முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்தொடர்புக்கு
+++
பட்டுக்கோட்டையிலிருந்து இரா.சரவணன். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 30
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
புதன்கிழமை, 12 ஜனவரி 2011 07:39

 

 

புதுக்கோட்டையிலிருந்து சரவணன் தெரியும். இது என்னடா இது. பட்டுக்கோட்டையிலிருந்து சரவணன், அதுவும் இரா.சரவணன் என்று பார்க்கிறீர்களா ?   வேறு யார். ஜுனியர் விகடனில் உள்ள ஜாபர் சேட்டின் அடிமை சரவணன் தான்.

 

பத்திரிக்கையாளர்களின் உலகம் வித்தியாசமானது. இங்கே, நீங்கள் ரவுடியிடமும் பழக வேண்டும், காவல்துறை அதிகாரிகளிடமும் பழக வேண்டும். இரண்டு பேரிடமும் பழகா விட்டால் நீங்கள் நல்ல பத்திரிக்கையாளராக இருக்கவே முடியாது. ரவுடியானாலும் சரி, காவல்துறை அதிகாரியானாலும் சரி, பத்திரிக்கையாளனின் தயவு வேண்டும் என்பதால், அளவுக்கு அதிகமாகவே பழகுவார்கள், கொஞ்சுவார்கள், கெஞ்சுவார்கள், ‘கவனி‘ப்பார்கள், மிரட்டுவார்கள், விரட்டுவார்கள், வேகப்படுவார்கள், விசனப்படுவார்கள்.   ஆனால் ஒரு நல்ல பத்திரிக்கையாளன், இவர்களோடு பழகி, இவர்களின், கொஞ்சல், கெஞ்சல் அனைத்துக்கும் ஆட்படாமல் தாமரை இலை தண்ணீர் போல இருக்க வேண்டும்.

 

பழகாமல் இருந்தாலும் தவறு, தேவைக்கு அதிகமாக பழகினாலும் தவறு. இந்தக் கலையில் நேர்த்தியாக தேர்ச்சி பெற்று, தகவல் அளிக்கும் சோர்சுகளையும் நல்ல முறையில் பேணி, அவர்களோடு, அன்யோன்யமாக ஆகாமல், நல்ல செய்திகளையும் மக்களுக்குத் தரும் பத்திரிக்கையாளர்கள் வெகு குறைவு.

 

இந்த இரா.சரவணன் இரண்டாவது வகை.   தேவைக்கு அதிகமாக பழகத் தொடங்கி, கடைசியில் ஜாபர் சேட்டுக்கு அடிமையாகவே மாறிப் போனார்.

 

‘எங்கெங்கு காணிணும் ஏடிஜிப்பிக்கள் என்ற ஜுனியர் விகடன் கட்டுரைக்கு, சவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அச்செய்தி பொய் செய்தி, ஏகக் காலத்தில் 13 பேர் ஏடிஜிபிக்கள் ஆகவே முடியாது என்று எழுதியிருந்தது. சவுக்கு சொன்னபடியே முதலில் 5 பேரும், பிறகு 8 பேரும் ஏடிஜிபி ஆனார்கள். ஆனால், இரா.சரவணன், தான் முதலில் எழுதிய கட்டுரையே சரி என்பது போல, கடந்த இதழ் ஜுனியர் விகடனில் எழுதியுள்ளார். ஜாபர் சேட்டுக்கு கிடைத்த பதவி உயர்வு, அதில் உள்ள சட்டவிரோதம், ஜாபர் சேட் நேற்றைக்கு முன்தினம், காவல்துறை உயர் அதிகாரிகள் கிளப்பில், அவரோடு பதவி உயர்வு பெற்ற அதிகாரிகளோடு சேர்ந்து, நன்றாக சரக்கடித்து விட்டு, டான்ஸ் ஆடியது முதற்கொண்டு, சவுக்கு அனைத்து விபரங்களையும் சேகரித்து வருகிறது. அது பற்றித் தனியே எழுதப் படும். இந்தப் பதிவு இரா.சரவணனைப் பற்றியது. சரவணன் மீதான தனி நபர் தாக்குதலை சவுக்கு தொடங்கவில்லை. ஆனால், இரா.சரவணனைப் பற்றிய அடுத்த பதிவு, தனி நபர் தாக்குதலாகவே அமையும்.

 

ஜாபர் சேட், சட்டவிரோதமாக அவரது மனைவி பெயரிலும், பின்னர் மகள் பெயரிலும் வீட்டு மனை வாங்கி ஊழல் புரிந்தது தொடர்பாக ஜுனியர் விகடனில் செய்திக் கட்டுரை தயார் செய்து கொண்டிருக்கும் போது இரா.சரவணன் என்ன செய்தார் தெரியுமா ? அடுத்த அறைக்குச் சென்று, ஜாபர் சேட்டுக்கு போன் செய்து, ‘சார் உங்களப் பத்தி மேட்டர் பண்றாங்க சார்‘ என்று உளவு சொன்னவர். ஜுனியர் விகடன் இதழ் தான் சரவணனுக்கு சோறு போடுகிறது, அவர் குடும்பத்தை வாழ வைக்கிறது. அப்படிப் பட்ட நிறுவனத்துக்கு இப்படி ஒரு துரோகத்தை இழைக்கலாமா ?

 jaffer

இப்போது சமீபத்தில் நடந்த ஒரு டெவலப்மென்ட்டை பார்த்து விடுவோம். ஆறு அல்லது ஏழு மாதங்களுக்கு முன், செம்மொழி மாநாட்டை ஒட்டி, விழுப்புரம் தண்டவாளத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பை பற்றி படித்திருப்பீர்கள். இந்த சம்பவத்தை ஒட்டி ஜுலை 21 நாளிட்ட ஜுனியர் விகடன் இதழில் “உடைந்தது தண்டவாளம்…. உடைகிறதா வண்டவாளம் ? “ என்ற தலைப்பில் அந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் குற்றவாளிகள் ஏன் இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை, அரசே இந்த வழக்கை மறந்து விட்டதா, அல்லது ஊத்தி மூடப்பட்டு விட்டதா என்று கேள்வி எழுப்பப் பட்டிருந்தது. மேலும், சிலரிடம் கருத்து கேட்கப் பட்டு, செம்மொழி மாநாடு பிரச்சினை இல்லாமல் நடக்க வேண்டும் என்பதற்காக இந்த குண்டு வெடிப்பு நடத்தப் பட்டதோ என்ற சந்தேகம் இருக்கிறது என்று கூறப் பட்டது.

 

இந்த இதழ் வெளியானது ஜுலை மாதம். இப்போது தமிழக அரசு சார்பில் ஜுனியர் விகடன் இதழ் மீது மான நஷ்ட வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கில் முதல் குற்றவாளி, அந்த கட்டுரையை எழுதிய இரா.சரவணன். மற்றவர்கள், ஜுனியர் விகடனின் ஆசிரியர் அசோகன் மற்றும் விகடன் குழுமத்தின் பிரின்டர் மற்றும் பப்ளிஷர் சீனிவாசன்.

 kazgu-jv-1

முதலில் இந்த வழக்கு குறித்துப் பார்ப்போம்.   தமிழக அரசு சார்பாக இந்த வழக்கை தொடுத்திருப்பவர் அரசு வழக்குரைஞர்.   அந்த மனுவில் என்ன குறிப்பிடப்படடிருக்கிறது தெரியுமா ?

 

“The above said matter in the newspaper contains false and baseless allegations and frivolous statements which are per se defamatory. The said matter has completely damaged and undermined the high reputation of the Hon’ble Chief Minister in the eye of the party cadres, colleagues and the general public. The allegations have been made falsely and it is per se defamatory with an ulterior motive to defame him.

 

The Chief Minister enjoys a good reputation among the people as an able administrator with honesty and he is a mass leader of Tamils throughout the world…. After the publication of the said defamatory statement several persons including Thiru.TKS.Elangovan, Thiru.Balaraman,SAM.Hussain and other persons approached the Hon’ble Chief Minister both in person and through telephone and enquired him about the said statements and also conveyed that after reading the defamatory statements, they have changed the high opinion they had on him”

  

“ அந்த செய்தித் தாளில் வந்த செய்தி அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் பொய்யான குற்றச்சாட்டுகளையும் வாக்கு மூலங்களையும் அவமானப்படுத்தும் நோக்கோடு அமைந்துள்ளது. அந்த கட்டுரை முதலமைச்சரின் உயர்ந்த புகழுக்கு களங்கம் கற்பித்ததோடு அல்லாமல், அவர் கட்சித் தொண்டர்கள், சகாக்கள், பொதுமக்கள் மத்தியில் அவருக்கு இழுக்கை தேடித் தந்திருக்கிறது. முதலமைச்சரை களங்கப் படுத்த வேண்டும் என்பதற்காகவே, இந்த செய்திக் கட்டுரை வெளியிடப் பட்டிருக்கிறது

 

முதலமைச்சருக்கு பொதுமக்கள் மத்தியில் மிகச் சிறந்த நிர்வாகி என்ற பெயர் இருப்பது மட்டுமல்லாமல், அவர் சர்வதேச தமிழ்ச் சமூகத்தின் தலைவர். இந்த கட்டுரையை படித்து விட்டு டிகேஎஸ் இளங்கோவன், பலராமன், எஸ்ஏஎம் உசேன் ஆகியோர் நேரிலும் தொலைபேசியிலும் முதலமைச்சரைப் பற்றி வைத்திருந்த உயர்ந்த கருத்தை மாற்றிக் கொண்டு விட்டோம் என்று தெரிவித்தார்கள்.”

 

முதல் வரியை படியுங்கள். “அந்த செய்தித் தாளில் வந்த செய்தி” ஜுனியர் விகடன் எப்போதிருந்து செய்தித் தாளானது ?   மேலும் அந்த கட்டுரை வெளியாகி ஆறு மாதங்களுக்கு மேலாகியும் இது வரை ஒருவரையும் கைது செய்யாதது ஏன் ?

 

இதையெல்லாம் விட முக்கியமான விஷயம், மான நஷ்ட ஈடு வழக்கை மானமுள்ளவர்கள் தானே தொடுக்க வேண்டும் ? கருணாநிதி போல மானங்கெட்ட மனிதர் மானநஷ்ட ஈடு வழக்கு தொடர்வதே நீதிமன்றத்தின் பொன்னான நேரத்தை வீணாக்குவதல்லவா ?

 

கருணாநிதி சர்வதேச தமிழ்ச்சமூகத்தின் தலைவர் என்று எந்த முட்டாப்பயல் சொன்னான் ? முதலில் கருணாநிதி இதை நிரூபிக்கட்டும்.   பிறகு வழக்கை மேற்கொண்டு தொடரலாம்.   அப்புறம் டிகேஎஸ் இளங்கோவன், உசேன் ஆகியோர் இக்கட்டுரையை படித்து விட்டு, கருணாநிதி மீது இருந்த உயர்ந்த மதிப்பை மாற்றிக் கொண்டு விட்டார்களாம் !!!!!! ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஊரே காறித் துப்புகிறது. அதைப் பார்த்து விட்டு மதிப்பு குறையவில்லையாம். இந்தக் கட்டுரையை படித்து விட்டு கருணாநிதி மீது இருந்த மதிப்பு குறைந்து விட்டதால், உசேனும், இளங்கோவனும் எம்எல்ஏ, எம்பி பதவியை ராஜினாமா செய்ய வேண்டியதுதானே ? இன்று வரை ஸ்பெக்ட்ரத்தில் ஊழலே நடக்கவில்லை என்று இளங்கோவன் தானே பேசி வருகிறார்.

 

ராசாத்தி அம்மாள் கருணாநிதியை திட்டுவதை கேட்டீர்கள் என்றால் காது கூசும்.  அதை ஜாபரை வைத்து தொலைபேசியில் ஒட்டுக் கேட்ட கருணாநிதி 15 நாட்களுக்கும் மேலாக சிஐடி காலனி பக்கம் போகாமல் இருந்தார். அதற்கு பிறகு இன்று வரை தினமும் அங்கே போய் வந்து கொண்டுதானே இருக்கிறார். இவரை விட ஒரு மானங்கெட்ட மனிதரை உலகில் எங்காவது பார்க்க முடியுமா ? தமிழனின் மானத்தை இத்தாலி காலடியில் அடகு வைத்தவர் தானே இவர் ?

 Karunaaaa

இந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தை பற்றி தினமணி எழுதிய தலையங்கத்தை சவுக்கு மறு பிரசுரம் செய்கிறது

 

“அமைதிப் பூங்காவான தமிழகம் வன்முறையின் விதைக்கலனாக மாறுவது என்பதை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது. தீவிரவாதம் தமிழகத்தில் வேரூன்றுவது என்பது வருங்காலச் சந்ததியரின் வாழ்க்கையைச் சீர்குலைக்கும் என்பதிலும் கட்சிபேதமின்றி யாருக்கும் எந்தவிதச் சந்தேகமும் இருக்க வழியில்லை.

விழுப்புரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் 1 மீட்டர் நீளத்துக்கு ரயில்வே தண்டவாளம் வெடிவைத்துத் தகர்க்கப்பட்டிருப்பது என்பது அதிர்ச்சியளிக்கும் செய்தி. இது நிச்சயமாகத் தற்செயலாக நடந்த நிகழ்வு அல்ல.

சனிக்கிழமையன்று இந்த ரயில் தடத்தில் சென்ற மலைக்கோட்டை விரைவு ரயில், அதிர்ஷ்டவசத்தால் மிகப்பெரிய விபத்திலிருந்து தப்பியது. விபத்தைத் தடுத்த ரயில்வே ஊழியர்கள் அனைவரையும் தினமணி பாராட்டுகிறது.

தண்டவாளம் தகர்க்கப்பட்டிருந்த இடத்தில் விடுதலைப்புலி ஆதரவாளர்களின் துண்டுப்பிரசுரங்கள் காணப்பட்டதாக காவல்துறை தெரிவிக்கிறது. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் சகோதரர்கள் என்று குறிப்பிட்டு இலங்கை அதிபர் ராஜபட்சவின் இந்திய விஜயத்தைக் கண்டிப்பதாக அந்தத் துண்டுப் பிரசுரங்கள் தெரிவிப்பதாகக் காவல்துறை கூறுகிறது.

இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இருந்தவர்கள் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் என்றால் அவர்கள் உடனடியாகக் கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டியவர்கள். வன்முறையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மன்னிக்கப்படக் கூடாது. சட்டத்தின் பிடியிலிருந்து தப்பக் கூடாது. மேலும், பல அப்பாவி உயிர்களைப் பலி கொண்டு தங்களது பழியைத் தீர்த்துக்கொள்ள முயலும் யாரையும், அவர்களது லட்சியம் நல்லதாகவே இருந்தாலும், நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.

அதேநேரத்தில், மாநிலக் காவல்துறைத் தலைவர் லத்திகா சரண் முழுமையான விசாரணை நடைபெறும் முன்பே ஒருசில மணிநேரங்களில் இந்தச் சம்பவத்துக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் தொடர்பு இல்லை என்று அவசர அவசரமாக அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன என்பது தெரியவில்லை. புலனாய்வுத் துறை ஐ.ஜி.யான ஜாபர் சேட், இது விடுதலைப்புலி ஆதரவாளர்களால் நடத்தப்பட்ட செயல்தான் என்று விசாரணைக்கு முன்பே அறிக்கை கொடுத்தது ஏன் என்பதும் புரியவில்லை.

சம்பவம் நடந்த இடத்தில் காணப்படும் சில துண்டுப் பிரசுரங்களை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு அவசர ஆத்திரத்தில் சாதாரண பொதுஜனம் முடிவு எடுப்பது சகஜம். பத்திரிகையாளர்கள்கூட பல சந்தர்ப்பங்களில் கண்ணில் தெரியும் தடயங்களை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு எழுதிவிடுவதும் உண்டு. அப்படி நடக்கும்போதெல்லாம், காவல்துறையினர் அதை வன்மையாகக் கண்டிப்பதுடன், முழுமையான விசாரணை இல்லாமல் முடிவுக்கு வருவதும், கருத்துத் தெரிவிப்பதும் தவறு என்று பத்திரிகையாளர்களைக் கடிந்து கொள்வதும் உண்டு.

 

editlogo

ஆனால், விழுப்புரம் அருகே ரயில் தண்டவாளம் தகர்ப்பு விஷயத்தில் காவல்துறையினர், முழுமையான விசாரணை செய்து, குற்றவாளிகளைப் பற்றிய தகவல்கள் பெறுவதற்கு முன்பே சம்பவம் நடந்த ஒருசில மணி நேரங்களில் அவசரப்பட்டு கருத்துத் தெரிவிக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது என்பது புரியவில்லை.

முன்பே குறிப்பிட்டிருந்ததுபோல, விடுதலைப்புலி ஆதரவாளர்கள் இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இருந்திருந்தால் அவர்கள் கடுமையான தண்டனைக்குரியவர்கள் என்பது மட்டுமல்லாமல் தமிழகத்தில் தலையெடுக்கும் தீவிரவாதம் எந்தவகையினது ஆனாலும் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டியதுதான். ஆனால், இந்தச் சம்பவத்தின் பின்னணியில் வேறு ஏதாவது சக்திகள் உள்ளனவா என்பதையும் கண்டறிய வேண்டிய கடமை காவல்துறைக்கு உண்டு.

எல்லா நாடுகளும் அண்டை நாடுகளில் தங்களது உளவுத்துறையின் மூலம் செயல்படுவது புதியதொன்றும் அல்ல. இந்திய நீதிமன்றங்களால் தேடப்படும் குற்றவாளியான டக்ளஸ் தேவானந்தாவை அமைச்சர் என்கிற போர்வையில் தனது குழுவுடன் அழைத்துவந்து இந்தியப் பிரதமருடன் கைகுலுக்க வைத்து தனது தாயகம் திரும்பியிருக்கிறார் இலங்கை அதிபர் ராஜபட்ச. இதனால் எழும்பியிருக்கும் சர்ச்சையும், இந்திய அரசுக்கு ஏற்பட்டிருக்கும் தர்மசங்கடமும் கொஞ்சநஞ்சமல்ல.

சமீபகாலமாக தமிழ்நாட்டில் மட்டுமே பேசப்பட்டு வந்த ஈழத்தமிழர் பிரச்னை இப்போது தேசிய அளவிலான ஊடகங்களில் முன்னுரிமை தரப்படுகின்றன. பிரச்னையைத் திசைதிருப்ப இலங்கை அரசின் உளவுத்துறையேகூட ஏன் இப்படியொரு சதித்திட்டத்தை அரங்கேற்றி பழியை விடுதலைப்புலிகள் மீது போட்டு டக்ளஸ் தேவானந்தா கைது பிரச்னையை மூடி மறைக்க முற்பட்டிருக்கக்கூடாது?

துண்டுப் பிரசுரத்தை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு முடிவெடுப்பது சிறுபிள்ளைத்தனம். யாரும் யார் பெயரிலும் துண்டுப் பிரசுரம் அச்சிட்டு சம்பவம் நடந்த இடத்தில பார்வையில்படுவதுபோல போட்டிருக்கலாம். பொறுப்பான காவல்துறை அதிகாரிகள், முழுமையான விசாரணையை மேற்கொண்டு துப்புத்துலக்கி தக்க ஆதாரங்களுடன் உண்மையை வெளிக்கொணர்வதுதான் தமிழகக் காவல்துறைக்குப் பெருமை சேர்க்கும். தவறு இழைத்தது, விடுதலைப்புலி ஆதரவாளர்களாக இருந்தாலும், இலங்கை அரசின் கைப்பாவைகளாக இருந்தாலும், வேறு தீவிரவாத இயக்கத்தவர்களாக இருந்தாலும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

சதிகாரர்கள் யாராக இருந்தாலும், அப்பாவி மக்களைப் பழி வாங்காதீர்கள். இந்த நாசவேலையில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், அதற்கு ஆயிரம் நியாயங்கள் சொன்னாலும், ராமனுக்கு சடாயு சொன்னதைத்தான் நினைவுபடுத்த வேண்டியுள்ளது. சீதையை ராவணன் கவர்ந்து செல்ல, துக்கம் தாளாமல் காணும் அனைத்தின்மீதும் கடும்கோபம் கொள்ளும் ராமனிடம் சடாயு தன் உயிர் பிரியும் முன் சொல்கிறார்: "ஊறு ஒரு சிறியோன் செய்ய முனிதியோ உலகை; உள்ளம் ஆறுதி'.

தனிப்பட்ட ஒருவரின் துயரத்தை அனைவருக்குமாக மாற்றுகிற, பழி வாங்கும் படலத்துக்கும், திசைதிருப்பும் முயற்சிக்கும், வெறிச்செயல்களுக்கும் எங்கள் தமிழகம் களமாவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது”

 

தினமணி தலையங்கத்தில் இந்த வரிகளை மீண்டும் படித்துப் பாருங்கள்.

 

“அதேநேரத்தில், மாநிலக் காவல்துறைத் தலைவர் லத்திகா சரண் முழுமையான விசாரணை நடைபெறும் முன்பே ஒருசில மணிநேரங்களில் இந்தச் சம்பவத்துக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் தொடர்பு இல்லை என்று அவசர அவசரமாக அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன என்பது தெரியவில்லை. புலனாய்வுத் துறை ஐ.ஜி.யான ஜாபர் சேட், இது விடுதலைப்புலி ஆதரவாளர்களால் நடத்தப்பட்ட செயல்தான் என்று விசாரணைக்கு முன்பே அறிக்கை கொடுத்தது ஏன் என்பதும் புரியவில்லை.

 

வரலாற்றிலேயே இல்லாத வகையில், உளவுத் துறையின் தலைவர் விழுப்புரம் சென்று பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்துவதற்கான காரணம் என்ன ? இந்த வழக்கின் புலனாய்வுக்காக அமைக்கப் பட்ட 8 ஸ்பெஷல் டீம்களை புலனாய்வு முடியும் முன்பாகவே கலைத்த மர்மம் என்ன ?

 

இப்போது சவுக்கு நேரடியாகவே, இந்த குண்டு வெடிப்புச் சம்பவத்திற்கு முழுக் காரணம் ஜாபர் சேட் என்று குற்றம் சாட்டுகிறது. ஈழத் தமிழரின் பிணங்களின் மீது நடக்கும் செம்மொழி மாநாட்டில் மானமுள்ள தமிழன் யாராவது எதிர்ப்புத் தெரிவித்து விடப் போகிறானோ என்று அவர்களை கைது செய்து மாநாடு முடியும் வரை சிறையில் வைப்பதற்காக ஜாபர் சேட் மூளையில் உதித்த திட்டம் இது என்று சவுக்கு நேரடி குற்றச் சாட்டை முன் வைக்கிறது.   இது தொடர்பாக மான நஷ்ட ஈடு வழக்கு ஜாபர் தொடர்வாரானால், சவுக்கே அந்த வழக்கில் வாதாடும். இந்த வழக்கை தொடர்வதற்கு ஜாபருக்கு எவ்வித முகாந்திரமும் இல்லை.   சூடு, சொரணை, போன்ற விஷயங்கள் துளியும் இல்லாத காண்டாமிருகத்தின் தோலை உடைய ஒரு நபர் எப்படி மான நஷ்ட ஈடு வழக்கு தொடரலாம் என்று உரிய ஆதாரங்களோடு (அவருக்கு காண்டாமிருகத் தோல்தான் என்பதற்கு) சவுக்கு நீதிமன்றத்தில் வாதாடும்.

 Jaffar_Sait_2

இப்போது விஷயத்திற்கு வருவோம்.   ஜுனியர் விகடன் கட்டுரையை விட, மிகுந்த வலிமையாகவும், கூர்மையாகவும் இருப்பது தினமணி தலையங்கம். அரசு ஏன் தினமணி மீது மானநஷ்ட ஈடு வழக்கு தொடரவில்லை ?   இவ்வழக்கு தொடர்பாக உண்மை அறியும் குழு, பேராசிரியர் அ.மார்க்ஸ் தலைமையில் அமைக்கப் பட்டு காவல்துறை மீது சந்தேகம் இருக்கிறது என்று அறிக்கை வெளியிட்டது.   அந்தக் குழு மீது ஏன் மான நஷ்ட வழக்கு தொடரவில்லை ?

 

சரி ஜுனியர் விகடன் மீது ஏன் மான நஷ்ட வழக்கு இப்போது தொடரப் பட்டுள்ளது ? அதுவும், அவருக்கு மிகவும் நெருக்கமான இரா.சரவணன் மீது ஏன் வழக்கு ? இங்கேதான், ஜாபரின் கயமையை கவனிக்க வேண்டும்.

 

சவுக்குக்கு வந்த நம்பகமான தகவல்கள் என்ன கூறுகிறதென்றால், இந்த வழக்கு விசாரணை நடக்கும் சமயத்தில் நான் இந்தக் கட்டுரையை எழுதவேயில்லை, ஆசிரியரும் மேலாண் இயக்குநரும் இதை எழுதி விட்டு என்னுடைய பெயரை போட்டு விட்டார்கள் என்று இரா.சரவணன், வாக்குமூலம் கொடுத்து, ஜுனியர் விகடன் இதழுக்கு பெரும் நெருக்கடி கொடுக்கத் திட்டமிட்டிருப்பதாக உறுதியான தகவல்கள் வந்துள்ளன.

 

இந்த சதித் திட்டத்தை ஜுனியர் விகடன் நிறுவனம் எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பது தெரியவில்லை… ஆனால் ஊடகச் சுதந்திரத்திற்கு விடப்பட்ட நேரடி சவாலாகவே சவுக்கு இதை பார்க்கிறது. கருணாநிதிகளும் ஜெயலலிதாக்களும் வந்து போவார்கள். அவர்களுக்கான மக்களின் ஆதரவு இன்று இருக்கும், நாளை மறையும். ஆனால், ஜுனியர் விகடனுக்கான மக்களின் ஆதரவு எப்போதும் இருக்க வேண்டும் என்றே சவுக்கு விரும்புகிறது. அதனால் இந்த நேர்வில் மட்டும் பயன்படுத்தக் கூடாத ஒரு நபர் பயன்படுத்தும் வாசகத்தை ஜுனியர் விகடன் மனதில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.

 

“அடங்க மறுப்போம். அத்து மீறுவோம்.   திருப்பி அடிப்போம்.”

 

Comments  

 
-5 #44 savukku007 2011-02-06 21:24
You have crossed the limits of helthy journalism. You are yellow press.
Quote
 
 
-2 #43 Sakthivel 2011-01-14 21:46
@ #28 சவுக்கு

நீங்கள் மிகச்சிறந்த "வெகுஜன" புலனாய்வு பத்திரிகை நடத்த முடியும். திமிரும்போது திமிரவும் வழுக்கும்போது வழுக்கவும் நன்றாக தெரிந்து வைத்திருகின்றீர ்கள்.

பத்திரிகை தர்மம் என்பது "முழு" நியாயமான பத்திரிக்கைகளுக ்கு மட்டுமே. உங்கள் தனிப்பட்ட எதிரி ஜாபரை பழிவாங்க ஜூனியர் விகடனுக்கு வக்காலத்து வாங்காதீர்கள். அவர்கள் தவறாக எழுதியிருந்தால் கோர்ட்டின் மூலம் ஒரு கொட்டு வாங்கட்டும். அதுவும் அவர்களை சரிப்படுத்த உதவும். அதை விட்டு பத்திரிகை தர்மம் என்றெல்லாம் பேசி தவறு செய்தவர்களுக்கு சப்போர்ட் செய்யாதீர்கள்.

பத்திரிகை தர்மம் என்பது எழுத்துலக ரவுடிகள் சேர்ந்து மற்றவர்களை மிரட்டுவது அல்ல. உண்மையான செய்திகளை மட்டும் விருப்பு வெறுப்பில்லாமல் மக்களுக்கு அளிப்பது, மற்றும் தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்யும்பொழுது அதனை ஒத்துக்கொண்டு அதன் விளைவை அனுபவிப்பதுமே. அந்த வகையில் இங்கு எந்தப்பத்திரிக் கையுமே இல்லை - சவுக்கு உட்பட!.
Quote
 
 
+1 #42 Vaedhampudhidhu 2011-01-13 20:39
Quoting ராஜ்:
சவுக்கு அவர்களே!!! வாழ்க் உங்கள் பணி... ஜூவியின் செப் அல்லது அக்டோபர் மாதத்தில் கழ்கு பகுதியில் கருணா ஒரு வலைப்பதிவை பற்றி ஜாபர்சேட்டிடன் கடிந்து கொண்டதாக எழுத கண்டேன். கண்டவுடன் கணித்து கொண்டேன் அந்த வலை சாலி !!! நீங்கள் தான் என!!!

I got the key :)
Quote
 
 
0 #41 NA.ERASAN 2011-01-13 16:15
i too suspect savookku
Quote
 
 
+2 #40 Bharathi-PKT 2011-01-13 08:57
Savukku,
You started writing about Era.Saravanan? I doubt your reputation now. Are you from Junior Vikatan(ex employee?)
Quote
 
 
+2 #39 Raman 2011-01-13 01:20
Junior Vikatan is no longer doing any investigative Jounalisam... Vikatan Group is Happy with the Income from its TV Serials THENDRAL & THIRUMATHISELVA M...
It is completely surrendered to SUN TV Management... All its Publications are subjected to the approval of SUN TV Only... Vikatan Srinivasan's father Mr. Vaasan is very much unhappy with his Son's business practice. But that Oldman is helpless...
Quote
 
 
+7 #38 tamil 2011-01-12 23:11
jabar நண்பர் சவுக்கு அவர்களேஉங்களுக் கும் ஜாபர் சேட்டுக்கும் அப்படி என்ன பிரச்சினை அவர் சகல அதிகாரம் படைத்தவராக இருக்கிறார் நீங்கள்அவர் முன் பலம்மில்லாமல் மோதுகிறிர்கள் உங்களை நினைத்தால் பயமாக இருக்கிறது சவுக்கு மிக கவனம் தேவை
Quote
 
 
+10 #37 Ravisundaram 2011-01-12 23:04
அதிலும் இரா.சரவணன் படு மோசம். இவர் ஒன்று ரஜினியைப் பற்றி ஆஹா ஓஹோ என்று எழுதுவார். இல்லையேல் ஜாபர் சேட் போன்று அதிகாரிகளை புகழந்து எழுதுவார்.
எனக்கு தெரிந்து தமிழ் பத்திரிக்கை உலகில் ஒழுங்காக ஆராய்ச்சி செய்து செய்தி அல்லது கட்டுரை வெளியிடுபவர்கள் இல்லை என்றே சொல்ல வேண்டும். அந்த் குறையை சவுக்கு தீர்பதனால்தான் சவுக்குக்கு இத்தனை மதிப்புக. இதை இந்த சரவணன் போன்ற முண்டங்கள் ஏன் புரிந்து கொள்ள வில்லை.?
Quote
 
 
+4 #36 Ravisundaram 2011-01-12 23:02
குமுதத்தை விட மோசமான வியாபார ப(ர)த்திரிக்கைய ாக விகடனும் ஜுனியர் விகடனும் மாறி வெகுநாட்களாக விட்டது. இல்லையேல் திரு.இரா.சரவணனைப் போன்றவர்கள் தொடர்ந்து வேலை செய்வார்களா? சமிப காலங்களாக (கடந்த 5 வருடங்களாக) தொடர்ந்து திமுகவின் அடிவருடிகளைப் போலவே தொடர்ந்து கருணாநிதி, ஸ்டாலின் மற்றும் கனிமொழி அல்லது அழகிரி இவர்களைப் பற்றிய செய்திகள் வெளியிடாத வாரமே கிடையாது. அதிலும் இவர்களை விமர்சித்து எதுவும் எழுதமாட்டார்கள் . இந்த கழக கண்மனிகளை என்னவோ இந்திரன் சந்திரன் என்று நேரடியாகவோ மறைமுகமாகவோ புகழந்தே எழுதி வந்துள்ளனர். இப்படி எழுதி எழுதியே இந்த குடும்பத்தை விமர்சனத்திற்கு அப்பால் கொண்டு சென்று விட்ட குற்றம் விகடனையே சாரும்.
Quote
 
 
+6 #35 ராஜ் 2011-01-12 23:01
சவுக்கு அவர்களே!!! வாழ்க் உங்கள் பணி... ஜூவியின் செப் அல்லது அக்டோபர் மாதத்தில் கழ்கு பகுதியில் கருணா ஒரு வலைப்பதிவை பற்றி ஜாபர்சேட்டிடன் கடிந்து கொண்டதாக எழுத கண்டேன். கண்டவுடன் கணித்து கொண்டேன் அந்த வலை சாலி !!! நீங்கள் தான் என!!!
Quote
 
 
-1 #34 குசும்பன் 2011-01-12 22:55
Quoting வடக்குபட்டி ராமசாமி:
Quoting குசும்பன்:
ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு விதத்தில் ஒரு விலங்கையொத்த உருவத்தையோ இயற்கையான ஒரு பொருளையொத்த உருவத்தையோதான் பிரதிபலிப்பதுண் டு, சத்யராஜ் ஆங்கிலேயரையொத்த அமைப்பையும் காணலாம்,
எல்லாம் சரிதான், ஆங்கிலேயர எப்பய்யா விலங்கு இனத்துல சேர்த்தாங்க?? ஆனாலும் தக்காளி, பனங்கிழங்கு etc அருமைய்யா, இதுல கற்பனைக்கு வாழ்த்துக்கள்...

ஆமாய்யா உண்மைதான் ஏதோ ஆர்வக்கோளாறில் தப்பு நடந்துபோச்சு சுட்டிக்காட்டின வடுகுபட்டிக்கு நன்றிங்க,
Quote
 
 
+5 #33 சவுக்கு 2011-01-12 22:48
அன்பார்ந்த வணங்காமுடி,
எட்டு ரூபாய்க்கு எண்பது பொய்கள் கட்டுரையில் இருக்கும் இந்த வரிகளுக்கு என்ன பொருள் என்று நீங்களே கூறுங்கள்.


"உண்மை என்னவென்றால், இத்தனை கூடுதல் டிஜிபிக்கள் பதவி உயர்வு பெறுவதற்கு வாய்ப்பே துளியும் இல்லை. காவல்துறையில், கூடுதல் எஸ்பி பதவியிலிருந்து, எஸ்பி பதவிக்குக் கூட, இது போல ஒட்டு மொத்தமாக பதவி உயர்வு வழங்குவது கிடையாது."

ஒட்டுமொத்தமாக என்று வார்த்தைக்கு என்ன பொருள் ?

தவறு என்றால் தவறை ஒத்துக் கொள்ளும் பக்குவம் சவுக்குக்கு உண்டு தோழரே...
Quote
 
 
+8 #32 vanankamuti 2011-01-12 22:13
ஏகக் காலத்தில் 13 பேர் ஏடிஜிபிக்கள் ஆகவே முடியாது என்று எழுதியிருந்தது. சவுக்கு சொன்னபடியே முதலில் 5 பேரும், பிறகு 8 பேரும் ஏடிஜிபி ஆனார்கள்.

டியர் சவுக்கு, எட்டு ரூபாய்க்கு என்பது பொய்கள் கட்டுரையில் இப்படி ஒரு வரியை நீ எழுதவே இல்லை. ஏடிஜிபி பதவி உயர்வை கருணாநிதி நினைத்தால் அள்ளி வழங்கிவிட முடியாது. மாநிலத்தின் மக்கள்தொகை, பரப்பளவு பார்த்து தான் அவை வழங்கப்படும் என்று தான் எழுதியிருந்தாய் . அதையும் மீறி ஜாபரின் தில்லாலங்கடியால ் 13 ஏடிஜிபிகள் நியமிக்கப்பட்டா ர்கள். இந்த விஷயத்தில் ஜூவியின் கனிப்பு உண்மையானது. உமது சறுக்கலை நீ தைரியமாக ஒத்துக் கொண்டிருக்கலாம் . சிறப்பான பல கட்டுரைகளை எழுதும் நீ சில நேரத்தில் சருக்கத்தான் செய்வாய். அதற்காக வலிந்து நான் சொன்னது உண்மை, சரவனணன் எழுதியது பொய் என சொல்லாதே. உன் மீது உள்ள அபிமானத்தை நீயே குறைக்காதே
நலன் விரும்பி
Quote
 
 
+2 #31 வடக்குபட்டி ராமசாமி 2011-01-12 22:07
Quoting குசும்பன்:
ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு விதத்தில் ஒரு விலங்கையொத்த உருவத்தையோ இயற்கையான ஒரு பொருளையொத்த உருவத்தையோதான் பிரதிபலிப்பதுண் டு, சத்யராஜ் ஆங்கிலேயரையொத்த அமைப்பையும் காணலாம்,
எல்லாம் சரிதான், ஆங்கிலேயர எப்பய்யா விலங்கு இனத்துல சேர்த்தாங்க?? ஆனாலும் தக்காளி, பனங்கிழங்கு etc அருமைய்யா, இதுல கற்பனைக்கு வாழ்த்துக்கள்...
Quote
 
 
+2 #30 Thendral 2011-01-12 21:56
சவுக்கு சும்மா நெருப்பா சுடுதே... சுட்டெரிக்கட்டு ம் இதுபோன்ற கயவர்களை...தொடரட்டும் உங்கள் சேவை.
Quote
 
 
+1 #29 TARUS 2011-01-12 21:45
MANY POLICE OFFICERS WIFE ,DAUGHTER AND SONS ARE ALIKE SAME
Quote
 
 
+14 #28 சவுக்கு 2011-01-12 21:18
Quoting suryaa:
mr. savukku nirka,
“எட்டு ரூபாய் கொடுத்தால் எண்பது பொய் சொல்வான். அவன் யார் ? “ சவுக்கு வாசகர்கள் புத்திசாலிகள். இந்நேரம் விடை கண்டு பிடித்திருப்பீர ்கள். கண்டு பிடிக்காதவர்களு க்காக.. அவன் தான் ஜுனியர் விகடன்.

ippadi jv pathi eluditu, ipa jv ku ningale support pannuna enna artham? nenga solluradula edu unmai? apa savukku i padippavan kenaiyana? pl explain savukku.


அன்பார்ந்த சூர்யா, ஜுனியர் விகடன் ஜாபர் சேட் போன்ற ஆட்களை குளிர்விக்க வேண்டும் என்பதற்காக தப்பான செய்திகளை போடுவதை கண்டிக்க வேண்டும் என்ற காரணத்தாலேயே அந்தப் பதிவு. ஜுனியர் விகடன் மேல், சவுக்குக்கு எந்த விதமான தனிப்பட்ட கோபமும் கிடையாது. ஆட்சியாளர்களின் தவறுகளை யாருக்கும் அடிபணியாமல் ஜுனியர் விகடன் சுட்டிக் காட்ட வேண்டும் என்பதே சவுக்கின் விருப்பம்.

பொட்டு சுரேஷ் விஷயத்திலேயே, எதிர்த்து போராடாமல், ஜுனியர் விகடன் மண்டியிட்டது உலகம் அறிந்ததே. இன்று ஜுனியர் விகடன் மீது தொடுக்கப் பட்டுள்ள இத்தாக்குதலை நாம் தடுக்காமல் போனால், தமிழகத்தில் முரசொலியின் பல்வேறு வடிவங்களை மட்டுமே நாம் பார்க்க முடியும். இந்த வழக்கை, கருத்துச் சுதந்திரத்திற்க ும், ஊடக சுதந்திரத்திற்க ும் விடுக்கப் பட்ட சவாலாகவே சவுக்கு பார்க்கிறது. இது தவிர, ஜுனியர் விகடன் மீது, தனிப்பட்ட பாசமோ, தணியாத வெறுப்போ கிடையவே கிடையாது. கருத்துச் சுதந்திரம் பாதிக்கப் பட்டால் அதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும். நாளை நக்கீரன் பத்திரிக்கைக்கு அரசால் நெருக்கடி என்றாலும் சவுக்கு அதை எதிர்க்கும். இந்தக் கருத்தை, தவறாக புரிந்து கொண்டு, அந்தப் பத்திரிகைக்கு ஆதரவு என்று கூறுவது சரியான அணுகுமுறை அல்ல தோழரே....
Quote
 
 
+1 #27 madras kaaran 2011-01-12 20:29
enna kodumai sir idhu. r.saravana pondra porukkigal ellam vikatnil iruntha muthalla vikatana thaan koluthanum.
idha vida neradiya vikataney aal katti velai seyyalam
anani
Quote
 
 
+1 #26 Hari 2011-01-12 18:27
This kind of dogs should be punished without mercy. :oops: :oops: :oops:
Good luck Savukku.
Quote
 
 
+6 #25 thoppithoppi 2011-01-12 17:21
“அடங்க மறுப்போம். அத்து மீறுவோம். திருப்பி அடிப்போம்.”
Quote
 
 
+5 #24 Vaedhampudhidhu 2011-01-12 16:00
Quoting பிசாசு:
நீதி நிச்சயம் தண்டிக்கும். ஒரு உதாரணத்தைச் சொல்கிறேன். காவல்துறையில் இன்ஸ்பெக்டராக பணி செய்து வந்த ஒருவர், எதெற்கெடுத்தாலு ம் லஞ்சமாய் வாங்கிக் குவித்தார். சொத்துக்களை மேலும் மேலும் வாங்கிக் குவித்தார். அரசியல்வாதிகளின ் செல்லப் பிள்ளைகளாய் வலம் வந்தார். ஒரு நாள் அவருக்கு ஆக்சிடெண்ட் ஆனது. வெறும் பத்துகிலோ சதைதான் கிடைத்தது. பிள்ளைகள் இருவரும் வாழ்வியல் சூழலில் சிக்கி சின்னாபின்னப்பட ்டுப் போனார்கள். இவரின் மனைவியை பலரும் அனுபவித்தார்கள் . மகளின் நிலையோ சொல்ல வேண்டியதில்லை. மகனோ ரவுடியாய் திரிகிறான். இது தான் விதியின் தீர்ப்பு.


Pisasu please write these real stories which happened before, and punished by nature. So that it reaches to all and hold them from wrong doing.....
Quote
 
 
+6 #23 praburaja2002 2011-01-12 15:31
Quoting பிசாசு:
ஒரு நாள் அவருக்கு ஆக்சிடெண்ட் ஆனது. வெறும் பத்துகிலோ சதைதான் கிடைத்தது. பிள்ளைகள் இருவரும் வாழ்வியல் சூழலில் சிக்கி சின்னாபின்னப்பட ்டுப் போனார்கள். இவரின் மனைவியை பலரும் அனுபவித்தார்கள் . மகளின் நிலையோ சொல்ல வேண்டியதில்லை. மகனோ ரவுடியாய் திரிகிறான். இது தான் விதியின் தீர்ப்பு.


அவர் செய்த தவறுக்கு அவர் மகள் என்ன செய்வாள்?. எனக்கு தெரிந்த உத்தமர் ஒருவரின் குடும்பத்திற்கு ம் இதே கொடுமை தான் ஏற்பட்டது. நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் இன்றைய உலகில் நல்லவனோ கெட்டவனோ , ஒரு சிறிய சறுக்கல் கூட எந்த குடும்பத்தை படு குழியில் தள்ளி விடும். நவீன உலகின் இன்னொரு விளைவு. உறவு , நட்பு எல்லாமே வெறும் வேஷமாக்கி வாழ்வை ஒரு போக பொருளாக்கி விட்டது இன்றைய உலகமயமாக்கல்.
Quote
 
 
+7 #22 கலைஞரின் இளைஞன் 2011-01-12 15:24
Quoting anbu:
அன்புள்ள சவுக்கு..
அரசுக்கு எதிராக அல்லது விமர்சனம் செய்யும் செய்தி வெளியிடுவது, பிறகு திமுக அமைச்சர்கள், நிர்வாகிகளிடம் கெஞ்சி விளம்பரம் வாங்கி போடுவது, இப்படி இரட்டை கொள்கை கடைப்பிடித்தால் , இப்படி வழக்குகள் வரத்தான் செய்யும்..இதை தவிர்க்க முடியாது..
பத்திரிகைகள் அரசை விமர்சனம் செய்ய வேண்டும், எதையும் எதிர்ப்பார்க்கா மல், அப்பதான் ஜனநாயகத்தின் நான்காவது தூணாக செயல்பட முடியும்.. அன்பு


அன்பு, அன்பு அவர்களே! இதோ தேர்தல் தொடங்கிவிட்டது. வேட்பாளர் தம்பட்டம் என்கிற பெயரில் பல லட்சங்களை வாங்க்கொண்டு செய்திக் கட்டுரையைப் போலவே விளம்பரம் வெளியிட தயாராகி வருகிறது ஜூ.வி.

இந்த நேர்மைக்கு பேர் என்ன என்று அவர்களிடம் கேட்டு சொல்லவும். மக்களை அவர்கள் முட்டாள் என்று நினைக்கிறார்கள் .
Quote
 
 
+7 #21 கலைஞரின் இளைஞன் 2011-01-12 15:19
Quoting gopalasamy:
junior vikadan is continuously writing articles about spectrum. no other tamil magazines do this. occasionally dinamani is publishing some articles.
tamil news papers also not publishing detailed articles.
this is the price JV has to give for exposing spectrum deals.


ஸ்பெக்ட்ரம் பற்றி ஜூ.வி தொடர்ந்து எழுதக் காரணம் கேடி பிரதர்ஸ் என்று அன்புடன் அழைக்கப்படும் மாறன்-அன்-கோ.

கனிமொழி, ராசா, அழகிரி, கருணாநிதி என்று அத்தனை பேரின்மீதும் வண்மத்தை தீர்த்துக்கொள்ள ஜூ.வி.யை அவர்கள் பகடைக்காயாக பயன்படுத்துகிறா ர்கள். சன்மானமாக ஜூ.விக்கு சன் டிவியின் ஸ்லாட்டுகள் கிடைக்கிறது.

ராசா, ஸ்பெக்ட்ரம், கனிமொழி, கலைஞர் தாக்குதல் சம்பந்தப்பட்ட செய்திகள் அனைத்தும் கேடி பிரதர்ஸ்களின் பார்வைக்குப் பிறகே ஜூ.வியில் பிரிண்ட் செய்யப்படுகிறது . இது 100-க்கு 1000 மடங்கு உண்மை.
Quote
 
 
0 #20 riaz khan 2011-01-12 14:51
Dear Savukku - I appreciate the article and want to congratulate for your high quality work against the corruption and behind scene scams. I am quiet astonished about your Guts in brining out the truth's and i am a DMK follower from my childhood but now ashamed of Mr. Karunanidhi and his family politics. Keep continuing your work. I will recommend the website to my friends & families. Riaz Khan, United Arab Emirites
Quote
 
 
+2 #19 சபாஷ் சவுக்கு 2011-01-12 14:25
நடுவுல ஒரு 'திமிறி எழுவோம்' இருக்கு பாஸ் அப்பத்தான் அந்த வாக்கியம் நிறைவு பெறும்.
Quote
 
 
+1 #18 magnet 2011-01-12 13:51
Dear Savukku!
Be Neutral....
Don't Blindly Blame Saravanan...
He play significant role
to control the terror and violence
in Delta.
Now he is in Whirl.
This is gift to him for the
FRIENDSHIP of POLICE.
Quote
 
 
+3 #17 MR. X 2011-01-12 13:44
Quoting சவுக்கின் விசிறி:
ஏழு மாசம் கழிச்சி, கேஸ் போடும் போதே உள்நோக்கம் இருப்பது நல்லாவே தெரியுது. ஆமா, கருனாநிதி மேல இருந்த மதிப்பை மாத்திக்கிட்டோம ்னு இளங்கோவன், உசேன், பலராமன் எல்லாம் கருணாநிதிக்கிட் டே போனில் பேசினாங்களாம். இதெல்லாம் நடக்குமா. இப்படி பேசினா, அவங்களை அதே நாளில் கட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்திருப்பார்க ள் என்று தெருவில் திரியும் குப்பனும் சுப்பனும் அறிவார்கள். பொய்யை சொன்னாலும் பொருத்தமா சொல்லுங்கப்பா. ஆனாலும் ஒரு வழக்கின் பின்னணியில் இத்தனை விவகாரங்கள் இருப்பது, அந்த வழக்கு போட, பத்திரிகையாளரே ஈடுபடுவது உலக மகா கேவலம்.


Well said...
Quote
 
 
+2 #16 Anand 2011-01-12 13:40
Savukku has come back to form.
Quote
 
 
+2 #15 JP 2011-01-12 12:53
Very bad jaffer .
Quote
 
 
+8 #14 குசும்பன் 2011-01-12 12:43
ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு விதத்தில் ஒரு விலங்கையொத்த உருவத்தையோ இயற்கையான ஒரு பொருளையொத்த உருவத்தையோதான் பிரதிபலிப்பதுண் டு, உ+ம் சீனர்களின் முகம் பூனையையொத்ததாகவ ும், ஆபிரிக்கர்களின் உருவம் குரங்கையொத்ததாக வும் காட்சிப்படும்.நம் பிரபலங்களின் உருவ ஒற்றுமையை இப்படிப்பார்க்க லாம் சிவாஜி அவர்கள் சிங்கத்தை ஒத்த அசைவும். பிரபாகரன் வேங்கையையொத்த குண+ நடையும். குஷ்பு தக்காளியையொத்த அழகும், த்ரிசா மைனாவையொத்த பாங்கும். சங்கர்C பனங்கிழங்கையொத் த பரிமாணமும். சத்யராஜ் ஆங்கிலேயரையொத்த அமைப்பையும் காணலாம், ஆனால் தலைவர் கருணாவிடம் பல பரிமாணங்களுண்டு . ஆரம்பகாலத்தில் அவரிடம் நாய்ச்சிங்கத்து க்கான அமைப்பு இருந்து. மெல்ல மெல்ல மாறி இப்போ அவரிடம் பச்சோந்திக்கான குணமும், பன்றிக்கான கழுத்தும். காக்கைக்கான குரலும். ஆமைபோன்ற அமைப்பும். அண்டங்காக்கையின ் பார்வையும். மலைப்பாம்பு முதலை பொக்கான் தவளை+ மாறி காண்டாமிருகத்தி ன் களை காட்சிப்படுகிறத ு. கண்டுபிடித்த சவுக்குக்கு வாழ்த்துக்கள்,
Quote
 
 
+5 #13 பொதுஜனம் 2011-01-12 12:42
"கருணாநிதி போல மானங்கெட்ட மனிதர்" - வீரபாண்டிய கட்டபொம்மன் மாதிரி முழங்குகிறீர்கள ். தமிழக மக்கள் சார்பாக, எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Quote
 
 
+3 #12 suryaa 2011-01-12 12:30
mr. savukku nirka,
“எட்டு ரூபாய் கொடுத்தால் எண்பது பொய் சொல்வான். அவன் யார் ? “ சவுக்கு வாசகர்கள் புத்திசாலிகள். இந்நேரம் விடை கண்டு பிடித்திருப்பீர ்கள். கண்டு பிடிக்காதவர்களு க்காக.. அவன் தான் ஜுனியர் விகடன்.

ippadi jv pathi eluditu, ipa jv ku ningale support pannuna enna artham? nenga solluradula edu unmai? apa savukku i padippavan kenaiyana? pl explain savukku.
Quote
 
 
0 #11 Nithi 2011-01-12 12:27
SAVUKKU, I DON'T UNDERSTAND WHY YOU ARE STILL WAITING TO TAKE LEGAL ACTION AGAINST THIS STUPID POLICE OFFICER? PLS DO SOMETHING AGAINST THIS CRIMINAL....., WE ARE ALWAYS WITH YOU
Quote
 
 
+3 #10 Arasiyal Analyzer 2011-01-12 12:08
Anna Salai muluvathum ulla "Chennai Sangamam" vilamparankalil "Tamil Maiyam" ullathu.

Please refer the website: http://chennaisangamam.com/ (Tamil Maiyam) logo is available.

What are you going to do?
Quote
 
 
-8 #9 iniavan 2011-01-12 11:01
பார்பன ஜூனியர் விகடனுக்கு சவுக்கு வக்காலத்து.அப்படி என்ன பத்திரிக்கை தர்மத்தை காப்பாற்றி கிழித்து விட்டது ஜூனியர் விகடன்.கருணாநிதியை எதிர்க்க வேண்டும் என்பதற்காக ஜூனியர் விகடனுக்கு ஆதரவு கொடுப்பது சிங்கத்திடம் சிக்காமல் இருக்க குள்ள நரியிடம் கூட்டு சேர்ந்த மாதிரிதான்.தினமணி,தினமலர், விகடன் போன்ற பார்பனர்களிடம் நட்பு கொள்வதை விட கருணாநிதியை கண்டுகொள்ளாமல் இருப்பது மேல்.ஊரெல்லாம் குண்டு வைத்தது தன என்று அவர்களின் கூட்டாளி சுவாமி அசிமானதாவே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிற ாரே அந்த செய்தி இந்த பார்பன பத்திரிக்கை தர்மவான்கள் எத்தனை பேர் வெளியிட்டார்கள் .சவுக்குக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்.சண்டை நமக்குள் இருக்கட்டும்.கருணாவை எதிர்க்க பார்பனர்களுக்கு வக்காலத்து வாங்காதீர்கள்..
Quote
 
 
+5 #8 ABDUL AZIZ 2011-01-12 10:47
அடங்க மறுப்போம். அத்து மீறுவோம்.
திருப்பி அடிப்போம்.


சபாஸ் சவுக்கு பொறுத்தது போதும்

"""அடங்க மறுப்போம். அத்து மீறுவோம்.
திருப்பி அடிப்போம்'''''
Quote
 
 
0 #7 காலவன் 2011-01-12 10:16
பிசாசு அய்யா அவர்களுக்கு அந்த காவல்துறை அதிகாரியின் பெயரைகூறுங்கள் அப்பொழுதாவது நம் சமுகத்தில் அயோக்கியத்தனத்த ில் கொழுக்கும் அதிகாரிகளுக்கு பயம் வரட்டும்
Quote
 
 
+10 #6 gopalasamy 2011-01-12 09:48
junior vikadan is continuously writing articles about spectrum. no other tamil magazines do this. occasionally dinamani is publishing some articles.
tamil news papers also not publishing detailed articles.
this is the price JV has to give for exposing spectrum deals.
Quote
 
 
+6 #5 Devil 2011-01-12 09:26
Junior vigadan is a medium , not bend its spine towards anybody upto my knowledge, cause they only wrote all info regarding police officers boldly and some journalist darkening it work by doing illegal things. Savuku my question is Journalist also take Oath before joining the duty right why dont they following that?
Quote
 
 
+17 #4 anbu 2011-01-12 08:58
அன்புள்ள சவுக்கு..
விழுப்புர தண்டவாளம் தகர்ப்பு தொடர்பான செய்திக்கு, 7மாதங்கள் கழித்து, ஜுனியர் விகடன் பத்திரிகை மீது மான நஷ்ட வழக்கை, முதலமைச்சர் கருணாநிதி தொடர்ந்துள்ளார் ..இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது, தமிழக அரசின் நிர்வாகம் எந்த இலட்சணத்தில் நடக்கறது என்பதுதான்..
ஜூனியர் விகடன் பத்திரிகையில் அரசுக்கு எதிராக அல்லது விமர்சனம் செய்யும் செய்தி வெளியிடுவது, பிறகு திமுக அமைச்சர்கள், நிர்வாகிகளிடம் கெஞ்சி விளம்பரம் வாங்கி போடுவது, இப்படி இரட்டை கொள்கை கடைப்பிடித்தால் , இப்படி வழக்குகள் வரத்தான் செய்யும்..இதை தவிர்க்க முடியாது..
பத்திரிகைகள் அரசை விமர்சனம் செய்ய வேண்டும், எதையும் எதிர்ப்பார்க்கா மல், அப்பதான் ஜனநாயகத்தின் நான்காவது தூணாக செயல்பட முடியும்.. அன்பு
Quote
 
 
+19 #3 சவுக்கின் விசிறி 2011-01-12 08:31
ஏழு மாசம் கழிச்சி, கேஸ் போடும் போதே உள்நோக்கம் இருப்பது நல்லாவே தெரியுது. ஆமா, கருனாநிதி மேல இருந்த மதிப்பை மாத்திக்கிட்டோம ்னு இளங்கோவன், உசேன், பலராமன் எல்லாம் கருணாநிதிக்கிட் டே போனில் பேசினாங்களாம். இதெல்லாம் நடக்குமா. இப்படி பேசினா, அவங்களை அதே நாளில் கட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்திருப்பார்க ள் என்று தெருவில் திரியும் குப்பனும் சுப்பனும் அறிவார்கள். பொய்யை சொன்னாலும் பொருத்தமா சொல்லுங்கப்பா. ஆனாலும் ஒரு வழக்கின் பின்னணியில் இத்தனை விவகாரங்கள் இருப்பது, அந்த வழக்கு போட, பத்திரிகையாளரே ஈடுபடுவது உலக மகா கேவலம்.
Quote
 
 
+22 #2 பிசாசு 2011-01-12 08:28
இதே போல காவல்துறையில் பெரும் அத்துமீறல்களைச் செய்தவர்கள் பலரின் கதைகள் என்னிடம் ஆதாரபூர்வமாய் இருக்கின்றன. ஒரு ரூபாய் கூட லஞ்சமும், சட்டத்திற்குப் புறம்பான காரியங்களிலோ, அரசியல்வாதிகளுக ்கு ஒத்துப்போகாத எத்தனையோ காவல்துறையினர் இருக்கின்றார்கள ். அவர்கள் அனைவரும் இன்றைக்கும் நலமோடுதான் இருக்கின்றார்கள ்.ஜாபர் சேட்டின் செயல்களுக்கான பலனை அவர் நிச்சயம் பெறுவார் என்பதில் யாருக்கும் எந்த வித சந்தேகமும் தேவையில்லை.

- பிசாசு (காற்றில் இருப்பவன்)
Quote
 
 
+32 #1 பிசாசு 2011-01-12 08:27
தமிழகத்தின் உண்மை நிலையை சமீபகாலமாக ஜூனியர் விகடன் வெளியிட்டு வருவதைப் பொருத்துக்கொள்ள முடியாமல், முதல்வர் நகர்த்திய காய் இந்த வழக்கு. ஜூனியர் விகடனையும் அடிமைப்படுத்தி விட முயல்கின்றார்கள ்.ஆனானப்பட்ட ஹிட்லர், முசோலினி, சதாம் எல்லாம் மண்ணுக்குள்ளே போய் விட்டார்கள். இதெல்லாமொரு தூசு. காலத்தின் கையில் சிக்கி இருக்கும் கலைஞரின் ஒவ்வொரு செயலுக்குமுண்டா ன பிரதிபலனை அவர் நிச்சயம் பெற்றே ஆக வேண்டும்.

நீதி நிச்சயம் தண்டிக்கும். ஒரு உதாரணத்தைச் சொல்கிறேன். காவல்துறையில் இன்ஸ்பெக்டராக பணி செய்து வந்த ஒருவர், எதெற்கெடுத்தாலு ம் லஞ்சமாய் வாங்கிக் குவித்தார். சொத்துக்களை மேலும் மேலும் வாங்கிக் குவித்தார். அரசியல்வாதிகளின ் செல்லப் பிள்ளைகளாய் வலம் வந்தார். ஒரு நாள் அவருக்கு ஆக்சிடெண்ட் ஆனது. வெறும் பத்துகிலோ சதைதான் கிடைத்தது. பிள்ளைகள் இருவரும் வாழ்வியல் சூழலில் சிக்கி சின்னாபின்னப்பட ்டுப் போனார்கள். இவரின் மனைவியை பலரும் அனுபவித்தார்கள் . மகளின் நிலையோ சொல்ல வேண்டியதில்லை. மகனோ ரவுடியாய் திரிகிறான். இது தான் விதியின் தீர்ப்பு.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 66 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday443
mod_vvisit_counterYesterday13577
mod_vvisit_counterThis week58020
mod_vvisit_counterLast week95167
mod_vvisit_counterThis month280280
mod_vvisit_counterLast month382199
mod_vvisit_counterAll days13196647