முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
வெளியே போ….. ! அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 28
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வியாழக்கிழமை, 03 பிப்ரவரி 2011 02:48

 

யார், யாரை வெளியே போகச் சொன்னது ?   அந்த விபரங்கள் தானே இந்தக் கட்டுரையே….

 

ஒரு விஷயத்தை முதலில் ஆரம்பிப்பதற்கு முன்பு ஒரு பில்டப் கொடுக்க வேண்டாமா ?   முதலில் பில்டப்.

 

சூப்பர் ஸ்டாரின் பாட்சா படத்தை பார்த்திருப்பீர்கள்.   அந்தப் படத்தில், சாதாரண ஆட்டோக்காரனாக, அமைதியாக இருந்து வரும் ரஜினி, தனது தங்கையை ஒரு ரவுடி, அவமானப் படுத்தியதைப் பார்த்ததும், வெகுண்டெழுவார்.   அந்தக் காட்சிக்கு, ஜெராக்ஸ் கடைக்காரர், மன்னிக்கவும், இசையமைப்பாளர் தேவா, சிறப்பான பின்னணி இசை அமைத்திருப்பார். தன்னை தாக்க வரும் நபரை, ரஜினி ஒரே ஒரு அடி அடிப்பார். அந்த நபர் பறந்து சென்று, அருகில் உள்ள தெரு விளக்குக் கம்பத்தில், மோதி, கீழே விழுவார்.

 

 

ரஜினி அமைதியாக செல்லலாம் என எத்தனிக்கும் போது, மற்றொரு பைட்டர், கத்தியை விரிப்பார். கத்தியை விரிக்கும் ஓசையை கேட்ட ரஜினி, அந்த பைட்டரை வாயில் ரத்தம் வரும் அளவுக்கு ஒரு கும்மாங்குத்து குத்தி விட்டு, திரும்பி தன் தம்பியைப் பார்த்து, “உள்ளே போ“ என்பார். தம்பி தயங்கி நிற்கையில், “உள்ளே போ“ என்று கண்கள் சிவக்க, உரத்த குரலில் சொல்வார். பின்னணி இசை டெம்போ உச்சஸ்தாயில் இருக்கும். அந்த சீன், பாட்சா படத்தில் மிகப் பிரபலமான ஒரு சீன்.

 

 

அதே போல ஒரு சீன் நடந்தது. எங்கே என்றால், சென்னை 28, ராஜா அண்ணாமலை புரம், குமாரசாமி ராஜா சாலை, என்சிபி.21 என்ற கட்டிடத்தில் நடந்தது. அந்த இடம், ஒரு சினிமா ஸ்டுடியோ என்று தானே நினைக்கிறீர்கள் ? அதுதான் இல்லை. அந்த இடம் லஞ்ச ஒழிப்புத் துறையின் இயக்குநர் அலுவலகம். ஒரே ஒரு மாற்றம். “உள்ளே போ“ என்பதற்கு பதிலாக “வெளியே போ“ என்ற டயலாக் ஒலித்தது. “வெளியே போ“ என்று சொன்னவர், டிஜிபி போலா நாத்.   வெளியே போன நபர்……

 

வேறு யார்…. சவுக்கு தான்….

savukku_image_2

ஆனால், இந்த சம்பவம் நடந்த போது, பின்னணி இசை அளிக்க, தேனிசைத் தென்றல் தேவா இல்லை. அதற்கு பதில், ஒரு டிஎஸ்பியும், ஒரு இன்ஸ்பெக்டரும் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு இசையமைக்கத் தெரியுமா இல்லையா என்று தெரியவில்லை. வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

 

காவல்துறையின் எல்லா பிரிவுகளிலும், நிர்வாகப் பிரிவு ஆய்வாளர் மற்றும், நிர்வாகப் பிரிவு டிஎஸ்பி என்ற பதவிகள் தவறாமல் இருக்கும். இந்தப் பதவிக்கான வேலை என்னவென்றால், “பக்கெட்“ வேலை தான் வேறு என்ன ?

 

ஒரு உதாரணத்துக்கு,

 

அந்த இன்ஸ்பெக்டருக்கும், டிஎஸ்பிக்கும் வழக்கு விசாரணை, புலனாய்வு என்று எந்த வேலையும் கொடுக்கப் பட மாட்டாது. காலையில் மற்ற அனைவரும் வருவதற்கு முன்பு, அலுவலகம் வந்து விட வேண்டும். இயக்குநர் கார் வரும் போது, போர்ட்டிக்கோவில் நின்று, இயக்குநர் கார் நின்றதும், கார் கதவை திறந்து விட வேண்டும். இயக்குநர் அவர் அறைக்குச் சென்றதும், அவர் அறைக்குச் செல்ல வேண்டும்.   இயக்குநர், அன்று என்ன வேலைகள் என்று சொல்லுவார்.

 

உதாரணத்துக்கு சில வேலைகள்.

 

1)  இயக்குநர் வீட்டில் வளரும் நாய்க்கு, தடுப்பூசி போட வேண்டும்.

2)  இயக்குநரின் மனைவிக்கு மேக்கப் சாதனங்கள் வாங்க வேண்டும்.

3)  மருத்துவக் கல்லூரியில் படிக்கும் இயக்குநரின் மகளுக்கு, ஆராய்ச்சிக்காக ஒரு பிணம் வேண்டும்.

4)  இயக்குநர் வீட்டு பாத்ரூமில் லைட் எரியவில்லை. புது பல்பு போட வேண்டும்.

5)  இயக்குநரின் மகள் சினிமாவுக்குப் போவதற்கு டிக்கெட் வேண்டும்.

 

இந்தப் பட்டியலில் துளி கூட மிகைப் படுத்தல் இல்லை தோழர்களே…. இவை அத்தனையும் நடந்தவை.

 

இதுதான் வேலை. இந்த வேலைகளுக்கான பணத்தை எந்த இயக்குநரும் கொடுக்க மாட்டார்கள். அதற்காகவென்றே தானே இருக்கிறது ரகசிய நிதி.

 

இப்படிப் பட்ட டிஎஸ்பியும், இன்ஸ்பெக்டரும் தான் அன்று போலாநாத்தின் அறையில் நின்று கொண்டிருந்தார்கள்.

 

போலாநாத்… இவர் இன்று தமிழகத்தில் இருக்கும் டிஜிபி அந்தஸ்திலான அதிகாரி. தற்போது லஞ்ச ஒழிப்புத் துறையின் இயக்கநராக இருக்கிறார்.

bhola_nath2

இவர் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நியமிக்கப் பட்டதற்கே ஒரு பின்னணி உண்டு.

 

ராமானுஜம் 01.01.2009 முதல் 06.10.2009 வரை லஞ்ச ஒழிப்புத் துறையின் இயக்குநராக இருந்தார்.   அவர் இருந்த காலத்தில், தான் பணியாற்றும் இடத்தில், ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும், தான் பசுத்தோல் போர்த்திய புலி என்பது வெளி உலகத்துக்கு தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும், ஊழல் வழக்கில் சிறிய அதிகாரிகளை பிடிக்காமல், பெரிய அதிகாரிகளைப் பிடிக்க முயலுங்கள் என்று அவரது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதை தொடர்ந்து, மாநகர போக்குவரத்து கழக, மேலாண் இயக்குநர், சுகாதாரத் துறை துணை இயக்குநர், ஒரு வருவாய் கோட்டாட்சியர், குடிநீர் வழங்கல் வாரியத்தின், பொறியியல் இயக்குநர் போன்ற பெரிய பதவிகளில் உள்ளவர்கள் சிக்கினார்கள் என்பதே உண்மை.

 

இது போல, லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடியாக பணியாற்றத் தொடங்கியதும், அரசுக்கு பெரும் தலைவலியாகியது. அப்புறம் என்ன சார். அமைச்சர்களுக்கெல்லாம் வாங்கிக் கொடுப்பதே இந்த அதிகாரிகள் தான். அவர்களைப் போய் விசாரிக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு என்ன துணிச்சல் ?

 

இதனால், கூடுதல் டிஜிபி அந்தஸ்தில் இயக்குநராக இருந்த ராமானுஜத்திற்கு மேலே போலாநாத்தை நியமிக்கிறார்கள். போலாநாத், சொன்ன வேலையை ஒழுங்காக செய்தார்.

 

அவருக்கு உத்தரவிட்ட படியே, பெரிய பதவிகளில் உள்ள ஊழல் அதிகாரிகள் ஒருவர் மீதும் வழக்கு பதிவு செய்யாமல், உயர் உயர், உயர் அதிகாரிகளான, கிராம நிர்வாக அலுவலர்கள், (VAO), வருவாய் ஆய்வாளர்கள் (Revenue Inspectors), பில் கலெக்டர்கள் போன்ற அதிகாரிகள் லஞ்சம் வாங்கினால் மட்டும், வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.

 

லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளிடம் பேசியதில், போலா நாத் இயக்குநரான நாள் முதல், சுத்தமாக வேலையே இல்லை என்றும், ‘ரிப்போர்ட் கொடுங்கள், வி.ஆர் போடுங்கள், ட்ராப் போடுங்கள், அதிரடி சோதனை நடத்துங்கள் ’ என்பது போன்ற எந்த தொந்தரவும் இல்லாமல் நிம்மதியாக, இருப்பதாக கூறுகிறார்கள்.

4851750

இந்த போலோ நாத்தும், ஒரு பசுத் தோல் போர்த்திய புலி தான். இவருக்கும், ஒரு நேர்மையான அதிகாரி என்ற பெயர் (தப்பான) உண்டு. ஆனால், இந்த போலா நாத், ரகசியமாக, மிகுந்த நம்பகமான நபர்களிடம் மட்டும் தனது வசூல் வேட்டையை நடத்தி வந்திருக்கிறார் என்ற தகவலும் தெரிய வந்தது.

 

சிறைத் துறையின் கூடுதல் டிஜிபியாக இருந்த போது, கைதிகளுக்கு மளிகை சாமான்கள் வழங்கும் ஒரு பருப்பு வியாபாரியிடம், மாதந்தோறும் ஒரு தொகையை பெற்றுக் கொண்டு, அவருக்கு சிறைக்கு மளிகை பொருட்கள் வழங்கும் கான்ட்ராக்டை கொடுத்தார் என்று சிறைத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

இப்படிப் பட்ட போலா நாத்தைத் தான் சவுக்கு திங்களன்று சந்திக்கச் சென்றது.

 

இந்த அதிகாரிகளுக்கெல்லாம் எப்போதுமே ஒரு ஆணவம் உண்டு. அது என்னவென்றால், தங்களை விட, மற்ற அனைவருமே முட்டாள்கள் என்பது. ஏனென்றால், இவர்கள் ஐபிஎஸ் படித்திருக்கிறார்களாம். மற்றவர்கள் படிக்கவில்லையாம்.

 

அதே ஆணவத்தில், போலாநாத், சவுக்கு அவரை சந்திக்க வருகிறது என்று அப்பாயின்ட் மென்ட் கேட்டதும், ‘சரி இந்தப் பயல் வழிக்கு வந்து விட்டான்.   அய்யா, தர்மதொர சஸ்பென்ஷன கேன்சல் பண்ணுங்கய்யா… உங்களுக்கு புண்ணியமா போகும்…. ஒங்க புள்ளக் குட்டியெல்லாம் நல்லா இருக்கும்’ என்று சவுக்கு கேட்கும் என்ற எண்ணத்திலேயே, இருந்திருக்கிறார்.

 

சவுக்கு சரியாக 10.50க்கு அந்த அலுவலகத்திற்கு சென்ற போது, சவுக்கை சந்தித்த போலாநாத்தின் உதவியாளர், போலாநாத்திடம் தகவல் சொல்லி விட்டு, அவர் கூடுதல் இயக்குநர் துக்கையாண்டியை சந்தித்து விட்டு, பிறகு போலாநாத்தை பார்க்கவும் என்று கூறியதாக, தகவல் சொன்னார்.

 

சவுக்கு, இயக்குநர் போலாநாத்தைத் தவிர வேறு ஒருவரையும் பார்க்க இயலாது என்பதை தெரிவித்ததும் போலாநாத் உள்ளே அழைத்தார்.

 

“சொல்லுங்கள் என்ன வேண்டும்“ என்றார் போலாநாத்.

 

18.01.2011 அன்று, பிச்சைக்காரர்கள், பிச்சை எடுத்ததைப் பற்றி கொடுத்த புகாரை குறிப்பிட்டு, அந்தப் புகாரின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டது என்ற தகவலை தெரிவிக்கக் கேட்கும் கடிதம் ஒன்றை போலாநாத்திடம் அளித்து, அந்த விபரத்தை வாய்மொழியாகவும் சொல்லிய உடனே… போலாநாத்தின் முகத்தில், அடக்க முடியாத கோபம் வந்ததை பார்க்க முடிந்தது.

 

“இதைப் பற்றி என்னிடம் வந்து கேட்க உனக்கு என்ன துணிச்சல் ? “ சவுக்கு, “அய்யா, நான் கொடுத்த புகார் மீது எடுக்கப் பட்ட நடவடிக்கைகள் எனக்கு தெரியப் படுத்த வேண்டும்“ என்று கூறியதும், போலாநாத், “உனக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை“ என்றார்.

 

“அய்யா, விஜிலேன்ஸ் மேனுவல் (கையேடு) படி, நீங்கள் பதில் சொல்லித் தான் ஆக வேண்டும்“ என்று குறிப்பிட்டதும், போலாநாத், கடும் சினமடைந்தார். “உனது தலையெழுத்தே எனது கைகளில் இருக்கிறது. உன்னை முடித்து விடுவேன். மேலும் பிரச்சினைகளை இழுத்துப் போட்டுக் கொள்ளாதே…“ என்று மிக உரத்த குரலில் கூறினார்.

 

இதையடுத்து சவுக்கு, போலாநாத் அமரச் சொல்லாமலேயே, அவர் எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்தது. அமர்ந்தது கண்டதும் மேலும் சினமடைந்த போலாநாத், “யாரைக் கேட்டு அமர்கிறாய்… நான் உன்னை அமரச் சொல்லவே இல்லையே…“ என்று மேலும் உரத்த குரலில் கத்தினார்.

 

சவுக்கு அமைதியாக, “இது உங்கள் சொந்த அலுவலகம் இல்லை. அரசு அலுவலகம். நான் அமர்வதற்கு உங்களைக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை“ என்று சொன்னதும், வந்ததே கோபம் போலாநாத்துக்கு.   “கெட் அவுட்“ என்று பலத்த குரலில் கத்தினார்.

 

சவுக்கு உடனே எழுந்து வெளியே வந்து விட்டது. சவுக்கு, வெளியில் வந்த பத்து நிமிடங்களிலேயே, போலா நாத், அவசர அவசரமாக காரில் வெளியே கிளம்பிச் சென்றார். எங்கே என்று விசாரித்தால், ரத்த அழுத்தம் கூடி விட்டதால், மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார்.   இப்படி சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபப் படலாமா சார்…. ஏன் இப்படி டென்ஷனா ஆகுறீங்க ?

 

நீங்கள் எதற்குத் தெரியுமா கோபப் பட்டிருக்க வேண்டும் ?

DN_07-10-09_E1_09_03_CNI_thumb1

தமிழகம் முழுக்க உள்ள வணிக வரித்துறையின் சோதனை சாவடிகளிலும், போக்குவரத்துத் துறை சோதனைச் சாவடிகளிலும், ஒரு நாளைக்கு இரண்டு முதல் நான்கு லட்ச ரூபாய் வசூலாகிறதே…. அங்கே உங்களை சோதனை செய்ய விடாமல் தடுத்த போது கோபப் பட்டிருக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் அனைத்து பத்திரப் பதிவு அலுவலகங்களிலும், விதிமுறைகளை மீறி, இரவு நேரங்களிலும், பல லட்ச ரூபாய் வசூல் செய்து, பத்திரப் பதிவு செய்யப் படுகிறதே… அங்கே உங்களை சோதனை செய்ய விடவில்லையே… அப்போது கோபப் பட்டிருக்க வேண்டும்.

 

கே.என்.நேரு, பொன்முடி, ஆற்காடு வீராச்சாமி, கோ.சி.மணி, துரை முருகன், வீரபாண்டி ஆறுமுகம், சுரேஷ் ராஜன், பொங்கலூர் பழனிச்சாமி, போன்ற அமைச்சர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்குகளில், நீதிமன்றத்தை ஏமாற்றி, இந்த அமைச்சர்கள் விடுவிக்கப் பட்டதும், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய விடாமல் தடுக்கப் பட்டீர்களே… அப்போது கோபப் பட்டிருக்க வேண்டும்.

 

உமாசங்கர் போன்ற ஒரு அதிகாரி மீது, சொத்துக் குவிப்பு வழக்கு போட்டது மட்டுமல்லாமல், அதில் குற்றச் சாட்டுகள் நிரூபிக்கப் பட்டன என்று உங்களிடம், அறிக்கை கேட்டு நெருக்கடி கொடுத்தார்களே… அப்போது கோபப் பட்டிருக்க வேண்டும்.

 

லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கமாக நடத்தும் திடீர் சோதனைகளை எங்கேயுமே நடத்தாமல் உங்கள் கைகள் கட்டப் பட்டிருக்கின்றனவே, அப்போது கோபப் பட்டிருக்க வேண்டும்.

 

பொட்டு சுரேஷ் போன்ற ஒரு ப்ரோக்கர் சொன்னான் என்பதற்காக, வசூல் செய்து, கையும் களவுமாக பிடிபட்ட ஜெயஸ்ரீ போன்ற காவல்துறை அதிகாரிக்கு, ஐபிஎஸ் நியமனம் செய்ய உங்களிடம் தடையில்லா சான்று கேட்டார்களே… அப்போது கோபப் பட்டிருக்க வேண்டும்.

 

அதே ஜெயஸ்ரீ மீதான வழக்கில் மேல் நடவடிக்கையை கைவிடச் சொல்லி நெருக்கடி கொடுத்தார்களே… அப்போது கோபப் பட்டிருக்க வேண்டும்.

 

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப் பட்டு, அவ்வழக்கிற்கு ஆளான, ஐபிஎஸ் அதிகாரி, ஏ.கே.விஸ்வநாதன், அனைத்துச் சொத்துக்களுக்கும் உரிய கணக்கை காண்பித்த பிறகு, குற்றச் சாட்டுகள் நிரூபிக்கப் படாத நிலையிலும், அந்த விசாரணை அதிகாரி முகம்மது இக்பாலை, எப்ஐஆர் போடும் வகையில் ஒரு அறிக்கை அளிக்க நெருக்கடி கொடுங்கள் என்று உங்களை விட பணியில் பத்து ஆண்டுகள் இளைய, ஜாபர் சேட் என்ற ஒரு நபர், சொன்னாரே…. அப்போது கோபப் பட்டிருக்க வேண்டும்.

 

இன்ஸ்பெக்டர் பணியை பார்க்க வேண்டியவர்கள், கருணாநிதியின் வண்டியை தள்ளிக் கொண்டு இருப்பதற்காக, அவர்களுக்கு ஆளுக்கு இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் வழங்கப் பட்டன. அவர்களுக்கு ஏது இரண்டு கோடி ரூபாய் என்று, கொடுக்கப் பட்ட புகாரின் மீது நடவடிக்கை எடுக்காதீர்கள் என்று உங்களை மிரட்டினாரே ஜாபர் சேட். அப்போது கோபப் பட்டிருக்க வேண்டும்.

 

தனது தனிப்பட்ட குரோதத்தை தீர்த்துக் கொள்வதற்காக, ராமசுந்தரம் என்ற அதிகாரி மீது விசாரணைக்கு உத்தரவிட்டு, அவரை 24 மணி நேரமும் கண்காணிக்க ஏற்பாடு செய்யச் சொல்லி உங்களை மிரட்டினாரே.. கருணாநிதியின் செயலாளர் ராஜரத்தினம்…. அப்போது கோபப் பட்டிருக்க வேண்டும்.

 

அப்போதெல்லாம் கோபப் படாமல், இப்போது ஏன் கோபப் பட்டீர்கள் போலாநாத் ?

 

நீங்கள் வட இந்தியர்… திருக்குறள் படித்திருக்க மாட்டீர்கள். உங்களுக்காகவே எழுதப்பட்ட குறள் ஒன்று இருக்கிறது போலாநாத்.

 

இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்

சீரல் லவர்கண் படின்.

 

பணம், படிப்பு, பதவி ஆகிய சிறப்புகள் சிறுமைக்குணம் உடையவரிடம் சேர்ந்தால், அவர்களின் செயல்கள் அகங்காரத்தோடு வருவனவாம்.

 

 

இந்த குறளுக்கான விளக்கத்தை உங்கள் இன்ஸ்பெக்டர்கள் சரியான முறையில் சொல்வார்களா என்ற சந்தேகம் இருக்கிறது. அதனால், அதன் ஆங்கில வடிவமும் கொடுக்கப் பட்டிருக்கிறது.

 

Whene'er distinction lights on some unworthy head, 
Then deeds of haughty insolence are bred.

 

இந்தச் சம்பவத்தால் என்ன விளைவுகள் நேரும், நேர்ந்து கொண்டிருக்கிறது என்பதும் சவுக்குக்கு நன்கு தெரியும். பல்வேறு கடிதங்கள் எழுதிய பிறகு சவுக்குக்கு சட்ட ரீதியாக அளிக்கப் பட வேண்டிய பாதி சம்பளத்தை மேலும் தாமதம் செய்வீர்கள். அல்லது சுத்தமாக நிறுத்துவீர்கள். இதற்காகவும் நீதிமன்றத்தை அணுக வேண்டும் படி நெருக்கடி கொடுப்பீர்கள். ஏற்கனவே, நிலுவையில் உள்ள இரண்டு மாத அரைச் சம்பளத்தை, இன்னும் நான்கு மாதங்களுக்கு தாமதப் படுத்துவீர்கள்.

 

நீங்களும், துக்கையாண்டியும் சேர்ந்து கொண்டு, சவுக்குக்கு இன்னும் என்னென்ன வழிகளில் தொந்தரவு கொடுக்கலாம் என்று திட்டமிடுவீர்கள்.

 

எப்படி விரைவில், அரசுப் பணியை விட்டு டிஸ்மிஸ் செய்யலாம் என்று வேகவேகமாக நடவடிக்கை எடுப்பீர்கள்.

 

இதற்கு சவுக்கின் பதில் என்ன தெரியுமா ?

 

இயக்குநர் மகேந்திரனின் ‘முள்ளும் மலரும்’ என்ற காவியம் ஒன்று உண்டு.

 

சரத்பாபு, பொதுப் பணித்துறை பொறியாளராக வருவார்.   சரத்பாபுவிடம் ட்ராலி ஆப்பரேட்டராக இருக்கும், ரஜினிகாந்துக்கும், சரத்பாபுவுக்கும் ஏழாம் பொருத்தம்.   சரத்பாபு, பணி நிமித்தமாக, ரஜினியை கடிந்து கொண்டாலும், ரஜினி இந்த ஆள் வேண்டுமென்றே நம் மீது உள்ள வெறுப்பில் இவ்வாறு நடந்து கொள்கிறார் என்று தொடர்ச்சியாக எண்ணுவார்.

 

ஒரு நாள், ரஜினி புல்லாக சரக்கடித்து விட்டு, சாலையில் படுத்திருக்கும் போது நேரும் விபத்தில், ரஜினியின் இடது கை துண்டிக்கப் படும். அதன் பிறகு சரத் பாபுவை சந்திப்பார் ரஜினி. சரத் பாபு ரஜினியிடம், ‘காளி, நான் மேலதிகாரிகளிடம் எவ்வளவோ பேசிப் பார்த்தேன்.   ஆனால், உன்னை வேலையை விட்டு நீக்குவதை தவிர வேறு வழியில்லை என்று கூறுவார்.’

  

 

வேலை போய் விட்டதே என்ற ஆற்றாமை அழுகையை பீறிட்டு வர வைத்தாலும், அந்த அழுகையை அடக்கிக் கொண்டு ரஜினி ஒரு டயலாக் கூறுவார்.   “ரெண்டு கையி ரெண்டு காலு போனாலும் காளிங்கறவன் பொழச்சுக்குவான் சார்.   கெட்ட பய சார் அவன்..” என்று சொல்லுவார்.

போலாநாத்…. சவுக்கு உங்களிடமும் இதையே தான் சொல்ல விரும்புகிறது “இந்த வேலை போனாலும், டிஸ்மிஸ் பண்ணாலும் சவுக்குன்றவன் பொழச்சுக்குவான் சார். கெட்ட பய சார் அவன்”

 

Comments  

 
0 #66 sankarlals 2011-05-25 18:49
i love you ........ very bold work and good work too............ keep it up..............
Quote
 
 
+2 #65 balu mahendran 2011-05-24 19:05
சூப்பர் பதிவு.
உங்கள் தைரியம் என்னை மிரள வைக்கிறது!
Hats off சவுக்கு!
Quote
 
 
0 #64 RAJA1 2011-05-24 19:01
யோவ் சவுக்கு மொதல நீ என்னா காரனதுக்காக சச்பென்ட் ஆன அத மொதல்ல சொல்லு . நீ யோகியனா இல்லயானு நாஙக டிசைட் பன்ரோம்
Quote
 
 
+2 #63 jayaraj 2011-02-06 09:30
to savukkuku ,
in trichy k.n.nehru and his brother k.n. ramajayem making roudiyesam and doing lot of frauds and criminal activities including murders for real estate reasons they helped rajathi ammal and kanimozhi for getting some land like old prabhath theater complex, jj engg college so please ebquire it and publish in savukku becoz i heared they are threatining newspapers
Quote
 
 
+3 #62 eds 2011-02-06 07:24
Quoting Kumar.T:
//3) மருத்துவக் கல்லூரியில் படிக்கும் இயக்குநரின் மகளுக்கு, ஆராய்ச்சிக்காக ஒரு பிணம் வேண்டும்.//

நம்ம ஆறு கொலை ஆறுமுகம் (வீரபாண்டி) கிட்ட சொன்னா சீப்பா சப்ளை பண்ணுவரே...


Not only ceap but also fresh, Just killed.
Quote
 
 
+2 #61 anandji 2011-02-04 19:24
வணக்கம் .

மீண்டும் ஒரு நல்லதொரு பதிவு .


நீண்ட நாட்களாக எனக்கு ஒரு சந்தேகம் .

இந்த வன்கொடுமை சட்டம் என்று ஒன்று உள்ளதே அது எல்லோருக்கும் பொதுவானதா?

வன்கொடுமை சட்டம் என்றால் என்ன ?

எனக்கு தெரிந்த வரையில்

எவரும் அடுத்தவருடைய சாதியை சொல்லி அழைப்பதோ அல்லது கேவலமாக பேசுவதோ கூடாது.
இல்லையா ?

அப்படி இருக்கையில் எல்லோரும் ஏன் & எப்படி *பார்பனர்கள்* என்று இந்த வலை
பதிவில் எழுதுகிறார்கள் ?

*குறுக்கே நூல் போட்டவர்கள்* என்று சொல்ல முடிகிறது ?

இங்கே அந்த வன் கொடுமை சட்டத்திற்கு இடமில்லையா?

சட்டம் என்பது எல்லோருக்கும் பொது தானே ?


நன்றி
ஆனந்த்
பமாகோ,மாலி
Quote
 
 
+3 #60 riazkhan 2011-02-04 17:22
சவுக்கு! ராஜ் போன்றவர்களுக்கு பதில் கூறி நேரத்தை வீணடிக்கவேண்டாம ். ராஜ் அவர்கள் கருணாநிதி "எலும்பு தின்னிகளுக்கு" வக்காலத்து வாங்குவதில் இருக்கு ஆர்வம் சமுகத்தில் சற்றும் இல்லை. இவரை போல உள்ளவர்கள் நாட்டுக்கு எதுவும் செய்யமாட்டார்கள ் அப்படி செய்பவர்களை குறை கூறியே பிழைப்பு நடத்தும் குறுகிய எண்ணம் உள்ளவர்கள். நீங்கள் தொடர்ந்து உங்கள் சாட்டையை சூழட்டுங்கள், ராஜ் போன்றவர்களும், வயிற்றுஎறிச்சல் கொண்டவர்களும் எதிர்க்க தான் செய்வார்கள். சவுக்கு ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் உங்கள் பின்னால் இருக்கிறார்கள். சுழற்றுங்கள்!
Quote
 
 
+3 #59 பார்த்திபன் 2011-02-04 16:14
திருக்குறளே படிக்காத மேலை நாடுகளில் பலவற்றில் அப்படி-இப்படி என சில-பல ஊழல்கள் இருப்பினும், நம் நாட்டைப்போல மிகவும் மலிந்து இருப்பது இல்லை. அது எப்படி? 10, 20 வருஷங்களுக்கு முன்னால் இந்த அளவுக்கு ஊழல் நம்நாட்டிலேயே இருக்கவில்லை. அண்ணா போன்றோர் ஆண்ட போது, பல தவறுகள் சுட்டிக் காட்ட முடியுமாயினும், பல விதங்களில் நல்லாட்சியே புரிந்தனர். ஊரை அடித்து உலையில் போடும் விதமாகத் தான், இன்றைய நிலை உள்ளது. கண்டிப்பாக நம்போன்றோரின் போராட்டம் தொடர வேண்டும். சில நூறு ஆண்டுகள் நீடித்த போராட்டங்களும் வெற்றி பெற்றுள்ளன தானே, அந்த நம்பிக்கையுடன் போராட வேண்டும்.
Quote
 
 
+3 #58 பார்த்திபன் 2011-02-04 16:10
சவுக்கு, ராஜ் இருவருமே சந்தேகத்துக்கிட மான ஆட்கள் இல்லை. இப்படியான வாதங்கள் எதிரிக்குத் தான் சாதகமாகிவிடும். சவுக்கு நிலையில் ஒரு தனி மனிதன் இருந்தால், அரசுப்பணியை இழந்து பல வித விமர்சனங்களுக்க ும், அழுத்தங்களுக்கு ம் ஆளாகும் வேளையில், கோபங்களும், ஆற்றாமையும் மிகுந்து இருக்கும் போது சில நேரங்களில், 95% தவறான அதிகாரி, 5% நல்லது செய்தாலும் அது தவறாகவே தோன்றி கோபப்பட வைக்கும். இதை அதிகப்படியாக விமர்சனம் செய்ய வேண்டாம். வாசகர்கள் பலர், ஆனால் சவுக்கு ஒருவர் தானே? எல்லாருக்கும் பதில் சொல்ல முயல்வதும் கடினமே!
Quote
 
 
+1 #57 elakodi 2011-02-04 13:02
ஜெ கொள்ளை அடித்து என்னடா பண்ணப் போகுது .பிள்ளையா குட்டியா .செத்த பிறகு சொத்துக்களை அரசுடமையாக்கலாம ் .உன் குடும்பம் அடித்த சொத்துக்களை அப்படிப் பண்ணலாமா ?இப்பவே உங்களை பிடித்தாழ்த் தான் ,அனைத்தையும் பறிமுதல் செய்யலாம் .
Quote
 
 
+1 #56 badboy 2011-02-04 12:05
if you lost job. i will give my business, monthly you get minimum Rs. 15,000/-. no need to give deposit or any thing.
Quote
 
 
+3 #55 Nithi 2011-02-04 10:09
SAVUKKU - WE PROUD OF YOU. KEEP IT UP, WE ARE ALWAY'S WITH YOU.
Quote
 
 
-8 #54 ராஜ் 2011-02-04 09:53
சவுக்கு,

முதலில் பதிலுக்கு நன்றி. ஆனால் "சம்பந்தா சம்பந்தம் இல்லாமல், இந்த கட்டுரைக்கு, நீங்கள் பின்னூட்டம் இட்டிருப்பது, உங்கள் உள்நோக்கத்தை சந்தேகிக்க வைக்கிறது."????
நான் இந்த கேள்வியை அது சம்மந்தமான பதிவிலேயே கேட்டு இருந்தேன். அப்போதே தாங்கள் பதில் சொல்லி இருந்தால் நான் ஏன் இங்கு பின்னூட்டம் போடுகிறேன்? தவறு தங்களுடையதா, என்னுடையதா?
நீங்கள் கேட்ட முறையிலேயே தெரிகிறது, தாங்களுக்கும், தங்களை கேள்வியே கேட்ககூடாது என்று நினைக்கும் தங்களால் எப்பொழுதும் குரைகூறப்படும் மற்றவர்களுக்கும ் எந்த வித்தியாசமும் இல்லை. தங்கள் எரிச்சல் மிகுந்த பதில் நன்றாகவே தெரிகிறது. அதுவும் தான் நினைப்பது, தன் சித்தாந்தம் மட்டுமே சரி என நினைக்கும் ஒரு வித மனநோயை ( மன்னிக்கவும் ) தங்களிடம் காண முடிகிறது. தவறை சுட்டிகாட்டுவது நல்லது ஆனாலும் எல்லாவற்றையும் தவறாகவே சொல்ல விரும்பும் ஒரு வித மனசிதைவு உங்களுக்கு இருப்பதாக நினைக்கிறேன். பாருங்கள் நான் மிகுந்த மரியாதையுடன் கேட்டதைகூட தாங்கள் தவறாகவே எழுதி இருக்கிறீர்கள். உங்கள் நன்மைக்காக சொல்கிறேன் சவுக்கு. தயவு செய்து ஒரு நல்ல மருத்துவரை பார்க்கவும்.
இந்த சமுதாயத்தில் நன்மையும் இருக்கும் தீமையும் இருக்கும். நன்மைகளைவிட தீமைகளே அதிகம். ஆனால் உண்மையில் எதார்த்த வாழ்வில் உங்களாலும், என்னாலும் இவற்றை மாற்ற மாற்றமுடியாது. சான்று: தாங்கள் பதிவு செய்த பிறகு என்ன மாறி விட்டது? தங்களின் ஒரு பதிவில், தாங்களே இவர்களை திருத்த என்ன செய்யலாம் என்று கேட்டு இருந்தீர்கள். வாசகர்கள் யாரவது வழி சொன்னார்களா? ஏனெனில் இல்லை. இருந்தால் நாங்களே இந்த நாட்டை திருத்தி இருப்போமே!
சரி ஜாபர், கண்ணாயிரம், போலாநாத், இவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டால் வேறு யார்? அவர்கள் இவர்களைப்போல் இல்லை என்பதற்கு என்ன அத்தாட்சி? ( வருபவர் நேர்மை இல்லாதவர் என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்கும் நிலை நாடு இல்லை.)
Quote
 
 
-12 #53 ராஜ் 2011-02-04 09:53
நான் உங்களுக்கு சொல்வதெல்லாம் ஒன்று தான். அடுத்தவரை குறைகூறுவதை நிறுத்துங்கள். வாழ்க்கையில் இருக்கும் positive -களை பார்க்க பழகிகொள்ளுங்கள் . உங்களுக்கு பிடித்த நல்ல விஷயங்களை, நல்ல மனிதர்களை பற்றி பதிவிடுங்கள்.
Lotus - போன்ற ஆதரவற்றோர் இல்லங்களை தெரியபடுத்துங்க ள். உண்மையில் இதுவே நீங்கள் செய்யகூடியது.
இல்லை என்றால், தாங்கள் இதுவரை எழுதியதால் என்ன மாறி இருக்கிறது என்று ஒரு மீளாய்வு செய்யுங்கள். மாற்றம் என்பது நிரந்தர தீர்வாக இருக்க வேண்டும். தயவு செய்து தங்கள் பதிவால், அவர் நிலம் மீட்க பட்டது, இவர் suspend செய்யபட்டார் என்று எழுத வேண்டாம். அது நபரை மாற்றுமே அன்றி ஊழலை அல்ல. உங்கள் பதிவால் ஒரு ஜாபரை மாற்றலாம். ஜாபர் சேட் போனார் என்றால் ஜாபர் கேட் வருவார். அவ்வளவே.
வாசகளையும் கேட்கிறேன் என்ன மாறிவிட்டது? தயவு செய்து என்னை திட்டாமல், சிந்தித்து பதில் சொல்லுங்கள். - Please give 'constructive ' arguments on this comments.
அது சரி அது என்ன உள்நோக்கம் இந்த கேள்வியில் இருக்க முடியும்? உங்களிடம் இனி கேட்டு பயனில்லை. நன்றி செல்கிறேன்.

ராஜ்.
Quote
 
 
-9 #52 sree 2011-02-04 09:38
What is wrong in Raj's question?
Quote
 
 
+5 #51 sree 2011-02-04 09:37
Savukku, You are Amazing!
Keep up the Good Work..!
Quote
 
 
+7 #50 சவுக்கு 2011-02-04 03:55
அன்பார்ந்த திரு.ராஜ், தன்னைத் தாக்கிய ஒரு காவல்துறை அதிகாரியின் சங்கை ஒரு தனி நபர் அறுப்பதும், காவல்துறை திட்டமிட்டு ஒரு குற்றவாளியை கொலை செய்வதும் ஒன்றா ?

அந்த கட்டுரையிலும், மனம் வெதும்பி தற்கொலைக்கு முயன்ற, அஷோக் குமார் தனது மனக்குமுறலை வெளிப்படுத்த இந்த வழியை கையாண்டிருக்கலா ம் என்று சொல்லப் பட்டதே ஒழிய, சவுக்கு அதுதான் தீர்வு என்று சொல்லவில்லை.

இந்த என்கவுண்ட்டரில் மார்வாடிகள் வகித்த பங்கும், இதன் பின்னணியும் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா ? கைலேந்திர பாபு போன்ற ஒரு பெண் பித்தர் ஹீரோ ஆவதற்காக இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை எப்படி நியாயப் படுத்த முடியும்.

ஒரு நண்பர் என்ற முறையில் உங்களுக்காக சவுக்கு கொலை செய்யலாம். பொதுமக்கள் விரும்புகிறார்க ள் என்பதற்காக அரசாங்கம் கொலையில் ஈடுபடலாமா ?

சம்பந்தா சம்பந்தம் இல்லாமல், இந்த கட்டுரைக்கு, நீங்கள் பின்னூட்டம் இட்டிருப்பது, உங்கள் உள்நோக்கத்தை சந்தேகிக்க வைக்கிறது.
Quote
 
 
-5 #49 ராஜ் 2011-02-04 02:15
சவுக்கு,

நான் தங்களிடம் ஒரு கேள்வி கேட்டு இருந்தேன். ஆனால் இறுதி வரை பதில் இல்லை.

செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர் பொலிசாரால் தாக்கப்பட்ட பொழுது தங்கள் பதிவில், "நீங்கள் அந்த ஆய்வாளரின் சங்கை அறுத்திருந்தால் சவுக்கு உங்களை பாராட்டி இருக்கும்." என்று எழுதி இருந்தீர்கள்.
ஆனால் கோவையை சேர்ந்த முஷ்கான் மற்றும் அவள் தம்பி ஆகியோரை கொன்ற மோகன் என்பவனை என்கவுண்டர் செய்த பொது அதை எதிர்த்தீர்கள்? அதாவது உங்களுக்கு தெரிந்தவர் பாதிக்க பட்டால் அவர் எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம். அனால் அடுத்தவர் என்றால் அவர் சட்டப்படி நடக்க வேண்டும் அப்படி தானே?
உங்களுக்கு வந்த அதே கோபம் குழந்தைகளை இழந்த பெற்றோருக்கும் இருக்கும். உங்கள் நண்பருக்காக அவர் செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைத்ததை போல அந்த பெற்றோருக்காக போலீசார் செய்திருகிறார்க ள். தங்களால் செய்யமுடியாததை போலீசார் செய்ததை எண்ணி அவர்கள் மகிழ்ந்திருப்பர ். சந்தேகம் இருந்தால் ஏன் நீங்கள் அவர்களை பார்த்து ஒரு பேட்டி எடுக்க கூடாது? அந்த என்கவுண்டர் போலி என்பதும், சட்டசபை கூட்ட தொடரை மனதில் வைத்து என்பது எங்களுக்கும் தெரியும் - சவுக்கு எப்பொழுதும் தனக்கு மட்டுமே யோசிக்க தெரியும் என்று நினைக்க கூடாது ).

உங்களுக்கு ஒரு கேள்வி. ஒருவன் பசியால் சாக கிடக்கிறான். இன்னொருவன் வந்து அவனுக்கு உணவளித்து காப்பாற்றுகிறான ். ஏனினில் அவ்வாறு உணவிட்டால், அவனுக்கு ஆயுள் கூடும் என்று வரம்.
இப்பொழுது, நீங்கள் காரணம் எதுவானால் என்ன, பசிக்கு உணவிட்டு இருக்கிறான் என்று நினைப்பீர்களா? அல்லது உணவிட்டவன் எப்படிபட்டவன், காரணம் என்ன என்று ஆராய்ந்து அவனை குறை கூறுவீர்களா?
மனிதாபிமானம் உள்ளவர்கள் என்ன செய்வார்கள் என்பதை வாசகர்கள் முடிவுக்கு விட்டு விடுகிறேன்.
உங்கள் பதிலை பதிவில் பார்த்தவுடன் என் கடிதத்தை தொடர்கிறேன்.

ராஜ்.
Quote
 
 
+10 #48 சவுக்கின் விசிறி 2011-02-03 23:27
இக்கட்டுரையை படித்த போலோநாத்தும் துக்கையாண்டியும ் பேசிக் கொண்டது:
போலோ: என்ன ஆண்டி... என்கிட்டே அவன் மோதறான். அவனே என்ன பண்றது?
துக்கை: சார். இங்கே ஆபிஸ்ல வேலை செஞ்ச போது, ஏகப்பட்ட குண்டூசிங்களை அவன் எடுத்துக்கிட்டு வீட்டுக்கு போயிட்டானாம். அந்தத் தகவல் இப்பதான் கிடைச்சது. அரசாங்க பொருளை திருடினதால் கேஸ் போட்டுறலாம்.
போலோ: வெரிகுட். இன்னும் கொஞ்சம் ஸ்டாரங்கா கேஸ் போடலாமே.
துக்கை: சார், அவன் வேலைக்கு வந்த நாளில் 10 மணிக்கு ஆபிஸ் வரவேண்டியவன் காலையில 9மணிக்கெல்லாம் வந்துடுவானாம். வந்து பேன் போட்டுக்கிட்டு கரண்ட்டை வேஸ்ட் பண்ணிருக்கான். அரசாங்கத்துக்கு கடும் இழப்பு ஏற்படுத்திட்டதா ல், கேஸ் போட்டா ஸ்பெக்ட்ரம் ராசாவை போல கைது செஞ்சு உள்ளே தள்ளிடலாம்.
போலோ: சூப்பர் ஐடியா. ஆண்டி, நீ எங்கோ போயிட்டய்யா.. இன்னும் ஏதாவது?
துக்கை: அவன் நம்ம ஆபிஸ் பாத்ரூம் யூஸ் பண்ணிட்டு வந்த நேரத்துல, பாத்ரூமை சுத்தம் செஞ்சிக்கிட்டு இருந்த லேடிய தெரியாம இடிச்சிட்டானாம் . அந்த லேடிகிட்ட இருந்து ரேப் புகார் வாங்கிடலாமா சார்?
போலோ: பெண்டாஸ்டிக். அந்த லேடிக்கு என்ன வயசு?
துக்கை: அதிகமில்லை சார். ஒரு 58 வயசுதான்.
போலோ; இந்த மூணு கேஸ் போதும். அவனை ஒரு வழி பண்ணிடலாம்.
துக்கை: இன்னொரு கேஸ் இருக்கு சார். ஐயா பர்மிஷன் கொடுத்தா...
போலோ; என்ன தயக்கம் ஆண்டி... டெல் மீ...
துக்கை: உங்களை போன வாரம் பார்க்க வந்தப்போ... என்னை ஜாதி பேரை சொல்லி திட்டிட்டான்னு ஒரு பொய் கேஸூம் சேர்த்து போடலமா சார்...
போலோ: வாட் நான்சென்ஸ்... இதுவரைக்கு நாம் போடப் போற கேஸ் மட்டும் ட்ரூத் கேஸா மேன்.. எல்லாமே பொய் கேஸ்தானே.. அவன் மேலே இன்னும் எத்தைனை கேஸ் வேணாலாம் போட்டு உள்லே தள்ளுயா.. அப்புரம் அந்த பிரியாணி மிச்சம் இருந்தா என் வூட்டு அனுப்பி வை. என்னோட வொய்ப்புக்கு பிரியாணின்னா ரொம்போ புடிக்கும்.
துக்கை: வெர்ரி வெல் சார்.
Quote
 
 
+5 #47 குருமா ராஜ் 2011-02-03 22:19
..​வெளி​​யே ​போ....

நான் கா​லையி​லே​யே ​போயிட்​டென் சார்...
நீ ​கேட்டதுக்கு பதில​சொல்லுடா டுபுக்கு,,

அவ்வ்வ்வ்வ்
Quote
 
 
+10 #46 குமார.இரவிக்குமார் 2011-02-03 21:32
தோழரே, உங்கள் பணிக்கு ஒத்துழைக்கும் பொருட்டு, உங்களுக்கு பொருளாதார ரீதியாக எங்களால் இயன்ற வகையில் உதவ விரும்புகிறோம். எங்கள் ஒத்துழைப்பை ஏற்க விரும்பினால் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும். குமார. இரவிக்குமார்.
Quote
 
 
+8 #45 சாமக் கோடங்கி 2011-02-03 21:23
பட்டையைக் கிளப்பும் எழுத்து.. இன்னும் கொஞ்ச பேராவது உங்களைப் போல இருப்பதால் தான் நாட்டில் கொஞ்ச நஞ்ச மழையாவது பெய்கிறது போல.. தொடர்ந்து உங்கள் சேவையைத் தொடருங்கள்..
Quote
 
 
+6 #44 ஏகா,, 2011-02-03 20:33
சவுக்குண்ணா..
http://savukku-net.blogspot.com/
யாரு.. இந்த நாதரி சவுக்கின் பெயரை வைத்துக் கொண்டு திரியுது...
எதிர் கருத்து சொல்வதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு அதற்கு இப்படியா..
Quote
 
 
+3 #43 Nellai Tamilan 2011-02-03 19:47
I salute you Savukku!!! Take care!!
I appreciate your braveness!! and hard work against scam.
Hats off to you!!
Quote
 
 
+2 #42 வீரத்தமிழ் மகன் 2011-02-03 18:17
Quoting Vaedhampudhidhu :
Quoting வீரத்தமிழ் மகன்:
அப்படியெல்லாம் சினிமா மாதிரி நம்மளை எல்லாம் தூக்கிட முடியுமா? அப்படி தூக்கினாலும், நீதிமன்றம் என்று ஒன்று இருக்கிறது....


Endha needhi mandram, 50000 ku abdul kalam kaey pidi warrant koduthaangaley andha needhi mandrama???


அப்படியா, அப்புறம் நாங்க நீதிபதிக்கு வாரன்டு கொடுப்போமில்ல !
Quote
 
 
0 #41 THAKIDUTHATHAM 2011-02-03 17:47
கொழும்பிற்கு அண்மையிலுள்ள இரகசிய முகாமிலிருந்து வந்த அந்தத் தொலைபேசி அழைப்பு பெரும் அதிர்ச்சி அலைகளை என்னுள் உருவாக்கியது. தொலைபேசியில் அழைத்தவர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒரு தமிழ் இளைஞன்.

‘அண்ணா, உங்கள் தொடர்பு மட்டும்தான் கிடைத்தது. இந்தத் தகவலை எப்படியாவது வெளிப்படுத்திவி டுங்கள். இல்லாவிட்டால், எங்களது இனத்தின் எதிர்காலமே கேள்விக்குறியாக ிவிடும்’ என்ற அவரது குரலில் பதற்றமும், படபடப்பும் அதிகம் காணப்பட்டது.

அவர் தெரிவித்த தகவல் இதுதான்:


http://www.nerudal.com/nerudal.25309.html
Quote
 
 
+1 #40 THAKIDUTHATHAM 2011-02-03 17:45
‘அண்ணா, உங்கள் தொடர்பு மட்டும்தான் கிடைத்தது. இந்தத் தகவலை எப்படியாவது வெளிப்படுத்திவி டுங்கள். இல்லாவிட்டால், எங்களது இனத்தின் எதிர்காலமே கேள்விக்குறியாக ிவிடும்’
.
http://www.nerudal.com/nerudal.25309.html
Quote
 
 
-6 #39 Sivaram 2011-02-03 17:05
As per the fundmental rule a govt.servant cannot publish newspaper against the govt. So we have to see the charges levelled against the Savukku. Then only it can be moved to the court.
Quote
 
 
+4 #38 Pradeep_P 2011-02-03 17:02
சுடும் வரை நெருப்பு, சுற்றும் வரை பூமி், போராடும் வரை மனிதன். நீ மனித
Quote
 
 
+3 #37 Sivakumar 2011-02-03 16:54
great work... keep going.. we are with you...
Quote
 
 
+14 #36 tamil anban 2011-02-03 16:18
சவுக்கு அவர்களே உங்கள் துணிவுக்கு எனது வணக்கம் மற்றும் வாழ்த்துக்கள். அரசு ஊழியர்கள் தங்க கூண்டில் வளர்க்க படும் கிளியை போன்றவர்கள், கூண்டுக்கு சொந்தக்காரன் சொல்வதை அப்படியே சொன்னால் அதற்க்கு அதிகம் நெல் கிடைக்கும், அதே போல் ஆள்வோர் சொல்வதை செய்தால் அரசு ஊழியனுக்கு அதிகம் துட்டு கிடைக்கும், நேர்மையாக இருக்க நினைப்பவர்கள் அரசு துறைகளில் நீடிப்பது கடினம், உங்களுக்கு எங்கள் ஆதரவு என்றும் உண்டு, கூண்டில் இருந்து விடுபட்டதும் கயவரின் சொல் பேச்சு கேட்காத இந்த கிளி(சவுக்கு) புலியாகும் என்று அவர்களுக்கு உணர்த்துங்கள்(இ ப்பொழுதே சவுக்கு புலிதான் அதை அவர்களுக்கு உணர்த்துங்கள்). புலனாய்வு வார இதழ் தொடங்குங்கள், எங்கள் ஆதரவு கண்டிப்பாக உங்களுக்கு இருக்கும், சவுக்கு வாசகர்கள் உங்கள் புலனாய்வு வார இதழை விளம்பர படுத்துவோம். குறுஞ்செய்தி மூலமாவது எங்களுக்கு தெரிந்த நபர்களுக்கு சவுக்கை பற்றி கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். என்ன சவுக்கு வாசகர்களே நான் சொல்வது சரிதானே?
Quote
 
 
+3 #35 பொதுஜனம் 2011-02-03 15:43
MY HATS OFF TO you!!!! KEEP IT UP.
Quote
 
 
+4 #34 eds 2011-02-03 15:35
Savukku Shankar,

You are great, If we had 10 people like you India would become paradise on earth.

Wistleblowers like Savukku must be protected and appreciated like in many civilised nations.

People like you are the check and balance for the people.

The politicians and Bueracrats need to understand that they are servants of people not god.

Savukku has nothing to loose, Unlike the IAS,IPS,Politic ians and some Commercial Journalists who have to protect their illgotten Millions and Trillions.

What if V&AC cleark Job is gone you have won the hearts of millions of Public.

Your new Job is V&AC Director (Public awareness Division)

In this day and age where Judges, Jounalist, IAS,IPS etc are all for sale at the right price - You are standing your ground for Justice.


Long Live Savukku and his duty to the public.
Quote
 
 
+3 #33 sakthy 2011-02-03 14:21
சவுக்குக்கு ஒரு வேண்டுகோள்.இல்லை எச்சரிக்கை.அன்பான எச்சரிக்கை.எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்.
//போலாநாத்…. சவுக்கு உங்களிடமும் இதையே தான் சொல்ல விரும்புகிறது “இந்த வேலை போனாலும், டிஸ்மிஸ் பண்ணாலும் சவுக்குன்றவன் பொழச்சுக்குவான் சார். கெட்ட பய சார் அவன்”// இந்த வசனத்தை உடனே வாபஸ் பெற வேண்டும். எது வரினும் உண்மையை உரைக்க தொடர்ந்து பாடுபட வேண்டும். இல்லையேல் தமிழகம் முற்றாக சாக்கடையாகி விடும்.நாம் உங்களுடன் கைகோர்த்து நிற்கிறோம். அராஜகம் அக்கிரமங்களை ஒழிக்க பலனை எதிர்பாராது செயல் பாடுவோம்.
Quote
 
 
+1 #32 kathir 2011-02-03 13:55
you are great savukku.....
great work and great courage...
Quote
 
 
+1 #31 neovasant 2011-02-03 13:44
:lol: superb! I too think its time now to forward these to National new channels(Timesn ow, CNN n others).
Quote
 
 
+5 #30 செந்தில்குமார் 2011-02-03 13:38
இது தாங்க தமிழனின் குணம், உங்கள் தன்மானத்தை பார்த்து எங்களுக்கு பெருமையாக இருக்கிறது. நம் தமிழ் நாட்டில் சில வெட்கங்கெட்ட ஜென்மங்கள் தமிழன் என்று சொல்லி 'தன் "மானத்தை" இழந்து வாழ்ந்து கொண்டிருகிறார்க ள்.
Quote
 
 
+5 #29 நெல்லை வாசகன். 2011-02-03 13:17
சுகாதாரத் துறை துணை இயக்குநர் - நீங்கள் டாக்டர் சுப்பாராம் MD அவர்களை பற்றி தான் சொல்கிறீர்கள் என்று நினிக்கிறேன். அவர் தூத்துக்குடியில ் TB இயக்குனராக பணி செய்து கொண்டு இருந்தார். திருநெல்வேலியில ் குடி இருந்தார். அவர் மனைவி நெல்லை பொறியியல் கல்லூரி ஆசிரியர். சுப்பாராம் நெல்லையில் இருந்து தூத்துக்குடிக்க ு பேருந்தில் சென்று வந்தார். தனது சொந்த நலனுக்க அரசு வாகனத்தை பயன் படுத்த மாட்டார். அதன் பின் சுப்புராம் இணை இயக்குனராக பதவி யுயர்வு பெற்று சென்னைக்கு மாறுதலாகி வருகிறார். தமிழகம் முழுவதும் 130 லேப் assistant வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யும் பொழுது, மதுரை, நாகர்கோயிலில் வசூல் செய்த பணத்தை கொண்டு வந்த மற்ற துணை இயக்குனர்கள் கன்னியாகுமரி ரயிலில் தாம்பரம் அருகே பிடி படுகிறார்கள். அவர்கள் கொண்டு சென்றது மினிஸ்டர் "பன்னி செல்வம் ". அனால் மாட்டி விட்டது சுப்பராமை. சுப்புராம் தனியாக DMS quarters ல தனியாக தங்கி இருந்தார். அவர் வீட்டில் இருந்த மாத சம்பளம் கவர்கள் கைப்பற்ற பட்டன. யாராவது லஞ்சமாக வசூல் செய்த பணத்தை ஆபீஸ் quarters ல வச்சி இருப்பாங்களா ?? சுப்பாராம் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார் . சவுக்கு இந்த வழக்கு பற்றிய விவரம் தெரிந்தால் தெரியபடுத்தவும் . இப்படிக்கு சவுக்கின் நெல்லை வாசகன்.
Quote
 
 
0 #28 sathya 2011-02-03 12:36
From it is clear that u are a suspended police officer.Will u pls show ur face,
mr.savukku.We r very eager to see who u are.
Quote
 
 
+5 #27 எளியவன் 2011-02-03 12:30
அன்பு நண்பரே
மீண்டும் தங்களுக்கு ஒரு வேண்டுகோள்.. தங்களது பாதுகாப்பையும் தின நடவடிக்கையையும் நல்ல மனிதர்கள் துணை கொண்டு பலப்படுத்துங்கள ்.. ஏனெனில் நீங்கள் பகைப்பது பலம் வாய்ந்தவர்களை..ஆனால் தகுந்த பலத்துடன் எதிர்க்கும் போது இவர்கள் தூசியே..
Quote
 
 
+3 #26 Podhuvanavan 2011-02-03 12:00
Hi Savukku,
We are tired after reading these corrupted politicians and officials. For a change can you please publish articles about good people and their tru face?
Quote
 
 
+1 #25 nerupu 2011-02-03 11:57
Pirar Vaada Pala Seyalgal Seithu
Narai Koodi Kizha Paruvam Aethi
Kodung Kootruk Kiraiyena Pin Mayum
Pala Vedikkai Manitharai Pole
Nanum Veezhven Endru Ninaitthayo.........


Don't worry Tamil wiki leaks
Quote
 
 
0 #24 Durai 2011-02-03 11:31
Super savukku anna illa da mapillai ... kalakku kavanamudan............
Quote
 
 
0 #23 seenivasan 2011-02-03 10:53
Be brave & steady for rights..............the god will behind you.
Quote
 
 
+9 #22 Vaedhampudhidhu 2011-02-03 10:26
Quoting வீரத்தமிழ் மகன்:
அப்படியெல்லாம் சினிமா மாதிரி நம்மளை எல்லாம் தூக்கிட முடியுமா? அப்படி தூக்கினாலும், நீதிமன்றம் என்று ஒன்று இருக்கிறது. நமக்கு ஒரு சங்கம் இருக்கிறது. இதெல்லாம் தாண்டி சவுக்கு வாசகர்கள் இருக்கிறோம்.

வானம்தான் நமது எல்லை. எவனும் எதையும் புடுங்கக்கூட முடியாது. பார்த்துக் கொள்வோம்.


Endha needhi mandram, 50000 ku abdul kalam kaey pidi warrant koduthaangaley andha needhi mandrama???
Quote
 
 
+14 #21 Kumar.T 2011-02-03 10:03
//3) மருத்துவக் கல்லூரியில் படிக்கும் இயக்குநரின் மகளுக்கு, ஆராய்ச்சிக்காக ஒரு பிணம் வேண்டும்.//

நம்ம ஆறு கொலை ஆறுமுகம் (வீரபாண்டி) கிட்ட சொன்னா சீப்பா சப்ளை பண்ணுவரே...
Quote
 
 
+17 #20 ஏகா.. 2011-02-03 09:59
சவுக்கிற்கு என்றும் நிச்சயம் துணை நிற்போம்... அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டிய தருணம் என்றே தோன்றுகிறது..... ..>...
Quote
 
 
+22 #19 velan 2011-02-03 09:41
வெளியே போக சொல்லாதே..
நான் வீழ்வேன் என்று என்னாதே.
ஏழை தமிழர் என் பக்கம்
எட்டு திசையும் என் பக்கம்.
என்றும் தாய்க்குலம் என் பக்கம். கலங்காதே..

சவுக்கு பாட வேண்டிய பாட்டு..
Quote
 
 
+6 #18 ஊர்க்குருவி 2011-02-03 09:35
அராஜகம் அட்டூழியம் அதிகரிக்கும்போத ு அதை அடக்க, சமூகத்தில் மாற்றத்தை கொண்டுவர காலத்தால் இப்படியான சக்திகள் உருவாக்கப்படுகி ன்றன.அடக்குமுறையை தாண்ட துணிந்த ஒருவர் விரும்பியோ விரும்பாமலோ புள்ளியாகி உருவாகி விடுகின்றனர், அப்படியொரு ஆரம்பம் தமிழகத்தில் வித்தூன்றிவிட்ட து பலவழிகளில் அவை வெளிப்படுகின்றன , அவற்றில் சவுக்கும் ஒன்று.ஆட்சியாளர்கள் திருந்த முற்படாவிட்டால் இன்னும் பல சவுக்குக்கள் உதிக்கும்.
Quote
 
 
+5 #17 jeeva 2011-02-03 08:59
Dear Savukku, we behind u...
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 95 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday4724
mod_vvisit_counterYesterday12350
mod_vvisit_counterThis week73976
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month276708
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12798827