முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
ஆங்கிலப் பேராசிரியர் ஜாபர் சேட். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 14
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
புதன்கிழமை, 15 டிசம்பர் 2010 23:13
 

என்னடா இது…. ஜாபர் சேட் ஒரு ஐபிஎஸ் அதிகாரி என்பது தெரியும். உளவுத்துறையின் தலைவர் என்பது தெரியும். கருணாநிதியின் கைக்கூலி என்பது தெரியும். கோபாலபுரத்தின் கோயபல்ஸ் என்பது தெரியும், இது என்னடா புதிதாக…. ஆங்கிலப் பேராசிரியர் பட்டம் என்று உங்களுக்கெல்லாம் ஆச்சர்யமாக இருக்கும்.

 Jaffar_Sait_2

ஒரு நபருக்கு ஆங்கிலத்தில் புரியாத ஒரு விஷயத்தை தமிழில் விளக்கி அவருக்கு புரிய வைக்கும் நபரை ஆங்கிலப் பேராசிரியர் என்று அழைத்தால் என்ன தவறு ?

 

அப்படி விளக்கிப் புரிய வைத்ததால் தான் ஜாபர் ஆங்கிலப் பேராசிரியர் என்று அழைக்கப் படுகிறார்.   இவர் மட்டும் அல்ல, ஆக்ஸ்போர்ட்டு பல்கலைகழகத்திலே, ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற்ற இன்னொருவரும் ஆங்கிலத்தில் உள்ளதை தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். அவர் யாரென்றால் மதுரை மாநகரிலே உள்ள “பொட்டு சுரேஷ்“.

 

இருவரும் யாருக்கு ஆங்கிலத்தில் உள்ளதை தமிழில் மொழி பெயர்த்தார்கள் தெரியுமா ? அஞ்சா நெஞ்சன் அழகிரிக்குத் தான். அழகிரிக்கு ஆங்கிலம் தெரியாது என்பது டெல்லியில் உள்ள பாராளுமன்றத்தை பாதுகாத்துக் கொண்டிருக்கும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை காவலருக்குக் கூட தெரியும். ஆனால் இந்த அளவுக்கு மங்குணியாக இருப்பார் என்று நினைக்கவேயில்லை.

 

இந்த சம்பவங்கள் அனைத்தும், “எங்கேயோ கேட்ட குரல்“ பூங்கோதை உரையாடலை ஒட்டி நடைபெற்றவை.   பூங்கோதை அழகிரியை நம்பவைத்து கழுத்தறுக்கும் அரசியல்வாதி என்று சொன்னதை ஒட்டி, முதலில் அழகிரி கோபப் பட்டிருக்கிறார்.

 

ஆனால் உடனடியாக களத்தில் குதித்த பேராசிரியர் ஜாபர் சேட், அழகிரியை தொடர்பு கொண்டு பூங்கோதை உங்களைப் பற்றிப் பேசவில்லை, டெல்லி அரசியல்வாதிகளைத் தான் அவ்வாறு சொல்லியிருக்கிறார் என்று கூறியிருக்கிறார். உடனே ஆக்ஸ்போர்டு பேராசிரியர் பொட்டு சுரேஷ் “ஆமான்ணே… அந்த அம்மா உங்களச் சொல்லலண்ணே“ என்று ஒத்து ஊதியிருக்கிறார்.

 pottu_amman

இந்த விவகாரத்தில் உண்மை என்ன என்று சவுக்கு வாசகர்களுக்கு நன்கு தெரியும். இருப்பினும், அந்த உரையாடலில் முக்கிய பகுதிகள் மறுபிரசுரம் செய்யப் படுகின்றன.

 

நீரா            எனக்குத் தெரிந்த வரை, அவர் அழகிரியோடு நட்பாக பழகவேண்டும் என்று நினைக்கிறேன். அவர் இதைச் செய்வதற்கு நீங்கள் அவரை ஊக்கப் படுத்த வேண்டும். ஏனென்றால், அழகிரியால் டெல்லியில் ரொம்ப நாளைக்கு தாக்குப் பிடிக்க முடியும் என்று தோன்றவில்லை.

 

பூங்கோதை          அப்படியா நினைக்கிறீர்கள் ?

 

நீரா                 அவருக்கு அதற்கான தகுதிகள் இல்லையென்றே நினைக்கிறேன்.

 

பூங்கோதை.         இல்லை. இல்லை. நீங்கள் அவரை குறைத்து மதிப்பிடுகிறீர்கள்.

 

நீரா                 யோசித்துப் பாருங்களேன்….

 

பூங்கோதை          அவர்களெல்லாம் நம்பவைத்து கழுத்தை அறுக்கக் கூடிய அரசியல்வாதிகள்.

 

நீரா            எனக்குப் புரிகிறது. புரிகிறது.   அதனால்தான் அவர் தமிழ்நாட்டில் இருப்பதைத் தானே விரும்புவார். எதற்கு இங்கே இருக்க வேண்டும் ?

 

பூங்கோதை     அவருக்கு ஏற்கனவே மதுரையை விட்டு இருக்க பிடிக்கவில்லை. நான் திரும்பிப் போக வேண்டும், திரும்பிப் போக வேண்டும் என்றுதான் கூறிக் கொண்டு இருக்கிறார்.

 

இதில் பூங்கோதை அழகிரியைச் சொல்லுகிறாரா டெல்லி அரசியல்வாதிகளை சொல்லுகிறாரா என்பதில் என்ன சந்தேகம் ?

 

இந்த பொட்டு சுரேஷ் இவ்வாறு ஜாபருக்கு ஒத்து ஊதுவதற்கான காரணம் என்ன தெரியுமா ?

 

டெல்லி எருமை போன்ற ஜெயஸ்ரீ என்ற பெண் எஸ்பி ஒருவர் மதுரையில் உள்ளார்.   அவர் உணவுக் கடத்தல் பிரிவு எஸ்.பி யாக இருந்த போது, லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய சோதனையின் போது மாமூல் வசூல் செய்து மாட்டிக் கொண்டார்.   இவருக்கு எதிராக ஏராளமான ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத் துறை கைப்பற்றியது. இந்த வழக்கை இசக்கி ஆனந்தன் என்ற ஒரு நேர்மையான அதிகாரி விசாரித்தார்.

 

பொட்டு சுரேஷ் ஜாபர் சேட்டை அணுகி, ஜெயஸ்ரீ மீதான வழக்கை ஊத்தி மூட உதவுமாறு கேட்க, அதன் படியே, இசக்கி ஆனந்தன் லஞ்ச ஒழிப்புத் துறையை விட்டு மாற்றப் பட்டார்.   அழகிரியே நேரடியாக இதில் தலையிட்டதாகவும் கூறுகிறார்கள்.

 

இந்த உதவியை செய்து கொடுத்த பிறகு பொட்டு சுரேஷ் ஏறக்குறைய ஜாபரின் அடிமையாகவே மாறி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

எதற்காக பொட்டு சுரேஷ் ஜெயஸ்ரீக்காக இத்தனை முயற்சிகள் எடுக்க வேண்டும் என்பது பதிவில் எழுத முடியாத ரகசியம். (ஆனாலும் நீங்கள் கண்டு பிடித்து விட மாட்டீர்களா என்ன ?)

 

அவ்வப்போது பொட்டு சுரேஷ் அழகிரியிடம், ஜாபரு ரொம்ப நல்லவரு, வல்லவரு, என்று எடுத்துக் கூறினார்.

 

அழகிரியும் தற்போது மாறன் சகோதரர்களுடன் அதிக நெருக்கம் பாராட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

மதுரையில் ராயல் கேபிள் விஷனும், சென்னையில் ஜாக் கம்யூனிக்கேஷன் என்ற நிறுவனமும் அழகிரியால் துவக்கப் பட்டதை அறிவீர்கள். இந்த இரண்டு நிறுவனங்களும் வளர்ந்தால், சுமங்கலி கேபிள் விஷனுக்கு மிகுந்த ஆபத்து என்பதை உணர்ந்த கேடி சகோதரர்கள், உடனடியாக கருணாநிதி குடும்பத்தின் நீரா ராடியாவான செல்வியை அணுகுகிறார்கள்.

 alagiri_

செல்வி தரகராக இருந்து செயல்பட்டு, அழகிரிக்கு 1200 கோடி ரூபாய் பெற்றுத் தந்ததாகவும், இதையடுத்து, அழகிரி, கேடி சகோதரர்களோடு மிகுந்த நட்பாகி விட்டதாகவும் கூறுகிறார்கள். இதை ஒட்டியே, தயாநிதி மாறனின் பிறந்த நாளுக்கு, அழகிரி நேரில் வந்து வாழ்த்து சொன்னார் என்றும் கூறுகிறார்கள்.

 

இப்படி ஜாபர் சேட்டும், பொட்டு சுரேஷும் சேர்ந்து அழகிரிக்கு ஆங்கிலப் பாடம் எடுத்ததால், அழகிரி பூங்கோதை மீது கோபப் படவில்லை.

 

இரண்டு நாட்களுக்கு முன், கருணாநிதி ஏலகிரியில் ஓய்வு எடுக்க சென்ற போது, ஜாபரை தொலைபேசியில் அழைத்த அழகிரி, “அப்பா ஏலகிரி போறாராமே… ? அந்த அம்மா பேசுனதுக்கு நானே கோபப் படல… இவரு எதுக்கு கோவிச்சுகிட்டு ஏலகிரி போறாரு ? “ என்று கேட்டுள்ளார்.

 

இப்போது சொல்லுங்கள், ஜாபர் சேட் ஆங்கிலப் பேராசிரியர் தானே ? 

 

Comments  

 
0 #40 barath 2011-02-11 14:07
இந்த பேரத்தின் போது பவுடர் எஸ்.எல்.எஸ் - ன் மூலம் தனக்கு ஆதாரம் கிடைத்துள்ளதாவு ம் ஜீனியர் விகடனில் போடாமல் இருக்க வேண்டும் என்றால் அவர்கள் கேட்ட பணத்தைகொடுத்து விடுங்கள் சுரேஷ் மிரட்டியுள்ளான் . மிரட்டலுக்கு பெண்ணின் தந்தை பணியவில்லை என்றவுடன், இவர்களாக ஒரு கடிதம் எழுதி வைத்துகொண்டு அதை போலீசில் கொடுக்காமல் ஜுனியர் விகடனில் போட்டனர். கடைசியில் பார்த்தால் அது இறந்தவனின் அண்ணன் பாண்டியராஜன் எழுதிய பொய் லெட்டர், இந்த ஐடியாவை கொடுத்தது. நம்ம மாமா சரவணன் மைத்துனர் சுரேஷ். இப்பொழுதும் வழக்கை வாபஸ் வாங்க சொல்கிறேன் அவரகள் கேட்ட பணத்தை கொடுங்கள் என சுரேஷ் பேரம் பேசி வருகிறான். என்ன கொடுமை பாருங்கள். சவுக்கில் இந்த கிழிகிழி கிழித்தும் அவன்கள் திறுந்தவில்லை. இந்த விபரங்கள் அனைத்தையும் கடிதமாக எழுதி பெண்ணின் உறவினர் ஒருவர் தமிழகத்தின் அனைத்து மாவட்ட நிருபர்களுக்கும ் அனுப்பி தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர் மாவட்டங்களில் மிக கேவலமாக பார்க்கின்றனர். ஆனால் சுரேசுக்கு கொஞ்சமும் வெட்கம் இல்லை . காசுக்காக அக்காவையே கூ. . . கொடுத்த மாமாபைய இவனுக்கு என்ன கூச்சம் இருக்க போகிறது. . .
Quote
 
 
0 #39 barathi 2011-02-11 14:07
பட்டுக்கோட்டையி ல் பணக்கார வீட்டு பெண் ஒருத்தியை டிக்கடையில் வேலை பார்க்கும் ஒருவன் ஒரு தலையாக காதலிக்கின்றான் . பெண்ணின் தந்தைக்கு தெரிந்து அவனை கண்டிக்கிறார். இந்த விஷயம் தெரிந்த உடன் அந்த பையனின் அண்ணனை அழைத்த நம்ம மாமா சரவணனின் மைத்துனர் சுரேஷ், அந்த பெண்ணின் தந்தையிடம் 10 லட்சம் கேட்டு மிரட்ட சொல்கிறான். அவனும் நடகைகளின் பெரும் புரோக்கர் நம்பி புகழேந்தியின் மைத்துனர் பவுடர் எஸ்.எல்.எஸ் சிவக்குமாரின் மூலம் கரம்பயம் கஞ்சா ஆன்ந்த், திருநெல்லூர் அய்யர் ஆகியோரின் மூலம் பெண்ணின் தந்தையிடம் 10 லட்சம் பணம் கேட்டு மிரட்டுகிறான். பெண்ணின் தந்தை முடியாது என கூறிவிடுகிறார். இந்த நேரத்தில் திருப்பூரில் வேலை பார்த்த அந்த ஒருதலைக்காதலனை வரவழைத்து களவானி படத்தில் வருவது போல விசம் குடித்ததாக மிரட்டுவோம் , அவன் பயந்து பெண்ணை கொடுத்து விடுவான் என கூறி நாடகம் ஆடுவது போல அந்த பையனின் அண்ணன் பாண்டியராஜன் என்பவன் மூலம் உண்மையான விசத்தை பொய் என கூறி குடிக்கவைத்து, பட்டுக்கோட்டை மருத்துவமனையில் சேர்ப்பதற்குள் பாவம் அந்த பையன் இறந்து விடுகிறான். இந்த சம்பவத்தையும் தனக்கு சாதகமாக பயண்படுத்தி கொண்ட இந்த கும்பல் நம்பி புகழேந்தியின் வாடிக்கையாளரான டி.ஐ.ஜி., திருஞானத்தின் மூலம் நேர்மையான அதிகாரி என பெயர் எடுத்த எஸ்.பி., செந்தில் வேலனக்கு உத்தரவிட செய்து, பெண்ணின் தந்தை உட்பட அப்பாவிகள் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு போட்டுள்ளனர். ஒப்புக்கு அய்யர் பெயரையும் சேர்த்துள்ளனர்.
Quote
 
 
0 #38 teddy 2010-12-30 18:35
why dont u carryout about pottu suresh and madurai city police IS AC kumaravelu, THEY ARE EARNING, SORRY THEY ARE LOOTING LOT OF CRORES BY CHEATING THE POOR, HELPLESS, NON SUPPORT OF RULING PARTY PEOPLE. PLEASE BRING OUT THEIR ATROCITY AND EARNINGS.
Quote
 
 
0 #37 கவிஞர் கண்ணதாசன் 2010-12-17 10:06
"a Hindu means a thief""Rama was a drunkard" என்று சொன்ன கருணாநிதி ஏன் அப்படி சொன்னார் என்று இப்போ புரிகிறது. ஜகத் கஸ்பர் மாதிரி போலிப் பாதிரி சொல்ல சொன்னார்கள் போல. மேலும் கருணாநிதி குடும்பம் இப்படி கொள்ளை அடித்தது வெளியேவர ராமச்சந்திர மூர்த்திஇன் அருள்தான் காரணம்.
Quote
 
 
+1 #36 Nellai 2010-12-16 23:29
சவுக்கு தனது கொள்கை என்ன என்று தெளிவாக வெளிடவேண்டும் ஊழல் எதிர்ப்பா அல்லது கருணாநிதி மற்றும் அவரை சார்த்தவர்களை மட்டும் எழுதுவதா
Quote
 
 
0 #35 Nellai 2010-12-16 23:28
சவுக்கு தனது கொள்கை என்ன என்று தெளிவாக வெளிடவேண்டும் ஊழல் எதிர்ப்பா அல்லது கருணாநிதி மற்றும் அவரை சார்த்தவர்களை மட்டும் எழுதுவதா.
Quote
 
 
-2 #34 dmk 2010-12-16 23:24
http://shanthibabu.blogspot.com/2010/12/blog-post_15.html
Quote
 
 
0 #33 Not Needed 2010-12-16 22:26
Do you know what is the link Palanimanickam has in this tape coming out?
Quote
 
 
+3 #32 குசும்பன் 2010-12-16 21:11
தோழர்களே! தளவாயாக இருக்கட்டும், தம்பித்துரையாக இருக்கட்டும், திரா அரிச்சந்திரனாக இருக்கட்டும், கருணாவை காய்ச்சி காயப்போடுங்கோ, அழகிரி மாமாவ காய்ச்சுங்கோ,ஜப ார் ஷேட்ட தோய்ச்சு காயப்போடுங்கோ, என்ன பேர் அதுதான் கர்மம் குருமாராஜை வத்தல் போடுங்கோ, சூனியம் கசுப்பரை கண்டமாத்திரத்து க்கு கமண்ட் பண்ணுங்கோ, குஞ்சாமணியை குலைக்க விடாதயுங்கோ,கனி யயும் காரணத்தோடு விமர்சியுங்கோ ராசாவ ரவுண்டுகட்டுங்க ோ, ஆனால் எங்களுக்குள்ள சண்டை வேண்டாம் ஒற்றுமையாய் துரோகிகளை ஒழிப்போம், "இப்படை தோற்கின் எப்படை எப்போ வெல்லுவது,உறுதி உறுதி உறுதி,
Quote
 
 
+5 #31 பாமரன்.. 2010-12-16 20:29
தமிழன் செத்துக்கொண்டிர ுகிறான், தமிழச்சி கற்பை இழந்து இறக்கிறாள்.. ஆனால் நாம் "மானாட மயிலாட" பார்ப்போம். எல்லா நாடகங்களையும் பொறுமையாக பார்ப்போம். எல்லாம் அரசு பார்த்துக்கொள்ள ும். அடே.. பதர்களே, நமக்கும் ஒருநாள் இதே நிலைதான். இன்று இராமேஸ்வரம் தமிழனை காப்பாற்ற முடியாத இவர்கள் எப்படி ஈழ தமிழனை காப்பாற்றுவார்க ள்.? தமிழக அரசே.. இராமேஸ்வரம் தமிழன் வதைபடும் ஒவ்வொரு நாளும் உனக்கு வெட்ககேடான நாளே..இனி ஒருமுறை தமிழன் தாக்கப்பட்டு நீ வேடிக்கை பார்த்தால் அன்று முதல் நீ சேலை கட்டிக்கொண்டு ஆட்சிநடத்து..
Quote
 
 
+6 #30 பாமரன்.. 2010-12-16 20:28
லண்டனில் பல்லாயிரக்கணக்க ான தமிழர் ஒன்று கூடி இழி பிறவி, வெறிபிடித்த, புழுவைவிட கேவலமான, அயல் நாடுகளிடம் பிச்சை எடுத்து உண்ணும் ராஜபக்சே வை விரட்டி அடித்தனர். ஆனால் நாம் என்ன செய்தோம்.. ? அந்த நாய் தமிழ் நாடு வந்தால் கூட இங்கே சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் கூட்டம் உள்ளது. நாம் போராட மாட்டோம். போராடும் யாருக்கும் ஆதரவு கொடுக்க மாட்டோம். நம்முடைய அன்றாட வேலைகள் கெட்டு விடக்கூடாது என்று பயம் கொள்வோம்.. தமிழ் நாட்டிலே ஒரு கூட்டம் இருக்கிறது.. யாருக்கு என்ன நடந்தால் என்ன நாம் நன்றாக இருந்தால் சரி.. எந்த அரசியல்வாதியோ, அரசு அதிகாரியோ போராட்டத்தில் ஈடுபடுகிறானா..? இங்கே சுயநலவாதிகள் மட்டுமே அதிகம் உள்ளனர். (ctd)..
Quote
 
 
+7 #29 வேண்டுகோள்.. 2010-12-16 19:45
" #22 Ravisundaram 2010-12-14 22:17
மனநலம் குன்றிய சிலர் தொடர்ந்து "வெட்டி ஓட்டும்" கருத்துக்களை அதுவும் ஒரே கருத்துக்களை தொடர்ந்து "வெட்டி ஒட்டு" வேலை செய்வது அருவருப்பாக இருக்கிறது. இவர்கள் சவுக்கு எதிர்பார்க்கும் நாகரீகம் அற்றவர்கள். இவர்களை தடை செய்வதில் தவறே இல்லை" ----------------

சவுக்கு, இது பலரது வேண்டுகோள்.. இன்னும் நீங்கள் கண்டு கொள்ளாமல் இருப்பது ஆச்சர்யமாக உள்ளது.
சவுக்கின் தரம் கெட்டுவிட வாய்ப்புள்ளது.. பின்னூட்டங்கள் தரமற்று உள்ளன..
ஜெயலலிதா பற்றிய கேள்விகளுக்கு தான் அமைதியாக இருப்பீர்கள்... இதற்குமா..?
Quote
 
 
-3 #28 emai suresh 2010-12-16 17:48
english theriathavanell am mankuni illai. mozhi purithalil neengal mankuniahividat heenga.
Quote
 
 
0 #27 KULITALAI MANOHARAN 2010-12-16 15:14
naahareeha katru konda pirahu soukku matravarhalai kindal seyyalaame??????
Quote
 
 
+6 #26 ம.பொன்ராஜ் 2010-12-16 15:11
கற்பனை: (2012ல் ஜெயிலுக்கு வெளியே நிற்கும் அழகிரியை, ஜெயிலில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் ஜாபர் செட், பொட்டு சுரேஷ் அழைக்கிறார்கள்) .
ஜாபர் செட்: ஒய் 'அவுட்ஸ்டாண்டிங் '? (ஏன் வெளியில் நிற்கிறீர்கள்?)
பொட்டு சுரேஷ்: 'இன்கமிங்' (உள்ளே வாங்க)
அழகிரி: 'கமிங் சூன்' (சீர்க்கிரம் வரேன்)....!!!!
Quote
 
 
0 #25 kulitalai manoharan 2010-12-16 15:10
@naahareehamaah a ezhudha theriaadhaa soukku unakku?
Quote
 
 
+2 #24 கார்மேகம் 2010-12-16 14:59
Quoting மாதவன்:
சரி.... அழகிரியை விடுங்கள். ஜாபர் சொல்வதை அப்படியே கேட்டுக் கொண்டார் என்றே வைத்துக் கொள்வோம். அழகிரி குடும்பத்தில் மகள்கள், மருமகன்கள் இருக்கிறார்களே... அவர்களுக்குமா இங்கிலீஷ் புரியாது... இதை என்னால் நம்பமுடியவில்லை !


நூலைப்போல சேலை
Quote
 
 
+7 #23 ம.பொன்ராஜ் 2010-12-16 14:51
//“அப்பா ஏலகிரி போறாராமே… ? அந்த அம்மா பேசுனதுக்கு நானே கோபப் படல… இவரு எதுக்கு கோவிச்சுகிட்டு ஏலகிரி போறாரு ? “ //புருஷன்கிட்டே கோவிச்சுகிட்டு பொண்டாட்டி ஊருக்கு போனது மாதிரி இருக்கு. யார் கண்டா? தாத்தா அலைக் கற்றை சம்பந்தப்பட்ட முக்கியமான தாஸ்தாவேஜுகளை 'ஏலகிரிக்கு' நாடு கடத்தியிருக்கலா ம். கூட்டி கழிச்சு பாருங்க, கணக்கு சரியா வரும்....!!!!
Quote
 
 
+7 #22 ம.பொன்ராஜ் 2010-12-16 14:46
//எதற்காக பொட்டு சுரேஷ் ஜெயஸ்ரீக்காக இத்தனை முயற்சிகள் எடுக்க வேண்டும் என்பது பதிவில் எழுத முடியாத ரகசியம். (ஆனாலும் நீங்கள் கண்டு பிடித்து விட மாட்டீர்களா என்ன ?)// கண்டுபிடிச்சிட் டோம். மேல சொல்லுங்க...!!!
Quote
 
 
+8 #21 Jeeva 2010-12-16 14:46
சவுக்கு உன் கை வண்ணத்தால் ... நக்கீரன் காமராஜை CBI பின்னி பெடல் எடுத்துகிட்டு இருக்கு ... நன்றி சவுக்கு
Quote
 
 
-3 #20 saran sg 2010-12-16 14:26
நாட்டுக்கு இப்போ இது ரொம்ப அவசியமா. ஒரே ஆள பத்தி படிக்க உண்மையிலே ரொம்ப போரிங்கா இருக்கு. pls give us some useful மேட்டர் . நன்றி
Quote
 
 
+2 #19 கோவை பிரியன் 2010-12-16 13:54
தோழர் தளவாய் திராவிடன் ஆக மாறிவிட்டார????
Quote
 
 
+1 #18 பச்சைமாலு 2010-12-16 12:54
Quoting அன்பில் பொய்யாமொழி:
Quoting மாதவன்:
சரி.... அழகிரியை விடுங்கள். ஜாபர் சொல்வதை அப்படியே கேட்டுக் கொண்டார் என்றே வைத்துக் கொள்வோம். அழகிரி குடும்பத்தில் மகள்கள், மருமகன்கள் இருக்கிறார்களே... அவர்களுக்குமா இங்கிலீஷ் புரியாது... இதை என்னால் நம்பமுடியவில்லை !


இதிலிருந்து ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். சவுக்கு பல நேரங்களில் பொய் தான் சொல்லுகிறான். அழகிரி வீட்டில் யாருமே இங்கிபிலிசு படிக்காத மாதிரி சொல்றான் இவன். காக்கா உக்கார பனம்பழம் விழுத்த மாதிரி தான் இவன் சொல்ற கத எப்பவாவது நடக்கும். அடுக்கு இவன் பெரிய genious சொல்ற கூட்டம் வேற....காரி தான் துப்பணும்

இந்தியாவில் நீங்க ஆங்கிலம் கற்றிருந்தால் டில்லி பாராளுமன்றில் மாமா அழக்கிரி இங்கிலீஸில் பேசச்சொன்னா பாவம் என்னபண்ணுவாரு,ம துரையிலிருந்து மவளை மந்திரிசபைக்கு கூட்டிட்டு போவமுடியுங்களா?
Quote
 
 
+2 #17 RANGARAJAN 2010-12-16 12:52
WHATEVER IT IS SAVUKKU. WHETHER IT IS TRUE OR NOT. BUT I AM VERY HAPPY TO READ A REPORT LIKE THIS ABOUT AZHAGIRI. HE IS THE PERSON WHO DESERVE SUCH A KIND OF IMAGE. HE IS REALLY A FOOL TO BE IN THE PARLIAMENT WHO DOES NOT KNOW EVEN WHAT A PRE-SCHOOL STUDYING CHILD KNOW IN ENGLISH. HE IS FIT TO BE A ROUDY. UNFORTUNATELY HE IS A SON TO OUR CHIEF MINISTER. ITS ALL OUR FATE TO LIVE IN THE PERIOD IN WHICH THESE SORT OF PEOPLE LIVE.
Quote
 
 
0 #16 Julian Asange 2010-12-16 11:50
savukku pona REPORTER Editionla PHOTO voda Vanthirukkuthu ungalaipatri
Quote
 
 
+2 #15 Abdul Rahman - Dubai 2010-12-16 11:17
விக்கிலீக்ஸ் ஜூலியன் அசாஞ்சே சிறையில் வாடுகிறார். ஆக்ஸ்போர்டு பேராசிரியர் பொட்டு சுரேஷ் மனது வைத்தால் அவரை எளிதாக வெளியில் கொண்டு வந்து விடலாம். சவுக்குதான் இதற்கு ஏற்ப்பாடு செய்ய வேண்டும். செய்வீர்களா சவுக்கு?
Quote
 
 
-1 #14 P.SELVARAJ 2010-12-16 11:04
nalla katturai,nantri thozhar
Quote
 
 
-3 #13 அன்பில் பொய்யாமொழி 2010-12-16 10:33
Quoting மாதவன்:
சரி.... அழகிரியை விடுங்கள். ஜாபர் சொல்வதை அப்படியே கேட்டுக் கொண்டார் என்றே வைத்துக் கொள்வோம். அழகிரி குடும்பத்தில் மகள்கள், மருமகன்கள் இருக்கிறார்களே... அவர்களுக்குமா இங்கிலீஷ் புரியாது... இதை என்னால் நம்பமுடியவில்லை !


இதிலிருந்து ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். சவுக்கு பல நேரங்களில் பொய் தான் சொல்லுகிறான். அழகிரி வீட்டில் யாருமே இங்கிபிலிசு படிக்காத மாதிரி சொல்றான் இவன். காக்கா உக்கார பனம்பழம் விழுத்த மாதிரி தான் இவன் சொல்ற கத எப்பவாவது நடக்கும். அடுக்கு இவன் பெரிய genious சொல்ற கூட்டம் வேற....காரி தான் துப்பணும்
Quote
 
 
-1 #12 படிப்பவன் 2010-12-16 07:07
http://www.merriam-webster.com/dictionary/cutthroat?show=1&t=1292463252

2cutthroat adj
Definition of CUTTHROAT

1
: murderous, cruel
2
: marked by unprincipled practices : ruthless
3
: characterized by each player playing independently rather than having a permanent partner —used especially of partnership games adapted for three players
See cutthroat defined for English-language learners »
Examples of CUTTHROAT
Quote
 
 
+7 #11 மாதவன் 2010-12-16 04:57
சரி.... அழகிரியை விடுங்கள். ஜாபர் சொல்வதை அப்படியே கேட்டுக் கொண்டார் என்றே வைத்துக் கொள்வோம். அழகிரி குடும்பத்தில் மகள்கள், மருமகன்கள் இருக்கிறார்களே... அவர்களுக்குமா இங்கிலீஷ் புரியாது... இதை என்னால் நம்பமுடியவில்லை !
Quote
 
 
+11 #10 சவுக்கின் விசிறி 2010-12-16 04:54
டாக்டர் படிப்பு படிச்சிட்டு, நாலு பேருக்கு, நல்லதை செய்யும் தொழிலை விட்டுவிட்டு, சி.ஐ.டி. காலனியில் கால் அமுக்கி விடுவதும் காய்கறி நறுக்கித் தருவதும் பூங்கோதைக்கு ஏன் சந்தோஷத்தை தருகிறது என்பது இப்போதுதான் புரிகிறது.
Quote
 
 
0 #9 arjun 2010-12-16 04:23
savukku ur translation is wrong!!!!! she didnt mean wat u said..
Quote
 
 
+1 #8 Harish R 2010-12-16 02:40
add facebook and twitter share to your website.Do some SEO.Ask someone to do a English translated articles
Quote
 
 
+4 #7 chinna 2010-12-16 01:19
Quoting சவுக்கு:
ஆங்கிலப் பேராசிரியர் சக்தி வேல் அவர்களுக்கு சவுக்கின் வாழ்த்துக்கள்.

அத தான் நாங்க சொல்லிட்டோம்ல,உ ங்களுக்கும் சேத்து.

கமெண்ட்ஸ் பகுதி எங்களோடது நீங்க உள்ள வரகூடாது
Quote
 
 
+3 #6 sakthivel 2010-12-16 01:17
@ சவுக்கு: வழுக்கும் வாள மீன், மறதித்திலகம் சவுக்குக்கு நன்றி!
Quote
 
 
+9 #5 சவுக்கு 2010-12-16 00:57
ஆங்கிலப் பேராசிரியர் சக்தி வேல் அவர்களுக்கு சவுக்கின் வாழ்த்துக்கள்.
Quote
 
 
+4 #4 sakthivel 2010-12-16 00:38
Quoting chinna:
Quoting sakthivel:
மேலே உள்ள தமிழாக்கத்தை படித்துப்பார்த் தாலும், அந்த ஆடியோ-வைக்கேட்டாலும் தெளிவாக தெரிவது, பூங்கோதை அழகிரியை மட்டமாக பேசவில்லை. ஏனென்றால், "இல்லை இல்லை அவரை (அழகிரியை) நீங்கள் குறைத்து மதிப்பிடுகின்றீ ர்கள்" என்று சொன்ன அடுத்த நொடி, அவர்கள் நம்பவைத்து கழுத்தறுப்பவர்க ள் என்று அழகிரியை சொல்ல வாய்ப்பில்லை. மேலும் "அவர்கள்" என்று சொல்வதனால் அவர் டெல்லிவாலாக்களை யே அப்படி சொல்கின்றார் அன்று நம்புகின்றேன். அது ஒருவேளை தமிழகத்தில் உள்ளவர்களைப்பற் றி சொல்லியிருந்தால ும் அது கலைஞர் குடும்பத்தையே சொல்வதாகத்தான் அர்த்தம். தனிப்பட்ட முறையில் அழகிரியை சொன்னதாக ஆகாது.

பூங்கோதை: இல்லை. இல்லை. நீங்கள் அவரை குறைத்து மதிப்பிடுகிறீர் கள்.

நீரா: யோசித்துப் பாருங்களேன்….

பூங்கோதை: அப்படியா சொல்லுகின்றீர்க ள்? (அல்லது சந்தேகத்துடன்....) அப்படியும் இருக்கலாம்!

.


இன்னும் ஒரு ஆங்கிலப் பேராசிரியர் நமக்கு கிடைத்து விட்டார்........வாழ்த்துகள்


ஹி ஹி, நன்றி !
Quote
 
 
+3 #3 chinna 2010-12-16 00:27
Quoting sakthivel:
மேலே உள்ள தமிழாக்கத்தை படித்துப்பார்த் தாலும், அந்த ஆடியோ-வைக்கேட்டாலும் தெளிவாக தெரிவது, பூங்கோதை அழகிரியை மட்டமாக பேசவில்லை. ஏனென்றால், "இல்லை இல்லை அவரை (அழகிரியை) நீங்கள் குறைத்து மதிப்பிடுகின்றீ ர்கள்" என்று சொன்ன அடுத்த நொடி, அவர்கள் நம்பவைத்து கழுத்தறுப்பவர்க ள் என்று அழகிரியை சொல்ல வாய்ப்பில்லை. மேலும் "அவர்கள்" என்று சொல்வதனால் அவர் டெல்லிவாலாக்களை யே அப்படி சொல்கின்றார் அன்று நம்புகின்றேன். அது ஒருவேளை தமிழகத்தில் உள்ளவர்களைப்பற் றி சொல்லியிருந்தால ும் அது கலைஞர் குடும்பத்தையே சொல்வதாகத்தான் அர்த்தம். தனிப்பட்ட முறையில் அழகிரியை சொன்னதாக ஆகாது.

பூங்கோதை: இல்லை. இல்லை. நீங்கள் அவரை குறைத்து மதிப்பிடுகிறீர் கள்.

நீரா: யோசித்துப் பாருங்களேன்….

பூங்கோதை: அப்படியா சொல்லுகின்றீர்க ள்? (அல்லது சந்தேகத்துடன்....) அப்படியும் இருக்கலாம்!

.


இன்னும் ஒரு ஆங்கிலப் பேராசிரியர் நமக்கு கிடைத்து விட்டார்........வாழ்த்துகள்
Quote
 
 
+5 #2 sakthivel 2010-12-16 00:24
மேலே உள்ள தமிழாக்கத்தை படித்துப்பார்த் தாலும், அந்த ஆடியோ-வைக்கேட்டாலும் தெளிவாக தெரிவது, பூங்கோதை அழகிரியை மட்டமாக பேசவில்லை. ஏனென்றால், "இல்லை இல்லை அவரை (அழகிரியை) நீங்கள் குறைத்து மதிப்பிடுகின்றீ ர்கள்" என்று சொன்ன அடுத்த நொடி, அவர்கள் நம்பவைத்து கழுத்தறுப்பவர்க ள் என்று அழகிரியை சொல்ல வாய்ப்பில்லை. மேலும் "அவர்கள்" என்று சொல்வதனால் அவர் டெல்லிவாலாக்களை யே அப்படி சொல்கின்றார் அன்று நம்புகின்றேன். அது ஒருவேளை தமிழகத்தில் உள்ளவர்களைப்பற் றி சொல்லியிருந்தால ும் அது கலைஞர் குடும்பத்தையே சொல்வதாகத்தான் அர்த்தம். தனிப்பட்ட முறையில் அழகிரியை சொன்னதாக ஆகாது.

பூங்கோதை: இல்லை. இல்லை. நீங்கள் அவரை குறைத்து மதிப்பிடுகிறீர் கள்.

நீரா: யோசித்துப் பாருங்களேன்….

பூங்கோதை: அப்படியா சொல்லுகின்றீர்க ள்? (அல்லது சந்தேகத்துடன்....) அப்படியும் இருக்கலாம்!

என்றுதான் இந்த உரையாடல் இருந்திருக்கும் . நீரா, யோசித்துப்பாருங ்களேன் என்று சொன்னவுடன் தலைகீழாக "அவர்கள் நம்பவைத்து கழுத்தறுப்பவர்க ள்" என்று அழகிரியை சொல்ல வாய்ப்பில்லை.
Quote
 
 
+7 #1 chinna 2010-12-16 00:05
பொட்டு சுரேஷ்க்கு விக்கிலீக்ஸ் job offer ஒன்னு வந்துருக்குனு,ம துரை பஸ் ஸ்டாண்ட் டி கடைலே சொன்னாக!!!!!!!! !!!!

உண்மையா இருக்குமோ?????????
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 119 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday5356
mod_vvisit_counterYesterday10087
mod_vvisit_counterThis week5356
mod_vvisit_counterLast week78861
mod_vvisit_counterThis month218175
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12740294