தமிழகத்தில் திமுக அரசை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் திமுக அரசை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
2ஜி அலைக்கற்றை விசாரணையில், ஊழல் பணம் கலைஞர் டி.விக்கு முதலீடாக வந்துள்ளது என்பதும், பின்னர் கலைஞர் டி.வி. அந்தப் பணத்தை கடனாகக் கருதி திரும்ப தந்திருக்கிறது என்பதும் உண்மை விவரங்களாக வெளி வந்துள்ளன. மேலும் சிங்கப்பூரைச் சேர்ந்த எஸ்டெல் கம்பெனி இந்த ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள நிறுவனமாகும். அந்த நிறுவனத்தின் பணமும் கலைஞர் டி.விக்கு வந்துள்ளது என்று தெரிகிறது.
எவ்வாறு மத்திய அமைச்சர் பதவியில் இருந்தால் விசாரணைக்கு குந்தகம் ஏற்படும் என்று, முன்னாள் அமைச்சர் ராஜா விலக வேண்டும் என்று நாடாளுமன்றமே வற்புறுத்தியதன் பேரில் அவர் விலக நேர்ந்ததோ, அதே போல கருணாநிதி மாநில அரசின் முதல்வராக இருப்பதனாலும், மத்திய அரசில் அங்கம் வகிக்கின்ற முக்கிய கட்சியின் தலைவராக இருப்பதனாலும், முறையான விசாரணை நடைபெறாமல் இடையூறுகள் நேர்வதற்கும், உண்மையை மூடி மறைப்பதற்கும், ஊழல் குற்றவாளிகள் தப்பிப்பதற்கும் வழி வகைகள் ஏற்படும். எனவே, முதல்வர் கருணாநிதி பதவி விலக வேண்டும்.
சி.பி.ஐ. விசாரணை முறையாக நடைபெறவும், எவ்வித குறுக்கீடும் இல்லாமல் இருப்பதற்கும் இதுவே வழி வகுக்கும். அவர் பதவி விலக மறுத்தால் நீதியை நிலைநாட்ட மத்திய அரசு தி.மு.க. அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும். இல்லையென்றால் மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசும் இந்த ஊழலுக்கு உடந்தை என்றே மக்கள் கருதுவர்.
தேர்தல் நடைபெற இன்னும் 2 மாதங்களே இருப்பதனால் எத்தகைய உள்நோக்கத்தோடும் இதை நான் கூறவில்லை. இன்னும் சொல்லப் போனால் இந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு விட்டதால் எந்த நிர்வாகச் சிக்கலும் இல்லை. ஆகவே இந்த அரசு இருக்க வேண்டிய அவசியமும் இல்லை.
மேலும் தேர்தல்கள் அமைதியாகவும், நேர்மையாகவும் தமிழ்நாட்டில் நடைபெறுவதற்கு தேர்தல் கமிஷனுக்கும் இது உகந்ததாக இருக்கும்.
தி.மு.க. அரசை டிஸ்மிஸ் செய்வதன் மூலம் ஒரு ஆரோக்கியமான சூழ்நிலை ஏற்படும் என்றே கருதுகிறேன். தி.மு.க. அரசு கடந்த காலத்தில் உள்ளாட்சித் தேர்தல்களில் கடைப்பிடித்த அராஜகங்களையும், பின்னர் இடைத் தேர்தல்களில் கையாண்ட ஊழல் போக்குகளையும் அறிந்துள்ள மக்கள் நிச்சயம் இதை வரவேற்பார்கள். ஆகவே, உடனடியாக தி.மு.க. அரசை பதவி நீக்கம் செய்து நேர்மையான தேர்தல்கள் நடைபெற மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு விஜயகாந்த் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Comments
சூப்பர்
you are right yuvakrishna. Intha makku pasangaluku sonna puriathu. don't waste your energy for these people. They have to think themselves to understand the reality
கேப்டன் க்கு ஸ்பெல்லிங் தெரியல. கொய்யால captain ஆட்சி வேணுமா உங்களுக்கு.
Lets make nice government..
Dear Yuvakrishna: If Savukku is to translate your brain and thoughts, why he should have a brain and feelings. What is your problem if some one put a negative comment. Karunanidhi and many DMK leaders says they have iron heart; but as a DMK member you dont have the pateience to listen to another perople. The fact is DMK's logic of 'resppecting other's thoughts' is when the statement favour them.
இப்ப மட்டும் என்ன யாரவது லக்கிலுக் க படிக்கிரங்களா என்ன . நல்ல காமெடி சென்ஸ் பா உனக்கு. அய்யோ அய்யோ
ஆளப்பொறந்தவன் ஆத்திரப்படமாட்ட ான்ங்கிறீங்கண்ண ா ஒங்க ஆவேசத்தப்பாத்தா ஆலா பறந்தவர் போலிருக்கே, கோவிச்சுக்காதீங ்க, கூல் டவுண்,
கலைங்கருக்கும்---- ஜெவுக்கும் இரகசிய கூடு இருக்கிறது என்றார்.....
அப்படினாக்கா தி.மு.க. ஆண்டால் இவருக்கு என்னாவாம்?
அ.தி.மு.க ஆண்டால் தி.மு.க. தான் ஆள்கிறது என்று நினைத்துக் கொள்ள வேண்டியது தானே....
இரா.அழகிரி
இவனை தோற்கடியுங்கள். இவன் ஒரு தொகுதியில் ஜெயித்தாலும் அடுத்த கருணாநிதி உருவாகிறான் என்று அர்த்தம்.
RSS feed for comments to this post