|
ஸ்பெக்ட்ரம்…. 2ஜியில் ஊழலே நடைபெற வில்லை என்று திமுக தொடர்ச்சியாக நடத்திய பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுகவிலிந்து திமுகவுக்கு தாவிய செல்வகணபதி ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகையில், ஸ்பெக்ட்ரம் என்பது கண்ணுக்கே தெரியாது. கண்ணுக்குத் தெரியாத ஒரு பொருளில் எப்படி ஊழல் செய்ய முடியும் என்று பேசினார்.
ஸ்பெக்ட்ரம் எப்படி கண்ணுக்குத் தெரியாமல் எல்லா இடங்களிலும் பரவி விரவிக் கிடக்கிறதோ, அதே போல ஸ்பெக்ட்ரம் ஊழலில் வந்த பணமும் பரவி, விரவிக் கிடக்கிறது.
இந்த ஸ்பெக்ட்ரம் பணம் எப்படி, வோல்டாஸ் கட்டிடம், க்ரீன் ஹவுஸ் ப்ரமொட்டர்ஸ், என்று பல்வேறு பரிமாணங்களை எடுத்திருக்கிறதோ, அதே போல, ஒரு புதிய பரிமாணம் வெளி வந்திருக்கிறது.
இத்தனை நாட்கள் ஊடகங்களில் வந்த செய்திகளை வைத்தும், கனிமொழியையும், ராசாவையும் கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று அழகிரி ‘தையா தக்கா’ என்று குதித்ததை வைத்தும், ஏதோ கருணாநிதியின் மூன்றாவது குடும்பத்திற்கு மட்டும் தான் இந்த ஊழலில் தொடர்பு இருப்பது போலவும், கருணாநிதியின் இரண்டாவது குடும்பமான கோபாலபுரம் கோமான்களுக்கு இதில் தொடர்பே இல்லை என்பது போலவும் சித்தரிக்கப்பட்டு வந்தது.
‘அது எப்படி சார் மூத்தவர் விட்டு விடுவார் ?. ‘ மூன்றாவது குடும்பத்துக்கு ஒரே பெண் பிள்ளை. அவரே இத்தனை கோடிகளை அபேஸ் செய்துள்ள போது, அரை டஜன் பிள்ளைகளை வைத்திருக்கும் மூத்தவர் விட்டு விடுவாரா என்ன ?

சீக்கிரம் வெட்டு தயாளு.... கலைஞர் டிவில மானாட மயிலாட பாக்கணும். இன்னைக்கு நமீதா வர்றாங்க
விட்டு விடமாட்டார் இல்லையா… ? ஆம் தோழர்களே… மூத்தவரும், தன் பங்குக்கு ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஒரு பெரும் தொகையை ஆட்டையைப் போட்டுள்ளார்.
கலைஞர் டிவி. இந்த தொலைக்காட்சி, மாறன் சகோதரர்களுக்கும், அஞ்சா நெஞ்சனுக்கும் ஏற்பட்ட மோதலை அடுத்து, உருவானது. அஞ்சா நெஞ்சனின் நேரடி மேற்பார்வையில் இது உருவானதால், உருவான நாள் முதலாகவே வலுவாக வளர்ந்தது கலைஞர் டிவி.

கலைஞர் டிவியில், வேறு பங்குதாரர்களை சேர்த்தால், நாளை பங்கு பிரிப்பதில் பிரச்சினை நேரும் என்பதற்காக குடும்பத்தை மட்டுமே பங்குதாரர்களாக உருவாக்கினார் கருணாநிதி.
தயாளுவுக்கு, 60 சதவிகிதம் பங்குகள், கனிமொழிக்கு 20 சதவிகிதம் பங்குகள், கலைஞர் டிவியின் மேலாண் இயக்குநர் ஷ்ரத் குமாருக்கு 20 சதவிகித பங்குகள்.
மாறனோடு மோதியாயிற்று. புதிய டிவி சேனல் தொடங்க வேண்டும். முதலீடு வேண்டுமல்லவா ? சவுக்கு வாசகர்கள் உடனே, அவர்களிடம் இல்லாத பணமா… என்று கேட்பீர்கள். அவர்களிடம் பணம் இருக்கிறது. ஆனால், அதற்காக அவர்கள் காசிலேயே தொழில் தொடங்க அவர்கள் முட்டாளா என்ன ?

பார்த்தாயா கண்ணே ராசாத்தி. ஒரு கண்ணில் வெண்ணையும், ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைப்பவன் நானல்ல
தொழில் தொடங்குகிறார்கள் என்றவுடன் 214 கோடி ரூபாய் முதலீடு வருகிறது. இந்த 214 கோடி ரூபாய் முதலீட்டைச் செய்வது, மும்பையைச் சேர்ந்த டி.பி.ரியாலிட்டி என்ற நிறுவனம். இந்த நிறுவனத்தின் வளர்ச்சி, அண்ணாமலை ரஜினி படத்தைப் போலவே அசுர வளர்ச்சி.
இந்த டி.பி.ரியாலிட்டி என்ற நிறுவனமே, மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த பெரிய அரசியல்வாதி ஒருவரின் பினாமி நிறுவனம் என்று தகவல்கள் கூறுகின்றன.
இந்த டி.பி.ரியாலிட்டி நிறுவனமும், துபாயைச் சேர்ந்த எடிசாலாட் நிறுவனமும் சேர்ந்து, ஸ்வான் டெலிகாம் என்ற ஒரு தொலைத் தொடர்பு நிறுவனத்தை தொடங்குகின்றன.
இந்த ஸ்வான் டெலிகாம் நிறுவனம், அனில் அம்பானிக்குச் சொந்தமானது. பிறகு, ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தை ஷாஹீத் பல்வா, வினோத் கோயங்கா என்ற டி.பி.ரியாலிட்டியின் முதலாளிகள் வாங்ககின்றனர்.
இந்த டிபி ரியாலிட்டி நிறுவனம் தான், 214 கோடி ரூபாயை முதலீடு செய்திருக்கிறது.
இந்த முதலீடும் சாதாரணமாக செய்யப்படவில்லை. இதிலும் பெரிய தகிடுதண்டா இருக்கிறது.
டி.பி.ரியாலிட்டிக்குச் சொந்தமான இரண்டு நிறுவனங்கள் சினியுக் பிலிம்ஸ் மற்றும் குஸேகான் ரியாலிட்டி. இந்த இரண்டு நிறுவனங்களின் பெரும்பான்மை பங்குகளை டி.பி.ரியாலிட்டி நிறுவனம் வைத்திருக்கிறது. குஸேகான் ரியாலிட்டி, 2009-2010ம் ஆண்டில் 206 கோடி ரூபாய்களை சினியுக் பிலிம்ஸில் முதலீடு செய்கிறது.
இந்த சினியுக் நிறுவனம் தான், கலைஞர் டிவிக்கு முதலீடு செய்ய 214 கோடி ரூபாய் தருகிறது.
நீங்கள் புதிதாக டிவி ஆரம்பிக்கப் போகிறேன், எனக்கு முதலீடு தாருங்கள் என்று ஏதாவது ஒரு நிறுவனத்திடம் கேட்டால் கிடைக்குமா ?
ஆனால் கலைஞர் டிவிக்கு மட்டும் கேட்ட உடனேயே முதலீடு கிடைத்தது.
ஒரு தொலைக்காட்சி எப்படி நடக்கும், என்ன என்ற விபரங்கள் தெரியாமலேயே, ஸ்வான் டெலிகாம் நிறுவனம் 200 கோடி ரூபாயை முதலீடு செய்கிறதென்றால், அது ஸ்பெக்ட்ரமுக்கான கைமாறு அல்லாமல் வேறு என்ன ?
இந்த ஊழல் வெளி வந்ததன் மூலம், ஆ.ராசாவுக்காக கருணாநிதி எதற்காக இத்தனை வக்காலத்து வாங்குகிறார் என்பது புரிகிறதா ?
மாவலி மன்னன் பட்ட கஷ்டத்தையும், ஆ.ராசா பட்ட கஷ்டத்தையும் விளக்கமாக எடுத்துச் சொன்ன கருணாநிதி, நேற்று பேசியது, கைது செய்யப் பட்டதாலேயே ஒருவர் குற்றவாளி என முடிவு செய்ய முடியாது என்பது.
கைது செய்யப் பட்டதாலேயே ஒருவர் குற்றவாளி என ஆக முடியாது என்றால், தயாளு கைது செய்யப் பட்டாலும், இதே போல மவுனச் சாமியாராக இருந்து தீர்மானம் இயற்றுவாரா கருணாநிதி ?
தன்னுடைய கையெழுத்தை தானே இல்லை என்றார் என்று பல கூட்டங்களில் பேசிய கருணாநிதி, டி.பி.ரியாலிட்டியிடம் வாங்கிய கடனுக்கு போட்ட ஒப்பந்தத்தில் உள்ள கையெழுத்து தன்னடையது தான் என்று ஒப்புக் கொள்ளச் சொல்வாரா ?
வெளிப்படையான விசாரணைக்கு திமுக எப்போதுமே தயார் என்னும் கருணாநிதி, தன்னடைய மனைவியை தானாகவே முன் வந்து சிபிஐ விசாரணைக்கு அனுப்பத் தயாரா ?
டான்சி நிலத்தை வாங்கியதற்காக உச்சநீதிமன்றமே கண்டனம் தெரிவித்துள்ளது என்று ஜெயலலிதாவைப் பற்றிக் கூறிய கருணாநிதி, உச்ச நீதிமன்றம் தயாளுவை ஏன் விசாரிக்கவில்லை என்று கேள்வி கேட்பதற்கு முன்பே, சிபிஐ விசாரணைக்கு ஆஜராகச் சொல்வாரா ?
வழக்கக்கு ஒழுங்காகச் செல்லாமல், இழுத்தடித்து தாமதிப்பதால் ‘வாய்தா ராணி’ என்று ஜெயலலிதாவை அழைக்கும் கருணாநிதி, அவ்வாறு தயாளுவை யாரும் அழைக்கும் முன் தானாக சிபிஐ முன்பு ஆஜராகச் சொல்வாரா ?
ஏழைகளுக்கு செல்போன் கொடுத்தற்காகத் தான் ஆ.ராசா இன்று சிறை சென்றுள்ளார் என்று பேசியுள்ளாரே, இது போல் ஏழைகளுக்கு செல்போன் கொடுத்ததற்காகத் தானே, தயாளுவுக்கு 200 கோடி கொடுக்கப் பட்டுள்ளது. தயாளவையும் சிறைக்கு அனுப்ப கருணாநிதி தயாரா ?
ஸ்பெக்ட்ரம் வழங்கியதில் இழப்பு இல்லை லாபம் தான் என்று பேசினாரே கருணாநிதி…. அந்த லாபம் இந்த 200 கோடி ரூபாய் தானே….
ஆ.ராசா சிறை சென்று விட்டார். தயாளமான தயாளு எப்போது ? |
Comments
Avar manaivi ellam sorna akka, magangal ellam karimetu karivayan, magal oru maada vilaku yaar yaethinalum nandraga eriyum...
ayioo sathayama naan nerupa thaan solraenunga thappa eduthukadheenga please...
எனது நோக்கமே இந்த 2G உலக மகா ஊழலால் மக்கள் எவ்வாறு வஞ்சிக்கபட்டார் கள் என்பதை ஒவ்வொரு இந்திய குடிமகனும் பத்திரிகை நிறுவனங்களில் பணிபுரியும் நண்பர்கள் உள்பட அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதுதான். எனவே தெரிந்துகொள்ளுங ்கள், புரிந்துகொள்ளுங ்கள். ஒவ்வொரு ஏழை மக்களுக்கும் தெரியபடுத்துங்க ள். ரோட்டில் இறங்கிதான் போராடவேண்டும் என்று இல்லை.கொடி பிடிக்க அவசியமும் இல்லை. e -mail, FAX , Facebook , orkut என்று எவ்வளவோ தொழில் நுட்ப வசதி உள்ளது. தங்களுக்கு உகந்த ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து தங்களின் அன்றாட வேலைகள் பாதிக்காத வகையில் சுலபமாக இதை செய்யமுடியும். செய்வீர்கள் என்று நினைக்கிறேன். நன்றி.
சிவகுமார்.M ,,
சீனியர் எஞ்சினியர்
தனியார் நிறுவனம்
துபாய்
இப்படி 2G ஊழலில் மக்களுக்கு இழைக்கபட்ட துரோகங்கள் எண்ணில் அடங்காதது. இந்த ஊழலின் தாக்கம் இதோடு நிற்காது. மக்களைத்தான் சுத்தி சுத்தி அடிக்கும். எப்படி? ஊழல் பணத்தை வைத்து ஏழைகளின் நிலங்கள் அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டு அதை பிளாட் போட்டு அதே மக்களிடம் அதிக விலை வைத்து விற்கப்படுகிறது . ஒரு ஏக்கரை குறைந்த விலைக்கு விற்ற மக்கள் அந்த பணத்தை வைத்து அதே இடத்தில் அதாவது முந்தைய சொந்த இடத்தில ஒரு கிரௌண்ட் நிலம் கூட வாங்க முடியவில்லை. இதுதான் ஊழலின் விளைவு. இப்போது புரிந்து இருக்கும் ஏழைகள் எப்படி உருவாகிறார்கள் என்று. இது மட்டும் இல்லை ஊழல் பணத்தை வைத்து அனைத்து இடங்களையும் வளைத்து போட்டு ரியல் எஸ்டேட் நடத்தும் அனைத்து அரசியல்வாதிகளும ் இப்படி ஊழல் பணத்தில்தான் செய்கின்றனர். அவர்கள் சொல்வதுதான் விலை. விலைவாசி உயர்வது இயற்கை அல்ல. அனைத்தும் மிக மிக செயற்கையே. இயற்கை என்று ஆளும் கட்சியினர் கூறுவது தவறு. உண்மையை மூடி மறைக்கும் செயல். இது ரியல் எஸ்டேட் மட்டும் இல்லை. அனைத்து பொருள்களுக்கும் பொருந்தும். குறைந்த விகிதத்தில் உள்ள பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவார்கள். அதிக விகித்தில் உள்ள நடுத்தர மக்கள், ஏழைகள் மேலும் ஏழைகளாக ஆவார்கள். இந்த ஏழை, பணக்காரன் இடை வெளியை குறைக்கத்தான் அரசாங்கம் ஒன்றை மக்கள் தேர்ந்தெடுக்கிற ார்கள்
துரோகம்-5: தகுதி இல்லாமல் உரிமம் வாங்கிய லெட்டர் பேட் நிறுவனங்கள் தனது பங்குகளை பல வெளி நாட்டு நிறுவனங்களுக்கு விற்றுள்ளனர். அதில் பாகிஸ்தான் போன்ற நாடுகளும் அடங்கும். இந்தியாவின் தொலை தொடர்பு துறையை இந்த நாடுகளும் பயன்படுத்துகின் றனர். இது உள்நட்டு மக்களின் பாதுகாப்புக்கு மிக பெரிய அச்சுறுத்தல்.
துரோகம்-6: நீரா ராடியா தொலைபேசி உரையாடல்கள், CAG ,தொலைதொடர்பு சம்பந்தபட்ட, கைபற்றபட்ட ஆவணங்கள், சம்பந்தபட்ட பிரதமர் அலுவலக கடிதங்கள் புறகணிப்பு, சட்ட,நிதி துறை கடிதங்கள் புறகணிப்பு, TRAI பரிதுரைகள் புறகணிப்பு இப்படி கோடி கணக்கில் ஆதாரங்கள், சாட்சிகள். முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்று முந்தைய ஆட்சியாளர்கள் வகுத்த அடிப்படை கொள்கை கூட பின்பற்றப்படவில ்லை. அதிலும் முறைகேடு.
துரோகம்-7: இவ்வளவு குற்றங்கள் செய்தும் சம்பந்தபட்ட குற்றவாளிகள் செய்த தவறை ஒப்பு கொள்ளாமல் நாங்கள் தவறு செய்யவில்லை என்று மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்வது மக்களுக்கு இழைக்கப்பட்ட ஏழாவது துரோகம். இதன் உச்சகட்டம்தான் 2G யில் ஊழலும் இல்லை நஷ்டமும் இல்லை என்று மத்திய அமைச்சரின் பத்திரிகை பேட்டி. இந்த உலகத்திலே தான் மட்டும்தான் புத்திசாலி வக்கீல் மற்ற அனைவரும் அடி முட்டாள்கள் என்ற ஆணவ நினைப்பு.
துரோகம்-8: நடந்த அனைத்து தேச துரோகங்களும், குற்றங்களும் பொருளாதார மேதை பிரதமருக்கு தெரிந்தே கண்முன்னே நடந்துள்ளது. இருந்தும் பிரதமர் வாய் மூடி மௌனியாக இருப்பது மக்களுக்கு இழைக்கபடும் மகா மகா துரோகம்
துரோகம்-9: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முறைகேடாக பெறபட்ட பணங்கள் பெரும்பாலானவை இந்தியாவில் புழக்கத்தில் இல்லாமல் அந்நிய நாடுகளில்,வங்கி களில் முதலீடு செய்யப்பட்டுள்ள தாக தகவல். இந்த பணம் அரசுக்கு வருவாயாக கிடைத்து இருந்தால் ஏராளமான அரசு கல்லூரிகள், பள்ளிகள், பாலங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் என்று உருவாக்கி அனைவருக்கும் கல்வி,வேலைவாய்ப ்பு, அடிப்படை வசதிகள் என்று ஏற்படுத்தி ஏழைகளே இல்லாத நாட்டை உருவாக்கி இருக்கலாம். இலவசங்கள் பெறாத மக்களை கண்டிருக்கலாம்.
துரோகம்-1: உரிமம் வாங்கிய அனைத்து நிறுவனங்களும் சுமார் 13000 கோடிக்கும் அதிகம் பொறுமானம் உள்ள(உதாரணம் S .TEL நிறுவனம்13000 கோடிக்கு வாங்க முன்வந்தது) அலைகற்றைகள் உரிமத்தை அடிமாட்டு விலைக்கு அதாவது 1200 , 1300 ,1650 கோடிகளுக்கு திட்டமிட்டு விற்கப்பட்டுள்ள து. அரசுக்கு சேரவேண்டிய, மக்களுக்கு சேர வேண்டிய வருவாய் சில சுய நலவாதிகளை சென்றடைந்துள்ளத ு.
துரோகம்-2: பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் உரிமத்தின் பங்குகளை வெளி நாட்டு நிறுவனங்களுக்கு விற்று கொள்ளை லாபம் பார்த்துள்ளனர். இதனால் அரசுக்கு அதாவது பல கோடி மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசின் வருவாய் சில சுய நல தனி மனிதர்களை சென்று அடைந்துள்ளது.
துரோகம்-3: தகுதி இல்லாமல் உரிமம் வாங்கிய 122 நிறுவங்களில் பெரும்பாலான நிறுவனங்கள் இன்னும் சேவையை தொடங்கவில்லை. இதில் "swan, Unitech" போன்ற லெட்டர் பேட் நிறுவனங்களும் அடங்கும். இந்த நிறுவனகள் ஏன் இன்னும் சேவையை தொடங்கவில்லை என்று உள்ளூர ஆராய்ந்தால் மிக தெளிவாக புரியும். பெரிய நிறுவனங்கள் போட்டி இல்லாமல் தொலைதொடர்பு துறையில் கொள்ளை லாபம் பார்க்க அதாவது கட்டணம் என்ற பெயரில் மக்களின் உழைப்பை சுரண்ட பெரும்பாலான தகுதி இல்லாத பினாமி லெட்டர் பேட் நிறுவனங்கள் இன்னும் சேவையை தொடங்கவில்லை. இவைகள் சேவையை தொடங்கி இருந்தால் சந்தையில் போட்டி அதிகமாகி கைபேசியில் பேசும் கட்டணம் இப்போது இருப்பதை விட மேலும் குறைந்திருக்கும ். ஒரு வேளை இதற்காகத்தான் திட்டமிட்டு "S.TEL போன்ற போட்டி நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கவில்லை என்ற சந்தேகம் தெளிவாக எழுகிறது
நியாய கணக்கு:
இந்தியாவில் 60 கோடி மக்கள் கைபேசி சேவையை பயன்படுத்துவதாக உண்மை தகவல் உள்ளது. எல்லோருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். ஒரு நபர் தனது கைபேசியை ஒரு நாளைக்கு சராசரியாக வெறும் 15 நிமிடங்கள் (LOCAL CALLS ONLY) பயன்படுத்துவதாக வைத்துக்கொள்வோம ். ஒரு நிமிடத்திற்கு 40 பைசா கட்டணம். அப்போ 15x0.40 =6.0 ரூபாய் ஒரு கைபேசியின் மூலம் செலவாகிறது. 60 கோடி கைபேசிகள். 60x6.0 = 360 கோடிகள் ஒரு நாளைக்கு செலவாகிறது. ஒரு மாதத்திற்கு 30x360 = 10,800 கோடிகள். ஒரு வருடத்திற்கு 12x10,800 = 1,29,600 கோடிகள். 2008 இல் 2G ஏலம் விடப்பட்டது. இன்று வரை இரண்டு வருடங்கள் ஆகிறது. அப்போ குறைந்தபட்ச வருமானம் இன்றுவரை 2,59,200 கோடிகள். இது ஒரு நாளைக்கு வெறும் 15 நிமிடங்கள் கைபேசியை பயன்படுத்தினால் இரண்டு வருடத்திற்கு கிடைத்திருக்கும ் வருமானம். இதோடு SMS, MMS, STD, ISD, சேவை கட்டணம், இணைப்பு கட்டணம்.......இன்னும் என்ன என்னவோ கட்டணங்கள் உள்ளது என்று சொல்கிறார்கள் மற்றும் 15 நிமிடத்திற்கு அதிகமாக பயன்படுத்துவோரி ன் செலவையும் சேர்த்தால் எத்தனை கோடி கோடிகள் வருமானமாக கிடைக்கும் என்பதை நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள். என்னால் கணக்கிடவே முடியவில்லை. என்னிடம் உள்ள கால்குலேட்டர் மற்றும் கணினி காண்பிப்பது "INFINITIVE". நான் தற்போது இந்தியாவில் இல்லை. இருந்திருந்தால் அனைத்தையும் அலசி ஆராய்ந்து இதைவிட இன்னும் துல்லியமாக நடந்த ஊழலின் அளவை குறிப்பிட்டு இருப்பேன். இந்த வருமானம் அனைத்தும் அரசுக்கு கிடைத்திருக்க வேண்டும். அது மக்களை சென்று அடைந்து இருக்கவேண்டும். கிடைத்ததா? மக்களை சென்றடைந்ததா? நிச்சயம் இல்லை என்றுதான் ஒவ்வொரு மக்களும் கூறவேண்டும். அப்படி என்றால் இந்த மக்கள் பணம் சட்டத்திற்கு புறம்பாக யாரிடமோ சென்று அடைந்துள்ளது. இந்த ஊழல் பணம் அடுத்த சில ஆண்டுகளில் தனது சொந்தநாட்டு மக்களையே தாக்கப்போகிறது.
1999 ஆண்டில் தான் தொலைதொடர்பு உரிமங்கள் வழங்க ஆரம்பிக்கபட்டது . அன்று வெறும் பணம் படைத்தவர்கள் மட்டுமே கைபேசியை பயன்படுத்தினர். எனவே நுகர்வோரின் எண்ணிக்கை மிக குறைவு. சில பல லட்சங்கள் மட்டுமே. தொழில் நுட்பவளமான 1G அல்லது 2G அலைக்கற்றைகள் மிக அதிக அளவில் அரசிடம் கையிருப்பு இருந்துள்ளது. ஆனால் உரிமம் வாங்க உலக அளவிலோ இந்திய அளவிலோ போட்டிகள் இல்லை. விலை கொடுத்து உரிமம் வாங்கியவர்கள் லாபம் பெற நுகர்வோரிடம் நிமிடத்திற்கு அதிக கட்டணம்(In coming and out going ) வசூல் செய்ய கட்டாயம் ஏற்பட்டது. இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால் நாம் தான் வாதி படைத்தவர்களாச்ச ே என்று இஷ்டத்திற்கு பேசி நேரத்தையோ பணத்தையோ அன்றைய வசதி படைத்தவர்கள் விரையம் செய்யவில்லை. குறைவான நேரத்துக்குதான் கைபேசியை பயன்படுத்தினர்.
நுகர்வோரின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால்தான் அன்று அலைகற்றை உரிமம் பெற அதிக நிறுவனங்கள் முன்வரவில்லை. இதை சரி செய்ய அன்றைய அரசு ஒரு தொலை தொடர்பு புரட்சியை உருவாக்க முயன்றது. விளைவு நாளுக்கு நாள் நுகர்வோரின் எண்ணிக்கை அதிகமானது. இன்றும் அதிகமாகி கொண்டே இருக்கிறது. 2010 நுகர்வோரின் எண்ணிக்கை சுமார் 60 கோடிக்கும் மேல். 2008 இல் 50 கோடிக்கும் மேல். இதற்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தும் அளவுக்கு போதிய அலைகற்றைகள் அரசிடம் இன்றும் உள்ளனர். ஆனால் பயன்படுத்துவோரி ன் எண்ணிக்கை வெறும் 60 கோடிதான். 122 தகுதி இல்லாத நிறுவனங்களுக்கு உரிமம் வழங்க பட்டுள்ளது. தகுதி என்றால் என்ன? போதிய அனுபவம், வங்கி காசோலை, வங்கி செக்யூரிட்டி டெபொசிட் அது மட்டும் இல்லை வாங்கியவுடன் குறிப்பிட்ட காலத்திற்குள் சேவையை தொடங்க வேண்டும்.
mani - Manamadurai,இந் தியா 2011-02-06 13:41:43 IST
அது "ப.சி" என்று பெயர் வைத்து தமிழ் நாட்டை பட்னி அக்கி vittavar
தயவு செய்து திரு சிவக்குமார் என்பவர் விகடனில் இட்ட spectrm ஊழல் பற்றிய இந்த பின்னோட்டத்தை அனைவருக்கும் சென்று சேரும் வண்ணம் வெளியிடவும்.. நீங்கள் முயற்சித்தால் பெரும்பாலான இணையவாசிகளை சென்றடயும்..
http://new.vikatan.com/news.php?page=13&nid=957
START MUSIC...
"
""பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளி ன் அடுத்த ஆயுதம், "கருப்பு பணம்'னு சொல்றா ஓய்...'' என, கடைசி மேட்டரை சொல்ல ஆரம்பித்தார் குப்பண்ணா.
""கொஞ்சம் விவரமா சொல்லுங்க...'' என்றார் அந்தோணிசாமி.
""தேசிய அளவுல எதிர்க்கட்சிகள் எல்லாம் சேர்ந்து, "ஸ்பெக்ட்ரம்' விவகாரத்தை கையில எடுத்து தீவிரமா போராட்டம் நடத்தினா... அதுல, ஒரு வழியா, ராஜா கைது வரை வந்துடுத்து... பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடவும் மத்திய அரசு தயாராயிண்டிருக் கு... இந்த வெற்றிக்கு அப்பறம், "கருப்பு பணம்' விவகாரத்தை கையில எடுக்க திட்டமிட்டிருக் கா..""இந்தியாவுல இருந்து கருப்பு பணத்தை முதலீடு செஞ்சிருக்கவா பட்டியலை, சுவிஸ் வங்கி கொடுத்துடுத்து ஓய்... ஆனா, மத்திய அரசு வெளியில விடாம வச்சிண்டிருக்கு ... இதுல, தமிழகத்தைச் சேர்ந்த ஒரு முக்கிய மத்திய அமைச்சரின் வாரிசு, முதல் ஆளா இடம் பெற்றிருக்கார்... இந்த விவகாரம் எதிர்க்கட்சிகளு க்கும், "லீக்' ஆயிடுத்து... அதனால, அவருக்கு நெருக்கடி கொடுத்தா, அந்த மத்திய அமைச்சருக்கு சிக்கல் வரும்... அதை வைச்சுண்டு, மத்திய அரசை உலுக்கலாம்னு முடிவு பண்ணிருக்கா...'' எனக் கூறிவிட்டு எழுந்தார் குப்பண்ணா; பெஞ்ச் அமைதியானது.
உங்க முகமூடிய கழட்டிட்டு நல்ல ஓபன்'அ உங்க கடவுள் கருணாவை பாரட்டவும்.
எப்படியாவது ஓட்ட பிரிச்சு மக்களை குழப்பி, உங்க தலைவர மீண்டும் அரியண(?!) ஏத்தி மிச்ச தமிழ்நாட்ட விக்கனும்..
ம். நடத்துங்க...
2001 2006 பெரியதாக எந்த குற்றச்சாட்டும் இல்லாத காரணதால் தான் admk 60 + ,
உங்க தலைவர் இலவசம்நு மக்கள எமதற ஒரு புதிய முறைய கண்டுபிடித்தும் 90 சீட தான் வாங்க முடிச்சது..
66 கோடி ரொம்ப தப்பு, அதுக்கு 96 ல தண்டிசோம் .. 2006 பெரிய குற்றம் இல்ல.
2011 இல் 176000 கோடி தப்பு இல்லையா...
உங்க தலைவரோடு சேர்து நீங்களும் உங்க மன சாக்சி யா வித்துடின்கள ?
Quoting கோவை பிரியன்:
இந்த DB Reality Group வேறு யாருமல்ல.2008ல் 2ஜியில் லைசென்ஸ் பெற்று அலைவரிசையின் 45% துபாயைச் சார்ந்த Etisalat நிறுவனத்திற்கு 2009ல் அதிக விலைக்கு விற்று ஆட்டையப்போட்ட நிறுவனம்.
If we vote for AIADMK allaiance we can allow vote not to be wasted. Otherwise votes will get split and DMK will come to power
After AIADMK comes to power Savukku from day one can control it
SO let us not waste vote
I APPRECIATE YOUR COURAGE FOR DOING SUCH A INVESTIGATION AND PUBLISH.
ALSO,I HEARD KANIMOZHI PURCHASED K.S.R GROUP OF INSTITUTES IN TIRUCHENGODU.YOU ALSO INVETIGATE AND PUBLISH.
WE ARE ALWAYS WITH YOU.
ANBUDAN
MELINA
KANIMOZHI PURCHASED K.S.R GROUP INSTITUTES IN TIRUCHENGODU.DERA SAVUKKU,PLEASE INVESTIGATE AND EXPOSE TO PUBLIC.
THANKS A LOT.
MELINA,DUBAI
//லக்கிலுக் அவர் அப்பாவுடன் பரங்கிமலை ஜோதிக்கு சென்ற கட்டுரையை படித்தீர்களா?
http://www.luckylookonline.com/2011/02/blog-post.html
ஒரு குடும்பமா இருந்தா பரவாயில்ல... நீ ஊர் மேய்ந்ததுக்கு இந்த நாடு தண்டனை அனுபவிக்கனுமா... ஒருமுறை எகிப்தில் என்ன நடக்குதுன்னு கேட்டுத்தெரிஞ்ச ுக்குங்க...
விகடன் இணையதளத்தில் கருநாய்நிதியின் உளறலுக்கு 11 பக்கத்திற்கு மேல் கருத்துக்கள் வந்துள்ளன. அதில் சிவகுமார் என்பவரது கருத்துக்கள் அருமை. ஸ்பெக்ட்ரம் ஊழலை அற்புதமாக அலசியிருக்கிறார ். அனைவரும் படிக்கும் வண்ணம் உங்கள் இணையத்திலும் பிரசுரிக்க வேண்டுகிறேன்.
http://new.vikatan.com/news.php?page=3&nid=957
(2)CONTEST FROM A SAFE SEAT IN TAMIL nadu AS A JOINT OPPOSITION CANDIDATE SO THAT THE VOICE OF REAL TAMILS IS HEARD IN THE ASSEMBLY
FRIENDS OF SAVUKKU - PLEASE COMMENT.
SAVUKKU DONT MODERATE AND AVOID PUBLISHING THE COMMENT
THIS CAN BE MADE AS A SEPARATE THREAD
214 Crores is just a negligible fraction. A. Raja`s 1st day CBI custody revelation is just a BEGINNING.CBI expects his Personal Secretary may become an Approver. Let us wait for the Italy connection if the CBI is as honest as this under the surveillance cum guidelines of the GREAT SUPREME Court.
நண்பர்கள்,சிரமம ் கருதாது,அப்படிய ே கீழ்கண்ட வலைதள பதிவையும் படிக்குமாறு வேண்டிக் கேட்டுக்கொள்கிற ேன்.
http://vimarisanam.wordpress.com
படித்துவிட்டு,த ிரு வேந்தன் என்பவர் எழுதியிருக்கும் பின்னூட்டத்தையு ம் படிக்கவும்.உங்கள் கண் கலங்கினால் நான் பொறுப்பல்ல ,உங்கள் நல்ல உள்ளமே காரணம்!
நன்றி.
அந்த அடிப்படை தொண்டன் ஒன்றும் விபரம் தெரியாதவன் இல்லை நண்பரே... அவர்களது தகுதிப்படி அவர்களையும் மணற்கொள்ளை, கட்டபஞ்சாயத்து என்று சம்பாதிக்க வழி செய்துள்ளதால் அவர்களும் அவருக்கு ஒரு கும்பிடு போட்டு அவர்கள் அளவில் கொள்ளையை நடத்திக்கொண்டுத ான் ஒருக்கின்றனர். தலைவன் எவ்வழி தொண்டனும் அவ்வழி....
Use compressed images in all your forthcoming posts. In this post the last image is exactly 3.46 MB.
தி மு க காரனுகள் யார். இந்த ஆட்சியில் உள்ளாட்சியின் நல்லாட்சியின் புண்ணியத்தினால் ஓவொரு ஊரிலும் பஞ்சாயத்து தலை சுமோ / ஸ்கார்பியோ / எஸ்டேட் வண்டியோட இருக்குதுகள். கவுன்சிலர்கள் எல்லாம் ஏழைக்கு ஏத்த எள்ளுருண்டை...கார். ஒவ்வொரு அல்லகைக்கும் எவனிங் டின்னெர் டாஸ்மாக் பார் நடத்த அனுமதி. எத்தனிக்கும் பிறகும் எப்பிடி சாமி நீங்க இப்பிடி சொல்லறீங்க!!!
Find here
http://www.savukku.net/index.php?option=com_content&&view=article&&id=81:2010-09-07-17-53-15&&catid=1:2010-07-12-16-58-06&&Itemid=2&&template=whiteilaku
வரும் சட்டமன்றத்தேர்த லில் ஒரு வாக்குக்கு ஆயிரம் ரூபாய் விலை நிர்ணயித்துள்ளா ர்கள். தி.மு.க.வின் அதிகபட்டச செலவு மூவாயிரம் கோடிதான். இதனால் இவர்கள் எளிமையாக பணதால் வென்றுவிடுவார்க ளோ என்ற அச்சம் தற்போது எழுந்துள்ளது.
2G scam: DMK channel under scanner
NDTV Correspondent, Updated: February 04, 2011 11:43 IST
Chennai: The 2G scam probe may have just widened beyond A Raja.
Enforcement Directorate is probing a transaction in which Rs. 214 crore were transferred from Mumbai-based DB Realty group to Kalaignar TV, which is owned by family members of Karunanidhi.
Probe agencies are interested in the deal because the telecom arm of DB Realty is among firms which got 2G licences in 2008 and more so because it was A Raja who was the Telecom Minister when the licence was handed out and that too allegedly at below-market prices.
The DB group's telecom arm sold 45% to Etisalat in 2009. The company, earlier known as Swan Telecom, is now called Etisalat-DB.
Read more at: http://www.ndtv.com/article/india/2g-scam-dmk-channel-under-scanner-83380?cp
Quote
RAASA
KANI MOLI
SARAVANAN
RAASATHI
....
EPPO THAYALU
PARAMA PATHA VILAYATTU SNAKE POLA NEELKIRATHU
"vinnai thandiya viswaroopa uulal"
கனிமொழி நடத்தும் ஆதித்யா சேனல் பற்றி கொஞ்சம் இந்த பக்கத்தில் இருந்தால் இன்னும் வலு சேர்க்கும் எனபது எனது தாழ்மையான கருத்து. மேலும் பெரம்பலூரில் இரண்டு கல்லூரிகளும், பர்வீன் ட்ரவல்ஸ் இந்த இரண்டுக்கும் கனிமொழிக்கும் என்ன தொடர்பு என்பதை பற்றி விசாரித்து எழுதினால் ன்றாக இருக்கும். தயாளு அம்மாள் போட்டோ போட்டாச்சு ஏதோ கொஞ்சம் அவங்க பத்தி எழுதீட்டிங்க.. அப்போ ராசாத்தி அம்மா போட்டோ மட்டும் போட்டு இருக்கீங்க அவுங்க ஸ்டோரி இல்லன்னு அவுங்க கோவிச்சுக்க மாட்டாங்களா?
oஆளும் கட்சியிலிருக்கு ம் அரசியல்வாதி ஒருவர் குற்றவாளி என்பதால் கைது செய்து தண்டனை எல்லாம் கொடுக்க முடியாது,
வித்தமிழ் முத்தகர் குர்ணாநிதி,
வாழ்க சவுக்கு.......
http://www.dnaindia.com/india/report_did-a-raja-take-to-skies-with-2g-bribe_1502764
CBI is grilling A Raja over diversion of kickbacks he allegedly received in the allocation of 2G spectrum.
Sources said the former telecom minister is believed to have divided the bribe among a carefully-woven network of relatives and close friends in his party, DMK. A huge amount from the kickbacks was allegedly pumped into the domestic aviation sector by his party friend.
A top official involved in the probe into the 2G scam told DNA that CBI strongly suspected Raja of giving a huge amount to a close party friend, who used the money to enter the domestic aviation sector.
http://www.dnaindia.com/india/report_did-a-raja-take-to-skies-with-2g-bribe_1502764
CBI is grilling A Raja over diversion of kickbacks he allegedly received in the allocation of 2G spectrum.
Sources said the former telecom minister is believed to have divided the bribe among a carefully-woven network of relatives and close friends in his party, DMK. A huge amount from the kickbacks was allegedly pumped into the domestic aviation sector by his party friend.
A top official involved in the probe into the 2G scam told DNA that CBI strongly suspected Raja of giving a huge amount to a close party friend, who used the money to enter the domestic aviation sector.
RSS feed for comments to this post