முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
கோனப்குப்பக் காட்டில் கோபிநாதன் பாலகிருஷ்ணா..! ராஜினாமா செய் ! அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 15
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
திங்கட்கிழமை, 20 டிசம்பர் 2010 08:26



என்னடா இது சவுக்கு திடீரென்று யாரோ ஒரு பாலகிருஷ்ணனை ராஜினாமா செய்யச் சொல்கிறதே…. யார் இந்த பாலகிருஷ்ணன், எதற்காக ராஜினாமா செய்ய வேண்டும் என்று விளம்புகிறீர்களா ?

 27IN_BALAKRISHNAN_1817eஅந்த பாலகிருஷ்ணன் வேறு யாரும் அல்ல…. இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தான் அது.

 

இந்த பாலகிருஷ்ணன் இந்தியாவின் தலைமை நீதிபதியான பொழுது, இந்தியாவில் உள்ள அனைத்து தலித்துகளோடு சேர்ந்து, சவுக்கும் மகிழ்ந்தது.   மகிழ்ச்சி ஏனென்றால் சாதி ஆதிக்கம் மிகுந்த இந்தியாவின் போலி ஜனநாயக சூழலில் ஒரு தலித் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாவது மிக மிக போராட்டம் மிகுந்த ஒரு விஷயமாகவே சவுக்கு பார்த்தது.

 

இந்த கோனக்குப்பக்காட்டில் கோபிநாதனின் மகன் இந்தியாவின் தலைமை நீதிபதி ஆகும் போது, தலித்துகளின் தோழன் வி.ஆர்.கிருஷ்ணய்யர் பெருமை பட்டார்.   அறிக்கை வெளியிட்டார்.   நீ தலித்துகளை பெருமைப் படுத்துகிறாய் என்றார். ஆனால், இந்தக் கோபிநாதனின் மகன், தலித்துகளை அவமானப் படுத்தி விட்டார். சிறுமைப் படுத்தி விட்டார்.

 

இந்த கே.ஜி.பாலகிருஷ்ணனைப் பற்றி வரக்கூடிய ஊழல் செய்திகள் ஏராளம் என்றால் ஏராளம். இந்தியாவின் மோசமான தலைமை நீதிபதியாக பாலகிருஷ்ணன் பெயரெடுத்திருக்கிறார்.

 

பாலகிருஷ்ணனுக்கு, தென் ஆப்ரிக்கா, கென்யா, மொரீஷியஸ் போன்ற நாடுகளில் வங்கிக் கணக்கு இருப்பதாகவும், பல கோடி ரூபாய் மதிப்பிலான 4 சொகுசு கார்களை ஓய்வு பெற்ற பிறகு, சென்னையைச் சேர்ந்த ஒரு தரகர் மூலமாக விற்றிருப்பதாகவும் தெரிகிறது.

 

இவர் தலைமை நீதிபதியாக இருந்த காலத்தில் கருணாநிதியும், திமுகவும், காங்கிரசும், நீதிமன்றத்தை கண்டு துளி கூட அஞ்சியதில்லை.   பாலகிருஷ்ணன் தலைமை நீதிபதியாக இருக்கும் போது, இந்த ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணைக்கு வந்திருந்தால், அந்த வழக்கு 20 அடி ஆழத்தில் குழி தோண்டி புதைக்கப் பட்டிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

 BALAKRISHNAN_304624f

இப்போது பாலகிருஷ்ணன் சிக்கியிருக்கும் சர்ச்சையைப் பற்றிப் பார்ப்போம்.

 

2009ம் ஆண்டு ஜுன் 26ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ரகுபதி முன்பாக முன்ஜாமீன் கேட்டு ஒரு வழக்கு விசாரணைக்கு வருகிறது. முன்ஜாமீன் கேட்ட நபர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி.

 

பாண்டிச்சேரியில் அறுபடைவீடு மருத்துவக் கல்லூரி என்று ஒரு கல்லூரி உள்ளது. அந்தக் கல்லூரியில் படித்து வந்த மாணவரின் பெயர் கிருபா ஸ்ரீதர். பாண்டிச்சேரி பல்கலைகழகத்தில் மதிப்பெண்களில் மோசடி நடைபெறுகிறது என்ற தகவலை அடுத்து, சிபிஐ அதிரடி சோதனைகளை மேற்கொள்கிறது. அவ்வாறு மேற்கொள்ளும் போது, பாண்டிச்சேரி பல்கலைகழகத்தின் செக்ஷன் ஆபீசர் கன்னியப்பன் என்பவர் கையில் கிருபா ஸ்ரீதர் என்ற மாணவரின் மதிப்பெண் சான்றிதழ் சிக்குகிறது. அந்த மாணவர் கண் மருத்துவ பாடத்தில் 40க்கு 9 மதிப்பெண் பெற்றிருந்ததும், அந்த மதிப்பெண் திருத்தப் பட்டதும் தெரிய வருகிறது.   கிருபா ஸ்ரீதரின் தந்தை பெயர் டாக்டர்.கிருஷ்ணமூர்த்தி. இவர் ஆ.ராசாவின் மாவட்டமான பெரம்பலூரைச் சேர்ந்தவர்.   ராசாவுக்கு சொந்தமான கோவை ஷெல்டர்ஸ் நிறுவனத்தில் பங்குதாரர்.   ராசா வழக்கறிஞராக இருந்த போது தொழில் செய்த அறையை ராசாவுக்கு வாடகைக்கு விட்டவர்.

 

கன்னியப்பனின் வங்கிக் கணக்குகளை சோதனை செய்ததில், டாக்டர்.கிருஷ்ணமூர்த்தி கன்னியப்பனுக்கு பெரும் தொகையை மதிப்பெண்ணைத் திருத்துவதற்காக கொடுத்திருப்பது சிபிஐக்கு தெரிய வந்தது. இதையடுத்து சிபிஐ, கிருஷ்ணமூர்த்தியையும், கிருபா ஸ்ரீதரையும் கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வருகிறது.

 

கைது செய்யப் படுவோமோ என்று அஞ்சிய கிருஷ்ணமூர்த்தி, தனக்கும் தனது மகனுக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோருகிறார்.

 

அந்த வழக்குதான் நீதிபதி ரகுபதி முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது. டாக்டர்.கிருஷ்ணமூர்த்திக்காக ஆஜரான வழக்கறிஞர், தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் சந்திரமோகன், நீதிபதி முன்ஜாமீன் மறுக்கப் போகிறார் என்று தெரிந்ததும், உரத்த குரலில் சத்தம் போடத் தொடங்குகிறார். “நீங்கள் எப்போது பார்த்தாலும் அரசுத் தரப்பு சொல்வதைத் தான் கேட்கிறீர்கள். “ என்று கூறுகிறார்.

 kg-balakrishnan2

நீதிபதி ரகுபதி “மிஸ்டர்.சந்திரமோகன், காலையிலிருந்து பல வழக்குகளில் பிணை வழங்கியுள்ளேன். நீங்கள் சொல்வது அபாண்டமான குற்றச் சாட்டு.   பார் கவுன்சிலின் தலைவராக உள்ள நீங்கள், இளம் வழக்கறிஞர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். இப்படி நாகரீகமில்லாமல் நடந்து சொள்ளக் கூடாது“ என்று கூறுகிறார். மீண்டும் அதே தொனியில் சந்திரமோகன் பேசவும், பொறுமை இழந்த நீதிபதி ரகுபதி “மிஸ்டர்.சந்திரமோகன்… இதே வழக்கு விஷயமாக மத்திய மந்திரி ஒருவரின் பெயரை பயன்படுத்தி நீதிமன்றத்தின் மீது நிர்பந்தம் ஏற்படுத்திய நீங்கள் இவ்வாறு நடந்து கொள்ள உரிமை இல்லை. இதை அனுமதிக்க முடியாது“ என்று கூறி, அந்த வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றிடுமாறு, உயர்நிதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டார்.

 chandra_1

 

பார் கவுன்சில் தலைவர் சந்திரமோகன்

இந்த விஷயம், டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழலில் தலைப்புச் செய்தியாக வந்தது. தேசிய ஊடகங்களும், இந்த விஷயத்தை பெரிய அளவில் செய்தியாக்கின. ஜெயலலிதா இந்த வழக்கு குறித்த பல்வேறு விபரங்களை அறிக்கையாக வெளியிட்டு, அந்த அறிக்கையில், நீதிமன்றத்தை மிரட்டிய மத்திய அமைச்சர் ஆ.ராசா தான் என்பது குழந்தைக்கு கூட தெரியும்.   இவ்வாறு நீதிமன்றத்தை மிரட்டிய ஒருவர் அமைச்சரவையில் நீடிக்கக் கூடாது என்றும் அறிக்கையில் கூறினார்.

 

தேசிய அளவில் பல்வேறு விவாதங்கள் கிளம்பின. அது ராசாவா…. ராசா இல்லையா… ராசா என்றால் பிரதமர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பெரும் விவாதங்கள் கிளம்பின.

 

இந்த விவாதங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்தது கோனக்குப்பக் காட்டில் கோபிநாதன் பாலகிருஷ்ணன் தான்.   2009 ஜுலை 5ம் தேதி, செய்தியாளர்களை சந்தித்த கே.ஜி.பாலகிருஷ்ணன், எந்த அமைச்சரும் நீதிபதியிடம் பேசவில்லை என்று தெரிவித்தார். இது குறித்து கருத்து தெரிவித்த ஆண்டிமுத்து ராசா, “இது ஒரு அரசியல் சதி“ என்றார்.

 

கே.ஜி.பாலகிருஷ்ணன் எந்த அமைச்சரும் நீதிபதியிடம் பேசவில்லை, எந்த அமைச்சர் பெயரையும் குறிப்பிடவில்லை என்று கூறியதோடு இந்த சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைக்கப் பட்டது.

 

ஏறக்குறைய ஒன்றரை ஆண்டு கழித்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒரு வழக்கறிஞர், பார் கவுன்சில் தலைவராக சந்திரமோகன் நீடிக்கக் கூடாது, அவர் நீதிமன்ற அவமதிப்பு குற்றத்தை புரிந்துள்ளார் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்த வழக்கில் கடந்த வாரம் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

 

அந்தத் தீர்ப்பில், நீதிபதி ரகுபதி அப்போதைய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் லட்சுமண கோகலேவுக்கு எழுதிய கடிதத்தை தனது தீர்ப்பில் சென்னை உயர்நீதிமன்றம் மறுபதிப்பு செய்துள்ளது.

 

அந்தக் கடிதத்தில், நீதிபதி ரகுபதி, ஆ.ராசா என்ற மத்திய அமைச்சர் உங்களிடம் பேச விரும்புகிறார் என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

 

இதையடுத்து, தற்போது, தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக உள்ள கே.ஜி.பாலகிருஷ்ணனிடம் கருத்து கேட்கப் பட்ட போது, மீண்டும் எந்த அமைச்சரின் பெயரும் குறிப்பிடப் படவில்லை என்று சாதித்தார்.

 TH10_OPED_CHIEF_JUS_114912f

கே.ஜி.பாலகிருஷ்ணனின் இந்த அண்டப் புளுகை அடுத்து, மரபை மீறி, வேறு வழியின்றி, தனது நேர்மைத் தன்மையை காக்க வேண்டும் என்பதற்காக எச்.எல்.கோகலே, தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருப்பதையும் மீறி, பத்திரிக்கைகளுக்கு ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில், நீதிபதி ரகுபதி தனக்கு எழுதிய கடிதத்தில், அமைச்சர் ஆ.ராசாவின் பெயரை குறிப்பிட்டிருந்ததாகவும், அந்தக் கடிதத்தையும் அவர் கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கு அனுப்பி வைத்ததாகவும், தெரிவித்திருந்தார்.

 

கோகலே அறிக்கையைத் தொடர்ந்து, நீதிபதி ரகுபதியும், தான் தனது கடிதத்தில் ஆ.ராசாவின் பெயரை குறிப்பிட்டிருந்ததாகவும், அந்தக் கடிதமும், கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கு அனுப்பி வைக்கப் பட்டதாகவும் தெளிவு படுத்தினார்.

 

இத்தனை தெளிவுகளுக்குப் பிறகும், கோபிநாதன் பாலகிருஷ்ணன் அமைச்சர் பெயர் குறிப்பிடப் படவில்லை என்று மறுக்கிறார் என்றால் இவர் என்ன மனிதராக இருப்பார் என்று கூறுங்கள்.

 

இதே பாலகிருஷ்ணன் தான், நீதிபதிகள் சொத்துக் கணக்கை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த போது, “சுயமரியாதை உள்ள எந்த நீதிபதியும் தனது சொத்துக் கணக்கை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மாட்டார்“ என்று கூறினார்.   எப்படி இருக்கிறது ?

 

அம்பானி சகோதரர்களுக்குள்ளான மோதல் விளைவாக இயற்கை வாயுவை பங்கிடுவது தொடர்பாக நடந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தடை விதித்ததில் பல கோடிகள் விளையாண்டிருப்ப தாகவும், இதில் பாலகிருஷ்ணனுக்கு பெரும் பங்கு இருப்பதாகவும், டெல்லி வழக்கறிஞர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

அண்ணா பல்கலைகழகத்தில் மதிப்பெண் பெறாத படிக்காத மக்கு மாணவர்கள் அரசு கோட்டாவில் சீட் பெறுகிறார்கள் என்று ஒரு ஊழல் வந்ததல்லவா…. ? அந்த அரசு கோட்டாவை சென்னை உயர்நீதிமன்றம் 2007ல் தடை செய்தது. இதை எதிர்த்து அண்ணா பல்கலைகழகம் உச்ச நீதிமன்றம் சென்றது.

 

இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதித்தது இதே புண்ணியவான் தான்.   இந்த தடையின் விளைவால், இந்த ஆண்டு, லட்சக் கணக்கில் அண்ணா பல்கலைகழக இடங்கள் ஏலம் போடப்பட்டு, ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளின் பிள்ளைகளுக்கு வழங்கப் பட்டன.

 

இப்படிப் பட்ட ஒரு நிதிபதி, மனிதனாகவே இருக்க தகுதி இல்லாத போது, தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக எப்படி இருக்க முடியும் ?

 

அதனால்தான் சவுக்கு சொல்கிறது…..

 

கோனப்குப்பக் காட்டில் கோபிநாதன் பாலகிருஷ்ணா..! ராஜினாமா செய் !

 

Comments  

 
0 #42 THUDIMANNAN 2010-12-29 12:44
KG Balakrishnan குடும்ப உறுப்பினர் செய்த ஊழல் குறித்த செய்தி ஹிந்து நாளிதழில் படிக்க http://www.thehindu.com/news/national/article995690.ece
Quote
 
 
0 #41 கடப்பாரையா 2010-12-23 17:30
அரசியலில் விவாதம் தேவையா.... எதையும் யாரையும் பேசவிடாத அடாவடியா. சமூகத் தளங்கள் என்ன செய்கின்றன. இதோ அளாவல் வழங்கும் ஒரு கருத்துரை:
http://alaaval.blogspot.com/2010/12/blog-post.html
Quote
 
 
0 #40 கவி 2010-12-22 11:29
Quoting சவுக்கு வாசகர்களே:
சென்னையில் (18.12.2010) டெல்லி பல்கிவாலா பவுண்டேஷனும், (மெட்ராஸ் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ்) சென்னை வர்த்தக தொழில் கூட்டமைப்பும் இணைந்து நடத்திய ஒரு கூட்டத்தில், வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது, தகவல் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த அருண்ஷோரி (பார்ப்பனர்)ஒரு கற்பனையான தொகையான 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் என்று எழுதி அதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறீர ்கள். அநேகமாக இத்தொகை 30 ஆயிரம் கோடிதான் என்றார்!


அப்போ 30ஆயிரம் கோடி மட்டும் அடிச்சிருந்தா அவனை விட்டுரலாமா?
Quote
 
 
+6 #39 சவுக்கு வாசகர்களே 2010-12-22 08:36
சென்னையில் (18.12.2010) டெல்லி பல்கிவாலா பவுண்டேஷனும், (மெட்ராஸ் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ்) சென்னை வர்த்தக தொழில் கூட்டமைப்பும் இணைந்து நடத்திய ஒரு கூட்டத்தில், வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது, தகவல் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த அருண்ஷோரி (பார்ப்பனர்)ஒரு கற்பனையான தொகையான 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் என்று எழுதி அதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறீர ்கள். அநேகமாக இத்தொகை 30 ஆயிரம் கோடிதான் என்றார்!
Quote
 
 
-3 #38 prathaap 2010-12-22 04:29
hey savukku yendra peyral aariya athikka sakthiyaka enaiya thalam nadadhum pulluruvi tri sakthi sundararamanin kaikkoolikale ! jadhi madha veri pidittha samuga virodhakkoottam e ungalai yedhrkondu vettri perum sakthi thiravidanukku undu purindhu kol viraivil ungalai pattriya seithikal virivak ambalamakum
Quote
 
 
+3 #37 pudhiyavan 2010-12-21 21:59
மூளை வளர்ச்சி இல்லாதவன் தவிர மக்கு மாணவன் என்று எவனும் இல்லை ஈடுபாடு இல்லாதவன் அல்லது அலட்சியவாதி தான் மக்கு எனப்படுகிறான் எல்லா நாடுகளிலும் இந்த மாதிரி மாணவர்களே வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனைகளை படைத்துள்ளனர் FIRST BENCH மாணவர்கள் நாற்காலியை சூடாக்க மட்டுமே வாழ்கிறார்கள் மருத்துவ பொறியியல் கல்லூரிகளில் சராசரி மதிப்பெண் வாங்கியவர்களே இன்று மிகப்பெரிய நிபுணர்களாக இருக்கிறார்கள் மறுக்க முடியுமா?
Quote
 
 
+4 #36 SOMBU SUPRAMANI 2010-12-21 21:45
சவுக்கு அந்த நீதிபதி லெட்டர் அனுப்பிய பிறகு கூட ஒரு மத்திய அமைச்சர் என்றே குறிப்பிட்டார். அப்புறம் ஜெ வின் திருப்திக்காக இப்ப பெயர் குறிப்பிட்டேன் என்கிறார் இதற்கு எப்படி ஒரு தலைமை நீதிபதியை பொறுப்பாக்குகிற ாய்? உன்னை சசிகலாவின் கணவர் நடராசனுடன் பார்த்திருக்கிற ேன் ஆனால் அப்போது நீ என தெரியாது ஜூவியில் உன் போட்டோ பார்த்தபின் தான் நீ நக்கீரன் காமராஜுக்கு தாத்தா என தெரிகிறது ஆனால் தமிழர்கள் முட்டாள்கள் அல்ல.
Quote
 
 
+4 #35 ARUMPARAIYARASU 2010-12-21 21:21
சசிகலா அண்ணனின் வகுப்பு தோழர் பின்னர் ஜெ ஆட்சியில் நீதிபதியான ரகுபதி ஜெவுக்கு உண்மை விசுவாசி என்பதை உலகம் அறிய எழுத வேண்டாமா?COURTESY 'தமிழ் குரல்' IS THIS PROOF ENOUGH MR.TAMILINDIAN?
Quote
 
 
+1 #34 தமிழ் குரல் 2010-12-21 20:40
ஜெவின் வழக்கறிஞராக வேலை செய்த, சசிகலா அண்ணனின் வகுப்பு தோழர் பின்னர் ஜெ ஆட்சியில் நீதிபதியானவர், ரகுபதி ஜெவுக்கு உண்மை விசுவாசி என்பதை உலகம் அறிய எழுத வேண்டாமா?

ஜெவுக்கு எதிராக கருத்து தெரிவித்த ஸ்ரீநிவாசன் எனும் திருவரங்கத்துகா ர நீதிபதியின் வீட்டிற்கு தண்ணீரையும், மின்சாரத்தையும் நிறுத்தி வைத்து ஜெ நீதிதுறைக்கு செய்த சேவை உலகம் அறிந்த ஒன்றுதானே...

2002இல் சென்னை உயர் நீதி மன்ற நிதிபதிகளுக்கு ஹோண்டா சிட்டி கார் வாங்கி கொடுத்து போது பொறுக்கிய சுபாசன் ரெட்டி போன்ற ஜெ அடிவருடி நிதிபதிகள் பற்றி சவுக்கு கண்டு கொள்ளாதே?

எப்படியோ புரட்சி தலைவி புகழ்பாடும் சவுக்கிற்கு வாழ்த்துக்கள்...
Quote
 
 
+3 #33 பச்சை தமிழன் 2010-12-21 20:07
Taking note of allegations of acquisition of 'huge assets' made against Karnataka High Court Chief Justice P D Dinakaran, Chief Justice of India K G Balakrishnan reportedly sought an explanation from the judge who denied the charges... http://www.deccanherald.com/content/25513/disproportionate-assets-cji-asks-dinakaran.html

Karnataka High Court Chief Justice P D தினகரன் தப்பிக்க விட்டது கூட இவர்தான் என்பது எல்லோருக்கும் தெரியும்
Quote
 
 
+4 #32 TamilIndian 2010-12-21 19:51
I dont see why you are so upset. Who cares if he telugan or tamilian or marathi. he speaks out loud the truth. If the you feel it is not the truth PROVE it, so that many of the (this site)followers will not believe this whole site. Don't bring regional politics into this.

Quoting டேய் சவுக்கு நாயே:
இந்தாங்க சார் பிரதமர் பேசுறார் பேசுங்க என்று யாராவது சொன்னால் உடனே பிரதமரை கோர்ட்டுக்கு கூப்டனும் என்கிறாயா. ராசா மேல எந்த தப்பும் இல்லைன்னு கோர்ட்டு சொன்னா கூட நீ உடமாட்ட போல.சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியை தலித் என்பதால் மனுஷனா அவன் என்பாயோ? தெலுங்கனான உன்னை இவ்வளவு பேச விட்டது தமிழனின் தவறு.
Quote
 
 
-12 #31 டேய் சவுக்கு நாயே 2010-12-21 19:34
இந்தாங்க சார் பிரதமர் பேசுறார் பேசுங்க என்று யாராவது சொன்னால் உடனே பிரதமரை கோர்ட்டுக்கு கூப்டனும் என்கிறாயா. ராசா மேல எந்த தப்பும் இல்லைன்னு கோர்ட்டு சொன்னா கூட நீ உடமாட்ட போல.சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியை தலித் என்பதால் மனுஷனா அவன் என்பாயோ? தெலுங்கனான உன்னை இவ்வளவு பேச விட்டது தமிழனின் தவறு.
Quote
 
 
+5 #30 Shanthi 2010-12-21 16:07
and congrats Savukku, keep going... all the best.. :-)
Quote
 
 
0 #29 Shanthi 2010-12-21 13:15
Shame to Judiciary.... :sad:
Quote
 
 
+7 #28 கரிகாலன் 2010-12-21 12:12
இவர் சென்னை உயர்நீதிமன்றத்த ில் நீதிபதியாக இருந்தபோது, மெட்ரிகுலேஷன் பள்ளிகளிடம் காசுவாங்கிக் கொண்டு அவர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கினார் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.
Quote
 
 
-15 #27 RAAVANAN 2010-12-20 23:47
இந்திய அரசியலில் தலித்துகள் பழிவாங்கப்படும் படலம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது . பல்வேறு தடைகளை மீறி 100 ஆண்டுகால போராட்டத்திற்கு ப் பின்னர் தலித்துகள் அடைந்துள்ள இந்த சொற்ப அற்ப நிலையைக் கூட பார்ப்பன வர்க்கம் சகித்துக் கொள்ளப் போவதில்லை என்று தெளிவாகத் தெரிந்திருந்தும ் ஏன் தலித் கனவான்கள் இப்பேர்ப்பட்ட காரியத்தை செய்கிறார்கள். தலித்துகளின் சுயமரியாதையை அடகு வைக்க இவர்கள் யார்? 2000 ஆயிரம் ஆண்டுகளாக பரப்பப்பட்டு வந்த தலித்துகள் திறமையற்றவர்கள் , பொறுப்பற்றவர்கள ், கயவர்கள் என்ற பார்ப்பனக் கருத்தியலை உண்மையாக்கியே தீருவதென்று கங்கணம் கட்டிக் கொண்டு சூத்திரனின் மூத்திரத்தை அள்ளிப் பருகும் இந்த தலித் கனவான்கள் பார்ப்னீயத்திற் கு சேவை செய்கிறார்கள். வாழ்நாளில் ஒரு தலித்தையாவது இவர்கள் கைதூக்கிவிட இந்தச் சட்டங்களை மீறியிருப்பார்க ளா? வெட்கம்…! வெட்கம்…!
Quote
 
 
+3 #26 vetti 2010-12-20 23:12
hi kgp resign
Quote
 
 
+4 #25 rajendra rao 2010-12-20 22:30
thalith thalith innu thalaiyila thookki vachi aadunga. avanuga puthi ippadithan irukkum. thanakku vanathaal thaan theriyum thalaivaliyum, kaaichalum. athu maathirithaan ithuvum. thalith enra porvaiyvail arasu athikaarikal seyyum attakaasathai savukku veliyiduma. aattukku vaalai alanathuthaan vachan kadavul. athu maathiri antha kalalathula livanugala mel saathi kaarnaga kurippa piraamanan othukkui vachathu yennnu ippo puriyuthu. ithukku enna pathil savukku
Quote
 
 
+4 #24 rajagopk 2010-12-20 21:59
It is disgusting to see some anti dalit comments. Corruption is done by all caste and creed. There are enough dalits who are righteous and moral just as in any other community / caste. But I would say that every Dalit who gets into prominent positions have to remain corruption free and thereby give the dalit haters a fitting reply. The bad gets into public domain easily. But not the good.
If Dalit had to see real progress, Dalit must get good examples from people holding top positions.
Quote
 
 
-23 #23 உண்மை 2010-12-20 19:22
ஒருவர் நான் பெயர் எழுதினேன் என்கிறார். ஒருவர் எழுதவில்லை என்கிறார். கடிதத்தைப் பார்த்துவிட்டு தீர்ப்பு சொல்வதுதானே முறை. பாலகிருஷ்ணன் எப்படி மறுக்கலாம் என்று எப்படி நீங்களே ஒரு தடையாணை பிறப்பிக்கிறீர் கள். "நானும் ஒரு தலித்தான்" என்று சொல்லி ஒரு சொத்தை வாதத்துக்கு வக்காலத்து வாங்குகிறீர்கள் . ஏதேதோ வட்டாரங்கள் உங்கள் காதில் கிசுகிசுத்ததாக சொல்கிறீர்கள். இதில் ஏற்கத் தகுந்த வாதங்கள் எங்கே உள்ளன. பாலகிருஷ்ணனை எதிர்ப்பதில் சாதிகடந்த தாராளவாதிபோல காட்டிக்கொண்டு, அதிமுக கொ.ப.செ. போல பேசுவதை மறைத்துவிடுகிறீ ர்கள் சவுக்கு வெல்டன். சவுக்கு-வுக்கு லண்டனில் கணக்கு இருப்பதாகவும், அதில் ஜெயலலிதா பணம் போடுவதாகவும் எனக்குக் கூட சில தகவல்கள் கூறுகின்றன.
Quote
 
 
0 #22 p.udhaya kumar 2010-12-20 18:36
நாசமாக போகட்டும்
Quote
 
 
-1 #21 பச்சைமாலு 2010-12-20 17:12
Quoting கீறி குட்டி:
கருணாநிதியின் ஜால்ரா கே ஜி பி யை குடியுரிமையை பறித்து சொத்துகளை ஜப்தி செய்து பாலைவனத்திற்கு அனுப்புமாறு உத்தரவு இடுகிறேன் ....

முதலில் அண்ணாச்சி நீங்க கீறினகுட்டியா?
விஷப்பாம்புகளை துவம்ஷம் செய்யும்
"கீரி குட்டி"யா
கீரிக்குட்டி என்னா OK கீறுக்குட்டி ன்னாஉங்க குடியுரிமய ரத்துச்செய்யவேண ்டி வரும்
Quote
 
 
+5 #20 கவிக்கோ 2010-12-20 14:32
Quoting SRI:
தமிழனை தலை குனிய வைக்கும் இது போன்ற ஆட்களை உடணே கைது செய்ய வேண்டும்


இவர் ஒன்னும் தமிழன் இல்லை. மலையாளிதான்.
Quote
 
 
+10 #19 பச்சைமாலு 2010-12-20 14:21
பாழாப்போன 17 ம்நூற்றாண்டு சட்டத்தை மாற்றி, இந்த திருடர்கள் பயப்படும்படியான இறுக்கமான சட்டம் நடைமுறைக்கு வரும்வரை
பணம் கொடுத்து ஓட்டு வாங்கி, முதலை, ஆமை,
கோட்டான், குரங்கு, ஆட்சி புரிந்துகொண்டுத ானிருக்கும். உதரணத்துக்கு ராசா என்கிற திருடன் சட்டத்தின் ஓட்டையை பயன்படுத்தி ஆஸ்பத்திரியில் அட்மிட்டாகியிரு க்கிறார், கறுணாநிதியும் முத்துக்குமார் மற்றும் தமிழகத்தின் மண்ணின் மைந்தர்கள் நியாயம் கேட்டு தியிலெரிந்தபோது .பொறுப்பில்லாமல் ராமகிருஷ்ணாவில் குளுகுளு அறையில் நாரிப்பிடிப்பென ்று ஏமாற்றினார், சட்டத்தை மாற்றுவதற்கு ஒன்றுதிரண்டு ஆட்சியை அடியோடு மாற்றவேண்டும்
Quote
 
 
+7 #18 கவிக்கோ 2010-12-20 14:07
இந்த மலையாளிகளே இப்படித்தான் எசமான்.
Quote
 
 
0 #17 kk 2010-12-20 13:51
RAJA SEEKS ANTICIPATORY BAIL
Meanwhile, A Raja has sought anticipatory bail on health grounds and is undergoing extensive health checks at Chennai's Apollo Hospital.

Similar notices have been sent to others including corporate lobbyist Niira Radia while her close associate and former Chairman of Telecom Regulatory Authority of India Pradip Baijal was being questioned by the CBI sleuths today, official sources said.
Quote
 
 
+1 #16 kk 2010-12-20 13:48
Spectrum Raja does the disappearing act?
20 Dec 2010, 1238 hrs IST, AGENCIES
On a day the CBI summoned him for questioning in connection with the 2G spectrum scam, former Telecom Minister A Raja reportedly did an escapist act in a bid to avoid the clutches of the investigating agencies.

Sources said that A Raja checked into Apollo Hospital in Chennai, where he had a brief consulting with Dr Palaniswamy there. Raja reportedly claimed illness, even as he is expected to depose in front of the CBI on Wednesday.

According to sources, Raja is undergoing extensive health checks and is likely to seek an anticipatory bail on health grounds.

Sources added that the CBI wants to question Raja about his invested money, flow of money, bank transactions in the past few years, his partners and other details.

The CBI is trying to hasten matters as it has to file a report in the Supreme Court by February.
Quote
 
 
+2 #15 julian asange 2010-12-20 13:47
supreme courtil sonnapadi alahabad courtil matuum alla supreme courtilum "AZHUGAL NATRAM" adikkirathu.
Quote
 
 
+1 #14 jp 2010-12-20 13:22
Mr.Balakrishnan if u r a true justice ,please proof yourself or else resign your present post.
Quote
 
 
+1 #13 ithayam 2010-12-20 13:12
thappu seivathu oruthar renduperaga irunthal thandanai koduthu theruthalam... aaiyeram per thappu seithal.. thandanai kodummaiyai irrunthal mattumae thavarugal kuraiyum..
Quote
 
 
+6 #12 AZIZ 2010-12-20 13:09
சென்னை : திடீர் உடல்நிலை கோளாறு காரணமாக முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று சோதனைக்காக சென்றார். விசாரணைக்கு ஆஜராகுமாறு ராஜாவுக்கு சிபிஐ நோட்டீஸ் அனுப்பி உள்ள நிலையில், ராஜா இது போன்ற சோதனைக்கு வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Quote
 
 
+17 #11 காலவன் 2010-12-20 13:01
இங்கு திரு குப்புசாமி அவர்கள் வெளியிட்டிருக்க ும் கருத்தை தயை கூர்ந்து நீக்கலாம் .. அவர் குறிப்பிட்டு இருக்கிற முன்று பேர் மட்டும் தலித்துகள் இல்லை.. இலட்சக்கணக்கான தலித்துகள் வெறும் 50,ரூபாய்க்கு கடும் உழைப்பத்தருகிறா ர்கள். இதுவே நிதர்சனம் கே.ஜீ,பி. தினகரன், ஆ.ராசா.போன்றவர்கள் கொதிக்கும் எண்ணெய் சட்டியில் போடப்படவேண்டியவ ர்கள் தான்... எனினும் முன்னாள் குடியரசத்தலைவர் நாராயணன் ஒரு தலித் என்பதை நாம் யாரும் மறந்துவிடவேண்டா ம். அவரால் முடிந்தவரை அந்த பதவிக்கு உரிய மரியாதையை கொடுக்கவே செய்தார். நாம் ஜெயலலிதா,ஜெயந்த ிரர் போன்றவர்கள் தின்ற பிள்ளைகறியை யாரும் மறக்கவும் இல்லை.. இவர்கள தலித்துகளும் இல்லை.தேர்ந்தேடுத்த அயோக்கிய பார்ப்பனர்கள். அயோக்கியர்கள் அனைவரும் ஒரு சாதி.. ஏமாறுகிற.. ஏமாந்துக்கொண்டி ருக்கிற... நாம் அனைவரும் ஒரு சாதி அவ்வளவே..
Quote
 
 
+2 #10 கீறி குட்டி 2010-12-20 12:04
கருணாநிதியின் ஜால்ரா கே ஜி பி யை குடியுரிமையை பறித்து சொத்துகளை ஜப்தி செய்து பாலைவனத்திற்கு அனுப்புமாறு உத்தரவு இடுகிறேன் ....

கே ஜி பி: நாட்டமை தீர்ப்ப மாத்து

இவன் ரொம்ப பேசறான் வாய தைத்து அனுப்புங்கள்
Quote
 
 
+5 #9 கீறி குட்டி 2010-12-20 12:01
கருணாநிதியின் ஜால்ரா கே ஜி பி யை குடியுரிமையை பறித்து சொத்துகளை ஜப்தி செய்து பாலைவனத்திற்கு அனுப்புமாறு உத்தரவு இடுகிறேன் ....
Quote
 
 
+4 #8 SRI 2010-12-20 11:19
தமிழனை தலை குனிய வைக்கும் இது போன்ற ஆட்களை உடணே கைது செய்ய வேண்டும்
Quote
 
 
+9 #7 சவுக்கு 2010-12-20 11:16
கோபி. நம்பிக்கை இழக்கலாகாது. தொடர்ந்து போராட வேண்டும்.
Quote
 
 
0 #6 amarasurya 2010-12-20 11:08
sathi olinthal nattukku vimosanam kidaikkum
Quote
 
 
+2 #5 Nithi 2010-12-20 10:56
SAVUKKU, PLS DO SOMETHING AGANIST THIS .........SHIT GUY'S
Quote
 
 
+2 #4 aruna 2010-12-20 10:52
எல்லாம் சாதி பாசத்தால்

நாசமாக போகட்டும்
Quote
 
 
+16 #3 கோபி 2010-12-20 10:50
இந்த நாட்டில் மிச்சம் மீதி வைக்காமல் எல்லாத் துறைகளிலும் ஊழல் புகுந்து விட்டது. இது இந்திய மனநிலையின் பிரதிபலிப்பு தான். ஊரிலுள்ள எல்லோரையும் ஏமாற்றி எப்படியேனும் உழைப்புக்கு மிஞ்சிய பணம் அல்லது தகுதிக்கு மீறிய நிலையை (உதாரணம்: பயணச்சீட்டு வாங்கும் வரிசையிலிருந்து , லஞ்சம் கொடுத்து வேலை நியமனம் பெறுவது வரை) அடைந்து ‘புத்திசாலித்தன மான’ வாழ்க்கை வாழ்வதுதான் இந்திய வாழ்க்கை முறை என்பது போல் ஆகிவிட்டது. இது நேர்மையான, உழைக்கின்ற இளைய தலைமுறைக்குப் பெரும் சவால் தான். இந்த வெறியாட்டம் சோர்வையும் அவநம்பிக்கையையு ம் எற்படுத்துகின்ற து. நிச்சயம் நாம் பேராபத்துகளை எதிர்கொள்ள வேண்டி வரலாம்.
Quote
 
 
+6 #2 கூத்தாடி குஞ்சாமணி 2010-12-20 10:03
எப்பூடிதான் + கூட்டி - கழிச்சு x பெருக்கி /பிரித்து பார்த்தாலும் = குப்பைதானே# வருகிறது, இந்த நீதித்திருடர்கள ் சுவாமிகள் அதிகாரிகள் அரசியல்வாதிகள் ஆகியோரை திருத்தவேண்டுமெ ன்றால் என்ன செய்யலாம் என ஒருவரும் சிந்திக்கவில்லை என்றே தோணுகிறது,
Quote
 
 
+10 #1 Grishna 2010-12-20 10:02
இது போன்ற மனிதர்களுக்கு நீதி நியாயம் என்று பேசுவதற்கு எந்த அடிப்படையும் இல்லை. நீதிபதிகள் சொத்து கணக்கை காட்டுவது சுயமரியாதையின் அவமானம் என்று கருதும் இவர் இப்போது எங்கு சென்று தந்து சுயமரியாதையை மீட்பார்?
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 123 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday2907
mod_vvisit_counterYesterday14175
mod_vvisit_counterThis week49722
mod_vvisit_counterLast week78861
mod_vvisit_counterThis month262541
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12784660