முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்தொடர்புக்கு
+++
முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா ? அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 30
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
ஞாயிற்றுக்கிழமை, 23 ஜனவரி 2011 01:14
 

 

முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப் படலாமா ? படக்கூடாதல்லவா. அதைப் போலத்தானே மானமில்லாதவன் தான் அவமானப் படுத்தப் பட்டதாக கூவுவது ?

 

அப்படி கூவும் மானங்கெட்டவன் யார் என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறதல்லவா ?

 

அது வேறு யாரும் அல்ல. சவுக்காலும், அதன் வாசகர்களாலும் குருமாராஜ் என்று அன்போடு அழைக்கப் படும் காமராஜ் தான் அது.

 Kamaraj_3

குருமாராஜ் சார்பாக, அவரது நண்பர்கள் பல பேர், சவுக்கிடம், காமராஜ் முன்பு போல் இல்லை, அவர் மிகவும் பலகீனமாக இருக்கிறார், அவரை விட்டு விடுங்கள். ஜாபர் சேட்டோடு, அவர் முன்பு போல நெருக்கம் பாராட்டுவது இல்லை என்று பல முறை கேட்டுக் கொண்டார்கள். அவர்கள் சொன்னதை சவுக்கு நம்பாவிட்டாலும், பெரியவர்கள் சொன்னதற்கு மரியாதை அளித்து, பொறுத்திருந்து பார்க்கலாம் என்ற அணுகுமுறையை கடைபிடித்தது. ஆனால், குருமாராஜின் நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் இல்லை என்பதும், இன்னும், ஜாபர் சேட்டின் கைப்பாவையாகவே செயல்பட்டு வருகிறார் என்பதும், விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

கடந்த வாரம், சென்னை மாநகர குற்றவியல் தலைமை நடுவர் நீதிமன்றத்தில் (Chief Metropolitan Magistrate) என்டிடிவி இந்து தொலைக்காட்சி மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார் குருமாராஜ்.

 

மான நஷ்ட வழக்கு தொடர்வதற்கு, குருமாராஜ் கூறிய காரணம், இந்திய ஜனநாயகத்தை காத்த மாதரசி, நீரா ராடியாவின் வைஷ்ணவி கம்யூனிக்கேஷன்ஸ் நிறுவனத்தில், குருமாராஜின் மனைவி ஜெயசுதா பணியாற்றினார் என்று அத்தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளதாம். இதனால் இல்லாத மானம் நஷ்டப் படுத்தப் பட்டு விட்டது என்று வழக்கு தொடுத்துள்ளார் குருமாராஜ்.

 

இவ்வாறு தொடுத்த வழக்கிலாவது ஏதாவது நியாயம் இருக்கிறதா என்றால் துளியும் இல்லை. நீரா ராடியாவின் நிறுவனத்தில் ஜெயசுதா பணியாற்றினார் என்பது, சிபிஐ அதிகாரிகள் ரகசியமாக சொன்ன தகவல். இத்தகவல் உண்மையா இல்லையா என்பது, சிபிஐ விசாரணையின் முடிவிலேயே தெரிய வரும். மேலும், குருமாராஜின் வீட்டில் கைப்பற்றப் பட்ட ஆவணங்களின் பட்டியலை சிபிஐ இது வரை வெளியிடவில்லை. இந்தப் பட்டியலை காமராஜ் வெளியிடத் தயாரா ?

 

மேலும், என்டிடிவி இந்து தொலைக்காட்சி வெளியிட்டதாக சொல்லப் படும் இந்த செய்தியை வெளியிட்டது அந்த தொலைக்காட்சி மட்டுமல்ல. சிஎன்என்.ஐபிஎன், டைம்ஸ் நவ், என்டிடிவி 24 X 7 ஆகிய தொலைக்காட்சிகளும் தான்.

 

இது போக, டெஹல்கா, டெக்கான் ஹெரால்ட், இந்துஸ்தான் டைம்ஸ், டெலிகிராஃப் ஆகிய நாளேடுகளும் குருமாராஜ் மனைவி ஜெயசுதா வைஷ்ணவி கம்யூனிக்கேஷன்ஸ் நிறுவனத்தில் பணி புரிகிறார் என்ற செய்தியை வெளியிட்டன.

 

அவர்கள் மீதெல்லாம் மான நஷ்ட வழக்கு தொடுக்காமல், என்டிடிவி இந்து தொலைக்காட்சி மீது மட்டும், வழக்கு தொடுக்க வேண்டிய அவசியம் என்ன ?

 

இங்கேதான் ஜாபர் சேட் வருகிறார்.   என்டிடிவி இந்து தொலைக்காட்சியின் ஆசிரியர் சஞ்சய் பின்டோ என்பவர், ஜாபர் சேட் தொலைபேசியில் கேட்டுக் கொண்டதற்குப் பிறகும், ட்ராலி பாய்ஸ் வீட்டு மனை பெற்ற விபரத்தையும், தமிழ்நாடு வீட்டு வசதித் துறையின் விருப்புரிமை ஒதுக்கீட்டில் நடந்த ஊழல்களையும் பற்றி செய்தி வெளியிட்டதால், கடும் கோபம் அடைந்த ஜாபர் சேட், சஞ்சய் பின்டோவிற்கு தக்க பாடத்தை புகட்ட வேண்டும் என்பதற்காகவே குருமாராஜை ஒரு கருவியாக பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

 

ஜாபர் சேட்டின் தொழில் கூட்டாளியான (என்ன தொழில் என்றெல்லாம் கேட்காதீர்கள்… கண்றாவி) குருமாராஜை இது போன்ற ஒரு வழக்கை தொடுக்க வைத்துள்ளார்.

 

தனக்கு அவமானம் ஏற்பட்டு விட்டது என்று வழக்கு தொடுத்திருக்கிறாரே குருமா ராஜ் ?

 DSC_0133_1

நித்யானந்தாவை எக்ஸ்போஸ் செய்கிறேன் என்று, ரஞ்சிதா என்ற பெண்மணி, படுக்கையில் நெருக்கமாக இருந்ததை ஃப்ரேம் ஃப்ரேமாக வெளியிட்டு, பத்திரிக்கை வியாபாரத்தையும் தனது வியாபாரத்தையும் பெருக்கியுள்ளாரே குருமாராஜ், ரஞ்சிதாவின் மானத்தைப் பற்றி கவலைப் பட்டாரா ?

 

குருமாராஜின் விவாதத்தின் படியே ஒரு பேச்சுக்காக ஜெயசுதா அந்த நிறுவனத்தில் பணியாற்றவில்லை என்றே வைத்துக் கொள்வோம். இதனால் ஒன்றும் பெரிய அவமானம் நேர்ந்து விடவில்லையே… ! ஆனால், படுக்கையில் ஒரு ஆணோடு அந்தரங்கமாக இருக்கும், ஒரு பெண்ணின் புகைப்படங்களை வெளியிடுவதற்கு குருமாராஜுக்கு யார் அதிகாரம் கொடுத்தது ? இவ்வாறு, படுக்கையறையில் ஒளிந்திருந்து படம் பிடிப்பதற்கு பெயர் இன்வெஸ்டிகேட்டீவ் ஜர்னலிசம் இல்லை….. போர்னோக்ராஃபி.

 

ரஞ்சிதாவை படம் பிடித்துப் போட்டீர்களே.. குருமாராஜ். ஜாபர் சேட் கடந்த வாரம், ஐதராபாத் சென்று, ஐந்து நட்சத்திர ஓட்டலில், அழகிகளோடு உல்லாசமாக இருந்தாரே… அந்தப் படத்தை போட வேண்டியதுதானே… ? அதற்கு கூட பணத்தை செலவு செய்யாமல், ஓசியில் விமான டிக்கெட், நட்சத்திர ஓட்டல் அறை, ஓசி வாகனம், (கருமம், சென்னையிலிருந்து அழைத்துச் சென்ற பெண்ணும் ஓசியாம்) என்று தன் வாழ்க்கையையே ஓசியில் நடத்தும் ஜாபர் சேட்டைப் பற்றி எழுத வேண்டியதுதானே… ?

 jaff

ரஞ்சிதா நடிகை… பெண்.. அவள் மீது எவ்வளவு சேற்றை வாரி இறைத்தாலும், யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்ற திமிர்தானே ?

 

நேரிடையாக சொல்ல முடியாவிட்டாலும் இன்னொரு விஷயத்தையும் தெரியப் படுத்த வேண்டும். சென்னையில், வெளிநாட்டு நிறுவனத்தின் உதவியோடு, ஒரு மருத்துவ தொண்டு நிறுவனம் நடந்து வருகிறது. அந்த தொண்டு நிறுவனத்தின் மேனேஜ்மேன்ட் மாறி, ஒரு நல்ல அதிகாரி நியமிக்கப் படுகிறார். அங்கே ஒரு பெண் நல்ல நிர்வாகியாக இருக்கிறார். அந்த அதிகாரியும், அந்தப் பெண்ணும் சேர்ந்து, அது வரை அந்த தொண்டு நிறுவனங்களில் நடந்து வந்த ஊழல்களை மேலும் நடைபெறாவண்ணம் மாறுதல்களை செய்கிறார்கள்.

 

இந்த மாறுதல்களால், அந்த நிறுவனத்தில் இது நாள் வரை கொள்ளையடித்து வந்த நபருக்கு கடும் பொருள் நஷ்டம். மேலும் கொள்ளையடிக்காமல் தடுக்கப் படுகிறார். இந்த நபர் குருமாராஜுக்கு நெருங்கிய நண்பர்.

 

குருமாராஜிடம் இந்த விஷயம் சொல்லப் பட்டதும், குருமா ராஜ் என்ன செய்தார் தெரியுமா ? அந்தப் பெண்மணி, அந்த நிறுவனத்திலேயே இரண்டு பேரோடு தொடர்பு வைத்திருக்கிறார் என்றும், வெளியில் பல பேரோடு தொடர்பு வைத்திருக்கிறார் என்றும் செய்தி வெளியிட்டார். ஒரே வாரத்தில் அந்தப் பெண்மணி தனது வேலையை துறந்து வெளியேறினார்.

 

இதுதான் குருமாராஜ். வைஷ்ணவி கம்யூனிகேஷ்ன்ஸ் நிறுவனத்தில் வேலை செய்யும் உங்கள் மனைவியைப் பற்றி இப்படி செய்தி வெளியிட்டால் உங்களுக்கு எப்படி இருக்கும் குருமாராஜ் ?

 

இப்படிப் பட்ட வஞ்சனைகளை யார் செய்வார் என்று பாரதி கூறியிருக்கிறான் தெரியுமா ?

 

நெஞ்சில் உரமும், நேர்மை திறமும் இல்லாதவர்கள் தான் இப்படிப் பட்ட செயல்களை செய்வார்கள் என்று கூறியிருக்கிறான்.

 

நெற்றிக் கண்ணைத் திறந்தால் குற்றம் குற்றமே என்று போட்டிருக்கிறீர்களே…. நெற்றிக் கண்ணை விடுங்கள். உங்களுக்கு கண் இருக்கிறதா முதலில்… பார்வையற்றவன் கூட நேர்மையாக உழைத்துப் பிழைக்கிறானே….. கண்ணிருந்தும் குருடனாக, காலிருந்தும் முடவனாக இருக்கும் குருமாராஜ் அவர்களே…. இப்போது கூட சிந்திக்கமாட்டீர்களா ?

 

ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், நக்கீரனை முடக்க ஜெயலலிதா தொடர்ந்து வழக்கு மேல் வழக்காக போட்டுக் கொண்டிருந்த போது, இந்த பத்திரிகையாளர்கள் உங்களுக்கு எப்படி தோள் கொடுத்தார்கள் என்பதை மறந்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

 

அப்படிப் பட்ட பத்திரிக்கையாளர்கள், உங்கள் வீட்டை சோதனை செய்த போது, முணுமுணுக்கக் கூட இல்லையே ஏன் என்று சிந்தித்தீர்களா குருமாராஜ் ?

 

குருமாராஜ் சார், உங்கள் மனைவி ஜெயசுதாவைப் போன்ற உழைப்பாளியை சவுக்கு பார்த்ததே இல்லை சார். நினைத்தாலே மனது பெருமைப் படுகிறது சார்.

 

வீட்டு வசதி வாரியத்திற்கு கொடுத்த விண்ணப்பத்தில் தான் ஒரு விவசாயி என்று குறிப்பிட்டிருக்கிறார்.

 

IMG_0003


IMG_0004

வருட வருமானம் ஆண்டுக்கு 1.50 லட்சம் என்று குறிப்பிட்டுருக்கிறார். அப்போ மாத வருமானம் 12,500 ரூபாய். இவ்ளுண்டு மாத வருமானத்தை வைத்துக் கொண்டு இரண்டே தவணையில் ஒரு கோடியே இருபத்தாறு லட்சம் கட்டியிருக்கிறார் என்றால் உங்கள் மனைவியைப் போல ஒரு உழைப்பாளியைப் பார்க்க முடியுமா ?   நினைத்தாலே மலைப்பாக இருக்கிறது குருமாராஜ் சார்.

 

இது பத்தாது என்று இரவு நேரத்தில் சேரிக் குழந்தைகளுக்கு உங்கள் மனைவி ஜெயசுதா பாடம் எடுக்கிறார் என்ற செய்தியை கேள்விப் பட்டவுடன்…. அப்பப்பா…. புல்லரிக்கிறது சாரே…

 img443

ஞான் எந்து ஒரு புண்ணியம் செஞ்சு.. நிங்களோடே, ஈ லோகத்தில் ஜனிக்க ?

 

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நோக்கமே, வீடில்லாதவர்களுக்கு வீடு வழங்குவதுதானே… ? அதனால்தானே, மாநகராட்சியிலோ, நகராட்சியிலோ, இந்தியாவின் எந்த இடத்திலும், சொந்த வீடோ, வீட்டு மனையோ, அடுக்கு மாடியோ இருக்கக் கூடாது என்று விதிமுறை வகுத்துள்ளார்கள். மனைவியை வைத்து, அந்த விண்ணப்பத்தில் ஒரு பொய்யான உறுதிமொழியை கொடுத்து, கருணாநிதியின் காலை கழுவி 2 கோடி ரூபாய் வீட்டு மனையி 1.26 கோடிக்கு வாங்கி, அதில் அடுக்கு மாடி வீடு கட்டி 6 கோடி ரூபாய் லாபம் சம்பாதிக்க திட்டமிட்டுள்ளீர்களே… குருமாராஜ்…

 IMG_0002

நீங்கள் மானத்தைப் பற்றிப் பேசலாமா ?

 

நீங்கள் மானநஷ்ட வழக்கு போட்டதன் உடனடி விளைவு என்ன தெரியுமா ?

 

உங்கள் மனைவி பெயரில் திருவான்மியூரில் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ள வீட்டு மனையை ரத்து செய்ய அரசுக்கும், வீட்டு வசதி வாரியத்திற்கும் புகார் அனுப்பப் படுகிறது. அதன் நகல் வேண்டுமென்று எங்கேயும் அலையாதீர்கள். சவுக்கே அதை உங்களுக்காக பதிப்பிக்கிறது.   இப்போ என்ன செய்வீங்க… வெவ்வெவ்வே…..

 Kamaraj_complaint_Page_1

 

Kamaraj_complaint_Page_2

தேன் கூட்டில் கை வைத்து விட்டீர்கள் குருமாராஜ். இதன் விளைவுகளை நீங்கள்தான் அறுவடை செய்ய வேண்டும். நீங்கள் தொடர்ந்துள்ள வழக்கு, யாரையும் அச்சுறுத்தி விடாது. அந்த வழக்கில் சவுக்கு தன்னையும் ஒரு பார்ட்டியாக சேர்த்துக் கொண்டு, இந்த தகிடுதண்டா ஆவணங்களையெல்லாம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து நீங்கள் எப்படிப் பட்ட நபர் என்பதை நீதிமன்றத்திலும் நிரூபிக்கும் என்பதை உங்களுக்கு மகிழ்ச்சியோடு சவுக்கு அறிவிக்கிறது.

 

Comments  

 
+1 #59 சந்தீப் பிரசன்னா 2011-05-23 19:32
எப்டி சவுக்கு!! கலக்குங்க!!
Quote
 
 
+2 #58 ravikumar99 2011-01-26 18:19
Yow Savukku,

The plot that was allocated for 1.5 crores is really worth 6 Crores in 2008(The time of allotment)
Because of you Kurumaraj is going to loose 4.5 crores.

TNHB will not cancel the allocation then you will go to High Court and then case will go on.
Amma will become CM in June and then New CMD of TNHB will cancel the allotment in Dec 2011 and the PIL case you filled at High court will be closed.
Quote
 
 
+5 #57 unmai 2011-01-26 07:19
Quoting unmai:
இந்த குருமராஜ்..சாரி, 'காம' ராஜ் எப்ப பாத்தாலும் இதே பேன்ட் போட்டு இருக்கான்..சவுக்கு ஒரு நல்லா பேண்டா வாங்கி தர கூடாதா ?



savuku kin velai avan trouser aah kalaturathu... vangi tharathu illa thala
Quote
 
 
+2 #56 nanbanda !!! 2011-01-25 23:31
:-)
good savuku... can u also investigate the blackmail of sekar emporium stores many years back as he threatened to expose his chinna veedu..and got rs 5 lacs
Quote
 
 
+3 #55 A.Saravanan 2011-01-25 15:45
சவுக்கு அவர்களே, இந்த செய்தியை ndtv க்கு மின் அஞ்சல் அனுப்புங்களேன். அவர்கள் வெளியிட்டால் நல்லதாக அமையும்.
Quote
 
 
+1 #54 niroshan 2011-01-25 15:30
savukku nee avatanamma iru .kaale pasaingka
Quote
 
 
+1 #53 sivan 2011-01-25 10:52
WELL DONE SAVUKKU
Quote
 
 
+7 #52 Ragasiyan 2011-01-25 02:37
ஏலே இப்போதாம்பில இத படிச்சேன் சூப்பர் ஆப்புல. ஏய் சவுக்கு ராசா நீ நடத்துல
Quote
 
 
+2 #51 Jamesbond007 2011-01-24 23:57
Great Job savukku keep it up

and take care ... for like this risk things.

we are hands with you.
Quote
 
 
+28 #50 மானஸ்தன் 2011-01-24 23:53
பாசு , நல்ல பதிப்பு. எலை குருமராசு இப்ப கு. எரியுமே. அதே நேரம், சவுக்கு கொஞ்சம் கவனமாவே இருங்கோ . டை டூச்ச்சா பயலுகலா எவனாவது சவுக்கு கிட்ட வேலைய காட்டு .... ஆப்பு எங்கருந்து வரும் , எப்பிடி வரும்முன்னு தெரியாது... அனா கண்டிப்பா வரும். வாசகர்களா பச்சை கலர அமுக்கி சிக்னல் கட்டுங்க பாப்போம். ;)
Quote
 
 
0 #49 rampi 2011-01-24 19:55
great work savukku
Quote
 
 
+5 #48 வாசகன் 2011-01-24 18:57
கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்க எத்தனையோ தொழில் இருக்கு. உதாரணமாக புராதனமான தொழில். அப்படி சம்பாதிச்சி கட்டியிருப்பாங் க.
Quote
 
 
+1 #47 NA.Erasan 2011-01-24 17:14
well said
Quote
 
 
0 #46 JP 2011-01-24 17:10
Stupid KAMARAJ . He does nt know how to make fraud.
Quote
 
 
+8 #45 ரமேஷ் 2011-01-24 15:44
சார். உண்மையாகவே சொல்றேன் நாட்ல யார் யாரையோ சூப்பர் சடார்னு சொல்றாங்க ஆனா நீங்க தான் உண்மையான சூப்பர் ஸ்டார் சார். நான் இப்போ தான் சவுக்கு படிக்கிறேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு. அரசுக்கு ஜால்ரா அடிக்கிற பத்திரிக்கைகள பார்த்து வெறுத்து போயி இருந்த என்ன மாதிரி ஆளுங்களுக்கு சவுக்கு படிக்கும் போது ஒரு சந்தோஷம் வருது. வெல்டன் சார்
Quote
 
 
-17 #44 ஒற்றியுறான் 2011-01-24 15:37
யப்பா சவுக்கு உனக்கு குர்மராஜ் மேல ஏன் இவ்வளவு காண்டு? அம்மா ஆட்சியில கொலச்சதுக்கு அய்யா இப்போ பிஸ்கட் போடறாரு. நாளைக்கு அம்மா ஆட்சிக்கு வந்து உனக்கு பிஸ்கட் போட்டா வேணாமுன்னா சொல்லபோற? நீ உண்மையிலேயே சவுக்கா இல்ல டுபுக்கான்னு ஆட்சி மாரினபிறகு தானே தெரியும்.
Quote
 
 
0 #43 P.SELVARAJ 2011-01-24 14:59
miga arumai vaazhtthukkal
Quote
 
 
0 #42 muthue83 2011-01-24 14:45
ayya suvuku ku romba thanks nenka oru gentle man
Quote
 
 
0 #41 Veeramani 2011-01-24 14:17
Hats off savukku..good job...
Quote
 
 
+1 #40 vsudharsan 2011-01-24 13:50
good work welcome :roll: :P :zzz
Quote
 
 
+2 #39 பாமரன் 2011-01-24 11:34
Quoting venki:
" நீங்கள் மானநஷ்ட வழக்கு போட்டதன் உடனடி விளைவு என்ன தெரியுமா ? "

குருமாராஜ் மான நஷ்ட வழக்கு போட்ட பின் தான் சவுக்கு இந்த விஷயத்தை புகாராக அளிக்கிறது என்பது சவுக்கு வாசகன் எனும் முறையில் என்னை மிகவும் அதிர்ச்சிக்குள் ளாக்கியது.இதை நான் சவுக்கிடம் இருந்து எதிர்பார்க்கவில ்லை.


குருமாராஜ் சார்பாக, அவரது நண்பர்கள் பல பேர், சவுக்கிடம், காமராஜ் முன்பு போல் இல்லை, அவர் மிகவும் பலகீனமாக இருக்கிறார், அவரை விட்டு விடுங்கள். ஜாபர் சேட்டோடு, அவர் முன்பு போல நெருக்கம் பாராட்டுவது இல்லை என்று பல முறை கேட்டுக் கொண்டார்கள். அவர்கள் சொன்னதை சவுக்கு நம்பாவிட்டாலும் , பெரியவர்கள் சொன்னதற்கு மரியாதை அளித்து, பொறுத்திருந்து பார்க்கலாம் என்ற அணுகுமுறையை கடைபிடித்தது. ஆனால், குருமாராஜின் நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் இல்லை என்பதும், இன்னும், ஜாபர் சேட்டின் கைப்பாவையாகவே செயல்பட்டு வருகிறார் என்பதும், விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதற்காகத்தான் சவுக்கு இத்தனை காலம் தாமதித்து. இதில் சவுக்கின் மீது தவறு ஏதும் இருப்பதாக தெரியவில்லை.
Quote
 
 
+1 #38 savukku thaasan 2011-01-24 07:10
Thinakaran paperilum editorial staff niraiya surutturaanga, athai pathi veliyida vendukiren
Quote
 
 
+3 #37 tamizselvan 2011-01-24 04:41
Vazga Savukku
Quote
 
 
+2 #36 sree 2011-01-24 04:33
Great Job!Keep going Mr. Savukku
Quote
 
 
0 #35 Nirubar 2011-01-24 01:12
appadi podu, abaandamaha oru pen meethu pali sumathinavanai kandippaha kadavul thandipar
Quote
 
 
+2 #34 tamizselvan 2011-01-24 00:41
Savukku....nee tamilnatin Wiki leaks....valarga un sevai,paravatum un pugaz
Quote
 
 
0 #33 Premkumar SJ 2011-01-23 22:27
Awesome :)
Quote
 
 
-1 #32 Sk 2011-01-23 21:52
Will you continue the same in next Regime?
Quote
 
 
+5 #31 raja_london 2011-01-23 19:12
Very good Savukku.
Quote
 
 
+14 #30 riaz khan 2011-01-23 18:54
இந்த காமராஜ் எப்படி பட்டவர் என்பதை சவுக்கு தெரிவிக்கவில்லை என்றால், மக்கள் இந்த மகா புருஷன் எழுதுவதையெல்லாம ் உண்மை என்று அல்லவே நம்புவார்கள். நக்கீரன் ராஜகோபாலன் அவர் மீது நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை. சவுக்கு அவர்களே, காமராஜுக்கு யார் அதரவாக வந்தாலும், நீங்கள் தொடர்ந்து உண்மையை வெளி கொண்டு வாருங்கள், சவுக்கு ஆதரவாளர்கள் தினம் தோறும் வளர்ந்து வருகிறார்கள். விரைவில் நீங்கள் பத்திரிகை தொடங்கவேண்டும் என்பதே எங்களின் ஆவல்.
Quote
 
 
+18 #29 riaz khan 2011-01-23 18:49
நான் சமிபத்தில் தான் சவுக்கின் வாசகரானேன், சவுக்கை பார்த்ததில்லை. அனால் அவரின் தையிரியம், ஆற்றல், சமுக பொறுப்புணர்ச்சி , என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. முதலில் ஏதோ இதுவும் "நக்கீரன்" போன்று டுபாகூர் பத்திரிகையோ என்று நினைத்தேன். நமது அதிகாரிகள், போலீசுகள் இப்படி திமுகவிற்கு அடிமைகளா செயல்படுவதை பார்த்து மனம் வெதும்புகிறது.
Quote
 
 
+5 #28 jai 2011-01-23 18:04
Hats off savukku.....
Quote
 
 
+4 #27 nat 2011-01-23 16:54
YOU ARE THE MAN. KEEP IT UP
Quote
 
 
+7 #26 mullaiyarasu 2011-01-23 14:28
Nakkeran is a Pornography magazine.It is not qualify to use as a tissue paper. Gopal and Kamaraj are Porn journalist. Savukku you do good job.welcome.
Quote
 
 
+4 #25 sundar 2011-01-23 13:45
GREAT WORK.
KEEP IT UP!
Quote
 
 
+3 #24 Sundaram 2011-01-23 12:58
Dear Sir, Hope the house allotment should be cancelled for those who have provided false information..Vazhga unngal pani
Quote
 
 
+11 #23 கணியன் 2011-01-23 12:40
நான் குமுதம், விகடன் படிப்பதை நிறுத்தி பல வருடங்கள் ஆகி விட்டன. சில வருடம் முன்பு குமுதம் ச்விச்ஸ் வங்கி கருப்பு பண விவகாரம் பற்றி எழுதியது. அதில் குறிப்பிட்டவை... மணிமொழி (fruit language ) ரூ 10000 கோடி (தேங்க்ஸ் டு 2G ), KD பிரதேர்ஸ் பல ஆயிரம் கோடி, பண்புமணி (love bell) சில ஆயிரம் கோடி (தேங்க்ஸ் டு இந்தியன் மெடிக்கல் கவுன்சில்) !!! அதற்க்கு அடுத்த சில நாட்களில் Dr ஜவகர் பழனியப்பன் சகுனி கருணாவை அவரது இல்லத்தில் சந்தித்து 4 பக்கத்துக்கு புகழ்ந்து குமுதத்தில் கட்டுரை வெளியிடுகிறார் !!! கருமம்!
Quote
 
 
+3 #22 Nellai Tamilan 2011-01-23 12:39
You are doing excellent job. Hatts off. unga veetuku auto varadha eppadi?
Quote
 
 
+5 #21 பரங்கியன் 2011-01-23 11:53
மாப்பு....வச்சிட்டியே காமராஜ்க்கு..ஆப்பு
Quote
 
 
+17 #20 அன்புடன் 2011-01-23 10:46
சவுக்குக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்று கேள்விப்பட்டதுண ்டு,
ஆனால் கடவுளின் கிருபையால்த்தான ் இப்படி ஒரு சக்தி மண்ணில் பிறப்பெடுப்பதென ்று 90% மக்கள் நம்புகின்றனர், ஒருபக்கம் அடைக்கப்பட்டதால ் வேறொருபக்கம் திறக்கப்பட்டுவி ட்டதாகவும் புலப்படுகிறது, அதே வேகம், கோபம், அதே குறிக்கோள், வடிவம் மட்டும் வித்தியாசம். ஆண்டவன் துணை தமிழனுக்கு இருக்கட்டும்,
Quote
 
 
+10 #19 sathees 2011-01-23 10:36
எல்லாம் கருனாநிதிட்ட கற்றது தான் சார்,செம பிரடாய் இருப்பன் போல இருக்கு இவம் முழிக்கிற முழியை பாக்கவே புரியுது,தேவாவி ன் பாடல் தான் நியகத்துக்கு வருகுது சார்,ஊனம் ஊனம் ஊனம் இங்கே ஊனம் யாருங்கோ?இவன்தானுங்கோ
Quote
 
 
+3 #18 bappu 2011-01-23 10:32
have you noticed instead of "ja" she wrote "ai" in her name. so sad a lady who teaches pf slum studens doesnt even know to write her name properly
Quote
 
 
+8 #17 S.Chandrasekaran 2011-01-23 10:11
Dear savukku, i regularly read all your articles. How can you get this, amazing. Well done. It should be continue to all the corruption parties. Thanks for your effort.
Chandru
Quote
 
 
+11 #16 ramm 2011-01-23 09:56
சவுக்கு பின்னிட்ட ராசா . சரி இந்த குருமா ஏன் எப்பவும் திருடர்களின் தலைவன் மாதிரி முழிக்கிறான்
Quote
 
 
+12 #15 பிரகாஷ் 2011-01-23 09:54
மார்டன் ஹைடெக் பிரைவேட் லிமிட் நிறுவனத்தின் பெயரில் பெரம்பலூரில் 190.66 ஏக்கர் நள்ளிரவில் வாலிகண்டபுரம் பத்திரபதிவு அலுவலத்தில் பதிவு செய்த போதும் விட்டென்ஸாக ஓரு பெண் கையெழுத்து போட்டதே, அந்த பெண் யார், அந்த பெண்ணுக்கு காமராஜ் குடும்பத்திற்கு என்ன உறவு என்பதை வெளிச்சத்து கொண்டு வருவாரா காமராஜ்.. பத்திரிகையாளர் என்றால் அந்த வேலையை மட்டும் பார்க்க வேண்டும்..புரோக்கர் வேலை பார்த்தால் இப்படிதான் சிக்கல் வரும்…மனோகரன்
Quote
 
 
+15 #14 பிரகாஷ் 2011-01-23 09:53
அன்புள்ள சவுக்கு,
நக்கீரன் இணை ஆசிரியர் காமராஜ் தன்னை ஓரு பத்திரிகையாளர் என்று கூறிக்கொண்டு, இன்னொரு பத்திரிகை/ஊடகத்தில் தன் குடும்பத்தை பற்றி வந்த செய்திக்கு மான நட்ட வழக்கு போடுகிறார் என்றார் இனி அவரை பற்றி விமர்சனம் செய்வதில் தவறில்லை.
இவர் உண்மையான பத்திரிகையாளராக இருந்து இருந்தால், 2ஜி அலைவரிசை ஊழலில், இவர் வீட்டை சிபிஐ ரெய்டு நடத்தியிருக்காத ு. வீரப்பன் விவகாரத்தில் ரெய்டு நடந்து, காமராஜ் பாஸ்போர்ட் முடக்கப்பட்டது அப்போது ஜெயலலிதா அரசை விமர்சனம் செய்தோமே தவிர, இவரையே, நக்கீரன் கோபாலையே நாம் விமர்சனம் செய்யவில்லை. இந்தியாவில் உள்ள அனைத்து மீடியாக்களும் நக்கீரனை ஆதரித்து செய்தி வெளியிட்டது..
அதே நேரத்தில் வீரப்பன் முதல் பேட்டியை சன்டிவியில் ஓளிப்பரப்ப, ரூ3 இலட்சத்திற்கு விற்று, பேட்டி எடுத்த சிவசுப்ரமணியத்த ுக்கும் ஏதோ கொடுத்துவிட்டு ஏமாற்றினார்கள்..இதன் பின்னணியில் இருந்தது காமராஜ்..
கேலக்சி ரமேஷ்பிரபா எப்படி ஊடகத்துக்குள் நுழைந்தார். இவர் காமராஜின் இனத்தை சார்ந்தவர். அதனால் காமராஜ் மூலம் ஊடகத்தில் நுழைந்து பொழப்பு நடத்தி வரும் ரமேஷ்பிரபாவுக்க ு, பெண் பத்திரிகையாளர்க ளை பற்றி பேச தகுதியே கிடையாது..
சாய் சித்தா ரிசர்ட்ஸ் என்ற ஓட்டல் மற்றும் தங்கும் விடுதியை கொடைக்கானலில் நடத்தினார்களே.. இதில் யார் பாட்னர் என்று காமராஜ் கூறுவாரா..
ஏன்.. சிபிஐ ரெய்டு நடக்கும் போது, காமராஜின் நண்பர், உறவினர், பினாமி ரகுபதி, டிராவல்ஸ் வண்டியில் பல ஆவணங்கள், பணம், பத்திரங்களை வைத்துக் கொண்டு சென்னை வலம் வந்தாரே.. இதையும் பத்திரிகையாளர்க ளுக்கு கூறினால் நல்ல விசயம்.. ரகுபதி, இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழில் வெளி வந்த முதல் பக்க படத்தில் சிபிஐ அதிகாரிகளுடன் காமராஜ் வரும் போது, பின்னாள் நிற்கிறார்..இதிலிருந்து உண்மை புலப்படவில்லை..
Quote
 
 
+16 #13 Austin 2011-01-23 08:05
இதை போன்ற தில்லு சவுக்கை தவிர யாருக்கும் வராது..hats off savukku sir
Quote
 
 
+12 #12 Austin 2011-01-23 08:04
இதை போன்ற தில்லு சவுக்கை தவிர யாருக்கும் வராது...hats off to Savukku sir..keep your work..am praying for you..
Quote
 
 
+19 #11 சவுக்கு 2011-01-23 08:00
அன்பார்ந்த வெங்கி, சமூக சேவகர் என்ப பெயரில் வழங்கப் பட்டுள்ள அனைத்து ஒதுக்கீடுகளையும ் ரத்து செய்ய உத்தரவிடக் கோரி, உயர்நீதிமன்றத்த ில் வழக்கு தொடர வேலைகள் நடந்து கொண்டிருக்கின்ற து. இது உடனடி தேவை என்பதாலேயே புகார் அளிக்கப் பட்டுள்ளது. அவர் வழக்கு போட்டாலும், போடாவிட்டாலும், இந்த ஒதுக்கீட்டை ரத்து செய்ய உயர்நீதிமன்றத்த ை அணுகப் போவது உறுதி.
Quote
 
 
+4 #10 rasigan 2011-01-23 07:37
ithukku peru than aappu... Well done...
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 407 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday9976
mod_vvisit_counterYesterday13577
mod_vvisit_counterThis week67553
mod_vvisit_counterLast week95167
mod_vvisit_counterThis month289813
mod_vvisit_counterLast month382199
mod_vvisit_counterAll days13206180