முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
பாட்டாளி மக்கள் கட்சிக்கு 28 + 1 அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 10
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
புதன்கிழமை, 02 பிப்ரவரி 2011 22:58

பாட்டாளி மக்கள் கட்சிக்கு வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் 28 இடங்களும், 2013ல் காலியாக உள்ள ராஜ்ய சபை இடத்தில் அன்புமணி ராமதாஸுக்கு மன்னிக்கவும், சின்ன அய்யாவுக்கு ஒரு இடமும் ஒதுக்க திமுக தலைமை ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் 31 இடங்களில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சிக்கு இந்த இடங்கள் ஒதுக்குவது குறைவே என்றாலும்,தற்போது உள்ள அரசியல் சூழலில், அரசியல் அனாதை ஆவதை தவிர்க்கும் பொருட்டு, கொடுத்ததை வாங்கிக் கொண்டு கரை சேரலாம் என்று ராமதாஸ் முடிவெடுத்திருப்பதாக பா.ம.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி கொள்முதல் செய்வதற்கான அனைத்துக் கட்சிக் குழுவில் கலந்து கொண்ட கோ.க.மணி (ஜி.கே.மணி இல்லை. கோ.க.மணி, தமிழார்வமாம்) இன்று கலந்து கொண்டார்.  நேற்று, கருணாநிதி பாட்டாளி மக்கள் கட்சியிடம் 28 தொகுதிகள் என்ற எண்ணிக்கையையும், எந்தெந்த இடங்கள் என்ற விபரத்தையும் எழுதிக் கொடுத்ததில், அன்புமணிக்கு ராஜ்ய சபா இடம் என்ற ஒரே ஒரு மாறுதலோடு பாட்டாளி மக்கள் கட்சி கொடுத்தனுப்பிய காகிதத்தை, கோ.க.மணி கருணாநிதியிடம் இன்று ரகசியமாக வழங்கினார் என்றும், அந்த காகிதத்தை பார்த்த கருணாநிதி, தனது சம்மதத்தை கோ.க.மணியிடம் தெரிவித்தாகவும் தெரிகிறது.

Feb_02_k

வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி குழுக் கூட்டத்தில் கருணாநிதி அருகில், கோ.க.மணி

இதற்கான வெளிப்படையான அறிவிப்பு, காங்கிரஸ் கட்சியுடனான பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த பிறகே வெளியிடப் படும் என்றும், பாட்டாளி மக்கள் கட்சிக்கு இத்தனை இடங்கள் ஒதுக்கி ஒப்பந்தம் நடைபெற்று விட்டது, அதனால், உங்களுக்கு இத்தனை இடங்கள் தான் தர இயலும் என்று, காங்கிரஸ் கட்சியை கிடுக்கிப் பிடி போடவும் இந்த ஒப்பந்தம் பயன்படும் என்றும் தெரிகிறது.

ஆனால் பாட்டாளி மக்கள் கட்சி வட்டாரங்களும், திமுக வட்டாரங்களும் இத்தகவலை உறுதி செய்ய மறுத்துள்ளன.  

5282792808_2d824b41fc_b

அன்பு மணி ராமதாஸுக்கு ராஜ்ய சபை சீட் கேட்டதற்கான பின்னணி, "நைனா... என்னை எம்பியாக்கு நைனா." என்று அன்புமணி தனது தந்தையுடன் மிகுந்த அடம் பிடித்ததே என்று தெரிகிறது.   மக்கள் மன்றத்தில் ஒரு தேர்தலைக் கூட சந்திக்காமலேயே, மத்திய அமைச்சராகி ஐந்து வருடங்கள் பிழைப்பை ஓட்டிய அன்புமணி, மீண்டும் எம்.பியானால், காங்கிரஸ் கையில் காலில் விழுந்தாவது அமைச்சராகி விடலாம் என்று உத்தேசித்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Comments  

-1 #42 positive karthick 2011-02-20 21:53
ramadas calculation is failere.so this time total is =000000.so best of luck next time.
Quote
 
+4 #41 டத்தோஸ்ரீ 2011-02-07 13:05
கிராமத்தான் 2011-02-03 08:19
யார் காலில் யார் வீழ்வது கடந்த மருத்துவர் அய்யா அவர்கள் அமைச்சராக இருந்த 5 ஆண்டுகளில் அவர் செய்த சாதனைகளுக்கு திமுக,காங்கிரசு தான் எங்கள் மருத்துவர் காலில் விழவேண்டும்..தைரியத்துடன் சவுக்கடி கொடுக்கும் நீங்கள் ஏனோ இவ்வளவு தரம் தாழ்ந்து எழுதுகிறிர்கள்...

(பேருக்கு ஏத்தமாதிரிதான் கருத்தும் இருக்கு.இப்படிபட்ட கோமாளிகள் இருக்குவரை எத்தனை பேமாளிகள் வேண்டுமானாலும் பல ராமதஸ்களாக உருவாவர்.தைரியம் இருந்தால் தனித்து நிக்கச்சொல்லவும ்.)
Quote
 
-6 #40 krishnan R 2011-02-04 23:50
Quoting தம்பி:
தமிழ் நாட்டு அரசியலை பற்றி தெரிந்துகொண்டு பாமக வை இந்த அளவு குறைத்து மதிப்பிடாதே. சவுக்கு என்ன அம்மாவிடம் எவ்வளவு வாங்கி இருக்கே. அம்மா வை பற்றி ஒன்றும் எழுத வில்லை ஏன் ?
தம்பிஇடம் (தலைவன்) நல்ல பெயர் பெற்றவர் ஐயா.
kandippagha ungal thozhilai kooda olungaaga seiya mudiyaatha aallaaghathaan iruppeergal.............u r sure..........yes the same...
Quote
 
+4 #39 Paamaran 2011-02-04 15:12
Quoting Italian:
Quoting பாமரன்:
தமிழ்நாட்டிற்கு அதிகம் நன்மைகள் செய்த கட்சி இது ஒன்றே ஆகும் . உதாரணம் A.K.மூர்த்தி மற்றும் வேலு அவர்கள். பாரத பிரதமர் மன்மோகன்சிங் கூட தேர்தலை சந்திக்காமல் பின்வாசல் வழியாகத்தான் பிரதமர் ஆகியிருக்கிறார் .

இவர்கள் நடத்திய போராட்டங்கள் பல.
1. மது ஒழிப்பு போராட்டம்.
2. ரிலையன்ஸ் போன்ற பெரும் நிறுவங்கள் சில்லறை வணிகத்தில் ஈடுபடுவதை எதிர்த்தார்கள் .
3. சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் விளை நிலங்கள் கொள்ளை போவதை எதிர்த்தார்கள்.
4. மணல் கொள்ளையை எதிர்த்தார்கள்
இன்னும் பல.

தயவு செய்து காழ்ப்புணர்ச்சி யில் எதை வேண்டுமானுலும் எழுதாதிர்கள். எப்படி பார்ப்பினியம், தலித் பற்றி எழுதும் போது அதை சார்ந்தவர்களுக் கு கோவம் வருகிறதோ அது போலத்தான் . பா.ம.க வை பற்றி பேச வன்னியர்களுக்கு மட்டுமே உரிமை உண்டு. ஏன் எனில் ராமதாஸ் ஏமாற்ற நினைத்தால் இவர்களை தான் ஏமாற்ற முடியுமே தவிற பிறரை அல்ல. மற்றவர்கள் ஏன் ஏமாறுகிறீர்கள் .

வெரி குட்
சரியாக சொன்னீர்கள்
தமிழகத்தில் யார் நல்ல இருந்தால் என்ன இல்லா விட்டால் என்ன
வன்னியன் வாழ்ந்தால் போதும்
மற்றவர்கள் எல்லாம் தேவடியா புள்ளிகள்
வாழ்க வன்னிய இனம்

neengal thappaaga purinthu kondeerkal Mr. Italian. Naan solla vanththu Pa.Ma. Ka. oru katchi illai entraal athai patri vimarsanam seithu yen antha katchiyaiyo allathu athai sarnthavarkalai yo periya aalaaga aakka vendum.
Ennudaiya karuthu ithuthane ozhiya verillai. mattra padi ingu ellorukkum ellam kidaithidal vendum. athu uyarnthavan aanalum sari thazhnthavan aanalum sari. jaathi ingu kidaiyaathu.
matra jaathiyaiyum ingu yaarum thittavum koodathu.
Quote
 
+5 #38 அருள் 2011-02-04 14:32
3. "மக்கள் மன்றத்தில் ஒரு தேர்தலைக் கூட சந்திக்காமலேயே, மத்திய அமைச்சராகி" -என்பது ஒப்புக்கு பேசுவதாகும். உணமையில், பா.ம.க'வை சேர்ந்தவர்கள் எப்படி நாடாளுமன்ற உறுப்பினர் ஆனாலும், அதனை விமர்சிப்பவர்கள ் விமர்சிக்கதான் செய்வார்கள். பலரது கண்களுக்கு பா.ம.க தனியாகத் தெரிவதுதான் இதற்கு காரணமாகும் . இதன் பின்னணி அவரவர் ஆழ்மனதோடு தொடர்புடையதாகும ். (கருணாநிதியின் மகள் கனிமொழியும் கொல்லைப்புறமாகத ்தான் சென்றிருக்கிறார ். மூப்பனாரின் மகன் சி.கே. வாசனும் கொல்லைப்புறமாகத ்தான் அமைச்சராக ஆகியுள்ளார். அதனை யாராவது விமர்சித்தது உண்டா? என்று யோசித்து பாருங்கள். அப்போது காரணம் புரியும்)

1. ஆனந்த் சர்மா, 2. ஏ.கே. அந்தோணி, 3. அசுவினி குமார், 4. குலாம் நபி ஆசாத், 5. முரளி தியோரா, 6. விலாசுராவ் தேசுமுக், 7. எம். எசு. கில், 8. எசு. எம். கிரிருட்டிணா, 9. செயராம் ரமேசு, 10. வயலார் ரவி, 11. முகுல் ராய், 12. மன்மோகன் சிங், 13. அம்பிகா சோனி, 14. சி.கே. வாசன் - ஆகிய 14 பேர் இப்போது கொல்லைப்புற வழியாக வந்து நடுவண் அமைச்சராக இருக்கிறார்கள். இவர்களிடம் யாரும் இந்தக் கேள்வியைக் கேட்கவில்லை.

4. பா.ம.க'வினர் எவரும் "மக்கள் மன்றத்தில் ஒரு தேர்தலைக் கூட சந்திக்காமலேயே, மத்திய அமைச்சராகி ஐந்து வருடங்கள் பிழைப்பை ஓட்டிய அன்புமணி" என்று கருதவில்லை. அப்படி எவரும் கூறவும் இல்லை. மாறாக பா.ம.க'வை ஆதரிக்கும் வன்னியர்கள் தமது குடும்பத்தில் ஒருவர் அமைச்சரானதாகவே அப்போது கருதினர்.
Quote
 
+2 #37 அருள் 2011-02-04 14:31
ஒரு கட்சி முதன்மையாக அதற்கு வாக்களிக்கும் மக்களுக்கு அல்லது தொண்டர்களுக்கு கட்டுப்பட்டது என்று நான் கருதுகிறேன். மற்றதெல்லாம் வெளியிலிருந்து வரும் விமர்சனங்கள் - அவ்வளவுதான். ஒரு பொருளை விற்கும் நிறுவனம் அதன் நுகர்வோருக்குதா ன் பயப்பட வேண்டுமே தவிர, நுகர்வோர் அல்லாதோருக்கு - அல்லது எதிர்காலத்தில் நுகர்வோர் ஆக வாய்ப்பே இல்லாதோருக்கு பயப்பட வேண்டிய தேவை இல்லை. இது அரசியல் கட்சிக்கும் பொருந்தும்.

1. எவரும் மாநிலங்களவை உறுப்பினர் ஆக அரசியல் சட்டப்படி வாய்ப்பு இருக்கிறது. அந்த வழியை பயன்படுத்துவதில ் என்ன தவறு என்பதற்கு ஒரு காரணமும் இல்லை.

2.நாட்டின் பிரதமர் கொல்லைப் புற வழியாகத்தான் வந்திருக்கிறார் . அது தவறு என்று விமர்சிப்பவர்கள ் - அரசியல் அமைப்பிலிருந்து மேலவையை தூக்க முயலட்டும், அதைவிடுத்து விமர்சிப்பது தேவையற்றது.
Quote
 
+1 #36 Italian 2011-02-04 06:27
Quoting பாமரன்:
இங்கே பா.ம.க. வை விமர்சிக்கும் தகுதி யாருக்கும் இல்லை என்றே சொல்லலாம். ஏன் கருணாநிதிக்கும் கிடையாது. ஜெயலலிதாவுக்கும ் கிடையாது. எந்த கட்சியும் செய்யாததையா இவர்கள் செய்து விட்டார்கள். இலங்கை பிரச்சினையின் நிலைப்பாடு ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு பேசக்கூடாது. ஏன் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. எல்லாம் மற்ற கட்சிகளோடு கூட்டு சேர ஆர்வம காட்ட வில்லையா. தமிழ் நாட்டில் ஏன் இந்த இந்திய திரு நாட்டில் கூட்டு மாறாத கட்சி எதாவது ஓன்று இருந்தால் சொல்லுங்களேன். இங்கு பா.ம.க. வை விமர்சிப்பவர்கள ் எல்லாம் அவங்கவங்க ஜாதியில் இப்படி ஒரு ஆள் இல்லையே என்ற கோவமே தவிற வேறன்று. மற்ற ஜாதியில் ஆரம்பித்த கட்சிகள் எல்லாம் காணமல் போக இந்த கட்சி மட்டும் இன்னும் நிலைத்து நிற்கிறதே என்ற ஆதங்கம் தான். தமிழ்நாட்டிற்கு அதிகம் நன்மைகள் செய்த கட்சி இது ஒன்றே ஆகும் . உதாரணம் A.K.மூர்த்தி மற்றும் வேலு அவர்கள். பாரத பிரதமர் மன்மோகன்சிங் கூட தேர்தலை சந்திக்காமல் பின்வாசல் வழியாகத்தான் பிரதமர் ஆகியிருக்கிறார் .

இவர்கள் நடத்திய போராட்டங்கள் பல.
1. மது ஒழிப்பு போராட்டம்.
2. ரிலையன்ஸ் போன்ற பெரும் நிறுவங்கள் சில்லறை வணிகத்தில் ஈடுபடுவதை எதிர்த்தார்கள் .
3. சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் விளை நிலங்கள் கொள்ளை போவதை எதிர்த்தார்கள்.
4. மணல் கொள்ளையை எதிர்த்தார்கள்
இன்னும் பல.

மேலும் மக்கள் டிவி யில் தமிழ் ஈழ பெண்ணுக்கு செய்தி வாசிக்க வேலை கொடுத்து உள்ளார்கள். வேறு ஏதாவது டிவி இதுபோல் அணு மதித்து உள்ளதா.
தயவு செய்து காழ்ப்புணர்ச்சி யில் எதை வேண்டுமானுலும் எழுதாதிர்கள். எப்படி பார்ப்பினியம், தலித் பற்றி எழுதும் போது அதை சார்ந்தவர்களுக் கு கோவம் வருகிறதோ அது போலத்தான் . பா.ம.க வை பற்றி பேச வன்னியர்களுக்கு மட்டுமே உரிமை உண்டு. ஏன் எனில் ராமதாஸ் ஏமாற்ற நினைத்தால் இவர்களை தான் ஏமாற்ற முடியுமே தவிற பிறரை அல்ல. மற்றவர்கள் ஏன் ஏமாறுகிறீர்கள் .

வெரி குட்
சரியாக சொன்னீர்கள்
தமிழகத்தில் யார் நல்ல இருந்தால் என்ன இல்லா விட்டால் என்ன
வன்னியன் வாழ்ந்தால் போதும்
மற்றவர்கள் எல்லாம் தேவடியா புள்ளிகள்
வாழ்க வன்னிய இனம்
Quote
 
0 #35 arunajeth 2011-02-04 00:49
nermyyaana thaas and anpu
Quote
 
+23 #34 Pallavan 2011-02-04 00:44
Quoting thennarasu:
இங்கே பாமக வை விமரசனம் செய்கிற தகுதி எவனுக்கும் கிடையாது,

இந்த ரோசம் 40 எம்.பிக்கள ராஜினாமா செய்யச் சொன்னப்ப, காட்டிருக்க வேண்டியது தானே..? அப்ப கலெக்ஷன் பணத்தை எண்ணிகிட்டு இருந்தீரோ....?
Quote
 
+3 #33 பாமரன் 2011-02-04 00:22
இங்கே பா.ம.க. வை விமர்சிக்கும் தகுதி யாருக்கும் இல்லை என்றே சொல்லலாம். ஏன் கருணாநிதிக்கும் கிடையாது. ஜெயலலிதாவுக்கும ் கிடையாது. எந்த கட்சியும் செய்யாததையா இவர்கள் செய்து விட்டார்கள். இலங்கை பிரச்சினையின் நிலைப்பாடு ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு பேசக்கூடாது. ஏன் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. எல்லாம் மற்ற கட்சிகளோடு கூட்டு சேர ஆர்வம காட்ட வில்லையா. தமிழ் நாட்டில் ஏன் இந்த இந்திய திரு நாட்டில் கூட்டு மாறாத கட்சி எதாவது ஓன்று இருந்தால் சொல்லுங்களேன். இங்கு பா.ம.க. வை விமர்சிப்பவர்கள ் எல்லாம் அவங்கவங்க ஜாதியில் இப்படி ஒரு ஆள் இல்லையே என்ற கோவமே தவிற வேறன்று. மற்ற ஜாதியில் ஆரம்பித்த கட்சிகள் எல்லாம் காணமல் போக இந்த கட்சி மட்டும் இன்னும் நிலைத்து நிற்கிறதே என்ற ஆதங்கம் தான். தமிழ்நாட்டிற்கு அதிகம் நன்மைகள் செய்த கட்சி இது ஒன்றே ஆகும் . உதாரணம் A.K.மூர்த்தி மற்றும் வேலு அவர்கள். பாரத பிரதமர் மன்மோகன்சிங் கூட தேர்தலை சந்திக்காமல் பின்வாசல் வழியாகத்தான் பிரதமர் ஆகியிருக்கிறார் .

இவர்கள் நடத்திய போராட்டங்கள் பல.
1. மது ஒழிப்பு போராட்டம்.
2. ரிலையன்ஸ் போன்ற பெரும் நிறுவங்கள் சில்லறை வணிகத்தில் ஈடுபடுவதை எதிர்த்தார்கள் .
3. சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் விளை நிலங்கள் கொள்ளை போவதை எதிர்த்தார்கள்.
4. மணல் கொள்ளையை எதிர்த்தார்கள்
இன்னும் பல.

மேலும் மக்கள் டிவி யில் தமிழ் ஈழ பெண்ணுக்கு செய்தி வாசிக்க வேலை கொடுத்து உள்ளார்கள். வேறு ஏதாவது டிவி இதுபோல் அணு மதித்து உள்ளதா.
தயவு செய்து காழ்ப்புணர்ச்சி யில் எதை வேண்டுமானுலும் எழுதாதிர்கள். எப்படி பார்ப்பினியம், தலித் பற்றி எழுதும் போது அதை சார்ந்தவர்களுக் கு கோவம் வருகிறதோ அது போலத்தான் . பா.ம.க வை பற்றி பேச வன்னியர்களுக்கு மட்டுமே உரிமை உண்டு. ஏன் எனில் ராமதாஸ் ஏமாற்ற நினைத்தால் இவர்களை தான் ஏமாற்ற முடியுமே தவிற பிறரை அல்ல. மற்றவர்கள் ஏன் ஏமாறுகிறீர்கள் .
Quote
 
+8 #32 sinnaiya 2011-02-03 22:13
Quoting thennarasu:
இங்கே பாமக வை விமரசனம் செய்கிற தகுதி எவனுக்கும் கிடையாது,

மவனே பொதுமக்கள விட்டுப்புட்டு, ஒங்கபாட்டுக்கு வீட்டோட நடத்துங்க, எவன் கேக்கப்போறான்,அ த விட்டு கூட்டம்போட்டு உசுப்பேத்தி எங்கதலயில மொளகா அரச்சி மந்திரிப்பதவிக் கு தூண்டில் போட்டா கேக்கத்தான் செய்வோமுங்க,
Quote
 
+14 #31 praburaja2002 2011-02-03 20:00
Quoting thennarasu:
இங்கே பாமக வை விமரசனம் செய்கிற தகுதி எவனுக்கும் கிடையாது,

எந்த அரசியல் கட்சியையும் விமர்சிக்க யாருக்கும் உரிமை உண்டு.
Quote
 
+4 #30 praburaja2002 2011-02-03 19:56
Quoting ஆனந்த்:
இவர் ஒரு முறை மலேசியாவிற்கு போயிருந்த போது தமிழ், தமி்ழுணர்வு என்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒருவர் எழுந்து அப்படியானால் உங்கள் பெயரின் முன்னால் ஏன் தமிழில் கொ க என்று போடாமல் ஜி கே என்று போடுகிறீர்கள் என்று கேட்கவும் அங்கே மழுப்பலாக ஏதேதோ சொல்லிவிட்டு இங்கு வந்து சத்தம் போடாமல் மாற்றிக் கொண்டு விட்டார். இப்போது என்னடாவென்றால் அவருடைய தமிழ் உணர்வைப் பற்றி சில வாசகர்கள் கதை அளக்கிறார்கள்.

யாரோ ஒருவர் மலேசியாவில் கேட்டார் என்பதற்காக இங்கே வந்து மாற்றுவது தமிழுணர்வு இல்லை என யார் சொன்னது?.
Quote
 
-3 #29 praburaja2002 2011-02-03 19:54
Quoting வீரத்தமிழ் மகன்:
Quoting praburaja2002:
Quoting சவுக்கு:
என்ன பேசுகிறீர்கள் பிரபுராஜா.... ? பெயரை மட்டும் தமிழில் மாற்றி வைத்துக் கொண்டு....

....
கோ.கோ.மணியை நான் ஆதரிக்கவில்லை. அவரின் இந்த சிறு செயலை பாராட்டுகிறேன்.

இத இத இதன் கருணாநிதியும் செய்கிறார்.

கோ.க.மணியின் அனைத்து செயலையும் நான் ஆதரிக்கவில்லை. கருணாநிதியின் நடிப்பு பல்லாயிரக்கணக்க ான மக்களை அழித்தது. கோ.க.மணியின் இந்த செயலால் ( இது நடிப்பே ஆனாலும் ) யாருக்கும் எந்த கெடுதலும் இல்லை. இது தான் பெரிய வித்தியாசம். அதனால் தான் அவரின் பெயர் மாற்றத்தை நான் பாராட்டுகிறேன். இதற்கு மேல் இதைப் பற்றி நான் விவாதிக்க விரும்பவில்லை. ஏனென்றால் இந்த கட்டுரையில் முக்கியமான விஷயம் இதுவல்ல.
Quote
 
-3 #28 sinnaiya 2011-02-03 19:01
இன்னா நைனா இந்தா பாமாகா காரப் பயபுள்ள ஜீ கே மணி தன்னோட பேர சுத்ததமிலில இட்டாந்ரிருக்கா ராமே இன்னாது கோ க மணி,ன்னு கரக்டா டீசண்ட் சொல்லு நைனா, த பாரு அத்தெல்லாம் ஒன்னப்போலதா ஒன்னுமில்ல மவனே, கோவனம் கட்டாத மணின்னு இட்ருக்காரு, நீ கயுதை கண்டுக்காத.போ வேலயபாப்பியா
Quote
 
-15 #27 thennarasu 2011-02-03 17:58
இங்கே பாமக வை விமரசனம் செய்கிற தகுதி எவனுக்கும் கிடையாது,
Quote
 
+1 #26 sukkiran 2011-02-03 17:57
Quoting Dr P R Manikannn:
வரவர சவுக்குடைய அ தி மு க விசுவச்சம் அதிகம் என்னத்த சொல்ல விமர்சனம் அனைத்து கட்சிகளை பற்றி இருந்த பாரட்டலாம் ஆனால் இங்க தி மு க மற்றும் அதற்கு கூட்டணி அமைக்க போக்கு கட்சிகளை மற்றும் விமர்சனம் என்ற பேருல வசை பாடுவது அழகு இல்ல இங்க வரும் வாசகர்கள் அணைத்து கட்சியும் சேர்த்தவர்களாக இருக்கலாம் அதை முதலில் நினைவில் கொள்ளவும், இல்ல இதுபோல பா ம க வை விமர்சனம் பண்ணின மக்கள் அதிகமா வருவர்கல்னு என்ற எண்ணத்துல போடா கூடாது

முத்தமிழ் வித்தகர்?,, இராமதாசு?,, தொல். திருமாவளவன்?,. கோ க மணி?,, சுப வீரபாண்டியன்?,,இந்த அரசியல் வியாபாரிகள் ஒருவனாவது உண்மையாக

நடந்திருக்கிறான ுகளா? டொக்க்டர் மாணிக்கம் சேர், தவிச்ச வாய்க்கு தண்ணிர் தரமறுத்து தாலியறுத்த கூட்டங்கள், பெயரில் மட்டும் கொம்பன் சிங்கன்

குலோத்துங்கன் என்று உசுப்பேத்தாமல், தமக்குப்பொருத்த மா குரங்கு,கோட்டான ், நரி,கொலைகாரன் என்று உண்மையை வைக்கலாமே, நான் வேறு

நாட்டுக்காரன் இருந்தும் மேலே குறித்த வியாபாரிகளை பலகாலங்களாக மனதார நம்பி ஏமாந்தவன்.
Quote
 
+6 #25 குசும்பன் 2011-02-03 16:30
கோ-க-மணி. கோவணம்-கழண்ட- மணி, இது நக்கல் நையாண்டிக்கு எழுதவில்லை,இதுத ான் பொருத்தம்,இப்பட ிப்பட்ட பச்சோந்திகள், எந்த விமர்சனத்தையும் எருமை மாட்டில் மழை பெய்தது போல் எடுத்துக்கொள்ளு வார்கள்.இருந்தும் மக்களாவது புரிந்துகொள்ளட் டும்.
Quote
 
0 #24 பொதுஜனம் 2011-02-03 15:28
Quoting சவுக்கு:
என்ன பேசுகிறீர்கள் பிரபுராஜா.... ? பெயரை மட்டும் தமிழில் மாற்றி வைத்துக் கொண்டு, தமிழர்கள் கொல்லப் படும் போது, கருணாநிதியின் காலை நக்கிக் கொண்டிருந்தால், அவன் தமிழ் உணர்வாளனா ? என்ன பேசுகிறீர்கள் ? மீனவர்கள் வாரந்தோறும் கொல்லப் பட்டுக் கொண்டிருக்கும் போது, அதற்காக ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடாமல், ஜி.கே. என்ற தலைப்பெழுத்தை கோ.க என்று மாற்றி வைத்துக் கொண்டால் போதுமா ? மொழிக்காக மக்கள் இல்ல பிரபுராஜா. மக்களுக்காகத் தான் மொழி. மக்களே அழித்தொழிக்கப் படும் போது, இந்த மொழி இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன ?

தமிழ் தமிழ் என்று சொல்லிக்கொண்டு ஒரு தமிழ் எதிரியை (ஜெயலலிதா) எப்படியாவது தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் ஆக்க நீங்கள் ஒரு தமிழ் பாதுகாவலன் போல காட்டிகொண்டு நடத்தும் நாடகங்களை நானும் பார்க்க தான் செய்கிறேன். என்னதான் நீங்கள் தலை கீழாக நின்றாலும் மீண்டும் திமுக ஆட்சியில் வருவது உறுதி. திரு சங்கர் அவர்களே நீங்கள் இந்த பின்னூட்டத்தை போட்டால் உடனே சில அறிவு ஜீவிகள் POOR COMMENT கொடுப்பார்கள். நீங்கள் ஜெயலலிதாவுக்கு எவ்வளவு விசுவாசமானவர்கள ் என்பதை அறிய அந்த அறிவு ஜீவிகளை இந்த link சென்று பார்க்க சொல்லுங்கள்.

http://www.savukku.net/index.php?option=com_content&view=article&id=297:2011-01-08-15-24-26&catid=1:2010-07-12-16-58-06&Itemid=௨

நீங்கள் கருணாநிதி மற்றும் அவரை சேர்ந்தவங்கள் மட்டுமே தவறு செய்தவர்களை போல சொல்கிறீர்கள். அப்படியானால் ஜெயலலிதா தவறே செய்யவில்லையா. ( உடனே ரெண்டையும் COMPARE பண்ண வேண்டாம்). இவ்வளவு சொல்லும் நீங்கள் இந்த தமிழ்நாட்டிலே இனி ஜெயலலிதா, கருணாநிதி, விஜயகாந்த், ராமதாஸ் இல்லாமல் ஒரு ஆளுக்கு ஒட்டு போடா சொல்லுங்கள் பார்க்கலாம். அல்லது 49 O பத்தி சொல்லலாமே???????????????? தயவு செய்து தமிழ் என்று பேசி ஜெயலலிதாவுக்கு சப்போர்ட் பண்ண வேண்டாம்.
Quote
 
+1 #23 Adi 2011-02-03 15:25
வணக்கம்,
முதலில், எந்த ஒரு கட்சியும் நேர்மையாக செயல்படவில்லை. அனைத்து கட்சிகளும் தங்களுடைய உண்மையான நோக்கத்தை மறந்து அல்லது புறக்கணித்து சுய லாபத்திற்காக செயல்படுவது மக்கள் விரோதமே.
இதில், நீண்ட காலம் அரசை நிர்வகித்த கட்சிக்கே அதிக பொறுப்பு. நான்காவது தூணை முடக்க ஏராளமான வழிமுறைகள் ஆள்வோரிடம் உண்டு.
ஒரு சக்திவாய்ந்த அரசை, எதிர் கட்சியோ, பொதுஜனமோ ஏதும் செய்துவிட முடிவதில்லை.
அப்படி நடந்திருந்தால், அ.இ.அ.தி.மு.க. சாராயத்தை அரசே விற்க முயற்சித்ததை, மணல் கொள்ளைக்கு வித்திட்டதை மக்கள் தடுத்திருக்க முடியும் ( இதில், தி.மு.க விற்கு உடண்பாடிருந்ததா ல் அவர்கள் ஏதும் செய்யவில்லை.)
ஜாதிவாரி வாக்கு கணக்கு மற்றும் வேட்பாளர் தேர்வு என்பது அனைத்து கட்சிகளிடமும் உள்ள தேர்தல் வியூகம். பா.ம.க, அதில் வெளிப்படை, மற்ற கட்சிகளின் செயல்பாடு மறைமுகமானது.
தேர்தலுக்கு கூட்டணி மாறும் போக்கு என்பது, விதிவிலக்கிலாமல ் அனைத்துக் கட்சிகளிடமும் உள்ள நடைமுறை சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட தே.மு.தி.க உள்பட ( மக்களிடம் மட்டும் என்று இருந்தது, அ.இ.அ.தி.மு.க-விடமோ மற்ற ஒருவரிடமோ என்றாகிவிட்டது.) மேலும், அதை தவறாக கொள்ள வேண்டிய அவசியம் என்ன?
பொது எதிரியை சந்திக்க கூட்டாக போராடுவது இயல்பு. அரசியல் பரிணாமத்தில், சுய நலம் அதோடு சேர்ந்தது துரதிட்டவசமானது .
மக்களை சந்திக்காமல் பின்வாசல் வழி வந்தவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் ஏராளம்..... பிரதம அமைச்சர் மன்மோகன் உள்பட.

மக்களை ஏய்க்கும் பாதகர்களைக் கண்டு விலக்கி உண்மையான ஜன நாயகத்தை நிலை நிறுத்த மீண்டும் ஒரு புரட்சி ஏற்பட வேண்டும்.
Quote
 
0 #22 govintha 2011-02-03 14:09
What about Kethan desai. It's in anbu mani period
Quote
 
+1 #21 suppu 2011-02-03 14:01
பாட்டாளி மக்கள் கட்சிக்கு 78 + 1 கருணாநிதிக்கு 88 + 3
Quote
 
+5 #20 praburaja2002 2011-02-03 13:52
Quoting Ganessin:
மணியின் அரசியலை எப்படி வேண்டுமானாலும் விமர்சியுங்கள். ஆனால் தமிழை விமர்சனம் செய்ய வேண்டாம் என்று கேட்டுகொள்கிறேன ். இன்றைய தமிழகத்தில் மக்கள் தொலைக்காட்சி மட்டுமே தமிழில்(தமிங்கி லம் அல்ல) வழுங்குகிறது. ஜி கே என்பதை கோ கே என்று மாற்றியதை மனதார வரவேற்போம். உங்கள் நக்கல் இந்த இடத்தில வேண்டாம்.

உண்மை. மக்கள் தொலைக்காட்சியின ் தமிழ் சேவை மகத்தானது.
Quote
 
0 #19 MDMK 2011-02-03 13:14
PMK= 0
Quote
 
0 #18 ஆனந்த் 2011-02-03 12:31
இவர் ஒரு முறை மலேசியாவிற்கு போயிருந்த போது தமிழ், தமி்ழுணர்வு என்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒருவர் எழுந்து அப்படியானால் உங்கள் பெயரின் முன்னால் ஏன் தமிழில் கொ க என்று போடாமல் ஜி கே என்று போடுகிறீர்கள் என்று கேட்கவும் அங்கே மழுப்பலாக ஏதேதோ சொல்லிவிட்டு இங்கு வந்து சத்தம் போடாமல் மாற்றிக் கொண்டு விட்டார். இப்போது என்னடாவென்றால் அவருடைய தமிழ் உணர்வைப் பற்றி சில வாசகர்கள் கதை அளக்கிறார்கள்.
Quote
 
-3 #17 வீரத்தமிழ் மகன் 2011-02-03 11:45
Quoting praburaja2002:
Quoting சவுக்கு:
என்ன பேசுகிறீர்கள் பிரபுராஜா.... ? பெயரை மட்டும் தமிழில் மாற்றி வைத்துக் கொண்டு....

....
கோ.கோ.மணியை நான் ஆதரிக்கவில்லை. அவரின் இந்த சிறு செயலை பாராட்டுகிறேன்.

இத இத இதன் கருணாநிதியும் செய்கிறார். அங்கே மக்கள் கொல்லப்படும் போது, இங்கே மனித சங்கிலி, 3 மணி நேர உண்ணாநோன்பு, சட்ட மன்றத்தில் தீர்மானம்.... இது எப்படி நாடகமோ, அதேபோல்தான் கோ.கா.மணியின் நடவடிக்கையும்.

இன்னொன்றையும் பதிவிக்கிறோம். கோ.கா. மணி மேட்டூரை சொந்தமாய் கொண்டவர். கட்சி ஆரம்பிப்பதற்கு முன்னர், ஊரில் சைக்கிள் ஓட்டிக் கொண்டு என்ன செய்வது என தெரியாமல் சுற்றிக் கொண்டிந்தார். அப்படிப்பட்டவர் தற்போது சென்னையில் பங்களா என்ன, தனது மகன் தமிழ் மாறன் தான் மக்கள் தொலைக்காட்சியி ன் நிர்வாக இயக்குநர்....என்ன இதெல்லாம் எங்கிருந்து வந்தது. வீரப்பனுக்கும் தமிழ் (கு)(க)டி தாங்கிக்கும் உறவை ஏற்படுத்தியதே இந்த மணிதான். முன்னே சொன்னேனே சென்னையில் பங்காளா... அதுவெல்லாம் வீரப்பனிடமிருந் து பெற்றது என்பது நான் சொல்லாமலேயே உங்களுக்கு புரிந்திருக்கும ்....

இப்ப சொல்லுங்கு, நீங்க ஜி.கே. மணியை பாராட்டலாமா? வேண்டாமா?
Quote
 
+4 #16 Kannanp1000 2011-02-03 11:30
மூழ்கும் கப்பலில் எதன்னை சீட் கிடைத்தாலும் உபயோகம் இல்லை
Quote
 
-1 #15 sundarraj 2011-02-03 11:30
Ramadoss oru thiruttu payan
.
Quote
 
0 #14 Force 2011-02-03 11:22
Two difference between the Joker and the Politician.
One wears the Mask and makes to laugh.
The other wears the laugh and makes you weep.
Quote
 
-3 #13 saravanan.s 2011-02-03 10:59
வரவர சவுக்குடைய அ தி மு க விசுவச்சம் அதிகம் என்னத்த சொல்ல விமர்சனம் அனைத்து கட்சிகளை பற்றி இருந்த பாரட்டலாம் ஆனால் இங்க தி மு க மற்றும் அதற்கு கூட்டணி அமைக்க போக்கு கட்சிகளை மற்றும் விமர்சனம் என்ற பேருல வசை பாடுவது அழகு இல்ல இங்க வரும் வாசகர்கள் அணைத்து கட்சியும் சேர்த்தவர்களாக இருக்கலாம் அதை முதலில் நினைவில் கொள்ளவும், இல்ல இதுபோல பா ம க வை விமர்சனம் பண்ணின மக்கள் அதிகமா வருவர்கல்னு என்ற எண்ணத்துல போடா கூடாது
Quote
 
0 #12 Vaedhampudhidhu 2011-02-03 10:46
Savukku oru doubt, Kanimozhiya ovoru katchiya anupchae kootani form panraangaloo?? because romba naal munadi IIT madras la kaniyum maniyum functionla mani adithaargal, ipo kaniku mani adika raja iladha mana ulaichal la manjal thundu maniyayae eerpaadu panidicha mani adikura vaelai paarka.. ?

Maniya paartha avaru oorukaey mani adipaaru pola theriyudhu..
Mani ku oru advice yaerkanayae kaniku mani adichavanga mudhalla panatha enunaanga apuram kambinu pala parimanagalla ennikai maarudhu, apo unga gadhi??

pinkuripu, enai thayavu seidhu maniyungal epdi eludhuvadharku, sila unmai ninaithal nenju porupathillayae indha nilai keta maandharai ninaithuvittal..
Quote
 
0 #11 Vaedhampudhidhu 2011-02-03 10:41
Quoting சவுக்கு:
என்ன பேசுகிறீர்கள் பிரபுராஜா.... ? பெயரை மட்டும் தமிழில் மாற்றி வைத்துக் கொண்டு, தமிழர்கள் கொல்லப் படும் போது, கருணாநிதியின் காலை நக்கிக் கொண்டிருந்தால், அவன் தமிழ் உணர்வாளனா ? என்ன பேசுகிறீர்கள் ? மீனவர்கள் வாரந்தோறும் கொல்லப் பட்டுக் கொண்டிருக்கும் போது, அதற்காக ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடாமல், ஜி.கே. என்ற தலைப்பெழுத்தை கோ.க என்று மாற்றி வைத்துக் கொண்டால் போதுமா ? மொழிக்காக மக்கள் இல்ல பிரபுராஜா. மக்களுக்காகத் தான் மொழி. மக்களே அழித்தொழிக்கப் படும் போது, இந்த மொழி இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன ?

Mozhi namadhu adayalum, maanam namadhu uyir, edhu erandumae atravan arasiyalvaadhi.
Namaku paadhugaapungra thu egypt maadiri oru kalavaram senju evangala gaali panina thaan.
Quote
 
-25 #10 Dr P R Manikannn 2011-02-03 09:59
வரவர சவுக்குடைய அ தி மு க விசுவச்சம் அதிகம் என்னத்த சொல்ல விமர்சனம் அனைத்து கட்சிகளை பற்றி இருந்த பாரட்டலாம் ஆனால் இங்க தி மு க மற்றும் அதற்கு கூட்டணி அமைக்க போக்கு கட்சிகளை மற்றும் விமர்சனம் என்ற பேருல வசை பாடுவது அழகு இல்ல இங்க வரும் வாசகர்கள் அணைத்து கட்சியும் சேர்த்தவர்களாக இருக்கலாம் அதை முதலில் நினைவில் கொள்ளவும், இல்ல இதுபோல பா ம க வை விமர்சனம் பண்ணின மக்கள் அதிகமா வருவர்கல்னு என்ற எண்ணத்துல போடா கூடாது
Quote
 
-44 #9 கிராமத்தான் 2011-02-03 08:19
யார் காலில் யார் வீழ்வது கடந்த மருத்துவர் அய்யா அவர்கள் அமைச்சராக இருந்த 5 ஆண்டுகளில் அவர் செய்த சாதனைகளுக்கு திமுக,காங்கிரசு தான் எங்கள் மருத்துவர் காலில் விழவேண்டும்..தைரியத்துடன் சவுக்கடி கொடுக்கும் நீங்கள் ஏனோ இவ்வளவு தரம் தாழ்ந்து எழுதுகிறிர்கள்...
Quote
 
+15 #8 டத்தோஸ்ரீ 2011-02-03 07:10
பாட்டாளி மக்கள் கட்சிக்கு 00 -0=0
இது தான் சரியான தலைப்பு.பொருத்தமான தலைப்பு.அதான் அன்புமணியே அழகா கையை தூக்கி அசைக்கின்றாறே போய்ட்டு வாறேன்னு!!!! :P
Quote
 
+18 #7 டான்ஸ்ரீ 2011-02-03 07:04
பா.மா.கவுக்கு இந்தமுறையும் ஒன்னுமில்லமாபோக ப்போகுது.எதுக்கு வீன் பலபரிட்ச்சை.ஏதவது ஒன்னு துவைப்பர்களை ந்ம்பாலாம்.சேலையும்,கோவ்னம ும் மாத்தி மாத்தி துவைப்பரை எப்படி ந்ம்புவது?
Quote
 
-8 #6 Ganessin 2011-02-03 04:11
மணியின் அரசியலை எப்படி வேண்டுமானாலும் விமர்சியுங்கள். ஆனால் தமிழை விமர்சனம் செய்ய வேண்டாம் என்று கேட்டுகொள்கிறேன ். இன்றைய தமிழகத்தில் மக்கள் தொலைக்காட்சி மட்டுமே தமிழில்(தமிங்கி லம் அல்ல) வழுங்குகிறது. ஜி கே என்பதை கோ கே என்று மாற்றியதை மனதார வரவேற்போம். உங்கள் நக்கல் இந்த இடத்தில வேண்டாம்.
Quote
 
0 #5 praburaja2002 2011-02-03 03:10
Quoting சவுக்கு:
என்ன பேசுகிறீர்கள் பிரபுராஜா.... ? பெயரை மட்டும் தமிழில் மாற்றி வைத்துக் கொண்டு, தமிழர்கள் கொல்லப் படும் போது, கருணாநிதியின் காலை நக்கிக் கொண்டிருந்தால், அவன் தமிழ் உணர்வாளனா ? என்ன பேசுகிறீர்கள் ? மீனவர்கள் வாரந்தோறும் கொல்லப் பட்டுக் கொண்டிருக்கும் போது, அதற்காக ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடாமல், ஜி.கே. என்ற தலைப்பெழுத்தை கோ.க என்று மாற்றி வைத்துக் கொண்டால் போதுமா ? மொழிக்காக மக்கள் இல்ல பிரபுராஜா. மக்களுக்காகத் தான் மொழி. மக்களே அழித்தொழிக்கப் படும் போது, இந்த மொழி இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன ?

நீங்கள் என்னை தவறாக புரிந்து கொண்டீர்கள். அல்லது நான் சரியாக விளக்கவில்லை. கோ.க. மணியை நான் தமிழ் உணர்வாளன் என சொல்லவில்லை. ஆனால் அவரது பெயர் மாற்றம் என்ற சிறு செயல், சுயநலத்துக்காக செய்து இருந்தாலும் பாராட்டப்பட வேண்டியது தான் என்பது எனது கருத்து.
தமிழர்கள் இல்லாமல் தமிழ் இல்லை. ஆனால் என்னை பொறுத்தவரை தமிழுணர்வு அழிந்ததும் தமிழர்கள் அழிவதற்கு ஒரு காரணம். இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்தவை.
ஆனால் கருணாநிதி போன்ற போலி தமிழுணர்வாளர்கள ் தான் தமிழ் மீது தமிழர்கள் நம்பிக்கை இழப்பதற்கு முதல் காரணம்.
கோ.கோ.மணியை நான் ஆதரிக்கவில்லை. அவரின் இந்த சிறு செயலை பாராட்டுகிறேன்.
Quote
 
+34 #4 சவுக்கு 2011-02-03 02:51
என்ன பேசுகிறீர்கள் பிரபுராஜா.... ? பெயரை மட்டும் தமிழில் மாற்றி வைத்துக் கொண்டு, தமிழர்கள் கொல்லப் படும் போது, கருணாநிதியின் காலை நக்கிக் கொண்டிருந்தால், அவன் தமிழ் உணர்வாளனா ? என்ன பேசுகிறீர்கள் ? மீனவர்கள் வாரந்தோறும் கொல்லப் பட்டுக் கொண்டிருக்கும் போது, அதற்காக ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடாமல், ஜி.கே. என்ற தலைப்பெழுத்தை கோ.க என்று மாற்றி வைத்துக் கொண்டால் போதுமா ? மொழிக்காக மக்கள் இல்ல பிரபுராஜா. மக்களுக்காகத் தான் மொழி. மக்களே அழித்தொழிக்கப் படும் போது, இந்த மொழி இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன ?
Quote
 
+19 #3 kali.krishna 2011-02-03 02:42
அன்புமணி ராமதாசின், மன்னிக்கணும் சின்னையாவின் முகத்தை பாருங்க, மக்களுக்கு அல்வா கொடுக்குறதுன்னா எவ்ளோ சந்தோசம் இவிங்களுக்கு!!! ! :lol: :lol:
Quote
 
+8 #2 praburaja2002 2011-02-03 01:58
பா.ம.க. இந்த தேர்தலில் முட்டை வாங்க இறைவனை வேண்டுகிறேன்.
சவுக்கு ஒரு விண்ணப்பம். கோ.கே.மணியின் தமிழார்வம் சுயநலம் மிகுந்ததா என எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் இது போன்ற முயற்சிகளை தயவு செய்து பாராட்டுங்கள்.
கோ.கே. மணி நீங்கள் எவ்வளவு தூரம் உண்மையில் உணர்ந்து செய்தீர்கள் எனக்கு தெரியவில்லை. ஆனால் உங்களின் தமிழ் உணர்வுக்கு நான் தலை வணங்குகிறேன்.
ஆனால் உங்களுக்கு எதிராக தான் எனது ஓட்டு.
Quote
 
-49 #1 தம்பி 2011-02-03 01:37
தமிழ் நாட்டு அரசியலை பற்றி தெரிந்துகொண்டு பாமக வை இந்த அளவு குறைத்து மதிப்பிடாதே. சவுக்கு என்ன அம்மாவிடம் எவ்வளவு வாங்கி இருக்கே. அம்மா வை பற்றி ஒன்றும் எழுத வில்லை ஏன் ?
தம்பிஇடம் (தலைவன்) நல்ல பெயர் பெற்றவர் ஐயா.
Quote
 
Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English

தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 225 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday7122
mod_vvisit_counterYesterday10268
mod_vvisit_counterThis week49849
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month252581
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12774700