முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
இனிக்காத சர்க்காரியா அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 46
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
புதன்கிழமை, 02 மார்ச் 2011 09:02

 

 

ராஜேந்தர் சிங் சர்க்காரியா… இந்தப் பெயரில் சர்க்கரை இருந்தாலும், கருணாநிதிக்கு இந்தப் பெயர் வேப்பங்காயாகவே கசக்கும். கருணாநிதியின் ஊழல்களையும், அவர் ஊழல் செய்யும் முறைகளையும், மிகச் சிறப்பான புலனாய்வு அதிகாரிகளைக் கொண்டு ஆராய்ந்து, கருணாநிதியின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றிய பெருமை, இந்த நீதிபதி சர்க்காரியாவையே சாரும்.

 

அந்த சர்க்காரியா கமிஷனின் அறிக்கை ஒரு அரசு ஆவணமாகும்.   வழக்கமான அரசு ஆவணங்கள், தவறாமல் இருக்கக் கூடிய இடங்கள், சென்னை கன்னிமரா நூலகம், ஆவணக்காப்பகம், தலைமைச் செயலக நூலகம் மற்றும் சட்டப் பேரவை நூலகம்.   இந்த அத்தனை இடங்களிலும் இந்த நூல் திடீரென்று காணாமல் போவது தற்செயல் நிகழ்வாக எடுத்துக் கொள்ள முடியுமா ? ஆனால் இதுதான் நடந்துள்ளது. என்னதான் நடந்துள்ளது என்று சென்னை கன்னிமரா நூலகத்தில் விசாரித்த போது, தலைமைச் செயலகத்தில் அமைச்சர் அலுவலகத்தில் இருந்து அனைத்து நகல்களும் வாங்கிச் செல்லப் பட்டு விட்டன என்ற தகவல் தெரிய வந்தது. யார் வாங்கிச் சென்றார்கள் என்று கேட்டால், ‘மினிஷ்டர் ஆபீஸ்லேர்ந்து வாங்கிகினு போனாங்க சார்… அத்தோட அவ்ளோதான்….’ என்று கூறினார்.

Karunanidhi_with_3rd_wife_Rajathi_Ammal_by_HKR

இது போல ஆவணங்களை மறைப்பதன் மூலம், வரலாற்றை திரித்து, உத்தம சீலர் வேஷம் போட நினைக்கிறார் கருணாநிதி.   ஆனால் கருணாநிதியின் கணக்கை பொய்யாக்க வேண்டாமா ? சவுக்கும் அதன் வாசகர்களும், பெரிய தில்லாலங்கடி இல்லையா ?  சாம்பிளுக்காக ஒரே ஒரு பகுதி மட்டும், என் அன்பு சவுக்கு வாசகர்களுக்காக இதோ…..

 

தர்மாம்பாள் என்ற அல்லது இராஜாத்தி என்னும் திருமதி தர்மா தென்னாற்காடு மாவட்டத்தில் ஸ்ரீமுஷ்ணத்தில் திருமதி சிவபாக்கியம் அம்மாளுக்குப் பிறற்த கடைசி மகள் ஆவார். திருமதி சிவபாக்கியம் அம்மாள் முதலில் கருப்பையா நாடார் என்பவரை மணந்தார். அவர் மரணத்திற்குப் பின்னர் ஸ்ரீமுஷ்ணத்தைச் சேர்ந்த முத்துக்குமாரசாமி நாடார் என்பவரை மறுமணம் செய்து கொண்டார். இரண்டாவது திருமணத்திற்குப் பின்னர் அவருக்கு இராஜலட்சுமி, சுப்ரமணியம், தர்மா என்ற மூன்று பிள்ளைகள் பிறந்தனர். இரண்டாவது கணவரும் இறந்து விட்டார்.   அதன் பின்னர் சிவபாக்கியம் அம்மாள் அந்த கிராமத்தை விட்டு சிதம்பரம் வந்து அங்கு தன் மூன்று பிள்ளைகளுடன் தங்கியிருந்தார். அதன் பிறகு அவர் தனது இருப்பிடத்தை சென்னைக்கு மாற்றிக் கொண்டார். அவர் வசதியான நிலையில் இல்லை. அவருடைய மூன்று குழந்தைகளில் யாரும் தொடக்கக் கல்வியைத் தவிர உயர்கல்வி படிக்க முடியவில்லை. சென்னையில் சிவகாக்கியமும் அவர் குழந்தைகளும், இராயப்பேட்டையில் 62, முத்துமுதலி தெருவில் உள்ள ஓர் அறையில் தங்கியிருந்தனர். அதற்கு மாதம் ரூ.18 வாடகை கொடுத்து வந்தார். திருமதி தர்மா நாடகத்தில் நடிப்பதை தன் வாழ்க்கைத் தொழிலாக மேற்கொண்டார். அவர் சகோதரர் சுப்ரமணியம் எம்.பி.டி லாரி சர்வீசில் கூலியாக வேலை பார்த்து வந்தார்.   1962ல் மயிலாப்பூர், விவேகானந்தா கல்லூரிக்கு எதிரேயுள்ள ஒரு வீட்டை மாதம் ரூ.75 வாடகைக்கு எடுத்துக் கொண்டு அங்கு அவர் குடியேறினர்.

 

1966ல் “காகிதப்பூ“ என்னும் நாடகத்தில் திருமதி தர்மாவும் திரு.மு.கருணாநிதியும் ஒன்றாக இணைந்து நடித்த போது அவர்கள் இருவரும் சந்திக்க நேரிட்டது. திரு.கருணாநிதி கூறியுள்ளபடி, அவர் திருமதி.தர்மாவை 1966ல் செப்டம்பர் மாதம் 23ந் தேதி சமயச் சார்பற்ற முறையில் (இதுக்குப் பேர்தான் சுயமரியாதைத் திருமணமா ? … கருமம். கருமம்) திருமணம் செய்து கொண்டார்.   அது முதற்கொண்டு இருவரும் கணவன் மனைவியாகவே வாழ்ந்து வருகின்றனர். 1966ம் ஆண்டு மார்ச் 10ல் திருமதி தர்மா, சென்னை.17, தியாகராய நகரில், 24.A, திருமூர்த்தி தெருவில் மாதம் ரூ.100 வாடகைக்கு வீடு ஒன்றை எடுத்து அதில் வசித்து வந்தார். இந்த வீட்டுக்கான வாடகையை கருணாநிதி கொடுத்து வந்தார். திருமதி தர்மாவுடன் அவர் தாயார், சகோதரர், சகோதரி ஆகியோரும் அதே வீட்டில் வசித்து வந்தனர். திரு கருணாநிதிக்கு 1968ம் ஆண்டு ஜனவரி மாதம் 5ம் நாளில் ஒரு பெண் குழந்தைக் பிறந்தது (அப்போ ஜாதகம் பாத்திருந்தா, ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடியை இந்தப் பிள்ளை ஆட்டையைப் போடும் என்று சொல்லியிருப்பார்களோ… நமக்கு இந்த மேட்டர் தெரிஞ்சுருந்தா அப்போவே ஏதாவது பண்ணியிருக்கலாம் பாஸ்)   என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

kani_3

சென்னை தியாகராய நகர் திருமூர்த்தி தெருவில் உள்ள அவரது வீட்டில் தொலைபேசி ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது. திரு கருணாநிதி தர்மாவை பார்க்க அவ்வீட்டிற்கு அடிக்கடி வருவது வழக்கம். அதன் பின்னர் 1969ம் ஆண்டு ஜனவரி மாதம் 20ம் நாளில் திருமதி தர்மா, சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் எண் 9, முதல் குறுக்குத் தெருவில் உள்ள வீட்டை திருமதி ஈ.எல்.விசுவாசம் என்பவரிடமிருந்து 57 ஆயிரத்திற்கு கிரயத்திற்கு வாங்கியதாக கூறப்படுகிறது.

 

சாம்பிள் எப்பூடி…. ?     தமிழில் மிக முக்கியமான பங்கை வகிக்கும் நாடகத் துறை ஒரு காதலை அரங்கேற்றியிருக்கிறது… அதற்கு போய் பய புள்ளைக என்னமா பேசுறாங்க பாஸ்… அதுவும் இந்த எதிர்க்கட்சிக் காரய்ங்க இருக்காங்களே….

2

காதல் வயப்பட்டிருக்கும் காதலர்கள், அப்போது வெளியாகியுள்ள திரைப்படங்களில் உள்ள பாடல்களை தங்கள் காதலியிடம் / காதலரிடம் பாடி, மகிழ்வது வழக்கம். இவர்களுக்கு திருமணமானது 1966ம் ஆண்டு. அந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் உள்ள பாடல்களில், இந்த சிறப்பான ஜோடிக்கு பொருத்தமான பாடல் எது என்று சவுக்கு ஆராய்ந்ததில், முகராசி படத்தில் இடம் பெற்ற, இந்தப் பாடலே மிக மிக பொருத்தமாக இருக்கிறது.

 

“எனக்கும் உனக்கும் தான் பொருத்தம்..

இதில் எத்தனை கண்களுக்கு வருத்தம்…

நம் இருவருக்கும் உள்ள நெருக்கம்….

இதில் யாருக்கு இங்கே கிடைக்கும்…”

 

60களில் 75 ரூபாய் வாடகைக்கு இருந்த ராஜாத்தி என்கிற தர்மாம்பாள் தற்போது ராஜாத்தி கருணாநிதியாக மாறி இருக்கிறார்.  இவருக்குத் தான் இன்று எத்தனை சொத்துக்கள் தோழர்களே…..

 

வெஸ்ட் கேட் லாஜிஸ்டிக்ஸ் என்ற பல கோடி ரூபாய் கப்பல் போக்குவரத்து நிறுவனம், சிஐடி காலனி வீடு, பினாமி பெயரில் அண்ணாசாலை வோல்டாஸ் கட்டிடம், ஊட்டியில் 535 ஏக்கர் எஸ்டேட், விலையுயர்ந்த கார், மாட மாளிகை, கூட கோபுரம்…..

  rajathi

என் அன்பு உறவுகளே….   சவுக்கை படிக்கும் நீங்கள் இணையத்தில் எத்தனை வல்லவர்கள் என்பது நன்கு தெரியும்…. உங்களிடம் சவுக்கு உரிமையோடு அன்புக் கட்டளை இடுகிறது.   இணையத்தை பயன்படுத்தும் தமிழர் ஒருவர் கூட, இந்த விபரத்தை படிக்காமல் இருக்கக் கூடாது. நகலெடுத்து, அத்தனை பேருக்கும் மெயிலில் இதை அனுப்புங்கள்.   இறந்து போன ஈழத் தமிழர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி, துரோகிகளை துகிலுரிப்பதுதான்.   சவுக்கை ஏமாற்ற மாட்டீர்கள் தானே… ?

 

Comments  

 
+3 #74 nritamil 2011-03-08 13:59
Is kanimozhi really daughter of karunanidhi. Because I read somewhere that karuna mentioning that Kanimozhi is Rasathi ammal's daughter...
Anybody can clear this?
Quote
 
 
0 #73 SHAN NALLIAH,GANDHIY 2011-03-07 10:42
WE SHD UNITE ALL OPPOSITION PARTIES IN TN AS WELL INDIA TO DEFEAT DMK-INC CORRUPT ALLIANCE! WORLD TAMILS ARE READY TO JOIN...!!! ARE YOU READY..!!!
YOUR SERVICES ARE GREAT..NO DOUBT.!!!
Quote
 
 
+3 #72 வெற்றிசெல்வன் 2011-03-04 17:27
'திமுக' மூன்று எழுத்து.
திமுக எனக்கு தந்த 'வாழ்வு' மூன்று எழுத்து.
என்னை வாழ வைக்கும் 'ஊழல்' மூன்று எழுத்து.
'மனைவி' மூன்று எழுத்து அதனால் எனது மனைவிகள் மூன்று .
-கருணாநதி
Quote
 
 
0 #71 kumuthiny 2011-03-04 12:46
D.R.Balu Tharmavin Thambiyillaiyaa ???
Quote
 
 
0 #70 sureshkrishnan 2011-03-04 10:41
correct a sonneenga.. create group in face book innum periya level la broadcost pannalam .
Quote
 
 
+4 #69 Nellai Balaji 2011-03-03 20:59
Force அவர்களின் புரிதலுக்கு நன்றி. உங்கள் கருத்தை நான் அமோதிக்கின்றேன் . ஆனால் சவுக்கு ஒரு உறுதி மொழியை தர முடியுமா? ஒரு வேளை அ தி மு க ஆட்சிக்கு வந்தால் , சவுக்கு இதே போல், தன் பணியை செய்வாரா? ஏன் இந்த கேள்வி என்றால், இது வரை சவுக்கு ஒரு முறை கூட ஜெயலிதாவின் பொறுப்பற்ற போக்கை கண்டித்ததில்லை. எதிக்கட்சி என்ற கடமையை செய்யாத ஜெயலலிதாவை.
Quote
 
 
+2 #68 Nellai Balaji 2011-03-03 20:50
நேர்மையின் கருத்தை நான் வரவேற்கிறேன். இரண்டு பக்கங்களின் நியாய, அநியாயங்களை எடுத்து கூறுவோம். மக்கள் தேர்ந்து எடுக்கட்டும். இதுதானே ஜனநாயகம்.Quoting nermai:
savukku,
i have only one request. try to be unbiased in your writing. I am not a supporter of DMK, but what is the relation between sarkaria and the story you have written about how MK married Rajathi Ammal?

Try to be professional.
Quote
 
 
+4 #67 கவுண்டம் பாளையம் 2011-03-03 17:37
1966ல் செப்டம்பர் மாதம் 23ந் தேதி திருமணமா ? உயிர் உடன் ஒரு மனைவி இருக்கும் போது, அது 1956 இந்திய சட்ட படி குற்றம் இல்லையா ?
Quote
 
 
0 #66 vel 2011-03-03 17:26
http://truetamilans.blogspot.com/2011/03/blog-post_03.html -just visit
Quote
 
 
+1 #65 S.G. 2011-03-03 17:00
Quoting சவுக்கு:
சர்க்காரியா கமிஷன் அறிக்கை, மிகவும் சிதிலமைடந்த நகலாக காகிதங்கள் உடையும் தருவாயில் உள்ளது. மொத்தம் நான்கு பாகங்கள். அத்தனையும் ஸ்கேன் செய்து, பிடிஎப் கோப்பாக மாற்றுவதற்கு 5 நபர்கள், ஒரு வாரம் வேலை செய்ய வேண்டும். சவுக்கு இருக்கும் நிலையில் இது சாத்தியமா தோழர்களே... ?
savukuu, uploading a 4 volume is not posible but making ur readers vote is posible by you, if all educated go to the poll both surely we can throw out this rule. lets try doing that
Quote
 
 
+2 #64 S.G. 2011-03-03 16:57
Quoting kudimagan:
savukku, as some friend told here, if u can put together the fraud done by them in PDF and upload here, it would be great to forward and reach ppl. Ofcourse its going to be very big.


if we have to put the fraud of MK n his famil, a 1TB hard disk should be uploaded, last year in movie industry 90% flims ae produced or distributed by the family of MK, itz jus a smple of their wealth., for god sake please save tamilnadu bu voting agaist DMK, if they return to power, we may have to sell even our houses to their family members
Quote
 
 
0 #63 KK 2011-03-03 15:49
Quoting அக்னிpiriyan:
.Quoting KK:
WHAT SARKARIA SAID -SUMMARY
What the Sarkaria Commission said


In the final report, the Sarkaria Commission came to the following conclusion on the allegations on the Veeranam scheme:

``It has been established that Shri. Karunanidhi, abusing his official position as Chief Minister, actuated with the motive to unduly favour Sathyanarayana Brothers with the award of the contract for the Veeranam project, directed the Chief Engineer, Shri. Hussain, to tailor his recommendations on the tenders in such a manner as would enable the Government to accept the tender of Sathyanarayana Bros....

''There is no doubt that Shri. Karunanidhi was interested in the contract being given to Sathyanarayana Bros. for some extraneous consideration. In this connection two circumstances have been firmly established: 1. Purushothaman's friendship with Maran and his exploiting this friendship to influence Karunanidhi and through him, Hussain; 2. The supply of materials worth about Rs. 59,202 by Purushothaman for construction of `Murasoli building' without accepting payment - a fact admitted by Maran himself.



நண்பர் KK அவர்களே தங்களுடைய பின்னூட்டத்தை தமிழில் தெரியப்படுத்தின ால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

DEAR FRIENDS,
PLEASE LET ME KNOW ANY ONLINE TRANSLATOR FROM ENGLISH TO TAMIL
KK
Quote
 
 
+1 #62 P.R.SURESH BABU 2011-03-03 14:09
even with money power the chances of DMK capturing power is bleak. THE ERA OF UN-EDUCATED(I DON'T MEAN SCHOOL EDUCATION) PEOPLE IS OVER.( INCLUDING MY GRAND-PARENTS & PARENTS)NOW INDIA IS FULL OF WELL-INFORMED PEOPLE. TO PROVE MY CASE IS EGYPT,TUNISIA,L YBIA,YEMEN & ...... WHERE PEOPLE STARTED TO FIGHT NOT LIKE PEOPLE LIKE KK BUT A DEADLY DICTATORS. MIND YOU!
Quote
 
 
+11 #61 Force 2011-03-03 13:30
நெல்லை பாலாஜியின் க‌ருத்து ச‌ரியான‌துதான். ஆனால், இன்று திமுக என்ற‌ விஷ விருஷத்தை வெட்ட‌வா, அதிமுக‌ என்ற‌ முள் ம‌ர‌த்தை வெட்ட‌வா? என்றால் முத‌லில், அன‌வ‌ரும் ஒன்றாய், இந்த‌ விஷ‌த்தை அழிப்போம். பின்பு முள் ம‌ர‌மா, நல்ல‌ ம‌ர‌மா? என அடுத்து வ‌ரும் போது முள் ம‌ர‌த்தை அக‌ற்றுவோம். இப்போதையை சூழ‌லில் இர‌ண்டையும் ஒரு சேர‌ அக‌ற்ற‌ வாய்ப்பில்லை. ஆக‌வே முள்ளைவிட‌ விஷம் கொடுர‌மான‌து என்ப‌தால் அதை முத‌லில் வேர‌றுப்போம். ந‌மது (மக்க‌ள்)ப‌ல‌ம் புரிந்தால், இந்த‌ முள் ம‌ர‌ங்க‌ள் கூட‌ ந‌ல்ல‌ ம‌ர‌ங்க‌ளாகலாம் , அல்ல‌து நல்ல‌ ம‌ர‌ங்க‌ள் செடிக‌ளாய் இந்த‌ ம‌ண்ணில் தோன்ற‌லாம். ரெம்ப‌ கெட்ட‌வ‌ன் (துரோகி)முதல் எதிரி, கெட்ட‌வ‌ன் (எதிரி) அடுத்த‌ இல‌க்கு. ச‌ரிதானா ந‌ண்ப‌ர்களே?
Quote
 
 
0 #60 அக்னிpiriyan 2011-03-03 13:09
.Quoting KK:
WHAT SARKARIA SAID -SUMMARY
What the Sarkaria Commission said


In the final report, the Sarkaria Commission came to the following conclusion on the allegations on the Veeranam scheme:

``It has been established that Shri. Karunanidhi, abusing his official position as Chief Minister, actuated with the motive to unduly favour Sathyanarayana Brothers with the award of the contract for the Veeranam project, directed the Chief Engineer, Shri. Hussain, to tailor his recommendations on the tenders in such a manner as would enable the Government to accept the tender of Sathyanarayana Bros....

''There is no doubt that Shri. Karunanidhi was interested in the contract being given to Sathyanarayana Bros. for some extraneous consideration. In this connection two circumstances have been firmly established: 1. Purushothaman's friendship with Maran and his exploiting this friendship to influence Karunanidhi and through him, Hussain; 2. The supply of materials worth about Rs. 59,202 by Purushothaman for construction of `Murasoli building' without accepting payment - a fact admitted by Maran himself.



நண்பர் KK அவர்களே தங்களுடைய பின்னூட்டத்தை தமிழில் தெரியப்படுத்தின ால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
Quote
 
 
0 #59 sathishmsc 2011-03-03 10:16
mr. kumar. Why do you name Jaggi vasudev irrelevantly comparing to MK. it is not acceptable, Jaggi is not a hindu leader, nor a looter like MK. I knew u havent read his book that u mentioned here and just wrote it after seeing his TV program advt. I suggest u read that book and comment like this, u would not.
Quote
 
 
+1 #58 kudimagan 2011-03-03 08:49
savukku, as some friend told here, if u can put together the fraud done by them in PDF and upload here, it would be great to forward and reach ppl. Ofcourse its going to be very big.
Quote
 
 
+2 #57 Elavazhagan.r 2011-03-03 07:20
Savukku I like u so much.
Keep it up.
Quote
 
 
+1 #56 kd 2011-03-03 07:20
"sariyana pooti" da vazhga vallmudan
Quote
 
 
+2 #55 Elavazhagan.r 2011-03-03 07:19
Well.well.
Savukku I like u so much.
Quote
 
 
+2 #54 Ranjani 2011-03-03 06:56
Can you please post the full document in scribd.com or somewhere online for people to see its whole content? I am much interested in reading the full report.
Quote
 
 
0 #53 K Raman 2011-03-03 06:22
Savukku avargalae ;

Naan arindhavaraiyil , thirumadhi raajaathiammal vazhkaiyil oru salem chapter irukku...migavum swaarasyamaanad hu...adhaipatri neengal eduththu vitirukkalamae...konjam investigate panni paarunga...nitchayama naraiyae perukku therinjirukkum...
Quote
 
 
0 #52 RAJU 2011-03-03 00:03
DHARMA ENGIRA RAJATHIYIN

VAALVU DHANNAI

KARUNANIDHI ENNUM SOODHU KAVVI VITADHO!!!!!!!! ! :sad: :sad:
Quote
 
 
+13 #51 anniyan 2011-03-02 23:37
Quoting யுவகிருஷ்ணா:
நீங்கள் என்னதான் அவதூறு பரப்பினாலும் என் தலைவன் மீண்டும் ஆறாவது முறையாக வெற்றி வாகை சூடப் போவது உறுதி. :lol: :D :lol: :D :lol: :D

எப்படி ஆறாவது முறையாக வெற்றி வாகை சூடப் போவது உறுதின்னு நினைக்கறீங்க? ஓட்டுப்பெட்டி மட்டும் இல்லாம ஒட்டு பெட்டிய கௌண்டிங்கு எடுத்துட்டு போற வேன், எண்ணர ஆளு எல்லாம் இப்பவே கரக்டு பண்ணிட்டீங்கள ? இல்ல நிதி அமைச்சர் சிதம்பரம் செட்டியாரை தோத்த அப்புறமும் ஜெயிக்க வச்ச மாதிரி எலக்ட்ரானிக் கௌண்டிங்ல ஃபர்ம் வேர் வச்சு மாத்தப் போறீங்களா?

பேசாம இப்பவே, சவுக்கு என்ன கணிக்கறது.. நாங்களே சொல்றோம்...
இந்த இந்த தொகுதில இவ்ளோ இவ்ளோ வாக்குல ஜெயிக்க ஏற்பாடு பண்ணிட்டோம்னு எழுதிடுங்களேன்...

பண்ணாலும் பண்ணுவீங்க .. எலக்ஷன்ல ஜெயிக்க அந்த அம்மா யானைய வாங்கித்தான் தானம் பண்ணுவாங்க.. அவங்களால முடிஞ்சது.. ஆனால் நீங்க அந்த அம்மாவையே வாங்கற அளவு பணம் வச்சு இருக்கீங்க..
Quote
 
 
+1 #50 anniyan 2011-03-02 23:18
Quoting K.Sujatha:
erandu kalayanam nadanthu irukea thavira rajathi ammaluku nadakala

நல்லாத் தெரியுமா? எப்படி சொல்றீங்க?
Quote
 
 
+10 #49 anniyan 2011-03-02 23:16
Quoting suresh raja:
அப்பிடியே.... இந்த காதலர்களோட அந்த கால படம் ஒன்னு இருந்த குடுமைய்யா... எப்பெல்லாம் கஷ்டம் வருமோ அப்பெல்லாம் பாத்துக்கிறேன்...
அந்த காலத்துப் படமெல்லாம் கிடையாதுங்க..
'சமயச் சார்பின்றி' விவாஹமோ , நிக்காஹ்வோ , வெட்டிங்கோ இல்லாம புரட்சிகரமா நடந்த கூடல் திருமணம் நடந்ததே இருட்டுல .. அப்பறமும் அந்தகாலத்துல ரெண்டுபேரும் இருட்டுல தான் எப்பவுமே மீட் பண்ணுவாங்களாம்..

போட்டோ எடுத்தா இருட்டுல எப்படிங்க எருமை மாடு தெரியும் ?
Quote
 
 
+3 #48 tamil anban 2011-03-02 22:45
i had posted this in my facebook,
we always follow and support savukku,
hats off savukku anna... :-)
Quote
 
 
+6 #47 KK 2011-03-02 22:45
SCIENTIFIC CORRUPTION
“In her IT returns filed on March 13, 1973, Dharma claimed that she had borrowed Rs. 40,000 from Kapali to purchase the house. She had also put in Rs. 23,000 which was from her own savings (Rs. 40,000+
Rs 23,000 = Rs. 63,000. But the registered purchase value was only
Rs. 57,000). This borrowing is supported by an unregistered document dated January 11, 1970. According to this document, the borrowed amount was to be returned in 3 instalments of Rs. 15,000, Rs 15,000 and Rs 10,000. If this did not happen, the house was to be sold to the said Kapali.


A Promissory Note also was prepared to this effect and signed by Dharma on August 21, 1970. Kapali later wrote in the Promissory Note that he had received back Rs. 40,000 from Dharma. This pro-note was later seized by the IT authorities on March 23, 1976.


“In the IT returns filed by Kapali on April 11, 1973, Kapali indicated that he borrowed Rs. 20,000 as loan from Sivabhagyam in order to pay
Rs. 40,000 to Dharma…(in other words, the security guard borrows money from Rajathi’s mother to lend money to Rajathi!!)”
Quote
 
 
+4 #46 KK 2011-03-02 22:44
SORRY NERMAI - THIS IS THE LIN.IT IS IN TWO OR THREE POSTS READ ALL

On Jan 20, 1969, Mrs. Dharma purchased the house No 9, 1st Cross Street, Raja Annamalaipuram, Chennai from one Mrs. E L Viswasam for Rs 57,000. On August 21, 1970, Dharma sold the same house to
T.K. Kapali (her security guard) as shown by Document no 1523/70.
In this document, the registrar notes that the buyer T.K. Kapali paid the seller Rajathi @ Dharma Rs 14,000 in his presence. On the same day, Dharma prepared an unregistered lease document in the name of
T.K. Kapali. According to this, the same house was leased to Dharma on a monthly rent of Rs 300 (in other words, she stays on rent in a house she has sold). On Jan 30,1972, Kapali sells this same house to one
Mrs. Sivabhagyam for Rs 45,000 (he sells it at a loss of Rs 12,000). Sivabhagyam happens to be Dharma’s mother! There is a registered document for this sale. On March 20, 1972, Sivabhagyam writes
out a settlement deed making over the same house to her daughter Dharma and grand daughter Kanimozhi. This deed indicated that the property would go to them after her (Sivabhagyam’s) death.


Try to be professional
Quote
 
 
-4 #45 nermai 2011-03-02 22:13
savukku,
i have only one request. try to be unbiased in your writing. I am not a supporter of DMK, but what is the relation between sarkaria and the story you have written about how MK married Rajathi Ammal?

Try to be professional.
Quote
 
 
+7 #44 vaedhampudhidhu 2011-03-02 22:11
Quoting Kumar.T:
Quoting யுவகிருஷ்ணா:
நீங்கள் என்னதான் அவதூறு பரப்பினாலும் என் தலைவன் மீண்டும் ஆறாவது முறையாக வெற்றி வாகை சூடப் போவது உறுதி. :lol: :D :lol: :D :lol: :D


உன் தலைவன் முதல் முறையாக தள்ளு வண்டியோடு புழல் சிறை சாலைக்கு செல்வது உறுதி...
அப்படியே போகும் போது பேனா பேப்பர கொண்டு போக சொல்லு "உளியின் ஓசை பாகம் 2" எழுத வசதியா இருக்கும்... :-)

Boss apo kaliyin oosai part 1 ilaya adhu.. :lol:
Quote
 
 
+6 #43 கருத்து 2011-03-02 21:48
சவுக்கால் முடியாததும் உண்டா?

இந்திய மக்களுக்காகவாவத ு முயர்சிக்கவும்...
Quote
 
 
+19 #42 raghavan 2011-03-02 21:42
கருணாநிதி என்கிற கயவனைப்பற்றி எழுத வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி மன்னர்கலேல்லயம் கொடுகோள் ஆட்சி செய்து பெண்களுடம் சல்லாபம் செய்வதாக கதை எழுதி எழையகளுக்கு உதவும் பேப்பர் மன்னர்களை உருவாக்கி காசு சேர்த்தான் பெண்களை பற்றி விரசம் சொட்ட கதை எழுதி இவை எல்லாம் புராணத்தில் இருக்கும் அழுக்குகள் என்று சொல்லி தன ஆசையை தீர்த்து கொண்டான்.மந்திரி ஆன பிறகு அரசு travells bungalakkalai தனக்கு உதவும் விபசார விடுதிகளாக மாற்றி கொண்டான் .பொது பணி துறையை தன பணி துறை ஆகா மாற்றி கொண்டான்.தனக்கும் தன கட்சி காரர்களுக்கும் கொள்ளை அடிப்பதற்கு வசதி ஆக அனைத்து அரசு திட்டங்களையும் வடிவமைத்து கொண்டான் தன்னுடைய அனைத்து வாரிசுகளுக்கும் ராஜ பரம்பரை விட அதிகமாக சொத்து சேர்த்து விட்டான் ஊரெங்கும் வாரிசுகள் .இவன் மனிதனா?இவனை தோல் உரிதுகாட்ட்டவேன ்டாம.எல்லாவற்றிக்கும ் மேலாக தன சுய நலத்திற்காக இலச்ச கணக்ககான தமிழ் மக்களை காட்டி கொடுத்து கொலை செய்த இவனை எந்த காரணம் கொண்டும் ஆதரிக்காதீர்கள்
Quote
 
 
+15 #41 Padman 2011-03-02 20:57
Quoting சவுக்கு:
சர்க்காரியா கமிஷன் அறிக்கை, மிகவும் சிதிலமைடந்த நகலாக காகிதங்கள் உடையும் தருவாயில் உள்ளது. மொத்தம் நான்கு பாகங்கள். அத்தனையும் ஸ்கேன் செய்து, பிடிஎப் கோப்பாக மாற்றுவதற்கு 5 நபர்கள், ஒரு வாரம் வேலை செய்ய வேண்டும். சவுக்கு இருக்கும் நிலையில் இது சாத்தியமா தோழர்களே... ?


ஸ்கேன் செய்யனும்னு அவசியமில்லை... high resolution கேமரா பயன்படுத்தி ஒரு மணி நேரத்தில் எல்லாத்தையும் போட்டோவா எடுத்துவிட்டு பிறகு pdf பைலா மாத்திடலாம். இது எங்கு கிடைக்கும்னு சொல்லுங்க... நான் வந்து அந்த வேலைய செய்கிறேன். காம்கார்டர் பயன்படுத்தி youtube ல broadcast பண்ணிடலாம்.
Quote
 
 
+11 #40 Padman 2011-03-02 20:33
நன்றி திரு சவுக்கு அவர்களே.

நான் உங்களின் நோக்கங்களுக்கு ஒருபோதும் எதிரானவனில்லை. நீங்கள் இந்தக்கட்டுரையி ன் முதல் பகுதியில் குறிப்பிட்டிருந ்தீர்களே ஒரு ஒற்றுமையை.. அதாவது இது கருணாநிதிக்கும் மூன்றாவது திருமணம் இராசாத்திக்கும் மூன்றாவது திருமணம் என்று. அதற்காகத்தான் என்னுடைய கருத்தை பதிவு செய்தேன். இந்தக் கட்டுரை திருத்தம் செய்யப்பட்டுவிட ்டதால் என்னுடைய கருத்தை திரும்ப பெற்றுக்கொள்கிற ேன். தயவு செய்து என்னுடைய இரண்டு கருத்துக்களையும ் நீக்கி விடவும். செய்வீர்களா சவுக்கு?

அடுத்து நீங்கள் எனக்கு எழுதிய பதிலில் இந்த மூன்றாந்தரக் கும்பலின் அட்டூழியங்களை பட்டியலிட்டு திருடியதை மக்களிடம் திரும்ப கொடுக்கச் சொல்லுங்கள்... இவர்களைப்பற்றி எழுதுவதை நிறுத்தி விடுகிறேனென்று குறிப்பிட்டிருந ்தீர்கள். (புரிகிறது பாஸு... நாய் வால நிமிர்த்தச் சொல்கிறீர்கள்...) இதைத்தானே நண்பரே என்னுடைய முந்தய கருத்துக்களில் வலியுறுத்தினேன் ...நாய் வால நிமிர்த்த முடியாது... வெட்டி விடவேண்டுமென்று . அதுதான் தீர்வு. இதுதான் நம்முடைய வீரத் திருமகன் பிரபாகரன் ஸ்டைல்.

எல்லாரும் அலைகற்றை ஊழல், காமன்வெல்த் ஊழல், இஸ்ரோ ஊழல்... அப்படின்னு சொல்லி சொல்லியே சலிப்பு ஏற்பட வைச்சிடறாங்க. இதனால மக்கள் இதையெல்லாம் மறந்துவிட்டு தினசரி அவங்க வேலைய பார்க்க போயிடுவாங்க. இதுபோல இனிமேலும் நடக்கக்கூடாது...

இதைவிட கொடுமையான ஊழல் போபர்ஸ் ஊழல்தான்... நாட்டின் பாதுகாப்போடு நேரிடையாக சம்மந்தப்பட்டது . ஊழல் நடந்தது எல்லார்க்கும் தெரியும்... இத்தனை வருடமாச்சு... ஒரு பைசாவது திரும்பி வந்துதா... இப்ப எப்படி பத்திரிகைகள் வரிந்துகட்டிக்க ொண்டு எழுதுகிறார்களோ... இதைவிட அதிகமாக எழுதினார்கள்... எதிர்கட்சிகள் அந்த ஊழலை சொல்லியே ஆட்சிக்கு வந்தார்கள்... அந்த ஊழலுக்குப்பிறகு காங்கிரஸ் திரும்ப ஆட்சிக்கே வந்திருக்கக் கூடாது... அனால் அது போல நடக்கவில்லை. திரும்ப ஆட்சிக்கு வந்தாங்க... திரும்ப அவங்களுக்கு தெரிந்த தொழிலை பெருசா செய்றாங்க... இப்ப நடக்கிற ஊழலையும் ஒண்ணுமில்லாம ஆக்கிடுவாங்க பாஸு. அதுக்குத்தான் சொல்கிறேன்... நீங்க அடுத்து ஒரு படி மேல போகணும்...facebook மற்றும் twitter
-க்கு(ம்) வாங்க. இன்னும் பெரிய அளவில் போகணும் பாஸு. யோசிச்சு சொல்லுங்க.
Quote
 
 
0 #39 Senthilkumar 2011-03-02 20:29
Updated at www.tamiloli.org
Quote
 
 
+3 #38 govt. 2011-03-02 20:13
காமாலைக் கண்ணனுக்குக்கண் டதெல்லாம் மஞ்சள் என்பதுபோல் எழுதலாமா? தொடக்கத்தில் திருமதி சிவபாக்கியத்திற ்கு 3 கணவர் என்பது போல் எழுதி விட்டு இறுதியில் திருமதி இராசாத்தியின் 3 ஆவது கணவர் என்றால் என்ன பொருள்?
Quote
 
 
+5 #37 KK 2011-03-02 19:34
READERS LETTTERS ON RAJA'S LOOT IN TIMES OF INDIA- WHAT THE COUNTRY THINKS OF TAMILIANS BECAUSE OF THIS SCAMSTERS
http://timesofindia.indiatimes.com/opinions/7607294.cms
Quote
 
 
+4 #36 KK 2011-03-02 19:31
``Public money to the extent of nearly Rs. 6 crores was squandered over this project and as rightly pointed out in the report of the Technical committee set up by the State Government, the project cannot now be brought to its successful conclusion, unless the foreign collaborators, M/S Vacrete, accept full responsibility for the manufacture, testing, laying and jointing of pipes.

To the public exchequer, it would mean an additional burden of several crores and to the public looking long for adequate water supply, a tortuous wait for at least two years more. The responsibility for this huge waste of public money must rest squarely on Shri Karunanidhi and Shri Sadiq Pasha.''

http://www.hinduonnet.com/2001/06/10/stories/0410223a.htm
Quote
 
 
+4 #35 KK 2011-03-02 19:31
``With regard to the alleged payment of illegal gratification of Rs. 29 lakhs in seven installments by Purushothaman to Karunanidhi, the story of Purushothaman is not such that it can be rejected breevi manu. But as he is admitted an accomplice, his evidence cannot be acted upon without corroboration in material particulars by independent evidence. The corroboration available is not adequate in extent and specificity and this evidence on record goes no further than establishing a preponderance of possibility, coming perilously close to probability, in favour of this charge. The charge of accepting illegal gratification has thus not been indubitably established against Shri. Karunanidhi.

''The decision to entrust the Veeranam project to M/s Sathyanarayana Bros. was undoubtedly a major administrative blunder. Huge advances were given to this firm, not covered by the contract agreement against simple indemnity bonds. The Accountant General has adversely commented on this.
Quote
 
 
+4 #34 KK 2011-03-02 19:30
WHAT SARKARIA SAID -SUMMARY
What the Sarkaria Commission said


In the final report, the Sarkaria Commission came to the following conclusion on the allegations on the Veeranam scheme:

``It has been established that Shri. Karunanidhi, abusing his official position as Chief Minister, actuated with the motive to unduly favour Sathyanarayana Brothers with the award of the contract for the Veeranam project, directed the Chief Engineer, Shri. Hussain, to tailor his recommendations on the tenders in such a manner as would enable the Government to accept the tender of Sathyanarayana Bros....

''There is no doubt that Shri. Karunanidhi was interested in the contract being given to Sathyanarayana Bros. for some extraneous consideration. In this connection two circumstances have been firmly established: 1. Purushothaman's friendship with Maran and his exploiting this friendship to influence Karunanidhi and through him, Hussain; 2. The supply of materials worth about Rs. 59,202 by Purushothaman for construction of `Murasoli building' without accepting payment - a fact admitted by Maran himself.
Quote
 
 
+9 #33 Kumar.T 2011-03-02 18:24
Quoting யுவகிருஷ்ணா:
நீங்கள் என்னதான் அவதூறு பரப்பினாலும் என் தலைவன் மீண்டும் ஆறாவது முறையாக வெற்றி வாகை சூடப் போவது உறுதி. :lol: :D :lol: :D :lol: :D


உன் தலைவன் முதல் முறையாக தள்ளு வண்டியோடு புழல் சிறை சாலைக்கு செல்வது உறுதி...
அப்படியே போகும் போது பேனா பேப்பர கொண்டு போக சொல்லு "உளியின் ஓசை பாகம் 2" எழுத வசதியா இருக்கும்... :-)
Quote
 
 
+3 #32 sram 2011-03-02 18:14
நெல்லை பாலாஜி.

உங்கள் நடுநிலைமை இன்றைய கொடுங்கோல் ஆட்சியை
விழ்த்த பயன்பட வேண்டும். அதை விடுத்து அந்த கொடியவன்
மேல் இருக்கும் கோபத்தை "நீர்த்து" போக செய்வதாக இருந்தால்
உம்மேல் சந்தேகம் வருவது இயல்பே!

எது மிக கொடியது !
ஒரு அதிகார மையம்மா, இல்லை ஊருக்கு ஊரு நாட்டாமையா ?
66 கோடியா, இல்லை 17600000000000 கோடியா ?
எப்போதாவது மின்சாரம் இல்லாத நிலையா? இல்லை எப்போதுமா?
ஒரு இனத்தை அழிக்க உதவுவது கொடியது இல்லையா ?
ரௌடிகள் ராஜ்ஜியம் நல்லதா ?
ஒரு இன்ஸ்பெக்டரை நடு ரோட்டில் வெட்டுவது இயல்பா ? இல்லை அதை வேடிக்கை பார்க்கும்
அமைச்சர்கள் சிறப்பானவர்கள?
இலவசைங்கள் முலமாக தமிழர்களை சோம்பரிகளாகி, இன்று
வேலைக்கு பீகாரிகள் தேவைப்படும் நிலைக்கு காரணம் யார் என்று உங்களக்கு தெரியும் தானே?

2001 - 2006 அதிகம் குறை சொல்ல வகையிலாமல் வெறும் 90 சீட் ஜெயித்து மினோரிட்டி அரசாங்கம்
அமைத்து மேலே சொன்ன மற்றும் பல சிறப்பான கொடியதுகளை செய்த அந்த
ஈன தலைவரின் குற்றங்களை "நீர்த்து" போக செய்கிறீர்கள் என்பதை மறவாதீர்கள் !

சரி,
அன்று 1996 தேர்தலில் ஜெயாவை எதிர்த்து உங்க ஈன தலைவருக்கு ஒட்டு போடீங்கள?
இல்லை சர்காரிய commision பத்தி யோசித்து ஒரு நல்ல சுயச்சைக்கு ஒட்டு போடிரா?
இந்த கேள்விக்கு பதில் சொன்ன நல்ல இருக்கும்?
Quote
 
 
+6 #31 Kumar.T 2011-03-02 17:29
ஜட்டி(ஜக்கி) வாசுதேவ் எழுதிய "அத்தனைக்கும் ஆசைபடு" என்ற மகத்தான தத்துவத்தை நடைமுறையில் செயல் படுத்திய ஒரே தலைவர் நமது வாழும் வள்ளுவர் தான் ...
( சாரி தலைவரே நீங்கள் வேற என்னை வள்ளுவரோடு, தொல் காப்பிரோடு ஒப்பிட கூடாது என்று சொல்லிருகிங்க, ஆனா தேடி பார்த்தா இவங்கள விட பெரிய ஆளுங்க தமிழ் இலக்கியத்துல இல்ல தலைவரே... )
Quote
 
 
+9 #30 suresh raja 2011-03-02 17:13
நம்ம கருப்பு கண்ணாடி ஒரு வகையில தியாகி தாம்ப்பா.... பின்ன...., எப்டி தான் அந்தம்மாவ காதலிச்சு கட்டிகினாருன்னு தெரியல...
அய்யா சவுக்கு, அப்பிடியே.... இந்த காதலர்களோட அந்த கால படம் ஒன்னு இருந்த குடுமைய்யா... எப்பெல்லாம் கஷ்டம் வருமோ அப்பெல்லாம் பாத்துக்கிறேன்... இந்த படத்த விடவா நமக்கு கஷ்ட காலம்னு மனச தேத்திக்கலாமல....
Quote
 
 
+4 #29 Force 2011-03-02 17:08
த‌ர்மாவாகிய‌, த‌ர்மாம்மாளாகிய ‌, ராஜாத்திய‌ம்மாள ின் ச‌ரித்திர‌த்தில ், அவ‌ரது தாய‌ரின் க‌ண‌வ‌ர்க‌ள‌து சாதி குறிப்பிட‌ வேண்டிய‌து அவ‌சிய‌மா? வித‌வை ம‌றும‌ண‌ம் அந்த‌ சாதியின் இப்போதைய‌ வ‌ழ‌க்க‌மல்ல‌.
Quote
 
 
-2 #28 Nellai Balaji 2011-03-02 17:07
ஐயா ராம் அவர்களே ,
நான் இனதுரோகி கருணாநிதியின் ஆதரவளனோ அல்லது அண்டி இருப்பவனோ இல்லை. நடுநிலையாக விசயங்களை பார்க்கின்றவன். இது உங்களுக்கு தவறாக தெரிந்தால், பொறுப்பு நான் அல்ல. நான் சொல்வதெல்லாம் மக்கள் இயக்கம் என்றால் எல்லா விஷங்களையும் மக்களிடம் எடுத்து செல்வதுதான். ஒரு சார்பாக செல்ல வேண்டாம் என்பதுதான்.

சவுக்கு சொல்லும் அத்தனை விசயங்களையும் நான் அமோதிக்கின்றான் , ஆனால் அதே நேரத்தில் இரண்டு பக்கங்களையும் எடுத்து சொல்லுவது தான் சரியாக இருக்க முடியும் .இதுதான் நான் சொல்ல வருவது.

இதை அறியாமல் , என்னை ஏதோ அவர்களின் ஆதரவாளன் என சொல்வது, உங்களின் ஒரு சார் தன்மையை குறிபதாக நான் அறிகிறேன் Quoting sram:
just a correction:
எப்படியாவது ஈன தலைவர் மேல இருக்கற கோபத்தை dilute செய்ய வேண்டும்.
இந்த யுவக்ருஷ்ண வெளிபடியான ஈன தலைவர் supporter .
ஆனால் இந்த நெல்லை பாலாஜி மாதிரி ஆளுங்க அவங்க ஈன தலைவர் மாதிரி அண்டி கெடுப்பவர்கள் !
So தயவு செய்து ஏமாந்து விடாதீர்கள் !
Quote
 
 
+7 #27 sram 2011-03-02 16:26
just a correction:
எப்படியாவது ஈன தலைவர் மேல இருக்கற கோபத்தை dilute செய்ய வேண்டும்.
இந்த யுவக்ருஷ்ண வெளிபடியான ஈன தலைவர் supporter .
ஆனால் இந்த நெல்லை பாலாஜி மாதிரி ஆளுங்க அவங்க ஈன தலைவர் மாதிரி அண்டி கெடுப்பவர்கள் !
So தயவு செய்து ஏமாந்து விடாதீர்கள் !
Quote
 
 
-18 #26 rani 2011-03-02 16:25
Great Politics King is Dr.Kalaignar - Father of Tamil His calculation never went wrong. He knows what to do. He is the one and only man who is living for Tamil and us (tamiliens). Please don't forgot!. Jayalalitha and her party will be vanished from Tamil nadu after this election. She can't do anything with small parties allience. People is Tamil side. That's our side. WE WILL WIN FOR SURE. CHALLANGING HERE TO EVERYONE IF YOU CAN STOP OUR DMK'S SUCCESS.
Quote
 
 
+3 #25 sram 2011-03-02 15:57
இங்க நெல்லை பாலாஜி ஒரு விசயத்தை தெளிவு செய்தால் நன்றாக இருக்கும்.
2001 தேர்தலில் உங்க ஈன தலைவரின் சர்காரிய commision பத்தி யோசித்து
ஒரு நல்ல சுயச்சைக்கு ஒட்டு போட்டாற?
இல்ல அவங்க ஈன தலைவருக்காக பிரசாரம் பண்ணாரா?

இப்போ ரொம்ப நடுநிலைவாதி மாதிரி பேசுவது,
எப்படியாவது ஓட்ட பிரித்து அவங்க ஈன தலைவரையும் அவர் குடும்பத்தையும்
காப்பாத்தனும் என்கிற வெறிய தவீர வேருன்றும் இல்லை.

1760000000000 கோடி பத்தி பேசுன...இல்ல 66 கோடி பத்தியும் பேசனும்,
லச்சகனக்கான தமிழர்கள் இறக்க காரணமான கயவனை பத்தி பேசினால்
ஏன் ஜெயாவும் பிரபாகர் பத்தி பேசிநாரே என்று சம்பந்தமில்லாமல ் அவங்க
ஈன தலைவர் மாதரியே பேச வேண்டியது .

எப்படியாவது ஈன தலைவர் மேல இருக்கற கோபத்தை dilute செய்ய வேண்டும்.
இந்த யுவக்ருஷ்ண வெளிபடியான ஈன தலைவர் supporter .
ஆனா இந்த மாதிரி ஆளுங்க அவங்க ஈன தலைவர் மாதிரி அண்டி கெடுப்பவர்கள் !
So தயவு செய்து ஏமாந்து விடாதீர்கள் !
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 67 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday2356
mod_vvisit_counterYesterday11260
mod_vvisit_counterThis week24728
mod_vvisit_counterLast week78861
mod_vvisit_counterThis month237547
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12759666