முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
கவுன்ட்டவுனுக்கு என்ன ஆனது ? அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 31
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
ஞாயிற்றுக்கிழமை, 20 பிப்ரவரி 2011 23:33

 

கனிமொழிக்கு கைதா, சம்மனா என்று சவுக்கு தளத்தில் ஒரு கவுன்ட்டவுன் போடப்பட்டது.   இந்த கவுன்ட்டவுன், கடந்த வெள்ளியின்று முடிவடைந்தது. ஆனால், கவுன்ட்டவுன் முடியும் வரை, கைதும் நடக்கவில்லை, சம்மனும் வழங்கப் படவில்லை.

 

கோபமடைந்த சில வாசகர்கள், உனக்கு எதுக்கு இந்த வெட்டி வேலை என்று கேட்டு பின்னூட்டம் இட்டிருந்தார்கள். ஒரு வாசகர், இந்த கவுன்ட்டவுனுக்கு ஆன கதிதான் உங்களுக்கும் என்று எழுதியிருந்தார்.

 

கவுன்ட்டவுன் போடப்பட்டது, கடந்த வெள்ளியன்று முடியும் வகையில் ஏழு நாட்கள் அவகாசம் கொடுத்துப் போடப்பட்டது. இந்த கவுன்ட்டவுன், உறுதியான தகவல்களின் அடிப்படையில் போடப்பட்டது. சிபிஐ விசாரணையின் போக்கை சவுக்கு உன்னிப்பாக கவனித்து வருகிறதென்பதை, வாசகர்கள் நீங்கள் நன்கு அறிவீர்கள். அதை ஒட்டி வந்த தகவலை அடுத்தே, கவுன்ட்டவுன் போடப் பட்டது.

 

வெள்ளியன்று கனிமொழிக்கு சிபிஐ சம்மன் அளித்து இருக்க வேண்டும்.   ஆனால், தமிழ்நாட்டில் வினாடிக்கு வினாடி அரசியல் சூழ்நிலைகள் மாறி வருகின்றன. சிபிஐ ன் விசாரணையை பயன்படுத்தி காங்கிரஸ் கட்சி கணிசமான லாபத்தை அடையலாம் என்று திட்டமிட்டே காய் நகர்த்துவதாக தகவல்கள் வந்துள்ளன. கனிமொழிக்கு, சம்மன் அனுப்புவதை, கடைசி அஸ்திரமாக பயன்படுத்தலாம் என்று காங்கிரஸ் உத்தேசித்துள்ளதாகவும் தகவல் தெரிகிறது. கேட்ட எண்ணிக்கையில் சீட் கிடைக்கவில்லை என்றால், உடனடியாக சம்மன் அனுப்பதென்றும், கேட்டபடி சீட் கிடைத்து விட்டால், தாமதப் படுத்துவது என்றும் காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.

 

இத்தனை நாள் பொறுத்துப் பொறுத்து, காங்கிரஸ் கட்சியின் அட்டகாசங்களை அமைதியாக சகித்துக் கொண்டிருந்த கருணாநிதி, மூலைக்குத் தள்ளப் பட்ட பூனையைப் போன்று, எதிர்ப்பு நிலைபாடு எடுத்திருப்பதாகவும், கனிமொழிக்கு சம்மன் வந்தால், காங்கிரஸ் – திமுக கூட்டணிக்கு முடிவு என்றும் முடிவெடுத்திருப்பதாக தகவல் தெரிகின்றது. இந்நிலையில், வெள்ளியன்று அதிகாலை நடக்கவிருந்த சோதனைகள் அன்று நடைபெறவில்லை.

 

வெள்ளியன்று இரவு 12 மணிக்கு மர்மமான முறையில், பத்திரிக்கையாளர்கள் ஒருவருக்கும் தகவல் தெரிவிக்கப் படாமல், அறிவாலயத்தின் செக்யூரிட்டி முதற்கொண்டு, யாரும், வெளி நபர்களோடு தொடர்பு கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தியபடி இந்தச் சோதனை நடைபெற்றுள்ளதே, இறுதி நேர காட்சி மாற்றங்களினால் தான்.

 

வெள்ளிக் கிழமை காலை சோதனை நடைபெறப் போகிறது என்ற தகவல், சவுக்குக்கே தெரிந்திருக்கிறது என்றால், சவுக்கின் தொலைபேசியை 24 மணி நேரமும் ஒட்டுக் கேட்டுக் கொண்டிருக்கும், ஒட்டக் கூத்தருக்குத் தெரியாதா ?

 

இந்தியாவே அதிர்ந்து நிற்கும் ஒரு இமாலய ஊழலை நடத்தி முடித்து விட்டு, அது தொடர்பாக விசாரிக்கும் புலனாய்வு நிறுவனத்தை எத்தனை மணிக்கு சோதனைக்கு வரலாம், எப்படி வரலாம் என்று உத்தரவிடும் நிலையில் தான் இன்னும் திமுக இருக்கிறது.

 

ஆனால், சிபிஐ உச்ச நீதிமன்றத்துக்கு பதில் சொல்லக் கடமைப் பட்டிருப்பதால், இன்று இந்த சம்மன்கள் தள்ளிப் போகலாம். ஆனால், என்றுமே தள்ளிப் போகாது….

 

சவுக்கின் கவுன்ட்டவுன் எந்த அளவுக்கு உறுதியானது என்பதற்குச் சான்றாக, கவுன்ட்டவுன் முடிந்த அன்று வெளியான நாளிதழ்களை சவுக்கு தனது வாசகர்களுக்குச் சமர்ப்பிக்கிறது.

 IMG_0007

டெக்கான் க்ரானிக்கிள்

 

IMG_0006

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

 

IMG_0008

 

தி இந்து

IMG_0010

 

தி மின்ட்

 

 

 

 

 

 

 

 

 

 

Comments  

 
+1 #43 எகிப்து 2011-02-24 12:23
சிறிது நாள்களுக்கு முன்னர் துனிசியாவில் மக்கள் எழுச்சி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது. இப்போது சர்வாதிகார ஆட்சியாளர்களுக் கு எதிராக எகிப்து, யேமன், ஜோர்டான் நாடுகளில் மக்கள் தெருவில் இறங்கிப் போராட முற்பட்டிருக்கி றார்கள். அரபு நாடுகளில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட இருப்பதை இந்தக் கிளர்ச்சிகள் கட்டியம் கூறுகின்றன. அரபு நாடுகளில் மட்டுமா? உலகம் முழுவதும் ஆட்சியாளர்கள் நல்லாட்சி தராமல் போனால் இதுதான் அரங்கேற இருக்கும் காட்சியாக இருக்கும்!
Quote
 
 
+1 #42 Santosh 2011-02-22 19:13
weldone savukku for your excellent publication on DMK AND CONGRESS PLEASE KEEP ON DOING YOUR JOB NEW REVOLUTION WILL COME DMK WILL BE THRONE OUT
Quote
 
 
+1 #41 Santosh 2011-02-22 19:02
weldone savukku keep on publishing about dmk and congress this election will teach a lesson they will eat their own fruit all the best
Quote
 
 
-2 #40 writetoprabha 2011-02-22 12:56
Quoting MEIYAPPAN:
சன் டிவி பங்குகளில் தனக்கு அளிக்கப்பட்ட பணத்தை முதலீடு செய்து கனிமொழி கலைஞர் டிவி யில் ஒரு பங்குதாரராக மட்டும் தான் இருக்கிறார்.எந்த அடிப்படையிலும் அவரை கைது செய்ய முடியாது.வடமாநில பிராமண ஊடகங்களுக்கு தான் இது தெரியாது ஆனால் உனக்கு தெரியாதது தான் வியக்க வைக்கிறது.நீ இன்னும் கொஞ்சம் வளரனும் தம்பி.



Those who are relating religion in these issues are third class culprits. Dont you feel cheap on taking religion as a shield to protect you?
Quote
 
 
+3 #39 ramm 2011-02-22 11:56
சவுக்கை திட்டி கருத்து எழுதுபவர்களாகவே இருப்பினும், அவர்களும் சவுக்கின் வாசகர்கள்தானே!! அதுவே சவுக்கிற்கு கிடைத்த முதல் வெற்றிதானே!! இவர்கள் தான் சவுக்கு பார்பவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி கொண்டிருக்கிறார ்கள் .எனவே அவர்களுக்கு நன்றி . இவர்கள் சவுக்குவின் வெற்றிக்கு தோள் கொடுப்பவர்களாகவ ே நான் பார்க்கிறேன்
Quote
 
 
+4 #38 THAKIDUTHATHAM 2011-02-22 11:40
[quote name="விகடகவி"]நாட்டுல நாளு பேரு நாளு விதமாக பேசத் தான் செய்வானுக. அதற்கெல்லாம் அஞ்சாதீங்க சவுக்கு. இவிங்க விவேகானந்தரையும ் குற்றம் சொன்னாய்ங்க, காந்தியையும் குற்றம் சொன்னாய்ங்க. ஆனால் இவிங்க ஒன்னுமே செய்யமாட்டாய்ங் க.

இரவில் நாயெல்லாம் தெருவில் படுத்திருக்கும் . நாம நடக்குறதுக்கு காலைத் தான் தூக்குவோம், அம்புட்டு நாய்களும் எழுந்திருச்சி குறைக்க ஆரம்பிக்கும். அதுதான் இவிங்க. இவிங்க விமர்ச்சனத்துகெ ல்லாம் பயந்தா நாட்டுக்கு நல்லது பண்ணமுடியாது.

YES CORRECT
Quote
 
 
+7 #37 Seruppu 2011-02-22 09:21
ஆடிய ஆட்டமென்ன?
பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வமென்ன?
திரண்டதோர் சுற்றமென்ன?
கூடுவிட்டு ஆவிபோனால் கூடவே வருவதென்ன...?

வீடுவரை ராசாத்தி
வீதி வரை காஸ்பர்
காடு வரை ராஜா
கடைசிபிஐ வரை யாரோ?

ஆடும் வரை ஆட்டம்
லட்ச கோடியில் நாட்டம்
சங்கமம் வரும் கூட்டம்
திகார் வரை வருமா?
Quote
 
 
0 #36 CHE Mohamadh Ali 2011-02-22 02:54
Kaithadu Kanindu Kayappogirathu Tiharil.
Quote
 
 
+7 #35 sakthy 2011-02-22 02:04
countdown தாமதமே தவிர failure அல்ல. ஒரு விமானம் சரியான நேரத்திற்கு வராவிட்டால் சில காரணங்கள் இருக்கும்.அதற்காக வராது என்று சொல்ல முடியாது. எது எப்படியாயினும் சவுக்கு தமிழக விக்கிலீக்ஸ் ஆக தொடர்ந்து உண்மைகளை வெளிக் கொண்டு வரும்.எமது ஆதரவு சவுக்குக்கு என்றும் உண்டு. கர்வம் கொண்ட எகிப்தின் அதிபர் எங்கே போனார்.கடாபியின் நிலை என்ன.ஏழைகளின் கண்ணீர் சும்மா விடுமா. எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த தமிழகத்தில்...
Quote
 
 
-4 #34 Ranjani 2011-02-21 22:31
Quoting Perambalooraan:
We are expecting one More Count down from you ...

That is your joining date in AIADMK....

It is verymuch obvious that you are in support with AIADMK and for ONLY personal reasons you dislike DMK !! Dont hide you... Come On...Join in AIADMK !!!


"When a finger points to the moon, the imbecile looks at the finger." Old Chinese Proverb

I will rest my case here.
Quote
 
 
-14 #33 VIDA VIDA VARUTHU 2011-02-21 21:47
டி என் சேஷனை விட ப .சிதம்பரத்தை விட இந்து ராமை விட கலெக்டர் சந்திரலேகாவை விட ஆடிட்டர் மகாதேவனை விட சு.சாமியை விட வழக்கறிஞர் சண்முகசுந்தரத்த ை விட வழக்கறிஞர் விஜயனை விட வளர்ப்பு மகன் சுதாகரனை விட நீ ரொம்ப பெரிய ஆளா சவுக்கு. அம்மா ஆட்சிக்கு வந்தாலும் சவுக்கை நேர்மையாய் சுத்துவியோ?வாயில நல்லா வருதுப்பா கலைஞர் கொடுக்கும் கருத்து சுதந்திரத்தை அவருக்கு எதிராக பயன்படுத்தியது இது வரை பாப்பான்தான். அனால் அவர்கள் கூட அவர் குடும்பத்தை இவ்வளவு கீழ்த்தரமாக விமர்சித்ததில்ல ை.DONT MISUSE YOUR RIGHTS. :cry:
Quote
 
 
-7 #32 rajraj 2011-02-21 17:44
Jayalaitha kodanadu countdown start Savukku.
Quote
 
 
0 #31 அப்துல் ரஹ்மான் 2011-02-21 17:31
Quoting krishmurti:
Hello savukku not only this count down another count down you are displaying will also end in failure. Once again DMK will win and savukku will be ??????????



சவுக்கை திட்டி கருத்து எழுதுபவர்களாகவே இருப்பினும், அவர்களும் சவுக்கின் வாசகர்கள்தானே!! அதுவே சவுக்கிற்கு கிடைத்த முதல் வெற்றிதானே!!
Quote
 
 
-34 #30 krishmurti 2011-02-21 16:54
Hello savukku not only this count down another count down you are displaying will also end in failure. Once again DMK will win and savukku will be ??????????
Quote
 
 
-31 #29 Perambalooraan 2011-02-21 16:15
We are expecting one More Count down from you ...

That is your joining date in AIADMK....

It is verymuch obvious that you are in support with AIADMK and for ONLY personal reasons you dislike DMK !! Dont hide you... Come On...Join in AIADMK !!!
Quote
 
 
+13 #28 V.Jai 2011-02-21 14:56
we are expecting the time of kani arrest warrent.
Quote
 
 
-38 #27 MEIYAPPAN 2011-02-21 14:42
சன் டிவி பங்குகளில் தனக்கு அளிக்கப்பட்ட பணத்தை முதலீடு செய்து கனிமொழி கலைஞர் டிவி யில் ஒரு பங்குதாரராக மட்டும் தான் இருக்கிறார்.எந்த அடிப்படையிலும் அவரை கைது செய்ய முடியாது.வடமாநில பிராமண ஊடகங்களுக்கு தான் இது தெரியாது ஆனால் உனக்கு தெரியாதது தான் வியக்க வைக்கிறது.நீ இன்னும் கொஞ்சம் வளரனும் தம்பி.
Quote
 
 
+7 #26 CBI 2011-02-21 13:26
முன்னாள் அமைச்சர் அன்புமணி வீட்டில் அதிகாரியாக இருந்தவர் வீட்டில் சிபிஐ சோதனை நடைபெறுகிறது. அன்புமணி அமைச்சராக இருந்தபோது அதிகாரியாக இருந்த டி.எஸ்.முர்த்தி சென்னையில் சேத்பட்டில் வசித்து வருகிறார்.அன்புமணி அமைச்சராக இருந்த போது இந்தூரில் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கினார். இந்த அனுமதி வழங்கியதில் டி.எஸ்.மூர்த்தி முறைகேடு செய்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. டெல்லியில் இருந்து வந்த சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
Quote
 
 
-21 #25 Sirutha 2011-02-21 13:21
சவுக்கோட நடுநிலைமை ஒரு வேளை ஜெயா ஆட்சிக்கு வந்தா தெரியும், பல்ல இளிச்சிக்கிட்டு அரசியல்ல இது எல்லாம் சகஜமப்பான்னு சொல்லிட்டு அம்மா கால்ல விழுந்து கழுவிட்டு ஜால்ரா போட்டுட்டு இருக்கும். அம்மாக்கிட்ட இந்த வண்டவாளம் எல்லாம் முடியாதுல்ல அடிச்சி சுலுக்கு எடுத்து ஆளே காணாம போய்ட வேண்டியது தான். ஆட்சி மாறியவுடன் முதல் வேலையா சவுக்கு தன் முகப்பில் உள்ள அண்ணண் பிராபகரன் படத்தை எடுத்துடும். அப்புறமா பிரபாகரனா நாக்கு தெல்லுதே யாரு விஜயராஜ் நாயுடுவா அப்படின்னு கேக்கும்.
Quote
 
 
+12 #24 Force 2011-02-21 12:58
சாத்தான், பூத‌த்தை அயோக்கிய‌ன் என்று கூறுவ‌து போல் இருக்கிற‌து, சோனியா குடும்ப‌ம், க‌ருண‌நிதி குடும்ப‌த்தை அலைக்க‌ழிப்ப‌து . ஏதோ க‌ட‌வுள் போல் உச்ச‌நீதிம‌ன்ற‌ நீதிப‌திக‌ள் இதில் நேர‌டியாய் த‌ல‌யிட்ட‌தாலும ், நிராடியாவின் டேப்பு ஒரு வ‌ர‌பிர‌சாத‌மாய ் கிடைத்த‌தாலும் இந்த‌ நிலைக்கு இந்த‌ விவ‌கார‌ம் திஹார் சிறைவ‌ரை வ‌ந்திருக்கிற‌த ு. தேவ‌ தூதுவ‌ர்களாய், சுப்பிர‌மணிய‌ சுவாமி, யெச்சோரி, பிர‌சாந்த் பூஷன், டைம்ஸ் நெளவ் போன்ற‌வ‌ர்க‌ளின ் நீண்ட‌ உழைப்பு போன்ற‌வைக‌ள் தான், இந்த‌ அள்விற்காவ‌து கொண்டுவ‌ந்திருக ்கிற‌த ு. சுர‌ங்கப்பாதையி ன் முடிவில் சிறு ஒளிக்கற்றை தெரிகிறது, ஆயினும் அத‌ன் அதை அடைய ஒரு நீண்ட‌ ப‌யணம் இன்னும் இருக்கிற‌து. அத‌ற்குள் எத்த‌னை திருப்ப‌ வ‌ளைவுக‌ளோ? மக்களின் விழிப்பில் வாழ்கிற‌து ஜ‌ன‌நாய‌க‌ம்.
Quote
 
 
+3 #23 KK 2011-02-21 12:40
Congress and DMK are having talks for alliance.

Best solution for alliance is given by a reader in dinamani
"ஸ்பெட்க்ரமில் எப்படி கூட்டணி விகிதமோ அதன்படியே தொகுதிப்பங்கிட் டிலும் காங்கிரசுக்கு கொடுங்கள்"
Quote
 
 
+7 #22 அப்துல் ரஹ்மான் 2011-02-21 12:34
தமிழக விக்கிலீக்ஸ் சவுக்கின் கவுண்ட்-டவுனை பார்த்ததும் நான் நினைத்தது, சவுக்கு ஆழம் தெரியாமல் காலை விட்டு ஆர்வக் கோளாறில் கண்டதையும் எழுத ஆரம்பித்து விட்டது என்றும், கனிமொழியை கைது பண்ண யாருக்குமே துணிச்சல் கிடையாது; இந்தப் பதிவினால் சவுக்கு சும்மா ஒரு டம்மி பீசாக தன்னை கேவலப் படுத்திக் கொள்ளப் போகிறது என்றும்தான் நினைத்தேன். ஆனால், சவுக்கு ஒரு சிரிப்பு போலீஸ் அல்ல, ஒரு ஆக்க்ஷன் ஹீரோ என்று நிரூபித்து விட்டது.
Quote
 
 
0 #21 கல்கியின் நந்தகி 2011-02-21 12:23
I doubted when i heard the news that the raid was rescheduled to midnight.
Quote
 
 
+9 #20 விகடகவி 2011-02-21 11:40
நாட்டுல நாளு பேரு நாளு விதமாக பேசத் தான் செய்வானுக. அதற்கெல்லாம் அஞ்சாதீங்க சவுக்கு. இவிங்க விவேகானந்தரையும ் குற்றம் சொன்னாய்ங்க, காந்தியையும் குற்றம் சொன்னாய்ங்க. ஆனால் இவிங்க ஒன்னுமே செய்யமாட்டாய்ங் க.

இரவில் நாயெல்லாம் தெருவில் படுத்திருக்கும் . நாம நடக்குறதுக்கு காலைத் தான் தூக்குவோம், அம்புட்டு நாய்களும் எழுந்திருச்சி குறைக்க ஆரம்பிக்கும். அதுதான் இவிங்க. இவிங்க விமர்ச்சனத்துகெ ல்லாம் பயந்தா நாட்டுக்கு நல்லது பண்ணமுடியாது.
Quote
 
 
-8 #19 வெட்டி பய்யன் 2011-02-21 11:05
என்னமோ அம்மா ரொம்ப நேர்மை மாதிரி சொல்ல ஆரம்பிசிட்டங்கள ், ஒன்னும் புரியல. கடைசில நாம்தான் நாடு ரோட்டல நிக்கணும் போல
Quote
 
 
-6 #18 ARUTPERUNCHITHAN 2011-02-21 10:55
இந்த சாலாப்பையெல்லாம ் வேற யாராவது வெண்ணை போய் கிட்ட சொல்லு சவுக்கு. உன் புலனாய்வு எல்லாம் காமெடி ஆகி நாள் ஆகிவிட்டது. உண்மையை சொல் 'எனக்கு ஒரு கனவு உண்டு' என்ற பதிவை ஏன் தூக்கினாய்?.இணையத்தில் இயங்கும் வாசகர்கள் கொஞ்சம் விஷயம் தெரிந்தவர்கள் என்பதை நம்புங்க.
Quote
 
 
+2 #17 ம.பொன்ராஜ் 2011-02-21 10:35
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் சவுக்கு அவர்களே...!!! 'கவுண்டவுன்' தள்ளிப் போனதை எண்ணி குமுறல் வேண்டாம். கருணாநிதி போல, ஜெயலிதாவையோ அல்லது மற்ற இனத் துரோகிகளையோ 'கருணாநிதி குடும்பத்தை கிழிகிழி' என கிழித்த அளவுக்கு சவுக்கு சட்டை செய்தது இல்லை என்ற ஒரு சிறு வருத்தத்தை தவிர, சவுக்கின் நேர்மையை குறை சொல்ல இங்கிருக்கும் எந்த ஒரு பத்திரிக்கைகோ, நபர்களுக்கோ அருகதை கிடையாது.
Quote
 
 
+3 #16 Thendral 2011-02-21 10:25
Savukku will always Fight for the Thing Rights.... Wishes.
Quote
 
 
+2 #15 chozhavandhan 2011-02-21 10:22
egypt pola oru puratchi tamilnattu la vedikum.. aana adhu "therthal" engira amaithi puratchi.. kathirukkirom inum 2 maasam dhaanae
Quote
 
 
+2 #14 Nithi 2011-02-21 10:13
SAVUKKU - WE KNOW ABOUT YOU..... COOL...
Quote
 
 
+3 #13 மக்கள் 2011-02-21 10:11
இது நடக்கிறதோ இல்லையோ.....அனால் கேட்பதற்கு
// இன்பத்தேன் வந்து பாய்கிறது காதினிலே...
Quote
 
 
+5 #12 ஏகா.. 2011-02-21 10:00
சிபிஐ என்பது காட்டு ராஜா சிங்கம் மாதிரி இருந்தது கடைசியில் அதை தங்களின் வளர்ப்பு பிராணி ரோஞ்சுக்கு கொண்டு வந்த பொருமை அன்னை Antonia Albina வுக்கே சேரும்.. சிபிஐ அப்பாயிண்மெண்ட் கொடுத்து ரேய்டுக்கு அனுமதி வழங்கிய‌ தமிழின விடிவெள்ளி,தியா க சுடர் என பாராட்டு விழா சோனியாவின் தலைமையில், சிபிஐ இயக்குநரின் முன்னிலையில் விரைவில் மானாட மயிலாட குழுவின் குத்தாட்டத்துடன ் உங்கள கலைஞர் டிவியில் காண தவறாதீர்கள்... ஆனால் உலகத்திலயே இந்த மாதிரியான ரேய்டு எங்கும் நடந்து இருக்க வாய்ப்பில்லை...... %^&$%^&$$^^..
Quote
 
 
+4 #11 ஊர்க்குருவி. 2011-02-21 09:40
எந்த விஞ்ஞானமும் இயற்கையை பின்பற்றித்தான் பிரதிபலிப்பதுண் டு அதுதான் நியதி, கருணாவின் ஊழல் விஞ்ஞானமும் நிரந்தரமாக எதையும் நிலை நிறுத்தப்போவதில ்லை, இயற்கை எல்லாவற்றையும் நிச்சியம் சமன் செய்யும். குறைந்தது கருணாந்தியுடன் திமுக முடிவுக்கு வந்துவிடும். கனிமொழியென்ன எலிவளையென்ன எல்லாம் மாயை.
Quote
 
 
+1 #10 Tamil Naykkan 2011-02-21 09:02
thanga tharagaikku appaa, erkannve Raja, swaminathan,sin gapore mappillai, Sivakasi mappillai ena pala per appu vaithum adanga mattendraleya. Evalukku ellam Germanila kitlaru kitta solli than Appuuu seyyanum
Quote
 
 
+1 #9 kumar M 2011-02-21 08:16
you are just fantasic
Quote
 
 
-16 #8 யுவகிருஷ்ணா 2011-02-21 07:52
சவுக்கு உனக்கு வேற பொழைப்பே இல்லையா?
Quote
 
 
+39 #7 பார்த்திபன் 2011-02-21 05:53
சம்மனோ, கைதோ, கலைஞர் டிவி மீதான சோதைனையோ சீட் பேரத்தின் ஒரு பகுதியாகவே நடத்தப்படுவது போல் உள்ளது. தேவையான சீட் கிடைத்தவுடன் இவை அனைத்தும் நிறுத்தப்படும் என்றே தெரிகிறது. விஞ்ஞான ஊழலில் தேர்ந்த கலைஞர், 2ஜி - யில் தனது முழு புத்திசாலித் தனத்தைக் காட்டவில்லை - எனவே ஆதாரங்கள் அசைக்க முடியாத அளவுக்கு உள்ளன என்பதே உண்மை நிலை. ஆனால், இதற்கெல்லாம் அவர்கள் கொடுக்கப் போகும் விலை, சிறையோ தண்டனையோ அல்ல. அதிக சீட்கள் கொடுத்து, தன்னுடைய சர்வ பலத்தையும் இழந்து நிற்கும் நிலை தான். ஆனால், அதிமுக வெற்றிபெறும் நிலை அதிகமாகி உள்ளதால், ஒன்று அவர்கள் கூட்டணி ஆட்சி அமைக்கும். அல்லது, குறைவான எம்.எல்.ஏக்களைப் திமுக கூட்டணியில் பெற்று வெற்றி பெறும் காங்கிரஸ், தடாலடியாக ஜெ. வுக்கு ஆதரவளித்து (ஜெ.வுக்கு பெரும் பான்மை கிடைக்காத பட்சம்) மத்திய மாநில அரசியலில் திமுக வைக் கைகழுவி டெல்லியில் மாற்று ஏற்பாடு செய்து கலைஞருக்கு மேலும் நெருக்கடி தரும்.
Quote
 
 
+6 #6 ran 2011-02-21 05:31
What ever you say , the poor middle class only will suffer , rest wil enjoy.

Nothing is goinsome timeafter g to happen , corrupted and benefitted will enjoy
Quote
 
 
+44 #5 riazkhan 2011-02-21 02:11
அதர்மம் ஜெயிப்பது போல் தெரியும் அனால் அது நிரந்தரம் அல்ல. கருணாநிதி குடும்பம் இந்த தேர்தலில் மண்ணை கவ்வ போவது நிச்சயம். தமிழக மக்கள் கொதித்து போய் உள்ளார்கள் அந்த குடும்பத்தினர் செய்யும் ஊழல்களையும் கொள்ளை அடித்து வைத்து இருக்கும் பணத்தியும் பார்த்து. மவுன புரட்சி நிச்சயம். கொக்கரிக்கும் திமுகவினருக்கு அடுத்த அமையும் ஆட்சில் ஜெயலலிதா வைப்பார் ஆப்பு, அப்போது சவுக்கு இணையத்தளம் முழுவதும் கவுண்டர் வைக்கவே இடம் இருக்காது.
Quote
 
 
+20 #4 Trenga 2011-02-21 02:03
Dear Savukku

We are with you....please keep up your social work!!!
Quote
 
 
+38 #3 sakthy 2011-02-21 01:50
நன்றி சவுக்கு. எங்களுக்கு சவுக்கு மேல் நம்பிக்கை உண்டு.அதே சமயம் ஆட்சியின் தில்லு முல்லுகளும் நன்கு தெரிந்ததே.உயர்நீதிமன்ற உத்தரவு இல்லாதிருந்தால் இன்று இந்த ஊழல் குற்றச் சாட்டுக்கள் குப்பைதொட்டிக்க ே போயிருந்திருக்க ும்.அன்றைய என் கருத்திலும் அவசரப்பட வேண்டாம் பொறுத்திருங்கள் என்று எழுதியிருந்தேன் .
உண்மை நிச்சயம் வெளி வந்தே தீரும்.
Quote
 
 
+25 #2 unmai 2011-02-21 01:40
Savukku, you no need to worry for missing of your count down, we always believe in your information and dont worry. Please keep the momentum up and continue your job. Hats off..
Quote
 
 
+39 #1 சாது 2011-02-21 01:37
கனி கைதை ஆவலுடன் எதிர்பார்கிறேன் ......
well done savukku
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 94 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday6622
mod_vvisit_counterYesterday10391
mod_vvisit_counterThis week6622
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month209354
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12731473