முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
கட்த்ரோட் பொலிடீஷியன்ஸ் பாகம் 2. அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 21
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வியாழக்கிழமை, 10 பிப்ரவரி 2011 07:33

 

அந்த புதன் கிழமை காலை அனைவருக்கும் இயல்பாகத்தான் விடிந்தது. அவரவர், காலை எழுந்ததும், அன்றைய செய்தித் தாளை படித்துக் கொண்டே, காபியை குடித்துக் கொண்டே, மனைவியை திட்டிக் கொண்டே, அவசர அவசரமாகவும் இயந்திர கதியிலும் கிளம்பிக் கொண்டிருந்தனர்.

 

ஆனால், சென்னையில் ஒரு சில வீடுகளில் மட்டும் இயல்பு நிலை மாறி புயல் வீசியது. அந்த புயல், சிபிஐ என்ற புயல்.   அதிகாலையிலேயே பல்வேறு குழுக்களாகப் பிரிந்த சிபிஐ டீம், ‘நம்பளையெல்லாம் ரெய்டு பண்றதுக்கு ஒரு பய பொறந்து வரணும்’ என்று இறுமாப்போடு இருந்த குருமாராஜ், போலிப் பாதிரி வீடுகளை சிபிஐ டீம் சோதனையிட்டது. டெல்லியில் ராசாவின் வீட்டை சோதனையிட்டது மட்டுமல்லாமல், பெரம்பலூரில் உள்ள ராசாவின் வீடு, அண்ணன் வீடு, மற்றும் நெருங்கிய உறவினர்கள் வீடுகள் அனைத்தும் சோதனையிடப்பட்டன.   ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஊழல் நடைபெறவில்லை, வட இந்திய ஊடகங்கள் பார்பபனத் திமிரோடு, ஒரு தலித்தை குறி வைத்துத் தாக்குகின்றன என்று இறுமாப்போடு பேசித் திரிந்த திமுகவினர், தலைகளை தொங்கப் போட்டுக் கொண்டு சென்றனர்.

 RAJA3

ரெய்டு திருவிழா முடிந்ததும், அடுத்து என்ன நடக்கும் என்று அனைவரும் எதிர்ப்பார்த்து காத்திருந்த போது, இந்த ஊழலில் சிக்கியிருந்த முக்கிய நபர் மட்டும் நிம்மதி இன்றி அலைந்து கொண்டிருந்தார்.   ஒரு புல் ஸ்காட்ச் விஸ்கி 12,000 விலை. அந்த புல் பாட்டிலை ஒரே நபர் முழு மூச்சாக குடித்துக் காலி செய்தார்.   சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் வறுத்துக் கொடுத்த காலிபிளவர் பக்கோடாவும், சுவையான அசைவ உணவும் அவருக்கு பிடிக்கவில்லை. அறையை விட்டு வெளியே வந்தால் பத்திரிக்கையாளர்கள் எந்த நேரமும், கழுகு போல காத்திருந்தனர்.

 

சிபிஐ எந்த நேரமும் அழைக்கலாம் என்ற பயத்தில், எப்படி எதிர்கொள்வது என்று தவித்துக் கொண்டிருந்த போது, ஊழல் தடுப்புத் துறையில் நீண்ட நாள் அனுபவம் மிகுந்த, ஓய்வுக்குப் பிறகு ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கை மேற்பார்வை செய்வதற்கென்றே நியமிக்கப் பட்டுள்ள நல்லமா நாயுடுவும், தன்னை மிகப் பெரிய அறிவாளி என்று நினைத்துக் கொள்ளும் லஞ்ச ஒழிப்புத் துறையின் ஐஜியும் ஆலோசனை சொல்கிறார்கள். ‘சிபிஐ எது கேட்டாலும் தெரியாது என்று கூறுங்கள். சிபிஐ ஆல், எதுவும் செய்ய முடியாது என்று அறிவுரை கூறுகிறார்கள்‘.

 nn

 

நல்லமா நாயுடு

thukkiandi1

துக்கையாண்டி

பித்துப் பிடித்தார்ப் போல, ராசா புலம்பிக் கொண்டிருக்கையில், சிபிஐ டெல்லியில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்புகிறது.

 

ராசாவை இது போல சிபிஐ வதைத்து எடுப்பதையும், காங்கிரஸ் கட்சி திட்டமிட்டே திமுகவை நெருக்கடியில் உள்ளாக்க வேண்டுமென்று செயல்படுவதையும் உணர்ந்த கருணாநிதி, காங்கிரஸ் கட்சியை தன் பங்குக்கு அவமானப் படுத்த வேண்டும் என்று முயல்கிறார்.

 

பிரதமர் வந்தால், மாநிலத்தின் முதலமைச்சர் சென்று வரவேற்க வேண்டும் என்ற மரபை பின்பற்றாமல், விமான நிலையம் செல்வதைத் தவிர்க்கிறார்.

 05edit_sonia_file

விமான நிலையம் செல்வதை தவிர்த்ததோடு மட்டுமல்ல. அன்று மாலை நடந்த வைரமுத்துவின் நூல் வெளியீட்டு விழாவில், ‘இன்று பிரதமரை வரவேற்கச் செல்லும் கடமை இருந்தாலும் கூட, அதை தவிர்த்து விட்டு, இந்த விழாவிற்கு நான் வந்திருக்கும் காரணம், தமிழின் மீதும், வைரமுத்துவின் மீதும் நான் வைத்திருக்கும் அபிமானம் தான் காரணம்‘ என்று விளக்கம் வேறு சொன்னதால். ஏற்கனவே எரிச்சலில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு, காயத்தில் உப்பைத் தடவியது போல இருந்தது.

 

ஆனால் இது எதுவுமே ராசாவை காப்பாற்ற வில்லை.   முதலமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்கென்று, டெல்லி செல்கிறார் கருணாநிதி. மன்மோகன் சிங்கையும், சோனியாவையும் கருணாநிதி சந்தித்துக் கொண்டிருந்த போது, கருணாநிதியின் மனதுக்கு நெருக்கமான ஆண்டிமுத்து ராசாவை, சிபிஐ விசாரணை என்ற பெயரால் துளைத்துக் கொண்டிருந்தது. மற்ற நாட்கள் விசாரணை நடந்த போது, ராசாவை மரியாதையாக நடத்திய சிபிஐ அதிகாரிகள், ராசா எதற்கெடுத்தாலும் சட்டம் பேசுவதை பொறுத்துக் கொண்டு இருந்தார்கள். ஆனால், ராசா இடத்தை கொடுத்தால் மடத்தைப் பிடிப்பவராயிற்றே… ?   மீண்டும் சட்டம் பேசுகிறார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அதிகாரிகள், ‘மிஸ்டர்.நீங்கள் கேபினெட் அமைச்சர் அல்ல…. ஒழுங்காக நடந்து சொள்ளுங்கள்.. ‘ என்று மிரட்டுகிறார்கள். அப்போதுதான் ராசாவுக்கு, ஏதோ நடக்கப் போகிறது என்று புரிகிறது.

 Raja_2

கடைசியாக கருணாநிதியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ‘தலைவரே… என்னை ஜெயிலுக்குப் போகாமல் காப்பாற்றுங்கள் தலைவரே… என்று கெஞ்சுகிறார்‘   கருணாநிதி பதிலுக்கு, ‘நான் பாத்துக்கறேன்யா‘ என்று பதிலுரைக்கிறார். இவ்வாறு பதிலளித்தாலும், கருணாநிதிக்கு, முதல்நாளே ராசா கைது செய்யப் படப் போகிறார் என்பது தெரிவிக்கப் படுகிறது.   ஆனால் இந்த விபரத்தை ராசாவிடம் கருணாநிதி தெரிவிக்கவில்லை.

 

மறுநாள் காலையில் சிபிஐ விசாரணைக்கு ராசா செல்லும் போதே, அவருக்கு இன்று ஏதோ நடக்கப் போகிறது என்பது தெரிகிறது.   தனது நண்பர்களிடம் ‘நான் இன்று திரும்பி வரப்போவதில்லை‘ என்று கூறி விட்டு செல்லுகிறார்.

 

11.30 மணிக்கெல்லாம் ராசா கைது என்ற செய்தி மெலிதாகக் கசிகிறது. 12.30 மணிக்கு ஹெட்லைன்ஸ் டுடே செய்தி ஊடகம், ராசா கைது என்பதை அதிகாரபூர்வமாக அறிவிக்கிறது.

 

ராசாவின் கைது, திமுக வட்டாரங்களை உலுக்கிப் போடுகிறது.   அரசியல் சாணக்கியர் கருணாநிதியை மீறி எதுவுமே நடக்காது என்று நம்பிக் கொண்டிருந்த கருணாநிதி காங்கிரசின் பிடியில் சிக்கிக் கொண்டிருக்கிறாரோ என்ற சந்தேகம் உருவாகிறது.

 

அதற்கேற்றார் போல, காங்கிரஸ் கட்சியோடு பேச்சு வார்த்தை நடத்திய கருணாநிதியும் மிரண்டு தான் போயிருந்தார்.   ராசாவின் கைது முதல் அதிர்ச்சி என்றால், கூட்டணி பேச்சுவார்த்தையை காங்கிரஸ் நடத்திய விதம் அடுத்த அதிர்ச்சி. பேச்சுவார்த்தைக்காக டெல்லி சென்ற கருணாநிதியிடம் மன்மோகன் சிங் முதல் நாள் பேசிய போதுதான், ராசா கைது என்ற விஷயத்தை தெரிவிக்கிறார். இப்போது, கருணாநிதி மன்மோகனை வரவேற்கப் போவதை விட, தமிழ் மொழியும், வைரமுத்துவும் தான் முக்கியம் என்பதை நினைவில் வைத்திருந்தாரா என்பது தெரியவில்லை.

 

முதல் நாள் சோனியாவின் அப்பாயின்ட்மென்ட் கிடைக்கவில்லை. மறுநாள் மதியம் ஒரு மணிக்கு சோனியாவின் அப்பாயின்ட்மென்ட் என்று தகவல் அளிக்கப் படுகிறது. மதியம் சோனியாவை சந்திக்கலாம் என்று காத்திருந்த கருணாநிதிக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. ஒரு மணிக்கான சோனியாவின் அப்பாயின்ட்மென்ட், ரத்து செய்யப் படுகிறது. சோனியாவுக்கு உடல் நிலை சரியில்லை என்ற ஒரு ‘சொத்தை‘ காரணம் தெரிவிக்கப் படுகிறது.

 4472683983_bc58aa16bf_b

யுபிஏ.1 அரசாங்கத்தில், நினைத்ததையெல்லாம் சாதித்த கருணாநிதிக்கு இது ஒரு பெரும் அதிர்ச்சியாக அமைகிறது.

 

மாலை 7 மணிக்கு சோனியாவின் அப்பாயின்ட்மென்ட் வழங்கப் படுகிறது. வழக்கமாக கூட்டணிப் பேச்சுவார்த்தையை தொடங்கியவுடன் எத்தனை சீட்டுகள் வழங்க இயலும் என்பதைப் பேசியே பழக்கப் பட்ட கருணாநிதி, முதன் முறையாக அதிர்ச்சிக்கு ஆளாகிறார். சோனியாவோடு இருந்த ராகுல் காந்தி, 82 தொகுதிகளின் பட்டியலை எடுத்து படிக்கத் தொடங்குகிறார். இந்த தொகுதிகளெல்லாம் காங்கிரஸ் கட்சிக்கு வேண்டும் என்று, கருணாநிதிக்கு தகவல் சொல்லுவது போலச் சொல்லுகிறார். கருணாநிதி அதிர்ச்சியில் உறைகிறார். இது மட்டுமல்லாமல், கூட்டணி மந்திரி சபை என்ற நிபந்தனையும் விதிக்கப் படுகிறது. தனியாகக் கொள்ளையடித்தே பழக்கப் பட்ட கருணாநிதிக்கு, இன்னொருவருக்கு கொள்ளையில் பங்கு கொடுக்க வேண்டும் என்பதே, மிகுந்த அயற்சியை தருகிறது.

 

டெல்லி வந்திறங்கியவுடன், கருணாநிதி பாட்டாளி மக்கள் கட்சி திமுக கூட்டணியில் தான் இருக்கிறது என்று அறிவித்தார்.  கருணாநிதியின் இந்த அறிவிப்புக்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, அதிமுகவோடு தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி பேச்சுவார்த்தையில் உள்ளது என்பதை அறிந்த கருணாநிதிக்கு, ராமதாஸுக்கு ஒரு செக் வைக்க வேண்டும். இன்னொரு காரணம், காங்கிரஸ் கட்சியிடம், பாருங்கள், நான் பாமகவுக்கு வேறு இடம் ஒதுக்க வேண்டும், ஆகையால் நீங்கள் கம்மியாக வாங்கிக் கொள்ளுங்கள் என்பது மற்றொரு காரணம்.

 

ஆனால் கருணாநிதியின் இந்தத் தந்திரம், மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.

 1580097291_9ea7306f5a_b

முதலில் பாமக உடனான கூட்டணி பற்றிய அறிவிப்பு வந்த உடனேயே, ராமதாஸ் பத்திரிக்கையாளர்களை சந்தித்து, ‘கூட்டணி பற்றி பாமக எந்த முடிவும் எடுக்கவில்லை’ என்று அறிவிக்கிறார். ராமதாஸின் இந்த அறிவிப்பு, கருணாநிதியை சினம் கொள்ளச் செய்ததோடல்லாமல், காங்கிரஸ் கட்சியோடு பேச்சுவார்த்தை நடத்தும் நேரத்தில் மிகுந்த பலவீனப் படுத்துகிறது.

 

பலவீனமான நிலையில் சோனியாவை சந்தித்த கருணாநிதி அதிகம் பேச முடியாமல், 82 இடங்கள் கேட்ட காங்கிரஸ் கட்சிக்கு, கட்சியோடு கலந்தாலோசித்து விட்டு முடிவெடுக்கிறோம் என்று கூறி விட்டு திரும்புகிறார்.

 

திரும்பிய மறுநாள் தான் ஆ.ராசா கைது.   இதன் நடுவே, கூட்டணி குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்று திமிரோடு அறிவித்த மருத்துவர் ராமதாஸ், அந்தர் பல்டி அடிக்கிறார். திமுக கூட்டணியில் தான் நீடிக்கிறோம் என்றும், பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து கொண்டிருக்கிறது என்றும் அறிவித்து விட்டு, உடனடியாக திமுகவுக்கு தூது விடுகிறார்.

 

அரசியலில் ஒரு நாள் என்பது மிகுந்த நீண்ட காலம் என்பார்கள். அதற்கேற்றார் போலத்தான் நிகழ்வுகள் அரங்கேறின.

 

பாமக சார்பாக தூது வந்தவரிடம், கருணாநிதி 28 தொகுதிகளுக்கான பட்டியலை தயார் செய்து கொடுக்கிறார். அடுத்த நாள் கலர் டிவி கொள்முதல் செய்வதற்கான அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பாமக சார்பாக கலந்து கொண்ட, கோ.க.மணி, 28 தொகுதிகளுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் சம்மதத்தை தெரிவித்ததோடு கூடுதலாக 2013ல் ஏற்படும் ராஜ்ய சபா காலியிடத்திற்கு, சின்ன அய்யா அன்புமணிக்கு ஒரு இடம் வேண்டும் என்று தெரிவிக்கிறார். கருணாநிதியும் தனது சம்மதத்தை கோ.க.மணியிடம் தெரிவிக்கிறார்.

 3325707760_6f4f340c91_b

 

நீ ஏன் இப்படி கோவணத்துடன் ஆண்டி ஆனாய்.....

இந்நிலையில், 82 இடங்களை கேட்ட காங்கிரஸ் கட்சி, இறங்கி வந்து 50 அல்லது 60 இடங்களுக்கு ஒத்து வரும் என்று எதிர்ப்பார்க்கிறார் கருணாநிதி. ஆனால், காங்கிரஸ் கட்சி சற்றும் குறைவது போல் தெரியவில்லை. பிடிவாதமாக 80 என்ற எண்ணிக்கையிலேயே தெளிவாக இருக்கிறது.

 

இப்போது கருணாநிதியின் மனது தேர்தலுக்குப் பின் என்ன என்பது பற்றி யோசிக்க ஆரம்பிக்கிறது.

 

மொத்தம் உள்ள தொகுதிகள் 234. காங்கிரஸ் கேட்பது 80.   காங்கிரஸ் பிடிக்கும் பிடிவாதத்தைப் பார்த்தால், இறங்கி வருவது போல தெரியவில்லை.

 

234ல் 80ஐ கழித்தால் மீதம் 154. இந்த 154ல், எப்படியும் 14வது, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட விசுவாசமான அடிமைகளுக்குப் பிரித்துத தர வேண்டும். மீதம் 140. இந்த 140ல் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 28 கொடுத்தால் மீதம் உள்ளது 112 மட்டுமே.   இந்த 112லும், போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் ஜெயிக்க வாய்ப்பே இல்லை.

 

90 இடங்களில் ஜெயித்தால் கூட, இப்போது இருக்கும் நிலையை விட, இன்னும் மோசமாகப் போய் விடும். மீண்டும் ’மைனாரிட்டி ’ அரசு என்ற நிலை. அதனால், பாட்டாளி மக்கள் கட்சியை கூட்டணியை விட்டு வெளியேற்றினால், 140ல் போட்டியிட வாய்ப்பு உள்ளது.

 

மேலும், பாட்டாளி மக்கள் கட்சி, ஒரு வேளை அதிமுக வோடு கூட்டணி சேர்ந்தால், தேமுதிக அதிமுக கூட்டணியில் இருக்க வாய்ப்பில்லை. விஜயகாந்துக்கு ஒரு கணிசமான தொகையை கொடுத்தால், தனித்து போட்டியிடுவார். விஜயகாந்த் தனித்துப் போட்டியிட்டு பெறும் வாக்குகள் அனைத்தும், திமுகவுக்கு எதிரான வாக்குகளாகவே இருக்கும்.

 

மும்முனைப் போட்டியானால், திமுகவுக்கும் அதிமுகவுக்கும் போட்டி சரி சமமாக இருக்கும். அப்போது, நம்மிடம் இருக்கும் பணத்தை வைத்து எளிதாக வெற்றி பெற்று விடலாம் என்பது கருணாநிதியின் கணக்கு. ஆனால் கருணாநிதி போடும் இந்தக் கணக்கு வெற்றி பெறப் போவது இல்லை.

 

இதை வலுப்படுத்தும் விதமாகத்தான், திமுக பொதுக்குழுவில் பேசுகையில், ’எதிரிகளை மன்னிக்கலாம். துரோகிகளை மன்னிக்கக் கூடாது.   கடைசி நேரத்தில் ராமதாஸ் அதிமுக கூட்டணிக்குச் சென்றதால்தான், பாராளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 பெற முடியவில்லை’ என்ற அன்னை சோனியா பாமகவைப் பற்றிப் பேசினார் என்று கருணாநிதி கூறியது இந்தப் பின்னணியிலேயே… ராமதாஸ் சோனியாவிடம் சென்று இப்படிப் பேசினீர்களா என்று கேட்கவா முடியும் ?

 
3814188968_fae6548fcf_b

பாட்டாளி மக்கள் கட்சியை வெளியேற்றினாலும், அக்கட்சிக்கு, அதிமுக கூட்டணியில் இடம் இருக்காது.   பாட்டாளி மக்களின் வாங்கு வங்கியான, வன்னிய சமுதாய மக்களே இன்று ராதாஸுக்கு ஆதரவு தருவதில்லை என்பதை ஜெயலலிதா அறிய மாட்டாரா என்ன ?

 

மேலும், விஜயகாந்துடனான கூட்டணிப் பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தில் இருக்கிறது.   கடந்த பாராளுமன்றத் தேர்தலில் 10 சதவிகித வாக்குளைப் பெற்ற தேமுதிகவுக்கு முன்னுரிமை கொடுக்கப் படுமா, இருக்கும் வாக்கு வங்கியையும் கோட்டை விட்ட பாட்டாளி மக்கள் கட்சிக்கு முன்னுரிமை வழங்கப் படுமா ?

 

இந்தக் காட்சி இந்த அளவில் இருக்கையில், மருத்துவர் ராமதாஸ் ’நடுத்தெரு நாராயணா’ என்ற நிலையில் இருக்கிறார்.

 

ஒவ்வொரு தேர்தலுக்கும், கூட்டணி மாறி மாறி, ஓரளவு வெற்றியும் பெரும் நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் இருப்பை, இரு திராவிட கட்சிகளுமே, எரிச்சலாகத் தான் பார்க்கின்றன.

 

மேலும், கணிசமான எம்எல்ஏக்களை பெற்று விட்ட இறுமாப்பில், பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவு இல்லாமல், எந்த கூட்டணியும் ஆட்சி அமைக்க முடியாது என்று அவ்வப்போது கருத்து தெரிவித்த மருத்துவர் ராமதாசின் கொட்டத்தையும் அடக்க வேண்டும் என்பதில் இரு கட்சிகளும் மும்முரமாக உள்ளன.

 3325727928_7105dfa26d_b

ஒரு ஊரில் இரண்டு பெரிய ரவுடிகள். அந்த இரண்டு ரவுடிகளும், நேருக்கு நேராக பல ஆண்டுகளாக மோதி வருகிறார்கள். நடுவில் திடீரென்று போலீஸ் தொந்தரவு. போலீசிடமிருந்து தப்பிக்க, ஒரு ரவுடி, சின்ன ரவுடி ஒருவரின் உதவியை நாடுகிறார். அவர் உதவியால், எதிரியான பெரிய ரவுடியை வெற்றி கொள்கிறார். சிறிது நாள் கழித்து, அந்த சின்ன ரவுடி, எதிரி முகாமுக்குச் செல்கிறார். சென்று, ஏற்கனவே வெற்றி பெற்ற அந்த பெரிய ரவுடியை தோற்கடிக்கிறார்.

 

இப்படி சின்ன ரவுடி கட்சி மாறி மாறி, இரு ரவுடிகளையும், வெற்றி பெறச் செய்தும், தோல்வியடையச் செய்தும் வந்தவுடன், அந்த சின்ன ரவுடி ’சரி.. நம்பளாலத் தான் இந்த பெரிய ரவுடிகள் இரண்டு பேரும் காலம் தள்றாங்க’ என்று முடிவெடுத்து, ஊர் முழுக்க இந்த விஷயத்தை சொல்லி வருகிறார்.

 

பெரிய ரவுடிகள் இரண்டு பேரும் நேருக்கு நேர் எதிரிகள் என்றாலும், நேற்று முளைத்த ஒரு சின்ன ரவுடி, எப்படி இரண்டு பேரையும் மிரட்டி வருகிறானே என்ற கோபம் இருவருக்குமே இருக்கும் தானே ? அந்த சின்ன ரவுடியைப் போலத்தான் பாட்டாளி மக்கள் கட்சியை, இரண்டு திராவிட கட்சிகளுமே பார்க்கின்றன.

 

ஒரு வேளை இப்போது இருக்கும் முடிவுப் படி, பாட்டாளி மக்கள் கட்சிக்கு திமுக கூட்டணியில் இடம் அளிக்கப் படாவிட்டால், இந்த தேர்தல், பாட்டாளி மக்கள் கட்சியின் முடிவுரையை எழுதும்.

 

இரண்டு திராவிட கட்சிகளுக்குமே இந்தத் தேர்தல் முக்கியமான தேர்தல். ஒரு வேளை திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அதிமுக என்ற கட்சியே இல்லை என்னும் அளவுக்கு, கருணாநிதி வேலை செய்வார்.

 

அதிமுகவை பொறுத்தவரை, கட்சியை காப்பாற்றுவதற்கும், அடுத்த தேர்தலை சந்திப்பதற்கும், இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றேயாக வேண்டிய ஒரு நிலை.

 

 2881301161_b3ab45afdd_b

இப்படி அவரவர் நலன்களை மட்டும் பார்த்துக் கொண்டு, எப்படி ஒருவரை ஒருவர் அழிப்பது என்று நடக்கும் போட்டியில், முள்வேளி முகாமுக்குள் இருக்கும் ஈழத் தமிழர்களை மறந்து போன இவர்கள் கட்த்ரோட் பொலிட்டீஷியன்ஸ் தானே சார்……

 

Comments  

 
+2 #39 jai 2011-02-11 18:09
திருடர் முன்னேற்ற கழகத்தில் இருக்கும் திருடர் குல திலகத்தை வெளியேற்றினால் தான் மக்கள் மூன்று வேலை உணவு உண்ண முடியும் .....
Quote
 
 
+3 #38 ஏகா.. 2011-02-11 17:57
எகிப்த்தின் வேயல் கோனிம் = சவுக்கு
Quote
 
 
-1 #37 thatvamishi 2011-02-11 13:17
kaliyuhathula yaardhan fraud pannala, ivarhal moda fraudhal. gud going savukku
Quote
 
 
0 #36 KK 2011-02-11 13:04
CORRUPTION IN INDIA
I Cried after seeing this video
must see
Video on corruption in India that threatens its existence as a nation.

http://www.youtube.com/watch?v=giAqjxvyRLw
http://www.youtube.com/watch?v=C4FXqU8XY0A&feature=related
Quote
 
 
+9 #35 ஏகா.. 2011-02-11 13:03
ஆட்சி மாறினாலும் எங்களது சாட்டை சுழலும்.. போன தேர்தலில் நாங்கள் திமுகவிற்கே வாக்களித்தோம்.. ஆனால் என்ன ஆச்சு.. இலவசங்கள் என்கின்ற பெயரில் கடன் லட்சங்கோடிகளை தாண்டி விட்டது. இந்த அரசுக்கு குடிமக்கள் என்றால் அரசு ஊழியர்களும், கோட்டையில் இருக்கும் அதிகாரிகள் மட்டும் தான்.. பொதுமக்களின் கஷ்டத்தில் அக்கரை இல்லை. விவசாய நிலங்கள் சுருங்கிக் கொண்டே வருகிறது. பொருளதார மண்டல்ங்கள் என்ற பெயரில் பெரிய பணமுதலைகளுக்கு விவசாய நிலங்கள் விவசாயிகளிடம் பிடிங்கி கொள்ளை லாபத்திற்கு விற்று அரசாங்கமே ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்கிற்து. விவசாயக் கடன் தள்ளுபடி நல்ல விசயம் தாம்.. ஆனா அதில் பயனை அடைந்து அரசியல்வாதிகளும ் பெரிய விவசாயிகளும் தான். ஒரு அமைச்சரே மேடையில் பெருமையாக சொல்கிறார் எனக்கு இத்தனை லட்சம் தள்ளுபடு ஆச்சு என்று, இன்னோரு அமைச்சர் அதே போல் ஒரு மேடையில் ஆக்கிரமிப்பு செய்துள்ளது நமது கட்சிக்காரர்கள் என்பதால் அவர்களை ஒன்றும் சொல்ல முடியவில்லை இது போல ஒரு கேவலமான நிர்வாகம் எங்கும் பார்க்க முடியாது.. அதற்காக ஜெ இருந்தால் தேனும், பாலும் ஓடும் என்று சொல்லவரவில்லை..அவர் இருந்தால் அனைவருக்கு ஒரு பயம் இருக்கும் அவ்வளவுதான். டான்சி ஊழல், அந்த சம‌யத்தில் பெரிய அளவில் வெறுப்பிற்கு ஆளனார். ஆனால் மு.க க்ருப் செய்த 2ஜி ஊழல் அருகில் சின்ன கொசு.. எனக்கு சமிபத்திய மிகப்பெரிய கோபம் என்னவென்றால் நமது மீனவ பிரசனை பற்றி பிரதமருக்கு எதுவும் தெரியாது நான் விளக்கி இருக்கிறேன் என கூறியது.. அவர் என்ன இந்திய பிரதமரா, இல்ல பாகிஸ்தான் பிரதமரா? கொலை செய்தவனுக்கு உடந்தையாக இருந்தாலும் குற்றமே.. அப்புறம் இந்த மின்சாரம் வருகின்ற வெளி நாட்டுக் கம்பெனிகளுக்கேல ்லாம் 24 மனிநேரமும் நம்மை விட குறைந்த கட்டணத்தில் கிடைக்கும். ஆனால் நாம எப்பட மின்சாரம் வரும் போகும் என பல்ப பாத்துக்கிட்டேக ிடக்கனும்..
இவர்களுக்கு மாற்றாக ஜெ வை தவிர‌ வேறு ஆள இல்லை.. they must go... ரஜினி சொன்னமாதிரி மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ் நாட்டை ஆண்டவனாலும் காப்பாத்த் முடியாது.. ‌

\\..நடுநிலைமை என்பது நன்மைக்கும் தீமைக்கும் நடுவில் நிற்பதல்ல. தீமையை எதிர்த்து நிற்பது...\\.. ரீபிட்டு..

சும்மா நச்சுன்னு இருக்கு திரு.வேலன் அவர்களே !!!
Quote
 
 
+1 #34 வாழ்க சவுக்கு 2011-02-11 10:51
A Raja made Rs 3,000 cr in bribes
http://www.zeenews.com/news686441.html
இங்கே ஒப்பாரி வைக்கும் பிள்க்கா பசங்க முகத்தில் சாணி. எல்லோருக்கும் முன்பே நீங்கள் சொன்ன விஷயங்கள் உண்மை ! உண்மை ! உண்மை !
Quote
 
 
+1 #33 சவுக்கின் விசிறி 2011-02-11 07:25
Quoting Suri:
This is completely one side article. You are always writing against Karunanidhi. If you have perosnal problems with Karuna, you can resolve that outside. Dont give wrong imaginary conversation like JV and Reporter magazines. This kind of worng information will decrease ur credibility.


Yes, Savukku is always writing against Karunanithi, there is nothing wrong about it as long as it's truth. Don't ask Savukku not to write against Karunanithi, if you have any reply to his allegation just convey it which helps us to understand the truth. What Savukku, Is this the right reply to this reader?
Quote
 
 
-6 #32 jeya iyengar 2011-02-11 06:48
Nee enna oppari vachaalum win panna povathu DMK than.Appuram irrukidio appu unakkum,pappath ikum,pappananku m.
Quote
 
 
+6 #31 Kumar.T 2011-02-10 23:35
Quoting மெய்விளம்பி:
இந்த தளம் நமது எம்ஜியார் பத்திரிகையின் இணையதளம் போலே உள்ளது வாசகர்களும் அதிமுக தொண்டர்களை போன்றே பின்னூட்டம் இடுகின்றனர்.உன் மீது அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுத்திருந்தால் இது முரசொலி இணையதளம் போலவே இருந்திருக்கும் .திமுகவினர் பின்னூட்டம் அதிகமாக இருந்திருக்கும் .இது மாதிரி பல பேரை பாத்துட்டோம் .

ஒருவரை திட்டினால் அது உடனே அவருடைய எதிரியை ஆதரித்ததாக அர்த்தமா??
சவுக்கு தளத்தில் எங்காவது அம்மாவை புகழ்த்தோ அல்லது அதிமுக வை ஆதரித்தோ ஏதாவது செய்தி உள்ளதா??
இது உங்களின் பார்வை குறைபாடு.. அரசியலில் யாரும் 100 சதவிகித யோகியர்களோ அல்லது 100 சதவிகித உத்தமர்களையோ எதிர்பார்க்க முடியாது. நீங்களோ அல்லது நானோ அந்த பதவிக்கு வந்தாலும் தவறு தான் செய்வோம்..
இது "இரு கோடுகள்" தத்துவம் போல எந்த கோடு சிறியது என்பது தான் கணக்கு..
அந்த வகையில் பார்த்தால் இப்போது கருணாநிதி தான் மிக பெரிய கோடாக இருக்கிறார் ( இந்திய அளவில்) அதனால் அவர் ஒழிகப்பட வேண்டியவர் என்பதில் மாற்று கருத்து இல்லை..
Quote
 
 
+1 #30 C.TAMILSELVAN 2011-02-10 22:50
i agree with Savukku saying that all are cutthroat politicians, who betrayed us during Eelam war 2009. they are going to suffer what they failed to do so for tamils in May 2009, the suffering and hardships faced by tamils will hit back these thugs soon.
Quote
 
 
+1 #29 manikandan 2011-02-10 21:33
corruption more earn more more is the theme of this government.
In 2009 Government has launched Dr.Kalaingar palli sirar kannoli kappum thittam motto of this scheme is for school going children primary health centres will eye test.if child got error in eye government will supply the spectacles per year the project cost is 7.5 crores. this scheme is not a tamilnadu government scheme.this is NRHM central government activated in all states like andhra, Karnataka, kerala to all the state.but scheme name Dr.kalaingar. more allegation arising from this scheme that people spectrum corruption know fast coming is spectacle corruption in all districts. with out Tender issuing selected one party they handed over all.one eye wash was happen in cuddalore district that one of my close friend submitted tender for this scheme. he has eligible criteria in all the aspects the rate also very low compare to the other company but still the tender was pending. he went to Right to information act 2005 Reply was still pending.Call to deputy director she saying that health minister district and health minister pleasure sir, after that we research was done in all district.
answer is:
something something something went to Health minsters house after all for getting money Why should we spoil our children's eye. Money we can earn But EYES we Can so THINK THINK THINK
Quote
 
 
0 #28 Kalyan 2011-02-10 20:04
மிக மிக அருமை
Quote
 
 
+2 #27 KK 2011-02-10 18:45
NDTV Reports Balwa bribed kickback reaching DMK doorsteps

New Delhi: The investigation into the 2G scam seems to be snaking its way to the front door of the DMK. The CBI is connecting the dots between former Telecom Minister A Raja and the companies he allegedly colluded with; the dotted line seems to suggest that the kickbacks paid to Mr Raja were routed into a TV channel owned by the first family of the DMK.

The CBI believes that a 200-crore cheque, which was a kickback in the 2G scam, was paid in 2009 to Kalaignar TV, owned by M Karunanidhi's family. His wife, MK Dayaluammal, owns 60 percent of Kalaignar TV; his daughter, Kanimozhi, owns another 20 percent.

The bribe was allegedly being paid by Shahid Balwa, a promoter of DB Realty and Swan Telecom, which was allegedly one of the two major beneficiaries of Mr Raja's spectrum largesse when he was minister. Swan Telecom was granted its license for a little over 1500 crores and sold stake to Etisalat, a Dubai-based firm for nearly 4,200 crores.


Read more at: http://www.ndtv.com/article/india/2g-scam-dotted-line-leading-to-dmks-first-family-84719?cp
Quote
 
 
+1 #26 thambi 2011-02-10 17:06
உண்மையான நேர்மையான அலசல்
Quote
 
 
-28 #25 மெய்விளம்பி 2011-02-10 16:13
கலைஞரை அவருடன் கூட்டணியில் இருக்கும் சிறுத்தைகளை, காங்கிரசை, பாமாகவை, அவருடன் இருக்கும் ias மற்றும் ips அதிகாரிகளை மற்றும் அவருடைய மந்திரிகளை மட்டுமே தொடர்ச்சியாக விமர்சிக்கும் இந்த தளம் நமது எம்ஜியார் பத்திரிகையின் இணையதளம் போலே உள்ளது வாசகர்களும் அதிமுக தொண்டர்களை போன்றே பின்னூட்டம் இடுகின்றனர்.உன் மீது அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுத்திருந்தால் இது முரசொலி இணையதளம் போலவே இருந்திருக்கும் .திமுகவினர் பின்னூட்டம் அதிகமாக இருந்திருக்கும் .இது மாதிரி பல பேரை பாத்துட்டோம் .ஆக்சிஜன் கிடைக்கல கொஞ்சம் நகருப்பா.
Quote
 
 
+13 #24 sakthy 2011-02-10 15:51
அன்பான உறவுகளே,எல்லாம் சரிதான்.கருத்துக்களை எழுதுகிறோம்.எல்லாவற்றையும் சவுக்கிடம் கொடுத்து விட்டு தூங்கி விட வேண்டாம்.நமது பங்குக்கு என்ன செய்யப் போகிறோம் என்பதையும் சிந்தியுங்கள். சவுக்கின் செய்திகள்,நம்மு டைய கருத்துக்கள் எல்லாவற்றையும் ஒன்றாக்கி உண்மைகளை மக்களிடம் முடிந்தவரை கொண்டு செல்வோம்.இணயத்தளங்கள்,ஊட கங்கள் மூலம் உண்மைகளை அறிய முடியாத மக்கள் தான் அதிகமாக உள்ளனர். இந்த அரசியல்வாதிகளின ் சுயநலங்கள் ,கருணாநிதி ஆட்சியில் நடந்த ஊளல்கள்,அராஜகங் கள் அனைத்தையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.காரணம் கருணாநிதியிடம் அகப்பட்டுக் கொண்ட ஊடகங்கள தான் அதிகமாக உள்ளன.அவை மக்களுக்கு உண்மையை தரப் போவதில்லை. நக்கீரனைப் போல் பணம்,பதவிக்கு விலை போனவர்கள்,அச்சத ்தினால் கையை கட்டிக் கொண்டவர்கள் இருக்கும் போது உண்மை மக்களுக்கு சென்று சேராது. எனவே நம் பங்கு முடிந்தவரை மக்களுக்கு உண்மையை கொண்டு செல்வது தான்.
Quote
 
 
0 #23 Shanthi 2011-02-10 15:30
Exactly, super, good article, lets hope some change...
Quote
 
 
+4 #22 KK 2011-02-10 15:11
KARUNANIDHI WILL BE JAILED SOON
NEW DELHI: Tamil Nadu Chief Minister M. Karunanidhi would be jailed soon for his involvement in the 2G spectrum scam, Janata Party president Subramanian Swamy said on Wednesday.

"Karunanidhi and Raja are equally involved in the telecom scam. We are starting a kind of revolution in Tamil Nadu demanding stringent punishment for the culprits and you will see the results soon," Swamy said during an interaction with Delhi University students.

The session, titled 'The significance of fighting against corruption', was organised by the Delhi University Students' Union (DUSU) and the NGO Sahbhag at the Faculty of Arts in the north campus.

The former union minister said DMK chief Karunanidhi and party MP Raja had got the backing of Congress president Sonia Gandhi and the money divided between the three.

"These are the big fish in the case and I have filed a case against Karunanidhi who would be in jail soon," said Swamy, adding that Prime Minister Manmohan Singh was a mute spectator.
Quote
 
 
-14 #21 Suri 2011-02-10 15:00
This is completely one side article. You are always writing against Karunanidhi. If you have perosnal problems with Karuna, you can resolve that outside. Dont give wrong imaginary conversation like JV and Reporter magazines. This kind of worng information will decrease ur credibility.
Quote
 
 
+2 #20 MDMK 2011-02-10 14:48
14. 7G முைறேகடு ெதாடர்பான 20 லட்சம் ேகாடி ஊழைல சி.பி.ஐ
விசா
Quote
 
 
+3 #19 MDMK 2011-02-10 14:46
4. தி.மு.க வில் உச்சகட்ட பனிப்ேபார். வடக்கு தமிழக துைண முதல்வர்
உதயநிதிக்கும், ெதற்கு தமிழக துைண முதல்வர் துைர தயாநிதிக்கும்
நடுேவ வி
Quote
 
 
+1 #18 MDMK 2011-02-10 14:46
2030 ல் தமிழகம் ஒரு சின்ன கற்பைன
1. காவி
Quote
 
 
0 #17 kalidas 2011-02-10 14:30
அருமை
Quote
 
 
+2 #16 காலவன் 2011-02-10 14:09
இந்த கொள்ளைக்காரன் போனதும் அந்த கொள்ளைக்காரி வரப்போகிறார்... இதில் நாம் என்ன செய்வது என்று சில யோசனைகளை சொல்லியிருக்கலா ம். சவுக்கு தேர்தல் நெருங்கிக்கொண்ட ிருக்கிறது. வீச்சை இன்னும் வேகப்படுத்துங்க ள். அந்த வீச்சு புதிய சிந்தனைகளயும்,ச ரியான அரசியல் மாற்றத்தையும் கொண்டுவரவேண்டும ்.
Quote
 
 
0 #15 மொக்கை முருகன் 2011-02-10 13:41
@KK, ஒரு நல்லவன கெடுக்காதே...
Quote
 
 
+1 #14 Bachan 2011-02-10 12:16
Please write "Read www.savukku.net" as your signature in your unofficial e-mail ID to promote this site !
Quote
 
 
0 #13 natarajan pn 2011-02-10 12:11
Excellent - perfect name
makkaley savvukkin padaippai padithu please purindhu kondu varum therthalil sindithu vakkaliyungal
Quote
 
 
+5 #12 Thiyagaraj 2011-02-10 11:48
Super recap.. i think you should try to be in active politics and this time seems to be very correct for you..
Quote
 
 
+9 #11 KK 2011-02-10 11:26
SAVUKKUS VOTE BANK
Savukku will hit 40 lakh hits by the election day. Out of which considering repeat vistors we can consider 4 lakshs is the total number of individuals following savukku. If each person can mobilize 25 votes in favor of the front as directed by savukku you are looking at 100 lakh votes. This is a very big vote bank.
So all those who are following savukku talk to your friends,relativ es and others to mobilize the opioons of Savukku.

Savukku needs to give clear decision on who to vote.
This one crore (100 lakh) votes is across the state.
So readers dont just read the blog for entertainment.
Look to Savukku's decision and mobilize the opinion.

I would be happy if Savukku can be joint opposition candidate in any one constituencey against DMK-Congress.
This will create awareness of Eelam issue as well as corruption and also get more votes
Please think over
Quote
 
 
+3 #10 கோவை பிரியன் 2011-02-10 11:15
மிக அருமையான பதிவு... பாராட்டுக்கள்
Quote
 
 
+1 #9 Rasigan 2011-02-10 11:09
:-) Miga miga sariya sonneer, Thiru. Savukku avarkale...Iru dravida katchigalum ore inam (rowdy)..chinna rowdies like marutthuvar, Captain, thiruma, Krishnaswamy, Karthik, etc and future rowdies (who knows??) like vijay, ajith, STR, dhanush, etc ellarum thevaikku etha madiri MK, JJ payanpaduthi..nam nattai kuttisuvar akkivittargal...Idanal naan virumbuvadhu ennavenral, Mr. Savukku madiri silariyum kalathil iraaki een sandithanam seyya koothdau? Neengal rowdy agalam, Mr. Savukku..Enga vote savukku-ku..
Quote
 
 
+12 #8 பிரபு 2011-02-10 11:08
/ஒருவரை ஒருவர் அழிப்பது என்று நடக்கும் போட்டியில், முள்வேளி முகாமுக்குள் இருக்கும் ஈழத் தமிழர்களை மறந்து போன இவர்கள் /


தங்கள் சுய நலனுக்காக ஈழ தமிழனை பலி கொடுத்த அரசியல் சதிகாரர்கள் அழிவார்கள், முள்வேலி முகாம்கள் உடையும், தமிழீழம் மலரும்.........
Quote
 
 
-8 #7 Kb 2011-02-10 10:59
Dear Savukku,

I've been reading ur article past few weeks. All r nice. But you always speak about the ruling party. I expected an article which is abt AIADMK chief JJ for not attending the recent state assembly meet. She told the simple reason that she is not feeling well. you wrote an article about Malathy I.A.S that she is not willing to come court so she made the reason as sick. But what do u say abt these kind of activity from the AIADMK chief. From ur article, ruling party members and officers are corrupted, so i dont vote for them. But what about the against chief behaviours. If i became a CM then i ll come to assemble otherwise i ll be simply sitting on my house, is it a really social worker do?
Now the question do whom do i need to vote?
Frm my point of view , the DMK is for most better than AIADMK. because of the AIADMK chief's behaviours. Remember she told LTTE is terrorist group.
Quote
 
 
+16 #6 அ.சந்தர் சிங். 2011-02-10 10:44
நினைத்தாலே புல்லரிக்கிறது சார்.நிஜமாகவே வரும் தேர்தல் இந்த கட்சிகள் அனைத்திற்குமே வாழ்வா சாவா என்ற நிலைதான்.எப்படியோ இந்த கிழவன் தோற்றால் சரி :cry: :D 8) :sad: :-x :zzz :roll: :sigh:
Quote
 
 
+3 #5 Nithi 2011-02-10 10:32
ENTHA URUPADATHA AYOKIAI ARASIAL VAATHIGA ERRUKUM VARAI, TAMILNADU EPPADI
URUPADUM.
Quote
 
 
+19 #4 வேலன் 2011-02-10 10:29
மிக அற்புதமான அலசல்..

உங்களுக்கு அரசியலில் மிகச்சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது ...

நடுநிலைமை என்பது நன்மைக்கும் தீமைக்கும் நடுவில் நிற்பதல்ல. தீமையை எதிர்த்து நிற்பது..

அதை சரியாக செய்யும் சவுக்கே நடுநிலையானவர்.
Quote
 
 
+7 #3 தமிழ் உதயன் 2011-02-10 10:17
உண்மையான நேர்மையான அலசல்.
Quote
 
 
+6 #2 பச்சைமாலு 2011-02-10 09:57
பா,ம,க/,, பாச,,மகனுக்கான, ,கட்சி... படும் பாடுதான் சுவாரஸ்யமாக இருக்குங்க,
Quote
 
 
+10 #1 KK 2011-02-10 08:38
Savukku
This is the time for you to give decisive message. If AIADMK loses then Tamilnadu will have DMK Congress Govt.
Do you want it?
There is no alternative to AIADMK front.But from day 1 you can monitor the Govt and prevent corruption.
So we as your followers need decisive message from you.
Please remember VAIKO Eelam supporter is in AIADMK front and is more likely to fight for them

WE WANT YOU TO UNDERSTAND you can't leave us confused. A decisive message is required
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 366 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday10084
mod_vvisit_counterYesterday14175
mod_vvisit_counterThis week66986
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month269718
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12791837