முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்தொடர்புக்கு
+++
பரலோகத்தில் இருக்கும் பிதாவே, இந்தப் போலிப் பாதிரியை மன்னியும். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 22
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வியாழக்கிழமை, 16 டிசம்பர் 2010 22:00

போலிப் பாதிரி, இந்த நபரை போலிப் பாதிரி என்று கூட சொல்லக் கூடாது.  இவர் பாதிரி அல்ல.  எதற்கும் உதவாத பாதி திரி.  இவரைப் பற்றி சவுக்கு கடந்த ஜுலை மாதம் எழுதிய பதிவு, இன்று பாதிரியின் வீட்டிலும் தமிழ் மையம் அலுவலகத்திலும், சிபிஐ சோதனைகளை ஒட்டி மறு பதிவு செய்யப் படுகிறது.

 

 





மறக்க முடியுமா என்று ஒரு தொடர் ஜகத் கஸ்பரால் நக்கீரன் இதழில் தொடர்ந்து எழுதப்பட்டு வந்ததை அறிவீர்கள். அந்தத் தொடர் எழுதப்பட்டு வந்ததை சவுக்கு வாசகர்கள் அறிவீர்கள். அந்தத் தொடரைப் படித்தவர்களுக்கு, புலிகள் இயக்கமே, இந்த போலிப் பாதிரி கஸ்பரை நம்பித்தான் இருப்பது போலவும், இந்தக் கஸ்பர் சொன்ன பேச்சை பிரபாகரன் கேட்டிருந்தால், புலிகள் இயக்கம் வீழ்ந்திருக்காது என்பது போலவும் எழுதப் பட்டு வந்தது. 

இந்தத் தொடர் வெளிவந்த பல நக்கீரன் இதழ்களின் அட்டை படம், இந்த “மறக்க முடியுமா“ தான். இந்த கஸ்பரை இது போல ப்ரமோட் செய்ததில், கர்ம வீரர் காமராஜ் மற்றும் கஸ்பர் இருவருக்கும் மிகுந்த பலன் தரும் விஷயமாக இருந்ததால், ரொம்ப வசதியாகப் போனது.

யார் இந்த ஜகத் கஸ்பர் ?

இவர் ஒரு ரோமன் கத்தோலிக்கப் பாதிரி. இன்று தமிழ் மையம் என்ற ஒரு மடத்தை வைத்து நடத்தி இந்த மடத்தின் மூலம், மத்திய மாநில அரசுகளின் பணத்தை சூறையாடிக் கொண்டிருக்கிறார். இதைப் பற்றி விரிவாகப் பார்க்கும் முன், இந்தப் பன்னாடையின் பின் புலம் என்ன என்பதைப் பார்ப்போம்.

கஸ்பர் என்ற இந்தப் போலிப் பாதிரி, இறையியல், வரலாறு, தத்துவம், அரசியல் ஆகிய பாடங்களில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ஆனால், இந்தப பாடங்கள் எதிலும் சிறக்காமல், பொருளாதாரத்தில் சிறந்து விளங்குவதுதான் கஸ்பரின் திறமை. 

1997 முதல், 2002 வரை பிலிப்பைன்ஸ் மணிலாவில் உள்ள வெரித்தாஸ் வானொலியில் பணியாற்றினார். வெரித்தாஸ் வானொலி என்பது, நம்ப ஊரில் ப்ரேயர் சேனல், ஏசு அழைக்கிறார் என்ற டுபாக்கூர் சேனல்கள் வருகிறதல்லவா ? 

இதன் ஒலி வடிவம் தான் ரேடியோ வெரித்தாஸ். இந்த வெரித்தாஸ் வானொலியின் மறுபக்கம் என்னவென்றால், இது அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏவால் நடத்தப் படுவது என்ற தகவல். மணிலாவில் பணியாற்றிக் கொண்டிருந்த போதே கஸ்பருக்கு, புலிகள் இயக்கத்துடன் தொடர்பு ஏற்படுகிறது.

கஸ்பரின் பாதிரி என்ற போர்வையும், சர்வதேச தொடர்புகளும், புலிகள் இயக்கத்திற்கு, இந்த ஆளை நாம் பயன்படுத்திக் கொண்டால் என்ன என்று எண்ணி, புலிகளின் நிதியைக் கையாளும் ஒரு பொறுப்பு கஸ்பர் தலையில் விழுகிறது.

2002ம் ஆண்டு வரை வெளிநாட்டிலேயே இருந்த கஸ்பர், இந்தியாவுக்குள் கால் பதித்தது இசை ஞானி இளையராஜா மூலமாகத் தான். இளையராஜாவின் திருவாசக சிம்பொனியை வெளியிடும் பொறுப்பை ஏற்று, பல ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த திருவாசகத்தை வெற்றிகரமாக வெளியிட்டார்.



இதை வெளியிடும் போது, ஏற்பட்ட சினிமா தொடர்புகள் மூலம், அரசியல் தொடர்புகளை வளர்த்தெடுக்கிறார் கஸ்பர்.

கருணாநிதி குடும்பத்தோடு தொடர்புகள் ஏற்பட்டதும் கஸ்பருக்கு சுக்கிர திசைதான்.
கஸ்பரின் சர்வதேசத் தொடர்புகளை கருப்புப் பணத்தை வெள்ளையாக்க பயன் படுத்திக் கொள்ளலாம் என்று கருப்புப் பணத்தை மூட்டையாகக் கட்டி வைத்திருப்பவர்கள் முடிவெடுத்தார்கள். 

அதற்கான வழி முறைகளை கஸ்பரே வகுத்துக் கொடுத்தார். அவர் மூளையில் உதித்த திட்டம் தான் “தமிழ் மையம்“. இந்தத் தமிழ் மையம் 2002 ஜுலையில் தொடங்கப் பட்டது. இந்த மையத்தின் நோக்கம், மொழி, கலை, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை வளர்த்தெடுப்பது என்று கூறினாலும், உண்மையான வேலை, கருப்புப் பணத்தை வெள்ளையாக்குவது. 




இந்தத் தமிழ் மையத்தின் ட்ரஸ்டிக்கள் யார் தெரியுமா ? கனிமொழி. ஸ்ரீராம் சிட்ஸ் முதலாளியின் மனைவி, மாஃபா பாண்டியராஜனின் மனைவி, மற்றும் சதீஷ் டேவிட் என்பவர்கள். 

இந்தத் தமிழ் மையத்தில் என்ன நடக்கிறது என்பதற்கு ஒரு சிறு உதாரணம் கூறுகிறேன். Central Institute of Classical Tamil என்ற மத்திய அரசு நிதி உதவி பெறும் ஒரு நிறுவனம் இருக்கிறது. இதன் பணி, மொழியை மேம்படுத்தவது, மக்களுக்காக தமிழ் இலக்கியங்களை எளிமைப் படுத்தி வழங்குவது.

இந்த நிறுவனத்திடமிருந்து, திருக்குறளை இசையாக்குகிறேன் என்று ஒரு 8 கோடி ரூபாயை வாங்கினார் இந்தப் போலிப் பாதிரி. வாங்கி, திருக்குறளை இசையோடு கலந்த சிடியாக தயாரித்து, பேராசிரியர்.அன்பழகனை வைத்து வெளியிட வைத்து, ஒரு சிடியை 500 ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருக்கிறார் இந்தப் பாதிரி.




இந்தச் செம்மொழி மாநாட்டில், ஆடல் பாடல் தொடர்பான அனைத்து வேலைகளும், கஸ்பரின் தம்பி, ப்ரைட் ஜெகத் வசம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. அத்தனை வேலைகளிலும், 25 முதல் 40 சதவிகிதம் வரை கஸ்பர் குடும்பம் ஆட்டையைப் போட்டிருக்கிறது என்று தகவல்கள் கூறுகின்றன.

செம்மொழி மாநாடு எப்போதாவது தானே நடக்கும். அதனால், ஆண்டுதோறும் சம்பாதிக்க கஸ்பர் கண்டு பிடித்த அற்புதமான வழி, மராத்தான் ஓட்டப் பந்தயம் நடத்துவது. இந்த ஓட்டப் பந்தயத்தை, தனக்கு இருக்கும் பணத்தாலும், பத்திரிக்கை செல்வாக்காலும், பிரபலப் படுத்தி பெரிய அளவில் ஸ்பான்சர்களைப் பிடித்து, ஒரு பெரிய அமவுண்ட்டை ஆட்டையப் போடுவது, கஸ்பருக்கு கை வந்த கலை.

இதே போல, ஆண்டுதோறும் நடக்கும் சென்னை சங்கமத்தில், கனிமொழியோடு சேர்ந்து கொண்டு, விழா ஏற்பாடுகள் அத்தனையும் கவனித்துக் கொள்வதாக உறுதியளித்து விட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக, திமிங்கிலத்தையே முழுங்கி ஏப்பம் விடும், கனிமொழியே கடுப்பாகும் அளவுக்கு, 50 சதவிகிதத்துக்கு மேல் ஆட்டையப் போட்டு விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

தமிழ் ஆராய்ச்சிக்காக ஏறக்குறைய 300 கோடி ரூபாய்கள், Central Institute of Classical Tamil, International Institute of Tamil Studies, சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பிரிவு, மொழிப் பிரிவு, போன்ற நிறுவனங்களிடம் குவிந்து கிடக்கின்றன. நான் தமிழில் ப்ராஜெக்ட் செய்கிறேன் என்று இந்த நிறுவனங்களிடமிருந்து இந்த ஆண்டு மட்டும் கஸ்பர் இது வரை பெற்ற தொகை ரூபாய் 16 கோடி.

இந்த நிறுவனங்களிடமிருந்து, ப்ராஜேக்ட் செய்கிறேன் என்று, பணத்தை வாங்கி, சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும், மற்ற கல்லூரிகளில் உள்ள தமிழ்த்துறை மாணவர்களை அழைத்து, உங்களுக்கு வேலை வாங்கித் தருகிறேன் என்று ஆசை வார்த்தை காட்டி, அவர்களை வைத்து, கடுமையாக வேலை வாங்கிக் கொள்வதாக தகவல்கள் கூறுகின்றன.




இந்தப் போலிப் பாதிரியோடு கூட்டணியில் இருப்பவர்கள், ஆ.ராசா, தங்கம் தென்னரசு, விடுதலைச் சிறுத்தைகள் எம்.எல்.ஏ ரவிக்குமார், அமைச்சர் பூங்கோதை. இவர்கள் கூட்டணி எப்படி வேலை செய்கிறது தெரியுமா ? இது தவிர, வழக்கமான “டர்ட்டி பாய்ஸ்“ இதில் உண்டு. “டர்ட்டி பாய்ஸ்“ குழுவிற்கு, கஸ்பர்தான் பொருளாளர்.

செட்டிநாட்டு சீமானின் மகன், கார்த்தி சிதம்பரம் இவரின் நெருங்கிய கூட்டாளி. எப்படி நெருங்கிய கூட்டாளி என்றால், மாலை வேளைகளில் கஸ்பரோடு அமர்ந்து Green Label ஸ்காட்ச் குடிக்கும் அளவுக்கு நெருங்கிய கூட்டாளி.



பாதிரி நடத்திய கிரிஸ்துமஸ் விழாவில் பேசும் ஆ.ராசா



அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு, மென்பொருள் ஆர்டர் வழங்குவது. இந்த மென் பொருள் ஆர்டர்கள், கஸ்பரோடு யார் ஒப்பந்தத்தில் ஈடுபடுகிறார்களோ, அவர்களுக்கே வழங்கப் படும். அதாவது, உங்களிடம் ஒரு மென்பொருள் இருக்கிறது என்றால், நீங்கள் கஸ்பரை சந்திக்க வேண்டும். 

அந்த மென்பொருளின் விலை 2000 ரூபாய் என்றால், கஸ்பர், உங்களிடம் 2000 ரூபாய் உங்களுக்கு வழங்கப் படும் என்று கூறுவார். இந்த மென்பொருளை தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும், 5000 ரூபாய்க்கு கஸ்பர் வழங்குவார். கஸ்பருக்கு 3000. உங்களுக்கு 2000. 



இது போல, ஆயிரக்கணக்கான மென்பொருள் உங்களிடம் வாங்கப் படும் என்பதால், கிடைத்த வரை லாபம் என்று நீங்களும் சந்தோஷப் படுவீர்கள். இந்த 3000த்தை கஸ்பர் முக்கியஸ்த்தர்களுக்கு பங்கு பிரித்துக் கொடுத்தது போக, ஒரு பெரும் பாகத்தை அமுக்குவார்.
கருப்பை வெள்ளையாக்க, தமிழ் மையத்தைத் தவிர, Give Life. நாம் என மொத்தம் எட்டு ட்ரஸ்ட்டுகள் வைத்துள்ளார் கஸ்பர். 

இந்த ட்ரஸ்ட்டுகள் மூலம், கருப்புப் பணத்தை வெள்ளையாக்குவது மட்டுமல்லாமல், வெளிநாட்டவர்களிடமிருந்தும், பணம் வசூல் செய்வது, கஸ்பரின் திறமை.
இது தவிர, Acrolinks Business Solutions Pvt. Ltd. என்ற மென்பாருள் நிறுவனத்தை நடத்தி வருகிறார் இந்தப் பாதிரி. இந்த நிறுவனம் சென்னையில் உள்ளது.



திருடர்களின் கூட்டணி


இந்த நிறுவனம் போக, மும்பையில் மற்றொரு நிறுவனம் இருப்பதாகவும், தகவல்கள் கூறுகின்றன. மாதத்திற்கு இரு முறை, மும்பை செல்லும் கஸ்பரோடு, இவரது செயலாளரும், மேரி என்ற கன்னியாஸ்திரியும் செல்வார்கள் என்று தகவல்கள் கூறுகின்றன.
சென்னையில் இருக்கும் நாட்களில் கஸ்பரின் முழுநேர வேலை, ப்ரோக்கர் தொழில். ப்ரோக்கர் என்றால் தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள். 

அரசு காண்ட்ராக்ட் பெற வேண்டும், அரசு வேலை பெற வேண்டும், நல்ல போஸ்டிங் வேண்டும் என்று பல்வேறு வேலைகளுக்காக, மயிலாப்பூரில் உள்ள தமிழ் மைய அலுவலகத்திற்கு, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, தொடர்ச்சியாக பார்வையாளர்கள் வந்த வண்ணம் இருப்பார்கள் என்று தகவல்கள் கூறுகின்றன.

எளிமையாக வாழ்க்கை நடத்த வேண்டிய இந்த கத்தோலிக்கப் பாதிரியிடம் இன்று எத்தனை வண்டிகள் தெரியுமா ?

1) ஹ்யுண்டாய் ஆக்சென்ட்
2) டொயோட்டா கரோல்லா
3) பியட் பாலியோ
4) டோயோட்டா இன்னோவா
5) போர்ட்

ஈழப் போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த காலத்தில், இந்தப் பாதிரி என்ன செய்தார் தெரியுமா ? நக்கீரனில் புருடா விடுவதைத் தவிர்த்து, ஒரு கூட்டமைப்பை அமைப்பார். முக்கியமான நபர்களை அழைத்து, அவர்களிடம் நாம் ஒரு கூட்டமைப்பை அமைத்து போராட்டம் நடத்துவோம் என்று கூறுவார்.
அந்தக் கூட்டமைப்பின் முதல் கூட்டம் மட்டும் 

நடக்கும். கூட்டமைப்புக்கு வருகை தரும் ஒருவர் கூட, இரு சக்கர வாகனத்திலோ, நடந்தோ வர மாட்டார்கள். அத்தனை பேரும், சொகுசு காரில் வருவார்கள். சொகுசு காரில் வருபவன், ஈழத் தமிழருக்காக தெருவில் இறங்குவானா ?

இப்படியே, பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்று தன் வண்டியை ஒட்டி, பல கோடிகளை குவித்துக் கொண்டிருக்கிறார் கஸ்பர்.

பாதிரியாக இருந்தாலும், கஸ்பர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் போலத்தான் தெரிகிறது. கடவுள் நம்பிக்கை இருந்தால், இத்தனை பாவங்களை தொடர்ந்து செய்வாரா கஸ்பர் ?




சவுக்குக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. இருந்தால், பரலோகத்தில் இருக்கும் எங்கள் பரமபிதாவே, இந்தப் போலிப் பாதிரி கஸ்பரை மன்னியும் என்றுதானே பிரார்த்திக்க வேண்டும் ?.

 

 

Comments  

 
0 #49 சதீஷ் 2011-04-26 13:08
Quoting Nellai:
சவுக்கு தனது கொள்கை என்ன என்று தெளிவாக வெளிடவேண்டும் ஊழல் எதிர்ப்பா அல்லது கருணாநிதி மற்றும் அவரை சார்த்தவர்களை மட்டும் எழுதுவதா.


இந்த நாட்டில் தவறு, தப்பு, கெடுதல் என்று நடந்தால், அதில் பெரும் பங்கு இந்த 'பச்சிலை புடிங்கி' காவாலி கருணாநிதி சார்ந்ததாகவே இருக்கிறது.. இதற்கு 'சவுக்கு' என்ன செய்ய முடியும்.. அப்படி கூடாது என்றால், மாதம் ஒரு கட்டுரை தான் வரும் பரவாஇல்லையா?
Quote
 
 
0 #48 Samraj Hopper 2011-02-28 09:44
To know the truth
Quote
 
 
0 #47 Immanuel 2011-02-28 09:43
to know the truth
Quote
 
 
0 #46 Wilson 2011-02-28 09:43
to know the truth
Quote
 
 
0 #45 Dr.C.J.Arun 2011-02-19 17:45
Inform Kottar Bishop immediately
Quote
 
 
0 #44 Jeya 2011-02-19 17:38
Kindly inform the Bishop of Kottar about this priest Kaspar
Quote
 
 
0 #43 Jeya 2011-02-19 17:37
Kindly report all these activities of Fr. Jegath to the Bishop of Kottar Diocese.
Quote
 
 
0 #42 Ganesh The Great 2011-02-18 15:18
Ellam Sari.......... Yaar thaan thatti ketpathu
Quote
 
 
+1 #41 sakthy 2011-02-17 13:38
பரலோகத்தில் இருக்கும் பிதா வேண்டுமானால் மன்னிக்கட்டும். நாம் மன்னிக்க தயாராக இல்லை.
Quote
 
 
0 #40 thavamani 2011-02-14 20:52
pl read `dravida mayai-oru parvai`by subbu
Quote
 
 
0 #39 thomson 2011-01-24 20:08
paravaillai kadal parthu kollvar . kadalin paeyaril moosadi vaendam .
Quote
 
 
+2 #38 உண்மை போராளி 2010-12-25 12:55
Quoting கலை:
போகிற போக்கில் எழுத வேண்டாம்.........


ஏன் உண்மை இப்போது கசக்கின்றதா?
திருடனுக்கு தேள் கொட்டியதுபோல் இருக்கின்றதா?
Quote
 
 
+1 #37 sanjei 2010-12-25 12:52
Quoting கலை:
போகிற போக்கில் எழுத வேண்டாம்.........


ஏன் இப்போ திருடனுக்கு தேள் கொட்டியதுபோல இருக்கோ???
Quote
 
 
+2 #36 sanjei 2010-12-24 09:31
Quoting சவுக்கின் விசிறி:
இதைத் தவிர அவருக்கு புலிகளுடன் எந்தத் தொடர்பும் கிடையாது.


இப்படி சில கிள்ளாடிகள் தான் பொய்ப்பிரசாரங்க ளையும் பிணங்களையும் காட்டிக்காட்டி அரசியல் செய்துகொண்டு இருக்கின்றார்கள ்.

இவருக்கும் புலிகளுக்கும் தொடர்பே இல்லையா? வெறும் பேட்டியெடுத்த உறவு மட்டும்தானா? ‍ஹா ‍ஹா ‍ஹா!!! விஷயம் தெரியாதவர்களுக் கு சொல்லுங்கள் உங்கள் முழுப்பூசணிக்கா ய் பொய்யை.... ஐரோப்பாவில் இருந்துகொண்டு அங்கிருந்து ஒலிபரப்பாகும் புலிகளால் நடத்தப்பட்ட‌ ஒரு செய்மதிவானொலியூ டாக கோடி கோடியாக பணம் சேர்த்தாரே அது யார் பெயரை சொல்லி? அப்பண கணக்கு விபரங்களில் பிணக்கு வந்தபோது அன்டன் பாலசிங்கத்தின் துணையோடு அதை சமாளித்தாரே அதை எந்தக்கணக்கில் சேர்ப்பது?

இப்படியானவர்களை நம்பி நம்பித்தானே லட்சக்கணக்கான உயிர்களை பலியெடுத்தும் பலிகொடுத்துமுள் ளோம்? இன்னும் ஏன் வெட்டி வீரமும் வெட்டிப்பேச்சும ்? இலங்கை நிலவரம் சம்பந்தமாக சுகி சிவம் ஐயா சொன்னதை ஒரு முறை கேட்டுப்பாருங்க ள்
http://www.youtube.com/watch?v=EkbHywW5W-k&feature=player_embedded
Quote
 
 
0 #35 பச்சை தமிழன் 2010-12-21 22:08
ராசாவை ஆதரித்து விட்ட வீரமணி, திருமாவளவன் முதலியவர்களையும ் சிபிஐ விசாரணை செய்ய வேண்டும்.
Quote
 
 
0 #34 Lali 2010-12-19 15:05
suleer, pramatham.
Quote
 
 
+1 #33 Srini 2010-12-19 12:53
He is not a Father, he is a criminal, he doesn't have any good quality to serve the God.
Quote
 
 
0 #32 manguni pandian 2010-12-18 13:15
வடக்கில் நிலைகொண்டு விடுதலைப் புலிகளுடன் போரிட்ட இலங்கை ராணுவத்தினருக்க ாக, பெண்களை கட்டாயப்படுத்தி அனுப்பி விபச்சார செயலில் ஈடுபட்டார் கருணா. அதேபோல பல்வேறு சட்டவிரோத கொலைகள், ஆள் கடத்தல், பணம் பறித்தல் என அனைத்து சட்ட விரோத செயல்களையும் அவர் செய்தார் என்று கருணாவின் இருண்ட பக்கத்தை அம்பலப்படுத்திய ுள்ளது விக்கிலீக்ஸ்
Quote
 
 
0 #31 P.SELVARAJ 2010-12-18 11:03
NALLAKATTURAI
Quote
 
 
-2 #30 raj 2010-12-18 00:20
hey saaaavukku,
if u dont believe God, shutup and go. why do u blame my God.
Quote
 
 
+1 #29 ஊர்க்குருவி 2010-12-18 00:07
பேய் கொள்ளும்
பிணியொடொரு
பிரிவும் சேரும்.
பித்தோடு பிடாரிகளே
துணையாய் ஆகும்.
தாய் கண்டு சேய் என்று
சொல்லாள் உன்னை.
தரித்திரமே உருத்திரமாய்
கொள்வாய் காண.
பாயில்லை சதியில்லை
இல்லுமில்லை.
படுந்துயரம் நீ செய்த
பாவம் தானே.

சூனியம் கசுப்புவுக்கு எனது மங்களம்,
Quote
 
 
+1 #28 Tamilan 2010-12-17 22:16
YOu are doing very good job Sauvkku. I am forwarding the links all my tamil friends group to create awareness.

Hats off to you.
Quote
 
 
-2 #27 chezhian 2010-12-17 21:50
,e;jf; fl;Liuapy; nrhy;yg;gl;l tplaq;fspypUe;J me;jg; ghjphpahh; gy nghJ tplaq;fis Kd;dp;d;W nra;jpUf;fpwhh; vd;gJ njhpa tUfpwJ. mthpd; Nehf;fk; gzk;jhd; vd;gJ fl;Liuahshpd; Fw;wr;rhl;lhf ,Uf;fpwJ. mJ cz;ikah vd;gJ Muha;r;rpf;Fhpa tplak;. gzk; rk;ghjpg;gNj ghtkh vd;w Nfs;tpAk; vOfpwJ. ,jpy; Nghypg;ghjphp vd;w mtJ}W NtW. nghJ tho;tpy;
Quote
 
 
0 #26 Anto 2010-12-17 21:08
Please dont say about paralohathil irukkira engal pithave.He is basicaly a pasu thol porthiya puli.Still we are able to die for our methagu prabha annan.
Quote
 
 
0 #25 கனிமொழி கபடநிதி 2010-12-17 16:44
காம,லஹாசன் என்ன காம,லஹாசன் என்ன உலகநாயகன் இவன்தான் உண்மையான் உலகநாயகன்.
Quote
 
 
0 #24 ராஜ் 2010-12-17 16:36
இவருக்கு இவ்வளவு திறமை இருக்கிறதா? ஏன் அதை நல்ல வழியில் பயன்படுத்த கூடாது.
Quote
 
 
+3 #23 surya 2010-12-17 13:33
அந்த ஏசு அழைக்கிரார் காரன் பத்தி எதவது எழுதுங்கப்பா!!! !
Quote
 
 
+1 #22 பிரபு 2010-12-17 12:49
உலக தமிழர்களை ஏமாற்றும் போலி பாதிரி ஒழிக .....
Quote
 
 
+2 #21 சிலம்பு ஆசான் 2010-12-17 10:58
இந்த பாதி திரிக ்கு பாவமன்னிப்ப ு அளிக்க சொல்லி  கடவுளை கேவலப்ப டுத்தாதீர்கள்
Quote
 
 
0 #20 murugamma 2010-12-17 10:34
unga ezuthu nadai romba kattamath than irukku, analum unamai irukku, melum melum acharyapada vaikuthu, thangal ezuthu.
Quote
 
 
+2 #19 கவிஞர் கண்ணதாசன் 2010-12-17 10:05
"a Hindu means a thief""Rama was a drunkard" என்று சொன்ன கருணாநிதி ஏன் அப்படி சொன்னார் என்று இப்போ புரிகிறது. ஜகத் கஸ்பர் மாதிரி போலிப் பாதிரி சொல்ல சொன்னார்கள் போல. மேலும் கருணாநிதி குடும்பம் இப்படி கொள்ளை அடித்தது வெளியேவர ராமச்சந்திர மூர்த்திஇன் அருள்தான் காரணம்.
Quote
 
 
+2 #18 சவுக்கின் விசிறி 2010-12-17 08:57
சவுக்கு, ஒரு விஷய்த்தை தெளிவுப்படுத்து ங்கள்...
ஜெகத் கஸ்பர் என்பார், வெரித்தாஸ் வானொலிக்காக இலங்கையின் கிழக்குப் பகுதியில் பணியாற்றியவர். ஒரே முறை தலைவர் பிரபாகரனை நேரில் சந்தித்து, 45 நிமிடம் பேட்டி எடுத்ததாக சொல்லப்படுகிறது . இதைத் தவிர அவருக்கு புலிகளுடன் எந்தத் தொடர்பும் கிடையாது. அப்படிப்பட்ட நபரிடம், புலிகள் நிதியை கையாளும்படி சொல்லியிருக்க முடியுமா? அந்த 45 நிமிட பேட்டியையும், நான்கு ஆண்டுகள் இலங்கையில் பணியாற்றியதையும ் வைத்துதான், நீண்ட தொடர் எழுதி மக்களை ஏமாற்றி வருகிறார் என்பதே உண்மை. மற்றபடி புலிகளுக்கும் அவருக்கும் நேரடி தொடர்பு இருப்பது போல நீங்கள் எழுதியிருப்பது சரியல்ல.
Quote
 
 
+3 #17 பூபதி 2010-12-17 08:29
ஜனவரியில்,கிளிந ொச்சி விழுந்த வேதனையில் நாம் இருந்தபோது கனிமொழி இந்துராம் வகையராக்களோடு சேர்ந்து சென்னை சங்கம்ம் என்றபெயரில் கத்தடித்த இவன் எப்படி நம்மாளாய் இருக்க முடியும்.பார்பன சங்கீத அம்மணிகள் மற்றும் அகிலாசீனிவாசன், பாம்பே ஜெயஸ்ரீ கும்பலுடன் நெர்க்கமான தொடர்பு வைத்திருக்கும் இவன் ஒரு பச்சோந்தி.பார்ப்பன அடிவருடி
Quote
 
 
0 #16 anbu 2010-12-17 06:08
savukku..valthukkal appadi cholvan...valthukkal..
Quote
 
 
+4 #15 வீரத்தமிழ் மகன் 2010-12-17 05:29
யார் இந்த ஜெகத் கஸ்பார்? தோலுரிக்கு உண்மை

12.10.2009 அன்றே வினவுக்காக எழுது. உங்களது கட்டுரையில் பல கஸ்பர் பற்றி பல செய்திகள் விட்டுப் போய் உள்ளது. ஆனால், இந்த இணைப்பைப்பார்க் கவும்.

http://www.vinavu.com/2009/11/16/father-jegath-gaspar-raj-milks-blood/

தமிழ் மையத்தில், கனிமொழிக்காக ஒரு சிறப்பான அறை இருந்து வந்தது. இங்குதான் கனிமொழி அவ்வப்போது வந்து, பேரம் நடத்திச் செல்வார். இந்த பேரத்தில் ஒரு பங்கு கஸ்பருக்கு சென்று வந்தது. அத்தோடு, கனிமொழியின் தனது தமிழ் மைய அலுவலகத்தின் வரவை வைத்துக் கொண்டு, பல கோடிகளை கஸ்பர் சுருட்டியதும் உண்மை. காலம் தான் இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும்.
Quote
 
 
+2 #14 jeeva 2010-12-17 05:26
good post.done good job savukku, all the best.
Quote
 
 
-15 #13 Nellai 2010-12-16 23:37
சவுக்கு தனது கொள்கை என்ன என்று தெளிவாக வெளிடவேண்டும் ஊழல் எதிர்ப்பா அல்லது கருணாநிதி மற்றும் அவரை சார்த்தவர்களை மட்டும் எழுதுவதா
Quote
 
 
-11 #12 கலைஞரின் விசிறி 2010-12-16 23:30
http://shanthibabu.blogspot.com/2010/12/blog-post_15.html
Quote
 
 
-5 #11 கலை 2010-12-16 23:30
போகிற போக்கில் எழுத வேண்டாம்.........

கஸ்பரின் பாதிரி என்ற போர்வையும், சர்வதேச தொடர்புகளும், புலிகள் இயக்கத்திற்கு, இந்த ஆளை நாம் பயன்படுத்திக் கொண்டால் என்ன என்று எண்ணி, புலிகளின் நிதியைக் கையாளும் ஒரு பொறுப்பு கஸ்பர் தலையில் விழுகிறது.
Quote
 
 
-16 #10 Nellai 2010-12-16 23:26
சவுக்கு தனது கொள்கை என்ன என்று தெளிவாக வெளிடவேண்டும் ஊழல் எதிர்ப்பா அல்லது கருணாநிதி மற்றும் அவரை சார்த்தவர்களை மட்டும் எழுதுவதா.
Quote
 
 
0 #9 tharaniporali 2010-12-16 23:23
yenthavilankaiy um ivanukku utharanam kaattakutathu athu vilankirku kevalam
Quote
 
 
+10 #8 பாரதிக்குஞ்சு 2010-12-16 23:21
ஈழத்தை அழிக்க எவரெவர் முன்னின்றனரோ அனைவரும் தண்டனைக்குள் சிக்கிக்கொண்டுத ானிருக்கின்றனர் 1,சரத் பொன்சேகா, 2, ராஜபக்க்ஷ, 3,ஜெகத் கஸ்பர் 4,கனிமொழி 5, நிச்சியம் கருணாநிதியும் 6 பசி(சிதம்பரி,மற ்றும் சூனியா மண்மோகன்,இன்னும ் ஒருவருடத்திற்கு ள் எல்லோரும் அனுபவித்தாகவேண் டும்,
Quote
 
 
+3 #7 karthikeyan 2010-12-16 23:06
how can u collect all matters,truly if u tamil weaklis
Quote
 
 
+6 #6 பாரதிக்குஞ்சு 2010-12-16 22:57
தமிழ் மையம்*(மையம் என்பது பிணத்தைக்குறிக் கும்)தொடங்குவதற ்கு சூனியம் கஸ்பருக்கு அனுபவ அறிவைக்கொடுத்தத ு வெரித்தாஸ் வானொலியுடன் லண்டனிலிருந்து ஒலிபரப்பானIBC.FM. வானொலியில் கஸ்பரின் வேண்டுகோளுக்கிண ங்க சிற்றலை தொழில்நுட்பம் செய்து கொடுக்கப்பட்டது , அதை வைத்து உறவுப்பாலம் என்ற நிகழ்ச்சியை கொஞ்சநாள் நடத்தி இயக்கத்திடமிருந ்து பெருந்தொகை பணத்தை பெற்றார், கடைசி முள்ளிவாய்க்கால ் சமரின்போதுகூட நாம் அனைவரும் கஸ்பரை நம்பினோம் கணக்கு வழக்கு இல்லாமல் பெருந்தொகை பணம் கஸ்பருக்கு வழங்கப்பட்டது நாமறிவோம்
Quote
 
 
-4 #5 ஜாக்கிரதை 2010-12-16 22:53
http://www.youtube.com/watch?v=UIdZ62dfFfY
Quote
 
 
+3 #4 balamct 2010-12-16 22:35
yesuve intha paaviyai manniyum
Quote
 
 
+6 #3 raman 2010-12-16 22:24
Please remove "Karmaveerar" from his name, If I suggest, better you put "keeran" b'cos, his brother is "Nakki".
Quote
 
 
+3 #2 flower 2010-12-16 22:23
very good job
Quote
 
 
+14 #1 STD ISD PCO 2010-12-16 22:19
ஆண்டிமுத்துவின் மகன் ஆட்டம் க்ளோஸ் ஆகவும்,சிஐடி காலனி சீக்கிரம் சிண்டுபுடி காலனி ஆக சீக்கிரம் மாறவும் பரலோகத்தில் இருக்கும் எங்கள் பரமபிதாவே ஆசிர்வதியும்!!! !
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 273 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday8199
mod_vvisit_counterYesterday13577
mod_vvisit_counterThis week65776
mod_vvisit_counterLast week95167
mod_vvisit_counterThis month288036
mod_vvisit_counterLast month382199
mod_vvisit_counterAll days13204403