|
தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் பதவியிலிருந்து ஆர்.கே.சந்திரமோகனை இடைநீக்கம் செய்வதற்கான உத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. உயர் நீதிமன்றத்தில் நீதிபதியை விரும்பத்தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்; இது நீதிமன்றத்தை அவமதித்ததோடு அல்லாமல், நீதியைச் செயல்படுத்துவதில் குறுக்கீடு செய்ததும் ஆகும் என்று இடைநீக்க உத்தரவைப் பிறப்பித்த நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற நீதிபதி ரகுபதி, தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ள தகவல், ஏற்கெனவே எதிர்க்கட்சிகளால் பேசப்பட்டவைதான் என்றாலும்கூட, இப்போது ஆதாரப்பூர்வமாக உயர் நீதிமன்ற நீதிபதி ரகுபதி அளித்துள்ள கடிதம், நடந்த சம்பவங்களை மிகத் தெளிவாக விவரிக்கிறது. வழக்குரைஞர் ஆர்.கே. சந்திரமோகன், நீதிபதியின் அறைக்கு வந்து, முன்ஜாமீன் கேட்கும் மனுதாரர் மத்திய அமைச்சருக்கு வேண்டியவர் என்பதால், இந்தக் குற்ற வழக்கில் முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறியதோடு, அமைச்சர் கைப்பேசி இணைப்பில் இருக்கிறார், பேசுங்கள் என்று கொடுத்ததாகவும், அதை நீதிபதி வாங்கிப் பேச மறுத்துவிட்டதாகவும் நீதிபதியின் கடிதத்தில் சொல்லப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில், நீதிபதி ரகுபதியிடம் சந்திரமோகன் குறிப்பிட்ட மத்திய அமைச்சர், தற்போது ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கியுள்ள ஆ.ராசா என்பதாக எல்லாரும் பேசினாலும், அதை ராசா மறுத்துள்ளார். உயர் நீதிமன்ற நீதிபதி ரகுபதி, அந்தக் கடிதத்தில் எனது பெயரைத் தெரிவிக்கவில்லை என்று கூறும் ராசா, நீதிபதியிடம் பேச நான் யாரையும் அனுப்பவில்லை என்றும் பேட்டியளித்துள்ளார். இப்போது அந்த அமைச்சர் யார் என்பதைக் காட்டிலும், ஓர் அமைச்சர் தன் சொந்தக் காரியங்களுக்கு நீதியை வளைக்க முடிகிறது என்கிற அப்பட்டமான உண்மைதான் இந்த வழக்கின் முக்கிய திருப்புமுனையாக இருக்கிறது. இதேபோன்ற சம்பவங்கள் ஒவ்வொரு நீதிபதியின் அறையிலும் நடக்கின்றன என்பதற்கு, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதாகத்தான் இதை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
உயர் நீதிமன்றத்திலேயே இந்த நிலைமை என்றால், மாவட்ட அளவிலான நீதிபதிகள் விவகாரத்தில் அரசியல் தலையீடு எந்த அளவுக்கு இருக்கும்? இதில் ஆளும்கட்சிக்கு நெருக்கமான வழக்குரைஞர்களும், அமைச்சர்களுக்கு நெருக்கமான வழக்குரைஞர்களும் எந்த அளவுக்கு நீதி பரிபாலனத்தில் குறுக்கிடுவார்கள் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.
நீதிபதியை தன் மனுதாரருக்காக வளைந்துபோகச் செய்யும் இத்தகைய முறைகேடான செயல்கள் நடைபெற முக்கிய காரணம், அரசு வழக்குரைஞர் என்றால் ஆளும்கட்சிக்கு வேண்டிய நபராகத்தான் இருக்க வேண்டும் என்கிற நிலைமை ஏற்பட்டதால்தான். மிகத் திறமையான வழக்குரைஞர், பல வழக்குகளைச் சிறப்பாக நடத்தி வெற்றிகண்டவர் என்கிற திறமையெல்லாம் கருத்தில் கொள்ளப்படாமல், ஆட்சியில் அமரும் கட்சிக்கு விசுவாசமான வழக்குரைஞர்கள் மட்டுமே மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் அரசு வழக்குரைஞர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
மேலும் ஒவ்வொரு கட்சியிலும் தனியாக வழக்குரைஞர் அணி இருக்கிறது. எந்தக் கட்சி ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் அந்தக் கட்சியின் வழக்குரைஞர் அணியில் உள்ளவர்களை காரியத்தைச் சாதிக்க வல்லவர்களாக மக்கள் கருதுவதும் மிக இயல்பானதாக இருக்கிறது.
இத்தகைய நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால், நீதித்துறையில் திறமையானவர்கள் மட்டுமே நீதிபதிகளாகவும், அரசு வழக்குரைஞர்களாகவும் அமர்த்தப்படும் நிலைமை உருவாக வேண்டும். யார் திறமையானவர்கள் என்பதை நிர்ணயிக்கும் பொறுப்பு நீதித்துறை வல்லுநர்களிடமே அளிக்கப்படுவதுடன், அதற்கான விதிமுறைகளும் வகுக்கப்பட வேண்டும். அத்தகைய நிலைமை உருவாகும்போதுதான், தன் வாதத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ள வழக்குரைஞர்கள் தங்கள் தகுதியால் பொறுப்பான பதவிகளுக்கு வருவார்கள். இத்தகைய அரசியல் குறுக்கீடுகளும், தீர்ப்பைச் சாதகமாக எழுதவேண்டும் என்கிற அன்பு வேண்டுகோள் அல்லது மிரட்டல் அல்லது நீதியை விலைக்கு வாங்கும் நிலை இல்லாது ஒழியும்.
நீதிபதிகள், அரசு வழக்குரைஞர்கள் போன்ற பதவிகள் இடஒதுக்கீடு மற்றும் அரசியலுக்கு அப்பாற்பட்டதாக இல்லாவிட்டால், இதுபோன்ற சம்பவங்கள் தொடரவே செய்யும்.
இந்தப் பிரச்னையில் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனின் தன்னிலை விளக்கம்தான் வேடிக்கையாக இருக்கிறது. அவர் தலைமை நீதிபதியாக இருந்தபோது, எந்த அமைச்சரும் எந்த ஒரு நீதிபதியிடமும் பேச முயற்சிக்கவில்லை என்று அடித்துச் சொல்லி, பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தது அவருக்கு மறந்துபோயிருக்கலாம். பத்திரிகைகளில் பதிவாகி இருக்கும் அவரது "நற்சான்றிதழ்' கே.ஜி. பாலகிருஷ்ணன் மீதான மரியாதையைத் தகர்க்கிறதே...
"பட்ட காலிலே படும்' என்பதுபோல முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் இருக்கின்றன. ஆனால், இந்தப் பிரச்னையைப் பொறுத்தவரை விதிவிலக்காக இருக்கும் அமைச்சர்களோ அரசியல்வாதிகளோ இருக்கிறார்களா என்பதே சந்தேகம்தான். தனது கட்சியின் மாவட்டச் செயலாளராக இருந்தவர் தேர்தலில் தோற்றவுடன் அவரை அரசு வழக்குரைஞராக்கி, பிறகு உயர் நீதிமன்ற நீதிபதியாக்கி நீதித்துறையில் அரசியலை நுழைத்த மாபாதகத்தைத் தொடங்கிவைத்த பெருமை தி.மு.க.வையும் இன்றைய முதல்வரையும்தான் சாரும். இப்போதைய அந்த விஷக்கிருமியின் பல்லுருவாக்கம் நீதித்துறையின் அடிப்படையையே அசைக்கத் தொடங்கிவிட்டது.
நீதிபதிகள் தங்கள் தீர்ப்பின் உரையில் குறிப்பிடும்போது, ""வழக்குரைஞர் என்ற போர்வையில் நீதிபரிபாலனத்தில் எந்தவொரு நபரும் குறுக்கிடுவதைக் கனவிலும் நினைத்துப் பார்க்கக்கூடாது'' என்று குறிப்பிட்டுள்ளதைப் பார்க்கும்போது, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நடித்த திரைப்பட பாடலில் (அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு) இடம்பெறும் வரிகள் மீண்டும் நினைவுக்கு வருகிறது:
நாணல் போல வளைவதுதான் சட்டம் ஆகுமா-அதை
வளைப்பதற்கு வழக்குரைஞர் பட்டம் வேணுமா? |
Comments
தோழர் தளவாய் அவர்களே நீங்கள் சொன்னதை கேட்டு சிங்கப்பூர் மலேசியா தென்னாப்ரிக்கா பிஜி தீவுகள் என்று பல தலைமுறைகளாக தமிழர்கள் லட்சக்கணக்கில் வாழும் நாடுகளிலிருந்து வந்தேறிகள் என்று தமிழர்களை விரட்டினால் வச்சி சாப்பாடு போடுகிறீர்கள பாஸ்?தமிழகத்தில் என்றுமே சாதியோ மதமோ இருந்ததில்லை இடையில் புகுத்தப்பட்டவை களை ஒழிப்பதில் கவனம் செலுத்துவோம் ஒரு துளி வரலாற்று உண்மை தெலுகு கன்னடம் மலையாளம் மூன்றும் தமிழில் இருந்து கிளைத்தவையே (tholkaapiyam)
I agree with you and support you.
இனிமேல் ஒருவார்த்தை தமிழனைப்பற்றி தவறாக பேசினால் செருப்பால் அடிப்பேண்டா ஆரிய-வடுக நாயே. பொட்டபயலே எங்கள் மண்ணில் இருந்துகொண்டு எம்மக்களையே கேவலமாக பேசுகிறாயா? உன் தாய் மொழி தெலுங்கு தானேடா ? தைரியம் இருந்தால் உன் மொழி மற்றும் இனம் என்னவென்று சொல்லுடா? நான் தமிழைத் தாய்மொழியாகக்கொ ண்ட தமிழன்டா.இனிமேலும் இப்படி தரக்குறைவாக பேசினால் செருப்பால் தாண்டா நாயே அடிவாங்குவாய்.தமிழன் மீது வசை பாடுவதை நிறுத்து.
1)POTTU KODUPATHU
2)KALAVARI VIDUVATHU
3)KAVUTHUVATHU
4)PORAMAI PIDICHAVAN
5)NAMBIKAI DUROGI
6)NANDRI KETTAVAN
7)KUDIKARAN
8)POMBALAI PORUUKI
9)PANATHUKAKA PINATHAYEA THINGIRAVAN
10)SOODU,SORANIA ,VEKKAM,MANAM
இனிமேல் ஒருவார்த்தை தமிழனைப்பற்றி தவறாக பேசினால் செருப்பால் அடிப்பேண்டா ஆரிய-வடுக நாயே. பொட்டபயலே எங்கள் மண்ணில் இருந்துகொண்டு எம்மக்களையே கேவலமாக பேசுகிறாயா? உன் தாய் மொழி தெலுங்கு தானேடா ? தைரியம் இருந்தால் உன் மொழி மற்றும் இனம் என்னவென்று சொல்லுடா? நான் தமிழைத் தாய்மொழியாகக்கொ ண்ட தமிழன்டா.இனிமேலும் இப்படி தரக்குறைவாக பேசினால் செருப்பால் தாண்டா நாயே அடிவாங்குவாய்.தமிழன் மீது வசை பாடுவதை நிறுத்து.
1)POTTU KODUPATHU
2)KALAVARI VIDUVATHU
3)KAVUTHUVATHU
4)PORAMAI PIDICHAVAN
5)NAMBIKAI DUROGI
6)NANDRI KETTAVAN
7)KUDIKARAN
8)POMBALAI PORUUKI
9)PANATHUKAKA PINATHAYEA THINGIRAVAN
10)SOODU,SORANIA ,VEKKAM,MANAM ILATHAVAN
சவுக்கு டுபுக்குனு நான் எழுதலாமா?
இது ஐரோபியகர்கள் பற்றிய பிரச்சனை அல்ல!எங்கள் வாழ்வியல் பிரச்சனயை திசைதிருப்ப வேண்டாம்! 500 தமிழ் மீனவர்கள் கொல்லப்பட்டபோது ம்,ஈழத்தில் தமிழ் இனமே அழிக்கபட்டபோதும ் தமிழக அரசும் மத்திய அரசும் தமிழர்களை அழிக்க உதவியது ஏன்?வடுக குசும்பு வேண்டாம்!!பொட்ட ுகட்டி கருணாநிதியையே போதும்!! ஐரோப்பிய நாடுகளிடம் உள்ள நீதி,நேர்மை உங்களிடம் உள்ளதா?
Quoting AADHISESHU:
இது ஐரோபியகர்கள் பற்றிய பிரச்சனை அல்ல!எங்கள் வாழ்வியல் பிரச்சனயை திசைதிருப்ப வேண்டாம்! 500 தமிழ் மீனவர்கள் கொல்லப்பட்டபோது ம்,ஈழத்தில் தமிழ் இனமே அழிக்கபட்டபோதும ் தமிழக அரசும் மத்திய அரசும் தமிழர்களை அழிக்க உதவியது ஏன்?வடுக குசும்பு வேண்டாம்!!பொட்ட ுகட்டி கருணாநிதியையே போதும்!! ஐரோப்பிய நாடுகளிடம் உள்ள நீதி,நேர்மை உங்களிடம் உள்ளதா?
are you agreed the thalavaai's concept ??. why do you allow him to post in all blogs ?. I think, is it appears for somebody's attention or will you have the same mentality. readers concepts must be in a readable manner ! not to be in irritating manner ! as the editor you have to be take care on it !
Quote
தமிழா,
பள்ளனாய், பறையனாய்,
நாடானாய், தேவனாய்,
வன்னியனாய், பரவனாய்,
பிள்ளையாய், கவுண்டனாய்,
மள்ளனாய், குயவனாய்......
வாழ்ந்தது போதும்.
வா - தமிழா
தமிழனாய் வாழ்வோம்.
வந்தேறி தெலுங்கன், கன்னடன், மலையாளி, மார்வாடி, ஆரிய பிராமணர், இவர்களிடம் இருந்து நம் தமிழ் நாட்டை காப்போம்.
"பக்கத்தில் உள்ளவன் சாதியை கேள், அவன் இனம் தெரியும்.
தமிழன் என்றால் தோள் கொடு, வந்தேறி என்றால், விரட்டி அடி "
''தமிழர்கள் சிறுபான்மையாக உள்ள இடங்களில் தாய்மொழி பற்றோடு இருக்கிறார்கள். பெரும்பான்மையாக உள்ள தமிழகத்தில் சீரழி்ந்த தமிழர்களாக இருக்கிறார்கள்!
வரலாற்றை புரட்டிப்பார்!வ டுக நாயக்கர் ஆட்சீலேதான் சாதி உருவாக்கப்பட்டு கட்டியமைக்கபட்ட து!தமிழனின் சொத்துக்கள் பிடுங்கப்பட்டு சேரியில் முடக்கப்பட்டான் .தெலுங்கு இனம் அதனை இன்னும் அனுபவித்து கொண்டிருக்கிறது ஆட்சி அதிகாரம் உட்பட.வந்தேறிகளுடன் வாழ முடியாது என்பதுதான் வரலாறு சுட்டும் பாடம்!
RSS feed for comments to this post