முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
பிழை
  • Delete failed: 'plg_aklazy.php.tmp'
வாலியும், காலியும். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 27
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
ஞாயிற்றுக்கிழமை, 09 ஜனவரி 2011 01:23

சரி உங்களுக்கு க்ளூ… ஓகேவா…. கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்.

 remembering-kothamangalam-subbu07

ஒருவர் கவிஞர். மற்றொருவர் கயவர்

ஒருவர் வயதில் மூத்தவர் மற்றொருவர் ஊரை ஏய்த்தவர்

ஒருவர் வாயில் கவிதை நடைபயிலும் மற்றொருவர் வாயில் பொய்மை நடைபயிலும்.

ஒருவர் பாட்டெழுதுவதில் புலமை மிக்கவர். மற்றவர் அடுத்தவருக்கு வேட்டு வைப்பதில் திறமை மிக்கவர்.

ஒருவர் மெட்டுக்கு பாட்டெழுதுபவர். மற்றவர் ஒட்டுக் கேட்பவர்.

 

இப்போது புரிந்திருக்குமே… சவுக்கு யாரைப் பற்றிச் சொல்கிறது என்று….

 

ஆம் தோழர்களே… அந்தக் காலி வேறு யாருமல்ல. நமது ஜாபர் சேட்தான்.

 jaffer_sait_2

அவருக்கும் கவிஞர் வாலிக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா ? இருக்கிறது தோழர்களே… இருக்கிறது.

 

இந்த ஆண்டின் முதல் நாளில் பல மாதங்களாக முயற்சி செய்த ஜாபர் சேட் ஜனவரி 1ம் தேதி மாலை சரியாக 4.15 மணிக்கு கவிஞர் வாலியைச் சந்தித்தார்.   இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தவர், திரைப்பட இயக்குநர் கதிர்.   காதல் வைரஸ் படம் எடுத்தாரே… அந்தக் கதிர் தான். கவிஞர் வாலியை ஏறக்குறைய மூன்று மாதங்களாக தொந்தரவு செய்து, உங்களை ஒரு முக்கியமான நபர் பார்க்க வேண்டும் என்று ரொம்ப தொந்தரவு செய்யவும், என்னடா இது தொல்லையாகப் போய் விட்டது என்று சரி வரச் சொல்லுங்கள் என்று கூறினார்.

 

வருபவர் யார் என்பதை இயக்குநர் கதிர் சொல்லவில்லை. ஒரு முக்கியமான நபர் என்று மட்டும் சொன்னார்.

 

வாலிக்கு இந்த போலீஸ் அதிகாரிகள், யார் எவ்வளவு அதிகாரம் படைத்தவர் என்றொல்லாம் எதுவும் தெரியாது. வந்தவர், கவிஞர் வாலியின் காலைத் தொட்டு கும்பிட்டார். (ஜாபர், உங்களுக்கு இதெல்லாம் தெரியுமா ?வாலி காலையே தொட்டுக் கும்பிடுகிறீர்கள் என்றால் நீங்கள் கருணாநிதி காலிலேயே விழுந்து உருளுவீர்கள் போலிருக்கிறதே) சார் நான் உங்கள் தீவிர ரசிகன்….. உங்கள் பாடல்கள் அனைத்தும் எனக்கு மனப்பாடம். சிறிய வயதிலிருந்தே உங்கள் பாடல்களை கேட்டு வருகிறேன்.

 

நீங்கள் அனுமதி கொடுத்தால் உங்கள் பாடல்களில் பிடித்தவற்றை பாடுகிறேன் என்று கேட்டு விட்டு, மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா என்ற பாடலை முழுமையாக பாடினார் (இது கருணாநிதிக்கு ராசாத்தி அம்மாள் பாடுற பாடலாயிற்றே) பிறகு எம்ஜிஆரின் பிரபல பாடலான கொடுத்ததெல்லாம் கொடுத்தான் என்ற பாடலை பாடி விட்டு, “மண் குடிசை வாசலேன்றால் தென்றல் வர வெறுத்திடுமா, மாலை நிலா ஏழை என்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா“ என்ற வரிகளைப் பற்றி மிகவும் சிலாகித்துச் சொல்லியிருக்கிறார்.

 

எங்க வீட்டுப் பிள்ளை பாடலை முழுமையாக பாடி, எம்ஜிஆருக்காகவே எழுதப் பட்ட வரிகள் என்று “சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார்“ (நீங்க இப்போ இதைத்தானே ஜாபர் பண்ணிக்கிட்டு இருக்கீங்க) என்ற வரிகளை குறிப்பிட்டு பேசியுள்ளார்.

 

தத்துவப் பாடல்கள் மட்டுமல்லாமல் “மையேந்தும் விழியாட, மலரேந்தும் குழலாட“,   “மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே“, “குயிலாக நானிருந்தேன்ன, குரலாக நீ வரவேண்டும்“, “மன்னிக்க வேண்டுகிறேன்“ என பல பாடல்களை முழுமையாக மனப்பாடமாக சொன்னதும், வாலி அசந்து போய் விட்டார்.

DSC_0766 

 

4.15க்கு சரியாக தொடங்கிய சந்திப்பு 5.30 மணி வரை தொடர்ந்தது.   இந்த சந்திப்பின் போது 20 கைபேசி அழைப்புகள் ஜாபருக்கு வந்தன. ஆனால் வாலியே பரவாயில்லை பேசுங்கள் என்று சொன்னபோதும், எடுக்காமல் அழைப்பை தவிர்த்து இருக்கிறார் ஜாபர். ஒரே ஒரு அழைப்பை மட்டும், வாலியிடம் அனுமதி கேட்டு விட்டு, அட்டென்ட் செய்திருக்கிறார்.   (அந்த அழைப்பு லேண்ட்மார்க் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் காண்ட்ராக்டர் கிட்டேர்ந்து தானே ஜாபர்) வாலியே இவர் பணிவைப் பார்த்து அசந்து போய் விட்டார்.

 

ஜாபரை அழைத்து வந்தாரே கதிர்… அவர் எப்படிப் பட்டவர் தெரியுமா ?   கதிர் தான் காதல் வைரஸ் படத்தில் விஜயக்குமார் மஞ்சுளா தம்பதியினரின் கடைசி மகளான ஸ்ரீதேவியை அறிமுகப் படுத்தியவர். அந்தப் படத்தில் நடித்த ஸ்ரீதேவியுடன் அவருக்கு லவ்ஸ்.   ஒரு நாள் இந்தப் படத்தின் ஷுட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, முதல் ஷெட்யூல் முடிந்து 10 நாட்கள் இடைவேளை வரப் போகிறது. அந்த இடைவேளையில் நடிகை ஸ்ரீதேவிக்கு பிறந்த நாள்.

 hot-actress-sridevi

பிறந்த நாளில் தன் காதலியை பார்க்க முடியாமல் போய் விடுமே என்று, அவசர அவசரமாக காதல் வைரஸ் படத்தில் வரும் ஒரு பாடலை படமாக்குகிறார். இவர் காதலியை சைட் அடிப்பதற்கு ப்ரோட்யூசர் பணம் தண்ணியாகிறது.

 அதற்குப் பிறகு, விஜயக்குமார் குடும்பம், ராஜ்கிரண், இயக்குநர் கேயார் போலவே, கதிரை பட்டாப் பட்டி அண்டர்வேரோடு விரட்டி விட்டது ஒரு தனிக்கதை.

 

ஜாபர் தான் அயோக்கியன் என்று பார்த்தால், அவருடைய நண்பர்களும் அவரைப் போலவே இருப்பது என்ன ஒரு ஒற்றுமை ?

 

இவ்வாறாக ஒன்றரை மணி நேரம் கவிஞர் வாலியுடன் ஜாபரின் சந்திப்பு இனிதே நிறைவடைந்தது.

 

வாலி மீது இவ்வளவு அபிமானம் வைத்திருக்கும் ஜாபர் வாலி எழுதியுள்ள பாடல்களின் அர்த்தத்தை உண்மையில் புரிந்து கொண்டாரா இல்லையா என்பது தெரியவில்லை.   ஜாபருக்காக, வாலி எழுதிய “ஒரு கொடியில் இரு மலர்கள்“ படத்திலிருந்து ஒரு பாடல் இதோ…

 

“உப்பைத் தின்னவன் தண்ணி குடிப்பான்

தப்பைச் செய்தவன் தண்டனை கொள்வான்

ஒப்புக் கொண்டவன் வெட்கப்படுவான்

வெட்கப்பட்டவன் ஞானம் பெறுவான்.

 

அரிசியின் மேலே அவனவன் பெயரை

ஆண்டவன் எழுதி வைப்பான் அதை

அடுத்தவன் யாரும் எடுப்பதற்கில்லை

அவனவன் தின்று தீர்ப்பான்

 

எவரெவருக்கு என்னென்ன தேவை

இறைவன் கொடுக்கின்றார் அதை

அவசர மனிதன் ஆத்திரப்பட்டு

அதற்குள் எடுக்கின்றான்.

 

ஜாபர் இந்த பாடலை உங்கள் அபிமானக் கவிஞர் வாலி உங்களுக்காகவே எழுதியது போல் இல்லை ?

 

பெரிய மனிதர்கள் மீது அபிமானம் வைப்பது பெரிய விஷயமில்லை ஜாபர். அவர்கள் சொல்வது போல நடக்க வேண்டும். இந்த ஜென்மத்தில் நீங்கள் அது போல நடக்கப் போவது இல்லை… அப்புறம் எதற்கு வாலியிடம் போய் இப்படி நடிக்கிறீர்கள் ?

 

Comments  

 
0 #41 Abu mubeen 2011-05-14 01:20
Dear savukku please read Tamil muslim history in sri lanka, your quote for siddiq coment is not true,This is big history why muslim support srilankan goverment,i am asking once again please read Tamil muslim history in srilanka.
Quote
 
 
+2 #40 சமரன் பாலா 2011-02-02 19:27
Quoting தென்காசி ஸித்திக்:
சவுக்கு,
நீங்கள் யரென்று தெரியாது ஆனால் உங்கள் ஆக்கங்களையும் பதிவுகளையும் பார்க்கும்போதும ் சரி படிக்கும்போது சரி நீங்கள ஒரு இலட்சியத்தை நோக்கிய பயணமாகவே தெரிகின்றது. அதனூடே சில நெருடல்கள் முதல் நெருடல் ஜாபர் பற்றி அதிகமாக ஏழுதுகின்றீர்கள ் காரணம் தெரியவில்லை (குறிப்பாக ஜாபர் வாலி இருவரின் சந்திப்பு இதை பதிவதால் என்ன பலன்.) வாலி என்பவர் கலையுலக எழுத்து வியாபரி (சமஞ்சது எப்படி என்று விளக்கம் கேட்டு கவிதை எழுதிய வியாபரி தான் வாலி - வாலி சமுதாயத்ததிற்க் கு பெரும் வலி.
நெருடல் தாங்கள் இணைய பக்கத்தில் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்பவரின் நிழல் படம், அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பீர்கள் என்றால் அனைவரும் ஒரே நிலையில் இருக்க வேண்டும். சாவுவதற்க்கு சில மாதங்களுக்கு முன்பு கூட 'மூதூர்' என்ற ஊரிலிருந்து உடுத்தின வேட்டி-யுடன் 80 ஆயிரம் நிராயுதபாணியான முஸ்லிம்களை சொந்த மண்ணைவிட்டு ஈவுஇரக்கமற்று வெளியேற்றி படுபாவிதான் இந்த பிரபாகரன்

அன்புடன்
சௌதி அரேபியவிலிருந்த
தென்காசி ஸித்திக்


பிரபாகரன் ஏன் முஸ்லிம்களை வதைத்தார் என்றால் அவர்கள் கூட்டமாக சிங்களனுக்கு வால் பிடித்தார்கள். தமிழினத்தை அழிப்பதற்கு துணை போனார்கள். ஆங்கிலேயன் போல சிங்களனும் தமிழ், முஸ்லிம் இனங்களை எப்போதும் வேறுபடுத்தியே வைத்திருந்தான். அதை உணராத இஸ்லாமியர்கள் சிங்களனுக்கு துணை போனார்கள். இது வரலாற்று உண்மை
Quote
 
 
+4 #39 nasar 2011-01-14 15:21
சவுக்கை வேவு பார்க்குற ஜாபரையே சவுக்கு வேவு பார்குதுன்ற விஷ(ய)ம்தான் அது.
Quote
 
 
+2 #38 s. baskar 2011-01-13 10:50
vaali ippodu kalingerin kalil vizndu kidappathai unarthugirathu
Quote
 
 
+6 #37 கோவை பிரியன் 2011-01-12 19:21
தோழர்களே...இந்த பதிவு தேவையா?? தேவை இல்லையா ?? என்பதை விட இதன் மூலம் நம் தோழர் யாருக்கோ எதோ தகவல் கொடுக்க விரும்புகிறார் ...
Quote
 
 
+3 #36 prasad 2011-01-12 10:04
hi dear
i am trying to put most of ur articles in audio mp3 format
many listen to it
some even put this in thr mobile and listen when they r moving...pl tell me
how to add my audio clips on savukkus articles....pl reply prasad
Quote
 
 
+5 #35 Uma. 2011-01-10 16:10
Savukku Sir, Even though you are writing about Vijayakumar's family, the girl is married and setteled now. Do you have to write about it? Kindly consider.
Quote
 
 
+5 #34 விகடகவி 2011-01-10 13:46
20 தொலைபேசி அழைப்புகள் வந்தது என்றும் குறிப்பிட்ட ஒருத்தருக்கு மட்டும் பேசினார் என்றும் புள்ளி விவரங்களை கொடுத்து புல்லரிக்க வைத்து விட்டீர்கள்.
Quote
 
 
+3 #33 joe 2011-01-10 13:13
savukku sir,there are more serious matters we are expecting you to disclouse,anywa y go ahead with your investigation.best of luck.....!
Quote
 
 
+8 #32 SSK 2011-01-10 12:37
சவுக்கு சார்... விஜயகுமார் பேமிலி மேட்டருக்குள்ள லைட்டா நுழைஞ்சிட்டு வெளியே வந்துட்டீங்க. அந்த நாறிப்போன குடும்பம் பற்றி இன்னும் கொஞ்சம் டீட்டியலா எழுதி, சினிமா மோகத்தில் திரியும் இளைஞர்களுக்கு உண்மை சினிமா உலகத்தையும் தெரியப்படுத்துங ்களேன்.
Quote
 
 
+5 #31 Nithi 2011-01-10 10:30
சவுக்கு, இன்னும் எதிர்பரிக்கிறோம ்.....
Quote
 
 
+5 #30 ரோமிங் ராமன் 2011-01-10 09:50
நீங்க கொண்டு கொடுத்த நீதி மன்ற உத்தரவு இப்போது குப்பைத் தொட்டியில்!!தமி ழ் மையம் குறித்த உத்தரவைத்தான் சொல்லுகிறேன்!! திங்கள் காலை சென்னை முழுதும், சங்கம விளம்பரங்கள் போட்டாச்சு-- எல்லா விளம்பரங்களிலும ் தவறாமல் 'அக்' தமிழ் மையம் என்று இடம் பெற்றுள்ளது!! கனியும் கருணாவும் நீதிமன்றங்களுக் கு அளிக்கும் மரியாதை!!!
Quote
 
 
+6 #29 ஏகா 2011-01-10 09:50
உளவுத்துறையையே உளவு பார்க்கிறீர்கள் என்றால் கில்லாடியான டீம்யா நீங்க..
Quote
 
 
+4 #28 Shanthi 2011-01-10 09:48
savukku, avaru paatu paadunaru okay... epudi padunaru??? nalaa padunara??? :P
Quote
 
 
+4 #27 சவுக்கின் விசிறி 2011-01-10 08:16
எந்நேரமும் பரபரப்பான, சூடான செய்திகளையே படித்து ரத்தம் கொதித்து பிபி எகிற வேண்டும் என்று வாசகர்கள் கருதக்கூடாது. சில நேரங்களில் வாய்விட்டு சிரிக்கவும், லைட் ரீடிங் எனப்படும் கட்டுரைகள் வருவதால் என்ன குறைந்துவிடப் போகிறது. உண்மையான விஷயங்களை ஜாலியாக அல்லது கேலியாக எழுதினால் கட்டுரையாளரின் மனமும் லேசாகிவிடும். பிரஷர் குறையும். அப்படி சவுக்குக்கு பிரஷர் குறைந்தால், அது ஒரு வகையில் நல்லதுதானே
Quote
 
 
+1 #26 Kudanthai Dr.Saran 2011-01-10 00:58
I am a businessman doing business in Kumbakonam, Singapore and France. Many persons like me have to pay in lakhs for DMK party men for any occassions such as Stalin's Birth (Bad) Day, Maanadu etc. In addition to that, kundas and Police is doing katta panchayathu. We all were tortured by the rowdy Kutti. We spent money to DMK for controlling this guy. Jaffer was IG of Trichy who got instruction from ADMK men in support of Kutti and this Jaffer killed others in encounter except Kutti. Still we are sufferring. My story will continue about how we are troubled in cine industry by Karunanidhi family
Quote
 
 
+1 #25 Kris 2011-01-10 00:19
அன்புள்ள சவுக்கு,
ஜாபர்சேட் ஜால்ரா கவிஞர் வாலி இருவரும் சந்திப்பை வெலியிட்டது தான், புலனாய்வு. சவுக்கு வாழ்த்துக்கள்.. ஆனால்.நம்பர்-1 புலனாய்வு பத்திரிகை என்ற பெயரில் பத்திரிகை நடத்தும் சிலருக்கு, நாம் புலனாய்வு பத்திரிகை நடத்தவில்லை, திமுக ஆட்சிக்கு துதி பாடிக்கொண்டு இருக்கிறோம் என்று புரிந்தால் சரி..
அன்பு
REPEAT!!!
Quote
 
 
+8 #24 பாமரன் 2011-01-10 00:16
Quoting Ashraf:
சவுக்கு நீ ஜாபர் சேட்டை எதிர்கிறாய் என்றால் அது உன்னுடைய சுயநலம். ஜாபர்சேட்ட்டால் நீ தனிப்பட்ட முறையில் பாதிக்கபட்ட்டால ் ஏன் உன் எழுத்து மூலமாக எல்லோரையும் குழப்ப வேண்டும். என்னை பொறுத்தவரை உனக்கு சுயநலம் அதிகமாக இருக்கிறது. நீ ஆளுஹிரவர்களுக்க ு எதிரா எழுதினால் உன்னை வைத்து தாலாட்ட சொல்லுகிறையா ! உனக்கு அதிமுகவும் ஜெயலலிதாவும் நல்லவர்களாக தெரிரர்களா அவர்கள் கறைபடியாத கரங்களுக்கு சொந்த காரர்களா


Dear Mr.Ram, It is not a question of wasting savukku's valuable time. Jaffer Sait has mounted round the clock surveillance on savukku. This is to convey a message to Jaffer Sait, that it is Savukku which mounts surveillance on Jaffer. WHEREVER YOU GO SAVUKKU NETWORK FOLLOWS.

சவுக்கு என்ன சொல்ல வரார் ன்னா ஜாபர்சேட் ஏதும் தப்பு பண்ண முடியாதுன்னும் அவர் பன்ற எல்லாத்தையும் கண்காணித்து கொண்டு இருக்கிறார்கள் என்பதுதான். இங்கு நடக்கும் அத்தனை தவறுகளுக்கும் இவருடைய தவறான வழி முறைகளே காரணம் ஆகும். அதனால சவுக்கின் இந்த முயற்சி சரியானதே.
Quote
 
 
+6 #23 ம.பொன்ராஜ் 2011-01-09 23:02
'ஒ'ட்டுக் கேட்பவர் என்பதை 'ஓ'ட்டுக் கேட்பவர் என்று ஒற்றை எழுத்தை மட்டும் மாற்றி இந்த கட்டுரையின் ஆரம்ப பத்தியை படித்தால் பதில் 'கருணாநிதி' என்று வருகிறது....!!!
Quote
 
 
+13 #22 வடை சுடும் பாட்டி 2011-01-09 22:50
அட வெத்து வேட்டுங்களா. இதுகூடவா புரியலை. ஜாபரை பத்தி ஏன் சும்மா எழுதறீங்கன்னு ஆளாளுக்கு சவுக்கு மேல பல்லை போட்டு பேசறீங்களே. அதுல ஒரு சூட்சமம் இருக்குதே புரியலையா. அதுக்குத்தான் நான் சுட்டு வைச்ச வடைய திண்ணுட்டு படுக்கணும்ன்றது . அதாவது, சவுக்கை வேவு பார்க்குற ஜாபரையே சவுக்கு வேவு பார்குதுன்ற விஷ(ய)ம்தான் அது. என்னையே வேவு பாக்குறீயே ஜாபர், நான் உன்னையும் வேவு பார்த்துக்கிட்ட ே இருக்கேனு அர்த்தம். இது கூட தெரியாம இங்க வந்து சவுண்டு குடுத்தா... போய் வடைய திண்ணுட்டு போய், சவுக்கை படியுங்கடா
Quote
 
 
-2 #21 Anand 2011-01-09 21:48
நீங்களும் மொக்க போட ஆரம்பித்து விட்டீர்களே.
Quote
 
 
-16 #20 Ashraf 2011-01-09 21:03
சவுக்கு நீ ஜாபர் சேட்டை எதிர்கிறாய் என்றால் அது உன்னுடைய சுயநலம். ஜாபர்சேட்ட்டால் நீ தனிப்பட்ட முறையில் பாதிக்கபட்ட்டால ் ஏன் உன் எழுத்து மூலமாக எல்லோரையும் குழப்ப வேண்டும். என்னை பொறுத்தவரை உனக்கு சுயநலம் அதிகமாக இருக்கிறது. நீ ஆளுஹிரவர்களுக்க ு எதிரா எழுதினால் உன்னை வைத்து தாலாட்ட சொல்லுகிறையா ! உனக்கு அதிமுகவும் ஜெயலலிதாவும் நல்லவர்களாக தெரிரர்களா அவர்கள் கறைபடியாத கரங்களுக்கு சொந்த காரர்களா
Quote
 
 
+8 #19 Premkumar SJ 2011-01-09 19:57
>>
WHEREVER YOU GO SAVUKKU NETWORK FOLLOWS.
>>

கலக்கல் :)
Quote
 
 
+2 #18 ram1304 2011-01-09 19:38
Oh ok super... I liked your post of conversation with Chidambaram and kani. Still i would rate that than this one...

Quoting சவுக்கு:
Dear Mr.Ram, It is not a question of wasting savukku's valuable time. Jaffer Sait has mounted round the clock surveillance on savukku. This is to convey a message to Jaffer Sait, that it is Savukku which mounts surveillance on Jaffer. WHEREVER YOU GO SAVUKKU NETWORK FOLLOWS.
Quote
 
 
+5 #17 unmai 2011-01-09 19:07
Kadhal virus padaththukku Kathir thaan producer. avarin sontha thayaarippu.
Quote
 
 
+4 #16 சவுக்கு நண்பன் 2011-01-09 18:07
Quoting தென்காசி ஸித்திக்:
இவன் முஸ்லிம் மக்களுக்கு செய்த கொடுமைகளை சொல்லி மாளாது. ஈழ தமிழர்களை ஆதரிப்பது என்பது வேறு வேலுப்பிள்ளை பிரபாகனை ஆதரிப்பது என்பது வேறு.


சித்திக் உங்களுக்கு மதப்பற்று ரொம்ப பொங்கி வழியுது(ம்). சிறுபான்மையினர் போர்வையில் மக்களின் பணத்தை திருடும்
எவனும் பிணத்திற்கும், பன்றிக்கும் நிகரானவர்களே. அவைகள் யாராக இருந்தாலும் சவுக்கு தோலுரிக்கும், அதனை எம்மதத்தை சேர்ந்தவனாயினும ் ஆதரிப்பான் இந்தியகுடிமகனாய ் இருந்தால்.
மதத்தை முன்னிறுத்தி வன்முறைக்கு வழிகோள்வது உங்களுக்கு ஒன்றும் புதிதல்லவே. வரலாறும் அதனை உறுதிசெய்கிறது.
ஒருவன் பிரச்சனைகள் அனைத்துக்கும் மதச்சாயம் பூசி, மதகண்ணாடி கொண்டு பார்த்தால் அவன் அழிவினை நோக்கியே செல்வான்.முடிவில் ஒரு மயிரையும் புடுங்க முடியாது.
அப்படியொரு விவாதம் மட்டுமே வேண்டுமென்றால் வேறு தளத்தை தேடவும்.

குறிப்பு: இழிபிறப்புகளான, உலகமகா தீவிரவாதிங்க நிறையபேரு, நாறிப்போன, ஏக வசனத்தில் பேசும் இடம், தட்ஸ்தமிழ் .அணுகி பார்க்கவும்...உங்களுக்கு நண்பர்கள் கூட கிடைக்கலாம்.
Quote
 
 
+5 #15 குப்புசாமி 2011-01-09 17:22
இதில் நீங்க என்ன சொல்ல வாறீங்க சவுக்கு... இதில் ஏதும் சமூக நலன் இல்லையே... ஜப்பார் வாலியின் ரசிகன் என்ற முறையில் அவரை சந்தித்தது தவறில்லையே....
Quote
 
 
+1 #14 selvam 2011-01-09 15:19
Atharam illamal Annan Prabha vai pathi thenkasi pesa vendam... Thamizhar nilam thamizarke when ISLAM STarted when TAMIL started please think.
Quote
 
 
+1 #13 அனாமத்து 2011-01-09 14:54
எதற்கு தங்களின் நேரத்தை இது போல பதிவிற்க்கு தேவையில்லாமல் செலவிடுகின்றீர் கள்.
Quote
 
 
+14 #12 கருத்து 2011-01-09 13:35
வீட்டுக்கு வீடு இலவசங்களை வ்ழங்குவதற்கு பதிலாக ஊருக்கு ஊர் சாப்பாட்டு சத்திரங்களை அமைத்து டாஸ்மாக் மேட்டர் முதல் அனைத்தையும் இலவசமாக வழங்கினால் கழக கண்மணிகளும், உடன்பிறபுகளும், ரத்தத்தின் ரத்தங்களும் சரக்கடித்த சந்தோஷத்தில் கலைஞர்கே வோட்டை குத்திவிடுவார்க ளே... யாராவது மஞ்சள் துண்டு மஸ்தானுக்கு சொல்லுங்க தலைவா..
Quote
 
 
+11 #11 சவுக்கு 2011-01-09 13:28
Dear Mr.Ram, It is not a question of wasting savukku's valuable time. Jaffer Sait has mounted round the clock surveillance on savukku. This is to convey a message to Jaffer Sait, that it is Savukku which mounts surveillance on Jaffer. WHEREVER YOU GO SAVUKKU NETWORK FOLLOWS.
Quote
 
 
+1 #10 kuppusamy 2011-01-09 12:18
ennappa savukku, uppu sappu illaamal oru newsu ! nalla investigate panni ellaarudaiya tholaiyum urithu kaattappa... indha cinema karanaiyum vidaathe...
thanks.
Quote
 
 
+2 #9 ஏகா 2011-01-09 10:58
ஏதோ பெருச எதிர்பபர்த்தேன் .. சப்புன்னு ஆகிபோச்சு..
Quote
 
 
-22 #8 தென்காசி ஸித்திக் 2011-01-09 10:45
ஈழத்தில் விடுதலை புலிகளை தலைநிமிர்ந்து நடப்படதற்க்கு முஸ்லிம்கள் செய்த உதவி போன்று எவனும் செய்ததில்லை என்பதனை அறிய அவர்கள் வீரநாளின் புகைபடங்களில் முஸ்லிம்களின் எண்ணிக்கையை பார்க்கவும் (ஆரம்ப காலத்தில்)

அன்புடன்
சௌதி அரேபியவிலிருந்த
தென்காசி ஸித்திக்
Quote
 
 
-19 #7 தென்காசி ஸித்திக் 2011-01-09 10:44
இவன் முஸ்லிம் மக்களுக்கு செய்த கொடுமைகளை சொல்லி மாளாது. ஈழ தமிழர்களை ஆதரிப்பது என்பது வேறு வேலுப்பிள்ளை பிரபாகனை ஆதரிப்பது என்பது வேறு.
Quote
 
 
-13 #6 தென்காசி ஸித்திக் 2011-01-09 10:44
சவுக்கு,
நீங்கள் யரென்று தெரியாது ஆனால் உங்கள் ஆக்கங்களையும் பதிவுகளையும் பார்க்கும்போதும ் சரி படிக்கும்போது சரி நீங்கள ஒரு இலட்சியத்தை நோக்கிய பயணமாகவே தெரிகின்றது. அதனூடே சில நெருடல்கள் முதல் நெருடல் ஜாபர் பற்றி அதிகமாக ஏழுதுகின்றீர்கள ் காரணம் தெரியவில்லை (குறிப்பாக ஜாபர் வாலி இருவரின் சந்திப்பு இதை பதிவதால் என்ன பலன்.) வாலி என்பவர் கலையுலக எழுத்து வியாபரி (சமஞ்சது எப்படி என்று விளக்கம் கேட்டு கவிதை எழுதிய வியாபரி தான் வாலி - வாலி சமுதாயத்ததிற்க் கு பெரும் வலி.
நெருடல் தாங்கள் இணைய பக்கத்தில் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்பவரின் நிழல் படம், அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பீர்கள் என்றால் அனைவரும் ஒரே நிலையில் இருக்க வேண்டும். சாவுவதற்க்கு சில மாதங்களுக்கு முன்பு கூட 'மூதூர்' என்ற ஊரிலிருந்து உடுத்தின வேட்டி-யுடன் 80 ஆயிரம் நிராயுதபாணியான முஸ்லிம்களை சொந்த மண்ணைவிட்டு ஈவுஇரக்கமற்று வெளியேற்றி படுபாவிதான் இந்த பிரபாகரன்

அன்புடன்
சௌதி அரேபியவிலிருந்த
தென்காசி ஸித்திக்
Quote
 
 
+4 #5 Sree 2011-01-09 08:51
Total Waste of Time!
We are not expecting these kind of articles from Savukku.
Quote
 
 
+3 #4 Raj 2011-01-09 08:37
Quoting ram1304:
dear savukku,

whats the need for this post. you wasted your valuable time.

I guess that this is just part1 :-)
Quote
 
 
+3 #3 sadharana thamilan 2011-01-09 07:40
http://www.youtube.com/watch?v=-E3r0kUGfoc

Vaali Speeks about Seeman and Spectrum on 8-1-11 evening
Quote
 
 
+17 #2 anbu 2011-01-09 06:07
அன்புள்ள சவுக்கு,
ஜாபர்சேட் ஜால்ரா கவிஞர் வாலி இருவரும் சந்திப்பை வெலியிட்டது தான், புலனாய்வு. சவுக்கு வாழ்த்துக்கள்.. ஆனால்.நம்பர்-1 புலனாய்வு பத்திரிகை என்ற பெயரில் பத்திரிகை நடத்தும் சிலருக்கு, நாம் புலனாய்வு பத்திரிகை நடத்தவில்லை, திமுக ஆட்சிக்கு துதி பாடிக்கொண்டு இருக்கிறோம் என்று புரிந்தால் சரி..
அன்பு
Quote
 
 
+5 #1 ram1304 2011-01-09 05:45
dear savukku,

whats the need for this post. you wasted your valuable time.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 115 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday6280
mod_vvisit_counterYesterday12350
mod_vvisit_counterThis week75532
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month278264
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12800383