|
அன்பார்ந்த தோழர்களே, கவிஞர் வா.மணிகண்டன் அவர்கள் சென்னை சங்கமம் நிகழ்ச்சி தொடர்பாக சவுக்குக்கு எழுதியிள்ள கடிதத்தை சவுக்கு தனது வாசகர்களுக்காக அப்படியே பிரசுரம் செய்கிறது. கவிஞர் மணிகண்டனுக்கு சவுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது. கவிஞன் என்றால் சுயமரியாதை வேண்டும். அந்த சுயமரியாதையை கருணாநிதி காலில் அடகு வைக்க கவிஞர்கள் வரிசையில் போட்டி போடுகையில், வா.மணிகண்டன், பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் உரியவர். வாழ்த்துக்கள் மணிகண்டன் அவர்களே.

நண்பர்களுக்கு,
வணக்கம்.
கடந்த சில வருடங்களாக சென்னை சங்கமத்தில் நிகழும் 'கவிதை சங்கம'த்தில் கவிதை வாசிப்பதற்காக அழைக்கப்பட்டிருக்கிறேன். தொடக்கத்தில் எனது கவிதைகளுக்கான அங்கீகாரமாகக் கருதியும் பின்னர் வந்தஆண்டுகளில் நண்பர்களைச் சந்திக்கும் நிகழ்வாகவும் தொடர்ந்து பங்களித்து வந்தேன்.
இந்த ஆண்டும் கவிதைச் சங்கமத்தில் கலந்து கொள்ளச் சொல்லி அழைப்பு வந்திருக்கிறது. என்னை நினைவில் வைத்திருந்து அழைத்த நண்பர்களுக்கு நன்றி. இந்நிகழ்விற்கு தலைமை தாங்கும் கலாப்ரியா அவர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதையுண்டு. ஆனால் இந்த ஆண்டு கவிதைச் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எனக்கு விருப்பமில்லை.
ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடையவராக சந்தேகிக்கப்பட்டு சிபிஐ-ன் விசாரணைக்குள்ளாக்கப்பட்ட ஜெகத் கஸ்பரின் தமிழ் மையம் இந்த ஆண்டும் சென்னை சங்கமத்தில் பிரதான பங்களிப்பைச் செய்கிறது. சென்னைசங்கமத்தின் இணையதளத்தில் தமிழ் மையம் பற்றி சிலாகிக்கப்பட்டிருக்கிறது. கறையின் நிழல் விழுந்த ஒரு நபருக்கும் அவரது அமைப்புக்கும் சென்னை சங்கமம் அளிக்கும் முக்கியத்துவத்தை எதிர்க்கிறேன்.எதற்காக தமிழ் மையத்திற்கும் ஜெகத் கஸ்பருக்கும் சென்னை சங்கமம் இடமளிக்கிறது என்பதனை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
கவிஞர் கனிமொழியின் இடத்தை ஸ்திரமாக்கப்படுவதற்கு நடத்தப்படுகிறது என்பது ஒரு காரணம் என்றாலும் கலைஞர்களுக்கும் படைப்பாளிகளுக்குமான இடமாக சென்னை சங்கமம் விளங்கி வருவதாக உணர்கிறேன்.அதே சமயம் சி.பி.ஐ விசாரணைக்குப் பிறகாக தனது புனித பிம்பத்தை மறு உருவாக்கம் செய்து கொள்ள முனையும் கஸ்பருக்குத் துணையாக இந்தச் சென்னை சங்கமம் அமைந்துவிடக் கூடாது என்பதை நான்விரும்புகிறேன்.
இலக்கியமும் கலையும் சினிமா கவர்ச்சியிலும், அதிகாரத்தின் விரலசைவிலும், அரிதாரங்களினாலும் வெளிச்சம் பெறுவதில்லை. அப்படி விழக் கூடிய வெளிச்சம் தற்காலிகமானதுதான். தன் சுய நலங்களுக்காகஇலக்கியத்தையும் கலையையும் பயன்படுத்திக் கொள்பவர்களை காலத்தின் சுழல் தாட்சண்யமின்றி தூர எறிந்துவிடும்.
சுயவிளம்பரத்திற்காகவும், அரசியல் பாதுகாப்பிற்காகவும், குற்றச்சாட்டினை மறைப்பதற்காகவும், வருவாய் ஈட்டுவதற்காகவும் கலையையும், இலக்கியத்தையும் பயன்படுத்துவதற்கு எதிராக இந்த ஆண்டுநடைபெறும் கவிதைச் சங்கமத்தில் நான் கலந்து கொள்ளப் போவதில்லை.
நான்புறக்கணிப்பதனால் சென்னை சங்கமத்திற்கு எந்தவிதமான தடங்கலும் வரப்போவதில்லை; அதே சமயத்தில் எனது கவிதைகளுக்கான பிரசுர வாய்ப்புகள் குறையலாம் -எனினும் அது பற்றிய எந்தவிதமானவிசனமும் இல்லாமல் எனது எதிர்ப்பினை பதிவு செய்வதற்கான வாய்ப்பாக இதனை பயன்படுத்திக் கொள்கிறேன்.
நன்றி.
வா.மணிகண்டன்.
அன்பார்ந்த நண்பர் மணிகண்டன் அவர்களே.... உங்களுக்கான வாய்ப்பு எப்படி குறைகிறது என்று பார்க்கலாம். சவுக்கு தளத்தில் கவிதைகள் பிரசுரிப்பதில்லை. அந்த விதியை தளர்த்தி, உங்கள் கவிதைகளை சவுக்கு பிரசுரிக்கத் தயாராக இருக்கிறது. உங்கள் உள்ளத்து உணர்வுகளை வார்த்தைகளில் வடித்து, அனுப்புங்கள். உலகெங்கும் உள்ள நமது அன்பு உறவுகள் அதைப் படிப்பார்கள். சவுக்கால், உங்களது கவிதைகளுக்கு பணம் கொடுக்க இயலாத ஒரு நிலையில் உள்ளது. அது ஒன்றுதான் குறை. அதை நீங்கள் பொருட்படுத்த மாட்டீர்கள் என்றால், சவுக்கு தளம் உங்களை அள்ளி எடுத்துக் கொள்ள காத்திருக்கிறது தோழரே.... |
Comments
பாராட்டுக்கள் கவிஞரே....
இவன தெருபொருக்கி எழுத்தாளன்னு சொன்னதுல ஒரு தப்பும் இல்ல!.....................இவன் ஒரு டபரா வாயன்னு மறுபடியும் நிருபிசுட்டான்......
உங்களுக்கு மட்டும் அல்ல சவுக்குவிர்க்கு ம் சேர்த்து பொருளாதார உதவி செய்ய காத்துக்கொண்டு வரிசையில் நிக்கும் லட்சக்கனக்கானவர ்களில் நானும் ஒருவன் .அவர்களைபோல் ( கருநாய் ) கோடி கோடியாக குடுக்கமுடியாவி ட்டாலும் எங்களால் முடிந்ததை செய்வோம் . அவர்கள் கொடுக்கும் கோடியில் ஒரு ரூபாய் கூட அவர்களுடைய உழைத்த காசு இருக்காது ஆனால் நாங்கள் தரும் ஒவ்வொரு காசிலும் எங்களுடைய உழைப்பு இருக்கும். அந்த கோடியை விட எங்கள் காசுக்கு மதிப்பு அதிகம் .....
நா. அ. கண்ணப்பன்
அட அந்த luckylookonline ல யாரும் இப்ப சீந்துவாறிலை போலும். பின்னோட்டாம் கூட அட சும்மா ஒரு பேச்சுக்கு திட்டி கூட போடா மாட்டேன் என்கிறார்கள். பாவம் லக்கிலுக் . லக்கிலுக் இப்போ அன்லக்கிலுக்.
http://www.luckylookonline.com/2011/01/blog-post_13.html
இது போன்று அரசியல்வாதிக ளின் துணையின்றி ஜெகத்கஸ்பர் போன்ற அல்லகைககள் சமுதாயத்தில் ஜெயிக்குமா? அப்படியிருக்க எய்தவர் இருக்க அம்பை நோவது கேலிக்குரியது.
ஆனால் கடந்த ஆண்டுவரை சென்று கவிதாமனி கனிமொழியுடன் இணைந்து கவிதையாற்றியது எதுடன் சேர்த்தி? நேற்றுவரை கனிமொழி உத்தமபுத்திரியா ?
மதுரையில் மூன்று பேர் எரியூட்டப்பட்டத ற்கு தன் தந்தையோ தமயனோ கொஞ்சம் கூட காரணமில்லை என்று அடித்து பேசினாரே? அப்போது நீங்கள் ஆப்பிரிக்காவில் இருந்தீர்களோ? முள்ளி வாய்க்காலில் தமிழர் புதைக்கப்பட்ட போது தனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்பது போல மெளனம் காத்தாரே அது உமக்கு சரியாகப் படுகிறதா? அட..இனம் வேண்டாமய்யா..ஒரு மனிதன் என்கிற அளவில் கூட பதைபதைக்காமல் அந்த பெரும் மனித பேரழிவிற்கு துணை போன அந்த குடும்பத்தின் நிழலில் சென்ற ஆண்டும் கவி பாடினீர்களாமே அது சரியா? தமிழே தெரியாத ஒரு நார்வேகாரனும், பிரஞ்சுகாரனும், இங்கிலாந்துகாரன ும் இந்த துயரத்தை கண்டிக்கும் போது நீங்கள் கொஞ்சமும் சுரணையின்றி கவிபாடினீர்களாம ே..அதுசரியா?
இன்று வா.மணிகண்டன் என்ற கவிஞரிடமிருந்து வந்த மின்னஞ்சல் ஒன்று கடும் எரிச்சலை ஏற்படுத்தியது. சென்னை சங்கமத்தில் இந்த ஆண்டு அவர் கவிதை படிக்கப் போவதில்லையாம். ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்புள்ள தமிழ் மையம் நடத்தும் சென்னை சங்கமத்தில் கவிதை வாசிப்பதை அவர் இழுக்காக கருதுகிறாராம்.. இவர் கடந்த ஆண்டு முள்ளிவாய்க்கால ் பேரவலம் நடந்த பின்னும் கவிதை வாசிக்கச் சென்றவர்.
Shankar Ram சென்னை சங்கமம் தொடங்கிய காலத்திலிருந்து கலாப்ரியா தலைமையில் கவிதைக்காவடி தூக்கியவர்களில் ஒருவர் இந்த மணிகண்டன் ...இந்த திடீர் தார்மீக கொசுக்கடிகளைத் தாங்கமுடியவேயில ்லைப்பா...
Shankar Ram இந்த ஆண்டு கடைசி ஆண்டு....சங்கமம் கவிதைக்கு ஐயாயிரம் என்று பேச்சு... நூறு பேர் சம்மதித்துவிட்ட ார்கள்....போங்க போங்க ....பேரைச் சேத்துக்கோங்க...ஓடு ஓடு....run wild என்று கவிதை எழுதிய கலாப்ரியாவும் ஓடுகிறார்...ஓடு...ஓடு//
பல புகழ் மாலைகளை பெற்றும் பெரும் பணம் ஈட்டியும் இன்றும் ஏதோ ஒரு காரணத்திற்காக அந்த குடும்பத்தின் முன் கை கட்டி(!!) வாய் பொத்தி இருக்கும் பல கவிஞர்கள் முன் நீங்கள் வித்தியாசப் படுகிறீர்கள். உங்கள் கவிதைகளை சவுக்கின் மூலம் படிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்.
hats off u..we r with u...
கவிதை எங்களுக்கு புரியா புதிர்.
அனால் மனிதர்களின் உண்மையான மனதை மதிக்க தவறுவது இல்லை..
உணர்வுடன்.
செல்வா
Please refer the website: http://chennaisangamam.com/ (Tamil Maiyam) logo is available.
What are you going to do?
Quote
அன்புடன்
ராஜ்
RSS feed for comments to this post