|
பாட்டாளி மக்கள் கட்சி, திமுக கூட்டணியில் சேர்ந்து 2011 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் என்று கருணாநிதி இன்று டெல்லியில் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை அடுத்து, தேர்தல் களம் ஓரளவுக்கு தெளிவாகியிருக்கிறது. ராமதாஸின் இந்த முடிவு, தேர்தல் வரையிலுமா, தொடர்ந்து நீடிக்குமா என்பது ராமதாஸுக்கே தெரியாது. திமுக கூட்டணியில் இருந்து தேர்தலில் போட்டியிட்டு கணிசமான எம்எல்ஏக்களை வென்ற பிறகு, திமுகவில் இருந்து கொண்டே 'உள்குத்து' வேலைகளில் ஈடுபடுவதில் மருத்துவர் அய்யா வல்லவர். மருத்துவர் அய்யா கடந்து வந்த பாதையை சவுக்கு கடந்த ஜுன் மாதம் எழுதியிருந்தது. இந்த நேரத்தில் அந்தக் கட்டுரையை மீள் பதிவு செய்வது, பொறுத்தமாக இருக்கும் என்பதால், மீள் பதிவு செய்யப் படுகிறது.
டாக்டர்.ராமதாஸ். இந்தப் பெயரோடு வன்னியர் சங்கத் தலைவராக தன் அரசியல் வாழ்வைத் தொடங்கினார். பிறகு, தமிழார்வம் காரணமாக, மருத்துவர் ச.ராமதாசு என்று மாறி, பிறகு ‘தமிழ்க்குடிதாங்கி’ என்று ஆகியது.  யார் இந்த ராமாதாஸ் ? தமிழகத்தின் மிக மிக முக்கியமான தலைவராக உருவாகியிருக்க வேண்டியவர். ஆனால், காலம் அவரை மிக மிக கடைந்தெடுத்த ஒரு சந்தர்ப்பவாதியாக மாற்றி, புயலில் சிக்கிய ஓலைக்குடிசையின் கூரையாக மாற்றிப் போட்டிருக்கிறது. ஒரு சாதாரண மருத்துவராகத்தான் தன் பொது வாழ்வை துவக்கினார், மருத்துவர் ராமதாஸ். திண்டிவனத்தில் இன்று இருக்கும் பாலத்தின் அருகேதான் அவரது கிளினிக் இருந்தது. மிகக் குறைந்த செலவில் வைத்தியம் பார்த்ததாகவும், அவரது கிளினிக்கில் பணியாற்றும் ஊழியர்களைக் கூட, மிகுந்த மரியாதையோடு நடத்தியதாகவும் தகவல் அறிந்தவர்கள் கூறுகிறார்கள். வன்னிய சமுதாய மக்கள் ஒரு கணிசமாக வாக்கு வங்கியாக இருந்தாலும், தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் பதவி, அரசுப் பதவி போன்றவற்றில் அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப் படவில்லை என்பது அவர்களின் மிகப் பெரிய மனக்குறையாக இருந்தது. இது போன்ற நிராகரிப்புகளுக்கும், புறக்கணிப்புகளுக்கும் ஆட்சியாளர்கள்தான் காரணம் என்று வன்னிய மக்கள் பெரும்பாலும் நினைத்தனர். இந்தச் சூழலில்தான், வன்னியர் சங்கத்தின் முக்கியப் பொறுப்புக்கு வருகிறார் மருத்துவர் ராமதாஸ். 1980களில், வன்னிய சமுதாயத்தின் இந்த குமுறல், பெரியதொரு போராட்டமாக வெடித்தது. தென் மாவட்டங்களுக்கும், வட மாவட்டங்களுக்கும் இருந்த தொடர்பு முற்றிலும் அறுந்து போனது. இந்தப் போராட்டம் நடக்கையில், மீன்சுருட்டியில் இருந்தது ஞாபகம் இருக்கிறது. நெடுஞ்சாலையின் குறுக்கே மரங்கள் வெட்டிப் போடப்பட்டன. போக்குவரத்து 10 நாட்களுக்கு முற்றிலும் ஸ்தம்பித்தது. அப்போது முதல்வராக இருந்த எம்ஜிஆர், பேச்சுவார்த்தையின் மூலம், இந்தப் பிரச்சினையை முடிக்காமல், அப்போது உளவுத்துறை தலைவராக இருந்த மோகன்தாஸ் என்ற காவல்துறை அதிகாரியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு, காவல் துறையை விட்டு போராட்டத்தை அடக்க முற்பட்டார். அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏராளமானோர் இறந்தனர்.

அந்தப் போராட்டம், மருத்துவர் ராமதாசை வன்னிய மக்கள் மத்தியில் பெரிய சக்தியாக அடையாளம் காட்டியது. அந்த அங்கீகாரத்தை சரியான முறையில் பயன் படுத்த வேண்டும் என்று மருத்துவர் ராமதாஸ், உண்மையிலேயே முயன்றார்.
அப்போது வன்னியர் சங்கத்தின் முக்கிய முழக்கம், "தேர்தல் பாதை, திருடர் பாதை" "தேர்தலை புறக்கணியுங்கள்" என்பதுதான். இந்த முழக்கம், 80களின் தொடக்கத்தில், தமிழகத்தில் ஓரளவு பரவலாக கால் ஊன்றியிருந்த நக்சலைட் இயக்கத்தின் பார்வையை வன்னியர் சங்கத்தின் பக்கம் திருப்பின. 80களின் இறுதியில், நக்சலைட் இயக்கங்கள், காவல்துறையின் கொடிய அடக்குமுறையாலும், இப்போது போல, தகவல் தொடர்பு அப்போது வளர்ந்திருக்க வில்லை என்பதாலும், சிதைந்து போனது. அப்போது நக்சலைட் இயக்கங்களில், சித்தாந்த ரீதியாகவும், அறிவு ஜீவிகளாகவும் அறியப்பட்ட, பேராசிரியர்களும், கல்வியாளர்களும், சிந்தனையாளர்களும், நக்சலைட் இயக்கத்தின் சிதைவால், தங்களை வன்னியர் சங்கத்தோடு இணைத்துக் கொண்டனர்.  இவ்வாறு இவர்கள் இணைத்துக் கொண்ட வேளையில் தான், மருத்துவர் ராமதாஸ், வன்னியர் சங்கத்தை, அந்த மிகப் பெரும் போராட்டம் தந்த பலத்தில் அரசியல் இயக்கமாக உருவாக்க வேண்டும் என்று முயற்சி எடுத்தார். அப்போது அரசியல் சித்தாந்த ரீதியாக மிகப் பெரிய அறிவு ஜீவிகளாக இருந்த, திருப்பூரைச் சேர்ந்த கருணா மனோகரன் மற்றும், பேராசிரியர் மூர்த்தி ஆகியோர், பாட்டாளி மக்கள் கட்சி என்று இக்கட்சிக்கு பெயர் வைக்க வேண்டும் என்று ஆலோசனை கூறுகின்றனர். பாட்டாளி என்ற பெயர் வருவதற்கு காரணம், இவர்கள் இருவரைப் போன்ற முன்னாள் நக்சலைட்டுகள் தான். அப்போது, இவர்களோடு இணைந்து இருந்தவர், இப்போது பிரபா.கல்விமணி என்று அறியப் படும், பேராசிரியர் கல்யாணி. வன்னியர்கள் மட்டுமல்லாமல் பாட்டாளி மக்கள் அனைவருக்காகவும் பாடுபட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் பாட்டாளி மக்கள் கட்சி என்று பெயரிடப் பட்டது. கருணா மனோகரன் மற்றும், பேராசிரியர் மூர்த்தி ஆகிய இருவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைத் திட்டங்கள் என்று, தனித்தனியே இரண்டு அறிக்கைகளை அளிக்கின்றனர். அந்த அறிக்கைகளில், தமிழ்வழிக் கல்வி, பிற்பட்டோர்-தாழ்த்தப் பட்டோர் ஒற்றுமை, உழைப்பாளி மக்களின் உரிமைகளை நிலைநாட்டுதல், சாதி மறுப்புத் திருமணங்களை ஊக்குவித்தல் போன்ற முற்போக்கான பல கொள்கைகள் அதில் இடம் பெற்றன. இந்த இரண்டு அறிக்கைகளும், பேராசிரியர் கல்யாணியின் வீடு உட்பட பல்வேறு இடங்களில் நடைபெற்ற கூட்டங்களில் பல முறை விவாதிக்கப் பட்டன. பேராசிரியர் மூர்த்தி அவர்கள், ஒரு அரசியல் கட்சி என்பது, சாதிகளின் கூட்டமைப்பே. அதனால், அனைத்து சாதியினருக்கும், உரிய அங்கீகாரம் பாட்டாளி மக்கள் கட்சியில் வழங்கப் பட வேண்டும் என்று முன் மொழிந்தார். இவரின் இந்த வாதத்தை மருத்துவர் ராமதாஸ் உடனடியாக ஏற்றுக் கொண்டார்.  அதன் படியே, வள்ளிநாயகம் என்ற தலித்துதான், பாட்டாளி மக்கள் கட்சியின் முதல் பொதுச் செயலாளராக நியமிக்கப் பட்டார். சிறுபான்மை சமுதாயத்தினருக்கு, உரிய அங்கீகாரம் வழங்கப் பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே, 13 ஆண்டுகளாக சிறையில் இருந்து சமீபத்தில் வெளி வந்திருக்கும், குணங்குடி ஹனீபா, பாட்டாளி மக்கள் கட்சியின் முதல் பொருளாளராக நியமிக்கப் பட்டார். பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைத் திட்டங்கள் ஏற்கப் பட்டு, தலித்துகளுக்கு ஆதரவாக, தமிழகத்தின் பல இடங்களில் மருத்துவர் ராமதாஸ் போராட்டங்களை நடத்தினார். பல இடங்களில் அம்பேத்கர் சிலையை திறந்து வைத்தார். பேராசிரியர் மூர்த்தி, கருணா மனோகரன், பேராசிரியர் கல்யாணி போன்றோருடன், பாட்டாளி மக்கள் கட்சியை வழிநடத்தும் நிர்வாகக் குழுவில், பி.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, பேராசிரியர் தீரன், விமலா மூர்த்தி போன்ற பலர் இருந்து மருத்துவர் ராமதாசோடு சேர்ந்து, கட்சியை திறம்பட வழிநடத்தினர். பல்வேறு போராட்டங்களை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தியிருந்தாலும், 1992ல் அக்கட்சி நடத்திய "தமிழர் வாழ்வுரிமை மாநாடு" பாட்டாளி மக்கள் கட்சியின் பலத்தையும், உணர்வையும் தமிழகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. 1992 என்பது, ராஜீவ் மரணத்துக்கு மறு ஆண்டு. அப்போது "தடா" என்ற கடுமையான ஆள் தூக்கிச் சட்டம் அமலில் இருந்தது. விடுதலைப் புலிகள், பிரபாகரன் என்ற பெயரைச் சொன்னாலே, தடா சட்டம் பாயும் என்பதான ஒரு சூழல் அது. அந்தச் சூழலில், பிரபாகரன் படங்களையும், புலிக் கொடிகளையும் ஏந்தி, பெரியார் திடலில், "தமிழர் வாழ்வுரிமை மாநாடு" நடை பெற்றது. மிகப் பெரும் பலத்தோடு அப்போது ஆட்சியில் இருந்த, காவல்துறையை வைத்து, நீதிபதியின் மருமகன் மேலெல்லாம் கஞ்சா வழக்கு போடும் நிலையில் செல்வி.ஜெயலலிதா இருந்தார். இருந்த போதும், பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய இந்த மாநாடு, ஜெயலலிதாவை திகைக்க வைத்தது. ஜெயலலிதா, இவரைப் பார்த்து உண்மையிலேயே அஞ்சினார் என்பதுதான் உண்மை. பழ.நெடுமாறன் உள்ளிட்டோரை தடா சட்டத்தின் கீழ், கைது செய்து சிறையில் அடைத்த ஜெயலலிதா, பின்னாளில் பயன்படுவார் என்று உத்தேசித்தோ என்னவோ, மருத்துவர் ராமதாசை கைது செய்ய எத்தனிக்க வில்லை.
"தடா" சட்டத்தை எதிர்த்து, அடக்குமுறை சட்டம் எதிர்ப்பு இயக்கம் என்ற ஒரு இயக்கத்தை மருத்துவர் ராமதாஸ் தன் தோழர்களோடு சேர்ந்து தொடங்கி, தமிழகம் முழுக்க, தடா சட்டத்தை எதிர்த்து இயக்கங்களை நடத்தினார். இது தவிர தமிழகம் முழுக்கவும், மனித உரிமை மீறல்கள் தொடர்பான நிகழ்வுகளில், மருத்துவர் ராமாதாசோடு இணைந்த அணி, பல்வேறு செயற்பாடுகளை நிகழ்த்தியது. தமிழகம் முழுக்க, தலித்துகள் தொடர்பான பிரச்சினைகளில், மருத்துவர் ராமதாஸ் தலையிட்டு பல்வேறு போராட்டங்களை நடத்தியிருக்கிறார் என்று, அவருடன் பணியாற்றியவர்கள் சொல்கிறார்கள். ஆரம்ப காலத்தில், மருத்துவர் ராமதாஸ், திண்டிவனத்தில் மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்த போது, அவரைச் சந்தித்தவர்கள் சொல்கிறார்கள். அவர் மேசையின் மேல் ஒரு “சைபால்“ டப்பா வைத்திருப்பாராம். வைத்தியம் பார்க்க வரும் நோயாளிகளிடம், மருத்துவ கட்டணத்தை அந்த டப்பாவில் போடச் சொல்லுவாராம்“. யாராவது அவரைப் பார்க்க வந்தால், அந்த டப்பாவிலிருந்து, சில்லரைக் காசுகளை எடுத்து, அருகில் உள்ள தேநீர்க் கடையில் பால் வாங்கி வந்து, கொடுத்து உபசரிப்பார் என்று கூறுகிறார்கள். அப்போதெல்லாம் தனக்கு நெருக்கமானவர்களிடம், தனது மகன் அன்புமணி பற்றி, எப்போதும் குறை பட்டுக் கொள்வார் என்கிறார்கள். தனக்கு நெருக்கமானவர்களிடம், “பாருங்க சார், படிக்கவே மாட்டேங்குறான். எப்ப பாத்தாலும், அவங்க வீட்டுலேயே (சம்பந்தி கிருஷ்ணசாமி ) கெடக்குறான். பாருங்க இவன் டாக்டராவான்னு நம்பி, டிட்கோவுல 20 லட்ச ரூபா லோனப் போட்டு, மருத்துவமனை கட்டியிருக்கேன். இவன் என்னடான்னா படிக்கவே மாட்டேங்குறான். லோன எப்படிக் கட்டப் போறேன்னு தெரியல“ என்று புலம்புவார் என்று கூறுகிறார்கள்.
 இப்போது லோன் திருப்பிக் கட்ட கஷ்டப் படக்கூடிய நிலையிலா டாக்டர் இருக்கிறார் ? இதுதான் அன்றைய மருத்துவர் ராமதாஸ். தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதை விட, சமுதாயத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் மிகுந்த முனைப்போடு செயல்பட்டார்.
 இதற்கு அவரோடு இணைந்து பணியாற்றிய பேராசிரியர் கல்யாணி போன்றோர் மிக முக்கிய காரணிகளாக இருந்திருக்கின்றனர். பேராசிரியர் கல்யாணியிடம் பேசிய போது, மருத்துவர் ராமதாஸ், அவரைப் போன்ற பேராசிரியர்களும், முன்னாள் நக்சலைட்டுகளும், வழங்கும் ஆலோசனைகளை உடனடியாக கேட்டுக் கொண்டு செயல்படுத்துவார் என்று நினைவு கூறுகிறார். இன்றைக்கு இருப்பது போன்ற வன்னியர் அறக்கட்டளையும், கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்களும், அப்போது ராமதாஸிடம் இல்லை.
ஒரே ஒரு கார் வைத்திருந்தாராம். அந்தக் காருக்கும் பெட்ரோல் போட்டு கட்டுப்படியாகாது என்பதால், கூட்டங்களுக்கு அழைப்பு வரும்போதெல்லாம், பேருந்தில் சென்று இறங்குவார். இறங்கிய இடத்திலிருந்து கட்சிக்காரர்கள் ராமதாசை காரில் அழைத்துச் செல்லுவார்கள் என்று, திண்டிவனத்தில், ராமதாசோடு சேர்ந்து பணியாற்றியவர்கள் கூறுகின்றனர். “தேர்தல் பாதை திருடர் பாதை“ என்று வன்னியர் சங்கம் எந்த முழக்கத்தை முன் வைத்ததோ, அந்த முழக்கம் மருத்துவர் ராமதாஸ் விஷயத்தில் உண்மையாகிப் போனது. 1989 ஆண்டு முதலே, பாட்டாளி மக்கள் கட்சி தேர்தலில் போட்டியிட்டாலும், அக்கட்சிக்கு, ஒரு கணிசமான வெற்றியையும், அரசியல் அதிகாரத்தையும் பெற்றுத் தந்தது 1998ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்தான்.
பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் பயணம் 1989ல் தொடங்கியது. 1989ல் நடைபெற்ற தேர்தலில், பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணியின்றி தனித்துப் போட்டியிட்டு, 15 லட்சத்து 36 ஆயிரத்து 350 வாக்குகளை பெற்றது. எனினும் ஓரிடத்தில் கூட அக்கட்சி வெற்றி பெறவில்லை. 1991ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், பாமக போட்டியிட்டு, ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. அப்பொழுது பாமகவின் சின்னம் யானை. அந்தத் தேர்தலில், பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக வெற்றி பெற்ற வேட்பாளர் பன்ருட்டி ராமச்சந்திரன். யானை சின்னத்தில் வெற்றி பெற்றதால், முதல் நாள் சட்ட மன்றத்துக்கு, பன்ருட்டி ராமச்சந்திரன் யானையில் அழைத்து வரப்பட்டார். அதே ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டாலும், பாமக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
1996ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், பாட்டாளி மக்கள் கட்சி, அப்போது, “திவாரி காங்கிரஸ்“ என்ற ஒரு “உப்புமா“ கட்சியை நடத்திக் கொண்டருந்த வாழப்பாடி ராமமூர்த்தியோடு சேர்ந்து போட்டியிட்டு, 4 இடங்களில் வெற்றி பெற்றது. பாமக ஒரு பெரும் சக்தியாக உருவெடுக்கவில்லை என்றாலும், அந்த ஆண்டு தேர்தலில் அடித்த “ஜெயலலிதா எதிர்ப்பு அலையையும்“ மீறி, பாமக 4 இடங்களில் வெற்றி பெற்றது, அரசியல் நோக்கர்கள் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. 1998ம் ஆண்டு, நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், எப்படியாவது தன் பலத்தை நிரூபித்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்த செல்வி ஜெயலலிதா, பாட்டாளி மக்கள் கட்சியோடு கூட்டு சேர்ந்தார். இக்கூட்டணியில் நான்கு எம்பிக்களை பெற்றது பாமக.  இந்தத் தேர்தலில் இருந்துதான், மருத்துவர் ராமதாஸின் சறுக்கல் தொடங்கியது. தேர்தலில் வெற்றி பெற்று, மத்தியில் மந்திரி பதவியும் கிடைத்தது. அதுவும், மிக மிக “வளமை“ வாய்ந்த பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் பதவி. ஆண்டுதோறும், நலிவடைந்த மற்றும், தலித்துகளுக்கு, இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள், பெட்ரோல் பங்க் வழங்குவதற்காக நேர்முகத் தேர்வு நடத்தும். இந்த நேர்முகத் தேர்வுக்கு, சவுக்குடைய நண்பரோடு, நானும் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. டிஎம்எஸ் எதிரில் உள்ள, ஸ்ரீலேகா இன்டர்நேஷனல் ஹோட்டலில்தான் நேர்முகத் தேர்வு நடந்தது. அங்கே இருந்த, நேர்முகத் தேர்வு நடத்தும் அதிகாரியின் பி.ஏ, விண்ணப்பித்திருந்த சவுக்கின் நண்பரைப் பார்த்துச் சொன்னது, “இந்த இன்டர்வ்யூ எல்லாம் வெரும் ஐ வாஷ் சார். நேரா, தைலாபுரம் தோட்டத்துக்கு போயி, டாக்டர பாருங்க. அவர் நெனச்சா உங்களுக்கு அலாட்மென்ட் உண்டு. ஒரு அலாட்மென்ட்டுக்கு ரெண்டு லட்சம் ஆகும்“ என்று கூறினார்.  இந்த 1998ற்குள், ராமதோசோடு, ஆரம்பகாலத்தில் இருந்த அறிவு ஜீவிகள் அனைவரும் சிறிது சிறிதாக ராமதாஸ் கட்சி நடத்தும் போக்கைப் பார்த்த விலகத் தொடங்கினர். 1998ல் பதவியில் இருந்த பிஜேபி அரசு, 13 மாதங்கள் பதவியில் இருந்தது. இந்த 13 மாதங்களில், ராமதாஸ், கோடிகளுக்கு அதிபதி ஆனார். திடீரென்று, பணமும், செல்வாக்கும் கொழிக்கத் தொடங்கின. இதில் ருசி கண்ட பூனையான மருத்துவர் அய்யா, கம்யூனிசம், தமிழ் உணர்வு, கொள்கை, கோட்பாடு, அனைத்தையும், பணம் சம்பாதிக்க ஒரு அருமையான வழி என்று உணர்ந்தார். சில்லரை வாணிபத்தை ஒழிக்கும், எம்என்சிக்களுக்கு எதிராகவும், குறிப்பாக ரிலையன்ஸ் நிறுவனம், சில்லரை வணிகத்தில் இறங்குவதற்கு எதிராகவும், பெரும் போராட்டத்தை அறிவித்த ராமதாஸ், சில நாட்களிலேயே, சத்தம் இல்லாமல், கொள்கையை கக்கத்தில் செறுகிக் கொண்டு, அமைதியானது இதற்கு ஒரு உதாரணம். இதற்கிடையில், தங்களுக்கு புதிதாக கிடைத்துள்ள அதிகாரம் பற்றி, வன்னிய சமுதாய மக்களுக்ளு ஒரே பூரிப்பு. தங்கள் சமுதாயத்தை வாழ்வாங்கு வாழ வைக்க வந்து விட்டார் தமிழ்க் குடிதாங்கி என்று மருத்தவர் ராமதாசை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினர். ஆனால், ராமதாசைப் பொறுத்த வரை, வன்னிய சமுதாயம் என்பது, அவரது குடும்பத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை என்பதை, மக்கள் வெகு தாமதமாகத்தான் உணர்ந்தார்கள். பாட்டாளி மக்கள் கட்சி, தங்கள் கட்சியின் சின்னமாக, மாங்கனிக்குப் பதிலாக, குரங்கைத் தேர்ந்தெடுத்திருக்கலாம். அப்படி, மரத்துக்கு மரம் தாவும் குரங்கு போல, அடுத்த ஆண்டே நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுகவை அப்படியே தொங்கலில் விட்டு விட்டு, திமுக அணிக்குத் தாவினார், மருத்துவர் ராமதாஸ்.
 அந்தத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி 5 எம்.பி சீட்டுக்களைப் பெற்று, 22 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது. 2001ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில், பாட்டாளி மக்கள் கட்சி மீண்டும் அடுத்த மரமான, அதிமுகவுக்கு வெட்கமேயில்லாமல் தாவியது. இப்போது, ஜெயலலிதாவை, போயஸ் தோட்டம் சென்று சந்தித்த, ராமதாஸ், தங்களுக்கு எத்தனை இடம் என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு “அன்புச் சகோதரி முடிவு செய்வார்“ என்று சகோதர பாசத்தை கொட்டினார். இத்தேர்தலில், 20 எம்எல்ஏக்களைப் பெற்றது பாமக.
 2004ம் ஆண்டு நடந்த சட்டசபைக்கான பொதுத் தேர்தலில், திமுக கூட்டணியில் இடம் பெற்று, 18 இடங்களில் வென்றது. இதையடுத்து, 2009ல் பாராளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில், “மரம் தாவும்“ தனது கொள்கையை மறந்து விடக் கூடாது என்று, மீண்டும் அதிமுக அணிக்குத் தாவி தேர்தலில் போட்டியிட்டது. இந்தத் தேர்தலில் இடம் ஒதுக்குகையில், ஜெயலலிதாவை சந்தித்து விட்டு, மருத்துவர் ராமதாஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இப்படி கூறினார். ''அன்புச் சகோதரியை சந்தித்தது, மகிழ்ச்சியான தருணம். 45 நிமிடங்கள் அரசியல் நிலவரம், சமூகப்பிரச்னைகள் குறித்துப் பேசினோம்.ஈழத்தமிழர்கள் பற்றித்தான் அவர் நிறைய நேரம் பேசினார். அந்தப் பேச்சில், கலைஞரைப் போல எதுகை-மோனை வசனம் எல்லாம் இல்லை. உண்மையான இரக்கம் இருந்தது. அவரிடம் நிறைய மாற்றங்கள் தெரிந்தன'' இதுதான் ராமதாசின் பச்சோந்தித் தனம். இப்படிப் பேசி விட்டு, இன்று தன் மகனுக்கு, ராஜ்ய சபா சீட் வேண்டும் என்றவுடன், கருணாநிதிக்கு பாத பூஜை செய்ய பாமக எம்எல்ஏக்களை அனுப்பினால், அதை ஏற்றுக் கொண்டு, ராஜ்ய சபா சீட் கொடுக்க, கருணாநிதி என்ன அப்படி ஒரு ஏமாளியா ?  2009 பொதுத் தேர்தல், பாட்டாளி மக்கள் கட்சிக்கு நெப்போலியனின் வாட்டர்லூ வாக மைந்தது. போட்டியிட்ட அனைத்து இடங்களிலும், பாட்டாளி மக்கள் கட்சி “மண்ணைக் கவ்வியது“. இந்தத் தேர்தலில், தேர்தலுக்குத் தேர்தல் அணி தாவும், இந்தக் கட்சிக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று மக்கள் எண்ணியது மட்டுமல்லாமல், திமுகவும் கங்கணம் கட்டிக் கொண்டுவேலை செய்தது. இதனாலேயே, பாமக, அனைத்து இடங்களிலும் மண்ணைக் கவ்வியது. அணி தாவும், குழப்பங்கள் மட்டுமின்றி, வன்னிய சமுதாய மக்களே, மருத்துவர் அய்யாவை கைவிட்டனர். இதுதான், பாமகவின் மிகப் பெரிய சரிவாக அமைந்தது. 1998ல் பதவி சுகத்தை அனுபவிக்கத் தொடங்கிய மருத்துவர் அய்யா, அதற்குப் பிறகு, எப்படியாவது, பதவியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தொடர்ந்து அணி மாறியதன் விளைவே, இன்று தெருக் கோடியில் நிற்கிறார். நண்பரோடு ஒரு நாள், தைலாபுரம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. நண்பர், ஒரு முக்கியமான பத்திரிக்கையாளர். திமுக அரசில் நடக்கும் ஊழல்கள் குறித்து சில முக்கிய ஆவணங்கள் அந்த நண்பருக்கு கிடைத்ததால், அதை மருத்துவர் அய்யாவுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று முதன் முறையாக அவரைச் சந்திக்கச் சென்றார். காலை 9.30 மணிக்கு தைலாபுரம் சென்றவர், மருத்துவரைச் சந்திக்க மதியம் 2 மணி ஆகி விட்டது. அது வரை, தொண்டர்களோடு தொண்டர்களாக, மரத்தடியில் நண்பரோடு காத்துக் கிடந்தோம். அங்கே மருத்துவரைச் சந்திக்க இரு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தனர். தனிமையில் ரகசியமாக சந்திக்க வேண்டியி ருந்ததால், கூட்டம் குறையும் வரை காத்திருக்கலாம் என்றார் நண்பர்.

மதியம் சுமார் 12.30 மணிக்கு, ஒரு ஹோண்டா எஸ்யுவி வண்டி வந்தது. அந்த வண்டியில் மருத்துவர் அய்யாவின் மருமகள் சவும்யா வந்து இறங்கினார்.
வண்டியின் டிக்கியை திறந்ததும், சுமார் 50க்கும் மேற்பட்ட, சென்னை சில்க்ஸின் பட்டுப் புடவை டப்பாக்கள் இருந்தன. அங்கே கூடியிருந்த, தொண்டர்கள் போட்டி போட்டுக் கொண்டு அய்யாவின் மருமகளுக்கு அந்தப் பெட்டியை தூக்கிச் செல்ல உதவிக்கு ஓடினர். ஐம்பது பட்டுப் புடவைகள் என்றால் விலை என்ன இருக்கும் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். இதுதான் மருத்துவர் அய்யாவின் இன்றைய நிலை.  அதற்குப் பிறகு, நண்பர், திமுக அரசுக்கு எதிரான ஆவணங்களை மருத்துவர் அய்யாவிடம் வழங்க, அந்த ஆவணங்களை வைத்து, ராமதாஸ், பல நாட்கள் அறிக்கை யுத்தம் நடத்தி, கருணாநிதிக்கு, காலில் தைத்த முள்ளாய் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தது, வேறு கதை. கட்சி தொடங்கிய காலத்தில் “என் கட்சியில் யாராவது ஊழல் செய்தால், அவர்களை சவுக்கால் அடியுங்கள்“ என்று சொன்ன மருத்தவர் ராமதாஸ், முன்னாள் நக்சலைட்டுகளை தன் கட்சியின் கொள்கையை வகுப்பவர்களாக வைத்திருந்த மருத்துவர் ராமதாஸ், அம்பேத்கரின் கொள்கையை உயர்திப் பிடிப்பதற்கென்றே, கட்சியின் கொடியில் நீலத்தை சேர்த்த மருத்துவர் ராமதாஸ், கம்யூனிஸ்ட் கொள்கைகளை தூக்கிப் பிடிக்கும் லட்சியத்தோடு தன் கட்சியின் கொடியில் சிகப்பு நிறத்தை சேர்த்த மருத்துவர் ராமதாஸ், சில்லரைக் காசுகளை பெற்றுக் கொண்டு, ஏழைகளுக்கு வைத்தியம் பார்த்த மருத்துவர் ராமதாஸ், இன்று, தன் மகனுக்கு ஒரு எம்பி சீட் கொடுங்கள் என்று, கோபாலபுரத்தில் மடியேந்திப் பிச்சைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். கருணாநிதி, எல்லாருக்கும் கொடுக்கும் அல்வாவைப் போலவே, அடுத்த முறை சீட் கொடுக்கப் படும் என்று சொல்கிறார். மீண்டும், ஜெயலலிதா பக்கம் போனால் சீட் கிடைக்குமா என்ற நப்பாசையோடு காத்திருக்கிறார். ஜெயலலிதா, அதிமுக வேட்பாளர்களை அறிவித்தவுடன், திமுகவுடன் கூட்டணி என்று அறிவிக்கிறார்.
ஒவ்வொடு முறை அணி மாறும் போது, அதிகாரம் கிடைத்த மமதையில், எந்த வன்னிய மக்களின் வாக்குகளால், வளர்ந்தாரோ, அந்த வன்னிய இன மக்களை மறந்து, தன் குடும்பத்தை தூக்கிப் பிடித்தால், கோடிகள் இருந்தாலும், தெருக் கோடிக்கு வந்து விட்டார். சிந்து பைரவி படத்தில் கதாநாயகன் சிவக்குமார், ஒரு பெரிய சங்கீத வித்வானாக இருப்பார். காதல் பிரச்சினையால் குடிப் பழக்கத்துக்கு அடிமையாகி வீடு வாசல், கார் அத்தனையையும் விற்று குடிக்கத் தொடங்கி விடுவார். ஒரு நாள் குடிக்க காசு இல்லாத போது, தனக்கு தொழில் எதிரியான சிவச்சந்திரனின் வீட்டில் நடக்கும் ஒரு பார்ட்டிக்கு போனால், சரக்கு கிடைக்கும் என்று போவார். பழைய தொழில் போட்டியில், சிவச்சந்திரன், சிவக்குமாரை அவமானப் படுத்த வேண்டும் என்பதற்காக மேடையில் பாடும் பாட்டு வேண்டாம், டப்பாங்குத்து பாட்டுப் பாடினால் சரக்குத் தருவதாக சொல்கிறார். குடி வெறியில், சிவக்குமாரும், “தண்ணித் தொட்டி தேடி வந்த கன்னுக் குட்டி நான்…. இந்தச் சூரியன் வழுக்கி சேத்தில் விழுந்தது மாமி…. ….. ….. ….. ….. “ மகாராஜா பிச்சை கேட்டு இங்கு பாடுறான்…..“ என்று பாடுவார்.
 பாடலின் முடிவில், சிவக்குமாரின் வேட்டி அவிழ்ந்து விழ, பட்டா பட்டி அண்டர்வேரோடு நிற்பார். சினிமாவில், சூரியன் வழுக்கி சேற்றில் விழுந்தது. அரசியலில், செந்தாமரை வழுக்கி சேற்றில் விழுந்து, சூரியனிடம் காய்கிறது.
|
Comments
Heee heee unmaiya kandupudichitin glae boss, matter namkullayae irukkattam. Venumna naama vera ethavathu deal pottukalam
அனபான வாசகர்களே மேற்கூரிய என் கருத்து அனகாரிகம் என தயவு செய்து எண்ண வேண்டாம், ஏனன்றால் மருத்துவர் ராமதாஸ் போன்ற அரசியல்வாதிகள் எண்ண வேண்டுமானாலும் சொல்லலாம் யார் கேட்பவர் யார் என்று எண்ணுகின்றனர். சவுக்கு வாசகர்கள் கேட்பார்கள் என்று அவர் தெரிந்து கொள்ளட்டும்.
இந்த கருத்தை அமோதிப்பவர்கள் தயவு செய்து உங்கள் மேலான கருத்தை பதிவு செய்யுங்கள்.
bEST REGARDS,
Doctor
1 ) கடந்த ஆட்சியில் அரிசி கிலோ 4 ரூபாய். தற்போது 1 ரூ . என்ன பெரிய வித்தியாசம் ? ஆனால் பருப்பு, எண்ணை, காய்கறி விலை எவ்வளவு ? 1 ரூ அரிசி கடத்தலுக்கு மட்டும் நல்ல பயன்படுது.
2) 2 ஏக்கர் நிலம் கொடுத்து விவசாயம் செய்து இருந்தால் விளை பொருட்கள் விலை குறைந்து இருக்க வேண்டும். ஆனால்.. நடப்பது என்ன ?
3) சென்னையில் மெட்ரோ ரயில் 14000 கோடி ரூபாய் செலவில் கட்டபடுகிறது. இன்னும் இரண்டு புதிய மெட்ரோ வழிகள் (மூலக்கடை டு திருமங்கலம், திருவான்மியூர் - ரூ 4000 கோடிக்கு மேல் )
ஆனால் செங்கல்பட்டு - திண்டுக்கல் ரயில்வே திட்டம் என்னவாயிற்று ? ஏன் தமிழா அரசாங்கம் ஒரு 500 கோடி தரக்கூடாதா ? கர்நாடக அரசு 2500 கோடி மாநில பங்கு, 2500 கோடி மத்திய பங்குடன் மாநிலம் முழுவதும் ரயில்வே திட்டம் செய்கிறதே ? அது எப்படி ?
சென்னை மட்டும் தான் தமிழகமா ?
4) சேது திட்டம் - வராது என்று தெரிந்தும் ரூ 2000 கோடி கடலில் கொட்டியாச்சு. TR பாலு அடித்தது, தலைவர் குடும்பத்துக்கு !!! இந்த பணத்தில் கொஞ்சமாவது தென் மாவட்ட ரயில்வே திட்டங்களுக்கு தந்து இருக்கலாமே ?
5) சென்னையில் எத்தனை பாலங்கள் ? ரோடு அதே ரோடு தான் !!! ஆனால் எதற்கு இத்தனை பாலங்கள் ? கொள்ளை அடிக்கவா ?
6) அடுத்து 2G . இந்த பூமியின் மிக பெரிய ஊழல். இந்த பணத்தை கொண்டு நமது நாட்டின் ஒரு ஆண்டின் நிதி பற்றா குறையை சமாளித்து இருக்கலாம். அப்படி நடந்து இருந்தால் வரும் ஆண்டுகளிலும் நிதி பற்றாக்குறை குறைவாகவே இருந்து இருக்கும்.
மக்களில் பலருக்கு ஒரு எண்ணம். தி மு க கொள்ளை அடித்தாலும் ஏதோ செய்கிறார்கள் .. சில திட்டங்களை செய்கிறார்கள்... ஆனால் அ தி மு க அவ்வாறு இல்லை என்று. அது தவறு. ஒரு நாடு வளர்ச்சி பெறும்போது உள் கட்டமைப்பு வசதிகள் தான் தேவையே ஒழிய கவர்சிகரமான திட்டங்கள் இல்லை.
மின்சாரம், போக்குவரத்து (ரயில்வே, சாலை), கல்வி, மருத்துவம், etc etc மட்டுமே. கவர்சிகரமான திட்டங்கள் அல்ல. அது தி மு க வாக இருந்தாலும் சரி, அ தி மு க வாக இருந்தாலும் சரி. பார்க்கலாம் .. தேர்தலுக்கு சில நாட்கள் மட்டுமே உள்ளன. யார் வெற்றி பெறுகிறார்கள் என்று.
ராமதாஸ் கூட்டணி மாறாமல் இருந்தால் தான் ஆச்சர்ய பட வேண்டும்.
இப்பின்னணியை உணர்ந்த பா.ம.க., சுதாரித்துக் கொண்டது. முதல்வரின் கருத்தை மறுக்கும் விதமாக, உடனடியாக பா.ம.க.. மாற்றுக்கருத்தை நேற்று முன்தினம் இரவே வெளியிட்டது. இதை தி.மு.க., சற்றும் எதிர்பார்க்கவில ்லை.இதன் காரணமாக, ஒரே இரவுக்குள் பா.ம.க., குறித்த தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம் முதல்வருக்கு ஏற்பட்டுள்ளது. கூட்டணியில் பா.ம.க.,வை சேர்ப்பதில் அவசரப்பட்டு விட்டோமோ என்ற குழப்பமும் தி.மு.க.,வுக்கு ஏற்பட்டுள்ளது.
பிரதமருக்கு தெரியாது?பிரதமரைச் சந்தித்த பின், தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது, மீனவர் பிரச்னை குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. இதற்கு முதல்வர் பதில் அளித்தபோது, "மீனவர்கள் பிரச்னை குறித்து பிரதமரிடம் பேசினேன். மீனவர்கள் பிரச்னை குறித்து பிரதமருக்கு அவ்வளவாக தெரியாது. அவரிடம் எடுத்துச் சொல்லியிருக்கிற ோம். அவரும் உரிய முறையில் ஆவன செய்வதாக உறுதியளித்துள்ள ார்' என்றார்.
So Singh does not know about fisherman problem. One comment by reader is
//மீனவர்கள் பிரச்னை குறித்து பிரதமருக்கு அவ்வளவாக தெரியாது// RIDICULOUS இவர் ஊழல் கிங் அவர் உபயோகமத்த சிங்
"பட் எனக்கு இந்த டீலிங் ரொம்ப புடிச்சு இருக்கு. காங்கிரஸ்காரனுக ளும் டவுசர் தாசும் போட்டு இந்த மஞ்சதுண்டை பாடா படுத்துற டீலிங்க ரொம்ப நல்லா இருக்கு. இவனுக மூணு பேராலயும் தனியா ஒருத்தனாலும் ஒரு ஆணியும் புடுங்க முடியாது. ஆனா அதுக்காக இவங்க ஒருத்தரை ஒருத்தர் அடிச்சுக்கிறது, தண்ணி காட்டுறது, அங்கியும் இங்கயும் அலைய விடுறது, ஐயோ போய்டுமே... ஐயோ போய்டுமே... ன்னு நாக்க தொங்க போட்டுட்டு அலைய விடுறது, இதெல்லாம் பாத்தா ரொம்ப ஜாலியா சந்தோசமா சிரிப்பா இருக்கு. காலம் பூரா இவனுக இப்படியே அடிச்சுகிட்டு தொங்கிகிட்டு இருக்கனும்ன்னு ஆசையா இருக்கு. ஆனா என்ன பண்ணுறது. இதெல்லாம் தேர்தல் வரைக்கும்தான, சமரசம் ஆகி ஒன்னாகிட்டாணுக, அப்புறம் நம்மளைல புடிச்சு நாய் மாறி ஒரு அஞ்சு வருஷம் அலைய விட்டுராணுக. அது ஒன்னும்தான் கடுப்பா இருக்கு. ஆனா இந்த சொம்படிச்சாணுக இருக்கானுகளே, குப்புற உழுந்தாலும் மண்ணு ஒட்டலன்ன மாறி இதுக்கு பேருதாண்டா சாணக்கியத்தனம், வந்தாண்டா எங்க அரசியல் சாணக்கியன் அப்படி இப்படின்னு பொலம்பி விட்டு அந்த கருமத்த நம்மளையும் வேற நம்ப சொல்லுவானுக. ஹ்ம்ம் எது எப்படியோ நமக்கெல்லாம் இன்னும் கொஞ்ச நாளைக்கு செமகொண்டாட்டம்த ான் போங்க."
மருத்துவர்: - டேய்...தம்பி....! உன்னை மாதிரி தொண்டன் இருக்கிற வரைக்கும், ஒரு பய என்னை அசைச்சிக்க முடியாது, ஒரு பய என்னை அசைச்சிக்க முடியாது... ஒபாமாவுக்கு ஒரு ஃபோன் போட்றா...........
"Keep" goingnaa, Karunaanidhi pinaalaye
Povare.Ithu keepukalin kaalam.
ஆனா கலைஞர் அய்யாவோ கோமனத்தையே உருவிடுவாருன்னு
இவருதான் சொன்னாரு. மாறி மாறி இரண்டு பேரும்
உருவுனது போக அய்யா இப்ப எப்படி இருப்பாரு?
ஷேம் ஷேம் பப்பி ஷேம். அப்புறமும் இவர் அவரை
தேடிப் போனார்னா என்னவோ சுகம் இருக்கனுதானே
அர்த்தம்.
ஒன்னு உங்க அய்யாகிட்டையே கேளு அல்லது முத்துலட்சுமி கிட்ட கேளு. எது உண்மையின்னு தெரிந்துடும்மல் ல.
சைக்கிள்லே போயீ வைதியம் செஞ்ச, அந்த ராமதாஸ் எங்கே, இப்போ இருக்கிற மருத்துவர் அய்யா எங்கே. நினைச்சு பார்க்க முடியலையே!
1 2G ஸ்பெக்ட்ரம் ஊழலால் திமுக வின் மீது இருக்கும் கடும் அதிருப்தி
2 விலைவாசி உயர்வு, கட்டுக்கடங்காத விலைகள்
3 பெரும் சொத்துக்களை கட்டாயப்படுத்தி வாங்கி குவிப்பது, இது அவர்கள் கட்சி, காங்கிரஸ் கட்சி உள்ளிட்டோரையே வெறுப்படைய செய்துள்ளது. மீண்டும் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் யாரும் சொத்து வைத்திருக்க முடியாது என்ற நிலை
4 சினிமா தொழிலை அபகரித்து தங்களின் கட்டுப்பாடிட்கு ல் வைத்திருப்பது பெரும்பான்மையான வர்களை ஆளும் கட்சிக்கு எதிராக குரல் கொடுக்க வைக்கும்
5 இந்த தேர்தலில் பணம் வாங்கி வோட்டை மாற்றி போட்டால், மஞ்சள் துண்டு ஆட்சி போய்விடும், பிறகு அவரால் காசு வாங்கி வோட்டு போடாதவர்களை மிரட்ட முடியாது, ஆனால் இடைதேர்தலில் திமுக தோற்றாலும் ஆட்சி இருக்கும், அந்த அதிகாரத்தால் காசு வாங்கி வோட்டு போட்ட மக்களை மிரட்டும். மேலும் இடைதேர்தல் ஒரு தொகுதி என்பதால் ஆளும் கட்சி மொத்த கவனத்தையும் அதில் செலுத்தி, அரசு இயந்திரங்களை பயன்படுத்தி வெற்றி பெரும், ஆனால் பொது தேர்தலில் அவ்வாறு செய்ய முடியாது. இடைத்தேர்தலில் எப்பொழுதுமே ஆளும் கட்சி தான் வெல்லும் பெரும் புரட்சி அல்லது எதிர்ப்பு இல்லாவிடில். எஅநேணி ஆட்சி மாறது.
6 ஆளும் கட்சியின் மீதுள்ள வெறுப்பினால் எல்லோருமே தி மு க வை ஆட்சியில்ருந்து அகற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள். இது பெரும் கூட்டணியை அதிமுக விற்கு கொண்டுவரும். அதுவே பெரும் பலனாகும்.
நன்றி சந்தோஷ்
7 அதிமுக வின் வாக்கு வங்கி
தி மு கவின் பலம்:
1 எலெக்ஷன் கமிஷன் தங்களின் கட்டுப்பாட்டில் இருப்பது. வோடிங் மெஷினை ஒட்டுப்போட்டபின ் கூட மற்ற முடியும் அரசு அதிகாரிகள் அவர்களின் ஆதரவில் இருப்பதால்
2 பெரும் பணம், பதவி
3 அடாவடித்தனம், மிரட்டி ஒட்டு வாங்க முயற்சி ரௌடிகள்
4 இலவச திட்டங்கள்
5 அரசு ஊழியர்களின் ஆதரவு திமுக வின் வாக்கு வங்கி
நேர்மையான தேர்தல் நடந்தால் அதிமுக விற்கு பெரும் சாதகம்.
இப்படியே கிளம்பிட வேண்டியது... யாராவது OC ல பின்னூட்டம் போட அனுமதிச்சா...தன்னோட சொந்த கதை சோகக்கதை எல்லாம் அவுத்துவுட வேண்டியது. வீரப்பனுடைய பணம் அய்யாவிடம் இருந்தால் பார்பன பத்திரிக்கைகள் மூடிகிட்டு சும்மாவா இருக்கும் ? எப்ப எப்பனு அலைகிற "தினமலம்" ஒன்னு போதுமே...
Make out a list of assets by DMK politicians. Let us all know how much they have swindled.
-Tamilnesan
thangam kuppaiyil kidandhaalum thangam thangam dhaan..
maruthuvar miga nallavar. arasiyal sandharppa soolnilai avarai maatriyadhu yenbathey unmai
PLEASE RUN A STORY ON THIS
Deccab Chronicle news
Would environmentalis ts be thrilled to learn that an influential member of chief minister M. Karunanidhi’s family is paying for the beautification of a children’s playground and turning it into a park?
Residents of the locality near the park at Panaiyur about 15 km from the city on East Coast Road certainly aren’t happy. They believe that the park is being developed for the exclusive use of the CM’s close relative, who purchased a palatial bungalow abutting the property.
Some residents allege, albeit in whispers, that it is a blatant encroachment of public land by the state’s first family.
The half-acre site, approved by the director of town planning, is being landscaped and renovated to match the tastes of the CM’s relative, said a supervisor with AVM Landscape Architects and Nursery, a Panaiyur-based firm hired for the work.
“They have decided on an arch-like opening into the park from their bungalow,” he said. “But the public too will be allowed to use the park.” However, people nearby are not so sure. “Perhaps they will allow us to use the park initially and then post guards to keep us out,” a resident said.
டாஸ்மாக்கை அவங்களே மூடமுடியுமா ? இல்லை கடைகளின் எண்ணிக்கையை தான் குறைக்க முடியுமா ?ஆரம்பிச்சதே அதிமுக தான. அய்யா தான் கூட்டணில வாயமூடிக்கிட்டு சும்மா இருக்கமாட்டாரே... மதுவை ஒழிக்கவேண்டும்ன ு ஆர்ப்பாட்டம் பண்ணுவாரு. ஜாதிவாரி கணக்கெடுக்கனும் னு கோரிக்கை வைப்பாரு. அம்மா அடுத்தவங்களோட கோரிக்கை மற்றும் போராட்டத்துக்கு (நல்ல விஷயமே இருந்தாலும்) செவிசாய்க்க மாட்டாங்க.
அய்யா ராமதாசுக்கு நிஜமாவே எதிர்வரும் தேர்தல் கஷ்டகாலம் தான்.
வீரப்பன் இந்த மருத்துவரை நம்பி, நம்ம சாதி புள்ள, இவரிடம் பணத்தை கொடுத்து வச்சா, உனக்கு பின்னர் உதவுவார் என தனது மனைவி முத்துலட்சுமியி ன் திறமையை நம்பாமல், பல கோடியை அன்று கொடுத்து வைத்தார். வீரப்பன் கொல்லப்பட்டதும் , வீரப்பனின் மொத்த குடும்பத்தையும் மறந்ததோடு மட்டுமல்லாது, தனது மக்கள் தொலைக்காட்சியில ் கெளதமன் இயக்கிய சந்தனக் காடு என்ற தொடரை வெளியிட்டுவிட்ட போது, வழக்கு முத்துலட்சுமியா ல் தொடுக்கப்பட்டது , தொடர் தடுக்கப்படும் நிலையெற்பட்டது. அப்போது, கெளதமன் மருத்துவர் அய்யாவை கெஞ்சி, காடுவெட்டி குருவை அனுப்பி, முத்துலட்சுமிக் கு வேண்டிய பணம் கொடுப்போம் என அழைப்பு விடுத்து, தன்னை வந்து பார்க்குமாறு சொல்லப்பட்டது. இதனை நம்பி முத்துலட்சுமி தனது இரண்டு பெண் பிள்ளைகளை அழைத்து கொண்டு, தைலாபுரம் தோட்டத்திற்கு சென்றார். அங்கு சென்றதும், ஏற்கெனவே தயாரித்து வைத்திருந்த ஒரு பத்திரத்தை காட்டி கையெழுத்து போட வேண்டும் என கேட்டுக் கொண்டு, தான் குழந்தைகள் படிப்பையும் சில தொகையையும் கொடுப்பேன் என உறுதியளித்தார். அதனையும் நம்பிய முத்துலட்சுமி கையொப்பமிட்டார் . ஆனால், மரம் தாவும் மருத்துவர், சொன்னபடி பணமோ, கல்வித் தொகையோ கொடுக்கவில்லை. இதற்காக, தனது குழந்தைகளை திரும்பவும் கூட்டிக் கொண்டு, தைலாபுரம் தோட்டத்திற்கு முத்துலட்சுமி சென்றார். அப்போது, கண்டபடி திட்டியாதோடு, பணமோ - உதவியோ செய்ய முடியாது என சொன்னார். அப்போது, வீரப்பனின் சின்ன பெண், மருத்துவரை பார்த்து, என் அப்பனிடம் பெற்ற பணத்தையாவது கொடுங்கள் என சண்டையிட, பதில் சொல்ல முடியாத மருத்துவர் தனது இருக்கையிலிருந் து, பக்கத்து ரூமுக்குள் ஓடி ஒளிந்து கொண்டார். அங்கிருந்து மருத்துவரின் கைத்தடிகள் மற்றும் கெளதமன், முத்துலட்சுமியை யும், அவரது வாரிசுகளையும் தரத்தரவென இழுத்து தோட்டத்திற்கு வெளியே தள்ளி விட்டனர். இச்செய்தி பெரிதாகி விடும் என நினைத்த சின்னையா, முத்துலட்சுமிக் கு எதிராய் கர்னாடகத்தில் இருந்த பழைய கேஸ் -சை தூசி தட்டி எடுத்து முடக்கி விட்டதால், கடந்த 6 வருடங்களாய், முத்துலட்சுமி வெளிவர முடியாமல் சிறையினுள் பூட்டப்பட்டு காலம் கடத்தி வருகிறார்.
Even people who make fun of PMK & Dass , they themselves are vehemently project their caste in their marriages.I strongly believe that in Tn the social equation FC>BC>MBC>SC>ST is very much relevant even today. People can easily comment about ramadass's jumping alliances for each elections, but if they try laughing at his caste politics, then it is nothing but "throwing stones from a glass house". Even brahmins are coming above the caste structure by ignoring other communities altogether. But it is the other castes who are the torch bearers of the caste evil. Unless Tamizh makkal come out of this mindset, we deserve to be fooled by Karunanithis & Jayalalithas forever. We are the same people who defeated Kamarajar & what more proof of stupidity we need. When JJ or MK can get another term why not kamaraj. What did we achieve by that ? May God help us !!
’அதிமுகவுடன் சேர்ந்தால், என் தாயுடன் சேர்ந்ததாக அர்த்தம்” என்று சொல்லிவிட்டு நான் அப்படி சொல்லவேயில்லை என்று பல்டி அடித்தார்.இந்த பேட்டியை எந்த பத்திரிகையாளர்க ளும் மறுக்கவே மாட்டார்கள். இந்த பேட்டியை தேனாம்பேட்டை ஸ்ரீலேகா ஓட்டலில் வைத்து கொடுத்துவிட்டு, அடுத்த ஆண்டே அதிமுகவுடன் கூட்டணி வைத்தார்.
இவரையெல்லாம் நம்பி வன்னிய மக்கள் பாவம்... இந்த முறையும் ராமதாஸூக்கு சரியான பாடத்தை வன்னிய மக்கள் புகட்டுவார்கள்.
i am ready to support , may not be in a big way , but as much as i can .
மருத்துவ துறை ஊழலில் சம்பாதித்து சுவிஸ் வங்கியில் சேர்த்து உள்ள பணத்தை எடுக்கவா? ( ஒயிட் அன்ட் ஒயிட் போஸ் எப்பூடி....)
எழுதுங்கள் எழுதுங்கள்
எழுதிக்கொண்டே இருங்கள்
வாழ்த்துகிறோம்
மருத்துவ துறை ஊழலில் சம்பாதித்து சுவிஸ் வங்கியில் சேர்த்து உள்ள பணத்தை எடுக்கவா? ( ஒயிட் அன்ட் ஒயிட் போஸ் எப்பூடி....)
RSS feed for comments to this post