முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்தொடர்புக்கு
+++
புதிய தகவல்கள் அடங்கிய இசைப்பிரியாவின் படுகொலை போர்க்குற்ற காணொளி - சனல்4 அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 12
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
வியாழக்கிழமை, 09 டிசம்பர் 2010 15:40

 

ஊடகவியளாளரும் இசை, நடன கலைஞருமான இசைப்பிரியாவை சிங்கள இராணுவத்தினர் படுகொலை செய்த காட்சி ஒன்றை புதிய தகவல்களை உள்ளடக்கி சனல்4 இன்று வெளியிட்டுள்ளது.

சிறீலங்கா அரசு மீதான சுயாதீன போர்க்குற்ற விசாரணைக்கான கோரிக்கை வலுப்பெறும் வகையில் தாம் வெளியிட்டுள்ள காணொளிக் காட்சி அமைந்துள்ளதாக, முன்னணி போர்க்குற்ற சட்ட வல்லுனரின் ஆய்வுதவியுடன் பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

இன்று (புதன்கிழமை) இரவு 7:00 மணிச் செய்தியறிக்கையில் 8 நிமிடங்கள்வரை ஆய்வுச் செய்தியை வெளியிட்டுள்ள இந்தத் தொலைக்காட்சி, கடந்த வாரமும், அதற்கு முன்னரும் தாம் வெளியிட்ட காணொளிக் காட்சிகள் போர்க்குற்ற ஆதாரங்களாக அமையும் எனவும் கூறியிருக்கின்றது.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போரின்போது கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கானோரில் கடந்த வாரம் தாம் வெளியிட்ட காணொளியில் உள்ள இசைப்பிரியா என அழைக்கப்படும் (கொல்லப்பட்டபோது) 27 அகவுடைய சோபாவும் உள்ளடங்குவதாகவும், அதனை அவரது தோழிகளில் (9 வருடங்கள்) ஒருவரும், முன்னாள் போராளியும், தற்பொழுது லண்டனில் வசித்துவரும் கல்பனா உறுதிப்படுத்தியுள்ளதையும் கல்பனாவின் முகம் மறைக்கப்பட்ட செவ்வியுடன் இந்தத் தொலைக்காட்சி வெளிக்கொண்டு வந்திருக்கின்றது.

பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சி வெளியிடும் இவ்வாறான காணொளிச் சாட்சிகளை சிறீலங்கா அரசு தொடர்ச்சியாக மறுத்து வருகின்ற போதிலும், கடந்த பல மாதங்களிற்கு முன்னர் தாம் வெளியிட்ட இளைஞர்கள் வரிசையாகச் சுட்டுக்கொல்லப்படும் காட்சியை ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புத் தூதுவர் பிலிப் அல்ஸ்ரன் ஆய்வு செய்து, அது உண்மையான காணொளி எனக் கூறியிருந்ததையும் இந்தத் தொலைக்காட்சி அடிக்கடி நினைவூட்டுவதுடன், ஏனைய பல சட்ட மற்றும் போர்க்குற்ற வல்லுனர்களின் ஆய்வுக் கருத்துக்களையும் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றது.

இசைப்பிரியா தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகம், மற்றும் தொடர்பாடல் பிரிவில் பணியாற்றிய ஒரு முக்கிய போராளி எனவும், இவர் போரிடும் படைப் பிரிவை சார்ந்தவர் அல்ல எனவும் சுட்டிக்காட்டும் இந்தத் தொலைக்காட்சி, அதற்கு அவரது நண்பியான நேரடிச்சாட்சி கல்பனாவின் கருத்துப் பகிர்வையும் அளித்திருக்கின்றது.

இதேவேளை, லெப்ரினன்ட் கேணல் தரத்திலுள்ள இசைப்பிரியா என்பவர் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தலைமையிலான 53வது படையணியினால் கடந்த மே மாதம் 18ஆம் நாள் கொல்லப்பட்டிருப்பதாகவும், இவர் நேரடிச் சண்டையிலே தம்மால் கொல்லப்பட்டதாகவும் சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் கடந்த மே மாதம் செய்தி வெளியிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டும் இந்தத் தொலைக்காட்சியின் வெளிவிவகாரச் செய்தியாளர் ஜொனதன் மில்லர், அவ்வாறு போரிடும்போது கொல்லப்பட்டிருந்தால், ஏன் இசைப்பிரியாவின் கைகள் பின்புறம் கட்டப்படுள்ளது எனவும், நிர்வாணப்படுத்தப்பட்ட நிலையில் அவரது உடலம் காணப்படுவதையும் குறிப்பிடுகின்றார்.

இருதய நோய் காரணமாக மருத்துவ ஆலோசனைக்கு இணங்க இசைப்பிரியா போரிற்கு செல்வதில்லை எனவும், அவர் விடுதலைப் புலிகளின் ஊடகங்களில் பணியாற்றியவர் எனவும், ஊடகவியலாளரான இவர் நடனம், நாடகம், பாட்டு போன்ற பல்துறை வல்லுனர் எனவும் அவரது நண்பியை ஆதாரம்காட்டி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன், இசைப்பிரியா தமிழீழ தேசிய தொலைக்காட்சியில் செய்தி வாசித்த காணொளிக் காட்சியையும் ஒளிபரப்பியுள்ள சனல்-4, அவர் கரும்புலிகள் பற்றிய பாடலுக்கு நடிக்கும் காட்சியையும் தனது செய்தியறிக்கையில் இணைத்துள்ளது.

கடந்த வாரம் காணொளி வெளியிடப்பட்டது போன்று இவ்வாரமும் முன்னணி போர்க்குற்ற சட்ட வல்லுனரின் கருத்தைப் பதிவு செய்துள்ள பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சி, மெட்றிக் சம்பேர்ஸ் எனப்படும் அமைப்பின் போர்க்குற்ற சட்ட வல்லுனர் ஜீலியன் நொவெல்ஸிற்கு இந்தக் காணொளிகளைக் காண்பித்தபோது, அவை மிக முக்கிய போர்க்குற்ற ஆதாரங்கள் எனவும், இந்தப் போர்க் குற்றம் புரிந்தவர்கள் நிச்சயம் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியதையும் ஒளிபரப்பி இருக்கின்றது.

போராளியான இசைப்பிரியா விடுதலைப் புலிகளின் தளபதி ஒருவரை திருமணம் முடித்திருந்தார். இவர்களது 6 மாதக் குழந்தையையும் வன்னியில் இடம்பெற்ற இறுதிப்போரில் பறிகொடுத்திருந்த நிலையில், இசைப்பிரியாவை சிறீலங்கா படையினர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி மிகக்கொடுரமாகப் படுகொலை செய்திருப்பதாக நம்பப்படுகின்றது.

 

Comments  

 
0 #20 திராவிடஅரிச்சந்திரன் 2010-12-15 12:08
நாங்கள் ஏமாற என்ன தி.க.,தி.மு.க.,போன்ற கட்சி தொண்டரா?அல்லது வடுக வந்தேறி பொட்டுகட்டி தொண்டரடி பொடியரா?காமராஜரை என்ன செய்தீர்கள் என்பது தெரியும்!அவர் தமிழர் என்ற காரணத்துக்காகவே அவரை சீனிவாசன்என்ற தெலுங்கனை கொண்டு எல்ல வந்தேறி வடுக கூடமும் தோற்கடித்தது!கர ்நாடகத்தில்,ஆந் திராவில் மராடியத்தில்,கே ரளத்தில்....எங்குமே தமிழனுக்கு எந்த உரிமையும் கிடையாது!இங்கு மட்டும் என்னடா?எல்லாருக்கும் உரிமை?
தடாவுக்கு முதலில் வாக்களித்தது யார்?வடுக வந்தேறி வை.கோ.உங்கள் வடு கூத்துகளும்,விள ையாடுகளும் முடிந்தபின் அது தமிழ் உணர்வாக தமிழர் தலையில் கட்டபட்டு தமிழர் நலனும் தமிழ் இனமும் அழிக்கபட்டது!அழ ிக்கப்படுகிறது! !
Quote
 
 
+2 #19 திராவிடஅரிச்சந்திரன் 2010-12-15 12:07
இப்போ ஆளும் கருணாநிதி யார்?வந்தேறி வடுக பொட்டுகட்டி தெலுங்கன் தானே?தமிழரை தவிர தமிழ் நாட்டில் இருக்கும் தெலுங்கன்,கன்னட ன்,மலையாளி,(தமி ழ் பேசினாலும் வந்தேறிகளே)எல்ல ாம் வடுகரே!வந்தேறிக ளே.யார் ஆரியன்?பிராமணனா?தெலுகு,கன்னடம், மலையாளம்,மராட்ட ி,குஜராத்தியை ...இன்னும் பிற மொழிகளை தாய் மொழியாக கொண்ட பிராமணர்லாம் ஆரியரா? வடுகரும்,வடவரும ே!கன்னட வந்தேறி ராமசாமி நாயக்கன்(பெரியா ர்-அழைக்கப்பட தகுதியற்றவன்)பு னைந்த மாயை,பொய், புனைசுருட்டெல்ல ாம் உலகுக்கு வெளிப்படும் காலம் இது!
வரலாற்றை புரட்டிப்பார்!வ டுக நாயக்கர் ஆட்சீலேதான் சாதி உருவாக்கப்பட்டு கட்டியமைக்கபட்ட து!தமிழனின் சொத்துக்கள் பிடுங்கப்பட்டு சேரியில் முடக்கப்பட்டான் .தெலுங்கு இனம் அதனை இன்னும் அனுபவித்து கொண்டிருக்கிறது ஆட்சி அதிகாரம் உட்பட.வந்தேறிகளுடன் வாழ முடியாது என்பதுதான் வரலாறு சுட்டும் பாடம்.ந ிச்சயம் வந்தேறி வடுக இனம் தமிழர் நாட்டிலிருந்து வேரோடும் ,வேர் அடி மண்ணோடும் பிடுங்கப்படும்! இது உறுதி!!!,
Quote
 
 
0 #18 sivakumar.j 2010-12-14 13:02
Oru naal indha madiri karpallipu rajapagsay magallukum nadakkum
Quote
 
 
+7 #17 gobu thevan 2010-12-12 15:33
நம்முள் பிளவுகள் இருக்கும் வரை மாற்றான் தமிழகத்தை ஆளும் நிலை நீடிக்கும். பள்ளனோ, பறையனோ வன்னியனோ, தேவனோ எவன் ஆண்டாலும் தமிழன் ஆள்கிறான் என்ற எண்ணம் தமிழனுக்கு வர வேண்டும்.. இங்கே உள்ளவனிடம் பொறாமை கொண்டிருந்தால் நம்மை வந்தேறிதான் ஆள்வான். தினமலர் ஹிந்து போன்ற தமிழின துரோக பத்திரிகைகள் எல்லாம் ராஜபக்சே சொல்வதை எழுதும் துணிவை பெறுவார்கள். நாம் விழித்து கொள்ள வேண்டும் இப்போதே..எந்த துறையில் துறையில் இருந்தாலும் தமிழன் என்றால் ஆதரவு நல்க வேண்டும் நாம்..
Quote
 
 
+1 #16 rajkumar 2010-12-11 21:09
ulaka nadukal por kutravali kolaiveriyan rajapeksa vai por kutravalitaka arivithu sadam usenai pol thukilada vendum
Quote
 
 
+2 #15 karthik 1288 2010-12-11 15:04
no channels in tamil nadu shown anything about thz matter but an england english channel 4 shown thz.this shows how our channels are
Quote
 
 
0 #14 ஈ வெ ரா 2010-12-11 12:13
ஐநாவிடம் போர்குற்ற ஆதாரங்கள் சமர்பிக்க டிசம்பர் 15 கடைசி நாள்.
Quote
 
 
+4 #13 MarathamilanBhopathy 2010-12-11 11:38
வெட்கி தலைகுனிகிறேன்,ந ான் என் ஈழச்சகோதரிகளை,க ாக்க முடியாத தமிழன்...இந்த கொடுமை நிகழ்ந்த பொது இங்கு செம்மொழி மாநாடு சிறப்பாய் நடைபெற்றது...
Quote
 
 
+4 #12 தளவாய் தமிழர் களம் 2010-12-11 11:21
நான்தமிழன்.திராவிடன்அல்ல.
தமிழா,
பள்ளனாய், பறையனாய்,
நாடானாய், தேவனாய்,
வன்னியனாய், பரவனாய்,
பிள்ளையாய், கவுண்டனாய்,
மள்ளனாய், குயவனாய்......
வாழ்ந்தது போதும்.
வா - தமிழா
தமிழனாய் வாழ்வோம்.
வந்தேறி தெலுங்கன், கன்னடன், மலையாளி, மார்வாடி, ஆரிய பிராமணர், இவர்களிடம் இருந்து நம் தமிழ் நாட்டை காப்போம்.
"பக்கத்தில் உள்ளவன் சாதியை கேள், அவன் இனம் தெரியும்.
தமிழன் என்றால் தோள் கொடு, வந்தேறி என்றால், விரட்டி அடி "
''தமிழர்கள் சிறுபான்மையாக உள்ள இடங்களில் தாய்மொழி பற்றோடு இருக்கிறார்கள். பெரும்பான்மையாக உள்ள தமிழகத்தில் சீரழி்ந்த தமிழர்களாக இருக்கிறார்கள்!

வரலாற்றை புரட்டிப்பார்!வ டுக நாயக்கர் ஆட்சீலேதான் சாதி உருவாக்கப்பட்டு கட்டியமைக்கபட்ட து!தமிழனின் சொத்துக்கள் பிடுங்கப்பட்டு சேரியில் முடக்கப்பட்டான் .தெலுங்கு இனம் அதனை இன்னும் அனுபவித்து கொண்டிருக்கிறது ஆட்சி அதிகாரம் உட்பட.வந்தேறிகளுடன் வாழ முடியாது என்பதுதான் வரலாறு சுட்டும் பாடம்!
Quote
 
 
+1 #11 K.Veeramani 2010-12-10 13:16
இறைவா, நெஞ்சு பொறுக்குதில்லைய ே...தமிழினமே சபிக்கப்பட்ட இனமா நீ??
Quote
 
 
0 #10 Annadurai 2010-12-10 11:41
entha mathiyana kodumai, ELATAMIL PADU KOLAIKU KARANAMANAN VEETIL NADAKKANUM,
Quote
 
 
0 #9 Annadurai 2010-12-10 11:39
unmaiya veliyel sonn a ungaluki parattukkal
Quote
 
 
+4 #8 prabakaran 2010-12-10 05:36
ஓட்டு, நோட்டு, சீட்டு இது மூன்றையும் கிடைக்கும் என்றால் அந்த அரசியல் வியாதிகள் தனது பெண் இப்படி செத்தாலும் கவலை பட மாட்டார்கள்
Quote
 
 
+5 #7 பாலாசி 2010-12-10 01:21
இந்த காம வெறி பிடித்த மிருகங்களுக்கு அவர்கள் அக்க தங்கை அவர்களுக்கு இது போல நடந்தால் தெரியும் . உடனடியாக அந்த இன வெறி மிருகத்தை கைது செய்ய வேண்டும் ,
Quote
 
 
+5 #6 ம.பொன்ராஜ் 2010-12-09 23:00
Quoting விமலன்:
பதவி ஆசை பிடித்த ஈன பிறவிகளின் குடும்ப பெண்களுக்கு இதுபோன்று நேரும்போதுதான் இந்த வலி புரியும்.

ஓட்டு, நோட்டு, சீட்டு இது மூன்றையும் கிடைக்கும் என்றால் அந்த அரசியல் வியாதிகள் தனது பெண் இப்படி செத்தாலும் கவலை பட மாட்டார்கள்.
Quote
 
 
+6 #5 விமலன் 2010-12-09 21:49
பதவி ஆசை பிடித்த ஈன பிறவிகளின் குடும்ப பெண்களுக்கு இதுபோன்று நேரும்போதுதான் இந்த வலி புரியும்.
Quote
 
 
0 #4 kadavul 2010-12-09 20:22
enapadukolaiyai kadavul seyalodu oppiduvathum,od ukkumuraikku ethiraha poradubavargala i thavaruseithava rgal enbathu esaipiriyavirku neritiruppathu thandanai endru kooruvathun entha kodumayailum eppadi arasiyal eluthuvathu oru mana noyaliyal mattuma mudiym. predhipa oru mananoyali enbathai ethan moolam nirubikkirae
Quote
 
 
0 #3 selvam 2010-12-09 20:11
no video please take backup of the videos always....
Quote
 
 
+5 #2 pradheep 2010-12-09 18:16
இறைவா... இதற்கு பதில் நீ இந்த உலகம் முழுவதையுமே அழித்து இருக்கலாம்..எவரோ செய்த தவறிற்கு அப்பாவிகள் தண்டனை அனுபவிகின்றனர்.. இன்னும் இதைவைத்து அயோக்கியர்கள் அரசியல் செய்வதுதான் கொடுமை..
Quote
 
 
+4 #1 nsk 2010-12-09 16:26
eithai veliyeel prappuvathe en kadamai
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 193 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday11615
mod_vvisit_counterYesterday13443
mod_vvisit_counterThis week36845
mod_vvisit_counterLast week95167
mod_vvisit_counterThis month259105
mod_vvisit_counterLast month382199
mod_vvisit_counterAll days13175472