முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
இரண்டாக உடைகிறதா திமுக… ? அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 100
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வெள்ளிக்கிழமை, 07 ஜனவரி 2011 07:03


திமுகவின் உள்நாட்டுப் போர் உச்சகட்டத்தை எட்டியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 2533551202_1bb302a3dd_b

திமுக என்றதும், ஏதோ மாவட்டச் செயலாளர்கள் யாராவது கலகம் செய்கிறார்கள் என்று தவறாக நினைத்து விடாதீர்கள்.

 

இது மாவட்டச் செயலாளர்கள் யாரும் செய்த கலகம் அல்ல. கழகம் என்றால் குடும்பம் என்று கருணாநிதி சொல்லியிருக்கிறார். அந்தக் குடும்பத்தில் தான் இன்று கலகம் நடந்து கொண்டு இருக்கிறது.

 

கடந்த ஆண்டின் கடைசி நாளில் தொடங்கிய அந்த பூகம்பத்தின் அதிர்வலைகள் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

 

கடந்த மாதம் 31 அன்று தொலைபேசியில் கருணாநிதியை அழைத்த அழகிரி, தனது கோபத்தையெல்லாம் கருணாநிதியிடம் கொட்டி விட்டு, ராசாவை திமுகவை விட்டு நீக்கியே ஆக வேண்டும் என்று தெளிவாக தெரிவித்து விட்டார். ஆனால் கருணாநிதி இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை.

 

கடந்த பதிவில் எழுதியிருந்தது போல, அழகிரி சென்னைக்கு வந்து கடந்த 3ம் தேதி, தனது தென் மண்டல செயலாளர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை கொடுத்தது சவுக்கு வாசகர்கள் அறிந்ததே.

 

அதற்கு முதல் நாள் கடும் குருட்சேத்திரம் நடந்திருக்கிறது சிஐடி காலனியில்.

 

“நானும் தம்பியும் ஊர் ஊரா அலஞ்சு கட்சிய வளக்குறோம், தேர்தல சந்திக்கிறோம்.   இங்க என்னடான்னா சென்னை சங்கமம்னு கூத்தடிச்சிகிட்டு இருக்காங்க. நம்ப குடும்பத்துக்கு வந்த எல்லா அவமானமும் அந்தக் குடும்பத்தாலதான். என்னை கட்த்ரோட் அரசியல்வாதின்னு ************* பேசறா…. அப்பாவும் எந்த நடவடிக்கையும் எடுக்காம கம்முனு இருக்கார். இப்படியே போனா நாளை பின்ன என்னை எவன் மதிப்பான். இவரு என்னடான்னா அந்த வீட்லயே போய் உக்காந்துகிட்டு இருக்காரு… எம்பி பதவிய ராஜினாமா செய்யச் சொல்லுங்க.   சங்கமத்த நிறுத்தச் சொல்லுங்க. நானா அந்தக் குடும்பமான்னு முடிவெடுக்கச் சொல்லுங்க…… “ என்று கடும் கோபத்துடன் பேசி விட்டு சென்றிருக்கிறார்.

 

இந்தத் தகவல்கள் அனைத்தும் கருணாநிதியிடம் சொல்லப் பட்டாலும், இறுக்கமாக இருந்த கருணாநிதி ஒன்றும் பதில் பேசவில்லை.

 Karunaaaa

நேற்று கனிமொழி பிறந்தநாளுக்கு சிஐடி காலனி சென்ற கருணாநிதி, கனிமொழியிடம் காலையில் பேசி விட்டு, மீண்டும் இரவு பேசியிருக்கிறார்.

 

நேற்று தனது அமைச்சரவை சகா ஒருவருடன் நீண்ட நேரம் கருணாநிதி புலம்பியிருக்கிறார்.

 

“என்னய்யா நெனச்சுகிட்டிருக்கான் அவன்… அவன் இல்லன்னா ஒண்ணுமே பண்ண முடியாதா…. 62லேர்ந்து இந்தக் கட்சிய வளத்தவன்யா நானு…. அவன் இல்லன்னா தேர்தல சந்திக்க முடியாதுன்னு நெனைக்கிறானா அவன்….

 

அவனுக்கு என்னய்யா பண்ணல… ?

 

எலெக்ஷன்ல நிக்கனும்னான்…. எம்பி ஆக்கினேன்.   மந்திரி ஆகனும்னான். மந்திரி பதவி வாங்கிக் கொடுத்தேன்… கட்சிப் பதவி வேணும்னான். தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவி கொடுத்தேன்…. இப்ப என்னய்யா ஓவரா பேசறான்…   இவன் சொல்ற ஆளையெல்லாம் கட்சிய விட்டு நீக்கிக்கிட்டே இருந்தா அப்புறம் கட்சியை எப்படி நடத்துறது… ?

 

என்னமோ ரொம்ப பேசறானே….. இவன் மட்டும்தான் கட்சிய வளத்தானா… ? நான் வளக்கலியா…. நீ வளக்கலியா..? இவந்தான் கட்சி மாதிரி பேசறான்… ? “ என்று புலம்பியிருக்கிறார்.

 

சென்னை சங்கமம் விழா என்ன ஆனாலும் நடந்தே தீர வேண்டும் என்று உறுதியாக கருணாநிதி கூறியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிகிக்கின்றன.

 

அடுத்த அதிர்ச்சிகரமான தகவல்.   கனிமொழிக்காக, அழகிரியை தியாகம் செய்ய கருணாநிதி துணிந்து விட்டார் என்பதுதான். ஆம் தோழர்களே…

 2241493328_ebcf2d56eb_o

முந்தாநாள் பேராசிரியர் அன்பழகனை தொடர்பு கொண்ட கருணாநிதி, அழகிரியின் தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்ததை ஏற்றுக் கொண்டதாக திமுக பொதுச் செயலாளர் என்ற முறையில் அறிக்கை வெளியிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.   எப்போது கருணாநிதி கேட்டாலும் உடனடியாக கையெழுத்து போட்டுத் தரும் அன்பழகன், முதன் முறையாக “யோசித்துச் செய்யுங்கள்“ என்று கூறியிருக்கிறார். தான் நினைத்ததை நடத்தியே தீரும் பிடிவாத குணம் கொண்டவரான கருணாநிதி, துரைமுருகனை உடனடியாக வரச் சொல்லி, அன்பழகனை சந்தித்து, அழகிரியின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளும் படி அன்பழகனை வற்புறுத்துமாறு கூறியுள்ளார். அதன் படி, அன்பழகன் நேற்று காலை 10 மணிக்கு அன்பழகனை சந்தித்து விட்டு 11.30 மணிக்கு வெளியேறியிருக்கிறார்.

 

இது இப்படி இருக்க, அஞ்சா நெஞ்சன், தொடை தட்டிக் கொண்டு களமிறங்க தயாராகி வருகிறார். தனது ஆதரவாளர்களோடு தொடர்ந்து விவாதத்தில் ஈடுபட்டு வரும் அவர், தென் மண்டல அமைப்புச் செயலாளர் ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், தனது ஆதரவு எம்எல்ஏ, எம்பிக்களோடு திமுகவை விட்டு வெளியேறுவது என்று முடிவெடுத்துள்ளதாகவும் தெரிகிறது.

 

இதற்காக ஜனவரி 14 பொங்கல் வரை கெடு விதித்திருப்பதாகவும் அழகிரி கூறியிருக்கிறார். கனிமொழி எம்பி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும், ராசா கட்சியை விட்டு நீக்கப் பட வேண்டும், சென்னை சங்கமம் ரத்து செய்யப் பட வேண்டும் என்ற தனது கோரிக்கையில் அழகிரி பிடிவாதமாக இருப்பதாகவும் தெரிகிறது.

 azhagiri_stalin_mk_kanimozhi

கருணாநிதியும் அழகிரியும் ஆளுக்கு ஒரு பக்கம் தோள் தட்டி வரும் நிலையில், திமுகவில் உள்நாட்டுப் போர் உச்சக் கட்டத்தை அடைந்திருக்கிறது.

 

அண்டை மாநிலமான ஆந்திராவில், தான் இரண்டாவதாக திருமணம் செய்த லட்சுமி சிவபார்வதிக்காக, தான் உருவாக்கிய கட்சியான தெலுங்கு தேசம் தன் வாழ் நாளிலேயே இரண்டாக உடைந்ததை பார்த்தவர் என்.டி.ராமாராவ்.

 

அந்தக் காட்சியை இது நினைவுபடுத்தவில்லை ?

 Karunanidhi_with_3rd_wife_Rajathi_Ammal_by_HKR

எது எப்படியோ, 2011 ஆண்டு அமர்க்களமாகத்தான் தொடங்கியிருக்கிறது.

 

ஈழத் தமிழர்கள் கொத்துக் குண்டுகளுக்கு இரையாகி மரண ஓலமிட்டுக் கொண்டிருந்த போது, அவர்களுக்காக போலித்தனமாக ஊளையிட்டுக் கொண்டே, ஸ்பெக்ட்ரம் பணத்தை எண்ணிக் கொண்டிருந்த இந்தக் குடும்பம், இது போன்ற நெருக்கடிகளுக்கு ஆளாவது, சவுக்குக்கு உள்ளபடியே பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது.

 

முன்னை இட்ட தீ முப்புறத்திலே

பின்னை இட்ட தீ தென்இலங்கையில்

அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே

யானும் இட்ட தீ மூள்கமூள்கவே

 

Comments  

 
0 #60 கொம்பன் 2013-03-19 18:29
ரொம்ப நல்லாத்தான் இருக்கு இப்ப இத படிக்க...எந்த இடத்துல ரூம் போட்டு இத யோசிச்சீரோ ?! :lol:
Quote
 
 
0 #59 Farid 2011-05-16 14:51
aadi patta nai kuraika than seiyum. aathu pol srilankans.
Quote
 
 
0 #58 ravicbe 2011-04-04 20:01
kushbu nadigai alla pengalai andru vimarcithathu endru padukkai pracharam pannthu.
kaipulla vettil erukkama veliel aduthu endraikku andimuthu rasa madiri karunagathukku eraiyakapogutho vadivelu kariputithalaiy 6an
Quote
 
 
0 #57 thomson 2011-01-24 20:29
:-x enna saeithalum naduku nallathu pana sari , dmk pirithal than tamil naduju nallathu :D
Quote
 
 
0 #56 Unmai 2011-01-19 16:13
Savukku is really good for people. But we cannot say Karuna is only Evil. The one who is Evil than Kanruna is people who put vote to him.
Quote
 
 
+2 #55 paulraj 2011-01-11 11:30
I do appreciate your presentation. But I am not sure whether to believe some of the assumptions, yet I give credit to your report. Keep it up. Though the politicians are responsible for the present situation in TN, the people are to be blamed equally. As a well wisher I am not able to convince the people to stand united against the evil forces including the barbarian politicians and their free schemes.
Quote
 
 
+1 #54 Senthamizh 2011-01-11 09:16
Unga ellaraiyum partha ennaku VIvek COmedy thaan gnabagam varudhu...
"Sooriyan udikum disai Kizhaku".... "Sir Sooriyanu solreengale..... neenga DMK'va".......

Edhavadhu sonna.... neenga Castista, ADMK'va, Kannadi podadhavara, sivapa irukaravara..... ennada thirundha maateengala.......
Quote
 
 
+3 #53 KINGS 2011-01-11 06:49
இது கண்டிப்பாக ஒரு நாடகமே. இதில் ஒரு சந்தேகமும் இல்லை. அமைதிப்படை படத்தில் ஒரு காட்சி வரும், சத்யராஜின் டவுசரய் துவைக்கும் சண்டையில் பேசியது மறந்து போகும். அதுபோல தற்போது நடக்கும் ஊழல் பிரச்சினையை மறைக்க இது போன்ற நாடகம் ஆடுவார்கள்.

எல்லாவற்றையும் இலவசமாக கொடுத்து தமிழனை சோம்பேறியாக்கி விட்டார்கள். தற்போது எல்லா உணவகங்களிலும் வடநாட்டு ஆட்கள் வேலை செய்கிறார்கள். எல்லா வேலைகளுக்கும் வெளி மாநிலத்து ஆட்கள் தன் வருகிறார்கள். இது இப்படியே போனால் எல்லா ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கும ் , இலவச உணவு கொடுத்து நிரந்தர ஆட்சியை பிடிக்க நினைப்பார்கள்.
பணத்தை வாங்கி கொண்டு ஓட்டு போடும் நிலை இருக்கும்வரை இவர்களை ஒன்னும் பண்ண முடியாது. வருகிற தேர்தலில் இவர்கள் ஜெயித்தாலும் ஆச்சரியப்படுவதற ்கில்லை
Quote
 
 
+4 #52 V.J.Shankar 2011-01-08 17:42
We will pray this should happen before the comming election.
Quote
 
 
+15 #51 MDMK 2011-01-08 15:09
தர்மம் என்ற ஒன்று உலகில் இருக்குமானால் கருணாநிதி நல்லபடியாக சாகமாட்டார்
Quote
 
 
+23 #50 chiyaaan 2011-01-08 11:27
ஊர அடிச்சி ஓலைல போட்ற, சோமாறி பேமானி குடும்பம் இது....... நெஞ்சில மஞ்சா சோறு இல்லாத நாய்ங்க.. சுருக்கமா சொல்லணும்னா தி.மு.க = திருட்டு முள்ளமாரி கழகம்....
Quote
 
 
-1 #49 VILAMBI 2011-01-08 00:16
MR.SAVUKKU..ALL YOUR VIEWS ARE GOOD.i AM AFRAID WHETHER YOU WOULD WRITE ABOUT JAYALALITHA ?WHY TOTAL SILENCE/ABOUT HER WHEN YOU ESPECIALLY PRINT THE PHOTO OF PRABHAKARAN? YOU REMIND ME CHO.RAMASAMI WHO WILL ALWAYS WRITE ABOUT KARUNANIDHI ONLY...ARE YOU A CASTIST?
Quote
 
 
-33 #48 மு.க 2011-01-07 22:19
அய்யா.. சவுக்கு, அதிமுககாரன்கூட இந்த அளவுக்கு போகமாட்டான். உன்னோட நன்றிக்கடன் உணர்ச்சிக்கு அளவே இல்லாமல் போய்விட்டது..
நாளைக்கு ஜெ., ஆட்சிக்கு வந்தால் நீர் மூடிக்கொண்டு எதிர்கட்சிகளை மட்டுமே விமரிசனம் செய்து உன் முகத்திரையை கிழித்துக்கொள்ள ும் நாள் வெகு விரைவில் இல்லை.. 15 வருடமாக சொத்துக் குவிப்பு வழக்கில் வாய்தா வாங்கி வரும் வாய்தா ராணியைப் பற்றி ஒரு கட்டுரை எழுதேன் பார்க்கலாம்.. இதெல்லாம் ஒரு பொழைப்பு..
Quote
 
 
+13 #47 பச்சைமாலு 2011-01-07 22:11
இரண்டாக உடைகிறதா திமுக… ?// இதென்ன கேள்வி ஒடைஞ்சு போறமாதிரி நடிப்பானுக திருட்டு தா,,,,,,,,,,ங்க , ஆனா நாங்க ஒடைச்சே ஆகணும். இவனுகள தூங்க விடக்கூடாது, கெழவன் பக்காதிருடன் ஆளுக்கும்பாடி பூனைக்கும் தோழன்ம்பான்,ஸ்ட ாலின் நசிஞ்ச கள்ளன் தந்திரமா காய் நகர்த்துவான் அழகிரி பயல கிளறி விட்டுட்டே இருக்கணும் அங்கதா இருக்கு விசயமே.
Quote
 
 
+26 #46 திலீபன் 2011-01-07 19:01
டியர் சவுக்கு,
நீங்களும் இப்படி ஏமாந்து போவீர்கள் என்று நான் நினைக்க வில்லை. கருணா குடும்பம் முழுவதும் நாடகம் போட்டுக்கொண்டு இருக்கிறது. ஒன்னே முக்கால் லட்சம் கோடியும் ராசா, கனிமொழி கூட்டணி மட்டுமே ஆட்டைய போட்ட மாதிரி இப்படி குதிக்கிறாங்க. 2008 ல நடந்தது பற்றி இந்த குடும்பம் முழுசுக்கு ஒன்னும் தெரியாதோ?
இது ஒரு உளவியல் யுக்தி போல தெரிது பாஸ். கனிமொழி, ராசா தவிர மத்தவங்களுக்கு ஒன்னுமே தெரியாத மாதிரி தமிழ் நாட்டு ஜனங்க கிட்ட ஸீன் போடுறாங்க. தேர்தல் வருது இல்ல. அதான் இந்த உத்தம புத்திரன் வேஷம். வேணுமின்னா எல்லாரும் பாருங்க. தேர்தல் சமயத்தில இந்த குடும்பம். இந்தியாவோட தியாக குடும்பம். எல்லாம் ஒன்ன சேர்ந்து வோட்டு கேட்கும். என்ன தியாக திருவிளக்குக்கு ம் 60 சத பங்கு போயிருக்கு. இப்பவே ஸ்பெக்ட்ரம் பற்றி டெல்லில நடக்கிற மாற்றத்த பார்த்தா புரியும்.
காச அள்ளி விட்டா இந்த முட்டாள் ஜனங்க எப்படியும் வோட்டு போட்டுடுவாங்க. அந்த நம்பிக்கையில தான் கருணா கும்பலும், டெல்லி கும்பலும் இருக்கு. இவனுங்க திருந்த மாட்டங்க பாஸ்.
Quote
 
 
+18 #45 Unmainaa !! 2011-01-07 18:55
அப்புறம் என்ன! கொஞ்ச நாளைக்கெல்லாம் இவனுக அடிதடியில நாலு அப்பாவி செத்து போவனுக ! அப்புறம் இந்த நாய்களெல்லாம் ஒண்ணா சேர்ந்துரும் !
Quote
 
 
+9 #44 nasar tiruppur 2011-01-07 18:09
அப்பாவியாய் ஒருவர்!

தப்பாகப் போகும் கணக்கு

தப்பினால் வரும் பிணக்கு!

தொடரும் நீலகிரி

மருந்தாய் ஏலகிரி

துரத்தும் அழகிரி

காப்பது viruthaகிரி????
Quote
 
 
+24 #43 jai 2011-01-07 17:35
தமிழின துரோகி கருணாநிதி இருக்கும் வரை தமிழ் நாடு உருப்படாது
Quote
 
 
+13 #42 பாரதிக்குஞ்சு 2011-01-07 16:50
சவுக்கின் வாய்க்கு 87.5 கிறாம் கல்கண்டு கிடைக்கும். மகிழ்ச்சியாக இருக்கிறோம்.
Quote
 
 
+15 #41 பாரதிக்குஞ்சு 2011-01-07 16:47
நிறையப்பேருக்கு அது தீபாவளி! அந்தத்திருநாளை நரகாசுரன் நடைவண்டியை விட்டு இறங்கி ஓய்வுகொண்ட திருநாளாக கொண்டாடுவோம்!
Quote
 
 
+21 #40 RAJKUMARPANDIAN 2011-01-07 16:32
Quoting பாகவெளி தமிழன்:
மிக அருமையான பதிவு. தமிழ்நாட்டு மக்களே இதை ஆவலுடன் எதிர்பார்க்கிறா ர்கள். தர்மம் என்ற ஒன்று உலகில் இருக்குமானால் கருணாநிதி நல்லபடியாக சாகமாட்டார். அவர் மட்டுமல்ல ஈழப்போருக்கு; தமிழ் துரோகத்துக்கு துணை போன அத்தனைபேருமேதான ்...


நீங்கள் சொல்லுவது நிச்சயம் நடக்கும் நண்பரே, விதைப்பும் அறுப்பும் மாறாதது,
Quote
 
 
-7 #39 Ashraf 2011-01-07 15:48
Aayiram Savukku Vandaalum DMKVAI onnum seiya mudiyathu. this is 100% true no dought
Quote
 
 
+1 #38 janakiraman 2011-01-07 15:12
katturaiai vida oorkuruvien pinnoottam super thodarattum
Quote
 
 
+3 #37 Hari uk 2011-01-07 15:11
Some how god will punish this old man.NO doubt about that.indian politics is crap.
how many educated people in india???why this old man still grabbing the seat???? Dear tamil naad people look at the telungu people they always be together, if you all been like that this kind of foxes never enter the city
Quote
 
 
+2 #36 OpenTalk 2011-01-07 13:56
மிக்க மகிழ்ச்சி!
Quote
 
 
+22 #35 பொதுஜனம் 2011-01-07 13:52
ஐயா சவுக்கு, உங்களுக்கு என்னய்யா ஜாக்கிசான் மீது காட்டம். இந்தியா மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் விரும்பப்படும் உழைப்பால் உயர்ந்த ஒரு சிறந்த மனிதரை மக்களிடம் கொள்ளையடித்தும் சுரண்டியும் குடும்பத்தை வளர்த்த கொள்ளைக்கூட்டத் தலைவருடன் இருக்கும் புகைப்படத்தை இந்தக் கட்டுரையில் போடத்தான் வேண்டுமா?
ஜாக்கிசான் ரசிகர்கள் சார்ப்பாக எங்கள் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம் :)
Quote
 
 
+14 #34 chinna 2011-01-07 13:38
கருணாநிதி சொல்லுவதும் சரி தான்,இந்த புடிங்கி அழகிரி கட்சிக்கு ஒன்னுமே செய்யவே இல்லை ,இவன் என்ன ராசா,கனி போல 1 லட்சதி 700 கோடி கருணாநிதிக்கு கொண்டு வந்து கொடுத்தான.அப்புறம் ஏன் கருணாநிதி இவன் சொல்லுவதை கேட்க வேண்டும்...........
நி ஒருத்தன் போதும் மு.க.வை அட்சியில் இருந்து எறக்க (நி ஆயிரம் ஸ்பெக்ட்ரமுக்கு சமம்)
அழகிரி நி சொல்லுவது செல்லாது... செல்லாது .........
Quote
 
 
+16 #33 Ramesh911 2011-01-07 13:33
இதை மனதில் வைத்தே எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், ஏழைகளை ஏழைகளாகவே வைத்து, அவர்களுக்கு கல்வி, மருத்துவ வசதிகளை செய்துகொடுக்காம ல், வண்ண தொலைக்காட்சி பெட்டிகளையும், இலவச அரிசி, தரமற்ற இலவச கல்வியையும், தரமற்ற இலவச மருத்துவமும், காப்பிட்டு திட்டம், வேலை பார்க்காமல் தின கூலியும் கொடுத்து அவர்களை சோம்பேறியாக்கி, வளரவிடாமல், தங்களுக்கு வோட்டு போடும் கருவிகளாக நாசப்படுதிகொண்ட ிருகின்றன.
ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு நல்ல பள்ளியும், மருத்துவ வசதியும் இருந்தாலே இந்த நாட்டு மக்கள் தங்களுடைய சுய சிந்தனையாலும், உழைப்பாலும் பன்மடங்கு உயர்ந்து விடுவார்கள். இவர்களுக்கு தொலைக்காட்சி பெட்டிகளும், இலவசம் என்ற பெயரில் பிச்சையும் தேவை இல்லை. இதனை அறிந்த கொள்ளை கும்பல்கள் இவர்களை வளர விடாது. இவ்வாறு செயல்படும் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு கொடுப்பதை எப்போது நிறுத்துவார்களோ அப்போதுதான் இந்தியா முழுமையான சுதந்திரம் அடையும்.
Quote
 
 
+10 #32 Ramesh911 2011-01-07 13:33
இந்த குடும்பம் செய்யும் அநியாயங்களை சகிச்சிகிட்டு இன்னும் வோட்டு போட மக்கள் இருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது வேதனையாக இருந்தாலும், "இவர்களுக்கு வோட்டு போடவில்லைஎன்றால ் வேறு யாரு இருக்கா?" என்ற கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை என்பதுதான் உண்மை. அந்த அம்மாவுக்கு போட்டாலும் அவர்கள் எந்த அளவுக்கு ஒழுங்காக இருப்பார்கள் என்ற ஐயம் இருக்கிற மக்கள் ஏராளம்.
இந்த நிலைமையில், "யாருக்கு போட்டா என்ன" என்ற மனநிலையில் இறுக்கும் மக்கள் இந்த திருட்டு கும்பலுக்கு காசை வாங்கிவிட்டு வோட்டு போட தயாராக இருந்தாலும் இருக்கும். தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் கூட காசுக்கோ, சாதிக்கோ வோட்டு போடும் மக்கள் மனநிலை மாறும் வரையில் நம் நாட்டுக்கு விமோசனமே கிடைக்காது.
Quote
 
 
+8 #31 sirajudeen 2011-01-07 13:21
//முன்னை இட்ட தீ முப்புறத்திலே

பின்னை இட்ட தீ தென்இலங்கையில்

அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே

யானும் இட்ட தீ மூள்கமூள்கவே//

சரியான சவுக்கடி
Quote
 
 
+11 #30 chinna 2011-01-07 13:21
முதல் photoவில் கனி என்னை பார்த்து சிரிக்குது சார்ர்ர்ர்ர்ர்ர ்ர்ர்ர்ர்ர்ர்ர் ...........

சென்னையில் உள்ள போலி பாதர் ஜெகத் விஸ்பரே சாரி கஸ்பரே என்னை மன்னியும் :D :D :D :D
Quote
 
 
0 #29 Prabhu v 2011-01-07 12:57
savukku sir,

today is the happiest day in my life..

u r rocking again.. cheers...
Quote
 
 
+1 #28 Ramesh911 2011-01-07 12:56
ivargal thamizhagathai sooraiyaduvatha i pol delhiyil italia mafia indiyavayae soorayadikondir ukkiradhu. innaatai thirutha oru puratchi vedikavendum...innaatu makkalukku nala budhi vara iraivanai vaenduvom.
Quote
 
 
+5 #27 Sombu 2011-01-07 12:55
Oooru rendu patta kalaignar'ku kondattam.
Kalaignar kudumbam rendu patta Oooru'ku.
Quote
 
 
+14 #26 Kumar.T 2011-01-07 12:43
ஆக ஒரு பழதால்(கனியால்) இந்த அரச குடும்பம் இரண்டாக உடையப்போகுதா !! கேட்க நன்றாக உள்ளது..., பண்ணிய பாவங்கள் மூட்டை கணக்கில் இருக்கிறது.. இன்னும் கருணாநிதி அனுபவிக்க வேண்டியது நிறைய இருக்கிறது...

ஸ்டார்ட் ம்யூஸிக்.... :D
Quote
 
 
+13 #25 THUDIMANNAN 2011-01-07 12:36
இராஜபக்சேக்கு கவுரவ டாக்டர் பட்டம்!!!! – ஒரு கற்பனை - Part3

ஓரமாக நின்று இந்நிகழ்ச்சியை கண்டு களித்த கேப்டன், தான் பிரபாகரனின் பெயரில் காவியம் ஒன்றில் நடித்தவன் என்றும், சோனியா அல்லது ஜெயல்லிதா என்ற இரண்டு கடவுள்களில் ஒருவருடன்தான் கூட்டணி என்பதைத் தெளிவு படுத்தினார். இந்த நாளில் தமிழ்நாடு முழுக்க டாஸ்மாக் கடைகளில் கூட்டம் முண்டி அடித்துகொண்டு இருந்ததையும் , இன்று மட்டும் 50% அதிகம் மது விற்பனை நடந்தது என்ற உண்மையையும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழ்நாடு முழுக்க திரைக் கொட்டகைகள் நிரம்பி வழிந்தன. திரைக் கொட்டகையின் உச்சியில் ஏறி நூறு பேர் திரைப்படம் பார்க்கையில் தவறி விழுந்த சிலருக்கு பண உதவி அளிக்க வேண்டும் என்றும், வீதி வீதிக்குத் திரைக் கொட்டகைகளைத் திறந்து நெரிசலைக் குறைக்க வேண்டும் என்றும் இரசிகர்கள் சாகும் வரை உண்ணவிரதப் போராட்டம் செய்ய முடிவு செய்தனர்…..
----கற்பனைதான்.. நடக்காது என்று சொல்லவும் முடியாது. ஏனெனில் தமிழனின் மறதி அப்படி
Quote
 
 
+11 #24 THUDIMANNAN 2011-01-07 12:35
இராஜபக்சேக்கு கவுரவ டாக்டர் பட்டம்!!!! – ஒரு கற்பனை - Part2

தங்கபாலுவோ, ஒவ்வொரு தமிழனும் தன்வீட்டில் அன்னை சோனியாவின் படத்தை வைத்து வணங்க வேண்டும் என்றும், தன் குழந்தைகளுக்கு இராகுல், பிரியங்கா எனப் பெயர் வைக்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அடுத்து பேசிய தந்திரன், தமிழ்தான் தன் மூச்சு என்றும், தமிழர் நலனுக்காகத் தான் தாக்கரேயிடம் ஆசி பெற்றதாகவும், தன்னைப் பார்க்க வந்து காரில் நசுங்கிய ஆயிரம் தமிழர்களுக்கு மிகுந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார். இவ்விழாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்த வைக்கோ, நெடுமாறன், சீமான் போன்ற இந்திய, தமிழ் இறையாண்மைக்கு எதிரான தீவிரவாதிகள் , தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டனர் .
ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், இராஜபக்சேக்கு விருது வழங்குவது தன் திட்டம் என்றும், மைனாரிட்டி தி.மு.க அரசு தன் திட்டங்களைத் திருடி நற்பெயர் சம்பாதிப்பதாகவு ம் தெரிவித்தார். சன்,கலைஞர் டிவி களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட விழா நிகழ்ச்சிகளை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான தமிழர்கள் கண்டு உவந்தனர்
Quote
 
 
+11 #23 THUDIMANNAN 2011-01-07 12:35
இராஜபக்சேக்கு கவுரவ டாக்டர் பட்டம்!!!! – ஒரு கற்பனை - Part1

மதுரை, 31 டிசம்பர் 2015------------------------------------
இங்கிலாந்தில் பல்கலைக் கழகத்தில் இருந்து விரட்டி அடிக்கப் பட்ட இராஜபக்சேக்கு இலங்கையில் தமிழ் மக்களுக்கு அளப்பரிய தொண்டு ஆற்றிய செயலுக்கான கவுரவ டாக்டர் பட்டம் அளிக்கும் விழா மதுரைப் பல்கலைக் கழகத்து மைதானத்தில் நடைபெற்றது. விழாவுக்குத் தலைமை ஏற்றுப் பேசிய கருணாநிதி, தானும் தன் நண்பர் இராஜபக்சேவும் தமிழ், தமிழர் மீது மிகுந்த அக்கறை கொண்டவர்கள் என்றும் அறிவித்தார். இராஜ பக்சேயை வாழ்த்திப் பேசிய ஹிந்து என்.ராம், சீனாவின் உதவியை இராஜபக்சேக்குப் பெற்றுத்தர தான் மிகவும் பாடுபட்டதாக உரையாற்றினார். அடுத்துப் பேசிய ஜி.கே வாசன், இலங்கைத் தமிழர்களின் முன்னேற்றத்துக் காக இராஜபக்சேக்கு அன்னை சோனியா செய்த உதவிகள் அளப்பரியன என்றார். அவசரமாக மைக்கைப் பிடுங்கிய இளங்கோவன் , சோனியா, இராஜபக்சே இருவருக்கும் நோபல் பரிசு இதுவரை தராதது ஏன், இதில் தி.மு.க வின் உள்குத்து இருக்கிறது என்றார்.
Quote
 
 
0 #22 david 2011-01-07 12:20
dear suvukku
jackie jan photo vir kum itharkum ethavathu sampatham irruka? oru vellai sandaiai kuripatharkaka pootirgala?
Quote
 
 
+9 #21 முத்து 2011-01-07 12:04
கருணா பற்றிய பல ரகசியங்கள் சி இ ஐ டி காலனி கதவுகளுக்குள் ஒழிந்து கிடக்கின்றன தன்னையும் தன் மகளையும் கருணா கைவிட்டால் அவருக்கு ஏற்படும் நிலமையை அழகிரியால் ஏன் புரிந்து கொள்ள முடியவில்லை... ஏற்கனவே திருமணங்கள் ஆனதை மறைத்து கருணா தன்னை ஏமாற்றி மூன்றாவதாக திருமணம் செய்து ஏமாற்றியதாக ராசாத்தியம்மாள் கண்னாயிரத்திடம் ஒரு புகார் கொடுத்தால் கருணாவின் கதி என்ன ஆகும்... (அப்பவும் ராசாத்தியம்மாவு க்காக சவுக்கு ஒரு பொது நலன் வழக்கு போடும்..?)
Quote
 
 
0 #20 thamilan nana 2011-01-07 11:45
ayyo ayyo endru alinthu poovar em thamilar sagaiyala nadithavarellam . nassamai pogattum, MK, SONIA,MK Narayanan, Shiva Shankar Menon
Quote
 
 
+1 #19 தனபால்.சு 2011-01-07 11:45
அம்மாவ பத்தி ஒரு பதிவும் செய்வதில்லையே ஏன் தலைவா... ஒருதலைபச்சமாக இருக்ககூடாது சவுக்கு...
Quote
 
 
+2 #18 rajan201076 2011-01-07 11:33
munnai pinnai annai
there is a saying matha vairu erinjal vazha orunallum - this is happening
Quote
 
 
+12 #17 Balasubramani 2011-01-07 10:56
மொகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்குக் காரணங்கள்:

1. ஔரங்கசீப்பிற்க் குப் பின் வந்த அரசர்கள் திறமை அற்றவர்களாக இருந்தார்கள்.

2. ஔரங்கசீப்பிற்க் குப் பின் வாரிசுப்போர் தொடங்கியது.

3. ஔரங்கசீப் இந்துக்களின் மனதைப் புண்படுத்தினார் .

4. ஔரங்கசீப் சீக்கியர்களின்( இலங்கைத் தமிழர்கள்) பகையை தேடிக்கொண்டார் .

வரலாறு மிக முக்கியம் அமைச்சரே
Quote
 
 
+7 #16 Balasubramani 2011-01-07 10:53
மொகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்குக் காரணங்கள்:

1. ஔரங்கசீப்பிற்க் குப் பின் வந்த அரசர்கள் திறமை அற்றவர்களாக இருந்தார்கள்.

2. ஔரங்கசீப்பிற்க் குப் பின் வாரிசுப்போர் தொடங்கியது.

3. ஔரங்கசீப் இந்துக்களின் மனதைப் புண்படுத்தினார் .

4. ஔரங்கசீப் சீக்கியர்களின்( இலங்கைத் தமிழர்கள்) பகையை தேடிக்கொண்டார் .

வரலாறு மிக முக்கியம் அமைச்சரே!
Quote
 
 
+8 #15 எங்கேயோ கேட்ட குரல். 2011-01-07 10:52
அப்பாவுடன் ஒருவர்

அப்பாவியாய் ஒருவர்!

தப்பாகப் போகும் கணக்கு

தப்பினால் வரும் பிணக்கு!

தொடரும் நீலகிரி

மருந்தாய் ஏலகிரி

துரத்தும் அழகிரி

காப்பது எந்தகிரி?

Thanks to DINAMANI
Quote
 
 
+3 #14 Nithi 2011-01-07 10:49
:cry: ALLAVKU MEERINA AMUTHAMUM NANCHU :cry:
Quote
 
 
+8 #13 tamilvendhan 2011-01-07 10:22
சவுக்காரே
நீங்க சொன்னது மட்டும் நடந்ததுன்னா ,
கனிமொழிக்கும் அவங்கம்மாவுக்கு ம் தமிழ்நாட்டு ஜனங்க
என்னைக்கும் நன்றி கடன் பட்டவங்களா இருப்பாங்க
ஆண்டவா இவரு சொல்றதெல்லாம் நடக்கணும் சாமீஈஈஈஈஈஈஈஈ
Quote
 
 
+2 #12 Natarajan.P 2011-01-07 10:14
well written
Quote
 
 
+2 #11 Rangarajan 2011-01-07 10:11
THIS IS REALLY REALLY GOOD NEWS. WE ALL ARE LOOKING FORWARD FOR THE BREAK THAT HAPPENS IN THIS KARUNANIDHI'S FAMILY AND THEN TO THE DMK ITSELF. WE ALL WISH THAT THIS DMK BECOMES EXTINCT SOON.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 164 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday9014
mod_vvisit_counterYesterday11260
mod_vvisit_counterThis week41473
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month244205
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12766324