முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்தொடர்புக்கு
+++
சினிமாவுக்குப் போன சித்தாளு. அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 34
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
புதன்கிழமை, 22 டிசம்பர் 2010 21:43

 

சினிமாவுக்குப் போன சித்தாளு.   இது ஜெயகாந்தனின் மிகப் பிரபலமான நாவல். சினிமா எப்படி உழைப்பாளி மக்களின் வாழ்க்கையை சீரழிக்கிறது என்பதையும், கதாநாயக வழிபாட்டின் தீமைகளையும் மிக அழகாக உணர்த்தியிருப்பார்.

 

இந்தப் பதிவுக்கு இப்படி ஒரு தலைப்பை வைத்ததற்கான காரணம், இன்று சினிமா பார்க்கச் சென்று, பலர் சித்தாளாக மாறியதுதான்.

 

அந்த சினிமா வேறு எதுவும் அல்ல.   ராகுல் காந்திதான். ஆனால், சினிமா பார்க்க போன சித்தாள்களின் பட்டியல் தான் ஆச்சர்யத்தையும், வருத்தத்தையும் அளிக்கிறது.

 

சவுக்கு மிகுந்த மரியாதையையும், அன்பையும் வைத்திருக்கும் பத்திரிக்கையாளர், டி.என்.கோபாலன், ஞானி, இந்தப் பூமியை நம் அனைவரையும் விட அதிகமாக நேசிக்கும் நித்யானந்த் ஜெயராமன் கவிஞர் மற்றும் பத்திரிக்கையாளர் கவிதா, நல்ல மொழிபெயர்ப்பாளர் முரளிதரன் போன்றவர்கள் சித்தாள்கள் பட்டியலில் இருப்பதுதான்.

 

சவுக்குக்கு அதிக கோபம் வருவதற்கான காரணம், இவ்வாறு மிகவும் மதிக்கும் இந்த நபர்கள், ஒரு அரைவேக்காடு அரசியல்வாதியை சந்திக்க மணிக்கணக்கில் காத்துக் கிடந்ததுதான்.

 

ராகுல் காந்தி என்ற நபர் யார் ?

 2638052737_4e2bd8d72e

ராஜீவ் சோனியா தம்பதியினருக்கு பிள்ளையாகப் பிறந்ததை விட ராகுல் என்ன சாதனையை புரிந்து விட்டார். இன்று சித்தாளாக போனவர்களுள் முக்கிய சிலர், வாழ்க்கையில் பல்வேறு கஷ்டங்களையும் தாண்டி, நேர்மை ஒன்றே குறிக்கோள் என்று வாழ்ந்து வருபவர்கள்.   எப்படியாவது இந்த சமூகத்துக்கு ஏதாவது செய்ய முடியுமா என்று தவிப்பவர்கள்.

 

ஆனால் ராகுல் காந்தி என்ன செய்து விட்டார். ராகுல் காந்தியின் பெரிய கொள்ளுத் தாத்தா மோதிலால் காங்கிரஸ் கட்சியின் தலைவர். தாத்தா இந்தியாவின் பிரதமர்.   பாட்டி இந்தியாவின் பிரதமர். அப்பா இந்தியாவின் பிரதமர். அம்மா, காங்கிரஸ் கட்சியின் தலைவர்.

 nehru_edwina

 

rahul-gandhi282671

 

வறுமை என்னவென்றோ, சாதிய ஒடுக்குமுறை என்னவென்றோ, பசி என்றால் என்னவென்றோ, ராகுல் அறிவாரா ?

 

ஏதாவது முக்கிய விஷயத்தைப் பற்றி கருத்து தெரிவித்திருக்கிறாரா ராகுல் ?

 

3844315377_60b672aa8e

தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான போராட்டங்கள் நடந்து கொண்டிருந்த போது, க்யூ பிரிவு காவல்துறையும், கருணாநிதி அரசின் இதர ஏவல் படைகளும், ஈழத் தமிழர்களைப் பற்றியோ, விடுதலைப் புலிகளைப் பற்றியோ பேசினால், வளைத்து வளைத்து வழக்கு போடும் காலம் அது.   அப்போது, தங்களை தமிழ் இன உணர்வாளர்கள் என்று அழைத்துக் கொள்ளும் சில கவிஞர்களை கூட்டத்தில் பேசுவதற்கு அழைத்தால், “தோழர், ஈராக்கில் இசுலாமியர்கள் அமேரிக்காவால் கொடுமை படுத்தப் படுவது பற்றி ஒரு கூட்டம் போடுங்களேன்“ என்று அறிவுரை கூறுவார்கள். ஏனென்றால் அமெரிக்காவை திட்டினால் ஒரு பயல் கேள்வி கேட்க மாட்டான் அல்லவா ? காங்கிரசையும் கருணாநிதியையும் திட்டினால் காவல்துறை வருமே ?

 

அதே போலத்தான் ராகுல். இந்தியாவில் நடக்கும் ஊழலைப் பற்றி பேசுய்யா என்றால், பொதுவாக ஊழல் மிகவும் கெட்டது என்பார். வேதாந்தா நிறுவனம் மலைவாழ் மக்கள் வாழ்வை அழித்து, இயற்கை வளங்களை சூறையாடுவதைப் பற்றி பேசுங்கள் என்றால், வெறுமனே இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும் என்பார்.

 

காவல்துறை ஒடுக்குமுறையால் மலைவாழ் மக்கள் பாதிக்கப் படுவதைப் பற்றி பேசுங்கள் என்றால், காங்கிரஸ் ஆளாத மாநிலங்களில் நக்சலைட் தீவிரவாதம் அதிகமாக இருக்கிறது என்பார்.

ஊழலைப் பற்றிப் பேசும் ராகுல், போபர்ஸ் ஊழலில் சம்பந்தப் பட்ட, அவர்கள் குடும்ப உறுப்பினர் கொத்ரோக்கியின் வங்கிக் கணக்குகள், அவர் தாயால், தந்திரமாக விடுவிக்கப் பட்டதைப் பற்றிப்    பேசுவாரா ?

 del433771

இந்து தீவிரவாதத்தை பற்றி பேசும் ராகுல், அவர் பாட்டி இறந்த காரணத்தை வைத்து 3000 சீக்கியர்களை கொன்றழித்த அயோக்கிர்களை கட்சியை விட்டு நீக்குவாரா ?

 

ராகுலுக்கு ஆதரவாக பேசும் சிலர், அவர் இன்னும் முதிர்ச்சி அடைய வேண்டும் என்கிறார்கள். ஏழு கழுதை வயது என்று பொதுவாக அழைக்கப் படும், நாற்பது வயதை அடைந்து விட்டார் ராகுல். தனது 40வது வயதை அவரின் மனதுக்கு நெருக்கமான ஸ்பெயின் நாட்டில் சென்று கழித்து விட்டு வந்தார்.

 

இவர் வயதில் இவர் கொள்ளுத் தாத்தா பல ஆண்டுகளை சிறையில் கழித்திருந்தார். 34 வயதில் காங்கிரஸ் தலைவரானார். வெளிநாட்டில் படித்ததையும், இந்தியாவை அரசு பாதுகாப்போடு சுற்றிப் பார்த்ததையும் தவிர என்ன செய்து விட்டார் ராகுல் ?

 

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை வளர்க்க வேண்டும், காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று ஆசைப்படும் ராகுல், ஒன்றரை லட்சம் தமிழர்கள் செத்து மடிந்து கொண்டிருந்த போது என்ன செய்து கொண்டிருந்தார் ? தமிழர்களை கொன்று குவிக்க, அவரது தாயார், இலங்கை அரசோடு ரகசிய உறவு கொண்டு ஆயுதங்களை அள்ளி வழங்கிக் கொண்டிருந்த போது என்ன செய்து கொண்டிருந்தார் ராகுல் ?

 

ஒட்டு மொத்த தமிழகமே கதறியதே…. “போரை நிறுத்து. போரை நிறுத்து“ என்ற குரல் தமிழகமெங்கும் ஒலித்ததே…. இன்று தமிழ்நாடு இளைஞர் காங்கிரசை வளர்க்கத் துடிக்கும் ராகுல் என்ன செய்து கொண்டிருந்தார் ?

 

ஆக ராகுலுக்கு பிரதமர் பதவி மட்டும் வேண்டும். எவன் செத்தாலும், எவன் வீட்டில் இழவு விழுந்தாலும் கவலையில்லை என்றுதானே எடுத்துக் கொள்ள வேண்டும் ?

 

சர்ச்சைக்குரிய எந்தப் பிரச்சினையிலும் நான் நுழைய மாட்டேன். கருத்துக் கூற மாட்டேன். ஆனால் என்னை பிரதமர் ஆக்குங்கள் என்று அலையும் ஒரு அரை வேக்காட்டு அரசியல்வாதிதான் ராகுல்.

 

நாளையே ராகுல் பிரதமரானால், “தியாகத் திருவிளக்குக்குப் பிறந்த குலவிளக்கு“ என்று புகழ்ந்து விட்டு, சிங்கள கடற்படையால் தாக்கப் படும் மீனவர்களை காப்பாற்றுமாறு கருணாநிதி வேண்டுமானால் ராகுலுக்கு உருக்கமாக கடிதம் எழுதலாம்.

 

ஆனால், இன்று ராகுலை பார்க்கச் சென்றவர்கள் …… …… ……

 


priyanka-01

 

ராகுலை பார்க்க அழைக்கப் பட்ட அறிவு ஜீவிகளில் ஆடி வெள்ளி என்ற உலக சினிமா எடுத்த ராமநாராயணன் மட்டுமே பொருத்தமான நபர் என்று சவுக்கு பார்க்கிறது. அந்த படத்தை ரசித்துப் பார்க்கும் அளவு மட்டும் பக்குவம் படைத்த ராகுலும் அவரைச் சந்திக்க தகுதியானவரே….

 

மற்றவர்கள் சினிமாவுக்குப் போன சித்தாள்கள்தான்.

 

Comments  

 
-1 #86 saravana 2011-05-03 05:51
First photo graphics pola irrukku... antha amma vaaila cigerate irrukum podhu, uthadu rendum ottave illa.. vaaya thoranthukittu cigerate a eppadi pudikkamudium?
Quote
 
 
+1 #85 vellaiyan 2011-01-02 22:10
ezha tamizharukku ezhaitha dhurogam every true tamil defeat congress and jolluparty
Quote
 
 
0 #84 Quest 2010-12-30 03:14
Please watch the conversation between Nira Radia and Ratan Tata, Nira says about the relationship between Kanimozhi and Raja and also she says Raja is a dumb stupid.

http://www.youtube.com/watch?v=nTZgm2XnztA
Quote
 
 
0 #83 Quest 2010-12-30 02:56
Please listen to Nira Radia and Ratan Tata's onversation and talking about the relationship between Kanimozhi and Raja.

http://www.youtube.com/watch?v=nTZgm2XnztA&feature=related
Quote
 
 
0 #82 Thameem 2010-12-28 21:01
Tamil Police Corruption caught on camera
Please watch this tube.
http://www.youtube.com/watch?v=aRXfg4nXhjA
Quote
 
 
+2 #81 புரவி 2010-12-28 11:24
பாகிஸ்தானை தீவிரவாத நாடக சித்தரிக்கும் இந்திய ஏகதிபத்யம் இலங்கையை இறையாண்மை மிக்க நாடாக அறிவிக்கிறது.
மட்டை பந்தில் கூட பாகிஸ்தானை சேர்பதில்லை. பாகிஸ்தானில் உள்ள ஒரு குழு இங்கு வந்து ௧௫௦ பேரை கொன்றதற்கு அனாட்டின் மீது எண்ணற்ற தடைகளை விதிறது இந்திய ஏகாதிபத்தியம்.
2.அதே நேரத்தில் இலங்கையில் அந்நாட்டின் அரசாங்கமே பேரை இனபடுகொலை செய்ததை வரவேற்கிறது. ஞானியின் இந்த செயல் அங்கு நடந்த இன படுகொலையை மறைபதற்கு வேண்டுமானால் உதவும். அவரது பேச்சு இந்திய தேசிய வெறியர்களுக்கும ் ராஜபக்ஷேகல்லுக் கும் வேண்டுமானால் ஒத்து வரலாம். மனித நேயம் விரும்பும் எவரும் அவரது கருத்தை ஆமோதிக்க மாட்டார்கள்.
Quote
 
 
+3 #80 புரவி 2010-12-28 11:22
1.சினிமாதான் என்று சொல்லி நமது அன்னை இறந்து கிடக்கும் போது நாம் வீட்டில் சத்தமாக சினிமா பார்க்க லாமா?

இனவெறி பிடித்து அலைந்த தென் ஆப்ரிக்காவை அணைத்து விதங்களிலும் தனிமை படுத்திய பின்பு தான் அதன் இன வெறி சற்று தணிந்தது.
மட்டை பந்தில் கூட சேர்பதில்லை அந்த நாட்டை சேர்ப்பதில்லை. அது போல தான் அனைத்து விதங்களிலும் சிறிலங்காவை தனிமை படுத்தினால் ஒழிய அதன் இன வெறி என்பது தணியாது.

உலகெங்கும் இலங்கை மீது இனபடுகொலை மற்றும் போர் குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று குரல் எழும்பொழுது கொரியாவில் நடை பெற வேண்டிய விருது வழங்கும் நிகழ்வு இலங்கைக்கு மாற்றபடுவது அப்பட்டமான அரசியலே. மேற்படி அதிகமான தகவலுக்கு கீழ்க்கண்ட Link ஐ பார்க்கவும்.

http://www.mayseventeen.com/index.php?option=com_content&view=article&id=28:-iifa-2010&catid=7:articles&Itemid=18
Quote
 
 
-2 #79 srinivasan - saudi 2010-12-27 16:41
Quoting புரவி:
கொரியாவில் நடைபெற வேண்டிய filmfare இனபடுகொலை நடைபெற்ற கொழும்புவில் நடை பெறுவதையும் அதில் தமிழக இந்திய கலைஞர்கள் பங்கு பெறுவதையும் தவிர்க்க போராட்டம் நடத்தி கொண்டிருக்கும் போது விருது வழங்கும் நிகழ்வு அங்கு நடந்தால் என்ன மற்றும் அதை எதிர்ப்பதில் ஒரு அர்த்தமும் இல்லை என்று சொன்னவர்தான் ஞானி அவர்கள். எப்பொழுதும் விதண்டாவாதம்தான ் அவரிடத்தில் மிஞ்சி இருக்கும். வாதத்திற்கு கூட மருந்து உண்டு. ஆனால் ஞானி இடம் உள்ள விதண்டவாதத்திற் கு மருந்தே இல்லை.

Mr. Puravi, Try to understand about this. Politics & Cinema is seperate views. He insists don't mix with cinema & politics. There is no mistake, what he said. And that is not vithandavatham.
Quote
 
 
-4 #78 srinivasan - saudi 2010-12-27 16:38
Quoting mayan:
ஞானிக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தரவேண்டும்? நியாயத்தைச்சொல் வது போல கள்ள நியாயம் பேசுபவர் ஞானி. மேலோட்டமாகப் பார்த்தால் ஆஹா எல்லாவற்றையும் நியாயமாகத் தானே சொல்கிறார் என்று தோன்றும். நுணுக்கமாகப் பார்த்தால் அதில் ஆதிக்க வெறி, வஞ்சகம் எல்லாம் வெளிப்படும்.
சேது சமுத்திரம், ஜல்லிக்கட்டு,இள ையராஜா,ஈழம்-மொத்ததில் தமிழும் தமிழர் சார்ந்த எதுவுமே பிடிக்காத ஆட்களில் இவரும் ஒருவர். அவருடைய எல்லா எழுத்துக்களிலும ே அடிநாதமாய் ஆதிக்கமனோபாவமும ், அதை மறைமுகமாக வலியுருத்துவமே தோன்றும். ராகுலை அவர் மெச்சியதில் வியப்பேதுமில்லை . ஞானி எழுதியதில் எனக்கு மிகவும் பிடித்தது-ஊ(ஓ) பக்கங்களில் அவர் ஒருமுறை எழுதிய உருளைக்கிழங்கைப ் பற்றிய கட்டுரை. இனி இது போல் தக்காளி, வெண்டைக்காய், பாகற்காய் மற்றும் வெங்காயம் பற்றி மட்டும் எழுதி தமிழ் மக்களுக்குத் தொண்டு செய்ய கேட்டுக்கொள்வோம ்.


Dear sir,
Pls don't write about gnani without knowledge. Pls read his total O pakkangal then do your critic.
Quote
 
 
-4 #77 srinivasan - saudi 2010-12-27 16:36
Quoting prakash:
திரு சவுக்கு ஒன்றை ஞாபகம் வைக்கவும் உங்களின் இன்றைய இத்தனை புகழுக்கு காரணம் திரு.ஞானி அவர்கள்,உங்களை பற்றி அவர் குமுதம் இதழிலில் எழுத போய் தான் ,வெளியே வந்தார்.
ஏன் திரு. ராகுல் அவர்களை ,ஞானி சந்திக்க கூடாதா?
என்ன சார் இதற்கெல்லாம் போய் கட்டுரை எழுதி உங்கள் நேரத்தை வீனடிகிரீர்கள்.
திரு. ஞானி உங்களை பற்றி அவர் ப்ளாக் 'இல் எழுதிய பின்னர் தான் நானே சவுக்கு வாசகர் ஆனேன், மற்றும் என் நண்பர்களுக்கு எல்லாம் சொன்னேன்.
நன்றி சார்.

yes I am also entered your site after gnani's notice about your blog. Gnani is a really honest person. Pls ask him then critic about him. don't write without knowledge.
Quote
 
 
0 #76 Google Man 2010-12-27 11:20
Gnani opposed Abdul Kalam's stand on nuclear weapon. He also wrote that Abdul Kalam didnt do anything about anti-corruption while he was our President. Kalam's highlight is stimulating self-confidence and patriotism among students and youths which was/is not done/doing by any public figures in recent times. Gnani's idea is to use those money that put in Military in education development of the country. In last budget, they just spare 0.2% more money for education. But for military government spare huge money.
About LTTE, Gnani said they didnt grow into a political group or not having political coverage. LTTE always being a fighting group. Gnani said if LTTE had political coverage, they could have get international attention. Instead LTTE is just known as a rebel group to the International community. The common truth is no one in the world doesnt have sympathy for fighting groups.
Quote
 
 
+9 #75 கோவை பிரியன் 2010-12-25 19:38
ராகுல் மிக மோசமான ஒரு பெண் பிதர் எனவும் அவர் பேரில் நிறைய செக்ஸ் புகார்கள் உள்ளன எனவும் ஆங்கில புத்தகம் ஒன்றில் படித்தேன்.. உண்மைய?? விளக்கம் வேண்டும் தோழரே...
Quote
 
 
+2 #74 கோவை பிரியன் 2010-12-25 19:07
என்ன தோழரே மீண்டும் தணிக்கை யா ???????
Quote
 
 
+7 #73 கோவை பிரியன் 2010-12-25 19:05
சமீப நாட்களில் தோழர் சவுக்கு ன் மிக சிறப்பான சரியான கருத்துக்களை கொண்ட பதிவு .நம் அனைவருக்கும் கவனத்தில் கொண்டு தீவிரமாக பிரசாரம் செய்ய வேண்டிய விஷயம் காங்கிரெஸ் பெயரை சொல்லி எவனும் தமிழ் நாட்டில் நடமாடவே கூடாது என்ற நிலையி உருவாக்க வேண்டும் சமிப காலமாக ஆட்டம் மிக அதிகமாக உள்ளது. இத்தனை நபர்கள் கடந்த சில நாட்களாக அவனை சந்தித்தும் கூட ஒருவரும் என் சகோதரனை கொன்றது ஏன் ? என கேள்வி கேட்கவும் இல்லை நம் அறிவுஜீவிகள் உள்பட .. இவர்களை சகித்து கொண்டு நம்மிடையே நடமாட அனுமதிப்பதால்தா ன் பிறர் நம்மை மதிப்பதில்லை .இது போல் நமது மலையாள சகோதரர்களை கொன்று விட்டு இந்த கேவலமான நாய்கள் கேரளா வில் நடமாட முடியுமா???
Quote
 
 
-1 #72 Naveen 2010-12-25 18:42
சவுக்கு ஆசிரிரருக்கு ஒரு கேள்வி ,இந்த கேள்வி ஒரு காலம் கடந்த கேள்வி , இருப்பினும் சிந்திக்க கூடிய கேள்வி, மதிய அரசு கூட்டணி கட்சிகள் எது சொன்னாலும் செய்தாலும் மறுத்தோ அல்லது வியார்சித்தோ எழுதும் தாங்கள், ஏன் அப்படி எழுதுகிறோம் என்று சிந்தித்தால் ஈழத்தில் ஒரு இனம் பெருவர்ரியாக அழிந்தமையால் தாங்கள் குரல் கொடுக்கும் தாங்கள் அங்கே குஜராத்தில் ஒரு சிறுபான்மை இனம் அழிந்ததே அதற்க்கு இந்த அளவு விமர்சித்தும் எழுதியதும் உண்டோ என்று காரணம் அவர்கள் சிறுபான்மையினர் அனால் நாம் பெருபான்மை என்பதால் தானே இதற்க்கு உங்களின் பதில் என்ன
Quote
 
 
+5 #71 JP 2010-12-24 19:19
I ALWAYS NEVER HAD GOOD OPINION ABOUT CONGRESS. WASTE FELLOWS. FIT FOR NOTHING.
Quote
 
 
+2 #70 கணியன் 2010-12-24 16:55
சவுக்குக்கு எனது வாழ்த்துக்கள். சவுக்கு ஒரு உதவி செய்ய வேண்டும். என்னைப்போல் ஊழல் , லஞ்சம் மற்றும் அரசு முறைகேடுகளுக்கு எதிராக தனியாகவோ அல்லது ஒரு குழுவுடன் இணைந்தோ செயல் பட்டால், என்ன மாதிரி துன்பங்கள் வரும் என்பதை சில கட்டுரைகள் மற்றும் உதாரணங்களுடன் எழுதினால் மிக நன்றாக இருக்கும். நன்றி.
Quote
 
 
+8 #69 புரவி 2010-12-24 15:56
2. திருமணம் ஆகி பத்து வருடம் கழித்து தான் சோனியா கான் இந்தியன் குடியுரிமைகே வின்னபிதார். அதுவும் ஒரு பிரதமர் வீட்டில் அவரது மனைவி இந்திய குடிஉரிமை பெறாமல் இருக்கிறார் என்று ஒரு பொது வழக்கு போட்டபிந்தான் விண்ணப்பித்தார் . இவர்களோடு சேர்ந்து தான் எம் இனத்திற்கு ஆதரவாக பேசுபவர்களின் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தை போடுகிறார் கருணா(நிதி). இல்லாத ஒரு தேசத்திற்கு எதற்கு தேசிய பாதுகாப்பு சட்டம்?
இறையாண்மை என்பது நாட்டிற்கு அல்ல. மக்களுக்குத்தான ் என்பதை இந்த கயவர்கள் கூட்டம் திட்டமிட்டு மறைத்து வருகின்றனர்.
Quote
 
 
+11 #68 புரவி 2010-12-24 15:55
1.நேரு பரம்பரையினர் ஒருவர் கூட உள்ளூரில் படிப்பது கிடையாது.
படிப்பெதெல்லாம் அயல் நாட்டில். ஆட்சி அதிகாரம் செய்வது எல்லாம் இந்தியாவில். தங்கள் குடும்பத்தினர் மட்டும் நல்ல தரமான கலூரியில் அதுவும் அயல் நாட்டில் சென்று படிக்க வேண்டும். இங்குள்ள ஏழை பாளையினர் இங்குள்ள கலூரிகளிலேயே படிக்க வேண்டும். இங்குள்ள மாணவர்களிடம் ஒன்றாக சேர்ந்தது படிபெதற்கு மனம் இல்லாத நீங்கள் இங்கு வந்து தேசபற்று, சமத்துவம் பற்றி பேசுவதுதான் விந்தையாக உள்ளது. இதில் பிரதமர் கனவு வேறு. முதலில் தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு?
தமிழனுக்கும் இந்தியனுக்கும் என்ன தொடர்பு?
Quote
 
 
+10 #67 Anbukkumaran 2010-12-24 15:42
Quoting புரவி:
பீகாரில் காங்கிரஸ் ஐ கல்லறைக்கு அனுப்பி விட்டார்கள்.
ஆந்திராவில் கல்லறை கட்ட ஆரம்பித்து விட்டனர்.
தமிழகத்தில் 1967 இல் காங்கிரஸ் க்கு கட்ட பட்ட கல்லறை சரியாக கட்டப்படவில்லை.
அதில் கொஞ்சம் குறை பாடு உள்ளது. அதை இந்த தேர்தலில் நிவர்த்தி செய்து விடலாம்.

Super !!!!
Quote
 
 
+9 #66 ARUMPARAIYARASU 2010-12-24 13:23
நம்மை நிமிரவைத்த நமக்கு நம்பிக்கை கொடுத்து நாட்டின் வேகமான வளர்ச்சிக்கு வித்திட்ட அப்துல் கலாமை மிக மோசமாக விமர்சித்த இந்த ஞானி அவர் ஒன்றும் பெரிய அறிவாளி இல்லை இஸ்ரோவில் அவரை தாண்டிய ஐயர் பலர் உள்ளனர் என்று எழுதினான்.இட ஒதுக்கீட்டை ஆதரிக்கும் வரிசையில் ஒரு நாள் அந்த பாப்பான் உட்கார்ந்து கொண்டு சீன் போட்டான் என்னன்னு பாத்தா எல்லா ஏழைக்கும் கொடுன்றான் பிறப்பாலேயே பருப்புன்னு நெனைக்கிறவன் மெரிட்லேயே வாயேன்டா ங்கொய்யால.
Quote
 
 
0 #65 NA,Erasan 2010-12-24 12:55
hai
Quote
 
 
+6 #64 புரவி 2010-12-24 11:58
கொரியாவில் நடைபெற வேண்டிய filmfare இனபடுகொலை நடைபெற்ற கொழும்புவில் நடை பெறுவதையும் அதில் தமிழக இந்திய கலைஞர்கள் பங்கு பெறுவதையும் தவிர்க்க போராட்டம் நடத்தி கொண்டிருக்கும் போது விருது வழங்கும் நிகழ்வு அங்கு நடந்தால் என்ன மற்றும் அதை எதிர்ப்பதில் ஒரு அர்த்தமும் இல்லை என்று சொன்னவர்தான் ஞானி அவர்கள். எப்பொழுதும் விதண்டாவாதம்தான ் அவரிடத்தில் மிஞ்சி இருக்கும். வாதத்திற்கு கூட மருந்து உண்டு. ஆனால் ஞானி இடம் உள்ள விதண்டவாதத்திற் கு மருந்தே இல்லை.
Quote
 
 
-11 #63 Tamil congress 2010-12-24 00:32
unga timea waste pannitigala...nengathan sitthal......
Quote
 
 
+13 #62 mayan 2010-12-23 23:16
ஞானிக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தரவேண்டும்? நியாயத்தைச்சொல் வது போல கள்ள நியாயம் பேசுபவர் ஞானி. மேலோட்டமாகப் பார்த்தால் ஆஹா எல்லாவற்றையும் நியாயமாகத் தானே சொல்கிறார் என்று தோன்றும். நுணுக்கமாகப் பார்த்தால் அதில் ஆதிக்க வெறி, வஞ்சகம் எல்லாம் வெளிப்படும்.
சேது சமுத்திரம், ஜல்லிக்கட்டு,இள ையராஜா,ஈழம்-மொத்ததில் தமிழும் தமிழர் சார்ந்த எதுவுமே பிடிக்காத ஆட்களில் இவரும் ஒருவர். அவருடைய எல்லா எழுத்துக்களிலும ே அடிநாதமாய் ஆதிக்கமனோபாவமும ், அதை மறைமுகமாக வலியுருத்துவமே தோன்றும். ராகுலை அவர் மெச்சியதில் வியப்பேதுமில்லை . ஞானி எழுதியதில் எனக்கு மிகவும் பிடித்தது-ஊ(ஓ) பக்கங்களில் அவர் ஒருமுறை எழுதிய உருளைக்கிழங்கைப ் பற்றிய கட்டுரை. இனி இது போல் தக்காளி, வெண்டைக்காய், பாகற்காய் மற்றும் வெங்காயம் பற்றி மட்டும் எழுதி தமிழ் மக்களுக்குத் தொண்டு செய்ய கேட்டுக்கொள்வோம ்.
Quote
 
 
-15 #61 prakash 2010-12-23 22:33
திரு சவுக்கு ஒன்றை ஞாபகம் வைக்கவும் உங்களின் இன்றைய இத்தனை புகழுக்கு காரணம் திரு.ஞானி அவர்கள்,உங்களை பற்றி அவர் குமுதம் இதழிலில் எழுத போய் தான் ,வெளியே வந்தார்.
ஏன் திரு. ராகுல் அவர்களை ,ஞானி சந்திக்க கூடாதா?
என்ன சார் இதற்கெல்லாம் போய் கட்டுரை எழுதி உங்கள் நேரத்தை வீனடிகிரீர்கள்.
திரு. ஞானி உங்களை பற்றி அவர் ப்ளாக் 'இல் எழுதிய பின்னர் தான் நானே சவுக்கு வாசகர் ஆனேன், மற்றும் என் நண்பர்களுக்கு எல்லாம் சொன்னேன்.
நன்றி சார்.
Quote
 
 
+1 #60 p.udhaya kumar 2010-12-23 20:27
it is true
Quote
 
 
-4 #59 பாமரன்.. 2010-12-23 20:22
நண்பர்களே.. நாம் பிரபலமாவதற்கு பிரபலமானவரை குறை கூறுவது ஒரு வகை.. அதற்காக மட்டுமே சிலர் மகாத்மா காந்தியை குறை சொல்கிறார்கள். அஹிம்சை எவ்வளவு முக்கியமானது, இந்த கால கட்டத்தில் பின்பற்ற வேண்டியது என்று இம்சிக்கப்பட்ட நம் சகோதரர்களை பார்த்தாவது நாம் புரிந்து கொள்ளவேண்டும். அமைதியாக, தனியாக அமர்ந்து யோசித்து பாருங்கள் அவர் அற்புதமான மனிதர். நம் குழந்தைகளுக்கு நன்னடத்தைகளை சொல்லிக்கொடுக்க முன்னுதாரணமாக காட்ட இவர்கள் தேவை.. இவர்களையும் இழிவுபடுத்திவிட ்டு, கருணாநிதியையும் , ஜெயலலிதாவையும் காட்டுவீர்களா..? அவரை, அவரின் புகழை காங்கிரசார் பயன்படுத்திக் கொண்டு கொள்ளை அடித்தனர். அவர்களது (இந்திரா) குடும்ப விசயத்தில் தலையிட வேண்டாம். நம்மை சுற்றி நடப்பதை போன்றது தான் அது. ஆனால் பதவியை வைத்துக்கொண்டு செய்யும் அவர்களது அநீதிகளை மட்டும் பொறுத்துக்கொள்ள வே கூடாது..
Quote
 
 
+2 #58 selvam 2010-12-23 18:41
he is in the india past 40 year why dont learn TAMIL , telugu , malayalam and kannada. even I for 1 year in kannada I know karnataka, telugu why not this people they want out vote but they dont want speak our language.

Dont mistake I know Tamil typing but I have some problem to type in browser.
Quote
 
 
+4 #57 வடக்குபட்டி ராமசாமி 2010-12-23 18:21
pinnuutaththil en kelvikku pathil podavillai ean savukku? yaarintha suganyaa thevi, rahul-suganya google it?
Quote
 
 
+1 #56 குசும்பன் 2010-12-23 17:32
நக்கீரர் இப்போ சினிமா நடிகைகளின் பேட்டியும், செய்தியும் மட்டுந்தான் ஒளிபரப்புறாரா அரசியலும் உண்டா,
Quote
 
 
0 #55 kayamozhi 2010-12-23 17:29
I NEVER BELIVE THESE TYP O FLLOWS.(EZHAM PESUM KOOTHADIGAL)....

HISTORY SAYS ALL BEGGERS ( KARUNA, THIRUMA,KUNJAMA NI,NAKRAN,SUNA.PANA.VEE,ETC SELL TAMIL EMOTIONS ONLY...
Quote
 
 
0 #54 Jeeva 2010-12-23 16:51
superb
Quote
 
 
+1 #53 kalyani m 2010-12-23 16:18
rahul went to bihar the rresult is almost blank,now he comes to tn the result will be zero.
Quote
 
 
+10 #52 SOMBU SUPRAMANI 2010-12-23 16:00
கடுமையாக உழைத்தால் காங்கிரஸ்காரன் முதல்வர் ஆகிவிடலாமா? இப்பதான் புரியிது ஏன் பீகார்ல நாலு சீட் வாங்குனான்னு! பார்த்துகோங்க இவ்வளவு நம்பிக்கை வச்சிருக்கான் தமிழன் மேல்.
Quote
 
 
+4 #51 வடக்குபட்டி ராமசாமி 2010-12-23 15:26
ragul gandhi suganyaa thevi kathaiyai mudinthaal vilakkavum savukku..google searchil ithai pattri padiththaal thalai suttruthu!!!
Quote
 
 
+6 #50 வடக்குபட்டி ராமசாமி 2010-12-23 15:23
ராகுல் (காந்தி??) ஒரு rapist ன்னு ஒரு தகவல் படித்தேன் அது பற்றி விளக்க முடியுமா சவுக்கு?? இது எந்த அளவு உமது உயிருக்கு பாதுகாப்பு என்பதை பொறுத்து உண்மைகளை வாசகர்களாகிய எங்களுக்கு தெரியபடுத்தவும் .. கீழே குறிப்பிட்டுள்ள லிங்க் கை படித்தால் தலை சுட்டறுத்து..

http://www.scribd.com/doc/1991712/Rahul-Gandhi-Raped-Sukanya-Devi-in-Amethi-on-December-3-2006-
Quote
 
 
+3 #49 Deepak 2010-12-23 14:45
இந்து தீவிரவாதத்தை பற்றி பேசும் ராகுல், அவர் பாட்டி இறந்த காரணத்தை வைத்து 3000 சீக்கியர்களை கொன்றழித்த அயோக்கிர்களை கட்சியை விட்டு நீக்குவாரா
Supper
Quote
 
 
+4 #48 Deepak 2010-12-23 14:44
இந்து தீவிரவாதத்தை பற்றி பேசும் ராகுல், அவர் பாட்டி இறந்த காரணத்தை வைத்து 3000 சீக்கியர்களை கொன்றழித்த அயோக்கிர்களை கட்சியை விட்டு நீக்குவாரா ?
Quote
 
 
-3 #47 Pasam 2010-12-23 14:37
1. Your Pro LTTE stand has inflenced your article on Rahul and that is understandable. If you start talking about QUALIFICATIONS and QUALITIES, leave alone politicians, there is no good and bad press man for ordinary people like me. All you guys should write about price hike and pull down the government that kills people of further poverty(Today when the reporters ask the CM about onion price....he says go and ask PERIYAAR)

2.I am deadly against anything that violates human rights and dignity. Would anyone clarify... Jaffna Tamils all through their history considered them superior Tamils and ill treated the other tamils (estate tamils and working class tamils of Colombo). This kind of brahminical attitude only brought them to their down fall.
Quote
 
 
0 #46 Neralan 2010-12-23 14:34
Guys, Everyone telling congress wont get even one seat as they did big thing to Tamilss.....But come on guys!! The election is different and people are different they wont judge any parties based on this. If they need to judge then tell me whom they have to vote? No party has took part in any good of tamils in SL. Only Vaiko appealing for LTTE stay in the court but then too he is on wrong side. Why is he still with ADMK? Just for some purpose either good for him or to his party? Nothing else.......All these politicians are shit and definitely we all can shout and post like this as ever and nothing will happen....Savukku why dont you open up a new blog and ask for bloggers views on how to overcome this??
Quote
 
 
-2 #45 Pasam 2010-12-23 14:26
Puli aatharavu nilaipadu rahul i rompa keeltharama vimarsikka vaithirukku. Thakuthi paarthaal oruvarum intha thesathil arasiyalvathi enna pathrikai kaaranagavo, inaya ithal nadathuravanaga vo thaguthi kidayathu.

ENAKU ONNU THERIYANUM. JAFFNA THAMILARKAL EPPOLUTHUM THANGALAI MEL JAATHI THAMILARKALAGA NINAITHU NADAPATHUM PIRA THAMILARKALAI NADATHIATHUM VARALATTU UNMAYA?
Quote
 
 
+8 #44 SRI 2010-12-23 14:13
தமிழ் மக்களை உயிருடன் கொன்று புதைத்த காங்கிரஸ், எந்த நினைப்பில் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க நினைக்கிரார்கள் . ரகுல் கந்தி இவனுக்கு என்ன தெரியும், வெத்துவேட்டு, தமிழ் நாட்டில் இருந்து கங்கிரசஸ்ஸை துரத்தி அடிக்க வேண்டும்......
Quote
 
 
+1 #43 காலவன் 2010-12-23 13:18
http://ilavarasanr.blogspot.com....................நண்பர்களே ஒரு அருமை நண்பர் மேற்கண்ட தளத்தில் திரு ராகுல் கான் பற்றி சொரணை வரும் வரையில் எழுத்தால் அவரை அடிக்கிறார்.. நிச்சியம் படித்து நமது ஆதரவை அவருக்கு தெரிவியுங்கள்.
Quote
 
 
+2 #42 Abdul Rahman - Dubai 2010-12-23 13:17
ஏய்!! யாரங்கே?? ஒரு கோடி பாராட்டுகளை லாரியில் ஏத்துங்கப்பா... அந்த லாரியை சவுக்கு வீட்டுக்கு அனுப்புங்கப்பா...
Quote
 
 
+5 #41 எங்கேயோ கேட்ட குரல். 2010-12-23 13:09
சென்னை கூட்டத்தில் ராகுல் காந்தி பேசும்போது, இளைஞர் காங்கிரசார் கடுமையாக உழைத்தால் உங்களில் ஒருவர் தமிழக முதல்வராக வருவார் என்றார்.

ஆனால் இதை தங்கபாலு மொழி பெயர்த்து கூறியபோது, முதல்வர் என்ற வார்த்தையை வேண்டுமென்றே தவிர்த்தார். அதற்கு கூட்டத்தில் இருந்த பலரும் எதிர்ப்புத் தெரிவித்து கூச்சலிட்டனர்.

இதையடுத்து இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ் இளைஞர் காங்கிரசார் கடுமையாக உழைத்தால் உங்களில் ஒருவர் முதல்வராக வரமுடியும் என்று ராகுல் காந்தி கூறுகிறார் என்றார்
Quote
 
 
+5 #40 Mampattiayan 2010-12-23 11:58
Even with alliance, Chidambaram was not able to win in his constituency. Karthi Chidambaram, even actress Sneha won't vote for him..With all these jokers, Rahul is talking about CM..Vadeivel should be really careful..Rahul may take his market if he decide to enter into tamil movie industry.
Quote
 
 
+2 #39 குசும்பன் 2010-12-23 11:16
Quoting நடுநிலையான்:
பிறரைக் குறை சொல்லியே தன்னை வளர்த்துக் கொண்டவன் தம்பி சவுக்கு

அண்ணனை தெரியாமல்த்தான் கேக்கிறன்,சூனிய ா கான்,ராகுல்கான் ,கருணாகான்,ஆ ராசாக்கான், கனிமொழிக்கான்,ர ாசாத்திக்கான், இவர்களால் பாவப்பட்ட எழைகள் நன்மையா ,அல்லது நாசமாப்போனவர்கள ால் தீமையா. ஒண்ணை சொல்லுங்க.
Quote
 
 
+3 #38 rakkan 2010-12-23 11:07
The article is fine and it is nothing but truth.But Iam very much annoyed with the dirty comments.i remember the days when DMK campaigned doors to door that Karunanidhi is ungal veettu pillai..Is there anybody today for campaigning The issue of the anti tamils attitude of MK and sonia was also went unheard during Loksabha elections.We need more effective complaining during assembly election about the anti tamil attitude of the above two.Some people may complain about Jayalalitha .But even the leftists were keeping helpless against the Rajapakshe.So we want somebody who supports the welfare of tami lpeople in srilanka. both in letter and spirit.Let us work for it
Quote
 
 
+3 #37 sathesh pandian 2010-12-23 11:04
இவங்க பேரு தான் intelectualsவாம ். வேளக்கமாருங்க எல்லாம் ஒண்ணா சேர்ந்து கூட்டம் போட்ருக்காங்க
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 79 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday2624
mod_vvisit_counterYesterday13577
mod_vvisit_counterThis week48414
mod_vvisit_counterLast week95998
mod_vvisit_counterThis month282461
mod_vvisit_counterLast month382199
mod_vvisit_counterAll days13198828