முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்தொடர்புக்கு
+++
இறுதி யுத்தம். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 41
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வியாழக்கிழமை, 24 பிப்ரவரி 2011 08:32

 

ஆம் தோழர்களே… இறுதி யுத்தம் தொடங்கி விட்டது.   ப்ளாசி யுத்தம், இரண்டாம் உலக யுத்தம் போல பிரசித்தி பெற்ற யுத்தமாக இது வரலாற்றில் இடம் பிடிக்கப் போவதில்லை. ஏனென்றால் இது ஒரு கேவலமான யுத்தம்.

 

சுயமரியாதை உள்ளவனுக்கும், சூடு சொரணை அற்றவனுக்கும் நடக்கும் யுத்தத்தை கேவலமான யுத்தம் என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வீர்கள் ?

 

ஆம் தோழர்களே… இது சவுக்குக்கும், ஜாபர் சேட் என்று அழைக்கப் படும் ஒட்டக் கூத்தருக்கும் நடக்கும் இறுதி யுத்தம்.

 

யுத்தம் என்றால் யுத்த தர்மத்தை கடைபிடிக்க வேண்டும். ஓரளவுக்கு எதிரிகள் சம பலத்தில் இருக்க வேண்டும். இந்த யுத்தம் தொடங்கிய நாள் முதலாகவே சமபலத்தில் இல்லாமல் இருந்தாலும், மூன்றாண்டுகளாக நடந்து வரும் யுத்தம், இன்று இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது.

 savukku_image

ஒட்டக் கூத்தரிடம், அரசு, அதிகாரம், ஸ்பெக்ட்ரம் பணம், ஏவலாட்கள், நீதிபதிகள், ஐஏஎஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகள் என அத்தனை பேரும் இருக்கிறார்கள்.

 

சவுக்கிடம், நல்ல நண்பர்களையும், சவுக்கு வாசகர்களையும் தவிர வேறு எதுவுமே கிடையாது.

 

சவுக்கின் மீது, தொடரப்பட்ட தொலைபேசி ஒட்டுக் கேட்பு வழக்கும், துறை நடவடிக்கைகளும், மதுரவாயலில் ஒருவரை கெட்ட வார்த்தையில் திட்டி, செங்கலால் அடித்ததாக தொடரப்பட்ட வழக்கு உட்பட அனைத்து நெருக்கடிகளையும் கடந்த மூன்றாண்டுகளாக வெற்றிகரமாக சமாளித்து வர முடிந்தது.

 

சென்னை உயர்நீதிமன்றம் துறை நடவடிக்கை எடுக்க தடை விதித்திருந்த போதும், 15 நாட்களுக்கு முன்பாக சவுக்கு, லஞ்ச ஒழிப்புத் துறையிலிருந்து ‘டிஸ்மிஸ்’ செய்யப் பட்ட உத்தரவு, சவுக்கின் கதவில் ஒட்டப் பட்டது.     நீதிமன்றத் தடையை மீறி டிஸ்மிஸ் செய்யப் பட்டதை எதிர்த்து தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், உயர்நீதிமன்றம், லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நோட்டீஸ் அனுப்பி இரண்டு வாரத்திற்குள் பதில் அளிக்க உத்தரவிட்ட போதும், டிஸ்மிஸ் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து விட்டது.

 

தொலைபேசி ஒட்டுக் கேட்பு வழக்கில், ஆரம்ப நாள் முதலாகவே, ஒட்டக் கூத்தரின் தூண்டுதலில், சட்டத்தின் அத்தனை நடைமுறைகளும் காற்றில் பறக்க விடப் பட்டு, விரைவாக முடிக்க அத்தனை நடவடிக்கைகளும் எடுக்கப் பட்டன.

 

முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கு, முதல் விசாரணைக்குப் பிறகு, இரண்டாவது அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப் பட்டது. ஒரு முறை ஒரு அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப் பட்ட வழக்கு, மீண்டும் மாற்றப் படாது என்ற விதியை மீறி, இந்த வழக்கு, இருப்பதிலேயே மிக மிக மோசமான, தண்டனை அளிப்பது ஒன்றையே குறிக்கோளாக கொண்டிருக்கும், ஒரு பெண் நீதிபதி இருக்கும், ஐந்தாவது விரைவு நீதிபதியிடம் மாற்றப் பட்டது.   அந்தப் பெண் நீதிபதி, வழக்கு தொடங்கிய முதல் நாளில் இருந்தே வழக்கை விரைவாக முடித்து தண்டனை அளிப்பதாக கங்கணம் கட்டிக் கொண்டு வேலை பார்த்தார்.

 

ஒரு முறை, வழக்கறிஞர் வரும் வரை நீதிமன்றத்தில் காத்திருக்க வேண்டிய சூழலில், பார்வையாளர் அமரும் இருக்கையில் அமர்ந்து ஓரமாக புத்தகம் படித்துக் கொண்டிருந்த போது, ஏக வசனத்தில், “ஏன் கால் மேல கால் போட்டுக்கிட்டுதான் உக்காருவீங்களோ ? “ என்று திடீரென்று கத்தினார் அந்த நீதிபதி.

“கால் மேல் கால் போட்டுக் கொண்டு உட்காரக் கூடாது என்று எந்தச் சட்டத்தில் சொல்லப் பட்டிருக்கிறது“ என்று பதில் கேள்வி கேட்டதற்கு கடும் கோபம் அடைந்த அந்த பெண் நீதிபதி, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுப்பேன் என்று மிரட்டினார். அதற்குப் பிறகு எதுவும் பேசாமல் மீண்டும், கால் மேல் கால் போடாமல் சாதாரணமாக அமர்ந்து மீண்டும் புத்தகத்தில் ஆழ்ந்ததும், சிறிது நேரம் கழித்து, “மிஸ்டர். போயி வெளில வெயிட் பண்ணுங்க. உங்க வக்கீல் வந்ததும் உள்ள வாங்க“ என்றார்.   “இது உங்கள் சொந்த நீதிமன்றம் அல்ல. பொது நீதிமன்றம். என்னை வெளியில் போகச் சொல்ல உங்களுக்கு அதிகாரம் கிடையாது“ என்று பதிலளித்ததும், கடும் கோபம் அடைந்த நீதிபதி, “என்ன திமிராகப் பேசுகிறாய்“ என்று உரத்த குரலில் கத்தி விட்டு, உடனடியாக நீதிமன்ற அவமதிப்பு குற்றம் புரிந்ததாக நோட்டீஸ் வழங்கி விட்டு, ஒரு நாள் கூட அவகாசம் கொடுக்காமலேயே, மறு நாள், 200 ரூபாய் அபராதம் விதித்தார்.   இதுதான் அந்த பெண் நீதிபதியின் நீதிபரிபாலனம் செய்யும் லட்சணம்.

 

அப்படிப்பட்ட நீதிபதியை தேர்ந்தெடுத்து, இந்த வழக்கை மாற்றிய மாண்புமிகு நீதியரசர் யார் தெரியுமா ? விரைவில் உயர்நீதிமன்ற நீதிபதியாக உள்ள ஒரு முதன்மை அமர்வு நீதிபதி.   பின்னர் ஒரு வழக்கறிஞர் அவரை சந்தித்து, எதற்காக இந்த நீதிமன்றத்துக்கு மாற்றினீர்கள் என்று கேட்டதற்கு, அவ்வாறு மாற்றியது தனக்கு தெரியவே தெரியாது என்று சாதித்தார்.

 

தற்போது வழக்கை நடத்தி வரும் இந்தப் பெண் நீதிபதியிடம், ஆவணங்களின் அசலை பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டதற்கு, அந்த மனுவை தள்ளுபடி செய்து, உயர்நீதிமன்றம் செல்லப் போகிறோம் என்பதால், ஆணையின் நகலை கூட வழங்கவேயில்லை.   இதனால், வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி மனுத் தாக்கல் செய்யும், வாய்ப்பு பறி போனது.

 

தற்போது வழக்கு விசாரணை விரைவு நீதிமன்றத்தில் நடந்து வருவதால், தினம் தினம் சாட்சிகள் விசாரணை நடத்தப் பட்டு, அடுத்த வாரத்திற்குள் மொத்த விசாரணையையும் முடித்து விட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

 

இந்த வழக்கை நடத்துவதற்காக என்.ஆர்.இளங்கோ என்ற மூத்த வழக்கறிஞரை அரசுத் தரப்பில் நியமித்துள்ளார்கள். என்.ஆர்.இளங்கோவோடு சவுக்குக்கு ஏற்கனவே அறிமுகம் உண்டு என்பதும், அவர் நியாயமான மனிதர் என்பதும் ஒரு புறம் இருந்தாலும், இந்த வழக்கை அவர் ஏற்றுக் கொள்வதற்கு முன்பாக, 20 நாட்களுக்கு முன், ஒட்டக் கூத்தரை சந்தித்து ஒரு நீண்ட விவாதத்தை நடத்தியிருக்கிறார் என்பது நெருடலை ஏற்படுத்தத் தான் செய்கிறது. நீண்ட நாள் அரசு வழக்கறிஞராக இருந்த ராஜா.இளங்கோ அவர்களுக்கு ஒரு வழக்கில் புகார் அளித்தவர் எவ்வளவு முக்கியம் என்பது நன்கு தெரியும்.   மேலும், இந்த வழக்கில், தனது புகாரை ஆவணமாகக் கூட சேர்க்கக் கூடாது என்று புகாரிலேயே குறிப்பிட்டுள்ள தலைமைச் செயலாளர் மாலதியை விசாரித்த பிறகே, மற்ற சாட்சிகளை விசாரிக்க வேண்டும் என்பதும் இளங்கோவுக்கு நன்கு தெரிந்தாலும், விசாரணை தொடங்கி மூன்று நாட்கள் வரை மாலதி எப்போது வருவார், எப்படி வருவார் என்பது யாருக்கும் தெரியாது, ஆனால், வரவேண்டிய நேரத்தில் கரெக்டாக வருவார் என்று ரஜினிகாந்த் போல பேசி வருகிறார். இது எதற்காக என்றால், மாலதி வரமாட்டார் என்று இப்போதே மனுத் தாக்கல் செய்து விட்டால், அதை எதிர்த்து உயர்நீதிமன்றம் சென்று வழக்கு விசாரணைக்கு தடை பெற்று விட வாய்ப்பு இருக்கிறது என்பதற்காகவே…. சாட்சிகள் விசாரணை அனைத்தும் முடிந்த பிறகு, இறுதியாக மாலதி வர மாட்டார் என மனு தாக்கல் செய்தால், அந்த நேரத்தில், உயர்நீதிமன்றம், விசாரணையில் தலையிட்டு, வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வாய்ப்பு இல்லை என்ற காரணத்தினாலேயே இந்த தந்திரம்.

 

சட்ட விரோதமாக தொலைபேசிகளை ஒட்டுக் கேட்பதைத் தவிர, ஒட்டக் கூத்தருக்கும் இந்த வழக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.   ஆனால், ஒரு வழக்கின் விசாரணை எவ்வாறு நடக்கப் போகிறது என்பதையே ஒட்டக் கூத்தர் தீர்மானிக்கிறார் என்றால் ‘ஒட்டக் கூத்தரின்றி ஓர் அணுவும் அசையாது’ என்ற நிலைதான் இன்றும் தொடர்கிறது.

 

இவ்வாறு தொடர்வது எந்த சூழலில் என்றால், ஒட்டக் கூத்தர் மீது பல்வேறு புகார்கள் அனுப்பப் பட்ட நிலையில், நீதிமன்றத்தில் எந்த நேரம் வேண்டுமானாலும், ஒட்டக் கூத்தர் மீது புகார் தொடரப்படும் நிலையில், டாக்டர்.சுப்ரமணியன் சுவாமி, ஒட்டக் கூத்தர் மீது நடவடிக்கை எடுக்கப் கோரி, கவர்னரிடம் மனு அனுப்பியிருக்கக் கூடிய சூழலில், தேர்தல் ஆணையம் எப்போது வேண்டுமானாலும் ஒட்டக் கூத்தரை மாற்ற வேண்டும் என்ற சூழலில் இவ்வாறு நடைபெறுகிறதென்றால், இதை ஒட்டக் கூத்தரின் தன்னம்பிக்கை என்று எடுத்துக் கொள்ள இயலாது. எப்படியாவது, காற்றைப் போல எங்கெங்கும் நிறைந்திருக்கும் ‘ஸ்பெக்ட்ரம் பணத்தை’ வைத்து, எல்லாவற்றையும் விலைக்கு வாங்கி விடலாம் என்ற இறுமாப்பே இது.

 

இந்த வழக்கில் மொத்தம் மூன்று குற்றச் சாட்டுகள். இரண்டு குற்றச் சாட்டுகளுக்கு அதிகபட்ச தண்டனை இரண்டாண்டுகள். மற்ற ஒரு குற்றச் சாட்டுக்கு அதிகபட்ச தண்டனை பத்து ஆண்டுகள். இரண்டு ஆண்டுகள் தண்டனை விதிக்கப் பட்டால், வழக்கில் தீர்ப்பு முடிந்ததும் சிறை செல்லத் தேவையில்லை. ஆனால், பத்தாண்டுகள் தண்டனை வழங்கப் பட்டால், உடனடியாக சிறை செல்ல வேண்டும். உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து பிணையில் வெளி வருவதற்கு குறைந்தது 6 மாதமாவது ஆகும்.   தேர்தல் நேரத்தில், சவுக்கை முடக்க வேண்டும், உடனடியாக உள்ளே அனுப்ப வேண்டும் என்ற திட்டத்திலேயே, ஒட்டக் கூத்தர் கூட்டுச் சதியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்தக் கூட்டுச் சதியின் பங்குதாரர்களாகவும், ஒட்டக் கூத்தரின் ஏவலாளாகவும் ஏரளாமானோர் பணியாற்றி வருகிறார்கள்.

 

இந்த வழக்கின் புலன் விசாரணையின் போது, சாட்சிகளின் வாக்குமூலத்தி பதிவு செய்த பாலு என்ற டிஎஸ்பியை போன்ற முட்டாளைப் பார்க்கவே முடியாது.   அந்த அளவுக்கு வழக்கில் குளறுபடிகள்.   வழக்கமாக காவல்துறையில், குற்றத்தை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லையென்றால், “கொலை செய்வதற்கு முதல் நாள், எதிரி என்னிடம் வந்து அவனை கொல்லாமல் விட மாட்டேன். அவனை கொன்றால் தான் என் ஆத்திரம் தீரும்” என்று நான்கு ஐந்து பேரிடம் சொன்னது போல வாக்குமூலங்களை தயாரித்து வழக்கில் தாக்கல் செய்வார்கள். இது போல பொய்யாகச் சேர்த்த வாக்குமூலங்களை நீதிமன்ற விசாரணையின் போது, அந்த சாட்சிகள், அந்த வாக்குமூலங்களை தவறாமல் அப்படியே சொல்ல வேண்டும் என்று மிரட்டுவார்கள்.   இந்த முட்டாள் பயலும், அதே போல இந்த வழக்கிலும், பல்வேறு வாக்குமூலங்களை தயார் செய்துள்ளான்.   ஆனால், அவ்வாறு பாலு தயார் செய்த வாக்குமூலங்கள் சவுக்கின் நண்பர்கள் சொன்னதாக தயாரிக்கப் பட்டுள்ளது.

 

வழக்கு புலன் விசாரணை நடந்து கொண்டிருந்த போது, கைது செய்து விடுவேன், பொய் வழக்கு போட்டு விடுவேன் என்று மிரட்டியதால், அப்போது அவன் சொன்னதற்கெல்லாம் தலையாட்டியவர்கள், இப்போதும் அதே போல சொல்வார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் ?

 

ஆனால் இங்கேதான் ஒட்டக் கூத்தரின் தந்திரம் இருக்கிறது. அந்த முட்டாள் பாலு, இப்போது சிபி.சிஐடியிலிருந்து மாறுதலாகி சென்று விட்டார்.   தற்போது இந்த வழக்கு விசாரணையை சிபி.சிஐடியின் சார்பில் நடத்துபவர் நேரடியாக க்ரூப் 1 தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப் பட்ட அரவிந் என்ற டிஎஸ்பி.   அரசுப் பணியில் சேர்ந்த புதிதில் குறைந்தது ஐந்து வருடங்களுக்கு நேர்மையாக இருப்பது, சகஜம். இது போல, இந்த நபரும், நேர்மையாக இருக்கிறார் என்றுதான் சவுக்கு இவரைப் பற்றி விசாரித்த போது தெரிந்தது.

 

ஆனால், இந்த அரவிந்தும், ஒட்டக் கூத்தரின் கைக்கூலியாகி, சாட்சிகளை மிரட்டுகிறார் என்ற தகவல் வந்துள்ளது.   நீதிமன்றத்துக்கு சாட்சி சொல்ல வந்தவர்கள், தாங்கள் அளித்ததாக, பதிவு செய்துள்ள வாக்குமூலங்களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்கள். ‘நாங்கள் இது போல சொல்லவேயில்லையே… சொல்லாததை எழுதியிருக்கிறார்களே…..’ என்று கேட்டதற்கு, இதில் உள்ளவற்றை மாற்றிச் சொன்னீர்கள் என்றால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று இந்த டிஎஸ்பி மிரட்டுகிறார் என்று தெரிகிறது.

 

ஒரு சில சாட்சிகள், நான் வாக்குமூலத்தில் கொடுக்காததை கொடுத்ததாக பதிவு செய்திருக்கிறார்கள், இது போல நான் கூறவேயில்லை, அதனால் அப்படி நீதிமன்றத்தில் சொல்ல இயலாது என்று கூறினால், அதற்கு இந்த அரவிந்த், மாற்றிச் சொன்னால், பின்விளைவுகள் மோசமாக இருக்கும் என்று மிரட்டுகிறார் என்று கூறுகிறார்கள்.

அரவிந்த் சார்… என்ன ‘பின்’ விளைவுகள் ? ஹேர் பின்னா ? சேப்டி பின்னா ?

 

பின் விளைவுகள் என்பது, வெற்று மிரட்டலாக இருந்தாலும், ஒரு வேளை சவுக்கின் நண்பர்களுக்கு சிபி.சிஐடி போலீசாரால் ஏதாவது நெருக்கடி நேருமேயானால், நீங்கள் சொல்லும் ‘பின் விளைவுகள்’ உங்களுக்கும் கடுமையாக இருக்கும் அரவிந்த் சார்.   இன்னும் பல ஆண்டுகள் பணியில் இருக்கப் போகிறீர்கள்…   குறைந்தது ஐஜி வரை பதவி உயர்வு வர வாய்ப்பு உள்ளது….   தனது நண்பர்களுக்கு நெருக்கடி என்றால், சவுக்கு அதை எளிதாக எடுத்துக் கொள்ளாது என்பதை உங்களுக்கு தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டிருக்கிறது.

 

அரசுப் பணியின் தொடக்கத்தில் இருக்கிறீர்கள்…. கொஞ்சமாவது நியாயமாக நடந்து கொள்ளுங்கள்.

 

பி.பி.நெய்ல்வால் என்று ஒரு ஐபிஎஸ் அதிகாரி இருந்தார்.   2001ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் செய்த முதல் வேலை, அவரை லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக நியமித்தது. 1996 முதல் 2001 வரை திமுக ஆட்சியிலிருந்த காலத்தில், பல்வேறு ஊழல் வழக்குகள் ஜெயலலிதா மீதும், அவரது அமைச்சரவை சகாக்கள் மீதும் தொடரப்பட்டன.

 

2001ல் ஜெயலலிதா முதல்வரானவுடன், அதிகார மையம் நடுநடுங்கிப் போனது.   பதறியடித்துக் கொண்டு, ஜெயலலிதாவை எப்படி குளிரவைப்பது என்று போட்டி போட்டார்கள்.

 

புதிய லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக பொறுப்பேற்ற பி.பி.நெய்ல்வால், பதவியேற்ற முதல் நாளே அத்தனை வழக்குகளையும் ஆய்வு செய்தார். ஆய்வு செய்து விட்டு, கோப்பில் அவர் எழுதியது என்ன தெரியுமா ?   “மேல் நடவடிக்கையை தொடரவும்”.   லஞ்ச ஒழிப்புத் துறையின் கோப்புகள் இன்றும் இதற்கு சாட்சியாக உள்ளன. ஜெயலலிதா என்ன அவர் கழுத்தையா சீவி விட்டார் ?

 

மிஸ்டர் அரவிந்த்…. அதிகாரி என்றால் நெய்ல்வால் போல இருக்க வேண்டும்.

 

மீதமுள்ள சாட்சிகளின் விசாரணை வெள்ளி அல்லது திங்கட்கிழமை முடிந்து விடும்.   அதன் பிறகு குறுக்கு விசாரணை தொடங்கும். தலைமைச் செயலாளர் மாலதி சாட்சியம் அளிக்காமல், குறுக்கு விசாரணையை தொடங்குவதில் என்று முடிவெடுக்கப் பட்டுள்ளது.

 

மார்ச் மாதம், தேர்தல் அறிவிக்கை வெளிவருவதற்குள் சவுக்கு புழல் தண்டனைச் சிறையில் அடைக்கப் படுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகவே உள்ளது.

 

ஆனால், நம்பிக்கை அளிக்கும் விஷயங்கள் இல்லையா என்ன ?   இருக்கிறது. இந்த வழக்கு விசாரணை தொடங்கியவுடன், சவுக்குக்கு நேரிலும், தொலைபேசியிலும் ஆதரவு அளித்த பத்திரிக்கையாள நண்பர்களுக்கு சவுக்கு என்றென்றும் கடமைப் பட்டிருக்கிறது.

 

வெறும் ஆதரவு இல்லை.   எவ்வளவு பணம் வேண்டும் சொல்லுங்கள். நாங்கள் வசூல் செய்து தருகிறோம் என்று அவர்கள் கொடுக்கும் ஆதரவு நெஞ்சை நெகிழச் செய்வதாக இருக்கிறது.

 

வழக்கு விசாரணை தொடங்கியவுடன், எப்போதும் சவுக்குக்கு துணை நிற்கும், வழக்கறிஞர்கள் புகழேந்தி மற்றும் ராதாகிருஷ்ணன் உடனடியாக தேவையான நடவடிக்கைகளை எடுத்தாலும், இந்த முறை புதிய வடிவில் ஒரு இன்ப அதிர்ச்சி.   தமிழகத்தில் பிரபலமான கிரிமினல் வழக்கறிஞர் ஒருவர், தானாக முன்வந்து, சவுக்கின் வழக்கை ஏற்று நடத்தி வருகிறார். மிகவும் திறம்பட வழக்கை அவரும், அவரது இளம் வழக்கறிஞர்களும் நடத்தி வருகிறார்கள்.   இது வரை சவுக்கிடம் இருந்து கட்டணமாக ஒரு ரூபாய் கூட கேட்கவில்லை.   ஆனால், இந்த வழக்கு நியாயமாக கிடைப்பதற்கு, உச்ச நீதிமன்றம் வரை செல்லலாம் என்று கூறியுள்ளார்.   வழக்கறிஞர், புகழேந்தி, ராதாகிருஷ்ணன் மற்றும் அந்த நண்பரின் ஆதரவும், உழைப்பும், சவுக்கை அவ்வளவு எளிதில், சிறைக்கு அனுப்ப முடியாது என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

நாங்களும் ஒன்னும் ஏப்ப சோப்பை இல்லை என்பது ஒட்டக் கூத்தருக்கு நன்கு தெரியும். அதனால் தான், பல்வேறு தகிடுதத்தங்களை செய்து வருகிறார்.

 

அவருக்குத் தெரிந்த முதல் தகிடுதத்தம் ஒட்டுக் கேட்பது. சவுக்கோடு பேசும் அத்தனை பேரின் தொலைபேசிகளையும் ஒட்டுக் கேட்பு வளையத்தில் கொண்டு வந்துள்ளார்.   மூத்த காவல்துறை அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள், நீதிமன்றப் பணியாளர்கள், வழக்கறிஞர்கள், என்று ஒருவரும் பாக்கியில்லை. இன்றைய நிலவரப்படி, 220 தொலைபேசிகள் தினமும் ஒட்டுக் கேட்கப் படுவதாக, உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.   தகவலைச் சொன்ன அந்த நண்பரிடம், ‘சரி எப்படி நீங்கள் இத்தனை தொலைபேசி உரையாடல்களையும் ஒட்டுக் கேட்டு, அதில் முக்கியமான உரையாடல் எது என்று அலச முடிகிறது, அதற்கு ஆட்கள் ஏது, நேரம் ஏது’ என்று கேட்ட போது, அவர் சொன்ன தகவல் அதிர்ச்சி அளிக்க வைத்தது. புதிதாக வந்துள்ள சாப்ட்வேரில், முக்கிய வார்த்தைகளை போட்டு வைத்து விட்டால், உதாரணத்துக்கு, “ஜாபர் சேட், ஹவுசிங் போர்ட், டெலிபோன் டேப்பிங், ராசாத்தி அம்மாள், கனிமொழி, குருமாராஜ், கஸ்பர், வோல்டாஸ்”, அந்த சாப்ட்வேர், அந்த உரையாடல்களை மட்டும் தனியே பிரித்து எடுத்து விடுமாம். சவுக்கின் உரையாடல்களை ஒட்டக் கூத்தரும், ஆண்டெனா தலையர் ஜாபர் சேட்டுமே, நேரடியாக கேட்கிறார்கள் என்று கூறினார் அவர்.   இந்தத் தகவல் அறிந்ததிலிருந்து, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், தொலைபேசியில், ஜாபர் சேட்டை சவுக்கு காது கூசும் அளவுக்கு கெட்ட வார்த்தையில் திட்டத் தொடங்கி விட்டது.   இதையும் கேட்கட்டுமே…..

 jaff

 

காது பெருசாகம ஒட்டுக் கேக்குறது எப்டின்னு யாராவது ஒட்டக் கூத்தருக்கு சொல்லுங்களேன்....

2009 தொடக்கத்தில் சவுக்கை சந்தித்த மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர், “தம்பி. நெறய்ய கஷ்டப்பட்டுட்ட…. இனிமேல வேணாம். எனக்கு அழகிரியை நல்லா தெரியும்… நீ ஒன்னும் கால்ல விழ வேணாம்பா… நான் கால்ல விழறேன்…. எல்லா பிரச்சியையையும் முடிச்சுக்குவோம்பா” என்று சொன்னார். அப்போது சவுக்கு அவரிடம் சொன்னது…..   “அய்யா இதற்காகவா நான் இத்தனை நாள் போராடிக் கொண்டிருக்கிறேன் ? போராடித் தோற்றாலும் தோற்பேன்… சரணடைய மாட்டேன்” என்பதுதான். அதையேதான் சவுக்கு இப்போதும் சொல்கிறது.   இறுதி மூச்சு உள்ள வரை போராடுவோம்.

 

கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும்…..

பல வேடிக்கை மனிதரைப் போல்

நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ……

 

இந்த வழக்கு நெருக்கடியால் உடனடியாக ஏற்பட்டுள்ள சிரமம், சவுக்கு எழுத முடியாதது.   வழக்கு வேலைகள் தொடர்பாக தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டுள்ளதால், இரவு நீண்ட வேரம் வழக்கறிஞருடன் ஆலோசனையும், பகலில் வழக்குக்காக நீதிமன்றமும் செல்ல வேண்டி உள்ளதால், ஏராளமான விஷயங்கள் இருந்தும், சவுக்கு உடனடியாக எழுத முடியவில்லை. வழக்கு முடியும் வரை நேரம் துளியும் கிடைக்காது தோழர்களே…. வழக்கு தொடங்கும் முன்பாகவே, தினமும் 5 மணி நேரம் தான் உறக்கம். இப்போது, வழக்கு வேலைகள் காரணமாக, மிகுந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனால், சவுக்குக்கு அன்போடு, சிறிது நாட்கள் ஓய்வு கொடுக்கலாம் தானே…. ?

 

சவுக்கு வாசகர்கள் புரிந்து கொள்வீர்கள் தானே…. ?

 

 

 

Comments  

 
+1 #162 VIJAY_USA 2011-02-28 19:48
Dear Savukku - We all desperately wish that, you have to win, and you will. Hope to see you back as sincere police officer in Tamilnadu, very soon (46 days to go.....)
Good Luck
Quote
 
 
+5 #161 பரமசிவம் 2011-02-27 19:55
தமிழ் மக்கள் உரிமைக் கழகத்தின் பேரில் வங்கிக் கணக்கு ஆரம்பித்து எங்களின் ஆதரவை உடனடியாகப் பயன் படுத்திக் கொள்வதில் என்ன சிரமம் உள்ளது?

பலம் பொருந்திய ஆட்களிடம் மோதும் போது, விஞ்ஞான முன்னேற்றத்தின் ஒவ்வொரு அணுவையும் பயன்படுத்திக் கொண்டால் தான் வெற்றி எளிதாகும். தோற்றாலும் எதிரிக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்த முடியும்! இவை அனைத்தும் எழுத்துலகின் ஆயுதங்கள்.
(1) மடிக்கணினி அல்லது ஆப்பிள் - Ipad
(2) 3G தொழில்நுட்பத்து டன் கூடிய எங்கு இருப்பினும் இணையத்தைப் பயன்படுத்தக் கூடிய BSNL - SIM (USIM) மற்றும் USB data card.
(3) Skype வசதி உள்ள செல்போன். உதாரணத்திற்கு புகழேந்தியும் நீங்களும் பேசுவதை decrypt செய்வது கடினம். WiFI உள்ள இடங்களில் Skype to Skype செய்தால் decrypt செய்வது கடினம் (முடியாததல்ல, ஆனால் கடினம்).
(4) இன்னும் பலப்பல அணுகுமுறைகளை இது போலப் பயன்படுத்தலாம். எதிருக்கு நாம் என்ன செய்யப் போகிறோம் என்ற பொறியே தட்டக் கூடாது.

WIkileaks சொன்னதில் முக்கியமானது: Governments fear the leaks - information leaks. இன்னும் சொல்லப் போனால் நீதிமன்றங்கள், போர் போன்றவற்றால் கூட முடியாத சில விஷயங்களை எளிதாக அடையலாம். சிறைக்குச் சென்றால் பாதிக்கப்படக் கூடியது இது தான்.
Quote
 
 
+2 #160 செந்தில் 2011-02-27 12:06
எந்த கவலையும் வேண்டாம்.வாசகர்களும் பத்திரிக்கை துறையில் உள்ள நல்லவர்களும் உங்களுக்கு துணை இருப்பார்கள்.வெற்றி நமதே.
Quote
 
 
+1 #159 Dhas 2011-02-27 10:48
Sir, You are a hero of Tamilnadu. I wish you all the best.
Quote
 
 
+1 #158 Raj, US 2011-02-27 09:48
Maximum they can do is to keep you in jail for sometime but like Seeman you will be back. we all here for you to support in whatever way. All the best to get out of this case.
It is not the days but the deeds makes human life meaningful.
Quote
 
 
+5 #157 குமார.இரவிக்குமார் 2011-02-27 04:08
நீங்கள் வெற்றி பெருவீர்கள். நியாயம் உங்கள் பக்கம் உள்ளது. நாங்கள் எப்போதும் உங்களுக்கு துணையாக இருப்போம். சோர்வடையாமல் போராடுங்கள்.
Quote
 
 
+5 #156 pandiarajan1965 2011-02-26 21:39
அக்கிரமங்கள் அழிய வேண்டும். அநியாயங்கள் ஒழிய வேண்டும். சாவுக்கு தனது போராட்டத்தில் வெற்றி பெற வாழ்த்துகள்.
Quote
 
 
+2 #155 ernill 2011-02-26 21:15
savukkukku vanakkam,
ungal seidhigalai naan naal thavaraamal paditthu varugiren. thodakkatthil pazhi vaangu padalatthirkkaa ga thodangi irundhaalum, samoogatthil nadakkum avalangalai, mukkiyamaaga thamizhaga arasiyalaalarga lai saaduvadhil umadhu paani migavum nalladhagavey ulladhu. ungal meedhu thodarappatta vazhakku ungalukku saadhagamaaga amaya vaazhthukkal. en ennam thavaraaga irukkalaam, aanal ulladhai kaettu tholaippadhu emadhu paani, enavey kaetkkiren, umadhu ezhutthil oru a.thi.mu.ka. visuvaasam adippadhaaga oru nerudal. thavaraai irundhaal thirutthavam. alladhu ungal paokkai maattravum. yenendraal ungalai paondravargal nadu nilayaaga irundhaal innum pala sigarangalai thodalaam enbadhu enadhu ennam mattrum aasai. vaazhthukkal.
Quote
 
 
+4 #154 minnal 2011-02-26 05:21
நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்..
உங்களுக்கு பொருளாதார ரீதியில் உதவ காத்திருக்கிறோம ், உங்கள் வங்கி எண்னை நீங்கள் தளத்தில் தெரிய படுத்தலாம்
Quote
 
 
0 #153 kudimagan 2011-02-25 22:31
Veeran, oppu kollaadha varai, avaunkku endrum vetriye
Quote
 
 
+6 #152 கோபி 2011-02-25 20:26
உங்களுக்கு எதிராக ஒர் அரசாங்கமே கூட்டம் கூட்டி வேலை செய்கிறது. உங்களைக் கண்டு அது அஞ்சுகிறது. அதுதான் உண்மையின் வலிமை. மக்களை ஏமாற்றி கொள்ளை அடிக்கும் திருடர் கூட்டம் அது.

கயவர்கள் அழிவார்கள்; வெற்றி நமதே. கவலை வேண்டாம்.
Quote
 
 
0 #151 thayan 2011-02-25 15:59
annai adikkadi solluvaar. nerukkadikal kooda kooda unmayaana veeran vettikolla thuninthu eluvaan, so vetti namathe sanhar naamal ellam naalai uyiroda iruppamaa ennu theriyamaththaa n namoorila journalista ippavum irukkiorom -thaya from tamileelam
Quote
 
 
+4 #150 Nadaga priyan... 2011-02-25 14:22
You will win my freind ! Quoting முதல் வெற்றி!:
அரசு சாட்சி பல்டி!

சென்னை, பிப் 25

தமிழ்நாடு தலைமைச் செயலாளர் திரிபாதி மற்றும் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத்து றை இயக்குனர் உபாத்யாய் ஆகியோர் இடையே நடந்த தொலைபேசி உரையாடல், பத்திரிக்கையில் வெளியானது தொடர்பான வழக்கில் அரசுத் தரப்பின் முக்கிய சாட்சியாக சேர்க்கப்படு இருந்தவர் பிறழ் சாட்சி (பல்டி) அளித்தார்.

பத்திரிகையாளர் சாட்சி

திரிபாதியும் உஆத்யாயும் போனில் பேசிய விவகாரங்கள் பத்திரிகையில் வெளியாகின. இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்து லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றி வந்த ஊழியர் சங்கரை கைது செய்தனர்.

இந்த வழக்கின் சாட்சி விசாரணை தினசரி விசாரணையாக சென்னை 5-வது விரைவு கோர்டு நீதிபதி சாவித்திரி னுன்னிலையில் நடைபெற்று வருகிறது. உரையாடலை வெளிட்ட பத்திரிகையாளர்க ள் ஏற்கனவே சாட்சி அளித்துள்ளனர்.

அரசு சாட்சி

இந்த நிலையில் நேற்றய விசாரணையின்போது , கீழ்பாக்கத்தைச் சேர்ந்த அரசு தரப்பு சாட்சியான பூபதி என்பவர் சாட்சி அளித்தார். அவர் ஏற்கனவே போலீசாரிடம் கொடுத்திருந்த வாக்குமூலத்தில் 'சுஜாதா என்ற பெயரிட்ட பெண்டிரைவில் இருந்த உடையாடல்களை சங்கர் எனது வீட்டில் வைத்து சிடியாக தயாரித்தார்' என்று கூறியிருந்தார்.

உரையாடல் சி.டிகளை சங்கர் தயாரித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக் கான நேரடி சாட்சி இவராகும். ஆனால் நேற்று நடந்த விசாரனையில் 'சங்கர் என் வீட்டுக்கு வருவார். ஆனால் அவர் சி.டிகள் தயாரித்ததை நான் பார்க்கவில்லை என்று குறிப்பிட்டார்.

'பல்டி'

அதைத் தொடர்ந்து பூபதியை பிறழ் சாட்சியாக(பல்டி ) அரசு சிறப்பு வக்கீல் என்.ஆர். இளங்கோ அறிவித்து அவரை குறுக்கு விசாரணை செய்தார். போலீஸ் உயர் அதிகாரி டி.கே.ராஜேந்திரனும் நேற்று இந்த வழக்கில் சாட்சி அளித்தார்

---செய்தி தினத்தந்தி
Quote
 
 
+7 #149 கார்த்திக் 2011-02-25 10:27
டியர் சவுக்கு, நான் ஆரம்ப காலத்திலிருந்தே உங்களுடைய ஒவ்வொரு பதிவையும் தவறாமல் படித்து வருகிறேன். நீங்கள் செய்வது சாதாரண விஷயம் அல்ல., உங்களுடைய தன்னம்பிக்கையை பார்த்து சக தமிழன் என்ற முறையில் மிகவும் பெருமை அடைகிறேன். தங்கள் வாசகர்கள் தங்களுக்கு பின்னால் இருக்கிறோம். இந்த வழக்கில் தாங்கள் வெற்றி பெற இந்த வாசகனின் வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி.

வாழ்த்துக்களுடன ்,
கார்த்திக்.
Quote
 
 
+3 #148 moshi17 2011-02-25 09:29
Dear Savukku,
You are a HERO. Remember ,whatever happens will only help in achieving your aim to fight against corrupt and dishonest elements in this society.

Regards
Quote
 
 
+2 #147 Kalai 2011-02-25 09:16
"...இந்தத் தகவல் அறிந்ததிலிருந்த ு, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், தொலைபேசியில், ஜாபர் சேட்டை சவுக்கு காது கூசும் அளவுக்கு கெட்ட வார்த்தையில் திட்டத் தொடங்கி விட்டது. இதையும் கேட்கட்டுமே….."
sema comedy :)

வாய்மையே வெல்லும்
வழக்கில் வெற்றி பெற வாழ்த்துகள்
Quote
 
 
+15 #146 முதல் வெற்றி! 2011-02-25 08:10
அரசு சாட்சி பல்டி!

சென்னை, பிப் 25

தமிழ்நாடு தலைமைச் செயலாளர் திரிபாதி மற்றும் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத்து றை இயக்குனர் உபாத்யாய் ஆகியோர் இடையே நடந்த தொலைபேசி உரையாடல், பத்திரிக்கையில் வெளியானது தொடர்பான வழக்கில் அரசுத் தரப்பின் முக்கிய சாட்சியாக சேர்க்கப்படு இருந்தவர் பிறழ் சாட்சி (பல்டி) அளித்தார்.

பத்திரிகையாளர் சாட்சி

திரிபாதியும் உஆத்யாயும் போனில் பேசிய விவகாரங்கள் பத்திரிகையில் வெளியாகின. இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்து லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றி வந்த ஊழியர் சங்கரை கைது செய்தனர்.

இந்த வழக்கின் சாட்சி விசாரணை தினசரி விசாரணையாக சென்னை 5-வது விரைவு கோர்டு நீதிபதி சாவித்திரி னுன்னிலையில் நடைபெற்று வருகிறது. உரையாடலை வெளிட்ட பத்திரிகையாளர்க ள் ஏற்கனவே சாட்சி அளித்துள்ளனர்.

அரசு சாட்சி

இந்த நிலையில் நேற்றய விசாரணையின்போது , கீழ்பாக்கத்தைச் சேர்ந்த அரசு தரப்பு சாட்சியான பூபதி என்பவர் சாட்சி அளித்தார். அவர் ஏற்கனவே போலீசாரிடம் கொடுத்திருந்த வாக்குமூலத்தில் 'சுஜாதா என்ற பெயரிட்ட பெண்டிரைவில் இருந்த உடையாடல்களை சங்கர் எனது வீட்டில் வைத்து சிடியாக தயாரித்தார்' என்று கூறியிருந்தார்.

உரையாடல் சி.டிகளை சங்கர் தயாரித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக் கான நேரடி சாட்சி இவராகும். ஆனால் நேற்று நடந்த விசாரனையில் 'சங்கர் என் வீட்டுக்கு வருவார். ஆனால் அவர் சி.டிகள் தயாரித்ததை நான் பார்க்கவில்லை என்று குறிப்பிட்டார்.

'பல்டி'

அதைத் தொடர்ந்து பூபதியை பிறழ் சாட்சியாக(பல்டி ) அரசு சிறப்பு வக்கீல் என்.ஆர். இளங்கோ அறிவித்து அவரை குறுக்கு விசாரணை செய்தார். போலீஸ் உயர் அதிகாரி டி.கே.ராஜேந்திரனும் நேற்று இந்த வழக்கில் சாட்சி அளித்தார்

---செய்தி தினத்தந்தி
Quote
 
 
+2 #145 Naam tamil 2011-02-25 08:03
Savukku,

Take care of personal things and come out with victory and then continue the writing. Or give the materials to your lawyers so that they will update every day and you can work on your case.

Yes. We are real tamil people from Prabha. Fight and fight and Fight. Take care of your health and during the victory I hope all these VVVVVIPPPP's are in the soil. Since Nature will never tolerate these people's arrogant.
Quote
 
 
+11 #144 anbu 2011-02-25 06:09
அன்புள்ள சவுக்கு
கடைசி யுத்தம்.. படித்த பிறகு, ஓரு நிமிடம் அதிர்ச்சியாகி உட்காந்துவிட்டே ன்.. சவுக்கு கவலைப்படாதே. நமக்கு தோல்வி கிடையாது, ஜாபர்சேட், காமராஜ் போன்றவர்கள் அதிகாரம் இருக்கும் வரைதான் ஆடுவார்கள்.. அப்புறம் காணாமல் போய்விடுவார்.. 2001-06 அதிமுக ஆட்சியில் காமராஜின் நிலை என்ன.. .எத்தனை கட்டுரையில் நக்கீரனில் எழுதினார்..
நக்கீரன் கோபால் தலைமறைவாக இருக்கும் போது, தனக்கு குவாலிஸ் கார் வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து, கோபால் தம்பி குருசாமி மூலம் கார் வாங்கிய பிறகுதான் அமைதியானார்..
உங்களுடன் நாங்கள் இருக்கிறோம்.. கவலை வேண்டாம்.. உச்சநீதிமன்றம் வரை போவோம் நீதிக்காக போராடுவோம்… அன்பு
Quote
 
 
+10 #143 இராசராச சோழன் 2011-02-25 06:09
சவுக்கு வெற்றி பெறுவார்கள்...
இல்லை என்றால் வெற்றி பெற வைப்போம்....
Quote
 
 
+5 #142 jeeva 2011-02-25 03:30
All the best Savukku.,We behind u
Quote
 
 
+5 #141 Aru 2011-02-25 02:17
கொடுங் கூற்றுக்கிரையென ப் பின் மாயும்…..

பல வேடிக்கை மனிதரைப் போல்

நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ……

Anther barathiyin varugalai pol a neengal verri pera vazthukal
Quote
 
 
+10 #140 iniavan 2011-02-25 01:45
வழக்கு இவ்வளவு சீரியஸாகவா போய்கிட்டு இருக்கு.தோழர் நாங்கள் உங்கள் அருகில் இல்லை என்றாலும் எங்கள் ஆதரவும் உதவியும் எப்போதும் உண்டு.இவர்களை விட பெரிய கொடுமைக்காரர்கள ் எல்லாம் சாதாரண மனிதர்கள் முன்னால் மண்ணை கவ்வி இருக்கிறார்கள்.இறுதியாக திருக்குரானின் வசனம் ஒன்று ஜாபர் சேட்டுக்கு...சத்தியம் வந்தது.அசத்தியம் அழிந்தது.நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும்.
Quote
 
 
+9 #139 Thiyagaraj 2011-02-25 01:44
அன்புள்ள சவுக்கு,
நீங்கள் மனம் தளராதீர்கள். நாங்கள் உங்களுக்கு என்றும் துணையாக இருப்போம். உங்களுக்கு என்ன உதவி வேண்டும் என்பதை சொல்லவும். நீங்கள் தான் எங்களுக்கு முன்னோடி. உங்கள் வீரமும் விவேகமும் நான் வேறு எங்கும் பார்த்திராதது.

தர்மம் வெல்லும்.
Quote
 
 
+4 #138 abdoul razack 2011-02-25 01:16
keep it up sauku, we will support u, i ask all tamil bloggers to add a widget on their webpage supporting sauuku. any informatic people help us.

razack from paris
Quote
 
 
+3 #137 Hosur K Bhargav 2011-02-24 23:51
Anaithu vazhakkugalilir unthum meendu vara manamaarntha vaazthukkal.

Meendum thanga panikku tirumba oru vazhi pirakkum.
Quote
 
 
-29 #136 YAHAYA KHAN 2011-02-24 23:31
திருமாவிடம் பேசுங்கள் திமுக கூட்டணியில் இருந்தாலும் உங்கள் பக்கம் உண்மை இருக்கும்பட்சத் தில் நிச்சயம் ஒரு சிறிய பிரச்னை கூட இல்லாமல் இதிலிருந்து வெளிவரச்செய்வார ்.
Quote
 
 
+4 #135 Austin 2011-02-24 23:20
sir...savukku sir..god bless you..every day am praying for you nothing will happen to you..
Quote
 
 
-30 #134 FOR SURE 2011-02-24 23:19
சவுக்கின் வாசகர்கள் பிரபாகரனின் தம்பிகள் மற்றும் அதிமுக தொண்டர்கள் உங்கள் பின்னே இருப்பது உங்கள் பலமாக வெளிப்படும்...........திருமாவை அணுக முயற்சி செய்யுங்கள் நிச்சயம் உங்களுக்கு உதவி கிடைக்கும் வேறு யாரும் தைரியமாக உங்கள் பக்கத்தில் இருக்க மாட்டார்கள்.
Quote
 
 
+3 #133 Padman 2011-02-24 23:17
Dear Sankar,

I don't know your personal email to write. So please don't publish this. (this is not comment).

Hi Sankar,

Please let me know if you need any help. If you are okay... can you mail me your contact number and personal email id. I would like to talk to you.

Thank you,

Padmanaban
Quote
 
 
+4 #132 balu 2011-02-24 23:15
Savukku,
These fools may not know the Tamilnadu Govrnment Logo, which is inbuilt with the sentence 'VAIMAIYE WELLUM'
Quote
 
 
+10 #131 சுந்தர் 2011-02-24 23:05
அன்புள்ள வீரனுக்கு

நீங்கள் வழக்கில் வெற்றிபெறுவது இருக்கட்டும். குற்றவாளிகளை தூக்கம் தொலைக்கச் செய்து அனுதினமும் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று உங்களைக் கண்காணிக்க வைத்ததிலேயே நீங்கள் ஏற்கெனவே வெற்றிபெற்றுவிட ்டார்கள். உங்களைத் தோல்வியடையச் செய்ய அவர்கள்தான் நிறைய ஓவர்டைம் வேலை செய்ய வேண்டியிருக்கிற து. இதுவே உங்களுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி. உங்களால் வெளிப்படையாக எங்களைப் போன்ற நல்லது நடக்கவேண்டும் என்ற நப்பாசையுடன் இருக்கும் மனிதர்களின் ஆதரவுடன் தைரியமாக, நேர்மையுடன், நெஞ்சுரத்துடன் போராட முடிகிறது. அவர்களின் போராட்டம் அப்படியானதா? திருட்டுத் தனமாக, அதிகார துஷ்பிரயோகத்துட ன் தீமையைக் காக்க முகம் மறைத்து இருளறைக்குள்ளிர ுந்து நடத்தப்படும் கேவலமான செயல் அது.

ஐந்து மணிநேரமோ அதற்குக் குறைவான நேரமோ கிடைத்தாலும் கூட உங்களால் நிம்மதியாக உறங்க முடியும். அவர்களால் ஒரு நிமிடம்கூட நிம்மதியாக உறங்க முடியாது.

மறுபடியும் சொல்கிறேன். நீங்கள் (நேர்மை, நியாயம்) ஏற்கெனவே வெற்றி பெற்றுவிட்டது. உங்கள் வெற்றிப் பாதையைத் தொடருங்கள். அவர்களைத் தப்புவித்துக்கொ ள்ள அவர்கள் படும் திண்டாட்டம்தான் உங்களுடைய போராட்டத்திற்கு க் கிடைத்த பரிசு.
Quote
 
 
+5 #130 saraswathi 2011-02-24 22:50
Savukku,
Tears well up to see that you are being targeted by uncouth bureaucrats and spineless politicians. I am not a big fan of you but many a times you have made me laugh but today I am moved by your predicament.
Persistence pays, so dont worry we are there to support.
There are so many comments and many more may have not voiced their opinion but they they will be with you.
Lot of people think funding can help you i guess more than that you need shoulders to carry you forward.
Just order what you need, we will do our best
Kaiya mattum katunga, matha velai ellam thaana nadakum

Cheer Up
Savukku
Quote
 
 
+10 #129 sakthy 2011-02-24 22:47
சவுக்குக்கு ஆதரவுக் கரம் நீட்டிய நண்பர்களுக்கு நன்றி. வேறு சில வளிகளில் சவுக்குக்கு ஆதரவு தெரிவிக்கவும், ஊடக அடக்குமுறையாக இதை கருத்தில் கொண்டு, எமது எதிர்ப்பை தெரிவிக்க (கையெழுத்து,மின ் அஞ்சல் போன்ற) சில முறைகளை ஆலோசித்து வருகிறோம்.
அதே சமயம் வழக்கில் வெற்றி பெறவும், தடைகளை உடைத்தெறிந்து மீண்டும் வெற்றிநடை போடவும் வாழ்த்துகிறோம்.
Quote
 
 
+6 #128 manichudar 2011-02-24 22:45
எத்தனை,எத்தனை இடையூறுகள் வந்தாலும் அத்தனையும் தாங்கி உறுதியோடு போராடி வெற்றிபெற வாழ்த்துக்கள்.
Quote
 
 
+11 #127 Kumar.T 2011-02-24 22:38
நீங்கள் நினைத்திருந்தால ் யார் கை, காலிலாவது விழுந்து உங்கள் வேலையை தக்க வைத்து கொண்டிருக்க முடியும்.. ஆனால் நீங்கள் போராடுகிறீர்கள் ...
"கூலாம் கற்கள் எங்கும் இருக்கும் ஆனால் வைரம் அபூர்வமாகத்தான் தென்படும்".

நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்..
உங்களுக்கு பொருளாதார ரீதியில் உதவ காத்திருக்கிறோம ், உங்கள் வங்கி எண்னை நீங்கள் தளத்தில் தெரிய படுத்தலாம்...
Quote
 
 
+4 #126 தர்மம் 2011-02-24 22:12
SAVUKKU NEE THANYAA JAYIPPA KAVALAIPADATHEY
JABAR SEIT ORU VETHU VETTU RASA
Quote
 
 
+4 #125 Madee 2011-02-24 22:07
தல ....விடுங்க தல ... அவனுங்க ஆட்டம் எல்லாம் இன்னும் மே மாசம் வரைக்கும் தான் ...அப்புறம் இருக்கு அவனுங்களுக்கு இருக்கு ஆப்பு .....
Quote
 
 
+2 #124 srimani 2011-02-24 22:02
ANDAVAN NALLAVANKALA NIRAIYA SOTHIPPAN ANAL KAIVIDAMATTAN
Quote
 
 
+1 #123 srimani 2011-02-24 22:01
savukku thairiyama irunkal vetri unkallukke
Quote
 
 
0 #122 tha.va.udhyakumar 2011-02-24 21:59
:cry: nanba kavalai veedu katrru epozhuthum orea pakam addikathu unngalai pondu palla inallgalai santhikinrom ingu nangal puducherryell arasai ethirthu antha veri pidith naygalana karunanithi,jab er set pondra mullai mangiyavargalai pattri kavallai kollathe nangal un urravugal pin pallmaga irukinrom..........unaai ponra veeranai kandal pyaam koolum intha arasiyal pizhaipu vathigalai kandu kallangamal un pthaiyai thodaravum vazhakil vetrii peravum en ullam negizhntha vazhthkal thozh savuku...........pudhuvai udhaykumar..........
Quote
 
 
+3 #121 Saravana 2011-02-24 21:32
Savukku,

We are really thrilled to have a straight forward person like you. We will pray for your betterment.
Quote
 
 
+7 #120 SURESHd24 2011-02-24 21:30
எங்களோட ஆதரவு சவுக்குக்கு எப்போதும் உண்டு. எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வெளிநாடு வாழ் இந்தியர்களான நாங்க collect பண்ணி தரோம். நீங்க தைரியமா வழக்கை எதிர்கொள்ளுங்கள

சுரேஷ்
Quote
 
 
+5 #119 pottadi 2011-02-24 21:16
அன்புள்ள சவுக்கிற்கு ,
என்றென்றும் எனது ஆதரவு உண்டு , எந்த விதமான உதவியையும் செய்ய நான் தயார்.
மாற்று பெயரிலோ , இல்லாத முகவ்ரியிலிருந் தோ எழுதுப்வன் நானல்ல.சமுதாயத்தில் நிறைந்துள்ள
உண்மைக்கு புறம்பானவர்கள் ஒழிக்கப்படும் நாள் அதிக தூரத்தில் இல்லை. என்னாலும் சிலர் என்ற
வாய்ப்பினை நின்று கொல்லும் இறைவன் என்னிடத்தில் கொடுப்பான் என்ற நம்பிக்கை
எனக்கு இருக்கிறது.

உங்களது பணி தொடர இறைவனை வணங்குகிறேன்
Quote
 
 
+3 #118 Mohamed 2011-02-24 21:15
All the best to Win the Court Case.
Quote
 
 
+3 #117 சவுக்கின் விசிறி 2011-02-24 20:58
அக்கிரமக்காரர்க ள் ஆட்சி செய்யும் போது ஒரு மனிதன் நிம்மதியாக வாழ முடியாது என்பதற்கு இந்த ஆட்சியும் சவுக்கும் சாட்சி. சவுக்கு நீ வாழ்தாலும் வீழ்தாலும் இனி வரலாறு உன்னை பேசும். கெட்டவர்கள் நீண்ட காலம் நிம்மதியா வாழ முடியாது. ராஜா சிறை சென்ற போது சந்தோஷ பட்ட அனைவரும் நீ சிறை சென்றால் நிட்சயம் வருந்துவார்கள், நல்லவன் நீ சிறை செல்ல மாட்டாய், கவலைபடாதே. இந்த கொள்ளைக்கார ஆட்சியையும் அதிகார வர்கத்தையும் எதிர்க்கும் நீ ஒரு மாவீரன். சவுக்கு நீ வெல்வாய் எங்களது வாழ்த்துகள்.
Quote
 
 
+1 #116 Rahman 2011-02-24 20:55
Thodarattum ungal pani. Kandippaga neethi mattum thaan jayikkum. Mannathi mannar ellam iruntha idam theriyamaal poi vittargal. Aneethi mattum seikindra naayikal enna seyya mudiyum. Allah kandippaga sathiyathin pakkam thunai iruppar.
Quote
 
 
+12 #115 Nellai Tamilan 2011-02-24 20:32
I would like to help you . please give you bank details we will all supoort to you. Society needs more savukku like you.
Quote
 
 
+8 #114 subash 2011-02-24 20:32
vaalthukal
Quote
 
 
+18 #113 Ashraf 2011-02-24 20:31
நான் ஒரு திமுகா அனுதாபி, இருந்தாலும் சவுக்கின் தைரியத்திற்கு தலைவணங்குகிறேன் . அரசாங்கத்தையே எதிர்த்து ஒரு தனிமனிதரின் போராட்டம் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. ஜெயலலிதா செய்யும் தவறுகளையும் சவுக்கு எதிர்க்க வேண்டும் என்பதுதான் என் ஆவல். இது என் அன்பான வேண்டுகோள். தன்னுடைய (சவுக்கின் ) பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரவேண்டும்
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 130 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday10283
mod_vvisit_counterYesterday13577
mod_vvisit_counterThis week67860
mod_vvisit_counterLast week95167
mod_vvisit_counterThis month290120
mod_vvisit_counterLast month382199
mod_vvisit_counterAll days13206487