முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்தொடர்புக்கு
+++
நீலச் சாயம் வெளுத்துப் போச்சு… ராசா வேஷம் கலைஞ்சு போச்சு. அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 38
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
புதன்கிழமை, 08 டிசம்பர் 2010 23:39
 

 

குழந்தைகளாக இருக்கையில் நம்மில் பலர் பாடியிருக்கும் பாடல் இது. இதைப் போலத்தான் இன்று ராசாவின் வேஷம் கலைந்தது. இன்று அதிகாலை பல்வேறு குழுக்களாக பிரிந்து இந்தியா முழுவதும் சோதனையை நடத்திய சிபிஐ அதிகாரிகள், ஆ.ராசாவின் டெல்லி வீட்டையும் சோதனையிட்டு பல்வேறு ஆவணங்களை அள்ளிச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

ஒரு மாதம் முன்பாக ஆ.ராசா என்ன பேசினார் என்பதை நினைவுப் படுத்திப் பாருங்கள். There is no question of resigning.   No irregularity in spectrum allocation. Everything was done with Prime Minister’s knowledge. என்னவெல்லாம் பேசினார். இன்று பேச்சு மூச்சில்லாமல், திமுகவில் இருப்போமா இருக்க மாட்டோமா என்ற வருத்தத்திலும், குழப்பத்திலும் இருக்கிறார்.

 

இன்று சிபிஐ வளையத்தில் ராசாவைத் தவிர, ராசாவின் செயலாளராக இருந்த ஆர்.சே.சந்தோலியா, தொலைத் தொடர்புத்துறை செயலாளர் கே.ஸ்ரீதர், தொலைதொடர்புத் துறை அதிகாரி ஏ.கே.ஸ்ரீவத்சவா ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடத்தினார்கள்.   மொத்தம் 14 இடங்களில் தொடங்கிய சோதனை இன்று மாலை வரை தொடர்ந்தது.

 

சென்னையில் ராசாவின் பினாமியாக கருதப் படும் க்ரீன் ஹவுஸ் ப்ரோமோட்டர்சின் மேலாண் இயக்குநர் சாதிக் பாட்சா என்பவர் வீட்டிலும் நடந்தது.

 

சென்னையைத் தவிர ராசாவின் சொந்த ஊரான பெரம்பலூரிலும், ஸ்ரீரங்கத்தில் உள்ள ராசாவின் சகோதரர் வீட்டிலும், திருவானைக்கோவிலில் உள்ள ராசாவின் சகோதரி வீட்டிலும் சோதனை நடந்துள்ளது.

 

ராசாவின் செயலாளராக இருந்த சந்தோலியாவை கடந்த வாரம் சிபிஐ அதிகாரிகள் விசாரித்தனர். இந்த விசாரணையின் போது, சந்தோலியா கிளி போல அனைத்தையும் ஒப்பித்ததாக கூறப் படுகிறது. இவரது வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இன்றைய சோதனைகள் நடைபெற்றதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

 DSC_09123

சாதிக் பாட்சா

அதிகாலை சென்னையில் உள்ள டிஎம்எஸ் பின்புறம் உள்ள சாதிக் பாட்சா வீட்டில் வந்திறங்கிய சிபிஐ அதிகாரிகள், காலை 11.30 மணிக்கு சாதிக் பாட்சாவை வெளியே அழைத்துச் சென்றனர்.   சாதிக் பாட்சாவின் வங்கி லாக்கர்களை திறப்பதற்காக அழைத்துச் சென்றதாக தெரிகிறது.

 

சிபிஐ அதிகாரிகளின் சோதனை முடிந்ததும் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தியாகராய நகர் க்ளோபஸ் வளாகத்தின் ஆறாவது தளத்தில் உள்ள க்ரீன் ஹவுஸ் ப்ரொமோட்டர்ஸ் என்ற அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

 

மாலை 6 மணியளவில் சாதிக் பாட்சாவை அவரது வீட்டில் இறக்கி விட்டு விட்டு சிபிஐ அதிகாரிகள் புறப்பட்டுச் சென்று விட்டனர். அதன் பிறகு, வருமான வரித்துறை அதிகாரிகள் சாதிக்கை எஸ்கேப் திரையரங்க வளாகத்திற்கு அழைத்துச் சென்று விட்டு மீண்டும் வீட்டிலேயே விட்டு விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 DSC_0895

சாதிக் வீட்டை படம் பிடிக்க குழுமியிருந்த பத்திரிக்கையாளர்கள்

 

இந்த சாதிக் பாட்சா இவ்வளவு சொத்தோடு இருக்கிறாரே…. எப்படி… ரத்தன் டாட்டா போல பரம்பரை பணக்காரரா என்ற சந்தேகம் எழும்.

 

சாதிக்கின் வரலாற்றைப் பார்ப்போம்.   சாதிக் பாட்சாவின் சொந்த ஊர்,, கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி.   சாதிக்குக்கு 20 வயது இருக்கும் போது, பிழைப்புக்காக பெரம்பலூர் வருகிறார். பெரம்பலூருக்கு வந்ததும் சாதிக் செய்த தொழில் வீடு வீடாக சென்று புடவை ஜாக்கெட் துணி விற்பனை செய்து, தவணை முறையில் மாதந்தோறும் வசூல் செய்வது. 1984-85ல் பெரம்பலூர் மாவட்டமாக அறிவிக்கப் படுகிறது. இவ்வாறு அறிவிக்கப் பட்டதும், சாதிக் ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்குகிறார். பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து சவுதி, துபாய், போன்ற நாடுகளில் வேலை செய்பவர்கள் மிக மிக அதிகம். சவுதிக்குப் போய் பத்து ஆண்டுகளாக திரும்பி வராமலேயே இருப்பவர்கள் அதிகம்.   இந்த விஷயத்தை சாதிக் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார். எப்படி என்றால், நிலம் வைத்திருப்பவர்களிடம் ஒப்பந்தம் போட்டுக் கொள்வது. போட்டுக் கொண்டு, அந்த நிலத்தை சவுதி, துபாய், பஹ்ரெய்ன் போன்ற நாடுகளில் பல ஆண்டுகளாக வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பெரம்பலூர்க்காரர்களை தொடர்பு கொண்டு, பெரம்பலூரில் நிலம் விலை ஏகப்பட்டடாக ஏறிப் போய் விட்டது என்று கதை விடுவார். இவர் கதையை நம்பி, வெளிநாட்டில் இருந்தபடியே நிலத்தை வாங்கிப் போடுவார்கள்.   இந்த விஷயத்தை சாதிக்கோடு, டெய்லர் முனவர் மற்றும் இரண்டு பேர் ஈடுபட்டனர்.

 IMG_9248

காரில் சாதிக்கை ஏற்றி, வண்டியை ஓட்டப் போகும் சிபிஐ டிரைவர் மற்றும் காரில் ஏறும் சாதிக்

 

இவ்வாறு வெளிநாடுகளில் சாதிக் விற்ற நிலங்களுக்கு சாதிக் சூட்டிய பெயர் என்ன தெரியுமா ?

 

சாதிக் ரியல் எஸ்டேட்

டால்பின் சிட்டி

க்ரீன் சிட்டி

பாட்சா நகர்

 

என்பன.   வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்தவர்கள், உண்மை நிலவரத்தை பார்த்தவுடன், அய்யோ, அய்யோ என்று அடித்துக் கொண்டு ஏமாந்து விட்டோமே என்று புலம்பியிருக்கிறார்கள்.   பலர் மண்ணை வாரி இறைத்து, சாதிக்கை சபித்திருக்கிறார்கள் என்று பெரம்பலூரில் உள்ளவர்கள் கூறுகிறார்கள்.

 

நெருக்கடி மிகுந்ததும், ஆறு வருடங்களுக்கு முன், சாதிக் சென்னைக்கு மஞ்சள் பையோடு கிளம்புகிறார். சாதிக் சென்னை வரும் நேரத்தில் ஆ.ராசா துணை அமைச்சராக இருக்கிறார்.

 

ஆ.ராசாவுக்கு, ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து தொழில் அதிபர் ஆக வேண்டும் என்று தணியாத ஆசை. சாதிக் வந்ததும், ரியல் எஸ்டேட் தொழிலில் அனுபவம் மிக்கவர் என்று சாதிக்கை வைத்து க்ரீன் ஹவுஸ் ப்ரொமோட்டர்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தை தொடங்குகிறார்.

 IMG_9250

சோதனையிட்ட சிபிஐ அதிகாரிகள்

 

இந்த நிறுவனத்தில் ராசாவின் மனைவி பரமேஸ்வரி மேலாண் இயக்குநராக நியமிக்கப் படுகிறார். சிரிது காலம் கழித்து, பரமேஸ்வரி விலகிக் கொண்டு, பரமேஷ் குமார் என்ற ராசாவின் அக்காள் மகன் மேலாண் இயக்குநராக நியமிக்கப் படுகிறார்.

 

முதலில் ஒரு கோடி ரூபாய் வைத்து இந்நிறுவனம் தொடங்கப் படுகிறது.   ஒரு கோடி ரூபாயோடு தொடங்கிய நிறுவனம், ராசா தொலைத் தொடர்புத் துறை அமைச்சரானதும், அண்ணாமலை படத்தில் ரஜினி ஒரே பாடலில் பணக்காரராக ஆவாரே…. அதே போல க்ரீன் ஹவுஸ் நிறுவனம் 600 கோடிக்கு நிலங்களை வாங்கிப் போடுகிறது.

 

க்ரீன் ஹவுஸ் ப்ரமோட்டர்ஸ் இது வரை முடித்த திட்டங்கள் என்னவென்று பார்ப்போம்.

 

சவுபாக்கிய நாகர். திருவள்ளுரில் 25 ஏக்கரில் 241 ப்ளாட்டுகள். ஒரு ப்ளாட்டின் விலை 9 லட்சம்.

 

ஸ்ரீ சாய் சக்தி நகர் அத்திப்பட்டில் 27 ஏக்கரில் 218 ப்ளாட்டுகள். ஒரு ப்ளாட்டின் விலை 2.75 லட்சம்.

 

க்ரீன் சிட்டி. திருப்போரூரில் 8.37 ஏக்கரில் 83 ப்ளாட்டுகள். ஒரு ப்ளாட்டின் விலை 18 லட்சம்.

IMG_9262

 

ஸ்ரீசாரதி நகர்.   திருநின்றவூரில் 30 ஏக்கரில் 306 ப்ளாட்டுகள். ஒரு ப்ளாட்டின் விலை 11 லட்சம்.

 

சுபமங்களா நகர். செங்குன்றத்தில் 30 ஏக்கரில் 316 ப்ளாட்டுகள். ஒரு ப்ளாட்டின் விலை 6.25 லட்சம்.

 

ஆலிவ் கார்டன் மகாபலிபுரம் அருகே 105 ப்ளாட்டுகள். விலை ப்ளாட்டுக்கு தக்க மாறும்.

 

கடற்கரை அருகே கோவளத்தில் 6000 சதுர அடியில் 23 ப்ளாட்டுகள்.

 

ஸ்ரீ கிருஷ்ணா நகர். செவ்வாய்ப் பேட்டை 105 ப்ளாட்டுகள்.

 

பாரத் நகர். புதுப்பட்டினம் 280 ப்ளாட்டுகள்.

 

ஏஎன்எஸ் நகர். திருநின்றவூர். 170 ப்ளாட்டுகள்.

 

சஹானா    திருநின்றவூர் 80 ப்ளாட்டுகள்

 

சந்தோஷம் நகர் கொடுவேலி 60 ப்ளாட்டுகள்.

 

சிங்கபெருமாள் கோவில் அருகே 40 ஏக்கர்கள்

 

கிருஷ்ணசாமி என்க்ளேவ். திருச்சி மாவட்டம் அபிஷேகபுரத்தில் 32 அடுக்கு மாடி வீடுகள்.

 

துரைப்பாக்கத்தில் அடுக்கு மாடி வீடுகள்.

 

போரூர் அருகே அடுக்கு மாடி வீடுகள்

 

திருச்சி மாவட்டம், கம்பரசம்பேட்டை, லால்குடி, மணச்சநல்லூர் ஆகிய இடங்களில் ப்ளாட்டுகள்

 

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை, சமயபுரம், மற்றும் ஆர்.டி.மலை ஆகிய இடங்களில் க்ரீன் சிட்டி என்ற பெயரில் ப்ளாட்டுகள்.

 

ஒரு மஞ்சள் பையோடு பெரம்பலூரிலிருந்து சென்னை வந்தவர் எப்படி இத்தனை கோடிகள் பெருமானமுள்ள இடங்களை வாங்கிப் போட்டிருக்க முடியும் ?

 

இது தவிரவும், க்ரீன் ஹவுஸ் ப்ரமோட்டர்ஸ் சிங்கப்பூர், மலேசியா, சவுதி அரேபியா மற்றும் துபாயில் அலுவலக கிளைகளை திறந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

IMG_9266

க்ரீன் ஹவுஸ் அலுவலகத்தின் உட்புறத் தோற்றம்

 

இந்த க்ரீன் ஹவுஸ் ப்ரமோட்டர்ஸ் தொழில் நிறுவனத்தில், சாதிக்கோடு சேர்ந்து இமயவரம்பன், பச்சமுத்து மற்றும் சுப்புடு என்பவர்களும் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது.

 

சிபிஐ அதிகாரிகள், இவர்களையும் விசாரிக்குமாறு சவுக்கு கேட்டுக் கொள்கிறது.

 

இந்த வார இறுதிக்குள் ராசா கைது செய்யப் படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இப்போது சொல்லுங்கள், ராசாவின் வேஷம் கலைந்ததா  இல்லையா ?

 

Comments  

 
0 #54 kanna 2011-05-07 17:20
:lol:
Quote
 
 
0 #53 seekar 2011-05-07 11:39
[quote name="ckdinakar"][quote name="பார்த்திபன்"]ராஜா என்பார் -( அதா ஊரே நாறுதே !!!! )

மந்திரி என்பார் ( வடை போச்சே!!!! )

ராஜ்ஜியம் இல்லை ஆள -(புடிங்கிடீங்க !!!!)

ஒரு ராணியும் இல்லை வாழ (கனிமொழி !!!!)

ஒரு உறவுமில்லை அதில் பிரிவுமில்லை(கா ங்கிரஸ் கூட்டணி !!!!)

அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நாளும்(C.B.I + JPC !!!!!!)

கல்லுக்குள் ஈரமில்லை நெஞ்சுக்குள் இரக்கமில்லை(கலை ஞர் !!!!!)

ஆசைக்கு வெட்கமில்லை அனுபவிக்க யோகமில்லை(10% இருக்குல்லே !!!!)

பைத்தியம் தீர வைத்தியம் இல்லை
உலகில் எனக்கு ஒருவழி இல்லை (அடுத்த தேர்தல்ல ஆப்பு !!!!!!)[/ஃஉஒடெ]
ஸுபெர்[/ஃஉஒடெ]
அருமை அருமை
…
Quote
 
 
0 #52 vino 2011-01-13 17:06
ipo varai kaidhu seiyapadavillai ...
Quote
 
 
+1 #51 Thamizhan 2010-12-23 13:18
Quoting STD ISD PCO:
ராஜா மாமா வீட்டில் raid சரி. ஆனால் கனி மாமி வீட்டில் raid இல்லையா??


'Raja' Irundhadhe 'Kani' veetla thaane..... :-)
Quote
 
 
-5 #50 asuran 2010-12-19 20:44
மீடியாக்களுக்கு நான் அறிவுறுத்த விரும்புகிறேன்; நீங்களே (ஊடகங்களே) ஒரு கற்பனையான தொகையான 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் என்று எழுதி அதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறீர ்கள். அநேகமாக இத்தொகை 30 ஆயிரம் கோடிதான் இருக்கக் கூடும் என்றார்!---வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது, தகவல் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த அருண்ஷோரி(சென்ன ையில் நேற்று (18.12.2010)
Quote
 
 
+1 #49 ம.பொன்ராஜ் 2010-12-15 12:32
பெரம்பலூர் அருகே உள்ள ராஜாவின் வீட்டில் மீண்டும் ரெய்டு நடந்து வருகிறது. ராஜாவின் உறவினர்கள், நண்பர்கள், நக்கீரன் இணையாசிரியர் காமராஜ் உள்ளிட்டோரின் வீடுகளிலும் சோதனை நடந்து வருகிறது.
சென்னையில் உள்ள ராஜாவின் ஆடிட்டர் கணபதி சுப்ரிமணியம், பெசன்ட் நகரில் உள்ள நக்கீரன் வார இதழின் இணையாசிரியர் காமராஜ், பிரபல மத போதகர் ஜெகத் காஸ்பர், ராஜாவின் நண்பரான சாதிக் பாட்சாவின் சென்னை வீடு உள்ளிட்டவை ரெய்டுக்குள்ளாக ியுள்ளன.
Quote
 
 
-3 #48 திராவிடஅரிச்சந்திரன் 2010-12-14 16:50
தமிழரை தவிர தமிழ் நாட்டில் இருக்கும் தெலுங்கன்,கன்னட ன்,மலையாளி,(தமி ழ் பேசினாலும் வந்தேறிகளே)எல்ல ாம் வடுகரே!வந்தேறிக ளே.யார் ஆரியன்?பிராமணனா?தெலுகு,கன்னடம், மலையாளம்,மராட்ட ி,குஜராத்தியை ...இன்னும் பிற மொழிகளை தாய் மொழியாக கொண்ட பிராமணர்லாம் ஆரியரா? வடுகரும்,வடவரும ே!கன்னட வந்தேறி ராமசாமி நாயக்கன்(பெரியா ர்-அழைக்கப்பட தகுதியற்றவன்)பு னைந்த மாயை,பொய், புனைசுருட்டெல்ல ாம் உலகுக்கு வெளிப்படும் காலம் இது!
Quote
 
 
+1 #47 joe 2010-12-14 12:40
rasavukku aapu ready,singai geylang queen kani eppodhu mattuva,appuram anda kelavan seekirama saganum,yeppa ivanga potta aatam irrukae :lol:
Quote
 
 
-6 #46 திராவிடஅரிச்சந்திரன் 2010-12-13 17:43
வரலாற்றை புரட்டிப்பார்!வ டுக நாயக்கர் ஆட்சீலேதான் சாதி உருவாக்கப்பட்டு கட்டியமைக்கபட்ட து!தமிழனின் சொத்துக்கள் பிடுங்கப்பட்டு சேரியில் முடக்கப்பட்டான் .தெலுங்கு இனம் அதனை இன்னும் அனுபவித்து கொண்டிருக்கிறது ஆட்சி அதிகாரம் உட்பட.வந்தேறிகளுடன் வாழ முடியாது என்பதுதான் வரலாறு சுட்டும் பாடம்.ந ிச்சயம் வந்தேறி வடுக இனம் தமிழர் நாட்டிலிருந்து வேரோடும் ,வேர் அடி மண்ணோடும் பிடுங்கப்படும்! இது உறுதி!!!,
Quote
 
 
+1 #45 ARIVAZHAGAN 2010-12-12 18:26
UNGAL THUNICHALAI PARATTUGIREAN
Quote
 
 
0 #44 MOHAMED 2010-12-11 15:43
ooru pera keduthutiye sathik by Pallapatti Guy..........
Quote
 
 
+8 #43 ckdinakar 2010-12-11 12:54
Quoting பார்த்திபன்:
ராஜா என்பார் -( அதா ஊரே நாறுதே !!!! )

மந்திரி என்பார் ( வடை போச்சே!!!! )

ராஜ்ஜியம் இல்லை ஆள -(புடிங்கிடீங்க !!!!)

ஒரு ராணியும் இல்லை வாழ (கனிமொழி !!!!)

ஒரு உறவுமில்லை அதில் பிரிவுமில்லை(கா ங்கிரஸ் கூட்டணி !!!!)

அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நாளும்(C.B.I + JPC !!!!!!)

கல்லுக்குள் ஈரமில்லை நெஞ்சுக்குள் இரக்கமில்லை(கலை ஞர் !!!!!)

ஆசைக்கு வெட்கமில்லை அனுபவிக்க யோகமில்லை(10% இருக்குல்லே !!!!)

பைத்தியம் தீர வைத்தியம் இல்லை
உலகில் எனக்கு ஒருவழி இல்லை (அடுத்த தேர்தல்ல ஆப்பு !!!!!!)

Super
Quote
 
 
+2 #42 சீ.பிரபாகரன் 2010-12-10 16:54
(உங்கள் நண்பர்) காமராஜை சி.பி.ஐ. ஏன் இன்னும் விசாரிக்கவில்லை ?
Quote
 
 
0 #41 gchithirai 2010-12-10 16:35
seven tamizhir veduthalai maanadu11/12/2010.4.00 p m. chennai aanaivarum varuga varuga .
Quote
 
 
+7 #40 jaya.yedappalli. 2010-12-10 13:30
பட்டய கிளப்புங்க ராசா ஊர் துட்டுல உலகத்தயே பிளாட் போட்டு வித்துடுங்க
மோசடி கிரிமினல் ஆ ராசாவை கதிரவனாக சித்தரித்து மக்களை தூண்டிவிட்டு நாட்டில் பதற்றத்தை உண்டுபண்ணி ஒரு கிரிமினலை தப்பிக்க முயற்சித்த மூத்த காட்டுவிரியன் கருணாநிதி,
Quote
 
 
+2 #39 Perambalur citizen 2010-12-10 04:09
Dear Savukku,

Appadiye in than Dhanalakshmi Srinivasan (perambalur) kathai enna nu visarikkavum...
Quote
 
 
+1 #38 ottran 2010-12-10 00:55
jayajayakanthan @gmail.com

sir its ur gmail id
Quote
 
 
+10 #37 பார்த்திபன் 2010-12-10 00:35
ராஜா என்பார் -( அதா ஊரே நாறுதே !!!! )

மந்திரி என்பார் ( வடை போச்சே!!!! )

ராஜ்ஜியம் இல்லை ஆள -(புடிங்கிடீங்க !!!!)

ஒரு ராணியும் இல்லை வாழ (கனிமொழி !!!!)

ஒரு உறவுமில்லை அதில் பிரிவுமில்லை(கா ங்கிரஸ் கூட்டணி !!!!)

அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நாளும்(C.B.I + JPC !!!!!!)

கல்லுக்குள் ஈரமில்லை நெஞ்சுக்குள் இரக்கமில்லை(கலை ஞர் !!!!!)

ஆசைக்கு வெட்கமில்லை அனுபவிக்க யோகமில்லை(10% இருக்குல்லே !!!!)

பைத்தியம் தீர வைத்தியம் இல்லை
உலகில் எனக்கு ஒருவழி இல்லை (அடுத்த தேர்தல்ல ஆப்பு !!!!!!)
Quote
 
 
+10 #36 Kumar.T 2010-12-09 23:13
//ஒரு மஞ்சள் பையோடு பெரம்பலூரிலிருந ்து சென்னை வந்தவர் எப்படி இத்தனை கோடிகள் பெருமானமுள்ள இடங்களை வாங்கிப் போட்டிருக்க முடியும் ?//

இத்துபோன ஒரு டிரங்கு பெட்டியோடு திருவாரூரில் இருந்து திருட்டு ரயிலில் வந்த தமிழ் தாயின் மூத்த மகனிடம் கேட்டால் ஒரு வேளை பதில் கிடைக்கலாம் :-)
Quote
 
 
+5 #35 kanian 2010-12-09 23:02
ரத்தன் டாட்டா - எனக்கு ஒன்று புரியவில்லை. 30 வயதுக்கு மேல் நிறைய இளைஜர்கள் லஞ்ச, ஊழலுக்கு எதிராக போராடுகிறார்கள் . குண்டர்களுக்கு தெரிந்தால் வெட்டபடுவார்கள் அல்லது கொல்லபடுவார்கள் . ஆனால் ரத்தன் டாட்டா வுக்கு குடும்பமும் இல்லை பிள்ளையும் இல்லை. இத்தனை வருடங்கள் டாட்டா என்ன செய்து கொண்டு இருந்தார் ? விமான லஞ்சம் பற்றி சொல்லவே 15 ஆண்டுகள் ஆகிற்று. வாட் தி ஹெல் ஹி இஸ் doing ?
Quote
 
 
+3 #34 ம.பொன்ராஜ் 2010-12-09 22:54
Quoting தளவாய் தமிழர் களம்:

வரலாற்றை புரட்டிப்பார்!வ டுக நாயக்கர் ஆட்சீலேதான் சாதி உருவாக்கப்பட்டு கட்டியமைக்கபட்ட து!தமிழனின் சொத்துக்கள் பிடுங்கப்பட்டு சேரியில் முடக்கப்பட்டான் .தெலுங்கு இனம் அதனை இன்னும் அனுபவித்து கொண்டிருக்கிறது ஆட்சி அதிகாரம் உட்பட.வந்தேறிகளுடன் வாழ முடியாது என்பதுதான் வரலாறு சுட்டும் பாடம்!


வரலாற்றை புரட்டி பாக்கணுமா? ஏன்? 'நடு பக்கத்தில் நமீதா போஸ்டர் இருக்கா'?.... தளவாய் அண்ணே... பிரச்சார நெடி கொஞ்சம் தூக்கலா இருக்கு.... ஓவர் டோஸ்...உடம்புக்கு ஆகாதுண்ணே....
Quote
 
 
+3 #33 lakshmidharan 2010-12-09 21:18
KANIMOZHIKKU ENDHA HUSBAND MMM NILAIYAGA ERUKKAMATTANAA... ENDHA RAJA MOONAVADHU MANUSHAN POLA ERUKKEY.....
Quote
 
 
+4 #32 citizen 2010-12-09 20:51
ராஜா வேஷம் கலைந்து போச்சு ராணி? கதை என்ன ஆக போகுது . அம்மா! இனி சும்மா! இருக்குமா கொடை நாடு கொதிக்குமில்ல? காந்தி வாங்கி கொடுத்த சுதந்திரம் கருணாநிதிக்கு வசதியா போச்சு தமிழ்நாடுக்கு இந்த குடும்பத்தில இருந்து எப்ப சுதந்திரம் கிடைக்க போகுதுன்னு தெரியலையே!
Quote
 
 
+12 #31 காலவன் 2010-12-09 20:38
அடிப்படையில் நான் தூக்குதண்டனைக்க ு எதிரானவன்.. மேற்கண்ட விஷயங்கள் நிருபிக்கபட்டால ் இவர்களையெல்லாம் சாகும் வரை தூக்கில் போடவேண்டும். ஒரு மாத வீட்டு வாடகைக்குக்கும் ஒரு வேளை உணவுக்கும் அல்லாடும் என்னைபோன்ற லட்சக்கணக்கான உள்ளோர் நாட்டில் இப்படியான அநியாயங்கள் நடைபெறுவதை கண்டு அமைதியாக இருக்கும் அந்த கடவுளுக்கு கூட கண்ணில்லையோ என்று தோன்றுகிறது. பேய்கள் ஆட்சிகள் செய்தால் இப்படித்தான்.
Quote
 
 
+8 #30 சவுக்கு வாசகர் 2010-12-09 19:38
கிரீன் ஹவுஸ் ப்ரோமொடேர்ஸ் சாதிக் பாஷா & கோ பெரம்பலூரில் கட்டப்பட்டுவரும ் MRf டையர் தொழிற்சாலைக்கு இடம் வாங்கி கொடுத்த வகையில் 200 கோடிக்கு மேல் அப்பாவி மக்களை ஏமாற்றி சம்பாதித்து உள்ளனர். மேலும் MRf டையர் தொழிற்சாலை இடம் வாங்கும் பிரச்சினையில் தமிழக அரசின் தொழிற்சாலைகளுக் கு நிலம் கையாக படுத்தும் சட்டம் (1999) தை ஆட்சி அதிகாரத்தின் மூலம் தவறாக பயன் படுத்தி உள்ளனர்.இது சம்பந்தமாக சவுக்கு புலனாய்வு செய்தால் நல்லது.
Quote
 
 
+7 #29 MAKKAL 2010-12-09 17:49
வரும் ஆறு ஆண்டுகளில் எத்தனை பேருக்கு வீடு கட்டித் தரப்போகிறோமோ, அத்தனை பேருக்கும் இப்போதே அடையாள அட்டையைக் கொடுத்துவிட்டால ்... அனைவரும் நமக்குத்தானே வாக்களிப்பார்கள ்!’ என்று சொல்ல... அந்த யோசனையைச் சிக்கெனப் பிடித்துக்கொண்ட ார் கருணாநிதி. இப்படி வீடு கிடைக்கப் போகும் 18 லட்சம் பேருக்கும் அடையாள அட்டையைக் கொடுத்துவிட்டால ் 18 லட்சம் குடும்பங்களும் தி.மு.க-வுக்குத்தானே வாக்களிக்கும்!' .........."வீடு கட்ற காசு மக்கள் காசு . வீட்டை வாங்கிட்டி ஓட்டை மாத்தி குத்துவோம் - makkal "

Thanks JuVi
Quote
 
 
+5 #28 Fraud கருணாநிதி 2010-12-09 17:40
கபில் சிபலை, என்.டி.டி.வி-யின் பர்கா தத் பேட்டி கண்டார். இதை கருணாநிதி, அப்படியே முரசொலியில் மறுபிரசுரம் செய்யச் சொன்னார். "இதை எப்படி முரசொலியில் போட்டார்கள் என்று வரிக்கு வரி வைத்துப் படித்துப் பார்த்தால்... அந்த வரியை மட்டும் அலேக்காக அபேஸ் பண்ணிவிட்டார்கள ்." 'தான் கடைப்பிடித்த கொள்கைகளுக்கு பிரதமரின் ஒப்புதலைப் பெற்றதாக ஆ.ராசா கூறி இருக்கிறாரே?’ என்று பர்கா தத் கேட்க... 'இல்லை! அது உண்மை இல்லை! பிரதமர் உள்ளிட்டோரின் ஒப்புதலைப் பெற்றதாக ராசா கூறுகிறார். ஆனால், அப்படி ஒப்புதல் எதுவும் தரப்படவில்லை’ என்று கபில் சிபல் அழுத்தமாகச் சொன்னார். அந்த வார்த்தைதான் முரசொலி எடிட் செய்திருப்பது!''

THANKS JUVI
Quote
 
 
-1 #27 தளவாய் தமிழர் களம் 2010-12-09 17:37
Quoting AADHISESHU:
வடுக நாயக்கர் ஆட்சீலேதான் சாதி உருவாக்கப்பட்டு கட்டியமைக்கபட்ட து!தமிழனின் சொத்துக்கள் பிடுங்கப்பட்டு சேரியில் முடக்கப்பட்டான் .தெலுங்கு இனம் அதனை இன்னும் அனுபவித்து கொண்டிருக்கிறது ஆட்சி அதிகாரம் உட்பட.வந்தேறிகளுடன் வாழ முடியாது என்பதுதான் வரலாறு சுட்டும் பாடம்!தோழர் தளவாய் அவர்களே நீங்கள் சொல்வது எல்லோருக்கும் தெரிந்த வரலாறுதான் எல்லா தேசங்களும் மொழியின் அடிப்படையில் கட்டப்பட்டவையே ஆனால் அகதியாய் சென்ற தமிழனை ஏற்றுக்கொண்டு குடியுரிமையும் வழங்கி கௌரவமாக நடத்தும் ஐரோப்பிய மற்றும் மேலை நாடுகளை பார்த்து இந்த கேள்வியை கேட்பீர்களா? ...ஆகவே சாதி ஒழிப்பையும் தமிழ் தேசியத்தையும் ஜனநாயகபூர்வமாக அணுகுவோம்.

இது ஐரோபியகர்கள் பற்றிய பிரச்சனை அல்ல!எங்கள் வாழ்வியல் பிரச்சனயை திசைதிருப்ப வேண்டாம்! 500 தமிழ் மீனவர்கள் கொல்லப்பட்டபோது ம்,ஈழத்தில் தமிழ் இனமே அழிக்கபட்டபோதும ் தமிழக அரசும் மத்திய அரசும் தமிழர்களை அழிக்க உதவியது ஏன்?வடுக குசும்பு வேண்டாம்!!பொட்ட ுகட்டி கருணாநிதியையே போதும்!! ஐரோப்பிய நாடுகளிடம் உள்ள நீதி,நேர்மை உங்களிடம் உள்ளதா?
Quote
 
 
+1 #26 Nadodi 2010-12-09 14:40
savuku,

Onnu mattum ennala purinchikave mudiyala... ivlo panatha vachi enna panna poranga???

ivanugalukku "saturation point" na ennane theriyatha?....maha paavigal.
Quote
 
 
-2 #25 P.SELVARAJ 2010-12-09 14:33
Nalla pathu vaazhtthukkal
Quote
 
 
0 #24 AADHISESHU 2010-12-09 14:25
வடுக நாயக்கர் ஆட்சீலேதான் சாதி உருவாக்கப்பட்டு கட்டியமைக்கபட்ட து!தமிழனின் சொத்துக்கள் பிடுங்கப்பட்டு சேரியில் முடக்கப்பட்டான் .தெலுங்கு இனம் அதனை இன்னும் அனுபவித்து கொண்டிருக்கிறது ஆட்சி அதிகாரம் உட்பட.வந்தேறிகளுடன் வாழ முடியாது என்பதுதான் வரலாறு சுட்டும் பாடம்!தோழர் தளவாய் அவர்களே நீங்கள் சொல்வது எல்லோருக்கும் தெரிந்த வரலாறுதான் எல்லா தேசங்களும் மொழியின் அடிப்படையில் கட்டப்பட்டவையே ஆனால் அகதியாய் சென்ற தமிழனை ஏற்றுக்கொண்டு குடியுரிமையும் வழங்கி கௌரவமாக நடத்தும் ஐரோப்பிய மற்றும் மேலை நாடுகளை பார்த்து இந்த கேள்வியை கேட்பீர்களா? ...ஆகவே சாதி ஒழிப்பையும் தமிழ் தேசியத்தையும் ஜனநாயகபூர்வமாக அணுகுவோம்.
Quote
 
 
-17 #23 தளவாய் தமிழர் களம் 2010-12-09 13:36
நான்தமிழன்.திராவிடன்அல்ல.
தமிழா,
பள்ளனாய், பறையனாய்,
நாடானாய், தேவனாய்,
வன்னியனாய், பரவனாய்,
பிள்ளையாய், கவுண்டனாய்,
மள்ளனாய், குயவனாய்......
வாழ்ந்தது போதும்.
வா - தமிழா
தமிழனாய் வாழ்வோம்.
வந்தேறி தெலுங்கன், கன்னடன், மலையாளி, மார்வாடி, ஆரிய பிராமணர், இவர்களிடம் இருந்து நம் தமிழ் நாட்டை காப்போம்.
"பக்கத்தில் உள்ளவன் சாதியை கேள், அவன் இனம் தெரியும்.
தமிழன் என்றால் தோள் கொடு, வந்தேறி என்றால், விரட்டி அடி "
''தமிழர்கள் சிறுபான்மையாக உள்ள இடங்களில் தாய்மொழி பற்றோடு இருக்கிறார்கள். பெரும்பான்மையாக உள்ள தமிழகத்தில் சீரழி்ந்த தமிழர்களாக இருக்கிறார்கள்!

வரலாற்றை புரட்டிப்பார்!வ டுக நாயக்கர் ஆட்சீலேதான் சாதி உருவாக்கப்பட்டு கட்டியமைக்கபட்ட து!தமிழனின் சொத்துக்கள் பிடுங்கப்பட்டு சேரியில் முடக்கப்பட்டான் .தெலுங்கு இனம் அதனை இன்னும் அனுபவித்து கொண்டிருக்கிறது ஆட்சி அதிகாரம் உட்பட.வந்தேறிகளுடன் வாழ முடியாது என்பதுதான் வரலாறு சுட்டும் பாடம்!
Quote
 
 
+12 #22 குசும்பன் 2010-12-09 13:07
ஸ்பெக்ரம் ஊழல் இந்திய மதிப்பின்படி 176,000 இலட்சம் கோடி பணம். அரசியல்வாதிகளுக ்கு வேணா சிறு தொகையாக இருக்கலாம். அன்றாடம் காய்ச்சிக்கு எத்தனை இலக்கமென்று தெரியாத கடல்போன்ற தொகை, இது ஒன்றும் மன்மோஹன்சிங்கின ுடையதோ, சோனியாவினுடையதோ , கருணாநிதியின் உழைப்பல்ல. இந்த ஊழல் அறியப்பட்டு 2 வருட்ங்களுக்கு மேலாகிறது,அப்பட ியிருக்கும்போது மோசடி கிரிமினல் ஆ ராசாவை கதிரவனாக சித்தரித்து மக்களை தூண்டிவிட்டு நாட்டில் பதற்றத்தை உண்டுபண்ணி ஒரு கிரிமினலை தப்பிக்க முயற்சித்த மூத்த காட்டுவிரியன் கருணாநிதி, ஒண்ணுக்குமுதவாத நேரம் ஒரு கிளையில் குடியிருக்கும் பச்சோந்தி குஞ்சாமணி ஆகியோர் நிச்சியம் CPI விசாரணைக்குட்பட ுத்தப்படவேண்டிய வர்கள்,
Quote
 
 
+12 #21 குசும்பன் 2010-12-09 12:43
நீலச் சாயம் வெளுத்துப் போச்சு… ராசா வேஷம் கலைஞ்சு போச்சு... மாண்புமிகு மண்ணாப்போச்சு, ஏர்போட்டில் எகிறிநின்னு வீரமாக மணியடிச்ச "குஞ்சாமணி" ஏங்கே போச்சு,
Quote
 
 
0 #20 குவைத் குமார் 2010-12-09 12:20
//சவுதி, துபாய், பஹ்ரெய்ன் போன்ற நாடுகளில்//

சவுதி அரேபியா, பஹ்ரைன் - நாடு சரி
துபாய் - ஒரு ஊரு (இது U.A.E. (OR) United Arab Emirates எனப்படும் நாட்டிலுள்ள ஒரு ஊர்).
Quote
 
 
+11 #19 கருவாடு 2010-12-09 12:16
இது மட்டும் போதாது.

ராசாவின் சொத்து அனைத்தும் அரசாங்கம் எடுக்க வேண்டும்.
Quote
 
 
+4 #18 கோவை பிரியன் 2010-12-09 11:37
தோழர் சவுக்கின் பதிவின் சில வரிகள் கண்டிக்கத்தக்கவ ை.....ராசா வேஷம் இன்றுதான் கலைந்ததா...
Quote
 
 
-10 #17 muthu vijay 2010-12-09 10:50
raja is really king
Quote
 
 
-9 #16 muthu vijay 2010-12-09 10:50
raja is really king
Quote
 
 
+18 #15 thennarasu 2010-12-09 10:35
மத்திய புலனாய்வு துறயினரின் சோதனை மிக தாமதமானது,மிகபெ ரிய ஊழல்பேர்வழி தனக்கு எதிரான ஆதரங்களை இன்னமும் எப்படி அங்கே விட்டுவைப்பர்கள
Quote
 
 
+4 #14 Nithi 2010-12-09 10:17
Raja matittaru ok, Rani matuvangla????
Pongada neengalum unga arsialum.........
Quote
 
 
+11 #13 annapatchi 2010-12-09 09:53
Pls. savukku, don't publish CBI officer's face, they will be troubled by some body.
Quote
 
 
+18 #12 Veeramani 2010-12-09 09:52
எனக்கு என்னமோ ராசாவ டீல்ல விட்டுட்டு மத்த எல்லோரும் எஸ்கேப் ஆயிடுவாங்கனு தோணுது.
Quote
 
 
+22 #11 ஊர்க்குருவி 2010-12-09 09:41
மஞ்சள் துண்டு தாத்தாவயும் வெசாரிக்கணும் ஏன்ன அவர்தானே ராசா நெரபராதின்னு சாதிச்சி தெசை திருப்புறாரு,
Quote
 
 
+4 #10 selvam 2010-12-09 09:35
There is no corruption with satik basa people who are there in real estate they can achieve ....

But what abt the Kanoimozhi and others house raid !???

Its very simple SATIK IS NOT HAVING SUCH A POWER.....?
Quote
 
 
+7 #9 சவுக்கின் விசிறி 2010-12-09 09:33
ராசா இன்னும் ஒரு அப்பாவி... இத்தனை சொத்து சுகம் இருந்தும், அவர் எளிமையாகவே இருந்தார்... பெரம்பலூரிலிருந ்து பஸ்சில் இறங்கி, பல்லவன் பஸ்சில் ஏறி, கோபாலபுரத்தில் முரசொலி மாறன் வீட்டுக்கு வந்ததை பார்த்த சாட்சிகள் இருக்கிறார்கள். அந்த அளவுக்கு எளிமையாக இருந்த ராசாவா இப்படி ஊழல் செய்வார்... அமைச்சர் எ.வ.வேலு வீட்டு எதிரே தனக்காக ஒரு பங்களா கட்ட ஆரம்பித்தார்... நீங்கள் எல்லாம் ஊழல் என்று கூப்பாடு போட்டதும்... அந்த வீட்டையும் கட்டாமல் பாதியில் நிறுத்திவிட்டார ்... இப்படிப்பட்ட ராசாவை பற்றி தவறாக எப்படி எழுத முடிகிறது...
Quote
 
 
+11 #8 சவுக்கின் விசிறி 2010-12-09 09:29
ஹலோ சவுக்கு... நீங்கள் ஏன் இப்படி அறை குறையாக விசாரிக்கிறீர்க ள்... ராசா என்ன பஞ்ச பரதேசியா... அவர் எந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியுமா... ஆங்கிலேயர் ஆண்ட காலத்திலேயே ஆண்டிமுத்து(அதா ங்க ராசாவோட நைனா) எங்கே இருந்தார் தெரியுமா? சென்னையில் போட் கிளப் அருகே 16 கிரவுண்ட் நிலத்தில் குடிசைப் போட்டு எளிமையாக வாழ்ந்த ஆண்டிமுத்து, பிற்காலத்தில் அதை விற்று, பெரம்பலூரில் பிழைக்கப் போனதாக ராசாவின் குடும்பத்தினர் சொல்கிறார்கள்... அதுமட்டுமா... ஊட்டியில் 300 ஏக்கர் என்பது, ஆண்டிமுத்துவின் அப்பாவும், பெரியப்பாவும் வாங்கிப் போட்ட சொத்துக்கள்... உத்தரபிரதேசத்தி ல் 500 ஏக்கர் நிலம் என்பது,,, ஆண்டிமுத்துவின் ஒன்று விட்ட சித்தப்பா வாங்கினாராம்... இப்படி பரம்பரை கோடிஸ்வரர்களான ராசாவை பற்றி எழுதும் போது, நீங்கள் விசாரிக்க வேண்டாமா?
Quote
 
 
+24 #7 Grishna 2010-12-09 08:54
சினிமாவில் உள்ளது போலவே நிஜமாகவே பாவாடை விக்கறவன் பாடி துணி விக்கிரவன்லாம் தொழிலதிபரா ஆகிடுறாங்களே... பட்டய கிளப்புங்க ராசா ஊர் துட்டுல உலகத்தயே பிளாட் போட்டு வித்துடுங்க
Quote
 
 
+3 #6 Elan 2010-12-09 08:21
enna savukku..

ippaellam manja paiyoda chennai vandhu thozlil (!@#$) adhipar aaguradhu romba rasi pola irukkuthu.. namma manja dhundu perusu appadithan vandharu..idhu theriyama naan velai thedi oru VIP suitcasea thukkittu vandhutaen...
Quote
 
 
+3 #5 rxvenugopal 2010-12-09 07:59
ivlo visayum ungalaku theriyudhu but tamil nadu makalai pathi unkaluku yen theriyalai, namba manikiramo illaiyo ana marathuruvom.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 115 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday50
mod_vvisit_counterYesterday13577
mod_vvisit_counterThis week57627
mod_vvisit_counterLast week95167
mod_vvisit_counterThis month279887
mod_vvisit_counterLast month382199
mod_vvisit_counterAll days13196254