தினி.. அதுதாங்க சமூக சேவகி... அப்படி சம்பாதித்து தான் இப்போ இடம் வாங்கி இருக்காங்க... இவனை காமராசுனு போடுங்க இல்லனா நக்கிராசுனு போடுங்க... அந்த
உத்தமர் பேரை பயன்படுத்த வேண்டாம்..
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.... ஆனால் கவனம்... இவனுக ஏதற்கும் அஞ்சாத பாவிகள்...
Quote
 
 
+3 #38 Rajagopalan 2010-12-08 22:08
Nakkeeran will be able to pay sum to Kamaraj as he has looted veerappan stashed cash bags
Quote
 
 
+1 #37 tamilvanavil 2010-12-08 20:05
if some one gives extra one cour they ill sale him's wife tooooo..
Quote
 
 
+5 #36 vekulip pandiyan 2010-12-08 17:47
Instead of looting public money like this, all these families can do brothel.. They may get more money and flats.. :-|
Quote
 
 
+2 #35 kovanandi 2010-12-08 12:47
savukku, karunanithi announced that house plots allocation is done by the governments in a routine manner as per procedures and policies of 15 % to appalukattra arasu ooliyar and social workers.So JJ and other rulers will follow this suit
Quote
 
 
+2 #34 C.TAMILSELVAN 2010-12-08 12:42
noyalla jafer sait, entha oorula unka pondatti, pullai ellam Social work collegela padichathu/
Quote
 
 
+4 #33 C.TAMILSELVAN 2010-12-08 12:41
Pls go thru today junior vikatan, it is purposefully skipped the name our Jafer Sait and his misdeeds. why I ask Junior vikatan while the TV channels, headlines today broadcasted this abuses yesterday.
Quote
 
 
+3 #32 j.srinivasan 2010-12-08 10:26
what is the meaning of social worker? what kind of work we have to do ?
Quote
 
 
+10 #31 Kumar.T 2010-12-08 02:06
Quoting மாப்பி:
சவுக்குக்கு வணக்கம். உங்கள் கட்டுரைகளை தொடர்ந்து வாசித்துவருகிறே ன். உங்கள் பணி மெச்சதக்கது. ஆனால் நீங்கள் ஏன் மற்ற காவல் துறை அதிகாரிகள் செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டுவதில்லை? ஒருசில அதிகாரிகள் மட்டும் தான் தவறு செய்கிறார்களா? தயவு செய்து விளக்கம் தரவும். நன்றி.

மாப்பி... நீங்க கட்டுரைகளை தொடர்த்து படிச்ச மாதிரி தெரியலியே !
ஜாபர் சேட்ல ஆரம்பிச்சி கண்னாயிரம், சுனில்குமார், சைலேதிரபாபு , ட்ராலி பாய்ஸ் னு எல்லாரோட டவுசரையும் ஏற்கனவே சவுக்கு கலட்டியாச்சி ...
Quote
 
 
0 #30 மாப்பி 2010-12-08 00:14
சவுக்குக்கு வணக்கம். உங்கள் கட்டுரைகளை தொடர்ந்து வாசித்துவருகிறே ன். உங்கள் பணி மெச்சதக்கது. ஆனால் நீங்கள் ஏன் மற்ற காவல் துறை அதிகாரிகள் செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டுவதில்லை? ஒருசில அதிகாரிகள் மட்டும் தான் தவறு செய்கிறார்களா? தயவு செய்து விளக்கம் தரவும். நன்றி.
Quote
 
 
+4 #29 MAYILVANAN 2010-12-08 00:00
savuku you are done great and wonderful job keepit up
Quote
 
 
+7 #28 லலிதா 2010-12-07 23:05
ஏன் தினமணி தமிழ்நாடு ஹௌசிங் போர்டு ஊழலை மட்டும் பிரசுரிக்கவில்ல ை . அதிகாரிகளுடன் எதாவது உள்குத்து இருக்குமோ . இந்த ஜெயலலிதா கூட அமைதியா இருக்கிறதை பார்த்தா அதிகாரிகளுக்கு பயபடுகிற மாதிரி தான் தோணுது
Quote
 
 
+2 #27 Sam 2010-12-07 23:00
Something fishy. Why only Rajathiammal & co are being targeted? Are the others, Maran brothers, Stalin, Alagri & co are Mr clean?
Quote
 
 
+4 #26 trytobeindian 2010-12-07 21:55
see the archive page of client tele

http://web.archive.org/web/20080502115320/http://www.d3d.in/clients.asp

SAVUKU GREAT JOB...

I appreciate your efforts taken by you
Quote
 
 
+3 #25 trytobeindian 2010-12-07 21:54
see the evidance of client tele

http://web.archive.org/web/20080502115320/http://www.d3d.in/clients.asp

GREAT JOB SAVUKU...

I really Appreciate your efforts....
Quote
 
 
+13 #24 Kumar.T 2010-12-07 18:46
//சவுக்கை ஜுலை 18ம் தேதியன்று மதுரவாயல் காவல்நிலைய ஆய்வாளர் தமிழ்வாணன் மற்றும் உதவி ஆய்வாளர் சி.ஜே.ஸ்டாலினை வைத்து பொய் வழக்கு போட்டு கைது செய்தது போல, அர்நப் கோஸ்வாமியை கைது செய்வதற்கும், இந்த மங்குணிப் பாண்டியர்களை அனுப்புமாறு சவுக்கு ஜாபர் சேட்டுக்கு ஆலோசனை சொல்கிறது.//

இந்த ஆள் உண்மையிலேயே ஒரு மங்குனி பாண்டி தான் இல்லேனா சவுக்குவை கைது செய்து ஒரு நாளைக்கு 100 ஹிட்ஸ் போய் கிட்டுருந்த சவுக்கு தளத்தை ஒரு நாளைக்கு 10000 ஹிட்ஸ் வரை கொண்டு போய்டாரே..

"நீங்கள் எங்கள் நபர்களைத் தொடருங்கள், நாங்கள் உங்களைத் தொடர்வோம்" என்று விக்கிலீக்ஸ் ஜூலியன் சொன்னது போல தொடர்த்து சவுக்கு கலக்க வாழ்த்துகள்.. !
Quote
 
 
+3 #23 தளவாய் தமிழர் களம் 2010-12-07 16:58
கீழேயுள்ள லிங்க்-கில் அந்த வீடியோ உள்ளது

http://www.timesnow.tv/Debate-Chennais-Adarshgate/videoshow/4359946.cms
Quote
 
 
+2 #22 TAMILAN ELICHAVAYAN 2010-12-07 16:47
Savukku.
Among the tamil nadu population (7 crores approx), you have reached only merely 8 lakh people. Try to update your english blogs. Co-ordinate with media like Tehelka, TOI etc. One side corruption valcano heating from all over India. Our Tamil media is filled with full of money minded people. Nobody is willing to expose the scandals. They all are busy with Cinema reviews, horoscope, etc. :roll:
Now another big scandal from UP (Food scam) :-| exposed. We are true tamils. We need no.1 spot in scam. DMK :P Govt will help us to achieve the spot. :o
Quote
 
 
+2 #21 TAMILAN ELICHAVAYAN 2010-12-07 16:39
Documents accessed by TIMES NOW shows that land was given by the Karunanidhi government to judges, bureaucrats, and DMK party members at massive discounts. What is, however, more shocking is that the bureaucrats, who already own property in the state, were given plots

Among the beneficiaries, Tamil Nadu Intelligence Inspector General of Police, :-* Jaffer Sait, :-? who handed over the plot to a private builder, is making a windfall in crores. High Court judge M Satyanarayana 8) got a 2,200 square ft plot in his wife’s name and serving High Court judge Bhanumati ;-) got a double allotment, despite having other properties.
Quote
 
 
+3 #20 TAMILAN ELICHAVAYAN 2010-12-07 16:37
Well done savukku.

http://www.timesnow.tv/Now-Chennais-Adarshgate-exposed/articleshow/4359954.cms

Now, Chennai's 'Adarshgate' exposed
7 Dec 2010, 0916 hrs IST
Days after the Mumbai Adarsh Society scam, which saw flats meant for Kargil heroes being allotted to politicians and other defence personnel, another land scam involving bureaucrats and politicians surfaced from Chennai. However, the Tamil Nadu government remained defensive and denied any wrong allotment of land.
Quote
 
 
+12 #19 jagan 2010-12-07 15:52
ஆஹா.. சவுக்கு பத்த வெச்ச நெருப்பு :eek: இப்பதான் டைம்ஸ் நவ்-ல் பத்திகிட்டு எரியுது. உஙகளது கடுமையான முயற்சிக்கும், உழைப்புக்கும் பாராட்டுக்கள் சவுக்கு......
Quote
 
 
+4 #18 எங்கேயோ கேட்ட குரல் 2010-12-07 15:40
தற்போது இந்த இடத்தில், பர்வீன் ஜாபர் சேட்டும், ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரின் மகனான துர்கா சங்கரும் இணைந்து பல அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றை கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் 12 பிளாட்டுகள் ஏற்னவே கட்டி முடிக்கப்பட்டு விட்டன. இதில் இடம் பெறும் ஒவ்வொரு வீடும் ரூ. 1 கோடிக்கு விற்கப்படவுள்ளத ாக கூறப்படுகிறது.
Quote
 
 
+4 #17 எங்கேயோ கேட்ட குரல் 2010-12-07 15:39
அப்பழுக்கற்ற அரசு ஊழியர் என்ற பிரிவின் கீழ் (அட இங்க பாருடா...) இந்த நிலத்தை ஜாபர்சேட் வாங்கியுள்ளார். 2008ம் ஆண்டு ஜூன் 6ம் தேதி இந்த நிலத்தை ஜாபர்சேட்டின் மகள் ஜெனீபர் சேட் (அப்போது இவர் மாணவி) பெயருக்கு அரசு கொடுத்தது. இந்த நிலத்தை வாங்குவதற்காக முதலில் ரூ. 46.03 லட்சம், ரூ. 1.73 லட்சம் என இரு காசோலைகளை வழங்கியுள்ளார் ஜெனீபர். பின்னர் 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரூ. 60 லட்சம் கொடுத்தார். முழுத் தொகையையும் கொடுத்த பின்னர் நிலத்தை தனது தாயார் பர்வீன்ஜாபர் பெயருக்கு அவர் மாற்றிக் கொடுத்துள்ளார்.
Quote
 
 
+2 #16 nanban 2010-12-07 15:22
enna sir kurumaaraj peru engaiyume kaanom? thappichittaraa ?
Quote
 
 
-3 #15 Sarav 2010-12-07 14:57
There is always one rule for JJ and other rule for others.
JJ can do commit this type of crime but others should not.
Quote
 
 
+2 #14 thondaiman 2010-12-07 14:32
Great Savukku!
Quote
 
 
+2 #13 jajin 2010-12-07 14:28
http://thatstamil.oneindia.in/news/2010/12/07/tamilndau-rti-land-scam-karunanidhi.html
Quote
 
 
+2 #12 Ram Prasad 2010-12-07 14:13
Now in IBNlive...well done
http://ibnlive.in.com/news/tn-land-scam-dmk-govt-under-scanner/136670-3.html?from=tn
Quote
 
 
+6 #11 ஏகா 2010-12-07 12:10
ஒரு லட்சத்தி ஏழுபத்தி ஆறாயிரம் கோடி வாழ்த்துக்கள்...சவுக்கு
அய்யோடா என்ன ஆச்சு எனக்கு... சவுக்க படிச்சு படிச்சு.. இப்படி ஆகிட்டேன்.
Quote
 
 
+5 #10 lakshmanadass 2010-12-07 10:28
adappavi savukku jabar seit tousaraye kalatitaye great ya
Quote
 
 
+4 #9 Nithi 2010-12-07 10:19
Savukku, Unnala enru Jabar matitaan, aduthu Karunanithiya????
Quote
 
 
+4 #8 nsr 2010-12-07 09:33
i think that news was taken from Savukku only.... how means.... check the images they showed.....
(i might be wrong...)
Quote
 
 
+5 #7 anbu 2010-12-07 06:36
savukku..thule..thule...100vallthukkal..1000 vallthukkal..10,000valthukkal ..1,00,000 valthukkal,1.00,00,00,000val thukkal ...0 kankku theriyavillai... sorry savukku anbu
Quote
 
 
+4 #6 soundar 2010-12-07 04:56
Please change Fraud Photos
Quote
 
 
+16 #5 Ram Prasad 2010-12-07 02:44
அரசியல் கட்சிகளுக்காகவு ம், கார்ப்பரேட் கம்பனிகளுக்காகவ ும் மட்டுமே செயல்படும் தொலைகாட்சி மற்றும் பத்திரிக்கைகளைய ும் மீறி உண்மையை எடுத்துரைக்க ஒரு மாற்று வழியை அமைக்க வேண்டும். உங்களைப் போன்றவர்கள் இப்பொழுது செய்யாவிட்டால் எப்பொழுதும் முடியாமல் போய்விடும்.
Quote
 
 
+19 #4 Ram Prasad 2010-12-07 02:44
நண்பரே...தாங்கள் ஆதாரத்துடன் எழுதும் எந்த ஒரு கட்டுரையையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும். உங்களது ஆங்கில ப்ளாக் அப்டேட் செய்யாமலேயே இருக்கிறது. முடிந்தால் Openmagazine, outlook போன்ற பத்திரிக்கைகளில ும் பிரசுரிக்க முயற்சியுங்கள். தமிழகத்தின் பத்திரிகை நிலவரத்தைப் பற்றி தாங்களே எழுதியுள்ளீர்கள ், சன், கலைஞர் ஜெயா போன்ற அரசியல் தொலைக்காட்சிகளை யும் மீறி மக்களுக்கு உண்மையை எடுத்துச் செல்ல வேண்டுமானால் தேசிய அளவில் செய்வது சற்றாவது பலனைத் தரும். NDTV போன்ற ஆங்கில மீடியாக்களின் லட்சணத்தை அருந்ததிராய் பலமுறை எடுத்துச் சொல்லியும் அவரை தேசத் துரோகியாகவே சித்தரித்து ஆளும் கட்சிகளுக்கு தங்கள் விசுவாசத்தைக் காட்டிக் கொண்டன அந்த சேனல்கள். வடக்கிலும் சற்றாவது சமூக அக்கரை கொண்ட பத்திரிக்கையாளர ்கள் இருக்கிறார்கள். அவர்களது பத்திரிக்கைகளில ும் உங்கள் கட்டுரைகளை எழுதி உங்களது உழைப்பு, முயற்சி அனைத்தையும் மேலும் சிறப்பாகவும் ஆக்கப்பூர்வமாகவ ும் தொடர வேண்டும்.
Quote
 
 
+17 #3 விகடகவி 2010-12-07 00:56
சவுக்கு ஐயா! நீங்க தெகல்காவுடன் கூட்டு சேர்ந்து ஸ்டிங் ஆப்ரேசன் செய்து, தமிழகத்தில் உள்ள ஊழல் பெருச்சாளிகள் அம்புட்டு பேரின் டவுசரையும் கலட்டிவிடனும். அதற்கு கடவுள் அருளுடட்டும்.

ஓரு ஆலோசனை- தயவு செய்து இரண்டு பத்திக்கு இடையில் இரண்டு வரிக்கு இடம் விடாதீர்கள். ஒரு வரி இடைவெளி மட்டும் விடுங்கள். மௌஸை ரொம்ப இழுக்க வேண்டியிருக்கின ்றது :-)
Quote
 
 
+6 #2 jayachandran.g 2010-12-06 23:38
savukku sir, matra paththirikagali l englishil type seidhall thmizhil varume adh pol seiyungalen...
Quote
 
 
+6 #1 jayachandran.g 2010-12-06 23:35
:-) endraikku kainjaridam oru latcham vaanginaaro andre nakkeeran vaanguvadhai vittuvitten.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 105 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday6144
mod_vvisit_counterYesterday9391
mod_vvisit_counterThis week6144
mod_vvisit_counterLast week78643
mod_vvisit_counterThis month287519
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12809638