முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
தென்னகத்து பூலான் தேவி…. அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 37
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
சனிக்கிழமை, 19 பிப்ரவரி 2011 02:07

பூலான் தேவியைப் பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்கள்.   உத்தரப் பிரதேசத்தின் மிகப் பிரசித்திப் பெற்ற கொள்ளைக் காரர். அவரைப் பற்றியதல்ல இந்தக் கட்டுரை.

 1367353493_c766de17b0

இந்தக் கட்டுரை தென்னகத்து பூலான் தேவியைப் பற்றியது.

அந்தப் பூலான் தேவி, நெருக்கடியால் கொள்ளைக்காரியானவர். இந்தப் பூலான் தேவி, கொள்ளையடித்ததால் நெருக்கடிக்கு உள்ளானவர்

அந்தப் பூலான் தேவி, சமுதாயத்தால் வஞ்சிக்கப் பட்டவர்.

இந்தப் பூலான் தேவி சமுதாயத்தையே வஞ்சித்தவர்.

அந்தப் பூலான் தேவி படிப்பறிவில்லாத பாமரர்

இந்தப் பூலான் தேவி படித்துத் தேறிய கவிஞர்

 l_cd47d9e2ff464f1a935aad412351201e

அந்தப் பூலான் தேவி சொந்தக் குடும்பத்தாலேயே வெறுத்து ஒதுக்கப் பட்டவர்

இந்தப் பூலான் தேவி தன் குடும்பத்தால் ஊரை அடித்து உலையில் போட்டவர்.

இந்நேரம் தென்னகத்து பூலான் தேவி யாரென்று கண்டு பிடித்திருப்பீர்களே… ? சவுக்கு வாசகர்கள் அல்லவா… அறிவாளிகளாயிற்றே நீங்கள்.

ஆம் இந்த பூலான் தேவி வேறு யாருமல்ல.   கவிஞர் என்ற அடைமொழியோடு வலம் வரும் கனிமொழி தான் அது.

 KANIMOZHI_10674f

சவுக்குக்கு கனிமொழியை பிடிக்கும்.   என்ன காரணம் தெரியுமா ? கருணாநிதியின் கயமையும், வஞ்சகமும், மற்ற கெட்ட திறமைகள் அனைத்தையும் தன்னுள்ளே கொண்டவர்.   இவரைப் போல கருணாநிதியின் மற்ற வாரிசுகள் ஒருவரும் இத்தனை திறமை கொண்டவர்கள் அல்ல. அது அழகிரியாக இருந்தாலும் சரி, ஸ்டாலினாக இருந்தாலும் சரி. ஒருவருமே இவர் அருகே நிற்க முடியாது.

கனிமொழியின் பெரிய திறமை என்னவென்றால், தன்னை ஒரு மென்மையான, அப்பாவி கவிஞராக வளர்த்துக் கொண்டது.   தமிழ்நாட்டில் உள்ள தமிழாசிரியர்கள் பெரும்பாலும், திமுக ஆதரவாளர்களாகவே இருப்பர்.   தன்னுடைய முதல் கவிதை தொகுதியான கருவறை வாசனைகளை வெளியிட்ட போது,  பெரும்பாலான தமிழறிஞர்கள் கனிமொழியை கவிஞராக அங்கீகரித்தனர்.

கருணாநிதி என்ற தன் தந்தையின் நிழலையும் மீறி, கனிமொழி நல்ல கவிஞர் என்பதை பெரும்பாலான கவிஞர்கள் ஒப்புக் கொண்டனர். அதெல்லாம், பெரிய அரங்கேற்றத்திற்கான ஒப்பனைகள் என்பது பின்னர் தான் தெரிய வந்தது.

கனிமொழியின் பிரபலமான கவிதையான

பள்ளிக்குச் சென்றேன்

தலைசிவினேன், சில

நண்பர்களைத் தவிர்த்தேன்

சட்டைபோட்டுக் கொண்டேன்,

பல்துலக்கினேன், வழிபட்டேன்,

கல்யாணம் கட்டிக்கொண்டேன்

காத்திருக்கிறேன்

என் முறை வருமென்று...

என்பதையே சற்று பொறுமையாக கவனித்துப் பாருங்களேன். அவரது முறை வந்த போது என்ன செய்திருக்கிறார் என்று.

சவுக்குக்கு கனிமொழியோடு பரிச்சயம் 2002ம் ஆண்டு.   குஜராத்தில் நடந்த கலவரங்களைப் பார்த்து, மனசாட்சி உள்ள அத்தனை பேரும் துடி துடித்து நின்ற போது, சென்னை பிலிம் சேம்பர் அரங்கில் ஒரு கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் பத்திரிக்கையாளர் டி.என்.கோபாலன், கோபாலபுரத்தின் நிலைய வித்வான் துரை.ரவிக்குமார் மற்றும் கனிமொழி ஆகியோர் பேசினர். கோபாலன் தனக்கே உரிய இயல்பான பாணியில் உணர்ச்சி வயப்பட்டு, ஊடகங்கள் இந்தக் கலவரத்தை கவர் செய்த விதத்தைப் பற்றி கோபப் பட்டார்.

அப்போதுதான் கனிமொழியின் பேச்சைக் கேட்க நேர்ந்தது.   ஒரு பெரிய பேச்சாளருக்கான சரளமான மொழி நடை இல்லாவிட்டாலும், ஒரு இயல்புத் தன்மை இருந்தது.   அப்போதுதான் கனிமொழி மீது மரியாதை ஏற்பட்டது.

சவுக்கைப் போலவே, பல்வேறு நோக்கர்களும், கனிமொழியை அப்படித் தான் கருதியிருந்தார்கள்.

ஒரு மூத்த பத்திரிக்கையாளர், நேரடியாக கனிமொழியிடமே, ‘நீங்கள் சேற்றில் மலர்ந்த செந்தாமரை’ என்றார். அப்படி ஒரு தாக்கத்தை கனிமொழி ஏற்படுத்தி இருந்தார்.

2004 யுபிஏ அரசாங்கத்தில் கனிமொழிக்கு மந்திரி பதவி கொடுக்கப் படவில்லை. முதல் யுபிஏ முடியும் முன்பாகவாவது, கனிமொழிக்கு மந்திரி பதவி கொடுக்கப்படுமா என்ற எதிர்ப்பார்ப்பு இருந்தது. ஆனால் இறுதி வரை கனிமொழிக்கு மந்திரி பதவி கொடுக்கப் படாதது, பலருக்கு உண்மையில் கனி மொழி மேல் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

தன்னை ஒரு நடுநிலை ஜனநாயகவாதியாக அடையாளம் காட்டிக் கொள்வதற்காக, மற்றொரு அரசியல் வாரிசான, கார்த்திக் சிதம்பரத்தோடு சேர்ந்து, “கருத்து” என்ற இணையதளத்தை தொடங்கி அது கருத்துச் சுதந்திரத்திற்கான களம் என்று அறிவித்தார்.

 2849457833_71af3d9c10_z

ஆனால், முதல் யுபிஏ முடியும் முன்னரே, கனிமொழி தன்னை அரசியல் அரங்கில் தனது சகோதரர்களுக்கு இணையாக வளர்த்துக் கொள்வதில் தனது மறுபக்கத்தை காண்பிக்கத் தொடங்கினார். தனக்கென ஆதரவாளர் கூட்டத்தை வளர்த்துக் கொள்வது, தனது சாதியைச் சேர்ந்தவர்களுக்கு காரியங்களை முடித்துக் கொடுப்பது, என்பதில் தொடங்கி, போலிப் பாதிரியோடு, சேர்ந்து சென்னை சங்கமம் என்ற நிகழ்சி நடத்துவதில் முடிந்தது. சென்னை சங்கமம் கிராமிய கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக நடந்த நிகழ்வு என்றாலும், அதில் கார்ப்பரேட்டுகள் வகித்த பங்கும், தமிழக அரசின் போக்குவரத்து கழகங்கள் உட்பட, அரசு அதிகாரிகளை இந்த நிகழ்ச்சிக்காக பயன்படுத்திய விதமும், அனைவரையும் முகம் சுளிக்க வைத்து, கனிமொழியின் உண்மையான பூலான் தேவி முகத்தை ஓரளவுக்கு வெளிக் காட்டியது.

ஆனால் இரண்டாவது முறை யுபிஏ அரசாங்கம் பதவி ஏற்ற போதும், கனிமொழிக்கு மந்திரி பதவி இல்லை என்ற விஷயம் கனிமொழி மீது பரிதாபத்தை ஏற்படுத்தியது என்னவோ உண்மை. ஆனால், மந்திரி பதவி கிடைக்காததற்குப் பதிலாக கனிமொழி என்னவெல்லாம் செய்தார் என்பதை உலகம் அறிந்த போது, கனிமொழியின் மீது இருந்த அத்தனை பரிதாபமும் வெறுப்பாக மாறியது.   குறிப்பாக நீரா ராடியாவுடன் கனிமொழி நடத்திய அத்தனை உரையாடல்களும், இதயத்தை உறையச் செய்யக் கூடியவை. நடுநிலையாளர்களையும், ஜனநாயகவாதிகளையும் பதை பதைக்கச் செய்யக் கூடியவை.

சேற்றில் பூத்த செந்தாமரை என்று அன்று கனிமொழிக்கு பட்டம் கொடுத்த அந்த மூத்த பத்திரிக்கையாளர் நீரா ராடியா உரையாடல்களை கேட்டு, என்ன ஆகியிருப்பார் என்று நினைப்பதற்கே பாவமாக இருக்கிறது.

இதற்குப் பிறகு தான் கனிமொழியின் பூலான் தேவி முகம் வெளி உலகக்கு தெரியத் தொடங்குகிறது.

ஆண்டிமுத்து ராசா, தொலைத் தொடர்பு மந்திரி ஆவதற்கு முன்பாக, இணை அமைச்சராக இருந்த போதே, அரசியல் ஏணியில் முதல் படியை அடைவதற்கு, குடும்பப் படியே சிறந்த வழி என்பதை உணர்ந்தார்.   இரண்டாவது குடும்பத்தின் படிகள் அல்லக்கைகளால் மிகுந்த நெருக்கடியாக இருந்ததால், மூன்றாவது குடும்பத்தின் படிகளே, முதல் படியை அடைவதற்கு ஏற்ற வழி என்று, சபரி மலை 18 படியைப் போல, மிகுந்த புனிதமாக அந்தப் படிகளை தொழுது, தனது அரசியல் வாழ்வை செழுமையாக்கிக் கொண்டார் ஆண்டிமுத்து ராசா. இரண்டாம் தலைமுறை அலைக்கற்றையில் சம்பாதிக்க ராசா தேர்ந்தெடுத்தது, மூன்றாம் குடும்பத்தின் வழியை.

 ARV_A_RAJA_10237f

அரசியலிலும் சரி, அதிகார மையத்திலும் சரி, குடும்பத்தின் வழியாக புகுந்து தலைவரின் மனதில் இடம் பிடித்தால் அதனால் கிடைக்கும் பலன்கள் ஏராளம்.   ராசாத்தி அம்மாள் மற்றும், கனிமொழியை பொறுத்தவரை, முதல் குடும்பத்திற்கு கிடைக்கும், மரியாதைகளும் சலுகைகளும் தங்களுக்கு கிடைப்பதில்ல என்ற ஏக்கம் எப்போதும் உண்டு. இந்த நேரத்தில், ஆண்டிமுத்து ராசா வழியில் ஒரு சரியான அடிமை சிக்கியதும், அகப்பட்டதை சுருட்டலாம் என்று முடிவெடுக்கின்றனர் தாயும் மகளும்.

2ஜி அலைக்கற்றை ஏலத்தில் கிடைத்த பல்லாயிரக்கணக்கான கோடிகளை, ராசா கருணாநிதியின் உத்தரவோடு பெரும் பங்கை கொடுத்தது சிஐடி காலனியில் உள்ள துணைவியின் இல்லத்தில்.   இதனால் ராசா மீது மிகுந்த நம்பிக்கை கொண்டனர் சிஐடி காலனி மகாராணிகள். இதன் வெளிப்பாடே, ராசாவுக்காக தொடர்ந்து இடை விடாமல் நீரா ராடியாவுடன் பேசியது. எப்படியாவது ராசாவை தொலைத் தொடர்புத் துறை மந்திரியாக ஆக்க வேண்டும் என்று முயன்று அதில் வெற்றியும் பெற்றார்கள்.   இந்த முயற்சி எதற்கென்றால், 2ஜி அலைக்கற்றையிலேயே இத்தனை கோடிகள் என்றால், 3ஜி அலைக்கற்றையில் எத்தனை கோடிகள் கிடைக்கும் என்ற நப்பாசையே…!

 Niira_Radia-320023

கிடைத்த பல்லாயிரக்கணக்கான கோடிகளை என்ன செய்வது என்று தெரியாமல், தாறுமாறாக சொத்துக்களை வாங்கிக் குவிக்கிறார்கள். நேரடியாக தாய் பெயரிலோ, மகள் பெயரிலோ சொத்துக்களை வாங்கிக் குவித்தால் தெரிந்து விடும் என்பதற்காக, ஒவ்வொரு சொத்துக்கும், ‘சொன்ன படி தலையாட்டும்’ ஆடு ஒன்றை பிடிக்கிறார்கள்.

அந்த ஆட்டின் பெயர் தான் சண்முகநாதன். யார் இந்த சண்முகநாதன். இவர் மலேசியாவைச் சேர்ந்த தொழில் அதிபர் என்று தன்னை சொல்லிக்கொள்கிறார். இவர் ஷங்கல்பம் இன்டஸ்ட்ரீஸ் என்ற பெயரில் பல்வேறு நிறுவனங்களை நடத்துகிறார். ஆனால், விசாரித்துப் பார்த்ததில், இந்த நிறுவனங்கள் அத்தனையும் செயலிழந்து பல ஆண்டுகள் ஆகின்றன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சண்முகநாதன் பெயரில், இந்த சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளனர், தென்னகத்து பூலான் தேவி குடும்பத்தார்.

முதல் சொத்து… சென்னை அண்ணா சாலையில் உள்ள வோல்டாஸ் கட்டிடம்.   இந்த சொத்து டாக்டர் கே.சண்முகநாதன் என்பவர் பெயருக்கு 27 ஏப்ரல் 2009 அன்று விற்பனை செய்யப் பட்டதாக மாற்றம் செய்யப் படுகிறது.

இந்தச் சொத்துக்காக சண்முகநாதன் வழங்கியதாக சொல்லப்படும் தொகை, ஏழு கோடியே, 62 லட்சத்து 32 ஆயிரத்து எழுபத்தாறு ரூபாய்.

இந்த பரிவர்த்தனை பற்றிய விரிவான செய்திகளுக்கு, தொழில் அதிபர் ராசாத்தி அம்மாள் என்ற கட்டுரையை படியுங்கள்.

இப்போது வெளிச்சத்திற்கு சவுக்கு தனது வாசகர்களுக்காக பிரத்யேகமாக கொண்டு வந்திருக்கும் பரிவர்த்தனை, உதகமண்டலத்தில் உள்ள வின்ட்ஸ்ர் எஸ்டேட் என்ற 526 ஏக்கர் பரப்பளவுள்ள எஸ்டேட்டை வெறும் 2.47 கோடிக்கு வாங்குகிறார் இந்த டாக்டர் சண்முகநாதன். இந்த எஸ்டேட்டின் அசல் மதிப்பு 300 கோடிக்கும் குறையாமல் இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.

 IMG_0002

IMG_0003

IMG_0009

IMG_0010

இந்த சண்முகநாதன், தென்னகத்து பூலான் தேவி சார்பில் மேலும் பல சொத்துக்களை வாங்கியிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த சண்முகநாதனை உளவுத்துறை தலைவர் ஜாபர் சேட், கடந்த மாதம் 10 முறை சந்தித்ததும், அந்த சந்திப்புகள் ஹோட்டல் அறைகளிலும், சாலையில் செல்லும் போது கார்களிலும், டிஜிபி அலுவலகத்தின் பின்புறம் உள்ள சந்துகளிலும் நடைபெற்றிருப்பது, சண்முகநாதனை மேலும் மர்மமான மனிதராக்குகிறது.  சிபிஐ அதிகாரிகள் இந்தத் தகவலையெல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இது தவிரவும், தென்னகத்து பூலான் தேவி, சிறுசேரி மஹிந்திரா சிட்டியின் பின்புறம் உள்ள கொண்டமங்கலம் என்ற கிராமத்தில் 170 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. மேலும் 230 ஏக்கர்கள் நிலம், பூனாவைச் சேர்ந்த என்.எஸ்.பி பேர்ள் சிட்டி என்ற நிறுவனமும், சாதிக் பாட்சாவின் க்ரீன் ஹவுஸ் ப்ரமோட்டர்ஸ் நிறுவனத்தோடு சேர்ந்து 14 மாடிகள் கொண்ட, மிகப் பெரிய சொகுசு அடுக்குமாடி வீடுகளை உட்ட உத்தேசித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது வாங்கிக் குவித்துள்ள சொத்துக்கள். தென்னகத்து பூலான் தேவி என்றால், வெறுமனே சொத்துக்களை வாங்கிக் குவித்தால் மட்டும் போதுமா என்ன ? தொழில் தொடங்க வேண்டாமா ?

அதற்காகத் தான், அலாஃப்ட் என்ற பெயரில், ஐந்து நட்சத்திர ஒட்டல்கள் கட்ட தென்னகத்து பூலான் தேவி திட்டமிட்டுள்ளார்.   இந்த ஓட்டல் திட்டத்திற்கு சிக்கிய ஆடு, ஆட்டோமேட்ரிக்ஸ் என்ற நிறுவனத்தின் தலைவர் குமார் சீத்தாராமன் என்பவர்.   இவர் தான் பூலான் தேவியின் ஏஜென்டாக இருந்து செயல்படுகிறார்.

கலைஞர் டிவிக்கு டி.பி.ரியாலிட்டி நிறுவனம் 216 கோடி ரூபாய் வழங்கியது எப்படி வழங்கப் பட்டது என்பது நினைவிருக்கிறதா ? முதலில், டிபி.ரியாலிட்டி, பிறகு டைனமிக்ஸ் ரியாலிட்டி. பிறகு குசேகான் ப்ரூட்ஸ் அன்ட் வெஜிடெபிள்ஸ், கடைசியாக சினியுக் பிரைவேட் லிமிட்டெட்.

2000 கோடியை முதலீடு செய்ய பூலான் தேவி தேர்ந்தெடுத்த வழியும் இதுதான்.   அலாஃப்ட் செயின் ஆப் ஹோட்டல்ஸ் என்று இந்தியா முழுக்க ஓட்டல் கட்ட வேண்டுமென்று திட்டம். எடுத்தவுடன் இந்த நிறுவனம் அத்தனை ஹோட்டல்களையும் கட்டத் தொடங்கினால் சந்தேகம் வருமல்லவா ?

அதற்காக முதலில் மொரீஷியஸைச் சேர்ந்த சிப்பிஐ இந்தியா என்ற நிறுவனம் அர்பன்எட்ஜ் என்ற நிறுவனத்தோடும், ஆரோமேட்ரிக்ஸ் என்ற நிறுவனத்தோடு சேர்ந்தும் பல ஹோட்டல்களை கட்ட திட்டமிடுகிறது. இந்த ஆரோமேட்ரிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் தான் குமார் சீத்தாராமன்.

இதையடுத்து ஆரோமேட்ரிக்ஸ் நிறுவனம், ஹோட்டல் கட்டும் பொறுப்பை அத்வைய்யா ஹாஸ்ப்பிட்டாலிட்டீஸ் என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கிறது. அதன் படி, முதலில் சோழிங்கநல்லூரில் 120 அறைகளைக் கொண்ட நான்கு நட்சத்திர ஹோட்டலும், பெங்களுருவில் ஒரு நான்கு நட்சத்திர ஹோட்டலும் கடந்த ஜுன் 2010ல் தொடங்கப் பட்டு விட்டன. அடுத்து கோயம்பத்தூரில் வேலைகள் தொடங்கப் பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

கோவையைத் தொடர்ந்து அகமதாபாத், சண்டிகர், கொச்சி, மைசூர், ஜெய்ப்பூர், நாக்பூர், விசாகப்பட்டினம் மற்றும் ஐதராபாத்தில் இதே போல ஹோட்டல்கள் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளன.

இந்த குமார் சீத்தாராமனை சிபிஐ பிடித்து விசாரித்தால் பல உண்மைகள் வெளி வரும் என்று தகவல்கள் கூறுகின்றன.

இது தவிரவும், பூலான் தேவியின் சொத்துக்களைப் பற்றிய தகவல்கள் சேகரிக்கப் பட்டுக் கொண்டே இருக்கின்றன. விபரங்கள் கிடைத்ததும், அது சவுக்கு வாசகர்களுக்குத் தானே… ?

Comments  

+1 #70 Senthil kumar.R 2011-06-18 13:12
vungal sevai thamizhanukku thevai
Quote
 
0 #69 Ramamurthy 2011-05-28 13:16
பஞ்சைப்போட்டு நெருப்பை மறைப்பவன் பைத்தியக்காரனடா
பாவம் தீர்க்க பணத்தை இறைப்பவன் பச்சை மடையனடா
நெஞ்சுக்கு நீதியை ஒளித்தே வாழ்பவன் நிச்சயம் மிருகமடா

கல்லுக்கு நீதி சொல்ல முடியாது
வெங்கானலில் மீன் பிடிக்க முடியாது
பாறையில்நெல் விதைக்க முடியாது
உன் பாவத்தில் வந்த இன்பம் நிலைக்காது
உன் வாழ்வெல்லாம் வாழவல்ல

--கண்ணதாசன்
Quote
 
-1 #68 சிதிரகுப்தன் 2011-02-26 21:12
(யுவகிருஷ்ணா 2011-02-19 21:56
அல்லக்கைகள் எல்லாம் கருத்துச் சொல்ல வந்தாச்சா.......)

இந்த மூட்டப்பூச்சி தொல்லை தாங்கமுடியலப்பா .
Quote
 
-5 #67 KUNDAS RAJ 2011-02-22 23:58
CAN YOU PUBKLISH ONE ARTICLE WITH TRUTH WHATVER YOU SAID HERE.. IN ANOTHER PORTAL TAMILIANS GIVE ENOUGH REPLY FOR YOUR UGLY POST AND THEN YOU HAVE BEEN MOVED HERE AND DO ALL JALARAS HERE. 1 RS RICE IS ENOUGH FOR YOU TO SURVIVE HENCE YOU ARE DOING UGLY JOB IN ALL PORTAL. IF YOU DOING ALL THESE KIND OF JOBS IN ALL PORTAL MEANS , SOMEBODY SHOULD INVESTIGATE WHAT YOU ARE DOING HOW YOU ARE GENERATING MONDY FOR DAY TO DAY LIFE... THATS MOST IMPORTANT RATHER TAHN KANI.....Quoting Puthiyavan Raj:
தமிழ் நாட்டின் உண்மையான பூலான் தேவி தலித்துகளுக்கான இடத்தை அபகரித்து, அந்த இடத்தில் 40 படுக்கை அறை கொண்ட அரண்மனை வீட்டை கட்டி இருக்கிறார். மலைபிரதேசத்தில் ஒரு வெள்ளை மாளிகை போன்ற அரண்மனை. சவுக்கு போன்ற பத்திரிகையாளர்க ள் மீது ஆட்சிக்கு வந்த ஒரே வருடத்தில் 125 க்கும் மேற்பட்ட அவதூறு வழக்குகள் போட்டு வெறியாட்டம் போட்டவர். கோப்பில் கையெழுத்து போடவில்லை என்பதற்காக ஒரு பெண் ஐஏஎஸ். அதிகாரியின் முகத்தில் அமிலம் அடிக்கப்பட்டது அந்த பூலான் தேவியின் வெறியாட்டத்தில் ஒன்று. கோவிலை விட புனிதமான கல்விக்கூடத்தை (பெண்கள் கல்லூரியை) இடிப்பேன் என்று ஆணவ ஆட்டம் போட்டவர். அந்த பூலான் தேவி யார்? சவுக்கு வாசகர்கள் புத்திசாலிகள். புரிந்து கொள்வார்கள். அந்த பூலான் தேவியை முதல்வராக்க சவுக்கு துடிப்பது ஏன்?
Quote
 
+1 #66 pandiyan 2011-02-22 23:38
whatever suavukku published against corruption thats tunred into truth. if p.raj says "தலித்துகளுக்கான இடத்தை அபகரித்து,' let him publish with proof or else let him paste his blog thas talk about truth. these type of ANNAKAVDI is real cancer in tamilnadu. these peple needs 3 times food without any hardwork. even if no food these kind of p.raj do "theekulipu".. tharkoori tamilanis. savukku these types people also reading this portal is biggest advt for the indian democorocy.............
quote name="Puthiyavan Raj"]தமிழ் நாட்டின் உண்மையான பூலான் தேவி தலித்துகளுக்கான இடத்தை அபகரித்து, அந்த இடத்தில் 40 படுக்கை அறை கொண்ட அரண்மனை வீட்டை கட்டி இருக்கிறார். மலைபிரதேசத்தில் ஒரு வெள்ளை மாளிகை போன்ற அரண்மனை. சவுக்கு போன்ற பத்திரிகையாளர்க ள் மீது ஆட்சிக்கு வந்த ஒரே வருடத்தில் 125 க்கும் மேற்பட்ட அவதூறு வழக்குகள் போட்டு வெறியாட்டம் போட்டவர். கோப்பில் கையெழுத்து போடவில்லை என்பதற்காக ஒரு பெண் ஐஏஎஸ். அதிகாரியின் முகத்தில் அமிலம் அடிக்கப்பட்டது அந்த பூலான் தேவியின் வெறியாட்டத்தில் ஒன்று. கோவிலை விட புனிதமான கல்விக்கூடத்தை (பெண்கள் கல்லூரியை) இடிப்பேன் என்று ஆணவ ஆட்டம் போட்டவர். அந்த பூலான் தேவி யார்? சவுக்கு வாசகர்கள் புத்திசாலிகள். புரிந்து கொள்வார்கள். அந்த பூலான் தேவியை முதல்வராக்க சவுக்கு துடிப்பது ஏன்?
Quote
 
0 #65 vino 2011-02-21 19:26
kanimozhi kaithu padrri koorungal
Quote
 
0 #64 writetoprabha 2011-02-21 16:09
எனக்கு எதுவுமே தெரியாது: பிரதமர் மன்மோகன் சிங்

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial&artid=378097&SectionID=132&MainSectionID=132&SEO=&Title
Quote
 
-8 #63 annamalaiar 2011-02-21 14:09
Yes, puthiyavan Raj. You are 100% correct. Why savukku is not writing anthing against Jeyalalatha ? Quoting Puthiyavan Raj:
தமிழ் நாட்டின் உண்மையான பூலான் தேவி தலித்துகளுக்கான இடத்தை அபகரித்து, அந்த இடத்தில் 40 படுக்கை அறை கொண்ட அரண்மனை வீட்டை கட்டி இருக்கிறார். மலைபிரதேசத்தில் ஒரு வெள்ளை மாளிகை போன்ற அரண்மனை. சவுக்கு போன்ற பத்திரிகையாளர்க ள் மீது ஆட்சிக்கு வந்த ஒரே வருடத்தில் 125 க்கும் மேற்பட்ட அவதூறு வழக்குகள் போட்டு வெறியாட்டம் போட்டவர். கோப்பில் கையெழுத்து போடவில்லை என்பதற்காக ஒரு பெண் ஐஏஎஸ். அதிகாரியின் முகத்தில் அமிலம் அடிக்கப்பட்டது அந்த பூலான் தேவியின் வெறியாட்டத்தில் ஒன்று. கோவிலை விட புனிதமான கல்விக்கூடத்தை (பெண்கள் கல்லூரியை) இடிப்பேன் என்று ஆணவ ஆட்டம் போட்டவர். அந்த பூலான் தேவி யார்? சவுக்கு வாசகர்கள் புத்திசாலிகள். புரிந்து கொள்வார்கள். அந்த பூலான் தேவியை முதல்வராக்க சவுக்கு துடிப்பது ஏன்?
Quote
 
+1 #62 sivan 2011-02-21 13:13
please boycott nakeeran as its owners kamaraj and gopal are karunanidis agents who have amassed huge wealth in the last 5 years

Quoting sakthy:
நன்றி சவுக்கு. சவுக்கின் இந்த தமிழக பூலான்தேவி பற்றி எனக்கு தெரிந்தவர்கள் சிலரிடம் காட்டியதில் நூறு கனிமொழி ஆதர்வாளர்கள்,(ச ங்கமம் ஆதரவாளர்கள்) தி.மு.க.விற்கு கொடுத்து வரும் ஆதரவை விலக்கி கொண்டுள்ளார்கள் .கண் மூடி இருந்ததற்காக வருத்தப்பட்டார் கள். இதை தொலைபேசி மூலம் செய்ய முடிந்ததென்றால் நேரில் எத்தனை பேரின் கண்ணை திறக்கலாம் என்பதை நாம் எண்ணிப் பார்த்து உடனே செயல்பட வேண்டும்.
நக்கீரன் பத்திரிகை விஷயத்தில் கவனம் தேவை.நடுநிலை என்று கூறிக் கொண்டு,ஜெயலலிதா மீதுள்ள வெறுப்பினால்
கருணாநிதி,கனிமொ ழி,போலி பாதிரி காஸ்பருக்கு சார்பாக செயல்படுகிறது. பணத்திற்கும்,வி ருதுகளுக்கும்,ப ுகழுக்கும் அடிமையானவனிடம் நடுநிலையை எதிர்பார்க்க முடியாது.
அதனால் சாவுக்கு போன்ற நடுநிலை உண்மை வெளியிடும் ஊடகங்களின் செய்திகளை மக்களிடம் கொண்டு செல்வோம். ஊழல்,லஞ்சம்,அரா ஜகம்,சட்ட நீதி மீறல்களை ஒழிக்க மக்களின் கண்களை திறக்க கருத்துக்களை சொல்வதுடன் நில்லாது செயலில் ஈடுபடுவோம்.
எகிப்திய போராட்டம் வெற்றி பெற்றது போல் நிச்சயம் நம் அநீதிக்கு எதிரான போராட்டம் வெல்லும். இந்த போராட்டத்தின் வெற்றி நம் ஈழ உறவுகளுக்கும் வெற்றிக்காதவை திறக்க பயன் படும்.
Quote
 
+2 #61 sivan 2011-02-21 12:58
puthiyavan could be one of karunanidis offsprings or nakeeran kamaraj

Quoting Puthiyavan Raj:
தமிழ் நாட்டின் உண்மையான பூலான் தேவி தலித்துகளுக்கான இடத்தை அபகரித்து, அந்த இடத்தில் 40 படுக்கை அறை கொண்ட அரண்மனை வீட்டை கட்டி இருக்கிறார். மலைபிரதேசத்தில் ஒரு வெள்ளை மாளிகை போன்ற அரண்மனை. சவுக்கு போன்ற பத்திரிகையாளர்க ள் மீது ஆட்சிக்கு வந்த ஒரே வருடத்தில் 125 க்கும் மேற்பட்ட அவதூறு வழக்குகள் போட்டு வெறியாட்டம் போட்டவர். கோப்பில் கையெழுத்து போடவில்லை என்பதற்காக ஒரு பெண் ஐஏஎஸ். அதிகாரியின் முகத்தில் அமிலம் அடிக்கப்பட்டது அந்த பூலான் தேவியின் வெறியாட்டத்தில் ஒன்று. கோவிலை விட புனிதமான கல்விக்கூடத்தை (பெண்கள் கல்லூரியை) இடிப்பேன் என்று ஆணவ ஆட்டம் போட்டவர். அந்த பூலான் தேவி யார்? சவுக்கு வாசகர்கள் புத்திசாலிகள். புரிந்து கொள்வார்கள். அந்த பூலான் தேவியை முதல்வராக்க சவுக்கு துடிப்பது ஏன்?
Quote
 
-2 #60 ஏகா.. 2011-02-21 10:18
\\\...டேய் என்னமா எழுதுறிங்க. நான் திமுகவுக்கு அல்லைகைனா நீங்க வேற எதாவது கட்சிக்கு அல்லக்கை வேலை பாக்கம என்ன சிரைகிரிங்களா? எல்லாரும் ஏதோ ஓரு விதத்தில் யாருக்கோ அல்லக்கை தான். சவுக்கு நினைக்கிற மாதிரி நடக்காது..///..
நீ யாருக்கு வேணுமின்னாலும் அல்லக்கையாக இருந்துவிட்டு போ.. ஆனால் மனசாட்சியோடு நடந்து கொள், ஒன்னு மட்டும் நல்ல தெரியிது அந்த வேடதாரிக் கூட்டத்தின் மூலம் உன‌க்கு நல்ல ஆதாயம் பெற்று இருக்க
Quote
 
+1 #59 haja hameed saleem 2011-02-21 00:04
Please don't compare Poolan Devi with Khani mozhi. Poolan devi is an activist who fought for backward class people.
Quote
 
-21 #58 Puthiyavan Raj 2011-02-20 19:32
தமிழ் நாட்டின் உண்மையான பூலான் தேவி தலித்துகளுக்கான இடத்தை அபகரித்து, அந்த இடத்தில் 40 படுக்கை அறை கொண்ட அரண்மனை வீட்டை கட்டி இருக்கிறார். மலைபிரதேசத்தில் ஒரு வெள்ளை மாளிகை போன்ற அரண்மனை. சவுக்கு போன்ற பத்திரிகையாளர்க ள் மீது ஆட்சிக்கு வந்த ஒரே வருடத்தில் 125 க்கும் மேற்பட்ட அவதூறு வழக்குகள் போட்டு வெறியாட்டம் போட்டவர். கோப்பில் கையெழுத்து போடவில்லை என்பதற்காக ஒரு பெண் ஐஏஎஸ். அதிகாரியின் முகத்தில் அமிலம் அடிக்கப்பட்டது அந்த பூலான் தேவியின் வெறியாட்டத்தில் ஒன்று. கோவிலை விட புனிதமான கல்விக்கூடத்தை (பெண்கள் கல்லூரியை) இடிப்பேன் என்று ஆணவ ஆட்டம் போட்டவர். அந்த பூலான் தேவி யார்? சவுக்கு வாசகர்கள் புத்திசாலிகள். புரிந்து கொள்வார்கள். அந்த பூலான் தேவியை முதல்வராக்க சவுக்கு துடிப்பது ஏன்?
Quote
 
+12 #57 kuppusamy 2011-02-20 18:41
Quoting yuva krishna:
டேய் என்னமா எழுதுறிங்க. நான் திமுகவுக்கு அல்லைகைனா நீங்க வேற எதாவது கட்சிக்கு அல்லக்கை வேலை பாக்கம என்ன சிரைகிரிங்களா? எல்லாரும் ஏதோ ஓரு விதத்தில் யாருக்கோ அல்லக்கை தான். சவுக்கு நினைக்கிற மாதிரி நடக்காது இப்போ ப மா க வும் எங்க பக்கம் வன்னியர்+தலித் ஓட்டு மொத்தமும் எங்களுக்கே. அது மட்டும் இல்லாம தேர்தல் நேரத்தில் மக்களுக்கு இந்த ஸ்பெக்ட்ரம் பத்தி எல்லாம் கவலை இருக்காது. இலவச தொலைக்காட்சி, காப்பீடு இன்னும் எத்தனையோ செஞ்சிருக்கார் எங்க தலைவர் அந்த வோட்டையும் சேத்திகோ. அது மட்டும் இல்லாம காசு வாங்கி ஓட்டு போடா ஓரு கூட்டமே இருக்கு.
-லக்கிலுக்கு

உன்னை போல் மலம் திங்கும் பன்றிகள் தான் கொள்ளை கூட்ட தலைவனின் காலை நாக்கி பிழைகிறீர்கள். நீ மனசாட்சி உள்ள மனிதனாக இருந்தால் நிச்சியம் இந்த ஊழல் வாதியை ஆதரிக்க மாட்டாய். ஜெவும் ஒன்றும் யோக்கியம் இல்லை. ஆனால் இன்றைய சூழலில் இந்த கொள்ளை கூட்டத்தை அடக்க அவர் ஆட்சிக்கு வர வேண்டும்.இந்த பணால் மாக்கன் (ப ம க) ஒன்றுக்கும் உதவாது தம்பி. வன்னியர்களே அவனுக்கு ஒட்டு போட மாட்டார்கள். அவனுக்கு தேவை எல்லாம் அன்பு"மணி" க்கு ஒரு சீட்... சட்டசபை எல்லாம் சும்ம்மா......
Quote
 
+2 #56 somasundaram 2011-02-20 16:46
Enna kanravida ethu. Ethanai panam etharkku. Nimmathi ellayae. Sakappora vayasilavathu nimmathi vendamma.

Entha mogaththodu, thirumba vote keka varanga. Adak kadavulae.
Quote
 
+1 #55 PrabaaDaasan 2011-02-20 15:16
Quoting periyar:
யார் அந்தத் ‘முக்கியத் தலைவர் ' ?
ஓர் இரவு, முக்கியத் தலைவர் தூக்கம் பிடிக்காமல் முன்னும் பின்னும் நடக்கிறார். வெளியிலே இருவர் போயிருக்கிறார்க ள். அவர்களை அவர் எதிர்ப்பார்த்து க் கொண்டிருக்கிறார ். மணி பத்தடிக்கிற்அது . பதினொன்று! கோயிலில் அர்த்த ஜாம மணி அடிக்கிறது. மணி பனிரெண்டு! அதற்குள் தலைவர் ஏழெட்டுத் தடவை வெற்றிலை போட்டுத் துப்பிவிட்டார். அதோ அவர்கள் வரும் சத்தம் கேட்கிறது.
கதவு திறக்கப்படுகிறத ு. மூன்று ஆடவர்கள் உள்ளே நுழைகிறார்கள். “ஆடவர்கள்தானா? அழகு மயில் வரவில்லையா!” ஓர் ஆடவனின் தலைக்கட்டு

என்னங்க அந்த முக்கிய தலைவரை தெரியாதா ?. அமுக்கியத்தை மறைக்கமுடியாமல் , இப்போ முக்கி முனங்கிக்கொண்டு மக்களுக்கு முக்கியமில்லாத புள்ளியாகிவிட்ட அந்த புள்ளிதானே ?.
Quote
 
+19 #54 Kumar.T 2011-02-20 07:47
Quoting yuva krishna:
டேய் என்னமா எழுதுறிங்க. நான் திமுகவுக்கு அல்லைகைனா நீங்க வேற எதாவது கட்சிக்கு அல்லக்கை வேலை பாக்கம என்ன சிரைகிரிங்களா? எல்லாரும் ஏதோ ஓரு விதத்தில் யாருக்கோ அல்லக்கை தான். -லக்கிலுக்கு

உன்னைய மாதிரியே மத்தவங்களும் எச்ச பொறுக்கியா தான் இருப்பாங்கனு நெனைச்சிடியா... நாளைக்கி அம்மா ஆட்சில தவறு நடந்தாலும் சுட்டி காட்டுவோம்...

ஆமா உங்க தலைவரோட மூணாவது பொண்டாட்டி வீடுல கக்குஸு கழுவுனவன், சமையல்காரன், AC ரிப்பேர் பாக்குறவன் எல்லாம் பெரிய தொழில் அதிபர்களா ஆகிடாங்கலாம், நீ இங்க வீணா குலைகரத விட்டுட்டு பேசாம அங்க போய் உன் விசுவாசத காட்டினா பெரிய லெவலுக்கு போகலாம்..

போ போ ... போ ராசா.
இங்க வந்து பேசுறதா இருந்தா விசயத்தோட வந்து பேசு..
Quote
 
+8 #53 smahesh 2011-02-20 03:29
Copied From Kumudam :

அது எப்படிப்பா. நோட்டீஸ் கொடுத்து விசாரிக்காம கொள்ளாம எப்படி திடீர்னு வந்து வீட்டுக்கு முன்னாடி சி.பி.ஐ.நிப்பாங்க.இது என்ன 500 ரூபாய் பிக்பாக்கெட் அடிச்ச விவகாரமா என்ன?1.76ஆயிரம் கோடியாச்சே" வெள்ளந்தியாக கேட்டார் சித்தன்.

''அந்த சம்பிரதாயம் எல்லாம் ரகசியமாகவே முடிஞ்சுடுச்சுப ்பா. நமக்குதான் தகவல் தெரியல. பத்தாம் தேதி சி.பி.ஐ. நீதிமன்றத்துக்க ு மொத்த விசாரணை பற்றிய அறிக்கைய கொடுக்கணும். அந்த ரெண்டு பேர்கிட்ட மட்டும் விசாரிக்காம போனா அதுவே பெரிய சிக்கலாயிடும். பிரதமரைதான் கேள்வி கேட்பாங்க.நம்ப சிங் என்ன அவ்வளவு லேசுப்பட்டவரா!ந மக்கெதுக்கு வம்புன்னு சி.பி.ஐ.யை பாயச் சொல்லிட்டாரு. அதன் பிறகு டெல்லி அதிகாரிகிட்டயிர ுந்து உரியவருக்கு 'இப்படி ஒரு சிக்கல் வந்துடக்கூடாது. விசாரிச்சே ஆகணும். ஒத்துழைப்பு வேண்டும். தகவல் பெரிய செய்தியாவதை நாங்களும் விரும்பவில்லை' தான்னு சொல்லியிருக்காங ்க.அதன் பிறகு ஒரு நாள் பெரியவர் தன்னோட இருந்த படைகளை எல்லாம் வேறு வேலைகள் பக்கம் திசை திருப்பிவிட்டு காலனி வீட்டுக்கு சென்றார்.சொன்னபடியே ஐந்து அதிகாரிகள் ஆடம்பரம் இல்லாமல் வந்திருந்தார்கள ்.அனைவரும் பெங்களூர் அதிகாரிகள். சாட்சி கையெழுத்து போட மட்டும் ஒரே ஒரு தமிழ் அதிகாரி.அவரும் ரகசியமாகவே வரவழைக்கப்பட்டா ராம்.மொத்தம் நூறு கேள்விகள் கேட்கப்பட்டதாம் . அம்மாவிடம் இருந்து மூன்றுக்குதான் பதில். மகளிடம் இருந்து எழுபது கேள்விகளுக்கு பதில்.விபரமா எழுதி சீல் போட்டு எடுத்துகிட்டு போய் ரொம்ப நாள் ஆச்சு.அடுத்தக்கட்ட ஆக்ஷனுக்குதான் காத்துகிட்டு இருக்கு.ஒரு விஷயம் மட்டும் நல்லா கேட்டுக்கோங்க.
'போகுது... ஈழத் தமிழர்களின் உயிர் போகுது, காப்பாத்துங்கன் னு சனங்க கத்தினது அப்போ பெரியவரு காதுல விழல.இப்போ அவர் கத்துறது டெல்லி காதுல விழல.டெல்லி அம்மா அழற சத்தம் பி.ஜே.பி-கம்யூனிட்டுங்க காதுல விழமாட்டேங்கிறத ு.இதான் வரலாறு திரும்புதுன்னு சொல்வாங்க போல'' என்று அர்த்த புஷ்டியோடு சிரித்தார் சுவருமுட்டி சுந்தரம். சபை கலைந்தது.
Quote
 
0 #52 raju 2011-02-20 01:14
sila kalam singapore tamilmurasil velai paarthal ,ankey ena kolai adithalo ?
Quote
 
+2 #51 ♠புதுவை சிவா♠ 2011-02-19 23:36
குமார. இரவிக்குமார் 2011-02-19 05:51
சகோதரி பூலாந்தேவி கொள்ளைக்காரி அல்ல. அவர் ஒடுக்கப்பட்ட இனத்தின் அடையாளம். அவர் கொள்ளை அடிக்கவும் இல்லை. கொலை செய்யவும் இல்லை. தனக்கு ஏற்பட்ட நிகழ்வுகளுக்கு, எதிரிகளுடைய முறையிலேயே பதில் அளித்தார். தண்டனை அளித்தார். அவரை இந்தியாவின் எந்த அரயல்வாதியோடும் ஒப்பிடுவது நியாயமற்றது. சகோதரி பூலான் தேவியை கொலைகாரி - கொள்ளைக்காரி என ஆதிக்க சாதிகளும் அயோக்கிய முதலாளித்துவ பத்திரிக்கைகளும ் "குறிப்பிடுவதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் சவுக்கு இவ்வாறு குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. தலைப்பையும் இந்தக்கட்டுரையி ல் வரும் பூலான் தேவி என்ற பெயரையும் நீக்குங்கள். அதுவே ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் வஞ்சிக்கப்பட்ட பெண்ணினத்திற்கு ம் நீங்கள் செய்யும் மரியாதை. குமார. இரவிக்குமார்."

சவுக்கு, தோழர் இரவிக்குமாரின் கருத்து உண்மையானது.
Quote
 
-36 #50 yuva krishna 2011-02-19 23:19
டேய் என்னமா எழுதுறிங்க. நான் திமுகவுக்கு அல்லைகைனா நீங்க வேற எதாவது கட்சிக்கு அல்லக்கை வேலை பாக்கம என்ன சிரைகிரிங்களா? எல்லாரும் ஏதோ ஓரு விதத்தில் யாருக்கோ அல்லக்கை தான். சவுக்கு நினைக்கிற மாதிரி நடக்காது இப்போ ப மா க வும் எங்க பக்கம் வன்னியர்+தலித் ஓட்டு மொத்தமும் எங்களுக்கே. அது மட்டும் இல்லாம தேர்தல் நேரத்தில் மக்களுக்கு இந்த ஸ்பெக்ட்ரம் பத்தி எல்லாம் கவலை இருக்காது. இலவச தொலைக்காட்சி, காப்பீடு இன்னும் எத்தனையோ செஞ்சிருக்கார் எங்க தலைவர் அந்த வோட்டையும் சேத்திகோ. அது மட்டும் இல்லாம காசு வாங்கி ஓட்டு போடா ஓரு கூட்டமே இருக்கு.
-லக்கிலுக்கு
Quote
 
+3 #49 SK 2011-02-19 22:43
enna oru polappu da sami....UAE la kari thuppuranuvo.....
Quote
 
-24 #48 யுவகிருஷ்ணா 2011-02-19 21:56
அல்லக்கைகள் எல்லாம் கருத்துச் சொல்ல வந்தாச்சா?
Quote
 
+6 #47 அநானி 2011-02-19 19:50
சேற்றில் செந்தாமரை மட்டும் மலர்வதில்லை. அதில் புரளும் சென்மங்களும் உள்ளன
Quote
 
+9 #46 ஒண்ணும் புரியாதவன் 2011-02-19 19:10
"ஒரு மூத்த பத்திரிக்கையாளர ், நேரடியாக கனிமொழியிடமே, ‘நீங்கள் சேற்றில் மலர்ந்த செந்தாமரை’ என்றார்."
அந்தச் சேறு எது என்று சொன்னாரா?
Quote
 
+1 #45 கோவை பிரியன் 2011-02-19 17:20
பரிவர்த்தனை நடைபெற்றது 2006 ம் வருடம் ஆ?????
Quote
 
-27 #44 Ashraf 2011-02-19 17:13
WHY DONT YOU MENTION IN THE MOTHER OF POOLANDEVI - JAYALALITHA & SASIKALA
Quote
 
+6 #43 Force 2011-02-19 16:19
Vacant lands near Globus, LB Road, Besant Nagar, and Opposite to Church in ECR Road are all rumored as their penamy properties.
Quote
 
+10 #42 DMK THONDAN 2011-02-19 16:16
intha thevidiya mundaikku yennaikku M.P. Post koduthu Arasiyalukku kondu vanthano annaikku D.M.K.vukku alivu arambam ayidichi.Moonchiyai parhta podikku pugaiyilai kidaikkatha moonchi .Busstand oosi kirakki mathiri irukka.Ivalaiyum iva atha rasathiyaiyum pudichu thigar jailla podanaum
Quote
 
+8 #41 Devendrar 2011-02-19 16:15
Can Savukku send those information to the CBI? Anyway Kani aunty will be quizzed by CBI soon, this will be helpful at that time.. She should be ********** by tamil people
Quote
 
+13 #40 periyar 2011-02-19 16:05
யார் அந்தத் ‘முக்கியத் தலைவர் ' ?
ஓர் இரவு, முக்கியத் தலைவர் தூக்கம் பிடிக்காமல் முன்னும் பின்னும் நடக்கிறார். வெளியிலே இருவர் போயிருக்கிறார்க ள். அவர்களை அவர் எதிர்ப்பார்த்து க் கொண்டிருக்கிறார ். மணி பத்தடிக்கிற்அது . பதினொன்று! கோயிலில் அர்த்த ஜாம மணி அடிக்கிறது. மணி பனிரெண்டு! அதற்குள் தலைவர் ஏழெட்டுத் தடவை வெற்றிலை போட்டுத் துப்பிவிட்டார். அதோ அவர்கள் வரும் சத்தம் கேட்கிறது.
கதவு திறக்கப்படுகிறத ு. மூன்று ஆடவர்கள் உள்ளே நுழைகிறார்கள். “ஆடவர்கள்தானா? அழகு மயில் வரவில்லையா!” ஓர் ஆடவனின் தலைக்கட்டு அவைழ்க்கப்படுகி றது. ஆண் உடைகள் களையப் பெறுகின்றன. என்ன ஆச்சரியம்! அந்த உடைக்குள் ஓர் அழகிய மயிலல்லவஅ ஒளிந்து கொண்டிருக்கிறது . அழைத்து வந்தோர் குறிப்பறிந்து வெளியேறுகிறார்க ள். பகுத்தறிவுத் தலைவரின் அறை பண்டாரச் சன்னியின் மடமாகிறது. பொழுது விடிவதற்குமுன்ன ே பூவை திரும்புகிறாள்.
Quote
 
+13 #39 periyar 2011-02-19 16:02
யார் அந்தத் ‘துள்ளுத்தமிழ்த ் தோழன்' ?

சென்னை ராயப்பேட்டையின் குறுகலான சந்து. அந்தச் சந்திலேதான் அந்தப் பெண்ணின் தகப்பனாரான நாட்டு வைத்தியர், தன் மூன்று பெண் மக்களோடு குடியிருந்தார். மூத்த பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் உண்டு. மற்றும் இருவர் கன்னியர். அவனும் அந்தத் ‘துள்ளுத்தமிழ்த ் தோழனும்’ இன்னும் ஒரு தற்கால எம்.எல்.ஏ.யும் இரவு 9 மணிக்கு அந்த வீட்டில் நுழைந்தார்கள்.....?

மூவருக்குமாக ரூபாய் நூற்றைம்பது தரப்பட்டது. இளைய பெண்ணொருத்தியை அந்தப் பிரமுகர் சேர்த்துக் கொண்டார். அந்தச் சிறிய வீடு, மறைவு தட்டிகளால் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது . இரவு பதினொரு மணி இருக்கும். ஒரு பகுதியிலிருந்து பரபரப்பஅன பேச்சுக்குரல் எழுந்தது. நேரம் ஆக ஆக, அது வாக்குவாதமாக வளர்ந்தது. ‘கலாரசிகர்’ வெளியிலே வந்தார். கையிலிருந்த துண்டைத் தலையிலே கட்டிக்கொண்டார் . நாட்டு வைத்தியிரைத் தட்டி எழுப்பினார்.
“உன் பெண் சரியாக நடந்துகொள்ளவில் லை. மரியாதையாகப் பணத்தைத் திருப்பிக்கொடு” என்றார். “போலீசைக் கூப்பிடுவேன்” என்று மிரட்டினார். போலீஸ் வந்தால் தன் கதி என்ன என்பதை அந்தக் கலாரசிகர் மறந்தே போனார். இறுதியில் ரூபாய் நூற்றைம்பதையும் பெற்றுக்கொண்டு தான் ஆளை விட்டார். பின், ஒரு வாரம்வரை அதை ஒரு வெற்றி விழாவாகவே அவர் கொண்டாடினார். அந்த ரூபாயும் அன்று மிஞ்சியதுதானே தவிர, அடுத்து அதே மாதிரிக் காரியத்திற்குத் தான் பயன்பட்டதது
Quote
 
+12 #38 கணியன் 2011-02-19 15:55
Quoting THAKIDUTHATHAM:
உறவுகளே வணக்கம்.......!
இது அவசரமான தருணம். வருகிற தேர்தலில் காங்கிரசையும், கருணாவையும்
விரட்ட வேண்டிய தருணம். இது இனவாதம் செய்துகொண்டிருக ்கிற நேரம் அல்ல.......!!
துரோகக்கூட்டணிய ை வீழ்த்த நம்மால் முடிந்ததை செய்வோம்........!
சில யோசனைகள்:
*துண்டு அறிக்கை மூலம் மக்களை தெளிவு படுத்துவோம்.....!!]
* குறுஞ்செய்தி அனுப்புவோம்.......!
* குறுந்தகடு கொடுத்து விழிப்புணர்வு பெறச் செய்வோம்.
*மின்னஞ்சல் செய்து துரோகக்கூட்டணிய ை வீழ்த்துவோம்....
*ஆர்குட்,பேஸ்பு க் முதலியவற்றிலும் ,நமது சமூங்களிலும் காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டாம் என எழுதி வைப்போம்....!
*அலைபேசி ப்ளுடூத் வாயிலாக நண்பர்களுக்கு பரப்புவோம்!
இன்னும் எவ்வளவோ செய்யலாம்......!! நாம் நினைத்தால் காங்கிரசை வீழ்த்த முடியும்.......!!
களமாட வாருங்கள்..........!! இனவாதம் வேண்டாம்..........!!
என் ஒன்றரை லட்சம் உறவுகளை கொல்லும்போது, ஒன்றுமே செய்யாமல் இருந்த நான் பாவி...........!!
எனக்கு என்ன பயம்...........???????????
" தமிழா..! நீ...! 'பிறந்தோம்! வாழ்ந்தோம்! இறந்தோம்!' என்ற நாய் வாழ்க்கை வாழாதே...!
நீ ! பிறந்த உன் அன்னை தமிழினத்துக்காக ஏதாவது செய்யடா ..!!"
தாய்த்தமிழ் உறவன்,

இதைத்தான் நண்பரே நானும் சொல்றேன். நக்கீரன், ஜூ.விகடன் மாதிரி படிச்சிட்டு சும்மா இருக்க நாங்க சவுக்கு படிக்க வரலை. ஒரு வலுவான சக்தியை திரட்ட வேண்டும். அதை ஆட்சி மாற்றத்திற்கு அப்புறமும் தொடர வேண்டும்.
Quote
 
+12 #37 ஆனந்த் 2011-02-19 15:53
தோண்டத் தோண்ட இன்னும் வந்துக் கொண்டே இருக்கும் போலும். 5 வருட ஆட்சியைக் கையில் ஒப்படைத்ததற்கே இப்படியா. இன்னும் 5 வருடம் என்றால் தாங்காது என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.
Quote
 
+5 #36 savukku fan 2011-02-19 15:50
Quoting Name:
KSR Engineering College , Kongunadu Engineering College
in the Namakkal Dt

pathavechitiyae paratae! savukku konjam Erode, Salem, Namakkal pakkam vanga.. kovai la 5 star hotel katuramathiri, ingellam college/school than! salem la irukura thaniyua maruthuva kalloriki adutha aappu nu rumor!
Quote
 
+2 #35 savukku fan 2011-02-19 15:44
Quoting Name:
KSR Engineering College , Kongunadu Engineering College
in the Namakkal Dt

pottu odachitiyae parattai. Salem, Erode, Namakkal pakkam vanga savukku, intha college ellam vangitangalam. salem la irukura thaniyar maruthuva kaloorikum aappu vechirukanga.
Quote
 
+14 #34 sakthy 2011-02-19 15:40
நன்றி சவுக்கு. சவுக்கின் இந்த தமிழக பூலான்தேவி பற்றி எனக்கு தெரிந்தவர்கள் சிலரிடம் காட்டியதில் நூறு கனிமொழி ஆதர்வாளர்கள்,(ச ங்கமம் ஆதரவாளர்கள்) தி.மு.க.விற்கு கொடுத்து வரும் ஆதரவை விலக்கி கொண்டுள்ளார்கள் .கண் மூடி இருந்ததற்காக வருத்தப்பட்டார் கள். இதை தொலைபேசி மூலம் செய்ய முடிந்ததென்றால் நேரில் எத்தனை பேரின் கண்ணை திறக்கலாம் என்பதை நாம் எண்ணிப் பார்த்து உடனே செயல்பட வேண்டும்.
நக்கீரன் பத்திரிகை விஷயத்தில் கவனம் தேவை.நடுநிலை என்று கூறிக் கொண்டு,ஜெயலலிதா மீதுள்ள வெறுப்பினால்
கருணாநிதி,கனிமொ ழி,போலி பாதிரி காஸ்பருக்கு சார்பாக செயல்படுகிறது. பணத்திற்கும்,வி ருதுகளுக்கும்,ப ுகழுக்கும் அடிமையானவனிடம் நடுநிலையை எதிர்பார்க்க முடியாது.
அதனால் சாவுக்கு போன்ற நடுநிலை உண்மை வெளியிடும் ஊடகங்களின் செய்திகளை மக்களிடம் கொண்டு செல்வோம். ஊழல்,லஞ்சம்,அரா ஜகம்,சட்ட நீதி மீறல்களை ஒழிக்க மக்களின் கண்களை திறக்க கருத்துக்களை சொல்வதுடன் நில்லாது செயலில் ஈடுபடுவோம்.
எகிப்திய போராட்டம் வெற்றி பெற்றது போல் நிச்சயம் நம் அநீதிக்கு எதிரான போராட்டம் வெல்லும். இந்த போராட்டத்தின் வெற்றி நம் ஈழ உறவுகளுக்கும் வெற்றிக்காதவை திறக்க பயன் படும்.
Quote
 
+4 #33 manikandan 2011-02-19 14:04
CBI savukku we congrats to your great work done in past few months.my congrats ur work should continue in future
Quote
 
+4 #32 raskal 2011-02-19 11:53
என்ன கொடுமை சரவணன் இது,தமிழ் நாட்டுலே பணப்புழக்கம் இல்லே !இல்லே ! ன்னு சொல்றாங்கன்னு ஏதோ மக்களுக்காக செய்யப்போனா இப்போ பூலான் தேவின்னு சொல்றாங்க
தமிழ் நாட்டுல மட்டும்தான் எல்லா பணத்தையும் செலவுசெஞ்சேன் வேற மாநிலத்தில் இல்லவே இல்லை. மக்களே நான் உங்கள் வீட்டுப்பிள்ளை நம்புங்கள்,நம்ம ்பி வோட்டுபோடுங்கள் பணம் வீடுதேடி வரும். இந்தியா வில் வேறெங்கும் கிளைகள் இல்லை.
Quote
 
+4 #31 murali 2011-02-19 11:53
Savukku. You are doing real wonderful job. Better than the boot licking contemporary magazines. tell us in which way we can help you.
Quote
 
+22 #30 கணியன் 2011-02-19 11:26
Quoting Padman:
இனிமேலும் இவங்கதான் கொள்ளைக்காரி... குற்றவாளி... அப்படின்னு சொல்லிகிட்டு இருக்கிறதோடு மட்டுமில்லாமல்... எப்படி அவற்றை திரும்ப அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்பதையும் ஆராய வேண்டும். நம்ம நாட்ல எப்பவுமே நடக்கிற மிகப்பெரிய தப்பு ஊழல் நடந்தத தெரிஞ்சிக்கிற ஆர்வம் திரும்ப அதை அரசாங்கத்திடம் ஒப்படைக்க காட்டுவதில்லை... இதுதான் எல்லா திருட்டிலும் நடக்குது. இதுவே அமேரிக்கா போன்ற நாடுகளில் நடந்திருந்தால் ஊழலுக்கு ஒத்துழைச்சவங்க சொத்தையும் சேர்த்து அரசாங்கம் எடுத்துக்கொள்ளு ம். அதனால நாம இதோட விடாம ஆப்படிக்கிற வேலையையும் செய்யணும். நம்மால முடியும்.

சவுக்கு...ஒரு வேலை செய்ய முடியுமா.. பேஸ்புக் / டிவிட்டர் ல இதற்கான வேலையை செய்யலாமா... எல்லா ஆதாரத்தையும் அங்கயும் போட்டு எப்பொழுது அரசாங்கம் திரும்ப எடுக்கப்போகுதுன ்னு கேள்வி மேல கேள்வி கேக்கலாம். அது அப்படியே வலை போல பெருசா ஆகும். இவங்கள சவுக்கு மட்டும் அடிச்சா போதுமா... வாங்க எல்லாம் சேர்ந்து பிய்ச்சி எடுக்கலாம்... அதோட விடக்கூடாது... எதிர்கட்சியில ஒரு எம்பி கூடவா நாட்டுமேல அக்கறையில்லாம இருப்பாங்க. அவங்கள பயன்படுத்தி திரும்ப திரும்ப நாடாளுமன்றத்தில ் கேள்வி கேக்கலாம்... பிஜேபி மேலயும் நம்பிக்கையில்லை . அருண் செளரி சொன்ன பிறகு பிஜேபி மேலயும் வெறுப்பா இருக்கு. இனிமேல் சாவுக்க எடுத்து சகட்டுமேனிக்கு அடிக்கணும். கூட நானும் வருவேன்... வேடிக்கைபார்க்க அல்ல... கூட சேர்ந்து அடிக்க. என்ன... நான் சொல்வது சரிதானே தோழர்களே...? சவுக்கு உன்னையும்தான் கேட்கிறேன்....

இதைத்தான் நண்பரே நானும் சொல்றேன். நக்கீரன், ஜூ.விகடன் மாதிரி படிச்சிட்டு சும்மா இருக்க நாங்க சவுக்கு படிக்க வரலை. ஒரு வலுவான சக்தியை திரட்ட வேண்டும். அதை ஆட்சி மாற்றத்திற்கு அப்புறமும் தொடர வேண்டும்.
Quote
 
+5 #29 wesley 2011-02-19 11:21
tamilagathin wikileak..........savukku...vaazhga......valarga
Quote
 
+15 #28 unmai 2011-02-19 11:19
என்னடா சவுக்கு பதிங்குடிச்சே ஒரு வாரமானு யோசிச்சிட்டு இருந்தேன்..புலி பதுங்குறது பாயதாணு சொல்லிடுச்சி.. நீ பாயும் புலி..
Quote
 
-22 #27 Sirutha 2011-02-19 11:13
how dare you put poolan devi name to compare with kanimozi. So you proved how vengeance you have about dalits. So far we thinking that you are speak against corruption but your every thoughts is against dalits. how come we believe you are really against raja's corruption rather than he belongs to dalit. you pervert.......
Quote
 
+6 #26 V.Jai 2011-02-19 11:07
A new revolution should raise in our country. Then only we can remove such a kind people from the world.
Quote
 
+6 #25 THAKIDUTHATHAM 2011-02-19 10:48
உறவுகளே வணக்கம்.......!
இது அவசரமான தருணம். வருகிற தேர்தலில் காங்கிரசையும், கருணாவையும்
விரட்ட வேண்டிய தருணம். இது இனவாதம் செய்துகொண்டிருக ்கிற நேரம் அல்ல.......!!
துரோகக்கூட்டணிய ை வீழ்த்த நம்மால் முடிந்ததை செய்வோம்........!
சில யோசனைகள்:
*துண்டு அறிக்கை மூலம் மக்களை தெளிவு படுத்துவோம்.....!!]
* குறுஞ்செய்தி அனுப்புவோம்.......!
* குறுந்தகடு கொடுத்து விழிப்புணர்வு பெறச் செய்வோம்.
*மின்னஞ்சல் செய்து துரோகக்கூட்டணிய ை வீழ்த்துவோம்....
*ஆர்குட்,பேஸ்பு க் முதலியவற்றிலும் ,நமது சமூங்களிலும் காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டாம் என எழுதி வைப்போம்....!
*அலைபேசி ப்ளுடூத் வாயிலாக நண்பர்களுக்கு பரப்புவோம்!
இன்னும் எவ்வளவோ செய்யலாம்......!! நாம் நினைத்தால் காங்கிரசை வீழ்த்த முடியும்.......!!
" தமிழா..! நீ...! 'பிறந்தோம்! வாழ்ந்தோம்! இறந்தோம்!' என்ற நாய் வாழ்க்கை வாழாதே...!
நீ ! பிறந்த உன் அன்னை தமிழினத்துக்காக ஏதாவது செய்யடா ..!!"

தாய்த்தமிழ் உறவன்,
Quote
 
+10 #24 THAKIDUTHATHAM 2011-02-19 10:46
உறவுகளே வணக்கம்.......!
இது அவசரமான தருணம். வருகிற தேர்தலில் காங்கிரசையும், கருணாவையும்
விரட்ட வேண்டிய தருணம். இது இனவாதம் செய்துகொண்டிருக ்கிற நேரம் அல்ல.......!!
துரோகக்கூட்டணிய ை வீழ்த்த நம்மால் முடிந்ததை செய்வோம்........!
சில யோசனைகள்:
*துண்டு அறிக்கை மூலம் மக்களை தெளிவு படுத்துவோம்.....!!]
* குறுஞ்செய்தி அனுப்புவோம்.......!
* குறுந்தகடு கொடுத்து விழிப்புணர்வு பெறச் செய்வோம்.
*மின்னஞ்சல் செய்து துரோகக்கூட்டணிய ை வீழ்த்துவோம்....
*ஆர்குட்,பேஸ்பு க் முதலியவற்றிலும் ,நமது சமூங்களிலும் காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டாம் என எழுதி வைப்போம்....!
*அலைபேசி ப்ளுடூத் வாயிலாக நண்பர்களுக்கு பரப்புவோம்!
இன்னும் எவ்வளவோ செய்யலாம்......!! நாம் நினைத்தால் காங்கிரசை வீழ்த்த முடியும்.......!!
களமாட வாருங்கள்..........!! இனவாதம் வேண்டாம்..........!!
என் ஒன்றரை லட்சம் உறவுகளை கொல்லும்போது, ஒன்றுமே செய்யாமல் இருந்த நான் பாவி...........!!
எனக்கு என்ன பயம்...........???????????
" தமிழா..! நீ...! 'பிறந்தோம்! வாழ்ந்தோம்! இறந்தோம்!' என்ற நாய் வாழ்க்கை வாழாதே...!
நீ ! பிறந்த உன் அன்னை தமிழினத்துக்காக ஏதாவது செய்யடா ..!!"

தாய்த்தமிழ் உறவன்,
Quote
 
+11 #23 அ.சந்தர் சிங். 2011-02-19 10:40
Quoting Padman:
இனிமேலும் இவங்கதான் கொள்ளைக்காரி... குற்றவாளி... அப்படின்னு சொல்லிகிட்டு இருக்கிறதோடு மட்டுமில்லாமல்... எப்படி அவற்றை திரும்ப அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்பதையும் ஆராய வேண்டும். நம்ம நாட்ல எப்பவுமே நடக்கிற மிகப்பெரிய தப்பு ஊழல் நடந்தத தெரிஞ்சிக்கிற ஆர்வம் திரும்ப அதை அரசாங்கத்திடம் ஒப்படைக்க காட்டுவதில்லை... இதுதான் எல்லா திருட்டிலும் நடக்குது. இதுவே அமேரிக்கா போன்ற நாடுகளில் நடந்திருந்தால் ஊழலுக்கு ஒத்துழைச்சவங்க சொத்தையும் சேர்த்து அரசாங்கம் எடுத்துக்கொள்ளு ம். அதனால நாம இதோட விடாம ஆப்படிக்கிற வேலையையும் செய்யணும். நம்மால முடியும்.

சவுக்கு...ஒரு வேலை செய்ய முடியுமா.. பேஸ்புக் / டிவிட்டர் ல இதற்கான வேலையை செய்யலாமா... எல்லா ஆதாரத்தையும் அங்கயும் போட்டு எப்பொழுது அரசாங்கம் திரும்ப எடுக்கப்போகுதுன ்னு கேள்வி மேல கேள்வி கேக்கலாம். அது அப்படியே வலை போல பெருசா ஆகும். இவங்கள சவுக்கு மட்டும் அடிச்சா போதுமா... வாங்க எல்லாம் சேர்ந்து பிய்ச்சி எடுக்கலாம்... அதோட விடக்கூடாது... எதிர்கட்சியில ஒரு எம்பி கூடவா நாட்டுமேல அக்கறையில்லாம இருப்பாங்க. அவங்கள பயன்படுத்தி திரும்ப திரும்ப நாடாளுமன்றத்தில ் கேள்வி கேக்கலாம்... பிஜேபி மேலயும் நம்பிக்கையில்லை . அருண் செளரி சொன்ன பிறகு பிஜேபி மேலயும் வெறுப்பா இருக்கு. இனிமேல் சவுக்க எடுத்து சகட்டுமேனிக்கு அடிக்கணும். கூட நானும் வருவேன்... வேடிக்கைபார்க்க அல்ல... கூட சேர்ந்து அடிக்க. என்ன... நான் சொல்வது சரிதானே தோழர்களே...? சவுக்கு உன்னையும்தான் கேட்கிறேன்....

இதை நான் அப்படியே வழிமொழிகிறேன்,எ கிப்தில் வந்த மக்கள் புரட்சியைப் போல் நமது நாட்டிலும் ஒரு புரட்சி வரவேண்டும்.இங்கே உள்ள திருட்டு அரசியல்வியாதிகள ்,அதிகாரிகள் அனைவரையும் ஓட ஓட விரட்டி அடிக்க வேண்டும்.அது போல ஒரு திருநாள்,நன்னாள ் மிக விரைவாக வரவேண்டும்
Quote
 
+9 #22 அ.சந்தர் சிங். 2011-02-19 10:38
""""""""""சவுக்கு...ஒரு வேலை செய்ய முடியுமா.. பேஸ்புக் / டிவிட்டர் ல இதற்கான வேலையை செய்யலாமா... எல்லா ஆதாரத்தையும் அங்கயும் போட்டு எப்பொழுது அரசாங்கம் திரும்ப எடுக்கப்போகுதுன ்னு கேள்வி மேல கேள்வி கேக்கலாம். அது அப்படியே வலை போல பெருசா ஆகும். இவங்கள சவுக்கு மட்டும் அடிச்சா போதுமா... வாங்க எல்லாம் சேர்ந்து பிய்ச்சி எடுக்கலாம்... அதோட விடக்கூடாது... எதிர்கட்சியில ஒரு எம்பி கூடவா நாட்டுமேல அக்கறையில்லாம இருப்பாங்க. அவங்கள பயன்படுத்தி திரும்ப திரும்ப நாடாளுமன்றத்தில ் கேள்வி கேக்கலாம்... பிஜேபி மேலயும் நம்பிக்கையில்லை . அருண் செளரி சொன்ன பிறகு பிஜேபி மேலயும் வெறுப்பா இருக்கு. இனிமேல் சாவுக்க எடுத்து சகட்டுமேனிக்கு அடிக்கணும். கூட நானும் வருவேன்... வேடிக்கைபார்க்க அல்ல... கூட சேர்ந்து அடிக்க. என்ன... நான் சொல்வது சரிதானே தோழர்களே...? சவுக்கு உன்னையும்தான் கேட்கிறேன்.."""""""""""""""

"""""இதை நான் அப்படியே வழிமொழிகிறேன்,எ கிப்தில் வந்த மக்கள் புரட்சியைப் போல் நமது நாட்டிலும் ஒரு புரட்சி வரவேண்டும்.இங்கே உள்ள திருட்டு அரசியல்வியாதிகள ்,அதிகாரிகள் அனைவரையும் ஓட ஓட விரட்டி அடிக்க வேண்டும்.அது போல ஒரு திருநாள்,நன்னாள ் மிக விரைவாக வரவேண்டும்""""""
Quote
 
+4 #21 சுயநலன் 2011-02-19 10:23
அன்புள்ள சவுக்கு,
கடைக்கு ஒரு நாள் விடுமுறை விட்டுவிட்டு, குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நேரம் செலவிடுங்கள்.
Quote
 
Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English

தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 35 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday3171
mod_vvisit_counterYesterday11112
mod_vvisit_counterThis week24370
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month227102
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12749221