முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
முத்துவேல் கருணாநிதிக்கு ஆண்டிமுத்து ராசா கடிதம். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 27
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வெள்ளிக்கிழமை, 25 பிப்ரவரி 2011 08:19

 

 

அன்புள்ள தலைவரே…..

நீங்களும் உங்கள் குடும்பமும் நன்றாக இருப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் நான் நன்றாக இல்லை தலைவரே…

 

நீ ஜெயிலுக்குப் போக மாட்டாய், போக மாட்டாய் என்று சொல்லி சொல்லியே, என்னை திகார் ஜெயிலுக்கு அனுப்பி விட்டீர்களே தலைவரே.. நீங்கள் கொடுத்த ஒரே வார்தையில் தானே தலைவரே, நான் உங்களைப் பற்றியும் உங்கள் குடும்பத்தைப் பற்றியும் வாய்த் திறக்காமல் இருந்தேன் ?

 a_raja_20110221

சிபிஐ அதிகாரிகள் கடந்த 14 நாட்களாக என்னை எத்தனை அவமானப் படுத்தினார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா தலைவரே… ? இந்தி பேசும் அதிகாரிகள், என்னை இந்தியிலேயே கெட்ட வார்த்தையில் திட்டினார்கள் தலைவரே…. இந்தியாவின் சொத்தை கொள்ளையடித்தவனே என்று என்னை திட்டிய போது, “அண்ணா சொன்ன எதையும் தாங்கும் இதயம்“ என்ற கோஷம் எனக்கு உதவி செய்யவில்லை தலைவரே.. நான் என்ன இந்தியாவின் சொத்தைக் கொள்ளையடிக்க வேண்டும் என்பதற்காகவா மந்திரியாக ஆனேன்… ? நீங்கள் சொன்னதைத் தானே தலைவரே செய்தேன்…

 

முதல் நாள் தொலைத்தொடர்பு மந்திரியாக பொறுப்பேற்ற உடனேயே, எனக்கு வந்த அந்த பெரும் தொகையை எடுத்துக் கொண்டு, அடுத்த விமானத்தை பிடித்து உங்களிடம் வந்துதானே தலைவரே கொடுத்தேன்… ? அப்போது ஒன்றுமே சொல்லாமல், ‘நீ இவ்வளவு கொடுக்கிறாயே… ஆனால் தயாநிதி இது போல் கொடுத்ததேயில்லையே‘ என்று தானே தலைவரே சொன்னீர்கள்.

 

நான் இன்று உடுத்தியிருக்கும் பேண்ட், சட்டை முதற்கொண்டு, நான் பதினைந்து நாட்களுக்கு முன்பு வரை குடித்துக் கொண்டிருந்த 12 ஆயிரம் ரூபாய் மதுவும் நீங்கள் போட்ட பிச்சை என்பதை நான் மறுக்கவில்லை தலைவரே… நீங்கள் தான் எனக்கு வாழ்வழித்தீர்கள். நீங்கள் தான் என்னை மனிதனாக்கினீர்கள்.

20 ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு சாதாரண லாம்ப்ரேட்டா ஸ்கூட்டரில், வழக்கறிஞர் தொழிலில் பெரிய அளவுக்கு வெற்றி பெற முடியாமல் தவித்துக் கொண்டிருந்த என்னை எப்போதும் விமானத்திலேயே பறக்க வைத்தது நீங்கள் தான் தலைவரே…

 

அதற்கு பதிலாக நான் மட்டும் நன்றி மறந்தேனா தலைவரே… எப்போது வனத்துறைக்கு இணை அமைச்சராக ஆனேனோ, அன்று முதல், எனக்கு வந்த அத்தனை பணத்தையும், உங்களிடம் தானே தலைவரே கொடுத்தேன்.

 

ஊருக்கும் உலகத்துக்கும், ஒரு தலித்தின் மீது தாங்கள் இவ்வளவு பாசம் காட்டுகிறீர்களே என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கும். ஆனால், தாங்கள் காட்டிய அத்தனை பாசமும், நான் கொடுக்கும் பணத்துக்காகத் தான் என்பது எனக்கு அப்போதே தெரியும் தலைவரே… ஆனாலும் நான் உங்கள் மீது நம்பிக்கை வைத்திருந்தேன். எப்படியும் என்னைக் காப்பாற்றி விடுவீர்கள் என்று.

 

அந்த நம்பிக்கையில் தான் 14 நாட்களாக எனக்கு ஏற்பட்ட அவமானங்களையும், துன்பத்தையும் சகித்துக் கொண்டிருந்தேன். எத்தனை ஏச்சுக்களும், பேச்சுக்களும் தெரியுமா தலைவரே… ? நண்பர்களிடம் கூட என்னை சிபிஐ அதிகாரிகள் பேச விடவில்லை தலைவரே… ஆரம்பத்தில் உனக்கு ஒன்றுமே ஆகாது, கவலைப் படாதே நான் இருக்கிறேன் என்று சொன்னீர்களே… உன்னை சிபிஐ எதுவும் செய்யாது என்று சொன்னீர்களே…

 a-raja5_20110202

இதற்கெல்லாம் மேலாக, நீ பதவி விலகக் கூட வேண்டியதில்லை என்று சொன்னீர்களே தலைவரே…   ஆனால், டெல்லி வரை சென்று விமான நிலையத்திலிருந்து இறங்கிய உடன், பதவி விலகு என்று சொன்னீர்களே தலைவரே…..

 

இந்தியாவில் அத்தனை மூலைகளிலும் என்னை திட்டுகிறார்களே தலைவரே…. இந்த அவமானத்திற்கு நான் செத்திருக்கலாமே… இதற்கா என் தாய் தந்தையர் என்னை படிக்கவைத்து வளர்த்தார்கள். இந்தியாவின் அத்தனை குடிமக்களும் என்னை திட்டுகிறார்களே…

பெரம்பலூரில், அந்த லாம்ப்ரெட்டா ஸ்கூட்டரை வைத்துக் கொண்டு, சிசர்ஸ் சிகரெட் பிடித்துக் கொண்டு சுற்றிய போது, என்னிடம் பணம் இல்லை. ஆனால் நிம்மதி இருந்தது. யாரும் என்னைத் தூற்றவில்லை.   போற்றவும் இல்லை.

 

ஆனால் இன்று …. …. ….. ….

 rajacourt_20110210

ஒரு நாளைக்கு ஒரு ஃபுல்லை முழுதாக குடித்துக் கொண்டிருந்தேன் தலைவரே… கைது செய்யப் படுவதற்கு முன்னால்…. அப்போதும் தூக்கம் வரவில்லை.   எனக்கு இருந்த ஒரே ஒரு நம்பிக்கை என்னை சிறைக்கு மட்டும் அனுப்ப மாட்டீர்கள் என்பது. நீங்களும் அதைத் தானே தலைவரே சொன்னீர்கள்… ?

 

நான் கைது செய்யப் படும் நாளன்று, கடைசியாக உங்களிடம் பேசினேன் ஞாபகம் இருக்கிறதா …. ? அப்போது உங்களிடம் நான் ஒரே ஒரு கோரிக்கை தானே தலைவரே வைத்தேன்.   என்னை சிறைக்கு மட்டும் அனுப்பாதீர்கள் என்று தானே ?.

 

என்னிடம் பல கோடிகளை வாங்கித் தின்ற, என் சொந்த மாவட்டத்தை சேர்ந்த காமராஜ் நான் கைது செய்யப்படும் நாளன்று என்னிடம் பேசினார் …. அப்போது நீங்கள் சொன்னதாக அவர் என்னிடம் சொன்னது, சிபிஐ கஸ்டடி முடிந்ததும், சிறைக்கு போகும் நாள் வரும் போது, பெயில் போட்டு விடலாம். அன்றே பெயில் கிடைத்து விடும். சிறைக்கு போகாமல், நேராக சென்னை வந்து விடலாம் என்று நீங்கள் சொன்ன பொய்யான வாக்குறுதியை நம்பித் தானே தலைவரே, அவ்வளவு அவமானங்களையும் சகித்துக் கொண்டு, உங்களைப் பற்றியும், உங்கள் குடும்பத்தைப் பற்றியும் வாயைத் திறக்காமல் இருந்தேன்… ?

 

ஆனால், கலைஞர் டிவியைப் பற்றி விசாரணை தொடங்கப் பட்டுள்ளது என்பது தெரிந்த உடனேயே, உங்கள் நடவடிக்கைகளில் மாற்றம் வந்து விட்டதாக சிபிஐ அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தார்கள் தலைவரே… உங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக, காங்கிரசிடம் என்னைப் பற்றி பேசுவதைக் கூட நீங்கள் நிறுத்தி விட்டீர்கள் என்று சிபிஐ அதிகாரிகள் என்னிடம் தெரிவித்த போது அதை என்னால் நம்பாமல் இருக்க முடியவில்லை தலைவரே….

 a_raja_arrest_20110214

நாட்கள் செல்லச் செல்ல, நான் சிறையில் இருந்து வெளியே வருவேன் என்ற நம்பிக்கை அற்றுக் கொண்டே போகிறது தலைவரே…

 

பதவியும், பணமும், பகட்டும், பட்டாடைகளும் என்னைச் சூழ்ந்திருந்த போது இருந்த மகிழ்ச்சியையும் ஆணவத்தையும் விட, பெரம்பலூரில் லாம்ப்ரெட்டா ஸ்கூட்டர் ஓட்டிக் கொண்டு, சிசர்ஸ் சிகரெட் குடித்த நாட்களில் நான் நிம்மதியாக இருந்தேன் தலைவரே.

 

அந்த நாட்கள் மீண்டும் என்றுமே வராது என்பது எனக்கு நன்கு புரிகிறது தலைவரே….

 

நான் சிறையிலிருந்து வெளியில் வந்தாலும், இந்தியாவின் சொத்தை கொள்ளை அடித்தவன் என்றே அழைக்கப் படுவேன். ஊர் தூற்றும், மக்கள் தூற்றுவார்கள். குழந்தைகளுக்கு சோறு ஊட்டும் போது கூட, “ராஜா வந்து எல்லாத்தையும் கொள்ளையடிச்சுக்குவான்” என்று பயமுறுத்தி சோறூட்டுவதாக தகவல்கள் வருகின்றன தலைவரே….. அவமானம் என்னை நெருப்பாக வாட்டுகிறது தலைவரே…..

 protest3_20101213

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், நான் சம்பாதித்தது எவ்வளவு, நீங்களும் உங்கள் குடும்பமும், சம்பாதித்தது எவ்வளவு, என்பது ஊருக்கும் சிபிஐக்கும் தெரியாமல் இருக்கலாம், எனக்கும் உங்களுக்கும் தெரியும் தானே….

 

இந்த திகார் சிறையில் நான் இருக்கிறேனோ இல்லையோ… நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் இருக்க வேண்டும் தானே…..

 

உங்கள் நெஞ்சுக்கு நீதியில் எழுதியிருக்கிறீர்கள் நினைவிருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. நான் நினைவு படுத்துகிறேன்.

 

“நண்பர்களே….இந்த சிம்மாசனத்தில் உள்ள மகிழ்ச்சியை விட, ஆயிரம் மடங்கு மகிழ்ச்சியை தரக்கூடியது சிறைக்கூடம். ஆனால் அடக்குமுறைகளும் சிறைச்சாலைகளும் நல்ல லட்சியங்களை அழித்து விட முடியாது.”

 

சிம்மாசனத்தை விட மகிழ்ச்சி தரக்கூடிய சிறைச்சாலையில் நான் இருக்கிறேன்…. என்னோடு மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள நீங்களும் வாருங்கள் தலைவரே…..

 karunanidhi_a_raja_20110307

ஸ்பெக்ட்ரம் பணத்தை கொடுக்கும் வரை உங்களின் பாசத்திற்குரிய அன்பு உடன்பிறப்பு

 

ஆண்டிமுத்து ராசா.

 

Comments  

 
0 #44 velavan 2011-07-29 10:47
திமுக பீரியட் வந்தா ஓழல் ஒன்னும் நடக்கலன்னு தீர்ப்பு வந்திடும். உங்களுக்கு ஒன்னுமே தெரியல நீங்க ஒரு பைத்தியம்.
Quote
 
 
+3 #43 krishnamoorthy madur 2011-04-16 11:07
திமுக வை நம்பினோர் என்றைக்கும் காப்பாற்றப்பட்ட பட்டதாக சரித்திரம் இல்லை அவர்கள் குடும்பத்தினர் தவிர! அதிமுகவில் ஒருவருக்கு மட்டுமே (அதிக பட்சமாக இருவர்) ஜால்ரா அடித்தால் போதும் ஆனால் திமுகவில் தலையிலிருந்து வால்வரை (கருணாநிதி முதல் நேற்று பிறந்த ஸ்டாலினின் பேத்தி வரை) சல்யூட் அடித்தாலும் கோட்டாபடி தான் (குடும்பத்தினரு க்கு கொடுத்தது போக) ஒதுக்கப்படும், எனக்கு ஒரு சின்ன சந்தேகம், திமுகவில் வாரிசுகள் சிலர் மட்டுமே உள்ளனர் ஆனால் கருணாநிதி குடும்பத்தில் அனைவருக்கும் பதவி எவ்வாறு மனசாட்சியே இல்லாமல் கொடுக்கப்படுகி றது இதை கட்சியில் யாரும் கேட்க மாட்டார்கள் கேட்டால் பாவம் தா.கிருஷ்ணன் மாதிரி (தற்)கொலை அல்லவா செய்து கொள்ள வேண்டும்.
Quote
 
 
+3 #42 sakthivel 2011-03-01 00:37
Quoting D.G.P.Shankar:
அதெல்லாம் இருக்கட்டும் எனக்கு முதல்ல அந்த ஆண்டிமுத்து (இந்த உத்தம ராசாவ பெத்த பரதேசி) இன்னும் உசுரோட இருக்கானானு தெரியனும்...................


அட நாதாரிகளா உங்களை மாதிரி வெறிஎடுத்தவனுங் களால தான் தமிழ்நாடு இப்படி இருக்கு. ராசா பண்ணுற தெள்ளவாரிதனத்து க்கு அவங்கப்பா என்னடா பண்ணுவாரு பாவம்? உன்னோட கமெண்ட்டுக்கு 5 + வோட்டு வேற போட்டிருக்கானுவ . நீ லைசென்சு இல்லமே வண்டி ஓட்டினா உங்கம்மாவயோ உங்கப்பாவையோ கூட்டீட்டு போய் பைன் போடலாமா?
Quote
 
 
+2 #41 sakthivel 2011-03-01 00:27
Quoting நவின், அமெரிக்கா:
ஆண்டிமுத்து மகனெல்லாம் "ராசா"வானா இதெல்லாந்தானே நடக்கும். இவனுகளுக்கெல்லா ம் அழிவு காலம் ஆரம்பமாயிடுச்சு ங்கறதென்னமோ உண்மை. ஓடவிட்டு இவனுகள (சாத்தானுகள) கல்லால அடிச்சு வெரட்டணும்....

Quoting நவின், அமெரிக்கா:
ஆண்டிமுத்து மகனெல்லாம் "ராசா"வானா இதெல்லாந்தானே நடக்கும். இவனுகளுக்கெல்லா ம் அழிவு காலம் ஆரம்பமாயிடுச்சு ங்கறதென்னமோ உண்மை. ஓடவிட்டு இவனுகள (சாத்தானுகள) கல்லால அடிச்சு வெரட்டணும்....


தம்பி நவீனு, போற போக்குல உன் பார்பான் புத்திய காட்டுறியே. அதென்ன "ஆண்டிமுத்து மகனெல்லாம்....."

ஆண்டிமுத்து மகன் கண்டிப்பா ராசாவா வரலாம். வரணும். ஏன்னா, ஆண்டிமுத்து ராசாவ பெக்கும்போது இந்த மவன் நாளைக்கு பெரிய ஆளாகி ஊரையே கொள்ளை அடிக்கனும்னு வேண்டிகிட்டு பெக்கலை. ஒரு நல்ல மகனா வளந்து மக்களுக்கு முடிந்த அளவு நல்லது செய்யனும்னு தான் வக்கீலுக்கு படிக்க வச்சிருக்காரு. ஆனா இது தறிகெட்டு பொய் அழிஞ்சதுக்கு ஆண்டிமுத்து எப்படி பொறுப்பாவாறு?
Quote
 
 
+7 #40 kudikattan 2011-02-28 20:01
ஏன்டா ராசா திருடும்போது தெரியவில்லையா
ஊர் தாளிய நீ அறுத்தா உன் தாளி தானா
ஏறங்குமுன்னு.இன்னுமாடா இந்த நாட்ல
உசிரோட இருக்க .
Quote
 
 
+9 #39 kiri 2011-02-27 15:27
உள்ளத்தில் கெட்ட உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா ராசா வருவதை எதிர்கொள்ளடா.. கனிக்கு நீ கணவனில்லை ராசாத்திக்கு மருமகனில்லை ஊர் பழி ஏற்றாயடா ராசா – கஸ்பாரும் உன் பழி கொண்டானடா செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா ராசா வஞ்சகன் கலைஞரடா ராசா வஞ்சகன் கலைஞரடா 90 தொகுதி கேட்டு கிடைக்காத காங்கிரசும் உன்னைத்தான் பிடித்தாரடா – ராசா மன்னித்து அருள்வாயடா ராசா மன்னித்து அருள்வாயடா
Quote
 
 
+4 #38 KK 2011-02-27 12:52
Comment from a Vasagar in Thatstamil
பதிவு செய்தவர்: வல்லவன்பதிவு செய்தது: 27 Feb 2011 1:07 amஉள்ளத்தில் கெட்ட உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா ராசா வருவதை எதிர்கொள்ளடா.. கனிக்கு நீ கணவனில்லை ராசாத்திக்கு மருமகனில்லை ஊர் பழி ஏற்றாயடா ராசா – கஸ்பாரும் உன் பழி கொண்டானடா செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா ராசா வஞ்சகன் கலைஞரடா ராசா வஞ்சகன் கலைஞரடா 90 தொகுதி கேட்டு கிடைக்காத காங்கிரசும் உன்னைத்தான் பிடித்தாரடா – ராசா மன்னித்து அருள்வாயடா ராசா மன்னித்து அருள்வாயடா
Quote
 
 
+2 #37 D.G.P.Shankar 2011-02-27 02:15
Quoting raajasekar:
Quoting D.G.P.Shankar:
அதெல்லாம் இருக்கட்டும் எனக்கு முதல்ல அந்த ஆண்டிமுத்து (இந்த உத்தம ராசாவ பெத்த பரதேசி) இன்னும் உசுரோட இருக்கானானு தெரியனும்...................


No more.
தனது கைதுக்கு ஒரு மாதம் முன்பு அவரது புகைபடத்துடன் ஒரு நாளிதழில் நினைவஞசலி விளம்பரம் ராசா தன் குடும்பத்துடன் கொடுத்திருந்தார ்.



.

நன்றி ராஜசேகர்..............
இவன் குடும்பத்துக்கு (கள்ள பொண்டாடியையும் சேத்து) எப்போது நினைவஞ்சலி கொடுக்கப்படும்????????
Quote
 
 
-2 #36 நவின், அமெரிக்கா 2011-02-26 21:19
ஆண்டிமுத்து மகனெல்லாம் "ராசா"வானா இதெல்லாந்தானே நடக்கும். இவனுகளுக்கெல்லா ம் அழிவு காலம் ஆரம்பமாயிடுச்சு ங்கறதென்னமோ உண்மை. ஓடவிட்டு இவனுகள (சாத்தானுகள) கல்லால அடிச்சு வெரட்டணும்....
Quote
 
 
+2 #35 திஹார் 2011-02-26 20:27
ராசா ராசா தான் திஹார்ல இருந்தாலும் பீஹார்ல இருந்தாலும்
Quote
 
 
+7 #34 tamil anban 2011-02-26 18:46
இந்த பாடலை தமிழக முதல்வருக்காக தீகாரில் இருந்து ராசா என்ற நேயர் dedicate செய்கிறார்..

ராசா: முதல்வனே என்னை கண் பாராய் ஜெயிலில் தவிப்பது தெரியலையா?

சரக்கு இன்றி தினம் நொந்தேனே, பெயில் நிவாரணம் எனக்கிலையா?

ராசாத்தி சொல்வதை கேட்கும் தலைவா, ராசாவின் வார்த்தைகள் கேட்கவில்லையா???

முதல் வென்னே.. வென்னே.. வென்னே வென்னே வென்னே... முதல் வென்னே....


ராசா : ம்ம்ம் கொஞ்சநேரம் ஒதுக்கி பணத்தை பதுக்கி கடிதம் எழுதுங்கள் விடுதலை வேண்டி..

கருணாநிதி: பேனா ஒன்றை எடுத்து காகிதம் எடுத்து கடிதம் எழுதினேன் மை தீர்ந்து போச்சே...

ராசா: உன் குடும்பத்துக்கா க நிதி இருக்கு, என் பெயிலுக்கும் கொஞ்சம் நிதி ஒதுக்கு..

கருணாநிதி: என் குடும்பம் வாழ விதி இருக்கு, உனக்கு மட்டும் விதிவிலக்கு....

சிபிஐ : மன்னனே,,,, மன்னனே,,,, இதோ சம்மன் உனக்கு.......

ராசா: 2G யில் அடித்தேன், உனக்கு கொடுத்தேன், எனக்கு உதவிட நேரம் இல்லையா???

கருணா: ம்ம்ம்... சிபிஐயை பார்த்தேன், முழுதும் வேர்த்தேன், உனக்கு உதவிட வழியொன்றும் இல்லையே...

ராசா: முன்னாள் அமைச்சரை தவிக்க விட்டு, காங்கிரஸ்சோடு குதுகலமா?

கருணா: உனது கண்ணின் நீர் துடைத்தால், எனது சீட்டுக்கும் ஆப்பு வரும்.

தலைவரே... தலைவரே.. நானும் வைப்பேன் ஆப்பூ......
Quote
 
 
+4 #33 tamil anban 2011-02-26 18:41
Quoting tamil anban:
இந்த பாடலை தமிழக முதல்வருக்காக தீகாரில் இருந்து ராசா என்ற நேயர் dedicate செய்கிறார்..

ராசா: முதல்வனே என்னை கண் பாராய் ஜெயிலில் தவிப்பது தெரியலையா?
சரக்கு இன்றி தினம் நொந்தேனே, பெயில் நிவாரணம் எனக்கிலையா?
ராசாத்தி சொல்வதை கேட்கும் தலைவா, ராசாவின் வார்த்தைகள் கேட்கவில்லையா???

முதல் வென்னே.. வென்னே.. வென்னே வென்னே வென்னே... முதல் வென்னே....

ம்ம்ம்
ராசா : கொஞ்சநேரம் ஒதுக்கி பணத்தை பதுக்கி கடிதம் எழுதுங்கள் விடுதலை வேண்டி..

கருணாநிதி: பேனா ஒன்றை எடுத்து காகிதம் எடுத்து கடிதம் எழுதினேன் மை தீர்ந்து போச்சே...

ராசா: உன் குடும்பத்துக்கா க நிதி இருக்கு, என் பெயிலுக்கும் கொஞ்சம் நிதி ஒதுக்கு..

கருணாநிதி: என் குடும்பம் வாழ விதி இருக்கு, உனக்கு மட்டும் விதிவிலக்கு....

சிபிஐ : மன்னனே,,,, மன்னனே,,,, இதோ சம்மன் உனக்கு.......



பாடலின் மீதி பாதியை ஒளிபரப்பததால் ஜெயிலில் ராசா களி திங்க மறுக்கிறார் என்று செய்தி வெளியாகியுள்ளது , இதோ அவருக்காக மீதி பாடல்.

ராசா: 2G யில் அடித்தேன், உனக்கு கொடுத்தேன், எனக்கு உதவிட நேரம் இல்லையா???
கருணா: ம்ம்ம்... சிபிஐயை பார்த்தேன், முழுதும் வேர்த்தேன், உனக்கு உதவிட வழியொன்றும் இல்லையே...

ராசா: முன்னாள் அமைச்சரை தவிக்க விட்டு, காங்கிரஸ்சோடு குதுகலமா?
கருணா: உனது கண்ணின் நீர் துடைத்தால், எனது சீட்டுக்கும் ஆப்பு வரும்.

தலைவரே... தலைவரே.. நானும் வைப்பேன் ஆப்பூ......
Quote
 
 
+4 #32 raajasekar 2011-02-25 23:30
Quoting D.G.P.Shankar:
அதெல்லாம் இருக்கட்டும் எனக்கு முதல்ல அந்த ஆண்டிமுத்து (இந்த உத்தம ராசாவ பெத்த பரதேசி) இன்னும் உசுரோட இருக்கானானு தெரியனும்...................


No more.
தனது கைதுக்கு ஒரு மாதம் முன்பு அவரது புகைபடத்துடன் ஒரு நாளிதழில் நினைவஞசலி விளம்பரம் ராசா தன் குடும்பத்துடன் கொடுத்திருந்தார ்.



.
Quote
 
 
+12 #31 Kumar.T 2011-02-25 23:06
//சிம்மாசனத்தை விட மகிழ்ச்சி தரக்கூடிய சிறைச்சாலையில் நான் இருக்கிறேன்…. என்னோடு மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள நீங்களும் வாருங்கள் தலைவரே…..//

நண்பேன்டா ... !
Quote
 
 
+4 #30 D.G.P.Shankar 2011-02-25 22:31
அதெல்லாம் இருக்கட்டும் எனக்கு முதல்ல அந்த ஆண்டிமுத்து (இந்த உத்தம ராசாவ பெத்த பரதேசி) இன்னும் உசுரோட இருக்கானானு தெரியனும்...................
Quote
 
 
+8 #29 ம.பொன்ராஜ் 2011-02-25 21:04
கலைஞரின் ஜெயில் வழங்கும் திட்டம்:

(கலைஞர்): ஸ்பெக்ட்ரம் வழக்கை மீறி இந்த தேர்தலில் ஜெயிப்பதே நமது நோக்கம். ராசா போல பலரையும் மாட்டிவிடுவதே நமது திட்டம்.

(ராசா):
அன்புள்ள முதவருக்கு... ஆ.ராசா எழுதுவது...
அழகான ஜெயிலுக்கு நன்றி... என்றும்
ஒழுகாத ஜெயிலுக்கு நன்றி...
Quote
 
 
+16 #28 tamil anban 2011-02-25 19:29
இந்த பாடலை தமிழக முதல்வருக்காக தீகாரில் இருந்து ராசா என்ற நேயர் dedicate செய்கிறார்..

ராசா: முதல்வனே என்னை கண் பாராய் ஜெயிலில் தவிப்பது தெரியலையா?
சரக்கு இன்றி தினம் நொந்தேனே, பெயில் நிவாரணம் எனக்கிலையா?
ராசாத்தி சொல்வதை கேட்கும் தலைவா, ராசாவின் வார்த்தைகள் கேட்கவில்லையா???

முதல் வென்னே.. வென்னே.. வென்னே வென்னே வென்னே... முதல் வென்னே....

ம்ம்ம்
ராசா : கொஞ்சநேரம் ஒதுக்கி பணத்தை பதுக்கி கடிதம் எழுதுங்கள் விடுதலை வேண்டி..

கருணாநிதி: பேனா ஒன்றை எடுத்து காகிதம் எடுத்து கடிதம் எழுதினேன் மை தீர்ந்து போச்சே...

ராசா: உன் குடும்பத்துக்கா க நிதி இருக்கு, என் பெயிலுக்கும் கொஞ்சம் நிதி ஒதுக்கு..

கருணாநிதி: என் குடும்பம் வாழ விதி இருக்கு, உனக்கு மட்டும் விதிவிலக்கு....

சிபிஐ : மன்னனே,,,, மன்னனே,,,, இதோ சம்மன் உனக்கு.......
Quote
 
 
0 #27 2G விசிறி 2011-02-25 19:00
விசிறி
Quote
 
 
-3 #26 2G விசிறி 2011-02-25 18:59
:-| :oops: :-x :zzz :P :sigh:
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...“நண்பர்களே….இந்த சிம்மாசனத்தில் உள்ள மகிழ்ச்சியை விட, ஆயிரம் மடங்கு மகிழ்ச்சியை தரக்கூடியது சிறைக்கூடம். ஆனால் அடக்குமுறைகளும் சிறைச்சாலைகளும் நல்ல லட்சியங்களை அழித்து விட முடியாது.”
Quote
 
 
+2 #25 tamil anban 2011-02-25 18:55
ராசா கருணாநிதிக்கு அனுப்பிய புதிய கடிதம்....
கருணா..... களி திங்க ஆசையா?????? ஆசையா...?? ஆசையா...??....
கருணா ........ குடும்பத்தோட களி திங்க ஆசையா????
ஒரு வார்த்தையில ரெண்டு குடும்பத்துக்கு ம் காப்பு.
புதிய சிபிஐ ஆப்சு
Quote
 
 
+2 #24 Force 2011-02-25 17:35
//நண்பர்களே…."இந்த சிம்மாசனத்தில் உள்ள மகிழ்ச்சியை விட, ஆயிரம் மடங்கு மகிழ்ச்சியை தரக்கூடியது சிறைக்கூடம். ஆனால் அடக்குமுறைகளும் சிறைச்சாலைகளும் நல்ல லட்சியங்களை அழித்து விட முடியாது.”//

ஆனால் சிம்மாச‌ன‌ம் அவ‌ற்றை அழித்து விட்ட‌து. அப்ப‌டித்தானே?
Quote
 
 
+12 #23 குசும்பன் 2011-02-25 15:28
நாட்கள் செல்லச் செல்ல, நான் சிறையில் இருந்து வெளியே வருவேன் என்ற நம்பிக்கை அற்றுக் கொண்டே போகிறது தலைவரே..

அந்த நாட்கள் மீண்டும் என்றுமே வராது என்பது எனக்கு நன்கு புரிகிறது தலைவரே…

"ஆண்டவன் கிருபையில் அப்படியே ஆகட்டும்"
Quote
 
 
+6 #22 K Raman 2011-02-25 15:04
Dear Mr Savukku : Amazing piece. I stay in UK but the first thing I do when I wake up is to log in to your site. Yesterday you gave me a shock but I understand your predicament. Happy to see your article today. Mr Savukku, the people of Tamil Nadu needs you. Today, you cannot go away. We have to wage a big battle against the modern day Naragasooran (Karuna - all traitors carry that name, i suppose) and his K-Clan. So dont give up...You need to just do a google search of savukku and you will know the impact you have created...So fight on...You are bound to win...And victory against the K-Clan is not very far...I can almost see it now...
Quote
 
 
+10 #21 நாய் சேகர் 2011-02-25 14:53
ஐயோ யாரோ கதவ தட்ட்ராங்களே சிபிஐ ஆக இருக்குமோ, சரி 5 சீட்ட கூட்டி கொடுத்துடுவோம். தம்பி டெல்லிக்கு போன் செய்து சொல்லிடுங்க. அட நியூஸ் பேப்பர் காரனா? சரி 5 செஅட் போயிடுச்சு. ஐயோ மறுபடியும் யாரோ கதவ தட்ட்ராங்களே சிபிஐ ஆக இருக்குமோ? சரி 10 சீட்ட கூட்டி கொடுத்துடுவோம். தம்பி டெல்லிக்கு போன் செய்து சொல்லிடுங்க. அட தபால்காரனா? சரி 15 சீட் போயிடுச்சு. ஐயோ மறுபடியும் யாரோ கதவ தட்ட்ராங்களே சிபிஐ ஆக இருக்குமோ? சரி 10 சீட்ட கூட்டி கொடுத்துடுவோம். தம்பி டெல்லிக்கு போன் செய்து சொல்லிடுங்க. அட தபால்காரனா? சரி 25 சீட் போயிடுச்சு. ஐயோ மறுபடியும் யாரோ கதவ தட்ட்ராங்களே சிபிஐ ஆக இருக்குமோ? சரி 5 சீட்ட கூட்டி கொடுத்துடுவோம். தம்பி டெல்லிக்கு போன் செய்து சொல்லிடுங்க. அட பால்காரனா? சரி 30 சீட் போயிடுச்சு. ஐயோ மறுபடியும் யாரோ கதவ தட்ட்ராங்களே சிபிஐ ஆக இருக்குமோ? சரி 5 சீட்ட கூட்டி கொடுத்துடுவோம். தம்பி டெல்லிக்கு போன் செய்து சொல்லிடுங்க. அட ஸ்டாலினா? சரி 35 சீட் போயிடுச்சு. ஸ்டாலின்: அப்பா அவங்க கேட்டதே 80 சீட், நீங்க 83 க்கு ஒத்துக்கிட்டீங் களே? அட போடா ராசாவோட லெட்டர் பாத்ததிலிருந்து ஒரே திகிலா இருக்கு. மேடைக்கு மேடை தமிழுக்கு, தமிழ் மக்களுக்கு உயிரை குடுப்பேன் குடுப்பேன்னு சொல்லியே தல மொட்டையாக வரைக்கும் ஊற எமாத்தினோம். இன்னுமா ஊரு நம்ம நம்புது? ஐயோ சொக்கா பொலம்ப வேசுட்டாயே. எங்க போய் சொல்வேன்.
Quote
 
 
+1 #20 bharadwaj 2011-02-25 14:31
Kalaingarrrkku Nanri... Ozhugadha Sirai Koodathukku Nanri
Quote
 
 
+27 #19 Nadaga priyan... 2011-02-25 14:01
கவலை படதே ராசா ! பொழுது போக வில்லை என்றால் உளியின் ஓசை, இளைஞன்! பாசக்கிளிகள்! புதிய பராசக்தி போன்ற என் படங்களை பார்! இப்படி புலம்பல் கடிதம் எழுதுவதை நிறுத்தி விட்டு மரண தண்டனையையே, புன்சிரிப்புடன் ஏற்று கொள்ளும் மனபக்குவம் உனக்கு வந்து விடும்!

(கொய்யாலே பூகம்பம் வந்து லச்சம் பேர் செத்தாலும் போஸ்ட் கார்ட் போடர எனக்கே கடிதமா?)
Quote
 
 
+21 #18 sakthy 2011-02-25 13:57
தம்பி ராஜா! நீ கடிதம் எழுதி இருக்கிறாய்.படித்தேன் ஆனால் உன்னை யாரென்று எனக்கு தெரியவில்லையே என்று கருணாநிதி பதில் கடிதம் போட்டதாக கேள்வி.உப்பு தின்றவன் தண்ணீர் குடிப்பான். நீ நன்றாக தண்ணீரை கூடி. தலைவர் குடும்பம் விரைவில் வந்து சேரும். சேர்ந்து பட்டிமன்றம் நடத்தலாம் அல்லது மானாட மயிலாட பார்க்கலாம்.
Quote
 
 
+25 #17 சவுக்கின் விசிறி 2011-02-25 13:20
உடன்பிறப்பே ராசா..
நீ எழுதி கடிதம் கிடைத்தது. நீ இருக்கும் இடம் திகார் சிறைக்கூடம் தான் இனி தி.மு.க.வின் வரலாற்றை எழுதப்போகிறது என்பதை மறந்துவிடாதே.
உன்னை மட்டும் சிறைக்கு அனுப்பிவிட்டு நான் இங்கே சிந்தை மகிழ தயாளு, ராசாத்தி, கனிமொழி, ஆதித்யாவோடு கொஞ்சிக்கொண்டிர ுப்பதாக எண்ணிடாதே.
நீ இருக்கும் சிறையில் என்னை தள்ளினால், என்னைவிட பாக்கியசாலி யார் இருக்க முடியும். சொல் ராசா!
சி.ஐ.டி. காலனியிலும் கோபாலபுரத்திலும ் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் என் ஆசன குழாய் வழியாக ரத்தம் பீறிடுகிறது.
இரு குடும்பத்தின் பிடியில் தத்தளிக்கும் எனக்கல்லவா தெரியும் கொடுமையின் வேதனை!
வந்திடுவேன் ராசா... என் தேசிங்கு ராசா...
தலைநகருக்கு வந்து உன்னை மீட்டு
அழைத்து வர கிளம்பினேன்.
அதை பார்த்து ராசாத்தி பாடுகிறாள்..
‘ராசாவின் மனசுல இந்த ராசத்தி இருக்காளா’ன்னு கேட்டுக்கிட்டு வாங்கன்னு பாடுறா...
பின்னாடி கனிமொழியின் கானக்குரல்...
‘ராசாவே உன்னைத்தான்... எண்ணித்தான்... கண்ணுவிழி மூடலை’ன்னு பாடுறா..
இந்த இடத்தில் நான் எழுதிய பாடல்வந்துவிட்ட ட்து...

காகித ஓடம் கடல் அலை மீது
மூவரும் போவோம் டெல்லிக்கு- என்றேன். நான்.
அடுத்த நொடி இருவரும் அறையை பூட்டிக்கிட்டாங ்க ராசா...

சக்கர வண்டிய தள்ளூர பாண்டியனும், வினோத்தையும் பார்த்தேன். அவர்களும் எடுத்தார்கள் ஓட்டம்...
வேறு வழியில்லாமல், ஜால்ரா ஜாபரை கூப்பிட்டேன்.

ஜதராபாத்தில் டேட்டிங்க்.. ஸாரி மீட்டிங்காம்...
அந்த பாதிரி கப்சரை அழைத்தேன்.
பாவி அவன் பதிலே தரவில்லை.

யாருமே திகார் வரவில்லை என்றாலும் கவலைப்படாதே ராசா..
உன் துணைக்கு விரைவில் ஒருவர் திகார் வருவார். அன்று நான் மட்டுமல்ல, தி.மு.க.வே திரண்டு திகார் வாசலில் வந்திடும். அதுவரை பொறுமையோடு இரு!

அன்புடன்
மு.க.
Quote
 
 
+11 #16 Thendral 2011-02-25 13:12
கலைஞரின் உண்மையான முகத்தை இனிமேல்தான் தரிசிக்க போகிறாய் ராசா...ஒருவரை ஏற்றிவிட்டு அவர்மூலம் கொள்ளை அடைபதையே தனது கொள்கையாக வைத்திருக்கிறார ். டே.ஆர்.பாலுவை பார் எவ்வளவு நாசுக்காய் சென்ற முறை கொள்ளை அடித்துவிட்டு தப்பித்துவிட்டா ர் என்று. உனக்கு அனுபவம் போதவில்லை ராசா. உண்மையிலயே இன்று உன் மனசாட்சி மேலே கடிதத்தில் குறிப்பிட்டதை போலதான் சொல்லிக்கொண்டிர ுக்கும். என்ன செய்ய காலம் மீறிவிட்டது.உப்பை தின்றாய் இப்போது தண்ணீரை குடி....
Quote
 
 
+10 #15 விகடகவி 2011-02-25 12:57
ஏப்பா ராசா, நீங்கெல்லாம் கெட்ட வார்த்தையில திட்டு வாங்குறது புதுசா. உங்க தலைவர் தான் தஞ்சாவூர் பாசையில் பயங்கரமாக திட்டுவாராமே!
Quote
 
 
0 #14 Sam Jeyan 2011-02-25 12:54
very Shocking news about Rahul Gandhi... Please post it, all savukku readers should read it... http://www.indybay.org/uploads/2007/01/29/rahul.pdf
Quote
 
 
+9 #13 கருணாநிதி 2011-02-25 12:44
யாரு ராசாவா? சாரி...ராங் நம்பர்....!!!
Quote
 
 
+5 #12 writetoprabha 2011-02-25 12:39
As usual, the grandpa starts his story....

Grandpa: "Oru oorula oru Raja..."
The Grand Child: "Aiyoo..... Indha *spectrum* kadhai enaku theriyum thatha...."

Raja rocks :)
Quote
 
 
+1 #11 bhaskar 2011-02-25 12:39
hi hi hi
Quote
 
 
+5 #10 rasa 2011-02-25 12:16
அன்புள்ள முதல்வருக்கு ஆ.ராசா எழுதுவது "என்றும் ஒழுகாத ஜெயில்-க்கு நன்றி" ,"என்றும் ஒழுகாத ஜெயில்-க்கு நன்றி"
Quote
 
 
+29 #9 Jeeva 2011-02-25 12:10
குழந்தைகளுக்கு சோறு ஊட்டும் போது கூட, “ராஜா வந்து எல்லாத்தையும் கொள்ளையடிச்சுக் குவான்” என்று பயமுறுத்தி சோறூட்டுவதாக தகவல்கள் வருகின்றன தலைவரே….. அவமானம் என்னை நெருப்பாக வாட்டுகிறது தலைவரே…..
Quote
 
 
+13 #8 கல்கியின் நந்தகி 2011-02-25 11:42
காங்கிரஸ்கரான பத்தி உங்களுக்கு தெரியாது. இந்நேரம் ஆண்டிமுத்து ராசாகிட்ட மானாட மாராட ரசிகனுக்கு எதிரா திரும்பவைக்கிரத ுக்கு அணைத்து முயற்சியும் எடுத்துகிட்டு இருந்த ஆச்சரியபடுரதுகி ள்ள. எதுக்கு ? ஒரு முன்னேற்பாடா இந்த ஆள ரெடி பண்ணிவைக்கிரதுக ்கு தான்.

Quoting Gokul:
இதெல்லாம் ஓவர் , சி பி ஐ ராஜாவுக்கு அவ்வளவு தொல்லை எல்லாம் குடுத்து இருக்காது...ராஜ மரியாதையுடனே நடத்தி இருப்பாங்க..(A/C Room , நல்ல உணவு, torture பண்ணாத கேள்விகள்..) அப்படியே சிறையில் இருந்தாலும் ராஜாவுக்கு கவலை இருக்க கூடாது , அவர் பரம்பரையே வசதியாக வாழற மாதிரி தலைவர் பண்ணிட்டார்..

இந்த பதிவு ஏதோ ராஜாவை சி.பி.ஐ கொடுமை படுத்துவது போல் அமைந்துள்ளது

-Gokul
Quote
 
 
+15 #7 nadavarasu 2011-02-25 11:12
நேத்து பார்லிமெண்ட்ல கபில்சிபல் 2g ஒதுக்கீட்ல ஒர்ருபா கூட லாஸ் இல்லைன்றாரே எப்பிடி? ரொம்ப கொழப்புதுன்னா.சுஷ்மா ஸ்வராஜ், நாங்க மட்டுமா ஜேபிசி விசாரணை கேட்டோம் எல்லோரும் தானே கேட்டீங்க என்கிறார்.மதிய கணக்காயம் முன்பு நான் பேசுகிறேன் என்கிறார் பிரதமர் அப்புறம் என் ஒருவர் ஜெயில்ல இருக்கார் விஷயம் தெரிந்தவர் விளக்குங்கள்
Quote
 
 
+18 #6 முகமூடி 2011-02-25 10:24
தலைவருக்கு சீட் பேரம் பேசவே நேரம் இல்லை இந்த நேரத்தில் சவுக்கு எதுக்கு ஐயா ஆண்டிமுத்து ராசாவோட புலம்பலை வெளியிட வேண்டும்?
தலைவரை பற்றி தெரிந்து கொண்ட தகத்தகாய கதிரவன் இனிமேல் வெளியே வந்து சூரிய வெளிச்சம் பார்க்க போவது தேர்தலுக்கும் பிறகுதான்.
Quote
 
 
+23 #5 சுமன் 2011-02-25 09:51
இப்போதும் ஒன்றும் தாமதமாகிவிடவில் லை. எல்லா உண்மையும் சொல்லிவிடு. மக்கள் உன்னை மன்னித்துவிடுவா ர்கள். மக்கள் ரொம்ப நல்லவர்கள்.
Quote
 
 
+15 #4 Gokul 2011-02-25 09:49
இதெல்லாம் ஓவர் , சி பி ஐ ராஜாவுக்கு அவ்வளவு தொல்லை எல்லாம் குடுத்து இருக்காது...ராஜ மரியாதையுடனே நடத்தி இருப்பாங்க..(A/C Room , நல்ல உணவு, torture பண்ணாத கேள்விகள்..) அப்படியே சிறையில் இருந்தாலும் ராஜாவுக்கு கவலை இருக்க கூடாது , அவர் பரம்பரையே வசதியாக வாழற மாதிரி தலைவர் பண்ணிட்டார்..

இந்த பதிவு ஏதோ ராஜாவை சி.பி.ஐ கொடுமை படுத்துவது போல் அமைந்துள்ளது

-Gokul
Quote
 
 
+23 #3 Unmainaa ?? 2011-02-25 09:44
மாமோய்! நீங்க எங்க இருக்கீங்க ???????
Quote
 
 
+21 #2 பா 2011-02-25 09:43
என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கிறியே ராசா!!
Quote
 
 
+45 #1 மஞ்சள் துண்டு 2011-02-25 08:48
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.....
இவ்வளவு நாள் கூட இருந்தும் என்ன பத்தி நீ சரியாய் புரிஞ்சிக்கலையே ....
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 312 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday3764
mod_vvisit_counterYesterday14175
mod_vvisit_counterThis week50579
mod_vvisit_counterLast week78861
mod_vvisit_counterThis month263398
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12785517