முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
போலி நீதிமன்றங்கள். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 29
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வெள்ளிக்கிழமை, 11 பிப்ரவரி 2011 07:48

இந்தியாவுக்கே மிகப் பெரும் அச்சுறுத்தல் என்று சொல்லப் படும் மாவோயிஸ்டுகளுக்கு, இந்தியாவில் தற்போதுள்ள ஜனநாயக அமைப்பின் மீது நம்பிக்கை இல்லை. இந்த ஜனநாகயகத்தை அவர்கள் போலி ஜனநாயகம் என்று அழைக்கிறார்கள்.

 

இந்த நீதிமன்றங்கள், பாராளுமன்றம், சட்டமன்றம் எதையும் அவர்கள் பத்து பைசாவிற்கு மதிப்பதில்லை.   எண்பதுகளில் நக்சலைட்டுகளின் கொள்கை, நீதிமன்றத்தில் வழக்குகளை கூட நடத்தக் கூடாது என்பது. ஆனால், பின்னாளில் ஏற்பட்ட சித்தாந்த ரீதியான மாறுதல்களால், நீதிமன்றங்களை மாவோயிஸ்டுகள் மற்றும் மக்கள் பிரச்சினைகளை எடுத்துக் கூறுவதற்கு பயன்படுத்தலாம் என்ற நிலைபாடு எடுக்கப் பட்டது.

 

அதன்படியே, காவல்துறையின் அராஜகங்களையும், போலி மோதல் படுகொலைகளையும், கண்டிப்பதற்கும், மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதற்கும் பயன்படுத்திக் கொண்டனர்.

 

ஆனால் மாவோயிஸ்டுகள் நீதிமன்றங்கள் மற்றும் மற்ற அமைப்புகளின் மீதான தங்கள் பார்வையில் தெளிவாகவே இருக்கிறார்கள். எப்போதாவது ஒரு முறை, ஒரு வி.ஆர்.கிருஷ்ணய்யர், ஒரு பகவதி, ஒரு ராஜேந்திர சச்சார், ஒரு ஏ.பி.ஷா போல விதிவிலக்கான மனிதர்கள் நீதிபதிகளாக இருக்கும் போது மட்டும் தான் நியாயம் கிடைக்கும் என்ற அவர்களின் பார்வை சரியானதே.

 

பிரபுவே, மை லார்ட், லார்ட்ஷிப் என்று நாம் அழைக்கும், இந்த நீதிபதிகள், வானத்திலிருந்து குதித்தவர்கள் அல்ல. அவர்களும் மனிதர்கள் தான். மனிதர்களில் அனைவருக்கும் இருக்கும் பலவீனங்கள் அனைத்தும் அவர்களுக்கும் உண்டு.

 

மிக மிக மோசமான பழக்கவழக்கங்கள் கொண்ட, முன்னாள் இந்நாள் நீதிபதிகளை சவுக்குக்கு தெரியும். அவர்களின் பழக்கவழக்கங்கள் சாதாரண மனிதராக இருந்தால், வெளி உலகக்கு தெரியும். ஆனால், இவர்கள் நீதிபதிகளாக இருப்பதால், வெளிச்சத்திற்கு வராமல், பல்வேறு விவகாரங்கள் இருட்டடிப்பு செய்யப் படுகின்றன.

 

நீதிபதிகளின் ஊழல்கள் பற்றி, ஊடகங்களுக்குத் தெரிந்தாலும், பெரிய அளவில், மனசாட்சி உள்ள வழக்கறிஞர்கள் அதை வெளிச்சம் போட்டுக் காட்டும் வரை, எந்த ஊடகமும் அந்த செய்தியை பிரசுரிக்க முன்வருவதில்லை. ஏனெனில், ‘நீதிமன்ற அவமதிப்பு‘ என்ற பூதத்தை வைத்து, இந்த நீதிபதிகள், தங்களின் அழுக்குகளை மறைப்பதற்கு கேடயமாக பயன்படுத்தி வருகிறார்கள்.

 

சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளில் சிலரின் நடவடிக்கைகளை கேட்டால் ஆச்சர்யப் படுவீர்கள்.

 

ஒரு அரசு அலுவலகத்தில் காலை பத்து மணிக்கு வர வேண்டும் என்று விதி உண்டு. அந்த விதியை மீறி தாமதமாக வந்தால், அந்த ஊழியரின் விடுப்பிலிருந்து கழிக்கப் படும்.

 

ஆனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு நீதிபதி, தினமும் காலை நல்ல நேரம் எப்போது துவங்குகிறதோ, அது பத்து மணியாக இருந்தாலும் சரி, பன்னிரண்டு மணியாக இருந்தாலும் சரி, அப்போதுதான் நீதிமன்றத்தில் அமர்வார்.   12 மணிக்கு நீதிமன்றத்தில் வந்து அமர்ந்து, உணவு இடைவேளை கூட விடாமல், தொடர்ந்து வழக்குகளை நடத்துவார்.   சர்க்கரை, அல்சர் போன்ற வியாதிகளால் பாதிக்கப் பட்டுள்ள வழக்கறிஞர்கள் கூட, மதிய நேரத்தில் இல்லாமல் போனால், வழக்கு தள்ளுபடி செய்ய வேண்டுமே, க்ளையன்டுகளுக்கு பதில் சொல்ல வேண்டுமே என்ற ஒரே காரணத்திற்காக பல்லைக் கடித்துக் கொண்டு நீதிமன்றத்திலேயே காத்துக் கிடக்கும் அவலம், அனுதினமும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

 

ஒரு அரசு ஊழியருக்கு பதவி உயர்வு சரி வர வழங்கவில்லை என்று அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால், பல்வேறு கேள்விகளை எழுப்பும் உயர் நீதிமன்றம், தன்னுடைய ஊழியர்களை எப்படி நடத்துகிறது என்று பார்த்தீர்களேயானால், கண்ணீர் வரும். இதைப் பற்றிய தனிக் கட்டுரை வரப்போகிறது என்பதால், இதற்கு மேல் இந்த விஷயத்தில் உட்புக விரும்பவில்லை.

 

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி, அரசு இயந்திரம், பாராளுமன்றம் மற்றும் நீதித்துறை மூன்று பிரிவுகளாக செயல்படுகிறது. இந்த அமைப்புகளில் ஒன்றின் அதிகாரத்தில் ஒன்று தலையிடாதபடி, கவனமாக அரசியல் அமைப்புச் சட்டம் அமைக்கப் பட்டிருந்தாலும், யதார்த்தத்தில் அனைத்தையும் கட்டுப் படுத்துவது அரசியல்வாதிகளே..

 

அந்த அரசியல்வாதிகளைக் கட்டுபடுத்துபவர்கள் ரத்தன் டாடா அம்பானி சகோதரர்கள் போன்ற தொழிலதிபர்கள். நுட்பமாக பார்த்தால், இந்தியாவின் அனைத்து முடிவுகளையும் எடுப்பவர்கள், இந்த தொழில் அதிபர்களே….

 

இந்தப் பின்னணியில் தான் இன்றைய நீதிமன்றங்களை பார்க்க வேண்டியிருக்கிறது.

 

ஜனநாயவாதிகளும், இந்த தேசத்தை பெரிதும் நேசிக்கும் மனித உரிமை ஆர்வலர்களும், இன்னும் இந்த நீதிமன்றங்களை நம்பித்தான் வழக்குகளை தொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

இந்த அடிப்படையிலேதான், தமிழக மக்கள் உரிமைக் கழகம் சார்பில் பல்வேறு வழக்குகள் தொடுக்கப் பட்டன. ஆனால், இந்த வழக்குகளைத் தொடர்ந்ததில் கிடைத்த அனுபவம் என்னவென்றால், இந்த நீதிமன்றங்கள் மக்களுக்கானது அல்ல என்பதே.

 

பல்வேறு வழக்குகளை உதாரணமாக சொல்ல முடியும்.   அண்ணா பல்கலைகழகத்தில் கவர்மென்ட் கோட்டா என்ற ஒன்றை வைத்து கொண்டு, முதலமைச்சர் கடிதத்தை பெற்று, படிக்காத தறுதலை பிள்ளைகளுக்கு இடம் பெறுவதை ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் ஒரு வழக்கமாகவே வைத்துக் கொண்டிருந்தனர். இவ்வாறு தங்கள் பிள்ளைகளுக்கு இடம் பெற்ற அதிகாரிகள் இருவர். ஒருவர், ராதாகிருஷ்ணன் என்ற பிச்சை நாயுடு. மற்றொருவர் நரேந்திர பால் சிங் என்ற கூடுதல் டிஜிபி. இருவரும், லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றுகின்றனர். அப்போது, செல்வி.ஜெயலலிதா மற்றும், அவரது அமைச்சரவை சகாக்கள் மீதான வழக்குகளில் சிலவற்றை இந்த இரு அதிகாரிகளும் ஊத்தி மூடுகின்றனர். வழக்குகளை ஊத்தி மூடி விட்டு, தங்கள் மக்குப் பிள்ளைகளுக்கு ஜெயலலிதா கையால் அண்ணா பல்கலை கழகத்தில் சீட் பெறுகின்றனர்.   இது லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் படி குற்றம். இதற்கு, பேராசிரியர் கல்யாணி என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தொடுக்கிறார். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி, அவர் தொடர்ந்த பொது நல வழக்கு விசாரணைக்கு வந்தது.   பல்வேறு ஆதாரங்களையும், பேராசிரியர் கல்யாணி கொடுத்த புகாரை விசாரிக்காதே என்று, லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநருக்கு முன்னாள் தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி உத்தரவிட்ட ஒலி நாடாவோடும் வாதிடப் பட்டது.

 

இந்த வழக்கு தள்ளுபடி செய்யப் பட்டது.

 

தமிழில் திரைப்படத்திற்கு பெயர் வைத்தால், முழுமையான வரி விலக்கு என்று தமிழக அரசு உத்தரவு போட்டது. அந்த உத்தரவின் அடிப்படையில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு என்ற ஆதாரங்களை திரட்டி, இது போல தமிழில் பெயர் வைத்தால் அதனால் மொழி வளர்ந்து விடாது, மாறாக அரசுக்கு வரி இழப்புதான் ஏற்படுகிறது என்று ஒரு பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அதுவும் தள்ளுபடி செய்யப் பட்டது.

 

முதலமைச்சருக்கு வண்டி தள்ளிக் கொண்டு போன ஒரே காரணத்திற்காக ‘ட்ராலி பாய்ஸ்‘ மூன்று பேருக்கும், தலா இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டு மனைகளை கர்ண பிரபு கருணாநிதி வழங்கினார். இந்த மூன்று பேரும் சாதாரண இன்ஸ்பெக்டர்கள். இந்த இன்ஸ்பெக்டர்களின் மாத வருமானம், சராசரியாக 20,000 ஆயிரம் என்று வைத்துக் கொள்வோம். அரசு நிர்ணயித்த விலையான 1.25 கோடியை இந்த ட்ராலி பாய்ஸ் எப்படி ஒரே நாளில் அரசுக்கு கட்டினார்கள் ? இவர்கள் லஞ்சம் பெற்று வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார்கள் என்று, ஒருவர் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் கொடுக்கிறார்.

 

அந்தப் புகாரின் மீது உண்மை விளம்பி ராமானுஜம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காக தொடுக்கப் படுகிறது. இந்தப் புகாரை விசாரித்தது ஜாபர் சேட் தலைமையிலான உளவுத் துறை.   உளவுத் துறை விசாரித்து சமர்ப்பித்த இந்த அறிக்கையை சரியானது என்று ஏற்றுக் கொண்டு இந்த வழக்கையும் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.

 

நீலாங்கரை இரட்டைக் கொலை வழக்கில் குற்றவாளி என்று சந்தேகிக்கப் பட்ட நபர் காவல்துறையின் கட்டுப் பாட்டில் அடித்துக் கொல்லப் படுகிறார். இதற்காக தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பில், இரண்டு பொது நல வழக்குகள் தாக்கல் செய்யப் படுகின்றன. ஆர்டிஓ விசாரணை நடைபெறுகிறது என்று அரசு தெரிவித்த கருத்தை ஏற்று, வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.

 

இது போல, நீதிமன்றத்தை சரி செய்து விடலாம், அரசு வழக்கறிஞர் சொல்லுவதற்கெல்லாம், நீதிபதிகள் ஆமாம் சாமி போடுவார்கள் என்ற இறுமாப்பு தானே, காக்கி உடை அணிந்த கொலைகாரர்களை மேலும் பல்வேறு கொலைகளிலும், மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட வைக்கிறது ? அந்த சண்முக சுந்தரத்தை காவல் நிலையத்தில் வைத்து அடித்துக் கொன்ற அந்த அதிகாரிகளுக்கு என்ன தண்டனை ?   அந்த சண்முகசுந்தரத்தின் மனைவிக்கு என்ன நீதியை வழங்கியது இந்த நீதிமன்றம் ?

 

இதை விட வேடிக்கையான ஒரு வழக்கு இருக்கிறது. உச்ச நீதிமன்றம் டி.கே.பாசு என்ற வழக்கில் ஒரு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பை வழங்குகிறது. அத்தீர்ப்பில் தான், காவல்துறையினர் ஒருவரை கைது செய்யும் போது, என்னென்ன நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று வரையறை செய்யப் படுகின்றது. சம்பந்தப் பட்டவரின் உறவினர் அல்லது நண்பருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், கைது செய்ய வருபவர்கள் தெளிவாக தங்களை அடையாளப் படுத்த வேண்டும், மருத்தவ பரிசோதனை செய்ய வேண்டும் என்று 12 கட்டளைகளை உச்ச நீதிமன்றம் வகுக்கிறது. வகுத்து விட்டு, இந்த 12 கட்டளைகளும், இந்தியாவில் உள்ள அனைத்து காவல்நிலையங்களிலும், அனைவரும் பார்க்கும் வகையில் பலகையில் வைக்க வேண்டும். அவ்வாறு வைக்கத் தவறினால், அது நீதிமன்ற அவமதிப்பு வழக்காக கருதப் படும். இதற்கான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்றத்தில் தொடுக்க வேண்டியதில்லை. அந்தந்த மாநில உயர்நீதிமன்றத்திலேயே வழக்கு தொடரலாம் என்று அந்தத்தீர்ப்பில் உத்தரவிடப் பட்டிருந்தது.

 

இதற்காகவும் ஒரு வழக்கு தொடரப்பட்டது.

 

தமிழகத்தின் எந்தக் காவல்நிலையத்திலாவது இது போன்ற அறிவிப்பு பலகைகளை நீங்கள் பார்த்தது உண்டா ? எங்கேயும் இருக்காது. இதில் என்ன கோரிக்கை கேட்கப் பட்டது என்றால், ஒரே ஒரு கோரிக்கை தான்.   “உச்ச நீதிமன்ற கட்டளைப் படி டி.கே.பாசுவின் வழக்கில் கூறிய கட்டளைகளை அனைத்து காவல்நிலையங்களிலும், உடனடியாக வைக்க உத்தரவிட வேண்டும்.”   ஒரு சரியான நீதிபதி என்ன செய்திருக்க வேண்டும் தெரியுமா ?

 

உடனடியாக அரசுக்கு, அனைத்து காவல்நிலையங்களிலும், இந்த அறிவிப்பு பலகைகளை வைத்து விட்டு, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யுங்கள் என்று உத்தரவிட்டிருக்க வேண்டும்.

 

டிசம்பர் 2009ல் இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியது. என்ன தீர்ப்பு என்றால், அரசு விரைவாக காவல்நிலையங்களில் இந்த அறிவிப்பு பலகைகளை வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான்.

 

தீர்ப்பு வழங்கப் பட்டு ஒரு ஆண்டுக்கு மேல் ஆகி விட்டதா ? காவல்நிலையங்களில் அறிவிப்பு பலகைகள் வைக்கப் பட்டுள்ளதா என்பதை நீங்களே கூறுங்கள்.

 

இதுதான் நீதிமன்றங்களின் லட்சணம். நியாயப் படி, உச்சநீதிமன்றத்தில் வழிகாட்டுதல்களை பின்பற்றவில்லை என்று, நீதிமன்றமே தானாக முன்வந்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.   ஒருவன் வழக்கு தொடுக்கிறானே… அப்போதாவது இதில் உத்தரவு போடலாம் என்றால்……. வெட்கம் வெட்கம்.

 

இது போல பல்வேறு வழக்குகளை உதாரணத்திற்கு சொல்லிக் கொண்டே போகலாம். அதற்காக பொது நலன் என்ற பெயரில் தொடரப்படும் அனைத்து வழக்குகளிலும் உத்தரவிட வேண்டுமென்று சொல்லவில்லை. ஒரு வழக்கில் நியாயம் இருக்கிறதா என்று பார்ப்பது நீதிமன்றத்தின் கடமையா இல்லையா ?

 

எந்தவித உள்நோக்கமும் இல்லாமல், ஒருவர் ஒரு ஊழலை வெளிக் கொணர வேண்டும் என்பதற்காகவோ, ஒரு மனித உரிமை மீறலை வெளிச்சம் போட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக ஒருவர் தொடுக்கும் வழக்கை, சொத்தைக் காரணங்களுக்காக ஒரு நீதிமன்றம் தள்ளுபடி செய்தால், பிறகு நீதிமன்றத்தின் மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை இருக்கும் ?

 

டாக்டர்.பினாயக் சென் வழக்கையே எடுத்துக் கொள்ளுங்கள்.   இரண்டு காவலர்கள் பேசியதையும், மொட்டைக் கடுதாசியையும் ஆதாரமாக வைத்து கொண்டு அவருக்கு ஆயுள் தண்டனை ஒரு நீதிமன்றம் வழங்குகிறது. மற்ற பல்வேறு நீதிமன்றங்கள், லஞ்ச ஒழிப்புத் துறை விசாரித்து குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்த பல்வேறு வழக்குகளில் திமுக அமைச்சர்களை விடுவிப்பு செய்கிறது.

 

இந்த நீதிபதிகளின் தவறுகளை சுட்டிக் காட்ட, ஒரு அமைப்போ, மேற்பார்வை செய்ய வெளிப்படையான கட்டமைப்பு வசதிகளோ இல்லாத நிலையில் இந்த நீதிபதிகள் தங்களை கடவுள்களாக கருதிக் கொண்டு, என்ன செய்தாலும், இஷ்டத்துக்கு நியாயத்துக்கு புறம்பாக தீர்ப்பளித்தாலும், நம்மை யாரும் எந்தக் கேள்வியும் கேட்க முடியாது என்ற எண்ணத்திலேயே பல நீதிபதிகள் செயல்பட்டு வருகிறார்கள்.

 

சமீபத்தில் நடந்த வழக்கும், அதன் தீர்ப்புமே இந்தக் கட்டுரை எழுதப்படுவதற்கான பிரதான காரணம்.

 

போலிப் பாதிரி, ஜெகத் கஸ்பர் அலுவலகத்தில், 2ஜி ஊழலில் தொடர்பிருக்கிறது என்று சந்தேகப் பட்டு சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

 

இதையடுத்து, சென்னை சங்கமம் என்ற விழா நடைபெறும் என்று வழக்கம் போல, அறிவிப்பை கஸ்பரின் தமிழ் மையம் வெளியிடுகிறது.   இந்தியாவையே உலுக்கிய ஒரு மெகா ஊழலில் தொடர்புடைய ஒரு நபர், மக்கள் வரிப்பணத்தில் நடக்கும் ஒரு விழாவை, சிபிஐ ஆல் சந்தேகப் பட்டு சோதனைக்குள்ளான ஒரு நபர் நடத்துவதும், அதற்கு அரசு ஆதரவு தருவதும் எந்த வகையில் சரியான நடவடிக்கையாக இருக்கும் ?

 

இதை எதிர்த்து, தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்யப் படுகிறது. அந்த வழக்கில் ஒரே ஒரு கோரிக்கை.

 

ஜெகத் கஸ்பரின் தமிழ் மையம் அரசு நடத்தும் விழாவோடு சம்பந்தப் படக் கூடாது என்பது மட்டும் தான்.

 

ஜெகத் கஸ்பரோடு தமிழக மக்கள் உரிமைக் கழகத்திற்கு என்ன சொத்துத் தகராறா ?   ஊழலில் சம்பந்தப் பட்டவர்களுக்கு அரசு அங்கீகாரம் அளிக்கக் கூடாது என்ற ஒரே காரணம் தானே ?

 

இந்த மனு சென்னை சங்கமம் தொடங்குவதற்கு முன்னதாகவே விசாரணைக்கு வந்தது.   இந்த மனுவிற்கு பதில் மனு, தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பாக பதில் மனு தாக்கல் செய்யப் பட்டது.

 

அந்த மனுவில், “சென்னை சங்கமத்தை நடத்துவதே, தமிழக அரசு தான். தமிழ் மையத்தின் பணி, சென்னை சங்கமத்திற்கு, தேவையான கலைஞர்களை வழங்குவது மட்டும் தான்.   தமிழ் மையத்தோடு எவ்வித பணப்பரிமாற்றமும் கிடையாது.   கலைஞர்களுக்கு வழங்கப் பட வேண்டிய தொகையை கூட, அரசே நேரடியாக வழங்கும்.   இது தொடர்பான விளம்பரங்களைக் கூட அரசே செய்யும். தமிழ் மையத்திற்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது” என்று பதில் மனு தாக்கல் செய்யப் பட்டது.

 

இந்த பதில் மனுவை அப்படியே தங்களது தீர்ப்பில் பதிவு செய்த, சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிபகள் முகம்மது இக்பால் மற்றும், சிவஞானம் இது தொடர்பாக ஒரு தீர்ப்பை வழங்கினார்கள். அந்தத் தீர்ப்பில், அரசின் உறுதி மொழி அப்படியே பதிவு செய்யப் பட்டு, அரசு இவ்வாறு தெரிவித்திருப்பதாலும், விளம்பரங்களை அரசே தரும் என்பதாலும், தமிழ் மையத்திற்கு கலைஞர்களை வழங்குவது மட்டுமே பொறுப்பு என்று தெரிவித்திருப்பதாலும், தமிழ் மையம் தொடர்ந்து சென்னை சங்கமத்தை நடத்தலாம் என்று ஒரு தீர்ப்பை வழங்கியது.

 

இந்தத் தீர்ப்பை தொடர்ந்து சென்னை சங்கமம் நடைபெற்றது.   சென்னை சங்கமம் தொடர்பான விளம்பரங்கள் சென்னை நகரம் முழுவதும் செய்யப் பட்டன.  இந்த விளம்பரங்களில், தமிழ் மையத்தின் பெயர் இடம் பெற்றுள்ளது என்றும், அரசு லோகோ இடம் பெற்றுள்ளது என்றும் சவுக்குக்கும், தமிழக மக்கள் உரிமைக் கழகத்துக்கும் பல்வேறு அழைப்புகள்.

 

சவுக்கும், மற்ற தோழர்களும், இந்த விளம்பரங்களில் பெரும்பாலானவற்றை புகைப்படம் எடுத்தும், இது தொடர்பான ஆதாரங்களையும் சேகரித்து வந்தனர்.

 

விழா தொடங்கிய சில நாட்களில், தமிழ் மையத்திற்கும், அரசுக்கும் ஒரு நோட்டீஸ் அனுப்பப் பட்டது. அந்த நோட்டீஸில், நீதிமன்றத் தீர்ப்பை மீறி, சென்னை சங்கமம் தொடர்பான அனைத்து விளம்பரங்களிலும், பேருந்துகளிலும், தமிழ் மையத்தின் பெயர் இடம் பெற்றுள்ளது.   இது நீதிமன்றத் தீர்ப்பை மீறிய செயலாகும் என்றும், அதன் மூலம் நீதிமன்ற அவமதிப்பு குற்றத்தை செய்திருக்கிறீர்கள் என்று அனுப்பப் பட்டது.

 

அடுத்து தமிழ் மையத்திற்கு ஒரு நோட்டீஸ் அனுப்பப் பட்டது. அந்த நோட்டீஸில், சென்னை நீதிமன்றம் தனது தீர்ப்பில் உங்களை கலைஞர்களை வழங்குவது மட்டும் தான் சென்னை சங்கமம் தொடர்பான உங்களது பணி என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால், பத்திரிக்கைகளில் வெளியான செய்திகளின் படி, நீங்கள் 2000 நிறுவனங்கள் மற்றும் நபர்களிடமிருந்து சென்னை சங்கமத்திற்காக நன்கொடை கேட்டிருக்கிறீர்கள் என்று அறிகிறோம். இது நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானதாகும். அவ்வாறு ஏதாவது வசூல் செய்திருந்தால், உடனடியாக அத்தொகையை திருப்பி அளியுங்கள்.   இனி மேற்கொண்டு வசூல் செய்யாதீர்கள் என்று.

 

அதற்கு போலிப் பாதிரி, பதில் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதில் என்ன கூறியிருந்தார் தெரியுமா ?

 

வசூல் செய்யாதீர்கள் என்று சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை. நாங்கள் வசூல் செய்வோம்.   சென்னை சங்கமம் நடத்துவதற்கு அரசு கொடுத்த தொகை போதுமானதாக இல்லை. அதனால் வசூல் செய்கிறோம் என்று.

 

இந்த இடத்தில் அரசு நீதிமன்றத்திற்கு அளித்த உறுதி மொழியை மீண்டும் படியுங்கள்.

 

இந்த பதில் நோட்டீசையும், சென்னை சங்கமத்தில் எடுத்த புகைப்படங்களையும் வைத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப் பட்டது.

 

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, அரசு சார்பாக பதில் மனு தாக்கல் செய்த, சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குநருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.   அனுப்பி கடந்த செவ்வாயன்று இவ்வழக்கை இரண்டாவது விசாரணைக்கு ஒத்தி வைத்தது.

 

அன்று வாதத்தின் போது, தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பாக ஆஜரான ராதாகிருஷ்ணன், இந்த வழக்கு சாதாரண வழக்கல்ல.   நீதிமன்றத்தின் மேன்மையை கேள்விக் குள்ளாக்கியுள்ள ஒரு வழக்கு.   ஒரு நீதிமன்றத்தின் உத்தரவை அரசு எப்படி மதிக்காமல் நடந்திருக்கிறது என்பது தொடர்பான வழக்கு என்று தனது வாதத்தை தொடங்கினார்.

 

அப்போது குறுக்கிட்ட, தலைமை நீதிபதி இக்பால், நீதிமன்றத்தின் மாண்பை காப்பதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், நீங்கள் உங்கள் வாதத்தை மட்டும் கூறுங்கள் என்று கூறினார். உடனே, ராதாகிருஷ்ணன், நீதிமன்றத்தின் மாண்பை காப்பது, நீதிமன்றத்துக்கு மட்டுமான பொறுப்பு அல்ல. அது மக்களின் கடமை. அதனால், எனக்கும் கூடுதல் பொறுப்பு இருக்கிறது, என்று கூறினார். தமிழக அரசு சென்னை சங்கமம் தனது விழா என்கிறது.   ஆனால், தமிழ் மையம் தனது இணைய தளத்தில் சென்னை சங்கமம் தங்களது விழா என்று காப்புரிமை உள்ளது என்று தகவல் வெளியிட்டிருக்கிறது.   இப்படி முரண்பாடான நிலைகளை எடுத்து, நீதிமன்றத்தை வேண்டுமென்றே ஏமாற்றுகிறார்கள் என்றார்.

 

முதல் முறை பொது நல வழக்கு விசாரணைக்கு வந்த போது, அரசு தாக்கல் செய்த பதில் மனுவையும், நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு தாக்கல் செய்த பதில் மனுவையும் ஒப்பிட்டுக் கூறிய ராதாகிருஷ்ணன், எப்படி முன்னுக்குப் பின் முரணான பதில் மனுவை அரசு தாக்கல் செய்திருக்கிறது என்பதை கூறினார்.   முதலில் தமிழ் மையத்திற்கு, சென்னை சங்கமத்திற்கான கலைஞர்களை வழங்குவது மட்டுமே பொறுப்பு என்று கூறிய அரசு, அவ்விழாவிற்கான அழைப்பிதழில் தமிழ் மையம் நடத்தும் சென்னை சங்கமம் என்று குறிப்பிட்டுள்ளார்கள் என்பதை சுட்டிக் காட்டினார்.

 

விளம்பரங்களில் எவ்வாறு, அரசு லோகோ பயன்படுத்தப் பட்டுள்ளது என்றும், நீதிமன்றத்தின் தீர்ப்பு எப்படி அரசால் திட்டமிட்டு காற்றில் பறக்க விடப் பட்டுள்ளது என்றும் கூறினார்.

 

விரைவில், திமுகவின் நீதித் துறைப் பிரிவில் சேர இருக்கும் கூடுதல் அட்வக்கேட் ஜெனரல், வில்சன் இந்த வழக்கில் ஆஜரானார்.   கிறித்துமஸ் தினத்தன்று, கருணாநிதியை சந்தித்து கூழைக் கும்பிடு போட்டவர் இல்லையா ? கருணாநிதியின் மகள் சம்பந்தப் பட்ட வழக்கல்லவா ? துடித்து விட மாட்டாரா ? இதே வில்சன் தான், கோவிந்தராஜன் கமிட்டியின் பரிந்துரைகள் நீதிமன்றத்தால் தடை செய்யப் பட்ட போது, அரசு சார்பில் ஆஜரானவர்.   திறம்பட வாதாடி, கோவிந்தராஜன் கமிட்டியின் பரிந்துரைக்கு நீதிமன்றம் தடை விதிக்க உதவி செய்தவர்.

 

இந்த வில்சன் தான் இவ்வழக்கில் அரசு சார்பாக ஆஜரானார். ஆஜராகி, அரசு அளித்த விளம்பரங்களில், தமிழ்மையத்தின் பெயர் இடம் பெறவில்லை என்றும், மனுதாரர் தவறாக புரிந்து கொண்டிருக்கிறார் என்றும் கூறினார்.   நாங்க தவறா புரிஞ்சுக்கிட்டோமாம்…..

 

இதையடுத்து இவ்வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்த சென்னை உயர்நீதிமன்றம், நேற்று இவ்வழக்கில் தீர்ப்பளித்தது.   நீதிமன்ற அவமதிப்புக் குற்றச் சாட்டை அரசோ, தமிழ் மையமோ புரியவில்லை என்பதால் வழக்கை தள்ளுபடி செய்கிறோம் என்று தீர்ப்பளிக்கப் பட்டது.

 

தமிழகத்தில் உள்ள கருணாநிதி தலைமையிலான கொள்ளைக் கூட்டத்தின் மகளிர் பிரிவு தலைவர் கனிமொழி நடத்தும் இந்த கூத்தை பாதுகாப்பதற்காக நடைபெற்ற இந்த நாடகத்தில் அனைவருமே திறம்பட நடித்தார்கள்.

 

ஜெகத் கஸ்பர் என்ற நபர் யார் ? ஒரு போலிப் பாதிரி.   விடுதலைப் புலிகளின் பெயரைச் சொல்லி உலகத்தமிழரை ஏமாற்றியவன்.   ஈழப் போர் உச்சக் கட்டத்தில் இருந்த போது, தமிழகத்தில் அதன் வீச்சு எழாமல் இருப்பதற்காக, இந்திய வெளிநாட்டு உளவு நிறுவனமான ‘ரா’ விடம் பணம் பெற்றுக் கொண்டு, அந்தப் போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்தவன்.   இன்றும் ரா வின் ஏஜென்டாக தமிழ்நாட்டில் செயல்பட்டு வருபவன். கருணாநிதி குடும்பத்தின் பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்யும் ஹவாலா ஏஜென்ட்.   சென்னைப் பல்கலைக் கழக தமிழ்த் துறை மாணவர்களின் உழைப்பை உறிஞ்சி அதன் மூலம் பணம் பார்க்கும் ஒட்டுண்ணி.   ஒட்டு மொத்தத்தில், ஒரு சமூக விரோதி.

 

இப்படிப் பட்ட சமூக விரோதியின் சட்டவிரோதமான காரியங்களுக்கு, ஒரு நீதிமன்றம் துணை போகிறதென்றால், அதற்கான அவமானம் வழக்கு தொடர்ந்த எங்களுக்கல்ல… நீதிமன்றங்களுக்கே…. நீதிபதிகள், மிகத் திறமையாக இந்த வழக்குகளை தள்ளுபடி செய்து விடலாம். ஆனால், மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.   மக்களிடம் இந்த நீதிபதிகள் தங்களின் இழந்த மாண்பை என்றுமே மீட்டெடுக்க முடியாது.

 

வி.ஆர்.கிருஷ்ணய்யர் என்ற ஒரு நீதிபதி, ஒரு அறிக்கை எழுதி வெளியிட்டால், இந்தியாவே அதைப் படிக்கிறது.   அவர் என்ன உலகப் புகழ் பெற்ற எழுத்தாளரா ?   இல்லை. இந்தியாவே அவர் அறிக்கையை படிப்பதற்கு ஒரே காரணம்….. அவரது நேர்மை… மக்களின் மீதான அவரது காதல். இறுதி வரை நேர்மை வழுவாமல் இருந்தது.

 

ஆனால் இன்றைய நீதிமன்றங்கள்….. ??????? !!!!!!! இவை போலி நீதிமன்றங்களா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.

 

 

Comments  

 
0 #47 surya 007 2011-02-23 18:04
neethimantrathi l sila judges work panra lady staff ah misuse panranga. its true. my frd working in high court.
he told to me
Quote
 
 
0 #46 TRENGA 2011-02-13 02:58
சவுக்கு அவர்களே உங்கள் கோபம் சரியானதே!இந்த போலி ஜனநாயகம் நிச்சயம் ஒழிந்து போகும் .பொது வாழ்க்கையில் உங்களின் உழைப்பு வீண் போகாது ,நீங்கள் தான் ஒரு நல்ல குடிமகன் ,உங்களின் கருத்துக்களை என்றைக்கு கடைகோடியில் உள்ள தமிழனும் படிக்கிறானோ அன்று இந்த போலி ஜனநாயகம் முடிந்து போகும் .

thank you
Quote
 
 
+1 #45 Bachan 2011-02-12 23:22
Quoting சாகுல் அமீது:
Quoting கோபி:
49-O வசதியை ஓட்டு இயந்திரத்தில் கட்டாயமாக்குமாற ு தேர்தல் ஆணையத்திடம் உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தை அனுகினால், உச்ச நீதிமன்றம் வழக்கை ஏற்றுக்கொள்ளுமா ? நியாயமான தீர்ப்பு கிடைக்குமா ?


நமது தேர்தல் முறையின் படி 49 ஓ உபயோகம் குறைந்தது.
உதாரணத்திற்கு ஒரு தொகுதியில் இரு திருடர்கள் போட்டி இடுகிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங ்கள். தொகுதியில் 90 சதவிகித மக்கள் 49 ஓ பயன்படுத்தினாலு ம் மீதி பதிவான ஒரு சில வாக்குகளில் எந்த திருடன் அதிக வாக்கு பெற்றானோ அவன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவா ன்.


அப்படியாவது திருடர்கள் பயப்பட மாட்டார்களா ?
Quote
 
 
0 #44 jai 2011-02-12 12:16
பஞ்சமன் அவர்களே, உங்கள மாதிரி ஆள் இருக்குற நால தான் "திருடர் குல திலகம்" தமிழகத்தில் ராஜா போல் வாழ்கிறார் Quoting PANCHAMAN:
புடிக்காதவன் மேல எல்லாம் கேசை போட்டு கோர்டுக்கு இழுத்து, அவன் எதுசெய்தாலும் ஒரு ஸ்டே வாங்கி, கண்டிப்பாக நீ கோர்டுக்கு வரவேண்டியிருக்க ும்ன்னு மிரட்டி, கோர்ட்டு என்னமோ சவுக்கு சொல்லறதை மட்டுமே கேக்கும் என்பது மாதிரியாக பில்டப் கொடுப்பதை பார்த்தால் அடுத்த சு.சாமி சவுக்குதான் போல் இருக்கு.............ஒரு சூனா சாமி போதுமப்பா.
Quote
 
 
+5 #43 சாகுல் அமீது 2011-02-12 02:14
Quoting கோபி:
49-O வசதியை ஓட்டு இயந்திரத்தில் கட்டாயமாக்குமாற ு தேர்தல் ஆணையத்திடம் உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தை அனுகினால், உச்ச நீதிமன்றம் வழக்கை ஏற்றுக்கொள்ளுமா ? நியாயமான தீர்ப்பு கிடைக்குமா ?


நமது தேர்தல் முறையின் படி 49 ஓ உபயோகம் குறைந்தது.
உதாரணத்திற்கு ஒரு தொகுதியில் இரு திருடர்கள் போட்டி இடுகிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங ்கள். தொகுதியில் 90 சதவிகித மக்கள் 49 ஓ பயன்படுத்தினாலு ம் மீதி பதிவான ஒரு சில வாக்குகளில் எந்த திருடன் அதிக வாக்கு பெற்றானோ அவன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவா ன்.
Quote
 
 
+10 #42 காலவன் 2011-02-11 23:25
சட்டத்துறைகளில் விபரம் கொண்ட உங்களுக்கே இப்படியான அநீதி என்றால்.. மிக எளிய மக்களின் நிலைமையை யோசித்து பாருங்கள். எளிய மனிதர்கள் தீவிரவாத சிந்தனைக்கு உள்ளாவதன் முக்கிய காரணமே.. இப்படியான சமுகநெருக்கடிகள ்தான். நீதித்துறையும் அவனை கைவிட்டதெனில் தற்கொலையும் இன்னபிற சட்ட ஒழுங்கும் அதிகரிக்கும்.. ஏனெனில் இங்கு கிளர்ச்சி ஏற்படவும் வாய்ப்பில்லை. முக்கிய காரணம் மொழி இந்தியர்களின் அடிப்படை சொரணைகளை கூறுப்போட்டு வைத்திருக்கிறது . இந்த அரசியல் பன்னாடைகளுக்கு மேற்கண்ட விஷயம் உரைக்காவிட்டால் மிக மோசமான விளைவுகள் அவர்களுக்கே ஏற்படக்கூடிய சாத்தியம் நிறைய வாய்ப்பு உள்ளது.
Quote
 
 
0 #41 raj2123 2011-02-11 21:14
மெடிக்கல் சீட் வாங்கித் தருகிறேன், வெளிநாட்டிற்கு அனுப்புகிறேன்' எனக் கூறி, லட்சக்கணக்கில் மோசடி செய்த போது காப்பாற்றியது நான் தானே, அந்த நன்றி விசுவாசம் கூட இல்லையே. இவர் முன்பு தலைவராக இருந்த போது, நான்கு பேர் புகுந்து கட்சியினரை அடித்து உதைத்தனர்; அந்தளவில் தான் இவர் கட்சியை வளர்த்து இருந்தார். பிரிந்து இருந்தவர்களை எல்லாம் ஒருங்கிணைத்து நான் கட்சியை வளர்த்தேன். இவர் கட்சிக்காக என்ன செய்துள்ளார்?
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=185248
Quote
 
 
+5 #40 sella 2011-02-11 21:10
இதுவரை மத்திய அரசாங்கத்தின் கைக்கூலியாக இருந்த மத்திய புலனாய்வுத்துறை எப்படி இப்போது மட்டும் நேர்மையாகவும் வேகமாகவும் செயல்பட முடியும். இதில் எதோ உள்நோக்கம் இருப்பதாகவே தெரிகிறது. உச்ச நீதிமன்றம் வேறு எவரும் வழக்கு தொடுக்க கூடாது என்பதின் மர்மம் என்ன? எனக்கு புரிந்தவரை மத்திய புலனாய்வுத்துறை தவிர வேறு எவரும் தலைஇடாமல் நீதிமன்றம் கட்டுப்படுத்தி தன் போக்கில் இழுத்து செல்ல நினைக்கிறது. மத்திய அரசாங்கம் மத்திய புலனாய்வுத்துறை யை தன் வசம் வைத்து நீதித்துறையை வளைக்கப்போகிறது . திமுக-காங்கிரஸ் கூட்டணி முடிவாகும் வரை இந்த வேகம் இருக்கும். அதன் பிறகு இந்த கட்டுரையின் தலைப்பு மிக பொருந்தும்.
Quote
 
 
+10 #39 நம்பிக்கை வையுங்கள் 2011-02-11 19:53
சவுக்கு அவர்களே உங்கள் கோபம் சரியானதே!இந்த போலி ஜனநாயகம் நிச்சயம் ஒழிந்து போகும் .பொது வாழ்க்கையில் உங்களின் உழைப்பு வீண் போகாது ,நீங்கள் தான் ஒரு நல்ல குடிமகன் ,உங்களின் கருத்துக்களை என்றைக்கு கடைகோடியில் உள்ள தமிழனும் படிக்கிறானோ அன்று இந்த போலி ஜனநாயகம் முடிந்து போகும் .
Quote
 
 
+5 #38 jai 2011-02-11 19:25
நம் தலைமை நீதிபதி கோபாலபுரத்தில் உள்ளார்... அவரது கால்களை பிடித்து தான் நீதி பிழைக்கிறது ..... அறிஞர் அன்ன இருந்தால் அவளோ தான் ...
Quote
 
 
0 #37 anbu 2011-02-11 19:07
அன்புள்ள சவுக்கு,
போலி நீதிமன்றங்கள் கட்டுரை மிகவும் அருமையாக உள்ளது..உயர்நீதிமன்றங்க ளில் நீதிபதியாக நியமிக்கப்படுவர ்கள், அந்தந்த காலகட்டத்தில் உள்ள ஆட்சியாளர்களுக் கு ஜால்ரா போடு வழக்கறிஞர்களை பரிந்துரை செய்யப்படுகிறார ்கள். .அதனால் அவர்கள் அந்த ஆட்சிக்கு விசுவாசமாக இருக்கிறார்கள், தவிர மக்களை மறந்துவிட்டார்க ள்..தலைமை நீதிபதியாக வருபவர்கள் தங்கள் குடியிருப்புக்க ு மட்டும் சுமார் 10 இலட்சம் மதிப்பில் அரசு செலவு செய்து நவீனமாயமாக்கிறத ு.. அதனால் அவர்களும் ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார்க ள்..
இனி உயர்நீதிமன்ற நீதிபதிகள், யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிசன் அல்லது நீதிபதி நியமனத்திற்கு என கமிசன் அமைக்கப்பட்டு, அதன் மூலம் நீதிபதிகள் தேர்வு செய்யப்பட்டால் மட்டுமே இந்தியாவில் ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும்.. அன்பு
Quote
 
 
-2 #36 PIRABUKANNAA 2011-02-11 18:58
YOU HAVE TO DO NOTHING FOR YOUR BIRTH IN A CASTE, ONLY YOUR PARENTS DO.IF BY BIRTH ITSELF YOU ARE PRONOUNCED SUPERIOR THAN OTHERS SCIENCE CANNOT ACCEPT THAT.LET IYER PUT HIS CASTE WITH HIS NAME WHAT ABOUT DALITS?.THATSWHY PERIYAAR SAID NOT TO.............
Quote
 
 
+2 #35 pasam 2011-02-11 18:26
Dear Savukku, jegath Gaspar Raj entra avarathu website ontre pothum. Judges ethai kaetgiranga? entha ulagathil vaalraanga. Ponga theriyala
Quote
 
 
+10 #34 அப்பாவி 2011-02-11 17:55
நீதித் துறையில் பல கருப்பு ஆடுகள், அரசு தரும் வீட்டு மனைக்காகவும் சில அற்ப ஆதாயங்களுக்காகவ ும் தம் பதவியின் கண்ணியத்தை அரசியல்வாதிகளிட ம் அடகு வைத்து வருகின்றனர். பொதுமக்களுக்கு அநீதி இழைக்கப் பட்டால் நீதிமன்றம் சென்று முறையிடலாம். நீதிமன்றமே தவறு செய்தால் எங்கு சென்று முறையிடுவது? கறை படிந்த நீதிமன்றங்கள் கழுவப்பட வேண்டும். கருப்பு ஆடுகள் அகற்றப் பட வேண்டும். இல்லையேல் தீர்ப்புகள் பகிரங்கமாக விலை கூவி விற்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை...இல்லை...இல்லை.
Quote
 
 
+4 #33 badboy 2011-02-11 17:49
common man cannot get any information under rti from madras high court. advocate, chief information commissioner cannot do anything against The Public information or Applellate Authority of madras high court.
1.Government has plot at concession rate to many judges.
2.government its supplying beauties,and bottle to judges in madras high court at free of cost.
3. government has given luxury bungalow and luxury cars to judges .
What will Mr.Radhakrishnan advocate or SAVUKKU will give?
Quote
 
 
+6 #32 pirabukannan 2011-02-11 17:41
Quoting saravanan.s:
V.R. Krishnan is his name .. he claims himself as a great leader and social reformer. what makes him to renounce his catste.

thanks
.s.saravanan


You dont have the right to ask him to remove anything from his name. As long as he respect all and dont discriminate everyone, he can live any way he likes.

What if he adds Ayyar to his name?. If it gives him some connection to his roots, what is your problem?. You can add / delete your caste from your name. You dont have the right to force someone to do this.

You can ask him to remove it saying it is not good thing. But nobody has the right to force him.

I want everyone to name their kids in tamil. It doesnt mean i have to force all tamils. I have to tell them. It is upto them to decide.

It is people like you who are alienating brahmins from the mainstream society and make them enemies of tamils.
Quote
 
 
+7 #31 வாலி 2011-02-11 16:39
Quoting ramm:
சரி நீதிமன்றங்கள் போலி என்றால் , அதில் உள்ள நீதியரசர்கள் ?

மெற்றாஸ் மொழியில் டுபக்கூர்*(ஓரிர ண்டு நல்லவர்களும் இருக்கிறார்கள்) அவர்களை அரசியல் நாய்கள் பிழைக்கத்தெரியா தவர்களின் பட்டியலில் இடப்பட்டிருக்கி றார்கள், வெட்கம்! வெட்கம்!
Quote
 
 
-6 #30 saravanan.s 2011-02-11 16:37
V.R. Krishnan is his name .. he claims himself as a great leader and social reformer. what makes him to renounce his catste.

thanks
.s.saravanan
Quote
 
 
-10 #29 saravanan.s 2011-02-11 16:36
Chennai
09/02/11
TO:
Mr. ‘Justice’ V.R. Krishnan
[Former Judge, Supreme Court]
"Satgamaya"
Mahatma Gandhi Road Ernakulam, Cochin - 682001.
Kerala, India.
Sir,
Reff- My letter dated 11th January 2011.

I have requested you to denounce the caste and not to suffix the word ‘Iyyer’ to your name. I have explained the reasons also.
Unfortunately you have not done it so for.
Your silence can make a perception that you really want to be identified as an ‘Iyyer’. Therefore one can easily think that your conscience allows you to practice ‘caste system’ and you are doing this inhuman practice willfully.
Everybody who admired and praised you should not think that they made a mistake.
If you really consider yourself as a responsible human being and a progressive thinker please do not suffix the word “Iyyer’ into your name and Kindly announce in public that you denounce the caste. Please tell the media and to the rest of the world not to use the word ‘Iyyer’ behind you.
If you fail to do so then very soon people may identify you as a ‘fundamentalist ’ or ‘Hypocrite’. Please don’t allow that to happen.

Yours
S.Saravanan.
Quote
 
 
+4 #28 pirabukannan 2011-02-11 15:40
Quoting vilambi:
Pls note the activities of the judges who are gathering groups to their chambers and spreading rumours about colleagues and getting judgments written for them by lawyers since they lack confidence of their English and those lawyers mint money by using the name of the judges....


இது பெரும் தவறு தான். அனால் தமிழ்நாட்டில் தமிழில் வாதாட முடியும் என்றால் இது போன்ற பிரச்சினைகளை தவிர்க்கலாமே. எங்கள் மொழியில் நாங்கள் வழக்கு ஏன் நடத்த முடியாமல் இருக்கிறது?
Quote
 
 
+1 #27 Force 2011-02-11 15:39
/பேராசிரியர் கல்யாணி கொடுத்த புகாரை விசாரிக்காதே என்று, லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநருக்கு முன்னாள் தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி உத்தரவிட்ட ஒலி நாடாவோடும் வாதிடப் பட்டது./
இவ‌ர்தான் இப்போதைய‌ 'த‌க‌வ‌ல் அறியும் ச‌ட்ட‌த்துறை'க்கு த‌லைமைப் பொறுப்பில்!!

விஆர் கிருஷ்ண‌ய்ய‌ரும ், டி.என் சேஷ்னும் உறவின‌ர்க‌ள். பால‌க்காட்டைச் சேர்ந்த‌ க‌லாகாட்டைச் சேர்ந்த‌வ‌ர்க‌ள ்.
Quote
 
 
+2 #26 vilambi 2011-02-11 15:26
Pls note the activities of the judges who are gathering groups to their chambers and spreading rumours about colleagues and getting judgments written for them by lawyers since they lack confidence of their English and those lawyers mint money by using the name of the judges....
Quote
 
 
+8 #25 pirabukannan 2011-02-11 14:14
கிருஷ்ணய்யர் போன்றவர்கள் இனி இந்த மண்ணில் உருவாக மாட்டார்களா?. அவர் போன்றவர்கள் உருவாவதற்கு காரணம் அந்தக் காலத்தில் தமிழ்நாட்டில் பணம் என்பதற்கு மதிப்பு இல்லாமல் இருந்தது. நேர்மை, ஒழுக்கம் என்பவை போற்றப்பட்டன. அதனால் அவர் போன்ற மாபெரும் மனிதர்கள் உருவானார்கள்.
இன்று ஒவ்வொரு பெற்றோரும் தனது குழந்தை அதிகப் பணம் சம்பாதிக்க வேண்டும், அதிக திறமைசாலியாக இருக்க வேண்டும் என எண்ணுகிறார்களே தவிர, அவன் நல்லவனா என்பதைக் கண்டு கொள்வதில்லை. இது தான் இன்று ஒட்டு மொத்த சமுதாயமும் நிம்மதி இன்று அலைவதற்கு காரணம்.
என்னுடைய சிறு வயதில் என்னடுய நண்பன் ஒருவனின் வீட்டில் அவனது தாத்தா அவனுக்கு அறிவுரை சொல்லக் கேட்டிருக்கிறேன ். பெரும்பாலும் அது படி என்பதாக இருக்காது. பொய் சொல்லக் கூடாது. நேரத்திற்கு சாப்பிட வேண்டும். அப்படித் தான் இருக்கும்.
நான் படித்த பள்ளிக்கு அருகில் இருந்த அக்ரஹாரத்தில், என்னடுய கிராமத்தில் , என்னைச் சுற்றி இருந்த எல்லா இடத்திலும் ஒழுக்கமும் நேர்மையும் உண்மையிலேயே ஒவ்வொரு வீட்டிலும் கட்டிக் காப்பற்றப்பட்டத ு. அது எனக்கு அப்போது கேலியாகப் பட்டது. இப்போது அதன் அவசியத்தை உணர்கிறேன். கண் கேட்ட பின்பு சூரிய நமஸ்காரம்?.
Quote
 
 
+5 #24 கணியன் 2011-02-11 13:55
Quoting கோபி:
49-O வசதியை ஓட்டு இயந்திரத்தில் கட்டாயமாக்குமாற ு தேர்தல் ஆணையத்திடம் உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தை அனுகினால், உச்ச நீதிமன்றம் வழக்கை ஏற்றுக்கொள்ளுமா ? நியாயமான தீர்ப்பு கிடைக்குமா ?


இந்த 49 O EVM வழக்கு supreme கோர்ட்ல 6 வருடங்களா இருக்கு. நான் கூட சென்னை ஹைகோர்ட்ல பொது நல வழக்கு போடலாமா என்று யோசிக்கிறேன் !!!!!!

http://www.ndtv.com/convergence/ndtv/ndtv-show-special-story.aspx?ID=3&storyid=NEWEN20090082098
Quote
 
 
-2 #23 ramm 2011-02-11 13:21
சவுக்கு சும்மா பொய் எல்லாம் எழுதக்கூடாது . நம் நாட்டில் நீடியரசகள் ராமசாமி , சொமித்ரா சென் , தினகரன் போன்ற ஒப்பற்ற நீதிமான்கள் வாய்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களை போன்ற சில ஒப்பற்ற தியாகிகளால் தான் நீதித்துறை இன்றும் சிறப்பாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது . எனவே நீங்கள் ரோடிலே போகிற ரௌடிகளை கூட எதிர்க்கலாம், அனால் தயவு செய்து நம்முடைய நீதியரசர்களை பற்றி எழுத வேண்டாம் .
Quote
 
 
+17 #22 ம.பொன்ராஜ் 2011-02-11 13:07
புலிகளின் ஆட்சியில்:
"போலிப் பாதிரியும் (ஜெகத கப்சார்), ஒரு இலங்கை தமிழ் அமைச்சரும் தேசிய தலைவரை பார்க்க ஒரு வேனில் சென்ற நேரம். வேனை ஒட்டியது 'கப்சார்' தான். வழக்கத்திற்கு அதிகமாக வேகமாக ஓட்டியதால் ஒரு ஈழ டிராபிக் பொலிசாரிடம் நன்றாக திட்டு வாங்கிக் கொள்கிறார்.எச்சரித்து அனுப்ப படுகிறார். -- (மறக்க முடியுமா? கட்டுரையில் ஜெகத் கஸ்பார் எழுதியவை மேலே உள்ளவை)".............!!! கவனிக்க: 'நான் யார் தெரியுமா?' என்கிற ஜம்பமும் பலிக்கவில்லை. ஒரு அமைச்சர் அருகில் இருக்கிறார் என்ற நினைப்பும் பலிக்கவில்லை. நான் தலைவரை பார்க்க போகிறேன் என்கிற காரணம் கூட அந்த சாதாரண ஈழ டிராபிக் போலீசிடம் பலிக்கவில்லை....அது தான் புலிகளின் ஆட்சி...!! இந்திய கேடுகெட்ட நீதிமன்றங்களினா ல் தமிழன் சோர்வடைந்து போயிருந்தாலும், ஈழத்தில் மேற்ச்சொன்ன புலிகளின் ஆட்சில் ஒரு நாளாவது வாழ்ந்து பார்க்க வேண்டும் என்பது அவனது கனவு. இதற்காவது ஈழம் அமைய வேண்டும்.
Quote
 
 
+2 #21 ramm 2011-02-11 13:03
சரி நீதிமன்றங்கள் போலி என்றால் , அதில் உள்ள நீதியரசர்கள் ?
Quote
 
 
+15 #20 ம.பொன்ராஜ் 2011-02-11 12:57
புலிகளின் ஆட்சியில்:
சட்டத்திற்கு புறம்பாக ஒரு மரம் வெட்டிய கேஸ். புலிகள் காவல் நிலையத்திற்கு வருகிறது. புலிகள் கொடுத்த தண்டனை. "அடுத்த ஒரு மாதத்திற்குள் மரத்தை வெட்டியவர் ஒரு லட்சம் மரக் கன்றுகளை நட வேண்டும்"....!!!
Quote
 
 
+17 #19 ம.பொன்ராஜ் 2011-02-11 12:54
புலிகளின் ஆட்சியில்:
புலிகள் யாழில் இருந்த சமயம். ஒரு கோழி திருடின கேஸ் 'புலிகளின்' காவல் நிலையத்திற்கு வருகிறது. கோழிக்கு சொந்த காரார் சொல்கிறார் " ஒரு பள்ள பய என் கோழிய திருடிட்டான்....அவனை தண்டிங்க...!!".... புலிகளின் காவல் நிலையம் கொடுத்த தண்டனைகள்: 1 ) கோழி திருடியவனுக்கு அபராதமும், கோழியை மீட்டு சொந்த காரரிடம் ஒப்படைப்பும். 2 ) "பள்ளன்" என்று ஜாதி பெயர் சொல்லி திட்டியதால் 'கோழி' சொந்தக்காரருக்க ு ஒரு வாரம் 'பங்கர்' வாழ்க்கை....!!!
Quote
 
 
+18 #18 சுமன் 2011-02-11 12:53
மனத்தளர்ச்சி ஏற்படும்தான். அதற்காக போராடாமல் விட முடியுமா? தமிழக மக்கள் உரிமைக்காக போராட வேண்டும் என்று ஒரு இயக்கத்தை உருவாக்கியபின் இதற்கெல்லாம் சோர்ந்துவிடக்கூ டாது. உங்கள் சேவை தொடரட்டும். உங்கள் இயக்கத்தை பெரியதாக்குங்கள ். உங்கள் இயக்கத்தை மக்கள்முன் நிறுத்துங்கள். மாற்றம் ஏற்படாமலா போகும்?
Quote
 
 
+25 #17 jai 2011-02-11 12:45
சகுனம் பார்த்து நீதிமன்றம் வரும் அந்த நீதிபதி வேறு யாருமல்ல.நீதிபதி சொக்க லிங்கம் தான்.நீதிமன்றத்தில் இவர் அலம்பல் தங்க முடியாது.எங்களை போன்ற ஜூனியர் வழக்கறிஞர்களை வருதெடுப்பார்.கண்டபடி திட்டுவார்.இந்த பூனைக்கு மணி கட்ட போவது யார் என்று தெரியவில்லை.எனக்கு மட்டும் ஆங்கிலம் நன்றாக தெரிந்தால் இந்த மூதேவியை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவேன்.
Quote
 
 
0 #16 star 2011-02-11 12:10
well said savukku.we need something like a revolt in india like in china to awake people to know the truth.

we need truth,truth,thr uth.......

we don`t get it from the supreme court... we know it lon time.

savukku should have many branch or many names,so that we may get truth even this savukku dies like K pathmanaban.handed over to uthirakumar.so be prepared ur time is counted.get ready.....go go go go go .......change your name soon
Quote
 
 
+9 #15 manikandan 2011-02-11 12:06
They are giving delayed justice only. That kind of justice will not do any good to a common man.
If you have enough money, you can buy any kind of judgement in India. They are losing its credibility. Supreme court should take serious actions against corrupted judges.
Quote
 
 
+12 #14 MGR RASIKAN 2011-02-11 11:30
மனிதன் என்ற போர்வையில் மிருகம் வாழும் நாட்டிலே ...
நீதி என்றும் நேர்மை என்றும் எழுதி வைப்பார் ஏட்டிலே .
தர்ம தாயின் பிள்ளைகள்... தாயின் கண்ணை மறைப்பதா?
உண்மை தன்னை ஊமை ஆக்கி தலை குனிய வைப்பதா?
தோட்டம் காக்க போட்ட வேலி பயிரை தின்றதோ
அதை கேள்வி கேட்க ஆளில்லாமல் பார்த்து நிற்பதோ ?
நான் ஒரு கை பார்க்கிறேன் ...
நேரம் வரும் கேட்கிறேன் ...
பூனை அல்ல புலிதான் என்று போக போக காட்டுகிறேன் ...
போக போக காட்டுகிறேன்
Quote
 
 
+18 #13 anbukkumaran 2011-02-11 11:20
திரு சவுக்கு அவர்களே , நீங்கள் நேற்று உச்ச நீதிமன்றம் இரண்டு ஜி அலைகற்றை ஒதிகீடில் கொடுத்த ஆலோசனையை மற்றும் ஆர்டர் ஐ படித்திருப்பீர் கள் என நம்புகிறேன். அதில் உள்ளபடி பார்த்தால் " அலைகற்றை ஒதிகீட்டு வழக்கில் எந்த ஒரு நீதி மன்றமும் குறுக்கீடு செய்ய இயலாது மேலும் அவை அனைத்தும் உச்ச நீதிமன்றத்தின் கவனத்திலேயே இருக்கும், இருக்கவேண்டும் . அதோடு மட்டுமல்லாமல் சிபியை எந்த ஒரு பெரிய கோடிஸ்வரணுக்கும ் சம்மன் அனுப்பி விசாரணை துரிதப்படுத்த முழு அனுமதிளித்ததொடு தேவைப்படும் பட்சத்தில் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிகோறவும் வகை செய்துள்ளது . அதோடு நின்றுவிடாமல் தனிநீதிமன்றம் அமைத்து இந்த வழக்கை விரைவில் முடிக்க மத்திய அரசை கேட்டுக்கொண்டுள ்ளது . முதல் தகவல் அறிகையை உச்ச நீதிமன்ற பார்வைக்கு பின்னரே தனிநீதி மன்றத்தில் சமர்பிக்கப்பட வேண்டும் என்று தெளிவாக குறிப்பிட்டுள்ள து " ஆகவே அடுத்த சம்மன் கருணாநிதி குடும்பத்திற்கு த்தான், அதுவும் கனிமொழிகுத்தான் என்பது தவிர்க்க முடியாத விழயமகிவிட்டது . கருணாநிதி தமிழர்களுக்கு புரிந்த துரோகம் மன்னிக்கமுடியாத து அதுவும் ஈழத்தமிழர்களை கொன்று குவித்த பாவத்திற்கும் , மொத்த தமிழர்களையும் எனது உடன்பிறப்பு என்று கூறி ஏமாற்றிய பாவத்திற்கும். நீங்கள் மேலே குறிபிட்டது போல நீதித்துறையை விலைக்கு வாங்கி பொதுமக்களின் வாழ்கையில் விளையாண்டதர்க்க ும் . திரு கங்குலி மற்றும் சிவிக் தலைமையில் நீதி நிலைநாட்டப்படும ் , இந்த ஜனநாயகம் காக்கப்படும் என்பது என்போன்ற , உங்களை போன்ற ஜனநாயகத்தை மதிக்கும் ஒரு சாதாரண மதிதனின் நம்பிக்கை . இந்த கருணாநிதி துரோகி வீழ்த்தப்படுவார ் , சர்க்காரிய உழலில் தப்பித்தாலும், எல்லாவற்றிகும் சேர்த்து இந்த கருணாநிதி ச்பெக்ட்ரும் உழலில் தண்டிக்கப்படுவா ர் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. இந்தோனேசியாவிலி ருந்து சவுக்கு வாசகன் அன்புக்குமரன்
Quote
 
 
+15 #12 selvam_in 2011-02-11 11:14
//போலி நீதி மன்றம் மட்டுமல்ல, வெங்காய மனிதர்கள்.
காலசக்கரம் வேகமாக சுழலுகிறது. பெரியார் போன்ற ஒரு மனிதன் மிண்டும் வந்து இந்த விலங்குகளிடம் இருந்து நமக்கு விடுதலை தரவேண்டும்//

பெரியார் thaaan engal SAVUKKU matrum Lawyer Rathakrishnan
Quote
 
 
+13 #11 அப்பாவி 2011-02-11 10:48
சில நீதிபதிகளுக்கு ஆதாரம் தேவை இல்லை, ஆதாயத்தை தான் பார்க்கிறார்கள் இந்த ஒரு சிலரால் நீதிதுறைக்கே களங்கம்.

மாற்றம் ஒன்றைத் தவிர எல்லாம் மாறும்.
Quote
 
 
+12 #10 Nithi 2011-02-11 10:29
DEAR SAVUKKU - ANY CHANCE FOR APPEAL? WE ARE ALWAYS WITH YOU. PLS LET ME KNOW, WHICH TYPE OF SUPPORT YOU WANT FROM OUR SIDE TO MOVE FURTHER IN ALL YOUR WAR'S AGAINST THIS STUPID'S. REALLY WE NEED TO STOP THIS........OTHERWISE OUR NEXT GENERATION NEVER FORGIVE US.
Quote
 
 
-21 #9 PANCHAMAN 2011-02-11 10:11
புடிக்காதவன் மேல எல்லாம் கேசை போட்டு கோர்டுக்கு இழுத்து, அவன் எதுசெய்தாலும் ஒரு ஸ்டே வாங்கி, கண்டிப்பாக நீ கோர்டுக்கு வரவேண்டியிருக்க ும்ன்னு மிரட்டி, கோர்ட்டு என்னமோ சவுக்கு சொல்லறதை மட்டுமே கேக்கும் என்பது மாதிரியாக பில்டப் கொடுப்பதை பார்த்தால் அடுத்த சு.சாமி சவுக்குதான் போல் இருக்கு.............ஒரு சூனா சாமி போதுமப்பா.
Quote
 
 
+12 #8 Shanthi 2011-02-11 09:50
That was a bouncer... very good article... Judiciary got sick, feel very bad, but still hope things would change... Great job Savukku, am really moved by this article, no words to explain, congrats keep going...
Quote
 
 
+6 #7 வடை சுடும் பாட்டி 2011-02-11 09:30
ஏம்பா இக்பால்... இந்த கட்டுரையை படிச்சிட்டு, என் பேரன் வடையை கூட சாப்பிடலை...
’இக்பால் யூ டூ புரூட்டஸ்’னு சொல்லிட்டு போறான்... புருட்டஸ்னு ஒரு வடை இருக்கா இக்பால்...?
Quote
 
 
+18 #6 நல்ல குருமாராஜ் 2011-02-11 09:07
//தீர்ப்பு வழங்கப் பட்டு ஒரு ஆண்டுக்கு மேல் ஆகி விட்டதா ? காவல்நிலையங்களி ல் அறிவிப்பு பலகைகள் வைக்கப் பட்டுள்ளதா என்பதை நீங்களே கூறுங்கள்.//

ஒரு மயி​​றையும் காணம்... அந்த காக்கி மிருகங்கள் வழக்கம் ​போல் ஏமாந்தவனிடம் ஆட்​டைய ​போடுதல்... அரசியல் வாதிகளிடம் கூலகும்பிடு​போட ுதல் ​போன்ற ​பெருந்​தொடர் நடந்தது​கொண்​டெ இருக்கின்றது...

​போலீஸ் ஸ்​டெசன் ​போறதுக்கு முன்னாடி ​​கோவனத்​தொட ​போங்க இல்லாட்டி எல்லாத்​தையும் உருவிடுவானுங்க அந்த ​​கொம்பு​மொளச்ச மனுசனுங்க...

இப்​போ வித்தியாசமாக.. இன்னும் ​கொஞ்ச நாட்களில் ஒரு விளம்பரம் வரப்​போகின்றது. அது என்ன​வென்றால்...

"காவல் து​றை உங்கள் நண்பன்" என்பது ​போல் இனி​மேல் நீதிமன்றங்களில்
"நீதித்து​றை உங்கள் நண்பன்" என்ற விளம்பர பல​கை​யை காணலம்....

அப்பாவிக​ளே நமக்​கேல்லாம் நீதி ​​வேண்டு​மென்றா ல் ​வெள்​ளை​வேட்டி கட்டிய ​புறம்​போக்கு குண்டர்கள் நடத்தும் கட்டபஞ்சாயத்​தை நாடிச்​ ​செல்​வோம்.. ​கொஞ்சம் பணமாவது மிஞ்சும்.
Quote
 
 
+11 #5 பாரதிக்குஞ்சு. 2011-02-11 09:06
1, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி, அரசு இயந்திரம், பாராளுமன்றம் மற்றும் நீதித்துறை மூன்று பிரிவுகளாக செயல்படுகிறது. இந்த அமைப்புகளில் ஒன்றின் அதிகாரத்தில் ஒன்று தலையிடாதபடி, கவனமாக அரசியல் அமைப்புச் சட்டம் அமைக்கப் பட்டிருந்தாலும் , யதார்த்தத்தில் அனைத்தையும் கட்டுப் படுத்துவது அரசியல்வாதிகளே..

2, அந்த அரசியல்வாதிகளைக ் கட்டுபடுத்துபவர ்கள் ரத்தன் டாடா அம்பானி சகோதரர்கள் போன்ற தொழிலதிபர்கள். நுட்பமாக பார்த்தால், இந்தியாவின் அனைத்து முடிவுகளையும் எடுப்பவர்கள், இந்த தொழில் அதிபர்களே….

3, அந்த சண்முக சுந்தரத்தை காவல் நிலையத்தில் வைத்து அடித்துக் கொன்ற அந்த அதிகாரிகளுக்கு என்ன தண்டனை ? அந்த சண்முகசுந்தரத்த ின் மனைவிக்கு என்ன நீதியை வழங்கியது இந்த நீதிமன்றம் ?

4, ஆனால் இன்றைய நீதிமன்றங்கள்….. ??????? !!!!!!! இவை போலி நீதிமன்றங்களா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.

மேலே கட்டுரையில் சுட்டிக்காட்டப் படும் தகுதிகள் ஒரு நாட்டில் இருந்தால், அதுதான் தீவிரவாதம் என்று சொல்லப்படும் மக்கள் கிளர்ச்சியின் ஆரம்ப ஆதாரம், இலங்கையின் இன்றய நிலைக்கு மேலே காணப்படும் அதே காரணிகள்தான் இட்டுச்சென்றது,
Quote
 
 
+30 #4 Arulmozhi 2011-02-11 08:47
வி.ஆர்.கிருஷ்ணய்யர் என்ற ஒரு நீதிபதி, ஒரு அறிக்கை எழுதி வெளியிட்டால், இந்தியாவே அதைப் படிக்கிறது. அவர் என்ன உலகப் புகழ் பெற்ற எழுத்தாளரா ? இல்லை. இந்தியாவே அவர் அறிக்கையை படிப்பதற்கு ஒரே காரணம்….. அவரது நேர்மை… மக்களின் மீதான அவரது காதல். இறுதி வரை நேர்மை வழுவாமல் இருந்தது.

well said
Quote
 
 
+11 #3 Arulmozhi 2011-02-11 08:46
well said
Quote
 
 
+16 #2 Shanthamoorthi 2011-02-11 08:38
போலி நீதி மன்றம் மட்டுமல்ல, வெங்காய மனிதர்கள்.
காலசக்கரம் வேகமாக சுழலுகிறது. பெரியார் போன்ற ஒரு மனிதன் மிண்டும் வந்து இந்த விலங்குகளிடம் இருந்து நமக்கு விடுதலை தரவேண்டும்.
Quote
 
 
+22 #1 கோபி 2011-02-11 08:21
49-O வசதியை ஓட்டு இயந்திரத்தில் கட்டாயமாக்குமாற ு தேர்தல் ஆணையத்திடம் உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தை அனுகினால், உச்ச நீதிமன்றம் வழக்கை ஏற்றுக்கொள்ளுமா ? நியாயமான தீர்ப்பு கிடைக்குமா ?
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 46 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday1126
mod_vvisit_counterYesterday10268
mod_vvisit_counterThis week43853
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month246585
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12768704