முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
தலீவா வெளில வா தலீவா அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 18
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
புதன்கிழமை, 19 ஜனவரி 2011 00:55

 

கும்ப்டுக்கிறேன் தல.

 25THAZHAGIRI_80842e

எம்பேரு வண்ணாரப்பேட்டை லுச்சா பையன் தல. நான் நெம்ப நாளா ஒன்ன பாலோ பண்ணிக்கினே கீறேன் தல.   நம்ப இஸ்டேட்லயே தில்லான ஒரே ஆளு நீதான் தல. சார்ட்டா சொல்லனுன்னா நீ ஒரு தில்லு தொர தல.

 

இவ்ளோ நாளு கயிச்சு ஒனக்கு ஒரு கட்தாசு போட்லான்னு மன்சு கெடந்து அட்சுக்குது தல. அதான் தல எயுதறேன்.

 

நீ எவ்ளோ பெரிய ஆளு. இன்னா பவரு ஒனக்கு. ஒன்ன போயி இப்டி டம்மி பீஸாக்கி ஒக்கார வெச்சத நென்ச்சா மன்ஸுக்குள்ள பேஜாராயிருக்கு தல. ஒனக்கு இருக்கற பவருக்கு, நீ அமேரிக்கான்னு ஒரு நாடு இருக்காமே. அங்க போய் டிஎம்கே கட்சி நடத்தனும் தல. ஏதோ ஒன் கெட்ட நேரம், எங்க நல்ல நேரம், நீ நம்ப ஸ்டேட்டுலயே இருக்கற தல.

 

நேத்து வந்த தம்மாத்தூண்டு பசங்கல்லாம், இன்னா பாலிடிக்சு பண்ணுதுங்கோ. நீ இன்னா தல, மதுரையில போயி குந்திக்கினு கீற.

 

இந்த ஜெயா டிவிலே, போன மாசம் பூங்கோதைன்னு ஒரு மினிஸ்டர் கீதே.   அது ஒன்ன ரொம்ப கேவலமா பேசுச்சாம்மே தல. கேட்டதுமே மன்ஸு பேஜாரா பூட்ச்சு தல. ரொம்ப பேஜாரானதால, ரெண்டு கோட்டர் அட்ச்சு கவுந்தட்ச்சு பட்துக்குனேன் தல.

 71a5520f2893e57bd018134853ed-grande

யாரு தல அந்த பூங்கோத… நேத்து வரைக்கும், அமேரிக்காவுல கொயந்தைங்களுக்கு ஊசி போட்டுட்ருந்த டாக்டர் தல. இன்னக்கி நீ மன்சு வச்சதால மினிஸ்டர் ஆயிக்கீது தல. அந்தப் பொம்பள இன்னா பேச்சு பேசுத தல… யாரோ டெல்லில ரேடியோன்னு ஒரு பொம்பள கீதாம்மே….. அந்தப் பொம்பளையோட, இந்தக் கசுமாலம் பூங்கோதை பேசுறத டிவில போட்டாங்க தல. ஒன்ன ரொம்ப கலீஜா பேசிடுச்சாமே தல… அத்துக் கேட்டுட்டு இன்னுமா தல நீ கம்முனு கீற ?

 

இந்த ராஜா ராஜான்னு ஒரு டவுசர் பையன் இருக்கானாமே… நீ பாத்து அரசியலுக்கு வந்த பிள்ளக்கா பையன் அவன், ஏதோ பெரிய அமவுண்ட அடிச்சுட்டானாமே.. அந்த அமவுண்டுல ஏகப்பட்ட சைபர் கீது தல… எனிக்கு ஒன்னும் அன்டர்ஸ்டாண்ட் ஆவுல. ஆனா பெரிய அமவுண்ட்டுனு மட்டும் தெரீது தல.

 

அவ்ளோ பெரிய அமவுண்ட அடிச்சுட்டு, ஒரு மருவாதிக்கு ஒனக்கு துட்டு குடுத்தானா தல அந்த பையன்…. ஒன்னுமே கொடுக்காம கொஞ்சம் கூட மருவாதி இல்லாம ஒன்ன மாதிரி தில்லு தொரக்கிட்டயே மோதறான்னா, நீ யாருன்னு காட்டத் தேவல்ல ?

 

ஒரு மவுடர் பண்ணிருப்பானா தல அவன்.   கிஷ்ணன் அண்ணாத்தேய எப்பிடி மவுடர் பண்ணன்ற கதைய அவன் கைல சொல்லு தல. சாதாரணமா மவுடர் பண்ணிட்டு, ஆந்தரா வரேக்கும் போய், கேச நடத்தி எப்பிடி ஜெயிச்சுட்டு வந்தன்ற வெவரத்த அந்த பேமானிக்கு சொல்லு தல….

 

இன்னா மேரி கேரட்டர் தல நீ…. ஒன் தெகிரியம் என்ன… ஒன் தெறம என்ன… நேத்து பொறந்த பிள்ளக்கா பசங்கள்ளாம் ஒன்ன எதுத்து பாலிடிஸ் பண்றத பாக்கும் போது, கஷ்டமா கீது தல…

 ARV_ALAGIRI_4489e

கருத்துக் கண்புன்னு ஒன்னு கீதாமே… ? அந்த கண்பு நடத்தி ஒனக்கு ஜனங்க கைலே ஆதரவு ஒன்யுமே கெடையாதுன்னு போட்டானுங்களே சோமாறி கேடி பெரதர்ஸ்… அவுங்களே ஒன்யும் பண்ணாம, அங்கே டூட்டி பாக்குற மூனு பேர, கைமா பண்ணியே தல…. அதுலேயே நீ எவ்ளோ பெரிய தில்லாலங்கடின்னு இந்த சோமாறிங்க புரிஞ்சுக்க வேணாம்.

 

அத்தக் கூட வுட்டுறலாம் அண்ணாத்தே… ஒங்க நைனா ரெண்டாவதா ஒன்ன கண்ணாலங் கட்டிகினு இட்டாந்தாரே… அதுக்கு ஒரு மவ இருக்குதாமே… அந்த மவ அடிக்கிற லூட்டியப் பாத்தன்னா மன்சே வெட்சுரும் தல… ஒன்ன யாரும் சேத்துக்க மாட்டேங்கிறாங்கன்னு, ரொம்ப ஃபீலிங்ஸ் ஆயி, நீ சோகத்துல ஒக்காந்துனுக்கீற… அத்தம்மாவோட மவோ, கனிமொயி, ஃபுல்லா டான்ஸ் ப்ரோக்ராம் பாத்துக்கினு கீது தல…

 

ஒன் தங்காசி கூட, கசுப்பருன்னு ஒரு பேமானி கீறான் தல… ஒன் தங்காசிய தாறுமாறா டான்ஸ் ப்ரோக்ராம்கெல்லாம் இட்டுனு போறது அந்த சோமாறி தான் தல… அவன கன்டி நான் நேர்ல பாத்தா, நெஞ்சுல கீற மஞ்சா சோத்த எட்த்ருவேன் தல…. ஆனா அவன் நல்ல நேரம் டபாஞ்சுகினே கீறான்.

 azhagiri_stalin_mk_kanimozhi

நான் கூட ஒரு நாள் டான்ஸ் பாக்க போய்ட்டேன் தல… அங்க போனப்பொறம் தான் தெரிஞ்சுது, இந்த பேமானி ஊட்ல சிபிஐ ரெய்டு வுட்டாங்களாமே… அதுக்கப்புறமும், இந்த பேமானி டான்ஸ் ப்ரோக்ராம் நடத்றான்னா இன்னா தெகுரியம் இருக்கனும்…. ? எல்லாம் நீ கொடுக்கற எடம் தல… ஒன்னயும் கண்டுக்காம, மதுரையில போய் குந்திக்கினு, கோனார் மெஸ்சுல சோறு துன்னுனு கீற நீ….

 

இங்க என்னடான்னா ஒன் தம்பி, பூந்து கலாசிகினு கீறாரு. நீ பாத்து வள்ந்த பய இன்னைக்கு என்னடான்னா தொணை முதல்வருன்னு சீனப் போடுறாரு. ஆனா நீ இத்தயெல்லாம் கண்டுகிட மாட்டேங்கிற….

 

ஒங்கூட படா பேஜாராப் போச்சு தல.. ஒன்ன தலன்னு சொல்லிகினாவே வெளில அடி வுயும் போல கீது..   ஊர்ல எவ்ளவோ தலிவனுங்க இருந்தாலும், ஒன்ன மாதிரி வராதுன்ற ஒரே ரீசன் தான் தல.. ஒன் பின்னாடி இந்த லுச்சாப் பையன் நிக்குறான். நீ கன்டி வெளில வந்து ஒன் முளுத் தெறமையையும் காட்லனா, இந்த லுச்சாப் பையன் ஒன் பின்னாடி நிக்க மாட்டான் தல.

 kk

ஒங்க நைனா எப்போ பாத்தாலும், ஒன் தம்பிக்கே சப்போர்ட் பண்றாரு. அவர மட்டும் தொணை முதல்வர் ஆக்குறாரு. கச்சியில பொருளாளர் ஆக்குறாரு. ஆனா ஒன்ன மட்டும் வாயில நொழையாத தெம்மண்டல அமுக்குற செயலாளருன்னு ஏதோ புது போஸ்டா குட்து ஏமாத்தினு கீறாரு. நீ இத்தையும் கேக்க மாட்டேங்குற. பெர்சு இன்னும் எம்மாம் நாளுதான் ஒனக்கு இப்டி அல்வாவ கிண்டு குட்துக்கினே இருக்கும்னு தெர்லே… ஒன்ன சிஎம் போஸ்டுல ஒக்கார வெச்சு அயகு பாக்கறத உட்டுட்டு, பெர்சு இன்னான்னமோ கதையெல்லாம் உட்டுக்கினு கீது. நீயும் கேட்டுகினு கீற…

 

இந்த மாதிரி நீ மதுரையிலேயே குந்திக்கினு இருந்தேன்னா ஒன்ன ஏமாந்த சோனகிரியாக்கி, ஒன் தம்பியும், தங்காசியும், முந்திகினு பூடுவாங்க தல.. பொறவு நீ மதுரையிலேயே குந்திக்கினு ஜல்லிக்கட்டு வேடிக்கை பாத்துக்கினு இருக்க வேண்டியதுதான் தல… சட்டு புட்டுனு ஒரு முடிவ எட்து, பெர்சு கிட்ட என்னா ஏதுன்னு கேளு தல… இல்லாகாட்டி, ஒங்க நைனா சொல்ற மாதிரி ஒனக்கு இஸ்டரில எடம் வெக்க மாட்டாங்க தல..

 

இப்டிக்கு

 

வண்ணாரப்பேட்ட லுச்சாப்பையன்.

 

Comments  

 
-4 #32 மோகன் 2011-01-24 22:35
வேண்டாம் வம்பு. தலையப்பத்தி தெரியாம மோதாத. வூட்டுக்கு ஆட்டோ அனுப்பணுமா. கண்ணம்மா பேட்டைல சொல்லி வச்சிக்கினியா?
Quote
 
 
+2 #31 manguni 2011-01-19 19:53
எ லே லுச்சா பையா, உன் மருவாதி கேட்டு போயிரும், முட்ட குழம்பு என்னே லேசா போசாவே, பொழுது போகளியக்கும், நான் நினச்சா ஆப்பாயில் ஐய்டுவே, எங்க நைனா லிஸ்டுல நீந்தான் பர்ச்டுல கிற, ஜாக்கிரத ,, அப்படின்னு மிரட்ட போரறக்கும் , போங்கடா, போங்க ,ஐஞ்சு வருசத்துக்குள்ள எவ்வளவு தொழில் த்ரயுமோ எல்லாம் பண்ணி, அடுத்த ஆஸ்திரேலியா பாங்க்ல அக்கௌன்ட் ஆரம்பிக்கற நேரத்துல, நீ வேற,
Quote
 
 
+1 #30 gana 2011-01-19 18:14
Dear Savukku readers,

Please read

http://dinamani.com/edition/story.aspx?&SectionName=India&artid=363147&SectionID=130&MainSectionID=130&SEO=&Title=
Quote
 
 
0 #29 ravikumar99 2011-01-19 17:41
best satire on TN ever.
Quote
 
 
0 #28 marypushpam 2011-01-19 17:29
amam evanuka appa periya perarasar vaarisu urimaiyai nilainaatta vanthuttanga entha kudumpame accidentla than saakanum.
Quote
 
 
+1 #27 jai 2011-01-19 16:33
rajaathi amma moonaandhaaram thala (satta padi dhan. mu.ka. muthu ammava vititye).
varalaaru mukkiyam thala
Quote
 
 
+1 #26 jai 2011-01-19 16:29
Quoting பச்சைமாலு:
வண்ணாரப்பேட்ட லுச்சாப்பையா தப்பாச்சொல்லிட் டியேப்பா, "ஒங்க நைனா ரெண்டாவதா ஒன்ன கண்ணாலங் கட்டிகினு இட்டாந்தாரே… அதுக்கு ஒரு மவ இருக்குதாமே"… அத்த ச்சொல்றேன் அது மூணாவதா கட்டிகீனதா ச்சொல்றாய்ங்க, ஆமா!



ammambaa
Quote
 
 
+1 #25 Thurvasakar 2011-01-19 15:54
DEAR FRIENDS,

PLEASE TELL YOUR FRIENDS THAT THERE IS A WEBSITE IN THE NAME OF WWW.SAVUKKU.NET AND ASK THEM TO VISIT AT LEAST ONE TIME. THEN THEY THEMSELVES KEEP ON VISITING IT AND SHARE WITH THEIR FRIENDS, FRIENDS TO FRIENDS JUST LIKE ME...
Quote
 
 
+4 #24 KK 2011-01-19 15:04
Till last week I was optimistic of Congress and DMK being overthrown in election. But I am now resigned to fate
- Govt says CVC Thomas need not have integrity criterion for selection
- Govt fails to disclose Swiss bank account holder names
- Sibal says no 2g scam
Congress and DMK seem to be sticking.
Except Savukku and Dinamani every periodical is losing interest in 2g scam.
Public memory is short.
If votes against DMK congress is split then DMK will win
Every vote counts against dmk congress.So alliance is need of the hour.
If this combination wins it will convert Tamilnadu into most corrupt region in the world and Srilanka Tamils will ever live as slaves
Dear Savukku members vote agaisnt the best possible alliance to win. Annan Savukku will make sure AIADMK will not become corrupt.
Savukku- the need of the hour is to give correct call now. Please support AIADMK alliance and convert your followers to bring 100 votes each.
Quote
 
 
+3 #23 பொதுஜனம் 2011-01-19 14:53
அண்ணே! போன மாசம் தானே ராஜினமா செய்யப் போவதாக சொன்னிங்க?! அழகிரி: அது போன மாசம். இது இந்த மாசம். நெக்ஸ்ட் மீட் பண்ணுறேன் வரட்டா! அழகிரி மனதினுள் 'இன்னுமா இந்த ஊரு நம்மளை நம்பிகிட்டு இருக்கு?! ஐய்யோ ஐய்யோ!
Quote
 
 
+5 #22 sungod1975 2011-01-19 14:43
Quoting சூனியம்:
அண்ணா அழகிரி அவர்கழுக்கு வாழ்த்துக்கள், எவர் எதைப்பேசினாலும் நீங்க காதில் வாங்கிக்க வாணாம் நீங்கதான் குடும்பத்தில அடுத்த பெரியவர் அப்பாவைபோல உருவ அமைப்பும் ஆளுமையும் உங்களுக்குத்தான ் உண்டு, கட்சிய உங்க கைக்கு கொண்டுவாங்க அடுத்த முதலமச்சரா நீங்கதான் வரணும் ஸ்ராலினுக்கு உள்த்துறைய கொடுப்போம், கனிமொழிக்கு ஊரக வளர்ச்சிய கொடுக்கலாம்,தொர ைக்கு தென் மண்டலம், உதயா கலைஞர் ரிவி ய சன் ரிவி கணக்குக்கு ஒசத்தட்டும்,
கனிமொழிக்கு கலாசார துறை அமசைர் பதவி கொடுங்கோ
Quote
 
 
+2 #21 sakthy 2011-01-19 14:31
எல்லாமே சொல்லிப்புட்டீங ்க நைனா.ஆனா ஒரு வருத்தமுங்க. என்ன தெரியுங்களா. சவுக்கில வர்ரதெல்லாம் மக்களுக்கு போகணும் நைனா. இல்லைனா பிரியாணியும்,இல வசங்களும் அப்பாவி மக்களுக்கு போதையை கொடுத்திடும். மீண்டும் கோவிந்தா.
Quote
 
 
+1 #20 Anand 2011-01-19 13:43
நான் ராஜினாமா செய்வதாக சொல்லவேயில்லையே -அமைச்சர் அழகிரி
தென் மண்டல திமுக சொயலாளர் பதவியையோ, மத்திய அமைச்சர் பதவியையோ நான் ராஜினாமா செய்வதாகவே கூறவில்லை என்று மத்திய ரசாயணத் துறை அமைச்சர் மு. க. அழகிரி தெரிவித்துள்ளார ்.
இந்த நிலையில் இன்று அழகிரி டெல்லி சென்றார். விமான நிலையத்தில் அவரை செய்தியாளர்கள் சந்தித்து கருணாநிதியுடனான சந்திப்பு குறித்தும், அவரது ராஜினாமா குறித்த செய்தி தொடர்பாகவும் கேட்டனர்.

அதற்குப் பதிலளித்த அழகிரி,

நான் ராஜினாமா செய்யப்போவதாக வந்த தகவல் பற்றி எனது தந்தையும், திமுக தலைவருமான மு.கருணாநிதி ஏற்கனவே விளக்கம் அளித்துவிட்டார் . பதவி கேட்கும் பழக்கம் எனக்கு இல்லை. அவர்களாக கொடு்த்தால் அதை ஏற்றுக் கொண்டு கட்சிக்காக பாடுபடுவேன் என்றார்.
Quote
 
 
+15 #19 Kumar.T 2011-01-19 13:08
அட அத்த விடுபா... பெரிய பெரிய சயீன்டிஸ்டிங்கோ கூட கண்டுபிடிக்காத "திருமங்கலம் ஃபார்முலா" கண்டுபுடிச்ச எம்மாம் பெரிய ஆளு நீயீ.. துட்டு கொடுத்து ஆள அமுக்குறததுக்கு ஃபார்முலானு டீஸன்டா பேரு வச்ச பாரு அத்த யாரால் அடிக்க முடியும்கர?? காமராசறு, அண்ணாலாம் உன்னான்ட பாடம் படிக்கணும் தல... இம்மாம் பெரிய வஸ்தாதா இருந்து இன்னா புரோசணம் தமாதுண்டு மதுர ஏரியாவ உணாண்ட கொடுத்துட்டு அல்லா தமிழ்நாட்டையும் உறிவுடாங்களே..
இப்போ வந்த ரவ தங்கச்சி ஸ்பெக்ட்ரம்ல இன்னா பெரிய லேவல்லஆட்டைய போடுது நீ இன்னாடான்ன இன்னும் "ஹார்லிக்ஸ் பாட்டில்" லேவல்ல தான் இருக்க..
உண்னான்ட ஒபபனீங் நல்லாகீது ஆனா பினிசிங் சரியில துரை... பாத்து சூதானமா இரு
Quote
 
 
+4 #18 raasaa 2011-01-19 12:54
இன்னாபா சவுக்கு.உன் வேலைய என் கிட்டே காட்றியா.எலக்சன் வர்டும் அப்போ பாரு நான் இன்னா பேஜாரு பண்றன்னு.நீ மெட்ராஸ் சொமாரினா நா மதுரை மொள்ளமாரி.கனி,ராசா,ஜெகத் காசுபர் என் நைனா எல்லாத்துக்கும் ஜல்தியா வக்கிரம் பாரு ஆப்பு.நீ கவலைபடாத நைனா.கண்ணம்மா பேட்ல சொல்லி வச்சிரு நெறையா சொமாரிங்கள எலெக்சன் நேரத்துல அனுப்பி வக்கிரன்.அக்காங்.
Quote
 
 
-9 #17 பாரதி 2011-01-19 12:14
Dear sir am a regular reader of savukku. The above published article is of savukkus sub standard. Please avoid such slangs. This is a sincere advice.
Quote
 
 
+2 #16 chinna 2011-01-19 11:58
பராட்ட(சவுக்கு) பத்த வச்சுட்டிய பராட்ட
Quote
 
 
0 #15 சூனியம் 2011-01-19 11:54
அண்ணா அழகிரி அவர்கழுக்கு வாழ்த்துக்கள், எவர் எதைப்பேசினாலும் நீங்க காதில் வாங்கிக்க வாணாம் நீங்கதான் குடும்பத்தில அடுத்த பெரியவர் அப்பாவைபோல உருவ அமைப்பும் ஆளுமையும் உங்களுக்குத்தான ் உண்டு, கட்சிய உங்க கைக்கு கொண்டுவாங்க அடுத்த முதலமச்சரா நீங்கதான் வரணும் ஸ்ராலினுக்கு உள்த்துறைய கொடுப்போம், கனிமொழிக்கு ஊரக வளர்ச்சிய கொடுக்கலாம்,தொர ைக்கு தென் மண்டலம், உதயா கலைஞர் ரிவி ய சன் ரிவி கணக்குக்கு ஒசத்தட்டும்,
Quote
 
 
+2 #14 குசும்பன் 2011-01-19 11:35
ன்னத்த ருந்தாலும் க்ழவனுக்கு, 90 வயசாச்சு ன்னும் 2 வருசத்ல புட்டுக்கப்போவு து. அப்பொறம் இவனுக கேடி பிரதர், ஸ்ராலின் ஒதயநித்தி கொம்பனி, பைரவர் அழக்கிரி கொம்பனி. அப்பொறம், திருமதிஸ்? கனிமுத்து, ராசாத்தி கொம்பனின்னு ஒருகாலமும் ஒட்டாத கூட்டந்தானே கவுறு திரிச்சிட்டிருக ்கு ஒன்னா இருப்பாய்ங்கன்ன ு அந்தகலியுக கடவுளான சாயிபகவானும் னித்திபகவானும் கூட்டமப்பா வந்து சொன்னாலும் னடக்காதுங்கோ. ஆனாலும் னான் சப்போர்டு பன்னுறது கனிக்குத்தான் :-)
Quote
 
 
+3 #13 Karthik.S 2011-01-19 11:11
தோஸ்த் சவுக்கு.. கலிகிட்ட பா நம்ம லாங்குவேஜ இன்னாமா பூந்து வெள்ளாட்ட,
நான் மெய்யாலுமே சொல்றேன் .. இத்த கண்டி அந்தாளு பட்சார்ணா (?), செம காண்டு ஆயி,
சும்மா மனோகரா கணக்கா பொங்கி எயிந்திடுவாறு ! அக்காங் !

நீ உட்ட டயலாக் எல்லாம் பசிபிலகடி கண்ணாம்பா பேசன மாதிரியே கீது பா
Quote
 
 
0 #12 domil 2011-01-19 11:07
:oops: :cry: :o :eek:
Quote
 
 
+1 #11 Nithi 2011-01-19 10:21
INTERSTING..........
Quote
 
 
+1 #10 பச்சைமாலு 2011-01-19 10:13
வண்ணாரப்பேட்ட லுச்சாப்பையா தப்பாச்சொல்லிட் டியேப்பா, "ஒங்க நைனா ரெண்டாவதா ஒன்ன கண்ணாலங் கட்டிகினு இட்டாந்தாரே… அதுக்கு ஒரு மவ இருக்குதாமே"… அத்த ச்சொல்றேன் அது மூணாவதா கட்டிகீனதா ச்சொல்றாய்ங்க, ஆமா!
Quote
 
 
+1 #9 star 2011-01-19 09:49
I have told this to my friends before one month.But I said little bad than this.

But,savukku`s view and my view is the same.

I think savukku read my mind.Good job....

(The bad I said is murder..........................
I mean about in election any one party will be murdered)
Quote
 
 
0 #8 bbfbf 2011-01-19 08:59
:o :-? :eek: :P :roll: :sigh:
Quote
 
 
+4 #7 குவார்ட்டர் கோவிந்து 2011-01-19 07:01
கொய்யால! பெரிய பெட்ரோல் கிணத்துல தீப்பொறிய சவுக்கு போட்டுறிச்சு.......அப்புறம் என்ன, விடிய விடிய தீபாவளிதான்......நான் டாஸ்மாக்க்கு கிளம்புறேன்...... நல்லா இருப்போம் , நல்லா இருப்போம், எல்லாரும் நல்லா இருப்போம்.....
Quote
 
 
+9 #6 anbu 2011-01-19 06:27
அம்புள்ள சவுக்கா,
நான் ஜனிகான் ரோடு, வண்ணாரப்பேட்டை லுச்சா பையன் மச்சானின் கடிதாசுப்பா, பார்த்துக்கோ.. பெரம்பலூர் அரை டவுசர் பையன், நம்ம சாட் மாமா, கர்மவீரர் இந்த கும்பல் மோசமான ஆளுங்க.. கேர்புல்லா இரு..புல்லுன்னு வர்த்தை வந்தாலே போதை வந்துடுதுப்பா..எதுக்கும் என் நம்பரை வச்சுக்கு, உனக்கு அர்ஜென்டினா உடனே கூப்பிடுப்பா, நான் நம்ம ஆளுங்களை ஆட்டோவில் போட்டு கொண்டானந்திரா மாட்டேன்..டோன் ஓரிப்பா.. போதுமா சவுக்கா.. எனக்கு கடிதாசு எழுததெரியாதுப்ப ா.. நம்ம நாஸ்தா கடை சுதா அக்காதான் எழுதி கொடுத்துச்சுப்ப ா…தப்பா இருந்தா மன்னிச்சுக்காப் பா.. அன்பு
Quote
 
 
+8 #5 Aloysius 2011-01-19 05:50
அருமையான பதிவு , வாழ்த்துகள்......
Quote
 
 
-1 #4 venthan .theni 2011-01-19 03:02
alagiri remba nallavar maduraiyil avarai vella yaaraalum mudiyaathu avarai parriya ungal karuthukkal sariya? avar oru veguli athanaal avarai yemarra parkirathu kalinagar kudumbam anaal avar alavirku theramayaana aatkal avarkal kudumbathil yaarum kidayaathu savukkuku avarai parri mulumayaaka theriyaathu therinthaal ungal karuthai marrikolveerkal
Quote
 
 
+4 #3 Sen 2011-01-19 02:48
ennama kaliki ikkapa nee
Quote
 
 
+10 #2 மானஸ்தன் 2011-01-19 02:09
பத்த வைசசிடேயே பாரட்டை !!!
பின் குறிப்பு : வண்ணாரப்பேட்ட லுச்சாப்பையயா, உன் தலைவன மதுரையில ´முட்டகுளம்பு முட்டகுளம்புன்ன ு ´ செல்லமா கூப்பிடுவோம்
நம்பலேயா போட்டோவ பாரு போட்டோவ பாரு ரூ ரூ
Quote
 
 
+18 #1 Ganesh 2011-01-19 01:34
அண்ணனுக்கு இன்னும் கொஞ்சம் பூஸ்ட் எதுங்க தலைவா.. அண்ணன் காண்டி கோதாவுல குச்சாருன்ன திமுக டர்ர் ஆகிடும்.. பெரிய அண்ணனுக்கு அல்வா கொடுத்துட்டு சின்ன அண்ணனுக்கு அதிகாரம் தந்தா கோபம் வராதா பின்னே.
இருந்தாலும் பெரியவர் அண்ணனுக்கு ரொம்ப துரோகம் செய்யறார். இதை கண்டித்து மதுரையில் ஆர்ப்பாட்டம் நடதுன்ங்க தலைவா..
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 29 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday1275
mod_vvisit_counterYesterday11260
mod_vvisit_counterThis week33734
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month236466
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12758585